News J
631 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaதிமுகவில் இருக்கும் சனாதனத்தை ஒழிக்க முடியாமல், தந்தையை போலவே விளம்பர அரசியல் செய்வதற்காக சனாதனத்தை பற்றி பேசி அரசியல் செய்து வருகிறார் வாரிசு அமைச்சர். இதுகுறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு…அனைத்து உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துதல், சேவை செய்தல், பெற்றோர்களை எப்படி மதித்து நடத்த வேண்டும், இறைவனை எவ்வாறு வணங்க வேண்டும் என போதிப்பதே, பண்டைய கலங்களில் சனாதனமாக பார்க்கப்பட்டது. ஆனால் திமுக ஆரம்பத்த நாளில் இருந்தே இதுபோன்ற கொள்கைகளை அவர்கள் பின்பற்றியது இல்லை. தன்னுடைய குடும்ப வளர்ச்சியை மட்டுமே குறியாக வைத்து திமுக தலைவராக இருந்த கருணாநிதியும், தற்போதைய தலைவராக இருக்கும் ஸ்டாலினும், புதிய தலைவராக உருவெடுத்து வரும் உதயநிதியும் செயல்படுத்தி வருகின்றனர்.பல கோடி செலவு செய்து, பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆட்சியைப் பிடித்த கையோடு தமிழக மக்களுக்கு எந்தவித நல்ல திட்டங்களையும் செயல்படுத்தாமல், ஏற்கனவே உள்ள மக்கள் நல திட்டங்களை தடுத்து நிறுத்திவிட்டு, மக்கள் மனதில் திமுக என்றாலே ஒவ்வாமை ஏற்படும் அளவிற்கான அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளனர்.நீட் தேர்வு ரத்து, இந்தியா கூட்டணி சொதப்பல்களில் இருந்து தப்பிக்க சனாதனத்தைக் கையில் எடுத்து கிளம்பியுள்ளார் உதயநிதி. ஆட்சியே போனாலும் பரவாயில்லை, சனாதனத்தை ஓழித்தே தீருவேன்னு சொல்லி அப்பா போலவே மகனும் விளம்பர அரசியலை செய்து வருகிறார்.உலகத்தையே உலுக்கிய கொரோனா எப்படி உருமாற்றம் பெற்று தன்னுடைய தாக்குதலை மேற்கொண்டதோ அதைப் போலவே திமுகவும் தேவைக்கேற்றார் போல தன்னை உருமாற்றம் செய்து உடன்பிறப்புகளையும், தமிழக மக்களையும் ஏமாற்றும். திமுகவில் நிலவும் சனாதனத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்காமல் வெற்றுக் கூப்பாடுகளை போட்டு வருகின்றனர் ஸ்டாலினும், வாரிசு அமைச்சரும். இதில் மகனைக் காப்பாற்ற அப்பா வீடியோ எல்லாம் வெளியிட்டு வருகிறார். இது அரசியல் களம், ஷூட்டிங் ஸ்பாட் அல்ல என யாராவது இவர்களுக்கு புரிய வைத்தால் நலம்…


via News J : https://ift.tt/ksj7r64
Mediaசுதந்திர போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி புகழஞ்சலி சூட்டியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சமூக ஏற்றத்தாழ்வுகளை ஒழிக்க குரல் கொடுத்தவரும், சமூக தீமையான தீண்டாமையை அழிக்க பாடுபட்டவரும், அடக்குமுறைகளுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகி இம்மானுவேல் சேகரனார் நினைவு நாளில் ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காக போராடிய அவரது தியாகத்தை இந்நாளில் போற்றி வணங்குகிறேன் என கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/Au8wyBS
Mediaசனாதனத்தை பத்தி பேசி ஊரெல்லாம் அடி வாங்குனதும். அந்த பஞ்சருக்கு டிஞ்சர் போடுறதுக்காக ஆன்மீகத்து பக்கம் வண்டிய திருப்பியிருக்காரு ஸ்டாலின்.திமுக ஆட்சிக்கு வந்ததுக்கு அப்பறம் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோயில் சொத்துக்களை மீட்டு இருக்கோம்னு ஸ்டேட்மெண்ட் குடுத்திருக்காரு. அதுமட்டுமில்லாம இறை நம்பிக்கையாளர்கள் எல்லாம் புகழ்ற மாதிரி விடியா திமுக ஆட்சி செய்துனு அவரே பெருமை பீத்தியிருக்காரு.இவ்ளோ பண்ணி என்ன பண்றதுக்கு… சமூகநீதி, சமத்துவம் எல்லாம் பேசுவாங்க… ஆனா, குறிப்பிட்ட ஒரு பிரிவைச் சேர்ந்த ஆளுங்க கோயிலுக்குள்ள போனா அவங்கள ஊர் பொதுவுல நிக்க வச்ச ஆபாச அர்ச்சனை பண்ணுவாங்க திமுக காரங்கனு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/bJMDTLN
Mediaஉங்ககிட்ட ஒரு ஆயிரம் ரூபாய் காச வாங்கறதுக்குள்ள நாங்க பட்ற பாடு இருக்கே ஐயோயையையையோ… என்று சந்தானம் காமெடி போல, புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் பெண்கள்…ஆட்சிவந்தவுடன் எப்பங்க அந்த ஆயிரம் ரூபாய் கொடுப்பீங்க என்று கேட்டால், நாங்க என்ன தேதியா சொன்னோம் என்று எகிறினார் அப்போதைய நிதியமைச்சர் பிடிஆர்.. இன்னும் கொஞ்சநாள் போய் கேட்டதும், நானா தேர்தல் அறிக்கை தயார் செஞ்சேன், என்று சொல்லி தப்பித்துக்கொண்டார் அதே பிடிஆர்.. இப்படியே ஒவ்வொரு நாளும் ஓட, ஒரு கட்டத்தில் நாங்கள் தகுதிவாய்ந்த மகளிர்க்குத்தான் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை கொடுப்போம் என்று சொல்லி, அதில் பல நூறு கண்டிஷன் போட்டு பெண்களை காண்டாக்கியது விடியா அரசு…. ஓ அப்போ எங்களுக்கு தகுதியை நீங்க தான் வரையறை செய்வீங்களா? என்றெல்லாம் வரிந்துகட்டிக்கொண்டு கொந்தளித்தனர் மகளிர்.. ஆனால் அதையெல்லாம் சட்டையே செய்யவில்லை ஸ்டாலின்..தமிழகத்தில் 3 கோடியே 2 லட்சம் ஆண் வாக்காளர்களும்,, 3 கோடியே 10 லட்சம் பெண் வாக்காளர்களும் என, ஆண்களை விட பெண் வாக்களார்களின் எண்ணிக்கை தான் அதிகம்.. இதையெல்லாம் கணக்குப்போட்டுத்தான் நாங்க உரிமைத்தொகை தருவோம் என்று பீகாரின் பிதாமகன் பிரஷாந்த் கிஷோர் வகுத்துக்கொடுத்த திட்டத்தை உளறிக்கொட்டி வாக்கு கேட்டு ஜெயித்துவிட்டு, இன்று வசமாய் சிக்கிக்கொண்டது திமுக அரசு… இதிலும் இன்று வெறும் 1 கோடி பேருக்கு மட்டும்தான் உரிமைத்தொகை வழங்கப்போகிறோம் என்று குண்டடைத்தூக்கிப்போட்டதும், ஒட்டுமொத்த மகளிரும் திமுகவை கரித்துக்கொட்டத் தொடங்கிவிட்டனர். இதில் ஹைலைட்டே என்ன வென்றால், தகுதி இல்லாததால்தான் பெண்களுக்கு உரிமைத்தொகை இல்லை என்றுவேறு சொல்லியிருக்கிறார் ஸ்டாலின்…அடேயப்பா… பெரியாரின் பேரன் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின், குடும்பத்தலைவிகளுக்கான தகுதியாக எதையெல்லாம் வைத்திருக்கிறார்? 3 கோடி பெண்வாக்காளர்களிடம் கெஞ்சிக்கெஞ்சி வாக்குக்கேட்டுவிட்டு, இன்று அதில் பாதி பெண்களுக்குகூட உரிமைத்தொகை கொடுக்காமல், 3ல் 1 பங்கு பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை கொடுப்பதெல்லாம் என்னமாதிரியான தில்லாலங்கடி வேலை? என்று எல்லோர் வீட்டுத் திண்ணையிலும், அடுப்படிகளிலும் இன்று இதே பேச்சுத்தான்..ஆக, பெண்களை ஏமாற்றி வாக்கு கேட்டுவிட்டு, இன்று எந்த முகத்தைவைத்துக்கொண்டு பெண்களின் பாதுகாவலன் திமுக என்று மார்தட்டுகிறார் ஸ்டாலின்? 3 கோடி பெண்களில் வெறும் 1 கோடி பேர்தான் “தகுதியான குடும்பத் தலைவிகளா”? மீதமிருக்கும் 2 கோடி பெண் வாக்காளர்களையும் ஏமாற்றிவிட்டு எந்த தார்மீக அடிப்படையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்?ஏற்கனவே விலைவாசி உயர்வு, ஓசி டிக்கட் விவகாரம், பெண்களுக்கு பாதுகாப்பு இன்மை என்று ஒட்டுமொத்த பெண்களின் எதிர்ப்பையும் சம்பாதித்து வைத்திருக்கும் ஸ்டாலின், இந்த உரிமைத்தொகை விவகாரத்திலும் தோற்றுவிட்டரா? ஒட்டுமொத்தத்தில், தமிழ்நாட்டு பெண்களை ஏமாற்றிவிட்டார் ஸ்டாலின் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகிறது.

via News J : https://ift.tt/fbpTDrc
Mediaசென்னையில் நுங்கம்பாக்கம் ராயப்பேட்டை தேனாம்பேட்டை அண்ணா நகர் முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளிலும் திருச்சி கோவை கரூர் நாமக்கல் புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொழில் ரீதியான தொடர்புடையவர்கள் ஆடிட்டர் சண்முகராஜ் அலுவலகத்தில் சோதனை ஆனது நடைபெற்று வருகிறது ஏற்கனவே ஜி ஸ்கொயர் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அண்ணா நகரில் வசித்து வரும் ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டில் சோதனை நடைபெற்றது இந்த நிலையில் தற்போது அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர் மேலும் ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை மேலாளர் விக்டர் மற்றும் முகப்பேரில் உள்ள பொதுப்பணித் திலகம் என்கிற பொறியாளர் வீட்டிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது.ஏற்கனவே அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தொடர்பான மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்காக உள்ள நிலையில் தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது.இது மட்டுமல்லாமல் தென் மாவட்டங்களில் உள்ள மணல் குவாரிகளிலும் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை மூன்று முறை சோதனை நடத்திருக்கிறது. இன்றுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு 90 நாட்கள் நிறைவு பெற்றுள்ளன.தற்போது ஜாமீன் மனு விசாரணைக்கு உள்ள நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அதில் கிடைக்கும் ஆவணங்களின் அடிப்படையில் மற்ற இடங்களிலும் சோதனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணாநகர் ஜி பிளாக் பகுதியில் உள்ள ஆடிட்டர் சண்முகராஜ் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

via News J : https://ift.tt/AcmHpaT
Mediaபுதையலை எதிர்பார்த்து பழங்கால இரும்பு பெட்டியை உடைத்தவர்கள் ஏமாந்துபோன சுவாரஸ்ய சம்பவம் குடியாத்தத்தில் நிகழ்ந்துள்ளது. தங்கம், வெள்ளி என்று ஏக பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில் பெட்டிக்குள் இருந்ததுதான் என்ன? வாருங்கள் பார்ப்போம்…புதையல் இருப்பதாகக் கருதி ஒரு மாசம் கழிச்சி உடைக்கப்பட்ட பழையகால இரும்புப் பெட்டியில இருந்ததெல்லாம் இந்த சுதேசமித்திரன் நாளிதழும், ஓரிரண்டு சில்லறை நாணயங்களும்தான்…வேலூர் மாவட்டம் குடியாத்தத்துல கடந்த ஆகஸ்ட் மாசம், பழைய இரும்புப் பெட்டியில புதையல் இருக்கிறதா தகவல் பரவி எல்லாரையும் பரபரப்பாக்குச்சு. சந்தைப்பேட்டைய சேர்ந்த முகமது இம்தியாஸ், தன்கிட்ட 25 வருஷமா இருந்த ஆயிரம் கிலோ எடை கொண்ட இரும்பு பெட்டிய குடியாத்தம் மசூதிக்கு கொடுக்கிறதுக்காக கொண்டு வந்தாரு… அந்த பழைய இரும்பு பெட்டிதான் பரபரப்ப ஏற்படுத்திச்சு… அந்த பெட்டியில தங்க நகை இருக்கலாம்.. வெள்ளி நகை இருக்கலாம்னுலாம் ஏகத்துக்கும் புதையல் தகவல் காட்டுத்தீயாய் பரவ, குடியாத்தம் போலீசாரும், வருவாய் கோட்டாட்சியரும் அங்க வந்து அந்த பெட்டிய உடைக்க முயற்சி எடுத்தாங்க.ரொம்பப் போராடியும் அவங்களால பெட்டிய உடைக்க முடியாததால ஒருகட்டத்துல, ஜே.சி.பி எந்திரம் மூலமா அந்த பெட்டிய கொண்டு போய் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்துல ஒரு அறையில வச்சி, சீல் வச்சிட்டாங்க.கிட்டத்தட்ட ஒரு மாசமா புதையல காத்த பூதம் மாதிரி அந்த இரும்பு பெட்டி இருந்த அறைய பாதுகாப்பா பாத்துக்கிட்டு இருந்தாங்க. இந்த நிலையில அந்தப் பெட்டிய உடைக்கணும்னு முடிவு பண்ணி திங்கட்கிழமை, குடியாத்தம் வட்டாட்சியர் மற்றும் போலீஸ்காரங்க முன்னாடி அந்த பெட்டிய உடைச்சிருக்காங்க.கடைசியா இரும்புப் பெட்டிய உடைச்சிப் பார்த்தா புதையல் இருக்கும்னு நம்பிக்கையோட இருந்தவங்களுக்கு பெரிய ஷாக்.. உள்ள உருந்தது என்னவோ, பழையகால சுதேசமித்திரன் பேப்பர் ஒண்ணும், 3 ரூபா 50 காசு சில்லறையும்தான்.இப்ப அந்த புதையல் ஆசை புஷ்வானமாகிப் போக, வதந்திக்கும் முற்றுப்புள்ளி விழுந்துருக்கு… உடைக்கப்பட்ட இரும்பு பெட்டிய பழையபடியும் மசூதி நிர்வாகிகள்கிட்ட ஒப்படைக்கப்படும்னு வருவாய்துறையினர் தெரிவிச்சிருக்காங்க…ஹூம்… இல்லாத புதையலுக்கு எத்தன அக்கப்போரு!

via News J : https://ift.tt/Ger4QuO
Mediaபெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற அரசு தான் விடியா அரசு என பேசியுள்ளார் வாரிசு அமைச்சர் உதயநிதி. மேடையும், மைக்கும் கிடைத்தால் போதும் உண்மையை மறைத்து, என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்ற தனது தாத்தா, அப்பாவின் வழித்தடத்திலேயே உதயநிதியும் பயணிக்கிறார் போல…கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கட்சி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் வாரிசு அமைச்சர் உதயநிதி பங்கேற்றார். மேடைக்காகவும், மைக்கிற்காகவுமே காத்திருந்ததுபோல மேடை ஏறியதும் அள்ளிவிடத் துவங்கினார் உதயநிதி. திமுக ஆட்சியில் தான் ஆணும், பெண்ணும் சமமாக நடத்தப்பட்டதாகவும், மகளிருக்கு சம உரிமை வழங்கும் பல திட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக அள்ளிவிட்டார். மகளிருக்கு இலவச பேருந்துகள், மகளிர் உரிமைத் தொகை திட்டம் என செயல்படாத திட்டங்கள் குறித்து பெருமை பாராட்டிக் கொண்டிருந்தார்.மாங்கு மாங்கென பெருமை பாராட்டும் திட்டங்களைத் தான் ஓசி என திமுக அமைச்சர்களே கிண்டல் அடித்ததை மறந்துவிட்டார் போல உதயநிதி. பெண்களுக்கு சம உரிமை, பாதுகாப்பு என்கிறார். ஆனால், விடியா ஆட்சியில் கனிமொழி பங்கேற்ற நிகழ்ச்சியிலேயே பெண் போலீஸுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது, கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விடியா திமுகவின் பெண் நிர்வாகி ஒருவர் மேடையிலேயே பேசினாரே அதையெல்லாம் மறந்துவிட்டாரா உதயநிதி. இவ்வளவு பெண் உரிமை, சம உரிமை பேசும் உதயநிதியால், கனிமொழிக்கு கட்சியில் கொடுக்கப்பட்டுள்ள இடம் குறித்து வெளிப்படையாக பேச முடியுமா? அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு என பார்த்து பார்த்து செய்த முத்தான திட்டங்களை முடக்கியதைத் தவிர, விடியா ஆட்சியில் எவ்வித சாதனைகளையும் திமுக செய்யவில்லை என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


via News J : https://ift.tt/AbokGZa
Mediaசாதிப் பெயரை சொல்லி திமுக பேரூராட்சி மன்றத் தலைவர் திட்டியதால், தூய்மைப் பணியாளர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பேரூராட்சி மன்றத் தலைவர் என்பதால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக உயிரிழந்தவரின் மனைவி குற்றம்சாட்டுகிறார்… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர் சுடலை மாடன். 25 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றிய இவருக்கு முறைப்படி பதவி உயர்வு கடந்த ஆண்டு கிடைத்துள்ளது. சுடலை மாடனுக்கு கிடைத்த பதவி உயர்வை அளிப்பதற்கு, உடன்குடி பேரூராட்சி தலைவராக உள்ள ஹிமேரா ரமீஷ் பாத்திமா, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பதவி உயர்வு அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க முடியாது என சுடலை மாடன் தெரிவித்தபோது, அவரை சாதிய பெயரை சொல்லி, பேரூராட்சி தலைவர், முன்னாள் தலைவர், செயல் அலுவலர் பாபு ஆகியோர் தொடர்ந்து திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த சுடலைமாடன், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம், பதவி உயர்வு வழங்க லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதோடு, பலர் முன் சாதி பெயரை சொல்லி திட்டிய உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹிமேரா ரமீஷ் பாத்திமா, அவரது மாமியார் முன்னாள் தலைவர் கல்சியா, உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் பாபு ஆகியோர்தான் காரணம் என கூறி இருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திமுக பேரூராட்சி தலைவராக உள்ள ஹிமேரா ரமீஷ் பாத்திமா உள்ளிட்டோர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.இது குறித்து தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்த விசாரணை சூடு பிடித்து உள்ளது. மேலும் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திலும் பாதிக்கப்பட்டோர், தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இது தொடர்பான விசாரணை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டது.தூய்மைப் பணியாளரின் தற்கொலைக்கு காரணமான பேரூராட்சி தலைவர் மீதான புகாரை விசாரிக்க விடியா அரசின் ஏவல்துறை தயக்கம் காட்டுவது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.


via News J : https://ift.tt/0owc3Ap
Mediaஒரு பக்கம் அரசு மருத்துவமனைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவிக் கொண்டிருக்க, மருந்துகளை சரிவர விநியோகிக்காமல் காலாவதியாக்கி குப்பை தொட்டியில் போடும் விடியா அரசின் அலட்சியத்தை தஞ்சை அருகே குப்பைமேட்டில் கிடந்த மருந்து பாட்டில்கள் அம்பலமாக்கி உள்ளன.அரசு மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய அயர்ன் அண்ட் போலிக் ஆசிட் சிரப் என்னும் டானிக் பாட்டில்கள் குப்பை மேட்டில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில்தான், தமிழ்நாடு அரசு அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நோயாளிகளுக்கு வழங்குவதற்காக விநியோகிக்கப்பட்ட அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக் பாட்டில்கள் ஆயிரம் பாட்டில்கள் கொட்டப்பட்டுள்ளன.இந்த டானிக் ஊட்டசத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு இந்த மருந்து பாட்டில்கள் காலாவதியாகி உள்ளது. வழக்கமாக ஒரு மருத்துவமனையில், குறிப்பிட்ட மருந்து அதிகமாக இருப்பு இருந்தால் அதனை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். அல்லது மருத்துவமனைகளுக்கு மருந்துகளை சப்ளை செய்யும், அரசு மருந்து கிடங்கு நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் அவை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படுவதோடு, மருந்துகள் காலாவதியாகி வீணாக்கப்படுவதும் குறைக்கப்படும்.
ஆனால் இது எதனையும் கவனத்தில் கொள்ளாமல் மக்கள் வரிப்பணத்தில் வாங்கப்பட்ட இருந்த மருந்து பாட்டில்கள் காலாவதியை காரணம் காட்டி கொட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஊட்டச்சத்துக்கான டானிக் கிடைக்காமல் கூறப்படும் நிலையில் இதுபோன்று மருந்துகளை காலாவதியாகும் வரை வைத்திருந்து வீணடிப்பது என்பது முற்றிலும் அரசு மருத்துவமனை நிர்வாகத்தின் அலட்சியம் என்றும், அதனை கண்காணிக்க வேண்டிய சுகாதாரத்துறையின் அலட்சியம் என்றும் சமூக ஆர்வலர்கள் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.


via News J : https://ift.tt/doaiYjy
Media7 புள்ளி 5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்து இந்தியாவுக்கே வழிகாட்டுதலாக விளங்கக்கூடிய சமூக நீதியினை தமிழகத்துக்கு பெற்றுத்தந்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி என்றும், 5 முறை ஆட்சியில் இருந்த திமுக, சமூகநீதிக்காக ஆற்றிய பங்களிப்பை மக்களிடத்தில் விவாதிக்க தயாரா என, சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

via News J : https://ift.tt/6UPu71O
Mediaஆசியக் கோப்பை கிரிக்கெட் பொட்டியானது தற்போது நடைபெற்று வரும் நிலையில், அப்போட்டி சூப்பர் 4 கட்டத்தை அடைந்துள்ளது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய நான்கு அணிகள் இந்த சூப்பர் 4 போட்டிகளில் களமிறங்கியுள்ளன. இப்போட்டிகளில் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் பலப் பரிட்சை மேற்கொண்டன. இந்தப் போட்டி மழையின் காரணமாக இரண்டு நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட முடிவில் ரோகித் சர்மாவும் சுப்மன் கில்லும் அரை சதம் எடுத்த கையோடு தங்களது விக்கெட்டினை இழந்திருந்தனர். அப்போது மழைக் குறுக்கிட்டதால் ஆட்டம் அடுத்த நாளான நேற்று தொடங்கப்பட்டது. 25.5 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் விராட் கோலியும்  கே.எல். ராகுலும் இணைந்து 233 ரன்களை குவித்திருந்தனர். இருவரும் சதம் அடித்திருந்தனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி 122 ரன்கள் எடுத்து மிரட்டியிருந்தார். இறுதி ஓவரின் இறுதி பந்தில் ஒரு சிக்சர் அடித்து அபாரமாகவும் பினிஷிங் செய்திருந்தார்.ICC World Cup 2023: Virat Kohli To Play ICC T20 World Cup 2024? Former Indian Coach Delivers Massive Updateபிறகு பாகிஸ்தான் அணியை 132 ரன்களுக்கு ஆல் அவுட் செய்தது இந்தியா. பந்துவீச்சில் முக்கியமாக இந்தியாவின் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகள் கைப்பற்றியிருந்தார். இதனைத் தான் பேசுபொருளாக மாற்றியுள்ளார் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர், சர்ச்சைக்கு பெயர்போன கவுதம் கம்பீர். அவர் கூறியதாவது, இந்தப் போட்டியைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு ஆட்டநாயகன் விருதினைக் கொடுத்திருக்கக் கூடாது. மாறாக குல்தீப் யாதவிற்கு கொடுத்திருக்க வேண்டும். இந்த பிட்ச் ஸ்பின் பவுலர்களுக்கு சிரமத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்திருக்கிறது. அப்படி சிரமமாக இருந்தும் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் குல்தீப் யாதவ். பாகிஸ்தான் பேட்டர்கள் ஸ்பின் பவுலர்களை லாவகமாக கையாளக்கூடியவர்கள். அவர்களுக்கு எதிராக பந்துவீசி விக்கெட் வீழ்த்தியிருப்பது ஒருவகை அசாத்திய திறமை. இந்த தருணத்தில் குல்தீப் யாதவிற்கு ஆட்ட நாயகன் விருதினைக் கொடுத்திருந்தால், ஒரு பெரிய அணிக்கு எதிராக விக்கெட் வீழ்த்தியதற்கு அவருக்கு கிடைத்திருக்கும் உத்வேகமாக இந்த விருதி அமைந்திருக்கும் என்று கம்பீர் விமர்சனம் செய்துள்ளார்.தோனி, கோலி என்றாலே கம்பீருக்கு ஆகாது என்பது காலம் காலமாக கிரிக்கெட் பார்த்து வரும் ரசிகர்களுக்கே தெரியும். தற்போது இப்படி கருத்து தெரிவித்திருப்பது என்பது, கம்பீருக்கு புதிது அல்ல. இருந்தாலும் நமது நெட்டிசன்கள் அவரை சும்மா விடுவார்களா என்ன? விராட் கோலி போன்று ரசிகர் படையை அதிகம் வைத்திருக்கும் ஒரு கிரிக்கெட் நட்சத்திரத்தை பற்றி தவறாகவோ, அவதூறாகவோ அல்லது அவரது திறமையை கேள்விக்குட்படுத்தும் வகையில் பேசினாலோ அவ்வளவுதான். இணையமே பரபர என்று பத்திக் கொண்டு எரியும். அப்படி பத்தி எரியும் படியான வேலையைத் தான் தற்போது கம்பீர் பார்த்துள்ளார்.

via News J : https://ift.tt/Ks4Xi6j
Mediaதமிழகத்தில் பொங்கல் தொகுப்பில் ஆயிரத்து 296 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்டதுடன், கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கு மீண்டும் ஊட்டச்சத்து பெட்டக டெண்டர் வழங்கி,ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக திகழும் திமுக எனும் திராவிட மாடல் அரசு, ஊழல் நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கப்பட்ட பின்னணி குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.கருப்பு பட்டியலில் உள்ள நிறுவனத்திற்கே ஊட்டச்சத்து பெட்டக டெண்டரை வழங்கிய திமுக அரசு, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பொங்கல் தொகுப்பு என்ற பெயரில் 21 பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போது ரேசன் கடைகள் மூலமாக வழங்கப்பட்ட பொருட்கள் குறித்து எழுந்த சர்ச்சை இன்னும் அடங்கவில்லை. அப்படி என்ன நடந்தது என்றால் அரிசியில் வண்டு, புளுத்துப்போன பருப்பு, உருகிய வெல்லம், கருகிய கரும்பு, புளியில் பல்லி என மக்கள் வஞ்சிக்கப்பட்டனர். புளியில் பல்லி இருந்தது குறித்து கேள்வி எழுப்பிய திருத்தணி நந்தன் மீது போடப்பட்ட பொய் வழக்கால், அவரது மகன் ஐடி நிறுவன ஊழியர் குப்புசாமி, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், பொங்கல் தொகுப்பில் ஆயிரத்து 296 கோடி ரூபாய் முறைகேடு செய்தது அம்பலமான நிலையில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.ஆனாலும், முறைகேட்டில் ஈடுபட்டு கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட்ட அதே நிறுவனத்திற்கே, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கக்கூடிய ஊட்டச்சத்து பெட்டகத்திற்கான ஹெல்த் மிக்ஸ், தாய் சேய் நல பெட்டகத்திற்கான ஊட்டச்சத்து பெட்டக ஒப்பந்தத்தை தற்போது விடியா அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. மோசடி செய்த நிறுவனத்திற்கு திமுக அரசு எந்த ஆதாயத்திற்காக மீண்டும் ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. குழந்தை பிறப்பு மற்றும் 10 மாத கரு சுமத்தல் என்பது மிகப்பெரிய வரம் என்பதை உணர்ந்து தான், புரட்சித்தலைவி ஜெயலலிதா மற்றும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆகியோரால் அர்ப்பணிப்போடு தரமான பொருட்கள் வழங்கப்பட்டது. ஆனால் ஊழல் நிறுவனத்திற்கே டெண்டர் வழங்கும் விடியா திமுக அரசு, அடுத்த தலைமுறையை உருவாக்கும் கர்ப்பிணி பெண்களின் நலனில் அக்கறை இல்லாமல் போனது ஏன்? என சமூக ஆர்வலர்கள் பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.


via News J : https://ift.tt/Tn43Yfy
Mediaபுது மெகா சீரியலே எடுக்கலாம் என்னும் அளவுக்கு கன்னித்தீவுக்கதையாகிப்போனது இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலப்பறைகள்… கைது செய்யப்பட்டு 90 நாட்களைக் கடந்தும் இன்னும் இன்னும் சோதனை மேல் சோதனை துரத்துகிறது செந்தில்பாலாஜியை…அட அவருதான் புழல் சிறையில் ஹாயாக இருக்கிறாரே என்று கூட நீங்கள் நினைக்கலாம்.. ஆனால், இன்று சென்னை, புதுக்கோட்டை உள்பட பல இடங்களில் ரெய்டு நடத்தி, மீண்டும் தன் சாட்டையை சுழற்றியிருக்கிறது அமலாக்கத்துறை… அதிலும் செல்போனில் ஃபோட்டோவை வைத்துக்கொண்டு நுங்கம்பாக்கம் தெருக்களில், இவரைத் தெரியுமா என்று கேட்டு, அவர் வீட்டைத் தேடித் தேடிச் சென்று ரெய்டு செய்கிறது அமலாக்கத்துறை.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே என்று செந்தில்பாலாஜியே ஆடித்தான் போயிருக்கிறார் …சரியாக 3 மாதங்களுக்கு முன்பு செந்தில்பாலாஜி வீடு,அவர் சகோதரர் வீடு, அலுவலகங்கள் என்று நடந்த சோதனை, தலைமைச்செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அமைச்சர் அறை வரை நீண்டது.. என்னென்னமோ ஆதாரங்கள் எல்லாம் கிடைத்த நிலையில், கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி, மருத்துவமனையில் தஞ்சம் புகுந்து பின்னர் புழல் சிறையில் தற்போது வாசம் செய்து வருகிறார்… அதுவும் இலாகா இல்லாத மந்திரியாக அரசுப் பணத்தையும் சம்பளமாக வாங்கிக்கொண்டு….இந்தச்சூழலில்தான், பல்வேறு மர்ம முடிச்சுக்கள் அவரைச்சுற்றி வந்தன… புழல் சிறையில் தனி சாம்ராஜ்யம் நடத்துவது முதல், பைனாப்பிள் கேசரி சாப்பிடுவதுவரை பேசுபொருளானது… அட இதுக்கு இல்லையாப்பா ஒரு என்டு என்று அவரே கதறும் அளவுக்கு நெறுக்கப்பட்டார் .. அந்த விசாரணை நெருக்கத்தால் நொறுங்கிப்போனவர் என்னசெய்வதென்றே தெரியாமல் வாடிப்போய் இருக்கிறார் போல என்று சமீபத்தில் அவர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, உச் கொட்டினார்கள் அவரின் ஆதரவாளர்கள்..ஆனால் எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாருப்பா இவரு … ரொம்பபபபப நல்லவரா இருப்பாரோ என்று யோசித்தபடியே, நீ எப்படி வேணாலும்போல, ஆனா, என்னைய எப்டியாச்சும் காப்பாத்தீருப்பா என்னும் வடிவேலு டயலாக் போல கணக்குப்போட்டுக்கொண்டிருந்த திமுகவினருக்கு தற்போது அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கிறாரோ செந்தில்பாலாஜி என்ற சந்தேகத்தை கிளப்பியிருக்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்…அதாவது, அமலாக்கத்துறை விசாரணையில், தான்செய்த பல ஊழல்களையும் ஒப்புக்கொண்டதோடு, திமுக ஆட்சியில் டாஸ்மாக் அமைச்சராக இருந்தபோது அவர் செய்த தில்லாலங்கடிகளையும் சொல்லிவிட்டாரோ என்ற அச்சத்தை திமுகவின் மேலிடத்திற்கு கொடுத்திருக்கிறது இந்த ரெய்டு…ஆக, செந்தில்பாலாஜியை விடாது துரத்தும் ரெய்டால் கதிகலங்கியிருப்பது செந்தில்பாலாஜி மட்டும்தானா? அல்லது ஸ்டாலின் குடும்பமா? அல்லது ஒட்டுமொத்த திமுகவுமா? ஒருவேளை செந்தில்பாலாஜி, திமுக செய்த ஊழல்களை பட்டியலிட்டிருந்தால், என்னவெல்லாம் நடக்கும்? இன்னும் யார் யார் வீட்டுக்கு சென்று கதவைத் தட்டப்போகிறதோ அமலாக்கத்துறை என்ற அச்சத்தில் இருப்பது யார்? சிறையில் இருக்கும் செந்தில்பாலாஜி வாய்திறக்கும் நாளில் திமுக ஆட்சி வீட்டுக்குப்போவது மட்டும் உறுதி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

via News J : https://ift.tt/HJvLxc4
Mediaஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றானது தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய அணியும் இலங்கை அணியும் நேற்று மோதின. முன் தினம் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஓய்வே இல்லாமல், வெற்றி உற்சாகத்துடன் இலங்கையை எதிர்கொண்டது. ஒரு பெரிய ஸ்கோரினை இந்திய அணி எட்டிப் பிடிக்கும் என்று நினைக்கையில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இலங்கையின் இளம் சுழல் துனித் வெல்லாலகே தான்.யார் இந்த வெல்லாலகே?Who Is Dunith Wellalage, The 20-Year-Old Sri Lanka Left-Arm Spinner Who Could Take The World Cup By Storm?இருபது வயதே நிறைந்த துனித் வெல்லாலகே இலங்கை அணியில் ஒரு புதுமுகம். ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 13 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் 19 வயதிற்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தியுள்ளார். அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஐந்து விக்கெட்டுகள் எடுத்து, ஆட்ட நாயகன் விருதும் பெற்றுள்ளார். சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றி பெறவும் செய்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த இலங்கையின் முதல் கேப்டன் வெல்லாலகே தான்.இலங்கையின் எதிர்கால தூண்தற்போது இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தாலும், பயத்த காமிச்சாட்டான் பரமா” என்பது போல, ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் இந்த இளம் சுழல். ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா என்று இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பையே காலி செய்துவிட்டார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவரை அஜந்தா மெண்டிசின் நிழலாக கருதுகிறார்கள். முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், அகிலா தனஞ்செயா-விற்கு பிறகு இலங்கையின் தூணாகவும் எதிர்காலமாகவும் வெல்லாலகே இருப்பார் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

via News J : https://ift.tt/ym5IKQN
Mediaவிநாயகர் சதுர்த்திக்காக புதுச்சேரி அருகே விதவிதமான வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…நாடு முழுவதும் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் தயாராகி வரும் நிலையில், கொண்டாட்டத்துக்கு நாங்களும் தயார் என விநாயகர் சிலைகளும் தயாராகி வருகின்றன. புதுச்சேரியை ஓட்டியுள்ள தமிழக பகுதியான பட்டானூரிலும் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்த சிலைகளை உருவாக்கி இறுதிவடிவம் கொடுத்து வருகிறார் கைவினைக் கலைஞர் ரவிச்சந்திரன். இவர் கடந்த 33 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலான மூலப்பொருட்களைக் கொண்டும், நீர் வண்ணங்களை பயன்படுத்தியும் இந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்த சிலைகள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் ஆர்டரின் பேரில் அனுப்பி வைக்கப்படுகின்றன.பல்வேறு வகைகளிலும், 5 முதல் பல்வேறு அடி உயரத்திலும் இங்கு விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.நீர்வண்ணத்தை பயன்படுத்துவதால் விநாயகரை நீர் நிலைகளில் விசர்ஜனம் செய்யும்போது எவ்வித பாதிப்பும் இல்லை என்கிறார், 25 ஆண்டாக விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஊழியர் குமார்.கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுமார் 2000 சிலைகள் ஆர்டர் கிடைந்துள்ளதாக சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விழாக்கள் என்பவை மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடியவை… விழாவுக்காக விநாயகர் சிலைகளும், விநாயகருக்காக விழாவும் தயாராக உள்ளன.


via News J : https://ift.tt/XZUVGui
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/eps-ari.jpg">Media</a>விடியா திமுக ஆட்சியில் தமிழக காவல்துறை முற்றிலும் செயலிழந்துவிட்டதாக குற்றம்சாட்டி உள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சிக் காலத்தைப்போல் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த தெரியாத பொம்மை முதல்வர் ஸ்டாலினுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக உளவுத்துறை கடந்த 28 மாத விடியா திமுக ஆட்சியில், முற்றிலும்
செயலிழந்துவிட்டதால், குற்றங்கள் பெருகி மக்களை குலைநடுங்க வைத்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.முன்விரோதக் கொலைகள், ஆதாயக் கொலைகள், வெடிகுண்டு வீச்சு, பழிக்குப் பழி தாக்குதலில் ஈடுபடும் ரவுடிகளின் அராஜகங்கள் நாள்தோறும் நடைபெற்று வரும் நிலையில், பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினும், அவரது மகனும், விளையாட்டுத்
துறை மந்திரியுமான உதயநிதியும், மக்களிடம் ஏதேதோ பேசி, அவர்களைக் குழப்பி திசை திருப்பி வருவதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.தமிழகத்தில் அதிமுக ஆட்சி காலங்களில், சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், வரும் முன் நடவடிக்கை எடுப்பதிலும் சுதந்திரமாக காவல் துறை செயல்பட்டு வந்ததாக குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, விடியா திமுக அரசு பொறுப்பேற்ற இந்த 28 மாத காலத்தில், தனது சுய முகவரியை இழந்து, ஆளும் கட்சியின் கைப் பாவையாக மாறி, தமிழகத்தில் தற்போது நிகழும் பல்வேறு சட்டம்-ஒழுங்கு சீர்கேடு நிகழ்வுகளை முன்னதாகவே அறிந்தும் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்காமல், வேடிக்கை பார்த்து வரும் நிலை மிகவும் வெட்கக்கேடானது என கடுமையாக சாடியுள்ளார்.புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் ஆட்சியில், அண்டை நாடான இலங்கையில் குண்டு வெடிப்பு நிகழ உள்ளதை முன்னதாகவே கண்டறிந்து, மத்திய அரசு மூலம் இலங்கைக்கு தமிழக நுண்ணறிவுப் பிரிவு அறிவுரை வழங்கியதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். ஆனால் விடியா ஆட்சியில் கோவை கார் குண்டு வெடிப்பு; கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம்; சுமார் 12 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் கள்ளச் சாராய சாவு என்று, விடியா திமுக அரசின் காவல் துறை சறுக்கிய நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம் என கடுமையாக விமர்சித்துள்ளார்.விடியா ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றும் காவல் துறையினர் ஆங்காங்கே உள்ள ஆளும் கட்சியினரின் மிரட்டலுக்கு அடிபணிவதால், தீவிரவாதிகள், கடத்தல்காரர்கள், கொலைகாரர்கள் போன்ற சமூக விரோதிகளின் செயல்களை முன்கூட்டியே கண்காணித்து, உண்மைத் தகவல்கள் அரசுக்கு வருவதில்லை என்ற செய்திகள் தெரிய வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.மேலும், விடியா திமுக அரசின் காவல் துறை, சட்டம்-ஒழுங்கை பேணுவதை விட்டுவிட்டு, நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலினின் ஏவல் துறையாக மாறி, தமிழகத்தில் எதிர்க்கட்சிகளைப் பிரிப்பது எப்படி என்பதிலும், விடியா திமுக அரசை சமூக வலைதளங்களில் விமர்சிப்பவர்கள் மீது குற்றச்சாட்டுக்களைப் புனைவதிலும் மட்டுமே ஈடுபட்டு வருவது மிகுந்த வெட்கக்கேடானது என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.கடந்த வாரம், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொலை வெறிக் கும்பல் ஒன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரை கொலை செய்த கொடூரம் நடந்துள்ளதாக குறிப்பிட்ட எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அதே போல், சென்னை பட்டினப்பாக்கத்தில் பட்டப் பகலில் ஆற்காடு சுரேஷ் என்பவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் மாநிலம் முழுவதும் சமூக விரோதிகளின் கொட்டம் அதிகரித்துள்ளதால் காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.விடியா திமுக ஆட்சியில், தமிழகத்தில் போதைப் பொருட்களின் பிடியில் இளைஞர்களும், கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என, பல்வேறு குற்றங்கள் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.மேலும் அதிமுக பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க, மதுரை கிழை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் காவல்துறை உரிய பாதுகாப்பு வழக்காமலும், போக்குவரத்து நெரிசலை சீர் செய்யாமலும் கைகட்டு வேடிக்கை பார்த்ததாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.இதே போன்ற நிலைமைதான் சென்னை பனையூர் பகுதியில் நடைபெற்ற ஏ.ஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சியிலும் நடைபெற்றது விடியா திமுக அரசின் காவல் துறையினுடைய தோல்வியைக் காட்டுவதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சித்துள்ளார்.அதிமுக ஆட்சிக் காலங்களில் காவல் துறைக்கு சுதந்திரம் வழங்கி, சட்டத்தின் ஆட்சியை நிலை நிறுத்தியது…
Mediaஅதிமுக ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட திட்டங்களை முடக்கிய விடியா திமுக அரசுக்கு மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.மீனவர்களுக்கு துரோகம் இழைத்துள்ள விடியா அரசை கண்டித்து, விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான மீனவர்கள், பொதுமக்கள் பங்கேற்று விடியா அரசுக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பினர். கூட்டத்தில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம், 2020-ல் அதிமுக ஆட்சியின் போது நிதி ஒதுக்கப்பட்டு தொடங்கப்பட்ட மீன்பிடி துறைமுகத் திட்டத்தை விடியா அரசு முடக்கிவிட்டதாக குற்றம்சாட்டினார். அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையால் 50 ஆயிரம் மீனவர் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.தொடர்ந்து பேசிய அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம், கருணாநிதியும், ஸ்டாலினும் வசனம் பேசியே மக்களை ஏமாற்றி விட்டதாக சாடிய அவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் கட்சத்தீவு தாரை வார்க்கப்பட்டதாக தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தையும் விடியா அரசு முடக்கிவிட்டதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டினார். விழுப்புரம், கடலூர் மாவட்டங்களுக்கு அதிமுக கொண்டுவந்த அனைத்து திட்டங்களையும் விடியா அரசு ரத்து செய்து மக்களை வஞ்சித்துவிட்டதாகவும் அவர் சாடினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், வானூர் சட்டமன்ற உறுப்பினர் சக்கரபாணி, மரக்காணம் ஒன்றிய செயலாளர் ரவிவர்மன்,மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழ்செல்வி, ஒன்றிய கழக செயலாளர்கள், பேரூராட்சி செயலாளர்கள், விழுப்புரம், திண்டிவனம் நகர செயலாளர்கள்,மகளிரணி, மாணவரணி உள்ளிட்ட பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கழக தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

via News J : https://ift.tt/nc4RPFO
Mediaஆல்ரெடி சனாதனம் பத்தி பேசி மம்தா திதி, கெஜ்ரிவால் மொதக்கொண்டு உதயநிதிக்கு பாடம் எடுத்துட்டு இருக்காங்க. உங்க பையன கண்ட்ரோல் பண்ணி வைங்கனு இந்தியா கூட்டணி கட்சித் தலைவருங்க எல்லாம் ஸ்டாலினுக்கு அட்வைஸ் பண்ற லெவலுக்கு கொண்டு வந்துட்டாரு உதயநிதி. அப்போ இருந்து இண்டியா கூட்டணிங்குற வார்த்தையே உதயநிதி வாய்ல இருந்து வர மாட்டேங்குது. இப்போ கூட ஒரு கூட்டத்துல பேசுன உதயநிதி, “தமிழகத்தை வெல்லலாம் என சிலர் நினைக்கிறாங்க. இந்தியாவுல எந்த மாநிலத்துல வேணாம் அவங்க ஜெயிக்கலாம். ஆனா, தமிழகத்துல வலுவா ஒரு கூட்டணி அமைஞ்சிருக்கு. அந்த கூட்டணியோட கேப்டன் ஸ்டாலின்னு” மாநில அரசியல்குள்ள மட்டும் தலைய விட்டுட்டு இருக்காரு. தமிழக கூட்டணியோட கேப்டன் ஸ்டாலின்னு பேசியிருக்கீங்களே… இந்த விஷயம் கூட்டணி கட்சிக்காரங்களுக்குத் தெரியுமானு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…


via News J : https://ift.tt/UTpS3aG
Mediaதமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலோ, இந்தியா முழுவதும் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலோ முதல் ஆளாக தேர்தல் கூட்டணி தொடங்கி, தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல் என அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டு எதிர்க்கட்சியினரை அலற விடுபவர்தான் புரட்சித்தலைவி ஜெயலலிதா. அவரது வழியில் வெற்றி நடைபோடும் அதிமுக பொதுச்செயலாளர் புரட்சி தமிழர் எடப்பாடி கே.பழனிசாமியும், வரக்கூடிய 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னெடுப்புகளை என்றோ தொடங்கி விட்டார்.தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுகதான் தலைமை வகிக்கும் என்று கடந்த பல மாதங்களுக்கு முன்பே அதிரடியாக அறிவித்தவர்தான் எடப்பாடி கே.பழனிசாமி. வெறும் அறிவிப்போடு நின்றுவிடாமல், அதிமுகவுக்குத் தான் அந்த தகுதி உள்ளதையும் தனது செயல்பாடுகளின் மூலம் மக்கள் மன்றத்தில் வெளிப்படுத்தி வருகிறார்.ஒன்றரை கோடியாக இருந்த அதிமுக தொண்டர்களின் எண்ணிக்கை இன்று 2கோடியையும் தாண்டி எகிறி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையின் காரணமாக அதிமுக உலக அரசியல் அரங்கில் 7வது மிகப்பெரும் கட்சியாக வளர்ந்துள்ளது. எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, மதுரையில் நடத்தப்பட்ட மாபெரும் எழுச்சி மாநாடு அதிமுக தொண்டர்களை மிகப்பெரிய உற்சாகத்தில் ஆழ்த்தி வெற்றி நமதே என்னும் எண்ணத்தில், அவர்களை நாடாளுமன்ற தேர்தலில் தீவிர களப்பணி ஆற்றும் ஊக்கத்தையும் அளித்திருக்கிறது.அதிமுகவின் இந்த எழுச்சி முகம் தெரிந்ததால்தான், கூட்டணிக் கட்சியில் அதிமுகவுக்கு என பிரத்யேக மரியாதையை தேசிய ஜனநாயகக் கூட்டணி வழங்கி வருகிறது. பிரதமர் மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை தன்னருகே அழைத்து அமர வைத்ததும் அதன் எதிரொலிதான்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியின் டெல்லி பயணம் என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக மட்டுமல்ல, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தில் விரைவில் தமிழகத்தில் வரக்கூடிய சட்டமன்ற தேர்தலுக்கும் அதிமுக தயாராக உள்ளது என்பதையே கட்டியம் கூறியிருக்கிறது.இப்படி தேர்தலுக்காக அதிமுகவை இப்போதே தயாராக வைத்து, புரட்சித்தலைவி போலவே, முதல் ஆளாக அதிமுகவை களத்திற்கு அழைத்து வந்திருக்கும் எடப்பாடி கே.பழனிசாமி உண்மையிலேயே புரட்சித்தமிழர்தான் என்பது அரசியல் நோக்கர்களின் பதிலாக உள்ளது.

via News J : https://ift.tt/It0zlBX
Mediaநாகையில நடந்த புத்தகக் கண்காட்சியில ஸ்டால் ஒண்ண திறந்து வைக்குறதுக்குள்ள பெரும்பாடு பட்டிருக்காரு அமைச்சர் ரகுபதி… ஒண்ணுக்கு மூணு பேர் சேர்ந்து போராடி ரிப்பன வெட்டுனது, இந்த விடியா ஆட்சி எவ்வளவு ஷார்ப்பா இருக்குன்னு சந்தி சிரிக்க வச்சிருக்கு…ஒரு புறாவுக்கு அக்கப்போறான்னு இம்சை அரசன்ல கேட்டமாதிரி, ஒரு ரிப்பன வெட்டுறதுக்கு இவ்வளவு அக்கப்போரான்னு அமைச்சர்கள் செஞ்ச அலப்பறைய பார்த்து கேள்வி எழுப்பியிருக்காக இந்த வீடியோவ பார்த்த இணையவாசிகள்.நாகப்பட்டினத்துல இந்த வருஷம் இரண்டாவது புத்தகத் திருவிழா 10 நாள் நடந்துச்சு. போன வருஷம் புதுசா புத்தகக் கண்காட்சி தொடங்குன ஷோக்குல விளம்பரம் அது இதுன்னு ஏகத்துக்கும் பில்டப் கொடுத்ததால பொதுமக்களும் ஆவலோடு வந்து பார்த்தாங்க. அதனால ஓரளவு வியாபாரமும் இருந்ததால், கண்காட்சியில ஸ்டால் போட்டவங்களும் சந்தோஷப்பட்டாங்க.அதே மாதிரி இந்தவருஷமும் புத்தகக்கண்காட்சிய அறிவிச்சதும், ஆர்வமா வந்து ஸ்டால் போட்டவங்க எல்லாம் நொந்து புலம்பியிருக்காங்க. காரணம் அவங்க எதிர்பார்த்த அளவுக்கு கூட்டமும் வரல… புத்தகமும் விக்கல… அதனால அவங்களுக்கு எல்லாம் பெருத்த ஏமாத்தம்தான்.. நாகை மாவட்ட ஆட்சியரோட நேர்முக உதவியாளர், தனி உதவியாளர் மற்றும் அரசுத்துறையினர் உரிய திட்டமிடல் இல்லாம தங்களோட இஷ்டத்துக்கு நிகழ்ச்சிய நடத்துனதான் இதுமுக்கிய காரணமாம். போதுமான விளம்பரங்கள் செய்யாததும் மக்கள் கூட்டம் டல்லாகி, கண்காட்சியே களையிழந்து போயிருச்சு…இந்த கண்காட்சிக்காக அரசு வழங்கிய நிதி என்ன ஆச்சுன்னு இனுமே தான் தெரியும். இந்த அதிருப்திகளுக்கு மத்தியிலயும் காமெடியான சம்பவம் ஒண்ணு நடந்துருக்கு. அதுவும் அமைச்சர்களையே காமெடியன்களா மாத்தி விட்டிருக்கு கத்தரிக்கோல்… கண்காட்சியோட தொடக்க விழாவுல அமைச்சர் ரகுபதி எண்ணும் எழுத்தும் கூடத்த திறக்க வந்திருந்தாரு. அவர் கூட நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன், முன்னாள் திமுக அமைச்சர் மதிவாணனும் வந்தாங்க. அரங்கத்த திறக்க கட்டப்பட்டிருந்த ரிப்பன வெட்டுறதுக்குள்ள அந்த மூணு பேரும் சேர்ந்து ஒருவழியாகிப் போனாங்க…அமைச்சர் மாத்தி மாவட்ட செயலாளர்… மாவட்ட செயலாளர் மாத்தி முன்னாள் அமைச்சர்னு மூணுபேரும், மூணுவிதமான கத்தரிக்கோல வச்சி வெட்டியும் ரிப்பன வெட்டமுடியல… கடைசில ஒருவழியா ரிப்பன இழுத்துப் புடிச்சி வெட்டிட்டாங்க.ஒரு ரிப்பன வெட்டுறதுக்கே இந்த பாடு படுறாங்களே இவ்வளவுதான் விடியா ஆட்சியோட ஷார்ப்னெஸ்ஸோன்னு அங்க இருந்தவங்க வாய்க்குள்ளேயே சிரிச்சி வைக்க… கலெக்டரோ அதை எல்லாம் பின்னாடி நின்னு பார்த்து ரசிச்சிருக்காரு..இந்த வருஷம் பெயரளவுல நடந்த புத்தகக்கண்காட்சியில அமைச்சர் நடத்துன காமெடி ரிப்பன் வெட்டும் விழா மட்டும்தான் ஹைலைட்டா இருந்துச்சு…

via News J : https://ift.tt/q4iMR8G