Mediaஜி20 என்பது 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு அரசுகளுக்கிடையேயான மன்றமாகும். இதில் 20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களின் அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள். இந்த அமைப்பானது சர்வதேச நிதி நிலைத்தன்மை, காலநிலை மாற்றம் தணிப்பு, மற்றும் நிலையான வளர்ச்சி போன்ற உலகப் பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணச் செயல்படுகிறது. அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்சு, செருமனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி,ஜப்பான், மெக்சிகோ, சவுதி அரேபியா,உருசியா, தென் அமெரிக்கா,தென் கொரியா, துருக்கி, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகள் இணைவதே ஜி20 ஆகும். ஜி20 தொழில்மயமான மற்றும் வளரும் நாடுகள் உட்பட, உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களை உள்ளடக்கியது. இது மொத்த உலக உற்பத்தியில் 80 சதவீதமும், சர்வதேச வர்த்தகத்தில் 75 சதவீதமும், உலக மக்கள்தொகையில் மூன்றில் இரண்டு பங்கு மற்றும் உலகின் நிலப்பரப்பில் 60 சதவீதமும் கொண்டுள்ளது.சென்னையில் ஜி20…!G20 Summit 2023, G20 Member countries, List of Host Nationsஜி20 கூட்டம் மூன்றாவது முன்றாவது முறையாக சென்னையில் நடைபெற இருக்கிறது. பேரிடர் அபாய குறைப்பு தொடர்பாக 20 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்க்கும் இந்த ஜி20 கூட்டமானது வருகின்ற ஜீன் 24, 25, மற்றும் 26-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த கூட்டதிற்கான முன்னேற்பாடுகள் குறித்து தமிழக தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா ஆலோசனை கூட்டம் ஒன்று நடத்தினார். இந்த கூட்டம் குறித்து தமிழக அரசு கடந்த 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30-ம் தேதிவரை நடைபெறஉள்ள ஜி-20 மாநாட்டுக்கு இந்தியா தலைமை வகிக்கும் என்று தெரிவித்தது. இந்திய தலமையில் பேரிடர் அபாயத்தை குறைபதற்கான புதிய பணி குழு அமைக்கப்பட்டு உள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட பணிகுழுவின் இரண்டு கூட்டங்கள் முடிவடந்த நிலையில் மூன்றவாது கூட்டம் சென்னையில் நடபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறைகளின் ஒருங்கிணைப்பு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.இந்தக் கூட்டதிற்கு தலைமை வகித்த தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா கூட்டத்திற்க்கு வருகை புரிந்த தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய அலுவலர்களை சிவ்தாஸ் மீனா வரவேற்றார். இந்த ஜி20 மூன்று நாள் கூட்டத்தைச் சிறப்பாக நடத்த அனைத்து முன்னேற்பாடுகளை முன்கூட்டியே செய்யும் மாறு அந்தந்த சமந்தபட்ட துறை செயலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் செயலர் கமல் கிஷோர், உறுப்பினர் ராஜேந்திர சிங், ஜி-20 மாநாட்டின் இயக்குநர் மிருணாளினி வஸ்தவா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
via News J : https://ift.tt/xwQYEeb
via News J : https://ift.tt/xwQYEeb
chennai highcourtஅமைச்சர் செந்தில்பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக கைது செய்ததாக ஆட்கொண்டர்வு மனுவனாது அவரது மனைவியின் பேரில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் நேற்று முன் தினம் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது அவ்வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.நீதிபதிகளின் இருவேறு தீர்ப்புகள்..!அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கும் பொருட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். ஒருவர் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி மற்றொருவர் ஜெ.நிஷா பானு ஆகும். இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பினை நேற்று முன் தினம் அவர்கள் விசாரித்து தீர்ப்பினை வழங்கினார்கள். அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். இதனால் நீதிமன்றத்தில் குழப்பம் நீடித்தது.Mediaநீதிபதி நிஷா பானு…!நீதிபதி நிஷா பானு அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பினை வழங்கினார்.நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி..!நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பானது நீதிபதி நிஷா பானுவிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ”செந்தில்பாலஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும்” என்றூ கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.3 வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன்..!செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவைப் பிறப்பித்ததால் நடவடிக்கை எடுக்கமுடியாமல் இழுபறி தொடர்ந்து வருகிறது. எனவே இரண்டு நீதிபதிகளைத் தவிர மூன்றாவது நீதிபதியாக ஒருவரை நியமிக்கும்படி தலைமை நீதிபதிக்கு வழக்கினை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.வழக்கு நாளை ஒத்திவைப்பு..! இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விசாரணைக்கு செந்தில் பாலாஜியின் வழக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் இந்த வழக்கில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராக உள்ளார் எனக் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன், “வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கோரிக்கை வைத்துள்ளது” எனக் குறிப்பிட்டு “அதற்கு சனிக்கிழமை விசாரிக்கலாமே” எனக் கேட்டார். இதையடுத்து வழக்கை எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்வது என நாளை முடிவு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
via News J : https://ift.tt/FW5elv7
via News J : https://ift.tt/FW5elv7
Mediaசந்திரயான் 3 செயற்கைக் கோளை வரும் ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோ அமைப்பினர் முடிவு செய்துள்ளது. சரியாக பிற்பகல் 2.25 மணிக்கு LVM3-M4 ராக்கெட்டின் மூலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்தச் செய்தியினை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. நேற்றைக்கு தான் LVM3-M4 ராக்கெட்டுடன் சந்திராயன் 3 ஆனது இணைக்கப்பட்டிருந்தது.ImageAnnouncing the launch of Chandrayaan-3:🚀LVM3-M4/Chandrayaan-3 🛰Mission:
The launch is now scheduled for
📆July 14, 2023, at 2:35 pm IST
from SDSC, SriharikotaStay tuned for the updates!— ISRO (@isro) July 6, 2023
via News J : https://ift.tt/KaZuc3Q
The launch is now scheduled for
📆July 14, 2023, at 2:35 pm IST
from SDSC, SriharikotaStay tuned for the updates!— ISRO (@isro) July 6, 2023
via News J : https://ift.tt/KaZuc3Q
Mediaஇந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கிழும் பெண்களின் மீதான பெண்களுக்கு எதிரான பல ஒடுக்கு முறைகள் நடந்துக் கொண்டேதான் இருக்கின்றது. இன்றளவும் பெண்கள் ஒவ்வொரு நிலைகளிலும் ஒவ்வொரு இடங்களிலும் பல இன்னல்களையும் பல சவால்களையும் சந்தித்துக் கொண்டே தான் உள்ளனர். 18ம் நூற்றாண்டில் பெண்கள் என்றால் வீட்டு வேலைகளுக்கும் மற்ற வேலைகளுக்கும் சரிவருவார்கள் என்று முடக்கி வைத்தார்கள். இந்த நிலை மெல்ல மெல்ல மாறி, 1850களில் தொழிற்சாலை, அலுவலகம் என பல்வேறு இடங்களில் பெண்கள் கால்பதிக்க தொடங்கினர்.பெண்ணியப் புரட்சி..!ஆண்களுக்கு நிகராக பெண்களும் எல்லா பணிகளை செய்தாலும் ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்கபடவில்லை. ஆண்களுக்கு நிகராக பெண்கள் வேலை செய்தாலும் அவர்களின் உரிமையிலும், ஊதியத்திலும் தொடர்ந்து அநீதிகள் நடந்து கொண்டே தான் இருத்தது. இதனால் பெண்கள் 1910 ஆம் ஆண்டு மாபெரும் உரிமை மாநாட்டை டென்மார்க் நகரில் நடத்தினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்களில் ஒருவரில் முக்கியமானவர் ஜெர்மனி நாட்டை சேர்ந்த புரட்சி பெண் கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காகவும், உணர்ச்சிக்காகவும் அனைவரையும் ஒருங்கிணைத்து தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் தான் கிளாரா. இதற்கு பின்பு உலகையே திரும்பி பார்க்க வைத்த புரட்சி என்றால் 1917-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த புரட்சி. இதன் விளைவாக அப்போதைய ரஷ்ய ஆட்சியே கவிழ்ந்தது என்பதனை அனைவரும் அறிவோம். இதனைத் தொடர்ந்து 1921-ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் போரட்டத்தை நடத்தினர். இந்தப் போராட்டதில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கலந்து கொண்டார். இந்த போரட்டதின் விளைவாக தான் பிப்பரவரி மாதம் கடைசி ஞாயிற்று கிழமை பெண்கள் தினமாக கொண்டாடப்பட்டது. இப்படி வரலாறு இருக்க இன்னமும் சில நாடுகளில் பெண்களுக்கு எதிராக வன்முறைகள் நடந்து கொண்டேதான் இருக்கிறது. அதில் ஆப்கானிஸ்தான் முதன்மையான நாடு. ஏனெனில், ஆப்கனிஸ்தானின் தலைநகரமான காபூலில் பெண்கள் அழகு நிலையங்களில் வேலை பார்க்கவும் நடத்துவதற்கும் அந்நாட்டு அரசு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது.Beauty salon a women's haven in the Taliban's Kabul | Deccan Heraldகாபூல்: ஆப்கனில் நடந்தேறும் பெண்கள் அடக்குமுறை..!ஆப்கானிஸ்தானில் அழகு நிலையங்களை பெண்கள் நடத்துவதற்கு எதிராக தடை விதித்து உள்ளது தொடர்பாக தலிபான் அரசின் துணை மற்றும் நல்லொழுக்க அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் “காபூல் மற்றும் பிற மாகாணங்களில் பெண்களால் நடத்தப்படும் அனைத்து அழகு நிலையங்களும் உடனடியாக தடை செய்யப்படுகிறது என்றும் உடனடியாக மூடப்படும் என்றும் அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த விதியை மீறுபவர்களின் மீது கடும் நடவடிக்கை சட்ட ரீதியாக எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது. இந்த கட்டுபாடுகளும், விதிமுறைகளும் தாலிபான் நாட்டு மக்களுக்கு புதிதல்ல. ஏனெனில், தொடர்ந்து பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் வகையிலும் பெண்கள் மருத்துவமனைகளில் செவிலியர்களாகவும், மருத்துவர்களாகவும் மட்டுமே தொடர்ந்து அனுபதிக்கப்பட்டு வருகின்றனர். தாலிபானை கண்டித்து ஐ.நா சபை பெண்களுக்கு எதிரான இந்த அடக்குமுறைகளை தொடந்து தாலிபான் செய்து வந்ததால் தலிபான் அரசாங்கத்தை அங்கீகரிப்பது என்பது சாத்தியமற்ற ஒன்றாகும் என்று தெரிவித்தது. இது குறித்து பெண்கள் உரிமை செயற்பாட்டாளர் ஜமிலா கூறும்போது, “தாலிபான்கள் பெண்களை மனிதர்களாகக் கருதவில்லை’’இந்தகட்டுபாட்டினால் அழகு ஒப்பனையாளர்களின் நிலை அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடுமென்றும் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான அழகு கடை உரிமையாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தெரிவித்தார்.
via News J : https://ift.tt/urjOYwa
via News J : https://ift.tt/urjOYwa
Mediaமருத்துவர்களின் அலட்சியத்தால் அரசு மருத்துவமனைக்கு வந்த பச்சிளம் குழந்தையின் கை அகற்றப்பட்டு குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற அரசு மருத்துவமனை அவலங்களால் ஸ்டாலின் ஆட்சியை இழக்கப்போகிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் ஒரு கை அகற்றப்பட்டிருக்கிறது. கை நரம்பின் வழியாக மருந்துகளை செலுத்துவதாக சொல்லி, ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டதை கூட கண்டுகொள்ளாமல் இருந்திருக்கிறார்கள் அரசு மருத்துவமனை செவிலியர்கள். கையின் நிறம் மாறுவது குறித்தும் குழந்தை அழுவது குறித்தும் அதன் தாய் தெரிவித்தும் அலட்சியம் காட்டியிருக்கிறார்கள். அதன் விளைவு, ஒரு கட்டத்தில் குழந்தையின் கை அழுகிவிட, தங்களின் தவறுகளை மறைக்கும் விதமாக, குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறோம் என்று சொல்லி, அவசர அவசரமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் இரவோடு இரவாக குழந்தையை அனுமதித்து, அந்த கையையே அகற்றியிருக்கிறார்கள் மருத்துவர்கள்.குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்- விசாரணைக்குழு மருத்துவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது: தாய் பேட்டிசெவிலியர்கள் மருத்துவர்களின் கவனக்குறைவால், பச்சிளம் சிசு இன்று தனது ஒருகரத்தை இழந்திருக்கிறது. பெற்ற தாயின் மனம் பரிதவிக்கிறது. ஏழையின் சொல் அம்பலம் ஏறுமா என்னும்படி நீதி கேட்டு எழுந்துள்ள பெற்றோரின் கூக்குரல் எதுவும் அரசின் செவிகளில் விழவில்லை. வழக்கம்போல உண்மையை மூடி மறைக்கும் பணியில் விடியா திமுக அரசு இது எதனையும் ஏற்கமறுத்து, விசாரணை நடத்துவதற்காக மருத்துவக் குழு ஒன்றை ஏற்படுத்தியதாகதாக சொல்லி கைகழுவியது. அரசின் வழிகாட்டுதலில் அந்த மருத்துவக் குழுவும், விசாரித்துவிட்டதாக சொல்லி வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவமனை மீது எவ்வித தவறும் இல்லை என்று கூறியிருக்கிறது.குழந்தையின் பெற்றோர் அரசிடம் இருந்து நீதி கிடைக்கும் என நம்பிய நிலையில், குற்றம் செய்தவர்களை காப்பாற்றும் வகையில் அரசும், அரசு அமைத்த மருத்துவக் குழுவும் செயல்பட்டிருக்கிறது என்பது வேதனைக்குறிய விஷயமாக இருக்கிறது.அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது இது முதல்முறை அல்ல. கடந்த ஆண்டு கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறாக சிகிச்சை அளித்த நிலையில் கால் அகற்றப்பட்டு அவர் மரணித்தது பொதுமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அரசு மருத்துவமனையில் போதிய அனுபவமற்ற மருத்துவர்கள், செவிலியர்களுக்கு போதிய வழிகாட்டுதல் இல்லாதது என பல மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இத்தகைய துயரம் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்; மருத்துவக்குழுவின் விசாரணை அறிக்கை சொல்வதென்ன?! | child hand amputated issue here is the statement of the medical investigation team - Vikatanஇதனால் தான் கடந்த 2 ஆண்டுகளில் மருத்துவத்துறை சீரழிந்துவிட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.விடியா ஆட்சியில், இதற்கு எப்போது தான் தீர்வு? என பொதுமக்களே கேள்வி எழுப்பத் தொடங்கியிருப்பதோடு, அரசு மருத்துவமனையா ஐயோ வேண்டாம் என்று அச்சம் கொள்ளும் நிலைக்கு அரசு மருத்துவமனையின் தரம் இன்றைக்கு சென்றிருக்கிறது.தனியார் மருத்துவமனைகளையும், அவர்கள் அளிக்கும் சிகிச்சைகளையும் மறைமுகமாக ஊக்குவிக்கும் வகையில் இந்த திமுக அரசு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறதா?மருத்துவர்களின் அலட்சியத்தால் பச்சைக்குழந்தையின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், அரசு மருத்துவமனை அவலங்களால் ஸ்டாலின் ஆட்சியை இழக்கப்போகிறார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/4oXlRtW
via News J : https://ift.tt/4oXlRtW
Mediaஐஐடி என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். குறைந்தபட்சம் ஒரு பொறியாளருடன் நண்பர்களாக இருக்கும் அனைவரும் அதைப் பற்றி அறிந்து இருப்பார்கள். பள்ளிப் படிப்பை முடித்தவுடன் அடுத்து என்ன படிக்கலாம் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் வரும் . ஒவ்வொரு மாணவரும் அவரவர் விரும்பும் பல்கலைக்கழகத்தில் பட்டபடிப்பு மற்றும் முதுகலை பட்டபடிப்பைச் செய்ய ஆசைப்படுகிறார்கள், ஏனெனில் ஒவ்வொரு மாணவரும் தனது வாழ்க்கையை நோக்கி வெவ்வேறு நோக்கங்களைக் கொண்டுள்ளனர். இவர்கள் பொறியியல் படிக்க வேண்டும் என்ற கனவோடு அனைவரும் விண்ணப்பிக்கிறார்கள். அப்படி இந்த பொறியியல் படிப்பில் என்ன இருக்கிறது? பொறியியல் படிப்பு என்றால் நமக்கு முதலில் நியாபகம் வருவது கல்லூரிகள் தான் அப்படி என்ன இருக்கிறது இந்த கல்லூரிகளில்?இந்திய தொழில்நுட்ப நிறுவனம்:ஐஐடிகள் என அழைக்கப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் பொறியியல் கல்வி நிறுவனங்களாகும். அவை தன்னாட்சி மற்றும் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலால் நிர்வகிக்கப்படுகின்றன. உலக தரம் வாய்ந்த கல்லூரி நிறுவங்களை அமைக்க வேண்டும் என்பது தான் பண்டித ஜவஹர்லால் நேருவின் கனவாக இருந்தது. முதல் ஐஐடி அல்லது இந்திய தொழில்நுட்ப நிறுவனம் 1951 இல் காரக்பூரில் நிறுவப்பட்டது. இன்று நாடு முழுவதும் 23 ஐஐடிகள் மொத்தம் 10,962 இடங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஐஐடியின் நுழைவுத் தேர்வை எழுதுகின்றனர்.இந்தியாவின் மிக சிறந்த ஐஐடி நிறுவனங்கள் எதுவென்றால், ஐஐடி காரக்பூர், 1951 இல் நிறுவப்பட்டது இந்த தொழில்நுட்ப நிறுவனமானது ஐஐடிகளில் மிகவும் மதிப்புமிக்கது மற்றும் பழமையானதும் ஆகும். ஐஐடி பாம்பே 1958-ல் இரண்டாவதாக நிறுவபட்டது. ஐஐடி கான்பூர் 1958ல் அமைக்கபட்டு 1963-ல் அதீகாரபூர்வமாக நிறுவப்பட்டது. நான்காவது இடத்தில் ஐஐடி மெட்ராஸ் 1959ல் நிறுவப்பட்டது. இது இந்தியாவிலேயே மிகவும் நம்பிக்கைக்குரிய பொறியாளர்களை வளர்த்தெடுத்த நிறுவனம் இதுவாகும். கடைசியாக ஐஐடி டெல்லி நிறுவனம் உள்ளது இது 1963ல் நிறுவப்பட்ட வாளாகம் ஆகும். இதனை தொடர்ந்து முதன் முறையாக தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி வாளாகம் வர உள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். 399,200+ College Student Stock Photos, Pictures & Royalty-Free Images - iStock | College campus, College, College students studyingடெல்லி:இந்தியாவிற்க்கு வெளியே முதன் முறையாக தான்சானியா நட்டின் ஜான்ஜிபார் மாகணத்தில் சென்னை ஐஐடி வாளாகம் வர உள்ளதாக அறிவித்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் முதல் பட்டப்படிப்புகள் தொடங்க உள்ளதாக இந்தியாவின் வெளியுறவுத்துறை அமச்சர் ஜெய்சங்கர் அறிவித்தார். அமைச்சர் ஜெய்சங்கர் அரசு பயணம் மேற்கொண்டார். அப்போது அங்குள்ள ஜாஜின்பார் மாகாணத்தில் சென்னை ஐஐடி புதிய வளாகம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்ததில் அமைச்சர் ஜெய்சங்கர் முன்னிலையில் நேற்று முன்தினம் கையெழுத்தானது. இதில் கூடுதலாக சென்னை ஐஐடி, இந்திய கல்வி அமைச்சகம், ஜன்ஜிபார் கல்வி அமைச்சகம் ஆகியவை கையெழுத்திட்டன. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது; ஜன்ஜிபார் மாகாணத்தில் உள்ள ஐஐடி வளாகம் உலகத்தரத்திலான உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையமாக செயல்படும் என்றும் உலகளாவிய தேவையை கருத்தில்கொண்டு திறனை வளர்க்கும் நோக்கத்துடன் சென்னை ஐஐடி வளாகம் அமைக்கப்படுகிறது என்றும், இது மேலும் சிறப்பாக செயல்படும் இந்திய பல்கலைகழகங்கள், வெளி நாடுகளிலும் அமைக்க வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளது. மேலும் இங்குள்ள பட்டப்படிப்புகள், பாடத்திட்டங்கள், மாணவர்கள் தேர்வு முறை உட்பட சென்னை ஐஐடி முடிவு செய்யும். இதற்கான செலவுகளை தான்சானியாவின் ஜன்ஜிபார் அரசு ஏற்கும் என்றும் அறிக்கையில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.
via News J : https://ift.tt/xrGCoAw
via News J : https://ift.tt/xrGCoAw
Mediaகோவை மேற்கு மண்டல முகாமில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டது அனைவரிடத்திலும் பெரிய அதிர்வையும் சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயர நிகழ்விற்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் இரங்கள் தெரிவித்துள்ளார். அதனை பின்வருமாறு காண்போம்.எதிர்க்கட்சித் தலைவரின் இரங்கல் பதிவு:கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய திரு.விஜயக்குமார் அவர்களின் பணி போற்றத்தக்கது. அவரின் மறைவு காவல்துறைக்கு பேரிழப்பு ,அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் , சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள். காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த திரு.விஜயக்குமார் அவர்கள் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, ஆகவே திரு.விஜயகுமார் IPS அவர்களின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.கோவை சரக காவல்துறை டிஐஜி திரு.விஜயக்குமார் IPS அவர்கள் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.காவல்துறை துணை கண்காணிப்பாளராக தனது பணியை துவங்கி , பின்னர் நேரடியாக இந்திய காவல் பணிக்கு நேரடியாக தேர்வாகி, டிஐஜி அளவிற்கு தன்னைத்தானே வளர்த்துக் கொண்ட பெருமைக்குரிய… pic.twitter.com/P6E7PfePQn— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) July 7, 2023
via News J : https://ift.tt/epE2mor
via News J : https://ift.tt/epE2mor
Mediaமனிதர்கள் இவ்வுலகை ஆள நினைத்ததிலிருந்து யார் மேலோன்? யார் கீழோன்? என்ற வரையறையானது ஒவ்வொருவரின் மனதிலும் எழத் தொடங்கிவிட்டது. இந்த முரணே ஆண்டான் அடிமை சமூகத்திற்கும் வழிகாட்டியது. பின்னாளில் நிலம் வைத்திருப்பவனே உயர்ந்தவன் என்கிற நிலவுடைமைச் சமூகம் தன்னை ஒரு உயர்ப்பிரிவாகக் காட்டிக்கொண்டு வளரத்தொடங்கியது. பிற்காலத்தில் செய்யும் தொழிலை வைத்து சாதிகள் பிரிக்கப்பட்டு நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்ற சமூகச் சிக்கலுக்கு வழிகோலி தற்போதுவரை இந்த சிக்கல் தொடர்கிறது. இது போன்ற சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு பலர் வெகுண்டெழுந்து குரல் கொடுத்தனர். அவர்களில் அயோத்திதாசப் பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர், பெரியார் என்று ஒரு மாபெரும் சகாப்தியர்களே உள்ளனர். இவர்களில் முதன்மையானவரான அனைவராலும் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படும் இரட்டைமலை சீனிவாசனின் பிறப்பு நாள் இன்று.யார் இந்த இரட்டைமலை சீனிவாசன்..!இரட்டைமலை சீனிவாசன் வாழ்க்கை வரலாறு !செங்கல்பட்டு மாவட்டத்தில் கோழியாளம் என்ற ஊரில் 1860 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் தேதி பிறந்தவர்தான் இரட்டைமலை சீனிவாசன். பெரியார் போன்ற தலைவர்களுக்கே முன்னோடி இவர்தான். சாதியால் சிக்குண்டு நசுங்கி கிடந்த மக்களை 125 ஆண்டுகளுக்கு முன்பே திரட்டி ஒரு அமைப்பாக்கியவர். 1893ல் ராயப்பேட்டை வெஸ்லியன் மிஷன் மண்டபத்திலும், 1895ல் சென்னை டவுன் ஹாலிலும் இவர் கூட்டிய மாநாடுகள் தமிழ்நாட்டு ஆதிதிராவிட மக்களை உயிர்த்தெழச் செய்தது. மேலும் 1893 முதல் 1900 வரை ஏழு ஆண்டுகள் அவர் நடத்திய “பறையன்” என்ற இதழ் அச்சமூக மக்களின் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கொண்டு சென்றது. முதலில் மாதப்பத்திரிகையாவும் பின்னர் வாரப்பத்திரிகையாவும் மாறியது. 1904 தென்னாப்பிரிக்காவில் அரசாங்க வேலையில் சேர்ந்து, 1921ல் தாயகம் திரும்பினார். ஆனால் அவரின் முதன்மையான விருப்பமாக லண்டன் சென்று தாழ்த்தப்பட்டோரின் இடர்களை எடுத்துக்காட்டி பிரிட்டிஷாரின் கவனத்தைப் பெறுவதாக இருந்தது. ஆனால் அச்சமயம் அது கைகூடவில்லை. மேலும் எம்.சி.ராஜா, என்.சிவராஜ், சகஜானந்தர் போன்ற தலைவர்களோடும், காந்தியடிகள் மற்றும் அண்ணல் அம்பேத்கருடனும் சேர்ந்து பணியாற்றிய அனுபவம் இரட்டைமலை சீனிவாசனுக்கு உண்டு.பட்டியலின மக்களை ஒரு அமைப்பாக்கி அவர்களின் பிரச்சினைகளைப் பேசியது மட்டுமல்லாமல் அவர்களை பவுத்தத்தை நோக்கி தழுவச் செய்ததிலும் இந்திய அளவிலி இரட்டைமலை சீனிவாசன் தான் முன்னோடித் தலைவர் ஆவார்.ஆதிதிராவிடர்கள் என்ற பெயர்வர காரணம்?தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து பட்டியல் சமூக மக்களும் “ஆதி திராவிடர்கள்” என்ற பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று போராடி, அதற்காக நீதிக்கட்சி காலத்திலேயே அரசாணை வெளியிட வைத்தார். திராவிடம் என்ற அடையாளத்தை சாதியற்ற அடையாளமாகப் பார்த்தவர்களில் அவரும் ஒருவர். ஆகவேதான் அவரது எண்பதாவது பிறந்தநாளில் “திராவிட மணி” என்ற பட்டமானது அவருக்கு சூட்டப்பட்டது. இந்தியா முழுதும் உள்ள பட்டியலின மக்களை “ஹரிஜன்” என்று காந்தியடிகள் அழைத்தபோது பலரும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். 1938 டிசம்பர் மாதம் சென்னை மாகாண சட்டசபையில் “சமூக கஷ்ட நிவாரண மசோதா” சட்டமாக நிறைவேற்றப்பட்டது. அந்த விவாதத்தில் இரட்டைமலை சீனிவாசன், அந்த மசோதாவின் பிரிவு 2-ல் ஹரிஜன் என்ற வார்த்தைக்குப் பதில் ஆதிதிராவிடர்கள், ஷெட்யூல்டு ஜாதிகள் என்ற வார்த்தைகளைச் சேர்க்க வேண்டும் என்று திருத்தத்தை முன்மொழிந்தார். “ஒரு வகுப்பினரைக் கடவுளின் குழந்தைகள் என்று கூப்பிடுவதில் அர்த்தமில்லை. மற்றவர்களெல்லாம் சைத்தான் பிள்ளைகளா? ஆதிதிராவிடர் என்ற வார்த்தையே தாழ்த்தப்பட்டவருக்குத் தகுதியானது. அதுவே சரித்திர பூர்வமான பெயர்” என்று உறுதியாக கூறினார். சுதந்திரத்திற்கு பிறகும் இந்த கோரிக்கை பல்வேறு தரப்பினரால் வலுத்தது. ஆனால் அன்றைய காங்கிரஸ் அரசு அதை நிறைவேற்றவில்லை.
via News J : https://ift.tt/0TIKewX
via News J : https://ift.tt/0TIKewX
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/CoimbatoreDIGVijayakumar_07072023_1200.jpg">Media</a>தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆசியாவிலேயே சிறந்த காவல்துறையைக் கொண்டுள்ள கொண்டுள்ள மாநிலமாகத் திகழ்ந்துகொண்டு இருக்கிறது. அப்படிப்பட்ட மக்கள் சேவையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கே பிரச்சினை வரும்போது அவர்கள் எங்கு சென்று முறையிடுவார்களோ? என்ற கேள்வி நம் அனைவர் உள்ளும் எழுகிறது. அந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வாக காவல்துறை அதிகாரிகள் தற்கொலையை நாடுகின்றனர். ஏன் எதற்காக இப்படி அவர்கள் நடந்துகொள்ள வேண்டும்? மனரீதியான பிரச்சினைகள் தீர்ப்பதற்கு காவல்துறை அதிகாரிகள் என்ன செய்ய வேண்டும்?<strong>கோவை டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலை…!</strong>கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த காவல்துறை அதிகார் விஜயகுமார் அதிகாலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவையில் மாநகர பந்தய சாலையில் காவல்துறை மேற்கு மண்டல முகாம் அலுவலத்தில் இன்று காலை பணியிலிருந்த போதே விஜயகுமார் தன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. காவல்துறை உயர் அதிகாரிகள் இவரின் தற்கொலைக்கான காரணத்தை குறித்து முதல் கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.<strong>டி.ஐ.ஜி விஜயகுமாரின் பின்னணி..!</strong>தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர் தான் விஜயகுமார். இவர் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு முன்பாகவே குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்று துணை காவல் கண்காணிப்பாளராக பணியாற்றியுள்ளார். அந்தப் பணியிலிருந்த போதே 2009ஆம் ஆண்டு ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சிப் பெற்று காவல்துறைப் பணியில் இணைந்தார். காஞ்சிபுரம், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. சென்னை அண்ணா நகர் துணை காவல் ஆணையராக பணியாற்றி வந்த இவர் கடந்த ஜனவரி ஆறாம் தேதியில் கோவை மாவட்டம் சரக டி.ஜ.ஜியாக பதவி உயர்வு பெற்றார்.<a href="https://images.news9live.com/wp-content/uploads/2023/07/New-Project-2023-07-07T083648.647.jpg?w=1200&enlarge=true">Coimbatore DIG Vijayakumar IPS dies by suicide, shoots himself with service pistol | News9live</a><strong>டி.ஐ.ஜியின் தற்கொலை எப்படி நடந்தது? </strong>நேற்றைக்கு இரவு காவல்துறை அதிகாரி ஒருவரின் மகனுக்கு பிறந்தநாள் இருந்ததையொட்டி அப்பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பியுள்ளார் விஜயகுமார். இதைத் தவிர கடந்த 2 நாட்களாக விஜயகுமார் தீவிர மன உளைச்சலில் இருந்ததாக சக அதிகாரிகளிடம் பகிர்ந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக தூக்கமின்மைக்காக மாத்திரை பயன்படுத்தியதாகவும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தற்போது இன்று அதிகாலை நடைப் பயிற்சி முடித்து திரும்பிய அவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். விஜயகுமாரின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட இருக்கிறது. இன்று மாலை நல்லடக்கம் என்று தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த இறுதி மரியாதையில் டிஜிபி சங்கர் ஜிவால் கலந்துகொண்டு இறுதி அஞ்சலி செலுத்த இருக்கிறார்.<strong>திமுக ஆட்சியில் தொடரும் காவலர்களின் தற்கொலை…!</strong>அக்டோபர் 5, 2021 ஆம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதி அனில்குமார் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவந்த எஸ்.ஐ. கவுதமன் தனது வீட்டில் கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் இறக்கும்போது அவரது பணிக்காலம் ஓராண்டுக்குள் முடிவடையும் தருவாயில் இருந்தது.இதேபோல செப்டம்பர் 2021ல் காட்பாடி, சேவூர் 15வது சிறப்பு காவல் படையணியில் பணிபுரிந்த திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார், காவலர் குடியிருப்பிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.ஏப்ரல் 29 அதிகாலை 4 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுக வளாகத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த வேலூரைச் சேர்ந்த கடற்படைக் காவலர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டார். ஏற்கனவே கடந்த ஆண்டு ஒரே மாதத்தில் அடுத்தடுத்து நான்கு காவலர்கள் தற்கொலை செய்துகொண்டிருந்தது பெருத்த அதிர்வினை ஏற்படுத்தியிருந்தது. ஆனால் இந்த விடியா திமுக அரசின் முதல்வர் இதனைக் கண்டுகொள்ளாமல் இரங்கல் தெரிவிப்பதுடன் நிறுத்திக்கொள்கிறார்.காவலர்களின் பிரச்சினைகள் என்ன? உளவியல் ரீதியாக அவர்கள் எந்த மாதிரியான துயரத்திற்கு உள்ளாகிறார்கள்? அதற்கான் தீர்வுகளை எப்படி கொடுக்கலாம்? போன்ற நடவடிக்கையில் திமுக ஈடுபடாமல் பம்மாத்து பண்ணிக்கொண்டிருக்கிறது. அதுவும் காவல்துறையைத் தன் கட்டுக்குள் வைத்துள்ள முதல்வர் நிர்வாகத் திறமையன்றி செயல்படுவது பட்டவர்த்தனமாகவேத்…
Mediaமாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல நாம் வாழ்வியலிலும், நடைமுறையிலும் பல மாற்றங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. ஒரு காலத்தில் ரேடியோ மூலம் பாடல்களையும், செய்திகளையும் கேட்டுகொண்டும் தெரிந்து கொண்டும் வந்தோம் காலங்கள் மாற மாற தொலைக்காட்சி வழியாக செய்திகள், படங்கள் என காட்சி பூர்வமாக்கப்பட்டது. காலப்போக்கில் அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் செயல் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் மக்களிடையே டிவி பார்க்ககும் பழக்கமும் ஆர்வமும் குறைந்து உள்ளதாக ஆய்வாலர்கள் கூறுகின்றனர். பல மக்களின் கைகளில் ஏறத்தாழ ஆறாம் விரலைப் போல செல்போன்கள் தவழத் தொடங்கிவிட்டது என்று கூட சொல்லலாம். மக்கள் தங்களுக்கு தேவையான தகவல்களையும், செய்திகளையும் செல்போன் மூலம் தெறிந்து கொள்கின்றனர். தற்போது பல்வேறு தகவல்களை வெளியிடுவது தங்களின் கருத்துக்களையும், அவர்களின் படைப்புக்களையும் பதிவிடுவது என பலரும் அதனை பயனுள்ள வகையில் பயன்படுத்துகின்றனர்.Explainer: Understanding the 'ticket' for Threads on Instagram and how users can sign up | Mint #AskBetterQuestionsத்ரெட்ஸ்…!இதனால் அவர்கள் பிரபலமடையவும் செய்கிறார்கள். இந்த வகையில் செல்போனில் மட்டுமல்லாமல் செல்போன் ஆப்(app)களும் புதுப்புது சமூக வலைதளங்களை அறிமுகபடுத்தி வருகிறது. ஸ்மார்ட் போன் வைத்து இருப்பவர்கள் எல்லா சமூக ஊடகங்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த வகையில் சமூக ஊடகங்களில் ட்விட்டருக்கு பதிலாக மெட்டா நிறுவனம் ’’த்ரெட்ஸ்’’ என்ற புதிய சமூக வலைதளம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் மதிப்பில் வாங்கினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டர் செயல்பாட்டில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். இதனிடையே ட்விட்டருக்கு போட்டியாக மெட்டா நிறுவனம் மார்க் ஜுக்கர்பெர்க்கின் சார்பில் த்ரெட்ஸை வெளியிட்டது.8 மில்லியன் யூசர்களைக் கடந்து…!இந்த த்ரெட்ஸ் மக்கள் இடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் செயலியின் கிளை செயலியாக இந்த புதிய சமூக வலைத்தளம் செயல்படும், என்று மெட்டா நிறுவனம் கூறியுள்ளது. இது பார்ப்பதற்க்கு ட்விட்டர் போலவே தோற்றம் கொண்டாலும் த்ரெட்ஸ் சிறிய ஸ்டேட்டஸ் அப்டேட்களை செய்யும் தளமாக இயங்க உள்ளது. மெலும், இந்த த்ரெட்ஸ் தொடங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் இரண்டு மில்லியன் யூசர்களை கடந்து உள்ளது. தற்போது 8 மில்லியன் யூசர்களை கடந்தது த்ரெட்ஸ் நிறுவனம். ட்விட்டரில் 368 மில்லியன் யூசர் உள்ளனர்.
via News J : https://ift.tt/lN9D2Jv
via News J : https://ift.tt/lN9D2Jv
Mediaஇவ்வளவு நாள் எங்கு இருந்தார்கள் என்று தெரியாத அமைச்சர்கள் எல்லாம் அதிமுகவின் ஒவ்வொரு நாளின் வளர்ச்சியையும் கண்டு அஞ்சி திடீரென்று ”உள்ளேன் அய்யா” என்று களத்திற்குள் புகுகிறார்கள். அப்படி திடீரென்று களத்தில் இறங்கி தன்னைத்தானே புண்படுத்திக்கொண்டவர்தான் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.சரி அமைச்சர் ரகுபதி என்னதான் செய்துள்ளார் என்று நாம் பார்த்தால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கிற்கு இசைவு ஆணைப் பிறப்பிக்க வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடிதம் எழுதியுள்ளார். என்னது இது இவ்வளவு நாள் ஆளுநரிடம் மல்லுக்கு நின்றுவிட்டு தற்போது ஆளுநரிடமே சென்று தஞ்சமடைந்திருக்கிறது இந்த திமுக என்று மக்களே நகைக்கிறார்கள்.இப்பொழுது அவர் அரசியல்வாதியாக வந்துவிட்டார்” - அமைச்சர் ரகுபதி | nakkheeranஅமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்று தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என கொக்கரித்துக்கொண்டிருந்த திமுக தற்போது முன்னாள் அமைச்சர் விவகாரத்தில் ஆளுநரிடம் போய் நிற்பது என்ன வகை என்றே தெரியவில்லை. ஒருவேளை தனக்கு வந்தால் இரத்தம் அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா? என்ற தொணியில் திமுக செயல்படுகிறதோ என்ற எண்ணம் அனைத்து தரப்பினரிடமும் எழாமல் இல்லை.இவ்வளவு வியாக்கியானமாக பேசும் அமைச்சர் ரகுபதி அவர்களே, உங்கள் மீது ஒரு சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளதே அதை மறந்துவிட்டீர்களா என்ன? அமைச்சர் ரகுபதியின் செயலுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் இன்பதுரை சாட்டையடி பதில் ஒன்றைத் தந்துள்ளார். அவரின் கூற்றுப்படி, உச்சநீதிமன்றத்தில் சொத்துக்குவிப்பு வழக்கு CRL.A.613/15 -ஆனது எட்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது. அதிமுக அமைச்சர்களின் வழக்கில் வேகம் காட்டும் ரகுபதி அவர்களே, உங்கள் வழக்கில் வேகம் காட்டதது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.இப்போது மட்டும் உங்களுக்கு ஆளுநர் தேவை, ஆனால் செந்தில்பாலாஜி விவகாரத்தில் ஆளுநர் வேண்டாம். என்னங்கய்யா இது எவ்வளவு பெரிய கம்பி சுத்தும் கதையாக இருக்கிறது இந்த திமுக அமைச்சரின் செயல்பாடு. ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், தனக்கும் அது பொருந்தும் என்பதை அடிக்கடி மறந்து போய்விடுகிறார்கள் என்று அரசியல் விமர்சகர்களும் சாடி வருகின்றனர்.
via News J : https://ift.tt/pKwXVJW
via News J : https://ift.tt/pKwXVJW
Mediaசெந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தொடுத்த ஆட்கொணர்வு மனுவின் விசாரணையானது குளறுபடியாக முடிந்த நிலையில் மூன்றாவது நீதிபதி ஒருவரை நியமித்தது உயர்நீதிமன்றம். அதாவது மனுவினை விசாரித்த நீதிபதிகளான பானு மற்றும் பரத சக்கரவர்த்தி இரு மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். அதாவது நீதிபதி நிஷா பானு நீதிமன்றக் காவலில் செந்தில்பாலாஜியை வைத்திருக்கக்கூடாது என்றும், நீதிபதி டி.பரதவ சக்கரவர்த்தி அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைத்திருப்பது சரி என்று மனுவை தள்ளுபடி செய்தும் இருவேறு உத்தரவுகள் பறந்தன.Mediaஅதனைத் தொடர்ந்து இரண்டு நீதிபதிகளும் உயர்நீதிம்னற தலைமை நீதிபதியிடம் மூன்றாவது நீதிபதியை நியமிக்குமாறு பரிந்துரை செய்தனர். அதனைத் தொடர்ந்து நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார். நேற்று பிற்பகல் 2:15 க்கு விசாரணைத் தொடங்கிய அவர் வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்தார். பின் இன்று தொடங்கிய வழக்கானது செவ்வாய்க் கிழமையில் விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால் அமலாக்கத்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்து, அன்றைக்கு தங்களுக்கு முக்கியமான வேறொரு வழக்கு உள்ளது என்று கூறினர். ஆனால் செந்தில்பாலாஜி தரப்பும் அவரது மனைவியும் வழக்கினை செவ்வாய்க்கிழமைதான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தனர். ஆனால் அமலாகத்துறையினரினருக்கே சாதகமாக நீதிபதி உத்தரவுப் பிறப்பித்தார். அதன்படி வருகின்ற ஜூலை மாதம் 11 மற்றும் 2 ஆகிய தேதிகளில் செந்தில்பாலாஜியின் வழக்கானது விசாரிக்கப்படும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
via News J : https://ift.tt/IjkEP9N
via News J : https://ift.tt/IjkEP9N
Mediaகொலிஜியம் என்பது உயர்நீதிமன்றங்களுக்கும், உச்சநீதி மன்றத்திற்குமான நீதிபதிகளை நியமிக்கவும், இடமாற்றம் செய்யவும் அதிகாரம் கொண்ட அமைப்பு தான் கொலிஜியம். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான இக்குழுவில் மூத்த நீதிபதிகள் நான்கு பேர் இடம்பெறும் குழுவே கொலிஜியம் என்று அழைக்கப்படுகிறது. இந்த கொலீஜியமானது உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நீதிபதிகளை உச்ச நீதிமன்றத்துக்கு உயர்த்துவது, உயர் நீதிமன்ற நீதிபதிகளைத் தலைமை நீதிபதிகளாக உயர்த்துவது, நீதிபதிகளின் பதவி உயர்வு ஆகியவற்றைப் பரிசீலிக்கும் குழு ஆகும்.புதுடெல்லி:இதனை, தொடர்ந்து கொலிஜியம் ஏழு மாநிலங்களின் உயர்நீதி மன்றத்தின் புதிய தலைமை நீதிபதியை நியமிக்க மத்திய அரசுக்கு உச்சநீதி மன்றதில் பரிந்துரை செய்து உள்ளது. ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா,குஜராத், மணிப்பூர், மகாராஷ்டிரா, ஆகிய ஏழு மாநிலங்களின் உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதியின் பணியிடங்கள் காலியாக உள்ளது குறித்து கொலிஜியம் அமைப்பு உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியான சந்திரசூட் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று முன் தினம் கூடியது. இந்த கூட்டதில் கொலிஜியத்தின் உறுப்பினர்களான நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் சஞ்சீவ் கன்னா ஆகியோர் ஆலோசனை கூட்டதில் பங்கேற்றனர். மேலும், பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு ஏழு உயர்நீதி மன்றங்களுக்கும் புதிய தலைமை நீதிபதிகள் நியமிக்க மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்தது. இதன் அடிப்படையில் தற்போது மகாராஷ்டிரவின் உயர்நீதி மன்ற நீதிபதியாக உள்ள திராஜ் சிங்தாக்குரை ஆந்திரா உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து உள்ளது. கர்நாடக உயர்நீதி மன்றதின் நீதிபதியாக பணியாற்றும் அலோக் ஆராதேவை தெலுங்கான உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரை செய்து உள்ளது கொலிஜியம். குஜராத் உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியா உள்ள ஆசிஷ் ஜே தேசாயை கேரள உயர் நீதிமன்றதின் நீதிபதியாக பொறுப்பேற்க பரிந்துரைச் செய்யபட்டு உள்ளது.ஒடிசா உயர் நீதிமன்றதின் நீதிபதியாக இருக்கும் சுபாஷிஸ் தலப்பத்ராவுக்கு உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக பதவி உயர்வு வழங்க மத்திய அரசிடம் கொலிஜிய பரிந்துரை செய்து உள்ளது. உத்திர பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றதின் நீதிபதியாக பணியாற்றும் தேவிந்திர் குமார் உபாத்யாயாவை மகாராஷ்டிரா உயர்நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக பணியாற்ற பரிந்துரை செய்துள்ளது. உத்திர பிரதேசத்தில் அலகாபாத் உயர் நீதிமன்றதின் நீதிபதியாக இருக்கும் சுனித அகர்வாலை குஜராத் உயர் நீதிமன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசிடம் கொலிஜியம் பரிந்துரைத்து உள்ளது. டெல்லி உயர் நீதிமன்றதின் நீதிபதியாக பணியாற்றும் சித்தார்த் முருதுளை மணிப்பூர் உயர் நீதி மன்றதின் தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசிடம் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இவை தொடர்பாக மத்திய அரசு ஒப்புதல் வழங்கிய பிறகே குடியரசு தலைவர் அதிகாரபூர்வமான தகவலை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. இந்த ஆணையயை தொடர்ந்தே ஏழு உயர்நீதி மன்றங்களில் உள்ள புதிய தலைமை நீதிபதிகள் பதவி ஏற்பார்கள் என்று அறிவிக்கபட்டது.
via News J : https://ift.tt/xmtLgck
via News J : https://ift.tt/xmtLgck
Mediaஇன்றைய காலக்கட்டங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது சாத்தியமற்ற ஒன்றாக உள்ளது. ஏனெனில் இன்றாய அளவில் பெறுகிவரும் குழந்தைகள் மீதான குற்றசம்பவங்கள் என்பது கணக்கில் அடங்காதவை. அதிக அளவில் குழந்தைகளுக்கு பாதுகப்பு இல்லாததால் இம்மாறியான குற்றசம்பவங்கள் நடந்துக்கொண்டே உள்ளது . மேலும் தமிழகத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் கடந்த ஆண்டை விட 16.2 சதவீதம் அதிகரித்து உள்ளதாக தமிழ்நாடு என்.சி.ஆர்.பி. எனப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்து உள்ளது. 2021-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிராக மொத்தம் ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 404 வழக்குகள் பதிவாகி உள்ளது. இது 2020-ஆம் ஆண்டை விட 16 புள்ளி 2 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக 2021-ஆம் ஆண்டில் மட்டும் 2,189 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இது 2020-ஆம் ஆண்டை விட 27.7 சதவீதம் அதிகம் ஆகும். இது போலவே இந்த ஆண்டும் குழந்தைகளுக்கு எதிரான கடத்தல் சம்பவம் அதிகரித்து உள்ளது. மேலும் 400-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளது. இதுபோலவே புதுச்சேரியில் இரண்டு மாத குழந்தை கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது.Why do kidnappers make their victims barefoot? - Quoraபுதுச்சேரி: புதுச்சேரியில் இரண்டு மாத ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியயை ஏற்படுத்தி உள்ளது. கடத்தப்பட்ட இரண்டு மாத ஆண் குழந்தை கடந்த 9 நாட்களுக்குப் பிறகு பெங்களூருவில் மீட்கப்பட்டது. புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகரயைச் சேர்ந்தவர்கள் பிரதாப் மற்றும் சோனியா தம்பதிகள். இவர்களுக்கு 5 பிள்ளைகள். புதுச்சேரி கடற்கரைப் பகுதியில் சோனியா விளையாட்டுப் பொருள்களை விற்று வருகிறார். கடந்த மாதம் 27-ம் தேதி இரவு சோனியா, தனியார் பூச்செண்டு விற்பனை செய்யும் கடையின் வாசல் முன்பு தனது 2 மாத குழந்தை ஆதித்யாவுடன் தூங்கிக்கொண்டிருந்தார். இதனிடையே தூக்கக் கலக்கத்தில் நள்ளிரவு விழித்து பார்த்தபோது குழந்தையைக் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்து சோனியா பெரிய கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். குழந்தை காணாமல்போன பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவலர்கள் ஆய்வு செய்தனர். அதில் குழந்தை ஆதித்யாவை ஒரு தம்பதி தூக்கி செல்வது பதிவாகி இருந்தது. அதனடிப்படையில் குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடினார்கள். இதில் குழந்தையைக் கடத்தியது கர்நாடக மாநிலம் பெங்களுருவைச் சேர்ந்த புனிதா பசவராஜ் தம்பதி என்பது தெரியவந்தது.இதையடுத்து பெங்களுர் விரைந்த தனிப்படை போலீஸார் குழந்தையைக் கடத்திய தம்பதியினை நேற்று இரவு கைது செய்தனர். அவரிடமிருந்த சோனியாவின் 2 மாத ஆண் குழந்தையையும் மீட்டெடுத்தனர். அவர்களை விசாரித்ததில், பசவராஜின் மனைவி புனிதா 7 மாத கர்ப்பவதியாக இருந்ததாகவும், கரு கலைந்ததால் தனக்கு வாரிசு இல்லை என்ற அடிப்படையில் சோனியாவின் குழந்தையைக் கடத்தியதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்தக் கடத்தலை தனது கணவர் மற்றும் சகோதரரின் உதவியுடன் செய்ததாக புனிதா, விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து புனிதா மற்றும் அவரது கணவரையும் சகோதரரையும் புதுச்சேரி போலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பிறகு மூவரையும் காலாப்பட்டு மத்திய சிறைக்கு கொண்டுசென்று அடைத்தனர். மீட்கப்பட்ட குழந்தையான ஆதித்யாவை தாய் சோனியாவிடமே போலிசார் ஒப்படைத்தார்கள்.
via News J : https://ift.tt/XV04eD1
via News J : https://ift.tt/XV04eD1
Mediaகோவையில் காவல்துறை டிஐஜி தற்கொலை செய்துகொண்ட நிலையில், விடியா ஆட்சியில் அதிகரிக்கும் காவல்துறையினர் தற்கொலைகள் குறித்தும், மக்களைக் காக்கும் காவல்துறையை கண்டுகொள்வாரா ஸ்டாலின்? என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்..மக்களை காக்கும் காவலர்களை இனி யார் தான் பாதுகாப்பது என்ற கேள்விதான் இன்று தமிழகம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது. காரணம், வெள்ளிக்கிழமை காலை தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் கோவை சரக டிஜஜி சி.விஜயகுமார் என்ற செய்திதான்..தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த காவல்துறை உயர் அதிகாரியின் தற்கொலை சம்பவம் விடியா திமுக ஆட்சியில் காவலர்கள் படும் அல்லல்களுக்கு பெரும் சான்று…இதுபோன்று பணிச்சுமை காரணமாக காவலர்கள் பலர் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது. உயர் அதிகாரி ஒருவரே தற்கொலை செய்துகொள்ள விவகாரம் பூதாகரமாகி வருகிறது.அதேநேரம் டிஐஜி விஜயகுமார் சில வருடங்களாகவே மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சைகள் எடுத்துவந்ததாகவும் தெரிவித்துள்ள தமிழக சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி அருண், விஜயகுமாரின் மரணத்திற்கு பணிச்சுமை காரணமே இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.பணிச்சுமையும் இல்லை…குடும்ப பிரச்சனையும் இல்லை என்றால் அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன?… அவருக்கு மன அழுத்தம் ஏற்பட என்ன காரணம்? இப்படியான காரணங்களுக்கு காவல்துறை வைத்திருக்கும் தீர்வுதான் என்ன?…. எப்போதும் உடல் நலனை காக்க வொர்க் அவுட் செய்த முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபுவும், முதல்வர் ஸ்டாலினும் காவல்துறையினர் நலன் காக்க என்ன செய்தார்கள் இதுவரை? என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது….இதனால் தான் விஜயகுமாரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்களுக்காக ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி செல்வம் தலைமையில் ஆணையம் ஒன்றை இந்த விடியா திமுக அரசு கடந்த ஜனவரி 19, 2022ல் அமைத்தது. ஓராண்டுக்கு மேல் ஆகியும், இதுவரை அந்த ஆணையத்தின் அறிக்கை ஒன்று கூட வெளியாகவில்லை என்பது தான் இங்கு முக்கியமாக உற்றுநோக்க வேண்டியது.காவல்துறையில் காலிப்பணியிடங்களும் அதிகமாக இருக்கும் சூழலில், ஒரே காவலர் பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் சூழலும் தொடர்கதையாகி வருகிறது. மக்களுக்காக இரவு பகல் பாராமல் உழைக்கும் காவலர்களுக்கு, அவர்களின் மன அழுத்தத்தை போக்கவும், அவர்களின் பணிச் சுமையை குறைக்கவும், என்ன செய்யப்போகிறது இந்த விடியா திமுக அரசு?விடியா திமுக ஆட்சியில் இனி காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பதற்கு முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்?….தன் குடும்ப மக்களை மட்டுமே கண்டு கொள்ளும் ஸ்டாலின், தமிழக மக்களைக் காக்கும் காவல்துறையை கண்டுகொள்வாரா? என்ற கேள்வியே இன்று மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
via News J : https://ift.tt/CazYQUb
via News J : https://ift.tt/CazYQUb
Mediaகோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழக அளவில் பெருத்த அதிர்வலையினை ஏற்படுத்தி உள்ளது. காலையில் நன்றாக நடைப் பயிற்சிக்கு சென்றுவிட்டு திரும்பிய அவர், திடீரென இத்தகைய முடிவினை எடுப்பதற்கு என்னதான் காரணம் என்று யாருக்கும் சரியாகப் புலப்படவில்லை. ஆனால் அவருக்கு சில நாட்களாக மன அழுத்தம் இருந்ததாகவும் அதனால்தான் இந்தத் தவறான முடிவை எடுத்துவிட்டார் என்றும் ஒரு சாரார் சொல்கிறார்கள். இல்லை அவர் தனது பாதுகாப்பு அதிகாரி ஒருவரின் துப்பாக்கியை வைத்து சுட்டு இருந்ததால் இது தற்கொலைதானா? என்று இன்னொரு சாரார் கேள்வி எழுப்பி வருகின்றனர்.ஓ.சி.டி வகை மன அழுத்தமா?..!இறந்துபோன டி.ஐ.ஜி கடந்த இரண்டு வருடங்களாக ஓசிடி வகை மன அழுத்தத்தில் இருந்ததாக தமிழக கூடுதல் டி.ஜி.பி அருண் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் டி.ஐ.ஜி விஜயகுமார் தனக்கு நெருக்கமானவர் என்றும், அவரது பெர்சனல் மருத்தவரிடம் தொடர்புகொண்டு இதுகுறித்து விசாரித்ததில் இரண்டு வருடங்களாக ஓசிடி வகை மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்கான மருந்துகள் தொடர்ந்து உட்கொண்டார் என்றும், தனிப்பட்ட வாழ்க்கையில் அவருக்கு சிறப்பாகத்தான் இருந்தது என்றும் டி.ஜி.பி அருண் தெரிவித்திருந்தார்.ஓ.சி.டி என்றால் என்ன? ஓசிடி என்பது பெரு விருப்ப கட்டாய மனப்பிறழ்ச்சி ஆகும். இதனை ஆங்கிலத்தில் அப்சசிவ் கம்பல்சிவ் டிசாடர் ஆகும். அதாவது ஒரு எண்னம் வந்தால் திரும்பத் திரும்ப வந்து கொண்டே இருக்கும். இதைக் கட்டுப்படுத்த முடியாதபோது அது மன அழுத்தமாக மாறிவிடுகிறது. இந்த வகையான மன அழுத்தத்துக்கு மாத்திரை மற்றும் கவுன்சிலிங் மூலம் குணப்படுத்த முடியும். ஒரு செயலை செய்துமுடிக்க வேண்டும் என்று நினைத்து அந்த செயலில் ஈடுபடும்போது அதை செய்து முடிக்கவில்லை என்றால் அதையே நினைத்துக்கொண்டு இருப்பதால் அது மன அழுத்தமாக மாறிவிடும். மேலும் இவர்களுக்கு தங்களைப் பற்றிய தாழ்வுமனப்பான்மை அதிகமாக இருக்கும். இதில் பாதிக்கப்பட்டவர்கள் சரியாக சாப்பிடமாட்டர்கள். கலகலப்பாக பேசமாட்டார்கள். இறுக்கமாகவே முகத்தை வைத்திருப்பார்கள். தெரிந்தவர்களைப் பார்த்தால் கூட பேசவேண்டுமே என்று பேசுவார்கள்.Coimbatore DIG Vijayakumar IPS dies by suicide, shoots himself with service pistol | News9liveஇந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி கைகளைக் கழுவுவார்கள். ஆனால் இது ஓசிடியின் ஆரம்பக்கட்ட நிலைதான். இதைத் தவிர இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அடுத்தவர்களை காயப்படுத்தும் எண்ணம், சுயக்கட்டுப்பாடின்மை, தேவையற்ற பாலுணர்வு சிந்தனைகள் போன்றவை தோன்றும். பயம் மற்றும் கவலை இரண்டும் பெருகி தினசரி வேலைகளைக் கூட செய்வதற்கு முடியாமல் திணறுவார்கள். இதனை நாம் மனநோய் என்று கருதாமல் அவர்களை சாதாரண மனிதர்களாக பாவிக்க வேண்டும். அவர்களின் மன அழுத்தத்தினைக் குறைப்பதன் மூலம் அவர்களின் இந்த நிலையை நாம் மாற்றி அமைக்க முடியும்.கோவை டி.ஐ.ஜி இறப்பில் எழும் சந்தேகங்கள்!…ஓசிடி மன அழுத்தம் என்று டிஜிபி அருண் கூறியுள்ளார். ஆனால் அதற்கான மருத்துவச் சான்றினை இன்னும் அவர் வெளியிடவில்லை. அருகில் இருந்த கன்மேன் உடைய துப்பாக்கியை வாங்கிதான் சுட்டுள்ளார். ஆகவே இது தற்கொலைதானா என்கிற கேள்வியும் பலரிடம் வலுக்கிறது. கன்மேன்-இடமும் விசாரணைத் தொடர்கிறது என்று சொல்லப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க, காலையில் இறந்த டி.ஐ..ஜியின் உடலை அவசர அவரசமாக உடற்கூராய்விற்கு அனுப்பி பின் அவரது சொந்த ஊரான தேனிக்கு சென்று தகனம் செய்யப்பட்டுள்ளது. ஏன் இந்த அவசரம்? முழுமையான விசாரணைக்குப் பிறகு உடல் தகனம் நடந்திருக்கலாமே? என்று பல தரப்பில் இருந்து கேள்வி எழுப்புகின்றனர். News :தொடரும் காவலர்களின் தற்கொலைகள்! டி.ஐ.ஜி விஜயகுமார் தற்கொலையின் பின்னணி என்ன?https://newsj.tv/dig-vijayakumar-suicide-what-issue/
via News J : https://ift.tt/lIUwR8N
via News J : https://ift.tt/lIUwR8N
Mediaகடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் விபத்துகள் என்பது பழகிவிட்ட ஒன்றாக உள்ளது. முந்தைய காலங்களில் சாலை விபத்துகள் என்பது ஒவ்வொரு நாளும் நடந்துக் கொண்டே இருந்தது என்று சொல்லலாம். குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் சாலை விபத்துகளின் எண்ணிக்கை 1.5 சதவீதம் அதிகரித்து உள்ளது. சாலை விபத்துகள் மட்டும் அல்லாமல் இதற்கு ஈடுகொடுக்கும் வகையில் ரயில் விபத்துகளும் நடந்துகொண்டே உள்ளது. இதற்கு உதாரணமாக கடந்த ஜுன் மாதம் நம் இந்தியாவையே உலுக்கிய கொர விபத்தான ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒடிஷாவின் பாலாசோர் அருகே 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இதில் 290 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ரயில் விபத்துகள் என்பது சிறிய அளவில் ரயில் தரம் புரண்டது, சரக்கு ரயில்கள் மோதி விபத்து போன்ற ரயில் விபத்துகள் நடந்து கொண்டே உள்ளது. இன்னும் ஒடிசா ரயில் விபத்தில் இருந்தே மீளாத நிலையில் அடுத்து ஒரு விபத்து சம்பவம் தெலுங்கானாவில் அரங்கேரியுள்ளது. Falaknuma Express train catches fire near Hyderabad- The New Indian Expressஹைதராபாத்:தெலுங்கானாவில் ஃபலுக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் மேற்க்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் நோக்கி ஃபலக்னுமா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வந்துகொண்டிருந்தது. இந்த ரயில்காலை 10.30 மணியளவில் தெலங்கானாவின் யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் பகிடிபல்லி – பொம்மைய்யபல்லி இடையே வரும்போது எஸ்-4, எஸ்-5 ஆகிய இருபெட்டிகளுக்கு இடையே இருந்து புகையாக வருவதை கவனித்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். இதற்கிடையே தீ அடுத்தடுத்த பெட்டிகளுக்கும் வேகமாக வெகமாக பரவத் தொடங்கியது. இதனால் இந்த ரயிலில் இருந்து பயணிகள் வேக வேகமகா வெளியேறினர் வெளியேறினர். இருந்தும் இந்நிலையில் தீயானது ஆறு பெட்டிகளில் மிக வேகமாக பரவியது. இதனை பார்த்த ரயில்வே ஊழியர்கள் அந்த பெட்டிகளை துரிதமாக கழற்றினர். இந்த தகவலின் பேரில் வந்த தீயணைப்பு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீயானது 5 பெட்டிகள் முற்றிலுமாக பரவி கருகிவிட்டது . அதில் ஒரே ஒரு பெட்டி மட்டும் பாதியளவே சேதம் அடைந்தது. பிறகு பாதி ரயில் பெட்டிகளுடன் ரயில்கள் செகந்திராபாத் புறப்பட்டு சென்றது.இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்க்கு வந்த தென் மத்தியரயில்வே அதிகாரிகள் விசாரணை மேற்க்கொண்டனர். அதில் பயணி ஒருவர் செல்போனுக்கு சார்ஜ் போட்டுவிட்டு, அதன் அருகில் நின்றுகொண்டு சிகெரட் பிடித்துக்கொண்டு இருந்தார் அந்நேரத்தி திடீரென சார்ஜர் பிளக் வழியாக புகை வந்தது எனவும் இதான் மூலமாக பெட்டிகள் முலுவதும் தீ பரவியதாகவும் தெரிவித்தார். ஆனால் இது ஒரு புறம் இருக்க சமீபத்திய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து போல் டெல்லி – ஹைதராபாத் இடையே மீண்டும் ஒரு விபத்து விரைவில் நடக்கும் என செகந்திராபாத் ரயில்வே அலுவலகத்திற்க்கு மர்ம கடிதம் ஒன்றூ வந்ததை அடுத்து இத தீ விபத்தானது யாரோ ஒருவரின் சதி செயலாள் நடந்து இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றானர் போலிசார்.
via News J : https://ift.tt/vkE6Nqg
via News J : https://ift.tt/vkE6Nqg
Media“சொன்னதை செய்வோம், சொல்லாததையும் செய்வோம்” இந்த வசனத்தை எங்கோ கேட்டதுபோல உள்ளதா? ஆம் இது நம்ம அய்யா முதல்வர் ஸ்டாலின் அவர்களின் வீராவேசமான வசனம் தான். ஆனால் “எந்த பயனும் இல்ல”. 520க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளைத் தேர்தலுக்காக கொடுத்துவிட்டு அதில் இன்னும் பலவற்றை நிறைவேற்றாமல் இழுத்தடிக்கும் விடியா ஆட்சியை தமிழகத்தில் வழங்கி வருகிறார் ஸ்டாலின். அதிலும் முக்கியமாக பெண்கள் சம்பந்தப்பட்ட வாக்குறுதிகளில் அய்யா ஸ்டாலின் காட்டிய பாராபட்சம் இப்போது பட்டவர்த்தனமாக தெரிந்துவிட்டது.பிரச்சாரத்தின் போது கூறியது..!Mediaதேர்தல் பிரச்சாரத்தின்போது அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகையாக மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்று சொல்லிய திமுக அதனைத் தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தது. அதற்கு பிறகு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அன்றைக்கு நிதியமைச்சராக இருந்த ஆடியோ லீக் பிடிஆர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் பழனிவேல் தியாகராஜன் ”தகுதியான குடும்பத்தலைவிகளுக்கு” மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார். சரி அப்படி என்றால் யார் யார் தகுதியுடைய குடும்பத் தலைவிகள் என்ற கேள்வி அன்றைக்கே எழுப்பப்பட்டது.Magalir Urimai Thogai: மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 பெற விண்ணப்பிப்பது எப்படி? - யார் யாரெல்லாம் தகுதியுடைவர்கள்?, how-to-apply-for-magalir-urimai- thogai-scheme-and-eligibility-detailsஇப்போது மாறிய வாக்குறுதி…!அன்றைக்கு மழுப்பிவிட்டு திடீரென்று இப்போது ஒரு பட்டியலை இந்த ஸ்டாலின் அரசு வெளியிட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகையைப் பெறுவதற்கு சில அடிப்படைத் தகுதிகளாக ஆண்டு வருமானம் 2.5 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும், 5 ஏக்கருக்கும் மேல் நிலம் வைத்திருக்க கூடாது, ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்த வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இது சாமானிய மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கையாக உள்ளது என்று பல தரப்பினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.சமூக ‘அ’நீதி அரசு…!பெண்களுக்கான சமூகநீதி என்று சொல்லிவிட்டு பெண்களையே வஞ்சிக்கும் செயலில் ஈடுபடும் விடியா திமுக அரசு, பெண்களுக்கான இலவசப் பேருந்து சேவையைத் தொடங்கிவிட்டு, ஓசி பஸ் என்று பெண்களைத் தரக்குறைவாக பேசுவதும், மேடையில் தன் சொந்தக்கட்சிக்காரப் பெண்ணையே நீ எஸ்சி தானம்மா என்று சாதிய ரீதியாக பேசுவதும் போன்ற அவச்செயலைத் தொடர்ந்து புரிகிறார்கள். கேட்டால் பெண்களுக்கான கட்சி, சமூகநீதியில் திளைத்து வாழ்ந்தக் கட்சி என்று நம்மிடமே புருடா விடுவதில் வல்லவர்களாக உள்ளார்கள். இப்படிப் பொய் பேசி ஆட்சியை தக்கவைத்துவிட்டு திராவிடியன் ஸ்டோக் என்று வேறு பெருமை அடித்துக்கொள்கிறார்கள். அதிமுகவின் ஒவ்வொரு கேள்விக் கணைகளையும், வலியுறுத்தல்களையும் சரியாக எதிர்கொள்ளத் தெரியாமல் ஸ்டம்பை மறைத்துக்கொண்டு ஸ்டோக் மட்டும் வைப்பதில்தான் இந்த திமுகவினர் வல்லவர்கள் என்று அரசியல் விமர்சகர்களே நகைக்கிறார்கள்.
via News J : https://ift.tt/bKth72n
via News J : https://ift.tt/bKth72n
Mediaதூத்துக்குடி ஆத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பின்வருமாறு தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார். கோயமுத்தூரின் சரக டி.ஐ.ஜி விஜயகுமார் அவர்கள் நேற்றைய தினம் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு எனது அஞ்சலி. அவரது மரணம் தற்கொலையா? இல்லையா? என்று விசாரிக்க இந்த அரசு சிபிஐ விசாரணையைத் தொடரவேண்டும். ஏனென்றால் அவருக்கு எந்தவித குடும்ப கஷ்டங்களும் இல்லை என்று காவல்துறையினரே தெரிவிக்கிறார்கள். அதனை மீறியும் அவருக்கு எதாவது மன அழுத்தம் ஏற்பட்டிருந்தால் அதனைப் பற்றி முழுமையாக விசாரிக்க வேண்டும். இன்றைய தினம் காவலர்கள் அதிக மன அழுத்ததில் உள்ளார்கள். அவர்களுக்கு உரிய ஓய்வுக் கொடுக்க வேண்டும். இந்த அரசு காவலர்களுக்கு சரியான ஓய்வுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அண்ணா திமுக ஆட்சி காலத்தில் பெங்களூர் உமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து காவலர்களுக்கு நலத்திட்டமும், மன அழுத்தத்தைக் குறைக்க வழிவகையும் செய்யப்பட்டது. காவலர்கள் பணி என்பது புனிதமானப் பணி ஆகும். ஆனால் தற்போது நடக்கும் திமுக ஆட்சியில் காவலர்களைப் பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள்.Mediaஇதனைத் தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பின்வருமாறு பேசியுள்ளார். Mediaஅமைச்சர் ரகுபதி அவர்கள் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டவர். ஏற்கனவே அவர் மீது வழக்குத் தொடரப்பட்டு அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. அவருக்கு ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு தகுதி கிடையாது. ஆனால் இவருக்கு கீழ் ஊழல் தடுப்புத்துறை உள்ளது. ஊழல் குற்றச்சாட்டு உள்ள ஒருவரிடையே இந்தத் துறை இருப்பது எப்படி நியாயமாகும். ஏற்கனவே அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தபோது பதினைந்து திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. அப்போது பல வாய்தாக்கள் வாங்கி தப்பிக்கொண்டே வந்தனர். தற்போது அவர்கள் ஆட்சி வந்ததும் ஊழல் வழக்குகளில் இருந்து எளிதாகத் தப்பி வருகின்றனர். இது முறையல்ல. முக்கியமாக சட்ட அமைச்சர் ரகுபதி ஊழல் குற்றச்சாட்டைப் பற்றி பேசுவதற்கு துளியும் தகுதி அற்ற நபர்.
via News J : https://ift.tt/2Z5AXvW
via News J : https://ift.tt/2Z5AXvW
Media1789-ம் ஆண்டு பிரெஞ்சுப் புரட்சியின் போது பாஸ்டில் சிறை தகர்க்கப்பட்டதன் நினைவாக ஜூலை 14-ம் தேதி பிரான்சின் தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது, பாஸ்டில் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. பாஸ்டில் என்றால் என்ன? அது எவ்வாறு உருவானது என்பதற்கான கேள்விகள் நமக்குல் தோன்ற ஆரம்பிக்கும். இந்த பாஸ்டில் சிறை பதினான்காம் நூற்றாண்டின் பாரிசை ஆங்கிலேயத்திற்கு எதிராக பாதுகாத்துக் கொள்ள கட்டப்பட்டது.இந்த பாஸ்டில் சிறையானது சார்லஸ் ஆட்சியின் போது பயன்படுத்தபட்டது. மேலும், இதன் அமைப்பை பார்தால் ஐந்து அடி சுவர்கள் கொண்ட எட்டு வட்ட கோபுரங்களை கொண்டது. பாஸ்டில் எழுபது மூன்று அடி உயரம் கொண்டது. இந்த ஆண்டுடின் பாஸ்டில் தின அணிவகுப்பில் பங்கேற்க இந்தியப் பிரதமர் திரு.நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு கலந்துக் கொள்ள உள்ளார். இந்த அணிவகுப்பில் இந்தியாவில் 72 விமான படை அதிகாரிகள், நான்கு ரஃபேல் விமானங்கள், 2சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள் இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 269 வீரர்கள் பிரெஞ்சு வீரர்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளனர். இந்த குழுவானது இன்று பிரான்ஸ் சென்றுள்ளது. மேலும் நாம் பார்த்தால், இந்தியா பிரான்ஸ் இடயேயான நட்புறவு முதாலம் உலகப்போருக்கு முந்தையது ஆகும். ஏனெனில், இந்த போரில் 13 லட்சத்துக்கும் அதிகமான இந்திய வீரர்கள் கலந்துகொண்டனர். இப்போரில் கலந்து கொண்டவர்களில் கிட்டத்தட்ட 74,000 பேர் சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், 67 ஆயிரம் பேர் காயமடைந்தனர். பின்னர் இரண்டாம் உலகப்போரில் இந்திய வீரர்கள் இருபத்து ஐந்து பேர் பங்கேற்றனர்.இந்த வகையில் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கு இடையேயான ராணுவ உறவு என்பது இந்த ஆண்டு 25-வாது தேசிய தினமாகக் கொண்டாடப்படுகிறது. இரண்டு நாட்டு ராணுவ வீரர்களும் பயிற்சி பெற்றுத் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இந்திய ராணுவ குழுவிற்கு கேப்டனாக அமன் ஜக்தாப் தலைமை ஏற்று வருகிறார். மேலும் எழுபது ஏழு அணிவகுப்பு வீரர்கள் மற்றும் 38 இசைக்குழுக்களின் உறுப்பினர்களை கொண்டது தான் இந்த அணிவகுப்பு. இந்திய கடற்படைக் குழுவிற்கு கமாண்டர் விராட் பாகெலும், இந்திய விமானப் படைக்கு ஸ்க்வாட்ரன் தலைவர் சிந்து ரெட்டியும் தலைமை தாங்குகின்றனர். இதனிடையே நான்கு ரஃபேல் விமானபடைகள், இந்தியாவின் 72 விமான படை அதிகாரிகள், 2சி-17 குளோப்மாஸ்டர் விமானங்கள், இந்தியாவின் முப்படைகளை சேர்ந்த 269 வீரர்கள் பிரெஞ்ச் வீரர்களுடன் சேர்ந்து பங்கேற்க உள்ளது. இந்த அணிவகுப்பு இன்று பிரான்ஸ் சென்று உள்ளது.
via News J : https://ift.tt/yEG81DQ
via News J : https://ift.tt/yEG81DQ