News J
634 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaதிருத்தணி அருகே பயணிகளுடன் அரசுப் பேருந்தை இயக்க, கஞ்சா போதையில் இருந்த இளைஞர் முயன்றதால், பொதுமக்கள் பீதியில் உறைந்தனர். இந்த பரபரப்பு சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…அரசு பேருந்தை அத்துமீறி இயக்கி, பேருந்து ஊழியர்களையும், பயணிகளையும் பதைபதைப்புக்கு உள்ளாக்கியிருக்கிறார் இந்த கஞ்சா போதை இளைஞர்.காஞ்சிபுரத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அண்ணா பேருந்து நிலையத்திற்கு வந்த தடம் எண்- 212 H என்ற அரசு பேருந்து, 50 பயணிகளுடன் திருப்பதி நோக்கிச் சென்றது. அந்தப் பேருந்து சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லை பகுதியில் தனியார் உணவகம் ஒன்றின் முன்பாக, உணவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டது. சில பயணிகளும், நடத்துனர் மற்றும் ஓட்டுநரும், பேருந்தில் இருந்து உணவகத்திற்கு சாப்பிட சென்றுள்ளனர்.அப்போது இதே பேருந்தில் ஆந்திர மாநிலம் நகரிக்கு டிக்கெட் எடுத்து பயணித்த இரண்டு கஞ்சா போதை இளைஞர்களில் ஒருவர், திடீரென ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தபடி, பேருந்தை இயக்க முயற்சி செய்துள்ளார். இதனைப் பார்த்த, பேருந்தில் இருந்த பெண் பயணிகள் உள்ளிட்டோர், அலறி அடித்தும் கண்டுகொள்ளாமல், போதை இளைஞர் பேருந்தை இயக்குவதிலேயே குறியாக இருந்துள்ளார்.பயணிகளின் அலறல் கேட்டு உடனே வந்த ஓட்டுநரும், நடத்துநரும் கஞ்சா போதை இளைஞரின் செயலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக, இளைஞரை சத்தமிட்டு பேருந்தில் இருந்து இறக்கி விட்டனர். அப்போது அதனை வீடியோ எடுத்தவரையும் போதை இளைஞர், நான் யூடியூபர், என்னையே வீடியோ எடுக்கிறாராயா என்று மிரட்டியிருக்கிறார்.கஞ்சா போதை இளைஞர் அரசு பேருந்து இயக்க முயற்சி செய்து விபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பு? என்று பொதுமக்கள் ஆவேசமானதை தொடர்ந்து, கஞ்சா போதை இளைஞர்களை அங்கேயே விட்டுவிட்டு பேருந்து புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் கஞ்சா போதை இளைஞர்கள் அந்தப் பகுதியிலும் தகராறில் ஈடுபட்டுவிட்டு மற்றொரு பேருந்தில் நகரிக்கு சென்றதாகக் கூறப்படுகிறது. தகவலின் பேரில் அங்குவந்த திருத்தணி போலீசார் கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருத்தணி பகுதியில் கஞ்சா விற்பனையை போலீசார் கட்டுப்படுத்த முடியாததால் இளைஞர்கள் பலரும் கஞ்சா போதைக்கு அடிமையானதாகக் கூறப்பட்டு வருகிறது. அதன் எதிரொலிதான் தற்போது அரசுப் பேருந்தை இயக்க முயன்ற சம்பவமும் என்கிறார்கள் அப்பகுதியினர்.

via News J : https://ift.tt/BwfayAN
Mediaமானாமதுரை அருகே ஒடிசாவைச் சேர்ந்த கைம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 4 இளைஞர்கள், சிறுவன் என 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். செங்கல் சூளை பெண் தொழிலாளிக்கு நேர்ந்த துயரம் குறித்து காண்போம்…2 குழந்தைகளின் தாயான கணவரை இழந்த பெண்ணை வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் இவர்கள்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மூங்கில் அருகே செங்கல் காளவாசல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தம்பதிகள் கடந்த 7 வருடமாக வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் கணவர் சாலை விபத்தில் 4 வருடங்களுக்கு முன்பு இறந்ததை தொடர்ந்து, மனைவி மட்டும் தனது இரு குழந்தைகளுடன் அங்கு தங்கியிருந்து செங்கல் காளவாசலில் வேலை பார்த்து வந்தார்.இதில், அதே செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்த கீழப்பாசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவருக்கும், ஒடிசா கைம்பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு அவர்கள் தகாத உறவில் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று இரவு குடிபோதையில், ஆதியின் நண்பர்களான தெக்கூர் கிராமத்தைச் சேர்ந்த 4 இளைஞர்களும், ஒரு சிறுவனும் சேர்ந்து ஒடிசா பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துன்புறுத்தியுள்ளனர்.தனக்கு நேர்ந்த விபரீதம் குறித்து, ஒடிசா பெண் மானாமதுரை மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீருடன் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கீழமேல்குடி தெக்கூரை சேர்ந்த அவர்களை தேடி வந்த நிலையில், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக ரஞ்சித், கஜேந்திரன், அருண்குமார், ஆதித்யா
மற்றும் ஒரு சிறுவன என ஐந்து பேரை கைது செய்தனர்.தொடர்ந்து அவர்களில் சிறுவனை சீர்திருத்தப்பள்ளியிலும், மற்ற நால்வரையும் சிறையிலும் அடைத்தனர். செங்கல் காளவாயில் தங்கியிருந்த ஓடிசா பெண்ணை, இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம், செங்கல் காளவாயிலில் வேலை பார்க்கும் மற்ற பெண்களிடையே அதிர்ச்சியையும், அந்தப் பகுதியில் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


via News J : https://ift.tt/f1TIrlO
Mediaபட்டினம்பாக்கம் எஸ்டேட் பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மக்கள் வாழும் பகுதியை குப்பை மேடாக மாற்றி வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…மக்கள் வசிக்கும் பகுதி எனக் கூட பாராமல், நள்ளிரவில் கொள்ளையர்களைப் போல வந்து குப்பைகளைக் கொட்டிச் செல்லப்படுவதால் இப்பகுதி முழுவதும் குப்பை மேடு போல காட்சியளிக்கிறது…சென்னை மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பட்டினம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே செல்லக்கூடிய பிரதான சாலைகளில் தொடர்ந்து குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. விடியா ஆட்சி அமைந்த நாளில் இருந்தே இத்தொல்லை தொடங்கியதாக இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். சாந்தோம் பிரதான சாலையிலிருந்து பட்டினம்பாக்கம் செல்லக்கூடிய இச்சாலை வழியாக தான் சீனிவாசபுரம், முல்லிமா நகர், நம்பிக்கை நகர், பவாணி குப்பம், ராஜிவ் நகர், காந்தி நகர், டுமில் குப்பம், நொச்சுக்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்கின்றனர்,மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகளில் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களின் கழிவுகளும் தேவையற்ற உதிரி பாகங்களும் குப்பைகளும் லாரிகளில் கொண்டு வந்து இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் சாலையை கடப்பதில் பொது மக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாகவும் தெரிவிக்கின்றனர்.குப்பைகள் மலைபோல குவிக்கப்படுவதால் இரவு நேரங்களில் இந்த இடம் முழுவதும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறதாம். மின்விளக்குகள் கூட இல்லாததால் இரவில் வேலை முடிந்து வீடு திரும்புவதற்கு கூட பெண்கள் அச்சப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. மின் விளக்குகள் இல்லாதது சமூகவிரோதிகளுக்கு மிகவும் சாதகமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.மேலும், மழை காலங்களில் இப்பகுதி முழுவதும் தேங்கி நிற்கின்ற மழை நீரில் குப்பைகள் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகின்றன. டெங்கு பரவி வருவதால் இப்பகுதியில் வசிக்கும் சிறுவர்கள், முதியவர்கள் பலர் ஏற்கனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.தங்களின் பிரச்சனை குறித்து திமுக எம்எல்ஏ வேலு மற்றும் மாநகராட்சி அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு எந்த பயனும் இல்லை என குடியிருப்புவாசிகள் புகார் தெரிவிக்கின்றனர். விடியா ஆட்சியில் குப்பைகளை அப்புறப்படுத்த முறையான நடவடிக்கைகளை எடுக்காமல், மக்கள் வசிக்கும் பகுதிகளை இப்படி குப்பை மேடாக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

via News J : https://ift.tt/5tKlNP9
Mediaதிமுகவுல இனி எல்லாம் நான் தான் என்று சட்டைக்காலரை தூக்கிவிட்டு சுற்றிக்கொண்டிருக்கும் உதயநிதி ஸ்டாலினை குனிந்து கும்பிடு போடாத முக்கியத்தலைவர்களே இல்லை எனலாம்.. அவ்வளவு ஏன்? சட்டமன்றத்திலேயே முன்வரிசையில் ஸ்டாலின் அமர்ந்திருக்க, அங்க ஒரு கும்புடு, அப்படியே ரெண்டு ஸ்டெப் மேலே ஏறி, உதயநிதிக்கு ஒரு கும்பிடு என்று கும்பிடு குருசாமிக்களாகவே மாறிப்போயிருக்கும் திமுக எம்எல்ஏக்கள் உள்ளுக்குள் செமக்கடுப்பில் இருக்கிறார்கள் என்று ஏகத்துக்கும் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன…மறைந்த கருணாநிதி காலத்தில் இருந்தே கட்சியில் பணியாற்றியவர்கள், கட்சிக்காக பாடுபட்டவர்கள் எல்லாம் அறிவாலய வாசலில் நின்றுகொண்டும், உதயநிதி பிரச்சார வாகனத்தில் தொங்கிக்கொண்டும்தான் இருக்கின்றனர். ஆனால், ஸ்டாலினின் மகன் என்ற ஒரே காரணத்தால், அரசியலுக்கு வந்து வெறும் ஐந்தே ஆண்டுகளில் அமைச்சராக உருவெடுத்திருக்கிறார் உதயநிதி.. குறுகிய காலத்தில் பெரும் பதவி வந்தால் அதை எப்படி தக்கவைப்பது? எப்படி திறமையாக பணியாற்றுவது என்றெல்லாம் நினைக்காமல், சீனியர்களை ஓரங்கட்டுவது, கட்சியை கைப்பற்றுவது, முக்கியமானவர்களை முட்டுச்சந்தில் நிற்கவைப்பது என்று திமுகவை அதகளப்படுத்தி, குதறிக்கொண்டிருக்கிறார் உதயநிதி.. உட்கட்சிக்குள்தான் இத்தனை பிரச்சனைகள் என்றால், கஷ்டப்பட்டு காங்கிரஸ் கட்சி கட்டியெழுப்பிய கூட்டணியையே ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது உதயநிதியின் பேச்சு..பேச்சா பேசுன பேச்சு … இப்போ பேசிப்பாரு என்று வடிவேலு காமெடி போல, திமுகவின் சீனியர்கள் தற்போது உதயநிதி மீது கோபக்கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.. இதன் வெளிப்பாடுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை வேலூரில் நடந்த திமுக முப்பெரும் விழாவிலும் எதிரொலித்தது. மேடையிலேயே வைத்து, உதய் க்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார் கட்சியின் சீனியர் டி.ஆர்.பாலு. “கொஞ்சம் அடக்கிவாசிக்கணும் தம்பி, இல்லன்னா கையில கெடச்சிருக்கும் பொருள் சுக்குநூறாக உடைஞ்சுரும் பா” என்று வெளிப்படையாகவே, எச்சரித்திருக்கிறார்.. இதைப்பார்த்துக்கொண்டிருந்த கட்சியினர் முகத்தில் எல்லாம் ஒரே ஷாக்தான்..10 ஆண்டுகால வனவாசம் முடிந்து இப்போதுதான் ஆட்சிக்கு வந்திருக்கிறோம்… இப்போது வாயை வைத்துக்கொண்டு சும்மா இருக்காமல் இப்படி வம்பிழுப்பதினால் ஒட்டுமொத்த கட்சிக்குமே பேராபத்து என்பதை எப்போதுதான் உணரப்போகிறாரோ சின்னப்பையன்.. சாரி சாரி சின்னவர் என்று முனுமுனுத்தவர்கள்தான் ஏராளம்..ஆக, ஏற்கனவே கடுங்கோபத்தில் இருக்கும் திமுகவின் சீனியர்களை மேலும் மேலும் எரிச்சலூட்டுகிறதா உதயநிதியின் நடவடிக்கைகள்? ஆர்வக்கோளாறாக தன் ஆருயிர் தோழர் அன்பில் உடன் சேர்ந்துகொண்டு அவர் செய்யும் அட்டூழியங்களால் திமுக மாவட்ட செயலாளர்களே மனம்நொறுங்கிபோய் இருக்கிறார்களா? பொதுக்கூட்ட மேடையிலேயே சீனியர்கள் அட்வைஸ் கொடுக்கும் அளவிற்கு, ஆட்டம்போடும் உதயநிதியின் பக்குவமற்ற பேச்சால் திமுக சில்லுசில்லாக உடையக்போகிறது… இந்த உண்மை தெரிந்ததால்தான் உதயநிதி மீது செம்ம கடுப்பில் இருக்கிறார்கள் திமுகவின் சீனியர்கள் என்று உண்மையைப்போட்டு உடைக்கிறார்கள் உடன்பிறப்புக்கள்–  இணையாசிரியர் மனோஜ்குமார் கோபாலன்

via News J : https://ift.tt/7hSbqLg
Mediaநீட் விவகாரம் பற்றி எப்போதெல்லாம் கேள்வி எழுப்பப்படுகிறதோ, அப்போதெல்லாம் புது புதிதாக கதை சொல்வதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் வாரிசு அமைச்சர். அந்த வகையில் அவர் உருட்டிய புதிய உருட்டு ஒன்று திகைக்க வைத்திருக்கிறது. அது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.கடல் எப்ப வத்த, நான் எப்ப கருவாடு தின்னனு… குடல் வத்திப்போன கொக்கு போல தவித்துக்கொண்டு இருக்கிறார்கள் தமிழக மாணவர்கள்… எல்லாம் நீட் தேர்வு விவகாரம்தான்… நீட் தேர்வை ரத்து செய்துவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்த விளம்பரகும்பல், ஆட்சிக்கு வந்து இரண்டரை வருடம் ஆகியும் சொன்னதை செய்யவில்லை. எப்போது கேட்டாலும் புதிது புதுதாக கதை சொல்கிறார் வாரிசு அமைச்சர் உதயநிதி. இந்நிலையில் அடுத்த நீட் தேர்வு எப்போது நடைபெறும் என்கிற தேதியும் தகவலும் வெளியாகியுள்ளது. இந்தமுறையாவது சொன்னதை செய்து நீட் தேர்விலிருந்து விலக்கை பெற்றுத்தருவாரா விடியாலார் ? என்று ஆவலோடு காத்திருக்கின்றனர் மாணவர்கள். அவர்களுக்கு பதில் சொல்ல முடியாத வாரிசு அமைச்சர் இப்போது புதிதாக ஒரு உருட்டு ஒன்றை உருட்டி இருக்கிறார்.மதுரையில் நடந்த திமுக விழாவில் பேசிய வாரிசு அமைச்சர், நீட் தேர்வை ஒழிக்க கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்த இருப்பதாகவும், அந்த இயக்கத்தில் 50 லட்சம் பேர் கையெழுத்து போடுவார்கள் என்றும் சொன்னார். ஆட்சிக்கு வருவதற்கு முன், ஸ்டாலின் கையெழுத்து போடுவார் என்றும் நீட் தேர்வு ரத்தாகும் என்றும் சொன்னவர். இப்போது மக்களிடம் கையெழுத்து கேட்கிறார். ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்லி ஆட்சி அதிகாரத்தை பிடித்து பதவி தரும் தைரியத்தில் பணம் சம்பாரிப்பவர்கள் மக்களா ? நீங்களா ? மக்கள் எதற்காக கையெழுத்திட வேண்டும் ? சரி கையெழுத்து போட்டால் நீட் ஒழிந்து விடுமா ? எத்தனை காலத்திற்கு இப்படியே ஏமாற்றப்போகிறீர்கள் என்று பொதுமக்கள் கொந்தளித்துக்கொண்டு உள்ளனர்.நீட் என்கிற ஒரே ஒரு தேர்வை வைத்து எத்தனை உருட்டுக்களை உருட்டி இருக்கிறார் இந்த உதயநிதி …
((உருட்டு நம்பர் 1)) முதலில் ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழிப்போம் என்றார்((உருட்டு நம்பர் 2)) பின்னர் நீட் தேர்வு ரகசியம் தெரியும் என்றவர் ரகசியம் என்ற பெயரில் ஏதேதோ உளறினார்((உருட்டு நம்பர் 3)) அதன் பிறகு மத்தியிலும் திமுக கூட்டணி ஆட்சி வந்தால்தான் நீட் ஒழியும் என்றார்.((உருட்டு நம்பர் 4)) ஒரு மாணவரும் அவரது தந்தையும் தற்கொலை செய்து கொண்ட உடன் அதை அரசியலாக்கி எப்படியாவது தேர்தலில் ஓட்டு வேட்டை நடத்த வேண்டும் என உண்ணாவிரதமிருந்தார்.((உருட்டு நம்பர் 5)) நீட் விவகாரத்தில் தானும் தன் தந்தையும் சேர்ந்து ஆடும் நாடகம் அம்பலமானவுடன் இப்போது மக்களிடம் கையெழுத்து கேட்கிறார்.தொடர்ந்து நீட் விவகாரத்தில் விளம்பரகும்பல் எப்படியெல்லாம் பித்தலாட்டம் செய்கிறது, தேர்தலில் ஓட்டு வாங்கத்தான் மாணவர்களின் வாழ்வை சூனியமாக்கி கொண்டிருக்கிறது என்பதற்கு உதயநிதியின் இந்த உளறல் பேச்சுக்களே சாட்சி… கையெழுத்து இயக்கமாம் கையெழுத்து இயக்கம்… போராட்டத்திற்கு முடிவு சொல்ல வழி தெரியாமல் போராடிக்கொண்டே இருப்போம் என்கிறது திராவிடமாடல்…உதயண்ணே… உதயண்ணே… உங்களால கையெழுத்து போட முடியாது… போடவும் மாட்டீங்கன்னு ஜனங்க தெரிஞ்சிக்கிட்டாங்க… யாரு கையெழுத்து போடுவாங்களோ.. அவங்களுக்கு ஓட்டு போடவும் தயாராகிட்டாங்க… சும்மா அனத்தாதீங்கண்ணே !

via News J : https://ift.tt/6yH7JVI
Mediaஏதோ கேஸ் விஷயமா கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்த திமுககாரங்க, வந்த இடத்துல சும்மா இருக்காம, ரோட்டுல இருந்த அதிமுக பேனரை கிழிச்சிருக்காங்க. உடனே அங்க கூடுன பொதுமக்களும், கட்சி நிர்வாகிகளும் ஏன்யா பேனரை கிழிக்கிறீங்கனு கேட்டதுக்கு அதிமுக நகர கழக பொருளாளர் துரை என்பவர 50க்கும் மேற்பட்ட திமுக குண்டர்கள் சேர்ந்து கண்மூடித்தனமா தாக்கியிருக்காங்க. திமுககாரங்க பண்ண ரெளடிசத்த பாத்து போலீஸே மெரண்டு போய், அதிமுக நிர்வாகிய காப்பாத்தி கூப்டு போயிருக்காங்க. அதிகாரத்துல இருக்கோங்குற திமிர்ல ரொம்ப ஆட வேணாம். சீக்கிரமே தேர்தல் வருது அப்பறம் உங்க டப்பா டான்ஸ் ஆடிடும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/FoQEzOd
Mediaசென்னை கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாக விடியா அரசு மீது அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அபிராமபுரம் கோவிந்தசாமி நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுமார் 350 குடும்பங்கள் வசித்து வந்தனர். இங்குள்ள ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியபோது, அதைக் கண்டித்து கண்ணையன் என்பவர் தீக்குளித்து உயிரிழந்தார்.வீடுகளை இழந்தவர்களுக்கு துரைப்பாக்கம், கண்ணகி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் தருவதாக விடியா அரசு அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராடினர். இதையடுத்து மயிலாப்பூர் பகுதியிலேயே வீடுகள் வழங்குவதாக விடியா அரசு அறிவித்தது. இதை நம்பி மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், 240 குடும்பங்களுக்கு மட்டுமே தேனாம்பேட்டை, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 108 குடும்பங்களுக்கு இதுவரை விடியா திமுக அரசின் நிர்வாகம் வீடுகள் வழங்கவில்லை. இதனால் வீடுகளை இழந்து தவித்து வரும் அப்பாவி மக்கள் வாடகை வீடுகளில் பல ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து வசித்து வருகின்றனர்.ஆக்கிரமிப்புகளை அகற்றுகிறோம் என்ற பெயரில் இடிக்கப்பட்ட கட்டடங்கள் அரைகுறையாக இடிக்கப்பட்டுள்ளன. தற்போது அந்தப் பகுதி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. அப்பகுதி முழுவதும் தெருவிளக்குகள் போடப்படாமல் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் விடியா அரசு சார்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் நிலவும் சுகாதார சீர்கேட்டை சீரமைக்கும் வகையில், இப்பகுதியில் கூவம் ஆற்றுக் கால்வாயை முறையாக சுத்தப்படுத்தி தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வீடுகளை இழந்து தவித்து வரும் கோவிந்தசாமி நகர் பகுதி வாசிகளுக்கு அளித்த வாக்குறுதியின்படி வீடுகளை விரைவாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்…

via News J : https://ift.tt/ugLAdoG
Mediaநாமக்கலில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பர்கர் சாப்பிட்ட சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தில் தரமற்ற உணவுகளை தடுக்க நடத்தப்பட்ட சோதனைகள் கண்துடைப்பிற்காக நடத்தப்பட்டதா? என்ற சந்தேகம் மக்களிடையே எழுந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள சந்தப்பேட்டை புதூர் பழனிசாமி தெருவை சேர்ந்தவர் தவக்குமார், தனது மகள் கலையரசி மற்றும் குடும்பத்தாருடன் ஷவர்மா பார்சல் வாங்கி சாப்பிட்டுள்ளனர். அதே கடையில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவி தனது பிறந்த நாளுக்காக, அதே உணவகத்தில் தனது நண்பர்களுக்கு சவர்மா வாங்கி கொடுத்துள்ளார். அந்த ஷவர்மாவை சாப்பிட்ட அனைவருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயதான கலையரசி என்ற சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.சிறுமி இறந்த சோகம் அடங்குவதற்கு முன்பாகவே, தற்போது நாமக்கல்-சேலம் சாலையில் இயங்கி வரும் மிஸ்டர் பர்கர் என்ற தனியார் உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட, நாமக்கல் பூங்கா நகரை சேர்ந்த18 வயது சிறுவன் சஞ்சய், வயிற்று போக்கு காரணமாக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். பொதுவாக உணவகம் திறப்பதற்கு சம்பந்தப்பட்ட மாநகராட்சி, மாவட்ட உணவு பாதுகாப்பு துறை, தீயணைப்பு துறை, குடிநீர் வாரிய துறை போன்ற துறைகளில் அனுமதி பெற வேண்டும். உணவகம் திறக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு 6 மாத இடைவெளியிலும் சம்பந்தப்பட்ட துறையினர் பாதுகாப்பான உணவு, குடிநீர் வழங்கப்படுகிறதா? என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும். மேலும் ஆண்டுக்கு ஒரு முறை உணவகத்தின் தரம் குறித்து ஆராய்ந்து, உரிமத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதுப்பித்து தர வேண்டும்.ஆனால் தற்போது சிறுமியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த ஷவர்மா கடையிலும், பள்ளி மாணவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வர காரணமாக இருந்த பர்கர் கடையிலும் இதுபோன்ற விதிகள் பின்பற்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் சிறுமி உயிரிழப்புக்கு பிறகு நாமக்கல் மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தீவிர சோதனை என்ற பெயரில் நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றினர். சமீபகாலமாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஊடகங்களை அழைத்துக் கொண்டு தம்பட்டம் அடிக்கும் வேலையை பார்த்து வருகின்றனர். உறுப்படியாக மக்கள் நலனில் அக்கறையோடு நடந்துகொள்வதாக தெரியவில்லை. விடியா திமுக ஆட்சியில் அதிகரித்து வரும், குற்றங்களால் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை, நிர்வாக திறனற்ற செயலால் உடல்நிலை பாதிப்பதோடு, விலைமதிப்பில்லாத உயிரையும் இழக்க வேண்டியுள்ளது. தற்போது மக்களுக்கு நஞ்சை உணவாக கொடுத்து, தமிழக மக்களை பாதுகாக்க முடியாது, திராணியில்லாத அரசாக, திமுக அரசு உள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

via News J : https://ift.tt/Iyfg0Qb
Mediaபிரம்மாண்டமான முறையில மதுரைல அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடந்த காரணத்துனால, எதைத் திண்ணா பித்தம் தெளியும்ன கதையா, மதுரைல நாமளும் எதாச்சும் ஒரு மீட்டிங் நடத்துனுமேனு கடமைக்கு ஒரு கூட்டத்துக்கு கூட்டியிருக்காங்க விடியா திமுககாரங்க. கட்சியோட சீனியர் டி.ஆர்.பாலு வார்னிங் குடுத்து கூட அடங்காத உதயநிதி, இன்னும் அந்த சனாதானம் டாபிக்க புடிச்சே தொங்கிட்டு இருக்காரு. இந்த மீட்டிங்கலயும் பேசுறதுக்கு வேற டாபிக் இல்லாம, பட்டியலின பெண்ணுங்குற காரணத்தால குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை கூப்பிடாம நாடாளுமன்றக் கட்டிடத்தை திறந்துட்டாங்கனு கதறிட்டு இருந்திருக்காரு. அட அதை விடுங்க… உங்க அத்தை கனிமொழிக்கு கட்சியில குடுத்திருக்க மரியாதைய பத்திதான் ஊரே பேசிட்டு இருக்கே. ஒரு பக்கம் மேடைல எல்லாம், “எனக்கு வாய்த்த தாய், மனைவி, மகள் மாதிரி அருமையான பெண்களை பாத்தது இல்லனு” பேசுற ஸ்டாலின் வெவரமா கனிமொழி பேர அவாய்ட் பண்றாரு. நீங்க என்னடானா கட்சியில உங்க அத்தை வளர்ந்திடக் கூடாதுனு தென் மாவட்டங்கள்ல அவங்களுக்கு எதிரா உள்ளடி வேலை பாத்துட்டு இருக்கீங்க. சொந்த குடும்பத்துல இருக்க ஒரு பெண், அதும் கட்சித் தலைவருக்கு தங்கையாவும், உங்களுக்கு அத்தையாவும் இருக்க ஒரு பெண் வளர்ந்திடக் கூடாதுனு இவ்ளோ தகிடுதத்தோம் பண்ணிட்டு சனாதனத்தை பத்தி எல்லாம் நம்ம பேசலாமா பாஸ்னு… நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/n3t2Z4r
Mediaநாடாளுமன்ற தேர்தல் வரப்போவதையொட்டி, திடீரென்று நாங்களும் இருக்கோம்ல.. எங்களயும் யாராச்சும் கூப்டுங்கப்பா… என்று கூவிக்கொண்டிருக்கிறார் மக்கள் நீதிமய்யத்தின் தலைவர் கமல்.. அதற்காகத்தான் கோவையில்,ஸ்டார் ஹோட்டலில் கட்சிக்கூட்டத்தை நடத்தியிருக்கிறார். வந்தது 500பேரா? 1000 பேரா என்றுகூட தெரியாமல் அருகில் நிற்கும் நிர்வாகியிடம் சாரி சாரி,. ஈவன்ட் ஆர்க்கணைசர்ஸ் இடம் கேட்கிறார் எலைட் அரசியல்வாதி கமல்..2,3 நாட்களுக்கு முன்னர் மறைந்த கருணாநிதி பற்றிய புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு, அவரை ஆஹோ ஓஹோ என்றெல்லாம் புகழ்ந்து தள்ளியிருந்தார்.. இதே வாய்தான், கடந்த 2021 தேர்தலுக்கு முன்னர் “நான் சக்கர நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு உங்களை துன்புறுத்த மாட்டேன்” என்று கருணாநிதியை வசைமாறி பொழிந்தது.. பின்னர் வழக்கம்போல, விளக்கவுரை கொடுத்து எஸ்கேப் ஆனார்.. திமுகவும் இவரை சும்மாவிட வில்லை… “பூம் பூம் காரனின் மாடு என்ன செய்துவிடும்?” என்று முரசொலியில் தலையங்கம் எழுதி கிழி கிழி என கிழித்து தொங்கவிட்டது கமல்ஹாசனை.. இப்படி குடுமிப்பிடி சண்டையிட்டுக்கொண்டவர்கள் மீண்டும் அளவளாவிக்கொள்வதற்கு காரணம் ஒன்று இருக்கிறது…செந்தில்பாலாஜி சிறையில் இருப்பதையும், “நான் கோவையில் போட்டியிடப்போகிறேன்” என்று கமல் பேசியிருப்பதையும், திமுக – கமல் உறவு கொண்டாடுவதையும் புள்ளிவைத்துஇணைத்துப்பார்த்தால் திமுகவின் திட்டம் புரியும்.. ஆம், கோவையில் செந்தில்பாலாஜி செயல்பட முடியாமல்இருப்பதால், கமலை களமிறக்கி ஏதாவது வித்தை காட்டலாம் என்று கணக்குப்போடுகிறது திமுக.. உடனே, கமல் அவ்வளவு பெரிய அரசியல்வாதியா என்று எண்ணிவிடாதீர்கள்… விக்ரம் படத்திற்கு கூடிய கூட்டம் தேர்தலில் நமக்கு கூடாதா? என்று கனவு கண்டுகொண்டிருக்கும் கமலை வைத்து திமுக இயக்கப்போகும் புது படம் தான் இது… இப்போது புரிகிறதா அந்த பூம் பூம் காரர் யார்? பூம் பூம் காரரின் மாடு எது என்று ?மக்கள் நீதி மய்யம் என்று ஒரு கட்சி, மக்களுக்காக அந்த ஆர்ப்பாட்டம் இந்த ஆர்ப்பாட்டம், அந்தப்போராட்டம், இந்தப்போராட்டம் என்று வீதியில் இறங்கியதாக கேள்விப்பட்டதுண்டா? அட அட்லீஸ்ட், மக்களுக்கு எதிராக செயல்படும் ஆட்சியாளர்களை கேள்வி கேட்டதுண்டா? அதற்கான எந்தவிதமான அறிகுறிகள்கூட இல்லாத ஒரு அமைப்பை மக்கள் எப்படி நம்பப்போகிறார்கள்? சினிமாவில் அவர் உலகநாயகன் தான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லைதான்.. ஆனால், சினிமா டிக்கெட் வாங்கும் அனைவரும் அவருக்கு ஓட்டுப்போட்டு எம்பி ஆக்கிவிடுவார்கள் என்று எண்ணுவதுதான் சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது…ஏற்கனவே, 2019 நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டுவிட்டு 2 ஆண்டுகள் ரெஸ்ட் எடுத்தார் கமல்…பிறகு 2021ல் உயிர்த்தெழுந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டி,… பின்னர் 2 ஆண்டுகள் ரெஸ்ட் மற்றும் ஷீட்டிங்… தற்போது, மீண்டும் “சப்ஜட்க்கு உயிர் இருக்கு” என்ற அவரின் டயலாக் போலவே, திடீர் திடீர்ன்னு வருதாம்.. போவுதாம்.. போட்டிபோடுதாம்.. தோக்குதாம்… என்று இருக்கிறது மக்கள் நீதிமய்யத்தின் நிலைமை…ஆக, 2021 தேர்தலுக்குப்பிறகு காணாமல்போன கமல், சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா? கமலை வைத்து விக்ரம் படத்தில் ஹிட் கொடுத்ததைபோல, கோவையில் ஹிட் கொடுக்கலாம் என்று பகல் கனவு கண்டுகொண்டிருக்கும் திமுகவிற்கு, அட்டு ப்ளாப் கொடுக்கப்போகிறார் அரசியல்வாதி கமல் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகிறது..–  மனோஜ் குமார் கோபாலன், இணையாசிரியர்

via News J : https://ift.tt/w7nFjoC
Mediaபராமரிப்பு தொகை கொடுக்காததால் சென்னையில் பல்வேறு திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பில்லாமல் கிடப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…விடியா ஆட்சியில் இப்படி பராமரிப்பில்லாமல், மக்கள் பயன்படுத்தக் கூட முடியாத நிலையில் உள்ளன பொதுக்கழிப்பறைகள்…மக்கள் தொகை அதிகம் கொண்ட சென்னை மாநகரில் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பல்வேறு இடங்களில் பொதுக் கழிப்பிடங்கள் செயல்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சி நிதியுடனும், சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழும், மத்திய
அரசின் ஸ்வச் பாரத் திட்டத்தின் நிதி உதவியுடனும் ஆயிரக்கணக்கான பொது கழிப்பிடங்களும், சிறுநீர் கழிப்பிடமும் செயல்பட்டு வருகின்றன. இதேபோல் கடந்த அதிமுக ஆட்சியில் இ டாய்லெட் என்ற பெயரிலும் சிறுநீர் கழிப்பிடமும்,
பொதுக்கழிப்பிடமும் நடைமுறையில் இருந்தது. ஆனால், விடியா திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இ டாய்லெட் கழிப்பிடங்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் மூடி கிடக்கும் அவல நிலையில் உள்ளது. அது மட்டுமல்லாமல் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட கழிப்பறைகளுக்கும் மாதாந்திர பராமரிப்பு தொகை கொடுக்காததால் அதன் பராமரிப்பாளர்கள் அவற்றை முறையாக பராமரிக்காமல் பாழடைந்து காணப்படுகின்றன. சென்னை நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு அலுவலகங்கள் அதிகமுள்ள ஹாடோஸ் சாலையில் அண்மையில் கட்டப்பட்ட கழிப்பிடம் ஒன்று பரமரிக்க ஆள் இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது.இது குறித்து பொதுக்கழிப்பிடங்களை ஏலத்துக்கு எடுத்த ஒப்பந்ததாரர்களிடம் கேட்டபோது, கடந்த 6 மாதங்களாக தங்களுக்கு வழங்க வேண்டிய பராமரிப்பு தொகையை சென்னை மாநகராட்சி கொடுக்காததால், அவற்றை பராமரிக்க முடியாமல் அப்படியே விட்டு விட்டதாக கூறுகின்றனர். சென்னையில், நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை, அடையாறு, சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, உயர்நீதிமன்ற வளாகம் என்பன உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்ட இந்த பொதுக்கழிப்பிடங்கள் பராமரிப்பு தொகையை ஒப்பந்ததாரர்களுக்கு வழங்காததால் கழிப்பறைகள் பராமரிப்பில்லாத நிலையில் காணப்படுகின்றன.திட்டங்களை தொடங்கும் போது கமிஷன் தொகை கிடைக்கும் என்ற ஆர்வத்தில் புதிய புதிய கழிப்பிடங்களை திமுக அரசு தொடங்கினாலும், அவற்றை பராமரிக்க ஒதுக்கிய நிதியையும் ஒதுக்காததால் அவை அனைத்தும் பராமரிப்பு இல்லாமல் பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். கழிவறைகளை புதிதாக கட்டி திறக்கும்போது போஸ் கொடுக்க அமைச்சர்களுக்கும், மேயருக்கும் இருக்கும் ஆர்வம் அவற்றை பராமரிப்பதிலும் இருக்க வேண்டும் என்கின்றனர் பொது மக்கள்.

via News J : https://ift.tt/Kxy2ke1
Mediaசென்னை-திருநெல்வேலிக்கு நடுவுல புதுசா, வந்தே பாரத் டிரைன் விட்டிருக்காங்க. இந்த டிரைன வரவேற்கும் விதமா தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் அதே டிரைன்ல டிராவல் பண்ணியிருக்காங்க. அடுத்த சில மணி நேரத்துல மதுரை வந்த டிரைன, மதுரை ரயில்வே ஸ்டேஷன்ல வச்சு விடியா திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவேற்றார். அப்போ, டிரைன வரவேற்குறதுக்காக வந்தே பாரத் டிரைன் டிசைன்லயே கேக் எல்லாம் ரெடி பண்ணி எடுத்துட்டு வந்த பழனிவேல் தியாகராஜன், எதிர்கட்சி ஆளு, முட்டி மோதிட்டு இருக்குற கவர்னருனு கூட யோசிக்காம, தமிழிசைய கேக் வெட்ட சொல்லி கை தட்டியிருக்காரு. பதிலுக்கு தமிழிசை மேடம், கேக்க வெட்டி பழனிவேல் தியாகராஜனுக்கு ஊட்டி விட்டிருக்காங்க. இதைப் பாத்த உபிங்க எல்லாம் கொதிச்சு போயிருக்காங்க. அட என்னப்பா இது… கவர்னருங்க கூட நம்ம டம்மி சண்டை செஞ்சிட்டு இருக்கோம், இவர் என்னடானா கேக் வாங்கித் திண்ணு உறவு கொண்டாடிட்டு வந்திருக்காருனு இணையதளத்துல கொந்தளிச்சுட்டு இருக்காங்க. ஸ்டாலின் குடும்பம் 30 ஆயிரம் கோடிய பதுக்குன விஷயத்தை உளறுனதுல இருந்து கட்சியில ஓரங்கட்டப்பட்டிட்டு இருக்காரு பழனிவேல், எந்த மீட்டிங்கலயும் முறையா மரியாதை குடுக்குறதில்லை, மதுரைக்குள்ள கட்சிக்காரய்ங்களே மதிக்க மாட்டேங்குறாங்க. அதனால இதுக்கும் மேல எதுக்கு இங்க இருந்து குப்ப கொட்டிட்டு, பேசாம தாமரைக்கு கீழ தஞ்சம் அடைஞ்சிரலாம்னு முடிவு பண்ணி தமிழிசை மூலமா பாஜக தலைமைக்கு சிக்னல் கொடுக்குறாரு போல பழனிவேல் தியாகராஜன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…


via News J : https://ift.tt/nx75f9h
Mediaஒரு கடைக்கோடி தொண்டனின் மன ஓட்டங்களை அப்படியே நிறைவேற்றிக்காட்டுவதுதானே கட்சித்தலைமையின் தலையாய கடமை? அதைத்தான் செய்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி… என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, தன்னாலே வெளிவரும் தயங்காதே, ஒரு தலைவன் இருக்கிறான் மயங்காதே என்ற புரட்சித்தலைவரின் பாடல்வரிகளை நிஜமாக்கிக் காட்டியிருக்கிறார் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி…திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த பேரறிஞர் அண்ணா. அவர் வழியில் தமிழகத்தை வழிநடத்திய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவரின் மறைவுக்கு பிறகு கட்சி, ஆட்சி மட்டுமல்லாது தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கடைபிடித்த, சமூக நீதி காத்த வீராங்கனையாக திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மா… அதிமுகவினர் தெய்வங்களாக போற்றி வணங்கும் இந்த தலைவர்களை, எங்கிருந்தோ வந்து, தகுதிக்கு மீறிய பொறுப்பை பெற்றுவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன் இஷ்டத்திற்கு விமர்சிக்கும் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்துக்கிடக்கின்றனர் அதிமுகவில் இருக்கும் 2 கோடிக்கும் அதிகமான ரத்ததின் ரத்தங்கள்..,Mediaஇதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க நாங்கள் என்ன திமுகபோல அடிமைகளா? என்று சீறிக்கொண்டிருக்கிறார் ரத்தத்தின் ரத்தங்கள்.. அதிமுகவால் பல கட்சிகள் வாழ்ந்துள்ளனவே தவிர, ஒருபோதும் வீழ்ந்தது இல்லை. ஆனால் நோட்டாவுக்கு கீழ் வாக்குகளை பெற்றுக்கொண்டு, அதிமுக தயவில் தமிழகத்தில் தங்களுக்கான அடையாளத்தை பெற்று வரும் பாஜகவுக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சீறிப்பாய்ந்திருக்கிறது கழகம்.ஆம், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இல்லை என்று தொண்டர்களின் குரலாக கழகம் தற்போது அறிவித்திருப்பதை, ஒவ்வொரு அதிமுக தொண்டனும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தின் உயிர்மூச்சான பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரைப் போற்றி, அவர்கள் காட்டிய வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைபிடித்து அழைத்துச்சென்றுகொண்டிருக்கும் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி, தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்த்து, இந்த முடிவை எடுத்திருப்பதன் மூலம், முடிவுக்கு வந்திருக்கிறது அதிமுக – பாஜக கூட்டணி. இதன்மூலம், புரட்சித்தலைவி வழியில் சீறிப்பாயத் தயாராகிவிட்ட “புரட்சித்தமிழர்” எடப்பாடி கே பழனிசாமி , தொண்டர்களிடம் அதீத நம்பிக்கையை பெற்று வருகிறார் என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.ஆக, இதுவரை அதிமுக தயவில் தமிழகத்தில் பயணித்த பாஜகவின் நிலைமை இனி என்ன? சொந்கக்கட்சியையே அழிக்கத்துடிக்கும் அண்ணாமலைக்கு நடக்கப்போது என்ன? இதுவரை அதிமுக கூட்டணியை வசைபாடியே பிரச்சனைகளில் இருந்து தப்பிப் பிழைத்துக்கொண்டிருந்த ஸ்டாலின், இனி என்ன செய்யப்போகிறார்? அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற தொண்டர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி மீண்டும் தன் தொண்டர்களின் மனங்களில் நிறைந்திருக்கும் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமியின் ஆளுமை நிரூபணம் ஆகிவிட்டதாகவே அடித்துச்சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/ejs1UAT
Mediaபாஜகவுடனான தேசிய ஜனநாயககூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதால், அதிமுக தொண்டர்களுக்கு எந்தளவுக்கு ஆனந்தமோ, அதை விட ஒரு படி மேலாக பதற்றத்தில் இருக்கிறது பாஜக… துக்கத்தில் இருக்கிறது திமுக.. எப்படி இப்படி சொல்கிறீர்கள்? என்று கேட்கிறீர்களா? கூட்டணி முறிவு பற்றி பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, “ஐயையோ ஆள விடுங்கடா சாமி” என்று தெறித்துவிட்டார்களே அதிலிருந்து புரிந்துகொள்ள வேண்டாமா? “எங்கள் தேசிய தலைமை முடிவு செய்யும்” என்று மழுப்பியதில் இருந்து புரிந்துகொள்ள வேண்டாமா? சரி அதுபோகட்டும், மறைந்த புரட்சித்தலைவியை, பேரறிஞர் அண்ணாவை அவதூறு பேசிவிட்டு, தவறை உணர்ந்து மன்னிப்புக்கூட கேட்காமல் கொம்புசீவி விட்ட கிடாய் போல முட்ட வந்தால், அது யாராக இருந்தாலும் சரி, கொம்பு நறுக்கப்படும் என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் பொதுச்செயலாளர்….ஒருபக்கம் இது என்றால், இன்னொருபுறம், அதிமுகவின் முடிவைப்பார்த்த திமுகவோ, சந்திரமுகி வீட்டுக்குள் சென்ற வடிவேலு போல, நடு நடுங்கிக்கொண்டிருக்கிறது.. இவ்வளவு நாட்களாக, அடிமை அடிமை என்று பொய் சொல்லி சால்ஜாப்பு காட்டினோமே இனி என்ன சொல்லி அதிமுகவை விமர்சிப்போம்? உண்மையான அடிமை நாம் தான் என்ற உண்மை தெரிந்துவிட்டால் என்ன செய்வது? என்று தெரியாமல், “ஐயையோ மாப்பு வச்சுட்டாங்கய்யா ஆப்பூ” என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறது.சரி, கூட்டணி பற்றிய அதிமுகவின் முடிவைக்கண்டு பாஜக ஏன் பதறவேண்டும்? திமுக கதற வேண்டும்? என்ற கேள்வி எழுவது நியாயம்தான்.. அதற்குப்பின்னால் தான் ஒட்டுமொத்த இந்திய அரசியலுமே ஒளிந்திருக்கிறது.. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்த 2வது பெரிய கட்சியான அதிமுக விலகியதை, தேசியஅளவில் அக்கூட்டணிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாக பார்க்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதுமட்டுமின்றி இனி தமிழகத்தில் பாஜகவிற்கு நோட்டாவோடு தான் போட்டியா என்றுகூட பேசிக்கொண்டிருக்கிறார்கள்… இந்தப்பக்கம் திமுகவோ, அதிமுக?பாஜக கூட்டணியை கைகாட்டி, சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்கி ஜெயித்தோம், இனி சிறுபான்மையினர் ஓட்டெல்லாம் அதிமுக அறுவடை செய்யும் என்ற பயம் ஒருபக்கம்… இன்னொருபக்கம் திமுகவின் பண்ணையார் மனோபாவத்தால் காண்டாகி இருக்கும் அதன் கூட்டணி கட்சிகள் எங்கே அதிமுகவுடன் கைகோர்த்துவிடுமோ என்று அஞ்சி நடுங்கிக்கொண்டிருக்கிறார்கள்..ஆக, கூட்டணியை முறித்து, பாஜகவை உதறி, திமுகவை பதறவைத்த பழனிச்சாமியை இன்னமும் பழைய பழனிசாமியாகவே நினைத்து ஏமாந்துவிட்டார்களா திமுகவும்-பாஜகவும்? அரசியல் சதுரங்கத்தின் சாணக்கியராக உருவெடுத்து, புரட்சித்தலைவியின் தலைமகன் என்று தன்னை நிரூபித்து விட்ட்ட எடப்பாடி கே பழனிசாமியின் இந்த முடிவால், இனி தமிழகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களை பொறுத்திருந்து பார்க்கலாம்

via News J : https://ift.tt/rfVSmdg
Mediaமூச்சுக்கு முன்னூறு தடவை, அதிமுக அடிமை என கூறி வரும் திமுக, தனது அடிமை தனத்தால், காவிரி உரிமைகளை பாதுகாப்பதில் இன்று கோட்டை விட்டு நிற்கிறது. உண்மையில் யார் அடிமை என்பதை தோலுரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு…வாயத் திறந்தாலே அடிமைகள் அடிமைகள் என்று அதிமுகவை விமர்சித்துக்கொண்டிருந்த வாய்கள் எல்லாம் இன்று என்ன செய்துகொண்டிருக்கின்றன என்று தேடிப்பார்த்தால், கடல்லயே இல்லையாம் என்ற கணக்காக காணாமல் போய்விட்டன… நீட் தேர்வா? அதிமுக அடிமை… காவிரி நீரா, அதிமுக அடிமை… அதுவா, இதுவா, எதுவா இருந்தாலும் திமுகவின் வாயில் வந்ததெல்லாம் அதுதான்.. ஆனால், இன்று உண்மையான அடிமை யார்? என்று கடைக்கோடியில் இருக்கும் பாமர மக்களே உணர்ந்துவிட்டார்கள்… ஆம், அடிமைகளின் கூடாரம் திமுக.. ஐயையோ நாங்க சுயமரியாதைச் சுரங்கம் என்று காலரை தூக்கிவிட்டுத் திரியும் திமுகவினரிடம் அந்த நீட் என்னாச்சுங்க என்று கேட்டுப்பாருங்களேன்.. அப்படியே நீட்டாக ஒதுங்கி விடுவார்கள்.. பாஜக உத்தரவு கொடுக்கல, நீட் விலக்கு கிடைக்கல என்பார்கள்.. அந்த கரண்ட் பில்ல ஏன் ஏத்துனீங்க என்றால், ஷாக் அடித்ததுபோல ரியாக்ஷன் கொடுத்துவிட்டு, பாஜக ஏத்தச்சொன்னாங்க ஏத்துனோம் என்பார்கள்… 1998ல் பாஜகவுடன் கூட்டணி போட்டு ஆட்சியில் அமைச்சர் பதவி அனுபவித்துவிட்டு தீண்டத்தகாத கட்சியா என்றெல்லாம் கருணாநிதி காலத்திலேயே வசனம்பேசி அடிமை சாசனம் எழுதிக்கொடுத்தவர்கள் திமுகவினர்..அப்படியே, இந்தப்பக்கம், “காவிரில ஏன் தண்ணி வரல?” என்றால் “காங்கிரஸ் தரமாட்டீங்கராங்க அதான் கெஞ்சிக்கொண்டிருக்கிறோம்” என்பார்கள் கூச்ச நாச்சமே இல்லாமல்… அட உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்தானே கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கிறார்கள்,, பிறகென்ன தண்ணீரை கேட்டு வாங்கலாமே என்றால் அது… அது… அது… வந்து… போயி… என்று கைகை பிசைந்து கொண்டு நிற்பார்கள்…அட INDIA கூட்டணியின் முதல் கூட்டம் பீகாரில் நடந்தபோதே, டெல்லி சேவைகள் மசோதாவை காங்கிரஸ் எதிர்த்தால்தான் கூட்டணியில் தொடருவோம் என்பதில் உறுதியாக இருந்தது ஆம் ஆத்மி.. ஜூலை மாதம் பெங்களூருவில் நடந்த அக்கூட்டணியின் கூட்டத்திற்கு முன்னதாகவே இதை ஏற்றுக்கொண்டது காங்கிரஸ்.. ஆனால், அதே பெங்களூரு கூட்டத்தில் கலந்துகொள்ள ஸ்டாலின் சென்றார்.., அவரை வரவேற்றது கர்நாடகாவின் துணை முதல்வரும், நீர்பாசனத்துறை அமைச்சருமான T.K.சிவக்குமார் தான்.. காவிரி நீர் குறித்து கட்சியிடமும் கேட்கவில்லை, அமைச்சரிடமும் கேட்கவில்லை,, கூட்டணியின் கூட்டத்திலும் கேட்கவில்லை.. கப் சுப் என்று இருந்துவிட்டு கமுக்கமாக ஊர் திரும்பினார் ஸ்டாலின்…ஏன் கேட்கவில்லை? பயம்தான்.. வேறென்ன? எங்கே கேள்விகேட்டால் கூட்டணியில் இருந்து திமுகவை விரட்டியடித்துவிடுவார்களோ என்ற பயம்தான்.. இப்போது சொல்லுங்கள் உண்மையான அடிமைக்கட்சி திமுக தானே?எப்போது பார்த்தாலும், முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, எமர்ஜென்ஸியின்போது மிசாவைப் பார்த்தவர்கள் என்று கூறுகிறார். அப்போது யாருடைய ஆட்சி? காங்கிரஸ் கட்சியின் ஆட்சி. அந்த ஆட்சியில்தான் எமர்ஜென்ஸி கொண்டுவரப்பட்டது. அப்போதுதான் மிசாவும் கொண்டு வரப்பட்டது. அப்படியெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள், ஆட்சிக்கும், அதிகாரத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு, முதல்வர் ஸ்டாலினும் அவரது குடும்பமும் காங்கிரஸுக்கு அடிமையாகத்தானே இருந்து கொண்டிருக்கிறார்கள்…ஆக, உண்மையான அடிமைக்கட்சி திமுகதான் என்பதையும், உண்மையான அடிமைகள் திமுகவினர்தான் என்பதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்தவுடன்,, “ஐயையோ… சல்லி சல்லியா நொறுக்கிட்டாங்களே” என்ற வடிவேலு காமெடி கணக்காக பதறிக்கொண்டிருக்கிறது திமுக..இதெல்லாம் வெறும் சாம்பிள் தான்… பொறுங்கள் *இன்னும் சில நாட்களில் எந்தெந்த கட்சிகளின் காலடியில் பாத பூஜை செய்யப்போகிறது திமுக* என்பதைப் பார்க்கும் எண்டர்டெய்ன்மென்ட் எல்லாம் காத்திருக்கிறது நமக்காக..–  மனோஜ்குமார் கோபாலன், இணையாசிரியர்

via News J : https://ift.tt/ItR6JaU
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/eps-statement.jpg">Media</a>தமிழகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களை குழிதோண்டிப் புதைக்கும் தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்களின் முதுகெலும்பு வேளாண்மை என்றால், அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயிர் மூச்சு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களாகும் என்று கூறியுள்ளார். தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள், சுமார் 2 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருவதாக தெரிவித்துள்ளார். மாண்புமிகு அம்மா அவர்களால் 2015-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், முதலாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் சார்பாக சுமார் 16 ஆயிரத்து 532 கோடி ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரத்து 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.இதனைத் தொடர்ந்து தமது தலைமையிலான அம்மா அரசு, 2019-ஆம் ஆண்டு இரண்டாம் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தி 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீட்டில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டதாக சுட்டிக் காட்டியுள்ளார். தொடர்ந்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் துபாய் ஆகிய வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.
இதுதவிர, கொரோனா ஊரடங்கு காலத்திலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தொழில் முனைவோரை அழைத்து தாமே நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக முதலீடுகள் ஈர்க்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பிலிருந்து தமிழகத்தை மீட்டெடுக்க, அவசர கால கூடுதல் கடன் திட்டம் செயல்படுத்தப்பட்டு, சுமார் 3 லட்சத்து 70 ஆயிரம் தொழில் நிறுவனங்களுக்கு, சுமார் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் கொரோனா பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டதாக அவர் தெரிவித்துள்ளார். விடியா திமுக ஆட்சியின் இரண்டரை ஆண்டுகால இருண்ட ஆட்சியில், பொருளாதார மந்தநிலை, மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஆளும் கட்சியினரின் அராஜகம் என சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் அல்லாடிக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். தற்போது 2ம் மின்கட்டண உயர்வு, மின்சார நிலைக் கட்டணம், பீக் ஹவர் கட்டணம், சோலார் தகடுகள் பொருத்தி அதன்மூலம் உபயோகிக்கப்படும் மின்சாரத்திற்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றால் பெரும் சரிவை சந்தித்து வருவதாகவும் கூறியுள்ளார்.தாள முடியாத மின் கட்டண உயர்வால், பொருட்களின் அடக்க விலை கடுமையாக உயர்ந்துள்ளது என்றும், இந்த விலை உயர்வு மக்களின் தலையில்தான் விழுகிறது எனவும் தெரிவித்துள்ளார். இதனால், வாங்குபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், இதன் காரணமாக சுமார் 25 சதவீத தொழிற்சாலைகள் மூடப்படும் அபாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும், போராட்டம் நடத்திவரும் தொழில் முனைவோர் நிர்வாகிகள் கூறியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 25ஆம் தேதி நடைபெற்ற ஒருநாள் போராட்டத்தினால், சுமார் 9 ஆயிரத்து 500 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சுமார் 2 கோடி தொழிலாளர்கள் தங்களது ஒருநாள் சம்பளத்தை இழந்துள்ளதாகவும் தொழில் அமைப்பு நிர்வாகிகள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளதாக கடுமையாக சாடியுள்ளார். இப்படிப்பட்ட சூழலில், கோவை, திருப்பூர் ஆகிய இடங்களுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், கடுமையான மின்கட்டண உயர்வையும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பேசாமல், எதுகை மோனையில் ‘டாலர் சிட்டி’ என்று அழைக்கப்பட்ட ‘திருப்பூர்’, ‘டல் சிட்டி’ஆக மாறிவிட்டது என்றெல்லாம் விமர்சித்ததாக குறிப்பிட்டுள்ளார்.திருப்பூரை டல் சிட்டியாக மாற்றிய பெருமை பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினையே சாரும் என்றும், அதே நேரத்தில், தன்னுடைய கையாலாகாத் தனத்தை மறைக்க யார் யார் மீதோ பழி போடுகிறார் என்று தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு, ஆளுங்கட்சியானவுடன் அதற்கு நேர்மாறான ஒரு பேச்சு என்று ஸ்டாலின் நாடகமாடுவதாகவும், அதிமுக பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.மேலும், விடியா திமுக ஆட்சியில், தொழில் முனைவோர் தங்கள் அனைத்துத் தொழில்களையும் இழந்து, தங்களை நம்பிய தொழிலாளர்களைக் காப்பாற்ற முடியாமல் வீதியில் இறங்கி போராடும் அவலம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் சில தினங்களுக்கு…
Mediaதாத்தா, அப்பா, மகன், பேரன், கொள்ளுப்பேரன்,
மகள், மருமகன், அக்கா மகன், அவர் மகன்கள்,
பேத்தியின் கணவர், பேரனின் மனைவி … அப்பப்பாஆஆஆஆ.. இது என்னப்பா? “குடும்பம் ஒரு கதம்பம்” என்ற தலைப்பில் நாவலோ? என்று எண்ணிக்கொள்ள வேண்டாம்.. இது கருணாநிதி குடும்பத்தில் இருந்து வந்து திமுகவில் ஆதிக்கம் செலுத்துவோரின் உறவு முறைகள்..கருணாநிதிக்கு பிறகு, ஸ்டாலின் எப்படி அடுத்த ராஜாவானாரோ அதேபோல, தனக்கு அடுத்து பட்டத்து இளவரசராக உதயநிதியை கொண்டுவந்துவிட்டார் ஸ்டாலின்…. ஆனால், கருணாநிதியின் இன்னொரு வாரிசான கனிமொழியால் எங்கே உதய்க்கு ஆபத்து வந்துவிடுமோ என்று பல்வேறு காய் நகர்த்தல்களை செய்துகொண்டிருக்கிறார் ஸ்டாலின்… உதயநிதியை முன்னிலைப்படுத்தி, கட்சியினரை உதயநிதிக்கு கும்பிடு போட வைப்பது என்று திமுகவையே தற்போது தன் மகனுக்கு எழுதிவைத்திருக்கிறார். இதுபோதாதென்று, சில நாட்களுக்கு முன்னர் ஹாக்கி மைதான துவக்கவிழாவில், இன்பநிதியை அறிமுகம் செய்து வைத்து அவருடைய அரசியல் வாழ்க்கைக்கும் பிள்ளையார் சுழி போட்டார்.. இதைப்பார்த்த உடன்பிறப்புக்களோ உடனடியாக இன்பநிதிக்கு பாசறை தொடங்கி பாச மழை பொழிந்துவிட்டனர்..அடடே.. நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்.. நாம என்ன செஞ்சாலும் எதிர்த்து கேள்வி கேட்க மாட்டார்கள் என்று, தன் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசனை எப்படி திமுகவிற்குள் உச்சாணிக்கொம்பில் உட்காரவைத்தாரோ அதேபோல, தன் மகன் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியையும் அரசியல் நிகழ்வுகளில் பங்கெடுக்க வைத்து, அடுத்த வாரிசுகளை உருவாக்கிக்கொண்டிருக்கிறார்… உதயநிதியின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் தமிழக அரசின் சமூகநலன் மற்றும்மகளிர் உரிமைத்துறை சார்பில் நடந்த சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்திருக்கிறார் உதயநிதியின் மனைவி கிருத்திகா..திடீரென்று கிருத்திகாவை களத்தில் இறக்க என்ன காரணம்? என்று யோசித்து மண்டையை பிய்த்துக்கொள்ளாதீர்கள்.. இதற்கு ஒரே ஒரு காரணம்தான்.. கனிமொழி.. ஆம், உதயநிதி – கனிமொழி இடையிலான பனிப்போர் நாளுக்குநாள் முற்றிக்கொண்டிருப்பதால், கனிமொழிக்கு பயம்காட்ட கிருத்திகா உதயநிதியை வைத்து காய் நகர்த்துகிறது ஸ்டாலின் குடும்பம்.. எப்படி ஸ்டாலின் மனைவி திமுகவிற்குள் கிச்சன் கேபினட் நடத்திக்கொண்டிருக்கிறாரோ, அதேபோல, உதயநிதி நாளை தலைமைக்கு வரும்போது, ஆதிக்கம் செலுத்த இப்போதே டிரெய்னிங் எடுக்கிறார் உதயநிதியின் மனைவியார்..ஒரு அமைச்சரின் மனைவி, அரசுத்திட்டத்தை தொடங்கிவைக்கவோ, நடத்தவோ எந்த அரசியலமைப்புச்சட்டம் வழி வகுக்கிறது? உதயநிதியை தொடர்ந்து அவர் மகன் இன்பநிதி, மனைவி கிருத்திகா என்று வரிசையாக வந்தால் கடைக்கோடி திமுக தொண்டர் வெறும் போஸ்டர் மட்டும் தான் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டுமா? கனிமொழி Vs உதயநிதி என்ற போட்டி, இனிவரும் காலங்களில் கனிமொழி Vs கிருத்திகா என்று மாற்ற திட்டம் போடுகிறாரா ஸ்டாலின்? ஸ்டாலினின் இத்தகைய வாரிசு அரசியல் போக்கால், திமுகவிற்குள்ளேயே கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள் உடன்பிறப்புகள். ஸ்டாலின்-அழகிரி சண்டைபோல, உதயநிதி-கனிமொழி மோதல், கனிமொழி – கிருத்திகா சண்டை என்று வாரிசுச்சண்டையால் வெகுவிரைவில் உடையப்போகிறது திமுக என்பது மட்டும் தெளிவாகிறது.

via News J : https://ift.tt/4YBJ96c
Mediaகடந்த ஓராண்டாக தங்களது வார்டு கவுன்சிலரை காணவில்லை என சமூக வலைதளங்களில் போஸ்டர் பதிவிட்டுள்ளனர் நாகை நகராட்சியின் 25வது வார்டு பொதுமக்கள். யார் அந்த கவுன்சிலர்? பொதுமக்கள் அவரை தேடுவது ஏன்? விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு….சமூக வலைதளங்களில், காணவில்லை என போஸ்டர் வெளியிட்டு தேடப்பட்டு வரும் நாகப்பட்டினம் நகராட்சியின் 25வது வார்டு திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் தான் இவர்.கவுன்சிலராக பதவியேற்று ஓராண்டுக்கு மேலாகியும் இதுவரை, அவரது வார்டில் எந்த அடிப்படை தேவைகளையும் ஜாகிர் உசேன் செய்து கொடுக்கவில்லையாம். சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை செய்து கொடுக்க வில்லை…. குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை…. சாக்கடை கலந்து வரும் குடி தண்ணீரை சரி செய்யவில்லை… தெரு விளக்கு அமைத்து தரவில்லை…. என இப்படி பல இல்லைகளை அப்பகுதி மக்கள் முறையிட்டும் திமுக கவுன்சிலர் ஜாகிர் உசேன் கண்டு கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நகராட்சி கவுன்சிலரை காணவில்லை என சமூக வலைத் தளங்களில் போஸ்டர் வெளியிட்டுள்ளனர். அந்த போஸ்டரில், காணவில்லை என்று தலைப்பிட்டும், நாகப்பட்டினம் நகராட்சி 25 வது வார்டு நகராட்சி உறுப்பினர் ஜாகிர் உசேன், கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக 25 வது வார்டு எந்த தெருவிலும் காணப்படவில்லை. காண்போர் உடனடியாக தெருவாசிகளிடம் தெரிவிக்கவும். இப்படிக்கு 25 வது வார்டு மக்கள் என தெரிவித்துள்ளனர்.
சமூக வலைதளங்களில் இந்த போஸ்டர் வைரலாகி வரும் நிலையில், விரைவில் இதே போன்று நாகை நகராட்சியின் திமுக பிரதிநிதிகள் குறித்து போஸ்டர்கள் கிளம்பும் என்று பதில் இடுகிறார்கள் நாகை மாவட்ட நெட்டிசன்கள்.

via News J : https://ift.tt/fYbyGaX
Mediaதேனி அருகே புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு அரசு மருத்துவமனையில் அலட்சியமாக வழங்கப்பட்ட மாத்திரையால் அவரது கை, கால்கள் செயலிழந்து உயிருக்கு போராடும் அவலம் ஏற்பட்டுள்ளது. விடியா ஆட்சியில் மக்களின் உயிருக்கு உலைவைக்கும் வகையில் அரசு மருத்துவமனை செயல்படுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு….ஆட்டோவில் படுத்தபடி கிடக்கும் இவர்தான் அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் கை, கால் செயல் இழந்த புற்றுநோய் பாதிக்கப்பட்ட நோயாளி ராமராஜ்.தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பூதிப்புரத்தைச் சேர்ந்தவர் தான் கட்டிட தொழிலாளியான ராமராஜ். இவருக்கு ஆதிபராசக்தி என்ற மனைவியும் 14வயதில் சந்தோஷ் என்ற மகனும், 13 வயதில் திவானி என்ற மகளும் உள்ளனர். ராமராஜின் வருமானத்தை நம்பி மட்டுமே அவரது குடும்பம் இயங்கி வந்த நிலையில் தான், கடந்த 2018ல் அந்த சோகம் நேர்ந்தது. அப்போதுதான் ராமராஜுக்கு புற்று நோய் அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதனால் குடும்பத்தினர் தவியாய் தவித்த நிலையிலும், தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நரம்பு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். தொடர்ந்து கதிர் வீச்சு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொண்டிருந்த நிலையிலும் மூளையில் புற்றுக் கட்டி வளர்ந்தது எம்.ஆர்.ஐ. ஸ்கேனில் உறுதியானது.இதனைத் தொடர்ந்து ஆபரேசனுக்குப் பின்னர் புற்று நோய்க்கான மருந்துகளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாங்கிப் பயன்படுத்தி வந்த நிலையில், ராமராஜின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. தானாக நடப்பது, தன்னுடைய வேலைகளை செய்வது என ஆரோக்கியமாக இருந்துள்ளார். இந்த நிலையில்தான், இந்த நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் செப்டம்பர் 11ஆம் தேதி பூதிப்புரத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ((T.Telmisartan 1od,T.Svp 1tds,T.Eptoin 2hs
T.Bct 1od,)) கொடுத்த சில மாத்திரைகளை எழுதப் படிக்கத் தெரியாத ராமராஜின் மனைவி வாங்கி வந்து கணவருக்கு கொடுத்துள்ளார். இந்த மருந்துகளை பயன்படுத்த தொடங்கிய முதல் நாளிலேயே மயக்கமடைந்து கீழே விழுந்தவர், தொடர்ந்து பயன்படுத்தியதில் கை, கால்கள் செயல்படாமல் போயுள்ளது. இதையடுத்து அருகில் இருந்த தனியார் மருத்துவமனைவியில் விசாரித்தபோது, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரப்பட்ட பிரஷர் மாத்திரையைப் பயன்படுத்தியதால்தான் இந்த பிரச்சனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து பூதிப்புரம் அரசு மருத்துவமனையில் சென்று விசாரித்தபோதும் அவர்கள் அலட்சியமாகப் பதில் அளித்ததால், பாதிக்கப்பட்ட ராமராஜுடன் அவரது குடும்பத்தினர், தேனி ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்ப்பு முகாமுக்கு வந்தனர்.அங்கு மாவட்ட ஆட்சியர் சஜீவனாவிடம் புகார் அளித்த நிலையில் அவர், சுகாதாரத்துறை அலுவலர்களை விசாரிக்குமாறு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களோ தங்கள் தரப்பில் தவறில்லை என்று கூறி வாக்குவாதம் செய்த நிலையில், ராமராஜின் குடும்பத்தினர், சிகிச்சைக்கான ஆவணங்களை எடுத்துக் காட்டி விளக்கியுள்ளனர். இதனால் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், உன்னால் முடிந்ததை பார்த்துக்கொள் என கூறிவிட்டு கண்டு கொள்ளாமல் சென்றுள்ளனர்.பின்னர் மாவட்ட ஆட்சியர் சஜீவனா, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வரிடம் தான் பேசி உள்ளதாகவும், உடனடியாக ராமராஜை அங்கு கொண்டு சென்று அனுமதிக்குமாறும் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு செவ்வாய்கிழமை மாலை அனுமதிக்கப்பட்ட ராமராஜுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இதனிடையே அட்சியர் சஜீவனா, பூதிப்புரம் அரசு மருத்துவமனை மருத்துவரிடம் விசாரித்தபோது தங்கள் மீது தவறு இல்லை என்பதைப் போல மறைத்து பேசியதாக மகேஸ்வரி தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ராமராஜின் சகோதரி மகேஸ்வரியை நியூஸ் ஜெ செய்தியாளர் சந்தித்து பேசியுள்ளார். இதனை கண்ட மருத்துவமனை மருத்துவர்களும், ஊழியர்களும் தொலைக்காட்சிக்கு பேட்டியா கொடுக்கிறீர்கள்? உங்களுக்கு இங்கே சிகிச்சை அளிக்க முடியாது மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என மிரட்டியதாக கூறப்படுகிறது. விடியா அரசின் மருத்துவத்துறையின் அலட்சியத்தால் ஏழைத் தொழிலாளியின் குடும்பத்தினரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதற்கு கண்முன் சாட்சியாக இருக்கிறது ராமராஜின் குடும்பம். இதற்குப் பிறகாவது அவர்களுக்கான உரிய நடவடிக்கைகளை விடியா அரசு எடுக்குமா?

via News J : https://ift.tt/yKQSUED
Mediaகடலூர் மாநகராட்சியில் விசிகவை சேர்ந்த துணை மேயர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக மற்றும் பாமகவை சேர்ந்த 22 கவுன்சிலர்கள் மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளது, கூட்டணியில் இருந்து விசிகவை கழட்டிவிட திட்டமா? என்ற பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.கடலூர் மாநகராட்சி திமுக மேயர் சுந்தரி ராஜா சாதி துவேஷத்துடன் நடந்து கொள்வதாக விசிகவை சேர்ந்த துணை மேயர் தாமரைச் செல்வன் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அவருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருவதற்கான வேலைகளில் திமுக கவுன்சிலர்கள் ஈடுபட்டிருப்பது கடலூர் மாநகராட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாநகராட்சியில் 45 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜாவும், துணை மேயராக விசிகவை சேர்ந்த தாமரைச்செல்வனும் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, சாதி ரீதியாக செயல்படுவதாக கூறி வாரப் பத்திரிக்கை ஒன்றிற்கு துணைமேயர் தாமரைச் செல்வன் பேட்டி அளித்திருந்தார். இது, கடலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில், துணை மேயர் தொடர்ந்து மேயருக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், அனைத்து வார்டுகளிலும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார் எனவும் குற்றம் சாட்டி திமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளை சார்ந்த 22 வார்டு கவுன்சிலர்கள் கடலூர் மாநகராட்சி மேயர் மற்றும் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். மேலும் அந்த மனுவில் துணை மேயர் தாமரைச்செல்வன் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளனர். இதனால் கடலூர் மாநகராட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் நிகழ்ந்த மாநகராட்சி மன்ற கூட்டத்தின்போது தங்களது கோரிக்கைகளைக் கூட மேயர் கேட்பதில்லை என்று திமுக கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக கோஷம் எழுப்பிய சூழலும் நிலவியது. இப்படி மேயருக்கு எதிராக சொந்தக்கட்சியினரே இருக்கும் நிலையில் தற்போது விசிக துணைமேயருக்கு எதிராக புகார் கடிதம் கொடுத்திருப்பவர்கள் மேயருக்கு வேண்டியவர்கள் என்றும் அவரது தூண்டுதலின் பேரில்தான் இப்படி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னணியில் கூட்டணியில் இருந்து விசிகவை கழட்டிவிடும் திமுக தலைமையின் எண்ணமும் பிரதிபலிப்பதாகவும் சொல்லப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் சாதி ரீதியாக இருக்கை ஒதுக்கி திமுக மேயர் நடந்து கொள்வதாக விசிகவை சேர்ந்த கவுன்சிலர் புகார் கூறியிருந்த நிலையில், கடலூரில் விசிக துணைமேயரின் பதவியை பறிக்க திட்டமிட்டிருப்பது திமுக கூட்டணிக்குள் நிலவும் கூட்டணிக் குழப்பத்தை வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது.

via News J : https://ift.tt/LOtSxvX