Media மக்களவைத் தேர்தலுக்கு தயாராகும் அதிமுக..!அடுத்தாண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்கள். மேலும் 2018ல் பழைய உறுப்பினர் பதுப்பிக்கப்பட்டதோடு, புதிய உறுப்பினர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், தற்போதும் 5 ஆண்டுக்குப் பிறகு மீண்டும் அதேபோன்ற பணிகள் நடப்பதாகவும் தெரிவித்திருக்கும் அவர், இன்றைக்கு அதிமுகவில் 1.60 கோடி உறுப்பினர்கள் சேர்ந்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.Mediaமாபெரும் மதுரை மாநாடு…!மேலும் பூத் கமிட்டி, பாசறைகள் எல்லாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கும் எடப்பாடி கே.பழனிச்சாமி, ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் பிரம்மாண்ட மாநாடும் நடைபெறும் என்று அறிவித்திருக்கிறார். ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், மதுரை மாநாடு மக்களின் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றொரு கேள்வி தற்போது எழுந்துள்ளது. விடியா திமுக அரசின் இரண்டாண்டு ஆட்சிக் காலத்தில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை சந்தித்து வரும் மக்கள், எப்போது தான் நமக்கு உண்மையான விடியல் ஏற்படும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை பெறும் விதமாக அதிமுகவும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.திமுகவினைக் கண்டிக்கும் அதிமுக…!விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு முதல் பல்வேறு வரிகள் உயர்வு வரை திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் எல்லாம் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துக்கொண்டு, உண்மையான விடியலை அதிமுக தான் தரும் என்கிற நம்பிக்கையில் திமுகவுக்கு எதிரான முழக்கங்களையும் முன்வைத்திருக்கிறார்கள். தேசிய அரசியலில் கால் பதித்துவிடலாம், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துவிடலாம், அதனால் நம்முடைய பெயரும் தேசிய ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் என்கிற ஆர்வத்தில் ஏதேதோ செய்துக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.edappadi k palanisamiதிமுகவிற்கு முடிவெழுதப்போகும் தேர்தல்…!இதற்கு நடுவே சத்தமே இல்லாமல் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூர்வாங்க பணிகளை தொடங்கியிருக்கிறது அண்ணா திமுக. 2011ம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது அதிமுகவின் கோவை மாநாடு. அதேபோல இந்த விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையில் அதிமுகவின் மதுரை மாநாடு அமையும் என்று அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் எதிர்பார்க்கிறார்கள். விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுத அதிமுகவால் மட்டும் தான் முடியும் என்று நம்பும் பொதுமக்கள், அதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டும் இருக்கிறார்கள் என்று சொன்னால் மிகையாகாது.
via News J : https://ift.tt/7fbrq4e
via News J : https://ift.tt/7fbrq4e
Mediaதமிழ் இலக்கியச் சூழலில் ஒரு சொலவடை உண்டு. அதாவது “ வெளியிலிருந்து கோவில்பட்டியை நோக்கி கல்லைத் தூக்கி எறிந்தால், கல்படும் தலை ஒரு எழுத்தாளனின் தலையாகத்தான் இருக்கும்”. இது ஒருவகையில் உண்மைதான். அந்த அளவிற்கு எழுத்தாளுமைகள் நிறைந்த மண் அது. கரிசல் எழுத்தாளர்கள் என்று ஒரு பட்டியலை எடுத்தால் அதில் பலர் இடம் பிடிப்பார்கள். அவர்களில் கி.ராஜநாராயணன் மற்றும் கு.அழகிரிசாமி ஆகியோர்களே முதலிடம் பிடிப்பார்கள்.கு. அழகிரிசாமி நூற்றாண்டு | 'கவிஞர்' கு.அழகிரிசாமி! | Ku. Alagiriswamy century - hindutamil.inஅவர்களில் எழுத்தாளர் கு.அழகிரிசாமிக்கு இந்த நடப்பு ஆண்டானது நூற்றாண்டு ஆகும். அதனையொட்டி அவரது படைப்புகள் அடங்கிய விலையில்லாப் பிரதியினை தன்னறம் நூல்வெளிப்பதிப்பகமானது வெளியிட தீர்மானித்தது. முக்கியமாக இந்த விலையில்லாப் பிரதி இளம் வாசகர்களின் கைகளுக்கு சென்று சேர வேண்டும் என்று முடிவெடுத்து, இந்நற்காரியத்தில் இறங்கியது.தற்பொது கு.அழகிரிசாமியின் விலையில்லாப் பிரதியானது ஒவ்வொரு இளம் வாசகர் கைகளுக்கும் கொண்டுசெல்லும் வேலையினைத் தொடங்கியிருக்கிறது. அதன்படி கு.அழகிரிசாமியின் இந்த விலையில்லாப் பிரதி தொகுப்பில் 11 கதைகள், 7 கட்டுரைகள், 14 சிறுவர் கதைகள், கடிதங்கள் போன்ற அவரது படைப்புகள் அடங்கியுள்ளன. இந்தத் தொகுப்பின் தொகுப்பாசிரியர் கவிஞர் ராணிதிலக் ஆவார். விலையில்லாப் பிரதி பெறுவதற்கான தொடர்பு எண் : 9843870059
via News J : https://ift.tt/94ZhzLi
via News J : https://ift.tt/94ZhzLi
Mediaபுவி வெப்பமயமாதல்:புவி வெப்பமடைதல் என்பது நிச்சியமாக தற்பொது பூமி எதிர்கொள்ளும் சுற்றுசூழல் சவாலாகும். இந்த நிலைமையின் தீவிரத்தை புரிந்து கொள்ளவது மிகவும் அவசியமான ஒன்று ஆகும். புவி வெப்பமாதல் என்பது புவி மேற்புற பகுதியின் சராசரி வெப்பநிலையில் ஏற்பட்டு இருக்கும் சீரான வெப்பநிலை உயர்வுதான் புவிவெப்பமடைதல் ஆகும்.மேலும் பூமி வெப்பமடைந்து வருவதால், சூறாவளி, நோய்கள் மற்றும் வெப்ப அலைகளின் காயங்கள், வறட்சி, புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரழிவுகள் அடிக்கடி நிகழ்கின்றன. கடந்த 100 ஆண்டுகளில் பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலுள்ள சராசரி காற்றின் வெப்பநிலை 10 டிகிரி செல்சியஸ் விட சற்று குறைவாக உயர்ந்துள்ளதது. புவிவெப்படைவதல் என்பது சுற்றுப்புறச்சூழலின், பசுமைக்குடில் வாயுகளின் நிலை அதிகரிக்கும் போது பூமியின் நிலப்பரப்பில் ஏற்படும் அளவுக்கடந்த தட்பவெப்பநிலையாகம். பசுமைக்குடில் வாயுக்கள் என்பது சுற்றுப்புறச்சூழலின் வெப்பத்தை தடுக்கும் வாயுக்கள் ஆகும். இந்த பசுமைகுடிலை போல, வளி மண்டலத்திலும், சூரியனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சானது இந்த வாயுக்களால் தடுக்கப்பட்டு புவியின் வெப்பத்தை அதிகரிக்கிறது.அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் நிகழ்வு ! பேரபாயத்தில் மனித இனம் ! | வினவுஉலக வெப்ப நிலை மாற்றங்கள்:இன்றைய வெப்பநிலை 150-ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட 0.74 டிகிரி சென்டிகிரேட் அதிகமாக உயர்ந்து உள்ளது. எனவே புவி வெப்பமாதல் என்பது நிதர்சனமானது என்பதை பருவநிலை மாற்றம் உணர்த்திக் கொண்டே உள்ளது. வரலாறு காணா வகையில் வெப்பநிலை அதிகரிப்பதும், பருவமழை பொழிவு குறைந்து இருப்பதும் புவி வெப்பமடைகிறது என்பதை நம்மால் உணர முடியும். இதுபோலவே நம் உலகின் சராசரி வெப்பநிலை ஒரே வாரத்தில் மூன்றாவது முறையாக புதிய உச்சத்தை அடைந்து உள்ளது. சுற்றுசூழல் வல்லுனர்கள் உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிரி செல்சியஸ் என்ற அளவுக்கு கட்டுப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ஆனால், கடந்த ஜூலை 3-ஆம் தேதி உலகின் சராசரி வெப்பநிலை 17.01 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்கு அதிகரித்து இருந்தது. இந்த நாளை உலகின் மிக அதிக வெப்பம் தகித்த நாளாக பதிவாகி உள்ளது.புவி வெப்பமடைதல் என்றால் என்ன? அதன் காரணங்கள் மற்றும் விளைவுகள் என்ன? அது எந்த வழிகளில் நம் வாழ்க்கையை பாதிக்கிறது? - Quoraகடந்த 2016-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியசாக பதிவாகியிருந்த நிலையில் அப்பொது. அதுதான் உலகின் மிக அதிக தகிக்கும் வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது அதை எல்லாம் ஓரம்கட்டிய வகையில் கடந்த ஜூலை 3-ஆம் தேதி 17.01 டிகிரி செல்சியஸ் சராசரி வெப்பநிலை பதிவானது. தொடர்ந்து ஜூலை 4 மற்றும் 5, 6-ஆம் தேதிகளில் 17.23 டிகிரி செல்சியஸ் என சராசரி வெப்பநிலை பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் மெய்ன்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே, இந்த வெப்பநிலையை குறித்து லண்டனின் கிராந்தம் இன்ஸ்டிட்யூட் ஃபார் க்ளைமேட் சேஞ்ச் (institute for climate change) கல்லூரியின் சூழலியல் விஞ்ஞானி ஃப்ரெட்ரிக் ஆட்டோ கூறுகையில் உண்மையில் இது நமக்கும் நம் சுற்றுசூழலுக்கும், நம்முடைய வாழ்வாதாரத்திற்கும் ஏற்புடையது அல்ல என்றும், இதே நிலைமை தொடர்ந்து வந்தால் மிகவும் மோசமான மற்றும் அதிக மரணங்கள் ஏற்படும் நிலமை வந்து விடும் என்றும் கூறினார்.
via News J : https://ift.tt/zoMbmXP
via News J : https://ift.tt/zoMbmXP
Mediaதமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலிப்பணியிடங்களாக உள்ள சிவில் நீதிபதிகள் பணியிடங்களை 2014 முதல் தமிழ்நாடு அரசுத் தேர்வு ஆணையமான டி.என்.பி.எஸ்.சியானது நடத்திவருகிறது. அதற்கு முன்பு வரை இந்தத் தேர்வினை உயர்நீதிமன்றமே நடத்தி வந்தது. தமிழ்நாடு தேர்வானையமானது எழுத்துத் தேர்வை நடத்தினாலும் நேர்முகத் தேர்வு மற்றும் கலந்தாய்வு போன்றவற்றினை உயர்நீதிமன்றம் டிஎன்பிஎஸ்சியுடன் சேர்ந்து செய்கிறது. இதற்குமுன 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வில் 222 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பிறகு 2019ல் 176 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்வில், உயர்நீதிமன்ற நீதிபதிகளால் நடத்தப்பட்ட நேர்முகத் தேர்வில் 56 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டார்கள்.மூன்றாண்டுகளுக்கு பிறகு…!கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட உத்தேச திட்டமிடல் கால அட்டவணையில், 245 சிவில் நீதிபதிகள் காலி இடங்களுக்கான எழுத்துத் தேர்வு அறிவிப்பு மே மாதம் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டிருந்தது. அதனை ஒட்டி ஜூலை மாதம் முதல்கட்ட எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு, செப்டம்பரில் முடிவுகள் வெளியிடப்படும் என்று சொல்லப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதான எழுத்துத் தேர்வு 2023 ஜனவரியில் நடத்தப்பட்டு, அதன் முடிவுகள் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும் தொடர்ந்து ஏப்ரல் மாதம் நேர்முகத் தேர்வு, கலந்தாய்வு நடத்தப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 3 ஆண்டுகளுக்குப் பிறகு 245 சிவில் நீதிபதி இடங்களை நிரப்பவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி ஜூன் 1 ஆம் தேதி வெளியிட்டது. இதன்படி, ஜூன் 30ம் தேதி வரை விண்ணப்பங்களை சமர்பிக்கலாம். இதன்பிறகு 5 முதல் 7ம் தேதி விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். முதல் கட்ட தேர்வு ஆகஸ்ட் 18ம் தேதியும், மெயின் தேர்வு அக்டோபர் 28 மற்றும் 29ம் தேதி நடைபெற உள்ளது என்று அறிவிப்பாணை வெளியானது.கடைசி தேதியை ஜூன் 30லிருந்து நீட்டிக்க கோரிய மனு தள்ளுபடி…!இந்த நிலையில் சிவில் நீதிபதிகள் தேர்விற்கான கடைசி தேதியை நீட்டிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் முனைவர் எஸ்.கே. கார்வேந்தன் என்பவர் பொது நல வழக்கு ஒன்று தொடர்ந்திருந்தார். அவ்வழக்கின்படி, இந்தாண்டு சட்டப்படிப்பை முடிக்கும் மாணவர்கள் குறிப்பிட்ட தேதிக்குள் தங்கள் சான்றிதழ்களை தாக்கல் செய்ய முடியாததால் கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்று வழக்கின் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கங்கப்புர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமவர்வானது தக்க பதில் ஒன்றினைத் தந்தது. அப்பதிலின்படி, மாவட்ட நீதிபதி தேர்வில் பங்கேற்பதற்உ மூன்றாண்டுகளுக்கு முன்பு சட்ட படிப்பு படித்திருக்க வேண்டும் என்ற விதி இருப்பதால், இந்தாண்டில் படிப்பை முடிப்பவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்க முடியாது என்று உயர்நீதிமன்றம் கூறியது.
via News J : https://ift.tt/14jBmbs
via News J : https://ift.tt/14jBmbs
Mediaவகுப்பறையில டீச்சர்கிட்ட ஒப்பிக்கிறமாதிரியேதான் செய்தியாளர் சந்திப்புலயும் பேசிக்கிட்டு திரியுறாங்க நம்ம மாநகரத் தாய்… அதாங்க மாநகர மேயரம்மா!இப்பக்கூட மாநகராட்சி அரசு பள்ளி மாணவர்கள டூர் கூட்டிட்டு போறது சம்பந்தமா பேட்டி கொடுக்கிறதுக்குள்ள அவங்க பட்டபாடு இருக்கே… இப்பவே கண்ண கட்டுதே ரேஞ்சுலதான் இருந்துருக்கு…மாநகராட்சி பள்ளி மாணவர்கள பிர்லா கோளரங்கத்துக்கு டூர் கூட்டிட்டு போறோம்னு சொல்றதுக்குள்ளத்தான் எத்தன டங் ஸ்லீப்..அப்புறமா இனிமே எங்கெல்லாம் ஸ்கூலுக்கு பசங்கள கூட்டிட்டு போறோம்னு லிஸ்ட்ட பார்த்து படிச்சவங்க, மாணவர்கள் எத்தன பேருன்னு கணக்கு சொன்னத பார்த்து பக்கதுல இருந்த பெண் அதிகாரியே ஜெர்க் ஆகிட்டாங்க.மழைநீர் வடிகால்வாய் பணிகள் சரியா நடக்காதது தொடர்பாவும், சாலைகள்ல மழை நீர் தேங்குறது தொடர்பாவும் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்விகேட்டதும்… இது சரிப்பட்டு வராதேன்னு, எல்லாத்தையும் மேல இருக்குறவன் பார்த்துக்கிடுவாங்கிற ரேஞ்சுல அமைச்சர் நேரு அண்ணன் பார்த்துக்கிடுவாருன்னு சொல்லி ஜகா வாங்கிட்டாங்க…28-year-old woman set to become new Chennai Mayor - The Hinduஅப்புறமா மாமன்னன் படம் தொடர்பா செய்தியாளர் கேள்வி கேட்டதும் மேயரம்மா முகத்துல அப்படி ஒரு புன்னகை… திமுகவுல நடக்குற சமூக நீதி கொள்கைய உதய் அண்ணா காமிச்சிருக்காங்கன்னு பாராட்டு பத்திரம் வாசிச்சாங்க..
((ப்ரீத்: சிர்ப்பது மட்டும் ரிப்பீட்டு) டைமிங் 06:48 டூ 07:02))திமுகவுல சாதி ரீதியான பாகுபாடுகள் தொடர்பான கேள்விக்கு எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு சொன்னவங்க, கேள்விய அப்படியே உதய்னாகிட்ட மாத்திவிட்டுட்டாங்க..இதையெல்லாம் தாண்டி தக்காளி சம்பந்தமா கேட்டதும்…. ஹலோ அது ஏன் டிபாட்மெண்டலாம் இல்லன்னு சிரிச்சிக்கிட்டே ஆவேசம் காட்டுனவங்க கடைசி வரைக்கும் பதில் சொல்லாம அது ஒரு ஜோக்குங்குறமாதிரியே சிரிச்சிகிட்டே இருந்துருக்காங்க… இத்தனைக்கும் பக்கத்துல நிக்குற தணிக்கை குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், பரிசீலிக்கிறோம்னு சொல்லுங்கன்னு எடுத்துக் கொடுத்தும் அதையெல்லாம் கண்டுக்கமாக நடைய கட்டிருக்காங்க…நாம் வாங்கி வந்த வரம் அப்படிங்கிற மாதிரி சென்னை மக்களுக்கு கிடைத்த மேயர் இப்படித்தான் செயல்பட்டுக்கிட்டு இருக்காரு… என்ன முன்னாடியெல்லாம் அமைச்சர் சேகர்பாபு கூடவே… ஒரே ஒரு குருக்கள் வாராருன்னு சொல்ற சிஷ்யை மாதிரி இருந்தாங்க… இப்ப அவங்களே குருக்களா மாதிரி தனி ஆவர்த்தனம் செஞ்சிக்கிட்டு வர்றாங்க…என்ன ஒண்ணு, சென்னை மாநகர மக்களும் தக்காளி பயன்படுத்துவாங்களே, அவங்களுக்கு குறைஞ்ச விலையில தக்காளி கிடைக்க நம்மோட பங்களிப்பும் இருக்கணுமேன்னு, மாநகர தாயா எப்ப யோசிப்பீங்களோ?
via News J : https://ift.tt/lFd3AU0
((ப்ரீத்: சிர்ப்பது மட்டும் ரிப்பீட்டு) டைமிங் 06:48 டூ 07:02))திமுகவுல சாதி ரீதியான பாகுபாடுகள் தொடர்பான கேள்விக்கு எனக்கு அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லையேன்னு சொன்னவங்க, கேள்விய அப்படியே உதய்னாகிட்ட மாத்திவிட்டுட்டாங்க..இதையெல்லாம் தாண்டி தக்காளி சம்பந்தமா கேட்டதும்…. ஹலோ அது ஏன் டிபாட்மெண்டலாம் இல்லன்னு சிரிச்சிக்கிட்டே ஆவேசம் காட்டுனவங்க கடைசி வரைக்கும் பதில் சொல்லாம அது ஒரு ஜோக்குங்குறமாதிரியே சிரிச்சிகிட்டே இருந்துருக்காங்க… இத்தனைக்கும் பக்கத்துல நிக்குற தணிக்கை குழு தலைவர் பாலவாக்கம் விஸ்வநாதன், பரிசீலிக்கிறோம்னு சொல்லுங்கன்னு எடுத்துக் கொடுத்தும் அதையெல்லாம் கண்டுக்கமாக நடைய கட்டிருக்காங்க…நாம் வாங்கி வந்த வரம் அப்படிங்கிற மாதிரி சென்னை மக்களுக்கு கிடைத்த மேயர் இப்படித்தான் செயல்பட்டுக்கிட்டு இருக்காரு… என்ன முன்னாடியெல்லாம் அமைச்சர் சேகர்பாபு கூடவே… ஒரே ஒரு குருக்கள் வாராருன்னு சொல்ற சிஷ்யை மாதிரி இருந்தாங்க… இப்ப அவங்களே குருக்களா மாதிரி தனி ஆவர்த்தனம் செஞ்சிக்கிட்டு வர்றாங்க…என்ன ஒண்ணு, சென்னை மாநகர மக்களும் தக்காளி பயன்படுத்துவாங்களே, அவங்களுக்கு குறைஞ்ச விலையில தக்காளி கிடைக்க நம்மோட பங்களிப்பும் இருக்கணுமேன்னு, மாநகர தாயா எப்ப யோசிப்பீங்களோ?
via News J : https://ift.tt/lFd3AU0
Media வந்தே பாரத்:பொதுமக்களுக்குத் தேவையான பல்வேறு வகை வசதிகளைக் கொண்டு ஐ.சி.எஃப்-ல் வடிவமைக்கப்பட்டதுதான் வந்தே பாரத் விரைவு ரயில் என அழைக்கப்படும் ரயில் 18 (Train-18) இது இந்திய ரயில்வேயால் இயக்கப்படும் பகல் நேர குறுகிய தூர ரயில் சேவை ஆகும்.இந்த ரயில் சேவையனது சிறந்த உற்பத்தி கட்டமைப்பை உருவாக்குவதற்கு வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கிய தேசிய திட்டம் ஆகும். இந்த திட்டமானது இந்தியாவின் முதலீட்டை எளிதாக்குவதற்கும், திறனை மேம்படுதுவதற்கும், புதுமைகளை வளர்பதற்கும் உருவாக்கப்பட்டதாகும்.இந்த வகையில் ரயிலின் வேகத்தை அதிகரித்து குறுகிய தூரம் இயங்கும் ரயில் சேவை இதுவே ஆகும். ஒருங்கிணைந்த பெட்டி (Integral Coach Factory) தொழிற்சாலை தயாரிப்பு இந்தியாவின் முதல் பிரதமர் ஆன ஜவஹர்லால் நேருவால் 1955- ஆம் ஆண்டு அக்டோபர் 2 நாளில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த தொழிற்சலைகள் எங்கு உள்ளது என்றால் சென்னை மற்றும் பெரம்பூரில் அமந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் தான் வந்தே பாரத் ரயில் சேவை தயாரிக்கப்பட்டது. மேலும் இதியாவின் முதல் வந்தே பாரத் விரைவு ரயில் ஆனது முதன் முதறையாக உத்திர பிரதேசத்தில் 2018-ஆம் ஆண்டு மொராதாபாத்தில் நடந்த சோதனையில் வெற்றிப் பெற்றது. இதனை அடுத்து தான் வந்தே பாரத் ரயிலுக்கு ட்ரயின் 18 (trin18) என்ற மறுபெயரும் வந்தது.கட்டணம் குறைப்பு:இந்த, வகையில் இதற்கான பயண கட்டணம் என்பது இதற்கு ஏற்றது போலவே உள்ளது. எளிய மக்கள் பயணிக்கும் வகையில் இல்லாமல் கூடுதலாக கட்டணம் உள்ளதாக தெரிவிக்கின்றனர் பொதுமக்கள். சதாப்த்தி, தூரந்தோ ரயில், ஆகிய ரயில்களில் வெவ்வேறு டிக்கெட் கட்டணங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.இதில் ஏசி ரயில் பெட்டிகளில் பயணிக்கும் பயணிகளுக்கான கட்டணம் பன்மடங்கு அதிகமாக இருப்பதால் பயணிகள் இடையே ஆர்வம் குறைந்தது, ஏசி ரயில் பெட்டிகளில் பயணிப்போர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தும் வருகிறது. மேலும், மூத்த குடிமக்களுக்கான சலுகை கட்டணம், விளையாட்டு வீரர்களுக்கா சலுகை கட்டணம் என அனைத்து சலுகைகளும் ரத்து செய்யப்பட்டதாலும் ஏசி ரயில்களில் பயணிப்போரின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. ஒரு சில ரயில்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவான பயணிகளுடன் சில ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில் பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக, டிக்கெட் கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக அறிவித்து உள்ளனர்.ஏசி ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளுக்கான கட்டணத்தை குறைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்து இருப்பதாக பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அதன்படி விரைவு ரயில் ஏசி இருக்கை வசதி, சதாப்தி, தூரந்தோ போன்ற ரயில்களில் இருக்கை வசதி பயணத்துக்கான டிக்கெட் கட்டணம் 25 சதவீத குறைப்பு விரைவில் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
via News J : https://ift.tt/3R0DHn9
via News J : https://ift.tt/3R0DHn9
Mediaபிச்சைக்காரர் கிட்ட இம்புட்டு பணமா?நம் அன்றாட வாழ்கையில் நம் தெருக்களிலும் சாலை ஓரங்களிலும் நாம் சாதாரணமாக பார்கும் மக்கள் ஏராளம். அதில் அவர்களை எல்லா நாம் எளிதில் கடந்து இருப்போம். ஆனால் அவர்களில் இருந்து சற்று மாறுப்படுபவர்கள் சாலைகளிலும், தெருக்களிலும் பிச்சையெடுக்கும் பிச்சைக்காரர்கள். பிச்சைக்காரர்கள் என்றதுமே நம் மனதில் டக்கென்று தொன்றுவது விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் படம் தான். ஆனால் இந்த படத்திற்கு பிறகுதான் அவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று புரிய வந்தது என்று கூட சொல்லலாம். இருந்தும் பிச்சைக்காரர்கள் என்றால் உடனடியாக நியாபகம் வருவது அவர்கள் ஏழைகள், பாவப்பட்டவர்கள் என்றுதான் நியாபகத்திற்கு வரும். ஆனால் இங்கு ஒருவர் பிச்சை எடுத்தே கோடீஸ்வரர் ஆகியிருக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம் தமிழ் சினிமாவில் வரும் காமெடி காட்சி ஒன்று தான் நியாபகம் வருகிறது ஷாஜகான் படத்தில் வரும் கோவை சரளா சினெகிதனே சினெகிதனே என்று பாட்டு பாடி பிச்சை எடுத்தே கவுன்சிலர் ஆகி இருப்பார் அதுபோலவே இங்கு ஒருவரும் அப்படி ஆகியிருக்கிறார் கவுன்சிலராக அல்ல கோடீஸ்வரராக!பாரத் ஜெயின் எனும் பணக்கார பிச்சைக்காரர்..!மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பையை சேர்ந்தவர் பாரத் ஜெயின். இவர் மும்பையின் பல தெருக்களில் பிச்சை எடுத்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அங்குள்ள பல தெருக்களில் பிச்சை எடுத்தே நறைய பணம் சம்பாதிது உள்ளார். இவருடைய மாத வருமானமே சுமார் 60,000 முதல் 75,000 வரை இருக்கும் என கூறப்படுகிரது. இதனை கேட்டதுமே அனைவருக்கும் அதிர்சியளித்து இருக்கும் என்று தெரிகிறது. பட்ட படிப்பு படிப்பதை விட பட்ட பகலில் பிச்சை எடுக்கலாமே என்ற எண்ணம் கூட தோன்றும் தான்!. இன்னும் இருக்கு! இவரது இரண்டு பெட்ரூம் மட்டுமே சுமார் 1.5 கோடி மதிப்பு உள்ளதாம். இவருக்கு சொந்தமா பிளாட் ஒன்று மும்பையில் இருக்கிறது. இவர் அதே பகுதியில் சொந்தமாக இரண்டு கடைகள் வைத்துள்ளாராம். இந்த கடைகளின் வாடகை மட்டுமே மாதம் 30,000 ரூபாய் வருகின்றதாம். இவரதின் மொத்த சொத்து மதிப்பே 7.5 கோடி ரூபாய் மதிப்பு உள்ளது என்று அப்பகுதி மக்கள் வாய் பிளக்கிறார்கள். என்ன? பிச்சை எடுக்க போலாமா? போலாம் ரைட்..!
via News J : https://ift.tt/Fwgc9kQ
via News J : https://ift.tt/Fwgc9kQ
👍1
Mediaநாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்சியாய் களத்திற்கு வந்த அதிமுகவின் வெற்றி சூட்சமம் என்ன ? தமிழகம், புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வகுத்திருக்கும் வெற்றி வியூகம் என்ன? என்பதைத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.வரும் 2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான அனைத்து பூர்வாங்க பணிகளையும் தொடங்கிவிட்டதாக தெரிவித்துள்ளார் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி. பழைய உறுப்பினர் அட்டைகள் புதுப்பிக்கப்பட்டதோடு, புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்கும் பணிகள் நடக்கும் நிலையில் இன்றைக்கு அதிமுகவில் 1கோடியே 60 லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாகவும் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.பூத் கமிட்டி, பாசறைகள் எல்லாம் அமைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர், ஆகஸ்ட் 20ம் தேதி மதுரையில் அதிமுக சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட மாநாட்டிற்கான பணிகளை தொடங்கி இருக்கிறார். ஓராண்டுக்கு முன்பாகவே தேர்தலுக்கு அதிமுக தயாராகி வரும் நிலையில், மதுரை மாநாடு மக்களிடையே மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என்று கணிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்…விடியா திமுக அரசின் இரண்டாண்டு கால ஆட்சிக் காலத்தில் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை சந்தித்து வரும் மக்கள், எப்போது தான் நமக்கு உண்மையான விடியல் ஏற்படும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறார்கள்.மக்களின் நம்பிக்கையை பெறும் விதமாக அதிமுகவும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு முதல் பல்வேறு வரிகள் உயர்வு வரை திமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் அதிமுக சார்பில் மாவட்ட வாரியாக நடத்தப்பட்டிருக்கின்றன.
தேர்தல் என்றாலே களத்திற்கு முதல் ஆளாய் வந்து நிற்பது அதிமுக… கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் தேர்வு என்று எல்லா விதத்திலும் நெம்பர் ஒன்னாகவே இருக்கிறது அதிமுக. புரட்சித்தலைவியின் வழியில், தற்போது எடப்பாடி கே பழனிசாமியும் நெம்பர் ஒன்னாக களத்தில் குதித்திருக்கிறார்..அதேவேளையில், தேசிய அரசியலில் கால் பதித்துவிடலாம், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துவிடலாம், அதனால் நம்முடைய பெயரும் தேசிய ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் என்கிற ஆர்வத்தில் ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் இந்த முன் நகர்வுகள் திமுகவுக்கு கொஞ்சம் அச்சத்தைத்தான் கொடுத்திருக்கிறது.2011ம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது அதிமுகவின் கோவை மாநாடு. அதேபோல அதிமுகவின் மதுரை மாநாடு இந்த விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையில் அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது அதிமுக தொண்டர்கள் மத்தியில்..நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்சியாய் களத்திற்கு வந்த அதிமுகவின் வெற்றி சூட்சமம் என்ன ? தமிழகம் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வகுத்திருக்கும் வெற்றி வியூகம் என்ன? என்பதைத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.
via News J : https://ift.tt/5X2xQM0
தேர்தல் என்றாலே களத்திற்கு முதல் ஆளாய் வந்து நிற்பது அதிமுக… கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வாக்குறுதி, வேட்பாளர் தேர்வு என்று எல்லா விதத்திலும் நெம்பர் ஒன்னாகவே இருக்கிறது அதிமுக. புரட்சித்தலைவியின் வழியில், தற்போது எடப்பாடி கே பழனிசாமியும் நெம்பர் ஒன்னாக களத்தில் குதித்திருக்கிறார்..அதேவேளையில், தேசிய அரசியலில் கால் பதித்துவிடலாம், எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்துவிடலாம், அதனால் நம்முடைய பெயரும் தேசிய ஊடகங்களில் அடிக்கடி பேசப்படும் என்கிற ஆர்வத்தில் ஸ்டாலின் கனவு கண்டுகொண்டிருக்கும் வேளையில், அதிமுகவின் இந்த முன் நகர்வுகள் திமுகவுக்கு கொஞ்சம் அச்சத்தைத்தான் கொடுத்திருக்கிறது.2011ம் ஆண்டு திமுக ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது அதிமுகவின் கோவை மாநாடு. அதேபோல அதிமுகவின் மதுரை மாநாடு இந்த விடியா திமுக அரசுக்கு முடிவுரை எழுதும் வகையில் அமையும் என்ற எதிர்பார்ப்பு எகிறியிருக்கிறது அதிமுக தொண்டர்கள் மத்தியில்..நாடாளுமன்ற தேர்தலுக்கு முதல் கட்சியாய் களத்திற்கு வந்த அதிமுகவின் வெற்றி சூட்சமம் என்ன ? தமிழகம் புதுச்சேரியில் உள்ள, 40 தொகுதிகளையும் கைப்பற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி வகுத்திருக்கும் வெற்றி வியூகம் என்ன? என்பதைத்தான் மற்ற கட்சிகள் எல்லாம் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.
via News J : https://ift.tt/5X2xQM0
Mediaஇந்தியாவைப் பொறுத்தவரை தக்காளியின் விலையானது அபரிமிதமானதாக உயர்ந்த வண்ணம் உள்ளது. இன்று கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு பெட்டித் தக்காளியின் விலை 1400 முதல் 1500 வரை விற்கப்படுகிறது. இது இப்படி இருக்க தற்போது சென்னையில் மீன்களின் விலையானது கிடுகிடுவென உயர்ந்துள்ளது.மீன்கள் விலை உயரக் காரணம் என்ன? தமிழக கடலோரப் பகுதிகளில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ஆ,ம் தேதி முதல் கடந்த ஜூன் 14ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த காலக்கட்டத்தில் மீன்கள் வரத்து பாதிக்க்ப்பட்ட நிலையில் மீன்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. தடைக்காலம் ஒய்ந்த நிலையில் மீன்கள் வரத்து சீரானது. விலையும் கணிசமாக குறைந்தது. இப்போது என்ன சிக்கல் என்றால், அரபிக்கடல் பகுதியில் மீன்பிடி தடைக்கால்த்தால் வரத்து பாதித்திருக்கும் நிலையில் சென்னையில் மீன்கள் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் விடுமுறை நாளான நேற்று காசிமேடு, வானகரம், சிந்தாதிரிப் பெட்டை, திருவான்மியூர், காவாங்கரை, பெரம்பூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட மீன் மார்க்கெட்டுகளில் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்பட்டது. ஆனால் மீன்கள் விலை தாறுமாறாக இருந்த காரணத்தால் மக்கள் அதிர்ச்சி அடைந்துதான் போனார்கள்.Chennai: Arrival, sale of fish down at Kasimedu | Chennai News - Times of Indiaமீன்கள் விலை எவ்வளவு?ஞாயிறு என்றாலே மக்கள் தங்களது வீடுகளில் கறிக்குழம்பு வைக்கவே அதிகம் பிரியப்படுவார்கள். அப்படி மக்கள் அதிக ஆர்வத்துடன் கறிக்கடைகளில் திரண்டு வந்து கறிகளை வாங்குவார்கள். குறிப்பாக நேற்றைய தினம் மீன் வாங்குவதற்காக அலைமோதிய மக்களுக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் மீன்வகைகளான வஞ்சரம், வவ்வால் போன்ற மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து காணப்பட்டது. ஒரு கிலோ வஞ்சரம் 1300 ரூபாயிலிருந்து 1400 வரை விற்பனை ஆகியுள்ளது. சங்கரா 700 முதல் 750 வரை விற்பனை ஆகியுள்ளது. அதே போல வவ்வால் மீன் 800 முதல் 820 வரை விற்பனை ஆகியுள்ளது. இறால் 600 முதல் 650 வரையும், கிழங்கான் மீன் 450 வரையிலும் பிற மீன்கள் தாறுமாறான விலையில் விற்பனை ஆகியுள்ளது. ஊளி, கிளிச்சை போன்ற சிறிய மீன்களின் விலையில் பெரிதாக மாற்றம் இல்லை. அதனால் மக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப மீன்களை வாங்கிக்கொண்டு சென்று விட்டார்கள்.SDN Sea Foods in Chindatripet,Chennai - Best Fish Wholesalers in Chennai - Justdialவிலை குறைய வாய்ப்பே இல்லை..!மீன்கள் விலை அதிகரித்துள்ளது சம்பந்தமாக சென்னை வான்கரம் மீன் மார்க்கெட்டினர் தெரிவித்த செய்தியின்படி, பொதுவாகவே சென்னை போன்ற பெருநகரங்களில் மக்களின் தேவைக்காக வெளி மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்காக கொண்டுவரப்படுவது வாடிக்கை. ஆனால் அரபிக்கடலில் இந்த முறை மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டிருப்பதால் அங்கிருந்து மீன்கள் வரத்து இல்லை. இதனால் மீன்கள் விலையானது அதிக அளவு உயர்ந்துள்ளது. வர்த்து சீராகும் வரை மீன்கள் விலை குறைய வாய்ப்பே இல்லை என்று அவர்கள் தகவல் தெரிவித்தனர்.இதுபோன்ற உணவுப்பொருள் பிரச்சினைகளுக்கு அரசு உடனடி தீர்வு வழங்காமல் மெத்தனபோக்கில் ஈடுபட்டுவருவது மக்களுக்கு வேதனையினை அளிக்கிறது. ஏற்கனவே தக்காளி விலை உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சி அளித்திருந்த நிலையில் மலிவு விலையில் கிடைக்கும் மீன் கூட விலை உயர்ந்திருப்பது ஏழை எளிய மக்களை மிகவும் சிரமித்திற்கு உள்ளாக்கியிருக்கிறது. இதற்கான மாற்று நடவடிக்கையினை அரசு முன்னெடுக்க வேண்டும் என்பது பலரது கோரிக்கையாக உள்ளது.
via News J : https://ift.tt/R46HMPd
via News J : https://ift.tt/R46HMPd
Mediaஇந்த உலகில் தன்னம்பிக்கைக்கு நிகரான ஒரு சக்தி என்றும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி உண்மையான காதல் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் அதன் எல்லையை தேடிச் செல்லும் என்று சொல்வார்கள். மேலும் ஒரு மனிதனுக்கு காதலும் தன்னம்பிக்கையும் சேர்ந்து இருந்தால் அவரது வாழ்வில் அவர் அடையக்கூடிய லட்சிய இலக்கானது மிக உயரமானது. மேலும், பிறப்பால் ஊனமுற்று விமர்சனங்களால் மனதளவில் ஊனமாகி தனது தன்னம்பிக்கை மற்றும் காதலின் மூலம் இந்த உலகில் வெற்றியை அடைந்த பிரபலங்களை நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் தற்சமயம் ஒரு பெண் பிரபலத்தை பற்றி பார்க்க உள்ளோம். ஆம், பெரும்பாலும் இந்த உலகில் பெண்கள் என்றாலே அவர்கள் முன்னேற்ற பாதையில் ஏகப்பட்ட தடைகளும் சிக்கல்களும் வதந்திகளும் விமர்சனங்களும் பரவி வந்து அவர்களை முன்னேற்றம் அடைய விடாமல் செய்யும் என்று நாம் அனைவரும் அறிந்த ஒரு தகவல்.தடை அதை உடை:அப்படி இருக்கையில் பிறப்பால் கைகள் இல்லாமல் பிறந்து வளர்ந்து வரும் காலங்களில் பல நபர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாகி மனதளவில் ஊனமாகி இருந்த ஒரு பெண்மணி தான் சப்திகா அவர்கள். இவர் இலங்கையை சேர்ந்த பெண்மணி ஆவார். மேலும் இவர் பிறந்த பிறகு இவரது பெற்றோரிடம் பலர் சென்று இப்படி ஊனமுற்ற ஒரு பெண்ணை வளர்ப்பது மிகவும் கடினம் அதனால் நீங்கள் இந்த குழந்தையை ஏதேனும் ஒரு அனாதை ஆசிரமத்தில் விட்டு விடுங்கள் என்று பலர் கூறி இருக்கிறார்கள் . ஆனால் அவரது பெற்றோர் தனது குழந்தையின் மேல் வைத்த பாசத்தினால் அந்த குழந்தையை முழு மனதுடன் வளர்த்து வந்தனர் . மேலும் சப்திகா அவர்கள் தனது சிறுவயதில் அவருக்கு நிகழ்ந்த பல கேள்விகளையும் கிண்டல்களையும் மனதில் விதைத்து கொண்டு கைகளால் செய்ய முடிந்த ஒரு விஷயத்தை கால்களால் செய்ய வேண்டும் என்று எண்ணி அதை உறுதிப்படுத்திக் கொண்டு அதற்காக நித்தமும் பாடுபட்டார். அப்படி அவர் சிறுவயதிலேயே தேர்ந்தெடுத்த ஒரு துறை தான் இசை மேலும் இவருக்கு சிறுவயதில் இருந்த இசையின் மீது தீராத காதல் இருந்து கொண்டே இருந்தது என்று தான் சொல்ல வேண்டும்.அவரது தன்னம்பிக்கையும் அவரது இசை மீது கொண்ட காதலும் அவரை மிகப் பெரிய அளவில் மாற்றி உள்ளன . அவர் தனது கால் விரல்களை கொண்டு இசையமைத்து பாடல் வரிகள் அமைத்து பாடல்களை பாடி ஒரு இசை கலைஞராக தன்னை உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறார். மேலும் இவர் இந்த நிலைக்கு வருவதற்கு இவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை இவருக்கு பக்க பலமாக நின்று இவரது இந்த சாதனைக்கு வழி வகுத்து இருக்கிறார்கள் என்று பெருமையுடன் கூறி வருகிறார். இவரது இந்த செயலை பார்த்து உலகத்தினர் அனைவரும் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் . மேலும் உலகமே அறியும் வகையில் மிகப்பெரிய ஒரு இசை கலைஞராக ஆவது தனது லட்சியம் என்று அவர் வாழ்ந்து வருகிறார். மேலும் கால்களை கொண்டே அனைத்து பணிகளையும் செய்து வருகிறார் நம்பிக்கை நாயகி சக்திகா அவர்கள். இவரது இந்த ஆசை நிறைவேற வேண்டுமென்று அவரை நாமும் வாழ்த்துவோமே.
via News J : https://ift.tt/XPyJGDx
via News J : https://ift.tt/XPyJGDx
Mediaஈரோடு அரசு விரைவு பேருந்தில் மாற்றுத்திறனாளி தம்பதியை ஏற்ற மறுத்த நடத்துநர் இருவரையும் கீழே இறக்கிவிட்ட சம்பவம் தமிழக அளவில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த விடியா திமுக ஆட்சியில் சாதாரண ஏழை எளிய மக்களிலிருந்து மாற்றுத்திறனாளிகள் வரை தொடர்ந்து அவதிக்குள்ளாக நேர்வது தொடர்ந்துகொண்டு இருக்கிறது. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன் இந்திய மாற்றுத் திறனாளி கிரிக்கெட் அணியின் கேப்டனை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் அரசுப் போக்குவரத்து நடத்துநர் அவதூறாக நடத்தினார். அதேபோல இந்த சம்பவமும் நேற்று அரங்கேறியிருக்கிறது. இதனை விடியா திமுக அரசின் போக்குவரத்துத் துறை கண்டுகொள்ளுமா? அல்லது டயர் ஊழலில் பணம் சம்பாதித்து மவுனியாக இருக்கும் அமைச்சர் சிவசங்கர் கண்டுகொள்வரா?என்ன நடந்தது…!கோவைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி தம்பதி மகேந்திரன், சுமதி தங்கள் ஐந்து வயது மகனுடன் சொந்த வேலையாக ஈரோடுக்கு நேற்று காலை வந்திறங்கினர். மதியம் 1:30 மணியளவில் கோவை செல்ல ஈரோடு மத்திய பஸ்டாண்டில் பேருந்திற்காக காத்திருந்துள்ளனர். கோவைக்கு செல்லும் டி.என். 33-3362 என்ற எண் கொண்ட இடைநில்லா அரசு பேருந்தில் இருவரும் ஏறி இருக்கின்றனர். அவர்களைத் தடுத்த கண்டக்டர் “மாற்றுத்திறனாளிகளுக்கு அனுமதியில்லை” என்றார். மாற்றுத்திறனாளியான மகேந்திரன் “இது போன்ற பேருந்துகளில் பயணிக்க அனுமதி உள்ளது: என்று கூரி அதற்கான ஆவணங்களையும் காட்டியுள்ளார். ஆனால் நடத்துநர் அந்த ஆவணங்களைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.Adavadi, the conductor of the government bus, refused to the disabled couple | மாற்றுத்திறனாளி தம்பதிக்கு மறுப்பு அரசு பஸ்சில் கண்டக்டர் அடாவடி | Dinamalarபின் நடத்துநர் மாற்றுத் திறனாளி தம்பதியைத் தரைக்குறைவாக பேசி வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து இறக்கிவிட்டார். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் உள்ள நேர காப்பாளரிடம் தம்பதியினர் புகார் அளித்தனர். அவரோ வேறு பேருந்தில் செ;ல்லுமாறு அறிவுறுத்தினார். ஆனால் அரசு விரைவு பேருந்தில் செல்வதற்கு அனுமதி அளிக்கவில்லை.பேருந்து நிலையத்தில் நின்ற மற்ற பயணிகள் இந்த நிகழ்வினைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். மாற்றுத் திறனாளியை அவமதித்த அரசு பேருந்து நடத்துனர் மற்றும் நேர கண்காணிப்பாளர் செயல், பல தரப்பினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.மாற்றுத்திறனாளி மகேந்திரனின் கூறியது..!பேருந்தில் ஏறிய எங்களை நடத்துநர் கீழே இறக்கிவிட்டார். அவமதிக்கும் வகையில் தவறான வார்த்தைகளை பேசினார். அரசு விரைவு பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், அவர்களது உதவியாளருக்கு 75 சதவீத கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ளது. இது தெரியாமல் எங்களை இறக்கிவிட்டதுடன் அவமதித்து, மிரட்டல் தொணியில் பேசினார். எனவே அந்த நடத்துநர் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். பின்னர் மாற்றுப் பேருந்தில் தம்பதிகள் இருவரும் சென்றனர்.இந்தச் சம்பவத்திற்கு இதுவரை போக்குவரத்துத்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தகவல் கிடைத்துள்ளன. விடியா திமுக ஆட்சியில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவது தொடர் வலைபின்னலாக உள்ளது. மக்களை அலைக்கழிக்கும் ஒரு அரசு, சீக்கிரம் கோட்டையிலிருந்து வீட்டிற்கே திருப்பி அனுப்பப்படும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
via News J : https://ift.tt/XLOf8my
via News J : https://ift.tt/XLOf8my
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/retteri-lake.jpg">Media</a>சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் 700 ஏக்கர் பரப்பில் ரெட்டேரி அமைந்துள்ளது. நீர்வளத்துறைக்கு சொந்தமானதுதான் இந்த ஏரி. ஆனால் அரசின் அலட்சியப் போக்கினால் யார்யாரோ வந்து ஆக்கிரமிப்பு செய்துள்ளார்கள். இந்த ரெட்டேரிதான் புழல், கதிர்வேடு, விநாயகபுரம், மாதவரம், கொளத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளின் நிலத்தடி நீரின் ஆதாரமாக இருந்து வருகிறது.<strong>நீர்வளத்துறையின் அலட்சியப் போக்கு!</strong>நீர்வளத்துறையின் அலட்சியப் போக்கின் காரணமாக கொளத்தூர் அடுத்து உள்ள லட்சுமிபுரம் சந்திப்பு முதல், புழல் எம்.ஜி.ஆர் நகர் வரையிலான கரைப் பகுதி சேதமடைந்துள்ளது. இதனை சரிசெய்ய அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நீர் வழிக் கால்வாய்கள் என, பல ஏக்கர் பரப்பு இடம், தனியார் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளது. இதைத் தவிர கடை, வீடுகள் என்று இருநூறுக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் நிரந்தரமாகியுள்ளது. இந்நிலையில் மாதவரம் மண்டலம் 30வது வார்டுக்கு உட்பட்ட திருமால் நகரை ஒட்டி, ஏரியை ஆக்கிரமித்து புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இதையொட்டி நீர் வரத்து கால்வாயிலும் கட்டட இடிபாடுகள் கொட்டப்பட்டு, ஆக்கிரமிப்பிற்கு தயாராகி வருகிறது.<a href="https://images.citizenmatters.in/wp-content/uploads/sites/3/2021/07/30162630/Retteri-lake-chennai-JUNE2021.jpeg?strip=all&lossy=1&ssl=1">Retteri lake: The 'heart of the community' that citizens are fighting to save - Citizen Matters, Chennai</a><strong>துணைபோகும் அதிகாரிகள்..!</strong>மாநகராட்சி பகுதி என்பதால் அதிகாரிகளும் இந்த ஆக்கிரமிப்பிற்கு துணைபோகின்றனரா என்ற கேள்வியும் நமக்குள் எழுந்துள்ளது. மின் இணைப்பு, சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எளிதில் கிடைக்குமென ஆக்கிரமிப்பாளர்கள் ஒருவேளை துணிந்து இந்த செயலில் இறங்குகின்றனரோ? துறை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுபோன்ற சட்டவிரோத செயலுக்கு துணைபோவதை துறை சார்ந்த அமைச்சர் துரைமுருகன் கண்டும் காணாதுபோல விட்டுவிடுகிறாரோ போன்ற சந்தேகங்களும் எழாமல் இல்லை.இப்பகுதியில் அறுநூறு சதுர அடி இடமானது 7 லட்சத்திலிருந்து 8 லட்சம் ரூபாய் வரை விற்பனையாவதாக கூறப்படுகிறது. திருமால் நகர் அருகே உள்ள நேரு நகரையொட்டி, ஆக்கிரமிப்புக்காக ஏரிக்குள் கொட்டப்பட்ட கட்டட இடிபாடுகள் பொதுமக்கள் எதிர்ப்பின் காரணமாக அடுத்தநாளே அகற்றப்பட்டன.<strong>கழிவுகளில் இருப்பிடமாகும் ஏரி..!</strong><a href="https://images.newindianexpress.com/uploads/user/imagelibrary/2018/9/26/w600X390/Encroachment.jpg">Encroachment on outlet of lakes worries residents- The New Indian Express</a>இந்தப் பகுதியை மட்டும் சேதப்படுத்தாமல் பலவீனமான ஏரிக்கரையை சேதப்படுத்தி, கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவற்றை கொட்டி, ஆக்கிரமிக்கும் வேலைகளும் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டு வருகின்றன. நேரு நகர், வளர்மதி நகர் ஆகியவற்றையொட்டி, அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மாநகராட்சி அமைந்துள்ள சாலை, இந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு வசதியாக உள்ளது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனைத் தவிர, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில் வசிக்கும் மக்கள் வெளியேற்றும் கழிவுகள், தொழிற்சாலைக் கழிவுகள் என்று தொடர்ந்து வெளியேற்றப்படும் கழிவுகள் எல்லாம் இந்த ஏரியில் கலக்கப்படுகிறது.<strong>பாதிக்கும் சுற்றுச்சூழல்… அமைதி காக்கும் திமுக..!</strong>டேங்கர் லாரிகளில் எடுத்து வரப்படும் கழிவுநீரும், புழல் எம்.ஜி.ஆர் நகர் அருகே ரெட்டேரிக்குள் விடப்படுகிறது. இதனால், ஏரியின் பரப்பு குறைந்து சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும் என்ற உத்தரவை நீர்வள ஆதாரத்துறை இதுவரை ரெட்டேரியில் செயல்படுத்த முயற்சிக்கவில்லை. மற்றொரு புறம் ஏரியின் பரப்பு சுருங்கி மழைநீரை சேமிக்க முடியாத நிலை உள்ளது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் பருவ மழையின் போது, இந்தப் பகுதிகளில் இருந்து பல லட்சம் கன அடி நீர் வெளியேறி கடலில் வீணாக கலக்கிறது.<a href="https://images.citizenmatters.in/wp-content/uploads/sites/3/2021/07/28212141/chennai-velachery-lake-JUNE2021-edited.jpg?strip=all&lossy=1&ssl=1">Saving lakes in Chennai: Maps, markers critical - Citizen Matters, Chennai</a>இதனைக் கண்டும் காணாமல் இருக்கும் அரசு மூன்று ஏரிகளை சுற்றுலாத் தலமாக வேறு மேம்படுத்துவதாக கூறியிருக்கிறது. அவையாவன, மாதவரம் ரெட்டேரி, கொரட்டூர் ஏரி, அம்பத்தூர் ஏரி ஆகும். இது அதிமுக ஆட்சிகாலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதாலேயே இந்த விடியா திமுக அரசு முடக்கிவைத்திருக்கிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.…
Media கேளிக்கையாகும் தக்காளிகள்!கடந்த சில மாதங்களாக இந்தியாவில் தக்காளி விலை என்பது பேசுபொருளாகிவிட்ட ஒன்றாக உள்ளது. தமிழ் சினிமாவில் நம் வடிவேலு கூறுவது போல என்ன ஒரு கிலோ தக்காளி ஐநூறு ரூபாயா..! ஒரு கிலோ காரட்டு ஆயறுபாயா..!! என்பது போல தமிழ்நாட்டில் ஒருகிலோ தக்காளியின் விலை நூறு ருபாய்கு விற்பனை ஆனது. ஆனால் தற்போது உள்ள நிலையில் ஒரு பெட்டி தக்காளியின் விலை 1400 முதல் 1500 வரை விலை நிர்ணயம் செய்யப்படு விற்கப்படுகிறது. ஏனெனில், தக்காளி வரத்து குறைந்து உள்ளதால் இன்றைக்கு 28 வண்டிகளில் 380 டன் மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்க்கு இறக்குமதி செய்யப்பட்டு உள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர். தக்காளி விலை உயர்வால்; ஆங்காங்கே சில அரசியல்வாதிகள், மற்றும் நடிகர்மன்ற தலைவர்கள் எனப பல இடங்களில் தக்காளியை இலவசமாக வழங்கிவருகின்றனர். இன்னிலையில், மத்தியப் பிரதேசத்தில் மொபைல் கடை வியாபாரி ஒருவர் ஒரு ’’ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி’’!! இலவசம் என்று அறிவித்து உள்ள சம்பவம் சமூக வளைத்தலங்களில் பரவலாகி வருகிறது.Chennai vendor sells tomato at ₹20/kg for a day amid soaring price | Mint #AskBetterQuestions இரண்டு கிலோ தக்காளி இலவசம்..!புதுடெல்லி: ‘ஸ்மார்ட் போன்’ வாங்கும் வாடிக்கையாளருக்கு, இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்குவது, பாதுகாவலரை நியமித்து தக்காளி விற்பனை செய்வது போன்ற நுாதன சம்பவங்கள் பல மாநிலங்களில் அரங்கேறி வருகின்றன. இது போன்றே மத்தியப் பிரதேசத்தில் அசோக் நகர் என்னும் இடத்தில் மொபைல் கடை உரிமையாளர் ஒருவர் ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினால் இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி வழங்கிவருகிறார். இதனை அறிந்த மக்கள் ஆர்வமுடன் அவரது கடைக்கு சென்று பார்வையிடுகின்றனர். இந்த தகவலின் பேரில் அவரது கடையில் அதிக அளவில் செல்போன் விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்த கடை வீதிகளில் அதிக கூட்ட நெரிசல்களுடன் காணப்படுகின்றதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க சில கடைகளில் ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்துக்கொண்டு வருகிறது. ’பவுன்சருடன் தக்காளி விற்பனை’:Amid Soaring Prices, UP Vegetable Seller Hires Bouncers To Keep Tomatoes Safe From 'Loot'தக்காளியின் வரத்து குறைவாக உள்ளதாலும், அதன் விலை கடும் உயர்வாலும் காய்கறி கடை வியாபாரிகளின் நிலை மிகவும் மோசமக உள்ளது. நாடு முழுதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. கிலோ 100 ரூபாயில் துவங்கி, 160 ரூபாய் வரை மாநிலத்துக்கு மாநிலம் விலை என்பது மாறிக்கொண்டு வருகிறது. இன்னிலை இருக்க காய்கறி வியாபாரிகளும் பல நூதன முறையில் தக்காளியை விற்பனை செய்து வருகின்றனர். ‘பவுன்சர்’ களவைத்து எல்லாம் தக்காளி விற்பனை செய்யும் சம்பவமும் நடந்து உள்ளது. உத்திரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காய்கறி சந்தையில் காய்கறி கடை வைத்து உள்ளார், அஜய் பவுஜி என்ற வியாபாரி.இவர் தனது கடையில் அதிக அளவு தக்காளி வைத்து விற்பனை செய்து வந்து உள்ளார். தக்காளியின் விலை உச்சத்தில் இருபதால் இவரது கடையில் திருட்டு சம்பவம் நடக்கிறதாக கூறுகிறார். இதனால் இவர் ‘பவுன்சர்’ என்னும் தனியார் நிறுவன பாதுகாவலரை பணியமற்தி, தக்காளி விற்பனை செய்து வருகிறார். ஏனென்றால் இவரது கடைகளில் தக்காளியை திருடி விட்டு திருடவில்லை என்றும், சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பல வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடுவதாகவும் அதனால் கடைக்கு பாதுகாவலர் வேண்டும் என்றும் ஒரு ‘பவுன்சரை’ நியமித்து உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். இதற்கெல்லாம் தக்காளி விலை குறைந்தால் மட்டுமே தீர்வு காண முடியும் என மக்கள் கூறுகின்றனர்.
via News J : https://ift.tt/MQkoF5V
via News J : https://ift.tt/MQkoF5V
Mediaதமிழகத்தைப் பொறுத்தவரை பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மேற்படிப்புகளுக்காக மாணவர்கள் கல்லூரிகளை நாட தொடங்கிவிட்டனர். அதன் பொருட்டு பொறியியல் கலந்தாய்வு சமீபத்தில் நடந்து முடிந்தது. அதனைத் தொடர்ந்து மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அதன் காலக்கெடுவினை இன்னும் இரண்டு நாட்கள் நீட்டித்து உத்தரவு இட்டுள்ளது மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம்.விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன…!எம்பிபிஎஸ், பி டி எஸ் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மேலும் 2 நாள் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவர் கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம் பி பி எஸ், பி டி எஸ் இடங்களுக்கு கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி முதல் இன்று ( 10.07.2023) மாலை 5 மணி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி மருத்துவப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் ஆர்மிகுதியில் தொடர்ந்து விண்ணப்பித்து வருகின்றனர்.MBBS – Symbiosis Guidance Servicesஇந்த நிலையில் மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு மேலும் இரண்டு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுவரை அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு 21 ஆயிரத்து 560 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 9,400 பேர் என்ன மொத்தம் 31 ஆயிரம் மாணவ மாணவிகள் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பித்திருந்தனர். இன்று மாலை 5 மணி உடன் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பதற்கு கடைசி நாளாக இருந்த நிலையில், மேலும் இரண்டு நாள் நீடிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தரவரிசை பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு இன்னும் சில தினங்களில் கலந்தாய்வு தொடங்க மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கம் திட்டமிட்டுள்ளது.நீட் இல்லாத சில மருத்துவப் படிப்புகள்…!Career After MBBS: Know Job Opportunities, Scopes and Salaryஇந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்கும் முன்பு நீட் தேர்வை ஒழிப்பதே எங்கள் இலட்சியம் என்று சவால் விட்டது. ஆனால் அதற்கான எந்த ஆயத்த நடவடிக்கையினையும் அரசு எடுக்கவில்லை. இதில் விளையாட்டுத் துறை அமைச்சரான வாரிசு அமைச்சர் நீட் தேர்வினை ஒழிக்கும் ரகசியம் தனக்குத் தெரியும் என்று ஒரு பொய்ப்பிரச்சாரத்தினை கிளப்பிவிட்டார். நிலை இப்படி இருக்கு, நீட்த் தேர்வு தமிழகத்தில் நடந்து முடிந்தே விட்டது. நீட்த் தேர்வினால் பல மாணவர்களின் மருத்துவக் கனவானது காணாமல் போகும் நிலை மேல் எழுந்துவிட்டது. தற்போது இந்த நீட் இல்லாத சில மருத்துவப் படிப்புகளை நாம் இங்கு காணலாம்.பிஎஸ்சி நர்சிங். பிஎஸ்சி பயோடெக்னாலஜி, பிஎஸ்சி உளவியல், பிஎஸ்சி கார்டியாகுலார் டெக்னாலஜி, இளங்கலை பயோமெடிக்கல் இன்சினியரிங் , பி பார்ம், பிஎன்ஒய்எஸ், பிஎஸ்சி உணவுத் தொழில்நுட்பம், பிஎஸ்சி வேளாண் அறிவியல், பிஎஸ்சி உயிரியல் என்று சிலப் படிப்புகள் உண்டு. வாய்ப்பு இழந்த மாணவர்கள் இதன் மூலமாக தங்களது மருத்துவத்துறைக்கான சேவையினைத் தொடரலாம்.
via News J : https://ift.tt/kuBpOhE
via News J : https://ift.tt/kuBpOhE
Media செயற்கை நுண்ணறிவு:அசுர வளர்ச்சி கண்டு வரும் கணினி தொழில் நுட்பமானது ஆர்டிபிஸியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தில் பல்வேறு வளர்ச்சிகளை அடந்து வருகிறது. இந்த வளர்ச்சி வரும் காலங்களில் தேவை என்றாலும் கணினி தொழில் நுட்பத்தை கொண்டே மனிதர்கள் செய்யும் வேலைகளை இந்த செயற்கை நுண்ணறிவை வைத்தே செய்து விடலாம் என்று கூறுகின்றனர். இதனால் பல நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு. ஆனால் இவற்றின் நன்மைகளை மட்டுமே நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்.இந்த வகையில் செயற்கை நுண்ணறிவு மூலம் சீனாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் செய்தி வாசிப்பாளரை அறிமுகப்படுத்தியது. இந்த செயற்கை செய்தி வாசிப்பாளரை சீனவில் உள்ள சொகு நிறுவம் உருவாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனை ஏற்கனவே இருக்கும் செய்தி வாசிப்பாளர்களை வைத்து அவர்களின் உருவ மொழி, பாவனை, உதடசைவு வைத்து ஆகியவற்றை கொண்டே உருவாக்கப்பட்டு உள்ளது. குரல் பதிவு செய்து வைத்தால் மட்டும் போதும் என்ற வகையில் உள்ளது. இது போலவே அமெரிக்கவில் உள்ள பெண் ஒருவர் ஏஐயால் உருவாக்கபட்ட செயற்கை நுண்ணறிவு கொண்ட ஆண் ஒருவரை திருமணம் செய்து ஆச்சிரியத்தில் ஆழ்த்தி உள்ளார்.இந்தியாவின் முதல் ஏஐ செய்திவாசிப்பாளர்!நியூஸ் ஆங்கர் லிசா தெரியுமா? இவங்க பிறக்கல, உருவாக்குனாங்க! செயற்கை நுண்ணறிவு அதிசயம்! | AI News Anchor Lisa OTV - Tamil Gizbotஇதனை தொடர்ந்து ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவானது இந்தியாவிலும் கால்பதிக்க ஆரமித்து விட்டது என்று கூட சொல்லலாம். ஏனெனில், ஒடிசாவில் உள்ள செய்தி நிறுவனம் ஒன்று முதல் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளரை உருவக்கியுள்ளது. இது இந்தியாவின் முதல் பெண் செயற்கை நுண்ணறிவு வாசிப்பாளரை ஒடிஸா தொலைக்காட்சி நிறுவனம் அறிமுகப்படுத்து உள்ளது. இதற்கு லிசா என்று பெயர் சூட்டிஉள்ளனர். இந்த செய்தி வாசிப்பாளர் பல்வேறு மொழிகளில் செய்தி வாசித்து வருகிறார். பார்பதற்கு அசல் செய்தியாளரை போலவே காட்சியளிக்கிறது லிசா. நாம் எல்லாம் செய்தியாளர்களை பார்தால் பொம்மையை போலவே இருக்கிறார்களே என்று நினைத்து இருப்போம். ஆனால் தற்போது உள்ள நிலையில் செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளருக்கும், உண்மை செய்தி வாசிப்பளர்களுக்கும் வித்தாயம் தெரியாத வகையில் உள்ளது என்று கூட சொல்லலாம். காலங்கள் மாற மாறா தொழில் நுட்பத்தின் வளர்ச்சியும் வளர்ந்து கொண்டே தான் வருகிறது.
via News J : https://ift.tt/ZxMtWFU
via News J : https://ift.tt/ZxMtWFU
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/03/eps-11.jpeg">Media</a>கழகப் பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்வருமாறு காண்போம். <strong> சந்தி சிரிக்கும் தமிழ்நட்டின் சட்ட ஒழுங்கு சீர்கேடு!</strong><strong> காவல்துறையினரின் கையைக் கட்டும் நிர்வாகத் திறனற்ற</strong><strong> பொம்மை முதலமைச்சருக்கு கடும் கண்டனம்!</strong> “எங்கும் காணினும் சக்தியடா”…என்று மகாகவி பாரதி பாடிய நம் தாய் திருநாட்டில், இந்த விடியா திமுகவின் அலங்கோல ஆட்சியில் எங்கெங்கு காணினும் குற்ற செயல்களாக இருப்பது வெட்கித் தலைகுனிய வைக்கிறது. ஒரு மாநிலத்தில் அங்கொன்றும், இங்கொன்றும் குற்றங்கள் நடப்பது இயற்கை. மாநிலம் முழுவதும் குற்ற பூமியாக காட்சியளிப்பதும், அத்தகைய அராஜகங்களில் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும் ஈடுபடுவது என்பது தமிழகத்தில் நடக்கும் விந்தையாகும்.கடந்த சில நாட்களாக செய்தி ஊடகங்களிலும், நாளிதழ்களிலும், வெடிகுண்டு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு; கத்தியால் வெட்டிக்கொலை; செல்போனுக்காக ஓடும் ரயிலில் பெண்ணைத் தள்ளிக் கொலை; சாலையில் செல்லும் பெண்களிடம் நகை வழிப்பறி என்று தொடர்ந்து பல நிகழ்வுகள் தமிழகத்தில் நடந்தேறி வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்மை கருதி வெளியில் செல்ல அச்சமடைந்துள்ளனர். தொடர்ந்து, தமிழகத்தில் இதுபோன்ற அராஜகமான நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஊடங்களில் வெளிவந்த குற்றச் சம்பங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளேன்.<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/03/eps-111.png">Media</a><strong>1. </strong> ஆளும் கட்சியின் கடலூர் சட்டமன்ற உறுப்பினர், நல்லாத்தூர் கிராமத்தில் தனது நிர்வாகியின் இல்ல விழாவிற்கு சென்றபோது பெட்ரோல் குண்டு வீசிய பரபரப்பு சம்பவம்.<strong>2. </strong>செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வழக்கிற்காக வந்த லோகேஷ் என்பவரை பெட்ரோல் குண்டு வீசி ஒரு கும்பல் படுகொலை செய்த சம்பவம்.<strong>3. </strong> கடலூர் இம்பீரியல் சாலையில் உள்ள நாளிதழ் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.<strong>4. </strong> தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே மீனாட்சிப்பட்டியில், டிஜிட்டல் விளம்பர போர்டில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம்.<strong>5. </strong> அரசியல் கட்சியச் சேர்ந்த நகரச் செயலாளர் நாகராஜ், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் மணிகூண்டு அருகே இரவு நின்று கொண்டிருந்தபோது சமூக விரோத கும்பலால் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.6. கன்னியாகுமரி மாவட்டம், குளச்சர் டாஸ்மாக் கடையின் விற்பனை பணம் சுமார் 6.50 லட்சம் ரூபாயை கொள்ளையடிக்க, மேற்பார்வையாளர் திரு. கோபாலகிருஷ்ணன் அவர்களை கொடூர ஆயுதங்களால் வெட்டிய சம்பவம்.7. திருச்சி, முசிறி வட்டம், சுக்காம்பட்டி கிராமத்தில் கோவில் திருவிழாவில் மது போதையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் தீபக் என்ற வாலிபர் கத்தியால் குத்தி படுகொலை.8. திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கலிங்கப்பட்டி பிரிவு சாலையில் குப்புசாமி மற்றும் அவரது மகன் மாரிமுத்து ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பலால் கொடிய ஆயுதங்களால் வெட்டி குப்புசாமி அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.9. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, ஜூஜூவாடி பாலாஜி நகரைச் சேர்ந்த விவசாயி திரு.சிவராம் அவர்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மிளகாய்பொடி தூவி அரிவாளால் அவரை வெட்டிக் கொன்றுள்ளனர்.10. சென்னையில் கல்லூரி மாணவி அஸ்மிதா நந்தம்பாக்கம் ஏழு கிணறு தெருவில் நடந்து வந்தபோது நவீன் என்பவன் கத்தியால் குத்தி படுகாயம்.11. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உள்ள சின்ன நெற்குணம் பகுதியைச் சேர்ந்த பூசாரி திரு.காமராஜ் அவர்களை வழிமறித்து, மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டிக்கொலை.12. திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடி அருகே முன் விரோதம் காரணமாக விவசாயி திரு. அருணாசலம் என்பவர் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை.13. வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி திருமதி வளர்மதி அவர்கள் நகைக்காக படுகொலை.14. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன், காந்தி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையின் முன்பாக பிரகாஷ் என்பவர் கல்லால் அடித்துக் கொலை.15. சென்னை புறநகர் இரயிலில் பயணம் செய்த ப்ரீத்தி என்ற 22 வயது இளம் பெண்ணிடம் வழிப்பறி திருடர்கள் செல்போனை பறிக்க முயன்றபோது, ப்ரீத்தி இரயிலில் இருந்து தள்ளப்பட்டு கொலையான சம்பவம். ஒரு சொல்போனுக்காக 22…
Mediaபார்கின்சன்:நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றளவும் அப்படிப்பட்ட வாழ்வியளில் நாம் இருக்கிறோமா என்பது கேள்விக்குறியாகதான் உள்ளது. ஏனென்றால் இன்றையா காலக்கட்டங்களில் பல்வேறு நோய்கள் பரவி வருகின்றன. இன்னும் சொல்லபோனால் மருந்துகளை விட நோய்களே அதிகமாக உள்ளது. இதுபோலவே பார்கின்சன் என்ற நோய் சிலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு சிலருக்கு தெரியாமலும் இருக்கலாம். இந்த பார்கின்சன் நோயின் அறிகுறி எப்படி இருக்குமானால், சப்ஸ்டாண்டியா நிக்ரா எனப்படும் நமது மூளையின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள டோபமைன் உற்பத்தி செய்யும் நியூரான்களை பாதிக்கும் ஒரு நோய் தான் பார்கிசன். பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மூளை பல ஆண்டுகளாக சேதமடைந்து இருக்கும். ஆரம்ப கட்டங்களில், நடுக்கம், மெதுவான இயக்கம், நெகிழ்வற்ற தசை இறுக்கம் ஆகியவை பார்கின்சனின் நோயின் அறிகுறிகளாகும்.ஸ்மார்ட் வாட்ச் செய்யும் அறிவியல்:இந்த பார்கின்சன் என்னும் நடுக்கவாதா நோய் பற்றிய ஓர் ஆய்வில் இந்த நோய்கான அறிகுறிகளை அதிகபட்சமாக 7 ஆண்டுகளுக்கு முன்பே ஸ்மார்ட் வாட்ச் மூலம் கண்டறிய முடியும் என்று ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது. நாம் அனைவரும் இன்றைய சூழலில் ஸ்மார்ட் வாட்ச்சை அதிகமானோர் பயன்படுத்தி வருகிறோம். இந்த வாட்ச் வைத்து நாம் பாடல்கள் கேட்க இதற்காக மட்டும் என பயன்படுத்தி வருகிறோம். ஆனால், இந்த ஸ்மார்ட் வாட்ச் மூலம் ஒரு நோயை கண்டறிய முடியும் என்பதுடன் அந்த வாட்ச் இருதால் சுமார் 7 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே கணிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள். பார்கின்சன் நோய்: Parkinson's disease | Trellபிரிட்டனில் உள்ள கார்டிஃப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டிமென்ஷியா ஆராய்ச்சி நிறுவனம், 103,712 ஸ்மார்ட்வாட்ச் அணிந்தவர்களின் தரவுகளை கணக்கெடுத்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தது. பின்னர், 2013 மற்றும் 2016 காலகட்டத்திற்கு இடையில், அவர்களின் ஒரு வார இயக்க வேகத்தைக் கண்காணிப்பதன் மூலம், பார்கின்சனின் வருவதற்கான அறிகுறிகளை முன்கூட்டியே கணிக்க முடிந்தது எனவும் மேலும், இந்தத் தரவுகள் நோயின் அறிகுறிகளைக் கணிக்க உதவும் எனவும் நம்பப்படுகிறது.பிரிட்டனின் 30 சதவீத மக்கள் ஸ்மார்ட் வாட்ச் அணிவதால் பார்கின்சனின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளைக் கண்டறிய இது எளிய வழியாக இருக்கும் என்கிறார் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட சிந்தியா சாண்டோர். இந்த ஆய்வில் பார்கின்சன் நோயின் அறிகுறிகளை ஏழு ஆண்டுகள் முன்கூட்டியே கண்டறியலாம் என்று ஆய்வின் வழியே நாங்கள் செய்து காட்டியுள்ளோம் என்றார். மேலும் இந்த ஆய்வானது பிரிட்டனின் பயோபேங் தரவைக் கொண்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் பல குறைபாடுகள் உள்ள அதாவது, நரம்பியல் குறைபாடு போன்ற நிலையுடன் ஒப்பிடுகையில் இது மற்ற நோய்களில் இருந்து வேறுபடுவதாகவும் கெத்ரின் பெல் தெறிவித்தார். இருந்தாலும் பார்கின்சன் நோய் முற்றுவதை தடுக்கவும் நோயின் சிகிச்சை முறைகள் மற்றும் அந்த நோயின் தீவிரத்தை தடுக்கவும் இந்த ஆய்வானது முக்கியத்துவம் பெறுகிறது. என்றார் கெத்ரின் பெல்.
via News J : https://ift.tt/vCAgE18
via News J : https://ift.tt/vCAgE18
Mediaபெண்கள் தங்களது கர்ப்பத்தை தெரிந்து கொள்ள, இதுவரைக்கும் சிறுநீர் மூலமாதான் பரிசோதனை செய்தாங்க ஆன இப்போ உலகிலேயே முதன்முறையாக உமிழ்நீரைக் கொண்டு கர்ப்பத்தை சோதனை செய்யும் புதிய கருவி ஒன்றறை கண்டுபிடித்திராங்க அதுதான் சாலிஸ்டிக் கருவி.இந்த கருவி இது எப்படி வேலை செய்யும்? வாங்க பார்க்கலாம்…சாலிஸ்டிக் ((Salistick)) என்று சொல்லப்படும் இந்தச் சோதனைக் கருவியை, ஜெருசலேமைச் சேர்ந்த ஸ்டார்ட்- அப் நிறுவனமான சாலிக்னோஸ்டிக்ஸ் ((Salignostics)) உருவாக்கியுள்ளனர்கோவிட் சோதனை கருவிகளைத் தயாரிக்கப் உதவிய அதே தொழில்நுட்பத்தைக்கொண்டு இந்தத் சோதனை கருவியை தயாரித்திருக்கின்றனஇந்த தயாரிப்பு எங்கும், எந்த நேரத்திலும் எளிதில் சோதனை செய்யும் முடியும் என்பதால், இதனை கர்ப்ப பெண்கள் பயன்படுத்த முன்வருவாங்க என்று தயாரிப்பு நிறுவனம் சொல்லுராங்க…கர்ப்ப பரிசோதனை கிட்! பயன்படுத்துவது எப்படி?…காய்ச்சல் வந்தால் எப்படி தெர்மாமீட்டரை வாயில் வைப்பபோ அதுபோலத்தான் வைக்க வேண்டும்.கர்ப்பத்தை உறுதி செய்ய இந்த கிட்டில் இருக்கும் குச்சியின் நுனியில் இது உமிழ்நீரைச் சேகரிக்கும். அப்போது அந்த உமிழ்நீரை பிளாஸ்டிக் டியூபில் மாற்ற வேண்டும்.அப்போது 5 முதல் 10 நிமிடங்களில் கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் இருக்கிறதா என்பதைக் அந்த கருவி கண்டறியும். இதனை ஸ்பிட் டெஸ்ட் ((Spit test)) என்று அழைக்கிறார்கள்இந்த ஸ்பிட் டெஸ்ட் மூலம்15 நிமிடங்களுக்குள் கர்ப்ப பரிசோதனை குறித்த முடிவுகளை, எளிதாக அறிய முடியும்.இந்த சோதனையானது எச்.சி.ஜியைக் ((HCG)) கண்டறியும் தொழில்நுட்பத்தை கொண்ட கர்ப்பத்திற்குரிய ஹார்மோன் ஆகும்இஸ்ரேலில் கர்ப்பிணி மற்றும் கர்ப்பிணி இல்லாத 300 க்கும் மேற்பட்ட பெண்களிடம் மருத்துவ பரிசோதனைகளை நடத்திய பிறகே சாலிக்னோஸ்டிக்ஸ் தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளார்கள்…
via News J : https://ift.tt/7n8O4ZR
via News J : https://ift.tt/7n8O4ZR
Mediaஅரசுப் பள்ளி மாணவர்களின் கண் பார்வை, மூக்கு மற்றும் இடுப்பளவு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து, பட்டியல் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய சுகாதார இயக்ககம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணைந்த இந்த உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை இளம் வயதிலே கண்டறியும் பொருட்டு நடவடிக்கை எடுப்பதற்கான விஷயமாக இது பார்க்கப்படுகிறது. பள்ளிக்கல்வித்துறை சார்பாக இது குறித்து சுற்றறிக்கையானது அனைத்து பள்ளிகளிலும் அனுப்பப்பட்டுள்ளது.Tamil Nadu: 1 in 3 rural students lack smartphone | Chennai News - Times of Indiaஅதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறூம் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உடல் நலன் சார்ந்த அளவீடுகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் மாணவர்களுக்கு அருகில் அல்லது தொலைவில் உள்ள பொருட்களை பார்ப்பதில் குறைபாடு உள்ளாதா இல்லையா என்பதையும், கண் சிவந்துள்ளதா, புத்தக வாசிப்பில் வரிகளை தவற விடுகின்றனரா மற்றும் மாறு கண் குறைபாடு உள்ளதா என்பதையும் பள்ளிகள் கவனிக்க வேண்டும்.இதைத் தவிர மாணவர்களின் இடுப்பு நீளத்தை பதிவு செய்ய வேண்டும். மாணவர்களின் உயரம், எடையையும் குறிப்பிட வேண்டும். மாணவர்களின் தோள்பட்டை, கால் உயரத்தையும் கணக்கிட வேண்டும். தலை சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருந்தாலும் அல்லது முகத்தில் அசாதாரண மாறுதல்கள் உள்ளனவா மற்றூம் மூக்கு சப்பையாகவோ வளைந்தோ உள்ளதா மற்றும் பற்களில் பழுப்பு நிறக் கறை உள்ளதா, பாதங்கள் வளைந்துள்ளதா என 42 வகை குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி அவற்றை செயலியில் பதிய வேண்டும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.இதன் மூலம் மாணவர்களுக்கு சுகாதாரமான வாழ்வாதாரத்தையும், செம்மைமிகு உடல்நலப் பேணலையும் வகுத்துக் கொடுக்க முடியும்.
via News J : https://ift.tt/5vTdAWf
via News J : https://ift.tt/5vTdAWf
Mediaஉலக அளவில் புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், ஆபாச படங்களை பெறுவதற்காக 3 ஆண்டுகளாக சுமார் 38 லட்சம் ரூபாய் வரையில் டீன் ஏஜ் நபர் ஒருவருக்கு பணம் கொடுத்த விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. வெளிப்படைத்தன்மைக்கு புகழ்பெற்ற ஊடகமொன்றின் ஊழியர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய ஊழியர் பணியாற்றிய உலக புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனமே இது.இங்கிலாந்து நாட்டில் இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் மீது, டீன் ஏஜ் நபர் ஒருவரின் பெற்றோர் பாலியல் புகார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் வெளியிட்டுள்ள தகவல்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.அதன்படி பிபிசி செய்தி நிறுவனத்தின் ஊழியர் ஒருவர், டீன் ஏஜ் நபருக்கு ஆபாச படங்களை அனுப்புவதற்காக, அவரது 17 வயதில் இருந்து சுமார் 38 லட்சம் ரூபாய் பணம் அனுப்பியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் பற்றி அந்நபரின் குடும்ப உறுப்பினர்கள் கடந்த மே மாதம் பிபிசியிடம் புகார் அளித்துள்ளனர்.குழந்தைகள் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக 2000 பேர் பட்டியல்: டி.ஜி.பி. எம்.ரவி - விரிவான தகவல்கள் - BBC News தமிழ்இந்த விவகாரம் குறித்து வாய் திறந்துள்ள இங்கிலாந்து கலாச்சார மந்திரி லூசி பிரேசர், ஆழ்ந்த வருத்தங்களை ஏற்படுத்தக் கூடிய இந்த குற்றச்சாட்டுகள் பற்றி பிபிசி இயக்குநர் ஜெனரல் டிம் டேவியிடம் பேசியுள்ளதாகவும், இதுபற்றி விரைவாகவும் மற்றும் உணர்வுப்பூர்வமான முறையில் விசாரணை நடத்தப்படும் என அவர் தனக்கு உறுதியளித்த்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதனிடையே டீன் ஏஜ் நபரது பெற்றோரின் கூற்றை பிபிசி செய்தி நிறுவனமும் ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ஆண் பணியாளர் ஒருவர் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சம்பந்தப்பட்ட அந்த டீன்-ஏஜ் நபர் ஆணா, பெண்ணா என்பது பற்றிய விவரங்கள் வெளியிடப்படவிலை.கடந்த மே மாதத்தில் பிரபல டே டைம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளரான பிலிப் ஸ்கோபீல்டு, சக பணியாளருடன் வைத்திருந்த உறவின் காரணமாக பணியில் இருந்து விலகினார். அப்போது அந்த உறவினை புத்திசாலித்தனமற்ற ஆனால், சட்டவிரோதம் அல்லாதது என பிலிப் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து ஊடகங்களில் பணியாற்றுவோர் தொடர்ந்து பாலியல் சர்ச்சைகளில் சிக்கிவருவது உலகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது.
via News J : https://ift.tt/0S24nhK
via News J : https://ift.tt/0S24nhK