News J
600 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஎப்போது விடியும்… எப்போது விடியும்… என்று கேட்டுக்கொண்டிருந்தவர்கள், இன்று ஐயையோ.. இந்த விடியா ஆட்சி எப்போது முடியும்? எப்போது முடியும் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.. .அந்தளவுக்கு கொடுமையின் ஆட்சி நடக்கிறது தமிழ்நாட்டில்… ஒவ்வொரு நாளும் மழை நிலவரம் போல கொலை நிலவரம் வருகிறது.. சாதியின் பெயரால் குழந்தைகள் கூட ஒருவருக்கொருவர் வெட்டிக்கொள்கின்றனர்… அதைத் தருகிறோம் இதைத்தருகிறோம் என்று சொல்லி ஏமாற்றி, ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன் நாங்க என்ன தேதியா சொன்னோம்? என்று எக்காளமிடும் கூட்டத்தை ஒடுக்க, மக்களை காக்க, பெண்களின் உரிமைகளை மீட்க, ஏழைகளின் வாழ்வை உயர்த்த, ஒளி வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த மக்களுக்கு இதோ நாங்கள் இருக்கிறோம் என்று தோளில் தட்டி அரவணைக்க என்றுமே இருக்கும் ஒரே மக்கள் இயக்கம் அதிமுக தான்…27 மாதங்களாக தமிழ்நாட்டு மக்கள் வடிக்கும் கண்ணீரைத் துடைத்து, திமுகவிற்கு பாடம் புகட்ட புறப்படப்போகிறது தொண்டர்படை… மதுரையில் நடக்கப்போகிறது வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு …. ஒட்டுமொத்த ரத்தத்தின் ரத்தங்களும் ஒன்றுகூடப்போகிறது… 20 லட்சத்திற்கும் மேல் திரளப்போகிறது தொண்டர் படை… மதுரையே குலுங்கப்போகிறது… தமிழகமே அதிரப்போகிறது…இதையெல்லாம் தெரிந்துகொண்டதால், அச்சத்தில் நடுங்கி அதன் தலைவர் ஸ்டாலினும், அதிமுக மாநாட்டை சீர்குலைக்கவும் மக்களின் கவனத்தை திசை திருப்பவும் உதயநிதியை வைத்து உண்ணாவிரத நாடகம் நடத்தப்போகிறது திமுக…..பலே பலே.. மாநாடு நடப்பதற்கு முன்னரே அதன் வெற்றியை உறுதி செய்திருக்கிறது திமுகவின் உண்ணாவிரத அறிவிப்பு… எப்பாடு பட்டாவது மாநாட்டு ஏற்பாடுகளை நிறுத்தி விடலாம் என்று எண்ணி சகுனி வேலைகளை ஜரூராகச் செய்த திமுகவுக்கு வெறும் ஏமாற்றம் தான் மிஞ்சியது.. சட்டப்போராட்டங்களால் நீதிமன்றம் வரை சென்று மாநாடு நடப்பதை சட்டப்படி உறுதி செய்திருக்கிறது அதிமுக… இதைக்கண்டு இடிந்துபோன திமுக, புல்லுறுவிகளை வைத்து, அது சரி இல்லை இது சரி இல்லை… அவர்கள் வரவில்லை.. இவர்கள் வரவில்லை என்று பொய் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கிறது பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த கூட்டம் ஒன்று.. ஆனால் எதற்கும் அஞ்சாத சிங்கமல்லாவா அதிமுக… சிங்கம் வளர்த்த புரட்சித்தலைவரால் உருவாக்கப்பட்ட இயக்கம், சிங்கப்பெண் புரட்சித்தலைவியால் வலுப்பெற்ற இயக்கம்,,, வாழும் அஞ்சா சிங்கம் எடப்பாடியாரை தன் தலைமையாக தானே தேர்ந்தெடுத்துக்கொண்ட இயக்கத்தின் முன் புழுதிகள் பறக்குமா? திட்டங்கள் பலிக்குமா? திமுகவின் வஞ்சக எண்ணங்கள் தவிடுபொடி ஆகியிருக்கிறது…அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி பொறுப்பேற்றதில் இருந்து புதுப்பாய்ச்சலோடு இயங்கிவரும் அதிமுகவின் தொண்டர்படை அடுத்த புதிய அத்யாயத்தில் காலடி எடுத்து வைக்கபோகிறது.. புரட்சித்தலைவிபோலவே, அவரின் தலைமகன் எடப்பாடியாரும், தேர்தல் களத்தில் முதல் ஆளாய் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.. மாபெரும் மாநாடு நடத்தி அதை நிரூபிக்கவும் போகிறார்…ஆக, ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் புரட்டிப்போடப் போகிறதா அதிமுகவின் மதுரை மாநாடு ? 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக இருக்கப்போகிறதா இந்த மதுரை மாநாடு ? அதிமுக மாநாட்டால் தொலையப்போகிறது திமுகவின் தூக்கம் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

via News J : https://ift.tt/JBfSpIE
Mediaஅதிமுக மதுரை மாநாட்டிற்கு புறப்படும் வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனத்தை முன்னாள் அமைச்சரும் ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.அதிமுகவின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு அனைத்திந்திய அண்ணா திராவிட கழக பொது செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் நாளை மதுரை வலையங்குளம் பகுதியில் நடைபெற உள்ளது,தமிழகம் மட்டும் இல்லாமல் இந்தியாவின் பிற மாநில அரசுகளும் உற்று நோக்கும் வகையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அதிமுக மாநாடு, இந்திய அரசியல் வரலாற்றில் ஓர் அதிர்வலையை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது,இந்நிலையில் இம்மாநாட்டில் பங்கேற்க அதிமுக கழக தொண்டர்களுக்கு கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அழைப்பை விடுத்துள்ள நிலையில் தமிழகம் மட்டும் இல்லாமல் பல்வேறு பகுதிகளில் இருந்து கழக தொண்டர்கள் குடும்பங்களோடு தங்களுடைய குடும்ப நிகழ்ச்சியை மாநாட்டிற்கு புறப்பட்டு வருகின்றனர்,அதனை தொடர்ந்து வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில் பங்கேற்க வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானோர் வாகனங்கள் புறப்பட்டனர், அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புறப்படும் வாகனங்களை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சரும் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டச் செயலாளருமான ஜெயக்குமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். சுமார் 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் 500க்கும் மேற்பட்ட கழகத் தொண்டர்கள் இந்த மாநாட்டிற்கு புறப்பட்டு உள்ளனர்.

via News J : https://ift.tt/Yp8uaOT
Mediaஅதிமுக மதுரை மாநாட்டிற்கு புறப்படும் வட சென்னை தெற்கு கிழக்கு மாவட்டநிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாகனத்தை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்,முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் :-கச்சத்தீவை தாரை வாத்தவர் அன்றைய முதல்வர் கருணாநிதி, இன்று அவருடைய மகன் ஸ்டாலின் கச்சத் தீவை மீட்பேன் என்கிறார், என்ன உரிமை உள்ளது,கச்சத்தீவு குறித்து அன்று மத்திய அரசு 2 ஆலோசனை கூட்டம் வைத்தது, அதில்
அன்றைய முதல்வர் கருணாநிதி பங்கேற்றார், ஒரு எதிர்ப்பையோ கண்டனத்தையோ
தெரிவிக்கவில்லை, இது குறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றும் போதும் மீனவர்களுக்காக வருத்தம் தெரிவித்தார்கள் தவிர ஒரு கண்டனத்தையும் தீர்மானத்தில்
தெரிவிக்கவில்லை. திமுகவால் தாரை வார்க்கபட்ட கச்சத்தீவை மீட்க நடவடிக்கை மேற்கொண்டவர். ஜெயலலிதா, அவர்கள் அப்போது மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்றவர் கருணாநிதி, அது சட்டமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது, அதை யாராலும் மறுக்க முடியாது.திமுக ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் கழித்து தற்போது பேசுவது ஏன் என கேள்வி
எழுப்பியதாய் தொடர்ந்து திரைப்பட நகைச்சுவை போல இன்று ஸ்டாலின் கச்சத் தீவு
விவகாரத்தில் மக்களை ஏமாற்றி வருகிறார், தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும்
மோசடியான செயல் தான் இது அதிமுக மாநாடு குறித்து செய்தி வெளிவராமல் செய்ய செங்கல் நாயகன் உதயநிதி ஸ்டாலின் நீட் என கூறி ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளார், நீட்டுக்கான உண்மையான நடவடிக்கை அவர்கள் பிரதமரையோ குடியரசுத் தலைவர் தலைவரையோ சந்தித்து பேசி இருக்க வேண்டும், ஆனால் அதை அவர்கள் செய்யவில்லை, மறுபுறம் கட்சியே இல்லாத ஓபிஎஸ் மாவட்ட செயலாளர் கூட்டம் நடத்துகிறார். மேலும் தன்னுடைய மாவட்டம் முழுக்க சுமார் 150 வாகனங்களில் 1500 க்கும் மேற்பட்டோர் மாநாட்டிற்காக புறப்பட்டு இருப்பதாகவும், நடைபெறவிருக்கும் மதுரை மாநாடு பாராளுமன்ற தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

via News J : https://ift.tt/Q5Au2Et
Mediaமதுரையில் நாளை பிரமாண்ட முறையில் நடைபெறவுள்ள பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு, லட்சக்கணக்கான கழக தொண்டர்கள் சாரைசாரையாக வர தொடங்கியுள்ள நிலையில், அங்கு என்னென்ன சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்…மதுரை வலையங்குளத்தில் 5 லட்சம் சதுரஅடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான அரங்கில், அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நாளை நடைபெற உள்ளது. இந்த மாநாட்டின் நிகழ்ச்சிகளை தொலைவிலிருந்து காணும் வகையில், தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மேடையில் பிரமாண்டமான ‘டிஜிட்டல்’ திரை அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உணவு வழங்க சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உணவு சமைக்க சமையலர்கள், சமையல் உதவியாளர்கள், உணவு பரிமாறுவோர், பாத்திரம் சுத்தம் செய்வோர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இரவு பகலாக பணியாற்றி வருகின்றனர். டேபிள் நாற்காலியில் அமர்ந்து சாப்பிடும் வகையில், 3 இடங்களில் 300 கவுன்டர்களில் பாக்கு மட்டை தட்டுகளில் உணவு வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.Mediaமாநாட்டு நிகழ்ச்சிகளை அனைவரும் பார்ப்பதற்கு வசதியாக ஆங்காங்கே எல்.இ.டி. திரைகள் கண்ணை கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. நகரின் முக்கியப் பகுதிகளிலும் எல்.இ.டி. திரைகளில் மாநாட்டு நிகழ்ச்சிகள் நேரடி ஒளிபரப்பு செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டுக்கு வருவோர் நான்கு திசைகளிலும் இருந்து பந்தலுக்குள் எந்தவித சிரமும் இன்றி வருவதற்கு வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. 300 ஏக்கரில் 15க்கும் மேற்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு குடிநீர் வழங்க 10 லட்சம் குடிநீர் பாட்டில்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஆங்காங்கே குடிநீர் சுத்திகரிப்பு கருவிகள் மற்றும் சின்டெக்ஸ் தொட்டிகளில் குடிநீர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி பந்தல் அருகே மொபைல் கழிப்பறைகளும், ஆங்காங்கே தற்காலிக கழிப்பறைகளும் அமைக்கப்பட்டுள்ளன. அதிமுக அரசின் சாதனைகளை எடுத்துரைக்கும் விதமாக தலைமைச்செயலகம், கழக தலைமைக் கழகமான புரட்சி தலைவர் எம்ஜிஆர் மாளிகை, அம்மா பசுமை வீடு, அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் போன்றவை மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.மாநாட்டையொட்டி நடைபெறும் புகைப்படக் கண்காட்சியில், கழக வரலாறு, புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆகியோரின் திரைப்படம், அரசியல் வாழ்க்கையை பிரதிபலிக்கும் புகைப்படங்கள் இடம்பெற உள்ளன. நாளை காலை 8 மணிக்கு வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கட்சிக் கொடியேற்றி துவக்கி வைக்கிறார். அவருக்கு தொண்டர்கள் அணிவகுப்பு மரியாதை அளிக்க உள்ளனர். காலையிலிருந்து மாலை வரை கவியரங்கம், கருத்தரங்கம், பட்டிமன்றம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட உள்ளன. மேலும், தமிழகத்தின் பாரம்பரிய பண்பாடு சார்ந்த பல்வேறு கலை நிகழ்சிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலையில் கழகத்தின் காவலரும், கழக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி பல லட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் எழுச்சி உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் மூத்த நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களை கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கவுரவிக்கிறார். அதிமுவின் எழுச்சி மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கழக நிர்வாகிகள் ரயில் மூலமாகவும், பேருந்து, வேன் மற்றும் கார் மூலமாகவும் சாரைசாரையாக வர தொடங்கியுள்ளதால் மதுரையே விழாக்கோலம் பூண்டுள்ளது.

via News J : https://ift.tt/1ZbgTEe
Mediaகையாலாகாத ஸ்டாலின் அரசை தூக்கி எறியும் மாநாடாக அதிமுகவின் எழுச்சி மாநாடு அமையும் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், விடியா திமுக நடத்தும் உண்ணாவிரத போராட்டதை தவிர, அதிமுக மாநாட்டை ஒளிபரப்பக் கூடாது என தமிழக ஊடகங்களும், பத்திரிகையாளர்களும் மிரட்டப்படுவதாக குற்றம்சாட்டினார். ஆனால், நாளை நடக்கும் அதிமுகவின் எழுச்சி மாநாடு கையாலாகாத ஸ்டாலின் அரசை தூக்கி எறியும் மாநாடாக அமையும் என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.கடந்த 2010ல் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் அரசால் கொண்டு வரப்பட்ட நீட் தேர்வை, தற்போது எதிர்ப்பதாக கூறி மாணவர்களின் இறப்பில் ஸ்டாலின் ஆதாயம் தேடுவதாக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் கடுமையாக சாடினார்.தொடர்ந்து பேசிய அவர், மகன் உதயநிதிக்கு அரசியல் களம் அமைத்துக் கொடுப்பதற்காகவே நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் என்ற நாடகத்தை ஸ்டாலின் திட்டமிட்டு செயல்படுத்துவதாகவும் விமர்சித்தார்.கச்சத் தீவை விட்டுக் கொடுத்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் போராடி மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுக் கொடுத்தேன் என்று கூறும் ஸ்டாலின், முதலமைச்சராக கருணாநிதி இருந்த போது, கச்சத்தீவை மீட்க ஏதாவது நடவடிக்கை எடுத்தாரா என மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பினார். புரட்சித்தலைவி ஜெயலலிதா, உச்சநீதிமன்றத்தில் கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது இந்திய அரசியலமைப்பின்படி செல்லாது என்று கூறி வழக்கை தொடர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

via News J : https://ift.tt/1HXYqnF
Mediaஒரு வழக்கின் தீர்ப்பை பார்த்ததும் ஒரு நீதிபதிக்கே 3 நாட்கள் தூக்கம் வரவில்லை… நீதிபதியின் மனசாட்சியையை உலுக்கியிருக்கிறது வழக்கு … நாம் எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம்?”திமுக அமைச்சர்கள் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து நான் கண்களை மூடிக் கொண்டிருந்தால் கடமை தவறிவிடுவேன்”அமைச்சர்களின் வழக்கில் தவறான நடைமுறைகள் பின்பற்றப்பட்டிருப்பதாகவும், நீதிமன்றம் குறிப்பிட்ட ஒரு கட்சிக்கோ அதில் தொடர்புடையவர்களுக்கோ அரசுக்கோ உரித்தானது அல்ல என்றும், நாட்டில் வாழும் குப்பனுக்கும், சுப்பனுக்கும் உரித்தானது எனவும் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்….இப்படி ஒரு பரபரப்பான ஸ்டேமெண்ட்டை உயர்நீதிமன்ற நீதிபதி கொடுக்கும் அளவுக்கு ஒரு சம்பவம் நடந்தேறியிருக்கிறது….சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து திமுக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு மற்றும் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை பார்த்து தூக்கம் வரவில்லை என்று கூறியிருக்கிறார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்….இப்படி சொன்னது மட்டுமில்லாமல் அந்த வழக்கை தற்போது தூசி தட்டி மீண்டும் விசாரணைக்கு எடுத்திருக்கிறார்…..2006-2011 ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர்களாக பணியாற்றிய தங்கம் தென்னரசு மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ரமச்சந்திரன் ஆகிய இருவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு ஒன்று கடந்த 2012 ஆம் ஆண்டு பதியப்பட்டது….ஆனால் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க இருவரும் கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்…..இவர்களது உறவினர்கள் மீது வழக்கு இருந்ததால் அவர்களும் விடுவிக்கக்கோரி வழக்கு தொடுத்து இருந்தனர்…இந்த நிலையில், அமைச்சர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் கீழமை நீதிமன்றம் விடுவித்து தீர்ப்பு வழங்கியது….ஆனால், இந்த வழக்கில் ஏதோ உள்ளடி வேலை நடைபெற்று இருக்கிறது என்பதை உணர்ந்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து இந்த வழக்கை கையில் எடுத்துள்ளார்….இதே போன்று தான் அமைச்சர் பொன்முடி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை சமீபத்தில் கையில் எடுத்தார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்….எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி என்பதால் தான் நீதிபதி தாமாக முன்வந்து வழக்கை கையில் எடுத்திருக்கிறார்…வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞரோ பதறியடித்து வந்து, இந்த வழக்கு சரியாகவே விசாரிக்கப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விளக்கத்தை கேட்காமல் உத்தரவு ஏதேனும் பிறப்பித்தால் அது அதிகாரிகளை களங்கப்படுத்தும் வகையில் அமையும் என்று தெரிவித்திருக்கிறார்….இதோடு மட்டுமில்லாமல், லஞ்ச ஒழிப்புத்துறையின் அதிகாரிகள் 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டில் இருந்து மாறியுள்ளதாகவும், யார் அதிகாரத்திற்கு வந்தாலும் வழக்குகளை நீர்த்துப் போகச் செய்வதாகவும், சிறப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் வழக்குகள் நடத்தப்படும் விதம் அதிர்ச்சியளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார் நீதிபதி…செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க அமைச்சர்கள் தரப்புக்கும், லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் உத்தரவு வெளியாகி உள்ள நிலையில் அடுத்தடுத்து அமைச்சர்கள் மீதான வழக்குகள் விசாரணைகளால் திமுக அரசின் அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?திமுக அமைச்சர்கள் தொடர்ந்து சொத்துக்குவிப்பு வழக்குகளில் நீதிமன்றங்களை வளைக்கப் பார்த்தனரா?
உயர்நீதிமன்ற நீதிபதியே தாமாக முன்வந்து விசாரிக்கும் அளவுக்குத்தான் கீழமை நீதிமன்ற தீர்ப்புகள் இருக்கின்றனவா? என்ற கேள்வியே மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/EoaINWK
Mediaஇந்தியாவின் சந்திரயான் – 3 திட்டத்தின் கீழ் நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கியுள்ளது. இதன்மூலம் நிலவின் தென்துருவ ஆய்வை மேற்கொள்ளும் முதல் நாடு என்ற பெருமையை இந்தியா அடைந்துள்ளது. மற்ற நாடுகள் அனுப்பிய விண்கலன்கள் எல்லாம் நிலவின் மத்திய ரேகைப் பகுதியில் தரையிறக்கப்பட்டன. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது எளிதானது. ஏனென்றால் சந்திரயான் 3 இறங்கியுள்ள இடம், பல பில்லியன் ஆண்டுகளாக சூரிய ஒளியே படாத, இருண்ட பக்கமாக வர்ணிக்கப்படும் நிலவின் தென் துருவத்தில்…இந்தியா சந்திரயான் 2 விண்கல திட்டத்தை கடந்த 2019ம் ஆண்டு அமல்படுத்தியது. இந்த திட்டம் நூலிழையில் தோல்வியடைந்தது.
இருப்பினும் சந்திரயான்- 2 திட்டத்தின் ஆர்ப்பிட்டர் நிலவின் சுற்றுவட்ட பாதையில் கடந்த 4 ஆண்டுகளாக சுற்றி ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் சந்திரயான் 3, கடந்த ஜூலை 14ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. பூமியின் சுற்றுவட்ட பாதையை கடந்து, நிலவின் சுற்றுவட்ட பாதைக்குள் சந்திரயான் 3 உந்துவிசை கலனில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்தது.அடுத்த கட்டமாக விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவின் தென்துருவத்தில் மெதுவாக தரையிறங்கியது. இந்திய நேரப்படி மாலை சரியாக 6 மணி 4 நிமிடத்துக்கு திட்டமிட்டபடி தரையிறங்கியது.விக்ரம் லேண்டர் தரையிறங்கிய கடைசி 15 நிமிடங்களானது மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. நிலவின் சமதள பரப்பை கண்டறிந்து அதில் தரையிறங்குவதை நாடே ஆவலாக பார்த்துக் கொண்டிருந்தது. மிகவும் சவாலான இந்த இடத்தில்தான் கடந்த முறை சந்திரயான் 2 விழுந்து நொறுங்கியது குறிப்பிடத்தக்கது.நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரின் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த கேமரா மூலம் நிலவில் தரையிறங்கிய பிறகு எடுத்த முதல் படத்தை விக்ரம் லேண்டர் இஸ்ரோவுக்கு அனுப்பியது.லேண்டர் தரையிறங்கிய பிறகு 4 மணி நேரத்துக்கு பிறகு ரோவர் வாகனம் வெளியேறியது. நிலவின் மேற்பரப்பில் சுற்றி வரும் ரோவர் வாகனம் மொத்தம் 14 நாட்கள் நிலவில் ஆய்வு செய்யும். ரோவர் சக்கரங்களில் இந்திய தேசியக்கொடி மற்றும் இஸ்ரோவின் லோகா அச்சுக்கள் பொறிக்கப்பட்டுள்ன. இதன்மூலம் இந்தியாவின் பெயர் நிலவில் பொறிக்கப்பட உள்ளது.இந்த ரோவர் கருவி வினாடிக்கு 1 சென்டி மீட்டர் என்ற வேகத்தில் தான் நிலவில் நகரும். இப்படி நகரும்போது அதிநவீன கேமராக்கள் மூலம் நிலவை படம்பிடித்து அனுப்பும். சந்திரன் ஆய்வுகள் குறித்த முக்கிய விபரங்களை இஸ்ரோவுக்கு அனுப்பும் கருவிகள் ரோவரில் உள்ளன.அதேவேளையில் நிலவில் தரையிறங்கிய விக்ரம் லேண்டர் அங்குள்ள அயனிகள் மற்றும் எலக்ட்ரான்கள் குறித்த ஆய்வுகளை செய்யும். அந்த பகுதியில் உள்ள வெப்பத்தின் அளவுகள், நிலஅதிர்வுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய உள்ளது. மேலும் ரோவர் வாகனம் இயங்குவதற்கு தேவையான சூர்யசக்தி ஆற்றலை லேண்டர் தனது சூரியத் தகடுகள் மூலம் உற்பத்தி செய்து வழங்க உள்ளது.சந்திரயான் -3 மூலம் உலக அரங்கில் இந்தியாவின் புகழ் ஓங்கி ஒலித்துள்ளது. அதே நேரத்தில் தமிழர்களின் திறமையையும், பெருமையையும் உலகறியச் செய்துள்ளது.சந்திரயான்-3 திட்டத்தின் இயக்குநராக 2019- ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட வீரமுத்துவேல் ஒரு தமிழர். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் விழுப்புரம் ரயில்வே பள்ளியில் தமிழ்வழியில் படித்தவர். தனது 2004- ஆம் ஆண்டு முதல் இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக இருந்தவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரே. சென்னையை சேர்ந்த முத்தையா வனிதா தான் சந்திரயான்-2-ன் திட்ட இயக்குநராக செயல்பட்டார். அப்போது அவர் இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை பெற்றார்.சந்திரயான் திட்டத்திற்கு ஒரு தமிழர் தலைமை வகிப்பது இது முதல்முறை அல்ல. சந்திரயான்-1இன் திட்ட இயக்குநராக இருந்த மயில்சாமி அண்ணாதுரை பொள்ளாச்சி அருகே கொத்தாவடி கிராமத்தில் பிறந்தவர். செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்த மங்கல்யான் திட்டத்திலும் மயில்சாமி அண்ணாதுரை முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.சந்திரயான்-3 திட்டத்தின் மூலம் நிலவு ஆராய்ச்சியில் மற்ற நாடுகளை விட இந்தியா ஒரு படி மேலே முன்னேறியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சரித்திர சாதனையின் மூலம், ஒரு காலத்தில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகளை எள்ளி நகையாடிய நாடுகள் எல்லாம் தற்போது இந்தியாவை அண்ணாந்து பார்க்கின்றன..

via News J : https://ift.tt/Kb1jBrN
Mediaநிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் விதமாக, சந்திரயான் 3ன் திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தை விழுப்புரத்தில் உள்ள தனது இல்லத்தில் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினார்.இந்தியா சார்பில் கடந்த ஜூலை 14ம் தேதி நிலவின் தென் துருவப் பகுதியை ஆராய்ச்சி செய்வதற்கு சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. பின்னர் சந்திரயான் 3-ன் விக்ரம் லேண்டர் 41 நாட்களுக்கு பிறகு, நிலவின் தென் துருவப் பகுதியில் முதல் நாடாக வெற்றிகரமாக தரை இறங்கி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இதனை கொண்டாடும் விதமாக சந்திரயான் 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலின் தந்தையான பழனிவேல், விழுப்புரத்தில் உள்ள தனது வீட்டில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தார். மேலும் தனது மகன் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/rS7jVDI
Mediaசந்திரயான் – 3 வெற்றி குறித்து விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் பேட்டி எடுக்கச் சென்ற செய்தியாளர் குழு விபத்தில் சிக்கியதைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவரும் கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அவரின் டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.சந்திரன்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை திருவனந்தபுரத்தில் பேட்டி எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும் பத்திரிக்கையாளர் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் புதிய தலைமுறை செய்தியாளர் திரு.நாகராஜன், நியூஸ் 7 தமிழ் ஒளிப்பதிவாளர்கள் திரு.வள்ளிநாயகம், மற்றும் திரு.நாராயணன் ஆகியோர் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும் போற்றத்தக்க பத்திரிக்கையாளர் பணியின் போது விபத்தில் பாதிக்கப்பட்ட இவர்கள் அனைவருக்கும் இந்த அரசு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டுமென இந்த அரசை வலியுறுத்துகிறேன்.சந்திரன்-3 நிலவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது தொடர்பாக விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களை திருவனந்தபுரத்தில் பேட்டி எடுத்து திரும்பிய நெல்லை செய்தியாளர் குழு சென்ற வாகனம் நாங்குநேரி நான்குவழி சாலையில் விபத்துக்குள்ளானதில், புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் திரு.சங்கர்…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 24, 2023

via News J : https://ift.tt/iaWj2lp
Mediaஒரு பக்கம் சந்திரயான் – 3ன் வெற்றிக் கொண்டாட்டத்தில் நாம் அனைவரும் களிப்போடும் உவகையோடும் இருக்க மறுபுறம் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு பட்டியலில் தமிழநாடு முதல் இடத்தில் உள்ளது. இதனைப் பற்றி தற்போது விரிவாக காண்போம்.கழிவுநீர் கால்வாய் மரணங்கள்..!“இந்தியாவில் கழிவுநீர் கால்வாயில் இறங்கி உயிரிழப்போர் எண்ணிக்கையில் தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது என்பது அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியாக உள்ளது. சமூகநீதியை தன் கொள்கையில் முதன்மையாக வைத்துள்ள விடியா திமுக அரசு இதனை கருத்தில்கூட கொள்ளவில்லை என்பதுதான் பொதுமக்களுக்கு உச்சபட்ச வேதனை. இதுபோன்ற மரணங்கள் நிகழாமல் இருப்பதற்கு மாநில அளவில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் அமைக்க வேண்டும் என்று தெசிய தூய்மை பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.துரித நடவடிக்கை எடுக்குமா திமுக?தமிழகத்தில் தான் மலக்குழி மரணங்கள் அதிகம்… ! – Aram Onlineசென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் நேற்று, தூய்மைப் பணியாளர் நலனுக்கான நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா மற்றும் அரசு துறை செயலர்களுடன் ஆணையத் தலைவர் வெங்கடேசன் ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, கழிவுநீர் கால்வாய் சுத்தம் செய்யும் பணியில் உயிரிழப்போர் எண்ணிக்கை நாட்டிலேயே தமிழகத்தில் தான் அதிகம் என்று கூறினார். மேலும் பேசிய அவர், கடந்த 1993 முதல் இதுவரை 225 பேர் உயிரிழந்துள்ளார்கள். இதைக் கட்டுப்படுத்த மாநில அளவில் கண்காணிப்பு குழுவும், தூய்மைப் பணியாளர் நல வாரியமும் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார். தூய்மை பணியாளர்களில், ஒப்பந்ததாரர் முறையை ரத்து செய்து, அனைவருக்கு ஒரே விதமான ஊதியம் வழங்க வேண்டும். பள்ளிகளில் பணியாற்றும் பகுதிநேர தூய்மைப் பணியாளர்களுக்கு, மாத சம்பளமாக 1500 ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு காப்பீட்டு வசதியும் செய்துதர வேண்டும். கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த, தற்போது 770 இயந்திரங்கள் போதவில்லை என்பதால் 300 இயந்திரங்களை வாங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது என்று அவர் தெரிவித்தார்.எனவே இனியும் இந்த விடியா அரசு காலம் தாழ்த்தாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு உகந்த நடவடிக்கையினை விரைவில் எடுக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

via News J : https://ift.tt/o5ISKDg
Mediaசெஸ் விளையாட்டில் எத்தனையோ சாதனைகளை படைத்த பல கிராண்ட் மாஸ்டர்களை இவ்வுலகம் பார்த்திருக்கிறது. ஆனால், இளம் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா தனது அசாத்தியமான துல்லிய நகர்வுகளால் உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார். தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் செஸ் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றி வரலாறு படைப்பாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.செஸ் விளையாட்டில் பிரம்மாண்டத்தை தாண்டிய பிரமிப்பை ஏற்படுத்தும் 18 வயது நிரம்பிய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா தலைநகர் சென்னையில் 2005ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலிருந்தே செஸ் என்றால் கொள்ளை பிரியம் இவருக்கு.5 வயதில் போட்டிகளில் களமிறங்கிய செஸ் போட்டியின் செல்லப்பிள்ளை பிரக்ஞானந்தா, 2013ஆம் ஆண்டு நடந்த போட்டியில் கலந்து கொண்டு சாம்பியன் பட்டம் வென்றார்.2016ஆம் ஆண்டு இளைய சர்வதேச மாஸ்டர் பட்டத்தை வென்றார். 2018ஆம் ஆண்டு ரஷ்யாவின் செஸ் நட்சத்திரம் செர்ஜி கர்ஜாகினுக்குப் பிறகு இளைய கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தை பெற்று அல்டிமேட் சாதனையை படைத்தார்.ஆன்லைனில் கடந்த ஆண்டு நடந்த AIR THINKS RAPID CHESS போட்டியில் கலந்து கொண்ட பிரக்ஞானந்தா, உலகின் நம்பர் 1 வீரரான கார்சலனுடன் மோதி 8வது சுற்றில் வெற்றி பெற்றார்.R Praggnanandhaa vs Magnus Carlsen: All you need to know about FIDE World Cup summit clash | Chess News - The Indian Expressஅதற்கு பிறகு தற்போது அஜர்பைஜானில் நடந்து வரும் 10-வது உலக செஸ் தொடரின் இறுதிப் போட்டியில் இருவரும் மோதிக் கொண்டிருக்கின்றனர். ((முதல் 2 சுற்றுகளும் டிராவில் முடிந்த நிலையில், இன்று டை பிரேக்கர் முறை தொடங்கப்படவுள்ளது)) சாம்பியன் பட்டத்தை வெல்பவருக்கு 91 லட்சமும், 2-வது இடத்தை பிடிப்பவருக்கு 66 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படவுள்ளது. இதில் யார் வெற்றி பெற போகிறார் என எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.பிரக்யான் ரோவர் நிலவின் தென் துருவத்தை முத்தமிட்டது போல், செஸ் விளையாட்டின் செல்லப்பிள்ளையான பிரக்ஞானந்தாவும் இந்த போட்டியில் வெற்றியை முத்தமிட வேண்டுமென்பதும் பலரின் ஆசையாக உள்ளது.

via News J : https://ift.tt/akQeDmf
Mediaகோயம்பேடு மார்க்கெட் வளாகத்தை சர்வதேச நிறுவனங்களுக்கு தாரை வார்க்க திமுக அரசு துடிப்பதாக வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். விடியா அரசின் நடவடிக்கையைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் துவக்கியுள்ளனர் வியாபாரிகள். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…விடியா அரசின் கார்ப்பரேட் ஆதரவு போக்கை கண்டித்து கையெழுத்து இயக்கத்தை துவக்கியுள்ளனர் வியாபாரிகள்…சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை சென்னையை அடுத்த திருமழிசைக்கு மாற்றுவதற்கு தேவையான பணிகளை திமுக அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையினர் கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளனர்.பல லட்சம் வணிகர்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வரும் கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றி விட்டு, இந்த இடத்தை பெருநிறுவனங்களுக்கு தாரை வார்க்க முடிவு செய்துள்ளது விடியா அரசு. கோயம்பேடு மார்க்கெட்டை இடம் மாற்றுவதற்கு, போக்குவரத்து நெரிசல் ஒரு காரணமாக கூறப்படுகிறது. ஆனால், போக்குவரத்து நெரிசலை சரிசெய்ய வேண்டியது அரசின் கடமை. அதை செய்யாமல் மக்கள் மீதும், வியாபாரத்துக்கு கூடும் வணிகர்கள் மீதும் பழி சுமத்துகிறது விடியா அரசு.சென்னை கோயம்பேடு சந்தைக்குப் புத்தக முகம் கொடுக்கலாமா? | koyambedu market - hindutamil.inஅதிமுக ஆட்சியில் சிறு வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கருதி வால்மார்ட் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தடை விதித்தவர் அன்றைய முதல்வர் ஜெயலலிதா. ஆனால், விடியா அரசோ எதிர்வரும் தேர்தல் செலவுகளுக்காகவே கோயம்பேடு வணிக வளாகத்தை இடித்து தரைமட்டம் ஆக்கிவிட்டு, லூலு, வால்மார்ட் போன்ற சர்வதேச நிறுவனங்களுக்கு சந்தை அமைத்து கொடுக்க உள்ளதாக வியாபாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்.சென்னை மட்டுமின்றி சென்னை புறநகர் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாகவும், சிறு வியாபாரிகள் வணிகம் செய்வதற்காகவும் தொடங்கப்பட்ட கோயம்பேடு மார்க்கெட்டை பெரு நிறுவனங்களுக்கு தாரை வார்த்தால் சென்னை மட்டுமல்ல, கோயம்பேட்டை சார்ந்திருக்கும் லட்சக்கணக்கான சிறு, குறு வணிகர்களின் வாழ்வாதாரத்தை அது பாதிக்கும் என்பதை உணர்ந்து விடியா அரசு செயல்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

via News J : https://ift.tt/yXM7Ogt
Mediaஎப்,ஐ,டி.இ  செஸ் உலகக்கோப்பை இறுதிப் போட்டியின் டை பிரேக்கர் இன்று மாலை நான்கு முப்பது மணிக்கு நடைபெறத் துவங்கியது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் மேக்னஸ் கார்ல்சன் இடையே கடந்த இரண்டு நாட்களாக கடுமையானப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதலிரண்டு நாட்களிலும் போட்டியானது டிராவில் முடிந்தது. எனவே வெற்றியாளரை தேர்வு செய்வதற்கு ரேபிட் சுற்று முறையில் டை பிரேக்கர் நடைபெற்றது. இதில் முதல் சுற்றில் கார்ல்சென் வென்றார். அதனைத் தொடர்ந்து அடுத்த சுற்றில் பிரக்ஞானந்தா வெல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். இருப்பினும் முனைப்புடன் போராடிய பிரக்ஞானந்தாவிற்கு இரண்டாவது சுற்றிலும்  பின்னடைவே ஏற்பட்டது. இரண்டாவது சுற்றையும் வென்று செஸ் உலகக்கோப்பையைக் கைப்பற்றினார் நார்வேயின் கார்ல்சன்.

via News J : https://ift.tt/BQbZtSA
Mediaதிமுக ஆட்சியையே ஆட்டம் காண வைத்த 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் விவகாரத்தை வெளிக்கொண்டுவந்த முன்னாள் நிதியமைச்சர் பிடிஆர் தற்போது கப்சுப் என்று ஆகிவிட்டார்.. ஏற்கனவே, மதுரையில் நடந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை பிடிஆர்.. காரணம் கேட்டால், ஏற்கனவே நான் முதல்வரிடம் கேட்டு லீவ் வாங்கிவிட்டேன் என்று ஸ்கூல் குழந்தைபோல சொல்லிவிட்டு, சிங்கப்பூருக்கு பறந்துவிட்டார் பிடிஆர். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்ற நடந்த வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மற்றும் முதல்வரின் நிகழ்ச்சிகளைவிட, அப்படியென்ன சிங்கப்பூரில் அவருக்கு முக்கிய வேலை இருந்திருக்கும்? என்று தங்களுக்குள்ளேயே கேள்வி கேட்டுக்கொண்டனர் திமுகவின் உடன்பிறப்புகள்…இவர் இப்படி என்றால், சீனியர் அமைச்சர்கள் சிலரோ, எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாமல் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.. அவர்களின் துறை சார்ந்த அதிகாரிகள்கூட அமைச்சர்களை பார்க்க முடிவதில்லை என்று புலம்புகின்றனர்.. சமீபத்தில் கூட , கோவையின் முன்னாள் எம்எல்ஏ ஒருவர், திருச்சிக்கு சென்றால் கூட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை பார்க்க முடியாது, அவர் எங்கிருக்கிறார் என்று கூட யாருக்கும் தெரியாது என்று புலம்பித்தள்ளிய வீடியோ வைரலானது..எங்கு பார்த்தாலும், அரசு விழாக்களில், கட்சி நிகழ்ச்சிகளில், உதயநிதி மட்டுமே இடம் பெற்றிருக்கிறார்.. உதயநிதியின் விளையாட்டுத் துறை விழாவில் அவர் மகன் இன்பநிதிகூட இடம் பெறுகிறார். ஆனால், மற்ற எந்த அமைச்சர்களையும் வெளியே முகம் காட்டாதபடி கவனமாகப் பார்த்துக்கொள்கிறது விடியா அரசு…. அவ்வளவு ஏன்? சமீபத்தில் நடந்த நீட் உண்ணவிரத நாடகத்தில் கூட, சம்பந்தப்பட்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுவையே ஓரங்கட்டிவிட்டு, உதயநிதி தான் முன்னிலைப்படுத்தப்பட்டார்…இந்த இடத்தில் 2 விஷயங்கள் சந்தேகங்களாக எழுகின்றன.. ஒன்று, திமுக ஆட்சியில் நடக்கும் உண்மைகளைச் சொன்னால், ஓரங்கட்டப்படுவார்களா அமைச்சர்கள்? மேலும், உதயநிதியை மட்டுமே முன்னிருத்தவேண்டும் என்பதற்காக மற்ற அமைச்சர்கள் யாரும் வேளியே தெரியக்கூடாது என்று வாய்மொழி உத்தரவு போட்டிருக்கிறதா? என்றும் சந்தேகம் எழுகிறது…ஆக, 30 ஆயிரம் கோடி ஊழல் ஆடியோ வைரலான பிறகு பிடிஆருக்கு நடந்தது என்ன? தன் சொந்த மாவட்டத்திற்குள் நுழையக்கூட முடியாமல் பிடிஆர் சிங்கப்பூருக்கு சென்றது ஏன்? திமுக அமைச்சரவையில் இவர்களெல்லாம் அமைச்சர்களா என்று ஆச்சர்யத்துடன் கேட்குமளவுக்கு யாருமே வெளியே தெரியாதது ஏன்? தன் வாரிசைத் தவிர யாருமே பெயர் வாங்கிவிடக்கூடாது என்று நினைக்கிறதா திமுக?இல்லை, வெளியே எட்டிப்பார்த்தால் எங்கே அமலாக்கத்துறை ரெய்டு வந்துவிடுமோ என்று பயந்துவிட்டார்களா அமைச்சர்கள்? என்று கேலியாக மக்கள் பேசுவதைக் கேட்கும்போது, ஒருவேளை இப்படியும் இருக்குமோ என்று எண்ணத்தோன்றுகிறது.

via News J : https://ift.tt/FIvXHDM
Mediaதேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்களுக்கு அதிமுக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பிறந்தாள் வாழ்த்தினை தெரிவித்தார். அவரது வாழ்த்து பின்வருமாறு உள்ளது.,“தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் அன்பிற்கினிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், சகோதரர் விஜயகாந்த் அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.”தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவர் அன்பிற்கினிய கேப்டன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்,சகோதரர் @iVijayakant அவர்கள் உடல் ஆரோக்கியத்துடன்,எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.@AIADMKOfficial pic.twitter.com/FP6wntWddB— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 25, 2023

via News J : https://ift.tt/pbEMj0H
Mediaஅதிமுக பொதுக்குழு செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததன் மூலம் கழக பொதுச்செயலாளருக்கான அங்கீகாரம் உறுதி செய்யப்பட்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பை தமிழகம் முழுவதும் கழக தொண்டர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பொதுச்செயலாளருக்கான அங்கீகாரத்தை உயர் நீதிமன்றமும், தொண்டர்களும் உறுதி செய்திருப்பதாக கூறியுள்ளார். வீரவரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இந்திய அளவில் மிகப்பெரிய திருப்புமுனை என்றும், தமிழ்நாட்டில் எந்த காலத்திலும் இதுபோன்ற மாநாடு நடத்தியதில்லை எனவும் பெருமிதம் கொண்டார். பன்னீரின் கோஷ்டி இனிமேலாவது மானமுள்ளவர்களாக இருந்தால், அதிமுக கரை வேட்டியை கட்டக் கூடாது, கொடியை பயன்படுத்தக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு குறித்து திமுகவின் போராட்டம் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், கண்ணீர் வராமலேயே கண்ணீர் விட்டவர் தான் உதயநிதி என்றும், கிளிசரினை எடுத்துச் செல்ல மறந்துவிட்டார் எனவும் விமர்சித்தார்.அதிமுக கொடி சின்னம் கரை வேட்டி ஆகியவற்றை இதற்கு மேல் ஓ.பன்னீர்செல்வம்
தரப்பு பயன்படுத்தக் கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.அதிமுக பொதுக்குழுவை எதிர்த்து தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை
சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியது, அதன்படி நால்வர் தாக்கல் செய்த மனுக்களும்
தள்ளுபடி செய்யப்பட்ட து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம்-ம் தேதி அதிமுக
பொதுக்குழுவில் கொண்டு வந்த அனைத்து தீர்மானங்களும் செல்லும் என்றும் அதேபோல ஓ.பன்னீர்செல்வம் உட்பட அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது, சரிதான் என
நீதிமன்றம் கூறியிருக்கிறது.இதை கொண்டாடும் வகையில் சென்னை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் அமைச்சர்கள் மாவட்ட கழக செயலாளர் கட்சி நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடிக்கும் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அதேபோல அதிமுக அலுவலகத்திற்கு வந்த தொண்டர்களுக்கு அதிமுக நிர்வாகி ஒருவர்
அனைவருக்கும் இளநீர் கொடுத்தார்.இதன் பின்னர் அதிமுக அலுவலக செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார் உண்மை நீதி நியாயத்திற்கு நீதிமன்றம் இன்று தீர்ப்பு
கொடுத்திருப்பதாக தெரிவித்தார். ஓ.பன்னீர்செல்வம் உட்பட அவருடன் இருப்பவர்கள்
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது இந்த தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டு
இருப்பதாகவும் ஜெயகுமார் தெரிவித்தார்.இனியாவது வெட்கம் ரோஷம் இருந்தால் அதிமுகவின் கறை வேட்டியை ஓ.பன்னீர்செல்வம் கோஷ்டி பயன்படுத்தக் கூடாது என்றும் அதேபோல கட்சியின் சின்னம் கட்சியின் கொடி கட்சியின் பெயர் ஆகியவற்றையும் பயன்படுத்தக் கூடாது என கடுமையாக எச்சரிக்கை விடுத்தார்.மாநாடே எங்களுக்கு பெரிய வெற்றி கொடுத்த சூழ்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு ஒற்றை
தலைமை அதிமுகவை சிறப்பாக வழி நடத்துவதற்கு ஏதுவாக வாய்ப்பை உருவாக்கி
கொடுத்திருப்பதாகவும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டுக்கு சென்றாலும்,
இன்று வந்த தீர்ப்பு போலவே உச்சநீதிமன்றமும் அதே தீர்ப்பையும் கொடுக்கும் என
தெரிவித்தார்.நீட் விவகாரத்தில் திமுகவை நம்பி அதிமுக எப்படி போராடும் எங்களுக்கு ரகசியம்
தெரியும் என்று சொல்லிவிட்டு தற்போது எங்களுடன் வந்து போராடுங்கள் என்று
சொல்வது நியாயமா அதிமுகவை பொருத்தவரை நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம்
என்பதே நிலைப்பாடு ஆனால் திமுக இதில் மக்களை ஏமாற்றிய வருகிறது.கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கேட்கும் நாங்கள் எதற்கு பயப்பட போகிறோம் கனகராஜன் சகோதரர் யாரோட தூண்டுதலிலோ இப்படி பேசி வருகிறார். எங்களைப் பொறுத்தவரை சிபிஐ விசாரணை தேவை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்.

via News J : https://ift.tt/3gvaJMh
Mediaபுரட்சித்தலைவர், புரட்சித்தலைவியை தொடர்ந்து அதிமுக என்றால் இனி அது எடப்பாடி கே.பழனிசாமி தான் என்பதை, லட்சபோ லட்சம் தொண்டர்கள் திரண்ட மதுரை மாநாடு நிரூபித்தது ஒருபக்கம் என்றால், சட்டரீதியாக சென்னை உயர்நீதிமன்றமும் வழங்கியுள்ள தீர்ப்பு அதிமுகவுக்கு வெற்றி மேல் வெற்றியை வாங்கிக் குவித்திருக்கிறது….தமிழகம் எங்கும் அதிமுகவினர் இனிப்புகளை வழங்கியும், அதிர்வேட்டுகளை முழங்கியும் வெற்றியை பறைசாற்றி வருகின்றனர்.2022 ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், கடந்த மார்ச் மாதம் எடப்பாடி கே.பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட தேர்தல் என அனைத்துக்கும் தடை விதிக்கக் கோரிய துரோகிகளின் மனுக்களை விசாரித்த, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீர்ப்பு வழங்கியது.பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றே தீர்ப்பளித்துள்ளதால், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க முடியாது என்றும், பன்னீர் உள்ளிட்டோரை நீக்கிய சிறப்பு தீர்மானம் செல்லும் என்றும், நீதிபதிகள் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளனர். மேலும், துரோகிகள் தரப்பில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டனர்.சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு என்பது 2 கோடி தொண்டர்களைக் கொண்ட அதிமுகவின் ஒற்றை நம்பிக்கையாக திகழும் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் என்பதை ஓங்கி ஒலித்திருக்கிறது.உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, நீதி, தர்மம், உண்மைக்கு கிடைத்த தீர்ப்பு என்று கூறியிருக்கிறார். எதிர்வரும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்களில், அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.
((ப்ரீத்: GV00C1H0))புரட்சித்தலைவின் கூற்றுப்படி எத்தனை நூறாண்டுகள் ஆனாலும் அதிமுகவை யாராலும் அழிக்க முடியாது என்பதை நிரூபிக்கும் வகையில், இன்று 2 கோடி தொண்டர்களுடன் அதிமுக என்னும் பேரியக்கம் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் வீறுநடை போட்டு கொண்டிருக்கிறது.கட்சியை அழித்துவிட வெளியில் இருந்து திட்டமிட்டவர்களுக்கும், உள்ளடி வேலை பார்த்த துரோகிகளுக்கும் எடப்பாடி கே.பழனிசாமி நடத்திய சட்டப் போராட்டங்கள், நீதிமன்றத்தின் தீர்ப்பாகி சவுக்கடியாக அமைந்துள்ளது.துரோகிகள், எதிரிகளை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு ஓடவிட்டுள்ளதன் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றிமேல் வெற்றிகளை குவித்திருக்கிறார். துரோகத்தை தவிடுபொடியாக்கி சாதித்த இந்த நிகழ்வு, வரும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் வெற்றியை கட்டியம் கூறும் வகையில் அமைந்திருக்கிறது.

via News J : https://ift.tt/Z0Ar6d7
Mediaஅதிமுக ஆட்சியில் பள்ளி மாணவர்களுக்கு காலையில் உணவு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட அக் ஷய பாத்ரா திட்டத்தை காலை உணவுத் திட்டம் என்று திமுக ஸ்டிக்கர் ஒட்டி வெற்று விளம்பரம் தேடுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு..பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பெயரில் மதிய உணவு அளிக்கப்பட்டு வரும் நிலையில், தாயுள்ளத்தோடு சிந்தித்த அதிமுக, மாணவர்களுக்கு காலையிலும் உணவு வழங்கும் அக் ஷய பாத்ரா திட்டத்தினை கொண்டு வந்தது.இதன்படி அக்ஷய பாத்ரா என்ற தொண்டு நிறுவனத்தின் மூலம் முதற்கட்டமாக அரசுப் பள்ளிகளில் உள்ள ஐந்தாயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்திற்கான உணவு தயாரிக்கும் கூடத்தின் பூமி பூஜை கடந்த 2020 பிப்ரவரியில் நடைபெற்றது. பசுமை வழிச்சாலையில் நடைபெற்ற பூமி பூஜையில் அப்போதைய முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளராமான எடப்பாடி கே.பழனிசாமி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் சில தினங்களில் காலை உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. முதற்கட்டமாக சென்னை திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் அதிமுக கொண்டு வந்த அட்சய பாத்ரா காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாணவர்களின் உணவிலும் கூட மதச்சாயம் பூச முற்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறியது.எதிர்க்கட்சியாக இருந்த போது எதை எதிர்த்தார்களோ, அதையே தங்களது ஆட்சியில் புதிய திட்டம் போல காலை உணவுத் திட்டம் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு திமுக இன்று மாநிலம் முழுவதும் அதனை விரிவுப்படுத்தியிருக்கிறது.எதிர்க்கட்சியாக இருந்தால் எதிர்ப்பது, ஆளும் கட்சியானதும் பெயரை மாற்றி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ளும் அரசாகவே விடியா அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/phdU9gY
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்புமாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308-ஆவது பிறந்த நாளையொட்டி தென்காசி மாவட்டம், நெற்கட்டும்செவலில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!1.09.2023 – வெள்ளிக்கிழமைஇந்திய விடுதலை வரலாற்றில் “வெள்ளையனே வெளியேறு” என்று சுதந்திரத்திற்காக முதன்முதலில் முழக்கமிட்ட போரட்ட மாவீரரும், வீர உணர்ச்சியும், இறை உணர்வும் மிகுந்தவருமான மாமன்னர் பூலித்தேவன் அவர்களின் 308 ஆவது பிறந்தநாளான 1.9.2023 – வெள்ளிக் கிழமை காலை 10 மணிகு, தென்காசி வடக்கு மாவட்டம், வாசுதேவநல்லூர் தொகுதி, நெற்கட்டும் செவல் என்ற இடத்தில் அமைந்துள்ள மாமன்னர் பூலித்தேவன் அவர்களுடைய திருவுருவச் சிலைக்கு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,திரு. திண்டுக்கல் C. சீனிவாசன், MLA., அவர்கள், கழகப் பொருளாளர், திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. நத்தம் இரா. விசுவநாதன், MLA., அவர்கள், கழக துணைப் பொதுச்செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. என். தளவாய் சுந்தரம், MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. செல்லூர் கே.ராஜூ, MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. ஆர்.பி. உதயகுமார், MLA., அவர்கள், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. வி. கருப்பசாமி பாண்டியன், Ex. MLA., அவர்கள் கழக அமைப்புச் செயலாளர்.திரு. வி.வி. ராஜன் செல்லப்பா, MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர்.திரு. சுதா கே. பரமசிவன் அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.திரு. இசக்கி சுப்பையா, MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. ஆர். முருகையா பாண்டியன், Ex MLA., அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.திரு. பி.ஜி. ராஜேந்திரன், Ex MLA, அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.திரு. ஏ.கே. சீனிவாசன் அவர்கள், கழக அமைப்புச் செயலாளர்.திரு. ஐ.எஸ். இன்பதுரை, Ex MLA, அவர்கள், கழக தேர்தல் பிரிவு துணைச் செயலாளர், கழக சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைச் செயலாளர்திரு. வி.எம். ராஜலெட்சும் அவர்கள், கழக தலமைச் செயற்குழு உறுப்பினர், கழக மகளிர் அணி துணைச் செயலாளர், முன்னாள் அமைச்சர்.திரு. பாப்புலர் வி. முத்தையா அவர்கள், கழக கொள்கை பரப்பு துணைச் செயலாளர்.திரு. தச்சை என். கணேச ராஜா அவர்கள், திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்.திரு. சி. கிருஷ்ணமுரளி, MLA., அவர்கள், திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர்.திரு. எஸ். செல்வமோகன்தாஸ்பாண்டியன், Ex MLA., அவர்கள், தென்காசி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்.ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.திருநெல்வேலி மாவட்டக் கழகச் செயலாளர் திரு. தச்சை என். கணேசராஜா, தென்காசி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. சி. கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன் முன்னாள் எம்.எல்.ஏ., ஆகியோர் இணைந்து, இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.மாமன்னர் பூலித்தேவன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன் பிறப்புகளும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

via News J : https://ift.tt/naSjADs
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/samba.jpg">Media</a><strong>கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை!</strong>சம்பா சாகுபடி குறித்து வாயைத் திறப்பாரா
விடியா திமுக அரசின் முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின்? ஒவ்வொரு ஆண்டும் குறுவை பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து ஜூன் 12 முதல் செப்டம்பர் 15 ஆம் தேதிவரை சுமார் 5.25 லட்சம் ஏக்கர் பாசன நிலங்கள்உக்கு 125 டி.ம்.சி தண்ணீர் தேவைப்படும். இதற்கு மேட்டூர் அணையிலிருந்து 99.74 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீரானது மழை மற்றும் நிலத்தடி நீர் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படும். எனவே, ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் நீர் இருப்பு மற்றும் இந்திய வானிலை மையத்தின் ஆண்டு மழைப்பொழிவு பற்றிய விபரங்களையும் பெற்று டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி தண்ணீர் திறப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.ஆனால், இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் 110 அடிக்கு மேல் உள்ளது என்ற ஒரே காரணத்திற்காக, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விபரங்களைப் பெறாமல், இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசின் முதலமைச்சர் ஜூன் 12 அன்று மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டார்.மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்கு ஜூன் 12-ஆம் தேதி 3000 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு, அன்றே மாலைக்குள் படிப்படியாக 10 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்பட்டு, ஜூலை மாதத்தில் படிப்படியாக 16000 கன அடியாக உயர்த்தி, ஆகஸ்ட் மாதத்தில் 18000 கனஅடியாக நீர் தேவைக்கேற்ப, மழையின் அளவுக்கேற்ப வழங்கப்பட வேண்டும். ஆனால், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் திறக்கப்பட தண்ணீரின் அளவு வெறும் 10 ஆயிரம் கன அடிதான். இதன் விளைவாக டெல்டா மாவட்டங்களில், ஆற்றங்கரை ஓரம் உள்ள பாசனப் பரப்புகள் மற்றும் சில தண்ணீர் திறந்துவிடப்பட்ட கால்வாய்களின் ஓரங்களில் உள்ள பாசனப் பரப்புகள் தவிர, மற்ற இடங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகி விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.குறிப்பாக, நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தொகுதி, தலைஞாயிறு ஒன்றியத்தில் மட்டும் குறுவை சாகுபடி செய்து, போதிய தண்ணீர் இல்லாமல் பண்ணைத் தெரு, மாராச்சேரி, ஆய்மூர், வடுகூர், திருவிடமருதூர், நீர்முலை, சித்தாய்மூர், கச்சநகரம், பனங்காடி, பாங்கல், கொளப்பாடு, கொத்தாங்குடி, நத்தப்பள்ளம், மணக்குடி, காடந்தேத்தி, வாட்டக்குடி, உம்பளச்சேரி, துளசாபுரம் ஆகிய கிராமங்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து கருகி காட்சியளிக்கின்றன. ஒரு ஒன்றியத்தில் மட்டும் இத்தனை கிராமங்கள் என்றால், மற்ற டெல்டா மாவட்டங்களின் பாதிப்பு என்ன என்பது அனைவருக்கும் நன்கு விளங்கும். டெல்டா விவசாயிகள் இந்த குறுவை சாகுபடியில் தங்களது சேமிப்பு மற்றும் உடலுழைப்பை இழந்ததுடன், கூட்டுறவு சங்க கடன்காரர்களாகவும் மாறி, முன்னெச்சரிக்கையுடன் செயல்படாத விடியா திமுக அரசின் மீது மிகுந்த கோபத்துடன் உள்ளனர்.2004 – ஆம் ஆண்டு முதல் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து, மத்தியில் ஆட்சி சுகத்தை அனுபவித்து வந்த திமுக, எதிர்வரும் 2024 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்காக, இப்போதே பாட்னா மற்றும் பெங்களூரு சென்று காங்கிரஸ் கட்சியுடன் கைகுலுக்கும் திமுக, தனது கூட்டாளியான கர்நாடக காங்கிரசிடம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரியில் தண்ணீர் திறந்துவிட வற்புறுத்தாமல் இருப்பதன் காரணத்தை பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளிடம் விளக்க வேண்டும்.“ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. ஆடி மாதம் முடிவடைந்து ஆவணி மாதமே பிறந்துவிட்டது. மேட்டூர் அணையிலிருந்து சம்பா மற்றும் தாளடி பாசனத்திற்கு செப்டம்பர் 15 முதல் ஜனவரி 28 வரை சுமார் 16.50 லட்சம் ஏக்கர் பாசன நிலங்களுக்கு 320 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படும், இதற்கு அணையிலிருந்து சுமார் 263 டி.எம்.சி தண்ணீர் வழங்கியும், மீதமுள்ள தண்ணீர் மழை மற்றும் நிலத்தடி நீர் கொண்டும் பூர்த்தி செய்யப்படும்.இன்று (26.8.2-23), மேட்டூர் அணையின் நீர்மட்டம் – 54.91 அடி (120 அடி), நீர் இருப்பு 20.55 டி.எம்.சி (மொத்த இருப்பு 93.47 டி.எம்.சி). நீர் வரத்து சுமார் 12,000 கன அடி. தண்ணீர் திறப்பு 7 ஆயிரம் கண அடி. குறுவை சாகுபடிக்கே தண்ணீர் பற்றாத நிலையில், சம்பா சாகுபடிக்கு விவசாயிகள் என்ன செய்ய வேண்டும் என்று இதுவரை விடியா திமுக அரசு வாயையே திறக்கவில்லை.நான், அம்மாவின் அரசில் முதலமைச்சராக 2017-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது கடும் வறட்சி. இந்தச் சூழ்நிலையில் நான், டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தக் கருத்திற்கொண்டு, போதிய மழையில்லாத காரணத்தாலும், அணையில் போதிய நீர் இல்லாத காரணத்தாலும், 12.6.2017 அன்று சுமார் 11 லட்சம் ஏக்கர் பரப்பளவில் நெல் சாகுபடியும், தாளடி பருவத்தில் 2.15 லட்சம் ஏக்கரில் சாகுபடிகள் மேற்கொள்ளப்பட்டு…