Mediaதிமுக இப்போ ஆட்சியில இருக்கிறதுக்கு அவங்க காட்டுனா ஜிகினா வாக்குறுதிகள்ல முக்கியமானது நீட்தேர்வு ரத்துதான்… தேர்தல் பிரசாரத்துல எங்க போனாலும் அதையேத்தான் சொல்லிக்கிட்டு இருந்தாரு கோபாலபுரத்து சின்ன பகவதி…. சாரி… சின்ன தளபதி….அதுமட்டுமில்லாம கிடைக்கிற மேடையில எல்லாம் திமுகவ ஆட்சிக்கட்டில உக்கார வச்சிங்கன்னா, நீட் தேர்வ ரத்து செஞ்சிடுவோங்கிறது தான் அவரோட ஹைலைட் பேச்சாவே இருந்துச்சு…3 வருஷத்துல நீட் தேர்வால அனிதா தொடங்கி 14 பேர் உயிரிழந்ததா எங்க போனாலும் பெயர் விவரத்தோட பதிவும் பண்ணுனாரு உதயநிதி.நீட் தேர்வ ஒழிக்கிற ரகசியம் எங்களுக்குத்தான் தெரியும்னு உருட்டி உருட்டியே ஆட்சியப் பிடிச்சி 2 வருஷம் ஆச்சு… ஆனா இன்னவரைக்கும் நீட்ட ஒழிக்கவே இல்ல… கேட்டா சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேத்திட்டோம்…. ஆளுநர்தான் கையெழுத்து போட மாட்டேங்கிறாருனு, ஒண்ணாங்கிளாஸ் புள்ள, டீச்சர் அவன் என்னிய கிள்ளிட்டான்னு சொல்ற மாதிரியே சொல்லிக்கிட்டு இருக்காரு…ஆனா திமுகவோட 2 ஆண்டு ஆட்சியில நீட் தேர்வ ஒழிக்க முடியாததால தற்கொலை செஞ்ச மாணவர்களோட எண்ணிக்க 21ஆ அதிகரிச்சிருக்கு… கூடவே ஒரு தந்தையும் தன்னோட உயிரிழந்திருக்காரு.. இதையும் உதயநிதியே சொல்லியிருக்காரு…திமுக ஆட்சிக்கு வந்தும் இந்த நீட் உயிர்ப்பலி தொடருதுன்னா தேர்தலப்ப சொன்ன ரகசியம் என்னாச்சுன்னு கேள்வி எழுப்பத்தானே செய்யும்… அப்போதைய ஆளும்கட்சியான அதிமுக கூட, சரி அந்த ரகசியத்த சொல்லுங்க… மாணவர்கள் நலனுக்காக நிச்சயம் அத செய்வோம்னு கேட்டப்போ கூட, நீட் ரகசியம் இதுதான்னு ஏடாகூடாமாத்தான் வாய தொறந்தார் உதயநிதி…அன்னைக்கு சொன்ன அதே வெட்கம், மானம், சூடு, சுரணை இன்னைக்கு ஆட்சியில இருக்குற திமுகவுக்கு இருக்கோ இல்லையான்னு தெரியல… ஆனா நீட் ரகசியம் இதுதான்னு வேற ஒண்ண சொல்லியிருக்காரு உதயநிதி…கல்வி உரிமைக்காக குரல் கொடுக்கிறதும், சட்டப் போராட்டமும்தான் நீட் தேர்வு ரகசியம்னு சொல்றதுக்கு உதயநிதிக்கு எதுக்கு ரெண்டு வருஷமாச்சுன்னு தெரியல… இதே சட்டப் போராட்டத்த அதிமுகவும் முன்னெடுத்துட்டு இருக்கிறது திமுகவுக்கு தெரியலையா அல்லது முழு பூசணிக்காய சோத்துல மறைக்கிறாங்களான்னு தெரியல…இந்த விடியா ஆட்சியால நீட்ட ரத்து செய்ய முடியாதுன்னு மக்கள் கொந்தளிக்க ஆரம்பிச்சதும் பெயரளவுக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தையும் வாரிசு தலைமை தாங்கி நடத்தியிருக்காரு. இது தொடர்பாக வேறொரு நிகழ்ச்சியில செய்தியாளர்கள் கேட்டதுக்கு, எங்கக்கிட்டத்தானே கேள்வி கேக்குறீங்க… நீட்ட எதிர்க்கிற அதிமுகவும் எங்ககூட கலந்துக்க வேண்டியதான்னுலாம் சொல்லியிருந்தாரு…இன்னைக்கு இப்படி சால்ஜாப்பு சொல்லுற உதயநிதி, அன்னைக்கு நீட் ரகசியத்த சொல்லுங்கன்னு கேட்டதுக்கு வெட்கம், மானம்னு வசனம் எல்லாம் பேசுனது ஏன்?எங்களுக்கு பதவி முக்கியமில்லன்னு மேடையில முழங்குற நீங்க, எங்களால தேர்தல்ல வாக்குறுதி கொடுத்த மாதிரி நீட்ட ரத்து செய்ய முடியலன்னு ஆட்சிய விட்டு வெளியேறுற தில்லு இருக்கா… மக்களுக்கு இப்பத் தெரியும்… நீட்ட நிறுத்துற சக்தி அதிமுகவுக்கு மட்டும்தான்னு.. வாயில வடை சுடுறது மட்டும்தான் திமுகன்னு!
via News J : https://ift.tt/JDtBG2k
via News J : https://ift.tt/JDtBG2k
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/arikkai-pic.jpg">Media</a>கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை புரட்சித் தலைவி அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்யும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு கடும் கண்டனம்!மாண்புமிகு அம்மா அவர்கள் 2011-ல் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ இரயில் லிட்., கட்டம் 1-ன் பணிகளை விரைவாக நடத்தி முடிக்க ஆணையிட்டார்கள். அதன்படி, மெட்ரோ இரயில் பணிகள் குறித்த காலத்தில் நடைபெற்று வந்தது. மேலும், வட சென்னை மக்களின் கோரிக்கையினை ஏற்று, திருவொற்றியூர் / விம்கோ நகர் வரையிலான விரிவாக்கத் திட்டத்திற்கு மாண்புமிகு அம்மா அவர்கள் 23.07.2016 அன்று அடிக்கல் நாட்டினார்கள்.* 21.9.2016 அன்று சென்னை விமான நிலையம் – லிட்டில் மவுண்ட் வரையான முதல் மெட்ரோ போக்குவரத்தினை, மாண்புமிகு அம்மா அவர்கள் துவக்கி வைத்தார்கள்.* 14.5.2017 அன்று திருமங்கலம் முதல் நேரு பூங்கா வரையிலான மெட்ரோ இரயில் போக்குவரத்தை எனது முன்னிலையில், இந்திய குடியரசு முன்னாள் துணைத்தலைவர் திரு. எம். வெங்கையா நாயுடு அவர்கள் திறந்து வைத்தார்.* 25.5.2018 அன்று நேரு பூங்கா முதல் சென்னை செண்ட்ரல் வரையும் மற்றும் சைதாப்பேட்டை முதல் ஏஜி-டி.எம்.எஸ் வரையான மெட்ரோ இரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன்.* 10.2.2019 அன்று ஏஜி-டி.எம்.எஸ், முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான மெட்ரோ இரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தேன். இத்துடன் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் 1-ன், ரூ. 18,380 கோடி மதிப்பீட்டில் 45.1 கி.மீ., நீளத்திலான பணிகள் முடிவடைந்தன.* திருவொற்றியூர் – விம்கோ நகர் வரையிலான மெட்ரோ இரயில் கட்டம் 1-ன் நீட்டிப்பு வழித் தடத்தினை 14.02.2021 அன்று எனது முன்னிலையில் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இதன்படி, 3,770 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான 9,051 கிலோ மீட்டர் நீட்டிப்பு பணிகள் முழுமையடைந்து மெட்ரோ ரயில் கட்டம்-1 மக்கள் பயன்பாட்டிற்கு முழுமையாக வந்தது.* 21.12.2020 அன்று மாண்புமிகு மத்திய உள்துறை அமைச்சர் அவர்கள் எனது முன்னிலையில், சென்னை மாநகரின் புறநகர் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, தமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக, 63, 246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 118.90 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ இரயில் கட்டம் – 2 திட்டத்திற்கான அடிக்கல்லை நட்டினார்கள்.இவ்வாறு Chennai Metro Rail Limited (CMRL) என்று அழைக்கப்படும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனப் பணிகள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், மாண்புமிகு அம்மா அவர்களது ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசிலும் விரைவுப்படுத்தப்பட்டு, குறித்த காலத்தில் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது என்றால் அது மிகையல்ல.ஆனால், இந்நிறுவனம் கடந்த சில நாட்களாக மாண்புமிகு அம்மா அவர்களது பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கண்டனத்திற்குரியது.சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயிலில் பயணம் செய்யும் பயணிகள் இயங்குவதற்கு வசதியாக, ஒவ்வொரு நிறுத்தம் வருவதற்கு முன்பும், அந்நிறுத்தத்தின் பெயரை அறிவிப்பு செய்வது வழக்கம். சென்ற வாரம் வரை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது – தமிழக அரசு சூட்டிய “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று மெட்ரோ இரயில் நிர்வாகம் அந்த நிறுத்தத்தின் பெயரை முழுமையாக அறிவிப்பு செய்து வந்தது.ஆனால், கடந்த சில நாட்களாக மெட்ரோ இரயில் நிர்வாகம், கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய மெட்ரோ நிறுத்தம் வரும்போது, ”புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று அறிவிப்பு செய்யாமல் “புறநகர் பேருந்து நிலையம்” என்று மட்டுமே அறிவிப்பு செய்கிறது. தமிழக ரசு சூட்டிய பெயரை மெட்ரோ இரயில் நிர்வாகம் முழுமையாக அறிவிப்பு செய்வதில்லை. மாண்புமிகு அம்மா அவர்களது பெயரை இருட்டடிப்பு செய்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.எனவே, உடனடியக கோயம்பேடு புறநகர் பேருந்து நிலைய நிறுத்தம் வரும்பொழுது, ஏற்கனவே அறிவிப்பு செய்து வந்தபடி, “புரட்சித் தலைவி டாக்டர் ஜெ ஜெயலலிதா புறநகர் பேருந்து நிலையம்” என்று முழுமையாக அறிவிப்பு செய்ய வேண்டும் என்று சென்னி மெட்ரோ இரயில் நிறுவனத்தையும், விடியா தி.மு.க அரசையும் வலியுறுத்துகிறேன். அவ்வறு செய்யாமல், தொடர்ந்து மாண்புமிகு அம்மா அவர்களின் பெயரை இருட்டடிப்பு செய்ய நினைத்தால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் (CMRL) முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அறிக்கையில்…
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் “ஓணம்” திருநாள் வாழ்த்துச் செய்தி! திருஓணம் திருநாளை வசந்த கால விழாவாக உவகையோடு கொண்டாடி மகிழும், மலையாள மொழி பேசும் மக்கள் அனைவருக்கும் எனது ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.திருமால், வாமன அவதாரம் பூண்டு, மகாபலிச் சக்கரவர்த்தியை அடக்கி, ஆண்டுதோறும் மக்களை தான் காண வேண்டும் என்கிற அவரது வேண்டுதலை ஏற்று அருள் புரிந்தார். அதன்படி, மக்களைக் காண வரும் மகாபலிச் சக்கரவர்த்தியை வரவேற்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் திருவோணத்தன்று மலையாள மக்களால் ஓணம் பண்டிகை மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.மலையாள மொழி பேசும் மக்களால் பத்து நாட்கள் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையின்போது, மக்கள் தங்கள் இல்லங்களின் முன்பு வண்ணப் பூக்களால் அழகுற அத்தப்பூ கோலங்கள் இட்டு, புத்தாடை உடுத்தி, அறுசுவை கொண்ட ஓணம் விருந்துண்டு, புலிக்களி, கைக்கொட்டுக்களி போன்ற நடனங்களை ஆடி, கயிறு இழுத்தல், களறி, படகுப் போட்டி போன்ற விளையாட்டுப் போட்டிகளை நடத்தி உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்வார்கள்.பசி, பிணி பகை உணர்வு முற்றிலும் நீக்கப்பட வேண்டும்; ஆணவம் அகன்று சாதி, மத வேறுபாடின்றி, சகோதரத்துவத்துடன் மக்கள் அனைவரும் இணைந்து வாழ வேண்டும் என்ற உயரிய கருத்தினை இந்த ஓணம் பண்டிகை உணர்த்துகிறது. இந்த இனிய திருநாளில் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது தூய வழியில், எனது உளமார்ந்த ஓணம் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
via News J : https://ift.tt/AaGKUcl
via News J : https://ift.tt/AaGKUcl
Mediaநீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கோ, அரசுக்கோ உரித்தானது அல்ல. நாட்டில் வாழும் குப்பனுக்கும் சுப்பனுக்கும் உரித்தானது. அதிகாரத்துக்கு யார் வந்தாலும் அந்த அதிகாரத்தை நீர்த்துப்போகவேச் செய்கிறார்கள். ஊழல் வழக்குகளில் விசாரணை அதிகாரிகள், அதிகாரத்தில் இருக்கும் அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஆடத்தொடங்கினால், நியாயமான, பாரபட்சமற்ற விசாரணை என்கிற கருத்து, கேலிக்கூத்தாக மாறிவிடும். திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து நான் கண்களை மூடிக் கொண்டிருந்தால் கடமைதவறி விடுவேன்… இப்படி பரபரப்பான ஒரு ஸ்டேட்மெண்டை வெளிப்படுத்தியிருந்தார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்…சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமசந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை மேல் முறையீடு செய்யாததால், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெஙக்டேஷ், சுமோட்டோவாக எடுத்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.இதனால், பதறிப் போன திமுக கூடாரத்தில் இருந்து, பழிசுமத்தியிருக்கிறார் திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. திமுக அமைச்சர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையை நீதிபதி மேற்கொள்வதாகவும், பாரபட்சமாக நடந்து கொள்வதாகவும் கூப்பாடு போட்டு விமர்சித்திருக்கிறார்.இதே ஆர்.எஸ்.பாரதி, திமுக போட்ட பிச்சையினால்தான் நீதிபதியாகி இருக்கிறார்கள் என்றதும், கருணாநிதி போட்ட பிச்சைதான் மதுரையில் உயர்நீதிமன்ற கிளை என்று அமைச்சர் எ.வ.வேலு பேசியதும் திமுகவினரின் அராஜகத்தின் பதிவாகி இருக்கிறது.ஆனால் ஆர்.எஸ்.பாரதியின் சலசலப்பு எதனையும் கண்டுகொள்ளாத நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், தன் மீது இதுபோன்ற விமர்சனங்கள் எழுந்தாலும், அதுபற்றி தான் கவலைப்படப்போவது இல்லை என்று தெரிவித்திருப்பது திமுகவினரை விழி பிதுங்க வைத்திருக்கிறது.அடுத்தடுத்து திமுக அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு விசாரணைகள் நடந்து வரும் நிலையில், உயர்நீதிமன்றத்தின் நடவடிக்கையால், தங்களால் அதிகாரத்துஷ்பிரயோகம் செய்து விடுதலையாக முடியாது என்னும் அச்சமே இப்படி எல்லாம் திமுகவை பதற வைத்திருப்பதாகச் சொல்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.இப்படி நீதிபதியை விமர்சிக்கும் திமுகவின் ஆர்.எஸ்.பாரதி குறித்தும், நீதிபதியையே மன உளைச்சலுக்கு ஆளாக்கிய திமுக அமைச்சர்கள் தொடர்பாகவும், ஊழல் செய்து மாட்டிக்கொண்டதால் என்ன செய்வதென்றே தெரியாமல் விழி பிதுங்கி நிற்கும் திமுகவுக்கு, உயர்நீதிமன்றம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் மத்தியிலும் அது பேசு பொருளாகி இருப்பதால், நாடாளுமன்ற தேர்தலிலும் அதன் வெளிப்பாடு எதிரொலிக்கும் என்கிறார்கள் அரசியல் ஆர்வலர்கள்.
via News J : https://ift.tt/O4RIL1g
via News J : https://ift.tt/O4RIL1g
Mediaஅரசியல் காழ்ப்புணர்ச்சியை ஓரங்கட்டி வைத்துவிட்டு கோவையில் நடைபெற்று வரும் மக்கள் நலத்திட்டப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்…மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 8 குளங்கள் இணைக்கப்பட்டு இருந்தன. பின்னர் எடப்பாடி கே.பழனிசாமி முதலமைச்சராக பதவி வகித்தபோது குறிச்சிக்குளம் ஏரியையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என, அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை வைத்தார். இதனையடுத்து உடனடியாக இத்திட்டத்திற்கு ஒப்புதலும், நிதியும் வழங்கினார் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி. இதனை தொடர்ந்து குறிச்சிக்குளம் ஏரி பகுதியில் இந்தியாவிலேயே முதன்முறையாக 20 அடி உயரத்தில், 3 டன் எடை கொண்ட எஃகை பயன்படுத்தி, திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் ஆகியவற்றை விளக்கும் வகையில் 3 ஆயிரம் தமிழ் எழுத்துகளுடன் கூடிய தனித்துவமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது.இதே போல் ஜல்லிக்கட்டு விளையாட்டு நினைவுச் சின்னம், உயர்தர வசதிகளோடு கூடிய பொழுதுபோக்கு பூங்காக்கள், செல்ஃபி பாயிண்ட், உடற்பயிற்சிக்கான நடைபாதைகள், ஓய்வெடுக்க அமரும் இருக்கைகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகளும் அசுர வேகத்தில் மேற்கொள்ளப்பட்டு, கோவையில் வரலாறு காணாத வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது.இதைத் தொடர்ந்து கோவையின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பல்வேறு போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைந்த நிலையிலும் கூட கோவை மாவட்ட மக்களுக்கென ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை. அதிமுகவின் கோட்டையாக கோவை திகழ்ந்து வருவதால் தொடக்கம் தொட்டே கோவையை காழ்ப்புணர்ச்சியோடே விடியா அரசு அணுகி வருகிறது.இந்நிலையில் அதிமுக ஆட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்ததற்காக கோவைக்கு மத்திய நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் முதல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விடியா அரசு கோவையில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தாமல் முற்றிலுமாக புறக்கணித்து வருவதை தானும், கழக பொதுச்செயலாளரும் பலமுறை சுட்டிக்காட்டி வந்தோம் எனவும், அஇஅதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் வாயிலாக கோவையில் பல்வேறு வளர்ச்சிக்கு வழிவகை செய்யப்பட்டது என குறிப்பிட்டுள்ளார். தற்போது மத்திய நகர்புற வளர்ச்சித்துறை சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சுற்றுச்சூழலை சிறப்பாக கட்டமைத்தற்கான தர வரிசையில் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டம் முதல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது என்றும் கோவைக்கு இச்சிறப்பை பெற்றுத் தந்தமைக்காக கோவை மக்கள் சார்பாக புரட்சித் தலைவி அம்மா மற்றும் புரட்சித் தமிழர் அண்ணன் எடப்பாடியார் ஆகியோருக்கு மீண்டுமொருமுறை என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, விடியா அரசு இனிமேலும் கால தாமதம் செய்யாமல், கோவையில் நடைபெற்று வரும் பல்வேறு மக்கள் நலத்திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.ஆனால், அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்புகளைக் கூட முறையாக பராமரிக்காமல் உதாசீனப்படுத்தி வருகிறது விடியா அரசு. அதிமுக ஆட்சியில் அழகுப்படுத்தப்பட்ட கோவை மாநகர் தற்போது குரங்கு கையில் சிக்கிய பூ மாலை போல இருப்பதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
via News J : https://ift.tt/mpCA4EB
via News J : https://ift.tt/mpCA4EB
Media”கேட்” தேர்வானது பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி தொடங்குகிறது என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் தகவல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வு நடைபெறூம் நாட்களில் வேறு எந்தவகையான தேர்வுகளும் நடைபெறதா வண்ணம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.பொறியியல் படிப்பை முடிக்கும் பட்டதாரி மாணவ, மாணவிகளுக்காக தேசிய அளவில் பொறியியல் பட்டதாரி திறன் தேர்வு (கேட்) ஒவ்வோர் ஆண்டும் நடத்தப்பட்டு வருகின்றது. அதேபொல அடுத்த ஆண்டான 2024 ஆம் ஆண்டுக்கான கேட் தேர்வு குறித்த அறிவிப்பை பெங்களூரு இந்திய அறிவியல் கழகம் (ஐஐஎஸ்சி) தற்போது வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2024ல் நடைபெறும் கேட் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு வரும் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 29 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்ரவரி 3,4, 10 மற்றும் 11 ஆம் தேதிகளில் தேர்வு நடத்தப்பட உள்ளது.பெரும்பாலும் கணினி வாயிலாகத்தான் இந்த தேர்வு நடைபெறும். இத்தேர்வு நடைபெறும் ஒவ்வொரு நாள் காலையிலும் பிற்பகலிலும் நடத்தப்படுகிறது. இந்த தேர்வை ஐஐஎஸ்சி, 7 ஐஐடி-க்களுடன் இணைந்து நடத்த உள்ளது. தேர்வு முடிவானது மார்ச் 16 2024-ல் வெளியிடப்பட்டு மார்ச் 23 2024 முதல் மார்ச் 31 2024 வரை பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகளும் செய்யப்பட இருக்கிறது.
via News J : https://ift.tt/rNEdMw2
via News J : https://ift.tt/rNEdMw2
Mediaதிருச்சி உறையூரில் மாநகராட்சியால் வழங்கப்படும் சுகாதாரமற்ற குடிநீரால் 50-க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரையிலும் மருத்துவ முகாமை நடத்த முயற்சிக்காத விடியா அரசின் மெத்தனம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…திருச்சி மாநகராட்சி, உறையூரில் உள்ள சோழராஜபுரம், பாக்குப்பேட்டை மற்றும் சாலை ரோடு ஆகிய பகுதிகளில், சில நாட்களாக பொதுமக்களில் பலருக்கு தொடர்ச்சியாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு மஞ்சள் காமாலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இந்நிலையில் கழிவுநீர் கலந்த துர்நாற்றத்துடன் விநியோகிக்கப்படும் குடிநீரே மஞ்சள் காமாலை பரவலுக்கு காரணம் என பொதுமக்கள் மாநகராட்சி அலுவலர்களிடம் புகார் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சியின் சுகாதாரத் துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், இதுவரையிலும் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் மற்றும் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.பின்னர் பெயரளவுக்கு குடிநீரின் மாதிரியை மட்டும் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். பல இடங்களில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருவதால், உடைப்பு ஏற்பட்டு குடிநீருடன் கழிவுநீர் கலந்துள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி அலுவலர்கள் மிகவும் கூலாக பதிலளித்து சென்றுள்ளனர்.புகார்கள் தொடர்ந்து குவிந்தும், இதுவரையிலும் மருத்துவ முகாம்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சோழராஜபுரத்திலிருந்து மட்டும் ஒரே நாளில் பத்துக்கும் மேற்பட்டோர் மஞ்சள் காமாலைக்கு மருந்து சாப்பிடுவதற்காக வேன் பிடித்து, புதுக்கோட்டை மாவட்டம் கடியாபட்டிக்கு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.சுகாதாரமான குடிநீர் வழங்குவதை உறுதி செய்வதுடன், உரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் விடியா திமுக அரசுக்கு பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
via News J : https://ift.tt/jQG2Fmd
via News J : https://ift.tt/jQG2Fmd
Mediaதொலைக்காட்சி தோன்றிய காலக்கட்டத்திலிருந்தே குழந்தைகளுக்கு புதிய புதிய நிகழ்ச்சிகளை கொண்டுவருவதில் ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமும் முனைப்புக் காட்டி வந்தனர். குழந்தைகளை ஈர்ப்பதன் மூலம் தங்கள் தொலைக்காட்சிகளை பிரபல்யத்தன்மைக்கு கொண்டு செல்லலாம் என்பது அவர்களின் கணக்கு. அப்படி கொண்டுவரப்பட்டு குழந்தைகள் அனைவரையும் கவர்ந்திழுத்த நிகழ்ச்சிகளில் ஒன்று “பவர் ரேஞ்சர்ஸ்”.Watch Mighty Morphin Power Rangers: Once & Always | Netflix Official Siteதொண்ணூறுகளின் பிற்பகுதியிலும் இரண்டாயிரத்தின் முற்பகுதியிலும் பிறந்து வளர்ந்த் அத்தனைக் குழந்தைகளுக்கும் பவர் ரேஞ்சர்ஸ் என்பது வாழ்வின் கொண்டாட்டம் தான். சாதாராண நபராக இருக்கக் கூடியவர்கள் சக்திப் பெற்று பவர் ரேஞ்சர்ஸாக மாறுவார்கள். பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படும் காலக்கட்டத்தில் மக்களோடு மக்களாக இருக்கும் இவர்கள் பவர் ரேஞ்சர்ஸாக உருமாறி எதிரிகளை துவம்சம் செய்வார்கள். சூப்பர் ஹீரோக்கள் படங்களின் மலிவு விலை காட்சியகம் தான் இந்த பவர் ரேஞ்சர்ஸ் என்று சொல்வத்ல் மிகையல்ல. ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப புதியவகை பவர் ரேஞ்சர்ஸ் எபிசோட்கள் உருவாக்கப்படும். வைல்ட் ஃபோர்ஸ், டெனோ தண்டர், டைம் ஃபோர்ஸ், எஸ்பிடி, மிஸ்டிக் ஃபோர்ஸ் என்று வகைவகையான பவர் ரேஞ்சர் நிகழ்ச்சிகள் களம் இறக்கப்பட்டன. இதில் அனைவரின் மனதிலும் பெரும்பாலும் பதிந்த பவர் ரேஞ்சர்ஸ் எபிசோட் எஸ்பிடி தான். இந்த பவர் ரேஞ்சர்ஸ் நிகழ்ச்சி எந்த அளவுக்கு கேளிக்கை மிக்கதாக இருந்ததோ அதே அளவுக்கு குழந்தைகளின் மன அளவில் தங்களையும் சூப்பர் ஹீரோக்களாக நினைக்க வைக்கும் தன்மையையும் வளர்த்தெடுத்தது. இந்நிகழ்ச்சி ஆரம்பிக்கும்போதே, இதில் வரும் சண்டைக் காட்சிகள், சாகசங்கள் அனைத்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியால் செய்யப்பட்டது. எனவே, யாரும் இதனை வீட்டிலும் வெளியிலும் முயற்சி செய்ய வேண்டாம் என்று சொல்லியே தொடங்கும். இதற்கு காரணம் இதுபோன்ற சாகச நிகழ்ச்சிகளை குழந்தைகள் செய்து மரணம் எய்தியுள்ளனர். எந்த ஒரு பொழுதுபோக்கு அம்சம் கொண்ட நிகழ்ச்சிகளிலும் சாதகம் மற்றும் பாதகம் ஆகிய இரண்டும் உண்டு. தற்போதைய தலைமுறையினருக்கு பவர் ரேஞ்சர்ஸ் பற்றி அதிகம் தெரிவதற்கு வாய்ப்பில்லை. அவர்களின் ரசிப்புத் தனமை வெவ்வேறு வகைக்கு மாறிவிட்டது. சில பழைய விசயங்களை திரும்பி பார்ர்க்கும்போது, அது காலத்தால் அழியாது இருக்கும். அப்படிப்பட்டதுதான் 90களில் வாழ்ந்த குழந்தைகளின் பவர் ரேஞ்சர்ஸ் மோகம்.
via News J : https://ift.tt/cgs4yoA
via News J : https://ift.tt/cgs4yoA
Mediaசட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இலாகா இல்லாத அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைவதால், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை நீதிபதி ரவி முன்பாக அமாலக்கத்துறையினர் ஆஜர்படுத்தினர். அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சுமார் 3000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் செந்தில் பாலாஜியிடம் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து செந்தில்பாலாஜிக்கும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிவரை காவல் நீட்டிக்குமாறு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.
via News J : https://ift.tt/VR0daP4
via News J : https://ift.tt/VR0daP4
Mediaஉலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனைப் படைத்த இந்தியாவின் நீரஜ் சோப்ராவிற்கு கழகப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அதிகாரப் பூர்வ டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்தார். அது பின்வருமாறு உள்ளது.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும் திரு. நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றிருக்கும் திரு. நீரஜ் சோப்ரா அவர்கள், மென்மேலும் பல சாதனைகள் புரிந்து தாய் நாட்டிற்கு பெருமை சேர்க்க வாழ்த்துகிறேன்.ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட் நகரில் நடந்துவரும் உலகத் தடகள சாம்பியன்ஷிப் ஈட்டி எறிதல் இறுதிச்சுற்றில் தங்கம் வென்று சாதனை படைத்திருக்கும்
திரு. நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப்… pic.twitter.com/kLmaFtjmuK— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 28, 2023
via News J : https://ift.tt/xd3jcDQ
திரு. நீரஜ் சோப்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.உலகத் தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப்… pic.twitter.com/kLmaFtjmuK— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 28, 2023
via News J : https://ift.tt/xd3jcDQ
Mediaதிண்டுக்கல் அருகே விடியா திமுக அரசு கட்டிக் கொடுத்த தரமற்ற வீடுகளால் உயிர்பயத்தில் வீதியில் படுத்துறங்கி வரும் இலங்கைத் தமிழர்களின் அவல நிலை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.திண்டுக்கல் அருகே உள்ள தோட்டத்து கிராமத்தில், சுமார் 17 கோடி ரூபாய் மதிப்பில் இலங்கை அகதிகளுக்கான மறுவாழ்வு முகாம் அமைக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கட்டப்பட்ட 320 வீடுகளும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டன.இந்நிலையில் கட்டடங்கள் கட்டப்பட்டு 11 மாதங்களே நிறைவடைந்துள்ள நிலையில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் விரிசல் அடைந்து, சுவர்கள் முற்றிலும் இடிந்து விழும் நிலையில் காணப்படுகிறது. மேலும் மேற்கூரை முழுவதும் சேதமடைந்துள்ளதால் மழைக் காலங்களில் மக்கள் உயிர்பயத்துடனே வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் முறையாக கழிவுநீர் வாய்க்கால் அமைக்காமல் அவசர கதியில் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படாததால், மழைக் காலங்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்து விடுகின்றன. இதனால் பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது.அத்துடன் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களும் வீட்டிற்குள் புகுந்து உயிர் பயத்தை ஏற்படுத்து வருகின்றன. இதன் காரணமாக இரவு நேரங்களில் வீட்டை விட்டுவிட்டு அனைவரும் சாலையில் படுத்துறங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இலங்கை தமிழர்களின் வாழ்வை காக்கிறோம் என்கிற பெயரில் அவர்களை மேலும் இன்னலுக்குள்ளாக்கி வருகிறது விடியா திமுக அரசு. ஓட்டு வங்கிக்காக மட்டும் பயன்படுத்தி விட்டு, பிரச்சினைகள் குறித்து புகார் அளித்தும் கண்டுகொள்ளாமல் விடியா அரசு அலட்சியமாக செயல்படுவதாக இலங்கை தமிழர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் சேதமடைந்துள்ள குடியிருப்புகளை உடனடியாக சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
via News J : https://ift.tt/X1iTlIP
via News J : https://ift.tt/X1iTlIP
Mediaஅதிமுக நடத்திய பிரம்மாண்ட மதுரை மாநாட்டின் வெற்றியால் மண்டை குழம்பிப்போய் என்னசெய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடிக்கொண்டிருக்கும் திமுக, குய்யோ முறையோ என்று கதறிக்கொண்டிருக்கிறது… ஓர் எதிர்க்கட்சி, அதுவும் ஆட்சியை இழந்து இரண்டரை ஆண்டுகளில் ஒரு மாபெரும் மாநாடு நடத்தி அதில் 15 லட்சம் பேரை கூட்டியிருக்கிறது… இதைக்கூட சரியாக கணிக்கத்தெரியாத அரசியல் கட்சியாக இருக்கும் திமுகவை நடத்திக்கொண்டிருக்கும் ஸ்டாலினின் தலைமையே தற்போது ஊசலாடிக்கொண்டிருக்கிறது.மாநாட்டை கெடுக்கத்தான், உதயநிதி தலைமையில் உண்ணாவிரத நாடகம் போட்டது திமுக… 15 லட்சம் தொண்டர் படை முன்னால் அது துளிகூட எடுபடவில்லை… இதை அறிந்துகொண்டுதான் தற்போது, டிசம்பர் மாதத்தில் திமுக இளைஞரணி மாநாட்டை சேலத்தில் கூட்டப்போவதாக அறிவித்திருக்கிறது திமுக… அடேங்கப்பா, இதுதானாப்பா உங்க டக்கு? அதிமுக மாநாடு ஏற்படுத்திய தாக்கத்தை மக்கள் மனதில் இருந்து நீக்கவே இந்த அதரப்பழைய யுத்தியை கையில் எடுத்திருக்கிறது விடியா திமுக…ஏங்க, பொறாமையில பொங்கலாம் ஆனா, இவ்ளோ வெளிப்படையா அப்பட்டமாவா பொங்குவீங்க? மாநாடு நடந்த அன்று உதயநிதி நடத்திய உண்ணாவிரதம் ஃபெயிலியர் ஆனது ஒருபுறம் என்றால், இன்னொரு புறம் அதிமுக மாநாடு வெற்றியடைந்ததை தாள முடியாமல், துரோகிகளை ஏவிவிட்டு, ஒன்றுமில்லாத சாப்பாட்டுப் பிரச்சனையை கிளப்பி திசை திருப்ப பார்த்தும், அதிலும் தோல்வியடைந்த ஸ்டாலின் செல்லுமிடமெல்லாம் அதிமுக மாநாட்டைப் பற்றி பேசிப் பேசி தங்கள் ஆத்திரத்தை தீர்த்துக்கொள்கின்றனர்…ஓ கதறீங்களா? கதறுங்க கதறுங்க… என்று சமூகவலைதளங்களில் அசால்டாக திமுகவை சம்பவம் செய்கின்றனர் இதைகவனிக்கும் அதிமுகவினர்…மாநாட்டை வெற்றிகரமா நடத்தி முடிச்சு அதிமுககாரங்களே துண்ட ஒதறி தோள்ல போட்டுட்டுப் போனதுக்கு பிறகும், மேடைக்கு மேடை அதிமுக மாநாடு பற்றி பேசி இன்னும் அதிமுகவிற்கு மார்க்கெட்டிங் செய்துகொண்டிருக்கிறார்கள் தந்தையும் மகனும்.ஆக, அதிமுகவின் மாநாடு வெற்றியை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலினும், உதயநிதியும் பொங்குவது ஏன்? மேடைக்கு மேடை அதிமுக மாநாட்டை பற்றி அவதூறு பேசினால், மாநாட்டு வெற்றியை புறந்தள்ளிவிட முடியுமா? அதிமுக மாநாட்டு வெற்றியைக் கண்டு பொறுக்கமுடியாததால்தான் சேலத்தில் இளைஞரணி மாநாடு நடத்த திட்டமிட்டிருக்கிறதா திமுக? என்பன போன்ற கேள்விகளைப் பார்க்கும்போது, அதிமுக மாநாட்டின் தாக்கத்தால் கலக்கத்தில் இருக்கிறார் ஸ்டாலின் என்பது மட்டும் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது
via News J : https://ift.tt/OmbavhV
via News J : https://ift.tt/OmbavhV
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை பொதுமக்கள் நலனைக் கருத்தில்கொண்டு மநாகராட்சிப் பகுதிகளில் பழைய வீடுகளை இடித்து புதிய வீடுகளைக் கட்டுவதற்கு, ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை நீக்க வேண்டுமென்று விடியா திமுக அரசுக்கு வலியுறுத்தல்! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் “பாரத ரத்னா” புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழா, நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரியில் கடந்த 22.9.2018 அன்று நடைபெற்றபோது, நாகர்கோவில் நகராட்சியை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டேன்.நாகர்கோவில் மாநகரில் பொதுவாக குறுகிய சாலைகளும் , 3 அடிக்கும் குறைவான தெருக்களும் அதிகம் உள்ளன. அத்தகைய இடங்களில் உள்ள பழைய கடைகள், வீடுகள் மற்றும் கட்டடங்கள் இயற்கை சீற்றங்களினால் இடிந்து விழும் சூழ்நிலையில் அவற்றை இடித்துவிட்டு புதிய கடைகள், வீடுகள் கட்ட மாநகராட்சி அனுமதி தருவதில்லை; மின் இணைப்பும் தருவதில்லை. இதனால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர்.நாகர்கோவில் மாநகராட்சியில் இவ்வாறு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களுக்கு திட்ட ஒப்புதல் கிடைக்காமல் நிலுவையில் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் பழைய கட்டுமானங்களை இடித்துவிட்டு புதிய வீடுகள், கடைகள் ஆகியவற்றைக் கட்டுவதற்கு அனுமதியும், மின் இணைப்பும் வழங்குமாறு மாநகராட்சி அதிகாரிகளிடம் விண்ணப்பத்தாரர்களும், மக்கள் பிரதிநிதிகளும் பலமுறை வ்லியுறுத்தினார்கள்.அதனைத் தொடர்ந்து, 18.11.2022 அன்று நகர்ப்புற ஊரமைப்புத் துறை இயக்குநர், நாகர்கோவிலில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார். பின்னர், நாகர்கோவில் மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள பழைய கட்டடங்களை இடித்துவிட்டு புதிய கட்டங்களை கட்டுவதற்கு அனுமாதி அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றும், பின்னர் இது மற்ற மாநகராட்சிகளுக்கும் விரிவுபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்தார்.அவ்வாறு உறுதி அளிக்கப்பட்டு 5 மாதங்கள் கடந்த பின்னரும், மேல் நடவடிக்கை ஏதும் இல்லாததால், சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நாகர்கோவிலில் கட்டட அனுமதி இல்லாமல் இடிந்துவிழும் நிலையில் உள்ள வீடுகளில், மக்கள் தங்கள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்து வருவதைக் கருத்தில் கொண்டும், உடனடியாக புதிய கட்டடங்கள் மற்றும் மின் இணைப்புக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத் தொடரில் 11.2.2023 அன்று, கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான திரு. என்.தளவாய்சுந்தரம் அவர்கள் கேள்வி எழுப்பினார்.அப்போது பதில் அளித்துப் பேசிய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்கள் “தொடர் கட்டடம் – Continuous Building Area – அதைப்பற்றி ஒரு பிரச்சனை இருக்கிறது. அதற்கு வழிவகை செய்வதற்காக ஏற்கெனவே துறையின் மூலமாக ஆலோசித்து நடவடிக்கை எடுத்திருக்கிறோம்” என்றார். அதேபோல், Planning Permission இல்லாமல் கட்டப்படுள்ள கட்டடங்கள் பற்றிய பிரச்சனையும் இருக்கிறது. எனவே, இதையெல்லாம் ஒருங்கிணைத்து கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்திருந்தார். விடியா திமுக அரசின் அமைச்சர் உறுதி அளித்து 4 மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால், இன்னும் நாகர்கோவில் மாநகராட்சி மக்களுக்கு விடிவுகாலம் வரவில்லை.எனவே, நாகர்கோவில் மாநகராட்சி மக்களை பாதிக்கின்ற வகையில் உள்ள Continuous Building area மற்றும் Planning Permission ஆகிய பிரச்சனைகளை சரிசெய்து, உடனடியாக கட்டட அனுமதி மற்றும் மின் இணைப்பு வழங்க விரிவான அரசாணையை வலியுறுத்துகிறேன். மேலும், இந்த அரசாணை தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிப் பகுதிகளுக்கும் பொருந்தும்படியான உத்தரவாக வெளியிட்டு, அனைத்து நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கும் ஒரு நிரந்தரத் தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
via News J : https://ift.tt/7MisBHb
via News J : https://ift.tt/7MisBHb
Mediaதமிழ் மக்களுக்கு எப்படி பொங்கல் சிறப்பு வாய்ந்ததோ, அதுப்போலவே மலையாள மொழி பேசும் மக்களுக்கும், கேரளாவினருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக ஓணம் பண்டிகை விளங்குகிறது. அப்படிப்பட்ட ஓணம் பண்டிகையை எப்படியெல்லாம் கொண்டாடுவார்கள் கேரள வாசிகள்..? இந்த தொகுப்பில் பார்க்கலாம்.கேரளா என்றவுடன் சட்டென்று நம் நினைவுக்கு வருவது சுற்றுலா தளம், செண்டை மேளம், கதகளி நடனம், மம்முட்டி – மோகன்லால் திரைப்படம், சபரிமலை, குருவாயூர் போன்ற கோவில்கள், அடுத்து மிக முக்கியமானது கேரள மக்களால் கொண்டாடப்படும் பண்டிகைகள். அதுவும் ஓணம் பண்டிகையை 10 நாட்கள் கொண்டாடி அதகளபடுத்துவார்கள் கேரள வாசிகள்.மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சிறப்போடு ஆண்டு வந்தார். அவருக்கு முக்தி அளிக்க வேண்டி அவர் தலையில் கால் வைத்து அவரைப் பாதாள உலகிற்கு தள்ளினார் கடவுள் என்ற ஒரு கதை உண்டு. திருவோணத் திருநாள் அன்று மகாபலி தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாகக் கேரள மக்கள் நம்புகிறார்கள்Onam 2022: All About Kerala's 10-day Harvest Festival That Marks the Arrival of King Mahabali - News18இதனைமுன்னிட்டு விழா நாளன்று சிறப்பு உணவுகள் தயார் செய்யப்படும். “கானம் விற்றாவது ஓணம் உண்” என்ற பழமொழி அங்கே பிரபல்யம். 64 வகையான உணவு தயாரிக்கப்படுகிறது. அடை, அவியல், அடை பிரதமன், பால் பாயாசம், அரிசி சாதம், பருப்பு, நெய், சாம்பார், காலன், ஓலன், ரசம், மோர், தோரன், சர்க்கரப் புரட்டி, கூட்டு, கிச்சடி, பச்சடி, இஞ்சிப்புளி, எரிசேரி, மிளகாய் அவியல், பரங்கிக்காய் குழம்பு பப்படம், சீடை, ஊறுகாய்கள் என உணவுகள் தயார் செய்யப்பட்டு தடபுடலாக கொண்டாட்டத்தை துவங்குவார்கள்.இத்திருவிழாவின் போது அனைத்து பகுதிகளிலும் வித்தியாசமான, அனைவரையும் கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படும். முகமூடி அணிந்து கும்மாட்டி நடனக் கலைஞர்கள் தெருக்களில் வந்து மக்களை மகிழ்விப்பார்கள். அடுத்து படகு பந்தயம். பார்ப்பதற்கு பிரமாண்டமாக இருக்கும் இந்த படகு போட்டியை ஆண்கள் பெண்கள் என அனைவரும் கேரள கலாச்சார உடையணிந்து பெரும்திரளாக பார்க்க அணிவகுப்பார்கள்.ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பம்சம், ‘புலிக்களி’ என்று அழைக்கப்படும் நடனம். இந்த விழா, திருச்சூரில் வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. வயிற்றை பெரிய அளவில் வளர்த்து வைத்திருக்கும் ஆண்களுக்கு இந்த விழாவில் செம டிமாண்ட். கறுப்பு, மஞ்சள், சிவப்பு வர்ணம் பூசி, இசை தாளத்துக்கு தகுந்த படி புலி வேடமிட்டு ஆடுவர்.ஆதே சமயம் பெண்கள் மகிழ்வோடு ஆடும் நடனத்தை ‘கைகொட்டுக்களி என்று சொல்வார்கள்.’ வெண்ணிற ஆடையை அணிந்து பாடல்களைப் பாடியபடி அவர்கள் ஆடுவது, அனைவரையும் கவர்ந்து, அவர்களிடத்தில் மட்டுமே கவனம் பெற செய்யும். அதுபோல பெண்கள் மட்டுமே பங்கேற்கும் ”தும்பி துள்ளல்” எனும் நடனமும் வழக்கம். தாளத்துடன் கோரசாக பெண்கள் பாடுவது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரசிக்க செய்யும்.ஓணம் பண்டிகையின் உச்சக்கட்டமாக தவறாமல் இடம்பெறும் மற்றொரு சிறப்பு யானைத் திருவிழா. 10-ம் நாளான திருவோணத்தன்று, யானைகளை விலையுயர்ந்த கவசங்களாலும் அத்தப்பூ தோரணங்களாலும் அலங்கரித்து வீதிகளில் ஊர்வலம் நடத்துவர்.மொத்தத்தில் ஏழை, பணக்காரன் பார்க்காமல், சாதி,மதம் கருதாமல் ஒன்றுகூடி கொண்டாடும் ஒரு விழாவாக ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை தமிழ்நாட்டிலும் ஒரு காலத்தில் கொண்டாடப்பட்டது என்று சங்ககால வரலாற்று ஏடுகள் சொல்கின்றன. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்தாலும் தமிழகத்தில் வாழும் கேரள மக்களோடு சேர்ந்து இப்போதும் ஓணம் பண்டிகையைத் தமிழக மக்களும் கொண்டாடுகிறார்கள்.
via News J : https://ift.tt/lOZ0qke
via News J : https://ift.tt/lOZ0qke
Mediaபள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைக்கிறேன் பேர்வழி என, போஸ் கொடுத்தே மாணவர்களை பாடாய்படுத்தி எடுத்துவிட்டார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். முதல்வர், அமைச்சர் என விடியா ஆட்சியில் அனைவரும் வெறும் “போஸ் பாண்டிகளாய்” இருப்பதாக பொதுமக்கள் எள்ளி நகையாடுகின்றனர்…ஒரு போட்டோ எடுப்பதற்காக மாணவர்களை தட்டில் உணவுடன் காக்க வைத்துள்ளார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் என ஒன்றைத் துவக்கிவிட்டு, அதை வைத்து விளம்பரம் தேடி வருகிறது. திட்டத்தை தொடங்கி வைத்த ஸ்டாலின், தரையில் அமர்ந்து மாணவர்களுக்கு உணவு ஊட்டிவிடுவதுபோல போட்டோ, வீடியோ ஷூட் எடுத்து அதை காணும் இடமெல்லாம் விளம்பரம் செய்து வருகிறது விடியா அரசு.இதைக் கண்ட அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்துக்கும், ஸ்டாலினைப் போல ஆசை துளிர்விட்டதுபோல. உடனே, தனது குறிஞ்சிப்பாடி தொகுதிக்குட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஸ்டாலின் துவக்கி வைத்த காலை உணவுத் திட்டத்தை மீண்டும் துவக்கி வைக்க ஏற்பாடுகளை செய்தார்.இதற்காக காலையில் வழக்கத்தை விட சீக்கிரமாகவே மாணவர்கள் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு, மேஜை போடப்பட்டு உணவு பறிமாறப்பட்டது. பக்கத்திலேயே திரை அமைக்கப்பட்டு அதில் ஸ்டாலின் இத்திட்டத்தை தொடங்கி வைத்த வீடியோ வேறு ஒளிபரப்பப்பட்டது. காலையில் தூக்கக் கலக்கத்தில் அமர்ந்திருந்த இளம் பிஞ்சுகள் நடப்பது என்னவென தெரியாமல் மலங்க மலங்க விழித்துக் கொண்டிருந்தனர்.சாப்பாடு பரிமாறப்பட்டதும், பன்னீர்செல்வம் தனது தட்டில் இருந்த உணவை எடுத்து அருகில் இருந்த மாணவர்கள் வாயில் ஊட்டி விடுவது போல போஸ் கொடுக்கத் தொடங்கினார். உடனே அதிகாரிகள் அனைவரும் தங்களது செல்போன்களில் அமைச்சரைப் படம் பிடித்து நற்பெயர் எடுக்கத் துடியாய் துடித்துக் கொண்டிருந்தனர்.அந்த நேரம் பார்த்து அதிகாரி ஒருவர் குறுக்கே கடந்து செல்ல, நல்ல ஷாட் மிஸ் ஆயிருச்சே என கடுப்பான அமைச்சர், கையை நீட்டி ஏய் என அதிகாரியை ஒரு சவுண்ட் விட்டார். அப்பாவி மாணவர்களோ என்ன நடக்கிறது எனத் தெரியாமல் மிரட்சியோடு பார்த்துக் கொண்டிருந்தனர். அமைச்சரின் இந்த போலி போட்டோஷூட் வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
via News J : https://ift.tt/SYte1wl
via News J : https://ift.tt/SYte1wl
Media2 ஜி வழக்கில் திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோரின் விடுதலையை எதிர்த்து அமலாக்கத் துறையினரால், டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கின் மீதான விசாரணை, இரண்டாவது நாளாக இன்றும் நடைபெறவுள்ளது.2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் முறைகேடு நடந்தது தொடர்பான வழக்கில், கடந்த 2017-ம் ஆண்டு திமுக எம்.பிக்கள் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். இதனை எதிர்த்து கடந்த 2018-ம் ஆண்டு அமலாக்கத்துறை சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆகஸ்ட் 28-ம் தேதி முதல் விசாரணை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்றத்தில் 2ஜி வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 2-வது நாளாக இன்று மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இந்த வழக்கில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோரின் விடுதலைக்கு எதிரான சிபிஐ-ன் மேல்முறையீட்டு மனு மீது ஆகஸ்ட் 31 -ல் நடைபெறவுள்ளது.
via News J : https://ift.tt/0PlqYXN
via News J : https://ift.tt/0PlqYXN
Mediaசூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி மையமான இஸ்ரோ ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2 ஆம் திகதி விண்ணில் அனுப்புவதற்கு ஆயத்தமாகியுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வினைப் பொறுத்தவரை ஒவ்வொரு முறையும் ஒரு புதிய சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு இருக்கிறது. அந்த வரிசையில் ஆதித்யா எல் 1-ம் அமையும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.சந்திரயான், மங்கள்யான் ஆகிய சாதனைகளைத் தொடர்ந்து ஆதித்யா எல் 1-னும் வரலாற்றில் இடம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆதித்யா எல் -1 சூரியனில் எழக்கூடிய சூரிய புயல்களை முன்கூட்டியே அறிய உதவுவதற்கு இந்த முயற்சி பயனுள்ளதாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.சூரியனை ஆராயும் ஆதித்யா எல்-1About Aditya-L1 Missionசூரியனை ஆராய்வதன் மூலம் நமக்கு என்ன பயன் என்று கேள்வி எழமால் இல்லை. அதற்கு காரணமும் இருக்கிறது. நாம் வாழும் பூமியானது இப்பிரஞ்சத்தின் ஒரு கோள். இப்பிரஞ்சத்தின் மையக் கருவாக இருப்பது சூரியன் என்கிற மிகப்பெரிய நட்சத்திரம். சூரியனை ஆராய்வதன் மூலம் ஒட்டுமொத்த பிரஞ்சத்தையும் ஆராய்ந்துவிடலாம் என்பது நம் விஞ்ஞானிகளின் கணக்கு. ஏற்கனவே அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையமும், ஐரோப்ப விண்வெளி நிறுவனமும் சூரியனைப் பற்றி தெரிந்துகொள்ள பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. ஆனால், ஆதித்யா எல் 1-ஆனது சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதோடு மட்டுமல்லாமல், கூடுதலாக சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் வேலையிலும் ஈடுபட உள்ளது. சூரியனின் வயது 450 கோடி ஆண்டுகள் இருக்கும். சூரியனின் தொடர்ந்து மைய இணைவு முறையால், ஹைட்ரஜன் ஹீலியமாக மாற்றப்படுகிறது. இந்த மாற்றத்தின் போது அதிக அளவு ஆற்றலானது வெளியிடப்படுகிறது. சூரியனின் மையம் கோர் என்று அழைக்கப்படுகிறது. இதன் வெப்பநிலை பதினைந்து லட்சம் டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியனின் மேற்பரப்பு குரோமோஸ்ஃபியர் ஆகும். வெப்பமானது மையத்திலிருந்து இந்த மேற்பரப்புக்கு செல்லும்போது படிப்படியாக வெப்பநிலையானது குறையும். இந்த மேற்பரப்பின் வெப்பநிலை 5500 டிகிரி செல்சியஸ் ஆகும். சூரியனின் மேற்பரப்பானது தொடர்ந்து அதிக அளவு சூரியப் புயல்களை உமிழ்கிறது. சில நேரங்களில் அதிக அளவு அணுக்கரு பிளவு ஏற்பட்டு சூரிய புயல்கள், சூரிய வெடிப்பு புயல்களாக மாற்றம் பெறுகிறது.சாதிக்குமா இந்தியா?What next after Chandrayaan 3 landing? Aditya L1 Sun mission explained - Hindustan Timesஇத்தகைய புயல்கள் பூமியைத் தாக்க முடியுமா என்றால், பூமியின் வளிமண்டலமும் காந்தப்புலமும் அதற்கு தடுப்பாக உள்ளது. ஆனால் இன்னொரு வகையில் இந்த சூரியப் புயல்கள் பூமியில் தாக்கத்தை ஏற்படுத்தும். வானத்தில் உள்ள செயற்கைக்கோளை இந்த சூரியப் புயல்கள் தாக்குவதன் மூலம், பூமியில் உள்ள மின் கட்டமைப்புகள், தொடர் கட்டமைப்புகள் போன்றவை பாதிப்பை சந்திக்கும். இதனால் பொருளாதார இழப்பீடு அதிகளவு ஏற்படும். மேலும் விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கக்கூடிய விண்வெளி வீரர்கள் இந்த சூரிய புயல்கள் மூலம் நேரடியான பாதிப்பினை சந்திப்பார்கள். இதனால் இந்த சூரியப் புயல்களை ஆரம்பத்திலே கண்டறிவது அவசியம் ஆகிறது. இதனைத் தான் ஆதித்யா எல்-1 செய்ய உள்ளது. இதன் மூலம் சூரியனை ஆராய்ச்சி செய்வதற்கு விண்கலம் அனுப்பப்படும் நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடம் பிடித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி மையத்திற்கு பிறகு, இந்த ஆய்வினை இந்தியா தான் மேற்கொள்கிறது. சந்திரயான் -3 ல் வெற்றி கண்டதுபோல, ஆதித்யா எல்-1 லும் வெற்றி காண்போமாக!
via News J : https://ift.tt/jC39FKo
via News J : https://ift.tt/jC39FKo
Mediaஅரியலூர்ல அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கனும்ன்ற அந்த மாவட்ட மக்களோட கோரிக்கையை ஏத்துக்கிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலையில் அரியலூர் அரசு மருத்துவமனை கல்லூரிக்கு அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டுனாரு.அதிமுக ஆட்சில கட்டி முடிக்கப்பட்ட பாலங்கள், கட்டிடங்களுக்கு விடியா திமுக எப்படி ஸ்டிக்கர் ஒட்டி அவங்க பேர வச்சுக்கிட்டாங்களோ அதே மாதிரி, 347 கோடி ரூபாய் மதிப்புல கட்டி முடிக்கப்பட்ட இந்தக் கல்லூரியையும் வாரிசு அமைச்சர் உதயநிதி திறந்து வச்சு, அங்கிருந்த அரங்கத்துக்கு நீட் தேர்வால உயிரிழந்த மாணவி அனிதாவோட பேரையும் சூட்டி பயங்கர எமோஷனலா பேசி டிராமா போட்டு போனாரு.திறந்து வச்சதோட சரி.. அதுக்கப்பறம் அந்த ஆஸ்பத்திரி ஒழுங்கா இயங்குதானு பாக்கக் கூட வாரிசு அமைச்சருக்கோ, துறை சம்பந்தப்பட்ட அமைச்சருக்கோ நேரமில்ல போல. திறந்து வச்சு 5 மாசமாகியும் இதுவரை டாக்டரோ, நர்ஸோ வேலைக்கு வைக்கல, மருத்துவ உபகரணங்கள் கூட இல்லாம ஆஸ்பத்திரி காத்தாடிட்டு இருக்கு.இந்நிலையில அரியலூருக்கு ஒரு பங்கஷனுக்கு வந்த உதயநிதிட்ட மருத்துவமனையோட லட்சணத்தை பத்தி கேட்டப்போ, மனுஷன் என்ன நடக்குதுனே தெரியாம முழிச்சாக்காரு…உடனே பக்கத்துல இருந்த அரசு அதிகாரிங்க சொல்றத கேட்டு விரைவில் நடவடிக்கை எடுப்போம்னு சொல்லிட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆயிட்டாரு. விடியா திமுகவுக்கு, அதிமுக செஞ்ச திட்டங்களுக்கு பேர் வைக்கத் தான தெரியும், மக்கள் நலத்திட்டங்கள செயல்படுத்துறது எப்படி தெரியும்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…
via News J : https://ift.tt/3OpzHv4
via News J : https://ift.tt/3OpzHv4
Mediaகேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறைவு. உஜ்வாலா திட்டத்தின் கீழ் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.கேஸ் சிலிண்டர் விலை ரூ. 200 குறையவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இந்த விலை குறைப்பு நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தின்போது இந்த முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சமையல் கேஸ் சிலிண்டருக்கு மானியம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மானிய திட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து சிலிண்டர் விலையை குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.ஒட்டு மொத்தமாக கேஸ் சிலிண்டரின் விலையை குறைப்பு செய்வதன் மூலமாக அரசுக்கு ரூ. 7500 கோடி வரை இழப்பு ஏற்படும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கேஸ் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களின் விலை குறைந்த போதிலும், சிலிண்டரின் விலை குறைக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் சிலிண்டரின் விலை குறைக்கப்படும் என்று வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சிலிண்டர் விலை குறிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.பிரதமரின் உஜ்வாலா திட்டம் பிரதமர் மோடியால் 2016 மே 1 ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் 5 கோடி கேஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் கீழ் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு செய்யலாம் என்று தகவல்கள் வெளிவந்துள்ளன. தற்போது வீட்டு உபயோக சிலிண்டர் 14.2 கிலோவின் விலை ரூ. 1.103 ஆக விற்பனை செய்யப்படுகிறது. கடைசியாக மார்ச் 1 ஆம் தேதி ரூ. 50 விலையேற்றம் செய்யப்பட்டது. இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையினால், தமிழகத்தைப் பொறுத்தவரை கேஸ் சிலிண்டர் விலையானது ரூ.918 ஆக குறைய வாய்ப்பு உள்ளது.
via News J : https://ift.tt/huqBogO
via News J : https://ift.tt/huqBogO
Mediaஒரு மேடையும் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும் திமுககாரர்களின் வாய் 7 முழத்துக்கு நீளும்.. என்ன பேசுகிறோம் ஏது பேசுகிறோம் என்று கூட யோசிக்காமல் வாய்க்கு வந்ததெல்லாம் பேசித் தீர்ப்பார்கள் திமுகவின் உடன்பிறப்புகள்.. பட்டிமன்றத்தில் நகைச்சுவை என்ற பெயரில் பெண்களை , வீட்டின் மனைவிமார்களை, மாமியார்களை, மருமகள்களை என்று வகைதொகையில்லாமல், எல்லோரையும் ஆபாசமாகப் பேசுவது, அசிங்கப்படுத்துவது என்று மேடைகள் மட்டுமின்றி தேர்தல் பிரச்சாரங்களிலும் பேசி பேசி திமுகவிற்கு இருக்கும் கெட்டபெயருக்கு மேலும் வலுசேர்த்து வரும் திண்டுக்கல் லியோனி, தற்போது புரட்சித்தலைவியைப் பற்றி பேசி மீண்டும் தானாக வந்து வம்பிழுத்திருக்கிறார்….பெண்களை இப்படிப் பேசுவதுதான் திமுகவின் கொள்கையா? கோட்பாடா? ஒரு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிசாமியின் தாயாரை பழித்தார்… தமிழக அமைச்சர் பொன்முடியோ ஓசி டிக்கட் என்று தமிழ்நாட்டு பெண்களை இழித்தார்… மேடையிலேயே வைத்து, நீ எஸ்சிதானம்மா? என்று கேட்டு அவமானப்படுத்தினார்.. கேகேஎஸ்எஸ்எஸ்ஆர் ராமச்சந்திரனோ, மனுகொடுக்க வந்த பெண்ணின் தலையைத் தட்டி அவமானப்படுத்துகிறார்.. பெண் காவலர்களையே சீண்டிப்பார்க்கிறார்கள் திமுகவினர்… ஸ்டாலினின் வாரிசு உதயநிதி, எத்தனை பெண்களை கொச்சைப்படுத்தி பேசி பின்னர் அதற்கு மன்னிப்பு கேட்டார்.. இவ்வளவு ஏன், திமுகவின் மறைந்த தலைவர் கருணாநிதி கூட, இந்திராகாந்தியைப் பற்றி பேசியதை நாடறியும்..மேலிடத்தில் இருப்பவர்கள் இப்படி இருப்பதனால்தான் கடைக்கோடியில் இருக்கும் சாதாரண மேடைப்பேச்சாளர்கள் வரை பெண்களை அறுவறுக்கத்தக்க வகையிலும், ஆபாசமாகவும், அசிங்கமாகவும் பேசிக்கொண்டிருக்கின்றனர்.. அன்றைய வெற்றி கொண்டான் முதல் இன்றைய சைதை சாதிக் வரை எல்லோரும் ஒரே படியாக பெண்களை கொச்சைப்டுத்துவதைப் பார்க்கும்போதுதான் திமுகவின் தரம் மக்களுக்கு புரிகிறது.பெண் ஏன் அடிமையானாள்? என்று பெரியார் எழுதிய புத்தகத்தைப் படித்துக்கொண்டே, பெண்களை அடிமைப்படுத்துவது எப்படி என்று நடந்துகொள்கிறது திமுக… இதையெல்லாம் கண்டும் காணாததுபோல, கேட்டும் கேட்காததுபோல மௌனித்து நிற்கிறார் ஸ்டாலின்… பெண்களை ஆபாசமாய் பேசி, அசிங்கப்படுத்துவதால்தான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களும் திமுகவுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர்.ஏற்கனவே, பல பிரச்சனைகளை சமாளிக்க முடியாமல், திக்கித்திணறி, தூக்கம் தொலைத்த முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் தலைவலியை கொடுக்கும் லியோனி போன்றோர் மீது இன்னமும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? பெண்களைக்கூட மதிக்கத்தெரியாத லியோனி, எப்படி, குழந்தைகளை நல்வழிப்படுத்தம் பாடநூல் கழகத் தலைவராக செயலாற்றுவார்? பெண்களை கொச்சைப்படுத்தும் யார் மீதும் நடவடிக்கை எடுக்காததால்தான் ஒட்டுமொத்த திமுகவினரே இப்படி வசைபேசித் திரிகிறார்களா? திமுக மீது ஆத்திரத்தில் இருக்கும் பெண்களை சமாதானம் செய்ய என்னசெய்யப்போகிறார் ஸ்டாலின்? என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
via News J : https://ift.tt/E3jBbfU
via News J : https://ift.tt/E3jBbfU