News J
595 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaரஷ்யாவில் அரசுக்கு எதிரான தனியார் படையின் புரட்சியானது தற்போது கைவிடப்பட்டு முடிவுக்கு வந்துள்ளது. அரசுடன் கிளர்ச்சியாளர்கள் சமரசம் செய்துகொண்ட நிலையில், தனியார் படைத் தலைவர் வாக்னர் பக்கத்தில் உள்ள பெலாரஸ் நாட்டுக்கு வெளியேறினார். உக்ரைன் மீதான போரில் ரஷ்யாவுடன் இணைந்து வாக்னர் குழு என்ற தனியார் படை செயல்பட்டு வந்தது. பாக்மத் நகரை கைப்பற்றியது உள்ளிட்ட பல முக்கிய கட்டங்களில் இந்த படை பங்காற்றியிருந்தது.ரஷ்யாவுக்கு எதிராக போர்க்கொடி…வாக்னர் கூலிப்படையானது  திடீர் திருப்பமாக ரஷியாவுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை என்றும் தங்கள் படையைச் சேர்ந்த இரண்டாயிரம் வீரர்களை ரஷிய ராணுவம் கொன்றுவிட்டது எனவும் குற்றசாட்டு வைத்தது வாக்னர் படை. அதிலும் குறிப்பாக ரஷிய பாதுகாப்பு மந்திரி ஷெர்ஜிஷோய்குவை வாக்னர் குழு தலைவர் யெவ்ஜெனி பிரிகோசின் கடுமையாக விமர்சித்தார். ரஷ்யாவின் ரோஸ் டாவ் ஆன் டானுக்குள் தடையின்றி நுழைந்த வாக்னர் படையை அங்கிருந்து ஆர்யிரம் கி,மீ தொலைவில் உள்ள தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறுமாறு பிரிகோசின் உத்தரவிட்டார். தனியார் படையின் இந்த செயல் ரஷ்ய அரசுக்கு அதிர்ச்சியை அளித்தது. இது மிகப்பெரிய துரோகம் என்று ரஷ்ய அதிபர் புதின் கொந்தளித்தார். கிளர்ச்சியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.முடிக்கப்பட்ட கிளர்ச்சி…!இந்நிலையில் கிளச்சியினை வாக்னர் படையானது முடிவுக்கு கொண்டுவந்துவிட்டது. ரஷ்யா கேட்டுக்கொண்டதன் பேரிலும் அதன் நட்பு நாடானா பெலாரசின் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகா ஷென்கோ, வாக்னர் குழுவின் தலைவர் பிரிகோசினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அதில் சமரசம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதையடுத்து பிரிகோசின் தனது வீரர்களை மீண்டும் உக்ரைனில் உள்ள கள முகாம்களுக்கு திரும்ப உத்தரவிட்டார். அங்கு அவர்கள் மறுபடியும் ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து உக்ரைன் வீரர்களுக்கு எதிராக சண்டையிடுவார்கள். அதனைத் தொடர்ந்து வாக்னர் படைத் தலைவர் பிரிகோசின் பெலாரஸ் நாட்டுக்குச் செல்வார். அவருக்கு எதிரான ஆயுத கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் கைவிடப்படும் என ரஷ்ய அதைபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் அறிவித்தார். தனியார் படை உடனான சமரத்தால் ரஷியாவில் பெரும் ரத்த சேதம் தவிர்க்கப்பட்டது.இந்த விவகாரம், ரஷ்ய பாதுகாப்பு அமைப்பில் உள்ள பிரச்சினைகளை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் எதிரணி நாடுகள் விமர்சித்துள்ளன. தொடர்ந்து தனியார் படை, ரஷ்ய ராணுவத்துடன் இணக்கத்துடன் செயல்படுமா, அதன் தலைவர் பிரிகோசின் பெலாரசின் இருந்தபடி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

via News J : https://ift.tt/OzTf706
Mediaஉலக அளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சிகளில் ஏழாவது இடத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இடம் பெற்றுள்ளது.Mediaஉலக அளவில் உள்ள பெரிய அரசியல் கட்சிகளில் மிகப்பெரிய அளவில் உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சியாக ஏழாவது இடம் பிடித்திருக்கிறது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்பது குறிப்பிடத்தக்கது.

via News J : https://ift.tt/SrmLpBN
Media100 டாலருக்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஒரு மாதமாக பாரல் 80 டாலருக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த ஓராண்டாக குறைக்கப்படாமலே இருப்பதாக பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல், எரிவாயு உருளை போன்ற எரிவாயு பொருள்களின் விலை அவ்வப்போது மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. எரிவாயு உருளையின் விலை மட்டும் மாதத்தின் முதல் நாளில் மாற்றி அமைக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த ஓர் ஆண்டாக பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்து வருகின்றன. கடைசியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பெட்ரோல் டீசல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. சென்னையில் ஒரு லிட்டர் 102 ரூபாய்க்கும், டீசல் 94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அப்பொழுது ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 100 டாலருக்கு மேல் இருந்தது.ஆனால் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணையின் விலை பாரல் 80 டாலருக்கு கீழ் குறைந்து நிலை கொண்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி பாரல் 74 டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 80 ரூபாய்கும் கீழ் கடந்த ஒரு மாதமாக கச்சா எண்ணையின் விலை குறைந்துள்ள நிலையில் பெட்ரோல் டீசல் இன் விலை கடந்த ஓராண்டாக எண்ணெய் நிறுவனங்கள் குறைக்காமல் உள்ளது. இது குறித்து பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கையில், சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலை கடந்த ஓராண்டில் 25 டாலர் வரையில் குறைந்துள்ளதாகவும், மேலும் இதை விட குறைந்த விலைக்கு ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணையை இந்தியா இறக்குமதி செய்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.கச்சா எண்ணெய் விலை கடந்த ஓராண்டில் 25 டாலர் வரையில் குறைந்துள்ள போதிலும், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் இருப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் பெட்ரோல், டீசல் லுக்காண மத்திய அரசின் வரி ஐந்து ரூபாயில் வரையில் குறைக்கப்பட்டு இருப்பதாகவும், ஆனால் மாநில அரசு தங்களுக்கான வாட் வரியை ஒரு ரூபாய் கூட குறைக்காமல், இருபத்தைந்து ரூபாயை வாடிக்கையாளர்களிடமிருந்து வசூல் செய்வதும் பெட்ரோல் டீசல் விலை குறையாமல் இருப்பதற்கு மற்றொரு காரணம் என்றும் பொருளாதார நிபுணர்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனினும் ஜூலை மாத தொடக்கத்தில் பெட்ரோல் டீசல் விலை சிறிதளவு குறைய வாய்ப்பு இருப்பதாகவும் பொருளாதார நிபுணர்கள் கணிக்கின்றனர்.

via News J : https://ift.tt/E1bPMIO
Mediaஇந்திய விண்வெளித் துறையைப் பொறுத்தவரை நிலவு ஆராய்ச்சியில் சிறந்து விளங்கிவருகிறது. ஏற்கனவே சந்திராயன் ஒன்று, இரண்டு என்று இரு செயற்கைகோள்களை நிலவுக்கு அனுப்பியிருந்த நிலையில் தற்போது மூன்றாவது முறையாக நிலவினை ஆராய்வதற்கான வேலையில் இஸ்ரோ இறங்கியுள்ளது. இதற்கு  “மிஷன் சந்திராயன் 3” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் மத்தியில் செயல்பட போகிறது.சந்திராயன் 2ஐத் தொடர்ந்து…2019 ஆம் ஆண்டு சந்திராயன் 2-ஆனது நிலவினை ஆராய அனுப்பப்பட்டிருந்தது. அதில் உள்ள லேண்டர் மற்றும் ரோவர் ஆகிய கருவிகளுக்கு விக்ரம் மற்றும் ப்ரக்யான் என்கிற பெயர் சூட்டப்பட்டிருந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியின் தந்தையான விக்ரம் சாராபாயின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து இப்போது சந்திராயன் 3-ல் செயல்பட இருக்கும் லேண்டருக்கு விக்ரம் பெயரையே சூட்டுவதற்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் வழிவகை செய்துள்ளார். சந்திராயன் இரண்டைப் பொறுத்தவரை அதன் லேண்டரும் ரோவரும் நிலவின் லூனார் பகுதியில் விழுந்து சிதறியது.சந்திராயன் 3.. எப்போது…!சந்திராயன் 3 ஆனது எல்வி3 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஜூலை மாதத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரத்தில் ஏவப்பட இருக்கிறது.இந்த விண்கலம் 100 கிமீ சந்திர சுற்றுப்பாதையில் செல்லும் வரை உந்துவிசை தொகுதி லேண்டர் மற்றும் ரோவர் கட்டமைப்பை கொண்டு செல்லும்.

via News J : https://ift.tt/Wl90GZf
Media71 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயாரித்து உலகிலேயே முதல் ரயில் பெட்டி தொழிற்சாலையாக, பெரம்பூர் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை விளங்குவதாக புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.வந்தே பாரத் ரயில் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
விமானத்தில் பயணிப்பவர்கள், தற்போது வந்தே பாரத் ரயிலில் பயணிக்கிறார்கள் – ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன்.பெரம்பூர் ரயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் 25 வது வந்தே பாரத் ரயில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் பணியினைப்பார்வையிட்டு, ரயில்பெட்டி தயாரிப்பு தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு பாரட்டுத் தெரிவித்த தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, தமிழ்நாடு ரயில்வே துறையின் கடுமையான முயற்சியால் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், வந்தே பாரத் ரயிலில் மக்கள் விருப்பத்துடன் பயணிப்பதாகவும் தெரிவித்தார். விமானத்தில் பயணிப்போது போன்ற உணர்வுடன் அனைத்து வசதிகளுடன் பயணிப்பதாகவும், இந்த ரயில் பெட்டிகளை தயாரித்த ரயில்வே துறை அதிகாரிகளை பாராட்டுவதாகவும் தெரிவித்தார்.71,000 ரயில் பெட்டிகள் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டிருபபதாகவும், உலகிலேயே அதிகமாக ரயில் பெட்டிகள் தயாரித்த நிறுவனம் என்ற பெயரை பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை பெற்றிருக்கிறது. இது தமிழகத்துக்கு கிடைத்த மிகப் பெரிய பெருமை. இங்கு தயாரிக்கப்படும் ரயில்பெட்டிகள், ஸ்ரீலங்கா, நேபால் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி ஆவதாக தெரிவித்தார்.

via News J : https://ift.tt/daNkjuw
Mediaநேராவா-நேத்ராவா, சைதாப்பேட்டையா- சகாதேவ வாத்தியார் தெருவா அவரும் குழம்பி அனைவரையும் குழப்பிய உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி.சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்நிலைத் துறை அமைச்சர் பொன்முடி பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியலை இன்றுவெளியிட்டார். அப்போது தரவரிசை பட்டியளை வெளியிடுவதற்கு முன் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணாக்கர்களின் பெயர்களை அறிவித்தார்.தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த தூத்துக்குடி மாணவியின் பெயரை நேரா என கூறினார். பெயரை மீண்டும் தெரிவிக்குமாறு செய்தியாளர்கள் கேட்கும் போது மீண்டும் மீண்டும் நேரா என்றார். பின்னர் அருகில் இருந்த அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ், நேத்ரா என தெரிவிக்க பின்னர் நேத்ரா என்றார்.அதேபோல அரசு பள்ளிகளில் படித்து முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவிகளின் பெயர்களை வாசிக்கும் போது மகாலட்சுமி என்ற தர்மபுரியை சேர்ந்த மாணவியை, மகாலட்சுமி சைதாப்பேட்டையை சேர்ந்தவர் எனக் கூறினார்.
ஆனால் சகாதேவ வாத்தியார் தெரு என்பதை சைதாப்பேட்டை என உயர் கல்வித் துறை அமைச்சர் மாற்றி கூறியுள்ளார்.நேத்ராவை, நேரா எனவும் சகாதேவ வாத்தியார் தெருவை சைதாப்பேட்டை எனவும் அமைச்சர் பொன்முடி செய்தியாளர் சந்திப்பில் மாற்றி மாற்றி பேசும் போது அங்கு இருந்தவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.மேலும் நிருபர்கள் கேள்விக்கு அமைச்சர் பொன்முடி சரியாக பதில் கூறவில்லை.

via News J : https://ift.tt/Uv9IuMZ
Mediaபோக்குவரத்து துறைகளில் தொடரும் ஊழியர்கள் பற்றாக்குறை நடவடிக்கை மேற்கொள்ளாத திமுக அரசு, கூடுதல் நேர பணிச்சுமையால் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் மனஉளைச்சலுக்கு தள்ளப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.திமுக அரசு போக்குவரத்து துறை தொழிலாளர்கள் நலன் சார்ந்து  நடவடிக்கை எடுக்க தவறினால் அதிமுக கழக பொதுச்செயலாளர் அனுமதியோடு மாபெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களின் பணிக்காலம் முடிந்து அடுத்த மாத இறுதிக்குள் ஓய்வு பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.முன்னதாக அரசு பேருந்துகளில் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பற்றாக்குறை காரணமாக நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படாத நிலையில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப வேண்டும் என்று தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த ஊழியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியுடைய  ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலை வாய்ப்பிற்காக அரசு அலுவலகங்களில் விண்ணப்பித்த காத்திருக்கும் நிலையில் திமுக அரசு தனியார் நிறுவனங்களில் ஒப்பந்த முறையில் ஊழியர்களை பணி நியமனம் செய்ய முடிவெடுத்தது.இதற்கு திமுகவை சேர்ந்த தொழிற் சங்கங்களே எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டதை தொடர்ந்து ஒப்பந்த முறையில் தனியா நிறுவனங்கள் வாயிலாக ஊழியர்களை பணி நியமனம் செய்வதை தற்காலிகமாக நிறுத்தியது திமுக அரசு.இந்நிலையில் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் குறைந்த அளவே பேருந்துகள் செயல்பட்டு வருவதைத் தொடர்ந்து வேலைக்குச் செல்லக் கூடியவர்களும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரும் நிலையில் இரவு நேரங்களில் பேருந்துகள் இயக்கப்படாதால் பணி முடிந்து வீடு திரும்பும் பெண்கள் உட்பட பல அவதிக்குள்ளாகி வருகின்றனர்.இந்நிலையில் வருகின்ற ஜூலை மாதத்திற்குள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போக்குவரத்து துறையைச் சேர்ந்த ஊழியர்கள் பெற்றால் தற்போது பணிபுரிந்து வரக்கூடிய ஊழியர்களின் பணிசுமை அதிகரிக்கும் என்றும் கூடுதல் நேரம் பணியாற்றுவதால் மன உளைச்சலுக்கு தள்ளப்படுவார்கள் என்றும் அரசு பேருந்து ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறுகையில் :-தொடர்ந்து திமுக ஆட்சியில் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதாகவும், போக்குவரத்து துறை நஷ்டத்தில் செயல்பட விட்டுள்ளனர் என்றும், தொடர்ந்து ஓட்டுநர்கள் நடத்துனர்கள் என பற்றாக்குறை அதிகரித்து வரும் நிலையில், பணி சுமை காரணமாக ஊழியர்கள் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு வருகிறார்கள் என்றும் பணிக்காலம் முடிந்த பின்னர்  ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் தொகையும் நிறுத்தப்பட்டு வெறுங்கையோடு தான் திரும்புவதாகவும், தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து அவ்வபோது பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கும் திமுக அரசு திமுக சார்ந்த தொழிற்சங்கங்களை மட்டும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு விடுவதாகவும் பிற கட்சி சார்ந்த சங்கங்களையோ பொதுச் சங்கங்களையோ அழைத்துப் பேசப்படுவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து காலி இடங்களை நிரப்பி திமுக அரசு நடவடிக்கை மேற்கொள்ளாமல் காலம் தாழ்த்தினால் அதிமுக கழக பொதுச்செயலாளரும் எதிர் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அனுமதியோடு மாபெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார்.

via News J : https://ift.tt/YAp1HKs
Mediaதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அரசு கால்நடை மருத்துவமனையை விடியா திமுக மாவட்ட நிர்வாகம் முறையாக பராமரிக்கவில்லை என அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். திருவாஞ்சியத்தில் செயல்படும் அரசு கால்நடை மருத்துவமனை மிகவும் பழுதடைந்து சுகாதாரமற்ற முறையில் காட்சியளிப்பதுடன், தரையும் முற்றிலும் சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே பயன்படுத்தப்பட்ட ஊசிகள் சிதறி கிடக்கின்றன. தற்போது வரை மின்சார வசதி இல்லாமல் செயல்பட்டு வரும் இந்த மருத்துவமனைக்கு கால்நடை மருத்துவர்கள் வாரத்திற்கு 3 நாட்கள் மட்டும் வருவதாக கால்நடை வளர்ப்போர் குற்றம் சாட்டியுள்ளனர். விடியா அரசு அரசு கால்நடை மருத்துவமனையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  

via News J : https://ift.tt/YXZ5RwF
Mediaதமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் பணியில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், சீர்கெட்டிருக்கும் தமிழக சட்ட ஒழுங்கை பாதுகாக்கப் போகும் புதிய டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் யார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.2021ம் ஆண்டுக்குப்பிறகு, தமிழகமே அலங்கோலமாக மாறியிருக்கும் சூழலில், தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு ஆகியோரின் பதவிக்காலம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.சட்ட ஒழுங்கிற்கும் அதிகாரிகளின் இதற்கு பணி மூப்புக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கலாம்.. நியாயம் தான்… தலைமைச்செயலாளராக வெ.இறையன்பை நியமிக்கும்போது, ஆஹா ஓஹோ என்று சமூகவலைதளங்களில் ஃபயர் விட்டனர் திமுகவின் உடன்பிறப்புகள்… நேர்மையான அரசை உறுதிசெய்யவே நேர்மையானவரை ஸ்டாலின் நியமித்திருக்கிறார் என்றெல்லாம் அளந்துவிட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் மக்கள் எதிர்ப்பை சம்பாதித்த ஒரே ஆட்சி என்றுதான் பெயரெடுத்தது… புத்தக வெளியீட்டு விழாக்களில் அவர் காட்டும் அக்கறையை மக்கள் நலனில் காட்டியிருக்கலாமே என்றெல்லாம் பேசித்தீர்த்தனர் பலரும்.. நேர்மையான அதிகாரியான வெ.இறையன்புவவை பணி செய்ய விடவே இல்லை இந்த விடியா ஆட்சியின் கிட்சன் கேபினர் என்று இன்னொரு விமர்சனமும் எழுந்தது அனைவரும் அறிந்ததே.இது ஒரு புறம் என்றால், சட்ட ஒழுங்கை காக்க வேண்டிய இன்னொரு முக்கியப் பொறுப்பு உள்ள டிஜிபி பதவிக்கு சைலேந்திரபாவுவை நியமித்தவுடனேயே, தமிழ் சினிமாக்களில் வரும் ஹீரோ சீன்களைப்போன்று இனி அதிரடியாக இருக்கப்போகிறது என்று எண்ணிக்கொண்டிருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது.. புஸ் என்று போனது அனைவரின் எதிர்பார்ப்புகளும்.. திருட்டை தடுப்பார், கொலை கொள்ளையை கண்டுபிடிப்பார் நடவடிக்கை எடுப்பார் என்றெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தபோது, வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றி அவர் வெளியிட்ட வீடியோவைப் பார்த்து, மயங்கித்தான் போனார்கள் பலரும்.. முதல்வருக்கு போட்டியாக சைக்கிளிங் வீடியோபோடுவது, பத்திரமாக இருங்கள் என்று விழிப்புணர்வு வீடியோ போடுவது என்று சோசியல் மீடியா இன்புளுயன்சர் போல செயல்பட்டார் சைலேந்திரபாபு.கஞ்சா வேட்டை, 2.0 , 3.0 என்று ஓ போட்டுக்கொண்டிருந்தவரை வைத்து முதல்வர் என்னதான் செய்திருப்பார்? என்று கேள்வியும் எழாமல் இல்லை… விளைவு, தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பல் இளிக்கிறது….கனியாமூர் பள்ளி கலவரம், கோவையில் தீவிரவாதிகளின் சதியால் நிகழ்ந்த சிலிண்டர் குண்டு வெடிப்பு, வேங்கை வயல் மலம் கலந்த விவகாரம், அதிகரித்து வரும் லாக்- அப் மரணங்கள், பல்பீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் என எந்த விவகாரத்திலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வை தேடித் தராமல் இருந்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின்…. அதற்கு நடவடிக்கை எடுக்கத் தவறியதில் இந்த அதிகாரிகளுக்கும் பங்கு உண்டல்லவா?இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பதவிகளுக்கு அடுத்து வரப்போகும் அதிகாரிகளை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார் முதல்வர் ஸ்டாலின்? அமைச்சர்களை, அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதில் ஃபெயிலியர் ஆன ஸ்டாலின் இனிமேலாவது விழிப்புடன் அதிகாரிகளை தேர்ந்தெடுப்பாரா? திமுக கிட்சன் கேபினட்-டின் அழுத்தம் அதிகம் இருக்கும் இந்த பதவிகளுக்கு வரும் அதிகாரிகள் எப்படி அதை எதிர்கொள்ளப்போகிறார்கள்?முதல்வர் ஸ்டாலினைவிட அதிக பொறுப்பு மிக்க இந்த பதவிகளுக்கு அடுத்து வரப்போவது யார் ? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

via News J : https://ift.tt/ti418Za
Mediaஅரசுப் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் கட்டாயம் எடுக்கப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.இரண்டு நாள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கூட்டம் சென்னையில் இன்று காலை துவங்கி நடைபெற்று வருகிறது. பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகளும் இந்த கூட்டத்தில் பங்கேற்று உள்ளனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி வருகின்றனர்.கூட்டத்தில் பேசிய மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சிலர், அரசு பள்ளிகளில் படிக்கும் 11, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பலர் மதிய உணவு சாப்பிடுவது கிடையாது என்றும், பத்தாம் வகுப்பு வரை மட்டுமே மதிய உணவு வழங்கப்படுகிறது எனவும், எனவே 11 ,12-ம் வகுப்பு மாணவர்களுக்கும் மதிய உணவு வழங்குவதற்கு கல்வித் துறை நடவடிக்கை எடுத்தால் மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்தனர். மேலும் அரசு பள்ளிகளில் காவலர்கள் கிடையாது, துப்புரவு பணியாளர்கள் கிடையாது என்றும், குறிப்பாக அதிகமான மாணவர்களை கொண்ட பள்ளிகளில் துப்புரவு பணியாளர்கள் இல்லாததால் மிகப் பெரும் பிரச்சனை ஏற்படுவதாகவும் உயர் அதிகாரிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சுட்டிக்காட்டினர்.10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கு கூட்டத்தில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.

via News J : https://ift.tt/bmli8yV
Mediaநாடாளுமன்ற தேர்தலுக்காக 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். ஜூலை 4 முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஆய்வுப்பணி அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கும்.2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தேர்தல் அலுவல்கள் மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றார்கள். தேர்தலுக்கு பயன்படுத்தக்கூடிய வாக்குப்பதவி இயந்தரங்கள் வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ளது.இந்த இயந்திரங்கள் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்கப்படும். பின்னர் பழுதான இயந்திரங்கள் சரிசெய்யப்படும்.ஜூலை 4 ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தலைமையில் வாக்கு இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படும். அதனைத்தொடந்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள் முன்னிலையில் வாக்குபபதிவு இயந்திரங்களின் செயல்பாடு குறித்து விளக்கப்படும்.தமிழகம் முழுவதும் 68,036 வாக்குச் சாவடிகள் உள்ளது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களைப்பொறுத்து தேவைப்படும் வாக்குப்பதவு இயந்திரங்கள் அதகரிக்கப்படும். 1,78,357 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளது.
கன்ட்ரோல் யூனிட் 1,02,581, யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் Vvpat இயந்திரங்கள் 1,08 732 தயார்நிலையில் உள்ளன. ஒரு வாக்குச்சாவடியில் 1500 வாக்காளர்கள் வாக்களிக்கலாம். கால் ஆண்டுக்கு( ஜன1 ஏப்1 ஜூலை1 அக்1 )ஒருமுறை 18 வயது நிரம்பிய இளைஞர்கள் வாக்காளர்பட்டியலில் பெயர் இணைத்து கொள்ளலாம்.
அனைத்து வாக்குசாவடிகளிலும் VVPat பயன்படுத்தப்படும். என்றார்

via News J : https://ift.tt/5trNMpF
Mediaதமிழ்நாடு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் அறிவியல் துறை
படிப்பில் 20 சதவீதம் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாகவும், ஆகஸ்ட் முதல் வாரத்தில் கலந்தாய்வு நடைபெறும் என கால்நடை மருத்துவக் கல்லூரி துணைவேந்தர் செல்வகுமார் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் செல்வகுமார் வேப்பேரி பல்கலைக்கழக வளாகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 7 கால்நடை கல்லூரிகள் உள்ளன. இதில் 4 இளநிலை பட்டப்படிப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு 16,687 மாணவர்கள் சேர்ந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை 19,044 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு அதாவது 2023-24 ம் கல்வியாண்டில் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.ஜூலை 3 வது வாரம் தரவரிசை பட்டியல் வெளியிடப்படும், கலந்தாய்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்படும் அக்டோபர் மாதம் இளநிலை படிப்புக்கான கல்லூரிகள் தொடங்கும். நிகழாண்டில் புதிய பாடப்பிரிவுகளோ புதிய கல்லூரிகளோ தொடங்கும் திட்டம் இல்லை. புதிய கல்லூரிகளை தொடங்குவது அரசின் கொள்கை முடிவு.2023-24 கல்வி ஆண்டிலும் இளநிலை படிப்புகளில் +2 மதிப்பெண் அடிப்படையிலே மாணவர் சேர்க்கை நடைபெறும். நீட் தேர்வு மதிப்பெண் கணக்கில் எடுத்துகொள்ளப்படாது.அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 45 மாணவர்கள் சேர உள்ளனர் என்றார்.தொடர்ந்து பேசிய துணைவேந்தர் நாட்டு மாட்டு பால், கலப்பின மாட்டுப் பால் தொடர்பான ஆய்வுகள் இன்னும் முழுமை பெறவில்லை. ஆனால் நாட்டு மாட்டுப்பால் வகையான A1 வகை பால்களில், கலப்பின மாட்டுப்பால் வகையான A2 வகை பாலை விட அதிக நன்மைகள் உள்ளதினால் நாட்டு மாட்டு பாலை குடிப்பது நல்லது என பரிந்துரைக்கப்படுகிறது. இதே வேளையில் கலப்பின மாட்டுப்பாலை குடிப்பது தவறும் இல்லை என்றார்.

via News J : https://ift.tt/7I3jW0d
Mediaகிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து கொண்டிருந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அட்டவணையானது வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் நடைபெறும் இந்தப் போட்டிகளானது அகமதாபாத்தில் தொடங்கி அகமதாபாத்திலேயே முடிவடைகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் கூட இதே போலதான் அகமதாபாத்திலே தொடங்கி முடிவடைந்தது. இந்தப் போட்டிகள் இந்தியாவில் நடைபெற உள்ளதால் இந்திய ரசிகர்கள் கூடுதல் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.முதல் போட்டியே இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் சந்தித்துக் கொள்கின்றன. அக்டோபர் 5ல் தொடங்க உள்ள இந்தப் போட்டியானது நவம்பர் 19 ஆம் தேதி முடிவடைகிறது. கிட்டத்தட்ட கிரிக்கெட் ரசிகரகளுக்கு ஒன்றரை மாதம் திருவிழாதான் என்று சொல்லலாம். ஆனால் இந்தப் போட்டிகளில் பலப் போட்டிகள் மழையால் பாதிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது என்று கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.போட்டியின் அட்டவணையானது கீழே கொடுக்கப்பட்டுள்ளது  England vs New ZealandOctober 5AhmedabadPakistan vs Qualifier 1October 6HyderabadBangladesh vs AfghanistanOctober 7DharamsalaSouth Africa vs Qualifier 2October 7DelhiIndia vs AustraliaOctober 8ChennaiNew Zealand vs Qualifier 1October 9HyderabadEngland vs BangladeshOctober 10DharamsalaIndia vs AfghanistanOctober 11DelhiPakistan vs Qualifier 2October 12HyderabadAustralia vs South AfricaOctober 13LucknowEngland vs AfghanistanOctober 14DelhiNew Zealand vs BangladeshOctober 14ChennaiIndia vs PakistanOctober 15AhmedabadAustralia vs Qualifier 2October 16LucknowSouth Africa vs Qualifier 1October 17DharamsalaNew Zealand vs AfghanistanOctober 18ChennaiIndia vs BangladeshOctober 19PuneAustralia vs PakistanOctober 20BengaluruEngland vs South AfricaOctober 21MumbaiQualifier 1 vs Qualifier 2October 21LucknowIndia vs New ZealandOctober 22DharamsalaPakistan vs AfghanistanOctober 23ChennaiSouth Africa vs BangladeshOctober 24MumbaiAustralia vs Qualifier 1October 25DelhiEngland vs Qualifier 2October 26BengaluruPakistan vs South AfricaOctober 27ChennaiQualifier 1 vs BangladeshOctober 28KolkataAustralia vs New ZealandOctober 28DharamsalaIndia vs EnglandOctober 29LucknowAfghanistan vs Qualifier 2October 30PunePakistan vs BangladeshOctober 31KolkataNew Zealand vs South AfricaNovember 1PuneIndia vs Qualifier 2November 2MumbaiQualifier 1 vs AfghanistanNovember 3LucknowEngland vs AustraliaNovember 4AhmedabadNew Zealand vs PakistanNovember 4BengaluruIndia vs South AfricaNovember 5KolkataBangladesh vs Qualifier 2November 6DelhiAustralia vs AfghanistanNovember 7MumbaiEngland vs Qualifier 1November 8PuneNew Zealand vs Qualifier 2November 9BengaluruSouth Africa vs AfghanistanNovember 10AhmedabadIndia vs Qualifier 1November 11BengaluruEngland vs PakistanNovember 12KolkataAustralia vs BangladeshNovember 12PuneSemifinal 1November 15MumbaiSemifinal 2November 16KolkataFinalNovember 19Ahmedabadஇதில் சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இந்திய அணிக்கு மொத்தம் உள்ள 9 போட்டிகளில் ஐந்து போட்டிகள் ஞாயிற்றுக்கிழமைகளில்தான் நடைபெற இருக்கிறது.இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அக்டோபர் 08இந்தியா மற்றும் பாகிஸ்தான் அக்டோபர் 15இந்தியா மற்றும் நியூசிலாந்து அக்டோபர் 22இந்தியா மற்றும் இங்கிலாந்து அக்டோபர் 29இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா நவம்பர் 06இந்த ஐந்து போட்டிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே நடைபெறுகிறது.ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கப் போகும் இந்திய அணி கோப்பையை வென்று வெற்றிக் கொடி நாட்டுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

via News J : https://ift.tt/YTkxbBl
Mediaதிருநெல்வேலியில் பதற்றத்தை ஏற்படுத்திய திமுக எம்.பி ஞானதிரவியம் மீது வழக்கு பாய்ந்துள்ள நிலையில், சொந்தக் கட்சிக்காரர்களால் ஸ்டாலின் தூக்கம் தொலைப்பது குறித்தும்,அமைச்சர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் ஆட்சி மற்றும் கட்சியில் ஸ்டாலின் அதிகாரத்தை இழந்துவிட்டாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.என் சோகக் கதையக் கேளு தாய்க்குலமே… என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டிருக்கிறாராம் ஸ்டாலின்… இந்தப் புலம்பலுக்கு காரணமும் அவர்தான். ஏனெனில் தகுதி திறமையை மறந்து பெட்டிகளை மட்டுமே வாங்கிக் கொண்டு தேர்தலில் சீட்டுகொடுத்ததும், வெற்றி பெற்று வந்தவர்களிடம் பெட்டியை வாங்கிக்கொண்டு அமைச்சராக்கி, அவர்களிடம் இருந்து கலெக் ஷனை மட்டுமே குறிக்கோளாக வைத்திருந்ததும் தான் என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.அதன் எதிரொலியாகவே, மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதா அல்லது சொந்தக் கட்சிக்காரர்களின் களேபரங்களை தடுப்பதா என்று தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இப்போது தன் பங்குக்கு முதல்வரின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார் நெல்லை திமுக எம்.பி. ஞான திரவியம்.திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல நிர்வாகத்தின் பேராயராக இருப்பவர் பர்னபாஸ். இதன் செயலாளராக இருப்பவர் இருப்பவர் ஜெயசிங். நெல்லை திருமண்டல உயர் கல்வி நிலை குழு செயலாளராவும், திருச்சபையின் கீழ் இயங்குற பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளியின் தாளாளராவும் திமுக எம்.பி. ஞானதிரவியம் இருந்துள்ளார்.
இந்த நிலையில் ஞான திரவியம், ஜெயசிங் உள்ளிட்டவர்கள், பேராயர் பர்னபாஸிடம் நிர்வாக ரீதியில் முரண்பாடு காட்டியதால், ஞான திரவியத்தின் பதவிகளை, பேராயர் பறித்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், பேராயர் தரப்பைச் சேர்ந்த மதகுருவை, ஞானதிரவியம் தரப்பினர் தாக்கியுள்ளனர். கிறிஸ்தவ சிறுபான்மை மக்களிடையே திமுக எம்பியின் இந்த செயல் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் தாக்குதலுக்கு உள்ளனவரின் புகாரின் பேரில் திமுக எம்.பி.ஞானதிரவியம் உள்ளிட்ட 33 பேர்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது…நிலைமை இப்படி இருக்க அவரிடம் 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என திமுக தலைமை கேட்டு இருக்கிறது…திமுக எம்.பி. ஒருவரின் இந்த செயலால் மட்டும் ஸ்டாலின் நொந்து நூடுல்ஸாகி விடவில்லை… ஏற்கனவே அமைச்சர் செந்தில்பாலாஜி கைது, அமைச்சர்கள் சிவசங்கர், பொன்முடி ஆகியோர் மீதான ஊழல் புகார்கள், கூட்டணிக் கட்சியினரிடையே திமுகவினர் மேற்கொள்ளும் முட்டல் மோதல்கள் என்று எல்லாம் ஒன்று சேர்ந்து அவரை நிலைகுலையச் செய்துள்ளன.தனது சொந்த கட்சியில் நடக்கும் களேபரங்களை தடுக்கமுடியாமல் ஸ்டாலின் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், ஆட்சியிலும், கட்சியிலும் ஸ்டாலினுக்கான அதிகாரம் கேள்விக்குறிதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/Rx9HkJf
Mediaதிருச்சியில் தன்னைவிட யாரும் பணக்காரர்கள் இருக்கக்கூடாது என்று நினைத்து திமுக அமைச்சர் நேரு, குவாரி வழக்கில் தன்னை சிக்க வைத்துள்ளதாக ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டி பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருச்சி மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில், ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான கல் குவாரிக்கு வருவாய்த் துறை 23 கோடி ரூபாய் அபராதம் விதித்திருந்தது. இந்நிலையில் இதற்கு திமுக அமைச்சர் நேரு தான் காரணம் என கூறி திமுக எம்எல்ஏ பழனியாண்டி பத்திரிக்கையாளர் ஒருவரிடம் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த திமுக ஆட்சியில் தன்னை கொலை வழக்கிலும், தற்போதைய ஆட்சியில் குவாரி வழக்கிலும் திமுக அமைச்சர் நேரு தன்னை சிக்க வைத்திருப்பதாக திமுக எம்எல்ஏ பழனியாண்டி குற்றம் சாட்டியுள்ளார். 

via News J : https://ift.tt/rd8MlnU
Mediaபக்ரீத் திருநாளை முன்னிட்டு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் வாழ்த்து அறிக்கை : உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவரும் இறை நினைவோடும், தியாச் சிந்தனையோடும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில் எனது உளங்கனிந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதில்  மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.பக்ரீத் திருநாள் கொண்டாடப்படுவதன் நோக்கமே, இறைத் தூதரின் தியாங்களை எண்ணிப்பார்த்து அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.இத்தியாகத் திருநாள் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுவபவர்களுக்கு உதவிபுரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்;  எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும் நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால் உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.சகோதரத்துவமும், ஈகை குணமும் அருட்கொடையாக உலகில் நிலவிட வேண்டும்; விட்டுக்கொடுத்தலும், மத நல்லிணக்கமும், மனித நேயமும் தழைத்தோங்க வேண்டும்; அனைரது வாழ்வில் வளமும் நலமும் பெருகிட வேண்டும் என்று மனதார வாழ்த்துவதோடு, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் புரட்சித் தலைவர் எம்.ஜிஆர், புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில் எனது உளமார்ந்த பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாழ்த்து செய்தியினைக் கூறியுள்ளார்.

via News J : https://ift.tt/ZF2WpRL
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/06/dmk-govt-eps.jpg">Media</a><strong>முறையாக அனுமதி பெற்ற கல், கிரஷர் மற்றும் எம்.சாண்ட் குவாரி தொழில்களுக்கு மூடுவிழா காணத் துடிக்கும் நிர்வாக திறனற்ற விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!</strong> மாண்புமிகு அம்மாவின் ஆட்சியில் 10 ஆண்டுகளாக எந்தவிதமான அரசியல் குறுக்கீடுகளுமின்றி கிரஷர் மற்றூம் கல் குவாரிகள் சுதந்திரமாக இயங்கி வந்தன. குறிப்பாக, தமிழகத்தின் இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது தலைமையிலான அம்மாவின் அரசு கட்டுமானப் பணிகளுக்கு எம். சாண்ட்-ஐ பயன்படுத்த ஊக்குவித்தது.விடியா திமுக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மற்ற துறைகளைப் போலவே கல் குவாரிகளுக்கும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது என்றும்; குறிப்பாக கடந்த சில நாட்களாக சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் கல்குவாரிகளை பார்வையிட்டு பல்வேறு புகார்களைக் கூறி, தேவையற்ற முறையில் குவாரிகளை முடக்கி நசுக்க நினைக்கிறது என்றும் குற்றஞ்சாட்டி கல்குவாரி உரிமையாளர்கள் தங்களது உற்பத்தியை நிறுத்திவிட்டனர். இதனால் தமிழகமெங்கும் எம்.சாண்ட் மற்றும் ஜல்லி கற்களின் உற்பத்தி முற்றிலுமாக பாதிக்கப்பட்டு கட்டுமானத் தொழில் முழுமையாக நின்றுவிட்டது. குறிப்பாக, சென்னையில் மெட்ரோ ரயில் பணி மற்றும் அரசு மருத்துவமனைகள் கட்டும் பணிகள் பாதிக்கப்பட்டன.இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் குவாரி தொழிலை நம்பியுள்ள லாரி தொழில் மற்றும் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வட்டிக்கு பணம் வாங்கி வீடு கட்டும் ஏழை, எளிய, நடுத்தர மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சூழலை சரிசெய்ய,* பல்வேறு கனிமவள விதிகளின்படி, அனைத்து குவாரிகளுக்கும் 30 வருடங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதியும், குவாரி அனுமதியும் வழங்க வேண்டும்.* அம்மிக்கல், ஆட்டுக்கல் போன்றவற்றை தயாரிக்கும் குடிசைத் தொழிலாளர்களுக்கான அனுமதியினை சம்பந்தப்பட்ட மாவட்ட் ஆட்சியத் தலைவர்களே வழங்க சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.* இந்த விடியா ஆட்சியில் குவாரி லைசென்ஸ் புதுப்பிக்க காலதாமதம் ஆகின்றன. எனவே, காலதாமதமின்றி விரைவாக குவாரிகள் புதுப்பிக்கப்பட வேண்டும்.* சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் என்ற பெயரில் குவாரி உரிமையாளர்களிடம் பணம் கோரி மிரட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.* டிரான்சிட் பாஸ் மற்றும் ஸ்டாக் யார்டு நடைமுறையை நீக்க வேண்டும்.* அரசு புறம்போக்கு நிலங்களில் ஏலம் விடும்போது, தற்போதுள்ள நடைமுறைப்படி குவாரிக்கு உண்டான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வரைபட பிளான் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை, கல் குவாரி உரிமையாளர்கள் விடியா திமுக அரசிடம் முன்வைத்துள்ளனர்.மக்கள் நல அரசு என்பது, நாட்டு மக்களின் நலனுக்காகவும், அவர்களின் வாழ்வு வளம் பெற வேண்டும் என்பதற்காகவும், திட்டங்கள் தீட்டப்பட வேண்டும். அரசின் வழிமுறைகளும், நெறிமுறைகளும் மக்களின் கழுத்தை நெறிக்குமாறு இருக்கக்கூடாது. ஆனால், இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் தமிழக மக்களின் குரல்வளையை இழுத்துப் பிடிக்கும் அளவுக்கு சட்ட திட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் ஒரு சிலருக்கு அதே சட்ட திட்டங்கள்ல் வானளவு வளைக்கப்படுகிறது.உதாரணமாக, இரவு 12 மணியளவில் அரசின் பதிவுத்துறை அலுவலகங்கள் திறக்கப்பட்டு பத்திரப் பதிவு பணிகள் நடைபெறுவதாக செய்திகள் மூலம் தெரிய வருகிறது.கடந்த சில நாட்களாக, விடியா திமுக அரசின் சுற்றுச் சூழல் துறை அதிகாரிகளும், கனிம வளத்துறை அதிகாரிகளும் குவாரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தி, தொழிலை முடக்கும் விதமாக நியாயமின்றி அபராதம் விதிக்கும் போக்கு தொடங்கி உள்ளதாகவும், அதனை எதிர்த்தே தற்போது தாங்கள் உற்பத்தியை நிறுத்தியுள்ளோம் என்ற குவாரி மற்றூம் கிரஷர் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், கல்குவாரி தொழில் செய்வோர் துறை அமைச்சர்களை சந்திக்க நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறியதாக செய்திகள் மூலம் தெரிய வருகின்றன.ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு பிறகு தமிழ்நாட்டில் உள்ள வணிகர்கள் தாங்கள் விற்பனை செய்யும் பொருட்களுக்கான வரியினை அரசுக்குச் செலுத்தி, பயமின்றி வணிகம் செய்து வருகின்றனர். அதேபோல், மாநில அரசும் கல் குவாரி மற்றும் எம். சாண்ட் ஆகியவற்றிற்கு நேர்மையாக வரி விதித்தால், அவ்வரியினை செலுத்தி நிம்மதியாக, நேர்மையாக தொழில் செய்ய தாங்கள் தயாராக இருப்பதாக கல் குவாரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் மூலம் தெரிய வருகிறது. இதன்மூலம் மாநில அரசின் வரி வருவாயும் அதிகரிக்கும். தற்போது டாஸ்மாக் பார் நடத்துவதற்கான அனுமதியினை இந்த விடியா திமுக அரசு வழங்காததால், சட்டவிரோத பார்கள் நடத்தப்பட்டு, அதன் வருமானம் தனிப்பட்ட ஒரு சிலரின் பாக்கெட்டுகளுக்கு சென்றதுபோல், குவாரி வருமானம் தனி…
Mediaநெல்லையில் நடைபெற்ற 2ஆம் கட்ட அகழாய்வு பணியில் புலி என பொறிக்கப்பட்ட கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடு கண்டறியப்பட்டுள்ளது.வள்ளியூர் அருகே துலுக்கர்பட்டி கிராமத்தில் நம்பியாற்றுப்படுகையில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 450க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ”புலி” என பொறிக்கப்பட்ட கருப்பு – சிவப்பு பானை ஓடு கிடைத்துள்ளது. இதன் மூலம் நம்பியாற்றுப்படுகையில் எழுத்தறிவு உள்ள மக்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம் கிடைத்துள்ளது. இதுகுறித்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மேலும்
புதிய தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

via News J : https://ift.tt/0Yna1xB
Mediaஅமலாக்கத்துறை விசாரணையில் செந்தில் பாலாஜி வாயைத் திறந்தால் திமுகவில் உள்ள முக்கிய நபர்கள் சிறை செல்வார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் காட்சிகள் இன்னும் மாறவில்லை என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எப்படி செந்தில் பாலாஜி மதுபான பாட்டிலுக்கு பத்து ரூபாய் வாங்கினாரோ, அதே நிலைமைதான் தற்போதும் தொடர்கிறது எனவும், இன்று வரை மதுபான பாட்டில்களுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கப்படுகிறது எனவும் குற்றம்சாட்டினார்.

via News J : https://ift.tt/luyHIRZ
1
Mediaதமிழ்நாட்டு இளைஞர்களைப் பொறுத்தவரை அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வத்துடன் இருப்பவர்களாக உள்ளார்கள். அதற்கு அவர்களின் பொருளாதாரச் சூழலும், குடும்ப பின்புலமும் காரணமாக இருக்கிறது. எப்படியாது அரசு வேலையை வாங்கிவிட்டால், குடும்பத்தின் வறுமையைப் போக்கி வாழ்வில் வளம் பெறலாம் என்ற லட்சியக் கனவுடன் இருக்கும் அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு முட்டுக்கட்டை போடுவதுபோலான செயல்களில் ஈடுபடுகிறது விடியா திமுக அரசு.ஆம். குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ உட்பட பல்வேறு பதவிகளுக்கு நடத்தப்பட்ட அரசு காலி பணியிடங்களுக்கான தேர்வு முடிவானது எப்போது வெளிவரும் என்ற தெரியாமல் தேர்வர்கள் விழிபிதுங்கி இருக்கிறார்கள். இதனையொட்டி எதிர்க்கட்சித் தலைவரின் வலியுறுத்தல்களின் பேரில் தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது என்பதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.அதன்படி, க்ரூப் 2, 2ஏ பதவிகளில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 446 இடங்களுக்கு முதல்நிலை தேர்வு நடத்தப்பட்டு, தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வு நடந்து முடிந்தது. இவர்களுக்கான தேர்வு முடிவு வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல், குரூப்-1 பதவிகளில் வரும் 95 காலி பணியிடன்ங்களுக்கான முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியான  நிலையில் ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி  முதல் 13 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது.இதைத் தவிர, மேலும் 10 வன பயிற்சியாளர்  பணியிடங்கள், 178 உதவிப் பிரிவு அலுவலர் பணியிடங்கள், குரூப் 3-ல் வரும் ஒருங்கிணைந்த சிவில் சேவைகள் துறையில் 33 பணியிடங்கள், புள்ளியியல் துறை 217 பணியிடங்கள், 731 கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்கள், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள், 9 உதவி வன பாதுகாவலர், வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள், 27 நூலகர் பணியிடங்கள், 121 வேளாண் உதவி இயக்குநர் பணியிடங்கள் போன்றவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான முடிவு அடுத்த மாதத்தில், அதாவது ஜூலை மாதம் வெளியிடப்பட உள்ளது.மேலும், 825 சாலை ஆய்வாளர் பணியிடங்கள், 1083 ஒருங்கிணைந்த என்ஜினியரிங் பணியிடங்கள் ஆகியவற்றுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும் என்றும், மீன்வளத்துறையில் 66 ஆய்வாளர் பணியிடங்களுக்கு வாய்மொழித் தேர்வு ஜூலை 11 மற்றும் 12 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

via News J : https://ift.tt/lq9gxAw