News J
635 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaசெந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்றும் வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 28 ஆம் தேதி சென்னையிலுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, குற்றப்பத்திரிகை நகல்கள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை எந்த நீதிமன்றம் விசாரிக்கலாம் என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் குமரேஷ் பாபு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. சட்ட விரோத பண பரிமாற்ற தடைச் சட்டப்படி முதன்மை அமர்வு நீதிமன்றம் சிறப்பு நீதிமன்றமாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளதால், செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை, முதன்மை அமர்வு நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமாக அறிவித்த அரசாணை மத்திய அரசு சட்டத்துக்கு மேலானது அல்ல எனத் தெரிவித்த நீதிபதிகள், வழக்கை மீண்டும் முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றியும் உத்தரவிட்டுள்ளனர்.

via News J : https://ift.tt/DYrX8HZ
Mediaதமிழகத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டால் நூற்றுக்கு 25 விழுக்காடு குழந்தைகளும், வயதுக்கு ஏற்ற வளர்ச்சி இல்லாமல் 100 க்கு 22 விழுக்காடு குழுந்தைகளும் இருப்பதாக மத்திய குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளில் 25 சதவீத குழந்தைகள் வயதுக்கு ஏற்ற உடல் வளர்ச்சி இல்லாமலும், 22 சதவீத குழந்தைகள் வயதுக்கு ஏற்ற எடை இல்லாமலும் இருப்பதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுபோன்று, ஊட்டச்சத்து குறைபாட்டாலும், வயதுக்கு ஏற்ற எடை இல்லாமலும் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் உணவு பழக்க வழக்கங்கள் தான் என மத்திய குடும்ப நலத்துறை பட்டியலிட்டுள்ளது.குறிப்பாக தமிழகத்தில் அரிசி, கோதுமை சார்ந்த உணவுப் பொருட்களை அதிக அளவில் உட்கொள்வதாலும், காய்கறிகள், பழங்கள், கீரை வகைகள் போன்ற சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் ஊட்டச்சத்து குறைபாடுகள் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. குழந்தைகளுக்கு சத்தான உணவு வகைகளையும், ஆரோக்கியமான உணவு வகைகளையும் கொடுப்பதில் பெற்றோர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்ததே இதற்கு காரணம் என்கிறார் குழந்தைகள் நல மருத்துவர்.கருவுறும் பெண்கள் தொடர்ந்து 10 மாதங்களுக்கு, மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவு பழக்கவழக்கங்களை முறையாக கடைப்பிடிப்பது அவசியம் என்றும், குழந்தை பிறப்புக்கு பிறகும் சத்தான, ஆரோக்கியமான உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலமே ஆரோக்கியமான, சத்தான குழந்தைகளை வளர்தெடுக்க முடியும் என்கின்றனர் மருத்துவர்.தமிழகத்தில் குழந்தைகள் பிறப்பு விகிதம் மற்றும் மத்திய அரசின் இந்த ஆய்வறிக்கையை தமிழக பொது சுகாதார துறை இயக்குனரகம் ஒப்புக் கொண்டுள்ளது. ஊட்டச்சத்து குறைப்பாட்டை போக்குவதற்காக தான் தமிழக அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவு திட்டம் செயல்படுத்துவதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விடியா அரசின் காலை சிற்றுண்டி உணவு திட்டத்தில், பயன்பெறுபவர்கள் ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தான் என்றும், அதிலும் காலை சிற்றுண்டி உணவுத் திட்டத்தில் கீரை, காய்கறிகள், பழ வகைகள், சிறுதானியங்கள் குழந்தைகளுக்கு கொடுப்பதில்லை என்ற விவரம் கூட தெரியாமல் இருப்பது தான் தமிழக சுகாதாரத்துறை இயக்குனரின் லட்சணம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்…காலை சிற்றுண்டியின் மூலம் பள்ளி மாணவர்களுக்கு சத்தாண உணவு அளிப்பதாக தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் தவறான தகவலை வெளியிட்டிருப்பதோடு, ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ள குழந்தைகள் விகிதத்தை எப்படி குறைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.


via News J : https://ift.tt/TR1LoJ6
Mediaவிடியா ஆட்சியில் தமிழகம் வன்முறைக் களமாகி ரத்த ஆறு ஓடுவதை தினமும் அரங்கேறும் கொலைச் சம்பவங்கள் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. திருப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் துள்ளத்துடிக்க வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் உடல்களில் இருந்து வெளியேறிய குருதியும் அதையே பறைசாற்றி உள்ளது.பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறைச் சேர்ந்த செந்தில்குமார், அவரது தம்பி மோகன், தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள் என 4 பேர் வெட்டி சாய்க்கப்பட்டது தமிழகத்தை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த கொலை தொடர்பாக செந்தில்குமாரிடம் ஓட்டுநராக வேலை செய்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த
வெங்கடேசனின் கூட்டாளி செல்லமுத்துவை கைது செய்த போலீசார் வெங்கடேசன் உள்பட இருவரை தேடி வருகின்றனர்.பணத்தை கையாடல் செய்ததால் வேலையில் இருந்து நீக்கப்பட்ட வெங்கடேசன், செந்தில்குமாரின் வீட்டு முன்பு அமர்ந்து நண்பர்களோடு மது அருந்தியுள்ளார். இதனை தட்டிக் கேட்டபோதுதான் இந்த படுகொலைகள் அரங்கேறி இருக்கின்றன.சிவகாசி அருகே மதுபோதையில் இருந்த இளைஞர் ஈஸ்வர பாண்டியை, அதே பகுதியைச் சேர்ந்த கோகுல்குமார் உள்பட 5 பேர் கும்பல் வெட்டிக் கொன்றுள்ளதுசென்னை கோயம்பேட்டில் மதுபோதையில், மனைவியை கத்தியால் குத்திய கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்இரு தினங்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் திமுக பிரமுகர் பிரபு என்பவரின் தூண்டுதலால் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஜெகன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்….இப்படி நித்தமும் கொலை, கொள்ளைகள் என சமூக விரோதச் செயல்கள் அரங்கேற முழுமுதற்காரணமாக இருப்பது மதுவும், கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்களுமே.எதிர்க்கட்சியாக இருந்தபோது டாஸ்மாக்கை மூடச் சொல்லி கருப்புக்கொடி பிடித்த ஸ்டாலின் ஆட்சியில் அமர்ந்த பின்னர் அதனையெல்லாம் கண்டுகொள்ளாததால், மூடப்படாத டாஸ்மாக் அரக்கனால் தமிழகக் குடும்பங்களில் உயிரிழப்புகளும், உடைமை இழப்புகளும் தொடர் கதையாகி வருகிறது.இதுஒரு பக்கம் என்றால் காவல்துறையின் கரங்கள் கட்டப்பட்டிருப்பதால் அவர்களால் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் குற்றங்களை தடுக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. திருப்பூர் சம்பவம் தொடர்பாக அறிக்கை விட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும் காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.இப்படி தமிழகத்தில் கொலைச்சம்பவங்கள் தொடர் கதையாகும் நிலையில், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாட சமூக விரோத செயல்களைத் தடுத்து நிறுத்த முடியாமல் திணறும் ஸ்டாலினின் நிர்வாகத்திறமையின்மைதான் காரணம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.    

via News J : https://ift.tt/4i1Rl8a
Mediaஇந்திய விடுதலைப் போராட்டத்தைப் பொறுத்தமட்டில் அதில்,  வ.உ.சிதம்பரனாரின் பங்கு என்பது மிகவும் குறிப்பிடத்தக்க ஒன்று. சுதேசி இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி, வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்களை வணிகம் மூலமே விரட்டி அடிக்க நினைத்தவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார். அவர் பிறந்த இந்நாளில், அவரின் நினைவைப் போற்றும் வகையில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது வாழ்த்துகளை டிவிட்டர் தளத்தில் பதிவு செய்தார். அதனை பின்வருமாறு காண்போம்.ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்து ஆங்கிலேயர்களுக்கு தன் இறுதி மூச்சு உள்ளவரை சிம்மசொப்பனமாக திகழ்ந்த ”கப்பலோட்டிய தமிழன்” போற்றுதலுக்குரிய வ.உ.சிதம்பரனாரின் 152 வது பிறந்தநாளில் அவர்தம் பெரும் புகழையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன். ஆங்கிலேயர்களுக்கு எதிரான உள்நாட்டு கப்பல் நிறுவனத்தை தொடங்கி, தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, தேசத்தின் விடுதலைக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்து, சிறைக்கொட்டடியில் சித்ரவதைகளை அனுபவித்து ஆங்கிலேயர்களுக்கு
தன் இறுதி மூச்சு உள்ளவரை சிம்மசொப்பனமாக… pic.twitter.com/KJsT5uMZAr— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) September 5, 2023

via News J : https://ift.tt/EPrdLsC
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு.எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் “ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி” வாழ்த்துச் செய்திகாக்கும் கடவுளாம் கண்ணபிரான் கிருஷ்ணராக அவதரித்த திருநாளை ‘கிருஷ்ண ஜெயந்தி’ என்று மக்கள் அனைவரும் கொண்டாடி மகிழும் இந்த நன்னாளில், எனது இனிய “கிருஷ்ண ஜெயந்தி’ நல்வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த தினமான கிருஷ்ண ஜெயந்தியன்று, மக்கள் தங்கள் இல்லங்களில் அழகிய வண்ணக் கோலங்களிட்டு  வாயிற்களில் மாவிலை தோரணங்களைக் கட்டி, ஸ்ரீபாதம் எனப்படும் குழந்தைகளின் பிஞ்சு பாதச் சுவடுகளை மாவில் நனைத்து இல்லங்களில் வழிநெடுக பதித்து, கிருஷ்ணருக்கு விருப்பமான வெண்ணெய், தயிர், பழங்கள், இனிப்பு பலகாரங்களைப் படைத்து, இறைவனை பக்தியுடன் வழிபட்டு மகிழ்வார்கள்.“குழப்பத்தையும், தடுமாற்றத்தையும் தவிர்த்து, தெளிந்த நீரைப்போல் மனதை நிலை நிறுத்தி, பலனை எதிர்பாராமல் கடமையைச் செய்தால், ஒருவர் எடுத்த காரியத்தில் வெற்றி பெற்று அனைத்து சுகங்களும், மன நிம்மதியும் கிடைக்க பெற்றவராய் மகிழ்ச்சியுடன், வாழ்த்திடலாம்’ என்ற கிருஷ்ண பகவானின் கீத உபதேசத்தை நாளும் மனதில் கொண்டு, ஸ்ரீ கிருஷ்ண பகவான் அவதரித்த இந்த இனிய நாளில், நாடெங்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி பெருக வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது வழியில், எனது உளமார்ந்த “கிருஷ்ண ஜெயந்தி” வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


via News J : https://ift.tt/GjiryZ5
Mediaகப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152 வது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும், வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ. சிதம்ரம் பில்லஈ அவர்களின் 152-வது பிறந்த நாளான, இன்று காலை (5.9.2023 – செவ்வாய் கிழமை), தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் சார்பில், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திரு பா. வளர்மதி, கழக அமைப்பு செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான் திரு. ப. மோகன், தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன், கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. சி.த. செல்லப்பாண்டியன், கழக அமைப்புச் செயலாளரும், கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளருமான திரு. என். சின்னதுரை, கழக இலக்கிய அணி இணைச் செயலாளர் திரு. பி. சின்னப்பன், முன்னாள் எம்.எல்.ஏ., ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. பி. மோகன், முன்னாள் எம்.எல்.ஏ., உள்ளிட்ட நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்திய இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கடம்பூர் சி. ராஜூ, எம்.எல்.ஏ தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் இணைந்து சிறப்பான முறையில் செய்திருந்தனர்.கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்தச் செய்தி வெளியிடப்படுகிறது.

via News J : https://ift.tt/Dtq2A16
Mediaபுத்தனுக்கு போதி மரம் ஞானத்தை வழங்கியதைப் போல, ஆசிரியர்கள் மாணவர்களுக்கான போதி மரமாக ஞானத்தை வழங்கி வருகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்களை போற்றும் விதமாக ஆசிரியர் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதுகுறித்து காண்போம்…எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பதிலே என்ற வரிகளைப்போல ஆசிரியர் வளர்ப்பிலும் அடங்கியிருக்கிறது ஒரு குழந்தையின் எதிர்காலம் என்றால் அது மிகையல்ல.ஒரு நல்ல ஆசிரியராக தமது இறுதிக் காலம் வரை வாழ்ந்துக் காட்டய, சுதந்திர இந்தியாவின் முதல் துணைக்குடியரசுத் தலைவரும், சிறந்த தத்துவஞானியுமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை நினைவுகூரும் வகையில், 1962 முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.ஒரு மனிதன் சமூகத்தில் நற்பண்புகளை வளர்த்துக்கொண்டு, நல்லது கேட்டது அறிந்து, வாழ்க்கையில் முன்னேறிய பல வெற்றியாளர்களுக்கும் அவர்களின் ஆசிரியர்களே முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளனர். மேய்ப்பர்கள் கையில் இருக்கும் குச்சி அடிக்க மட்டுமல்ல வழிகாட்டவும் தான் என்பதற்கேற்ப, தன் மாணவன் எந்த சூழ்நிலையில் தவறு செய்தாலும் அவர்களை திருத்துவதற்கு பிரம்பை எடுப்பதுன்னு ஆசிரியர்கள்.ஒரு குழந்தை தன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற எண்ணத்தில் ” என் புள்ள தப்பு செஞ்சா, 2 கண்ணையும் விட்டுட்டு தோல உரிச்சிபுடுங்க” என்று ஆசிரியர்களிடத்தில் பல பெற்றோர்கள் தங்களது சுமைகளை இறக்குவதுண்டு. ஆசிரியர்களும் பொறுப்புணர்வோடு ஒவ்வொரு மாணவனின் ஒழுக்கத்துக்கும், நற்பண்புகளை கற்றுக்கொடுப்பதற்கும் அரும்பாடு படுவர்.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்கள் ஆசிரியர்கள் மத்தியில் ஒருவித இடைவெளி இருப்பதை ஓப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணி என்பதை மறுப்பதற்கில்லை.எல்லாவற்றையும் ஆசிரியர்களை விட சமூக வலைத்தளங்கள் அதிகமாக கற்றுக்கொடுக்கும் என்று மாணவர்களின் மனநிலை மாறியிருக்கிறது. ஆனால் ஆசிரியர்கள் என்னவோ தங்களது மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையில் பல மாறுபாடுகளை மேற்கொண்டு, தங்களை நாளுக்கு நாள் அப்டேட் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள்.ஒரு ஈரமான களிமண் போன்றதுதான் மாணவப் பருவம். அந்த ஈரம் காய்வதற்கு முன்னரே ஆசிரியர்களால் எப்படி உருவாக்கப்படுகிறார்களோ அதுதான் அந்த மாணவர்கள்.அறிவும், சிந்தனையும், ஒழுக்கமும், பண்பும் நிறைந்த ஒரு சிறந்த மனிதனாக உருவாக்கப்பட்டால் அவர்களே நாட்டின் சிறந்தவர்கள். ஈரமான களிமண் காய்ந்துவிட்டால் அதனை செதுக்கமுடியாது. மாணவப் பருவத்தே தேவையானவை அத்தனையும் அவர்களுக்குள் உள்ளேற்றம் செய்யப்பட வேண்டும். அதை செவ்வனே செய்வது ஆசிரியர்கள்.அதேபோல தன்னிடம் படித்த மாணவன் எந்த நிலைக்கு உயர்ந்தாலும் பொறாமை கொள்ளாத ஒரே ஜீவன் ஆசிரியர் மட்டுமே. மேலும் மாணவ சமூகத்திற்கு தேவையான ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி என அனைத்தையும் அவர்களுக்கு கற்றுத்தந்து, அவனை நல்லவனாக, பண்புள்ளவனாக, சிறந்தவனாக, அறிஞனாக, மேதையாக உயர்த்தும் உன்னத பணி ஆசிரியர் பணி என்பதை யாராலும் மறுக்க இயலாது.

via News J : https://ift.tt/kcdTaVP
Mediaகன்னியாகுமரி மாவட்டம் மட்டும் தமிழகத்துல இருக்கா கேரளத்துல இருக்கானே இப்ப வரை சந்தேகமா இருக்கு. மாநில மேப்ல கடைக்கோடில இருக்கதாலயோ, என்னவோ விடியா ஆட்சில வளர்ச்சிப் பணிகளோ, நலத்திட்டப் பணிகளோ உடனே போய் சேருறது கிடையாது. அத்தனை துறைலயும் கன்னியாகுமரி மாவட்டம் பின்னடைவ சந்திச்சுட்டு தான் இருக்கு. சமீபத்துல கூட கன்னியாகுமரி ஆசாரிப்பள்ளத்துல இருக்க கவர்மெண்ட் ஆஸ்பத்திரில, காய்ச்சல் சிகிச்சைக்கு வந்த 3 குழந்தைக்கு நாய்கடி ஊசி போட்டு தேசிய லெவல்வ அசிங்கப்பட்டுச்சு விடியா அரசு.இப்போ புதுசா நீச்சல்குள பஸ் விட்டிருக்காங்க கன்னியாகுமரில. மழைல நனையாம போயிரலாம்னு பஸ் ஏறுனவங்களுக்கு எல்லாம் ஒரே அதிர்ச்சி, பஸ்ஸுக்குள்ள கூரைய பிச்சுட்டு பொழிஞ்சிருக்கு மழை. பஸ்ஸுக்குள்ளயே பயணிங்க எல்லாம் தொப்பியும், குடையும் புடிச்சுட்டு போன காட்சி விடியா ஆட்சில மட்டும் தான் சாத்தியம். பல நூறு கோடி செலவு பண்ணி புது பஸ் வாங்கியிருக்கோம்னு ஊரெல்லாம் விளம்பரம் பண்ணியிருக்கு விடியா அரசு… புது பஸ்னா எப்படியிருக்கும்னு நாங்களும் பாத்துக்குறோம், கொஞ்சம் கன்னியாகுமரிக்கு அனுப்பி வைங்கனு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/SNmopdl
Mediaதமிழகத்தில் பி.இ., பி.டெக்., மூன்றாம் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த நிலையில் 11 பொறியியல் கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்னும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. விடியா ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளை இழுத்து மூடும் நிலை நிலவுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழ்நாட்டில் உள்ள 442 பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 22 ந் தேதி வெளியானது. கலந்தாய்வில் 1 லட்சத்து 76 ஆயிரத்து 744 மாணவர்கள் பங்கேற்க தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3 சுற்றுகளாக கலந்தாய்வு நடைபெற்றது.இதில் பொதுப்பிரிவில் 3 சுற்றுக் கலந்தாய்வில் 95 ஆயிரத்து 46 மாணவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆகஸ்ட் 31 ந் தேதி வரையில் 80 ஆயிரத்து 951 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 2022ம் ஆண்டில் 84 ஆயிரத்து 812 மாணவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டதில், 79 ஆயிரத்து 183 மாணவர்கள் சேர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் ஒதுக்கீட்டில்11 ஆயிரத்து 58 மாணவருக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், ஆகஸ்ட் 31 ந் தேதி வரை 8ஆயிரத்து 475 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கடந்த 2022 ம் ஆண்டில் 8759 மாணவர்களுக்கு ஒதுக்கீடு அளிக்கப்பட்டதில், 8263 மாணவர்கள் சேர்ந்தனர்.இது குறித்து கல்வியாளர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு விரும்பும் கல்லூரிகளை பதிவு செய்யும் முறை சரியாக புரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் 16 பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளதாகவும், 11 பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவரும் சேரவில்லை என்றும் கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர். 10 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர்கள் சேர்ந்துள்ள கல்லூரிகளை அண்ணா பல்கலைக் கழகம் ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கல்வியாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விடியா ஆட்சியில் பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை முழுமையாக இல்லாததால், கல்லூரிகளை இழுத்து மூடும் அபாயம் நிலவுவதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

via News J : https://ift.tt/TJBXErR
Mediaஒரு அமைச்சர் ஆய்வு செய்யப்போனால், அந்த தொகுதியின், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் உடன் இருக்க வேண்டும் இது அரசாங்க ப்ரோட்டோகால்… சம்பந்தப்பட்ட தொகுதியின் எம்எல்ஏ எதிர்க்கட்சி என்றால், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அவரை ஒதுக்கிவிடுகிறார்கள் … ஆனால் சொந்தக்கட்சி எம்பியையே புறக்கணிக்கிறார்கள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது? அதுவும் தன் சொந்த அத்தையையே புறக்கணிக்கிறார் என்றால், அதற்குப்பின்னால் ஓர் பெரும் பரம ரகசியமே ஒளிந்திருக்கிறது என்றுதானே புரிந்துகொள்ள வேண்டும்?கடந்த 4ம்தேதி, ஆட்சி மற்றும் கட்சி ரீதியான பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக தூத்துக்குடி சென்றார் வாரிசு அமைச்சர் உதயநிதி… அவர் பங்கேற்ற எந்த நிகழ்ச்சியிலுமே, அந்த தொகுதியின் எம்பியான கனிமொழி கலந்துகொள்ளவே இல்லை… அவர் அழைக்கப்படவே இல்லை… வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டிருக்கிறார் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.. வெறும் இளைஞர் அணியினர் நிகழ்ச்சியில் என்றால்கூட பரவாயில்லை விட்டுவிடலாம். ஆனால் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், ஆகியோருடன், அந்தப்பகுதியைச் சேர்ந்த அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் கீதா ஜீவன் ஆகியோரும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். இத்தனை பேர் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் ஒரு எம்பி என்ற அடிப்படையிலும், கட்சியின் துணை பொதுச்செயலாளர் என்ற அடிப்படையிலும் கனிமொழி ஏன் புறக்கணிக்கப்பட்டார்? அவர் கலந்துகொண்டுவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டிருக்கிறாரா உதயநிதி?தொடர்ந்து கனிமொழியின் ஆதரவாளராக இருந்த காரணத்தால் அமைச்சரான கீதா ஜீவன் மற்றும் தூத்துக்குடி மேயரான அவரின் சகோதரர் ஜெகன் ஆகியோர் கூட தற்போது அவரை புறக்கணித்திருப்பதை பார்க்கும்போது, ஏதோ ஒரு பெரும் பூகம்பமே கட்சிக்குள் ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது.. ஏற்கனவே, கடந்த மார்ச் மாதம் இளைஞர்அணியில் பெண்களை சேர்க்கும் விவகாரத்தில் உதயநிதிக்கும் கனிமொழிக்கும் இடையே நடந்த முட்டல் மோதல்கள் ஆறுவதற்குள், தூத்துக்குடிக்கே வந்து கருணாநிதியின் வாரிசை ஒரண்டை இழுத்திருக்கிறது ஸ்டாலினின் வாரிசு…இதையெல்லாம் கவனித்த கனிமொழியோ திரைமறைவில் சில விஷயங்களை செய்ததால்தான் உதயநிதியின் பொதுக்கூட்டத்திற்கு கூட்டமே இல்லாமல் சேர்கள் எல்லாம் காத்துவாங்கியிருக்கின்றன.. இதைப்பார்த்து காண்டு ஆகி நிகழ்ச்சியை பாதியில் முடித்துவிட்டுச் சென்றிருக்கிறார் வாரிசு… ஏற்கனவே, அமைச்சர் கே.என்.நேரு – திருச்சி சிவா எம்பி இடையிலான மோதல்களைத் தொடர்ந்து அடுத்த அமைச்சர்-எம்பி மோதல் தொடங்கியிருப்பதாகவே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..ஆக மொத்தத்தில் அத்தைக்கும் அண்ணன் மகனுக்கும் இடையிலான அதிகாரப்போட்டி வீதிக்கு வந்துவிட்டதா? கருணாநிதியின் வாரிசை முடக்கநினைக்கிறாரா ஸ்டாலினின் வாரிசு? நிலைமை இப்படியே இருந்தால் சொந்தக்கட்சிக்குள்ளேயே பெண்களின் ஆதரவை இழந்துவிடுவாரா ஸ்டாலின்? தன் தங்கைக்கும் மகனுக்கும் இடையிலான அதிகாரப்போட்டியை முடிவுக்கு கொண்டுவரமுடியாமல் விழிபிதுங்கி நிற்கும் முதல்வர் ஸ்டாலினின் நிலைமை பார்த்துத்தான் அவரின் நிர்வாகத்திறமையை கழுவி ஊத்துகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.

via News J : https://ift.tt/MTfwtV9
Mediaஈரோட்டில் இணையவழி வர்த்தகம் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி, கல்லூரி மாணவர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த பார்மசி கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.விருதுநகரை சேர்ந்த வைரமுத்து பாலாஜி என்ற மாணவர் ஈரோட்டில் உள்ள பார்மசி கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் படிக்கும் மாணவர் சஞ்சய், ஆன்லைன் டிரேடிங் மூலம் 40 நாட்களில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறியுள்ளார். இதனை, நம்பிய வைரமுத்து 49 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயை சஞ்சய்யிடம் கொடுத்துள்ளார். ஆனால் 40 நாட்களுக்கு மேலாகியும் பணம் தராமல் சஞ்சய் இழுத்தடித்துள்ளார். இதேபோல், 20க்கும் மேற்பட்ட மாணவர்களிடமும் டிரேடிங் மூலம் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி பல கோடி ரூபாய் பணமோசடி செய்துள்ளார். இதையடுத்து, வைரமுத்து பாலாஜி பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் சேர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்ததையடுத்து, சஞ்சயை போலீசார் கைது செய்துள்ளனர்.

via News J : https://ift.tt/BMUPhyx
Mediaவிடியா திமுக வாக்குறுதி அளித்ததுபோல வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க வேண்டும் என பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடியா அரசின் மற்ற வெற்று வாக்குறுதிகள் போல இதுவும் கடந்துபோகுமா? இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்பும் இன்னும் வள்ளலார் சர்வதேச மையத்தை அமைப்பதற்காக துரும்பைக் கூட விடியா அரசு கிள்ளிப்போடவில்லை…வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என ஜீவகாருண்யத்தின் அருமைகளை உலகுக்கு எடுத்துரைத்தவர் வள்ளலார். கடலூர் மாவட்டம் வடலூரில் 1867 ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க தரும சாலை நிறுவப்பட்டது. அன்று முதல், ஜாதி, மத, பாகுபாடின்றி அனைவருக்கும் மூன்று வேலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. தரும சாலையில் அன்று எரிய தொடங்கிய அடுப்பு 155 ஆண்டுகளாக அணையாமல் எரிந்து மக்களின் பசிப்பிணியை போக்கி வருகிறது. மழை, வெள்ளம் என, இயற்கை இடர்பாடுகள் ஏற்படும்போது கூட அன்னதானம் தொடர்ந்து நடக்கிறது. தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கூட, அதிகமானோர் இங்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என, திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வடலூரில் சர்வதேச மையம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாக்கப்படும் என சட்டமன்றத்தில் அறிவித்தது. ஆனால், திட்டம் அறிவிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதுவரை எவ்வித பணிகளையும் விடியா அரசு துவக்கவில்லை. சட்டமன்றத்தில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட போது, சில நாட்களில் அமைச்சர்கள் சேகர்பாபு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் வடலூர் சத்திய ஞானசபை அமைந்துள்ள பகுதிகளை ஆய்வு செய்தனர். அப்போது திமுக தேர்தல் அறிக்கையில் சொன்னபடி வள்ளலாரின் சர்வதேச மையத்தில், பல்வேறு நவீன வசதிகளோடு வள்ளலாரின் வரலாற்றையும், அவரது கொள்கைகளையும் இந்த உலகம் அறியும்படி சர்வதேச மையம் இந்த வளாகத்திலேயே உருவாக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால், விடியா அரசின் பேச்சுகள் வெறும் ஆய்வோடு நின்றுபோனது.அதுபோல வள்ளலார் அவதார இல்லமான புவனகிரி அருகே உள்ள மருதூர் இல்லத்தையும், சர்வதேச தரத்தில் புதிய இல்லமாக மாற்றி அமைக்க வேண்டும் எனும் கோரிக்கை பல்லாண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. கடந்த பல மாதங்களுக்கு முன்பு கூட மாவட்ட நிர்வாகம் சார்பில் வள்ளலார் பிறந்த இல்லத்தை ஆய்வு செய்துள்ளனர். ஆனால் இதற்கான எந்த சிறப்பு நிதியும் அறிவிக்கப்படவில்லை. இன்னமும் வள்ளலார் பிறந்த இல்லம் பழமையான கட்டடத்தில் இருந்து வருகிறது. வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமையும் அதே நேரத்தில், அவரது பிறந்த இல்லமான மருதூரிலும், நவீன தரத்திலான புதிய இல்லம் உருவாக்க வேண்டும், வடலூரையும் மருதுரையும் இணைக்கும் வகையில் அதிக போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்பது வள்ளலார் பக்தர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கையாக இருந்து வருகிறது.இந்த மையம் அமைந்தால் வள்ளலாரின் உயரிய கொள்கைகள் தமிழகம் மட்டுமல்லாமல், உலகளவில் உள்ள பலரையும் சென்றடையும். எனவே இனியும் கால தாமதம் செய்யாமல் உடனடியாக வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் உருவாக்கிட பணிகளை துவக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


via News J : https://ift.tt/YZvH2eM
Mediaதிமுகவுக்கு ஓட்டு போட்டிங்கன்னா, முதல் கையெழுத்தே நீட்ட ஒழிக்கிறதுதான்னு பொய்வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா அரசு, 2 வருசத்துக்கு மேல ஆகியும் நீட்ட ஒழிக்க முடியல…. அதனால உயிரிழப்புகள் அதிகரிச்சதும், பொதுமக்கள் கொந்தளிச்சிட்டாங்க. சரி, மக்கள ஏதாவது செஞ்சி மடைமாத்தணும்னு கண்துடைப்புக்கு உண்ணாவிரதம் எல்லாம் இருந்தாங்க. ஆனாலும் இவங்களோட நாடகத்த மக்கள் ஏத்துக்கல… வேறா ஏதாவது செஞ்சி மக்களோட கவனத்த நீட்டுல இருந்து திசை திருப்பணும்னு சனாதனத்துக்கு எதிர்ப்பா பேசி வைக்க, அது ஒருபக்கம் விவாதப் பொருளாகி ஓடிக்கிட்டு இருக்குது.
இந்த சந்தடி சாக்குல, 23-24ஆம் ஆண்டுக்கான, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அரசு பள்ளிக்கூடங்கள்ல தொடங்கும்னு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிச்சிருக்காரு. இது மாணவர்கள் மத்தியில பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கு. அப்ப இந்த கல்வியாண்டுலயும் நீட்ட ரத்து செய்யமாட்டோம்னுதான், கோச்சிங் கிளாஸ தொடங்கிட்டாங்க போலன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.


via News J : https://ift.tt/aZ28XtN
Mediaஅறிவாலயம் முழுக்க அங்கே, இங்கே, எங்கேயும் உதயநிதி புராணம் தான்… கட்சியினர் மத்தியிலும் உதயநிதிதான்… ஆட்சியின் அதிகாரிகள் மத்தியிலும் உதயநிதிதான்.. எங்கும் உதயநிதி எதிலும் உதயநிதி… தூணிலும் உதயநிதி, துரும்பிலும் உதயநிதி …
இது ஒன்றும் வாரிசு அமைச்சருக்காக உபிக்கள் மாங்கு மாங்கென்று எழுதிய வரவேற்பு பாடல் அல்ல… திமுகவில் உதயநிதியின் நிலை தற்போது இதுதான்… எங்கெங்கு காணினும் உதயநிதியடா அதுதான் எங்கள் தலைவிதியடா என்று திமுகவின் உயர்மட்டநிர்வாகிகள் முதல் கடைக்கோடி தொண்டன் வரை உள்ளுக்குள் இப்படித்தான் குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.அரசியலுக்கு வந்த உடனே எம்எல்ஏ, எம்எல்ஏ ஆனவுடனே சட்டமன்றத்தில் முதல்வருக்கு பின்னால் இருக்கை… முதல்வருக்கு வணக்கம் வைத்தகையோடு உதயநிதிக்கும் சலாம் போட வேண்டும் என்று மூத்த நிர்வாகிகளுக்குக்கூட உத்தரவு… ஒடிசாவில் விபத்து என்றால் ஆறுதல் சொல்லப் போவார்.. ஊர் ஊராக சம்பந்தமே இல்லாமல் ஆய்வுக்கு போவார், பிரதமரைப் பார்க்கப்போவார் … பேச்சு வார்த்தை நடத்தி வருவார்.. சம்பந்தம் இல்லாத துறையில் பிரச்சனை என்றால் மூக்கை நுழைப்பார். எதிர்த்துக் கேள்விகேட்டால் கேட்டவர் மூக்கை உடைப்பார்… அப்பப்பா .. எல்லாம் அவர் அப்பா இருக்கும் தைரியம் ப்பா..திமுகவில் தனக்கு அடுத்த இடத்தில் தன் மகன் தான் எல்லாமே என்று இப்போதே கட்சிக்காரர்களின் நெஞ்சங்களில் கொஞ்சம் கொஞ்சமாக விஷத்தை, இல்லை இல்லை விஷயத்தை ஊற்றி நிரப்பிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்… திமுகவுல குடும்ப வாரிசு வர்றதெல்லாம் ஒரு பிரச்சனையா பாஸ்? என்று கூட நீங்கள் கேட்கலாம்.. நியாயம்தான்… வாரிசு அரசியல் செய்யும் கட்சியில் இதெல்லாம் சாதாரணம் தான்.. ஆனால், இவர்களுக்காக தெருத்தெருவாகச் சென்று போஸ்டர் ஒட்டும் கடைக்கோடித் தொண்டனின் நிலைமை? அதுதான் இங்கே பேசுபொருளே…இப்போது கூட, உதயநிதி பேச்சுக்கு இந்தியா முழுக்க எழுந்திருக்கும் கண்டனக் குரலுக்கு பின்னாலும் ஓர் அரசியல் திட்டம் வைத்திருக்கிறது திமுக என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. நெகடிவ் பப்ளிசிட்டியாக ஒட்டுமொத்த இந்தியாவிலும் தன் மகன் பெயர் சென்றடைய வேண்டும் என்று திட்டம்போட்டு இப்படி சர்ச்சைப்பேச்சை பேச வைத்து அதற்கு அறிக்கை கொடுப்பதுபோல அறிக்கை கொடுத்து பூஸ்ட்டப் செய்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்… அடேங்கப்பா… பலே கில்லாடிகள் தான் இந்த திமுகவினர் ….ஆக, கட்சியிலும் ஆட்சியிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு அடுத்த இடத்தில் உதயநிதியை கொண்டுவர முயற்சிப்பது ஸ்டாலினா?அல்லது அவர் குடும்பத்தினரா? வெகு சிக்கிரமே உதயநிதியை அமைச்சராக்கிய ஸ்டாலின் அடுத்து அவரை துணை முதல்வர் ஆக்க திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறாரா?அப்படி ஒருவேளை உதயநிதி துணை முதல்வரானால், கட்சிக்குள் போர்க்கொடி தூக்கப்போவது யார்?வெடிக்கப்போகும் பூகம்பம் எத்தகையானதாக இருக்கும் என்பதையெல்லாம் நினைத்துப்பார்த்தால் உண்மையாலுமே ஸ்டாலினுக்கு தூக்கம் வராதுதான்.  

via News J : https://ift.tt/S6hHBnG
Mediaகோவை மேயர் மீது திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்கள் அடுக்கடுக்கான புகார்களை வாசித்து வருகின்றனர். மேயர் மீதான புகார்கள் வெளியே கசியாமல் இருக்க கூட்டணி கட்சி கவுன்சிலர்களுடன் திமுக அமைச்சர்கள் பேரம் பேசி வருகின்றனர்… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…கோவையில் மேயராக இருப்பவர் கல்பனா. இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியின் தீவிர ஆதரவாளரான இவர், செந்தில் பாலாஜி இருந்த வரையில் அவரது பெயரை சொல்லி இல்லாத அட்ராசிட்டிகளில் ஈடுபட்டு வந்தார் கல்பனா. அவர் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு தற்போது தனிக்காட்டு ராணி போல வரும் வருகிறார். மாநகராட்சிப் பணிகளுக்கு டெண்டர் விடுவதில் இருந்து அனைத்து பணிகளிலும் கமிஷன் பெறுவதில் மட்டுமே குறியாக உள்ளார். குறிப்பாக திமுக கவுன்சிலர்களையும், கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களையும், கட்சியின் மூத்த உறுப்பினர்களையும் மதிக்காமல் சுற்றி வருகிறாராம். இதனால் விடியா திமுகவின் உள்ளூர் நிர்வாகிகளே கல்பனா மீது கடுங்கோபத்தில் உள்ளனர்.கட்சியின் சீனியர் அமைச்சர் நேரு கூறிய பிறகும் கூட கோவை வஉசி பூங்காவில் நடைபெற உள்ள பொருட்காட்சி டெண்டரில் கையெழுத்திட மறுப்பதாக கூறி, சமீபத்தில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத் தொடரில் இருந்து திமுக மண்டல தலைவர் மீனாலோகு வெளிநடப்பு செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். ஒருபுறம் கலெக்சன் ராணியாக வலம் வரும் மேயர் கல்பனா, மறுபுறம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அடாவடித் தனத்தில் ஈடுபடுகிறார் எனவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அதிகாரத்தைக் காட்டி மிரட்டி தனது வீட்டின் அருகே இருப்பவர்களை மிரட்டுதல், அவர்களை காலி செய்ய வற்புறுத்துதல் உள்ளிட்ட வேலைகளில் கல்பனா ஈடுபட்டு வருகிறாராம்.இந்நிலையில் அண்மையில் கோவைக்கு வந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, பொறுப்பு அமைச்சர் முத்துசாமி ஆகியோரை நேரில் சந்தித்த திமுகவினரும், கூட்டணி கட்சி நிர்வாகிகளும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதையடுத்து அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து இரவு 8 மணிக்கு அவர்களைச் சந்தித்தனர் அமைச்சர்கள். நள்ளிரவு இரண்டரை மணி வரை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள், கூட்டணி கட்சி கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள், திட்டக்குழு உறுப்பினர்கள் என வரிசையாக ஒவ்வொருவரும் வந்து மேயர் கல்பனா மீது அடுக்கடுக்கான புகார்களை குவித்துள்ளனர். புகார்களைக் கேட்டு ஆடிப்போன அமைச்சர்கள், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் இதையெல்லாம் பெருசுபடுத்த வேண்டாம் என கெஞ்சிக் கூத்தாடி, ஒவ்வொருவருக்கும் அவர்களது குறைகளுக்கு ஏற்ப லட்சக்கணக்கில் பணத்தைக் கொடுத்து செட்டில் செய்துள்ளதாக தகவல்கள் வட்டமடிக்கின்றன. இதையடுத்து மேயர் கல்பனாவையும் அழைத்து டோஸ் விட்டுள்ளனர் அமைச்சர்கள்.இனியாவது கோவை மேயர் கல்பனா தனது கலக்சன், கட்டப்பஞ்சாயத்துகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பாரா என திமுகவினரும், கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும் காத்திருக்கின்றனர்…

via News J : https://ift.tt/H1D9NWr
Mediaவாரிசு அமைச்சரோட சனாதன எதிர்ப்பு பேச்ச ஊரே கழுவி ஊத்திட்டு இருக்கு. அதுபோதாதுனு இந்தியா கூட்டணிக்குள்ளயே, பெரிய குழிய தோண்டியிருக்கு வாரிசு அமைச்சரோடு ஸ்டேட்மெண்ட். ஏற்கனவே மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் எல்லாம் உதயநிதிக்கு கண்டனம் தெரிவிச்ச நிலையில, சிவசேனா உத்தவ் தாக்ரே அணி எம்.பி. சஞ்சய் ராவத்தும், அமைச்சரா இருந்துட்டு இப்படி எல்லாம் பேசக்கூடாதுனு உதயநிதிக்கு குட்டு வச்சிருக்காரு.இந்த நேரம் பார்த்து, திமுக எம்.பி ஆ.ராசா ஒரு படி மேல போய், சனாதான தர்மத்தை எச்ஐவி, தொழுநோயோட கம்பேர் பண்ணி பேசியிருக்காரு. அதுக்காக, அவர் மேல டில்லி போலீஸ் வழக்கு பதிவும் பண்ணியிருக்காங்க…
ஆ.ராசா பேச்ச பார்த்தா, உதயநிதிக்கு முட்டு குடுக்குறதுக்காகவே பேசுன மாதிரியே தெரியுது.. எப்படியும் திமுகவோட அடுத்த தலைவர், துணை முதல்வர் எல்லாம் உதயநிதி தான். அதனால அவர் என்ன பேசுனாலும் மாங்கு மாங்குனு முட்டுக் குடுக்கனுங்குற முடிவுக்கு திமுக சீனியர்கள் எல்லாம்…. அதுல நீ பஸ்ட்டா, நான் பஸ்ட்டான்னு போட்டி போடுறதும் ஆ.ராசாவோட பேச்சுலயே தெரியுதேன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…


via News J : https://ift.tt/gzIjyt0
Mediaஇந்த விடியா ஆட்சியில போக்குவரத்து துறையோட செயல்பாடுகள் ஒவ்வொரு நாளும் சிரிப்பா சிரிச்சிக்கிட்டு இருக்கு. பஸ்சுக்குள்ளயே மழை பெய்றது… அங்கங்க பேருந்து நின்னு போறதுன்னு தெனமும் ஏதாவது ஒரு சம்பவம் தமிழ்நாட்ட சுத்தி நடந்துக்கிட்டேதான் இருக்கு… இப்பக்கூட பாருங்க சென்னையில இருந்து சேலத்துக்குப் போன சொகுசு பேருந்து ஒன்னு ஆத்தூர் பக்கத்துல பழுதாகி நின்னுருக்கு. அதுவும் குறுகலான சாலையில போய் நின்னுட்டதால பயங்கர போக்குவரத்து நெரிசலா ஆகியிருக்கு.. காலையிலயே ஸ்கூல் போறவங்க, ஆபீஸ் போறவங்கன்னு பலரும் காண்டாகி இருக்காங்க… அப்புறமா தள்ளுமாடல் வண்டி மாதிரி அத தள்ளிக்கிட்டு போய் ஓரம் கட்டி போக்குவரத்த சீர் பண்ணியிருக்காங்க..((GV00AMLS)) கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட, திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில இருந்து ஆவடி வரைக்கும் இயக்கப்பட்ட அரசு பேருந்து திடீர்னு பழுதாகி நின்னு போக பயணிகள் இறங்கி தள்ளிக்கிட்டு போயிருக்காங்க.பெண்களுக்கு பேருந்து பயணம் இலவசம்னு சொல்லிட்டு இப்படி தள்ளுமாடல் பேருந்தா விடுறீங்களே… இது திராவிட மாடல் அரசா? அல்லது தள்ளுமாடல் அரசான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.


via News J : https://ift.tt/HbRpTK7
Mediaஇயக்குனரும், நடிகருமான மாரிமுத்து மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.தேனி மாவட்டம் பசுமலையைச் சேர்ந்த இயக்குனரும், நடிகருமான மாரிமுத்துவுக்கு, மனைவி பாக்கியலட்சுமி, அகிலன் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய மகள்கள் உள்ளனர். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த அவர், தமிழ் சினிமாவில் 2008-ம் ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் என்ற திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்த புலிவால் திரைப்படத்தையும் இயக்கி உள்ளார். இதுமட்டுமல்லாமல் அரண்மனைக்கிளி, பரியேறும் பெருமாள், கொம்பன், ஜெயிலர் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார். இந்நிலையில், விருகம்பாக்கம் உள்ள அவரது இல்லத்தில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு, வடபழனி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாரிமுத்து, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தனது தெளிவான பேச்சால், ரசிகர்களை கவர்ந்த மாரிமுத்துவின் இழப்பு அவரது குடும்பத்திற்கும், ரசிகர்களுக்கும், திரைதுறையினருக்கும் பேரிழப்பாகும்.


via News J : https://ift.tt/d79qfYj
Media  கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ‘புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கைமஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் மற்றும் காட்டுப் பன்றி தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கிட விடியா திமுக அரசை வலியுறுத்தல்!வட தமிழகத்தில் கரும்பு சாகுபடிக்கு கடலூர், விழுப்புரம் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்கள் முன்னனியில் உள்ள மாவட்டங்களாகும்.  எனவேதான், இப்பகுதியில் சர்க்கரை ஆலைகள் அதிகம் உள்ளன. ஆனால், தொடர்ந்து விவசாயிகள் பாடுபட்டு சாகுபடி செய்த கரும்புக்கு போதிய விலை கிடைக்காத நிலைமை, பல சர்க்கரை ஆலைகள விவசாயிகளுக்குத் தரவேண்டிய கோடிக்கணக்கான ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதால், கரும்பு பயிரிட்டு பெரும் நஷ்டத்திற்குள்ளான பல விவசாயிகள், கரும்பு சாகுபடியை மெல்ல மெல்லக் குறைத்து, நெல், மக்காச் சோளம் போன்ற மாற்றுப் பயிர்களுக்கு மாறியும், தேக்கு மரங்களை வளர்த்தும் வருகின்றனர்.வேளாண்மைக்கு தனி பட்ஜெட் போட்டு, விவசாய உற்பத்தியில் புரட்சி செய்ததாக மார்தட்டிக் கொள்ளும் வேளாண்மைத் துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான கடலூரில் இந்த ஆண்டு சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிட்ட நிலையில், மஞ்சள் அழுகல் நொய் (Pokkah Boying), வேர் புழு நோய் (Root Grub) போன்ற நோய்கள் தாக்கியும் மற்றும் காட்டுப் பன்றிகளின் (Wild Bore) தொல்லையாலும், சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் விளைந்த கரும்பு பயிர்கள் முழுமையாக பாதிப்படைந்துள்ளதாகவும், இதனால் கடன் வாங்கி கரும்பு பயிரிட்ட விவசாயிகள் முழு நஷ்டம் அடைந்துள்ளதாகவும், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும், விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் அருகிலுள்ள வேளாண் துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும், பயிரிட்ட கரும்புகளை நோய்களில் இருந்து காப்பாற்றுதற்குத் தேவையான பூச்சிக் கொல்லி மருந்துகளை வழங்காமலும், காட்டுப் பன்றிகளிடமிருந்து கரும்புகளை பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்காமலும், விடியா திமுக அரசு வேடிக்கை பார்த்து வருவதாக, கடலூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த மன வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.விவசாயிகள் வியர்வை சிந்தி, கடன் வாங்கி, தாங்கள் பார்த்து பார்த்து வளர்த்த கரும்பு பயிர், நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்நோய் கரும்பு சாகுபடி செய்த அருகிலுள்ள மற்ற நிலங்களிலும் பரவக்கூடாது என்ற நோக்கத்த்தில், கடும் மன வேதனையுடன், கடலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 8 ஆயிரம் ஏக்கரில் பயிடிட்ட கரும்பு பயிர்களை, விவசாயிகளே டிராக்டர் கொண்டு உழுது அழித்து வருகின்றனர் என்ற செய்தி மிகுந்த மன வேதனையை அளிக்கிறது.எனவே, உடனடியாக விடியா திமுக அரசு, தமிழகம் முழுவதும் மஞ்சள் அழுகல் நோய் மற்றும் வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கி, பாதிக்கப்பட்ட கரும்பு விளை நிலங்களை வேளாண்மைத் துறை அமைச்சரும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் நேரடியாக பார்வையிட வேண்டும், ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடி செய்வதற்கு உற்பத்தி செல்வாக சுமார் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் விவசாயிகள் தங்கள் உடல் உழைப்பைத் தருகின்றனர். மேலும், கரும்பு விவசாயிகள் காப்பீட்டுத் திட்டத்தில் பதிவு செய்திருந்தாலும், இந்நோய் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராததால், இந்நோயால் பாதிப்படைந்த கரும்பிற்கு இழப்பீடு தர முடியாது என்று காப்பீட்டு நிறுவனங்கள் மறுக்கின்றன. எனவே, காப்பீட்டு நிறுவனங்களிடம் பேசி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீட்டைப் பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.கரும்பு சாகுபடி செய்துள்ள நிலப் பரப்பில் மஞ்சள் அழுகல் நோய், வேர் புழு நோய் போன்ற நோய்கள் தாக்கியும் மற்றும் காட்டுப் பன்றிகளின் தொல்லையாலும் தமிழகம் முழுவதும் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் பாசனப் பரப்பளவில் கரும்பு பயிர்கள் பாதிப்படைந்துள்ளதாக செய்திகள் வருகின்றன.எனவே, விடியா அரசின் வேளாண்மைத் துறை அமைச்சர், தமிழகம் முழுவதும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அனுப்பி வைத்து, கரும்பு சாகுபடி மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளைக் கணக்கெடுத்து, ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 50 ஆயிரம் ரூபாயை நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும்; கரும்பு சாகுபடி விவசாயிகளுக்குத் தேவையான பூச்சி மருந்துகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும்; காட்டுப்பன்றி தாக்குதலில் இருந்து பயிரிடப்பட்டுள்ள கரும்புகளைக் காப்பற்றுவதற்கு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


via News J : https://ift.tt/bGAj6qg
Mediaதேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அரசு ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வந்த தனியார் ஸ்கேன் நிறுவனம் பரிசோதனைக்கு நோயாளிகளிடம் கட்டணம் வசூலிப்பதை வாடிக்கையாக கொண்டிருந்தது.அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது…..இது தெரியாமலயே ஒரு அமைச்சர் சுகாதாரத்துறையை நிர்வகித்து வருகிறார் என்பது தான் தற்போதைய அரசின் கவலைக்குரிய நிலை….10 நோயாளிகளிடம் தலா ரூ.2,500 வீதம் கட்டணம் வசூலித்ததும், எங்கே இது இந்த விடியா அரசுக்கு எதிரான எண்ணத்தை மக்களிடம் அதிகரித்துவிடுமோ என்கிற அச்சத்தில் அவசர அவசரமாக அங்கு சென்று, ஆய்வு என்கிற பெயரில் நாடகம் நடத்தியிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.தேனி மட்டுமல்ல, தமிழகத்தின் பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் இப்படி தான் சம்பவங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. பணம் கொடுத்தால் தான் சிகிச்சையே என்கிற நிலை தான் பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நீடிக்கிறது.ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு வருகை தருவது தங்களிடம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அளவுக்கு பணம் இல்லை என்கிற ஒரே காரணத்தால் தான். ஆனால் அரசு மருத்துவமனையும், தனியார் மருத்துவமனைகள் போல ஒவ்வொன்றுக்கும் தனித் தனியாக பணம் பறிப்பது, மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.ஆனால் பொதுமக்கள் உடல்நிலை சரியில்லாமலும், விபத்து ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டாலும் போதிய சிகிச்சை அளிக்க மருத்துவர்களும் இல்லை, செவிலியர்களும் இல்லை என்பதே பதிலாக வருகிறது. இதனால் பாதிப்புக்கு உள்ளானவர்களை மேல் சிகிச்சைக்காக அரசு தலைமை பொது மருத்துவமனைக்கு மாற்றப்படும் சூழ்நிலை இருக்கிறது.பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில், ஸ்கேன் வசதி இல்லாத காரணத்தால், பொதுமக்கள் தனியார் ஸ்கேன் நிறுவனங்களை நாடிச் செல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறார்கள். பல இடங்களில் அரசு மருத்துவமனைகளில் முறையான வசதிகள் இல்லாத நிலையே நீடிக்கிறதுபெயருக்கு ஒரு மருத்துவமனைக்கு சென்று, ஆய்வு என்கிற பெயரில் அமைச்சர் நாடகம் ஒன்றை நடத்திவிட்டு செல்வதன் நோக்கம் என்ன? அரசு மருத்துவமனைகளை அழிக்கத்தான் அமைச்சராக இருக்கிறாரா மா.சு? என்ற கேள்வியைத்தான் முன்வைக்கின்றனர் மக்கள். 

via News J : https://ift.tt/L1h6NJ2