News J
597 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Media கேளிக்கையாகும் தக்காளிகள்!கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தக்காளி விலை என்பது பேசுபொருளாகிவிட்ட ஒன்றாக உள்ளது.  தமிழ் சினிமாவில்  நம் வடிவேலு கூறுவது போல என்ன ஒரு கிலோ தக்காளி ஐநூறு ரூபாயா..! ஒரு கிலோ காரட்டு ஆயறுபாயா..!! என்பது  போல தமிழ்நாட்டில் ஒருகிலோ தக்காளியின் விலை நூறு ருபாய்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது உள்ள நிலையில்  ஒரு பெட்டி தக்காளியின் விலை 1400 முதல் 1500 வரை விலை நிர்ணயம் செய்யப்படு விற்கப்படுகிறது.  ஏனெனில், தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் இன்றைக்கு 28 வண்டிகளில் 380 டன் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்க்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.  தக்காளி விலை உயர்வால்; ஆங்காங்கே சில அரசியல்வாதிகள், மற்றும் நடிகர்மன்ற தலைவர்கள் எனப பல இடங்களில் தக்காளியை இலவசமாக வழங்கிவருகின்றனர். இன்னிலையில், மத்தியப் பிரதேசத்தில் மொபைல் கடை வியாபாரி ஒருவர் ஒரு ’’ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி’’!! இலவசம் என்று அறிவித்து உள்ள சம்பவம் சமூக வளைத்தலங்களில் பரவலாகி வருகிறது.Chennai vendor sells tomato at ₹20/kg for a day amid soaring price | Mint #AskBetterQuestions   இரண்டு கிலோ தக்காளி இலவசம்..!புதுடெல்லி: ‘ஸ்மார்ட் போன்’ வாங்கும் வாடிக்கையாளருக்கு, இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவது, பாதுகாவலரை நியமித்து தக்காளி விற்பனை செய்வது போன்ற நுாதன சம்பவங்கள் பல மாநிலங்களில் அரங்கேறி வருகின்றன.  இது போன்றே மத்தியப் பிரதேசத்தில் அசோக் நகர் என்னும் இடத்தில் மொபைல் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசமாக  வழங்கப்படும்  என்று கூறி  வழங்கிவருகிறார்.  இதனை அறிந்த மக்கள்  ஆர்வமுடன் அவரது கடைக்கு சென்று பார்வையிடுகின்றனர். இந்த தகவலின் பேரில் அவரது கடையில் அதிக அளவில் செல்போன் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடை வீதிகளில் அதிக கூட்ட நெரிசல்களுடன் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க சில கடைகளில் ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்துக்கொண்டு வருகிறது. ’பவுன்சருடன் தக்காளி விற்பனை’:Amid Soaring Prices, UP Vegetable Seller Hires Bouncers To Keep Tomatoes Safe From 'Loot'தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதாலும், அதன் விலை கடும் உயர்வாலும் காய்கறி கடை வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமக உள்ளது. நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ 100 ரூபாயில் துவங்கி, 160 ரூபாய் வரை மாநிலத்துக்கு மாநிலம்  விலை என்பது மாறிக்கொண்டு வருகிறது. இன்னிலை இருக்க காய்கறி வியாபாரிகளும் பல நூதன முறையில்  தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்து உள்ளது.  உத்திரப் பிரதேசம்  வாரணாசியில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை வைத்து உள்ளார், அஜய் பவுஜி என்ற வியாபாரி.இவர் தனது கடையில் அதிக அளவு தக்காளி வைத்து விற்பனை செய்து வந்து உள்ளார்.  தக்காளியின் விலை உச்சத்தில் இருபதால் இவரது கடையில் திருட்டு சம்பவம் நடக்கிறதாக கூறுகிறார். இதனால் இவர்  ‘பவுன்சர்’ என்னும் தனியார் நிறுவன பாதுகாவலரை பணியமற்தி, தக்காளி விற்பனை செய்து வருகிறார். ஏனென்றால் இவரது கடைகளில் தக்காளியை திருடி விட்டு திருடவில்லை என்றும், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதனால்  கடைக்கு பாதுகாவலர் வேண்டும் என்றும் ஒரு ‘பவுன்சரை’ நியமித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கெல்லாம் தக்காளி விலை குறைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மக்கள் கூறுகின்றனர். 

via News J : https://ift.tt/MQkoF5V
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/yamuna.jpg">Media</a>     டெல்லியில் யமுனை நதிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு நேற்று அம்மாநில அரசு வெள்ள அபாய எச்சரிக்கையினை விடுத்துள்ளது. குறிப்பாக நேற்றைக்கு யமுனை நதியின் கொள்ளளவு ஆனது 206 மீட்டரை தாண்டியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த நான்கைந்து நாட்களாக வட மாநிலங்களில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பொருள் சேதங்களும் உயிர் சேதங்களும் ஏற்பட்டு நாட்டையே நிலைகுலைய வைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து யமுனை நதிக்கரையின் நீர்மட்டம் 206 மீட்டராக உயர்ந்துள்ளது. மேலும் மத்திய நீர்வள ஆணையத்தின் வெள்ள கண்காணிப்பு போர்டலானது தில்லியின் பழைய ரயில்வே பாலத்தில் கீழ் நீர்மட்ட அளவீட்டுமானியைப் பொறுத்தியுள்ளது. அதன்படி செவ்வாய்க்கிழமையான இன்று காலை 6 மணிக்கும் யமுனை நதியின் நீர்மட்டமானது 206.28 மீட்டராக உயர்ந்திருக்கிறது. இதற்கு ஹரியணாவில் உள்ள யமுனாநகரில் அமைந்துள்ள ஹத்னிகுண்ட் தடுப்பணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீரேக் காரணமாகும்.<a href="https://victorianweb.org/technology/railways/india/16.jpg">The Old Yamuna Bridge crossing the Yamuna River in Delhi</a>     மேற்கொண்டு இன்று பிற்பகல் யமுனை நதியின் கொள்ளளவானது 206.65 மீட்டராக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அது படிப்படியாக குறையும் வாய்ப்பும் உள்ளது என்று செய்தி நிறுவனமான பிடிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,<strong>டெல்லி வானிலைக் குறித்த டாப் 10 அப்டேட்ஸ்!</strong>1) கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக யமுனை நதியில் நீர் மட்டம் அபாய கட்டத்தை தாண்டியதால், தேசிய தலைநகரில் உள்ள பழைய யமுனை பாலத்தின் மீது ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.2) வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறையின் கூற்றுப்படி, திங்கள்கிழமை மதியம் 3 மணியளவில் ஹத்னிகுண்ட் தடுப்பணை வழியாக சுமார் 2,15,677 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.3) திங்கள்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தேசிய தலைநகரில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட வாய்ப்பில்லை, ஆனால் எந்தவொரு நிகழ்வையும் சமாளிக்க நகர அரசாங்கம் தயாராக உள்ளது என்று கூறினார். 4) கிழக்கு தில்லி மாவட்டத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், திங்கள்கிழமை இரவு சில பகுதிகளில் வெள்ள நீர் புகுந்ததை அடுத்து, வெளியேற்றும் பணி தொடங்கியது என்று தெரிவித்தார். “பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே உயரமான இடங்களில் உள்ள முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.<a href="https://images.livemint.com/img/2019/08/21/600x338/20190820112L_1566365881977_1566365903760.jpg">Delhi's old iron bridge shut as Yamuna continues to flow above the danger mark | Mint #AskBetterQuestions</a>5) ஹத்னிகுண்ட் அணையின் நீர்வரத்து திங்கள்கிழமை 3 லட்சம் கனஅடியாக உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசனம் மற்றும் வெள்ளக் கட்டுப்பாட்டுத் துறை தெரிவித்துள்ளது. பொதுவாக, அணைக்கு நீர்வரத்து 352 கனஅடியாக இருக்கும், ஆனால் நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரிக்கிறது. ஒரு கியூசெக் என்பது வினாடிக்கு 28.32 லிட்டருக்கு சமம்.6) தில்லி அரசு ஞாயிற்றுக்கிழமை வெள்ள அபாய எச்சரிக்கையை வெளியிட்டது. பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் விழிப்புடன் இருக்கவும் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விரைவு நடவடிக்கை குழுக்கள் மற்றும் படகுகளும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்று பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது. 7) கெஜ்ரிவால் அரசு வெள்ளம் பாதித்த பகுதிகளையும், யமுனையின் நீர்மட்டத்தையும் கண்காணிக்க 16 கட்டுப்பாட்டு அறைகளை அமைத்துள்ளது. 8) வட இந்தியப் பகுதி முழுவதும் மற்றும் குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் பெய்த கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. 9) ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 1982 ஆம் ஆண்டு முதல் ஜூலை மாதத்தில் ஒரே நாளில் டெல்லி அதன் அதிகபட்ச மழையை (153 மிமீ) கண்டது. அடுத்த 24 மணி நேரத்தில் நகரத்தில் கூடுதலாக 107 மிமீ மழை பெய்தது, நிலைமையை மோசமாக்கியது.10) கனமழையால் சாலைகள் பெருக்கெடுத்து ஓடும் நீரோடைகளாகவும், பூங்காக்கள் நீர்நிலைகளாகவும், சந்தைப் பகுதிகள் நீரில் மூழ்கிய பகுதிகளாகவும் மாறியது. தில்லி அரசு திங்கள்கிழமை அனைத்துப் பள்ளிகளையும் மூடுவதாக அறிவித்து, அரசு அதிகாரிகளின் ஞாயிறு விடுமுறையை ரத்து செய்து, அவர்களை களத்தில் இருக்கும்படி அறிவுறுத்தியிருந்தது. <pre id="tw-target-text" class="tw-data-text tw-text-large tw-ta" dir="ltr" data-placeholder="Translation"></pre><pre id="tw-target-text" class="tw-data-text tw…