News J
600 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஅதிமுக சார்பாக மதுரையில் நடைபெற்ற வீர வரலாற்றிம் எழுச்சி மாநாட்டினை அனத் கொண்டு சென்ற ஊடக நணபர்களுக்கு மனமார்ந்த நன்றி. இன்றைய தினம் சேலத்தில் இருந்து மதுரை வந்து மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, உங்களை சந்திக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி பின்வருமாறு தன்னுடைய கருத்துகளை தெரிவித்தார்.கொடநாடு விவகாரம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு,சட்டமன்றத்திலேயே இதனை முதலைச்சர் சொல்லியிருக்கலாமே, திமுக ஆட்சிகாலத்தில் எத்தனை சம்பவம் நடைபெற்றுள்ளது. மேலும் நாட்டில் எவ்வளவோ சம்பவம் நடைபெற்று உள்ளது, ஆனால் அதிமுக ஆட்சிகாலத்தில் நடைபெற்ற ஒரே சம்பவத்தை மட்டும் தொடர்ந்து பேசுவது ஏன்? கொடநாடு சம்பவத்தில் ஈடுபட்ட அந்தக் குற்றவாளிகளை சிறை எடுத்தது அதிமுகதான். வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது வாதாடியது திமுக அமைச்சர்தான். இந்தக் குற்றவாளிகளுக்கு ஜாமீன்தாரராக இருந்தது திமுகக்காரர்தான். சிபிஐடி க்கு இந்த வழக்கை கொண்டு செல்லுங்கள். இந்த ஜாமீன் தாரருக்கும் குற்றவாளிகளுக்கும் என்ன சம்பந்தம்? இதில் ஈடுபட்ட குற்றவாளிகள் கேரளாவைச் சேர்ந்தவர்கள். ஏற்கனவே, அவர்கள் கொடும் குற்றம் செய்த குற்றவாளிகள். இவர்களை ஜாமீனில் எடுக்க திமுக முனைப்புக் காட்டியது ஏன்? ஆட்சிப்பொறுப்பேற்ற திமுக, விசாரணை கமிஷன் அமைத்து நீதிமன்றத்தில் சுமார் 790 பக்கம் தாக்கல் செய்ததாகவும், வழக்கு முடிந்துவிட்டதாகவும் தகவல்.  சிபிசிஐடி க்கு இந்த வழக்கை கொண்டுசெல்லுங்கள்.காவிரி விவகாரம் தொடர்பாக,  அதாவது, ஏற்கனவே அம்மா ஆட்சியில் சட்டப் போரட்டம் நடத்தி காவிரி பிரச்சினை தீர்வு காணப்பட்டது. மாதமாதம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கான டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு அனுப்ப காரணமாக இருந்தது அதிமுக. அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 22 நாட்கள் போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தை ஒத்தி வைத்தோம்.  திமுகவினர் என்ன செய்திருக்கிறார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.கூரையேறி கோழி பிடிக்க முடியாதவர்ன், வானம் ஏறி வைகுண்டம் போனானாம் என்ற பழமொழி போல் கர்நாடகா சென்ற முதலமைச்சர் ஸ்டாலினை கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் சிவக்குமார் வரவேற்றார். அப்போது காவிரி நதிநீர்ப் பிரச்சனையைப் பற்றி பேசுவது என்ன தவறா?அதிமுக எப்போது அடிமை கிடையாது. எந்தக் கட்சிக்கும் அடிமை கிடையாது. திமுகதான் அடிமை. அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் ஆட்சிக்கு வரவேண்டும். நாட்டுமக்களைப் பற்றி கவலையில்லை.நீட் விவகாரம் தொடர்பாக, நீட் தேர்வு ரகசியம் தெரியும் என்று உதயநிதி கூறினார். ஆட்சிக்கு வரும்போது ஒரு பேச்சு. இப்போது ஒரு பேச்சு. 2010 ல் காங்கிரஸ் ஆட்சியில்தான் முதன்முதலாக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை உதயநிதி கூட ஒப்புக்கொண்டார். அன்றைக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத், மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் காந்தி செல்வம். ஆக நீட்டைக் கொண்டுவந்ததே திமுக தான்.தேர்தல் பயத்தினால்தானே குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்று சொல்கிறார்கள். இரண்டுவருடமாக கும்பகர்ணத் தூக்கம் போட்டுக்கொண்டுவந்தார்கள். மின்கட்டணம், பத்திரப்பதிவு கட்டணத்தைக் குறைக்க சொல்லுங்கள். அத்தியாவசியப் பொருட்கள் 40 சதவீதம் விலை குறைந்துவிட்டது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் தகுந்தப் பாடத்தினை திமுகவிற்கு புகட்டுவார்கள்.  இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது கருத்துகளை தெரிவித்தார்.

via News J : https://ift.tt/wVzhTD2
Mediaநிலவில் ஆக்சிஜன் மற்றும் கனிம வளங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஹைட்ரஜனை தேடும் பணியில் பிரக்யான் ரோவர் ஈடுபட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிலவில் தரை இறங்கிய விக்ரம் லேண்டரிலிருந்து வெளியேறிய பிரக்யான் ரோவர், நிலவின் தென் துருவத்தில் கனிம வளங்கள் மற்றும் வெப்பநிலை குறித்து தொடர் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. முன்னதாக 10 சென்டிமீட்டர் ஆழம் வரை உள்ள நிலவின் வெப்ப நிலை குறித்து ஆய்வு செய்த பிரக்யான் ரோவர், இதனை வரைப்படம் வாயிலாக தகவல் பரிமாற்றம் செய்திருந்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் சல்பர் இருப்பதை உறுதி செய்துள்ளது. இதனை தொடர்ந்து ஆக்சிஜன், கால்சியம், இரும்பு, அலுமினியம், டைட்டானியம், மெக்னீசியம், சிலிக்கான் உள்ளிட்ட கனிம வளங்கள் நிலவில் இருப்பதை பிரக்யான் ரோவர் கண்டறிந்துள்ளது. தற்போது நிலவில் ஹைட்ரஜனை தேடும் பணியினை பிரக்காயான் ரோவர் மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.


via News J : https://ift.tt/s3n7x2A
Mediaமாணவர்கள் school-ஐ கட் அடித்தால், பெற்றோருக்கு சிறை தண்டனை கொடுக்கிறது ஒரு நாட்டு அரசு.. எந்த நாடு அது? என்ன சட்டம் அது? இதோ இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம் .மாணவர்கள் பள்ளிக்கு விடுமுறை எடுத்தால் பெற்றோர்களுக்கு சிறைபொதுவா பிள்ளைகளை லீவு போடாமல் பள்ளிக்கு அனுப்புவது பெரும்பாலான பெற்றோர்களுக்கு சவாலான காரியமாகத்தான் இருக்கிறது. தொடர்ச்சியான விடுமுறை மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால் சவுதி அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. மாணவர்கள் குறிப்பிட்ட நாட்கள் வரை வகுப்பிற்குச் செல்லவில்லை என்றால், பெற்றோர்கள் கைது செய்யப்படுவார்கள் என சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது.மாணவர் மூன்று நாட்களுக்கு வகுப்புக்கு வரவில்லை என்றால் முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு மாணவர்களின் பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் ஐந்து நாட்களுக்கு வகுப்பைத் தவறவிட்டால், இரண்டாவது எச்சரிக்கை பெற்றோருக்கு அறிவிக்கப்படும் என்றும் பத்து நாட்கள் வகுப்பை புறக்கணித்தால் மூன்றாவது முறையாக பெற்றோருக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என தெரிக்கப்பட்டுள்ளது.மேலும், மாணவர் பதினைந்து நாட்கள் பள்ளிக்குச் செல்லவில்லை என்றால், அந்த மாணவர் கல்வித் துறையின் கீழ் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு தரமான கல்வியை வழங்க சவுதி அரசு புதிய திட்டம் இதற்கும்மேல், சரியான காரணமின்றி குழந்தைகள் 20 நாட்கள் விடுமுறை எடுத்தால், அவர்களின் பெற்றோர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. குழந்தை 20 நாட்களுக்கு பள்ளிக்கு வரவில்லை என்றால், பள்ளி முதல்வர் அந்த குறிப்பிட்ட மாணவர்களின் பெற்றோர் குறித்த தகவலை கல்வி அமைச்சகத்திற்கு
அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.இது தொடர்பாக குழந்தையின் வாக்குமூலத்தைப் பெற்ற பிறகு, பெற்றோரின் தவறால் குழந்தை வகுப்புக்கு வரவில்லை என நிரூபிக்கப்பட்டால், பெற்றோர்களுக்கு அதிகபட்சமாக சிறை தண்டனை வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகளுக்கு தடையற்ற, தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் சவுதி அரசு மேற்கொண்டுள்ள இந்த முயற்சி கல்வியாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது…

via News J : https://ift.tt/2oEacxj
Mediaநாம் நமது பள்ளிக்கூடங்களில் வழிபாடு நாட்களில் உறுதிமொழிக் கூறுவது நடைமுறையில் உள்ளது. ”இந்தியா எனது தாய்நாடு, இந்தியர்கள் அனைவரும் எனது உடன் பிறந்தவர்கள்” என்று அந்த உறுதிமொழியானது அமைந்திருக்கும். நம் அனைவரிடமும் சகோதரத்துவத்தினை வளர்த்தெடுப்பதற்கு சில விழாக்கள் இந்திய அளவில் கொண்டாடப்படுகின்றன. இந்தியா, கலாச்சார மிக்க விழாக்களை அதிக அளவு கொண்டாடும் ஒரு நற்திருநாடு. அப்படி இந்தியாவில் கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று ரக்‌ஷா பந்தன் ஆகும்.ரக்‌ஷா பந்தன் : ரக்‌ஷா பந்தன் அன்று பெண்கள் தங்களின் சகோதரர்களுக்கு “ராக்கி” என்று அழைக்கப்படும் கயிறு ஒன்றினை கையில் கட்டிவிடுவர். அதனைக் கட்டிவிட்டு நெற்றியில் திலகமும் இடுவர். இந்த நிகழ்வு தென்னிந்தியாவை விட, வட இந்தியாவில் பிரபலம். அதற்கு ஒரு புராணக் காரணமும் உண்டு.Raksha Bandhan Wishes: Top 10 Wishes Sisters Can Give Their Brothersமகாபாரத புராணத்தின்படி, கிருஷ்ணரின் கையில் குருதி வடியும்போது, திரெளபதி தன் புடவையின் நுனியைக் கிழித்து இரத்தம் வரும் இடத்தில் கட்டி விடுவார். இப்படி தன் மீது அன்பு கொண்டிருக்கும் திரெளபதியிடம் கிருஷ்ணர் வாக்கு ஒன்றினை தருவார். “என்ன இடர் வந்தாலும், நீ கூப்பிட்டக் குரலுக்கு ஓடோடி வருவேன் திரெளபதி” என்பது அவரின் வாக்கு. அதன்படி, கெளரவர்கள் மத்தியில் திரெளபதி மானபங்கம் படுத்தப்படும்போது கிருஷ்ணர் காப்பாற்றுவார். இதன் நிகழ்வின் மூலம் அண்ணன் தங்கை அன்பு வெளிப்பட்டு இருப்பதால், இதனையே ரக்‌ஷா பந்தனாக இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடி மகிழ்கின்றனர் நம்மவர்கள்.இந்த நிகழ்வில் சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கட்டிவிடுதவதுபோல, சகோதரர்கள் சகோதரிகளுக்கு பரிசிப் பொருட்களையும். அவர்களை பாதுகாப்பாக பேணிக்காப்போம் என்கிற உறுதிமொழியையும் அளிக்கிறார்கள்.

via News J : https://ift.tt/5Nroykq
Mediaஇந்தியாவில் இந்தாண்டு உலகக்கோப்பை போட்டியானது நடைபெற உள்ளது. அதற்கு முதற்கட்டமாக ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. ஆசியக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக பாகிஸ்தானில் இந்தப் போட்டிகள் நடத்தப்படுவது இதுவே முதல்முறையாகும்.ஆசியக் கோப்பை1984 ஆம் ஆண்டு இருந்து இந்த ஆசியக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை இந்தப் போட்டியானது நடைபெறும். ஆசியா கண்டத்தில் உள்ள முக்கிய நாடுகள் இந்தப் போட்டியில் பங்குகொள்கின்றன. முதலில் ஐம்பது ஓவர் போட்டியாக இருந்த இந்த ஆசியப் போட்டிகள் பின்னர் இரசிகர்களின் மனநிலையைப் பொறுத்து இருபது ஓவர் போட்டியாக மாற்றப்பட்டுவிட்டது. அதற்கு இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளின் மோகமும் ஒரு காரணம். இந்தப் போட்டிகளில் இந்திய அணியானது ஏழு முறையும், இலங்கை அணியானது ஆறு முறையும், பாகிஸ்தான் அணியானது இரண்டு முறையும் கோப்பையை வென்றுள்ளது.When will Asia Cup 2023 schedule be announced?கோப்பை வரலாறு1984, 1988, 1990/91, 1995, 2010, 2016, 2018 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியானது ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியது. இதில் 2016 லிருந்து ஐம்பது ஓவராக இருந்த ஆசியக் கோப்பைப் போட்டியானது இருபது ஓவராக மாற்றப்பட்டது. 1986, 1997, 2004, 2008, 2014, 2022 ஆகிய ஆண்டுகளில் இலங்கை அணியானது ஆசியக் கோப்பையைத் தன் வசம் வைத்துக்கொண்டது. கொரோனா காரணமாக 2020ல் ஆசியக் கோப்பைப் போட்டியானது நடத்த முடியாமல் போனதால், 2022 ல் நடத்தப்பட்டது. இதில் கோப்பையை வென்ற இலங்கை அணி, நடப்புச் சாம்பியனாக கோலோச்சுகிறது. 2000, 2012 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணி கோப்பையை தன் வசம் வைத்திருந்தது. தற்போது இன்று பாகிஸ்தானில் தொடங்க உள்ள இந்த ஆசியக் கோப்பைப் போட்டியில் நேபாளம் அணியானது பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை மேற்கொள்ள இருக்கிறது.இந்திய வீரர்கள் விவரம் :ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, சுப்மன் கில், ஸ்ரேயஸ் ஐயர், சூர்ய குமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ஜடேஜா, இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், ஜஸ்பிரிட் பும்ரா, ப்ரசித் கிருஷ்ணா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ்

via News J : https://ift.tt/jYqxTg2
Mediaதிமுகவுல வாரிசு அமைச்சரோட கடைக்கண் பார்வை தன்மேல விழலும்னு சீனியர்கள் எல்லாம் அவரையே சுத்தி சுத்தி வர்றதும், அவருக்காக எடுப்பு வேலை எல்லாம் பார்க்கிறதுமாவே இருந்துக்கிட்டு இருக்காங்க…ஏற்கனவே அண்ணா அறிவாலயத்துல நடந்த திமுக இளைஞரணி புதிய நிர்வாகிகள் கூட்டத்துல பேசுன ஆ.ராசா, எதிர்கால தலைமைக்கான ஏற்பு உதயநிதிக்கு இருப்பதாவும், 20 வருஷம் கழிச்சி திமுகவுக்கு உதயநிதி தலைமை தாங்குவருன்னு ஜோசியம் சொல்லிட்டு இருந்தாரு…இப்படி தன்னோட எதிர்காலத்துக்காக வாரிச சுத்தி சுத்தி வர்ற ஆ.ராசா அதுக்காக, திமுக தொண்டர்கள எல்லாம் சகட்டு மேனிக்கு திட்டுறதும், மரியாதை இல்லாம நடத்துறதுமா இருக்காராம். கடந்த 28ஆம் தேதி பெரம்பலூருக்கு வந்த உதயநிதிக்கு வரவேற்பு கொடுக்க ஆ.ராசா திட்டம் போட்டிருக்காரு… தொண்டர்கள் ஒரே இடத்துல கும்பலா நின்னதால, எல்லாம் பிரிஞ்சி வழிநெடுக நில்லுங்க…அப்பத்தான் கூட்டமா காட்டமுடியும்னு சொல்லியும் தொண்டர்கள் கண்டுக்கிடாததால, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களப் பார்த்து யாருடா ஏற்பாடு செய்தது காட்டுக் கத்தல் கட்டியிருக்காராம்… சமீபத்துல நடத்துன நீட் உண்ணாவிரதத்துலயும், தொண்டரப் பார்த்து, ஏய் லூசுப் பயலே, உட்காருடான்னு ஒருமையில திட்டினாரு… இப்படி தொண்டர்கள திட்டுறதும், கீழ்த்தரமா பேசுறதும் தான் ஆ.ராசாவோட சமூக நீதியா? நீங்க திமுக வாரிசுகளுக்கு காவடி எடுத்து பதவிகளையும் பொறுப்புகளையும் வாங்கிக் குவிச்சிக்கிட்டு போறதுக்கு அப்பாவி தொண்டன ஏன் இப்படி அடிமை மாதிரியே நடத்துறீங்கன்னு நாங்க சொல்லல… உருக்குள்ள பேசிக்கிறாங்க


via News J : https://ift.tt/UAWvBib
Mediaநாங்கள் ஆட்சி வந்துவிட்டால் இதை செய்வோம் அதை செய்வோம் என்று வாய்ச்சவாடல் விட்டு எடுத்த செயலை சரியாக முடிக்கத் தெரியாத நிர்வாக திறனற்ற அரசாக செயல்பட்டு கொண்டிருக்கிறது ஸ்டாலின் அரசு. காவிரி நதிநீர் விவகாரம், நீட் விவகாரம் என்று எந்த விவகாரத்தை எடுத்துக்கொண்டாலும் தீர்வினை நோக்காமல், கள்ள மவுனமும் அரசியல் ஆதாயத்தையும் தேடி வருகிறது இந்த விடியா திமுக அரசு.அதிமுக மதுரையில் நடத்திய பிரம்மாண்ட எழுச்சி மாநாட்டைப் பார்த்து நடுநடுங்கி போயிருக்கும் திமுக, அதனைப் போலவே தாங்களும் மாநாடு ஒன்றினை நடத்த திட்டம் வகுத்துள்ளது. எப்போதுமே அதிமுக கொண்டுவந்த திட்டங்களைத் தான் காப்பி அடிக்கும் என்றால், மாநாட்டையும் காப்பி அடிக்கும் அவலநிலைக்கு திமுக வந்திருக்கிறது. இந்த நிலையை நினைத்து பார்த்தால் பரிதாபமாக உள்ளது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.Mediaஇது ஒருபக்கம் இருக்க, ஆட்சிக்கு வந்தால் நீட்டை ஒழிப்போம், காவிரி உரிமையை மீட்போம் என்று ஏக வசனத்திற்கு பேசிவிட்டு இப்போது அதற்கு எதிர்மாறாக நடந்துகொண்டிருக்கிறது இந்த விடியல் கும்பல். நீட்டை ஒழிக்க போலியான போராட்டம், காவிரி பிரச்சனையைத் தீர்க்க சொன்னால் மவுன விரதம் என்று தன்போக்கில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது விடியா அரசு. குறுவை சாகுபடி பயிர்கள் கருகி போவதையும் அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதையும் தன்னை டெல்டாக்காரன் என்று மார்தட்டிக் கூறும் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருப்பது தமிழக அரசியலின் கேலிக்கூத்து.ஆனால், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் ஆட்சி காலத்தில் சட்ட போராட்டங்கள் நடத்தி காவிரி நதி நீர் பங்கீட்டு பிரச்சனையைத் தீர்த்து வைத்தார். அதேபோல அதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், காவிரி விவகாரத்திற்காக குரல் கொடுத்து போராட்டம் நடத்தி நாடாளுமன்றத்தையே 22 நாட்கள் ஸ்தம்பிக்க வைத்தனர். ஆனால் இந்த ஆளும் விளம்பர கும்பல் காவிரி பிரச்சனைக்கு வாய்திறக்காமல், தீர்வு காணாமல், அரசியல் பிழைப்புவாதம் நடத்திக் கொண்டிருக்கிறது. இதை எதிர்த்துக் கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நசுக்குவதிலும், அவர்களின் தலைவர்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவதிலும் முனைப்புக் காட்டும் திமுக, மக்கள் நலனில் எப்போது  தீவிரம் காட்டும் என்பது கேள்வியே?காட்சி மாறும்; ஆட்சி மாறும்.. நாடாளுமன்றத் தேர்தல் திமுகவிற்கு சம்மட்டி அடி கொடுக்கும் என்பதில் எந்தவித குழப்பமும் இல்லை. ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஊருக்கெல்லாம் வெளிச்சமாகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். 

via News J : https://ift.tt/8KhVCxY
Mediaநண்டு கொழுத்தா வளையில தங்காதும்பாங்க… அதே மாதிரியான தொணியிலதான் நடந்துக்கிட்டு இருக்காரு தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவரா இருக்குற திண்டுக்கல் லியோனி…வாய் இருக்குங்குறதுக்காக வகை தொகை இல்லாம பேசி வாங்கிக் கட்டிக்கிட்டு இருக்கிற அந்த பலகுரல் பச்சோந்தி, இப்போ புதுசா, அவர் அத சொன்னாரு.. இவர் இத சொன்னாருங்குற போர்வையில, புரட்சித்தலைவி தொடர்பா விஷமத்தனமா பேசியிருக்காரு… திமுக மேடைகள்ல பேசுறதுக்காக கொடுக்கிற paymentக்காக, உங்களிலேயே நான்தான் மிகப்பெரிய கோமாளிங்கிற ரேஞ்சுல மிமிக்ரி, மோனோ ஆக்டிங்லாம் செஞ்சிக்கிட்டு இருக்குற லியோனியோட விஷமத்தனமான பேச்சு தொடர்பா அதிமுக சார்பா காவல்துறை உயர் அதிகாரிகள்கிட்ட பல்வேறு இடங்களிலும் புகார் அளிக்கப்பட்டிருக்கு… அதுமட்டுமில்லாம அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் கொதிச்சு கொந்தளிச்சு போய் தங்களோட வன்மையான கண்டனங்களையும் தெரிவிச்சிகிட்டு இருக்காங்க…ஏற்கனவே திண்டுக்கல் லியோனி பண்ணுன சில்லுண்டித் தனங்கள் எல்லாம் பொதுமக்களுக்கு வெட்டவெளிச்சமானதுதான்….சட்டமன்ற தேர்தலப்போ பிரசாரம் பண்ணுறேங்கிற பேருல தாய்க்குலத்தை இடுப்பு பெருத்து போயிருக்கு… பேரல் மாதிரி மாறிப்போயிருக்குன்னு சொல்லி கொச்சைப் படுத்துனவருதான் இந்த திண்டுக்கல் லியோனி…2021 தேர்தல்ல திமுக ஜெயிச்சதும், திண்டுக்கல் லியோனிய தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் புதிய தலைவரா நியமிச்சிச்சு…அதுக்கப்புறம் கூட்டங்கள்ல கலந்துகிட்டு பேசும்போது, இந்து மத கடவுகள்கள அவதூறா பேசுறது, இந்து மத சடங்குகள கொச்சைப்படுத்துறதுன்னு ட்ராக்க மாத்திக்கிட்ட லியோனி மேல இந்து அமைப்புகள் வழக்குகள தொடர்ந்துருக்காங்க.சமீபத்துல கூட மலேசியாவின் பினாங்கு நகரத்துல நடந்த பட்டிமன்றத்துக்கு போன லியோனி, 2 மணிநேரம் தாமதமா போயிருகாரு. அதனால ஆத்திரமடைஞ்ச மலேசியா வாழ் தமிழர்கள், நிகழ்ச்சியை பாதியிலேயே நிறுத்தி லியோனிய திருப்பி அனுப்பியிருக்காங்க. அதுதொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாச்சு.கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட கும்பகோணத்துல நடந்த திமுக பொதுக்கூட்டத்துல லியோனி கொடுத்த ஒவ்வொரு மோனோ ஆக்டிங்கும் ஆபாசத்த அள்ளித் தெரிக்கிறமாதிரி இருந்துச்சு…
மாணவர்கள் அரசியலுக்கு வரலாமா, கூடாதான்னு கேட்ட கேள்விக்கு கருணாநிதி எப்படி பதில் சொன்னாருன்னு நடிச்சுக் காட்டுனாரு பாருங்க ஒரு நடிப்பு… நீங்களே அத பாருங்க…இப்படி லியோனி நடிச்சிக் காட்டுனது அங்க இருந்த பெண்களுக்கு எல்லாம் எரிச்சலாகி இருக்கு… இப்படி தொடருதையும், அணைக்கிறதையும் பேசிக்கிட்டு இருந்தவரு ஒருகட்டத்துல தடாலடியா முதலிரவு சம்பந்தமா பேசவும் கூட்டத்துல சலசலப்பாகிடுச்சு.அப்படியும் விடாம இன்னொரு முதலிரவுன்னு அதப்பத்தியும் விரசமா நடிச்சுக் காட்ட வில்லங்கமாகிப் போச்சு.இப்படி பொதுநிகழ்வுகள்ல காமெடிங்கிற பேருல ஆபாசமா பேசுறது மட்டுமில்லாம, திமுக தலைவர்கள தூக்கிப் பிடிக்கிறதா சொல்லி மத்தவங்கள ரொம்பவும் கீழ்த்தரமாவும் லியோனி பேசியிருக்காரு…திருவள்ளூருல திமுகவோட நிகழ்ச்சியில பேசுனப்போ செருப்ப தலையில சுமந்தவங்களுக்கு மேயர் பதவி கொடுத்தது ஸ்டாலின்னு சொன்னவருதான் லியோனி…ஸ்டாலின தூக்கிப் பிடிக்கிறதுக்காக எங்கள எதுக்கு கேவலமாப் பேசணும்னு பட்டியலின மக்கள் எல்லாம் அவர் மேல கொதிச்சிப் போயிருக்காங்க. இவர் மேல வன்கொடுமை சட்டம் ஏன் பாயலன்னு அந்த மக்களோட கேள்விக்கு போலி சமூகநீதி பேசுற விடியா அரசு எந்த பதிலையும் இதுவரைக்கும் சொல்லல…இப்படி எல்லாம் ஆட்ட கடிச்சி, மாட்ட கடிச்சி மனுஷன கடிச்ச கதையா இப்போ அதிமுக தேன்கூட்டுல வாய வச்சிருக்காரு… பாவம் லியோனிக்கு கட்டம் சரியில்லையோ என்னவோ? கொளவிகளோட கொட்டுல ஐ பட வில்லன் மாதிரி ஆகாம இருந்தா சரிதான்..

via News J : https://ift.tt/I4CO1HS
Mediaதமிழக அரசு மருத்துவமனைகளில் அலட்சியம் காரணமாக தொடரும் மரணங்கள்… தென்மாவட்டங்களில் நிகழும் சாதிய ரீதியிலான படுகொலைகள்… தமிழகம் முழுவதுமே கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் பிடியில் சிக்கி அரங்கேறும் கொலை, கொள்ளை, கூட்டுப் பாலியல் வன்கொடுமைகள்… என நாள்தோறும் தமிழகத்தில் வன்முறைகள் நிகழாத நாளே இல்லை.இது ஒருபுறம் என்றால் நீட்டை ஒழிக்க முடியாமல் வெற்றுக் கூப்பாடுக்காக உண்ணாவிரதம், விவசாயிகளின் குரல்வலையை நெரிக்கும் வகையில் என்.எல்.சிக்கு விஸ்தரிப்புக்கு ஆதரவு, காவிரி நதிநீர் விவகாரத்தில் கள்ள மவுனம்…. என முதுகெலும்பில்லா ஆட்சி நிர்வாகத்தை நடத்திக் கொண்டிருக்கிறது விடியா திமுக…அதே நேரம் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களுக்கு தங்களது பெயரை ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது தொடங்கி, அதிமுக மாநாட்டைப் போல தாங்களும் மாநாடு நடத்துவதாக அறிவிப்பது என்று திரிசங்கு சொர்க்கத்தை கட்டமைத்துக் கொண்டிருக்கிறது திமுக.வெற்றுவிளம்பரங்களை மட்டுமே மக்களிடையே பரப்பி அதனை நாடாளுமன்ற தேர்தலில் வாக்காக அறுவடை செய்ய பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறது ஆளும் அரசு. ஆனால் அது எதுவும் நடக்கப் போவதில்லை… நாடாளுமன்றத் தேர்தல் மூலம் நாட்டையே தங்கள் கோட்டையாக்கிவிடலாம் என்று கனவு கோட்டையை கட்டிக்கொண்டிருக்கிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின் என்று விமர்சித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி. தமிழகத்தை ஆளவே ததிகினத்தோம் என ஆடிக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை தேசிய அரசியலிலும் தெரியத்தான் போகிறது. தமிழ்நாட்டையே காப்பாற்ற முடியாத ஸ்டாலின் இந்தியாவையே காப்பாற்றப்போகிறாரா என்றும் விளாசித் தள்ளியிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர்…தமிழ்நாட்டில் இருக்கும் பல சிக்கல்களை தீர்க்கத் தெரியாமல் திணறும் ஸ்டாலினின் நிர்வாகத் திறமையின்மை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஊருக்கெல்லாம் வெளிச்சமாகப் போகிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்….

via News J : https://ift.tt/XlQANhz
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/punjabi.jpg">Media</a>வெளிநாட்டில் வேலை என்றால், குடும்பப் பொருளாதாரத்தினை கருத்தில் கொண்டு நம்மில் பலரும் வெளிநாட்டிற்கு கிளம்பி விடும் சூழல் அதிகமாக உள்ளது. எப்பேர்ப்பட்ட வேலையாகினும் பணம் சம்பாதித்தே தீர வேண்டும் என்கிற முனைப்பில் சிட்டாக பறந்து வெளிதேசம் நோக்கி சென்றுவிடுவோம். நம் இந்தியர்களில் பஞ்சாபியர்களுக்கு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்கிற கனவு  அபரிமிதமாக உள்ளது என்கிறது ஒரு ஆய்வு. அதற்காக அவர்கள் ஒரு நூதன முறையைக் கையாண்டு வருகின்றனர். என்ன முறை அது என்பதைக் குறித்து பின்வருமாறு காண்போம்.<strong>குடியுரிமையைத் துறக்கும் பஞ்சாபியர்கள்!</strong>இந்தியக் குடியுரிமையை துறப்பவர்களில் முதல் இடத்தில் டெல்லிவாசிகளும்,  இரண்டாவது இடத்தில் பஞ்சாபியர்களும்தான் உள்ளார்கள். கடந்த ஒன்பது ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், சராசரியாக ஒரு ஆண்டிற்கு 3124 பஞ்சாபியர்கள் வெளிநாட்டு குடியுரிமையைப் பெற்றுள்ளார்கள். இதுவே ஒரு நாளுக்கு ஒன்பது பஞ்சாபியர்கள் ஆகும். 2014 முதல் 2022 வரையிலான காலக்கட்டத்தில் 2,46,580 இந்தியர்கள் வெளிநாட்டு உரிமைக்காக இந்திய பாஸ்போர்ட்டினை விட்டுக்கொடுத்ததாக, இந்திய மத்திய அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் 60,414 பேர்கள் டெல்லிவாசிகள், 28,717 பேர்கள் பஞ்சாபியர்கள் ஆகும். மூன்றாவது இடத்தில் குஜராத்திகள்( 22,300) உள்ளனர். 1955 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தியக் குடியுரிமைச் சட்டத்தின் படி, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஒரே சமயத்தில் இரு நாடுகளின் குடியுரிமையையும் பெற்றிருக்க முடியாது. எதாவது ஒரு நாட்டின் குடியுரிமையை விட்டுக்கொடுத்துதான் ஆக வேண்டும். இது ஒருபுறம் இருக்க பஞ்சாபியர்கள் வெளிநாடுக்கு செல்வதற்கு ஒப்பந்த திருமணம் என்கிற ஒரு முறையைக் கையாள்கின்றனர்.<strong>ஒப்பந்த திருமண முறை மூலம் வெளிநாடு செல்லல்!</strong><a href="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/media_bank/202308/marriage-072224-16x9.jpeg?VersionId=BZrJVF.hOAtN.S.mfyzcS5YrxlNiFXj7">Punjabi men have found new way to fulfill foreign dreams - contract marriages - India Today</a>ஒப்பந்த திருமணமுறை என்பது வெளிநாட்டு கனவுடன் இருக்கும் மணமகன் ஒருவர், நல்ல படித்த மணமகளை மணந்துகொண்டு அவரின் உதவி மூலம் வெளிநாட்டிற்கு செல்வதாகும். இதனை கொஞ்சம் தெளிவாகப் பார்க்கலாம். IELTS என்று அழைக்கப்படும் சர்வேத ஆங்கில மொழித் தேர்வினை தேர்ச்சி செய்யும் மணமகளை கரம் பிடிக்கும் முறையை பஞ்சாபிய மணமகன்கள் கடைபிடித்து வருகிறார்கள். IELTS தேர்வு தேர்ச்சி பெறுவதன் மூலம் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் விசா எளிய முறையில் கிடைப்பதால், Spouse VISA மூலம் தங்களின் இணையரையும் வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்லும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அதற்கு ஈடாக, மணமகனானவர், மணமகள் குடும்பத்திற்கு பணம், சொத்துக்கள் என்று அள்ளித் தருவார். இவை அனைத்தும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் நடக்கும். இதனாலேயே IELTS தேர்வில் தேர்ச்சி பெறுவது பஞ்சாபியர்களிடையே பெரிய சாதனையாக கருதப்படும். பஞ்சாபிய ஊடங்கங்களில் இந்த ஒப்பந்த திருமண முறையானது, ஏமாற்று வேலை என்று தொடர்ந்து எழுதப்பட்டுக் கொண்டு வருகிறது.<strong>ஏமாற்றும் திருமண ஏஜென்சிகள்!</strong><a href="https://akm-img-a-in.tosshub.com/indiatoday/images/story/202210/hindu_wedding-sixteen_nine.jpg?VersionId=aaYfdyebLEt4yiJcA3G6Y_v2oO0HYSUO&size=690:388">Government releases list of states with highest percentage of child marriage, Jharkhand on top - India Today</a>இந்த ஒப்பந்தமுறை பெண்களை ஈர்க்க எடுக்கப்படும் மோசமான செயல் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்த திருமண முறைகளை செய்துவைப்பதற்கு திருமண ஏஜென்சிகள்  சிலவை பஞ்சாபில் உள்ளன. அவை அனைத்தும் மக்களை மூளைச் சலவை செய்து, பணம் பறிக்கும் முதலைகளாக உள்ளன என்று தினசரி நாளிதழ்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளன. பொருளாதார ரீதியாக பலவீனமாக இருக்கும் ஒருவருக்கு இது போன்ற ஏஜென்சிகளின் விளம்பரங்கள் துணிந்து இதுபோலான காரியத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இது போன்ற ஒப்பந்த திருமண முறையை நாம் திரைப்படங்களில் தான் பார்த்திருப்போம். இப்போது இது பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பது இந்திய சமூகத்தின் பணநோக்கி செல்லும் மோகத்தினை துகிலுறித்துக் காட்டுகிறது. திருமணம் எனும் ஒரு வழிமுறை சடங்கினை இந்த ஒப்பந்த முறைகள் கேலிக்கூத்தாக்குகின்றன என்று ஒரு தரப்பினர் எண்ணுகின்றனர்.“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது”இஃது வள்ளுவர் வாய்மொழி. கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவாக இருந்தால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் சிறப்பாக…
Mediaசினிமாவில் கிணற்றைக் காணோம் என்று கூறியது போல, ஏரி மற்றும் ஏரிக்கரையை காணோம் என்று நிஜத்தில் கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். எதற்காக இந்த புகார்? என்ன நடந்தது? ஆரணி அருகே நிகழ்ந்துள்ள சம்பவத்தின் பின்னணி குறித்து பார்ப்போம்…இப்படி சினிமா நகைச்சுவை காட்சியைப் போன்றே, இல்லாத ஏரி மற்றும் ஏரிக்கரையை காணவில்லை என்று திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கும்பல்கொள்ளைமேடு கிராம மக்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.குப்பம் ஊராட்சிக்குட்பட்ட கும்பல் கொள்ளைமேடு கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய திமுக அரசு இலவச வீட்டுமனை பட்டா வழங்கியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது அப்பகுதியில் ஏரி மற்றும் ஏரி கரை உள்ளதாகவும் இதனால் நீர்பிடிப்பு பகுதியில் கட்டியிருக்கும் குடியிருப்புகளை அகற்றப் போவதாகவும் கிராம மக்களுக்கு வருவாய் துறையில் இருந்து தபால் வந்துள்ளது அவர்களுக்கு குழப்பத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.10 தலைமுறைகளாக இந்த கிராமத்தில் வசித்து வருவதாகவும் இங்கு ஏரியோ, ஏரிக்கரையோ இல்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசு அதிகாரிகள் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்ட ஏரி மற்றும் ஏரிக்கரை காணாமல் போயிருப்பதால் அதனை கண்டுபிடித்து தருமாறு, கண்ணமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.மக்களை மிரட்ட அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கையில், ஏரியையே காணவில்லை என்று கிராம மக்கள் அளித்துள்ள புகார் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

via News J : https://ift.tt/eqlpcf1
Mediaசென்னை, மயிலாப்பூர் நாகேஸ்வரா ராவ் பூங்கா சாலையோரத்தை ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வேதனை தெரிவித்துள்ள நிலையில், இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமென கோரிக்கை வலுத்துள்ளது. இதுகுறித்த செய்தித் தொகுப்பை பார்ப்போம்…சென்னை மயிலாப்பூரில் உள்ள நாகேஸ்வரராவ் பூங்கா அருகே தான் இப்படி இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் மற்றும் வேன் என வரிசைகட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பூங்காவுக்கு வரும் பொதுமக்களும், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த தொழில் நிறுவனங்களுக்கு வேலைக்கு வருபவர்களும் இந்த சாலையை கட்டணமில்லாத, ‘பார்க் கிங்’ பகுதியாக பயன்படுத்தி நாள்தோறும் வாகனங்களை பூங்கா சாலையோரம் நிறுத்திச் செல்கின்றனர். குறுகலான தெருக்களை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர் இப்பகுதியில் வசிப்பவர்களும், நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களும்.ஏற்கனவே இப்பகுதியில் குடியிருப்போர் இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எதுவும் எடுக்காததால், இங்கு நிறுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் . எனவே, மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பரிசீலித்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் இந்த பிரச்னைக்கு, உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

via News J : https://ift.tt/7gmsNEv
Mediaஇரண்டாம் முறையாக விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்து பிரக்கியான் ரோவர் அனுப்பியுள்ளது.நிலவின் தென் துருவத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் பிரக்கியான் ரோவர், விக்ரம் லேண்டெர் நிலவின் தரைப்பரப்பில் இருக்கும் புகைப்படத்தை முன்பு அனுப்பி இருந்தது. இதனையடுத்து தற்பொழுது இரண்டாவது முறையாக விக்ரம் லேண்டரை மாற்று கோணத்தில் எடுத்த புகைப்படத்தை பிரக்கியான் ரோவர் அனுப்பியுள்ளது. விக்ரம் லேண்டரில் இருந்து 15 மீட்டர் தொலைவில் இப் புகைப்படத்தை பிரக்கியான் ரோவர் எடுத்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

via News J : https://ift.tt/52LZ8TQ
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/senthil-balaji-4.jpg">Media</a>சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை காவலின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாலும், பணப்பரிமாற்றம் சதி திட்டம் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தின் கீழ் தான் நடந்துள்ளது என்றும், கிடைத்துள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளதாகவும் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது திமுக ஆட்சியின் அஸ்திவாரத்தை அசைத்து பார்த்துள்ளது. இதுகுறித்த முழு விவரங்களை தற்போது பார்க்கலாம்.செந்தில் பாலாஜி அவரது சகோதரர் அசோக் மற்றும் உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோர் கூட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் போக்குவரத்து துறை மோசடியில் முக்கிய நபராக செந்தில் பாலாஜி செயல்பட்டு உள்ளார் என்றும், போக்குவரத்து அமைச்சராக இருந்த அவர் தனது அதிகாரத்தை ஊழல் மற்றும் சட்டவிரோதமாக செயல்பாடுக்கு தனிப்பட்ட முறையில் பயன்படுத்தியுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் கூறியுள்ளது.செந்தில் பாலாஜி திட்டமிட்டு சட்டவிரோத வருமானத்தை பெற்றுள்ளார் என்றும், அவரது சகோதரர், தனி உதவியாளர்கள் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் உள்ளிட்ட சக அதிகாரிகளுடன் சேர்ந்து போக்குவரத்து துறையில் மோசடியை அரங்கேற்றி உள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் சுட்டிக்காட்டியுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்ற தடுப்புச் சட்டப்பிரிவின் கீழ் செந்தில் பாலாஜியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகவும், அப்போது அவர் தெரியாது எனக்கூறி மறுத்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. ஆனால் விசாரணையில் உதவியாளர்கள் கார்த்திகேயன், சண்முகத்துடனான தொடர்புகள் குறித்து தெரிய வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.அமலாக்கத்துறை காவலின் போது தனக்கு எதுவும் தெரியாது என்று கூறினாலும், பணப்பரிமாற்றம் சதி திட்டம் செந்தில் பாலாஜியின் அதிகாரத்தின் கீழ் தான் நடந்துள்ளது என்றும், கிடைத்துள்ள ஆதாரங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபணமாகி உள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.டிஜிட்டல் முறையில் பணத்தை வசூலித்தது தொடர்பான ஆதாரங்கள் மற்றும் சகோதரர் அசோக் மற்றும் கூட்டாளிகள் மூலம் பணத்தை அனுப்பியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.வேலைக்காக பணத்தை கொடுத்தவர்களுக்கு ஆதரவாக தேர்வு மதிப்பெண்களில் முறைகேடாக மதிப்பெண்களை திருத்தி இருப்பதாகவும் குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி ஊழல் மற்றும் சட்டவிரோதமாக பணத்தை பெற்று குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.அதில் கிடைத்த வருமானத்தை நேரடியாக அவர் பெற்றுள்ளார் என்பதையும், மோசடியாக பெற்ற பணத்தை குடும்பம் மற்றும் தனக்கு நெருங்கியவர்களின் வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்துள்ளார் என்றும், குற்றப்பத்திரிகையில் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் அவரது உதவியாளர்கள் தொடர்பான ஆவணங்கள் சிக்கியிருப்பது மூலம் செந்தில் பாலாஜிக்கும் அவரது பி.ஏ-க்களுக்கும் இடையேயான தொடர்பு உறுதியாகி இருப்பதாக அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்-டிரைவில் டிரைவர்கள், நடத்துனர்கள், ஜூனியர் டிரேட்ஸ்மேன், ஜூனியர் என்ஜினியர்கள், உதவி பொறியாளர்கள் பணி நியமனம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு பதவிக்கும் வசூலித்த பணம் தொடர்பான ஆவணங்கள், MTC, TNSTC -யில் உள்ள மொத்தப் பணியிடங்கள் மற்றும் பிஓசியின் பணி தொடர்பான ஆவணங்கள் செந்தில் பாலாஜியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட பென்டிரைவில் காணப்படுகின்றன என்று அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.MTC, TNSTC-க்களில் பணியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பாக செந்தில் பாலாஜி மற்றும் அவரது உதவியாளர்கள் சண்முகம், கார்த்திகேயன் ஆகியோருக்கு இடையே மின்னஞ்சல் தொடர்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.செந்தில் பாலாஜியின் வங்கி கணக்குகளில் 1 கோடியே 34 லட்சம், அவரது மனைவி மேகலா கணக்கில் 29 லட்சத்து 55 ஆயிரம், ரொக்க வைப்புத் தொகையாக 13 கோடியே 13 லட்சம் வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அசோக் குமார் மற்றும் அவரது மனைவி நிர்மலாவின் வங்கி கணக்கில் தலா 53 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் இருந்ததாக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தெரிவித்துள்ளது.வைப்புத் தொகையாக சண்முகத்தின் வங்கிக் கணக்குகளில் 2 கோடியே 19 லட்சம் ரூபாய் இருந்தது என்றும், இந்த பண வைப்புத்தொகை வருமான வரிக் கணக்கில் வெளியிடப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடும்போது மிகப்பெரியது என்றும் அமலாக்கத்துறை கூறியுள்ளது.வேலைக்காக விண்…
Mediaபன்னீர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து மறு விசாரணைக்கு எடுத்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு தொடர்பாக பன்னீர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.பன்னீர் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை, மதுரை நீதிமன்றத்தில் இருந்து சிவகங்கை நீதிமன்றத்திற்கு மாற்றி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதையடுத்து, குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, பன்னீர் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளார். அதிகார வரம்பே இல்லாத சிவகங்கை நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்றியதன் மூலம், உயர்நீதிமன்ற கிளையும் தவறிழைத்துள்ளது, என குறிப்பிட்ட நீதிபதி, விசாரணை நடைமுறைகள் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளதாகவும், சட்டங்கள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு பொருந்தாது என்று அறிவித்துவிடுவது போன்று உள்ளதாகவும் வேதனை தெரிவித்தார். இதுபோன்ற தவறுகள் நடைபெற அனுமதித்தால் புற்றுநோய் போல இந்த சமுதாயத்தை சிதைத்து விடும் என குறிப்பிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தற்போது மறு ஆய்வு செய்வதற்கு எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக செப்டம்பர் 27ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, பன்னீருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

via News J : https://ift.tt/w3pJt9z
Mediaநிலவின் தென் துருவத்தில் தரையிரங்கியதன் மூலம் விண்வெளித்துறையில் வல்லரசாகிய இந்தியா, சுட்டெரிக்கும் சூரியன் குறித்து ஆய்வு செய்ய போகிறது. அதற்காக ஆதித்யா L – 1 விண்கலம் தயார் நிலையில் உள்ளது. தற்போது அதிலுள்ள சிறப்பம்சங்கள் உள்ளிட்டவை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்……“கப்பு முக்கியம் பிகிலு” அப்டின்ற மாதிரி எத்தனை முறை தோற்றாலும் தொடர் முயற்சியால் யாருமே தொடாத நிலவின் தென் துருவத்தில் இந்தியாவின் விக்ரம் லேண்டர் தரையிரங்கியது. இதன் காரணமாக உலக நாடுகளின் பார்வை இந்தியாவின் பக்கம் தான் அதிகமாகிவுள்ளது.அதை இன்னும் அதிகரிக்கும் விதமாக 10 வினாடி கூட சரியா பார்க்க முடியாத சூரியன் மேல நம்முடைய இஸ்ரோ விஞ்ஞானிகளுடைய கண்பட்டிருக்கிறது.450 கோடி ஆண்டுகளுக்கு மேல் வயதாகும் சூரியன் பூமியிலிருந்து சுமார் 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனை ஆராய்ச்சி செய்வதற்கு PSLVC 57 ராக்கெட் மூலம் ஆதித்யா L -1 விண்கலத்தை
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து இஸ்ரோ விண்ணில் ஏவவுள்ளது.சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லெகிரான்ஜியன் புள்ளி 1 ல் ஆதித்யா L -1 விண்கலம் நிலை நிறுத்தப்பட உள்ளது. இந்த புள்ளியை விண்கலம் அடைய 120 நாட்களுக்கும் மேல் ஆகும்.ஆதித்யா L 1-ல் சூரியனின் ஒளி மண்டலம், நிற மண்டலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகள், ஒளி வட்டம் ஆகியவற்றை பற்றி ஆய்வு செய்ய Visible Emission Line Coronagraph என்ற தொலைநோக்கி, Solar Ultraviolet Imaging Telescope என்ற தொலைநோக்கி, Aditya Solar wind Particle Experiment என்ற சூரிய காற்றின் தன்மைகளை ஆய்வு செய்யும் கருவி, சூரிய சக்தியை ஆராயும் Plasma Analyser Package for Aditya, சூரியனின் எக்ஸ்ரே கதிர்கள் மற்றும் வெப்பத்தை கண்காணிக்கும் சோலெக்ஸ் Solar Low Energy X-ray Spectrometer, வெளிப்புற அடுக்குகளில் ஏற்படும் டைனமிக் மாற்றங்களை ஆராயும் ஹெல் 10எஸ் High Energy L1 Orbiting X-ray Spectrometer, கிரகங்களுக்கு இடையேயான காந்த புலதன்மையை அளவிடும் மேக்னோ மீட்டர் என்ற 7 முக்கிய கருவிகள் உள்ளன.ஆதித்யா L 1 ஆய்வுத் திட்டத்தின் முழு பணிகளும், எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் இந்தியாவினாலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது.சூரியன் உதிப்பதையும், மறைவதையும் பல கோடி கிலோமீட்டரிலிருந்து ரசிக்கும் நாம், இந்திய விஞ்ஞானிகளின் முயற்சியால் யாரும் அரியாத பல உண்மைகளை உலகமே அறிந்து கொள்ளும் விதமாக உரக்க சொல்ல போகிறது.

via News J : https://ift.tt/Nngx9Zw
Mediaதிண்டிவனத்தில் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் அக்கட்சிலிருந்து விலகி முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மொட்டையர் தெருவில் உள்ள முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சிவி.சண்முகம் இல்லத்தில் வைத்து, கூட்டேரிப்பட்டு பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திமுகவினர் அக்கட்சிலிருந்து விலகி, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். அப்போது திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன், ஒன்றிய கழக செயலாளர் டி.டி சேகரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர். விடியா திமுகவில் இருந்து விலகிய திமுகவினர், கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையை ஏற்று, அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

via News J : https://ift.tt/01VXFiY
Mediaஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆற்றிய கதையாக, மாணவர்களே தங்காத ஆதிதிராவிடர் நல விடுதியை ஆய்வு செய்த விடிய திமுகவின் அமைச்சருக்கு, அதிகாரிகள் அல்வா கொடுத்த ருசிகர சம்பவம் குறித்து சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை அருகே உள்ள மேல்மணம்பேடு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியினை துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார். விடுதி கட்டடங்கள் புதிதாக பளீச்சென்று இருக்க, மாணவர்கள் தங்குகிறார்களா என்னும் குழப்பம் அமைச்சருக்கே வந்துள்ளது.கழிவறைகளில் பெயிண்ட் டப்பாக்கள் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து வாளி வாங்கி வைக்கவில்லை என்று கேட்டதும் அங்கிருந்த திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி செல்வராணி மற்றும் மாணவர் விடுதி வார்டன் அர்ஜுனன் ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து விழித்தனர். ஏதேதோ சொல்லி சமாளித்தனர்.விடுதி மாணவர்களுக்கான உணவுகள் குறித்து ஆய்வு செய்தபோது அங்கு உணவு பொருட்களும் குறைவாக இருந்ததால், அமைச்சர் விசாரிக்க அப்போதும் வார்டன் உள்ளிட்டோர் சால்ஜாப்பு செய்துள்ளனர்.
Kayalvizhi Selvaraj,ஆதிதிராவிடர் பழங்குடியின மக்கள் மேம்பாடே எங்கள் நோக்கம்; அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேச்சு - our aim is to uplift the people of the adi dravidar and ...விடுதியில் 66 மாணவர்கள் தங்கி இருப்பதாக கணக்கு காட்டப்பட்டிருக்க, பட்டியலில் இருந்த மாணவர்களின் பெற்றோருக்கு போன் செய்து விசாரித்தபோதுதான் மாணவர்கள் விடுதிகளில் தங்கவில்லை என்பதே அமைச்சரின் கவனத்துக்கு தெரியவந்துள்ளது.ஆளே இல்லாத டீக்கடையில் டீ ஆத்துவது போல மாணவர்களே இல்லாத விடுதியில், 66 மாணவர்களுக்கு உணவு தயாராக இருப்பதாக அமைச்சருக்கே வார்டனும் அதிகாரியும் அல்வா கொடுத்ததால், கோபமடைந்த அமைச்சர், அவர்களை கடிந்து கொண்டார். தொடர்ந்து அவர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் கூறிச் சென்றார்.விடியா ஆட்சியில் துறை அமைச்சருக்கு தெரியாமல் ஒரு விடுதியிலேயே இத்தனை கோல்மால்கள் என்றால் இன்னும் என்னென்ன தரமான சம்பவங்கள் எல்லாம் நடந்துள்ளதோ? இதெல்லாவற்றையும் அமைச்சர் கண்டுபிடிப்பாரா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/gLS8s3N
Mediaகடந்த 2021ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், 300கோடி ரூபாய் செலவு செய்து பீகாரில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிரசாந்த் கிஷோர் டீம் செய்த விளம்பரங்களால் ஆட்சியைப் பிடித்த திமுகவின் கதை ஊர் அறிந்ததுதான்.. ஜெயித்து முடிந்ததற்கு பிறகும், அந்த டீமுடன் ரகசிய தொடர்பில் இருக்கும் திமுக உள்ளாட்சி தேர்தலிலும் தில்லுமுல்லுகளை செய்து ஜெயித்தது… அதே வியூகத்தை தற்போது மீண்டும் தூசு தட்டி எடுத்திருக்கிறது திமுக…எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக, இந்தியா கூட்டணி என்ற பெயரில் நடக்கும் காமெடியில் எப்படியாவது பிரதான இடம் பிடித்துவிட வேண்டும் என்று லாபி செய்யத் தயாராகிவிட்டது திமுக. அதிலும் குறிப்பாக, நான் தேசிய அரசியலுக்கு வந்துவிட்டேன் என்று தானே சொல்லிக்கொள்ளும் ஸ்டாலின் ஒரு புது யுக்தியை கையில் எடுத்திருக்கிறார்.. தனக்கு முதலமைச்சர் பதவி வாங்கித்தந்த பிரசாந்த் கிஷோரை மீண்டும் அணுகி, தேசிய அரசியலில் தனக்கான இடம் பெற்றுத்தர டீல் போட்டிருக்கிறார்.. இதையெல்லாம் உங்களுக்கு எப்படிங்க தெரியும் ? என்று நீங்கள் நினைப்பது புரிகிறது…நேற்று பிரசாந்த் கிஷோர் பேசியதை நீங்கள் கேட்டிருந்தால் இந்த கேள்வி உங்களுக்கு எழுந்திருக்காது.. அப்படி என்ன தாங்க பேசினார் என்று கேட்கிறீர்களா? பொறுங்கள் அதையும் சொல்கிறோம்… இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சி தலைவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, ஸ்டாலினை முன்னிறுத்த வேண்டும் என்று டிப்ஸ் கொடுத்திருக்கிறார் பிரசாந்த் கிஷோர்.. இதென்னப்பா இது, புது உருட்டால்ல இருக்கு…ஏற்கனவே, மாநிலங்களில் எதிரும் புதிருமாக இருக்கும் பல கட்சிகள் ஒருங்கிணைந்திருப்பதிலேயே பல பிக்கல் பிடுங்கல்கள் இருக்கும் சூழலில், தற்போது ஸ்டாலின் தன்னை முன்னிருத்துவது கூட்டணியையே அசைத்துப்பார்க்க ஆரம்பித்து விட்டது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்..26 கட்சிகள் ஒன்றிணைந்து இந்திய அளவில் கூடியிருக்கும் இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க ஸ்டாலினை பிராசாந்த் கிஷோர் முன்னிருத்துவது ஏன்? ஏற்கனவே, 2021 சட்டமன்ற தேர்தலுக்காக பிரசாந்த் கிஷாருக்கு 300 கோடி ரூபாய் கொடுத்திருந்த திமுக, தற்போது எத்தனை கோடி ரூபாயை கொட்டிக்கொடுத்து அவரை பேச வைத்திருக்கிறது? கூட்டணி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின் என்ற பேச்சு எழுந்தால், மல்லிகார்ஜீன கார்கே, நிதிஷ்குமார், மம்தா பானர்ஜி, கெஜ்ரிவால், உள்ளிட்டோரின் எதிர்வினை எப்படி இருக்கும்?ஸ்டாலினை ஏற்க மறுக்கும் மற்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பால், உருவாகும் முன்னரே உடையத் தயாராகிவிட்டது I.N.D.I.A கூட்டணி என்பதுதான் நிதர்சனமான உண்மை.

via News J : https://ift.tt/3Y7mACq
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/eps-arikkai.jpg">Media</a><strong>கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை</strong>சட்டம் – ஒழுங்கு சீர்கேடு; போதைப் பொருட்கள் நடமாட்டம்;பொதுவெளியில் பாமர மக்கள் முதல் அரசு ஊழியர்கள் வரைஅனைவரும் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழல்,இதுவே விடியா திமுக அரசின் 28 மாதகால சாதனை!”பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்” என்னும் முதுமொழியை மெய்பிக்கும் வகையில், இந்த விடியா திமுக ஆட்சியில் தமிழகம் புதைக்குழிக்குள் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு பல குற்ற நிகழ்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். யார் ஆட்சியில் இருந்தாலும், அங்கொன்றும், இங்கொன்றுமாக பிரச்சனைகள் ஏற்படுவதும், காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதும் இயல்பு. குறிப்பாக, அம்மாவின் ஆட்சியிலும், அம்மாவின் அரசிலும் சமூக விரோதிகள், கூலிப்படையினர், போதைப் பொருள் கடத்தல்காரர்கள், கள்ளச் சாராய வியாபாரிகள் போன்றோரின் அத்துமீறிய செயல்பாடுகள் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு, சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது.2011 முதல் 2021 வரை பத்து ஆண்டுகள் தமிழக மக்களால் புறக்கணிக்கப்பட்ட இவர்கள், திராவக மாடல் ஆட்சி அமைந்த இந்த 28 மாதங்களில், லைசன்ஸ் பெற்றதுபோல் தமிழகத்தை குட்டிச்சுவராக்கி வருகிறார்கள். சமூக விரோத சக்திகளை ஒடுக்க வேண்டிய காவல் துறையினர், ஆளும் கட்சியினரின் கட்டளைக்கு அடிபணிந்து, கைகட்டி வேடிக்கை பார்ப்பது வெட்கக் கேடானது.தற்போது நடைபெற்று வரும் எந்தஒரு குற்ற நிகழ்விலும், எதாவது ஒரு ஆளும் கட்சிப் பிரமுகர் ஈடுபட்டுள்ளதாக் செய்திகள் வருகின்றன. தமிழத்தில் எங்கு பார்த்தாலும் மக்களிடையே அச்சமும், பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையும், இந்த பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்களின் திறமையின்மையால் ஏற்பட்டுள்ளது. இது, தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் சாதி, மத, இன மோதல்கள் இன்றி மக்கள் சகோதரத்துவத்துடன் இணக்கமாக வாழ்ந்து வந்தனர்.இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் பட்டியலின மக்கள் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது. பட்டியலின மக்கள் தாக்குதல் என்ற நிலை மாறி, நாங்குநேரி, கரூர் என்று பல இடங்களில் பட்டியலின மாணவர்களும் தாக்கப்படுவது சர்வ சாதாரணமாகி உள்ளது. தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கக்கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சித் தலைவர்கள், பிரதிநிதிகள் தாக்கப்படுவது மற்றும் சுதந்திரமாக செயல்பட முடியாத அவல நிலை அரங்கேறி வருகிறது.அதேபோல், திருநெல்வேலியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், மத வழிப்பாட்டுத் தலத்தில் நடத்திய தாக்குதலில் சம்பந்தப்பட்டிருப்பது மிகுந்த கண்டத்திற்குரியது.விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாள்முதல் சமூக விரோதிகளின் கொட்டமும்,. கொலைகளும் அதிகரித்து வருவது மக்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும்  சுமார் 10 கொலைகளுக்குமேல் நடந்துள்ளதாக செய்திகள் தெரிய வருகின்றன.அண்ணாநகர், அண்ணா டவர் பூங்காவில் ஒரு தன்னார்வ அமைப்பு நடத்திய ஒவியக் காட்சி அரங்கங்களை பார்வையிட வந்த சென்னை மாநகராட்சி ஆணையரிடம், பொது ஊடகங்கள் முன்னிலையில் அங்கு வந்த திமுக நிர்வாகி கையூட்டு கேட்பது இந்த விடியா திமுக அரசின், ஆளும் கட்சி நிர்வாகிகளின் அடாவடிகளுக்கு, “ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்ற நிலை உருவாகி வருகிறது.இந்த விடியா திமுக அரசின் 28 மாத கால ஆட்சியில் நிர்வாக சீர்கேட்டோடு, கஞ்சா போன்ற போதை மருந்துகளீன் நடமாட்டம் மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளின் மயக்கத்தில் சிறுவர்கள், இளைஞர்கள், முதியவர்கள் என்று அனைவரும் சர்வசாதாரணமாக குற்றச் செயல்களில் ஈடுபடுவது;  கொலைவெறித் தாக்குதல் நடத்துவது; குறிப்பாக, வணிக நிறுவனங்களைத் தாக்குவது போன்ற சட்டவிரோதச் செயல்களால், வணிக நிறுவனங்களை நடத்தி வரும் வியாபாரிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.* சென்னை, பெரம்பூரில் காவல்துறை அதிகாரி உதவி ஆய்வாளர் ஒருவரை,ஒரு சில மாணவர்கள் சுற்றிவளைத்து தாக்கியது;* புழல் சிறையில் துணை ஜெயிலர் ஒருவரை வெளிநாட்டுக் கைதி தாக்கிய கேவலம்;* பட்டுக்கோட்டையில் பட்டப் பகலில் வியாபாரி, கத்தி போன்ற ஆயுதங்களால்கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகிறார்;* சென்னை, கே.கே. நகரில் நடந்த ஒரு கோவில் திருவிழாவில் பிரபல ரவுடி ஒருவர்,தன் கூட்டாளிகளுடன் பட்டாக் கத்திகளை கையில் ஏந்தி தெருக்களில் நடனமாடிச்சென்று மக்களை மிரட்டும் கொடூரம்;*…