Mediaஅமலாக்கத்துறையின் கஷ்டடயில் இருந்து மருத்துவ சிகிச்சை மேற்கொண்டிருந்த செந்தில்பாலாஜி இன்றூ காவேரி மருத்துவமனையில் இருந்து காணொளி காட்சி மூலம் நீதிபதிகளின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி விசாரிக்கத் தொடங்கினார். எப்படி இருக்கிறீர்கள் என்று நீதிபதி கேட்ட கேள்விக்கு, வலியுடன் இருப்பதாக செந்தில்பாலாஜி பதில் அளித்துள்ளார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலானது இன்று முடிவடைய உள்ள நிலையில் இன்று மீண்டும் ஆஜர் படுத்தினார்கள். அதனைத் தொடர்ந்து ஜூலை 12 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலானது செந்தில் பாலாஜிக்கு நீடிப்பு செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.முன்னதாக ஐசியுவில் இருந்த செந்தில்பாலாஜியை கணொளி மூலம் இணைப்பதற்கு மிகவும் தாமதமானது என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஐசியுவிலிருந்து ஜெனரல் வாடிற்கு மாற்றப்பட்டிருப்பதால் உடனடியாக தொழில்நுட்பங்களை பயன்படுத்த முடியவில்லை என்று மருத்துவமனைத் தரப்பு பதில் கூறியது.
via News J : https://ift.tt/P6xmpge
via News J : https://ift.tt/P6xmpge
Mediaதமிழக காங்கிரஸ் கட்சி தலைவரை நியமிக்க திமுக அழுத்தம் தரும் சூழலில், டெல்லிக்கு விரைந்திருக்கிறார் காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி. தன் கட்சியில் இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்களை தீர்க்க வழியின்றி இருக்கும் திமுக, தமிழக காங்கிரஸ் கட்சியை ஆக்கிரமிக்கப்பார்க்கிறதா என்று அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.காங்கிரஸ் என்ற ஒரு கட்சி இருந்ததாகவும், அந்த கட்சி ஒருகாலத்தில் தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்ததாகவும் வரலாற்று செப்பேடுகளில் தேடும்அளவுக்குத்தான் இருக்கிறது அக்கட்சியின் செயல்பாடுகள்… ஒவ்வொரு தேர்தலிலும் மாநிலக்கட்சியோடு சேர்ந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று முட்டிமோதி சில சீட்டுக்களைப் பிடித்துவிடுவதே குதிரைக்கொம்பாக இருக்கிறது.வழக்கமாக 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சியின் தலைமையை மாற்ற வேண்டும் என்ற விதி இருந்தும் 5 ஆண்டுகளாகத் தலைவராக தொடர்ந்து கொண்டிருக்கிறார் கே.எஸ். அழகிரி… ஓஓஓஒ அவ்வளவு நன்றாக கட்சியைப் பார்த்துக்கொள்கிறாரா என்று எண்ணுவதா? அல்லது, தலைமைக்கு தகுதியானவர்கள் யாருமே இல்லாததால் மாற்றவில்லையா? இல்லை, மாற்றினால் ஏற்கனவே இருக்கும் கோஷ்டிகள் இன்னுமின்னும் அதிகமாயிடும் என்று பயந்துவிட்டதா டெல்லி தலைமை என்றெல்லாம் எண்ணங்கள் மேலெழுகின்றன…கடந்த நவம்பர் மாதம், சத்ய மூர்த்தி பவனா இல்ல சண்டை போடுற பவனா என்று கேட்குமளவுக்கு அடிதடி, ரத்தம் ரணகளம்….சண்டை, சட்டைக் கிழிப்பு, சஸ்பெண்ட்…. என்று கலவர பூமியாகவே மாறிப்போய் இருந்தது காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம்… இத்தனைக்கும் அக்கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி அலுவலகத்தில் இருக்கும்போதே இத்தனை பஞ்சாயத்துக்களும் நடந்திருக்கிறது என்றால், யாரை சொல்லி என்ன செய்ய?அவர் வேண்டாம் இன்று இவர், இவர் வேண்டாம் என்று அவர் என ஒட்டுமொத்த கட்சியும் கோஷ்டிப்பூசலால் உருண்டுகொண்டிருக்க, குழம்பிய குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறது திமுக…. அடுத்த கட்சி விவகாரத்தில் பாஜக தலையிட்டு வருவதாக வாய்கிழிய பேசும் திமுக, தற்போது, தமிழக காங்கிரஸ் கமிட்டிக்கான புதிய தலைவரை நியமிக்க காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அந்தத்தலைவர் திமுக சொல்வதை கேட்க வேண்டும் என்றும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக ஒதுக்கும் சீட்டுகளை வாங்கிக்கொண்டு கப்சுப் என்று செல்லும் ஒரு நபராகத்தான் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகளையெல்லாம் போட்டிருப்பதாகவும் தகவல்கள் கசிந்திருக்கிறது… ஏற்கனவே, ஈரோடு இடைத்தேர்தலில் ஈவிகேஸ் இளங்கோவன் தான் வேட்பாளர் என்று உத்தரவிட்டதில் தொடங்கி, தற்போது உட்கட்சி விவகாரத்திலும் மூக்கை நுழைக்கத்தொடங்கிவிட்டது திமுக. இதனாலேயே தற்போதைய தலைவர் பதவியை தற்காத்துக்கொள்ள டெல்லிக்கு பறந்திருக்கிறார் கே.எஸ். அழகிரி…இப்படிப்பட்ட சூழலில், காங்கிரஸின் உட்கட்சி விவகாரங்களில் திமுக தலையிடுவதால், அவர்களது கூட்டணியிலும் இது பிரதிபலிக்குமா? எழுவர் விடுதலையில் தங்கள் கொள்கைக்கு முரணாக செயல்பட்ட திமுகவை கண்டிக்கக்கூட திராணியில்லாமல் மௌனப் போராட்டம் செய்து வாய்மூடி இருந்தது ஏன்? அவரவர்களின் உட்கட்சி விவகாரத்தில் கூட்டணிக்கட்சி வந்து பஞ்சாயத்து செய்யுமளவுக்குத்தான் இருக்கிறதா காங்கிரஸ் கட்சியின் நிலை? தன் கட்சியில் இருக்கும் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துக்களை தீர்க்க வழியின்றி தவிக்கும் திமுக, தமிழக காங்கிரஸ் கட்சியை ஆக்கிரமிக்கத் துடிப்பதை தடுத்து நிறுத்த முன்வருமா தமிழக காங்கிரஸ் கமிட்டி என்பதுதான் அக்கட்சித்தொண்டர்களின் கேள்வியே.
via News J : https://ift.tt/yvktxTM
via News J : https://ift.tt/yvktxTM
Mediaபக்ரீத் பண்டிகையையொட்டி சென்னையில் உள்ள மசூதிகளில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். புத்தாடை அணிந்தும், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி பக்ரீத் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படக்கூடிய ஈகைத் திருநாளாம் பக்ரீத் பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை மண்ணடியில் உள்ள டான் பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பக்ரீத் பண்டிகையில் 2500 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.பகுதி பக்ரீத் பண்டிகை என்பது இறைவனின் தூதராக கருதப்படக் கூடிய இப்ராகினின் தியாகத்தை போற்றும் வகையில் இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது அந்த வகையிலே காலை 6:00 மணி முதல் இஸ்லாமியர்கள் புத்தாண்டு அணிந்து இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் கட்டி தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.தொடர்ந்து பெண்கள் ,சிறுவர்கள் தொழுகையில் ஈடுபட்டனர் அதில் சகோதரத்துவையும் ,மத நல்லிணக்கத்தையும் ஊக்கும் விக்கும் விதத்தில் இந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையில் நாங்கள் பிரார்த்தனை செய்ததாக இஸ்லாமியர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.இதனை தொடர்ந்து பிராணிகளை பலியிட்டு மூன்று பங்குகளாக பிரித்து ஒரு பங்கை நண்பர்கள் உறவினர்களுக்கும், ஏழை எளியோர்களுக்கும், மற்றொரு பங்கை தங்களுக்கும் வைத்துக் கொள்ளக்கூடிய நிகழ்வாக இந்த பக்ரீத் பண்டிகை அமைந்திருக்கிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் பக்ரித் பண்டிகைகையொட்டி இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் கட்டி தழுவி சிறப்புத் தொழுகையில் Shashank பக்ரீத் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர்.
via News J : https://ift.tt/8ZslPvn
via News J : https://ift.tt/8ZslPvn
Mediaஆய்வு என்ற பெயரில் குவாரிகளை மூடி வரும் விடியா அரசு, குவாரி உரிமையாளர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டி உள்ளார்.விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கல்குவாரிகளின் வேலை நிறுத்தத்தால் அத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.மேலும் தமிழகத்திலிருந்து கேரளா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதாகவும் இதனை தடுக்காமல் விடியா அரசு, குவாரி உரிமையாளர்களை மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.ஆய்வு என்ற பெயரில் தற்போது குவாரிகள் மூடப்படுவதாக குற்றம்சாட்டிய அவர், தொழில் செய்ய முடியாத அளவுக்கு கடுமையான வாய்மொழி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன எனவும் தமிழக அரசின் இந்த நடவடிக்கையால் ஏராளமான குவாரி உரிமையாளர்களும், தொழிலாளர்களும் பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.தமிழக அரசு, குவாரி தொடர்பான சட்டங்களை எளிமையாக்க வேண்டும் என வலியுறுத்திய அதிமுக எம்பி சி.வி.சண்முகம், குறிப்பிட்ட சிறுகுறு தொழிலாளர்கள் மீது விடியா அரசு பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காட்டமாக தெரிவித்தார்.தவறான அதிகாரியின் பேராசையால், குவாரி தொழில் தற்போது அழிந்து வருகிறது என்றும் பலருக்கு வேலை வாய்ப்பு தரும் இந்த தொழிலை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் இந்த தொழில் செய்யும் தொலாளிகளை பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
via News J : https://ift.tt/BD8ez4s
via News J : https://ift.tt/BD8ez4s
Media2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் மதுரையில் மெட்ரோ அமைக்கப்படும் என்றும் அதற்காக 8500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து மெட்ரோ அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த மெட்ரோ ரயில் திட்டத்தினைப் பற்றி எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், மெட்ரோ ரயில் திட்டத்தில் மாசி வீதிகளில் பாரம்பரியமிக்க தேரோட்டம் நடைபெறும் இடங்களில் இடையூறு இல்லாமல் செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.யானைக்கல் முதல் பெரியார் வரை உயர்மட்ட மேம்பாலமும், மெட்ரோ ரயில் திட்டமும் ஒரே இடத்தில் வருவதால் குழப்பம் நிலவுகிறது என்றும் இதற்கு தமிழக அரசு உரிய விளக்கங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் ஆர்.பி. உதயகுமார் அறிக்கை விடுத்துள்ளார்.
via News J : https://ift.tt/Fy3AeYN
via News J : https://ift.tt/Fy3AeYN
Mediaதமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக தற்போது வரை இருந்து வந்த இறையன்புவின் பதவிக்காலம் முடிவும் தருவாயில் உள்ளது. அதனையொட்டி அடுத்த தலைமைச் செயலாளர் யாராக இருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. மிகவும் பரபரப்பாக அடுத்த செயலாளருக்கான தேர்வுகுறித்து அனைவருக்கும் ஒரு பூரிப்பு இருந்தது. அதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது.தமிழக தலைமைச் செயலாளராக பணியாற்றி வந்த இறையன்பு பதவிக்காலம் முடிந்ததை அடுத்து. நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்கல் துறை செயலாளராக பணியாற்றி வரும் சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாராக பணி நியமனம் செய்துள்ளது தமிழக அரசு.
via News J : https://ift.tt/syG9rhH
via News J : https://ift.tt/syG9rhH
Mediaதமிழக காவல்துறையாக டிஜிபியாக இருந்த சைலேந்திரபாபு தற்போது பதவிகாலம் முடிந்து டிஎன்பிஎஸ்சி தலைவராக ஆக உள்ளார்.அதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமிக்கப்படுள்ளார்.சென்னை மாநகர காவல் துறை ஆணையராக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் தமிழகத்தின் புதிய காவல்துறை டிஜிபியாக பணி நியமனம் செய்து இன்றைக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இனி தமிழகத்தின் சட்ட ஒழுங்கு டிஜிபியாக சங்கர் ஜிவாலே தொடர்வார்.
via News J : https://ift.tt/YkG9Zmu
via News J : https://ift.tt/YkG9Zmu
Mediaஎதிர்க்கட்சியாக இருந்தபோது கெட்டதைக் கூட தைரியமாக செய்தோம், ஆளுங்கட்சியானவுடன் நல்லதை செய்ய பயமாக உள்ளதாக சொல்லி முதல்வர் ஸ்டாலின் ஒப்புக்கொண்டது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.“எதிர்க்கட்சியாக இருந்த போது கெட்டதைக் கூட தைரியமாக செய்தோம்”:
“ஆளுங்கட்சியானவுடன் நல்லதை செய்ய பயமாக உள்ளது”
ஒப்புக்கொண்ட முதல்வர் ஸ்டாலின்ஸ்டாலின் செய்த கெட்டவை என்ன?
செய்வதற்கு அஞ்சும் நல்லவை என்ன?திருமணத்திற்குச் சென்று மணமக்களை வாழ்த்தி பேச மைக்கை பிடித்த முதல்வர் ஸ்டாலினிடம் ”நீங்க எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும் தலைவரே” என்று அமைச்சர் காந்தி கூறியதை கேட்ட பின் அதனை அப்படியே மேடையில சொல்லிவிட்டு, சிரிச்சுட்டே இருக்குற மாதிரி நீங்க நடந்துக்கனும்… அதுதான் நான் உங்களுக்கு வைக்குற வேண்டுகோள் என்று புலம்பி இருக்கிறார்..திமுக செயற்குழு கூட்டத்தில் எனக்கு தூக்கமே வரவில்லை, என்னை தூங்கவிடாமல் செய்கின்றனர் என்று கட்சி நிர்வாகிகளையும், அமைச்சர்களையும் பற்றி புலம்பியதன் தொடர்ச்சிதான் இது… தயவு செய்து நான் சிரிப்பது மாதிரி நடந்துகொள்ளுங்கள் என்று ஸ்டாலின் மறைமுகமாக தொண்டர்களுக்கும் அமைச்சர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து இருப்பதாகவே இதனை பார்க்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.ஆனால் அன்று தனக்கு தூக்கிமில்லை என்று ஸ்டாலின் புலம்பியதை உடன்பிறப்புகள் கைதட்டி சிரித்து ரசித்தது போல இன்றும் சிரித்து சில்லறையை சிதறவிட்டனர். இதனை பார்த்த பின் முதல்வர் ஸ்டாலின் சிரித்தது, இதைக்கூட புரிந்து கொள்ள முடியாதவர்களாக உபிக்கள் உள்ளதை நினைத்து மன உளைச்சலில் ஸ்டாலின் உள்ளார் என்பது தெளிவாகிறது என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….இந்த நிகழ்ச்சியில் இதற்கு பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசியதுதான் ஹைலைட்டே!…. எதிர்கட்சியாக இருக்கும் போது தப்பைக்கூட தைரியமா செய்தோம்…ஆனால், தற்போது ஆளுங்கட்சி ஆனவுடன் நல்லதை செய்ய யோசித்து யோசித்து தயங்கி செய்யவேண்டி இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலமே அளித்திருக்கிறார்..அட, நம்ம முதல்வர் ரொம்பபபபப நல்லவருப்பாஆஆஆஆ…. இவ்வளோ உண்மையா பேசுறாரே… என்று கல்யாணத்தை காண வந்தவர்களெல்லாம் பூரிப்படைந்தனர்… இப்படி, தன்னைப்பற்றியும் தன் கட்சியை பற்றியும் வெளிப்படையாகப் பேசி, சமூக வலைதளங்களில் கண்டெண்ட் ஆகியிருக்கிறார் நம்ம முதல்வர்….இணையத்தில் இது தொடர்பாக வீடியோ மற்றும் வெப் கார்டுகள் வைரலாகிய சிறிது நேரத்தில் முதல்வர் ஸ்டாலினின் யூடியூப் சேனல், அவரின் டிவிட்டர் பக்கம் என்று எல்லா சமூக வலைதளங்களிலும் அவர் புலம்பிய சில முக்கிய வரிகள் மட்டும் காணாமல் போய் இருக்கிறது…எதிர்க்கட்சியாக இருந்தபோது தப்பைக்கூட தைரியமா செய்தோம் என்று கூறியிருப்பதன் மூலம், 2021க்கு முன்னர் திமுக செய்த தவறுகளை தானே ஒப்புக்கொள்கிறாரா ஸ்டாலின்? அவர் செய்த தவறுகள் என்னென்ன? எதைப் பற்றி கூறி இருக்கிறார்? அன்று கலவரத்தை தூண்டும் விதமாக பேசியதைப் பற்றி நினைவு கூர்ந்தாரா? அல்லது அன்று ஆட்சியில் இருந்த அதிமுக மீது அவதூறு கிளப்பிவிட்டதை நினைத்து கூறினாரா?…தற்போது நல்லது செய்ய அச்சமாக இருக்கிறது என்று கூறுவதன் மூலம், மக்களுக்கு நல்லது செய்ய, யாரைக்கண்டு, எதற்காக, ஏன் பயப்படுகிறார் ஸ்டாலின்? என்ற கேள்விகளெல்லாம் இனி எழும்… அதை எப்படி சமாளிப்பதென்று தெரியாமல் மீண்டும் தூக்கமின்றி தவிக்கப்போகிறார் ஸ்டாலின் என்பது மட்டும் உறுதி.
via News J : https://ift.tt/TUHiNLj

<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/06/eps-2.jpg">Media</a>தென்னை விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் கண்டனம்தேங்காய், கொப்பரை, தென்னை நார் பொருட்களின் கடும் விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டு சிரமத்தில் இருக்கும் விவசாயிகள்இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கடந்த இரண்டு ஆண்டுகால திறமையற்ற, கையாலாகாத விடியா திமுக அரசின்
தவறான கொள்கைகளால் வேளாண் தொழில் நலிவடைந்துள்ளது. வேளாண் துறைக்கு
தனி பட்ஜெட் என்று மக்களை திசை திருப்பும் இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசு,
விவசாயம் தொடர்பான தொழில்களைக் காக்க எவ்வித முறையான நடவடிக்கையும்
எடுக்காது வேளாண் பெருமக்களை ஏமாற்றி வருகிறது. குறிப்பாக, தென்னை
விவசாயிகள் விடியா திமுக ஆட்சியில் வாழ்விழந்து நிற்கும் அவலம் தமிழகத்தின்
சாபக்கேடாகும்.தமிழகத்தில் பொள்ளாச்சி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, தேனி, நத்தம்,
உடுமலைப்பேட்டை போன்ற 40 சட்டமன்றத் தொகுதிகளிலும் தென்னை விவசாயம்தான்பிரதான தொழிலாகும். சுமார் 15 லட்சம் ஏக்கரில் தென்னை பயிரிடப்பட்டுள்ளது. சுமார் 7 லட்சம் விவசாயிகள் இத்தொழிலை நம்பி உள்ளனர். இதுதவிர இளநீர் விற்பது, தேங்காய் நார் உற்பத்தி, நாற்கயிறு, பித்கட்டி, தேங்காய் நாரில் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பது உள்ளிட்ட உபதொழில்களில் சுமார் 15 லட்சம் பேர் மறைமுகமாகவும் தென்னையை நம்பி உள்ளனர். தமிழகத்தில் நெல்லுக்கு அடுத்தபடியாக தென்னைதான் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. 2021-ல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலின்போது, 500-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை அளித்து பின்புற வாசல் வழியாக ஆட்சியைப்
பிடித்த திமுக, பதவியேற்று 27 மாதங்களாகியும் மக்களுக்கு நேரடியாக பலன்
அளிக்கக்கூடிய பல முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.
2011 முதல் 2021 வரை கொப்பரைக்கு வெளி மார்க்கெட் விலை ரூ. 140. எனது
தலைமையிலான அம்மாவின் அரசு தொடர்ந்து மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களை
வலியுறுத்தியதன் காரணமாக, மத்திய அரசு ஒரு கிலோ கொப்பரைக்கு குறைந்தபட்ச
ஆதார விலையாக ரூ. 108.60 என்று உயர்த்தி நிர்ணயம் செய்தது. இதனால் அம்மாவின்
அரசில் 10 ஆண்டுகளாக தென்னை விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தார்கள்.
இன்று, வெளி மார்க்கெட்டில் கொப்பரை கிலோ ரூ. 70/-க்கும் கீழே சென்றுவிட்டது.
தேங்காயின் விலையும் எட்டு ரூபாயாகக் குறைந்துள்ளது. அந்த விலையானது
20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த விலை என்று விவசாயிகள் வேதனையுடன்
தெரிவிக்கின்றனர்.தென்னை மரத்திற்கு பூச்சிக்கொல்லி மருந்து, தேங்காய் வெட்டும் கூலி, தேங்காய்
உரித்தல் கூலி மற்றும் டிராக்டர் வாடகை என்று தென்னை விவசாயிகளுக்கு
உற்பத்திச் செலவு இரண்டு மடங்காகிவிட்டது என்றும், எனவே, வாக்குறுதி எண். வாக்குறுதி எண். 66 வாக்குறுதி எண். 66-ன்படி தற்போது கொப்பரை கிலோ ஒன்றுக்கு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையான ரூ. 108.60-லிருந்து ரூ. லிருந்து ரூ. லிருந்து ரூ. 150-ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் மிகுந்த ஆவலுடன் விடியா திமுக அரசை வலியுறுத்தி வருகின்றனர்.தென்னை பருவ கால பயிர் கிடையாது. தென்னை மரத்திலிருந்து தேங்காய்
50 நாட்கள் இடைவெளியில் ஆண்டு முழுவதும் பறிக்கப்படுகிறது. ஆனால், அரசு
தென்னையை பருவ கால பயிர் பட்டியலில் சேர்த்து வருடத்திற்கு
ஒரு ஏக்கருக்கு 291 கிலோ கொப்பரையை மட்டும் கொள்முதல் செய்கிறது.
எனவே,வாக்குறுதி எண் 66 வாக்குறுதி எண் 66 வாக்குறுதி எண் 66-ன்படி, விவசாயிகள் 50 நாட்களுக்கு ஒருமுறை என்று ன்படி, விவசாயிகள் 50 நாட்களுக்கு ஒருமுறை என்று ன்படி, விவசாயிகள் 50 நாட்களுக்கு ஒருமுறை என்று,
வருடத்திற்கு 7 முறை அரசே கொப்பரையை நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். கோரிக்கை வைத்துள்ளனர். தேங்காய் எண்ணெய்யில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதாக ஒரு சிலர்
வீண் புரளியை மக்களிடம் கிளப்பிவிட்டு குழப்பத்தை விளைவித்து வருகின்றனர்.
தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்புச் சத்து நமது உடலுக்கு நன்மை செய்யும்
கொழுப்புச் சத்தாகும். எனவேதான், நமது அண்டை மாநிலமான கேரளாவில்
தேங்காய் எண்ணெய்யை அனைத்து தேவைகளுக்கும், குறிப்பாக சமையலுக்கும்
பயன்படுத்துகின்றனர்.எனவே, தேங்காய் எண்ணெய் உடல் நலத்திற்கு நல்லது என்று அரசு, மக்களிடையே
பரப்புரையை மேற்கொண்டு பாமாயில் மற்றும் சூரியகாந்தி எண்ணெய்க்கு மாற்றாக
தேங்காய் எண்ணெய் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும். இப்படி செய்வதால்
பாமாயில், சூரியகாந்தி எண்ணெய் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவது குறையும்; அந்நிய செலவாணியும் நமக்கு பெருமளவு மீதமாகும்; மக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள். தென்னை நல வாரியத்தின் மூலம் நல வாரியத்தின் மூலம் தேங்காய் எண்ணெய்யை…

Mediaதமிழ்நாட்டின் கடைகோடி மக்கள் வரை உச்சரித்த மூன்று எழுத்து புரட்சித் தலைவர் “எம்.ஜி.ஆர்” என்கிற மூன்றெழுத்து. தன் நடிப்பினாலும், கள செயல்பாட்டினாலும் மக்கள் மனதைக் கவர்ந்தவர் புரட்சித் தலைவர்.”அச்சம் என்பது மடமையடா”… அஞ்சாமை திராவிடர் உடமையடாஆறிலும் சாவு நூறிலும் சாவு… தாயகம் காப்பதே கடமையடா”என்று உணர்வெழுச்சிப் பொங்க திராவிட சித்தாந்தங்களை தன் சினிமாப் பாடல்கள் மற்றும் வசனங்கள் மூலமாக மக்களின் கவனத்திற்கு கொண்டு சென்றார். அதனாலேயே “அண்ணா”வின் மனம் கவர்ந்த இதயக்கனி என்று ஆனார்.”மானம் பெரியது என்று வாழும் மனிதர்களை
மான் என்று சொல்வதில்லையா
தன்னை தானும் அறிந்து கொன்டு ஊருக்கும் சொல்பவர்கள்
தலைவர்கள் ஆவதில்லையா!”என்ற பாடலுக்கு இணங்க தலைவராக மாறினார் புரட்சித் தலைவர். ஆம் மக்கள் தன் அதிகாரத்தின் பிடியில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தக் கூட்டத்திற்கு சாட்டையடி கொடுத்து அன்பும் அறமும் தான் மக்களை வழிநடத்தும் என்பதை முதல்வராக வென்று அவர்களுக்கு நல்லாட்சி வழங்கியதன் மூலம் எம்.ஜி.ஆர் அவர்கள் செய்தார்.Mediaஅண்ணாவின் முதன்மைத் தம்பிகளில் ஒருவரான எம்.ஜி.ஆர் அவர்கள், அண்ணாவின் மறைவிற்கு பிறகு சில சூத்திரதாரிகளால் கட்சியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஆம், நேர்மையின் இலக்கணமாக திகழ்ந்த எம்.ஜி.ஆர், கட்சியின் கணக்கு வழக்குகள் பற்றி கேள்வியெழுப்பியதால் நயவஞ்சகமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். எதற்கு சளைத்தவர் அல்ல புரட்சித் தலைவர். அவர் மக்கள் மீது நம்பிக்கை வைத்தார். மக்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தனர்.1972 ஆம் ஆண்டு வாக்கில் அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தினைத் துவங்குகிறார். மக்கள் அவர் பக்கம் கெட்டியாக நின்றனர். குள்ளநரிகள் வலைவிரிக்கவும் ஆயத்தமாகினார்கள். ஆனால் அனைத்தையும் கலைந்து, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடி தமிழகத்தின் முதலமைச்சராக அரியணை ஏறினார் புரட்சித் தலைவர். அதுவும் இதே ஜூன் 30-ஆம் நாளில்தான் அந்த வரலாற்று அரசியல் திருப்பம் நடந்தேறியது.”வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்”இன்றும் மக்களின் மனதில் நிற்பவர் மக்கள் திலகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் மட்டுமே!
via News J : https://ift.tt/jUENgeD

Mediaஅதிகாலையில் சைக்கிளிங் செய்வது என்பது அனைவருக்கும் சிறந்த உடல்நலத்தைப் பேண வழிவகுக்கும். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிலர் சைக்கிளிங் மட்டுமே செய்துகொண்டு மற்ற உள்விவாகாரங்களை கவனிக்க மறுக்கிறார்கள். அப்படி யார் யார் என்று ஒரு பட்டியல் எடுத்தால் பலர் இதில் சிக்குவார்கள். அவர்களிலும் குறிப்பாக ஒருவர் இருக்கிறார். காலையில் சைக்கிளிங் செல்வதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவார். பிறகு இளைஞர்களுக்கு அட்வைஸ் என்கிற பெயரில் பழைய பஞ்சாங்கத்தையே பேசுவார். அவர்தான் கூடிய சீக்கிரத்தில் ஓய்வுபெறப் போகும் டிஜிபி சைலேந்திர பாபு அவர்கள். இவரை நெட்டிசன்கள் சைக்கிள் ஏந்துகிற பாபு என்றுதான் மீம்ஸ்கள் போட்டு விமர்சிப்பார்கள்.அப்படி பல சர்ச்சைகளுக்கு பெயர் போன சைலேந்திர பாபு, நேற்றைக்கு நடைபெற்ற அவரது பிரிவு உபச்சார விழாவில் ஒரு செய்தியை கூறியுள்ளார். அதாவது\“கடந்த எட்டு மாதங்களாக தமிழகத்தில் லாக் அப் டெத்க்கள் எதும் நடக்கவில்லையாம்”இதைக் கேட்ட அனைவருக்கும் ஷாக். என்ன இது இப்போதுதான், ஜூன் மாதத்தில் தென்காசியில் தங்கச்சாமி என்பவரை போலிசார் லாக் அப்பில் வைத்து அடித்து துன்புறுத்தி மரணமடையச் செய்தனர். இதற்கு முதல்வரோ பிற அமைச்சர்களோ எந்த ஒரு கண்டனமும், அறிக்கையும் கூட வெளியிடவில்லை. இப்படி ஒன்று நடந்தது கூடத் தெரியாமல் டிஜிபி இருக்கிறாரே? ஒருவேளை பணிகாலம் முடியும் தருவாயில் இருப்பதால் மறதி பீடித்துக்கொண்டதோ? என்று காவல்துறை வட்டாரங்களே தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்கின்றனராம்.திமுக தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் ஏறிய ஒரே ஆண்டில் எட்டு லாக்-அப் டெத்க்கள் நடந்தேறியிருக்கின்றன. தஞ்சாவூரில் சத்யவாணன், ராமநாதபுரத்தில் மணிகண்டன், சேலத்தில் பிரபாகரன், சென்னையில் விக்னேஷ், திருவண்ணாமலையில் தங்கமணி,
கன்னியாக்குமரியில் அஜித், தற்போது தென்காசியில் தங்கச்சாமி என்று ஒரு பட்டியலே போடலாம். ஆனால் இதுவெல்லாம் நமது டிஜிபி அவர்களின் கண்ணிற்கு புலப்பட்டு இருக்கிறதா இல்லையா? சரி அவர் கூற்றின்படியே நாம் வருவோம். கடந்த எட்டு மாதங்களாக லாக்-அப் டெத்க்கள் நடைபெற வில்லையென்றால், அதற்கு முன் திமுக ஆட்சியில் லாக்-அப் டெத் நடைபெற்று உள்ளன என்பதை அவரே சாட்சியாகி ஒப்புக்கொண்டுவிட்டாரா? என்றும் கேள்வி நமக்குள் எழுகிறது.பிரிவு உபச்சார விழாவில் கூடுதலாக இன்னொரு சர்ச்சைக்கு உரிய கருத்தையும் கூறியுள்ளார் டிஜிபி சைலேந்திர பாபு.“மிருகங்களைப் போன்று பலமில்லாதவர்கள் மனிதர்கள். மிருகங்களைக் கூட ஒத்துழைப்பு மூலம் கூண்டுக்குள்ளோ, மிருக காட்சி சாலைக்குள்ளோ அடைத்துவிடலாம்” என்று பேசியுள்ளார்.அப்படியென்றால் மனிதர்கள் ஒத்துழைப்புத் தரமாட்டார்கள். விசாரணை என்ற பேரில் சிறைக்குள் அடைத்து அவர்களை துன்புறுத்தி வழிக்கு கொண்டுவரலாம். அதில் லாக்-அப்பிலேயே மரணம் எய்தினால் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்கள் என்று பொய்யாக திரித்து வழக்கை முடிக்கலாம் என்று சொல்லாமல் சொல்லுகிறாரா டிஜிபி என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.இந்த லட்சணத்தில் சைலேந்திர பாபுவை டிஎன்பிஎஸ்சியின் தலைவராக ஆக்க இருக்கின்றனர் இந்த விடியா கும்பல். ஏற்கனவே அரசுத் தேர்வுகள் நடத்த காலதாமதம், நடந்த தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிட தாமதம் என்று தேர்வர்களின் வாழ்க்கையில் விளையாடுகிறது. பச்சையாக பொய்சொல்லும் இந்த டிஜிபியை, எப்படி ஒரு நேர்மையான டிஎன்பிஎஸ்சி தலைவராக இருப்பார். டிஜிபி வேலையையும் ஒழுங்காக பார்க்கவில்லை. இப்படி வேலை பார்க்காத நபருக்கு டிஎன்பிஎஸ்சி சேர்மன் பதவி என்ற விருதை முதல்வர் அளிக்கிறாரோ? என்று தேர்வர்களே பயப்படுகிறார்கள்.இப்படி அலட்சியப்போக்குடனும், மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலும் செயல்படும் டிஜிபியையா இந்த விடியா திமுக அரசு நியமித்திருந்தது. இவருக்கு கீழேயே தமிழகத்தின் சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்று பொதுமக்கள் நம்பியிருந்தனர் என்று அரசியல் செயல்பாட்டாளர்கள் விமர்சனம் செய்கின்றனர். அடப்போங்கப்பா, ஆளுகிறவரும் பொம்மை.. அதிகாரியும் பொம்மை.. இப்படி இருந்தால் தமிழ்நாடு என்று வீறுநடைபோடும். கடந்த பத்தாண்டில் வெற்றிநடைபோட்ட தமிழகம், இந்த மூன்றாண்டில் விடியலை நோக்காமல் விடியாமல் போய்க்கொண்டிருப்பதை நினைத்து சமூக வலைதளவாசிகள், “அண்ணே நீ பேசாம எதிர்க்கட்சியாவே இருந்திருக்கலாம்ணே” என்று அங்கலாய்க்கிறார்கள்.
via News J : https://ift.tt/RM8HIOe

Mediaஅப்துல் காதர் எனும் ஊபர் வாகன ஓட்டி தன்னுடைய காரில் வரும் பயணிகளுக்கு இலவசமாக திண்பண்டங்களும், இலவச இணைய வசதியும் செய்துள்ளார். அதிலும் முக்கியமாக முதலுதவிப் பெட்டி ஒன்று வைத்துள்ளார். மெeேஉம் ஏழைக் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நன்கொடைப் பெட்டி ஒன்று வைத்துள்ளார். இதனைத் தவிர டிசியூ காகிதங்கள், தண்ணீர், டூத் பிக், வாசனை திரவியம், குடை போன்றவற்றையும் வைத்துள்ளார். எல்லா மதத்தினரையும் இங்கு மதிக்கிறோம். இங்கு ஆடையின் அடிப்படையில் எந்த மதத்தையும் அடையாளம் காண்பது இல்லை,” ஒரு போர்டில் காருக்குள் எழுதி வைத்துள்ளார். அதோடு ஏழு ஆண்டுகளாக எந்தவொரு பயணியும் தன்னுடைய சேவையை ரத்து செய்யவில்லை என்று கூறியுள்ளார்.
via News J : https://ift.tt/iN25VLf
via News J : https://ift.tt/iN25VLf
Mediaதீபாவளி பண்டிகை என்றாலே மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவார்கள். குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பேருந்துகள், ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்கு முன்கூட்டியே செல்வது வழக்கம். நீண்டதூரம் பயணம் செய்பவர்கள், பெரும்பாலும் ரயில்களில் செல்லவே அதிகம் விரும்புகின்றனர். இதனால், முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்துவிடுவார்கள்.இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் 12-ம் தேதி வருவதால் முன்னதாக நவம்பர் 9-ம் தேதியே சொந்த ஊருக்குச் செல்வது வழக்கம். எனவே தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜூலை 12-ம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக ஜூலை 12-ம் தேதி முதல் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது. அதன்படி ஜூலை 12-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ம் தேதியும், 13-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 10-ம் தேதியும், 14-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 11-ம் தேதியும், 15-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 12-ம் தேதியும், 16-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 13-ம் தேதியும், 17-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 14-ம் தேதியும், 18-ம் தேதி முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 15-ம் தேதியும் பயணம் செய்து கொள்ள முடியும். மேலும் மக்கள் கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ள மக்களுக்கு ரயில்வே துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/Zfqwphb
via News J : https://ift.tt/Zfqwphb
Mediaஅன்று, முதல்வர், அமைச்சர்களை பதவி நீக்கம் செய்ய ஆளுநரை வலியுறுத்திய ஸ்டாலின், இன்று, அமைச்சரை நீக்க அதிகாரமில்லை என்று குமுறுவது குறித்தும், ஆளுநரை வைத்து ஸ்டலின் நாடகமாடுவது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.நம்ம தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அடித்த அந்தர் பல்டி ட்வீட்கள் தான் இன்றைய வைரல் கண்டெண்ட்..இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை திமுக அரசு வைத்துள்ள நிலையில், அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு போட்ட பின் திமுக வட்டாரமே பரபரப்பானது… ஆனால் ஆளுநரே அதை நிறுத்தி வைப்பதாக அறிக்கை வந்தவுடன்… அச்சச்சோ அம்புட்டும் போச்சா.. இனி என்ன ஆகப்போகுதோ…. என்று இரவு முழுவதும் தூங்கமுடியாமல் தவித்திருக்கிறார் ஸ்டாலின்…ஆளுநருக்கு அமைச்சரை நீக்கும் உரிமை உண்டா இல்லையா என்பதை சட்டம் படித்தவர்கள் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க… ஆளுநர் அறிவிப்பை வெளியிட்ட உடன் முதல்வர் ஸ்டாலின் பதறிப்போய் ஒரு பேட்டி கொடுத்தார்… ஆளுநருக்கு அமைச்சரை நீக்க அதிகாரமில்லை என்றும், சட்டப்படி சந்திப்போம் என்றும் சவால்விட்டார்.. ..இன்றைய முதல்வர் ஸ்டாலினின் நிலை இப்படி இருக்க, எதிர்கட்சியாக இருந்தபோது ஆளுநருக்கு கடிதம் எழுதியதெல்லாம் நினைவில் இருக்குமா என்று நெட்டிசன்கள் ஸ்டாலினின் பழைய ட்வீட்களை ரீட்வீட் செய்து வருகின்றனர்…கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சரை ஆளுநர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எழுதிய ஸ்டாலின்… இன்று இலாகா இல்லாத அமைச்சர் செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கியதால் அவருக்கு அதிகாரமில்லை என்று சொல்கிறார்…அன்று ஏன் அப்படி ஒரு கடிதத்தை எழுதினார்?….. சரி தெரியாமல் எழுதினார் என்று வைத்துக்கொண்டாலும்…. குற்றம்சாட்டப்பட்டு விசாரணை கைதியாக இருக்கும் ஒருவரை அமைச்சர் பதவியிலயே வைத்திருந்தால் எப்படி விசாரணை ஒழுங்காக நடக்கும்?…..வருமான வரித்துறை ரெய்டு நடந்த போது ரவுடித்தனம் செய்த கும்பல் எப்படி விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும்… அதை மனதில் வைத்துக் கொண்டு செந்தில் பாலாஜியை முதல்வரே பதவிநீக்கி இருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள்….முதல்வர் ஸ்டாலினின் குற்றச்சாட்டால் தானே செந்தில்பாலாஜி கைதாகி இருக்கிறார்?…..பிறகு எதற்காக தனது அமைச்சர் செந்தில்பாலாஜியை தற்போது காப்பாற்ற ஸ்டாலின் போராடிக் கொண்டு இருக்கிறார்? அவரை அமைச்சர் பதவியில் இருந்து இறக்குவதால் ஸ்டாலினின் பதவி பறிபோய்விடும் என்கின்ற பயமா?தன்னை நிரபராதி என்று அமைச்சர் நிரூபிக்கட்டுமே… வேண்டாம் என்று யார் சொல்லப்போகிறார்கள்?…வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்பேன் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் வேலையை ஸ்டாலின் தொடர்ந்து செய்வது நியாயமா?…. ஆளுநரை வைத்து நாடகமாடுவதுதான் ஸ்டாலின் சொல்லும் “திராவிட மாடலா”? என்ற சந்தேகத்தை எழுப்புகின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
via News J : https://ift.tt/t9Swi5f
via News J : https://ift.tt/t9Swi5f
Mediaகுரூப் 4 தேர்வானது நடத்தப்பட்டடு கிட்டத்தட்ட ஒரு ஆண்டுகள் ஆகப் போகிறது. கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி நடத்தப்பட்ட இந்தத் தேர்வின் தேர்வு முடிவுகள் இவ்வாண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையானது அதிரகரிக்கப்பட வேண்டும் என்று தேர்வர்கள் தொடர்ந்து பல கோரிக்கைகளை வைத்த வண்ணம் இருந்தனர்.நேற்று டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் குரூப் 4-க்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை பத்தாயிரத்து இருநூற்று தொண்ணூற்றிரண்டு என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.Explained: The allegations against TNPSC Group 4 exams in Tamil Nadu | The News Minuteகிராம அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் உள்பட குரூப்-4 பதவிகளில் பலப் பிரிவு உண்டு. இருபது லட்சம் பேர் விண்ணப்பித்த இந்த தேர்வில் 18 லட்சத்து 36 ஆயிரத்து 535 பேர் தேர்வு எழுதினார்கள். கொரோனா தொற்றுக்கு பிறகு மூன்று ஆண்டு இடைவெளியில் இந்தத் தேர்வு நடத்தப்பட்டு இருப்பதாலும், தேர்வர்கள் அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு இருப்பதாலும் காலியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்வர்கள் மத்தியிலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மத்தியிலும் மற்றும் பல்வேறு தரப்பில் இருந்தும் வலியுறுத்தல்களாய் வெளிப்பட்டன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தொடர்ந்து காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி வலியுறுத்திய வண்ணம் இருந்தார்.இதையடுத்து அறிவிப்பு வெளியான போது வெறும் 7,301 காலி இடங்கள் என்று இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக டிஎன்பிஎஸ்சி அதிகரித்து, சமீபத்தில் 10 ஆயிரத்து 178 இடங்களாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது காலிப் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.அதன்படி, 5,321 இளநிலை உதவியாளர்கள், 3,377 தட்டச்சர்கள், 1,097 சுருக்கெழுத்தர்கள், 425 கிராம நிர்வாக அலுவலர்கள், 69 பில் கலெக்டர்கள், 20 கள உதவியாளர், ஒரு இருப்பு காப்பாளர் என 10,292 காலி பணியிடங்கள் குரூப்-4 பதவிகளில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/1LWuGjs
via News J : https://ift.tt/1LWuGjs
Mediaமனிதர்களுக்குள் மனிதாபிமானம் என்ற கருத்து வேர் ஊன்றி துளிர்விட காரணம் சேவை மனப்பாண்மை என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட சேவைகள் ஆயிரம் உண்டு நம் உலகில். மேலும் இந்தியாவை உலக அளவில் தூக்கி நிறுத்தும் துறைகளை முதன்மைத் துறை (வேளாண்மை), தொழில்துறை மற்றும் சேவைத்துறை என்று சொல்லலாம். அப்படிப்பட்ட சேவைத்துறையிலும் முதன்மை என்னவென்றால் அதுதான் மருத்துவம்.உலக நாடுகள் பல ஜூன் 30-ம் தேதியில் மருத்துவர்கள் தினத்தினை கொண்டாடுவார்கள். ஆனால் இந்தியாவில் மட்டும்தான் ஜூலை 1 ஆம் தேதி தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கு பி.சி.ராய் என்கிற இந்தியாவின் தலைசிறந்த மருத்துவர்தான் காரணம். அவரின் பிறந்தநாளின் நினைவாக இந்த தினம் இந்தியாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.National Doctors Day 2022: Remembering Dr BC Roy, In Whose Memory India Celebrates National Doctors' Dayபிகாரில் பாட்னாவில் உள்ள பரங்கிப்போர் என்கிற சிற்றூரில் 1882 ஆம் ஆண்டு ஜூலை 1ல் பிறந்தவர்தான் பிதான் சந்திர ராய் என்கிற பி.சி.ராய். இவர் தன் வாழ்நாள் முழுவதும் மருத்துவ சேவைக்கே தன்னை அர்பணித்துக்கொண்டார். இலவசமாக மருத்துவம் செய்தார். பல மருத்துவமனைகளை ஏழை எளிய மக்களுக்காக அன்று கட்டினார். இந்த கால 2-கே குழந்தைகளுக்கு புரியுமாறு சொன்னால், அவர் அந்த கால அஞ்சு ரூபா டாக்டர் என்று சொல்லலாம். ஜடவ்பூர் டிபி மருத்துவமனை, கமலா நேரு மருத்துவமனை, விக்டோரியா மருத்துவக் கல்லூரி, சித்தரஞ்சன் புற்றுநோய் மருத்துவமனை போன்றவைகள் பி.சி.ராய் அவர்களின் முயற்சியால் நிறுவப்பட்டவை.மேலும் பி.சி.ராய் காந்தியடிகளின் உற்ற நண்பராய் இருந்து, சுந்தந்திரப் போரட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். இவர் ஒரு மாநிலத்தின் முதல்வராகவும் இருந்திருக்கிறார். ஆம் மேற்கு வங்க மாநிலத்தில் 12 ஆண்டுகள் முதலமைச்சராக பதவியில் இருந்தார். இத்தகைய தன்மையினால் பி.சி.ராய் க்கு 1961 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவரது பெயரில் பி.சி.ராய் விருது என்று மருத்துவத் துறையில் சிறந்த முறையில் சேவையாற்றும் மருத்துவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. அதேபோல வருடா வருடம் ஜூலை 1 ஆம் தேதி இந்திய மருத்துவர்கள் சங்கம் சார்பில் தேசிய மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது.
via News J : https://ift.tt/A6RUfmO
via News J : https://ift.tt/A6RUfmO
Mediaசமூகநீதி..சமூகநீதி என்று சொல்லி சொல்லியே ஆட்சிக் கட்டிலில் ஏறிய திமுக, காலம் போகப் போக தன் சுயரூபத்தைக் காட்டத்தொடங்கியது… திமுகவின் சாயம் வெளுக்கத் தொடங்கியது…யாரால் ஆட்சியைப் பிடித்தார்களோ, யாரால் பதவிகளை அணுபவிக்கிறார்களோ அவர்களையே கழட்டி விடும் உக்தியை கையாண்டிருக்கிறது திமுக தலைமை. 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளை எப்படி கழட்டி விடலாம் என்று பல மாதங்களுக்கு முன்னதாகவே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது திமுக… அதற்காக, கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவதால் அதிருப்தியில் உள்ள திமுக சீனியர்கள் தொகுதிகளை இம்முறை மாற்றித் தர வலுவான திட்டம் ஒன்றினை தீட்டியிருப்பதாக கூறப்படுகிறது.சமீபத்தில் அமலாக்கத்துறையால் அஸ்திவாரத்தையே இழந்த செந்தில்பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு உள்ள நிலையில், செந்தில்பாலாஜியின் விசுவாசிக்கு கரூர் எம்பி சீட் கொடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகிகள் திமுக மேலிடத்திற்கு சைஸாக காய் நகர்த்தி வருகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது.ஈரோடு எம்பி கணேச மூர்த்திக்கு மீண்டும் மதிமுகவில் சீட் ஒதுக்காமல் அதனை திமுகவே எடுத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சிக்காக செலவு செய்தது போதும் என்று உடன் பிறப்புகள் ஸ்டாலினின் காதுகளை கடித்திருக்கின்றனர் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..விருதுநகரைப் பொறுத்தவரை மாணிக் தாக்கூர் வெர்சஸ் துரை வைகோ என்று சொல்லப்படுகிறது. கூட்டணியையே சிதைக்க நினைக்கும் திமுக ஒருபக்கம் என்றால், விருதுநகரில் காங்கிரஸும் மதிமுகவும் ஸ்பேரிங்க் போட்டுக்கொண்டு சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள்.திருச்சியில், திருநாவுக்கரசருக்கு எதிராக தன் குடம்பத்தில் ஒருவருக்கு சீட் கேட்டுக் கொண்டிருக்கிறார் அமைச்சர் கே.என்.நேரு . இப்படி கூட்டணிக்குள் சண்டை வளர்த்து, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற காமெடி போல ஆகிவிட்டது திமுக என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….ஏற்கனவே, உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிய பதவிகளை கொடுக்காமல். ஸ்டாலின் சொல்லியும் கூட கேட்காமல், பிடுங்கி வைத்துக்கொண்டனர் திமுக உபிக்கள்…இப்படி தொடர்ந்து கூட்டணி கட்சிகளை கிள்ளுக்கீரையாகத்தான் நடத்தப்போகிறதா திமுக? கூட்டணி கட்சிகளின் தொகுதிகளை கைப்பற்றி மேலும் தனது ஆட்டத்தை நடத்த தயாராகி விட்டாரா ஸ்டாலின்? கூட்டணி கட்சிகளின் தயவால் ஆட்சிக்கு வந்ததை மறந்து செயல்படுவதால் அவர்களின் ஆதரவையும் இழக்கப் போகிறாரா ஸ்டாலின் ? என்ற கேள்விக்கு இன்னும் சில மாதங்களில் பதில் கிடைக்கும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/UarH3Mh
via News J : https://ift.tt/UarH3Mh
Mediaமகாராஷ்டிராவை ஆண்டு கொண்டிருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியானது உட்கட்சிப் பூசல் காரணமாக பிளவு பெற்றது. இதன் விளைவாக மூத்தத் தலைவர் அஜித் பவார் தலைமையில் 40 எம்.எல்.ஏக்கள் மகாராஷ்டிராவில் உள்ள பாஜக கூட்டணி அரசில் இணைந்தனர். இதனால் சரத்பவாருக்கு அரசியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.2019 ஆம் ஆண்டு அக்டோபரில் மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் நடந்தது. அதில் பாஜக் 105 இடங்களும், அதனுடன் கூட்டணி வைத்திருந்த சிவசேனா கட்சி 56 தொகுதிகளும் வென்றன. முதல் பதவி யாருக்கு என்று போட்டி நிலவிய நிலையில் கூட்டணி உடைந்தது. பாஜகவின் மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பதவியேற்றார். எதிர் அணியில் இருந்த தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார். அப்போது தேசிய வாத காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு தராததால் ஆட்சி கவிழ்ந்தது.Imageடிவிஸ்ட் அரசியல்..!பிறகு மகாராஷ்டிர அரசியலில் டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வந்துகொண்டே இருந்தது. இந்திய அளவில் எடுத்துக்கொண்டால் கர்நாடகாவில்தான் இதுபோல் ஆட்சிமாற்றங்கள் நடக்கும். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிராவிலும் இப்படி நடந்திருப்பது அரசியல் வட்டாரங்களிடையே மிகப்பெரிய கவனத்தினைப் பெற்றது. பிறகு எப்படியோ காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் சிவசேனா கைகோர்த்தது. நவம்பர் 2019ல் இந்த புதிய கூட்டணி அமைந்தது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.இரண்டரை ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு சிவசேனா மூத்த தலைவரும் அமைச்சருமான ஏக்நாத் ஷின்டே, முதல்வர் உத்தவ் தாக்கரேவிற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். பெரும்பான்மையான சிவசேனா எம்.எல்.ஏக்கள் ஷிண்டே பின்னால் சென்றனர். பாஜகவும், சிவசேனாவின் ஏக்நாத் ஷின்டே அணியும் இணைந்து புதிய அரசை அமைத்தனர். இது 2022 ஜூன் 30 ஆம் தேதியிலிருந்து தற்போது வரை தொடர்ந்தது. ஷிண்டே முதல்வராகவும், பாஜகவின் மூத்தத் தலைவர் தேவந்திர பட்னாவிஸ் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.Imageஅஜித் பவாரின் பவர் அரசியல்..!பின்னர் அஜித் பவார் தேசியவாத காங்கிரஸில் இருந்து விலகப்போவதாகவும் அவருடன் 40 எம்.எல்.ஏக்கள் பாஜகவில் இணைவதற்கு தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. அதனைத் தொடர்ந்து கட்சித் தலைவர் பதவியிலிருந்து சரத் பவார் விலகப்போவதாக கூறினார் . கட்சி உடைவதை தடுக்கவே இதை செய்ய உள்ளதாக தகவல் தெரிவித்தார். பின் 4 நாட்கள் பிறகு தனது ராஜினாமா எண்ணத்தை மாற்றி தலைவராக தொடர்ந்தார். அப்போது இருந்து அஜித் பவார் கட்சியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். கடந்த மாதம் ஜூனில் என்சிபி செயல் தலைவர்களாக சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, பிரபுல் படேல் அறிவிக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த அஜித் பவார் 40 எம்.எல்.ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணியுடன் இணைந்தார். பிறகு அஜித் பவார் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். மும்பையில் ஆளுநர் ரமேஸ் பயஸ் முன்னிலையில் அஜித் பவார் துணைமுதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார். உடன் முதல்வர் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் பட்னாவிஸ் இருந்தனர். அஜித் பவாரின் எட்டு எம்.எல்.ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
via News J : https://ift.tt/oJ73qL4
via News J : https://ift.tt/oJ73qL4
Media”ஏ மன்னா… மாமன்னா” என்று சில்லறையை சிதறவிட்டுக் கொண்டிருக்கும் உடன் பிறப்புகளுக்கு தற்போது என்னடா இப்படி ஆயிருச்சு என்று முகத்தில் கரியை பூசியது போல ஆகிவிட்டது. அப்படி உடன்பிறப்புகளின் முகத்தில் கரியை அள்ளி பூசியவர் வேறு யாருமல்ல, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தான்.சமீபத்தில் சமூகநீதியை மையக்கருத்தாகவும், வாரிசு அரசியலை எதிர்த்தும் வாரிசு அமைச்சர் நடித்த “மாமன்னன்” என்கிற திரைப்படம் வெளியானது. அத்திரைப்படத்தில் தன்னை மேலானவர் என்று கருதுபவனுக்கு நிகராக சாமானியன் சரிக்கு சமமாக அமரும் அரசியலைப் பேசுகிறது. இங்கு யாரும் தாழ்ந்தவன் அல்ல; எல்லோரும் மனிதர்களே என்கிற அடிப்படையில் எடுக்கப்பட்டது இத்திரைப்படம்.படத்துல மட்டுந்தான் சமூகநீதி… நிஜத்துல…!இப்படி சமூகநீதிக்கு அம்பாசிடராக தன்னை முன்மொழியும் வாரிசு அமைச்சர் உதயநிதியும் திமுக கட்சிக்காரர்களும் காட்சிக்காக மட்டுமே இதனை செய்கிறார்கள் என்று தற்போது பட்டவர்த்தனமாக தெரியவந்துள்ளது. அதற்கு பல காரணங்களையும் தீண்டாமை கொடுமைகளையும் நம்மால் கூற முடியும். இங்ஙனம் தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் செய்திருப்பதுதான் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாக வளர்ந்துள்ளது. தன்னை சந்திக்கவந்த பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட சிறுபான்மையினர் அணி அமைப்பாளருமான முஹம்மது யூனூஸ் உள்ளிட்ட சில நிர்வாகிகளை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நிற்க வைத்து பேசியுள்ளார். தன் சொந்தக் கட்சிக்காரர்கள் என்று கூட நினைக்காமல் உரிய மரியாதை கொடுக்காமல் இப்படி அமைச்சர் நடந்துகொண்டது பெருத்த சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.ஸ்டாலின் கதறல்..!சமூகநீதிதான் எங்கள் சொத்து என்று தம்பட்டம் அடிக்கும் திமுக முதல்வர் ஸ்டாலின், தன்னுடைய அமைச்சரவைச் சேர்ந்த ஒருவர் இஸ்லாமியர்களை நிற்க வைத்து வதைப்பதை கண்டும் காணாமல் இருப்பது என்ன மாதிரியான மனநிலை என்று தெரியவில்லை. ஏற்கனவே இப்படித்தான் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தன்னை சந்திக்க வந்த ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த மக்களை நிற்க வைத்து தகாத வார்த்தையால் பேசியும் சர்ச்சைக்குள்ளானார். இதைத் தவிர அமைச்சர் பொன்முடி தன் சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண்ணை எஸ்.சிதானமா நீ என்று கேட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.இப்படித்தான் திமுகவினர் சமூகநீதியைக் காத்துவருகிறார்கள். ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்களை கூப்பிட்டு காண்டாக கத்தியிருக்கிறார். “ இது அஞ்சு வருச காண்ட்ராக்ட்டு அமைச்சர்களே.. யாரும் இதுல மண்ணள்ளி போட்றாதீங்க” என்று புலம்பியிருக்கிறார். ஆனால் உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என்ற பழமொழிக்கு இணங்க, உங்கள் சொல்பேச்சை கேட்டால் நாங்க எப்படி கெத்து காட்ட என்று அமைச்சர்கள் வீம்பு பிடிக்கின்றனராம். ஆக மொத்தம் சமூக நீதிக்கு சமாதி கட்டும் வேலையை சூசகமாக பார்க்கிறது திமுக.
via News J : https://ift.tt/fPFCGNI
via News J : https://ift.tt/fPFCGNI
Mediaஅதிமுகவில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து விரைவில் எங்கள் இலக்கை அடைவோம் என்று கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், ஓமலூரில் கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் புறநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் பாசறை அமைப்பு, மகளிர் குழு மற்றும் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுகவில் இதுவரை ஒரு கோடியே 35 லட்சம் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றும், வரும் நாட்களில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்து எங்கள் இலக்கை அடைவோம் என்று நம்பிக்கை தெரிவித்தார்.காவிரி விவகாரத்தில் விடியா அரசு மௌனம் சாதிப்பதாக குற்றம்சாட்டிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சரின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகா வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சியாக இருந்தபோது, கெட்டதை கூட தைரியமாக செய்தோம் என ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பது, அதிமுக ஆட்சியில் அவர் எவ்வளவு கெட்ட நோக்கத்தோடு செயல்பட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது என்றார்.கைதி எண் கொடுக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை, ஸ்டாலின் தார்மீக பொறுப்பேற்று அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.
via News J : https://ift.tt/8Eth36m
via News J : https://ift.tt/8Eth36m