Mediaமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பு..தமிழ்நாடு தற்போது அமைதிப் பூங்கா இல்லை அமளிப் பூங்காவாக உள்ளது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா மற்றும் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியவர்களின் காலத்தில்தான் தமிழகம் அமைதிபூங்காவாக இருந்தது. பொதுமக்கள் அமைதியாக இருக்க விரும்புகிறார்கள். அது எங்கள் ஆட்சசியில் தான் இருந்தது. காந்தி சொல்வது போல “நகை அணிந்து நடு இரவில் செல்லும்போதுதான் உண்மையான சுதந்திரம்”. அதனை செயல்படுத்திய ஆட்சி அதிமுக ஆட்சிதான். ஆனால் இப்போது திமுக ஆட்ச்யில் வன்முறை தலைவிரித்தாடுகிறது. ஆளுங்கட்சி கடலூர் எம் எல் ஏ ஐப்பன் மீது பெட்ரோல் குண்டு வீசப்படுகிறது. ஒரு ஆளும் கட்சி எம்.எல்.ஏவிற்கே பாதுகாப்புக் கொடுக்க முடியாமல் இந்த விடியா அரசு தடுமாறுகிறது.கொலைகொலையா முந்திரிக்கா போல கொலை கொலையா நடக்கிறது தமிழகத்தில். ஸ்டாலின் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தாமல், நாங்கள் எதிர்த்து போராட்டங்களும் வலியுறுத்துல்களும் செய்த பிறகுதான் ஆலோசனைக் கூட்டம் போடுகிறார். இருந்தும் என்ன பயன். இன்றைக்கு ஒரு ரிமோட் முதலமைச்சர், பொம்மை முதலமைச்சரின் ஆட்சிதான் நடைபெற்று வருகிறது.Mediaசெவி சாய்க்காத அரசு…!நாமிருப்பது ராம்தாஸ் நகர், இது எப்படி இருக்கிறது என்று பாருங்கள். ரொம்ப காலமாக கட்டமைப்பு வசதி இந்த பகுதியில் இல்லை. தொகுதி டீ லிமிட்டேசனுக்குள் இந்த பகுதி வருகிறது. இது ராயபுரம் பகுதிக்கு உட்பட்டது. 1044 வீடுகள் 136 கோடி ரூபாயில் 4/6/2018 அன்றைக்கு அடிக்கல் நாட்டினோம். இரண்டு வருடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் அன்றைக்கு அடிக்கல் நாட்டிய கல்வெட்டை எடுத்துவிட்டு, தற்போது ஸ்டாலின் திறந்ததாக அடிக்கலை மாற்றியுள்ளனர். 2021 லே கட்டடப் பணிகளை முடித்துவிட்டோம். தேர்தல் வந்ததால் நாங்கள் அதனை திறக்கவில்லை. ஆனால் தற்போது இதனை ஸ்டாலின் திறந்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார். ராயபுரத்தினை ஒட்டியுள்ள நான்கு பகுதி மக்களுக்காக கட்டப்பட்டது இந்த குடியிருப்புகள். ஆனால் இந்த அரசு எங்கெங்கோ இருந்து மக்களை இங்கு தங்க வைக்கிறீர்கள். 4 லட்சம் கொடுங்கள், 5 லட்சம் கொடுங்கள் என்று விடியா திமுக அரசு மக்களை வதைக்கிறது. அவர்கள் தற்போது போராடி வருகிறார்கள். அவர்களது போராட்டத்திற்கு செவி சாய்த்து அரசு அவர்களை கண்டுகொள்ள வேண்டும்.மேலும் பேசிய முன்னாள் அமைச்சர் அவர்கள், மன்னிப்புக்கடிதம் மூலம் மீண்டும் கட்சியில் சேர்வது என்பது அம்மா காலத்திலேயே உள்ளது. அதையே தற்போதைய பொதுச்செயலாளரும் செய்துள்ளார். ஆனால் இந்த மன்னிப்புக் கடிதம் மூவருக்கு பொருந்தாது. அவர்கள் பன்னீர், டிடிவி, சசிகலா ஆகிய மூவராவார்கள்.கோடநாடு பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, பன்னீர் திமுகவின் கைக்கூலி. அவர் ஒரு பொம்மல்லாட்ட பொம்மை. அவரை திமுக இயக்குகிறது. அவரால் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.திமுகவை வீட்டுக்கு அனுப்ப மக்கள் ரெடி..!மேலும் தமிழக மக்கள் தற்போது கொதித்து போய் உள்ளனர். முக்கியமாக நாடாளுமன்றத் தேர்தலைவிட அவர்கள் சட்டமன்றத் தேர்தலைதான் விரும்புகின்றனர். அவ்வளவு அவலம். தக்காளி, வெங்காயம், இஞ்சி என்று அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் விலையேறி போய்விட்டது. விலைவாசியைக் கட்டுப்படுத்த முடியாமல் மக்களுக்கு சுமையை ஏற்படுத்தியிருக்கிறது திமுக. ஆனால் அம்மா காலத்தில் இந்த விலைவாசி பிரச்சினை சரியாக அனுகப்பட்டு மக்களை நல்வழியில் கொண்டு சென்றது.இதைவிட அவலாமாந்து டாஸ்மாக் பிரச்சினை. டாஸ்மாக்கை காலையில் திறக்க வேண்டும் போல் பேசுகிறார்கள் திமுகவினர். வேலைக்கு செல்பவர்கள் காலையிலே குடித்துவிட்டு சென்றால் விளங்குமா? எங்களிடம் இருக்கும் வரை முத்துச்சாமி நன்றாகத்தான் இருந்தார். ஆனால் அங்கு சென்றதும் எப்படி எப்படி மாறி இருக்கிறார் பாருங்கள். திடீரென்று டெட்ரா பேக் என்று சொல்கிறார். மதுப்பிரியர்கள் டெட்ரா பேக்கினை வீட்டிற்கு எடுத்துச் சென்றால், அதனை வீட்டில் பார்க்கும் குழந்தைகள், ஜூஸ் என்று நினைத்து குடித்துவிட்டால் அதற்கு முத்துச்சாமி பொறுப்பேற்பாரா? என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சவுக்கடி கேள்விக்கனைகளை செய்தியாளர்களிடம் முன்வைத்தார்.வரும் 18 ஆம் தெதி தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார் என்று கூறி தனது செய்தியாளர் சந்திப்பினை முடித்துக்கொண்டார் முன்னாள் அமைச்சர் அவர்கள்.
via News J : https://ift.tt/xs7uyUn
via News J : https://ift.tt/xs7uyUn
Mediaஉலகின் கவனைத்தை ஈர்த்த பெண்:பெண்களின் விடுதலைக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பலர் குரல் எழுப்பி உள்ளனர். அவர்களின் உரிமைக்காக பாடுபட்டவர்கள் பலர் உள்ளனர். பெண்களின் கல்வி குறித்து அவர்களும் படிப்பறிவு பெற வேண்டும் எண்ணத்தோடு புரட்சி செய்தவர்கள் ஏராளம். அவர்களில் ’மலாலா’ என்ற பெயரை நம்மால் அவ்வளவு எளிதில் நம்மால் மறந்து விட முடியாது. ஆம் பெண்களின் கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர் தான் மலாலா. தனது இளம் வயதிலேயே அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாயின் பிறந்த நாளை ஜூலை 12ம் தேதி சர்வதேச மலாலா தினமாக கொண்டாடப்படுகிறது. ஒரு பாகிஸ்தானனிய பெண்ணாக இருந்த மலாலா இன்று உலக பெண்களுக்காக போராடி வருகின்றார். மலாலா யூசுப்சாய் பாகிஸ்தானில் உள்ள ஸ்வாட் பள்ளத்தாக்கில் பிறந்தார். பாகிஸ்தானில் தலிபான் அரசு பெண்கள் பள்ளிக்கு செல்ல தடை விதித்தது. இதானல் இவரால் பள்ளி படிப்பை தொடர முடியாமல் போனது. இருந்தாலும் தலிபான் அரசின் தடியை மீறி பள்ளிக் கூரம் சென்றார். இதனால் தலிபான் அரசு அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியது. மலாலா யூசஃப்சாய் இந்தப் பெயரை உலகில் நிலைநாட்டச் செய்ததில் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் மிக முக்கியப் பங்கு உண்டு உள்ளது என்றும் சொல்லலாம். உலகப் பெண்களின் ஒற்றை குரல்!பாகிஸ்தானை சேர்ந்த இளம் பெண் ஆன மலாலா பெண்களின் கல்விக்காக குரல் கொடுத்ததால் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இறையானார். இவர் 2012 ஆம் ஆண்டு தலிபான் நாட்டு பெண்களுக்கான உரிமை குறித்து பிரசாரத்தில் ஈடுபட்டபோது தலிபான்களால் சுடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப் பட்டார் மலாலா. மரணத்தின் விளிம்பு வரை சென்று மீண்ட அவர், பயந்து ஒதுங்கிவிடாமல் தனது கருத்துக்களை முன்பைவிட வலுவாக முன்வைத்தார். அவர் தந்தை உடன் கைக்கோர்து பெண்களுக்கன அறக்கட்டள்சி ஒன்றை நிறூவினார். இந்த அறக்கட்டளையானது பெண்களின் கல்வி மற்றும் உரிமைகளை பேசியது. பெண்கல்வி உரிமைக்காகவும். குழந்தைகளின் கல்விக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தா மலாலாவுக்கு 2014-ஆம் ஆண்டு நொபல் பரிசு வழ்ங்கப்பட்டது. மிகவும் இளம் வயதில் அமைதி நோபல் பரிசுப் பெற்றவர் இவரேயாவார். உலகின் கவனத்தை ஈர்த்த பெண் கல்வி போராளி... இன்று சர்வதேச மலாலா தினம் | Tamil News Today is International Malala Dayபெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 2017ல் ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டர். இவர் நோபல் பரிசு மட்டுமல்லாமல் 40-பதிற்க்கும் மேற்பட்ட விருதுகளையும், பரிசுகளைஉம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மேலும் 2017-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் அமைதி தூதராக நியமிக்கப்பட்டார். இவர் 2013ஆம் ஆண்டு ஜூலை 12ம் தேதி மலாலா தனது 16ஆவது பிறந்தநாள் அன்று ஐக்கிய நாடுகள் சபையை தொடர்புகொண்டு உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் கல்வி கற்க வேண்டும் என்று கேட்டு கொண்டார். மலாலா பற்றிய பல புத்தகங்கள் வெளிவந்து கொண்டேதான் உள்ளன.அவற்றில் தமிழில் மலாலா வரலாற்றை, ‘மலாலா கரும்பலகை யுத்தம்’ என்ற தலைப்பில் எழுதியிருக்கிறார் ஆயிஷா நடராசன். 2013-ம் ஆண்டு மலாலா ஐ.நா.வில் பெண் கல்வி குறித்து உரையாற்றிக்கொண்டிருக்கும்போது, அவருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக, அன்று அவரின் பிறந்தநாளை ‘மலாலா தினம்’ என்று அறிவித்தது ஐ.நா. இப்படி பெண்களின் கள்விக்காகவும் உரிமைகாகவும் போராடி வரும் மலாலாவிற்கு அனைவரின் சார்பாகவும் பிறந்த நாள் வாழ்த்துகள்..!!
via News J : https://ift.tt/pmgzOx0
via News J : https://ift.tt/pmgzOx0
Mediaவட மாநிலங்களில் கனமழை தொடரும் சூழலில் செவ்வாய்க்கிழமை மட்டும் 20 பேர் உயிரிழந்தனர். தற்போது இதனால் வடமாநிலங்களில் மழை, வெள்ள பாதிப்புகளால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் பலி எண்ணிக்கை நேற்று ஒரே நாளில் 31 ஆகப் பதிவாகியிருந்தது. இது அம்மாநில மக்களிடம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதுவரை அங்கு பருவமழைக் காலம் தொடங்கியதிலிருந்து 80 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தராகண்டில் 5, உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் தலா ஒன்று என உயிர்ப்பலிகள் பதிவாகியுள்ளன. இது நாட்டையே தற்போது உலுக்கியுள்ளது.இம்சிக்கும் மழை.. பாதிப்பில் இமாச்சல் பிரதேசம்!.. Himachal Pradesh: Videos that bear testimony to havoc caused by torrential rain | WATCH | Mint #AskBetterQuestionsகடந்த மூன்று நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்களில் 31 பேர் நிலச்சரிவின் காரணமாக இறந்துள்ளனர். 1300 சாலைகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன. 79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகின. 333 வீடுகள் பகுதியாக சேதமடைந்துள்ளன. சிம்லா – மனாலி, சண்டிகர் – மனாலி, சிம்லா – குல்கா தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை இமாச்சலப் பிரதேசத்தில் மட்டும் 80 பேர் உயிரிழந்துள்ளனர். அனைத்துப் பள்ளிகளுக்கும் ஜூலை 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்வாணையம் நடத்தும் தேர்வு ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.பிற மாநிலங்களின் நிலை..!இன்று அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலயா, சிக்கிம் மாநிலங்களில் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிஹார், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட் மற்றும் மேற்கு மத்தியப் பிரதேசத்தில் அதிகனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட், கிழக்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கொங்கன், தெலங்கானா, கோவா, கடலோர ஆந்திரப் பிரதேசம், கடலோர கர்நாடகா, கேரளா மற்றும் மாஹேவில் ஆங்காங்கே கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி பருவமழை மற்றும் பருவக்காற்று சங்கமிப்பதால் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானிலை ஆய்வு மைய கணிப்பின்படி 23 மாநிலங்களில் கன மற்றும் மிக கன மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/wUDrTP9
via News J : https://ift.tt/wUDrTP9
Mediaதமிழ் கல்வெட்டுகளில் உள்ள வட்டெழுத்துகளை படிக்க புதிய மென்பொருள் ஒன்று தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழியானது எழுத்தாக்கம் பெற்றபோது முதலில் தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளாகவும், பின் வட்டெழுத்து, தற்கால எழுத்துகளாகவும் உருமாறி பயன்பாட்டில் இருந்து வருகின்றன. ஆனால் நமது வரலாற்றை நாம் தெரிந்துகொள்வதற்கு முதலில் கல்வெட்டுகளை வாசிக்கவும், அதில் உள்ள வட்டெழுத்துக்களை வாசிக்கவும் பழக வேண்டும்.இந்த வட்டெழுத்து முறையானது கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரை பரவலாக தமிழகத்திலும், தற்போதைய கேராளவிலும் வழக்கத்தில் இருந்தது. அதற்கு முன் குகைகளிலும் கற்பாறைகளிலும் ஓவியங்களைத் தீட்டி வருங்கால சந்தினருக்கு தங்களுடைய வேட்டையாடுதல், விவசாயம் ஆகியவற்றை பழக்கினார்கள். பிறகுதான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்தான். பின்னர் மொழியை எழுதுவதற்கு எழுத்துமுறையைக் கண்டுபிடித்தான். அப்படி ஆதிகாலத்தில் உருவானதுதான் வட்டெழுத்துக்கள் ஆகும்.வட்டெழுத்தினை வாசிக்க புதிய மென்பொருள்.!வட்டெழுத்து - Wikiwandஇந்த வட்டெழுத்துக்களை கல்வெட்டு ஆய்வாளர்களால் மட்டுமே படிக்க முடியும் என்பதால் பல கல்வெட்டுகள் சாமானியர்களால் அழிக்கப்பட்டும் சேதப்படுத்தப்பட்டும் வீணாகி உள்ளன. மீதமுள்ள கல்வெட்டுகளில் உள்ள தகவல்களை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் தமிழ் இணைய கல்வி கழகம் சார்பில், புதிய மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மென்பொருளின் விசேசம் என்னவென்றால், இந்தில் வட்டெழுத்து கல்வெட்டின் புகைப்படத்தை பதிவெற்றினால், அதில் உள்ள எழுத்துருக்களை, தற்கால தமிழ் எழுத்து வடிவில் மாற்றி தந்துவிடும்.சென்னை அண்ணா பல்கலைக் கழக உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த மென்பொருளில் இரண்டு வகை எழுத்துருக்களை அடையாளம் காணும் வகையில், சிவகாசி வேள்விக்குடி வட்டெழுத்து படிப்பான்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது, ஆய்வாளர்களின் பயன்பாட்டிற்காக இலவசமாக வழங்கப்பட உள்ளது.
via News J : https://ift.tt/B6Qe7dn
via News J : https://ift.tt/B6Qe7dn
Mediaசர்வதேச அளவில் ஜாக் மா:கோடீஸ்வரர்கள் என்றதுமே நமக்கு முதலில் நியாபகம் வருவது டாடா பிர்லாதான். அப்படிப்பட்ட வரிசையில் சர்வதேச அளவில் தொழில் துறையில் ஜாக் மா என்றால் தெரியாதவர்கள் தொழில்துறையில் இருக்க மாட்டார்கள். இவர் சீன நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரராக அனைத்து துறைகளிலும் இன்றளவும் வலம் வருகிறார் ஜாக் மா அவர்கள். இவரை வளர்த்து விட்டதில் முக்கிய பங்கு சீன அரசிற்கு உள்ளது என்றும் சொல்லலாம். ஏனென்றால் ஒரு தொழில் துறையில் அதற்கான முன்னேற்றங்களை எப்படி வளர்ப்பது என்பதிற்கு ஓரு முக்கிய எடுத்துக்காட்டாக ஜாக் மா முன்னிறுத்தியது. இவரது தொழில் நிறுவனங்கள் அனைத்து நாடுகளிலும் தொடங்க ஆரமித்தது. இவரது அலிபாபா நிறுவனமானது இந்தியாவில் கால் பதிக்க ஆரம்பித்தது. இந்த நிறுவனமானது இந்தியர்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்றது. இப்படியான நிலை இருக்க சீனா அரசின் மீது ஜாக் மா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கான பலனாக சீன அரசிடம் இருந்து பல்வேறு வகையில் பிரச்சனைகளை சந்தித்தார் ஜாக். இப்படியாக பரப்பரப்பாக இயங்கி கொண்டிருந்த ஜாக் மா அவர்கள் திடீரென அமைதியாகி விட்டார். இவரின் சைலெண்ட் மோடிற்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்தனர் பலர். புலி பதுங்குவது பாய்வதற்கு தான் என்பதை போல இவர் சைலண்ட் ஆக இருந்து பல காரியங்களை செய்துள்ளார்.Pakistan approves major economic policy to attract foreign inflowsரகசியப் பயணம்:அப்படி இவர் செய்தது என்னவென்றால் இவ்வளவு நாட்களாக காணாமல் போன ஜக் மா அவர்கள் பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இதனால் இவர் நீண்ட நாட்களுக்குப் பிறகு தலைப்பு செய்தியாகியுள்ளார். இது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த செய்தி நிறுவனம் ஒன்று இவர் குறித்த செய்தி ஒன்றினை வெளியிட்டது. இதனால் பெரும் பரப்பரப்பு நிலவ ஆரம்பித்தது. அவர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா? இவர் கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி ஹாங்காங்கில் இருந்து லாகூர் சென்ற ஜாக் மா, அங்குள்ள அரசுக்கு சொந்தமான விடுதி ஒன்றில் ஒரு நாள் முழுவதும் தங்கி உள்ளார். என்று இன்வஸ்ட்மென்ட் முன்னாள் தலைவர் முகமது அஸ்பர் அஹ்சானும் உறுதி செய்துள்ளார். அந்த பயணத்தின் போது ஜாக் மா அவர்கள் யாரையும் சந்திக்கவில்லை. அரசு அதிகாரிகளையோ, ஊடகவியலாளர்களையோ அவர் சந்திக்கவில்லை என்ற தகவல் தெரியவந்தது. இதன் மூலம் ஜாக் மா உடன் சீனாவை சேர்ந்த ஐந்து தொழிலதிபர்கள், டேனிஷை சேர்ந்த இருவர், ஒரு அமெரிக்கர் ஆகியோர் இவருடன் சென்றுள்ளனர்.இதன்மூலம் தொழில் ரீதியாக பாகிஸ்தான் சென்று இருக்கலாம் என்று கூறுகின்றன. தொழில் ரீதியாக பாகிஸ்தானில் முதலீடுகள் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர். இதன் மூலம் ஜூன் 30 ஆம் தேதி அன்று தனியார் ஜெட் விமானத்தின் மூலம் புறப்பட்டார். இந்த பயணத்தில் குறிப்பிடுவது போல ஜாக் பாகிஸ்தானில் முதலீடு செய்கிறார் என்றால் பாகிஸ்தான் பொருளாதாரத்தில் முன்னேற வாய்ப்பு உள்ளதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை. இவரின் தொழில் முறையானது புரட்சிகரமாகவும் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் பணியாகத்தான் இருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை. மேலும் ஆலோசனை கூட்டத்தில் ஐடி தொழில்கள் குறித்தும் அதன் அனுபவங்களையும் பாகிஸ்தான் தொழிலதிபர்கள், அதிகாரிகள் கேட்டறிந்தனர் எனவும், புதிய ஆலோசனைகளை வழங்கினார் எனவும் கூறப்படுகிறது. இந்த ஆலோசனை மூலம் அந்நாட்டு ஐடித்துறை புத்துணர்ச்சி பெறும் எனவும் கூறுகின்றனர். இருந்தாலும் இது தொடர்பானா அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் வரை நாம் எதையும் உறுதி செய்ய முடியாது. தகவல் வெளியாகும் வரை காத்திருப்போம்.
via News J : https://ift.tt/DGCYTR6
via News J : https://ift.tt/DGCYTR6
Mediaதக்காளியினை முதன் முதலில் பயிரிட்டது யார்?பெரு, சிலி, பொலிவியா ஈகுவடார் ஆகிய நாடுகளில் உள்ள ஆண்டிஸ் மலைத்தொடரில்தான் முதன் முறையாகத் தக்காளி பயிரிடப்பட்டதாக நம்பப்படுகிறது. கிபி 700 களில் ஆஸ்டெக்ஸ் மற்றும் இன்காஸ் கலாச்சாரங்களில் தக்காளி பயிரிடப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன என்று தாவரவியலாளர் ரவி மேத்தா தனது ஆய்வுக் கட்டுரையில் குறீப்பிட்டுள்ளார். எனினும் ஆண்டிஸ் மலைப் பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளியில் புளிப்புச்சுவை அதிகமாக இருந்துள்ளது. இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கு மனித இனத்தால் பயிரிடப்பட்ட தக்காளியானது அளவில் சிறியதாகவும் புளிப்புச் சுவை மிகுந்தவையாகவும் உள்ளது என ரவிமேத்தா குறிப்பிடுகிறார். மேலும் தக்காளியானது தென்னமெரிக்காவில் இருந்து மத்திய அமெரிக்காவிற்கு சுற்றுலாப் பயணிகள் மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது என்று ஒரு வரலாற்றுத் தகவல் இருக்கிறது. ஆனால் தக்காளி பயிருடுதல் எங்கே முதன் முதலில் பயிரிடப்பட்டது என்று ஆதாரப்பூர்வ தகவல் இல்லை.tomatoes price hikeதக்காளி இந்தியாவுக்கு எப்படி வந்தது?போர்ச்சுகீசியர்கள்தான் தக்காளியினை இந்தியாவிற்குள் அறிமுகப்படுத்தினார்கள் என்று உணவு வரலாற்று ஆசிரியர் கே.டி. அட்சயா கூறியுள்ளார். தக்காளி மட்டுமல்லாமல், மக்காச்சோளம், வெண்ணெய், முந்திரி, குடை மிளகாய் உட்பட்ட உணவுப் பொருட்களையும் போர்ச்சுக்கிசியர்களே அறிமுகப் படுத்தியுள்ளார்கள். இந்தியாவின் தட்பவெப்பமும், மண்வகைகளும் தக்காளி பயிருடுவதற்கு ஏற்றது ஆகும். இந்தியாவில் எங்கு முதன் முதலில் எங்கு பயிரிடப்பட்டது என்றும் நமக்கு கிடைக்கவில்லை. சொல்லப்போனால் தக்காளிக்கு இந்திய அளவில் 200 ஆண்டுகால வரலாறு கூட கிடையாது. அன்றைக்கு புளியை விட தக்காளி விலைக் குறைவாக இருந்ததால் புளிக்கு மாற்றாக தக்காளியானது சமையலில் பயன்படுத்தப்பட்டது. ஆனல இன்றைக்கு தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்று ஆகிவிட்டது. இதுவெல்லாம் வெறும் 30 ஆண்டுகளில் நடந்தேறிய மாற்றங்கள் மட்டுமே.உலக அளவில் தக்காளி உற்பத்தியில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு மட்டும் 20 மில்லியன் டன் தக்காளியானது உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மாநில அளவில் மத்திய பிரதேசம் 14.63%, ஆந்திராவில் 10.92 %, கர்நாடாகவில் 10.23% தக்காளியானது பயிரிடப்படுகிறது.
via News J : https://ift.tt/2czpfQY
via News J : https://ift.tt/2czpfQY
Mediaஇசை என்று சொன்னவுடன் நமக்கு எம்.எஸ்.வி, இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் என்று ஒரு லெஜெண்ட்களின் பட்டியலையே கூறமுடியும். அதன் வரிசையில் பாடலாசிரியர்கள் என்று சொல்லும்போது கண்ணதாசன், வாலி, வைரமுத்து என்று ஒரு பட்டியல் இருக்கிறது. அந்தப் பட்டியலில் நா.முத்துக்குமார் என்கிற மகத்தான கவிஞருக்கு என்றைக்குமே இடம் உண்டு. ஆம் காலத்தால் அழிந்தும் உள்ளத்தால் வாழ்ந்தும் பல இளைஞர்களின் செவிகளுக்கும் மனதிற்கும் தெம்பு அளிக்கும் வரிகளை விட்டுச்சென்று போயிருக்கிறார் நா.முத்துக்குமார்.இளைய சமுதாயத்திற்கான பாடலாசிரியர்!நா.முத்துக்குமார் அவர்கள் வரிகளுக்காக அதிகம் மெனக்கெடும் நபராக இருந்துள்ளார். காலப்போக்கில் வரிகள் வந்து அவர் விரல்களுக்குள் குவிந்துவிட்டன. புதுப்பேட்டை படத்தில் “ஒருநாளில் வாழ்க்கை” பாடலை தங்களது காலர் டியூனாக வைத்திருக்காத இளைஞர்கள் இல்லை என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்தப் பாடலின் ஒவ்வொரு வரிகளும் உத்வேகத்தினைக் கொடுக்கும். தனிமை விரும்பிகளுக்கான அல்லது அன்பிற்காக ஏங்கும் இதயம் கொண்டவர்களுக்கான பாடலாசிரியராகவும் நா.முத்துக்குமார் இருந்துள்ளார். தரமணி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் “யாரோ உச்சிக்கிளை மேலே” பாடலை அதற்கு உதாரணமாக சொல்லலாம். “அடி கண்ணீரில் கண்கள் கலங்கும்போது நீ வந்தாயே, உன் தோளில் நானும் சாயும்போது நீ என் தாயே” போன்ற வரிகள் காலத்தால் அழியாதவை. அவருக்கு இரண்டு பாடல்கள் தேசிய விருதினைப் பெற்று தந்து இருக்கிறது. ஒன்று தங்க மீன்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை” பாடல். இந்தப் பாடலைப் பற்றி இயக்குநர் ராம் கூறும்போது, இந்தப் பாடலின் காட்சியமைப்பினால் இந்தப் பாடல் தந்தை மகளுக்கான பாடலாக மாறிவிட்டது, ஆனால் அன்பு வைத்துள்ள ஒவ்வொரு உறவுக்கும் இந்தப் பாடல் பொருந்தும் என்று பேசியிருப்பார். “கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி” போன்ற வரியெல்லாம் நமக்கு ஆசிர்வாதமூட்டக்கூடிய வரிகள். அதனைத் தொடர்ந்து சைவம் திரைப்படத்தில் இடம்பெற்ற “அழகே அழகே” பாடலுக்கும் தேசிய விருது கிடைத்தது.Na.Muthukumar: `காரில் போகும்போதே 10 நிமிடத்தில் எழுதிய பாட்டு!' - நா. முத்துக்குமார் சொன்ன சீக்ரெட்|Na. Muthukumar birthday sharings - Vikatanமுக்கியமாக இசையமைப்பாளர் யுவனுடன் சேர்ந்து பல ஹிட்ஸ்களை நா.முத்துக்குமார் தமிழ் சமுதாயத்திற்கு அருளியிருக்கிறார். காதல்கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, கற்றது தமிழ், தங்கமீன்கள், தரமணி என்று பலப் படங்களின் வெற்றிக்கு யுவனின் இசையுடன் நா.முத்துக்குமாரின் வரிகளும் வலு சேர்த்தன. இன்றைய இளைய சமூகத்தினர் யுவனை கொண்டாடுவதற்கு நா.முத்துக்குமாரின் வரிகளும் ஒருவித காரணம் தான்.எழுத்தாளராக…!நா.முத்துக்குமாருக்கு தமிழ் இலக்கிய உலகிலும் ஒரு மிகப்பெரிய மரியாதை உண்டு. அதற்கு காரணம் அவர் தமிழ் இலக்கிய உலகில் இருந்துதான் கோடம்பாக்கத்திற்கு சென்றார். நா.முத்துக்குமார் கவிதைகள் என்றே ஒரு தொகுப்பு உள்ளது. அதில் நவீன காலத்திய கவிதைகள் பலவற்றை எழுதியிருப்பார். அதிலும் குறிப்பாக தூர் எனும் கவிதை பிரபலமானது.தூர்“வேப்பம் பூ மிதக்கும்எங்கள் வீட்டு கிணற்றில்தூர் வாரும் உற்சவம்வருடத்துக்கு ஒரு முறைவிஷேசமாக நடக்கும்.ஆழ் நீருக்குள்அப்பா முங்க முங்கஅதிசயங்கள் மேலே வரும்…கொட்டாங்குச்சி, கோலி, கரண்டி,துருப்பிடித்தக் கட்டையோடுஉள் விழுந்த ராட்டினம்,வேலைக்காரி திருடியதாய்சந்தேகப்பட்ட வெள்ளி டம்ளர்…எடுப்போம் நிறையவே! ‘சேறுடா சேறுடா’ வெனஅம்மா அதட்டுவாள்என்றாலும்சந்தோஷம் கலைக்கயாருக்கு மனம் வரும்?படை வென்ற வீரனாய்தலைநீர் சொட்டச் சொட்டஅப்பா மேலே வருவார்.இன்று வரை அம்மாகதவுக்குப் பின்னிருந்துதான்அப்பாவோடு பேசுகிறாள்.கடைசி வரை அப்பாவும்மறந்தேப் போனார்மனசுக்குள் தூர் எடுக்க..!”– நா.முத்துக்குமார் வேடிக்கை பார்ப்பவன், அணிலாடும் முன்றில், கண்பேசும் வார்த்தைகள் போன்ற நூல்களையும், ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மொழிபெயர்த்தும் உள்ளார் நா.முத்துக்குமார். திரைப்படப் பாடல்களைக் கடந்து அவரது தனிப்பட்ட எழுத்திற்கு என்று ஒரு தனிப்பட்டாளே உண்டு. இன்னும் சில காலம் இருந்து இசை ரசிகர்களை மகிழ்வித்து சென்றிருக்கலாம் என்பதே பலரது எண்ணக் குமுறலாக இருக்கிறது. ஒவ்வொரு ரசிகனுக்கும் அவருடன் கதைப் பேசிக்கொண்டே காற்றோடு போகத்தான் ஆசை! இன்று அவருக்கு 48 வது பிறந்தநாள் ஆகும். நம் அனைவருக்காகவும் எழுதிய நா.முத்துக்குமார் தற்போது கவிதையாய் மாறிப் போயிருக்கிறார்.
via News J : https://ift.tt/NDTndIq
via News J : https://ift.tt/NDTndIq
Mediaகிளிமஞ்சரோ மலை..! கனிமஞ்சரோ..!!மலை ஏறுதல் என்பது அனைவருக்கும் மிகப் பிடித்த ஒன்றுதான். அதில் சிலர் மற்றும் மலை ஏறுவதை லட்சியமாகவும் கனவாகவும், நினைப்பார்கள். மலையேறுதல் என்றதுமே அனைவருக்கும் நியாபகம் வருவது இமயமலை மட்டும் தான். ஆனால் மலையேறுபவர்களின் லட்சிய கனவாக இருப்பது கிளிமஞ்சரோ மலைத் தொடர் தான். இந்த மலையானது டான்சானியா நாட்டின் வடகிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும் மிக உயரமான மலை ஆகும். இந்த கிளிமஞ்சரோ மலையானது ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள எல்லா மலைகளை காட்டிலும் மிக உயரமான மலையும் இதுதான். மற்ற உயரமான மலைத்தொடர்கள் எல்லாம் ஏதேனும் ஒரு மலைத் தொடரின் அங்கமாகதன் இருக்கும். உலகின் புகழ் பெற்ற ஏழு மலைகளில் கிளிமஞ்சரோ மலையும் ஒன்றாகும். இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5895 மீட்டர் ஆகும். கிளிமஞ்சாரோ ஒரு ராட்சஸ பல அடுக்குகள் கொண்ட எரிமலை ஆகும். சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் பொங்கி வழிந்த எரிமலைக் குழம்பால் உருவானது தான் கிளிமஞ்சரோ மலை. இந்த கிளிமஞ்சரோவின் மலைக்கு ‘வெள்ளை மலை’ என்று இன்னொரு அர்த்தமும் உண்டு.Kilimanjaro Meaning - Climbing Kilimanjaroசாதனைப் படைத்த ’8’ வயது சிறுமி:1889-ஆம் ஆண்டு ஜெர்மனியின் ஹான்ஸ் மேயர் மற்றும் ஆஸ்திரியாவின் லுட்விக் புர்ட்ஷெல்லர் ஆகியோரின் துணையோடு கிளிமஞ்சாரோ மலையில் முதன்முதலாக ஏறி சாதனை படைத்தார். இவர்களை தொடர்ந்து பலர் இந்த மலையில் ஏற வேண்டும் என கனவு காண்பார்கள். அந்த கனவை நிஜமாக்கியவர் தான் பெங்களூரை சேர்ந்த எட்டு வயது சிறுமி ஆதியா. கர்நாடக மாநிலம் ஹர்ஷா பென்னுார் இவர்களின் குழந்தையான ஆதியாவிற்கு எட்டு வயதாகிறது. இவர் நான்காம் வகுப்பு படித்து வருகிறார். ஆதியா அவரின் தந்தை ஹர்ஷாவுடன் சேர்ந்து கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சான்யாவில் உள்ள கிளிமஞ்சரோ சிகரத்தில் ஏழு நாட்களில் ஏறி சாதனை படைத்துள்ளனர் ஆதியா என்ற எட்டு வயது சிறுமி. ஆதியா ஒரு நாளைக்கு 12 மணி நேரம் செலவளித்து மலையேறி உள்ளார் என்கின்றார் அவரின் தந்தை ஹர்ஷா.இந்த மலையேறுவதில் ஆர்வம் வந்ததிற்கு காரணம் இவரது தந்தை தான் என்று ஆதியா தெரிவித்தார். ஏனெனில் இவரது தந்தை ஏற்கனவே கிளிமஞ்சாரோ மலையில் ஏறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான். அவர்கள் எந்தத் துறையில் சாதிக்க விரும்புகிறார்கள் என்பது அவர் அவரின் விருப்பம் சார்ந்தது. நாம் வெற்றிபெற வேண்டுமானல் முயற்சி முக்கியம் அந்த முயற்சி தான் ஆத்யாவை கிளிமஞ்சரோ மலையை ஏறவைத்தது. வரும் காலங்களில் நாம் நிறைய ஆதியாக்களை சந்திக்க உள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. சாதிப்பதற்கு வயது முக்கியமில்லை என்பதை சுட்டிக்காட்டி உள்ளார் ஆதியா. அந்த சிறுமிக்கு வாழ்த்துகளை நாம் தெரிவிப்போம்!
via News J : https://ift.tt/6a7tMCG
via News J : https://ift.tt/6a7tMCG
Mediaநம்ம ஊர் திருவிழாக்கள் என்றாலே அனைவருக்கும் நியாபகம் வருது என்றால் டெல்லி அப்பளமும் பலருக்கு நினைவில் வருவது எது என்று கேட்டால் குறிப்பாக சிறுவர்களிடம் கேட்டால் ராட்டினத்தையே சொல்வார்கள். ஏனென்றால் ராட்டினதில் ஏறி விளையாடும் போதுதான் அந்த திருவிழாவே நிறைவு பெற்றமாறி இருக்கும். இந்த ராட்டினத்தின் மீதான ஆசை என்பது குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் பொதுவானது தான் என்று சுட்டி காட்டும் வகையில் பல்வேறு நாடுகளில் ராட்டினங்கள் வந்து விட்டன. அதில் ராட்சத ராட்டினங்கள் பல நாடுகளில் உள்ளன. அதில் குறிப்பாக, மிக மிகப் பெரிய ராட்சத ராட்டினம் எதுவென்றால் துபாயில் ஜுமைராவில் உள்ள அய்ன் துபாய் (Ain Dubai) எனப்படும் பகுதியில் அமைந்துள்ள ராட்டினம் தான்.துபாயில் ராட்சத ராட்டினம்:இந்த ராட்சத ராட்டினமானது துபாயில் ஜுமைராவில் அய்ன் துபாய் என்ற பகுதியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ராட்டினமானது புளூவாட்டர் எனப்படும் செயற்கை தீவில் 9ஆயிரம் டன் எடையில் ராட்டினமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதை அய்ன் துபாய் என்றே மக்கள் அழைத்து வருகின்றனர். ராட்டினமானது 130 அடி நீளமும், 65 அடி அகலமும் கொண்டது. ராட்டினத்தின் அச்சில் இருந்து வெளிபுற கம்பிகளை இணைக்க 192 தடித்த கம்பிகள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ராட்டினத்தை தரையில் இருந்து பார்த்தல் 689 அடி உயரம் கொண்டு உள்ளது. இந்த ராட்டினத்தை தலை நிமிர்ந்து பார்த்தாலே பலருக்கும் கிறுகிறுவென தலை சுற்ற ஆரம்பித்துவிடும். அய்ன் துபாய் ராட்டினத்தில் ஒரே நேரத்தில் 1400-ற்கும் மேல் நபர்கள் அமர்ந்து விளையாடலாம். இதில் சேர்ந்து செல்லும் நபர்களுக்கு கண்டிப்பாக மரண பயம் கண்ணில் தெரிய வாய்புள்ளது. சிலர் ரசிப்பார்கள், சிலர் பயத்தில் ரசிப்பார்கள் என்றும் சொல்லலாம். இந்த ராட்டினம் ஒரு முறை சுற்றி வர 48 நிமிடங்கள் ஆகும்.UAE announces the world's tallest observation wheel 'Ain Dubai'2022- ஆம் ஆண்டு துபாயில் அக்டோபர் மாதத்தில் அய்ன் துபாய் என்ற பகுதியில் திறக்கப்பட்டது. இது மேலும் சுற்றுலா தளமாக மாறியது. மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வெளிநாட்டில் இருந்தும் பலர் ஆர்வத்துடன் வந்து ராட்சத ராட்டினத்தில் பயணம் செய்து புதுவிதமான அனுபவத்தை பெற்றனர். இன்னிலையில் இந்த ராட்சத ராட்டினமானது தொடங்கிய சில மாதங்களிலேயே நின்று போனது. மார்ச் மாதம் 2022-ல் திடீரென ராட்டினம் செயல்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இது பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவல் வெளியாகியே ஓர் ஆண்டு நிறைவு பெற்ற நிலையில் இன்னும் ராட்டினம் செயல்படவில்லை என்பது தான் உண்மை. இது துபாய் மக்களுக்கு மட்டுமின்றி, சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கும் மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.மீண்டும் இயங்குமா ராட்டினம்?இந்நிலையில் இது குறித்து அதிகாரிகளிடம் கேட்ட பொழுது இனி ராட்டினம் செயல்படபோவதில்லை என்று தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டு துபாய் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ராட்சத ராட்டினம் இயக்கப்படுவதால் பெரிய அளவில் ஒலி மாசுபாடு ஏற்படுகிறது. அருகிலுள்ள கட்டிடங்கள் பாதிக்கப்படுகின்றன என்று பலரால் பேசப்படுகிறது. இந்த சூழலில் அய்ன் துபாய் ராட்சத ராட்டின செயல்பாடுகள் காலவரையற்ற வகையில் நிறுத்தப்படு உள்ளதாக நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ராட்டினத்தை சீரமைக்கும் பணிகள் நடைப்பெறுவதாக கூறப்படுகின்றன. ஆனால் இவர்கள் எல்லம் கூறுவது உண்மை தானா? அய்ன் ராட்டினமானது எப்போது இயங்கும்? அதன் பணிகள் நடைபெறுவது உண்மைதானா? என்ற பல்வேறு கேள்விகளோடு சேர்ந்து துபாய் ராட்டினம் மீண்டும் செயல்படாதா என்ற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகின்றன.
via News J : https://ift.tt/lJSKOZw
via News J : https://ift.tt/lJSKOZw
Media மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் பேட்டி…!சந்திரயான் -1 திட்டம் மூலம் நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை உலகிற்கு வெளி கொண்டு வந்து பல்வேறு புதிய அம்சங்களுக்கு அடிகோலியது என்று தெரிவித்தார். மேலும், தற்போது ஒட்டுமொத்த உலகமும் சந்திரன் -3 ஐ மிகப்பெரிய எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும் அதேவேளையில், புதிய அம்சங்கள் , நிலவு மற்றும் பிரபஞ்சத்தின் அதிசயங்களை வெளிக்கொண்டு வர உள்ளது என்று கூறியுள்ளார். சந்திரயான் -3 விண்கலத்தின் சமிக்ஞைகள் நிலவில் ஒரு படி மேலும் நெருங்கும் என்றும், மேலும் நிலவைப் பற்றி ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா பின் தங்கவில்லை என்பதை நிரூபித்து காட்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். சந்திரயான் -3 இல் உள்ள தனித்துவமான அம்சங்கள் நிலவில் இருந்து நிலவை மட்டும் கண்காணிப்பதோடு மட்டுமல்லாமல், நிலவிலிருந்து பூமியையும் கண்காணித்து விண்வெளி துறையில் சாதித்துள்ள பெருமைமிக்க பட்டியலில் இந்தியாவும் இடம்பெறும் என்றார்.பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்க பயணத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தனக்கு நிகரான நட்பு மற்றும் ஒத்துழைப்பு தரும் நாடு என்பதை அமெரிக்கா தெளிவாக்கி உள்ளது என்று தெரிவித்தார். மேலும் நாசா இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களை பெறுவது மற்றும் ஆர்டிமிஸ் ஒப்பந்தத்தில் இந்தியா ஒரு பங்குதாரராக இருப்பது ஆகியவை இந்தியாவின் தலைசிறந்த விண்வெளி ஆராய்ச்சிக்கு எடுத்துக்காட்டாகும் என்று தெரிவித்தார். இந்திய விண்வெளி தொழில்நுட்பம் ராக்கெட் ஏவுதலோடு மட்டுமில்லாமல், பல்வேறு துறைகளில் முன்னேற்றத்தையும் அளித்து வருகிறது என்றார். இந்தியா கடந்த ஆறு தசாப்தங்களாக விண்வெளி திட்டங்களில் தனது வளமிக்க விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை சிறப்பாக பயன்படுத்தி உள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் மேம்படும் விண்வெளி மற்றும் விண்வெளி பொருளாதாரம் ஆகியவை எதிர்காலத்தில் ஒட்டுமொத்த பொருளாதார முன்னேற்றத்திற்கான முக்கிய தூணாக இருக்கும் என்று தெரிவித்தார்.424 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் இந்தியா மூலம் ஏவப்பட்டுள்ளன. இவற்றில் 389 செயற்கைக்கோள்கள் கடந்த 9 ஆண்டு காலத்தில் செலுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது என்றார். மேலும், செயற்கைக்கோள்களை ஏவியதன் மூலம் 174 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் கிடைத்துள்ளது என்றும், இதில் 157 மில்லியன் அமெரிக்க டாலர் கடந்த 9 ஆண்டு காலத்தில் ஈட்டப்பட்டவை என்றும் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/17SEnVC
via News J : https://ift.tt/17SEnVC
Mediaபுத்தரும் அதன் வரலாறும்:கௌதம புத்தர்’ என்று எல்லோராலும் போற்றப்படும் சித்தார்த்தர், ஒரு இந்திய மதகுரு ஆவார். உலக மதங்களுள் மிகவும் பிரசித்திப் பெற்ற மதமான புத்த மதத்தைத் தோற்றுவித்தவர். ‘ஆசைக்குக் காரணம் துன்பம்’ என்ற மாபெரும் தத்துவத்தை போதித்தவர். மேலும், ‘நல்ல நம்பிக்கை’, ‘நல்லெண்ணம்’, ‘நல்வாய்மை’, ‘நற்செய்கை’, ‘நல்வாழ்க்கை’, ‘நன்முயற்சி’, ‘நற்சாட்சி’, ‘நல்ல தியானம்’ போன்ற எண்வகை வழிகளையும் போதித்தவர். இந்த உலகில் தோன்றிய மகா ஞானிகளில் தனக்கெனத் தனி இடம் பிடித்தவர். விவேகம் மற்றும் அறிவின் மறுவடிவமாகவே கருதப்பட்டவர், புத்தர். அழுத்தங்கள் அதிகரித்து வரும் இன்றைய பரபரப்பான வாழ்க்கையை சமாளிக்க முடியாதவருக்கு, அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாக இருக்கிறது. புத்தரின் கோட்பாடானது நமது வாழ்கை முறையில் சிறந்த தெளிவையும், தன்னம்பிக்கையும் தருபவையே ஆகும். இன்னும் சொல்லப்போனால் சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் புத்த மதத்திற்கு பின்பற்றினார். ஏனெனில், புத்த மதம் ஒரு பகுத்தறிவு மற்றும் நவீன மனப்பான்மை கொண்டது என்று அவர் நம்பினார். இப்படியாக புத்தரை பற்றிய வரலாறு இருக்க அவரின் சிலைகள் மற்றும் அவரின் உருவத்தினை பற்றி அனைவருக்கும் வெவ்வேறு வகையான கருத்துகள் உள்ளன. நம் இந்தியாவில் பழங்கால பொருட்கள் மற்றும் பழங்கால சிலைகள் என நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் புத்தர் சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.புத்தர் சிலை மீட்பு:தஞ்சாவூர் மாவட்டதில் கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் புத்தர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டது. 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல் புத்தர் சிலை கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் இருப்பதை பார்த்தனர் அங்கு மீன் பிடிக்க சென்ற மீனவ மக்கள. கல்லணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கொள்ளிட ஆற்றின் இருகரையின் ஓரங்களில் சென்று கொண்டிருக்கின்றது. இந்த ஆற்றில் தண்ணீர் வரும்போது, அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மீன் பிடிப்பது வழக்கம். அதுபோலவே இன்று அதிகாலையில் கொள்ளிட ஆற்றில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது, ஆற்றின் நடுவிலுள்ள மணல் திட்டில் சுமார் இரண்டரை அடி உயரம் கொண்ட, சுமார் 200 கிலோ எடையுள்ள பழங்கால கருங்கல்லிலான புத்தர் சிலை இருப்பதை பார்த்தனர், மீன் பிடுக்க வந்தவர்கள். புத்தர் சிலையை பார்த்த மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த செய்தியை அம்மக்கள் அனைவரும் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் வட்டாட்சியர் பூங்கொடி சத்தியமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் மனோகர், சத்தியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர்கள் உட்பட கொள்ளிட ஆற்றை பார்வையிட்டனர். அப்போது கொள்ளிட ஆற்றில் சுமார் இரண்டு அடிக்கு மேல் தண்ணீர் நிரம்பி இருந்ததால் தீயணைப்பு துறையினர் உதவியுடன் புத்தர் சிலையை மீட்டனர்.
via News J : https://ift.tt/gDXEGT3
via News J : https://ift.tt/gDXEGT3
👍1
Mediaதிமுக அரசு அகவிலைபடி உயர்வை ஆட்சியில் அமர்ந்து 100 நாட்களில் வழக்குவதாக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகவும், பேச்சுவார்த்தை எனக் கூட்டம் கூட்டிவிட்டு தங்களின் கோரிக்கை குறித்து திமுக அரசு பேச விடுவதில்லை என ஓய்வூதியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி நிறைவேற்றப்படாதது குறித்தும் அரசு ஓய்வூதியர்களுக்கு எதிராக செயல்படும் திமுக அரசின் நடவடிக்கைகள் குறித்தும் அரசு போக்குவரத்து ஓய்வு ஊதியர்கள் நலமீட்பு சங்க செய்தியாளர்கள் சந்திப்பு பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது.அப்போது,திமுக அரசு தங்களின் தேர்தல் வாக்குறுதியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி உயர்நிலை வழங்குவதாக தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து உயர் நீதிமன்றமும் அகவிலைப்படி உயர்வினை வழங்கலாம் என தீர்ப்பளித்து இருந்தது.ஆனால் திமுக அரசு ஆட்சியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரையில் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து தற்போது வரையில் வழக்கினை காலதாமதம் செய்து வருகிறது.இதுகுறித்து பலமுறை துறை சார்ந்த அமைச்சர்களிடமும், முதல்வரிடமும் புகார் அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் திமுக அரசியல் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியதை தொடர்ந்து கோரிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் தெரிவித்து இருப்பதாக முன்னாள் தலைமைச் செயலார் இறையன்பு தெரிவித்திருந்தார்.மேலும் இதுகுறித்து திமுக அரசு சார்பில் நடைபெறும் பேச்சு வார்த்தை கூட்டத்தில் தங்களின் கோரிக்கைகள் குறித்து பேசுவதற்கு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்கத்தை அனுமதி அளிகக்கபடவதில்லை என குற்றம் சாட்டினர்.ஆனால் தற்போது வரையில் வாக்குறுதிகளை மட்டும் அளிக்கும் திமுக அரசும் முதல்வர் ஸ்டாலினும் எதையும் நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாகவும் தங்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் நலமீட்பு சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
via News J : https://ift.tt/hxwStFK
via News J : https://ift.tt/hxwStFK
Media வங்கதேசத்திற்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய பெண்கள் அணியானது மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் வென்ற இந்தியா 1-0 முன்னிலை பெற்றது. அதனையொட்டி இரண்டாவது போட்டியானது நேற்று மிர்புரில் நடைபெற்றது. ’டாஸ்’ வென்ற இந்தியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது.இந்திய அணிக்கு ஸ்மிருது வந்தனா(13) மற்றும் ஷபாலி வர்மா (19) ஜோடி நல்ல துவக்கத்தினைக் கொடுத்தது. பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (0), யஸ்திகா (11), ஹர்லீன் (6), என அனைத்து வீரர்களும் வரிசையாக பெவிலியன் திரும்பினர். தீப்து(10), அமன்ஜோத்கவுர் (14), ஆறுதல் தர இந்திய அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 95 ரன் மட்டும் எடுத்திருந்தது.Ind W Vs Ban W:भारत ने दूसरे टी20 में बांग्लादेश को आठ रन से हराया, सीरीज में 2-0 की अजेय बढ़त बनाई - Ind W Vs Ban W T20 Live Score: Indiaஇந்த எளிதான இலக்கை விரைவில் எட்டி விடலாம் என்று வங்கதேச அணி ஒரு கணக்கு போட்டிருந்தது. ஆனால் அந்தக் கணக்கை இந்திய பந்துவீச்சாளர்கள் மாற்றி அமைத்துவிட்டனர். வங்கதேச அணியைச் சேர்ந்த ஷமிமா( 5), ஷதி ராணி (5), முர்ஷிதா(4), ஆகிய முக்கிய பேட்ஸ்மேன்கள் கைவிட ’’மிடில் ஆர்டரிலும் ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். கடைசி வரை போராடிய கேப்டன் சுல்தானா 38 ரன் எடுத்தார். வங்கதேச அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பந்தை சுழற்றிய ஷபாலி முதல் பந்தில் ரபேயாவை(0 ) ரன் அவுட் செய்தார். அடுத்த 5 பந்தில் 3 விக்கெட்டுகள் சாய்க்க, வங்கதேச அணி அடுத்த 20 ஓவரில் 87 ரன்னுக்கு சுருண்டது. ஒரு கட்டத்தில் 86/5 என வலுவாக இருந்த வங்கதேசம் அணியானது அடுத்து ஒரு ரன் மட்டும் எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது அணியின் இரசிகர்களுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்தது. இதனால் இந்திய அணி 8 ரன்னில் திரில் வெற்றி பெற்று 2-0 என தொடரை வென்றது.
via News J : https://ift.tt/Lx6HXIz
via News J : https://ift.tt/Lx6HXIz
Mediaசெந்தில்பாலாஜிக்கு தொடர்புடையவர்களை குறிவைத்து நடந்த ஐ.டி.ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கும் நிலையில், ஊழல் செய்யும் அமைச்சர்களால் ஸ்டாலின் ஆட்சிக்கு கட்டம் கட்டப்படுவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.ஐ.டி.ரெய்டு என்றாலே செந்தில் பாலாஜி தான் எல்லோருக்கும் நினைவில் வரும். காரணம் அவரை ஐ.டி.யும், ஈ.டி.யும் ரெய்டு விட்டபோது திரைப்படங்களையே மிஞ்சும் அளவுக்கு நடந்தேறிய காட்சிகள் தான்….அப்படிப்பட்ட நிலையில், கடந்த 2 நாட்களாக கரூரில், செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் மீண்டும் விடிய விடிய வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.சோதனையில் டாஸ்மாக் வசூல் விவரங்கள் மற்றும் ஆவணங்கள் சிக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. அதே போல் யாரிடம் இருந்து எவ்வளவு தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது என்னும் விவரங்களை கணினியில் உள்ளீடு செய்து வைத்திருந்ததும் கண்டறியப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றியிருக்கும் ஆவணங்களைக் கொண்டு நடத்தும் விசாரணையில் செந்தில்பாலாஜி வாயைத் திறந்தாலே மாட்டிக் கொள்வோம் என்னும் அச்சத்தில் திக்குமுக்காடி கிடக்கிறார் ஸ்டாலின்.ஒருபுறம் உண்மைகள் வெளிவந்து சந்தி சிரித்துவிடுமோ என்கிற பதற்றம்…. இன்னொரு புறம் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்கிற அச்சம் என்று, இருதலைக் கொள்ளி எறும்பாக தவித்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்.ஊழல் வழக்கை சந்திக்கும் ஒரு அமைச்சரிடமே ஊழல் தடுப்புப் பிரிவை வழங்கி, அதன் மூலம் தங்கள் அமைச்சர்கள் மீதான வழக்குகளை அவசர அவசரமாக முடிவுக்கு கொண்டுவர முதல்வர் ஸ்டாலின் போராடிக்கொண்டு இருக்கும் வேளையில், வருமானவரித்துறையும், அமலாக்கத்துறையும் செந்தில் பாலாஜியை வைத்து ஸ்டாலினுக்கு குடைச்சல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது.அதே நேரம், திமுக அரசின் தில்லுமுல்லுகளை எல்லாம் எதிர்க்கட்சித் தலைவர் கிழித்து தொங்கவிடுவதால் பதறும் ஸ்டாலின், குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார்…
அப்படியானால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தடுக்க ஸ்டாலின் பகீரதப் பிரயத்தனம் செய்வது ஏன்?ஸ்டாலின் எத்தனை பிரயத்தனப் பட்டாலும் ஐ.டி. ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கும் நிலையில், ஊழல் செய்யும் அமைச்சர்களால் ஸ்டாலின் ஆட்சிக்கு கட்டம் கட்டப்படுவது உறுதி என்கிறார்கள் அரசியல் உள் விவகாரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/fhjNCz5
அப்படியானால் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை தடுக்க ஸ்டாலின் பகீரதப் பிரயத்தனம் செய்வது ஏன்?ஸ்டாலின் எத்தனை பிரயத்தனப் பட்டாலும் ஐ.டி. ரெய்டில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருக்கும் நிலையில், ஊழல் செய்யும் அமைச்சர்களால் ஸ்டாலின் ஆட்சிக்கு கட்டம் கட்டப்படுவது உறுதி என்கிறார்கள் அரசியல் உள் விவகாரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/fhjNCz5
Mediaநிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியா சார்பாக இரண்டு முறை விண்கலம் அனுப்பப்பட்டிருக்கிறது. முதல் முறை 2008 ஆம் ஆண்டு அக்டோபர் 22ல் அனுப்பப்பட்டது. அதுதான் சந்திரயான் – 1 ஆகும். இது அப்போது நிலவை சுற்றி வந்து ஆய்வு செய்தது. பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜுலை 22-ல் இரண்டாவது விண்கலம் அனுப்பப்பட்டது. அதுதான் சந்திரயான் – 2 ஆகும். இந்தத் திட்டத்தில் நிலவில் தரையிரங்கி ஆய்வு செய்யத் திட்டமிடப்பட்டது. ஆனால் விண்கலம் நிலவில் சரிவர தரையிரங்காமல் தோல்வியில் முடிந்தது. அன்று இந்தியாவே கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரும் அறிந்த உண்மை.சந்திரயான் 2 தோல்வி..!2019 ஆம் ஆண்டு செலுத்தப்பட்ட சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தாலும் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்ப்பட்டது. அதே ஆண்டு அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் உள்ளே பிரக்யான் எனப் பெயரிட்ட ரோவர்தான் நிலவின் மேற்பரப்பில் உலவி சோதனைகள் செய்ய காத்திருந்தது. ஆனால் அப்போது ரோவர் சாதனம் செயல்படாமல் போனது. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் பேரதிர்ச்சி அடைந்தனர். அன்றைய இஸ்ரோ தலைவர் சிவன் தேம்பி தேம்பி அழுதக் காட்சிகள் ஊடகத்தில் பரவி அனைவரையும் கண்கலங்க செய்தது.இந்த தடவை மிஸ் ஆகாது!..கடந்த முறை அனுப்பபட்டது போலவே இந்த முறையும் விக்ரம் லேண்டர் சாதனம், பிரக்யான் ரோவர் சாதன் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவை அடங்கிய விண்கலம் எல்.வி.எம்-3-எம்-4 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 2 மணி 25 நிமிடங்களில் சந்திரயான் 3 ஏவப்பட உள்ளது. மேலும் லேண்டர் சாதனம் அடுத்த மாதம் 23 அல்லது 24 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும், அதுவரை இந்த விண்கலம் பூமியை 56 முறை சுற்றி வரும். சந்திராயன் -3 திட்டத்தின் மிக முக்கிய அம்சம், புரெபல்ஷன் எனப்படும் உந்து இயந்திரம் அனுப்பப்படுகிறது. இது, நிலவில் லேண்டர் சாதனத்தை ‘டெலிவரி’ செய்ததும், அங்கிருந்து பூமியை நோக்கி நிறுத்தப்படும்.Imageஇது பூமியில் உள்ள வளங்கள், மனிதர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை ஆய்வு செய்யும். இதன் காரணமாக மற்ற உலகத்தில் மனிதர்கள் வாழ்கிறார்களா அல்லது மனிதர்கள் வாழ்ந்ததற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்ஹ்டு ஆராய முடியும் என்றும் கூறுகின்றனர். இந்த புதிய ஆய்வு, விண்வெளியில் உள்ள மற்ற கோள்கள் குறித்து ஆய்வு செய்வதற்கும் எதிர்காலத்தில் உதவும் என்பது மட்டும் நிச்சயம். இதுவரை அமெரிக்க, சீனா, சோவியத் யூனியன் ஆகியவை மட்டுமே நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்து உள்ளன. அந்த வரிசையில் நான்காவது நாடாக தற்போது இந்தியா இடம்பெறுவது வரலாற்று சாதனையாகும்.ஜூலை மாதத்தில் ஏவப்படுவதற்கான காரணம் என்ன?ஜூலை மாதத்தில் தான் பூமியும் நிலவும் கிட்டத்தில் இருக்கும். ராக்கெட் செலுத்தப்பட்டதும், 16 நிமிடத்தில், புரெபல்ஷன் கலம், ராக்கெட்டில் இருந்து தனியாக பிரிந்து செல்லும். இது, பூமியை 56 முறை சுற்றி வரும். பூமியில் இருந்து குறைந்த பட்சம், 170 கி.மீ தூரத்திலும், அதிகபட்சம், 36,500 கி.மீ தூரத்திலும் சுற்றி வரும். இதன் வாயிலாக கிடைக்கும் வேகம்தான் நிலவு வரை செல்ல உதவும். ராக்கெட்டில் இருந்து பிரிந்ததும், ரோவர், லேண்டர் சாதனங்களுடன் கூடிய புரெபெல்ஷன் கலம் நிலவை நோக்கி பயணிக்கும். நிலவில் இருந்து 100 கிமீ தூரத்தை எட்டிய பின், லேண்டர் சாதனம் பிரியும். நிலவின் வடக்கு துருவத்தை விட, தென் துருவம் பரப்பளவு அதிகம். மேலும் இது எப்போதும் பூமிக்கு எதிர்ப்பக்கத்தில் இருப்பதால் இருட்டாகவே இருக்கும். அதனால்தான், தென் துருவத்தில் தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரோவர் சாதனம் நிலவில் தரையிறங்கிய பின், ஒரு நிலவு நாள் மட்டுமே அது செயல்படும். அறிவியலின்படி, ஒரு நிலவு நாள் என்பது, பூமியை பொறுத்தவரை 14 நாட்களுக்கு சமமாகும். அதன்பின், அதன் ஆயுள் காலம் முடிந்து விடும். அதற்குள், நமக்கு தேவையான தகவல்களை அது திரட்டி தரும்.
via News J : https://ift.tt/jSmoOUs
via News J : https://ift.tt/jSmoOUs
Mediaபொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வருகிற 28 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் மாத இறுதிக்குள் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. இது குறித்து வருகிற 21ஆம் தேதி துணைவேந்தர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற இருக்கிறது.தமிழகத்தில் பொறியியல் மாணவர்களுக்கான பொது கலந்தாய்வு வருகிற 28 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9ம் தேதி வரை நடைபெற இருப்பதாக உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு முதல் கட்டமாக விளையாட்டு பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு வருகிற 22 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பொது கலந்தாய்வு 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.Engineering counselling from July 2: Ponmudyமொத்தம் மூன்று கட்டங்களாக பொது கலந்தாய்வு நடைபெறும் எனவும் இரண்டாவது கட்டமாக ஆகஸ்ட் மாதம் ஒன்பதாம் தேதி தொடங்கி 22 ஆம் தேதி வரையும் மூன்றாவது கட்டமாக 22ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி வரை நடைபெற இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தைப் பொறுத்தவரை 430 அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 738 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் எந்த கல்லூரிகளிலும் காலியிடம் இல்லை என்கிற அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் எனவும் உயர்க்கல்வித்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.TNEA: Third round of engineering counselling beginsஇது கடந்த ஆண்டை விட 3100 இடங்கள் அதிகமாகும். முக்கியமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் 11804 இடங்கள் நிரப்பப்பட இருப்பதாகவும் இது கடந்த ஆண்டை விட 236 இடம் அதிகம் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் கலந்தாய்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கும்.மாணவர்கள் முதலில் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் கட்டணத்தை கட்டிய பின்னர் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளுக்கு மாறலாம் எனவும் அவ்வாறு மாறுகிற பட்சத்தில் ஏற்கனவே கல்லூரியில் கட்டிய கட்டணத்தை அத்தகைய கல்லூரிகள் செலுத்த வேண்டும் என அனைத்து கல்லூரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/IgAzH2o
via News J : https://ift.tt/IgAzH2o
Mediaநிலவு ஆராய்ச்சியில் இஸ்ரோவின் கனவு திட்டமாக இருக்கிறது சந்திரயான் விண்கலம். ஏற்கனவே நிலவை ஆராய்வதற்காக இந்தியா சார்பில் சந்திரயான் 1, சந்திரயான் 2 விண்கலம் அனுப்பப்பட்டது. தற்போது அடுத்த முயற்சியாக சந்திரயான் 3 விண்கலத்தை ஜூலை 14 (நாளை) ஆம் தேதி அனுப்புகிறது இந்தியா. ஒட்டுமொத்த இந்தியர்களின் கனவாக உள்ள இந்ததிட்டத்தின் மூளையாக தமிழர்கள்தான் இருக்கிறார்கள் என்பது கூடுதல் சிறப்பு…ஆம், கடந்த 2008 ஆம் ஆண்டு சந்திரயான் 1 விண்ணில் செலுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கான திட்ட இயக்குனராக கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்த மூத்த விஞ்ஞானியான மயில்சாமி அண்ணாதுரை நியமிக்கப்பட்டு இருந்தார்..Mylswamy Annadurai - Wikipediaஅதேபோல், 2019 ஆம் ஆண்டு நிலவின் தென் துருவப்பகுதியை ஆராய சந்திரயான் 2 விண்கலம் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவில் இறங்கி ஆய்வு செய்யும் வகையில் இந்தியா அனுப்பிய முதல் விண்கலம் இது. இந்த திட்டத்தில் சென்னையை சேர்ந்த வனிதா முத்தையா திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டு இருந்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் முதல் பெண் திட்ட இயக்குனரும் இவர்தான் என்பது கூடுதல் பெருமை… இவர் சிறந்த பெண் விஞ்ஞானி விருது பெற்றிருப்பவர் என்பதும் தமிழகத்திற்கு சிறப்பு..இதனை தொடர்ந்து நிலவின் தென் துருவப்பகுதியை ஆய்வு செய்ய, ஜூலை 14 ஆம் தேதி விண்ணில் ஏவப்பட இருக்கிறது சந்திரயான் 3 விண்கலம். உலக அளவில் விண்வெளி துறையில் இந்தியாவின் பெயரை வரலாற்றில் பதிக்கவிருக்கும் இந்த திட்டத்தின் மூளையாகவும் தமிழர் ஒருவர் இருக்கிறார். ஆம், இஸ்ரோவின் மூத்த விஞ்ஞானியான வீரமுத்துவேல் என்பவரின் சிந்தனையில் உருவாக்கியிருக்கிறது சந்திரயான் 3 திட்டம். தமிழ்நாட்டின் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முத்துவேல்தான் இந்த சந்திரயான் 3 திட்டத்தின் தலைவராகவும், நிலவு பயணத்தின் திட்ட இயக்குனராகவும் செயல்பட்டு வருகிறார் …ஏற்கனவே விண்வெளித்துறையில் மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜெ அப்துல்கலாம், சிவதாணுப்பிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா உள்ளிட்ட தமிழர்கள் சிறப்பாக செயல்பட்டு தமிழர்களுக்கு பெருமை சேர்த்தனர். அந்த வகையில் தற்போது வீரமுத்துவேலும் இணைந்திருப்பது உலக அரங்கில் தமிழர்களுக்கான பெருமையை மேலும் உயர்த்தியிருக்கிறது.
via News J : https://ift.tt/3JxGR6X
via News J : https://ift.tt/3JxGR6X
Mediaபோதை கனமே! கனமே..போகாதெனில்!!மகிழ்ச்சி, சோகம், துக்கம் என பல்வேறு வகையான உணர்ச்சிகளுக்கு இன்றைய மனிதர்களின் மிகப்பெரிய ஆறுதல் என்றால் அது மதுதான். மேலை நாடுகளில் கொண்டாட்டங்களின் போது அவர்களின் மகிழச்சியை வெளிப்படுத்தும் விதமாக மதுபானங்களை குடிப்பார்கள். ஆனால் தற்போது உள்ள கால சூழ்நிலையில் எல்லா வகையான விஷயங்களிலும் இந்த நண்பர் இருப்பார். அது வேறு யாரும் இல்லை இந்த மதுபானங்கள் தான். ஏனென்றால் அவர்களுடனான எல்லா செயல்களிலும் மதுக்களின் பங்கு இல்லாமல் இருக்காது. மதுக்களில் பலவகை மதுபானங்கள் உள்ளன. அதை சொன்னால் கொஞ்சம் லிஸ்ட் பெருசா போகும் சில வகைகள் விட்டு கூடா போகலாம். ஆனால் முதன் முதலில் இந்த மதுக்கள் எப்படி தோன்றியது என்பதில் ஓர் பெரிய வரலாறே உள்ளது அது சிலருக்கு தெரிய வாய்புள்ளது.Zomato,வீடு தேடி வரும் மதுபானம்: ஆர்டர் பண்ண நீங்க ரெடியா? - zomato mulls liquor deliveries in india during lockdown period - Samayam Tamilமதுவின் வரலாறு:முதன் முதலில் சிந்து சமவெளி நாகரிகத்தின் போதுதான் இந்தியாவில் மதுபானங்கள் தோன்றின. கி.மு.4000-இல் எகிப்திய ஓவியங்களில் ஒயின்கள் வரையப்பட்டுள்ளன. ஆனால் வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து சீனாவில் பல்வேறு மதுபானங்கள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. கிமு 55 இல் ரோமானியர்கள் ஐரோப்பியர்களுக்கு பீர் வகைகளை அறிமுகப்படுத்தினர். கி.மு 2000-ம் ஆண்டுகளிலேயே ஒயின் தயாரிக்கும் முறையானது ஆரம்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இடைக்காலங்களில் ஒயின் அனைவருக்கும் விருப்பமான பானமாக மாறியது. மதுஅருந்துதல் உலகின் அனைத்து பகுதிகளிலும் பரவலாக தொடங்கியது. ஆனால் இன்று உலகிலுள்ள மக்களுக்கு மதுபானங்களை தெரியாதே ஆளே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் என்ற நிலை உருவாகி உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள ஒரு மதுபான வகை அந்நாட்டு மக்களால் மிகவும் விரும்பி அருந்தும் மதுவாக உள்ளது. இந்த மதுவானது ஒரு நாளைக்கே இரண்டு லட்சம் ரூபாய் முதல் வருமானம் ஈட்டுவதாக கூறுகின்றனர்.ஒருநாளைக்கே இவ்வளவு வருமானமா..!உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளும் தனக்கென ஒரு பாரம்பரிய மதுபான வகையை ஒன்றை வைத்துள்ளனர். அந்த வகையில் சிங்கப்பூரிலும் சிறப்பு மிக்க மக்களால் கொண்டாடக்குறிய மதுபானவகை உள்ளது. அந்த வகையானது 1915 எனப்படும் சிங்கப்பூர் ஸ்லிங் வகையாகும். இந்த வகை மதுபானமானது கியாம் டாங் பூன் என்ற மதுபான விற்பனையாளரால் 1915-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வகை மதுபானமானது காக்டெய்ல் வகையை சார்ந்தது. இந்த மதுபானம் முதலில் பெண்களுக்காகதான் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் கியாம் டாங் பூன் அனைவரும் விரும்பி குடிக்கும் விதமாக பலதரப்பட்ட பானங்களை ஒன்று சேர்த்து சிங்கப்பூர் ஸ்லிங் உருவாக்கப்பட்டது. இந்நிலையில், இந்த பானம் சிங்கப்பூரில் மிகவும் பிரபலமாக மாறி, அந்நாட்டின் தேசிய மது வகை என்ற புகழையும் பெற்றது. இந்த மதுபானம் பார்ப்பதற்கு லைட் லிங் நிறத்தில் இருக்கும்.இந்த சிங்கப்பூர் ஸ்லிங் பானம் தற்போது அந்நாட்டில் பிரபலமான ராஃபெல்ஸ் ஓட்டலில் பரிமாறப்படுகிறது. இது 100-ஆண்டுகளை தாண்டி பாரம்பரிய பானமாக இருந்து வருகின்றது. இந்த சிங்கப்பூர் ஸ்லிங் பானத்தின் ஒரு க்ளாஸ் விலை 29 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2,400 ரூபாய் ஆகும். ஒரு நாளைக்கு 1,000-த்திற்கும் மேற்பட்ட க்ளாஸ்கல் விற்கப்படுமாம். அப்படி பார்த்தால் தினசரி வருமானம் மட்டுமே 2.38 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படும் என்று கூறுகின்றனர். இந்த வகை மதுபானமானது ராஃபெல்ஸ் ஓட்டலில் மட்டுமே விற்கப்படுமாம். இவற்றிற்கு வேறேங்கும் கிளைகள் கிடையாது. இந்த செய்தியானது தற்போது சமூகவலைத்தளங்களில் பரவலாகி வருகிறது. மக்களிடையே பெரிதும் கவனம் பெற்றுள்ளது என்றும் சொல்லலாம்.
via News J : https://ift.tt/E8rW65s
via News J : https://ift.tt/E8rW65s
Mediaகழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை :’ சிறுபான்மையினர் நலன் காப்போம்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய உண்மை முகம்!“ஏய்ச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப்பாருங்க”என்ற புரட்சித் தலைவர் அவர்களுடைய பாடலுக்கேற்ப, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் இந்த விடியா திமுக அரசு, அவர்களை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கும் பட்டை நாமம் போட்டுள்ளது.ஆட்சிக்கு வந்தவுடன், நீண்ட நாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்டமன்றத் தேர்தலின்போது மேடைகளில் முழங்கினார்கள் பொம்மை முதலமைச்சரும், இதர திமுக-வினரும். ஆட்சிக்கு வ்ந்து 26 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் காணப்படவில்லை.கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசேலம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்தார்கள். அதன்படி ஆண்டுதோறும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 500 ஆக இருந்ததை, 2019 ஆம் ஆண்டு, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 600 ஆக உயர்த்தியது. இதில், கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டுவரை இத்திட்டத்தின் கீழ் 4,128 கிறிஸ்தவர்கள், 8.25 கோடி ரூபாய் செலவில் இப்புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய் பெருந்தொற்று காலத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.வாய்ப் பந்தல் போட்டே மக்களை ஏய்க்கும் இந்த விடியா தி.மு.க அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையிலும், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்படவே இல்லை.மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா கண்ட இந்த விடியா திமுக அரசு, சிறுபான்மையின மக்களுக்காக மாண்புமிகு அம்மா அவர்களே துவக்கி வைத்த ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான நிதியுதவியையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, விடியா திமுக அரசு விழிப்புணர்வு பெற்று, கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.தங்களை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்ற நினைப்பில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் இந்த பொம்மை முதலமைச்சருக்கு, அவரால் ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.இவ்வாறு தன்னுடைய கண்டன அறிக்கையில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
via News J : https://ift.tt/n1tsgB8
via News J : https://ift.tt/n1tsgB8
Mediaஆசிய சாதனை படைத்த அஜித்!பாரா தடகள சாம்பியன்ஷிப் வட்டு எறிதலில் போட்டி பாரிசில் நடைப்பெற்றது. இந்த போட்டியில் இந்தியாவை சேர்ந்த அஜித் குமார் என்பவர் களமிறங்கினார். வட்டு எறிதலில் போட்டியில் ஆசிய சாதனை படைத்து தங்க பதக்கத்தை கைப்பற்றினார். பாரிசில் உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் ஆண்களுக்கான பிரிவில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் அஜித் குமார் பன்சால் களமிறங்கினார். இவர் களமிறங்கிய இரண்டு சுற்றுகளிலும் தனது திறனை வெளிக்காட்டினார் அடுத்து இவரருக்கான மூன்றாவது வாய்பில் அதிகபட்சமாக 21.17 மீட்டர் தூரம் எறிந்து சாதனைப் படைத்தார். அதனை அடுத்து தங்கப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இதுவே இந்தியாவின் புதிய ஆசிய சாதனையாகவும் அமைந்தது. இவரைத் தொடந்து யேகேஷ் என்ற மற்றொரு வீரரும் களமிறங்கினார்.வெள்ளி பதக்கம் வெற்ற யோகேஷ்:வட்டு எறிதல் மற்றொரு பிரிவில் இந்திய சார்பில் களமிறங்கினார் யோகேஷ் கதுனியா. டோக்கியோ பாரா ஒலிம்பிக்கில் இவர் ஏற்கனவே இவர் வெள்ளி வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இம்முறை முதல் வாய்ப்பில் அதிகபட்சமாக 43.17 மீட்டர் தூரம் எறிந்தார். மற்ற வாய்புகளை நலுவ விட்டாலும் விட்ட இடத்தை சற்று நேரத்திலேயே பிடித்தார். முதல் இடம் கிடைக்கவில்லை எனினும் இரண்டாவது இடத்தை பிடித்து சாதனைப் படைத்தார். வெள்ளிப் பதக்கத்தையும் கைப்பற்றினார். இதனை தொடர்ந்து பாரிஸ் பாரா ஒலிம்பிக்கில் பங்கேற்கவும் தகுது பெற்றார். ஆண்கள் குண்டு எறிதலில் இந்தியவின் ரவி ரங்காலி அதிகபட்சம் 8.90 மீட்டர் தூரம் எறிந்தார்.
via News J : https://ift.tt/YpRmw7f
via News J : https://ift.tt/YpRmw7f