Mediaசென்னையில நடந்த திருமண நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் மேடையில் பேசும்போது, தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு செப்டம்பர்15ஆம் தேதியில் இருந்து உரிமைத் தொகை வழங்குவோம் என்று பேசியுள்ளார்.உடான்ஸ் விடும் முதல்வர்..!தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்திட்டோம் என்கிற பெயரில் இதையும் சொல்லியிருக்காங்க. ஆனா தேர்தல் வாக்குறுதியப்போ, அனைத்து பெண்களுக்கும் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் தர்றதா சொன்னாங்க.. அந்த கணக்குப்படி பார்த்தா தமிழகத்துல மொத்தம் 2 கோடியே 13 லட்சத்து 80 ஆயிரத்து 112 குடும்ப அட்டைகள் இருக்கின்றன. அப்படின்னா 2 கோடிக்கும் அதிகமான இல்லத்தரசிகள், பெண்கள் இருக்காங்க. இப்ப திடீர்னு ஒரு கோடி பேருக்குத்தான் உரிமைத் தொகை தருவேன்னு சொல்றது எல்லாம், எந்த வகையில நியாயம்…ஏற்கனவே கூட்டுறவு வங்கியில 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்றோம்னு தேர்தல்ல வாக்குறுதி அறிவிச்சதோட எல்லோரையும் போய் நகைய அடமானம் வைங்கன்னுல்லாம் சொன்னாங்க…ஆனா ஆட்சியில உக்காந்ததும் அதெல்லாம் உடான்ஸாப் போயி இன்னைக்கு திமுக சொன்ன நம்புனதால நிறைய பேரு கடனாளியாகி ஆகியிருக்காங்க… இப்ப ஒரு கோடிக்கும் அதிகமானவங்களுக்கு உரிமைத் தொகை கிடையாதுங்குறமாதிரி சொல்லியிருக்காங்க. ஆக மொத்தத்துல உங்கள நம்பி ஓட்டுபோட்ட இல்லத்தரசிங்கள ஏமாத்தியிருக்கீங்கன்னு நாங்க சொல்லல…. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/xXlm4NP
via News J : https://ift.tt/xXlm4NP
Mediaவிடியா திமுக அரசு அறிவித்த பதிவுத்துறை கட்டண உயர்வு, இன்று முதல் அமலுக்கு வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை சொத்து பரிமாற்றம் தொடர்பான பத்திரங்கள் அனைத்தும் சார்- பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படுகின்றன என்பது அனைவருக்கும் தெரிந்ததே. பொது அதிகாரம் கொடுப்பது, பாகப்பிரிவினை, செட்டில்மெண்ட் செய்வது, விடுதலை, குத்தகை போன்ற நடவடிக்கைகளும் புழக்கத்தில் உள்ளன.இதில், பெரும்பாலான பரிமாற்றங்கள் விற்பனையாக கருதப்படாது என்பதால், குறைவான தொகையே, பதிவுக் கட்டணமான வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணங்கள், 20 ஆண்டுகளாக மாற்றப்படவில்லை. தற்போது, பதிவு கட்டணங்கள் மாற்றப்பட்டு உள்ளன. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது.சர்வர் பிரச்சினையால் பத்திரம் பதிவு செய்வதில் தாமதம்: நல்ல நேரத்தில் பதிவு செய்ய காத்திருந்தவர்கள் ஏமாற்றம் | Server issue - hindutamil.inவீடுகள் விலை உயரும்…!சென்னை போன்ற நகரங்களில், நிலத்தின் விலையும், வழிகாட்டி மதிப்புகளும் அதிகமாக உள்ளன. இந்த மதிப்பில், 1 சதவீத தொகையை பொது அதிகார ஆவண பதிவுக்கு கட்டணமாக நிர்ணயிப்பது செலவை அதிகரிக்கும். உதாரணமாக, 10,000 ரூபாயில் முடிக்க வேண்டிய ஒரு பொது அதிகார ஆவண பதிவுக்கு, 5 லட்சம் ரூபாய் வரை செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கூடுதல் செலவு, வீட்டின் விலையில் தான் சேரும் என்பதால், இது, பொது மக்களுக்கு சுமையாக அமையும். இதனை விடியா திமுக அரசு கண்டும் காணாமல், தங்கள் நலனிற்காக மட்டுமே இதனை செய்துள்ளது. கட்டுமான ஒப்பந்த பதிவு கட்டணமும், 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது, வீடு வாங்குவோருக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
via News J : https://ift.tt/pdQOzWL
via News J : https://ift.tt/pdQOzWL
Mediaசாதனை என்றால் உலக சாதனை மட்டுமல்ல தற்போது உள்ள கால சூழ்நிலையில் வாழ்கையே பெரும் போராட்டமாக உள்ளது. அதில் வெற்றி பெறுவதே ஓர் பெரிய சாதனை தான் என்பதே நிதர்சனமான உண்மை. அந்த வகையில் பலர் வாழ்க்கை என்னும் போராட்டதில் போராடிக்கொண்டே தான் உள்ளனர். அப்படிப்பட்ட போராட்டதில் வெற்றி பெற்றவர் தான் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த கருப்பசாமி அவர்கள். இங்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான தேடல் இருக்கும். அந்த தேடலில் வழியே பல விஷயங்களை நாம் கற்றுகொண்டு வருகிறோம். அப்படி தேடிய தேடல் தான் கருப்பசாமி என்னும் அசத்தல் மனிதர். இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் காலையில் யோகா மாஸ்டராகவும், மாலையில் டீ மாஸ்டராகவும் பரபரப்பாக தன்னை இயக்கி கொள்ளும் மனிதர் தன் இவர். கலையிலும், கடையிலும் தனிலை மறவாத தன்னம்பிக்கையால் அசத்தி வருபவர் தான் கருப்பசாமி. யார் இந்த கருப்பசாமி? என்ற கேள்விகளுக்கெல்லம் விடை செல்லும் பயணமே அசத்தல் மன்னம் கருப்பசாமியின் வாழ்வியல். முடியும் வரை முயற்சி செய்:ஸ்ரீவில்லுப்புதூர் அருகே இடையபொட்டல் தெருவில் டீ கடை வைத்து இருக்கிறார், டீ கடை ராஜா நாங்க என்ற வரிகளுக்கு ஒப்ப வாழ்ந்து வருகிறார். இவரின் வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் கையில் எடுத்த ஆயுதம் தான் யோகாகலை. இவர் யோகாசனத்தை கற்றுக்கொண்டு அங்குள்ள குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகவும் இருந்தார். இவரிடம் யோகா கற்ற மாணவ மாணவிகள் எல்லாம் தேசிய மற்றும் மாநில போட்டிகளில் மற்றுமின்றி சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்றுச் சாதனை படைத்தும் வருகின்றனர். இதனை பற்றி கருப்பசாமி அவர்கள் கூறும் போது, நான் பள்ளிப் படிக்கும் பருவத்தில் இருந்தே தற்காப்புகலை, உடற்பயிற்சி, யோக போன்ற கலைகளை கற்றுவந்து உள்ளார். பிறகு இவரும் இவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு குழு ஒன்றை உருவாக்கி அனைவருக்கும் உடற்பயிற்சி வகுப்புகள் நடத்தி வந்து உள்ளனர். இவர் அவரது தந்தை வைத்து இருந்த டீ கடையில் மாலை நேரம் அவருக்கு உறுதுணையாக இருந்து உள்ளார். மேலும் இவருக்கு 2006 ஆம் ஆண்டு ஏற்பட்ட மூச்சுபிரச்சனை காரணமாகவும் தூக்கமின்னமை மற்றும் மன அழுத்தம் காரணமாகவும் இவர் அவரது மனைவியின் ஆலோசனைப்படி தனது 31-வது வயதில் அழகர் என்பவரிடம் யோகா பயிற்சி பெற்றுள்ளார். அதற்கு பின்புதான் அவருக்கு இருந்த மூச்சி பிரச்சனை சரியானது என்றார்.காலையில் யோகா மாஸ்டர்... மாலையில் டீ மாஸ்டார்... ஸ்ரீவில்லி.யில் ஓர் அசத்தல் மனிதர்! | Yoga Master on the Morning...Tea Master in the Evening...A Wonderful Man in Srivilliputhur ...அதன் பின் தொடர்ந்து யோகா பயிற்சி செய்து வந்து உள்ளார். ஒருபுறம் டீ கடையும் நடத்திக்கொண்டு மறுபுறம் யோகா பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வந்து உள்ளார். இவர் சில மாதங்களுக்கு முன்புதான் பாரதிதாசன் பல்கழைகழகத்தில் யோகா ஆசிரியருக்கான பட்டயபடிப்பு பட்டம் பெற்றுள்ளார். மேலும் அங்குள்ள குழந்தைகளுக்கும், மாணவ மாணவிகளுக்கும் யோக பயிற்சி வகுப்புகளை இலவசமாக எடுத்துவருகிறார். 30-பதிற்க்கும் மேற்பட்டவர்கள் இந்த வகுப்பில் பயிற்சி பெற்று வருகின்றனர். காலையில் டீ கடை ராஜவாகவும் மாலையில் யோகா ஆசிரியராகவும் தன்னை தானே முழுநேரமும் பிசியாகவே வைத்து வருகிறார். ஒருவருக்கு காலமும் சூழ்நிலையும் எப்படி வேண்டுமானாலும் மாறலாம் அதற்கு ஏற்றது போலவே நம்மை நாமே ஒவ்வொரு நாளும் செதுக்கிக்கொள்ள வேண்டும்.
via News J : https://ift.tt/WZ8un3e
via News J : https://ift.tt/WZ8un3e
Mediaதமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலிற்கு சென்னை உயர் நீதிமன்றமானது ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. அதாவது பாலியன் வன்கொடுமை வழக்குகளின் இருவிரல் சோதனையானது தவிர்க்க வேண்டும் என்பதுதான் அந்த உத்தரவு.இருவிரல் சோதனையை தவிர்க்க வேண்டும்..!chennai highcourt18 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் பாலியல் ரீதியான உறவு தொடர்பான விவகாரத்தை கையாள்வது குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், சுந்தர் மோகன் அமர்வானது முக்கியமான இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது. பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளில் இருவிரல் பரிசோதனை மேற்கொள்வதை தவிர்க்க வேண்டுமென தமிழ்நாடு டிஜிபிக்கு இந்த உத்தரவினை நீதிபதிகள் பிறப்பித்துள்ளார்கள். சிதம்பரத்தில் சிறுமிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் இருவர் மீதும் தவறில்லை என காவல்துறை விளக்கத்தை ஏற்று வழக்கினை முடித்து வைத்தனர் நீதிபதிகள். அதனைத் தொடர்ந்து, தர்மபுரியில் இளவயது திருமணம் தொடர்பான வழக்கில் 17 வயதுக்குட்ப்பட்ட இருவரையும் காவல்துறையினர் நடத்திய விதத்தில் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும்இருவரும் 18 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்கும்பட்சத்தில், இருவரையும் குழந்தைகளாக கருத வேண்டும் என்று தனது உத்தரவினைப் பிறப்பித்துள்ளனர்.
via News J : https://ift.tt/MhmnFLI
via News J : https://ift.tt/MhmnFLI
Mediaகடந்த 6 மாதங்களில் அத்தியாவசிய பொருட்கள் கடத்தியதாக 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 525 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அறிவித்துள்ளது. 444 டன் ரேசன் அரிசி, 75லிட்டர் மண்ணெண்ணை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை வடக்கு, சென்னை மேற்கு, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம்,கள்ள்க்குறிச்சி, கடலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் அத்தியாவசிய பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் ஆகிய குற்றங்கள் தடுக்கும் பொருட்டு சென்னை மண்டலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.2022-ல் ரூ.11.40 கோடி மதிப்பிலான கடத்தல் ரேசன் பொருட்கள் பறிமுதல் - உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு எஸ்.பி தகவல் | Seizure of smuggled ration goods worth Rs.11.40 crores in ...அந்த வகையில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுன் மாதம் வரை சென்னை மண்டலத்தில் மட்டும் அத்தியாவசிய பொருட்களை கடத்தியதாக மொத்தம் 764 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 525 நபர்களை குடிமை பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் கள்ளத்தனமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி சுமார் 444 டன் பறிமுதல் செய்யப்பட்டு, பொது விநியோக திட்ட மண்ணெண்ணை சுமார் 75லிட்டர், கலப்பட ஆயில் சுமார் 24,0700 லிட்டர் மற்றும் சிலிண்டர்களை வணிக நிறுவனங்களில் பயன்படுத்தியதாக 445 சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக நான்கு சக்கர வாகனங்கள் 107, மூன்று சக்கர வாகனங்கள் 28, இரண்டு சக்கர வாகனங்கள் 96 என மொத்தம் 231 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது.இதுவரை நடப்பு ஆண்டில் சுமார் 1200க்கும் மேற்பட்ட வழக்குகள் டி.ஆர்.ஓ நீதிமன்றத்திலும், குற்றவியல் நீதிமன்றத்திலும் தண்டனையில் முடிக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாத 81 நபர்கள் மீது பிடியாணை நிறைவேற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் எட்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் 128 நபர்களில் 75 நபர்களுக்கு வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் நன்னடத்தை பிணையம் பெற்றபின் குற்றச்செயலில் ஈடுபட்ட 12 நபர்களை மீது வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மேலும் வழக்குகளில் சம்மந்தப்பட்ட 232 வாகனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
via News J : https://ift.tt/Qx4Dnb9
via News J : https://ift.tt/Qx4Dnb9
Mediaதமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முக்கிய கோப்புகளோடு டெல்லியில் முகாமிட்டு இருக்கும் நிலையில், தனது ஆட்சி கலைக்கப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் முதல்வர் ஸ்டாலின் இருக்கிறாரா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.டெல்லி என்று யாராவது சொன்னாலே போதும் திக் திக் என்றிருக்கிறது திமுகவினருக்கு… எப்போது என்ன நடக்குமோ என்ற பயத்தில் இருக்கின்றனர் திமுகவினர்… டெல்லி என்றால் திமுகவிற்கு ஏன் இந்த பதற்றம்?… காரணம் இருக்கிறது… தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியின் டெல்லி பயணத்தால் பயந்து நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள் முதல்வர் ஸ்டாலினும் திமுகவினரும் என்கின்றனர் உண்மை தெறிந்தவர்கள்….சமீபத்தில் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்தே கிலி பிடித்த முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி மாட்டிக்கொண்டால், எங்கே தன்னுடைய மற்றும் தன் குடும்பத்தின் குட்டு வெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாரோ என்ற கேள்விதான் எழுகிறது…((தானும், தன் குடும்பத்தினரும் அரசு நிர்வாகத்தை தவறாக பயன்படுத்தி
செய்துவரும் ஊழல் வெளிப்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் தான் இதற்கு காரணமாக மாறியிருக்கிறது. ))செந்தில் பாலாஜியை அதிரடியாக நீக்கிய தமிழக ஆளுநர், இது தொடர்பாக எந்த சட்ட சிக்கலும் எழுந்துவிடக் கூடாது என்பதால் அட்டர்னி ஜெனரலின் கருத்துக்களுக்காக, அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார்.ஆளுநரின் டெல்லி பயணத்திற்கான முழு காரணங்களும் இன்னும் தெரியவராத நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்திருந்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த அறிவிப்பில், அது ஒரு பயனுள்ள சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப்பிறகு தான் தற்போது பதற்றத்தில் உளறத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சமாளித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத நிலையில், அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சம் தான் அவரை இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது.ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டால், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதோ என்ற ஸ்டாலினின் அதீத அச்சம் தான் தற்போதைய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர் பலரும்…
ஆளுநரின் டெல்லி பயணத்தை பார்த்து பயந்து, நடுங்கிக் கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை மாற்றக் கோரி பதறியடித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.டெல்லிக்கு சென்ற ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்ததால்தான் கலக்கத்தில் இருக்கிறார்களா திமுகவினர்? ஆளுநரை நீக்க, குடியரசுத்தலைவருக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதி அனுப்பியது ஏன்?
ஆக மொத்தத்தில் ஆட்சி கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
via News J : https://ift.tt/IVb3ycQ
செய்துவரும் ஊழல் வெளிப்பட்டுவிடுமோ என்கிற அச்சமும் தான் இதற்கு காரணமாக மாறியிருக்கிறது. ))செந்தில் பாலாஜியை அதிரடியாக நீக்கிய தமிழக ஆளுநர், இது தொடர்பாக எந்த சட்ட சிக்கலும் எழுந்துவிடக் கூடாது என்பதால் அட்டர்னி ஜெனரலின் கருத்துக்களுக்காக, அந்த உத்தரவை நிறுத்தி வைத்திருக்கிறார்.ஆளுநரின் டெல்லி பயணத்திற்கான முழு காரணங்களும் இன்னும் தெரியவராத நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவர் சந்தித்திருந்தார். இதுகுறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்டிருந்த அறிவிப்பில், அது ஒரு பயனுள்ள சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்குப்பிறகு தான் தற்போது பதற்றத்தில் உளறத் தொடங்கியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஆட்சிக்கே ஆபத்து வந்தாலும், அதைப்பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சமாளித்துக்கொண்டு இருக்கிறார் ஸ்டாலின்.கொடுத்த வாக்குறுதிகளை முறையாக நிறைவேற்றாத நிலையில், அடுத்து என்ன நடக்குமோ? என்ற அச்சம் தான் அவரை இப்படியெல்லாம் பேச வைத்திருக்கிறது.ஒருவேளை ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டால், மீண்டும் ஆட்சிக்கு வர முடியாதோ என்ற ஸ்டாலினின் அதீத அச்சம் தான் தற்போதைய நிலைக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர் பலரும்…
ஆளுநரின் டெல்லி பயணத்தை பார்த்து பயந்து, நடுங்கிக் கொண்டு இருக்கும் முதல்வர் ஸ்டாலின், ஆளுநரை மாற்றக் கோரி பதறியடித்து குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.டெல்லிக்கு சென்ற ஆளுநர் உள்துறை அமைச்சரை சந்தித்ததால்தான் கலக்கத்தில் இருக்கிறார்களா திமுகவினர்? ஆளுநரை நீக்க, குடியரசுத்தலைவருக்கு பக்கம் பக்கமாக கடிதம் எழுதி அனுப்பியது ஏன்?
ஆக மொத்தத்தில் ஆட்சி கலைந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது.
via News J : https://ift.tt/IVb3ycQ
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/yamuna.jpg">Media</a> டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நேற்று அம்மாநில அரசு வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது. குறிப்பாக நேற்றைக்கு யமுனை நதியின் கொள்ளளவு ஆனது 206 மீட்டரை தாண்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கைந்து நாட்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பொருள் சேதங்களும் உயிர் சேதங்களும் ஏற்பட்டு நாட்டையே நிலைகுலைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து யமுனை நதிக்கரையின் நீர்மட்டம் 206 மீட்டராக உயர்ந்துள்ளது. மேலும் மத்திய நீர்வள ஆணையத்தின் வெள்ள கண்காணிப்பு போர்டலானது தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் கீழ் நீர்மட்ட அளவீட்டுமானியைப் பொறுத்தியுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6 மணிக்கும் யமுனை நதியின் நீர்மட்டமானது 206.28 மீட்டராக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஹரியணாவில் உள்ள யமுனாநகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரேக் காரணமாகும்.<a href="https://victorianweb.org/technology/railways/india/16.jpg">The Old Yamuna Bridge crossing the Yamuna River in Delhi</a> மேற்கொண்டு இன்று பிற்பகல் யமுனை நதியின் கொள்ளளவானது 206.65 மீட்டராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது படிப்படியாக குறையும் வாய்ப்பும் உள்ளது என்று செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,<strong>டெல்லி வானிலைக் குறித்த டாப் 10 அப்டேட்ஸ்!</strong>1) கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யமுனை நதியில் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டியதால், தேசிய தலைநகரில் உள்ள பழைய யமுனை பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.2) வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் ஹத்னிகுண்ட் தடுப்பணை வழியாக சுமார் 2,15,677 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.3) திங்கள்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க நகர அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறினார். 4) கிழக்கு தில்லி மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், திங்கள்கிழமை இரவு சில பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, வெளியேற்றும் பணி தொடங்கியது என்று தெரிவித்தார். “பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே உயரமான இடங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.<a href="https://images.livemint.com/img/2019/08/21/600x338/20190820112L_1566365881977_1566365903760.jpg">Delhi's old iron bridge shut as Yamuna continues to flow above the danger mark | Mint #AskBetterQuestions</a>5) ஹத்னிகுண்ட் அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை 3 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. பொதுவாக, அணைக்கு நீர்வரத்து 352 கனஅடியாக இருக்கும், ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கிறது. ஒரு கியூசெக் என்பது வினாடிக்கு 28.32 லிட்டருக்கு சமம்.6) தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 7) கெஜ்ரிவால் அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளையும், யமுனையின் நீர்மட்டத்தையும் கண்காணிக்க 16 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது. 8) வட இந்தியப் பகுதி முழுவதும் மற்றும் குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 9) ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதத்தில் ஒரே நாளில் டெல்லி அதன் அதிகபட்ச மழையை (153 மிமீ) கண்டது. அடுத்த 24 மணி நேரத்தில் நகரத்தில் கூடுதலாக 107 மிமீ மழை பெய்தது, நிலைமையை மோசமாக்கியது.10) கனமழையால் சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் நீரோடைகளாகவும், பூங்காக்கள் நீர்நிலைகளாகவும், சந்தைப் பகுதிகள் நீரில் மூழ்கிய பகுதிகளாகவும் மாறியது. தில்லி அரசு திங்கள்கிழமை அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதாக அறிவித்து, அரசு அதிகாரிகளின் ஞாயிறு விடுமுறையை ரத்து செய்து, அவர்களை களத்தில் இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தது. <pre id="tw-target-text" class="tw-data-text tw-text-large tw-ta" dir="ltr" data-placeholder="Translation"></pre><pre id="tw-target-text" class="tw-data-text tw…
Mediaகடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 11ல் அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் நடைபெற்று முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அதில் குறிப்பாக அதிமுகவிற்கு என்று ஒரு பொதுச்செயலாளர் வேண்டும் போன்ற முக்கிய கோரிக்கைகளும் தீர்மானங்களும் எடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து பல்வேறு துரோகிகளின் கயமைகளைக் கடந்து அன்றைய ஒன்றரைக் கோடித் தொண்டர்படையின் விருப்பத்திற்கு இணங்க எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பொதுச்செயலாளராக ஆனார். அதனைத் தொடர்ந்து அதிமுகவிற்கு என்று புதிய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.தற்போது அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்து இருந்த நிலையில், தற்போது கழக பொதுச்செயலாளர் நியமித்திருந்த 79 கழக அமைப்பு செயலாளர்களையும், 69 மாவட்ட கழக செயலாளர்களையும் 10 பிற மாநிலச் செயலாளர்களையும் இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து உள்ளது.Mediaஅதிமுக வின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்குழு செயற்குழுவில் தேர்வு செய்யப்பட்டது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அங்கீகரித்திருந்த நிலையில் தனது இணையப் பக்கத்திலும் அஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி என பதிவேற்றம் செய்திருந்தது. தற்போது கழக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களால் நியமிக்கப்பட்ட 69 மாவட்ட கழக செயலாளர்கள், 79 கழக அமைப்புச் செயலாளர்கள், புதுச்சேரி, காரைக்கால், கர்நாடகா, ஆந்திரபிரதேசம், தெலங்கானா, மகாராஸ்ட்ரம், கேரளம், புதுடெல்லி, அந்தாமான் ஆகிய பிற மாநிலங்களுக்கு நியமிக்கப்பட்ட மாநில கழக செயலாளர்களையும் அங்கீகரித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதனால் அதிமுக தொண்டர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்கள்.
via News J : https://ift.tt/vpAf4ae
via News J : https://ift.tt/vpAf4ae
Mediaதொழில் நுட்பத்தின் வளர்ச்சி:நாட்டின் வளர்ச்சி என்பது காலங்களுக்கேற்ப மாறிவருகிறது அதே போல கணினி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி என்பது அபாரமாக வளர்ச்சி அடந்துள்ளது என்று கூட சொல்லலாம். அதுபோலாவே கணினியின் வளர்ச்சியை காட்டும் வகையில் செயற்கை நுண்ணறிவானது உச்ச நிலை அடைந்துள்ளது. இது நுட்பமான இயந்திரங்களை உருவாக்கி மனிதர்களை போலவே செயல்பட வைக்கும் ஒரு நுணுக்கமான செயல் முறையாகும். செயற்கை நுண்ணறிவு மனித வாழ்க்கையை மிகக் கடுமையாக மாற்றப் போகிறது மற்றும் உலகின் அனைத்து நெருக்கடிகளையும் தீர்க்கும் என்று நம்பப்படுகிறது. இந்த நவீன யுகத்தில் நமது வாழ்க்கை பெரும்பாலும் கணினியையே சார்ந்திருக்கிறது. கணினிகள் இல்லாத வாழ்க்கையைப் பற்றி யோசிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உலகில் ஒரு புரட்சியை கொண்டு வந்துள்ளது.எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் ரோபோக்கள்:செயற்கை நுண்ணறிவு என்பது புதுமையான தொழில்நுட்பத்தின் எதிர்காலம், அதை நாம் பல துறைகளில் பயன்படுத்தலாம். தொழில்களில் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன, அவை மனித உழைப்பையும் நேரத்தையும் மிச்சப்படுத்துகின்றன. இருந்தாலும் வரும் காலங்களில் மனிதர்களின் வேலைகளுக்கும் பாதங்கம் ஏற்பட வாய்புள்ளதாக கருதுகின்றனர். ஆனால் அவற்றில் இருந்து நாம் நன்மைகளை மட்டும் எடுத்துக் கொள்வது அவசியம். இந்த தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வருவதால், வரும் ஆண்டுகளில், AI அதாவது செயற்கை நுண்ணறிவின் பல பயன்களை பார்க்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் வளர்சியானது பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயற்கை நுண்ணறிவானது மனிதனைப் போல சிந்தித்துப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளைக் கண்டறிதல், நிலையான, சரியான முடிவுகளை மேற்கொள்ளுதல் போன்ற பணிகளுக்கு செயற்கை நுண்ணறிவு செயல்படுத்துகிறது.செயற்கை நுண்ணறிவு என்பது என்ன? அது எங்கு பயன்படுத்தப்படுகிறது? | Doubt of Common Man | doubt of common man: What is an AI? - Vikatanசெயற்கை நுண்ணறிவு ரோபோக்களை அயல்நாடுகளில் உருவாக்கி அவற்றிக்கு கண்காட்சி போன்று உருவாக்கி மக்களை மகிழ்ச்சியடைய வைக்கவே இந்த ரோபோக்கள் என்றும், இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டன என்று கூறுகின்றனர். மேலும் இவை பார்பதற்கு அச்சுஅசல் மனிதர்களை போலவே காட்சியளிக்கிறது. இந்த செயற்கை நுண்ணறிவானது நம் இந்தியாவில் ஒடிசாவில் முதல் செய்திவாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது. இப்படியாக பல செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. மனிதர்களை போலவே இந்த ரோபோக்களும் தோற்றமளிக்கின்றனது. அதன் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்களிடையே கூடுதலாகவே உள்ளது. இந்த ரோபோக்கள் மனிதர்கள் செய்யும் வேலைகளை செய்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்துகின்றன.கூடுதல் தகவலுக்காக :http://இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்! அப்ப இந்த வேலைக்கும் ஆப்பா? https://newsj.tv/indias-first-ai-news-reader-odisha/
via News J : https://ift.tt/U0GgNB6
via News J : https://ift.tt/U0GgNB6
Mediaசுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 266 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரது திரு உருவ சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார்.சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் 266 வது ஜெயந்தி தினம் கொண்டாடப்படுகிறது இதனை முன்னிட்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் திருவுருவ சிலைக்கு கழக பொதுச்செயலாளர் எடப்பாடிக்கு பழனிச்சாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து அவரது திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர் மற்றும் ஆயிரக்கணக்கான கழகத் தொண்டர்கள் கலந்து கொண்டனர் முன்னதாக கழக பொதுச்செயலாளருக்கு ஆயிரக்கணக்கான கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர் இதனை தொடர்ந்து அதிமுக சார்பில் ஏழை எளியவர்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அன்னதானம் வழங்கினார்.
via News J : https://ift.tt/7NxqHpU
via News J : https://ift.tt/7NxqHpU
Mediaதிருநங்கை சமூகம் பற்றி அனைவருக்கும் தெரியும். அவர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக்கொண்டு சமுதாய அளவில் தனக்கான அங்கீகாரத்தினைப் பெற்று வருகிறார்கள். பொது சமூகத்தால் பலவிதங்களில் புறக்கணிப்பு செய்யப்படும் மற்றொரு சமூகம் திருநர் சமூகம். அவர்களுக்கு முறையான கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்காத காரணத்தால், அவர்களது சமூக வாழ்க்கையும் கேள்விக்கு உரியதாக இருக்கிறது. இந்தச் சூழலில் ‘பிரைடு புராஜெக்ட் என்கிற பெயரில் திருநர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் திட்டத்தினை கேரள அரசானது அறிமுகம் செய்துள்ளது.திருநர்களுக்கு ஆதரவான தீர்ப்பு…!கேரள சமூக நீதித் துறையின் உதவியுடன் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. திருநர்கள் சமூக ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் களையும் பொருட்டு பல திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. அதில் கேரளம் முன்னோடியாக உள்ளது என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது. 2014 ஆம் ஆண்டில் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்துக்கும் மத்திய அரசிற்கும் இடையே நடைபெற்ற திருநர்கள் உரிமைகள் குறித்த வழக்கில், திருநர் உரிமைகள் குறித்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தீர்ப்பினை உச்ச நீதிமன்றம் அளித்தது. சமூகத்தில் திருநர்கள் மோசமாக நடத்தப்பட்டு வருவதை இந்தத் தீர்ப்பில் நீதிபதிகள் தங்களின் கவலையை தெரியப்படுத்தினர். ஆண், பெண் பால் அடையாளங்களுக்கு அப்பாற்பட்டு மூன்றாம் பாலினமாக அவர்கள் இருப்பதை சமூகம் ஏற்காதது என்பது இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 14 மற்றும் 21 ஆகியவற்றை மீறும் செயலாகும் என்று அந்தத் தீர்ப்பில் தெளிவாகச் சொல்லப்பட்டது.Government's Pride Project to promote transgender inclusion in academic profession, employment opportunities, transgenders, Pride project, Kerala government, kerala latest newsதிருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம்!.. இந்தத் தீர்ப்புதான் திருநர்களின் வாழ்வாதாரத்திற்கு மிகவும் உதவிகரமாகவும் அவர்களின் சமூக மாற்றத்திற்கும் துணை நின்றது. திருநர் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, மத்திய மாநில அரசுகள் திருநர்களுக்கான திட்டங்களை வகுப்பதற்கு தூண்டுகோலாக இந்தத் தீர்ப்பு அமைந்தது. இதைத் தொடர்ந்து நாட்டில் முதன்முறையாகத் தமிழ்நாடு அரசு திருநர்கள் மேம்பாட்டு வாரியத்தை அமைத்தது. அதன் பிறகு கேரளம் உள்பட 11 மாநிலங்களில் இந்த வாரியமானது துவங்கப்பட்டது. இதில் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் திருநர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும் அவர்களின் வாழ்க்கை மேம்பாட்டினை சிறப்பாக உருவாக்குவதிலும் கேரளம் முன்னணியில் இருக்கிறது.Pride' comes at a price in Kerala- The New Indian Expressகேரளத்தில் திருநர்களுக்கான சிறப்புத் திட்டங்கள் பல ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளன. ‘சாகல்யம்’ என்கிற பெயரில் திருநர்களுக்குத் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம், தொலைதூரக் கல்வி அளிப்பதற்கான ‘வர்ணம்’ திட்டம், ஸஃப்லம் தொழிற்கல்வி அளிக்கும் திட்டம், ‘யத்னம்’ என்கிற பெயரில் போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம், சட்டப்படி திருமணம் செய்துகொள்ளும் திருநர்களுக்கான உதவித் திட்டம் எனப் பல திட்டங்களைக் கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2018ல் பாலின மாற்று அறுவைச் சிகிச்சைக்கு இரண்டு லட்சம் அளிக்கும் திட்டத்தை அறிவித்து, கேரள அரசு செயல்படுத்தி வருகிறது. இந்தச் சிகிச்சைக்கு பிந்தைய மருத்துவ உதவியாக மாதம் தலா மூவாயிரம் என 12 மாதங்களுக்கு வழங்கும் திட்டமும் அம்மாநில அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.கேரள அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள “பிரைடு புராஜெக்ட்” திருநர்களுக்குப் பொருளாதாரச் சுதந்திரத்தை அளிக்கக்கூடியது. இதன் மூலம் தங்களாலும் சமூக ரீதியில் முன்னேற முடியும் மற்றும் பொருளாதாரத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சாதி, மதம், பாலினம் சார்ந்து நாம் இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதர்களையும் நேசிக்கும் தன்மையை பெருக்கிக்கொள்ள வேண்டும். அதுவே பாலின சமத்துவத்தின் அடிப்படை. கேரளா போன்று மற்ற மாநில அரசுகளும் திருநர் சார்ந்த நலத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்து.
via News J : https://ift.tt/dhgomvB
via News J : https://ift.tt/dhgomvB
Media மேலை நாடுகளில் காதல்!!மேலை நாடுகளில் காதல் என்பது கொண்டாட்டத்திற்கு உரியது. அவர்கள் அதை உணர்ச்சிப்பூர்வமாக கொண்டாட்டதின் அடிப்படையில் வெளிப்படுத்துவார்கள். அந்த வகையில் ஐரோப்பியா, இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் என்றதும் கொண்டாட்டங்கள் நிறைந்த நாடுகள் என்பதை அனைவரும் அறிவோம். அதுபோலவே எல்லா வகையான நிகழ்ச்சிகளும் அங்கு வெகுவிமர்சையாகத்தான் நடைபெறும். அந்த வகையில் இவர்கள் காதலுக்கு மரியாதை செய்யாமலா இருப்பார்கள், இவர்கள் செய்த மரியாதையை பார்த்தால் ஒரு காதலுக்காக இவ்வளவா? செய்வார்கள் என்று வாய்ப்பிளப்பார்கள் அண்டை நாட்டினர். நமக்கு தெரிந்த காதல் கதை என்றால் ஷாஜகான் மும்தாஜிற்கு தாஜ்மஹால் கட்டிக்கொடுத்த கதை தான். ஆனால் இங்கு ஒருவர் என்ன என்ன செய்திருக்கிறார் என்று உங்களுக்கு தெரியுமா? இந்த காதல் யாரையும் விட்டு வைப்பதில்லை என்று கூட சொல்லலாம். சிறியவர்கள் முதல் பிரதமர்கள் வரை இந்த காதல் செய்யும் வேலைகள் இருக்கே அப்பப்பா இவங்க பண்ற அலப்பறை தாங்க முடியலயே தல வலிக்கிதுடா தல வலிக்குதே என்ற வசனம் தான் நியாபகம் வருகிறது.காதலும் கடந்து போகும்:இத்தாலி நாட்டின் முன்னால் பிரதமரான சில்வியோ பெர்லுஸ்கோனி தனது காதலியான மார்டனா பேசினா என்பவருக்கு தனது 900 கோடி சொத்தை கொடுத்து உள்ளார். உடல் நாலக் குறைவால் கடந்த ஜூன் மாதம் காலமான இத்தாலி நாட்டின் முன்னால் பிரதமரான சில்வியோ பெர்லுஸ் கோனி தனது காதலிக்கு தனது சொத்தை உயில் எழுதி வைத்துள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஐரோப்பிய நாடான இத்தாலின் பிரதமராக மூன்று முறை பதவி வகித்து வந்தார் சில்வியோ பெர்லுஸ்கோனி. இவர் ’போர்ஸா இத்தாலியா’ என்னும் கட்சியை சேர்ந்தவர் ஆவார். இவர் கடந்த ஜூன் மாதம் 12-ஆம் தேதி அன்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இவரின் சொத்து மதிப்பானதி ஆறு பில்லியன் யூரோ அதாவது இந்திய மதிப்பில் சொல்லப் போனால் 5.40 லட்சம் கோடி ரூபைக்கு மேல் இவரது சொத்து மதிப்பு உள்ளது.Silvio Berlusconi Net Worth: How rich was the former AC Milan president? | Marcaஇவருக்கு இரண்டு முறை திருமணம் ஆகியும் விவாகரத்து பெற்ற நிலையில் தனது கட்சியை சேர்ந்த மார்டனா பேசினா என்பவருடன் 2020-ல் மார்ச் மாதம் முதல் நெருங்கி பழகி வந்து உள்ளார். மார்டனாவின் வயது 33 என்பது குறிப்பிடத்தக்கது. சில்வியோ இவரை திருமணம் செய்யவில்லை என்றாலும் பல இடங்களில் தனது மனைவி என்றே அறிமுகப்படுத்தினார். இன்னிலையில் தனது காதலியான மர்டினாவிற்கு தனது 900 கோடி மதிபுள்ள சொத்தை உயில் எழுதி வைத்துள்ளார். அவர் எழுதிய உயிலானது அவரது ஐந்து குழந்தைகள் மற்றும் உறவினர்கலிம் முன்னிலையில் வாசிக்கப்பட்டது. அதில், தனக்கு சொந்தம்மான அனைத்து சொத்துகளையும் தனது காதலியான மார்டனா பேசினாவிற்கு சுயவிருப்பதின் படி அளிக்கிறேன் என்றும், எனக்கு சொந்தமான அனைத்து நிறுவனக்களின் பொறுப்புகளையும் தனது இரண்டு மகள்களுக்கும் ஒப்படைக்கிறேன் என்றும் மீதமுள்ள அனைத்து சொத்துகளையும் எனது ஐந்து குழந்தைகளுக்கும் சமமாக பங்கிட்டு கொடுக்கிறேன் என்றும் அந்த உயிலில் கூறியிருந்தார். இதனை கேட்டு அன்னாட்டு மக்கள் நமக்கு இப்படி ஒரு காதல் இல்லையே என்று ஏங்குகின்றனர்.
via News J : https://ift.tt/5vJbugX
via News J : https://ift.tt/5vJbugX
Mediaசெந்தில்பாலாஜிதான் இப்படினு பாத்தா மதுவிலக்குத் துறை யார் கையில் இருந்தாலும் பஞ்சாயத்துதான் போல என்று அமைச்சர் முத்துச்சாமியை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ”இந்த செவுரு யாரையும் காவு வாங்காம விடாது”னு மதுவிலக்குத்துறையை மீம்ஸ்கள் மூலம் சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்து வருகிறார்கள் மீம்ஸ் கிரியேட்டர்கள். சரி அப்படி அய்யா முத்துச்சாமி என்னதான் செய்து வைத்திருக்கிறார் என்று பார்த்தால், குவாட்டரை சரிசமமாக பிரித்து குடிக்கத் தெரியாத நமது மது பிரியர்களுக்காக 90 எம்.எல் அளவிலான டெட்ரா பேக் மூலம் மதுவை விநியோகம் செய்ய ஆயத்தமாகியிருக்கிறார் இந்த புதிய ஆயத்தீர்வை அமைச்சர்.மாட்டிக்கொண்ட அமைச்சர் முத்துச்சாமி…!சமீபத்தில் 500 மதுக்கடைகள் மூடப்பட்டன. மூடப்பட்ட கடைகளில் மது வாங்கியவர்கள், வேறு கடைகளுக்கு செல்கின்றனரா, குடிப்பழக்கத்தை விட்டுவிட்டனாரா, கள்ளச்சாராயத்தினை அருந்துகின்றனரா போன்றவை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது என்று அமைச்சர் செய்தியாளர்களுக்கு பதிலளித்தார்.We Just Learnt That Bengaluru Has Tetra Packs Of Alcohol. Just Another Reason To Move To The Cityஇதை மட்டும் பேசியிருந்தால் அமைச்சர் சரியாக பேசுகிறார் என்று விட்டிருக்கலாம். ஆனால் ஒரு வெடிகுண்டைத் தூக்கி போட்டார் பாருங்க. அதாவது மதுப்பிரியர்கள் குடிப்பழக்கத்தை விட்டால் அரசுக்கு மகிழ்ச்சி. வேறு டாஸ்மாக்கில் மது வாங்கினாலும் பரவாயில்லை. ஆனால் தவறாக வேறு எங்கும் சென்று விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் கண்காணிக்கப்படுகிறது என்று கூறியுள்ளார்.இங்கு நமது கேள்வி என்னவென்றால், அய்யா குடிப்பழக்கத்தை விட்டால் நல்லது என்று சொல்கிறீர்கள். ஆனால் டாஸ்மாக்கில் மது வாங்கினால் பரவாயில்லை என்கிறீர்கள். இப்போது மதுப்பிரியர்கள் மதுவை குடிக்கலாமா? வேண்டாமா? என்று ஒரு முடிவைச் சொல்லுங்கள். ஆனால் மதுவை மக்கள் விட்டுவிட்டால் திமுகதான் மாட்டிவிடும். அதிலும் டெல்டா மாவட்டத்தினைச் சேர்ந்த திமுகவின் எம்.பி மற்றும் அவரது வாரிசு அமைச்சர் இருவரும் மாட்டிக்கொள்வார்கள். சாராய ஆலைகளை வைத்து நடத்தும் அவர்கள் பொழப்பில் எப்படி மண் அள்ளிப்போடும் திமுக. தன் சொந்தக் கைகளை வைத்தே கண்ணைக் குத்திக்கொள்ள யாராவது விரும்புவார்களா என்ன? சரி என்ன செய்யலாம் என்று யோசனை செய்த அமைச்சர் டெட்ரா பேக்கில் வைத்து விற்றுவிடலாம் என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார்.டெட்ரா பேக்கில் சரக்கு..!திடீரென்று மதுவினை டெட்ரா பேக்குகளில் வைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது ஏன் என்று கேட்டால், அமைச்சர் அதற்கும் ஒரு பதில் வைத்துள்ளார். மது பாட்டிலை சாலையில், நீர்வழித்தடத்தில் போடுவதால் விவசாயிகளுக்கு பிரச்சினையாக உள்ளது. மது பாட்டிலுக்கு பதில், டெட்ரா பேக்கில் மது விற்பனை வர வேண்டும்; அப்படி வந்தால் சிறப்பாக இருக்கும் என்று பலரும் விரும்புகின்றனர் மற்றும் அதனை கையாள்வதும் சுலபம் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறியுள்ளார்.State planning to sell liquor in tetra packsநீர்வழித்தடத்தில் குடிமராமத்துபணியினை மேற்கொள்ளாமல் டெட்ரா பேக்கினை அறிமுகம் செய்வதற்காக ஒரு சப்பைக்கட்டு காரணத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் என்று சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.இதைவிட ஒரு நகைச்சுவை ஒன்றை கூறினார் நமது அமைச்சர். அதாவது மாநிலம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் 180 மிலி கொண்ட குவார்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்வதற்கு மற்றொருவர் வருகைக்காக மதுப்பிரியர்கள் காத்திருக்கின்றனர். எனவே டெட்ரே பேக் கொண்டுவந்தால் 90 மிலிக்கு மதுவானது பாக்கெட்டில் அடைக்கப்பட்டால் இந்த பிரச்சினையானது தீர்ந்துவிடுமாம்.அய்யா அமைச்சர் அவர்களே, நாட்டிலே எவ்வளவுப் பிரச்சினை உள்ளது. இதுவெல்லாம் ஒரு பஞ்சாயத்து என்று விளக்கம் வேறு கொடுத்துள்ளீர்கள். ஆமாம், நாங்கள் டெட்ரா பேக் மூலம் மது விறக்ப்போகிறோம் என்று சொல்லியிருந்தால் பிரச்சினை முடிந்தது. அதற்கு இப்படி ஒரு காரணத்தைச் சொல்லும்போதுதான் இவர் சரியாகத்தான் பேசுகிறாரா? இல்லை உளறுகிறாரா? என்று கேள்வி எழுகிறது.
via News J : https://ift.tt/Gq1MZyl
via News J : https://ift.tt/Gq1MZyl
Mediaமக்கள் தொகை பெருக்கம்:இந்த உலகம் முழுவதும் மக்கள் தொகையால் நிரம்பிவிட்டால் நம் உலகம் என்னாகும் என்று யோசித்து பார்த்து உள்ளீர்களா? பெருகிவரும் மக்கள் தொகையால் என்ன என்ன பிரச்சனைகளை நாம் சந்திக்க உள்ளோம் என்பதை பற்றி என்றாவது சிந்தனை செய்ததுன்டா? இவற்றையெல்லாம் நம் யோசித்து பார்க்க வேண்டும் என்பதற்காக தான் ஜூலை 11-ஆம் தேதி அன்று நாம் உலக மக்கள் தின நாளாக கொண்டாடி வருகிறோம். மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்து சொல்லும் முயற்சியாக ஐக்கிய நாடுகள் வளர்ச்சி திட்டத்தினால் கொண்டாடப்பட்டு வருகிறது.மக்கள் தொகை தினமும் அதன் வரலாறும்:1987-ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் நாள் அன்று உலக மக்கள் தொகை 5 பில்லியனை கடந்து விட்டதை நினைவு கூறும் வகையில் அந்த தினத்தை உலக மக்கள் தொகை தினமாக Dr. கே.சி. சக்கரியா கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனை தொடர்ந்து ஐ.நா. சபையால் 1989 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை தினமாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்துதான் சில நாடுகளில் மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. முதன் முறையாக 1990-ஆம் ஆண்டு 90-க்கும் மேற்பட்ட நாடுகளில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. இந்த தினமானது பெண்களின் முன்னேற்றம் மற்றும் அவர்களின் வளர்ச்சி, அனைவருக்கும் சமமான வாய்ப்பு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த உலக மக்கள் தொகை தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நோக்கத்தோடு செயல்படும். அது நாட்டின் வளர்ச்சி குறித்தும் மற்றும் அதன் மேன்மை குறித்தும் கொண்டாடப்படும். அதுபோலவே இந்த ஆண்டும் சில வழிமுறைகளை பின்பற்றி கொண்டாடி வருகின்றனர். அந்த வழிமுறையானது பாலின சமத்துவம் மற்றும் உலக மக்கள் தொகையில் 49.7% பெண்களே அதிகம் உள்ளதால் அவர்களுக்கான சமவாய்ப்பு என்றும் அவர்களுக்கான திறமைகளை வெளிபடுத்துதல் போன்றவற்றை அடிப்படையக்கொண்டு இந்தாண்டு உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது. ஐநா கணக்கெடுப்பின்படி, உலக மக்கள் தொகையானது 1 பில்லியனை தொடுவதற்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆனது. ஆனால் அதே சமயம் 200 வருடங்களுக்கு பிறகு மக்கள் தொகை வளர்ச்சியில் 7 பில்லியனை தொட்டது. 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை 7 பில்லியனாகவும், 2021-ல் 7.9 பில்லியனாகவும் மக்கள் தொகையானது ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்துக் கொண்டே போனது.World Population Day | இன்று உலக மக்கள்தொகை தினம் | Dinamalarமக்கள் தொகையில் இந்தியா:இந்த நிலை தொடர்ந்தால் 2030-ல் 8.5பில்லியனாகவும், 2050 களில் 9.7 பில்லியனாகவும் உயரலாம் என்று எதிபார்க்கப்படுகிறது. தற்போது உள்ள தகவலின்படி நம் இந்தியாதான் மக்கள் தொகை பெருக்கத்தில் முன்னோடியாக திகழ்ந்து வருகின்றது என்று ஐ.நாவின் தரவரிசைப்படி தெரிகிறது. இந்தியாவின் மக்கள் தொகையானது 2064-ஆம் ஆண்டு 1.7 பில்லியனை தொடலாம் என்று ஐ.நா சபையின் கணக்கெடுப்பின்படி தெரிகிறது. மக்கள் தொகை ஒருபுறம் உயர அவர்களுக்கான உரிமையும், சமவாய்ப்பு, வேலையின்மை,வாழ்வாதார பின்னடைவு பொன்றவை இருந்து கொண்டே உள்ளது. இந்த பின்னடைவுகளை ஒழித்து அனைத்து மக்களுக்கும் சமமான உரிமை, சமவாய்ப்பு,சமூகநீதி, வேலைவாய்ப்பு என எல்லாவற்றிலும் சமமாக இருப்பதே உலக மக்கள்தொகையின் நோக்கம் ஆகும்.
via News J : https://ift.tt/BrGjP12
via News J : https://ift.tt/BrGjP12
Mediaமேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது, இரண்டு டெஸ்ட்கள் கொண்டத் தொடரில் மோத உள்ளது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் டொமினிகாவில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியும் மேற்கிந்திய அணியும் சந்திக்கின்றன. மேலும் 12 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற டெஸ்ட் மேட்ச் டிராவானது. அப்போது மேற்கிந்திய அணியில் இருந்த ஒருவர் கூட இப்போது அணியில் இல்லை. ஆனால் கோலியும் டிராவிட்டும் அன்றைய இந்திய அணியில் இடம்பெற்றிருந்தனர். இன்றைய இந்திய அணியில் கோலி வீரராகவும், டிராவிட் பயிற்சியாளராகவும் உள்ளனர்.யாருக்கு பலம்?இந்த டெஸ்ட் போட்டியைப் பொறுத்தவரை இந்திய அணிக்குதான் மிகப்பெரிய பலம் ஆகும். அதற்கு காரணம் மேற்கு இந்திய தீவுகளின் சமீபத்திய பல சறுக்கல்கள். குறிப்பாக இந்தாண்டு இந்தியாவில் நடைபெறப் போகும் உலகக்கோப்பை போட்டிகளில் தகுதிச் சுற்றுடன் வெளியேறி இரசிகர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளித்தது. மேலும் மெற்கிந்திய தீவுகள் அணியுடன் இந்திய அணியை ஒப்புமைப் படுத்தினால் அனுபவமான வீரர்களும், திறமையான வீரர்களும் மேற்கிந்திய அணியினரைவிட இந்திய அணியில் அதிகம் உள்ளனர். இந்தத் தொடரின் இரண்டாவது மற்றும் இறுதிப் போட்டியானது இரு அணிகளுக்கும் நூறாவது டெஸ்ட் போட்டியாகும். அதனுடன் 2025 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஸிப் இறுதிப்போட்டிக்கான ரேஸ் தொடங்கிவிடும்.India vs West Indies Highlights, 1st Test Day 1: India 203/6 at stumps | Cricket News - Times of Indiaடெஸ்ட்டில் மீண்டும் விட்ட இடத்தை பிடிக்குமா இந்தியா?இந்திய அணியானது கடந்த மாதம் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நியூசிலாந்திடம் படுதோல்வி அடைந்தது.அஸ்வின் மீண்டும் அணிக்கு திரும்பியிருப்பது பலம். அஸ்வின் இல்லாமல் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மோசமான தோல்வியை சந்தித்தது என்பது ஊரறிந்த உண்மை. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 11 போட்டிகளை ஆடிய அஸ்வின் 60 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். மேலும் அவர் அடித்த ஐந்து சதங்களில் நான்கு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராகத்தான். மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பேட்டிங் ஆவரேஜ் 50 வைத்துள்ளார்.India vs West Indies, 1st Test Day 2: West Indies 94/6 at stumps, trail India by 555 runs | Cricket News - Times of Indiaமேலும் புஜாரா அணியிலிருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக யாராவது இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்திருக்கிறது அணி. யெஸ்ஹஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ருத்துராஜ் இவர்களில் ஒருவருக்கு மூன்றாவது இடத்தில் இறங்கக்கூடிய வாய்ப்பு கொடுக்கப்பட உள்ளது. முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், அவருக்கு பதில் ஐந்தாவது பவுலர் ஒருவரை களமிறக்க அணியானது முடிவு செய்துள்ளது. உதன்கட் உள்ளூர் போட்டிகளில் நல்ல பார்மில் உள்ளார். அவரைத் தொடர்ந்து நவ்தீப் சைனியின் பெயரும் அடிபடுகிறது. ஆனால் பிரதான பவுலராக முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் உள்ளனர். ஜடேஜாவை தூணாக இருப்பார் என்று நம்ப்படுகிறது. பார்க்காலாம் நாளை ரோகித் மற்றும் கோலியின் அதிரடி வெல்லுமா என்று?
via News J : https://ift.tt/28jTwu1
via News J : https://ift.tt/28jTwu1
Mediaஅதிமுகவின் சின்னம், கொடி ஆகியவை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னை எழும்பூரில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுகவின் சின்னம், கொடி ஆகியவை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கே சொந்தம் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது. இனிமேலும் கழகத்தின் சின்னம், கொடி முதலியவற்றை பன்னீர் பயன்படுத்தினால், அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக திமுக வழக்கறிஞர்களே வாதாடி இருக்கிறார்கள் என்றும் அவர்களுக்கு ஜாமீன் தாரர்களாக இருந்திருக்கிறார்கள் எனவும் குற்றம்சாட்டினார். மேலும் அந்த குற்றவாளிகளுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம் எனவும் அவர் கேள்வி எழுப்பினார். மேலும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் தாரர்களாக இருந்த திமுக வழக்கறிஞர்கள், ஸ்டாலினை சந்தித்த புகைப்படமும் வெளிவந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.விடியா திமுக அரசுக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பன்னீர் மீண்டும் கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார்.அதிகாரத்தின் பேரில் மிரட்டி பார்க்கும் திமுகவின் மாய வித்தைகளை கண்டு அதிமுக ஒருபோதும் அஞ்சாது என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக ஆட்சி அமைந்ததும் திமுக ஆட்சியில் நிகழ்ந்த ஆட்டூழியங்கள் அனைத்தும் முழுமையாக விசாரிக்கப்படும் என சூளுரைத்தார்.காலை 7 மணிக்கு டாஸ்மாக் கடையை திறந்தால், குடித்துவிட்டா பணிக்கு செல்வார்கள்? என கேள்வி எழுப்பிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்யப்படும் என்ற அறிவிப்பின் மூலம், கடந்த 2 ஆண்டுகளில் மதுபானத்தில் கலப்படம் இருந்ததை அமைச்சர் முத்துசாமி ஒப்புக்கொள்கிறார் என விமர்சித்தார்.
via News J : https://ift.tt/Wu5fMoI
via News J : https://ift.tt/Wu5fMoI
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/chennai-corporation.jpg">Media</a>குடிப்பதற்கு தண்ணீர் இல்லை அண்ணா நீங்களே வந்து பாருங்க காலி டப்பா தான் இருக்கு என்று காண்பித்த பள்ளி மாணவர்களால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தினந்தோறும் இந்த அவல நிலை தான் இருக்கிறது என்று வேதனையுடன் கருத்து தெரிவிக்கிறார்கள் பள்ளி மாணவர்கள். மேலும் இடவசதி இல்லாமல் சமூக நலக் கூடத்தில் செயல்பட்டு வரும் சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள்.மாணவர்களுக்கு தாகம் எடுத்தால் அருகில் இருக்கக்கூடிய வீடுகளில் சென்று தண்ணீர் வாங்கி குடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கொண்டு மழைக்காலங்களில் தார்ப்பாயின் உதவி இல்லாமல் மாணவ மாணவிகள் படிக்க முடியாத அவலமும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விளையாட்டு மைதானம் கூட இல்லாமல் ஆபத்தை உணராமல் வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில் விளையாடுகின்றனர். இதுவரை பள்ளி கட்டிடங்களை தரம் உயர்த்துவதற்கு முன் வராத சென்னை மாநகராட்சியைக் கண்டுகொள்ளுமா இந்த விடியா திமுக ஆட்சி!<strong>விடியா திமுக அரசின் திராவிட மாடல் பள்ளி இதுதானா…!</strong><a href="https://static.hindutamil.in/hindu/uploads/news/2023/04/22/xlarge/979369.jpg">வெயில் கடுமையாக இருப்பதால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகுமா? - அன்பில் மகேஸ் பதில் | Will Opening of Schools be Delayed Due to Intense Heat? - Answered by Anbil Mahesh Poyyamozhi ...</a>சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பள்ளிகளில் ஏழை எளிய மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் படிக்க முடியாத ஏழை எளிய கூலித தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகிறார்கள் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் செயல்பட்டு வரும் மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிர்த்து வருகின்றது.அந்த வகையில் சென்னை மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல் பகுதியில் உள்ள கண்ணப்பர் நகர் பகுதியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படித்து வருகின்றன. குறிப்பாக, கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. முதல் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் தங்களது குழந்தைகளை தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க முடியாமல் அரசு பள்ளிகளை நாடி வருகின்றனர்.இதனால் இந்த ஆண்டு ஏராளமான குழந்தைகள் மாநகராட்சி பள்ளியில் சேர்ந்து படித்து வருகின்றனர். ஆனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப இந்த பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள் இல்லை. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படிக்கும் இந்த மாநகராட்சி பள்ளியில் வகுப்பறை இல்லாமல் அருகே உள்ள மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் வைத்துப் பாடம் நடத்தப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது இந்த சமுதாய நலக் கூடத்தில் படிக்கும் மாணவர்கள் அருகில் மயான பூமி இருப்பதால் மாணவர்கள் சரியாக படிக்க முடியவில்லை என்பதும் இவர்களுக்கு குடிநீர் கூட இங்கு இல்லை என்பதும் திடீரென்று தாகம் ஏற்பட்டால் அருகில் இருக்கக்கூடிய குடியிருப்புகளில் சென்று மாணவ மாணவிகள் தண்ணீர் வாங்கி குடிப்பதும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் திடீரென்று இயற்கை உபாதைகளை கழிக்க கழிப்பிடம் இல்லை என்பதும் மாணவர்கள் குற்றச்சாட்டு வைக்கின்றனர். இருக்கின்ற ஒரு கழிப்பிடம் கூட ஆசிரியர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இவர்களுக்கு இயற்கை உபாதைகளை கழிக்க சாலையில் செல்லக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே இருக்கக்கூடிய பள்ளி கட்டிடத்தில் புதிய வசதிகள் இல்லாமலும் மழைக் காலங்களில் மழைநீர் வகுப்பறைக்குள் ஒழுகும் நிலை ஏற்பட்டுள்ளது மழைக்காலங்களில் தார்ப்பாய் போட்டபடி மாணவர்கள் கல்வி கற்கும் அவலம் ஏற்படுகிறது.இது மட்டுமில்லாமல் விளையாடுவதற்கு பள்ளியில் மைதானம் இல்லாததால் வாகன செல்லும் பிரதான சாலையில் விளையாடக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல நேரங்களில் மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம் அடையும் சம்பவங்களும் அரங்கேறி இருக்கிறது.இதனையும் பள்ளியில் இருக்கக்கூடிய உடற்பயிற்சி ஆசிரியர் அருகில் இருந்தாலும் வாகனங்கள் செல்லும் வழியில் மாணவர்கள் விளையாடு வருகின்றனர்.
அங்கு நாம் சென்று காட்சிகள் பதிவு செய்த பொழுது அதனை பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் உடனடியாக பள்ளி மாணவர்களையும் மாணவிகளையும் இனி விளையாட வேண்டாம் வாங்க எனக் கூறி உள்ளே அழைத்துச் சென்றார். அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட மாணவர்கள் இன்னும் முறையாக கல்வி பயில முடியவில்லை என்பது பெரும் வேதனை அளிக்கிறது என பெற்றோர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வரும் மேயர் சென்னை மாநகராட்சி அரசின் பள்ளிகள் 80 சதவீதம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது…
அங்கு நாம் சென்று காட்சிகள் பதிவு செய்த பொழுது அதனை பார்த்த உடற்பயிற்சி ஆசிரியர் உடனடியாக பள்ளி மாணவர்களையும் மாணவிகளையும் இனி விளையாட வேண்டாம் வாங்க எனக் கூறி உள்ளே அழைத்துச் சென்றார். அடிப்படை வசதிகள் இல்லாமல் கூட மாணவர்கள் இன்னும் முறையாக கல்வி பயில முடியவில்லை என்பது பெரும் வேதனை அளிக்கிறது என பெற்றோர்களும் புகார் தெரிவித்து வருகின்றனர்.தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து வரும் மேயர் சென்னை மாநகராட்சி அரசின் பள்ளிகள் 80 சதவீதம் தரம் உயர்த்தப்பட்டுள்ளது…
Mediaவறுமை என்பது ஒரு குடும்பம் அல்லது தனிநபர் அவர்களின் பொருளாதார திறன் மற்றும் அடிப்படை தரநிலைகளுக்கான தேவைகள் இல்லாத நிலை அல்லது சூழ்நிலையாகும். மனிதனின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு தனிநபரின் வேலை, சம்பளம் போதுமானதாக இல்லாத சூழ்நிலையே வறுமை. அது மட்டுமல்லாமல் இந்தியாவில் வறுமை என்பது சமீபத்தில் UNDP பல பரிமாண வறுமை எம்பிஐ அறிக்கை ஒன்றை வெளியிட்டது. 2006-ஆம் ஆண்டு முதல் 2021-ஆம் ஆண்டு வரையில் 15ந்து ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவில் 41.5 கோடி பேர் வறுமையில் இருந்து வெளியேறியுள்ளதாக குறிப்பிடப்பட்டு உள்ளது. யுஎன்டிபி எனப்படும் ஐ.நா. வளர்ச்சித் திட்டம் மற்றும் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகம் இணைந்து இந்த அறிக்கையைத் தயாரித்துள்ளது. உலகளவில், 111 வளரும் நாடுகளில் உள்ள மொத்த 610 கோடி மக்களில், 19.1% அல்லது 120 கோடி பேர் வறுமையில் வாழ்கின்றனர்.ஐ.நா. கணக்கெடுப்பின்படி, கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா அதிக அளவில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்திய மக்கள் தொகை தற்போது 142.86 கோடி என்றளவில் உள்ளதாக ஐ.நா.வின் அண்மை அறிக்கை தெரிவிக்கின்றது. அதன்படி, ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2005-ல் 44.3% ஆக இருந்த நிலையில் 2019/2021-ல் 11.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.இதுதாண்டா இந்தியா – வறுமையின் தாயகம் | வினவு குழந்தை இறப்பு விகிதம் 4.5 சதவீதத்தில் இருந்து 1.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. சமையல் எரிவாயு வசதி இல்லாதோர் எண்ணிக்கை 52.9 சதவீதத்தில் இருந்து 13.9 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுகாதார கட்டமைப்பு வசதிகள் இல்லாதோரின் எண்ணிக்கை 50.4 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. சுத்தமான குடிதண்ணீர் வசதி இல்லாதோர் எண்ணிக்கை 16.4 சதவீதத்தில் இருந்து 2.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. மின்சார வசதி இல்லாதோர் எண்ணிக்கை 44.9 சதவீதத்தில் இருந்து 13.6 சதவீதமாக குறைந்துள்ளது.இது கடந்த 15 ஆண்டுகளில் இல்லதாத வளர்ச்சியாகப் பார்க்கப்டுகிறது. ஏனென்றால் கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் வறுமை ஒழிப்பு என்பது நிகழ்ந்துள்ளது என்பது ஐ.நா வெளியிட்ட அறிக்கையின் வாயிலாக தெரிகிறது. இந்தியா மட்டுமல்லாமல் அதன் உட்பட 25 நாடுகளின் முயற்சியால் வறுமை ஒழிப்பில் காட்டி உள்ள முன்னேற்றமானது வறுமை ஒழிப்பு என்பது நாடுகளில் சாத்தியமானது என்பதில் ஐயமில்லை.
via News J : https://ift.tt/yeLVRZ5
via News J : https://ift.tt/yeLVRZ5
Mediaடெட்ரா பாக்கெட்களில் மதுவை அறிமுகப்படுத்தி, ஏழை மக்களை
திமுக அரசு குடிக்க ஊக்குவிப்பது குறித்தும், டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமி, செந்தில்பாலாஜி டூ பாயிண்ட் ஓ ஆக மாறிவிட்டாரா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.மதுக்கடைகளால் தமிழகம் நாசமாகி வருகிறது… மதுப்பழக்கத்தினால் மாணவர்கள், பெண்களின் வாழ்க்கை கெட்டுச் சீரழிகிறது…. இளம் விதவைகளும் தமிழகத்தில் அதிகமாகி விட்டனர்…. குடி கெடுக்கும் குடியை அழிக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலினின் ஆட்சியில், மதுபோதையால் வாழ்வாதாரம் இழந்து, விஷச்சாராயத்தால் உயிர்களை இழந்து கண்ணீர் கடலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.தானியங்கி மதுவிற்பனை கருவியை அறிமுகப்படுத்திய விடியா அரசின் ஆட்சியில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க இப்போதைய புதிய அறிமுகம் டெட்ரா பேக். குவார்ட்டர் பாட்டில்களை வாங்க வருமானம் இல்லாத ஏழைகளையும் குடிநோயாளியாக்கும் வகையில் 90மில்லி அளவு கொண்ட டெட்ரா பேக்குகளை அறிமுகப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துச்சாமி.கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று டாஸ்மாக் துறை கையில் கிடைத்ததும் செந்தில்பாலாஜி டூ பாயிண்ட் ஓவாகவே மாறியிருக்கிறார் முத்துசாமி. மதுவிற்பனை சரியில்லாத 500 கடைகளை மூடியதாக பெயரளவுக்கு அறிவித்து விட்டு, அதில் கிடைத்த சொற்ப வருமானங்களையும் விட்டு விடாமல் வசூலிக்க அறிமுகப்படுத்தப்படுகிறது டெட்ரா பேக்.இதற்கு காரணம், மக்கள் மதுவை விட்டுவிட்டால் திமுகவுக்கு தான் பாதிப்பு என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்… ஏனெனில் சாராய ஆலைகளை வைத்து நடத்துவதே திமுகவினர்தானே. தன்விரலை வைத்தே தன் கண்ணைக் குத்திக்கொள்ள விரும்புமா என்ன? இனி அவர்கள் டெட்ரோ பேக்குகளையும் சப்ளை செய்வார்கள்…அதுசரி, இப்படி திடீரென்று மதுவினை டெட்ரா பேக்குகளில் வைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது ஏன் என்று கேட்டால், அமைச்சர் அதற்கும் விஞ்ஞான ரீதியில் ஒரு பதில் வைத்துள்ளார். மது பாட்டிலை சாலையிலும், நீர்வழித்தடத்திலும் போடுவதால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். நீர்வழித்தடங்களில் குடிமராமத்து பணி செய்தாலே இதற்கு தீர்வு காணலாம்… ஆனால், டெட்ரா பேக்கினை அறிமுகம் செய்வதற்காக ஒரு சப்பைக்கட்டு காரணத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.இதற்கும் மேலே ஒருபடி போய், 180 மில்லி கொண்ட குவார்ட்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்வதற்காக, மற்றொருவரின் வருகைக்காக மதுப்பிரியர்கள் காத்திருப்பதாகவும், 90 மில்லி கொண்ட டெட்ரா பேக் கொண்டு வந்தால் அந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.இப்படி மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டி, தன் சொந்த கட்சியின் மது ஆலை அதிபர்கள் கல்லா கட்டவும், அதன் மூலம் தனது சொந்த கஜானாவை நிரப்பிக் கொள்ளவும்தான், மதுவை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய இருக்கிறது திமுக என்கிறார்கள் உள் விவகாரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/U0ANsRH
திமுக அரசு குடிக்க ஊக்குவிப்பது குறித்தும், டாஸ்மாக் அமைச்சர் முத்துசாமி, செந்தில்பாலாஜி டூ பாயிண்ட் ஓ ஆக மாறிவிட்டாரா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.மதுக்கடைகளால் தமிழகம் நாசமாகி வருகிறது… மதுப்பழக்கத்தினால் மாணவர்கள், பெண்களின் வாழ்க்கை கெட்டுச் சீரழிகிறது…. இளம் விதவைகளும் தமிழகத்தில் அதிகமாகி விட்டனர்…. குடி கெடுக்கும் குடியை அழிக்க பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று எதிர்க்கட்சியாக இருந்தபோது நீலிக்கண்ணீர் வடித்த ஸ்டாலினின் ஆட்சியில், மதுபோதையால் வாழ்வாதாரம் இழந்து, விஷச்சாராயத்தால் உயிர்களை இழந்து கண்ணீர் கடலில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது தமிழகம்.தானியங்கி மதுவிற்பனை கருவியை அறிமுகப்படுத்திய விடியா அரசின் ஆட்சியில் டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க இப்போதைய புதிய அறிமுகம் டெட்ரா பேக். குவார்ட்டர் பாட்டில்களை வாங்க வருமானம் இல்லாத ஏழைகளையும் குடிநோயாளியாக்கும் வகையில் 90மில்லி அளவு கொண்ட டெட்ரா பேக்குகளை அறிமுகப்படுத்துவதாகக் கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துச்சாமி.கங்கா சந்திரமுகியாக மாறியது போன்று டாஸ்மாக் துறை கையில் கிடைத்ததும் செந்தில்பாலாஜி டூ பாயிண்ட் ஓவாகவே மாறியிருக்கிறார் முத்துசாமி. மதுவிற்பனை சரியில்லாத 500 கடைகளை மூடியதாக பெயரளவுக்கு அறிவித்து விட்டு, அதில் கிடைத்த சொற்ப வருமானங்களையும் விட்டு விடாமல் வசூலிக்க அறிமுகப்படுத்தப்படுகிறது டெட்ரா பேக்.இதற்கு காரணம், மக்கள் மதுவை விட்டுவிட்டால் திமுகவுக்கு தான் பாதிப்பு என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்… ஏனெனில் சாராய ஆலைகளை வைத்து நடத்துவதே திமுகவினர்தானே. தன்விரலை வைத்தே தன் கண்ணைக் குத்திக்கொள்ள விரும்புமா என்ன? இனி அவர்கள் டெட்ரோ பேக்குகளையும் சப்ளை செய்வார்கள்…அதுசரி, இப்படி திடீரென்று மதுவினை டெட்ரா பேக்குகளில் வைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது ஏன் என்று கேட்டால், அமைச்சர் அதற்கும் விஞ்ஞான ரீதியில் ஒரு பதில் வைத்துள்ளார். மது பாட்டிலை சாலையிலும், நீர்வழித்தடத்திலும் போடுவதால் பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் பிரச்சினையாக உள்ளதாக தெரிவித்திருக்கிறார். நீர்வழித்தடங்களில் குடிமராமத்து பணி செய்தாலே இதற்கு தீர்வு காணலாம்… ஆனால், டெட்ரா பேக்கினை அறிமுகம் செய்வதற்காக ஒரு சப்பைக்கட்டு காரணத்தை கூறியிருக்கிறார் அமைச்சர் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.இதற்கும் மேலே ஒருபடி போய், 180 மில்லி கொண்ட குவார்ட்டர் பாட்டிலை பகிர்ந்து கொள்வதற்காக, மற்றொருவரின் வருகைக்காக மதுப்பிரியர்கள் காத்திருப்பதாகவும், 90 மில்லி கொண்ட டெட்ரா பேக் கொண்டு வந்தால் அந்த பிரச்சினை தீர்ந்துவிடும் என்றும் கூறியிருக்கிறார் அமைச்சர் முத்துசாமி.இப்படி மக்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து பணத்தை சுரண்டி, தன் சொந்த கட்சியின் மது ஆலை அதிபர்கள் கல்லா கட்டவும், அதன் மூலம் தனது சொந்த கஜானாவை நிரப்பிக் கொள்ளவும்தான், மதுவை டெட்ரா பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்ய இருக்கிறது திமுக என்கிறார்கள் உள் விவகாரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/U0ANsRH
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/eps-arikkai-2.jpg">Media</a><strong>கழகப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் அறிக்கை :</strong>தன் குடும்பத்தின் மீதும் சக அமைச்சர் மீதும் உள்ள குற்றச்சாட்டுகளை மறைக்க, ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில், தானே நீதிபதியாக மாறி முன்னாள் அமைச்சர்களை குற்றவாளி என்று குறிப்பிட்ட பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்! <strong> “இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து </strong><strong> அதனை அவன்கண் விடல்”</strong>இக்குறளை மறந்து எந்தவிதத் தகுதியும் இல்லாமல், வாரிசு அரசியலில் தலையெடுத்த ஒருவரிடம், ஆட்சியை ஓப்படைத்ததன் பலனை தமிழக மக்கள் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.<strong> பதவிக்கு பெருமை சேர்ந்த தலைவர்கள் சிலர் :</strong>பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித் தலைவி அம்மா<strong>பதவியால் பெருமைப் பெற்றவர்கள் சிலர் :</strong>அதில் தலையாய விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் திரு.மு.க ஸ்டாலின் திகழ்கிறார். காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் பாய்வதுபோல் 10 ஆண்டுகால அகோரப் பசியைத் தீர்க்க, நாலா திசைகளிலும் செய்தி ஊடகங்களும் இந்த விடியா திமுக அரசை தினந்தோறும் குற்றம் சுமத்தி வருகிறது.“காமாலைக் கண்ணுக்கு காண்பெதெல்லாம் மஞ்சள்” என்பது போல், ஊழல் சேற்றில் புரள்வதையே தொழிலாகக் கொண்ட ஊழலின் ஊற்றுக் கண்ணான தி.மு.க அதன் தலைவர் திரு.ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், மற்றவர்களைப் பார்த்து ஊழல்வாதிகள் என்றும், குற்றவாளிகள் என்றும் புலம்பித் திரிகின்றனர்.குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகில் வாழும் இந்த ஆட்சியாளர்கள், தங்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்களில் இருந்து மீள், மத்திய அரசிடம் சரணாகதி படலத்தை தொடங்கி உள்ளார்கள். அதன் முதல்படியாக திரு.ஸ்டாலின், தன் கட்சியினர் வாக்களிக்காமல் தேர்வான மேதகு இந்திய குடியரசுத் தலைவர் திருமதி திரவுபதி முர்மு அவர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார்.முதலமைச்சர் திரு. ஸ்டாலின் யார் காலில் விழுந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை. ஆனால், அந்தக் கடித்தத்தில் எங்கள் மீது விழுந்து பிராண்டுவதை அனுமதிக்க முடியாது. குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய ரகசிய (?) கடிதத்தில், “குற்றவாளிகள் மீது வழக்குத் தொடர அனுமதி வழங்குவதில் தேவையற்ர தாமதம்” என்ற தலைப்பில் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக நஞ்சை கக்கி இருக்கிறார்.<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/04/eps-1.jpeg">Media</a>திரு. எம்.ஆர். விஜயபாஸ்கர், திரு. கே.சி. வீரமணி ஆகியோர் மீது, தனது ஏவல் துறையைவிட்டு பொய் வழக்கு போட்டுவிட்டு, இவரே நீதிபதியாக மாறி குற்றம் சுமத்தியவர்களை ‘குற்றவாளிகள்’ என்று குறிப்பிட்டு ஒரு மோசடி அரசியலை செய்யும் விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினை கடுமையாகக் கண்டிக்கிறேன்.உண்மையில், முந்தைய மைனாரிட்டி திமுக ஆட்சியில் அமைச்சர்களாக வலம் வந்தவர்கல் செய்த ஊழல்கள் தமிழக மக்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக மாண்புமிகு அம்மா அவர்களால், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழும், குற்றவியல் நடைமுறை சட்டத்தின்படியும் சுமார் 50 சதவீத திமுக அமைச்சர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு, அவர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், வாய்தா மேல் வாய்தா வாங்கி 10 ஆண்டுகள் இருந்த இடம் தெரியாமல் பதுங்கி இருந்துவிட்டு, தற்போது ஆட்சிப் பீடத்தில் அமர்ந்தவுடன், தங்களது திமுக வழக்கறிஞர்களையே அரசு வழக்கறிஞர்களாக நியமித்து வாதாடி, உலகமே வியக்கும் வகையில் ஒருசில அமைச்சர்கள் தற்போது விடுதலையாகி வருவதை தமிழக மக்கள் கடுங்கோபத்துடன் பார்த்து வருகின்றனர்.மேலும், லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளாக குற்றவாளி என்று நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையால் வாதாடி அந்த நிலையில், விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதே லஞ்ச ஒழிப்புத் துறை, ஆளும் திமுகவின் அங்கமாகவே மாறி, திமுக அமைச்சர்களை குற்றமற்றவர்கள் என்று விடுதலை வாங்கித் தரும் அவல நிலையை தமிழக மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். எதிர்வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இதற்குண்டான பதிலை தமிழக மக்கள் விரைவில் அளிப்பார்கள் என்பதை இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.விடியா திமுக ஆட்சியில், தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக இன்று, தமிழ இளைஞர்கள் போதைப் பொருட்களின் மயக்கத்தில் குற்றச் செயல்களில் ஈடுபடுவது சர்வ சாதாரணமாகி உள்ளது. இதை நான் சொல்லவில்லை. பட்ஜெட் கூட்டத் தொடரில் உள்துறை மானிய கொள்கை விளக்கக் குறிப்பில் இந்த விடியா அரசே கூறியுள்ளது.…