News J
631 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaநாத்திகம் பேசுன திமுக, கருணாநிதி குடும்பத்தோட பிடியில போனதுக்குப்பிறகு நேரத்துக்கு தகுந்த மாதிரி கொள்கைய மாத்திகிட்டாங்க. இன்னைக்கும் ஸ்டாலின் குடும்பத்துக்காரங்க மட்டுமில்ல, திமுக முக்கிய நிர்வாகிகளே வெளியில சனாதனம் பத்தி சண்டித்தனமா பேசிக்கிட்டே, கோயில் கோயிலா ஏறி இறங்கிட்டு இருக்காங்க… மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில உள்ள சட்டைநாதர் சுவாமி கோயில்ல அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் போய் சாமி கும்பிட்டிருக்காங்க. அமைச்சர்களுக்கு அந்தப் பகுதியில பிரத்யேகமாக எந்த கூட்டமோ, நிகழ்ச்சிகளோ இல்லாத நிலையில சாமிகும்பிடுறதுக்காகவே கோயிலுக்கு வந்துட்டு போயிருக்காங்க. இந்த கோயில்ல உள்ள சட்டைநாதர வணங்குனா எதிரிகள் தொல்லை நீங்கும்… நீதிமன்ற வழக்குகள் சாதகமாகும்னு ஐதீகம் இருக்கு… ஏற்கனவே அமலாக்கத்துறை ரெய்டால திமுகவே அள்ளுவிட்டு கிடக்குது.. அதே மாதிரி ஜட்ஜ்மெண்ட் வந்த கேசுலேயே சூமோட்டோவா வழக்க எடுத்துக்கிறதால அமைச்சர்கள் எல்லாம் அரண்டு போய் இருக்காங்க.. இந்த மாதிரி தாங்களும் எதுலயும் மாட்டிக்கக்கூடாதுன்னுதான் நேருவும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தேடிப்போய் சட்டைநாதரை கும்பிட்டாங்களோன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.


via News J : https://ift.tt/lVYS9Wv
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/ANNA-BIRTHDAY.jpg">Media</a>ஒருமுறை நம் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர், அமெரிக்காவில் ஒரு புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திற்கு உரையாற்ற சென்றிருந்தார். அங்குள்ள அமெரிக்க நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர், நம்மவரின் உருவத்தைக் கண்டு, இவரெல்லாம் யார்? இவருக்கு என்ன தெரியும்? என்கிற முன்முடிவில், அவரை அழைத்தார். ஹலோ மிஸ்டர் வாட் இஸ் யுவர் கல்ச்சர் என்று ஆங்கிலத்தில் அந்த அமெரிக்கர் கேள்வி எழுப்ப, அதற்கு அக்ரிகல்ச்சர் என்று பதிலுரைத்து அமெரிக்கரை வாயடைக்கச் செய்தார் அந்த மனிதர். அவர் வேறு யாரும் அல்ல, தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் ஆட்சிக்கு அச்சாணி அமைத்துக் கொடுத்தவர், மெட்ராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என்று பெயர் மாற்றியவர், இந்தித் திணிப்பை எதிர்த்து இருமொழிக்கொள்கைக்கி வித்திட்டவர், அவர்தான் பேரறிஞர் அண்ணா.<strong>அண்ணாவின் இளமைப்பருவம்</strong><a href="https://selliyal.com/wp-content/uploads/2017/09/MGR-1-22.jpg">எம்ஜிஆரின் அரிய புகைப்படங்கள் (படத்தொகுப்பு) | Selliyal - செல்லியல்</a>காஞ்சிபுரம் நடராஜன் அண்ணாதுரை என்று அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை அவர்கள், காஞ்சிபுரத்தில் எளிய நெசவாளக் குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் நாள் நடராஜன் – பங்காரு அம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பினை முடித்த அண்ணா, மேற்படிப்பிற்காக பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்தார். அதுவரை சராசரி மாணவராக இருந்த அண்ணாவிற்கு கல்லூரி வாழ்க்கைதான் திருப்புமுனை தந்தது. அவர் கல்லூரியில் சந்தித்த ஆங்கிலப் பேராசிரியர் வரதராஜன் நீதிக்கட்சியில் அங்கம் வகித்தவர். அவரின் மூலம் அரசியல் கருத்துகளை அதிகம் உள்வாங்கினார் அண்ணா. மோசூர் கந்தசாமி மற்றும் மணி திருநாவுக்கரசு போன்ற பேராசிரியர்கள்தான் அண்ணாவிற்கு சங்கத்தமிழினை அதிகம் கற்றுக் கொடுத்தனர். அதன் பலாபலனே அண்ணாவின் மேடைத் தமிழுக்கு அடித்தளம் இட்டது. பின்னர் பி.ஏ ஆனர்ஸ் படிப்பினை அண்ணா கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தீவிரமான படிப்பாளியாக இருந்த அண்ணா, நூலகத்திலேயே தன் நேரத்தை அதிகளவு செலவிட்டார். 1931 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரி மாணவர் பேரவையின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி படிப்பு முடிந்தவுடன் காஞ்சிபுரம் நகராட்சியில் ஆறு மாதங்களாக எழுத்தர் பணி செய்தார். பிறகு சென்னை கோவிந்த நாயக்கப்பன் நடுநிலைப்பள்ளியில் தமிழாசிரியராக பணியாற்றி வந்தார்.<strong>பெரியாரும் அண்ணாவும்!</strong><a href="https://ichef.bbci.co.uk/news/640/cpsprodpb/1192F/production/_117538917_annadurai_and_periyar.jpg">அண்ணா வாழ்க்கை வரலாறு: தமிழ்நாடு அரசியலில் திராவிட இயக்கம் மூலம் அண்ணா செய்த மாற்றங்கள் என்ன? - BBC News தமிழ்</a>பிராமணர் இல்லாதோர் இயக்க அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதே, அண்ணாவின் விருப்பச் செயல்பாடாக இருந்தது. அப்படி அவர் தன்னை இணைத்துக்கொண்டது நீதிக்கட்சியில்தான். ஆனால் அண்னா நீதிக்கட்சியில் இணைந்த காலகட்டத்தில் நீதிக்கட்சியின் வீழ்ச்சித் தொடங்கியிருந்தது. மக்களும் நீதிக்கட்சியின் செயல்பாடுகளை பெரிதாக ஏற்றுக்கொள்ளாத காலகட்டம் அது. ஆனால் அண்ணா இறுதியாக சென்று சேர்ந்த இடம் தந்தை பெரியார் தான். அவரைத் தான் தனது ஆஸ்தான தலைவராக ஏற்றுக்கொண்டார். கடவுள் மறுப்பு, சாதி பாகுபாடுகளை கலைதல் என்று மேடையிலேயே கடின வார்த்தைகளை உதிர்க்கக்கூடியவர் பெரியார். பொதுவாழ்வில் ஈடுபடுவதுதான் தனக்கு விருப்பம் என்பதை உணர்ந்து, பெரியோருடனே தனது அரசியல் பயணத்தை மேற்கொண்டார்.<strong>பெரியாரின் தளபதியாக அண்ணா!</strong>1937 ஆம் ஆண்டு, ஈரோடு சென்ற அண்ணா அங்கு அண்ணாவின் குடியரசு மற்றும் விடுதலை நாளிதழ்களின் துணை ஆசிரியராக அறுபது ரூபாய் சம்பளத்திற்கு பணியாற்றினார். அன்றைக்கு வெறும் 28 வயதே அண்ணாவிற்கு நிரம்பியிருந்தது. அவரின் ஆளுமைப் பண்பினை கருத்தில் கொண்டு, அதே ஆண்டும் சுயமரியாதை மாநாட்டை தலைமை ஏற்று நடத்த அண்ணாவிற்கு ஒரு வாய்ப்பினை கொடுத்தார் தந்தை பெரியார். 1938 ஆம் ஆண்டு ஆட்சிக் கட்டிலில் இருந்த ராஜாஜி, ஆறு முதல் எட்டு வரை உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தி மொழியைக் கட்டாயம் ஆக்கினார். இதனைப் பெரியாரும் அண்ணாவும் கடுமையாக எதிர்த்தனர். இதில் அண்ணாவிற்கு 4 மாதங்கள் சிறை தண்டனையும், பெரியாருக்கு ஒரு வருடம் சிறை தண்டனையும் கிடைத்தது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில்தான் “தமிழ்நாடு தமிழர்க்கே” என்ற கோஷத்தை பெரியார் முன்வைத்தார். சிறைவாசத்தில் பெரியார் இருக்கும்போது நீதிக்கட்சியின் தலைவர் பதவி அவருக்கு கிடைத்தது. பின்னர் 1944 ஆம் ஆண்டு தனது சுயமரியாதைக் கழகத்தையும், நீதிக்கட்சியினையும் பெரியார் ஒன்றாக இணைத்து, திராவிடர் கழகம் என்று மாற்றினார். திராவிடர் கழகத்தின் தளபதியாக அன்றைக்கு…
Mediaதிருச்செந்தூர் பக்கத்துல உள்ள நா.முத்தையாபுரத்துல அரசு சார்பா நடந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி கலந்துகிட்டு பேசியிருக்காங்க. அப்போது மகளிர் உதவித் தொகைன்னு சொல்லிட்டு, இல்ல… இல்ல… அது உரிமைத்தொகைனு சொல்லியிருக்காங்க… தான் நாக்கு தவறுனத சமாளிக்க, உதவித்தொகைன்னா பாவம் பார்த்து கொடுக்கிறதுன்னு பயங்கரமான விளக்கமும் கொடுத்திருக்காங்க.போனா போகுது, பாவம்னு சொல்லி கொடுக்கிறதுதான் உதவித்தொகைன்னு கனிமொழி சொல்லியிருக்கிறது சலசலப்ப ஏற்படுத்தி இருக்கு… அப்ப அரசு சார்பா உதவித்தொகைனு வழங்குறது போனா போவட்டும்னு பாவம் பார்த்து கொடுக்கிறதுதானா? ஏதோ பிச்ச போடுறமாதிரினு சொல்றதுதான் உங்க அகராதியில உதவித்தொகையா? விடியா அரசோட முதலமைச்சர்…. அதான் உங்க அண்ணணும் அப்படி போனா போகட்டும்னுதான் கொடுக்கிறாரா? எல்லாத்தையும் விடுங்க, உங்கள எம்.பி ஆக்குனது மக்கள் உங்களுக்கு கொடுத்த உரிமைத் தொகையா? உதவித் தொகையான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.


via News J : https://ift.tt/URbjsIP
Mediaவரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு எப்படி தயாராகலாம்? எப்படி கட்சியை வளர்க்கலாம்? ஜெயிப்பதற்கு என்ன வழி? என்றெல்லாம் நாடு முழுக்க அரசியல் கட்சிகள் யோசித்துக்கொண்டிருந்தால், தமிழகத்தில் உள்ள திமுக கூட்டணியின் நிலைமை அப்படியே தலைகீழாக இருக்கிறது.. தன்னுடன் பயணிக்கும் கட்சியை எப்படி கழட்டிவிடலாம்? என்று மட்டுமே சதாசர்வ காலமும் எண்ணிக்கொண்டிருக்கிறது திமுக… இதற்கு பலியாகப் போவது எந்தெந்தக்கட்சிகள் என்பதுதான் உச்சபட்ச சஸ்பெண்ஸ் ஸே..இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும் என்று நீங்கள் மனதில் நினைப்பது புரிகிறது. 2 நாட்களுக்கு முன்னர் சென்னை சத்ய மூர்த்தி பவனில் நடந்த அக்கட்சியின் அரசியல் விவகாரக்குழு கூட்டத்தில் நடந்த விஷயங்களைக் கேள்விப்பட்டதும், அதை அங்கிருந்தவர்களிடம் மீண்டும் கேட்டு உறுதிப்படுத்தியபிறகும் தான் இந்த விவகாரத்தையே வெளியில் பேச ஆரம்பித்திருக்கிறோம்…ஆம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வெறும் 5 அல்லது 6 சீட் மட்டுமே கொடுத்து அமுக்கிவிட்டு ஒட்டுமொத்தமாக தானே எல்லாத்தையும் லவட்டிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறது திமுக… அப்படியானால் காங்கிரஸ் இதனை எதிர்த்திருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம்.. ஆனால் நிலைமையோ வேறு… காங்கிரஸ் கட்சியும் இதனை ஆதரிக்கிறது.. காரணம் தமிழக காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ். அழகிரி, திமுக எந்த டீல் கொடுத்தாலும்அதனை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும், அது 5 சீட் ஆக இருந்தாலும் சரி என்று கூறியிருக்கிறார்.. இதனால்தான், தமிழக காங்கிரஸ்-ல் பெரும் அதிருப்தி உருவாகியிருக்கிறது.ஏற்கனவே, திமுக தயவால்தான் தமிழகத்தில் காங்கிரஸ் இருந்துகொண்டிருக்கிறது என்ற பேச்சுக்கள் எல்லாம் வலம்வந்துகொண்டிருக்க, இப்போது கே.எஸ்.அழகிரி பேசியிருப்பதும் இதனை உறுதிப்படுத்துகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் போதே வேட்பாளர் தேர்வில் இருந்து பிரச்சாரம் வரை திமுகவே எல்லாத்தையும் TAKE CARE செய்துவிட்டது.. காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனே செந்தில்பாலாஜி களத்திற்கு வந்துவிட்டார் இனி எல்லாத்தையும் அவர் பார்த்துக்கொள்வார் என்றெல்லாம் பேசி இருந்தத. இதற்கு இன்னும் வலுசேர்க்கிறது.ஆக, திமுக கொடுக்கப்போகும் வெறும் 5 அல்லது 6 சீட்டிற்காகத்தான் கூட்டணியில் இருக்கப்போகிறதா காங்கிரஸ்? அகில இந்திய அளவில் இருக்கும் INDIA கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தமிழகத்தில் இதனை ஏற்றுக்கொள்ளுமா? ராகுல் காந்தி தன் அதிருப்தியை வெளிப்படுத்துவாரா? ஒருவேளை காங்கிரஸ் உடனான கூட்டணி தேவையில்லை, எப்படி கழட்டிவிடலாம் என்று யோசித்து இந்த தொகுதி பங்கீடு யுக்தியை கையில் எடுத்திருக்கிறதா திமுக? இதையெல்லாம் உற்று கவனித்துக்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைத்து கோஷ்டியினரும் கட்சித்தலைமைக்கு எதிராக மாறிவிட்டால், நாடாளுமன்ற தேர்தலில் என்ன செய்யப்போகிறது காங்கிரஸ் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

via News J : https://ift.tt/QHoDZyE
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/Periyar_Twitter.jpg">Media</a>தொண்டு செய்து பழுத்த பழம் என பாவேந்தர் பாரதிதாசனால் புகழப்பெற்ற பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாருக்கு இன்று பிறந்தநாள்… செல்வந்தர் வீட்டு வாரிசாய் பிறந்தவர் சமூக சீர்த்திருத்தவாதியாய் மாறியது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…ரெட்டி, ஷர்மா, வர்மா, யாதவ் என வடமாநிலங்களில் சாதிப் பெயரை பெயருக்குப் பின்னால் இட்டுக்கொள்ளும் வழக்கம் தமிழகத்தில் இல்லாதது கண்டு பலர் அதிசயித்தது உண்டு. படிப்பறிவு மிகுந்த மாநிலமாக கருதப்படும் கேரளத்தில் கூட மேனன்களும், நாயர்களும் பெயர்களுக்கு பின்னால் தொற்றிக் கொண்டு தான் இருக்கிறது இன்னும். ஆனால், தமிழகத்தில் ஏன் இந்த வழக்கம் இல்லை என கேட்பவர்களுக்கு கிடைக்கும் ஒரே பதில் பெரியார் மட்டுமே… யார் இந்த பெரியார்… சிந்திப்பிலும், அறிவாற்றலிலும் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னோடியாய் இருப்பதற்கு பெரியாரின் பங்கு என்ன… வாருங்கள் பார்க்கலாம்…1879ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி வெங்கட்ட நாயக்கர், சின்னத்தாயம்மை தம்பதியருக்கு மகனாகப் பிறந்தவர் தான் ஈ.வெ. ராமசாமி அவர்கள். அண்ணன் கிருஷ்ணசாமி மற்றும் பொன்னுத்தாயம்மாள், கண்ணம்மாள் என்ற இரு இளைய சகோதரிகளையும் கொண்ட வசதியான, வணிகக் குடும்பம் பெரியாரின் குடும்பம். பள்ளி வாழ்க்கை முதல் ஐந்து ஆண்டுகளிலேயே முடிந்துபோய்விட்டது. தந்தையின் மளிகைக் கடையில் வேலைக்கு வந்துவிட்டார். விரும்பியபடி நாகம்மையைத் திருமணம் செய்து கொண்டார். தம்பதிகளுக்குப் பிறந்த பெண் குழந்தை ஐந்து மாதத்தில் இறந்துவிட்டது. அதன் பிறகு குழந்தைகள் இல்லை.<a href="https://www.thepeninsula.org.in/wp-content/uploads/2021/11/Periyar.jpeg">Periyar: A social justice champion and beyond - The Peninsula Foundation</a>தனது பெண் குழந்தை இறந்த சில நாட்களில், ஏதோ சோகம் அவரது மனதை வாட்டியது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், சில தங்க நகைகளை மட்டும் எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி காசிக்குச் சென்றார் ஈ.வெ. ராமசாமி நாயக்கர். கையிலிருந்த பணம் காலியானது. ராமசாமி நாயக்கருடன் சென்ற இருவரும் பிரிந்து சென்றுவிட்டார்கள். நாயக்கருக்கு பசியோ பசி. அங்கிருந்த சத்திரத்துக்குச் சென்று உணவு கேட்டார். ஆனால், அங்கே பிராமணர்களுக்கு மட்டுமே உணவு என்று சொல்லி, விரட்டிவிட்டார்கள்.பசிக்கொடுமை தாங்காமல், அந்தச் சத்திரத்துக்கு வெளியே கிடந்த இலைகளில் மிஞ்சிய உணவை எடுத்துச் சாப்பிட்டார் செல்வந்தரான ராமசாமி நாயக்கர். அப்போது கண்ணீரோடு அந்த சத்திரத்தை நோக்கிய போது, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிராமணரல்லாத ஒருவரால் அந்தச் சத்திரம் கட்டித் தரப்பட்டுள்ளது என்ற பெயர்ப் பலகையை அவர் படித்தார். சத்திரம் கட்டியவர் ஒருவர், சாப்பிடுபவர்கள் ஒரு குலத்தார் மட்டுமே என்பதைப் புரிந்து கொண்டு, சிந்திக்க ஆரம்பித்தார். அந்த சம்பவம் தான் ராமசாமி நாயக்கரை, பகுத்தறிவு பகலவன் பெரியாராய் மாற்றியது.ஊருக்குத் திரும்பியதும் மக்கள் சேவையில் தனது கவனத்தைச் செலுத்தினார். சடங்குகள், சம்பிரதாயங்கள் என அனைத்தையும் கேள்வி கேட்டார். மக்கள் விசித்திரமாய் பார்த்தனர் பெரியாரை. இவருக்கு தலையில் ஏதோ கோளாறு போல என அவர் காதுபடவே பேசினர். ஆனால், தங்கள் தலையெழுத்தை மாற்ற வந்த தேவதூதன் அவர் என்பது அப்போது அவர்களுக்குத் தெரியவில்லை. பிளேக் நோய் உருவாகிப் பலரும் மடிந்த சமயத்தில், ஓடோடி உதவினார். பல இறந்த உடல்களைச் சுமந்து சென்று இறுதிக்கடன் செய்தார். இவ்வாறு மக்கள் மத்தியில் செல்வாக்கும், நற்பெயரும் பெற்றதால் ஈரோடு நகர சபைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.<a href="https://gaurilankeshnews.com/wp-content/uploads/2020/09/periyar-e1600328792326.jpg">Media</a>மூட நம்பிக்கை, சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் பேசி, கல்லடி, செருப்பு மாலை என பிற்போக்காளர்களால் பல அவமானங்களையும் சந்தித்துள்ளார். அதே சமயம் மாற்று கொள்கைகளை கொண்டவர்களையும் மதிக்கும் பழக்கத்தை கொண்டவர் பெரியார் என்பதற்கு, குன்றக்குடி அடிகளார், மறைமலை அடிகள், ராஜாஜி போன்றவர்கள் மிக நெருக்கமான நண்பர்களாக இருந்ததே சான்று. பெரியாரின் மற்றொறு முக்கியமான கொள்கை பெண் விடுதலை. பெண்ணுக்கு சுதந்திரம் வேண்டும் என்ற வழக்கமான ஆண்களின் பார்வையில் இல்லாமல், பெண்கள் ஏன் அடிமைப்படுத்தப்படுகிறார்கள் என பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானாள் என்ற புத்தகமே அவரது கொள்கை வீரியத்திற்கு சான்றாக இன்றும் விளங்கி வருகிறது.மொழி, இனம், மதம் என எதன் மீதும் தனக்கு பற்று இல்லை என கூறிய பெரியார்தான், தமிழகத்தில் நடந்த முதல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முன்னின்று நடத்திய தலைவர்களில் ஒருவர். இந்தியை தொடர்ந்து எதிர்த்து வந்த பெரியார், இந்திக்கு மாற்றாக ஆங்கிலத்தை அனைவரும்…
Media தமிழகத்துக்கு இருமொழி கொள்கை போதும்… சமஸ்கிருதத்துக்கு எழுத்து வடிவம் கூட கிடையாது என்று பேசி, ஆளுநரை அமைச்சர் பொன்முடி வம்புக்கு இழுத்துள்ளது குறித்து பார்ப்போம்…விழுப்புரம் திருவிக வீதியிலுள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கான கலைவிழா போட்டிகளை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, திமுக எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடி பேசுகையில், தமிழகத்திற்கு இரு மொழிக்கொள்கையே போதும். ஆனால் மத்திய அரசு மூன்றாவதாக ஒரு மொழியை கற்க கூறுவதாகவும் சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கூட கிடையாது எனவும் கூறினார்.சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி, நிகழ்ச்சி ஒன்றில் தமிழுக்கு இணையானஅந்தஸ்துள்ள மொழி சமஸ்கிருதம் என பேசியிருந்தார். அப்போது திமுக தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. ஆளுநர் பேசிய கருத்துக்கு பதில் அளிக்கும் வகையிலேயே பள்ளிமேடையில் பொன்முடி பேசி ஆளுநர் ஆர்.என்.ரவியை வம்புக்கு இழுத்திருக்கிறார் அமைச்சர். பள்ளி மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், மொழி குறித்து பேசி பொன்முடி சர்ச்சையை ஏற்படுத்தி இருப்பதாக நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களேஅதிருப்தி தெரிவித்துள்ளனர்.அதே போன்று மாவட்ட கல்வி அலுவலரையும், அமைச்சர் மட்டம் தட்டி பேசியதாகவும் அதிருப்தி கிளம்பியிருக்கிறது. மாணவிகள் பாடங்களை மனப்பாடம் செய்து படிக்காமல் அனைத்தையும் தெரிந்து படிக்க வேண்டும் என்று கூறிய பொன்முடி, எடுத்துக்காட்டாக நிகழ்ச்சிக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியாமல் மாவட்ட கல்வி அலுவலர் மகாலட்சுமி அனைவரது பெயரையும் மனப்பாடம் செய்தது போல் படித்தார் என்று மாணவிகள் மத்தியிலேயே மாவட்ட கல்வி அலுவலரை இழிவுபடுத்தியதும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.பொன்முடி என்றாலே சர்ச்சை…. சர்ச்சை என்றாலே பொன்முடி என்பது மீண்டும் நிரூபணமாகி இருக்கிறது.

via News J : https://ift.tt/0cekG5H
Mediaமாமா, மருமகன் என்றுதான் கார்ப்பரேட் திமுகவில் அடிக்கடி உச்சரிக்கப்படும். ஆனால் சமீப காலங்களாக அத்தை, மருமகன் என்று உறவுகளிடையே நடக்கும் அதிகார மோதல் திமுகவை பேசும் பொருளாக்கி இருக்கிறது.இதில் அத்தை ஸ்டாலினின் சகோதரியான கனிமொழி எம்பி… மருமகன் என்பது ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி.என்றைக்கு திமுக ஸ்டாலினின் கரங்களுக்குச் சென்றதோ… என்றைக்கு தனது மகன் உதயநிதியை முன்னெடுக்க ஸ்டாலின் திட்டமிட்டாரோ அன்றைக்கே உச்சத்தில் இருக்கும் உறவுகளுக்குள் அதிகாரம் தொடர்பான ஈகோ யுத்தம் தொடங்கி விட்டது.கருணாநிதி இருந்தவரை, மதுரையின் ஆகப்பெரும் அரசியல்வாதியாக பிம்பம் கட்டமைக்கப்பட்ட அழகிரியை, கருணாநிதியைக் கொண்டே கட்டுப்படுத்தி கடைசியில் கட்சியை விட்டே ஓரம் கட்டி வைத்தவர்தான் ஸ்டாலின். அத்தனைக்கும் காரணம் திமுக என்பது தனக்கும், தனக்குப் பிறகு மகன் உதயநிதிக்கும் என்னும் சுயநலம்தான். இதில் அவ்வப்போது ஸ்டாலினின் கண்களை உறுத்திக் கொண்டிருப்பவர் கனிமொழி… எங்கே தமிழகத்தில் அவரது அரசியல் செல்வாக்குப் பெருகிவிடக்கூடாது என்பதில் தொடக்கத்தில் இருந்தே கண்கொத்தி பாம்பாக இருந்ததால்தான், நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைப்பதில் குறியாக இருந்தார்.அவ்வப்போது குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பை கட்டுப்படுத்த, கட்சி ரீதியாகவும் அவருக்கு துணை பொதுச்செயலாளர் என்று பொறுப்பைக் கொடுத்தாலும் கனிமொழியால் அவ்வளவு அதிகாரம் காட்டமுடியுமா என்பது அவருக்கே வெளிச்சம். இப்படி அண்ணனோடு அரசியல் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த கனிமொழி இன்று மருமகன் உதயநிதியுடன் அரசியல் களத்தில் மோதிக் கொண்டிருப்பதாக காதைக் கடிக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.((திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் இதற்கான அச்சாரம் போடப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழப்பின் போது அவரது குடும்பத்துக்கு திமுக சார்பில் நிதியை கனிமொழி மூலமாக கொடுத்துவிட்ட மறுநாளே, உதயநிதியையும் அங்கே அனுப்பி வைத்தார் ஸ்டாலின். உதயநிதியை அனுப்பி வைத்தது அவர் மூலமாக தென்மாவட்ட அரசியல் அதிகாரமும் தனது கையில்தான் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்று பரபரப்பாகப் பேசப்பட்டதோடு, நீருபூத்த நெருப்பாகவும் இருந்து வந்தது.))இன்றைக்கு உதயநிதி எம்.எல்.ஏ, அமைச்சர், அடுத்ததாக துணை முதலமைச்சர் என்று திமுகவின் உயர்ந்த அதிகார மட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, கனிமொழியோ திமுக குடும்பத்தால் கண்டுகொள்ளப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாகவே தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ((சாதி ரீதியான பாசத்தில்,)) கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து நெருக்கம் காட்டிய தெற்கு மாவட்ட அமைச்சர்கள் கூட இன்று தங்களின் அரசியல் லாபத்துக்காக வாரிசு அமைச்சருக்கு பல்லக்கு தூக்கத் தொடங்கி விட்டதால் கனிமொழி தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். இதற்கு அச்சாரமாக தூத்துக்குடியில் உதயநிதி கலந்து கொண்ட அரசு ஆய்வுக் கூட்டம், திமுக செயல்வீரர்கள் கூட்டம் எதற்கும் கனிமொழியை முறையாக அழைக்காமல் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ((இனப் பாசத்தில்)) கனிமொழியை விரும்பும் தூத்துக்குடி திமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், கூட்டம் காற்றாட, விழா ஏற்பாட்டாளர்களிடம் உதயநிதி கடுமை காட்டியதாக சொல்கிறார்கள்.இப்படி அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே அரசியல் சதுரங்கம் நடப்பதில், வாரிசுகளை லைம் லட்டுக்கு கொண்டுவரும் நகர்வுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதியின் மகன் இன்பநிதியை, எழும்பூரில் விளையாட்டு அரங்க திறப்பு விழாவில் முன்னிலைப் படுத்திய நிலையில், கனிமொழியின் மகன் ஆதித்யாவையும் அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வேலைகள் நடந்து வருகிறதாம்…அதுசரி திமுகவில் வாரிசுகளும் உறவுகளும்தான் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் இருக்கிறார்கள். தொண்டன் எப்போதும் தொண்டனாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது திமுகவில் எழுதப்படாத விதிதான்!

via News J : https://ift.tt/zsvVMk5
Mediaவிநாயகப் பெருமான் அவதரித்த திருநாளான விநாயகர் சதுர்த்தியை பக்தியுடனும், மனமகிழ்ச்சியுடனும் கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் தனது உளங்கனிந்த விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துகளைத் எதிர்க்கட்சித் தலைவரும், கழக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழத்துப் செய்தியில், சங்கடங்களையும், தடைகளையும் நீக்க வல்ல விநாயகப் பெருமானை வணங்கி எந்த செயலைத் தொடங்கினாலும், அந்தச் செயலை வெற்றியுடன் செய்வதற்குரிய மன உறுதியும், நம்பிக்கையும் தானாக ஏற்பட்டு அந்தக் காரியம் வெற்றியில் முடியும் என்பதை உணரவேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கூறிப்பிட்டுள்ளார். மேலும் விநாயகர் சதுர்த்தியன்று மக்கள் களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையாரை இல்லத்தில் வைத்து அலங்கரித்து, தொடங்கும் காரியங்களில் எல்லாம் வெற்றிபெற வேண்டி பக்திப் பரவசத்துடன் வழிபட்டு மகிழ்வார்கள் என குறிப்பிட்டுள்ளார். கேட்கும் வரத்தைக் கொடுக்கும் கடவுளாகக் கருதப்படும் வேழமுகத்து விநாயகப் பெருமானின் திருவருளால், நாடெங்கும் நலமும், வீடெங்கும் வளமும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும் என்ற தனது விருப்பத்தினைத் தெரிவித்த கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், உளமார்ந்த “விநாயகர் சதுர்த்தி” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்து குறிப்பிட்டுள்ளார்.


via News J : https://ift.tt/17PZ9Mi
Mediaதந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, சேலத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு, கழக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம், புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த பொதுச்செயலாளருக்கு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.மேலும் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் எதிர்த்கட்சித் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்க போராடியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர் பெரியார் என்றும், அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.


via News J : https://ift.tt/nXGc0g9
Mediaவிடியா திமுக ஆட்சியில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் முடிக்கப்படாததால், பல ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பணம் வீணாகியுள்ள நிலையில், வேதனையில் உள்ள மக்களின் பிரச்னைக்கு முடிவுகாலம் எப்போது என கேள்வி எழுந்துள்ளது.சென்னையில் நிலத்தடி குடிநீர் வாரிய குழாய்கள் துருப்பிடித்துள்ளதால், நீர் கசிவு மற்றும் பைப் துளைகள் உள்ளிட்ட காரணங்களால், கழிவுநீர் கலந்து குடிநீர் மாசுபடுகிறது. சென்னை தண்டையார்பேட்டை, காசிமேடு போன்ற பகுதியில் குடிநீர் குழாய்களில் வரும் நீரில், சுமார் 27 மடங்கு ஈ கோளி என்ற வைரஸ் உள்ளது.இதனால் குடிநீர் அருந்த தகுதியற்றதாக உள்ளதாக கூறப்படுகிறது. தனியார் கேன் குடிநீரிலும் ஈ கோளி வைரஸ் வருவதனை யாரும் முறையாக கண்காணிப்பதில்லை. திமுக ஆட்சிக்கு வந்து 28 மாத காலத்தில், மாநகரம் முழுவதும் மழைநீர் வடிகால் பணி என்ற போர்வையில், சாலைகளில் தோண்டப்பட்ட கால்வாய்கள் மூடப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் விபத்துக்களில் சிக்கும் அவலநிலை தொடர்ந்து வருகிறது.மேலும் மழைக்காலங்களில் பள்ளி செல்லும் குழந்தைகள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மழைநீர் கால்வாய் பணிகள் சரிவர முடிக்கப்படாததன் காரணமாக, இதுவரையிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனை விடியா அரசு புரிந்துகொண்டு செயல்படுமா, இல்லை தோண்டிய கால்வாயை மீண்டும் தரமில்லாமல் அமைத்து கஜானவை நிரப்பும் வேலை மட்டுமே நடைபெறுமா எனவும் மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த பணிகளை யார் ஆய்வு செய்கிறார்கள், உண்மையிலேயே இந்த திட்டம் மழைக் காலத்தில் தேவைதானா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/vXYSRWG
Mediaவிடியா ஆட்சியில் மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 12 ஆயிரம் வழங்க உள்ளதாக மேடையில் ஸ்டாலின் உளறிக் கொட்டியுள்ளார். அந்தரத்தில் ஆடிய மின்விசிறிகள், ஸ்டாலின் பேசும்போதே வெளியேறிய பெண்கள் என ஒட்டுமொத்தத்தில் ஒரு சொதப்பல் கூட்டமாக நடந்து முடிந்துள்ளது… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கும் 3 கோடிக்கும் மேற்பட்ட பெண் வாக்காளர்களில், வெறும் 1 கோடி பேருக்கு மட்டுமே உரிமைத் தொகையை வழங்கிவிட்டு மீதிப் பெண்களுக்கு கல்தா கொடுத்துள்ளார் ஸ்டாலின். கட்சிக்காரர்களின் ஆதரவாளர்களுக்கு மட்டும் காசை வழங்கிவிட்டு ஏதோ அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியதாக பெருமை பீற்றிக்கொண்டிருக்கிறார்.இப்படி பல தகிடுதத்தங்களுக்கு மத்தியில் அரங்கேற்றப்பட்டுள்ள திட்டத்தின் தொடக்க விழா காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. கூட்ட அரங்கு முதல் ஏற்பாடுகள் வரை அனைத்திலும் சொதப்பி, இது ஒரு லாயக்கற்ற டிராமா கம்பெனி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது விடியா திமுக.கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் மகளிர் அமர வைக்கப்பட்டிருந்த இடத்தில் தலைக்கு மேல் ஓடிக்கொண்டிருந்த மின் விசிறி ஒன்று திடீரென ஆட்டம் கண்டது. கொஞ்சம் விட்டால் தலையில் விழுந்துவிடும் போலயே என அங்கிருந்த பெண்கள் பதறியடித்தபடி எழுந்து ஓடினர். விடியா ஆட்சியைப் போலவே நிலையில்லாமல் ஆடிக்கொண்டிருந்தன அந்த மின்விசிறிகளும். வலுக்கட்டாயமாக உட்கார வைக்கப்பட்டிருந்த பெண்களோ மூஞ்சியில் ஒரு உற்சாக ரேகையில்லாமல் சோகம் வடிந்து காணப்பட்டனர். இந்நிலையில் தொடர்ந்து பல ஃபேன்கள் மக்கர் பண்ண, அங்கிருந்த திமுகவினர் சுமார் 70 மின்விசிறிகளை நிறுத்திவிட்டனர். இதையடுத்து வெக்கையில் புழுக்கம் தாங்காமல், பாதி பெண்கள் ஸ்டாலினின் பேச்சைக் கூட கேட்க முடியாமல், விட்டால் போதும் சாமி என சாமியானா பந்தலை பிரித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறி தப்பிச் சென்றனர்.கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் வழக்கம்போல உளறிக் கொட்டினார். துண்டுச் சீட்டு இருந்தாலே ஒழுங்காய் படிக்கத் தெரியாத மனிதர், மனப்பாடம் செய்து ஒப்பிப்பதுபோல பேசிக் கொண்டிருந்தார். ஆர்வத்தில் பேசியவர், ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் எனக் கூறுவதற்கு பதிலாக மாதம் 12 ஆயிரம் உரிமைத் தொகை வழங்க உள்ளோம் என உளறிக் கொட்டியதைக் கேட்டு கூட்டத்தில் இருந்த பெண்கள் “களுக்” எனச் சிரித்தனர். ஆயிரத்துக்கே இந்த பாடுபடுறோம், 12 ஆயிரம் எல்லாம் குடுத்துட்டா எங்க தலை மேல ஏறி இல்ல உட்காந்திருவீங்கனு என கூட்டத்துக்கு வந்த பெண்களே கமெண்ட் அடித்தனர்.இந்தக் கூட்டத்தைக் கூட ஏதோ தனது குடும்ப விழாவென நினைத்துவிட்டார் போல ஸ்டாலின். கருணையுள்ளம் கொண்ட தாய், தூண் போன்று உறுதுணையாக நிற்கும் மனைவி, பாசமே உருவான மகள் என தன் வீட்டு பெண்களை மட்டும் பெருமையாக பேசிய ஸ்டாலின், தனது தங்கை கனிமொழி பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. தாய், மனைவி, மகளைப் பற்றி மட்டுமே பேசிய ஸ்டாலின் கனிமொழியின் பெயரைத் தவிர்த்ததன் பின்னால் இருந்த அரசியல் புரிந்ததோ என கூட்டத்துக்கு வந்த பெண்கள் கமெண்ட் அடித்தனர். “தங்கச்சியவே கண்டுக்கல, இவங்கள நம்புனா நமக்கும் இதான்டி நிலைமை” என கூட்டத்தைவிட்டு பாதியிலேயே தப்பிச் சென்றனர்.

via News J : https://ift.tt/lyYQUbG
Mediaஎங்க தாத்தாவும் அவங்க தாத்தாவும் நண்பர்கள், எங்க அப்பாவும் அவங்க அப்பாவும் , நண்பர்கள், நானும் அவரும் நண்பர்கள் என்று பெருமைபேசிக்கொண்டு தமிழ்நாட்டு அரசியல் வலம்வரும் பெஸ்ட் ஃப்ரெண்ட் காம்போ கொஞ்ச நாளாக சைலண்ட் மோடில் இருக்கிறது.. யாருங்கோ அவுங்க? என்று கேட்கிறீர்களா? அட நம் விளையாட்டுத்துறையும், பள்ளிக்கல்வித்துறையையும் தான் சொல்கிறோம்.. உதயநிதியும் அன்பில் மகேஸ்-ம் உயிரும் உடலும்போல, நகமும் சதையும் போல போகிற இடங்களில் எல்லாம் கூடிக்கூடியே சென்றார்களே இப்போது எங்கே ஆளையே காணவில்லையே ?உதயநிதியின் ரசிகர் மன்ற தலைவராக சீறும் சிறப்புமாக பணியாற்றிய காரணத்தால் அன்பில் மகேஸ்க்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதவியை பரிசளித்த ஸ்டாலின், அவர் எப்படி அமைச்சர் வேலையை பார்க்கிறார் என்று தெரியவும் இல்லை கவனிப்பதும் இல்லை.. அதனால்தான் அவ்வப்போது ஆப்சண்ட் ஆகி தன் சொந்த வேலைகளை பார்க்க போய்விடுகிறார் அன்பில்…ஆனால், அங்கே பள்ளிக்கல்வித்துறையிலோ ஒருபக்கம் மாணவர்கள் பாழாய் போய்க்கொண்டிருக்க, இன்னொருபக்கம் ஆசிரியர்கள் படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள் .. கஞ்சா, குடி, கூல் லிப் என்று நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் போதைப்பொருட்களுக்கு அடிமையாகி, ஸ்கூலை கட் அடித்துவிட்டு எங்கேயோ சென்றுவிடுகின்றனர். அவர்களை கட்டுப்படுத்த ஆசிரியர்கள் முயன்றால், அங்கே அவர்களுக்கும் செக்…இன்னொரு படிக்கும் மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் இழுத்தடிப்பு, கொடுத்த சைக்கிளும் காயலாங்கடைக்கு போகுமளவுக்கு மோசம்.. அட காலை சிற்றுண்டி என்று சொன்னார்களே அதாவது சாப்பிடும் அளவிற்கு இருக்கிறதா? அதுவும் இல்லை… அட நல்லாவே இருந்தாலும், பட்டியலினத்தவர்கள் சமைத்த உணவை எங்கள் குழந்தைகள் சாப்பிட மாட்டார்கள் என்று போராடும் பெற்றோர்.. எப்பப்பா… இன்னும் லிஸ்ட் நீண்டு கொண்டே செல்லும்…அட மாணவர்களைத்தான் நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் இருக்கிறார்களே அவர்கள் நிலை என்ன என்று யோசிக்கலாம்.. அது இன்னும் அந்தோ பரிதாபம் தான்… மாணவர்களுக்கு கற்பிக்கும் நேரத்தை விட, ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சித் திட்டம் என்ற பெயரில் அவர்களை டார்ச்சர் செய்துகொண்டிருக்கிறது இந்த அரசு…ஆக மொத்தத்தில், நிறுத்திவைத்திருக்கும் லேப்டாப் திட்டத்தை மாணவர்களுக்கு எப்போது கொடுக்கப்போகிறார்? அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தாமல், மாணவர்களின் நலனை காக்க எதுவும் செய்யாமல் அப்படி என்னதான் செய்துகொண்டிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்? நடிப்பதையே நிறுத்திய உதயநிதியின் ரசிகர் மன்றத்தில் யாருக்கு டீ ஆத்திக்கொண்டிருக்கிறார் மகேஷ் பொய்யாமொழி? ஒருவேளை தஞ்சாவூரிலேயே தலைமறைவாகிவிட்டாரோ அமைச்சர் அன்பில் மகேஸ் என்றுதான் அனுதினமும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழக மக்கள். 

via News J : https://ift.tt/DBaQfLJ
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/kanimozhi-azhagiri.jpg">Media</a>மத்தளத்துக்கு இரண்டு பக்கம்தான் அடி, ஆனால் திமுக தென்மாவட்ட நிர்வாகிகளுக்கு திரும்பிய பக்கமெல்லாம் அடி விழுகிறது. உதயநிதி மற்றும் கனிமொழியின் மோதல்தான் அதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. தென்மாவட்ட திமுகவை கைக்குள் வைத்திருக்கும் கனிமொழி இன்னொரு அழகிரியாக உருவாகிக்கொண்டிருப்பாதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.அத்தை பேச்சை கேட்டா மருமகனுக்கு பிடிக்காது … மருமகன் பேச்சை கேட்டா அத்தைக்கு பிடிக்காது.. இந்த இரண்டு பேர்கிட்ட சிக்கிட்டு கட்சி சீரழிஞ்சிட்டு இருக்கு என்று புலம்பிக்கொண்டிருக்கின்றனர் திமுகவின் தென் மாவட்ட நிர்வாகிகள் ! கனிமொழியும் உதயநிதியும் நேரடியாக மோதிக்கொள்ளாமல் நிர்வாகிகளை வைத்து விளையாடிக்கொண்டிருப்பதுதான் அந்த புலம்பலுக்கு காரணம்.பொதுவாகவே திமுகவிற்கும் தென் மாவட்டங்களுக்கும் ஏழாம் பொறுத்தம்தான்… தலைமைக்கு கட்டுப்படாமல் தனி ராஜ்ஜியத்தை நடத்துவார்கள் திமுகவின் தென்மாவட்ட நிர்வாகிகள். அந்த வகையில் வைகோ உள்ளிட்ட சிலர் திமுகவில் இருந்து தூக்கி எறியப்பட்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தொண்டர்களை நம்பாமல் தென் மாவட்டங்களை கவனித்துக்கொள்ள தனது மூத்தமகன் அழகிரியை மதுரைக்கு அனுப்பினார் கருணாநிதி. ஆனால் மூத்தமகனே இளைய மகன் ஸ்டாலினுக்கு போட்டியாக வருவார் என அவர் நினைத்து பார்க்கவில்லை. ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடிகளை கொடுத்து கருணாநிதியை புத்திர சோகத்தில் ஆழ்த்தினார் அழகிரி.அன்று அழகிரியால் அல்லல்பட்ட ஸ்டாலின், தன் மகனுக்கு அதுமாதிரி சிக்கல் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் கனிமொழியை மாநில அரசியலில் கால் பதிக்க விடாமல் தேசிய அரசியல் நோக்கி வேண்டுமென்ற தள்ளினார். இப்போது அதுவே உதயநிதிக்கு பெரும் தலைவலியாகியுள்ளது.தூத்துக்குடி எம்.பியாக வலம் வரும் கனிமொழி தென்மாவட்டங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அழகிரி ஸ்டாலினுக்கு ஆட்டம் காட்டியது போல, உதயநிதிக்கு கனிமொழி ஆட்டம் காட்டி வருகிறார். தென்மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் கனிமொழியின் தலைமையை விரும்புவதாகவே தெரிகிறது. கட்சியிலும் ஆட்சியிலும் ஸ்டாலினின் மருமகன் மற்றும் மகன் உதயநிதியின் தலையீடு அதிகம் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள். மேலும் சமூகவலைதளங்களில் அரசியல்விமர்சகர் என்கிற பெயரில் ஸ்டாலின்,உதயநிதிக்கெல்லாம் கொள்கை எதுவும் இல்லை எனவும், கனிமொழிதான் கொள்கை வாரிசு எனவும் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.இதனால் உடன்பிறப்புகளின் மத்தியில் கனிமொழியின் இமேஜ் உயரும் என எதிர்பார்க்கிறதாம் கனிமொழி தரப்பு.கனிமொழியின் இந்த காய் நகர்த்தல்களை உதயநிதி தரப்பு உணராமல் இல்லை. உதயநிதி தரப்பும் அதற்கான எதிர்வினைகளை ஆற்றி வருகிறது. தென் மாவட்டத்தில் கனிமொழியெல்லாம் ஒன்றுமே இல்லை என்பதை நிரூபிப்பதறக்காக கனிமொழிக்கு நெருக்கமாக இருந்த சிலரை தன்பக்கம் இழுத்திருக்கிறார் உதயநிதி. குறிப்பாக தூத்துக்குடியில் கனிமொழியின் நிழல் போல உலா வந்து கொண்டிருந்த அமைச்சர் கீதா ஜீவன், இப்போதெல்லாம் வேறு வழியே இல்லை என்றால் மட்டுமே கனிமொழியின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மற்றபடி ஸ்டாலினின் குட்புக்கில் இடம் பிடிப்பதற்க்காக உதயநிதி அணியில் இணைந்துவிட்டார் கீதா ஜீவன். இவரை போலவே முன்பு கனிமொழியின் ஆதரவாளராக இருந்த பலரும் இப்போது உதயநிதி பக்கம் தாவியுள்ளனர். ஆனாலும் கூட தென்மாவட்ட திமுகவில் கனிமொழியின் செல்வாக்கு சரியவே இல்லை.அந்த வகையில் தூத்துக்குடியில் கனிமொழியை அழைக்காமல் ஆலோசனைக்கூட்டம் நடத்திய உதயநிதிக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்தது கனிமொழி தரப்பு. ஆலோசனைக்கூட்டத்திற்கு நிர்வாகிகள் வராத நிலையில் காலி சேர்களை பார்த்து கத்திவிட்டு போனார் உதயநிதி. கனிமொழிதான் கொள்கைவாதி என்கிற பேச்சை சகித்துக்கொள்ள முடியாத உதயநிதி, சமீபத்தில் சனாதனம் பற்றி பேசத்தெரியாமல் பேசி, பெரும் சிக்கலுக்குள் சிக்கினார் . தன்னை, கனிமொழியை விட பெரிய கொள்கைவாதி போல காட்டிக்கொள்ளத்தான் உதயநிதி அப்படி பேசினார் என்கிறார்கள் உள்விவகாரங்களை உணர்ந்தவர்கள். உதயநிதி இப்படி சிக்கிக்கொண்டதை கனிமொழி தரப்பு உள்ளுக்குள் ரசிப்பதாகவே சொல்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.இத்தகைய தொடர் மோதல்களால் ஸ்டாலினே இப்போது கனிமொழியை ஓரம் கட்டத்தொடங்கியுள்ளார்.சமீபத்தில் ஸ்டாலின் அவரது குடும்பத்தில் உள்ள பெண்களை பற்றி புகழ்ந்து பேசும் போது அவரது தாய், மனைவி, மகள் பற்றியெல்லாம் பேசினார். ஆனால் அரசியலில் தனக்கு இதுவரை உறுதுணையாக இருந்த தங்கை கனிமொழி பற்றி பேசவே இல்லை. காரணம் கனிமொழி அழகிரியாக உருமாருகிறார் என்பதை ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். எதிர்காலத்தில் தனது மகனுக்கு போட்டியாக கனிமொழி இருந்துவிடக்கூடாது என நொந்து கொண்டிருக்கிறார் என்கிறார்கள் திமுகவிற்கு…
Mediaசென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகள் 70 சதவீதம் மட்டுமே முடிந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும், விடியா அரசு அறிவித்தபடி செப்டம்பருக்குள் பணிகள் நிறைவடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் மழைநீர் அதிகம் தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு, விடியா ஆட்சியில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக மழைநீர் வடிகால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த பணிகள், இதுவரை 70 விழுக்காடு மட்டுமே முடிவடைந்துள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக வடசென்னைக்குட்பட்ட கொசஸ்தலை ஆற்றுப்பகுதியில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதியின் மூலம் 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 1 முதல் 7 மண்டலங்களுக்குட்பட்ட வார்டுகளில், கடந்த 2 ஆண்டுகளாக பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கும் ஒப்பந்ததாரர்கள், தற்போதைய நிலவரப்படி கட்டுமான பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப கூடுதலாக 40 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்க வேண்டுமாம். இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி ரூபாய்க்கு 8 விழுக்காடு வரை அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாகவும், அவற்றை கொடுக்காததால் 30 விழுக்காடு பணிகள் நடைபெறாமல் இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இது மட்டுமல்லாமல் தென் சென்னைக்குட்பட்ட, மேற்கு மாம்பலம், கே.கே நகர், மடிப்பாக்கம், நங்கநல்லூர் போன்ற இடங்களிலும், அண்ணா நகர், ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இணைப்பு பணிகள் என்பது முடிவடையாமல் இருப்பதாகவும், இந்த பணிகள் பருவமழை காலம் முடிந்த பின்னர் தான் முடிவடையும் என்றும் ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர். ஒப்பந்ததாரர்கள் இப்படி கூறும் நிலையில், தமிழக அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனாவோ அதிகாரிகளை அழைத்து, மழைநீர் வடிகால்வாய் பணிகளின் நிலவரம் குறித்த புள்ளி விபரங்கள் தெரியாமல் வருகிற 30-ஆம் தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விடுமாறு உத்தரவிட்டுள்ளார்.இந்த நிலையில் எவ்வித தகவலும் தெரியாமல், செப்டம்பர் மாத இறுதிக்குள் அனைத்து பணிகளையும் முடித்து விட வேண்டும் என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா உத்தரவிட்டிருப்பது, வேடிக்கையாக இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.கால்வாய்க்காக குழி தோண்டப்பட்ட பகுதிகள் முழுவதும் மழையில் சேரும், சகதியுமாக காட்சியளிக்கின்றன. பொதுமக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. காலை, மாலை நேரங்களில் பள்ளிகளுக்கும், அலுவலகங்களுக்கும் உரிய நேரத்துக்குச் செல்ல முடியாமல் மாணவர்களும், பொதுமக்களும் திண்டாடி வருகின்றனர். இதையெல்லாம் காணாமல் கடந்துவிட்டு, சீரும் சிறப்புமான ஆட்சி வழங்கி வருவதாக வெற்றுக் கூச்சலிட்டு வருகிறது விடியா அரசு.


via News J : https://ift.tt/mrVHu2G
Mediaமகளிர் உரிமைத் தொகை திட்ட துவக்க விழா கடலூர் மாவட்டத்துல நடந்திருக்கு. இதுல கலந்துகிட்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உருட்டுன உருட்டுல கந்தர்வக்கோட்டை சமஸ்தானமே ஆடிப்போச்சுனா பாத்துக்கோங்க. அதாவது, இந்த மகளிர் உதவித் தொகை திட்டத்தின் மூலம் இந்தியாவுல இல்ல, ஏன் வேர்ல்டுலயே இப்படி ஒரு திட்டத்தை யாரும் கொண்டு வந்தது இல்லையாம். அதுமட்டுமில்லாம பெண் முதல்வராக இருந்தப்பவே மகளிருக்காக இந்த மாதிரி திட்டத்தை யோசிக்கல, ஆண் முதல்வராக இருக்கும் ஸ்டாலின் ஆட்சில தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டதுனு பெருமை பீத்தியிருக்காரு. 3 கோடிக்கும் மேல பெண்கள் இருக்க மாநிலத்துல 1 கோடி பேருக்கு மட்டும் உரிமைத் தொகை வழங்கிட்டு இந்த பெருமை எல்லாம் நமக்கு தேவையா சார். புரட்சித் தலைவி, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில கொண்டு வந்த, தாலிக்குத் தங்கம் திட்டம், மானிய விலையில இருசக்கர வாகனம், அம்மா உணவகம், கறவை மாடுகள்னு அறிவிச்ச திட்டங்கள் எல்லாமே மகளிர் நலன் காக்கும் திட்டங்கள் தான் யாராச்சும் இவருக்கு எடுத்துச் சொல்லுங்கப்பானு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/fC7bEsZ
Mediaநிர்வாகிகள், தொண்டர்கள் நிறைந்திருந்த பொதுக்கூட்ட மேடையில், உதயநிதியை திமுக எம்.பி டி.ஆர் பாலு எச்சரித்த சம்பவம் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கனிமொழி பாணியில் உதயநிதியை எதிர்க்க தொடங்கவிட்டனர் திமுக சீனியர்கள்… என்ன நடக்கிறது திமுகவில் ? இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.தம்பி … வாயிருக்குனு இஷ்டத்துக்கு பேசாதீங்க… கொஞ்சம் அடக்கி வாசிங்க.. என்று உதயநிதியை மறைமுகமாக எச்சரித்துள்ளார் திமுக எம்.பி டி.ஆர்.பாலு ! வேலூரில் நடந்த திமுக கூட்டத்தில் பேசிய டி.ஆர் பாலு…, எதை வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு பின்னர் சமாளித்துக்கொள்ளலாம் என உதயநிதி நினைப்பதாகக் கூறினார். தன் கையில் இருக்கும் பொருளை கீழே போட்டு உடைத்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என உதயநிதியை எச்சரித்துள்ளார். உதயநிதியின் பேச்சால் இந்தியா கூட்டணி தலைவர்களே கடும் அதிர்ப்தியை வெளிப்படுத்தியதாகவும் கூறினார். ஸ்டாலினின் மகன் என்கிற ஒற்றை காரணத்திற்காக இதுவரையில் உதயநிதியின் எதிர்த்து ஒரு வார்த்தைக்கூட பேசாத சீனியர்கள்… இப்போது நேரடியாக சொல்லமுடியவில்லை என்றாலும் மறைமுகமாக உதயநிதியை வசைபாடத்தொடங்கியுள்ளனர். அதிலும் பொதுக்கூட்ட மேடையில் நிர்வாகிகள், தொண்டர்களின் மத்தியில் டி.ஆர்.பாலு பேசிய பேச்சு ஸ்டாலினை எரிச்சலடைய வைத்துள்ளது. டி.ஆர்.பாலு காரணமில்லாமல் கொந்தளிக்கவில்லை.சமீபத்தில் சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். வட இந்தியாவில் சனாதனம் என்றால் இந்துமதம் என்றுதான் பொருள் கொள்ளப்படுகிறது. உதயநிதி இந்த பேச்சு இந்து மதத்திற்கு எதிரானது என வட இந்திய கட்சிகளும் அமைப்புகளும் கொந்தளித்தன. திமுகவின் கூட்டணி கட்சிகளே உதயநிதியை கடுமையாக கண்டித்தன. ஆனால் அதை கொஞ்சமும் உணராத உதயநிதி கொசுபத்தி சுருள் படத்தை வெளியிட்டு விளையாடிக்கொண்டிருந்தார். உதயநிதியின் தயவில் அரசியலில் கால் பதித்திருக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் போன்ற சிலர் “ நீ விளையாடு நண்பா “ என ஏத்திவிட… ஏதையோ பெரிதாக சாதித்துவிட்டோம் என்ற நினைப்பில் மிதக்கத்தொடங்கினார் உதயநிதி…ஆனால் உதயநிதியின் இந்த பேச்சால் கூட்டணிக்குள் பெரும் குழப்பமே வந்துவிட்டது. மம்தா தொடங்கி அரவிந்த் கெஜ்ரிவால் வரை பல தலைவர்கள் கூட்டணியே வேண்டாம் என்கிற முடிவுக்கு வந்துவிட்டதாக சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தனது மகனின் விளையாட்டு பேச்சு விபரீதமானதை உணர்ந்த ஸ்டாலின், இப்போது பேசுவதற்கு நிறைய இருக்கிறது அதை பற்றி பேசலாம் என்பது போல அறிக்கை ஒன்றை வெளியிட்டு கூட்டணிக்கட்சி தலைவர்களை சமாதானம் செய்தார். இருந்தாலும் டெல்லி அரசியலில் இருக்கும் திமுக சீனியர்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை.ஸ்டாலினின் மகன் என்பதற்காக இளைஞர் அணியை கொடுத்தோம், ஸ்டாலின் விரும்பினார் என்பதற்காக அமைச்சராக்க ஒப்புக்கொண்டோம், ஸ்டாலின் கட்டாயப்படுத்துவதால் உதயநிதியை முன்னிலைபடுத்துகிறோம். ஆனால் அரசியல் அனுபவமின்றி எப்போது எதை பேச வேண்டும் என்பது கூட தெரியாமல் உதயநிதி உளறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தனக்கென ஒரு வட்டத்தை உருவாக்கி கொண்டு சீனியர்களிடம் கலந்தாலோசிக்காமல் எடுத்தோம் கவிழ்த்தோம் என உதயநிதி செயல்படுவதால்தான் இந்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உதயநிதியின் பேச்சால் டெல்லி அரசியலில் செல்வாக்கை இழந்துவிட்டோம் என திமுக சீனியர்கள் கொதித்துக்கொண்டு உள்ளனர்.அதன் வெளிப்பாடுதான் டி.ஆர்.பாலுவின் பேச்சு என்கிறார்கள் உள்விவகாரங்களை உணர்ந்தவர்கள். ஸ்டாலின் எரிச்சலடைவார் என்பது தெரிந்தேதான் டி.ஆர்.பாலு எச்சரித்ததாக சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். இதிலிருந்து ஸ்டாலினும் அவரது தவப்புதழ்வரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார்கள். ஏற்கனவே டெல்லி அரசியலில் திமுகவின் முகமாக வலம் வரும் கனிமொழி, உதயநிதியை புறக்கணித்து வரும் நிலையில், டி.ஆர்.பாலு போன்ற மூத்த நாடளுமன்ற உருப்பினர் உதயநிதியை பொதுவெளியில் எச்சரித்திருப்பது திமுகவில் நிலவிவரும் அதிகார மோதலையும் கோஷ்டி அரசியலையும் அம்பலப்படுத்தியுள்ளது.

via News J : https://ift.tt/0b3BxlE
Mediaஅதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசியதும் தமிழகம் முழுக்க அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் மத்தியில் ஒரே உற்சாகக் கொண்டாட்டங்கள்தான் … ஏன் இந்த உற்சாகம்? தொண்டர்களின் பூரிப்புக்கு என்ன காரணம்? தலைமை தான்.. ஒரு கடைக்கோடி தொண்டனின் உள்ளக்கிடக்கையை அப்படியே நிறைவேற்றிக்காட்டுவதுதானே கட்சித்தலைமையின் தலையாய கடமை? அதைத்தான் செய்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி…திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த பேரறிஞர் அண்ணா. அவர் வழியில் தமிழகத்தை வழிநடத்திய புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சித் தலைவரின் மறைவுக்கு பிறகு கட்சி, ஆட்சி மட்டுமல்லாது தந்தை பெரியாரின் கொள்கைகளையும் கடைபிடித்த, சமூக நீதி காத்த வீராங்கனையாக திகழ்ந்த புரட்சித் தலைவி அம்மா… அதிமுகவினர் தெய்வங்களாக போற்றி வணங்கும் இந்த தலைவர்களை, எங்கிருந்தோ வந்து, தகுதிக்கு மீறிய பொறுப்பை பெற்றுவிட்டு, தன்னை முன்னிலைப்படுத்த வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தன் இஷ்டத்திற்கு விமர்சிக்கும் அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொந்தளித்துக்கிடக்கின்றனர் அதிமுகவில் இருக்கும் 2 கோடிக்கும் அதிகமான ரத்ததின் ரத்தங்கள்.., இதையெல்லாம் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க நாங்கள் என்ன திமுகபோல அடிமைகளா என்று சீரியிருந்தார் சி.வி.சண்முகம்எம்பி… அதிமுகவால் பல கட்சிகள் வாழ்ந்துள்ளனவே தவிர, ஒருபோதும் வீழ்ந்தது இல்லை. ஆனால் நோட்டாவுக்கு கீழ் வாக்குகளை பெற்றுக்கொண்டு, அதிமுக தயவில் தமிழகத்தில் தங்களுக்கான அடையாளத்தை பெற்று வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையைக்கு இனி தகுந்த பதிலடி கொடுப்போம் என்று சீரிப்பாய்ந்திருக்கிறது கழகம்.ஆம், பாஜக உடன் இப்போது கூட்டணி இல்லை, தேர்தல் நேரத்தில் கூட்டணியை பற்றி முடிவெடுத்துக்கொள்வோம் என்று அதிமுக ரத்தத்தின் ரத்தங்களின் குரலாக ஒலித்திருக்கிறார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று தொண்டர்களின் குரலாக கழகம் தற்போது அறிவித்திருப்பதை, ஒவ்வொரு அதிமுக தொண்டனும் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.தமிழகத்தின் உயிர்மூச்சான பேரறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரைப் போற்றி, அவர்கள் காட்டிய வழியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை கைபிடிடத்து அழைத்துச்சென்றுகொண்டிருக்கும் புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமி, தொண்டர்களின் குரலுக்கு செவி சாய்த்து, இந்த முடிவை எடுத்திருப்பதன் மூலம், தொண்டர்களிடம் அதீத நம்பிக்கையை பெற்று வருகிறார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி என்பது மீண்டும் நிரூபணம் ஆகியிருககிறது.ஆக, இதுவரை அதிமுக கூட்டணியை வசைபாடியே பிரச்சனைகளில் இருந்து தப்பிப்பிழைத்துக்கொண்டிருந்த ஸ்டாலின், இனி என்ன செய்யப்போகிறார்? திமுகவிற்கு கிலியைக் கொடுத்திருக்கிறதா அதிமுக-பாஜக கூட்டணி முறிவு? பாஜகவுடன் மறைமுகமாக உறவுகொண்டாடிய ஸ்டாலின், இனி நேரடியாகவே இணைந்து செயல்பட துடிக்கிறாரா? எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில், காலம் மாறும்.. காட்சிகளும் மாறும்… ஆக மொத்தத்தில், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற தொண்டர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு நிறைவேற்றி மீண்டும் தன் தொண்டர்களின் மனங்களில் நிறைந்துவிட்டார் பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி என்பதுதான் நிதர்சனம்.

via News J : https://ift.tt/TwHzcMe
Mediaவிருத்தாசலம் அருகே வெளியூரில் இருந்து காது குத்துவதற்காக கோயிலுக்கு வந்தவர்கள் மீது உள்ளூர்க்காரர்கள் தாக்குதல் நடத்தியது களேபரமாகி உள்ளது. கறிசோறு விருந்து கல்லெறிந்து தாக்கும் அளவுக்கு மாறியது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…கோயிலில் காதுகுத்தும் நிகழ்வுக்காக வெளியூரில் இருந்து வந்தவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் ஏற்பட்ட தகராறில் கல்லால் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்ட நபர் இவர்தான்…கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் கிராமத்தில் அய்யனார் கோயில் உள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் மணக்குடி கிராமத்தை சேர்ந்த குமரவேலும், அவருடைய சகோதரர் சிவதாஸும் ஞாயிற்றுக்கிழமை அன்று தங்கள் குழந்தைகளுக்கு காது குத்துவதற்காக குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் குலதெய்வக் கோயிலான கோமங்கலம் அய்யனார் கோயிலுக்கு வந்துள்ளனர். குலதெய்வம் முன்பு தங்களது, குழந்தைகளுக்கு காது குத்தி, சாமிக்கு படையல் போட்டு கறி விருந்து வைத்தனர்.
அந்த கறிவிருந்தில், கோமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், முதல் பந்தியில் சாப்பிட்டுள்ளனர். இரண்டாவது பந்தியிலும், உள்ளூரைச் சேர்ந்த, அரசு நேரடி கொள்முதல் நிலைய சுமை தூக்கும் பணியாளர்களான மணிகண்டன், ஜெயபிரகாஷ் மற்றும் சிலர் கலந்து கொண்டுள்ளனர்.அப்பொழுது குமரவேல் குடும்பத்தினர், வெளியூரிலிருந்து வந்திருக்கும் தங்களின் குடும்பத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் இன்னும் சாப்பிடவில்லை. எனவே, கொஞ்சம் பொறுங்கள் அடுத்த பந்தியில் உட்காரலாம் என்று கூறியுள்ளனர். கறிசோறு விருந்துக்கு அடுத்தபந்தியா என்று ஆத்திரமடைந்த தொழிலாளர்களுக்கும், சாமி கும்பிட வந்தவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாகியுள்ளது.இதையடுத்து கோமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர்களும் ஒன்று கூடி சாமி கும்பிட வந்தவர்களை தாக்கியுள்ளனர். இதனால் பயந்துபோன வெளியூர்க்காரர்கள், கோயிலுக்குள் சென்று பதுங்கிக் கொண்டுள்ளனர். ஆனாலும் விடாது கல்லை எறிந்தும், கட்டையாலும் தாக்கியதிலும், குமரவேல் என்பவரின் மண்டை உடைந்தது. சிவதாசுக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிறு குழந்தை முதல் பெரியவர்கள் என யாரையும் பார்க்காமல் அனைவரையும் சரமாரியாக கற்களை கொண்டு தாக்கியதாகவும், இந்த களேபரத்தில் தங்கச்செயினை பறித்து சென்றதாகவும் கூறப்படுகிறது.உயிர் பயத்தில் வெளியூரில் இருந்து வந்த பலரும் அங்கிருந்து தப்பிச்சென்ற நிலையில், காதுகுத்து நிகழ்ச்சிக்காக வந்த மயிலாடுதுறை மண்ணங்குடியை சேர்ந்த சக்திவேல், ரமேஷ் ஆகிய இருவரும், வெளியே செல்ல முடியாமல், கோயிலுக்குள்ளேயே மாட்டிக் கொண்டதால், அக்கிராம மக்கள் ஒன்று திரண்டு, கோவிலை சுற்றி வளைத்தனர். அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது..இதனை அறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுமார் ஒரு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு சக்திவேல் மற்றும் ரமேஷை பத்திரமாக மீட்டனர். அவர்களை போலீஸ் வாகனத்தில் ஏற்றி செல்லும் போது, கிராமத்தினர் அதனை தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் காவல்துறையினர் இரண்டு பேரையும் பத்திரமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.காது குத்து விழாவில் கறிசோறு போட்டது தப்பாடா… என விழாவை ஏற்பாடு செய்தவர் வாழ்நாள் முழுவதும் நினைத்து நினைத்து குமுறும்படி செய்த ஊரை நினைத்தாலே ஒரு நிமிடம் குலை நடுங்க தான் செய்கிறது….

via News J : https://ift.tt/qNCm9u2
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/edappadi-k-palanisamy-arikkai.jpg">Media</a>மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்வதாக வாக்குறுதி அளித்து, அதனை காற்றில் பறக்க விட்ட விடியா திமுக அரசின் முதல்வருக்கு எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மக்களை எளிதில் மறக்கடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன் திமுக 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இருந்தே, நிறைவேற்ற முடியாத பல்வேறு பொய்யான வாக்குறுதிகளை அளித்து தமிழக மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக குறிப்பிட்ட அவர், பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசிய திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் 38 தொகுதிகளில் வெற்றி பெற்று தமிழகத்திற்கு சாதித்தது என்ன என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். குறிப்பாக 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது திமுக வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகளில், தலைப்பு 3ல் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ் அலுவலக மொழி, தலைப்பு 6ல் ஈழத்தமிழர் நலன் தலைப்பில் பல வாக்குறுதிகள், தலைப்பு 7ல் தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் வாழும் அயல் நாடுகளில் தகுதி வாய்ந்த தமிழர்களை இந்திய தூதர்களாக நியமிக்க வலியுறுத்தல், தலைப்பு 8ல் கச்சத்தீவு பிரச்னை, தலைப்பு 16ல் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம், தலைப்பு 20ல் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் வாயு விலை குறைப்பு என குறிப்பிட்டு எதையும் நிறைவேற்றவில்லை என சாடினார்.மேலும், தலைப்பு 21ல் கேபிள் டிவி கட்டணக் குறைப்பு, தலைப்பு 23ல் வருமான வரி சலுகைகள், தலைப்பு 25ல் மாநிலங்களுக்கு நிதிப் பங்கீடு, தலைப்பு 27ல் வேளாண்மை, தலைப்பு 46ல் நீட் தேர்வு ஒழிப்பு, தலைப்பு 47ல் கல்விக் கடன் தள்ளுபடி என எதையும் செய்யவில்லை. தலைப்பு 50ல் தனியார் துறையில் இட ஒதுக்கீடு, தலைப்பு 57ல் சாதி வாரி கணக்கெடுப்பு, தலைப்பு 75ல் தேசிய நெடுஞ்சாலையில் சுங்க வரி நீக்கம், தலைப்பு 80ல் தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களில் இரவு சேவை என்று சுமார் 100 தலைப்புகளில் பல்வேறு வாக்குறுதிகள் அள்ளி வீசப்பட்டு மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் ஒருமுறையாவது திமுக தேர்தல் வாக்குறுதிகள் குறித்து ஏதேனும் பேசினார்களா? அல்லது சபையின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு ஆர்ப்பாட்டங்களிலாவது ஈடுபட்டார்களா? என கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், 2019ல் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளனர் என்ற விவரங்களை திமுக தலைவரும், விடியா அரசின் முதல்வருமான ஸ்டாலின் வெளியிட தயாரா? என சவால் விட்டுள்ளார்.தமிழக மக்களின் கவனத்தை எளிதில் மறக்கடித்துவிடலாம் என்ற நம்பிக்கையுடன், அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, மீண்டும் நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளிப்பது திமுகவின் பரம்பரை பழக்கம் என எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் 2006ல் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலின் போது நிலம் இல்லாத அனைவருக்கும் 2 ஏக்கர் நிலம் வழங்கப்படும் என்று கருணாநிதி அளித்த வாக்குறுதியைப் போலவே, அவரது வாரிசான ஸ்டாலின் 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, நிறைவேற்ற முடியாத நூற்றுக்கணக்கான பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றார். 2019ல் அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து 2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலின் போது, திமுக பொய் வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்றது என எதிர்க்கட்சித்தலைவர் குற்றம் சாட்டினார்.2021ல் நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது 520க்கும் மேற்பட்ட நிறைவேற்ற முடியாத பல பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, புறவாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், அவரது கூட்டாளிகளும், தமிழக மக்களை ஏமாற்றி விட்டதாக மனப்பால் குடித்து கொண்டிருக்கின்றனர் என எதிர்க்கட்சித்தலைவர் குறிப்பிட்டார். கடந்த 28 மாத கால விடிய திமுக ஆட்சியில், பல்வேறு முறைகேடுகள், ஊழல் புகார்கள், உயர்நீதிமன்ற அறிவுரைக்கு பிறகும் சிறையில் உள்ள ஒருவர் இலாகா இல்லாத அமைச்சர், ஊழல் பணமான 30 ஆயிரம் கோடியை என்ன செய்வது என்று தெரியாமல் திணறுதல் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் அனைத்து ஊடகங்களிலும் அணிவகுத்து வெளிவந்த போதும், விடியா திமுக அரசின் முதலமைச்சர் சிறிதும் நா கூச்சமின்றி 100 சதவீத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் அறிக்கை வெளியிட்டுள்ளதாக எதிர்க்கட்சித்தலைவர் கடுமையாக சாடியுள்ளார். தேர்தல் நேரத்தின் போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்…
Mediaவடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடத்தி வைத்து, பணம் பறித்த 7 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். வயிற்றுப் பிழைப்புக்காக தமிழகம் நோக்கி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கூட விடியா ஆட்சியில் போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் வால்மீகி .இவர் தனது நண்பர்களான ஜிதேந்திர குமார், வினய்குமார், பவன்குமார், அசோக்குமார், சித்தார்ய குமார் ஆகியோருடன் கடந்த 14 ஆம் தேதி பீகாரில் இருந்த வேலை தேடி கேரளாவிற்கு ரயில் மூலம் வந்துள்ளார். அப்போது பீகாரை சேர்ந்த பிபீன் குமார் என்பவர் தனது நண்பர் மூலமாக வால்மீகியைத் தொடர்பு கொண்டு வேலை வாங்கித் தருவதாகவும், உடன் இருக்கும் நண்பர்களையும் அழைத்து ஈரோடுக்கு வருமாறும் கூறியுள்ளார்.இதனை நம்பி ஈரோடு வந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்களை ஈரோடு பெரிய சேமூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிபீன் குமார், அங்கு அவர்களை அடைத்து வைத்து ஒவ்வொருவரும் பத்தாயிரம் முதல் 20 ஆயிரம் வரை பணம் வழங்கினால் மட்டுமே விடுவிப்பேன் என மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த வால்மீகி மற்றும் அவரது நண்பர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் பீகாரில் உள்ள தங்களது உறவினர்களை தொடர்பு கொண்டு தலா 10 ஆயிரம் ஜிபே மூலமாக அனுப்பி வைத்து உள்ளனர்.பணம் வந்த உடனே பிபீன் குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடத்தி வைத்து இருந்த 6 பேரையும் நன்றாக அடித்தும், வெளியே சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியும் கூறி டெம்போ டிராவலர் மூலமாக அவர்களை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விட்டுச் சென்றுள்ளனர்.இதையடுத்து சென்னையில் உள்ள தனது நண்பர்களைத் தொடர்பு கொண்டு, நடந்தவற்றைக் கூறியுள்ளார் வால்மீகி. அவர்கள் சென்னைக்கு வரக் கூறியதன் பேரில் வால்மீகியும் அவரது நண்பர்களும் சென்னை புறப்பட்டுள்ளனர். காயத்திற்கு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சென்னை போலீஸார், ஈரோடு மாவட்ட போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த ஈரோடு போலீஸார், பிபீன் குமார் மற்றும் அவனுக்கு உதவியாக இருந்த ஈரோட்டைச் சேர்ந்த தமிழ் செல்வன், சுபாஷ், பிரகாஷ், சசிகுமார், பூபாலன் ,கண்ணன் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த டெம்போ டிராவலரையும் பறிமுதல் செய்தனர்.தலைமறைவாக உள்ள இவர்களது கூட்டாளிகள் புகழேந்தி, மோதிலால் ஆகியோரை போலீஸார் தேடி வருகின்றனர். வேலை தேடி பல ஆண்டுகளுக்கு முன்னால் தமிழகம் வந்த பிபீன் குமார், இங்குள்ள நபர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு வேலை தேடி வரும் வடமாநில தொழிலாளர்களை மிரட்டி பணம் பறித்து சம்பாதிக்க முடிவு செய்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.விடியா ஆட்சியில் வயிற்றுப் பிழைப்புக்காக வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத சூழல் தமிழகத்தில் நிலவுவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

via News J : https://ift.tt/cBVodKN