News J
596 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaமேகதாதுவில் அணை கட்டி டெல்டாவை பாலைவனமாக்க கர்நாடக காங்கிரஸ் அரசு துடிக்கும் நிலையில், ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் தமிழகத்தில் அதன் கூட்டணி கட்சியான திமுகவுக்கு எந்த அளவு மகிழ்ச்சியாக இருந்ததோ, அதைவிட பேரிடியை காங்கிரஸ் இறக்கியுள்ளது மேக தாது அணை விவகாரத்தில்.தேர்தல் வாக்குறுதியின்போதே மேகதாது அணை கட்ட 9ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்த காங்கிரஸ், தற்போது வெற்றி பெற்ற நிலையில், துணைமுதல்வர் டி.கே.சிவக்குமார் அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார்.இதனை தடுத்து நிறுத்த திமுக என்ன செய்யப் போகிறது என்னும் கேள்வி எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினிடம் ஆலோசித்துவிட்டு, தானே நேரடியாக டெல்லி சென்று காவிரி மேலாண்மை ஆணையத்தை எதிர்கொள்ள இருப்பதாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்திருக்கிறார்.பதவி ஏற்பு விழாவுக்காக பெங்களூருவுக்கு சென்றவர்கள், மேகதாது அணை விவகாரத்துக்காக அங்கே நேரடியாகச் சென்று பேசமுடியாதா? உங்களின் கூட்டணிக் கட்சிதானே காங்கிரஸ்? நீங்கள் சொன்னால் கேட்காதா என்றெல்லாம் கேள்விக்கணைகள் சுழன்றடிக்கின்றன அரசியல் அரங்கில்.தமிழகத்திலும் கர்நாடகாவில் கடந்த ஆட்சிக் காலங்களில் மேகதாது அணை விவகாரம் அமைதியாக கிடந்தது. தமிழக விவசாயிகளின் காவிரி உரிமையை மீட்டுக்கொடுத்த மறைந்த முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா, காவிரி மேலாண்மை வாரிய அறிவிப்பை அரசிதழில் வெளியிடச் செய்து சாதித்தும் காட்டினார்.
அவருக்கு பிறகு தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான ஆட்சியிலும் மேகதாதுவுக்கு எதிராக விவசாயிகளின் குரலுக்கு முன்னுரிமை அளித்து வந்தனர். மேகதாது அணை விவகாரத்தில் அதிமுக அரசு கடுமையாக எதிர்ப்புகளை தெரிவித்ததோடு, மத்திய அரசிடம் வலியுறுத்தி வந்த காரணத்தால், அணை கட்டும் முடிவை கர்நாடக அரசு எடுக்காமலேயே இருந்தது.ஆனால், தற்போது கூட்டணியில் இருந்தும் காங்கிரஸ் அரசின் முடிவுகளை கட்டுப்படுத்த முடியாமல் தள்ளாடுகிறது திமுக.தங்கள் குரலுக்கு செவி மடுக்காமல், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கொண்டு துரோகம் செய்ய துணிந்துவிட்ட திமுக அரசால் தமிழக டெல்டா பகுதிகள் பாலைவனமாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.

via News J : https://ift.tt/hodA0f7
Mediaமக்களின் அத்தியாவசிய சமையல் பொருட்களில் முதன்மையான பொருள் தக்காளி ஆகும். தக்காளி இல்லாமல் நம்மவர்களுக்கு எந்த சமையலையும் செய்ய வராது. தக்காளியின் கொள்முதலும் வரத்தும் சரிவர இல்லாததால் அதிக தக்காளியை அதிக விலைக்கு விற்க வேண்டிய நிர்பந்தம் வியாபரிகளுக்கு ஏற்பட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழக உணவுப் பாதுகாப்புத் துறையானது நியாய விலைக் கடைகளில் தக்காளியானது விற்கப்படும் என்று கூறியது. தக்காளி சாதம், தக்காளி குழம்பு வைப்பவர்கள் எல்லாரும் இன்றைக்கு பணக்காரர்கள் என்ற கேலியான மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் பரவி கவனம் பெற்றது.சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை விற்கப்படுவந்த நிலையில் நியாயவிலைக் கடையில் ஒரு கிலோ 60 ரூபாய் என்கிற மதிப்பில் கொடுக்கப்பட உள்ளதாக அறிவித்த நிலையில் தக்காளி விநியோகம் இன்று செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து நியாயவிலைக் கடைகளில் தொடங்கிய விற்பனையில் 20 நிமிடத்தில் தக்காளிகள் விற்று தீர்ந்தன.  ஒவ்வொரு நியாய விலை கடைகளுக்கு ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பட்டைத்தாரர்கள் உள்ள நிலை வெறும்  3 பெட்டிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்கு வந்ததாக வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

via News J : https://ift.tt/oKOiF5p
Mediaஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370 ஆனது ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் இன்று உச்சநீதிமன்றத்திற்கு விசாரனை வர உள்ள நிலையில், தான் அந்த வழக்கை எப்போதோ வாபஸ் வாங்கிவிட்டதாக வழக்கை தொடர்ந்த  ஷா ஃபாசில் திடுக்கிடும் தகவலைத் தற்போது கூறியுள்ளார்.மாநில அந்தஸ்து..!இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு 1947 ஆம் ஆண்டில் ஜம்மு காஷ்மீரானது தன்னிச்சையாக செயல்படும் என்று அதனை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜா ஹரிசிங் முன்மொழிந்தார். அப்போது நடைபெற்ற சில அரசியல் குழப்பங்களால் இந்தியாவுடன் இணைவதற்கு சில நிபந்தனைகளுடன் ராஜா ஹரிசிங் ஒத்துக்கொண்டார். அதன்பிறகு சட்டப்பிரிவு 370 ஆனது ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு சிறப்பு அந்தஸ்தானது கொடுக்கப்பட்டது. அதாவது காஷ்மீரின் பாதுகாப்பு, வெளியுறவுத்துறை மற்றும் தகவல்தொடர்பு போன்ற துறைகளுக்கு சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் உண்டு என்று கூறப்பட்டது. ஆனால், அம்மாநிலத்துக்கென தனி அரசமைப்பும் கோரப்பட்டது. 1951 ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீருக்கு சட்ட மன்றம் கூட்ட அனுமதி வழங்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு காஷ்மீருக்கு தனி அரசமைப்பு வழங்கப்பட்டு 1957 ஜனவரி 26 ஆம் நாள் சிறப்பு அந்தஸ்து அமலுக்கு வந்தது.சட்டப்பிரிவு 370…!இந்திய அரசியலமைப்பின் 370வது பிரிவு ஜம்மு காஷ்மீருக்கும் மத்திய அரசுக்கும் ஒரு இணைப்பு பாலம் என்று சொல்லலாம். அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு மற்றும் காஷ்மீரின் முதல்வர் ஷேக் முகமது அப்துல்லா இது தொடர்பாக  ஐந்து மாத காலம் பேச்சுவார்த்தை நடத்திய பிறகே இச்சட்டப்பிரிவு அரசமைப்பில் சேர்க்கப்பட்டது. சட்டப்பிரிவு 370ன் படி, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்களை தவிற, வேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற வேண்டும் என்றால், மத்திய அரசு அம்மாநிலத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த சிறப்பு அந்தஸ்தால், அரசமைப்பின் சட்டப்பிரிவு 356, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பொருந்தாது. இதனால், அம்மாநில அரசை கலைக்கும் அதிகாரம், இந்திய குடியரசுத் தலைவருக்கு கிடையாது.மேலும் ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு என்று இரட்டை குடியுரிமை கொண்டுவரப்பட்டது. தேசியக் கொடியைத் தவிர்த்து காஷ்மீருக்கு என்று தனி மாநிலக் கொடி வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டது. மேலும் அதன் சட்டமன்றத்தின் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.அம்மாநிலத்தின் நிரந்தர குடியாளர்கள் யார் என்று வரையறுப்பது அரசமைப்பு பிரிவின் 35A  ஆகும். இது சட்டப்பிரிவு 370ம் ஒரு பகுதியாகும். இதன்படி இந்தியாவில் மற்ற மாநிலங்களில் வசிப்பவர்கள் ஜம்மு காஷ்மீரில் நிலம் மற்றும் சொத்துக்கள் என்று எதுவும் வாங்க முடியாது. சட்டப்பிரிவு 360ன் படி நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அவரசநிலை பிரகடனப்படுத்த முடியும். ஆனால் இது காஷ்மீருக்கு பொருந்தாது. குடியரசுத் தலைவருக்கும் உரிமை கிடையாது. மற்ற நாடுகளுடன் போரிட்டால் மட்டுமே அங்கு அவசர நிலையைக் கொண்டுவர முடியும். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரங்களின் பொருட்டும் இன்னும் சில அரசியல் காரணங்களுக்காகவும் இந்த சட்டப்பிரிவானது நீக்கப்பட்டது.    

via News J : https://ift.tt/DemFrZ3
Mediaவிழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஊராட்சி ஒன்றியம் ஆர்.நயம்பாடி ஊராட்சியில நடந்த பூமி பூஜை நிகழ்ச்சியில அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்துக்கிட்டாரு… அப்போ அங்க பழங்குடியினப் பெண் ஒருத்தங்களுக்கு சாமி வந்து ஆட ஆரம்பிச்சிருக்காங்க. அதுமட்டுமில்லாம தங்களோட பகுதிக்கு சாலை அமைச்சித் தரணும்னு கோரிக்கையும் வச்சிருக்காங்க. பொதுமக்கள் கேட்டா ஏதாவது ஒண்ண சொல்லி சமாளிக்கலாம்… சாமியே வந்து கேட்டா என்ன சொல்றதுன்னு யோசிச்ச, செஞ்சி மஸ்தான் சாலை போட்டுத் தர்றேம்மான்னு வாக்குறுதி கொடுத்துருக்காரு.அப்படியே கன்னிமார் சாமிக்கு நான் பெரிய பக்தன்… அவங்களுக்கு கோயில் கட்டுறதுக்காக என்னோட இடத்தையே கொடுத்துருக்கேன்னுல்லாம் யாரும் கேக்காமயே விளம்பரப்படுத்திக்கிட்டாரு… எல்லாம் சரிதான்… தேர்தல் வாக்குறுதி மாதிரி, அம்மனுக்கு கொடுத்த வாக்குறுதியையும் செய்யாம விடலாம்னு நெனைச்சிடாதீங்க… ஏற்கனவே கள்ளச்சாராய விவகாரத்துல உங்க பதவி காலியாக இருந்துச்சு… இப்ப ரோடு போடலன்னா நிச்சயமா அது காலியாயிடும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

via News J : https://ift.tt/qFlWER7
Mediaபோக்குவரத்துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிந்துள்ளனர்.மத்திய குற்றப்பிரிவு என்பது முதல்வர் ஸ்டாலினின் கீழ் இயங்கும் காவல்துறையின் மற்றொரு அங்கமாக செயல்பட்டு வருகிறது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 81 பேருக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.1.62 கோடி பெற்று மோசடி செய்ததாக செந்தில் பாலஜி மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.2018ம் ஆண்டு வாக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் தான், கடந்த மாதம் 14ம் தேதி அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். செந்தில் பாலாஜி உத்தமர், அவர் ஒரு அமைச்சர், அவரை எப்படி கைது செய்யலாம் என்று வாய்கிழிய பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தற்போது தனக்கு கீழ் உள்ள காவல்துறையின் மற்றொரு பிரிவான மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் மூலம் செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ளார். அதாவது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. செந்தில் பாலாஜி குற்றமற்றவர் என்பதாலும், அவர் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதாலும், அவர் அமைச்சரவையில் தொடர்வதில் தவறு இல்லை என்று பேசிய முதல்வர் ஸ்டாலின், இப்போது தனக்கு கீழ் உள்ள காவல்துறையே செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிந்திருப்பதை என்ன சொல்ல சமாளிக்கப்போகிறார்? தனக்கு கீழ் உள்ள காவல்துறையே செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்துள்ள நிலையில், இன்னமும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருக்கப்போகிறாரா முதலமைச்சர் ஸ்டாலின்?

via News J : https://ift.tt/9hmBALk
Mediaமேகதாது அணை விவகாரத்தில் திமுக அரசானது தமிழக மக்களையும் விவசாயப் பெருங்குடிகளையும் வஞ்சித்து வரும் நிலையில் கர்நாடக காங்கிரஸ் மற்றும் திமுகவை கண்டித்து போராட்டம் நடத்துவது தொடர்பாக நாளை ஜூலை 5-ஆ,ம் தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தியும், திமுக அரசைக் கண்டித்தும், அதிமுக சார்பில் கடந்த 21ம் தேதி மாநிலம் மூழ்வதும் ஆரப்பாட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக தொண்டர்படையினரே ஒன்று சேர்ந்து எழுச்சிமிகு ஆர்ப்பாட்டமாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள், தலமைக் கழக நிர்வாகிகள் கூட்டமானது நாளை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆக்ஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள மதுரை மாநாடு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.அதிலும் முக்கியமாக காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும், கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் பேச்சிற்கு திமுக மவுனம் சாதித்து கண்டிக்காமலும் இருப்பதால் அதனைக் கண்டித்தும், பொராட்டம் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

via News J : https://ift.tt/pd53mgM
Mediaதமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டுக்கான கட்டணம் நிர்ணயிப்பதில் தொடர்ந்து தாமதம் நிலவுவதாக தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.காத்திருக்கும் தனியார் பள்ளிகள்..!தமிழகம் முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளுக்கு ஆண்டுதோறும் எல்கேஜி முதல் 12 ஆம் வகுப்பு வரையில், என்னென்ன கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிர்ணயம் செய்து வருகிறது. இதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய தனியார் பள்ளிகள் அளிக்கும் கட்டணம் மாறுபாடு குறித்த மனு மீது உரிய விசாரணை நடத்தி அதன்படி கல்வி கட்டணங்கள் நிர்ணயித்து உத்தரவுகள் பிறப்பிப்பது வழக்கம். தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளிகளில் கடந்த ஆண்டுடன் கட்டணம் நிர்ணயக் குழு அளித்த கட்டணம் விவரம் காலாவதியான நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான கட்டணம் நிர்ணயிக்க விண்ணப்பித்து தனியார் பள்ளிகள் காத்திருக்கின்றன.கடந்த ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்கள்…!அதிமுக ஆட்சியில் கொரோனோ பேரிடர் என்பதால் தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று சட்டம் இயற்றப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு அளித்த உயர்நீதிமன்றம் 75 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். அதனையும் 40 சதவீதம் மற்றும் 35 சதவீதம் என்று தவணையாக வசூலிக்க வேண்டும் என்று கூறியது. பிறகு 2021-2022 கல்வியாண்டில் உச்சநீதிமன்றமானது தனியார் பள்ளிகள் 85 சதவீதம் கட்டணம் வசூலிக்கலாம் என்று கூறியது. மேலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் உரிய நேரத்தில் இந்த கட்டணத்தை செலுத்த முடியாவிட்டால் அவர்களின் படிப்பை பாதிக்கும் நோக்கில் எந்த செயலையும் பள்ளிகள் செய்துவிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படி கடந்த கல்வியாண்டுகளில் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டன.கல்வி கட்டண நிர்ணயக் குழு தலைவரை நியமிப்பது எப்போது?ஆனால் 2023-24 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்கி பள்ளிகள் ஒரு மாதமாக செயல்பட்டு வரும் நிலையில், இதுவரையில் தனியார் பள்ளிகளுக்கு நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டணம் நிர்ணயிக்காமல் இருப்பதாக தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டு இயக்கம் வேதனை தெரிவித்துள்ளது. கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்னரே தமிழக அரசின் தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயித்தால்தான் பெற்றோரும், பள்ளி நிர்வாகமும் எவ்ளவு கட்டணம் வசூல் செய்ய வேண்டும், எவ்வளவு கட்டணத்தை எந்தெந்த வகுப்புகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது என்று பெற்றோரும் குழப்பம் இல்லாமல் கட்டணத்தை செலுத்த முடியும். ஆனால் தமிழக பள்ளிக்கல்வித்துறையின் மெத்தனத்தாலும், கல்வி கட்டண நிர்ணய குழுவுக்கு புதிய தலைவர் நியமிக்காமல் இருப்பதாலும், தனியார் பள்ளிகளுக்கான கல்வி கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் இருப்பதாக தனியார் பள்ளிகளுக்கான கூட்டு இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.ஏற்கனவே அரசுப் பள்ளிகளை திறம்பட கவனிக்க முடியாமல் திணறும் அரசாக திமுக அரசு செயல்பட்டுகொண்டிருக்கிறது. இதனால் ஏழை மற்றும் பாமரக் குழந்தைகளின் பள்ளிப்படிப்புதான் மிகவும் கவலைக்கிடம் ஆகியுள்ளது என்று கல்வியாளர்கள் கூறிவருகின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித்துறையை எப்போது கைகொண்டாரோ அப்போது இருந்து கல்வித்துறை ரீதியிலான பல்வேறு குற்றச்சாட்டுகளும் குளறுபடிகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதனால் பாதிக்கப்படப் போவது கல்விக் கற்க வந்திருக்கும் பிள்ளைச் செல்வங்களே!

via News J : https://ift.tt/qASFpU5
Mediaசிக்கில் செல் (அ) அரிவாள் செல் அனிமியா என்றால் என்ன?உடலில் உள்ள உயிரணுக்களுக்கு ஆக்சிஜனை வழங்கும் பொறுப்புடைய ஹீமோகுளோபின் அளவினைப் பாதிக்கும் ஒரு நோய் குழுதான் சிக்கில் செல் நோய் ஆகும். இதில் இரத்த சிவப்பணுக்கள் அரிவாள் வடிவத்தில் இருப்பதால் இதனை அரிவாள் வகை செல் நோய் என்றும் கூறுவர். மேலும் இதனை பிறைவடிவ செல் அனிமியா என்றும் ஒரு சில நிபுணர்கள் அழைப்பது உண்டு. இந்த செல்களானது மரபு வழியாக குழந்தைகளுக்கு கடத்தப்பட்டு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. இந்த சிக்கில் செல்லின் கொண்ட பெற்றோர்களுக்கு இது பெரிதாக பாதிப்பினை ஏற்படுத்தாது. ஆனால் இந்த பெற்றோர்களின் வழி பிறக்கும் குழந்தைக்கு இந்த செல் அனிமியா நோயினைக் கொடுக்கின்றது. சாதாரண சிவப்பு அணுக்களை ஒப்பிடும்போது இதன் வாழ்நாட்கள் குறைவு. சாதாரணமாக மனிதர்களுக்கு இரத்த சிவப்பணுக்களின் வாழ்நாட்கள் 90-120 நாட்கள் ஆகும். ஆனால் சிக்கில் செல் அனிமியா பாதிக்கப்பட்டவர்களுக்கு 10-20 நாட்களே சிவப்பணுக்களின் வாழ்நாட்கள் ஆகும்.நோயின் அறிகுறிகள்…!குழந்தைப் பருவத்தில் இருந்தே ஒருவருக்கு சிக்கெல் செல் நோய் இருக்கும். இருந்தாலும் குழந்தை பிறந்து முதல் 5-6 மாதங்களுக்கு எந்த அறிகுறியும் வெளிப்படாது. ஆரம்ப வயது அல்லது 40 வயதுகளுக்கு பிறகே வெளிப்படத் துவங்கும். ஆரம்ப அறிகுறிகளாக இரத்த சிவப்பணுக்களில் இரத்த உறைவு ஏற்படும். இரத்தசோகை மற்றும் மஞ்சள்காமாலை போன்றவை ஏற்படும். ஆனால் இவையெல்லாம் ஆரம்ப அறிகுறிகள்தான். பிற்பகுதியில் இரத்தத்திஒல் குறைந்த ஆக்ஸிஜனை வழங்குவதன் காரணமாக உடலில் எந்தவொரு பகுதியிலும் அதாவது ஒரே நேரத்தில் ஒரு இடத்திற்கும் மேல் வலியானது ஏற்படும்.New Curative Treatment for Sickle Cell Diseaseகண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கும் முறை…!கர்ப்பகாலத்தின் போது அல்லது பிறந்தவுடன் சிக்கில் செல் நோய் மிகவும் அதிகமாக கண்டறியப்படுகிறது. ஒரு நேர்மறையான குடும்ப வரலாறு இருந்தால் நீங்கள் இந்த நோயைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். சிக்கில் செல் நோயைக் கண்டறிய பின்வரும் சில சோதனைகள் செய்யப்படுகின்றன.முழுமையான இரத்த எண்ணிக்கை, ஹீமோகுளோபின் எலக்ட்ரோபோஸிஸ் மூலம் அசாதாரண ஹீமோகுளோபின் அளவை பரிசோதித்தல், மறைந்திருக்கும் தொற்றுக்களை கண்டறிய சிறுநீர் பகுப்பாய்வு, மறைந்த நிமோனியாவை கண்டறிய மார்பக எக்ஸ் கதிர்கள் சோதனை மற்றும் இரத்தம் மற்றும் எலும்பு மஜ்ஜை வழியாக உட்செலுத்துதல் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது. உடல் வெப்பநிலையைத் தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் தரப்படும் சில வலி நிவாரணிகள் மூலம் கடுமையான வலிகளைத் தடுத்துக் கொள்ளலாம்.2047ல் சிக்கில் செல் அனிமியா இல்லாத இந்தியா…!இந்தியாவை எடுத்துக்கொண்டால் இந்த நோயினால் பழங்குடியின மக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் மொத்தம் 706 விதமான பழங்குடியின மக்கள் உள்ளனர். இவர்களில் 8.6 சதவீதம் நபர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அதிக அளவு மக்கள் பாதிக்கப்பட்டு இறப்பானது ஏற்படுகிறது. எனவே மத்திய அரசு சிக்கில் செல் அனிமியாவை இந்தியாவில் இருந்து முழுமையாக விரட்டி அடிப்பதற்கான நடவடிக்கையினை எடுக்க ஆயத்தமாகியுள்ளது. முக்கியமாக பழங்குடியினக் குழைந்தைகள் இதனால் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே 2047க்குள் இந்த சிக்கில் செல் அனிமியாவை இந்தியாவில் இருந்து முற்றிலும் விரட்டி அடிப்பதற்கு சிக்கில் செல் அனிமியா எலிமினேசன் மிஷன் ஒன்றினை மத்திய அரசு துவங்கியுள்ளது.

via News J : https://ift.tt/Et92GoW
Mediaசெந்தில் பாலாஜி வழக்கில் இருவேறு தீர்ப்புகளை நீதிபதிகள் வழங்கியுள்ள நிலையில், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவர் மீது பணமோசடிவழக்கு பதிந்துள்ளது. முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் செந்தில் பாலாஜியை காப்பாற்ற அடுத்து என்ன நாடகம் ஆடப்போகிறார் ஸ்டாலின் என்பது குறித்தும் அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது நீதிபதிகள் இரு வேறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். செந்தில்பாலாஜி சட்ட விரோதமாகக் காவலில் உள்ளதாக கருதி அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வழக்கை விசாரித்த மூத்த நீதிபதி நிஷா பானு தீர்ப்பளித்துள்ளார்.அதே நேரம் வழக்கை விசாரித்த மற்றொரு நீதிபதி பரத சக்கரவர்த்தியோ, சட்டப்படியே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு இருப்பதாகவும், செந்தில்பாலாஜியை சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என கூற முடியாது என்று தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டார். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பின் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.இப்படி இருவேறு தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கின் தீர்ப்புகளை பரிசீலிக்கும் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, மூன்றாவது நீதிபதியை விசாரணைக்காக நியமிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இப்படி தீர்ப்புகள் வெளியான நிலையில், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக செந்தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிந்துள்ளது புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .காரணம், மத்திய குற்றப்பிரிவு காவல்துறை என்பது முதல்வர் ஸ்டாலினின் கீழ் இயங்கும் காவல்துறையின் மற்றொரு அங்கமாக செயல்படுவதுதான்.செந்தில் பாலாஜி உத்தமர், அவர் ஒரு அமைச்சர், அவரை எப்படி கைது செய்யலாம்? அவர் குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதால், அவர் அமைச்சரவையில் தொடர்வதில் தவறு இல்லை என்றெல்லாம் வாய்கிழிய பேசிய முதலமைச்சர் ஸ்டாலினின் கீழ் உள்ள மத்திய குற்றப்பிரிவு இன்று செந்தில்பாலாஜி மீது வழக்கு பதிவு செய்துள்ளதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ள நிலையில், தொடர்ந்து அவரை தனது அமைச்சரவையில் வைத்திருக்க அடுத்த கட்டமாக ஸ்டாலின் இன்னொரு நாடகத்தை அரங்கேற்றுவார் என்பதே அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.

via News J : https://ift.tt/tWu86J2
Mediaமதுரை மாவட்டத்தில் தொண்டர்படை சூழ நடைபெற உள்ள அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இலச்சினையானது வெளியிடப்பட்டது. இந்த  இலச்சினையை கழகத்தின் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வெளியிட்டார். உடன் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் இருந்தனர்.வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடைபெற இருக்கின்ற கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி தலைமையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற உள்ள மாநாட்டில் கர்நாடகா மாநில அதிமுக சார்பில் ஏராளம்பூர் பங்கேற்பது என முடிவெடுத்திருப்பதாக கர்நாடக மாநில அதிமுக செயலாளர் குமார் தெரிவித்துள்ளார் .கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்களின் தலைமையில் சென்னையில் உள்ள அ இ அதிமுக தலைமை கழக அலுவலகத்தில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக கர்நாடக மாநில அஇஅதிமுக மாநில செயலாளர் குமார் கலந்து கொண்டார். அதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய குமார் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 20ஆம் தேதி மதுரையில் நடக்க இருக்கின்ற பிரம்மாண்டமான எழுச்சி மாநாட்டில் கர்நாடகா மாநிலத்திலிருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வருவது என உறுதி தெரிவித்திருக்கிறார்.விடியா ஆட்சியை அகற்றுவதற்கு அந்த மாநாடு ஒரு சாட்சியாக இருக்கும் . எடப்பாடியார் தலைமையில் கர்நாடகா மாநிலத்தில் பல தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து வருகின்றனர். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைப்பது என்று கட்சியினுடைய பொதுச் செயலாளர்  எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவிப்பார். அதற்கு கர்நாடக மாநில ஆகிய அதிமுக கட்டுப்படும் அவருடைய முடிவே இறுதி முடிவு என குமார் தெரிவித்தார்மேலும் அவர் தெரிவிக்கையில் மதுரை மாநாடு மிகப் பிரமாண்டமானதாக ஒரு திருப்ப முனையை ஏற்படுத்தக் கூடிய மாநாடாக அமையும் அதில் தமிழக மக்கள் மட்டுமில்ல ஒட்டுமொத்த மக்களும் அண்ணன் எடப்பாடியார் தலைமையை ஏற்க கூடிய நிகழ்வாக அந்த மாநாடு இருக்கப்போகிறது என குமார் தெரிவித்தார்.

via News J : https://ift.tt/abS7uho
Mediaதமிழகத்தைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டிலிருந்து கல்லூரிகளில் உதவிப் பேராசியர்கள் நியமனமானது தொடர்ந்து நியமிக்கப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டில் உதவிப் பேராசிரியர்களின் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையானது 2,331 என்ற வகையில் இருந்தது. அப்போது இந்தக் காலிப் பணியிடங்களுக்கு 40,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். சரி இது ஒருபுறம் இருக்க, உதவிப் பேராசிரியர்களுக்கு தகுதியாக நெட், செட், ஸ்லெட் ஆகியத் தேர்வுகள் நடைமுறையில் இருந்தன. மேலும் பிஎச்டி முடித்திருந்தால் அதனையும் உதவிப் பேராசியர் பணிக்கு தகுதியாக கருத முடியும் என்று 2021 ஆம் ஆண்டு சொல்லப்பட்டிருந்தது.யுஜிசி விதிகளில் மாற்றம்..!UGC Will Instruct Universities To Commence Admission Process ...கல்லூரிகளில் உதவிப் பேராசரியராகப் பணியாற்ற இனி பிஎச்டியை ஒரு தகுதியாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று யுஜிசி தற்போது அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளது. மேலும் கல்லூரிகளில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்ற NET,SET,SLET தேர்வுகளில் தகுதி பெற்று இருப்பது மட்டுமே கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணியாற்ற பிஹெச்டி முடித்திருந்தால் தகுதியாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த திடீர் அறிவிப்பு பிஎச்டி முடித்தவர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. இந்நிலையில் விதிகளில் மாற்றம் செய்து NET,SET,SLET உள்ளிட்ட தகுதிகளின் அடிப்படையில் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானிய குழு தெரிவித்துள்ளது. 2021 ஆம் ஆண்டு பிஹெச்டி படிப்பு முடித்திருந்தால் உதவி பேராசிரியராக பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்ட விதியை மாற்றி தற்பொழுது பிஎச்டி படிப்பை கூடுதல் தகுதியாக சேர்த்துக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மாநில குழு அறிவித்துள்ளது.தேர்வர்களுக்கு எழுந்துள்ள சிக்கல்..!UGC NET exam from today: Reporting time, guidelines, other details | Mintகொரோனா காலக்கட்டதில் 40 முதல் 50 வயதைக் கடந்தவர்கள் உதவிப் பேராசிரியர்கள் இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போயிற்று. அவர்களுக்கு தற்போது உள்ள தலைமுறையினரோடு போட்டியிட சில அறிவார்ந்த சிரமங்களும், பின்புலமின்மையும் காரணகர்த்தாவாக போய்விட்டது. மேலும் சில தேர்வர்களின் உள்ளக் குமுறலானது, நாங்கள் எத்தனை நாட்களுக்கு தொடர்ந்து தேர்வு மட்டுமே எழுதிக்கொண்டு இருக்கப்போகிறோம். ஆசிரியர் தேர்வு வாரியம் அனைவருக்கும் ஒரே மாதிரியானத் தேர்வினை வைக்க வேண்டும். ஏனென்றால் பாடத்திட்டங்கள் ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப மாற்றம் அடைகிறது. அதற்கு ஏற்றார்போல அனைத்துத் தேர்வர்களுக்கு சரியான முறையில் சமவாய்ப்பு வழங்க வேண்டும் என்று நீண்டகாலமாக பணிக்காக காத்திருக்கும் தேர்வர்கள் கூறிவருகிறார்கள்.  முதுகலைப் படிப்பு முடித்தவுடன் உதவிப்பேராசிரியர்களுக்கான தேர்வினை வைக்கலாம் போன்ற கோரிக்கைகள் சில ஆண்டுகளுக்கு முன் எழுந்த வண்ணம் இருந்தது.ஆனால் தற்போது பல்கலைக்கழக மானியக் குழு எடுத்திருக்கும் இத்தகைய நடவடிக்கை பெரிய அளவில் உதவிப் பேராசிரியர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை என்கின்றனர் கல்வியாளர்கள்.

via News J : https://ift.tt/aBRrTVC
Mediaதமிழகமே தற்போது தக்காளி தட்டுப்பாட்டில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை நமது நெட்டிசன்கள் நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளத் தொடங்கிவிட்டனர். “ஹலோ அமலாக்கத்துறையா? இங்க ஒருத்தர் இரண்டு கிலோ தக்காளி வாங்கிட்டு போறாரு” போன்ற மீம்ஸ்கள் எல்லாம் பலே. இது நகைச்சுவையாக இருந்தாலும் ஆட்சி பீடத்தில் காலாட்டியபடி அமர்ந்து மக்கள் மீது அக்கறையற்று அதிகாரம் செலுத்தும் விடியா திமுகவிற்கு ஒரு சம்மட்டி அடிதான். ஒரு கிலோ தக்காளியானது 120 ரூபாயிலிருந்து 150 ரூபாய் வரை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் பின்னணி என்ன என்பதைக் குறித்து விளக்கமாக காண்போம்.தக்காளி விலை திடீர் உயர்வு…!தமிழர்களைப் பொறுத்தவரை அறுசுவை உணவு உண்பதில் நம்மவர்களுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. அதிலும் முக்கியமாக புளிப்புச் சுவையினை அதிகம் விரும்பி உண்ணும் வழக்கம் தமிழகத்தில்  உண்டு. ஒரு காலக்கட்டத்திற்கு பிறகு புளிப்புச் சுவைக்காக பயன்படுத்தப்பட புளியை அதிகம் பயன்படுத்துவதை விட்டுவிட்டு அதற்கு பதிலாக தக்காளியைப் பயன்படுத்த தொடங்கினார்கள். இப்படிப்பட்ட தமிழர்கள் விரும்பி உண்ணும் தக்காளியின் விலை திடீரென உயர்வதற்கு காலநிலை மாற்றமும் ஒரு காரணம் என்று சுற்றுச்சூழலியலாளர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தக்காளியின் விலை 2022 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் 66% அதிகமாக உள்ளது. அதேபோல வெங்காயம் 7.5 சதவீதமும், உருளைக்கிழங்கு 4.5 சதவீதமும், துவரம் பருப்பின் விலை கடந்த ஆண்டினை விட 7.8 சதவீதம் உயர்ந்து கிலோவிற்கு 130.75 ரூபாய் விலையை எட்டியுள்ளது. எல் நினோ அச்சுறுத்தலால், சம்பா சாகுபடி குறித்த கவலையில் தமிழக விவசாயிகள் இருந்து வருகின்றனர்.தக்காளி: விஷம் என்று ஒதுக்கப்பட்ட 'பழம்' சமையலறையில் பிரதான இடம் பிடித்த வரலாறு - BBC News தமிழ்அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் அம்மாநிலங்களிலிருந்து செய்யப்படும் தக்காளி இறக்குமதியானது பாதிக்கப்பட்டுள்ளது என்று விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர். இதில் நியாயவிலைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளி அறுபது ரூபாய்க்கு விற்பதனால் சில சிக்கல் எழும். காரணம் அரசே கர்நாடகா மற்றும் ஆந்திராவிலிருந்தும் தான் தக்காளியை இறக்குமதி செய்யும். அம்மாநிலங்களிலேயே இப்போது தக்காளியின் விலை கிலோவிற்கு 80 ரூபாய் என்ற கணக்கில் விற்கப்படுகிறது.ரிசர்வ் வங்கி ஆளுநர் கருத்து…!ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்ததாஸ் கடந்த வாரத்தில் அளித்தப் பேட்டியில், “காலநிலை மாற்றம், உள்நாட்டில் மாறுபடும் பருவமழை ஆகியவற்றைப் பொறுத்து பணவீக்கம் தீர்மானிக்கப்படும். நம் நாட்டில் பருவமழை வழக்கமாகப் பெய்யும் என எதிர்பார்ப்பு இருந்தாலும், எல் நினோ பற்றிய கவலை அதிகமாக உள்ளது. இது உணவுப்பொருள் சார்ந்த பணவீக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் உணவுப் பொருள்கள் விலை உயரும் அபாயம் ஏற்படும்” என்று பேசியிருக்கிறார்.வேளாண்துறை அமைச்சகம் என்ன செய்கிறது? தக்காளி செடிக்கு இப்படி உரத்தை கொடுத்து பாருங்க, ஒரு செடியிலேயே கொத்து கொத்தா தக்காளியை காய்க்க வைக்கலாம். வாங்க அது எப்படின்னு ...கோடைகாலத்தில் பயிர் நடவும் முறையானது தமிழகத்தைப் பொறுத்தவரை மிகவும் குறைவாக இருக்கும். அதிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும் தக்காளி பயிரிடும் பணியானது காலதாமதமாகி உள்ளது. தமிழகம் முழுவதும் பயிர் செய்யப்படும் காய்கறிகள் தொடர்பாக கண்காணித்து வருவது தோட்டக்கலைத் துறையாகும். தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் குறித்து புள்ளி விவரங்களை தோட்டக்கலைத்துறையினர் ஆண்டுதோறும் கணக்கிடுவர். இந்த ஆண்டு கணக்கிட்டார்களா இல்லையா என்று தெரியவில்லை. அப்படி கணக்கிட்டு இருந்தால் அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தகைய நிலைக்கு தக்காளியின் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்காது. வேளாண் அமைச்சகத்திற்கு கீழ் செயல்படும் தோட்டக்கலைத்துறையின் செயல்பாடுகளை துறை சார்ந்த அமைச்சரான எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் முறைப்படி கண்காணிக்கிறார என்பதே இங்கு கேள்விக்குறியாக உள்ளது. மேலும் தக்காளி மலிவாக கிடைக்கும் காலக்கட்டத்திலேயே அதற்கு மறுபயன்பாடு உணவுப்பொருளாக உள்ள வற்றலை அரசு கொள்முதல் செய்திருக்கலாம் என்று விவரம் அறிந்தவர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். ஆனால் வற்றலை மறுபயன்பாடு உணவுப்பொருளாக தோட்டக்கலைத்துறை கொண்டு வர நடவடிக்கை எடுக்காததாலும் இந்த நிலை உருவாகியுள்ளது என்று விமர்சனமும் எழுந்துள்ளது. 

via News J : https://ift.tt/mLdKIXy
Mediaமுன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டிஉயர் நீதிமன்ற மதுரை கிளையானது கலைஞர் போட்ட பிச்சை என்று அமைச்சர் எ.வா.வேலு கூறியிருப்பதற்கு முன்னால் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும் ஒரு அமைச்சர் இப்படி கூறுவதெல்லாம் நல்லதல்ல, தான் ஒரு அமைச்சராக இருப்பது மக்கள் போட்ட வாக்குகளின் பிச்சைதான் என்பதை அமைச்சர் உணர்ந்துகொள்ள வேண்டும். மேலும் இந்த ஆட்சியே மக்கள் போட்ட பிச்சைதான்.நிறைய வழக்குகள் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வருவதால் தென் மாவட்டங்களில் இருக்கக்கூடிய மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதால் உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைக்க வேண்டும் என்று குழுக்கள் அமைக்கப்பட்டது. அதன்பேரில் 15,20 மாவட்டங்களுக்கு சிரமம் ஏற்படாதவாறு உயர் நீதிமன்ற மதுரை கிளை அமைக்கப்பட்டது. மேலும் தக்காளி விலை உயர்வைப் பற்றி பேசிய அவர், தக்காளி விலை இவ்வளவு உயரம் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் ரேஷன் கடைகளில் இவர்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்வது மக்களுக்கானதல்ல. இன்னும் விலையை சற்று குறைத்து விற்க வேண்டும்.மேலும் மதுரையில் நடைபெறும்ம் மாநாடு குறித்து பேசிய அவர், வருகிற ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் மாநாடு நடைபெற உள்ளது என்பதை பற்றி தான் ஆலோசனை மேற்கொண்டோம் அதுவும் என்னுடைய மாவட்டத்தில் நடைபெற உள்ளதால் கடுமையாக அதற்கான வேலைகளை பார்க்க வேண்டும் என்று கூறினார்.

via News J : https://ift.tt/V21ta46
Mediaகடந்த ஆண்டு 2011-ம்  ஜப்பானில்  பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதில் இருந்தே மீளாத ஜப்பான் அடுத்து ஒரு பெரும் விபத்தை சந்திக்க நேர்ந்த்தது அதுதான் ’’சுனாமி பேரலை’’  ஜப்பான் நாட்டில் மட்டுமல்லாமல் உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சம்பவம் தான்  இந்த சுனாமி பேரலை.  இந்த சுனாமியானது ஜப்பான் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.  இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். ஜப்பானில் உள்ள  புகுஷிமா பகுதியில் உள்ள  அணுமின் உலை  பெருமளவு  பதிக்கப்பட்டது. டாய்ச்சி  அணு உலைக்குள் அதிக அளவு தண்ணீர் ஊடுருவியதால் மின்சார உற்பத்தி பாதிக்கபட்டது. வெப்பம் அதிகரிக்க தொடங்கியது. இதனால் காற்றில் பரவும் கதீர்வீச்சை  தடுக்கவும், வெப்பத்தை குறைக்கவும் அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்பட்டது.குறையாத தாக்கம்: ஆண்டுகள் கடந்தாலும் அதனின் தாக்கம் குறையாமல்  இன்றளவும் இருக்கிறது. என்பதற்க்கு புகிஷிமா அணுமின் உலையே  ஓர் சாட்சி. இதனை சாதகமாக பயன்படுத்திக்கொள்ள சூழ்ச்சியை கையாகிறது  ஜப்பான். அணுமின் உலையயை  முழுமையாக செயலிழக்கச் செய்யும் பணியைச் செய்து வருகிறது ஜப்பானின் டெப்கோ நிறுவனம். அணு உலையில் கதிர்வீச்சைக் குறைக்க, 12.5லட்சம் டன் லிட்டர் தண்ணீர் இதுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீர் கதிர்வீச்சுடன் கலந்து கழிவுநீராக மாறிவிடும். பின்னர் அந்தக் கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு அணு உலையிலுள்ள தொட்டிகளில் சேமித்து வைக்கப்படும். இந்தநிலையில், அடுத்த ஆண்டு இறுதிக்குள் கழிவுநீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் நிரம்பிவிடும் என்று டெப்கோ நிறுவனம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் சேமித்து வைக்கப்பட்ட கழிவுநீரை பசுபிக் பெருங்கடலில்  கலக்க முடிவு செய்து இருக்கிறது ஜப்பான் அரசு.Reconstruction in Fukushima: Nuclear Plant Treated Water Release Conforms to International Safety Standards, Experts and Locals Weigh In | JAPAN Forwardஜப்பானின் முடிவு:இது குறித்து  ஜப்பான் அரசு கூறுகையில்  புகுஷிமா அணு உலையை முழுவதுமாக செயலிழக்கச் செய்ய வேண்டுமென்றால், கழிவுநீரைக் கடலில் கலப்பதைத்தவிற வேறு வழியில்லை என்றும், கதிர்வீச்சு நிறைந்த கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னரே கடலில் கலக்கப்படும். ஐ.நா-வின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த பணி நிறைவு பெறும் என்று கூறியுள்ளது.ஜப்பானை சூலும் எதிர்புக்கள்:ஜப்பான் அரசு இரண்டு ஆண்டுக்குள் முடிவடையும் என்று கூறிய நிலையில் இன்னும் முடிவடையாமல் இந்த திட்டம் தொடர்கிறது. இது குறித்து ஜப்பான் அரசு  பரிசீலனை செய்து வந்ததற்கு  மீனவர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்புகள்  தெரிவித்தார்கள்.  எனவே சிறிது காலத்திற்கு இந்தத் திட்டத்தினை செயல்படுத்தப்படாமல் இருந்தது ஜப்பான் அரசு. தற்போது வேறு வழியில்லை என்ற நிலை வந்த பிறகே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த விரும்புவதாக ஜப்பான் தகவல் தெரிவித்திருக்கிறது.’மீனவர்களின் எதிர்ப்பு’ஜப்பான் மீன்வள கூட்டுறவு அமைப்பினர்,  இது ஜப்பானிய மீனவர்களை நசுக்கும் செயல் என்று தெரிவித்துள்ளனர். ஜப்பானைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பலரும் அரசின் இந்த முடிவுக்கு பல எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். இதனை கண்டும் காணாமலும் இருக்கிறது ஜப்பான் அரசு.  இந்த திட்டதால் பெரும் பாதிப்புகள் ஏற்படும்’ என்று கூறி பல போராட்டங்களை  சுற்று சூழல் ஆர்வலர்கள் செய்து வருகின்றனர். இந்தத் திட்டம் குறித்து அண்டை நாடுகளான தென்கொரிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்து:கழிவுநீரில் உள்ள கதீர்வீச்சு நீக்கபட்ட பிறகே கடலில் கலக்கப்படும் என்று தெரிவித்தாலும்,  அதிலிருந்து  ட்ரிட்டியத்தை  முழுமையாக  அகற்ற முடியாது என ஆர்வலர்கல் தெரிவிக்கின்றனர்.  இது எந்த அளவுக்கு  விளைவுகளை  ஏற்படுத்தும் என்று நமக்கு தெரியாது. என்றும் கூறுகிறார்கல். மேலும் பசுபிக் பெருங்கடலின் தரமும் வளமும்  மோசமடைந்த நிலயில்  பல வகை கடல் வாழ் உயிரினங்கள், கடல் பிராணிகள், அழிந்துவிட்டன. இதற்கிடையில், இந்த கழிவு நீர் கலந்தால் என்ன என்ன விளைவிகல் ஏற்படும் என்றும் பாதிப்பு எவ்வாறு ஏற்படும் என்றும் கூறுகிறார்கள் சுற்று  சூழல் ஆர்வலர்கள்.

via News J : https://ift.tt/QzyeVRN
Mediaஇந்திய கிரிக்கெட் அணியினைப் பொறுத்தவரை வலுவான அணியாக இருந்தாலும், ஏதாவது ஒரு முக்கிய கோப்பைப் போட்டிகளில் சொதப்பி விடுகின்றனர். அதற்கு அணியின் தேர்வுக்குழுவும் ஒரு காரணமாக இருப்பதால், இனி சரியான ஆட்டக்காரர்களை அணியில் தேர்வு செய்யும் பொருட்டு புதிய தேர்வுக் குழுத் தலைவரை பிசிசிஐ தற்போது நியமித்துள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் பின்னடைவு..!இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா கேப்டன் பதவியேற்றதிலிருந்து இன்னும் உலக அளவில் ஒரு கோப்பைக் கூட வெல்லவில்லை. எல்லாவற்றிலும் இறுதி அல்லது அரையிறுதி வரை சென்று வெறும் கையுடன் திரும்பும் நிலையே இந்திய அணிக்கு வாய்த்திருக்கிறது. டி20 உலகக் கோப்பைத் தோல்வி, டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தோல்வி என்று தொடர்ந்து முக்கியப் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வரும் இந்திய அணிக்கு தேர்வுக்குழுத் தலைவர் இல்லாதது மிகப் பெரிய பின்னடைவு என்று கிரிக்கெட் ஆலோசகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முக்கிய வீரர்களான பும்ரா, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல் போன்றவர்கள் காயம் காரணமாக விளையாடாமல் இருந்தது, அவர்களுக்கு பதிலாக எடுக்கப்பட்ட வீரர்கள் முக்கியப் போட்டிகளில் ரன்கள் குவிக்காமலும், விக்கெட் எடுக்காமலும் இருந்ததால் இந்திய அணியின் ஃபார்ம் ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருந்தது. கோலி, ஜடேஜா போன்ற வீரர்கள் மட்டுமே ஓரளவுக்கு சோபிக்கின்றனர்.IND vs IRE T20 Squad 2023: 1 Player From CSK, 2 From Mumbai Indians, No Representation Of 6 IPL Teamsதலைவர் ஆகிறார் அஜித் அகர்கர்..!இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருந்த சேத்தன் ஷர்மா அணித்தேர்வின் உள்விவகாரங்களை வெளியில் கசிய விட்டதால் நீக்கப்பட்டிருந்தார். அவரைத் தொடர்ந்து 5 மாதங்களுக்கு தேர்வுக்குழுத் தலைவர் பதவியானது காலியாக இருந்தது. தற்போது இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தேர்வுக்குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அசோக் மல்கோதரா தலைமையிலான கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியானது அஜித் அகர்கரிடம் நேர்காணல் நடத்தி அவரை தேர்வு செய்துள்ளது. இதனை இந்திய் கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக்கொண்டது.புதிய தேர்வுக்குழு உறுப்பினராக பொறூப்பேற்கும் அஜித் அகர்கர் மும்பையைச் சேர்ந்தவர். 45 வயதான அவர் இந்தியாவிற்காக 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 288 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 26 டெஸ்ட் மற்றும் 4 இருபது ஓவர் ஆட்டங்களிலும் ஆடியுள்ளார். இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் சதம் அடித்த ஒரே பந்துவீச்சாளர் இவர்தான். தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டிசிற்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டியில் விளையாட உள்ளது. அதற்கான அணியைத் தேர்வு செய்யும் பொறுப்பு அஜித் அகர்கரிடம் தரப்பட்டுள்ளது. மேலும் இவரைத் தவிர ஷிவ் சுந்தர் தாஸ், சலில் அங்கோலா, சுப்ரதோ பானர்ஜி, எஸ்.ஷரத் ஆகியோர் மற்ற தேர்வுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.

via News J : https://ift.tt/rSDtJvh
Mediaதக்காளி விலையைத் தொடர்ந்து காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால், கொந்தளிப்பில் உள்ள இல்லத்தரசிகளின் வயித்தெரிச்சலை வாங்கிக்கட்டிக்கொள்கிறதா விடியா அரசு என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.விண்ணை முட்டும் விலைவாசி என்பதை இன்று தமிழகத்தில் ஒவ்வொரு இல்லத்தரசிகளும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ராக்கெட் வேகத்தில் விலை ஏறிக் கொண்டிருக்கும் தக்காளியை, இரும்பு பெட்டிக்குள் பூட்டி வைத்து பத்திரப்படுத்துவதாக வெளியாகும் நகைப்பு வீடியோ காட்சிகள் எல்லாம் இந்த விடியா அரசில் விலைவாசி கட்டுப்படுத்தப்படவில்லை என்பதையே அம்பலப்படுத்துகிறது.கடந்த மே மாதம் கூட 6கிலோ 100 ரூபாய் என்று கூவி கூவி விற்கப்பட்ட தக்காளியின் விலை இன்று சதத்தை தாண்டி ஒவ்வொரு வீட்டின் சமையல் கூடத்தையும் திண்டாட வைத்திருக்கிறது.நாங்கள் 60 ரூபாய்க்கு ஒருகிலோ தக்காளி தருகிறோம்… ரேசன்கடையில் தக்காளி விற்கிறோம் என்றெல்லாம் அரசு பம்மாத்து வேலையைக் காட்டினாலும், இல்லத்தரசிகளுக்கு சமையலுக்கான தக்காளி கிடைப்பது என்பது குதிரைக் கொம்பாகி உள்ளது.இப்படி தக்காளியின் விலை உயர்வால் கவலையில் தவிக்கும் தமிழக தாய்மார்களுக்கு மேலும் பேரிடியாக அடுத்தடுத்து காய்கறிகள், மளிகைப் பொருட்கள், எண்ணெய் வகைகளின் விலையும் அதிகரித்துள்ளது. கடந்த 2021 மார்ச்சில் கிலோ 20ரூபாய்க்கு விற்கப்பட்ட அவரைக்காய், இன்றைக்கு 60க்கு விற்கப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கிலோ ரூ.30க்கு கிடைத்த பீன்ஸின் இன்றைய விலை 110. 5 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெண்டைக்காய் இன்றைக்கு 50 ரூபாய்.இதுபோதாதென்று, பருப்பு, பட்டாணி மற்றும் பயறு வகைகளின் விலையும் உயர்ந்திருக்கிறது. சமீபத்தில் எண்ணெய் விலையும் உயர்வை சந்தித்திருக்கிறது. இப்படி பொதுமக்கள் அன்றாடம் பயன்படுத்தும் சமையல் பொருட்களின் விலை பல மடங்காக உயர்ந்திருக்கும் நிலையில், விலைவாசியைக் கட்டுப்படுத்த தவறிய திமுக அரசு மௌனித்து நிற்கிறது….ஆட்சிக்கு வந்தால் விலைவாசி கட்டுக்குள் வைத்திருப்போம் என்றெல்லாம் கம்பி கட்டும் கதை கட்டியவர்களின் ஆட்சியில் விலைவாசி உயர்வு பூதாகாரமாகி உள்ளது.இப்படி மக்களின் அன்றாட வாழ்க்கையை அல்லாட வைக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தாமல் ஆட்சியைக் காப்பாற்ற செந்தில்பாலாஜியை பாதுகாப்பதிலும், வாரிசு நடித்த மாமன்னனைப் பார்ப்பதிலும், அக்கறை காட்டி வருகிறார் ஸ்டாலின்.அதிகரிக்கும் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஸ்டாலின் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், விலைவாசி உயர்வால் கொந்தளிப்பில் உள்ள இல்லத்தரசிகளின் வயிற்றெரிச்சலை விடியா அரசு வாங்கிக் கட்டிகொண்டுள்ளது. அது வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

via News J : https://ift.tt/bh9LCFq
Mediaஅமைச்சர் செந்தில்பாலாஜி சொத்துகுவிப்பு வழக்கில் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக கைது செய்ததாக ஆட்கொண்டர்வு மனுவனாது அவரது மனைவியின் பேரில் தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிபதிகள் நேற்று முன் தினம் இரண்டு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து தற்போது அவ்வழக்கை விசாரிக்க மூன்றாவது நீதிபதியாக சி.வி.கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.நீதிபதிகளின் இருவேறு தீர்ப்புகள்..!அமலாக்கத்துறை அதிகாரிகளால் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகவும், அவரை உடனடியாக விடுவிக்கும் பொருட்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் விசாரித்தனர். ஒருவர் நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி மற்றொருவர் ஜெ.நிஷா பானு ஆகும். இந்த வழக்குத் தொடர்பான தீர்ப்பினை நேற்று முன் தினம் அவர்கள் விசாரித்து தீர்ப்பினை வழங்கினார்கள். அப்போது இரு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். இதனால் நீதிமன்றத்தில் குழப்பம் நீடித்தது.Mediaநீதிபதி நிஷா பானு…!நீதிபதி நிஷா பானு அமலாக்கத்துறையினர் செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என்றும் அவரை நீதிமன்ற காவலில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பினை வழங்கினார்.நீதிபதி  டி.பரத சக்கரவர்த்தி..!நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பானது நீதிபதி நிஷா பானுவிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. ”செந்தில்பாலஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததில் எந்த சட்ட விரோதமும் இல்லை. அவர் 10 நாட்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறலாம். அதற்கு மேலும் சிகிச்சை தேவைப்பட்டால் சிறையில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் தான் சிகிச்சை பெற வேண்டும்” என்றூ கூறி ஆட்கொணர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.3 வது நீதிபதி சி.வி. கார்த்திகேயன்..!செந்தில் பாலாஜி வழக்கில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவைப் பிறப்பித்ததால் நடவடிக்கை எடுக்கமுடியாமல் இழுபறி தொடர்ந்து வருகிறது. எனவே இரண்டு நீதிபதிகளைத் தவிர மூன்றாவது நீதிபதியாக ஒருவரை நியமிக்கும்படி தலைமை நீதிபதிக்கு வழக்கினை மேற்கொண்ட இரண்டு நீதிபதிகளும் பரிந்துரை செய்தனர். இதன் அடிப்படையில் தலைமை நீதிபதி, இந்த வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயனை நியமித்து உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜியின் மீதான ஆட்கொணர்வு மனுவை வியாழக்கிழமையான இன்று பிற்பகல் 2: 15 மணிக்கு விசாரிக்கிறார்.

via News J : https://ift.tt/9KVX42g
Mediaதமிழ்நாட்டின் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவர் சக மாணவரின் குடிநீரில் பூச்சிக்கொல்லிஅயி கலந்ததாக வெளியான செய்திதான் பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சி அளித்த வண்ணம் உள்ளது. இந்த சம்பவமானது சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் நிகழ்ந்திருக்கிறது. என்ன நடந்தது…!அதாவது வீட்டுப்பாடத்தினை முடிக்காத இரு மாணவர்களை வகுப்பில் லீடராக உள்ள மாணவர் ஆசிரியரிடம், இரு மாணவர்களும் வீட்டுப்பாடத்தை முடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அம்மாணவர்கள், வகுப்பு லீடர் குடிக்கின்ற தண்ணீர் பாட்டிலில் பூச்சி மருந்தினைக் கலந்துள்ளார்கள். முதலில் தண்ணீரைக் குடித்த வகுப்பு லீடர் தண்ணீரின் சுவை வேறுமாதிரி உள்ளது என்பதை உணர்ந்து துப்பியுள்ளார். பின்னர் அருகிருந்த சக மாணவருக்கு தண்ணீரை பகிர்ந்திருக்கிறார். அந்த மாணவருக்கும் தண்ணீரின் சுவை வேறுமாதிரி இருந்துள்ளதால் நீரைத் துப்பியுள்ளார்.  இரண்டு மாணவர்களும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உடல்நலம் தேறி வருகிறார்கள்.தவறு செய்த இரண்டு மாணவர்களும் வகுப்பு லீடருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுத்த வேண்டும் என்றுதான்நினைத்திருந்ததாகவும் அதற்கான மாத்திரை ஏதும் கிடைக்கவில்லை என்பதால் விவசாய நிலத்தில் அடிக்கும் பூச்சிக்கொள்ளி மருத்தினை எடுத்து வந்துவிட்டோம் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இந்த விசயம் இவ்வளவு அபாயகரமாக மாறும் என்று எங்களுக்குத் தெரியாது என்றும் கூறியுள்ளனர். ஆனால் என்ன செய்ய தவறு இழைத்தவர்கள் அதற்கான தண்டைனையைப் பெற்றுத்தானே ஆகவேண்டும். தவறு செய்த சிறுவர் இருவருக்கும் ஐபிசி செக்‌ஷன் 328-ன் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.JJ Act | Child Cannot Be Automatically Tried As An Adult Even If It Commits Heinous Crime: Bombay High Courtஐபிசி 328…!இந்திய தண்டனைச் சட்டம் 328- சொல்வது என்னவென்றால் போதைப்பொருள் அல்லது விஷம் போன்றவற்றால் சக மனிதருக்கு காயம் ஏற்படுத்துவதோ உயிருக்கு ஆபத்து விளைப்பதோ ஆகியவை சட்டப்படி குற்றமாகும். இந்தக் குற்றத்தில் ஈடுபடும் ஒருவருக்கு பத்தாண்டு கால சிறை தண்டனையும், கூடுதலாக அபராதமும் விதிக்கப்படும். தற்போது இந்த இரு சிறார்களும் இந்தத் தண்டனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தன் வருங்கால வாழ்வை இழந்து கேள்விக்குள்ளாகியுள்ளனர்.மாணவர்களின் உளவியல் சிக்கல்..!இது மாதிரியான சிறார் குற்றங்கள் முதலிலேயே கண்டுகொண்டு களைந்திருக்க வேண்டியது இந்த ஒட்டுமொத்த சமூகத்தின் கடமையாகும். கால வெள்ளத்தில் பிஞ்சுக் குழந்தைகளாக இருக்கும் நமக்குள் வளர வளர எதோ ஒரு குரூர எண்ணமும் பழிவாங்கும் உணர்ச்சியும் வன்மமும் ஆழ்மனதில் வந்துகொண்டே இருக்கும். இது நிரந்தரமான உணர்வுகளா அல்லது தற்காலிகமாக இருக்குமா என்பது அந்தந்த மனிதர்களுக்கே வெளிச்சம். ஏன் ஒரு நபர் சிறு பிள்ளையாக இருக்கும்போதே குரூர மனநிலையில் இருக்கிறார் என்றால் அதற்கு பெற்றோர்களே காரணகர்த்தாவாக அமைகிறார்கள். நம் வருங்காலத்தை சிறப்பாக பேணி நல்முறைபடுத்தும் பண்பை பெற்றோர்களே வகுத்துக் கொடுக்க வேண்டிய சமுதாய கடமையில் உள்ளனர். ஆனால் அவர்கள் அதை செய்ய தவறும் பட்சத்தில் தீங்குகள் விளைகின்றன. பிறகு வழிகாட்டியாக இருக்க வேண்டிய ஆசிரியர்கள் பங்கு இதில் மிகவும் குறிப்பிடத்தக்கது. பெற்றோர்களால் முறையாக பேணப்படாத குழந்தைகள், ஆசிரியர்களால் நல்வழிப்படுத்தப்படுவர். ஆனால் ஆசிரியர்களும் பெரிதாக மாணவர்களை கண்டுகொள்ளவில்லை என்றால் குற்றங்கள் பெருகத்தான் செய்யும்.ஒன்றே ஒன்றுதான் இவ்வுலகை வன்முறையில்லாமல் கட்டமைக்கும். அது கட்டுப்பாடற்ற அன்பு. சக மனிதனை மனிதனாக நடத்தும் பண்பும், அவர்களுக்கு நாம் தரும் உரிய மரியாதையும் மாண்பும், நிபந்தனையற்ற அன்பும் அரவணைப்பும் ஒருவனை இவ்வுலகின் தூயனாக மாற்ற முடியும். அதற்கான அடித்தளத்தை பிஞ்சில் இருந்தே விதைப்பது இச்சமூகத்தின் கடமை. 

via News J : https://ift.tt/wNTsFJS
Mediaஇந்தியாவில் மட்டுமல்லாமல் உலகெங்கும் மக்கள் தொகை எண்ணிக்கை  என்பது பெரும் பிரச்சனையாக உள்ளது.  இந்த வரிசையில்  ஜப்பான்  நாடு மிகவும் பின்தங்கி உள்ளது. ஏனெனில் அந்நாட்டில்  குழந்தைகள் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையானது 1 கோடிக்கும் குறைவாக உள்ளதாக அந்நாட்டு அரசு புள்ளிவிவரங்களை  வெளியிட்டு உள்ளது.டோக்கியோ:ஜப்பான் அரசானது  1986 ஆம் ஆண்டு முதல் ஆண்டு தோறும் குழந்தைகள் உள்ள குடும்பங்களின்  எண்ணிக்கை  குறித்து  புள்ளிவிவரங்களை சேகரித்து வருகிறது.   இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு 2022-ல் கணக்கெடுப்பின் படி குழந்தைகளின் எண்ணிக்கையானது  1 கோடிக்கும் குறைவாக குறைந்து உள்ளதாக ஜப்பான் சுகாதார மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சகம்  தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ’முதன்முறையாக’ குழந்தைகளின்  எண்ணிக்கை 1 கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது எனவும். 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுடன் கூடிய குடும்பங்களின் எண்ணிக்கை 9.9 மில்லியனாகவும் உள்ளதாக தெரிவித்தது. இந்த கணகெடுப்பை 2019-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில்  3.4 சதவீதம் குறைவாக உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்து உள்ளது. புள்ளிவிவரங்கள்:ஜப்பானில் 49.2 சதவீத வீடுகளில் ஒரே ஒரு குழந்தையும், 38 சதவீத வீடுகளில் 2 குழந்தைகளும், 12.7 சதவீத வீடுகளில் 3 அல்லது அதற்கும் மேற்பட்ட குழந்தைகளும் உள்ளதாக  புள்ளிவிவர அடிப்படயில் கூறப்படுகிறது.  1899 ஆண்டுக்கு பின்னர், 2022-ல் குழந்தைகளின் எண்ணிக்கை சுமார் 6 லட்சத்திற்கும் மேலாக குறைவாக உள்ளதாக ஜப்பான் அரசு தெரிவிக்கிறது.  இதுகுறித்து அந்நாட்டு பிரதமர் ஃபுமியோ கிஷிடோ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன் முடிவில் அந்நாட்டு அரசு கடந்த ஜூன் மாதம் குழந்தை வளர்ப்பு விகிதத்தை சரிவில் இருந்து மீட்டெடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்தது.அப்போது, பிரதமர் ஃபுமியோ கிஷிடாவின் அதிகாரிகளில் ஒருவரான மசாகோ மோரி கூறுகையில், “நாட்டில் பிறப்பு விகிதம் இதேபோல் குறைந்துகொண்டே இருந்தால் இன்னும் சில காலத்தில் ஜப்பான் என்ற  ஓரு நாடு ஆசிய கண்டத்திலேயே இல்லாமல் போய்விடும் என்று தெரிவித்தார். இந்த மாதிரியான சூழ்நிலையை இனிவரும்  காலங்களில் நடக்காதவாறு தடுக்க வேண்டும் என்று, மேலும் இதனை தடுக்க  நம்மால் மட்டுமே முடியும் என்றும் கூறினார்.  இதற்கு மக்கள் மட்டுமே உதவ முடியும். இந்தப் பேரழிவை ஏற்படுத்தும் போக்கை அவர்கள் மட்டுமே சரி செய்ய முடியும்.  ஏனெனில், ஜப்பான் நாட்டின்  குழந்தைகளின் பிறப்பு விகிதம் என்பது படிப்படியாக குறையவில்லை. ஒரே ஆண்டில் கனவில் கூட நினைத்து பார்க்காதவாறு  தலைகீழாக சரிந்து உள்ளது. இது போன்ற சரிவை வரும் காலங்களிள்  ஜப்பான் எதிர்கொள்ளாதவாறு நாம் பார்த்துகொள்ள வேண்டும். இந்த நிலமை நீடித்தால் ஜப்பன் நாட்டு மக்களின் வாழ்வாதரம் பாதிக்கப்படும் என்றும் இது சமூகத்தை சுருக்கி செயல்பட ஆரம்பிக்கும் நிலை வந்துவிடும் என்றும் அவர் தெரிவித்தார்.          

via News J : https://ift.tt/alecRYb