Mediaஅய்யய்யோ எம் புள்ள என்னவிட்டுப் போயிட்டானே… நான் என்ன செய்வேன் என்று கதறிய அந்தத் தந்தையின் குரல் இனிமேல் எங்கும் ஒலிக்கப் போவதில்லை. ஆம் நீட் தேர்வை ஒழிப்போம் என்று வெற்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த விடியா அரசு மகன், தந்தை என 2 உயிர்களைக் குடித்திருக்கிறது.அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து மருத்துவராக வேண்டும் என்னும் லட்சியக் கனவுடன் வலம் வந்த 19 வயது ஜெகதீஸ்வரன் இன்று உயிரோடு இல்லை… கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து மகனைத் தன்னோடு தாங்கி அவனுக்காகவே வாழ்ந்து வந்தவர்தான் தந்தை செல்வசேகர்.சிபிஎஸ்சி பள்ளியில் 12ஆம் வகுப்பு முடித்த தனது மகனின் மருத்துவக் கனவுக்காகவே நீட் தேர்வு பயிற்சிக்காக லட்சங்களை செலவிட்டுள்ளார். முதல்முறை நீட் தேர்வில் 227 மதிப்பெண்கள் பெற்ற ஜெகதீஸ்வரன் மீண்டும் முயற்சித்து 392 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். ஆனாலும் அவரால் அரசு கோட்டாவில் மருத்துவக் கல்லூரியில் இணைய முடியவில்லை. தனியார் மருத்துவக்கல்லூரிகளில் பல லட்சங்களை கொட்டிக் கொடுக்கும் அளவுக்கு பொருளாதார சூழலும் இல்லை… அப்படி கொட்டிக் கொடுத்து படிப்பவர்களால் மருத்துவத்தை சேவையாக செய்ய முடியாது என்னும் எண்ணம் மிகுந்திருந்ததால், தனக்கு கிடைக்காத மருத்துவ சீட்டால் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் ஜெகதீஸ்வரன்.மகன் சோர்ந்திருப்பதைக் கண்டு மனதளவில் உடைந்தாலும், அதனைக் காட்டிக் கொள்ளாமல், மீண்டும் ஒரு முறை நீட் தேர்வு எழுத பயிற்சி எடுப்பதற்காக மகனை சேர்த்திருக்கிறார். ஆனால் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ஜெகதீஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படிக்கும் அறையில் வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.தகவல் கிடைத்து வீட்டுக்கு வந்து மகனின் உடலைப் பார்த்து உடைந்து போயிருக்கிறார் தந்தை செல்வசேகர். நீட் என்னும் அரக்கனாலும் அதனை ஒழிப்பேன் என்று வெற்று வாக்குறுதி அளித்த ஸ்டாலின் அரசாலும் தனது மகனின் உயிர்பறிபோன துயரம் அவரை ஆற்றொண்ணா துயரத்தில் ஆழ்த்தியது.ஜெகதீஸ்வரனின் நண்பர்களும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர். நீட் தேர்வு எழுதினால்தான் மருத்துவர் என்றால் இதற்கு முன்பாக மருத்துவர்கள் ஆனவர்கள் யாரும் உண்மையான மருத்துவர் இல்லையா? தனியார் மருத்துவமனைகளில் 25 லட்சம் ரூபாய் பணம் கட்டி மருத்துவம் படிப்பவர், தான் செலவிட்ட தொகையை எப்படி எடுப்பது என்றுதான் யோசிப்பாரே தவிர தரமான மருத்துவசேவை குறித்து எப்படி யோசிப்பார் என்று அவர்கள் எழுப்பிய கேள்விகள் ஆட்சியாளர்களுக்கானவை.மனைவியைப் பிரிந்தது முதல், முழுக்க முழுக்க மகனின் எதிர்காலத்துக்காக வாழ்ந்து வந்த அந்த தந்தை தனது மகனின் இறந்த உடலுக்கு இறுதிச் சடங்கை செய்துவிட்டு வந்தவர், தனித்திருக்க முடியாமல் மகனின் ஜீவன் போன இடத்துக்கே தனது ஜீவனை அனுப்பியிருக்கிறார் தூக்கிட்டுக் கொண்டு…மகனின் மரணத்தின் போது செல்வசேகருக்கு ஆறுதலாக நின்ற ஜெகதீஸ்வரனின் நண்பர்கள், தற்போது செல்வசேகரும் உயிரிழக்க அடுத்தடுத்த உயிரிழப்பின் அதிர்ச்சிகளால் உறைந்திருக்கிறார்கள். நண்பரையும் அவரது தந்தையையும் பலிகொண்ட நீட்டும், விடியா அரசின் வெற்று வாக்குறுதியும் இன்னும் எத்தனை மாணவர்களின் உயிரை காவு வாங்கப்போகிறதோ என்று அங்கு வந்த வாரிசு அமைச்சரிடம் அவர்கள் எழுப்பிய கேள்வி ஒவ்வொன்றும் விடியா அரசுக்கு சவுக்கடி.மாணவி அனிதா மரணத்தை பூதாகரமாக்கிய விடியா ஆட்சியில், நீட் தேர்வில் நிகழ்வும் மரணங்களுக்கு என்ன பதில் வைத்திருக்கிறது. தனது வாரிசை அரசியலில் கொண்டு வருவதற்காக நிகழ்ச்சிகளில் தலைகாட்ட அழைத்துச் செல்லும் தந்தை உதயநிதி, இன்று ஒரு தந்தையும் மகனும் பலியானதற்கு என்ன சொல்லப் போகிறார். நீட்டை ஒழிக்கும் ரகசியம் தங்களிடம் இருப்பதாக வெற்று அறைகூவல் விடுத்தவர்களுக்கு இன்று நிகழ்ந்துள்ள தந்தை மகன் தற்கொலை அவர்களின் மனசாட்சியை உலுக்குமா?
via News J : https://ift.tt/gl4pvVP
via News J : https://ift.tt/gl4pvVP
Mediaகடந்த 11 நாள்களில் திருநெல்வேலியில் மட்டும் 10 கொலைகள் அரங்கேறியுள்ளன. விடியா ஆட்சியில் மக்கள் தங்கள் பாதுகாப்பு உணர்வை இழந்து, தினமும் உயிர் பயத்துடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…“அமைதிப் பூங்கா” என்ற பெயரை தமிழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் நாளிதழ்களையும், செய்திச் சேனல்களையும் கொலை, கொள்ளை செய்திகள் மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. அதிலும் தென் மாவட்டங்களில் அதிகரித்து வரும் கொலை செய்திகளை பார்க்கையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கின் லட்சணம் சந்தி சிரிக்கும் வகையில் உள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 11 நாள்களுக்குள்ளாக 10 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். நெல்லை கொக்கிரகுளத்தை அடுத்த கீழ வீரவராகபுரத்தைச் சேர்ந்த முகேஷ் எனும் தனியார் உணவு டெலிவரி நிறுவன ஊழியர் முன்விரோதம் காரணமாக ஒரு கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவர், சொந்தமாக ஜே.சி.பி., லாரி, செங்கல் சூளை உள்ளிட்டவை வைத்துள்ளார். இந்த நிலையில் வீரவநல்லூரில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் நடைபெற்ற திருவிழாவில், வெடி வெடிக்கும்போது, குமார் தரப்பினருக்கும், மற்றொரு தரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 5பேர் கொண்ட கும்பல், 2 பைக்கில் சென்று ஓட ஒட விரட்டி சரமாரியாக அறிவாளால் வெட்டி குமாரை கொலை செய்துள்ளனர்.இதுபோல மற்றொரு சம்பவத்தில், கீழநத்தம் பஞ்சாயத்தின் இரண்டாவது வார்டின் சுயேட்சை கவுன்சிலராக இருந்தவர் ராஜாமணி. வீட்டில் உள்ள கால்நடைகளை அப்பகுதியில் இருக்கும் பாலம் அருகே மேய்ச்சலுக்கு விட்டுவிட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மர்ம நபர்கள் சிலர் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினர்.நெல்லை சுத்தமல்லி அருகே, கருத்தப்பாண்டி என்பவர் வளர்த்து வந்த நாய், அதே பகுதியைச் சேர்ந்த விவசாயி கொம்பையாவின் மகளைக் கடித்துள்ளது. இதில் இரு குடும்பத்துக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த கருத்தப்பாண்டி, கொம்பையாவை கொலை செய்துள்ளார்.நெல்லை மேலநத்தம் பகுதியை சேர்ந்த மாயாண்டி என்பவர், தனியார் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் பணிகளை முடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்ற மாயாண்டியை வழிமறித்த மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.இதுமட்டுமல்லாமல் பள்ளி மாணவனையும், அவரது சகோதரியையும் சக பள்ளி மாணவர்களே வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய சம்பவமும் அரங்கேறி அனைவரையும் கொதிப்படையச் செய்துள்ளது. இத்தனை கொலைகளைக் கண்டு நெல்லை மாவட்டமே ரத்த பூமியாக காட்சியளிக்கிறது. ஆனாலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக ஊரை நம்ப வைக்க நாடகமாடி வருகிறார் ஸ்டாலின்.
via News J : https://ift.tt/rHS8iVW
via News J : https://ift.tt/rHS8iVW
Mediaநாட்டின் 77வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நாளில் கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணக்குகிறேன் என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்நன்னாளில் நம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபட வேண்டும் என்றும், நம் நாட்டின் ஒற்றுமையை பேணி காக்கவும் நாம் உறுதியேற்போம் என்றும் தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, அனைவருக்கும் தனது சுதந்திர தின வாழ்த்துகள் எனவும் பதிவிட்டுள்ளார்.இந்திய திருநாட்டின் 77வது சுதந்திர தின கொண்டாட்டத்தில், விடுதலை வேள்வியில் கடும் போராட்டத்தை எதிர்கொண்டு, தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தியாகிகளை போற்றி தலை வணங்குவதுடன்,இந்நன்னாளில் நம் நாடு கல்வி, அறிவியல், சமத்துவம் போன்றவற்றில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கிட பாடுபடவும்,… pic.twitter.com/OLLmCiQFwk— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 15, 2023
via News J : https://ift.tt/GyTH3L7
via News J : https://ift.tt/GyTH3L7
Mediaதனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் பட்டை தீட்டி பில் போட்டுவிடுவார்கள் என்று அஞ்சி அரசு மருத்துவமனைக்கு நம்பி வரும் ஒவ்வொரு குடிமகனையும் பதறி அடித்து ஓடவைக்கும் நிலைக்கு தள்ளியிருக்கிறது விடியா திமுக அரசு…..கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த தனிஷ் – ஷைனி தம்பதியினர் தங்களின் 3 வயது குழந்தையை காய்ச்சல் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்க, அங்கு குழந்தைக்கு சோதனை செய்யாமலேயே வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சையை மருத்துவர்கள் அளித்திருக்கிறார்கள்.ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறி இருக்கின்றனர். ஆனால், குழந்தையின் உடலில் அசைவுகள் தென்பட்டதால், கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்துச் சென்று சிகிச்சை அளித்த நிலையில், குழந்தை உயிர் பிழைத்திருக்கிறது.கேரளாவில் குழந்தைக்கு எலி காய்ச்சல் இருப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்து சிகிச்சை அளித்ததால் தான் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளது. அப்படியே தமிழக அரசு மருத்துவமனையின் மருத்துவர்கள் சொல்வதை கேட்டிருந்தால் ஒரு உயிர் என்னவாகி இருக்கும்….குழந்தை என்பதால் அக்கறை இல்லையா அல்லது எந்த ஒரு உயிருக்கும் தமிழக அரசு மருத்துவமனையில் மதிப்பில்லையா? என்ற கேள்விகளைத்தான் மக்கள் எழுப்புகின்றனர்….இந்த சம்பவத்தை பற்றி அறிந்த எதிர்க்கட்சித் தலைவர், சமீப காலங்களாக தமிழக அரசு மருத்துவமனையில் நடக்கும் அவலங்கள் குறித்தும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனையும் தனது அறிக்கை வாயிலாக கடுமையாக விமர்சித்துள்ளார்.ஆனால், பொறுப்புமிக்க பதவியில் இருக்கும் அமைச்சர் மா.சுப்பிரமணியனோ, கடந்த 10 ஆண்டுகாலத்தில் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தததை இரண்டே ஆண்டுகளில் செய்து சாதித்துவிட்டதாக சுய தம்பட்டம் அடித்திருக்கிறார்….மக்கள் அனைவரும் தமிழ்நாடு சுகாதாரத்துறையில் நடக்கும் அவலங்களை பார்த்துக் கொண்டுதானே இருக்கின்றனர்….கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டது தொடங்கி சமீபத்தில் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட சம்பவம் என சுகாதாரத்துறை அமைச்சரின் சாதனை பட்டியல் நீள்கிறதே என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.சுகாதாரத்துறையை சீர்படுத்த வேண்டிய அமைச்சரே, இப்படி தவறுகளுக்கு எல்லாம் ஆதரவாக நின்றுகொண்டு இருந்தால், அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையும் இல்லாமலேயே போய்விடாதா?தனது உடற்பயிற்சிக்கு செலவிடும் நேரத்தைப் போலவே, சுகாதாரத்துறை அமைச்சர் தனக்கு ஒதுக்கப்பட்டிருக்கும் துறைக்கு செலவிட்டு மக்களின் இன்னுயிரை காக்க வழி செய்வாரா?….இனியாவது ஏழை எளியோரும் நம்பிக்கையுடன் தொடர்ந்து சிகிச்சை பெறும் வகையில் அரசு மருத்துவமனைகள் இருக்குமா? என்பதே மக்களின் கேள்வியாக இருக்கிறது.
via News J : https://ift.tt/oztn0g4
via News J : https://ift.tt/oztn0g4
Media77வது சுதந்திரதினத்தை முன்னிட்டு தமிழகத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டங்களில் திமுக ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு எதிராகவும், விடியா அரசுக்கு எதிராகவும் பொதுமக்கள் ஆவேசம் காட்டியுள்ளனர். ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல ஒரு சில நிகழ்வுகள் குறித்து இந்த தொகுப்பில் பார்ப்போம்…கிருஷ்ணகிரி..!கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த சென்னசந்திரம் ஊராட்சிக்குட்பட்ட உளியாளம், மாரசந்திரம்,சென்னசந்திரம்,கெம்பசந்திரம், காலஸ்திபுரம் உள்பட 6 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், தங்களுக்கு நிலப்பட்டா வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தை புறக்கணித்துள்ளனர். அதிகாரிகள் சமாதானம் செய்து அழைத்தபோதும், பட்டா வழங்கும் வரை எத்தனை ஆண்டுகளானாலும் கூட்டத்தை புறக்கணிப்பதாக திட்டவட்டமாக அவர்கள் மறுத்துவிட்டனர்.தருமபுரி..!தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி அடுத்த கோட்டமேடு இந்திரா நகரில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் அ.பள்ளிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தனசேகரன் பொறுபேற்று 4 ஆண்டுகளுக்கு மேலாகியும், அ.பள்ளிப்பட்டி, கல்லாத்துக்காடு, சாலூர் உள்பட 9 கிராமங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக் கூறி பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.கிராம சபை' பெயரில் அரசியல் கட்சிகள் கூட்டம் நடத்த அனுமதி இல்லை; மீறி நடத்தினால் நடவடிக்கை: தமிழக அரசு அறிவிப்பு | Meeting in the name of the village council ...கடலூர்..!கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே மாளிகைமேடு ஊராட்சியில் கிராம சபை கூட்டத்தில், 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்த சந்திரா என்னும் பெண் மீது கல் எரியப்பட்டதால் தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். பண்ருட்டி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வருகிறனர்.விழுப்புரம்..!விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே ஈச்சேரி ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண அதிகாரிகளும் விடியா அரசும் ஒத்துழைக்கவில்லை என்று திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவர் சேகர் குற்றம் சாட்டியதோடு, தனது தலைவர் பதவியையும், கட்சி பதவியையும் ராஜினாமா செய்யப் போவதாகவும் கூறியது விடிய ஆட்சியின் அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.தமிழகத்தில் நடந்த கிராம சபை கூட்டங்களில் இன்று மக்கள் காட்டிய ஆவேசமும் அதிருப்தியும் ஆளும் திமுகவுக்கு நாடாளுமன்ற தேர்தலில் பாடம் புகட்டுவதை ஆரூடம் சொல்லியிருக்கிறது.
via News J : https://ift.tt/3CEpNMZ
via News J : https://ift.tt/3CEpNMZ
Mediaதமிழகத்துல கிட்டத்த 60ஆயிரம் பேருக்கு மேல மின் நுகர்வோர்கள் கடந்த 2 வருசமா பயன்படுத்துன மின்சாரத்துக்கான கட்டணத்த கட்டாமலேயே இருக்காங்காங்களாம். அதனால 47 கோடி ரூபா மின்சார வாரியத்துக்கு வரவேண்டியது இருக்குதாம்…அதிகபட்சமா கோவை வட்டத்துல 3ஆயிரத்து 823 மின் நுகர்வோர் 21கோடியே 13 லட்சமும், 2வதா காஞ்சிபுரம் வட்டத்துல 24ஆயிரம் மின் நுகர்வோர் 11கோடியே 86 லட்சம் ரூபாயும் கட்டாம இருக்காங்களாம்…ஆனா மின்சாரக் கட்டணத்த கட்டாதவங்க மேலே எந்த நடவடிக்கையும் எடுக்காம நிர்வாகத்திறனற்ற திமுக கண்டுக்கிடாமயே இருக்குதாம். அதுமட்டுமில்லாம இதையெல்லாம் ஒழுங்கா வசூலிக்காம மின்சாரத் துறை நஷ்டத்துல ஒடுதுன்னு பொதுமக்கள் மேல மின்கட்டணத்த அதிகரிக்கிறதுல மட்டும்தான் ஆட்சியாளர்கள் குறியா இருக்காங்க…பேனா சின்னத்துக்காக மக்கள் வரிப்பணத்துல இருந்து 81கோடிய செலவு பண்ணுறதுக்கு காட்டுற அக்கறைய 47 கோடி ரூபாய வசூல் பண்றதுக்கு எப்ப காட்டப்போறீங்க? டாஸ்மாக்குல பாட்டிலுக்கு 10 ரூபாய பிடுங்குற ஆர்வத்த, மின் கட்டண வசூல்லயும் காட்டியிருக்கலாம்னும் நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/RSsPiHQ
via News J : https://ift.tt/RSsPiHQ
Mediaகடந்த 2022 டிசம்பர்ல தென்காசிக்கு போயிருந்தாரு முதலமைச்சர் ஸ்டாலின். அப்போ, தென்காசி மாவட்டம் பாவூர் சத்திரம் பக்கம், வினை தீர்த்தநாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கேட்டு 3ஆம் வகுப்பு மாணவி ஆராதனா எழுதுன கடிதத்துக்கு பதில் சொல்றதா, 35லட்சத்துல இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டப்படும்னு அறிவிச்சாரு… தன்னோட ட்விட்டர் பக்கத்துலயும், குழந்தைகளும் நம்பிக்கை வைத்துள்ள அரசுன்னு பெருமையோடு பணியதொடர்கிறேன்னும் சொல்லி விளம்பரப் படுத்தி இருந்தாரு…200 ரூபா உபிஸும், நேருக்கு அப்புறமா குழந்தைகள் மாமா, மாமான்னு ஸ்டாலினத்தான் கூப்பிடுறதா புளகாங்கிதம் அடைஞ்சிருந்தாங்க. அதுக்கப்புறம் அப்பப்போ மாணவர்கள் கடிதம் போடுறதும் அதுக்கு ட்விட்டர்ல பதில் சொல்றதுமா வெற்று விளம்பரம் தேடிக்கிட்டே தான் இருந்தாரு ஸ்டாலின்…சரி, இப்படி கடிதம் மட்டுமே போதாது… வேற ஏதாவது பெரிசா பிளான் பண்ணனும்னு, சென்னை ஆவடியில நரிக்குறவர் குடியிருப்புக்கு நேரடியா போய் அங்க ஒரு வீட்டுல மாணவிகளோட சேர்ந்து புத்தம் புது தட்டுல இட்லி எல்லாம் சாப்பிட்டு
பக்காவா ஒரு சூட்டிங் ஷெட்யூல முடிச்சாரு ஸ்டாலின்.அவரு நெனைச்சமாதிரியே, இதுதாம்பா சமூக நீதி பேசுற திராவிட மாடல்னு 200 ரூபா உபிஸ் எல்லாம் சமூக வலைதளங்கள்ல பொங்கி பிரவாகம் எடுத்தாங்க…இப்படியெல்லாம் மாணவர்களோட கோரிக்கை கடிதத்துக்கு பதில் சொல்றதா விளம்பரம் தேடுற முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அரசு பள்ளியில தலைமை ஆசிரியரால தன்னோட மகனுக்கு நடந்த சாதி துவேஷம் தொடர்பா மாணவனோட தாயார் போட்ட கடிதம் இதுவரைக்கும் ஒரு பதிலும் சொல்லலையாம்.நாங்குநேரி சம்பவத்துலயும் கூட விடியா அரசு மாணவர்கள் நலன் தொடர்பா எந்த அறிவிப்பையும் வெளியிடல… பள்ளிகள்ள பரவுற சாதிய துவேஷத்தை நிறுத்துறதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு அதிருப்தி தெரிவிக்கிறாங்க கல்வியாளர்கள்.இப்போ, சுதந்திரதின விழாவுலயும், 3ஆம் வகுப்பு மாணவன் ஒருத்தன வரவழைச்சிட்டு கண்டுக்கிடவே இல்லையாம் முதலமைச்சர் ஸ்டாலின்.ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராமத்த சேர்ந்த எட்டு வயது மாணவர் லிதர்சன், மூணாம் வகுப்பு படிச்சிட்டு வாராரு. சுதந்திரதினத்தன்னைக்கு கோட்டை கொத்தளத்துல முதலமைச்சர் கொடியேத்துறத பார்க்கணும்னு கடிதம் போட்ட லிதர்சனையும், அவரது தாயாரையும் சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்காங்க. ஆனா, விருந்தினர் பகுதியில இருக்கை இல்லாததால, லிதர்சனையும் அவங்க அம்மாவையும், கடைசி இருக்கையில கொண்டு போய் உக்கார வச்சிருக்காங்க. கடைசியில இருந்ததால பார்க்கிறதுக்கு ஒண்ணுமே தெரியலன்னு மாணவனோட முகம் சோகமா மாறியிருக்கு. சிறுவன் அழுவுற நிலைக்கு போனத பார்த்த அங்க இருந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கான இருக்கையில முன்வரிசையில தாயையும் மகனையும் அமர வச்சிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் மாணவன், கோட்டை கொத்தளத்துல மூவர்ணக்கொடி பறந்தத ரசிச்சி பார்த்துருக்கான்.நாங்க மாணவர்கள வரவச்சோம்னு விளம்பரத்துக்காக வரவைக்க வேண்டியது… அதுக்குப்பிறகு கண்டுக்கிடாம விட்டுர்றது… மாணவர்கள வச்சி இப்படி வீண் விளம்பரம் தேடுறது எல்லாம் தேவையா முதல்வர் சார்?
via News J : https://ift.tt/A0hWLCa
பக்காவா ஒரு சூட்டிங் ஷெட்யூல முடிச்சாரு ஸ்டாலின்.அவரு நெனைச்சமாதிரியே, இதுதாம்பா சமூக நீதி பேசுற திராவிட மாடல்னு 200 ரூபா உபிஸ் எல்லாம் சமூக வலைதளங்கள்ல பொங்கி பிரவாகம் எடுத்தாங்க…இப்படியெல்லாம் மாணவர்களோட கோரிக்கை கடிதத்துக்கு பதில் சொல்றதா விளம்பரம் தேடுற முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அரசு பள்ளியில தலைமை ஆசிரியரால தன்னோட மகனுக்கு நடந்த சாதி துவேஷம் தொடர்பா மாணவனோட தாயார் போட்ட கடிதம் இதுவரைக்கும் ஒரு பதிலும் சொல்லலையாம்.நாங்குநேரி சம்பவத்துலயும் கூட விடியா அரசு மாணவர்கள் நலன் தொடர்பா எந்த அறிவிப்பையும் வெளியிடல… பள்ளிகள்ள பரவுற சாதிய துவேஷத்தை நிறுத்துறதுக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கலன்னு அதிருப்தி தெரிவிக்கிறாங்க கல்வியாளர்கள்.இப்போ, சுதந்திரதின விழாவுலயும், 3ஆம் வகுப்பு மாணவன் ஒருத்தன வரவழைச்சிட்டு கண்டுக்கிடவே இல்லையாம் முதலமைச்சர் ஸ்டாலின்.ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராமத்த சேர்ந்த எட்டு வயது மாணவர் லிதர்சன், மூணாம் வகுப்பு படிச்சிட்டு வாராரு. சுதந்திரதினத்தன்னைக்கு கோட்டை கொத்தளத்துல முதலமைச்சர் கொடியேத்துறத பார்க்கணும்னு கடிதம் போட்ட லிதர்சனையும், அவரது தாயாரையும் சிறப்பு விருந்தினரா அழைச்சிருக்காங்க. ஆனா, விருந்தினர் பகுதியில இருக்கை இல்லாததால, லிதர்சனையும் அவங்க அம்மாவையும், கடைசி இருக்கையில கொண்டு போய் உக்கார வச்சிருக்காங்க. கடைசியில இருந்ததால பார்க்கிறதுக்கு ஒண்ணுமே தெரியலன்னு மாணவனோட முகம் சோகமா மாறியிருக்கு. சிறுவன் அழுவுற நிலைக்கு போனத பார்த்த அங்க இருந்த பத்திரிகையாளர்கள் தங்களுக்கான இருக்கையில முன்வரிசையில தாயையும் மகனையும் அமர வச்சிருக்காங்க. அதுக்குப் பிறகுதான் மாணவன், கோட்டை கொத்தளத்துல மூவர்ணக்கொடி பறந்தத ரசிச்சி பார்த்துருக்கான்.நாங்க மாணவர்கள வரவச்சோம்னு விளம்பரத்துக்காக வரவைக்க வேண்டியது… அதுக்குப்பிறகு கண்டுக்கிடாம விட்டுர்றது… மாணவர்கள வச்சி இப்படி வீண் விளம்பரம் தேடுறது எல்லாம் தேவையா முதல்வர் சார்?
via News J : https://ift.tt/A0hWLCa
Media2022 அக்டோபர் 17ம் தேதி தனது 50வது வருட பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது ஒன்றரை கோடி தொண்டர்களைக்கொண்ட ஒரே மக்கள் பேரியக்கமான அதிமுக.
50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சுமார் 35 ஆண்டுகள் ஆட்சி அரியணையில் இருந்த அதிமுக கொண்டுவந்த அத்தனை திட்டங்களும் சகாப்தம் படைத்திருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் செய்யமுடியாத சாதனைகளை அதிமுக செய்திருக்கிறது.தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக.
1977ல் முதலமைச்சரான புரட்சித்தலைவர் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதித்தார். 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவி 2016 தேர்தலிலும் வெற்றிபெற்று அந்த சாதனையை படைத்தார்.
அதிமுகவின் இத்தகைய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியவர்கள்அதன் ஒன்றரைகோடிக்கும் அதிகமான தொண்டர்களே. அதன் காரணமாகவே 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் கண்டார் புரட்சித்தலைவி. 37 தொகுதிகளில் வாகை சூடி, இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி வேறெந்த மாநில கட்சிகளும் படைக்கமுடியாத சாதனையை படைத்து இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் சகாப்தம் படைத்தது அதிமுக.தேர்தல் பிரசாரத்துக்கே செல்லாமல் ஆட்சியைப் பிடித்தக்கட்சியும் அதிமுகதான். 1984ல் அந்த புதிய சகாப்தத்தை நிகழ்த்திக் காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். தமிழகம் இன்று கல்வியில் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டதும் புரட்சித்தலைவர் தான். அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான்.
அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில்தான் மாணவர்களுக்கான இலவச மிதி வண்டி தொடங்கி… விலையில்லா மடிக்கணினிவரை வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தையும் அதிமுக நிறைவேற்றியிருக்கிறது. இப்படி.. ஆதிதொட்டு இன்றுவரை கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தி தமிழகத்தை தலைசிறந்த கல்வி மாநிலமாக மாற்றிய அதிமுக தமிழக கல்வி வரலாற்றில் ஓர் சகாப்தமாக உயர்ந்து நிற்கிறது. அதிமுக கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நலதிட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருந்திருக்கிறது. ஏழைமக்களின் பசிபோக்கும் அம்மா உணவக திட்டம் அமெரிக்காவரை அதிமுகவின் புகழை கொண்டுசேர்த்துள்ளது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கெனவும் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், பெண்கள் உள்ளாட்சிகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கி சட்டமாக்கியது பெண்களின் நலனில் அதிமுக மாபெரும் சகாப்தமாக திகழ்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது. தமிழக மக்களின் நாடித்துடிப்பாய் செயல்பட்டு நலத்திட்டங்களை தீட்டிய கலங்கரை விளக்கம்…அதிமுக ஓர் சகாப்தம்…
via News J : https://ift.tt/m91jeU0
50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சுமார் 35 ஆண்டுகள் ஆட்சி அரியணையில் இருந்த அதிமுக கொண்டுவந்த அத்தனை திட்டங்களும் சகாப்தம் படைத்திருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் செய்யமுடியாத சாதனைகளை அதிமுக செய்திருக்கிறது.தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக.
1977ல் முதலமைச்சரான புரட்சித்தலைவர் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதித்தார். 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவி 2016 தேர்தலிலும் வெற்றிபெற்று அந்த சாதனையை படைத்தார்.
அதிமுகவின் இத்தகைய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியவர்கள்அதன் ஒன்றரைகோடிக்கும் அதிகமான தொண்டர்களே. அதன் காரணமாகவே 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் கண்டார் புரட்சித்தலைவி. 37 தொகுதிகளில் வாகை சூடி, இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி வேறெந்த மாநில கட்சிகளும் படைக்கமுடியாத சாதனையை படைத்து இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் சகாப்தம் படைத்தது அதிமுக.தேர்தல் பிரசாரத்துக்கே செல்லாமல் ஆட்சியைப் பிடித்தக்கட்சியும் அதிமுகதான். 1984ல் அந்த புதிய சகாப்தத்தை நிகழ்த்திக் காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். தமிழகம் இன்று கல்வியில் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டதும் புரட்சித்தலைவர் தான். அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான்.
அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில்தான் மாணவர்களுக்கான இலவச மிதி வண்டி தொடங்கி… விலையில்லா மடிக்கணினிவரை வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7புள்ளி 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தையும் அதிமுக நிறைவேற்றியிருக்கிறது. இப்படி.. ஆதிதொட்டு இன்றுவரை கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தி தமிழகத்தை தலைசிறந்த கல்வி மாநிலமாக மாற்றிய அதிமுக தமிழக கல்வி வரலாற்றில் ஓர் சகாப்தமாக உயர்ந்து நிற்கிறது. அதிமுக கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நலதிட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருந்திருக்கிறது. ஏழைமக்களின் பசிபோக்கும் அம்மா உணவக திட்டம் அமெரிக்காவரை அதிமுகவின் புகழை கொண்டுசேர்த்துள்ளது.பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கெனவும் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், பெண்கள் உள்ளாட்சிகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கி சட்டமாக்கியது பெண்களின் நலனில் அதிமுக மாபெரும் சகாப்தமாக திகழ்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது. தமிழக மக்களின் நாடித்துடிப்பாய் செயல்பட்டு நலத்திட்டங்களை தீட்டிய கலங்கரை விளக்கம்…அதிமுக ஓர் சகாப்தம்…
via News J : https://ift.tt/m91jeU0
Mediaஆகஸ்ட் 20ம் தேதி ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஸ்தம்பிக்கப்போகிறது …. மதுரையே குலுங்கப்போகிறது… என்ன மதுரை கள்ளழகர் திருவிழா வா? அது சித்திரையில் தானே நடக்கும் ? என்று நீங்கள் கேட்கலாம்… அதைவிட மிகப்பிரம்மாண்டமாய், கடல்போல பொங்கி வரப்போகிறார்கள் அதிமுகவின் ரத்தத்தின் ரத்தங்கள்… 2 கோடிக்கும் அதிகமான தொண்டர்களைக்கொண்ட அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் அடிநாதமான தொண்டர் படை மதுரை நோக்கி மாநாட்டில் கலந்துகொள்ள படையெடுக்கப்போகிறது…இந்தச்செய்தி அறிந்ததும் ஏற்கனவே உடன்பிறப்புகளின் அலப்பறையால் தூக்கம் தொலைத்து தவிக்கும் ஸ்டாலினுடன் சேர்ந்து, ஒட்டுமொத்த திமுகவினருக்குமே தூக்கம் போச்சு என்று தான் சொல்ல வேண்டும்…. அதன் வெளிப்பாடுதான் உதயநிதியின் உண்ணாவிரத நாடகம்… நீட் தேர்வுக்கு நியாயம் வேண்டி உண்ணாவிரதம் இருக்கப்போகிறாராம் வாரிசு அமைச்சர்… ஏன் இந்த திடீர் உண்ணாவிரதம்?இதுநாள் வரை ஆட்சியில் ஒன்றும் செய்யாமல் இருந்த உளவுத்துறை, படுசுறுசுறுப்பாக வேலை பார்த்து முதல்வருக்கு அனுப்பிய ரிப்போர்ட்டில், அதிமுக மாநாட்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்ற விஷயத்தைச் சொல்ல, பதறிப்போயிருக்கிறார் ஸ்டாலின்… அந்த பதற்றத்தின் வெளிப்பாடுதான் உடனடியாக உண்ணாவிரத நாடகம் போடு என்று உதயநிதிக்கு உத்தரவு போட்டிருக்கிறார் ஸ்டாலின் என்கிறது அறிவாலய வட்டாரங்கள்..உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவதெல்லாம் திமுகவுக்கு ஒன்றும் புதிதல்ல… தாத்தா போட்ட நாடகத்தை பேரன் போடப்போகிறார் அவ்வளவே,…. ஈழத்தில் நடந்தபோருக்கு, தமிழ்நாட்டில் 2 மணி நேரம் உண்ணாவிரதம் இருந்து, அங்கே போர் நின்றுவிட்டதாக அறிவித்த அறிவாலயத்து ரத்தம் அல்லவா? இப்போதும் அதை அப்படியே காப்பியடிக்கிறது.. நீட் தேர்வை ரத்து செய்ய சட்டப்போராட்டம் நடத்த திராணியற்று, இரண்டரை ஆண்டுகளாய் கடலில்போட்ட கல்லாய் இருந்துவந்த திமுக இப்போது வந்து உண்ணா விரதம் என்று சால்ஜாப்பு காட்டிக்கொண்டிருக்கிறது…வெற்றிகரமாக நடக்கப்போகும், அதிமுக மாநாட்டை எப்படி திசை திருப்பலாம்? ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் கவனமும் எதிர்க்கட்சியான அதிமுகவின் மீது எப்படி விழலாம்? இந்தியாவே திரும்பிப்பார்க்கும் அளவிற்கான ஓர் மாநாட்டை மக்களிடம் கொண்டுசென்று சேராமல் தடுப்பது எப்படி ? என்று அதற்கும் ஒரு குழு போட்டு ஸ்டாலின் யோசித்திருப்பார் போல… அதில் உதித்ததுதான் இந்த உண்ணாவிரத ஐடியா?விஞ்ஞானப்பூர்வ ஊழலை மட்டுமே நித்தமும் சிந்திக்கும் திமுக எப்படியெல்லாம் வில்லங்கமாக யோசிக்கிறது பாருங்கள்… இங்குதான் திமுகவின் தில்லுமுல்லுகளை புரிந்துகொள்ள வேண்டும்.. அதெப்படி அதிமுக மாநாடு நடக்கப்போகும் அதே ஆகஸ்ட் 20 ம்தேதி இந்த உண்ணாவிரதத்தை நடத்த திட்டமிட்டிருக்கிறது திமுக? எல்லாம் அரசியல் தான்… இவ்வளவு யோசித்து, மண்ட மேல உள்ள கொண்டைய மறந்துட்டீங்களே பாஸ் என்று திமுகவைப் பார்த்து எள்ளி நகையாடுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்…ஆக, நீட் தேர்வுக்கு எந்த அடிப்படையில் உண்ணாவிரதம் இருக்கப்போகிறார் உதயநிதி? அதுவும் ஆகஸ்ட் 20 ந்தேதி அன்றே உண்ணாவிரதம் அறிவித்து இருப்பது ஏன்? அதிமுக மாநாடு பேசுபொருளாகி விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு திமுக வேலை செய்வது ஏன்? என்ற கேள்விகளுக்கு ஒரே பதில்தான்… அதிமுகவின் மதுரை மாநாட்டைப் பார்த்து திமுக அஞ்சி நடுங்குகிறது இந்த விடியா திமுக…. என்பதுதான்.
via News J : https://ift.tt/7iemLlN
via News J : https://ift.tt/7iemLlN
Mediaபுரட்சித்தலைவர் மறைந்த பின்னர், அதிமுகவுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்துக்கும் குறிப்பாக பெண்களுக்கும் கலங்கரை விளக்கமாக இருந்தவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா. பெண் சிசுக்கொலையைத் தடுக்கும் வகையில் 1992ல் தொட்டில் குழந்தை திட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் பெண் சிசுக்கொலை குறைந்தது.பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின்படி, ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால், 50 ஆயிரம் ரூபாயும் இரண்டுப் பெண் குழந்தைகள் இருந்தால் ஒவ்வொரு பெண் குழந்தை பெயரிலும் தலா 25 ஆயிரம் ரூபாயும் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, 20 ஆண்டுகள் கழித்து வட்டியுடன் அத்தொகை வழங்கப்படும்.மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டத்தின் மூலம் திருமண உதவித் தொகையாக 50 ஆயிரம் மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கினார்.அரசு மருத்துவமனைகளில் குழந்தை பெற்றுக்கொள்ளும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் அரசின் பரிசாக, சோப்பு, பொம்மை, துண்டு, ஷாம்பூ, குழந்தைக்கான ஆடை உள்ளிட்ட 16 பொருட்கள் வழங்கும் ‘அம்மா குழந்தைகள் நல பரிசுப் பெட்டகம்’ என்ற புதிய திட்டத்தை, 2015 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தினார் ஜெயலலிதா. ஏழை வீட்டுப் பெண்களுக்கு இத்திட்டம் தாய் வீட்டு சீதனம் போல அமைந்ததை மறுப்பதற்கில்லை.பெண் காவலர்கள் மட்டுமே பணியாற்றும் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண்களை மட்டுமே கொண்ட சிறப்புப் பெண்கள் அதிரடிப் படையும் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்டவையே.முத்தாய்ப்பாக பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், தாய்மார்கள் பாலூட்டுவதற்கு என பிரத்யேக தனியறைகளை அமைத்துக்கொடுத்தார் ஜெயலலிதா.திமுக ஆட்சிக் காலத்தில் அரசியலில் இருந்த பெண்கள் மீதான தாக்குதல்களைக் கண்டு அரசியலில் கால் பதிக்க பெண்கள் தயங்கி நின்ற காலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்பதுதான் அரசியலில் கால்பதிக்க பெண்கள் எடுத்து வைக்கும் முதல் படி என எடுத்துக் கூறியவர் ஜெயலலிதா. இதைக் கருத்தில் கொண்டு ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில்தான் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இன்று தமிழகத்தில் இத்தனை பெண் மேயர்கள், சரிக்கு சமமாக பெண் கவுன்சிலர்கள், பேரூராட்சித் தலைவர்கள் இருப்பதற்கு காரணம் ஜெயலலிதா மட்டுமே.மகப்பேறு கால உதவித்தொகையை ரூபாய் 18 ஆயிரமாக உயர்த்தினார் ஜெயலலிதா. 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்தால், ஒவ்வொரு குடும்பத்துக்கும் இலவச மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி ஆகியவை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை அறிவித்த புரட்சி தலைவி, வெற்றி பெற்றபிறகு அதை வழங்கியும் காட்டினார். விளிம்புநிலைக் குடும்பங்கள் பலவற்றில் இன்னும் ஜெயலலிதா வழங்கிய மிக்ஸியும் கிரைண்டருமே, அவர்களின் அன்றாடத்தைச் சிக்கலில்லாமல் நகர்த்திக் கொண்டிருக்கின்றன. இதுபோல மகளிர் முன்னேற்றத்திற்கான எண்ணற்ற திட்டங்களை வாரி வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
via News J : https://ift.tt/EAzhMPt
via News J : https://ift.tt/EAzhMPt
Mediaதனக்காக மட்டுமே வாழ்பவரை இந்த உலகம் எளிதில் மறந்து விடும். ஆனால் மக்களுக்காகவே வாழ்ந்தவரை யாராலும் மறக்கமுடியாது. அப்படிப்பட்ட அரசியலின் முடிவு பெறாத சகாப்தமும், சினிமாவின் மாபெரும் நட்சத்திரமும், மக்களின் நாயகனுமான புரட்சித் தலைவர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்…..வார்த்தைகளில் அடக்க முடியாத மாபெரும் வீர வரலாறு இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் 1917ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி பிறந்தார். அவர் தான் எம்.ஜி.ஆர் எனும் சகாப்தம்.எம்.ஜி.ஆருக்கு இரண்டரை வயதான போது தந்தை இறந்து விட குடும்பம் வறுமையில் சிக்கிக் கொள்ள, வறுமையை தாங்க முடியாத தாய் சத்யபாமா, மகன்கள் சக்கரபாணி மற்றும் எம்.ஜி.ஆருடன் இலங்கையிலிருந்து வெளியேறி கேரளா வந்து, அதன்பின் கும்பகோணத்தில் வாழ்ந்து வந்தார்.நாடகத்துறையில் நன்கு அனுபவத்தை பெற்ற பிறகு திரைத்துறைக்கு சென்ற எம்.ஜி.ஆர் 1936ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தார்.இருப்பினும் 1947ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்து வெளிவந்த ராஜகுமாரி படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்கள் வெளியாகி மாபெரும் வெற்றியைத் தந்தன.1953ஆம் ஆண்டு அரசியல் கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தில் சேர்ந்து தீவிரமாக பணியாற்றி வந்தார் எம்.ஜி.ஆர்.1956ல் திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் எம்.ஜி.ஆர் உருவெடுத்தார்.1962ஆம் ஆண்டு மாநில சட்ட மேலவை உறுப்பினரானார். இதனைதொடர்ந்து 1967ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்குத் தேர்வு செய்யப்பட்டார்.அதே ஆண்டான 1967ல் ஜனவரி மாதம் 12ஆம் தேதி சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டார்.இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக அதே செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி 1967ஆம் ஆண்டு ரிலீஸான காவல்காரன் படம் மீண்டும் அவரது ஆளுமையை வெளிக் காண்பித்தது.இதனைதொடர்ந்து 1969ஆம் ஆண்டு திமுக பொருளாளராக மாறியும் தீவிரமாக மக்களுக்கு தொண்டாற்றி வந்தார்.ஆனால், அண்ணாதுரையின் மறைவுக்கு பின்னர் கருணாநிதியின் சதி அறிந்து 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர் விலகினார்.இதனையடுத்து 1972இல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவரின் தொண்டர் ஆரம்பிக்க, தலைவராகவும், பொதுச்செயலாளாராகவும் பொறுப்பு ஏற்றார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது.அதே ஆண்டான 1972இல் ஆண்டு ரிக்ஷாக்காரன் படத்தில் நடித்ததால், அவரின் நடிப்பு திறமையை பாராட்டி தேசிய விருது வழங்கப்பட்டது.அதிமுக முதன் முதலாகப் போட்டியிட்ட திண்டுக்கல் தொகுதியில் பெரும் வெற்றி பெற்றது. திரைப்படங்களின் மூலம் எம்.ஜி.ஆர். அடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும் மக்களின் ஆதரவைப் பெற உதவின.இதனையடுத்து 1974ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி அதிமுகவின் சார்பாக புதுச்சேரியில் போட்டியிட்ட சுப்ரமணியன் ராமசாமி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.இதேப்போன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., 1977ல் தமிழகத்தில் நடைபெற்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதன் முறையாக தமிழ் நாட்டின் முதலமைச்சரானார்.1984 தேர்தலில், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார்.1977 முதல் 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியில் இருந்தவர் எம்ஜிஆர்.முதலமைச்சராக பதவியில் இருந்தபோதே டிசம்பர் 24ஆம் தேதி, 1987ல் எம்ஜிஆர் மண்ணுலகை விட்டு மறைந்தாலும் இன்றும் தமிழ்நாட்டு மக்களின் மனங்களில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்..புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் 1988-ம் ஆண்டு பாரத ரத்னா விருதை வழங்கி அரசு கெளரவித்தது.பயங்கர சூறாவளியால் வேரோடு சாய்ந்த ஆலமரம் தன்னுடைய விதைகளை இவ்வுலகில் விட்டுச் சென்று மீண்டும் விருட்சமாய் வளர்வது போல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் அரசியல் வரலாறு என்றென்றும் மக்களுக்காக தொடரும்…..
via News J : https://ift.tt/XlbkJ3p
via News J : https://ift.tt/XlbkJ3p
Mediaதனக்காக மட்டுமே வாழ்பவரை இந்த உலகம் எளிதில் மறந்து விடும். ஆனால் மக்களுக்காகவே வாழ்ந்தவரை யாராலும் மறக்கமுடியாது. அப்படிப்பட்ட அரசியலின் முடிவு பெறாத சகாப்தமும், சினிமாவின் மாபெரும் நட்சத்திரமும், பெண்களுக்கு முன்னுதாரணுமான புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்த தொகுப்பை தற்போது பார்க்கலாம்…..ஜெயலலிதாவின் வாழ்க்கைப் பயணம் 1981ல் அஇஅதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்ட அம்மாவின் செயல்பாடுகளால் அவருக்கு முதலில் சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. 1983ல் அஇஅதிமுகவின் கொள்கைப்பரப்புச் செயலாளரானார் அம்மா. பின்னர் 1984ல் அஇஅதிமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராகும் சிறப்பையும் பெற்றார். நாடாளுமன்றத்தில் 1963ல் அறிஞர் அண்ணா அவர்கள் அமர்ந்திருந்த 185ஆவது இருக்கை அம்மாவுக்கு ஒதுக்கப்பட, நாடாளுமன்றத்தின் இரண்டாவது அண்ணாவாக மாறினார் அம்மா…1987ல் எம்.ஜி.ஆர். அவர்களின் மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடையும் சூழல் உண்டானது. அதனைத் திறம்பட சமாளித்து அதிமுகவைத் தன் தலைமையின் கீழ் ஒருங்கிணைத்து அதிமுகவின் நிரந்தரப் பொதுச்செயலாளரானார் …1989ல் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற சிறப்பைப் பெற்றார். 1991ல் தமிழகத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் முதல்வர் என்ற சிறப்பைப் பெற்றார்.தமிழக வரலாற்றில் மிக இளம் வயதில் முதல்வரான தலைவரும் அம்மா அவர்கள்தான். 1991ஆம் ஆண்டில் தமிழகத்தின் முதல்வராகும் போது அம்மா அவர்களின் வயது 43 ஆண்டு 4 மாதம்தான்.தமிழக வரலாற்றில் மிக அதிகபட்சமாக 6 முறை முதல்வராகப் பதவி ஏற்ற ஒரே தலைவரும் புரட்சித்தலைவிதான். 2006ஆம் ஆண்டில் கருணாநிதி முதல்வரானபோது, தமிழகத்தில் ஒருவர் 5ஆவது முறை முதல்வரானதே சாதனையாக இருந்தது. அதை 2016ஆம் ஆண்டு மே 23ஆம் தேதி அன்று 6ஆவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றதன் மூலம் அம்மா அவர்கள் முறியடித்தார். மேலும் அந்தப் பதவியேற்பின் போதே, தமிழகத்தில் தொடர்ந்து இரண்டு முறைகள் ஆட்சியைக் கைப்பற்றிய ஒரே பெண் முதல்வர் என்ற சாதனையையும் அவர் தன் வசமாக்கினார்.கடந்த 2016ஆம் ஆண்டில் அம்மா அவர்கள் மறைந்தபோது தமிழகத்தில் மிக அதிக காலம் முதல்வராக இருந்த பெண் என்ற சாதனை அவரிடம் இருந்தது. அவர் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்திருந்தால் இந்தியாவிலேயே மிக அதிக நாட்கள் முதல்வராக இருந்த பெண் என்ற சாதனையும் அவரது மணி மகுடத்தில் மற்றொரு மாணிக்கக் கல்லாக மிளிர்ந்திருக்கும், அதற்கு முன்பாகவே அந்த சாதனை மங்கையைக் காலம் காவு கொண்டது தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவுக்கே பேரிழப்புதான்.
via News J : https://ift.tt/tuWCVKw
via News J : https://ift.tt/tuWCVKw
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/jayalalitha.jpg">Media</a>மக்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட ஓர் பெரும் தலைவி… குழந்தை பெற்றால்தான் தாயா? தமிழகத்தை தத்துதெடுத்த தானும் ஓர் தாய் தான் என்பதை நடைமுறையில் நிரூபித்துக்காட்டிய அன்பு அம்மா.. ஆண்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய திரைத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி, நெருப்பாறுகளில் நீந்தி, எரிமலைகளாய் வெடித்த சோதனைகள் பல கடந்து சாதனைகள் படைத்த காவியத் தலைவி…. தமிழக மக்களுக்காகவே தன் தவ வாழ்க்கையை அர்ப்பணித்த உண்மையான தியாகத்தின் சின்னம் புரட்சித்தலைவி தமிழகத்திற்கே அம்மா வானது எப்படி? அதற்கு கொஞ்சம் தமிழக வரலாற்றை திருப்பிப்பார்க்கத்தான் வேண்டும்…<strong>அதிமுக எனும் ஆலமரம்!</strong>1973 மே 20-ம் தேதி திண்டுக்கல்லில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வை களமிறக்கினார் எம்.ஜி.ஆர். அந்தத் தேர்தலில் அ.தி.மு.க பெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து 1977-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைப் பிடித்தது. ஏழைகளின் தேவைகளை தேடித் தேடி நிறைவேற்றிய எம்.ஜி.ஆர், அதற்காகவே ஆட்சிப்பணிகளுக்கு அதிக நேரம் ஒதுக்கினார்.அந்த சமயத்தில், கட்சிப் பணிகளைப் பொறுப்பாகப் பார்க்கவும், தனக்குப் பிறகு, பெரியார்-அண்ணாவின் கொள்கைகளை துணிந்து நிறைவேற்றவும், கட்சியைக் கட்டிக் காக்கவும் தகுதி வாய்ந்தவர் யார்? என்பதை எம்.ஜி.ஆரின் மனம் ஓயாமல் சிந்தித்துக் கொண்டிருந்தது.<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/02/jayalalitha-books.png">Media</a>அந்த நேரத்தில், எம்ஜிஆர் எண்ணத்தில் வந்தவர் அப்போதைய காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக கெத்தாக வலம் வந்து கொண்டிருந்த அம்மு என்ற ஜெயலலிதா தான். மைசூரில் வாழ்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த ஜெயலலிதா, படிப்பிலும், அறிவிலும் படு சுட்டி,. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி என்று, செய்வன திருந்தச் செய்யும் ஓர் பர்பெக்ஷனிஸ்ட்… எடுத்த வேலைகளை ஹார்ட் ஒர்க்கர் ஆகவும், ஸ்மார்ட் ஒர்க்கராகவும் செய்து முடிக்கும் ஆற்றலை திரைத்துறையில் அம்முவாக ஜெயலலிதாவாக இருந்தபோதே, அறிந்திருந்தார் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்…. அந்த ஆற்றலால்தான் அரசியலிலும் அவர் என்றுமே நெம்பர் ஒன்னாக ஜொலிப்பார் என்பதையும் கணக்குப்போட்டார் புரட்சித்தலைவர்..<strong>புரட்சித் தலைவியின் அரசியல் வருகை..!</strong>திரைத்துறையில் உச்சத்தைத் தொட்ட புரட்சித்தலைவிக்கு பொதுவாழ்க்கையிலும் ஈடுபாடு …. 1982-ம் ஆண்டு, எம்.ஜி.ஆரைச் சந்தித்து, பொதுவாழ்க்கை மீதான தன் விருப்பத்தை தெரிவித்தார். அவசரப்படவேண்டாம்… பொறுமையாக இரு… என்று அப்போதைக்கு அறிவுறுத்திய எம்.ஜி.ஆர், அரசியல் நடவடிக்கைகளை உற்றுக் கவனிக்கச் சொன்னார். மேலும், தலைமைக் கழகம் சென்று அ.தி.மு.க-வின் சட்ட திட்டங்களைப் படித்து தெரிந்து கொள்ளச் சொன்னார். அதன்பிறகு, 1982-ஆம் ஆண்டு ஜூன் 4-ம் தேதி அ.தி.மு.க உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு தன்னைக் கட்சியில் இணைத்துக் கொண்டார் ஜெயலலிதா. தமிழகத்தின் தலையெழுத்தை அடுத்து வரப்போகும் 3 தசாப்தங்களுக்குத் தீர்மானிக்கப்போகும், புதிய சகாப்தத்துக்கான முதல் கையெழுத்து அது.<strong>சத்துணவுத் திட்டக்குழு உறுப்பினர்..!</strong>1982-ல் ஜூலை 2-ம் தேதி தமிழகத்தில் சரித்திரச் சிறப்புமிக்க சத்துணவுத் திட்டத்தைத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். எதிர்காலச் சந்ததி, ஒளிமயமாகத் திகழ, சத்துணவுத் திட்டம் சிறப்புடன் செயல்பட வேண்டும் என நினைத்த எம்.ஜி.ஆர், அந்தப் பொறுப்பை ஜெயலலிதாவை நம்பி ஒப்படைத்தார். சத்துணவு திட்டக் குழு உறுப்பினராக ஜெயலலிதாவை நியமனம் செய்தார். அதையடுத்து, தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்த ஜெயலலிதா, அந்தத் திட்டம் வெற்றிகரமாகச் செயல்பட கண்ணும் கருத்துமாக உழைத்தார். ஏழை குழந்தைகளுக்கு உணவு ஊட்டி அன்றே தாயாய் மாறினார் புரட்சித்தலைவி..<strong>அதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர்..!</strong>1982-ம் ஆண்டு கடலூரில் நடைபெற்ற அ.தி.மு.க மாநாட்டில் “பெண்ணின் பெருமை” என்ற தலைப்பில் ஜெயலலிதாவை பேச வைத்தார் எம்.ஜி.ஆர். அந்தப்பேச்சை அப்படி தன் வாழ்நாளில் நடக்கவும் செய்ததால்தான் புரட்சித்தலைவியின் பெருமை என்று வரலாறு எழுத ஆரம்பித்தது. இவ்வளவு ஆர்வத்துடன் பணியாற்றிய புரட்சித்தலைவியிடம் தானாய் தேடி வந்தது , அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பு. 1983 ஜனவரி 28-ம் தேதி, அ.தி.மு.க-வின் கொள்கை பரப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஜெயலலிதாவுக்கு, அடுத்தடுத்த சவால்கள் காத்திருந்தன. திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் ஜெயலலிதா சந்தித்த முதல் சவால்.திருச்செந்தூர் கோயில் அலுவலகத்தில் பணிபுரிந்த சுப்பிரமணியப் பிள்ளை என்பவரின் மரணத்தில் மர்மம் இருப்பதாகச் சொல்லி…
Mediaஅடிப்படை வசதிகள் கிடைக்காமல் சேலம் மாநகராட்சியில் உள்ள மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக மாநகராட்சி மேயர், திமுக கவுன்சிலர்களை உல்லாச சுற்றுலாவுக்கு அழைத்து சென்றுள்ள சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவுக்கு குடும்பத்தோடு சுற்றுலா சென்றிருக்கும் சேலம் மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள் தொடர்பான வீடியோக்கள்தான் இவை.
தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதி சரியாக இல்லை, மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை, கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது என்றெல்லாம் பிரச்சனைகளைச் சொல்ல பொதுமக்கள் கவுன்சிலர்களைத் தேடிக் கொண்டிருக்க, அவர்களோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உல்லாச சுற்றுலாவில் திளைத்து வருகிறார்கள். இதற்கான உபயம் என்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை கைகாட்டியிருக்கிறார்கள்.மேயர் ராமச்சந்திரன் எதற்காக திமுக கவுன்சிலர்களை அழைத்துச் செல்ல வேண்டும்..? எல்லாம் பதவி படுத்தும் பாடுதான்…
சேலத்தில் திமுகவில் நிலவும் உள்கட்சி குழப்பத்தால் எங்கே தனது பதவிக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என்றுதான் மேயர் ராமச்சந்திரன் இப்படி கவுன்சிலர்களை கவனித்து வருகிறார் என்கிறார்கள்.சேலம் திமுகவில் மத்திய மாவட்ட செயலாளரான ராஜேந்திரனும் எம்.பி.யான எஸ்.ஆர். பார்த்திபனும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி கவுன்சிலர்களாகவும் இருவரது ஆதரவாளர்களும் உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை மாற்றவேண்டும் என தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பிய, பார்த்திபன் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் சர்க்கரை சரவணன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்சியில்இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மேலும் பல கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதனால் ராஜேந்திரனின் ஆதரவாளரான மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார். மாநகராட்சியில் உள்ள 70 கவுன்சிலர்களில் 47 பேர் திமுகவினர். அவர்களில் 40 பேரை குடும்பத்தோடு கேரளாவுக்கு 3 நாட்கள் உல்லாச சுற்றுலாவுக்கு பேருந்துகளில் அழைத்து சென்றிருக்கிறார் மேயர் ராமச்சந்திரன். அங்கு சொகுசு ஹோட்டலில் அறைகளும், ஹவுஸ் போர்ட் பயணம், ராஜ விருந்து என சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பேருந்தில் பயணித்த வீடியோ காட்சிகள், கேரளாவில் ஹவுஸ் போட்டில் பயணம் செய்த காட்சிகள் வெளியான நிலையில் தற்போது தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்ட கவுன்சிலர்கள், தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் புகைப்படங்களை பதிவிடவில்லை.சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டப் பணிகளும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழி வெட்டப்பட்டு அது நிறைவு பெறாமல் மரண குழியாக காட்சியளிக்கின்றது. குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை, மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் மாறுதல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் அன்றாடம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தற்காத்துக் கொள்ள கவுன்சிலர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/LSvAcnD
தண்ணீர் வசதி இல்லை, சாலை வசதி சரியாக இல்லை, மின்சாரம் சரிவர கிடைப்பதில்லை, கழிவுநீர் தேங்கிக் கிடக்கிறது என்றெல்லாம் பிரச்சனைகளைச் சொல்ல பொதுமக்கள் கவுன்சிலர்களைத் தேடிக் கொண்டிருக்க, அவர்களோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் உல்லாச சுற்றுலாவில் திளைத்து வருகிறார்கள். இதற்கான உபயம் என்றும் மாநகராட்சி மேயர் ராமச்சந்திரனை கைகாட்டியிருக்கிறார்கள்.மேயர் ராமச்சந்திரன் எதற்காக திமுக கவுன்சிலர்களை அழைத்துச் செல்ல வேண்டும்..? எல்லாம் பதவி படுத்தும் பாடுதான்…
சேலத்தில் திமுகவில் நிலவும் உள்கட்சி குழப்பத்தால் எங்கே தனது பதவிக்கு ஆப்பு விழுந்துவிடுமோ என்றுதான் மேயர் ராமச்சந்திரன் இப்படி கவுன்சிலர்களை கவனித்து வருகிறார் என்கிறார்கள்.சேலம் திமுகவில் மத்திய மாவட்ட செயலாளரான ராஜேந்திரனும் எம்.பி.யான எஸ்.ஆர். பார்த்திபனும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். சேலம் மாநகராட்சி கவுன்சிலர்களாகவும் இருவரது ஆதரவாளர்களும் உள்ளனர். சமீபத்தில் கூட மத்திய மாவட்ட செயலாளர் ராஜேந்திரனை மாற்றவேண்டும் என தலைமைக்கு புகார் கடிதம் அனுப்பிய, பார்த்திபன் ஆதரவு திமுக கவுன்சிலர்கள் சர்க்கரை சரவணன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் கட்சியில்இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று மேலும் பல கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இதனால் ராஜேந்திரனின் ஆதரவாளரான மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டிருக்கிறார். மாநகராட்சியில் உள்ள 70 கவுன்சிலர்களில் 47 பேர் திமுகவினர். அவர்களில் 40 பேரை குடும்பத்தோடு கேரளாவுக்கு 3 நாட்கள் உல்லாச சுற்றுலாவுக்கு பேருந்துகளில் அழைத்து சென்றிருக்கிறார் மேயர் ராமச்சந்திரன். அங்கு சொகுசு ஹோட்டலில் அறைகளும், ஹவுஸ் போர்ட் பயணம், ராஜ விருந்து என சகல ஏற்பாடுகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்கள் பேருந்தில் பயணித்த வீடியோ காட்சிகள், கேரளாவில் ஹவுஸ் போட்டில் பயணம் செய்த காட்சிகள் வெளியான நிலையில் தற்போது தங்களது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து கொண்ட கவுன்சிலர்கள், தங்களது சமூக வலைதள பக்கங்களிலும் புகைப்படங்களை பதிவிடவில்லை.சேலம் மாநகராட்சிக்கு போதுமான நிதி ஒதுக்கீடு இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு திட்டப் பணிகளும் மேற்கொள்ள முடியாமல் உள்ளது. பல்வேறு இடங்களில் பாதாள சாக்கடை குழி வெட்டப்பட்டு அது நிறைவு பெறாமல் மரண குழியாக காட்சியளிக்கின்றது. குடிநீர் பிரச்சனை, தெரு விளக்கு பிரச்சனை, மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பள பிரச்சினை, தூய்மை பணியாளர்களுக்கு இடம் மாறுதல் பிரச்சனை என ஏராளமான பிரச்சனைகள் அன்றாடம் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் நிலையில், மேயர் ராமச்சந்திரன் தனது பதவியை தற்காத்துக் கொள்ள கவுன்சிலர்களை இன்ப சுற்றுலாவுக்கு அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/LSvAcnD
Mediaசமூக நீதி, திராவிட மாடல் என்றெல்லாம் பேசிப் பேசி வெறும் வாயில் வடைசுடும் விடியா ஆட்சிக்கு அந்த வார்த்தைகளே தற்போது ரிவீட் அடித்திருக்கிறது.. இன்று அதே சமூகநீதியின் பெயராலேயே திமுகவின் கூடு கலைகிறது… பட்டியலின மக்களுக்காக அதைச் செய்தோம் இதைச்செய்தோம் என்று அளந்துவிட்ட திமுகவின் அமைச்சர்கள் , அந்த பட்டியலின மக்களை எப்படி நடத்தினார்கள் என்று இந்த நாடறியும்…பட்டியலின மக்களுக்கு எதிரான மனநிலையோடு இருக்கும் திமுக அமைச்சர்கள் திருமாவளவனை நடத்திய விதம் கண்டு கொதித்துப்போய் இருந்தாலும், இதுவரை அமைதிகாத்து வந்த விசிக தற்போதுதான் திமுகவின் உண்மை முகத்தை கண்டடைந்திருக்கிறது…. இனியும் நாங்கள் அடிமையாக இருக்க மாட்டோம் என்றெல்லம் வீராவேசமாக பேசியிருக்கிறது.. இதைக்கண்டு திமுகவே கொஞ்சம் வெலவெலத்துத்தான் போயிருக்கிறது…தமிழகத்தின் திருநெல்வேலி, தூத்துக்குடியில் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 30-40 பட்டியலின மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும், குழந்தைகளைக்கூட இந்த சாதிவெறி எண்ணங்கள் விட்டுவைக்கவில்லை, சமீபத்தில் நடந்த நாங்குநேரி சம்பவமும்தான் அதற்கு அத்தாட்சி என்று வார்த்தைகளால் வாள் வீசியிருக்கிறார் திருமாவளவன்.. காவல்துறையில் உளவுத்துறை இருப்பதைப்போல, சாதியப் பிரச்சனைகளைக் களையவும் ஓர் தனி உளவுப்பிரிவை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கையையும் சேர்த்தே வைத்திருக்கிறார்…இதுஒருபுறம் என்றால், சென்னை மாநகாராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டிருக்கிறார்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்… மாநகராட்சியின் மெத்தனப்போக்கை கண்டித்தும், அதனால் உயிரிழந்தவர்களுக்கு நீதி வேண்டியும் கொடிபிடித்து கோஷமிட்ட மார்க்சிஸ்ட் கட்சியினர் விடியா திமுக அரசின் இந்த ஆணவச் செயலைக் கொஞ்சம் கடுமையாகவே சாடியிருக்கின்றனர்…ஏற்கனவே, வேங்கைவயல் சம்பவத்திலேயே பட்டியலின மக்களின் கோபக்கனல்களை சம்பாதித்து வைத்திருக்கும் திமுகவிடம் போதும்யா உங்க நாடகம், ஓட்டுனது ரீல் அந்துபோச்சு என்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார்கள் அதன் கூட்டணி கட்சிகள்..வாரிசுக்காக சீனியர்களை அவமதித்தது, செந்தில்பாலாஜியை தூக்கிவைத்து கொண்டாடியது என்பன போன்ற காரணங்களால், சொந்தக்கட்சிக்காரர்களிடமே கெட்டபேரை வாங்கிய ஸ்டாலின், தற்போது போலி சமூகநீதியால் கூட்டணி கட்சியினரிடமும் எதிர்ப்பை சம்பாதித்து வைத்திருக்கிறார்….சாதியின் பெயரைச்சொல்லி மக்களை பிரித்தாளும் சூழ்ச்சி செய்துவரும் ஸ்டாலினின் எண்ணத்தில் குண்டைத்தூக்கிப்போட்டுவிட்டதா கூட்டணி கட்சிகளின் எதிர்ப்பு? இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்றத்தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கும் இந்த சமயத்தில், கூட்டணி கட்சியினரின் எதிர்ப்பை எப்படி சமாளிக்கப்போகிறார் ஸ்டாலின்? ஒருபோதும் கூட்டணியில்லாமல் ஜெயிக்க முடியாத திமுக என்ற கப்பலை எப்படி கரை சேர்க்கப்போகிறார் ஸ்டாலின்? விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் விலகும்பட்சத்தில் திமுகவின் கூட்டணி கப்பல் மூழ்கத்தான் போகிறது என்று இப்போதே கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/zjld1tM
via News J : https://ift.tt/zjld1tM
Mediaவெறும் 2000 பேர் படிக்கும் மாடல் ஸ்கூலுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் 3.5 லட்சம் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விடியா திமுக அரசு, அரசுப் பள்ளி மாணவர்களைக் கருத்தில் கொள்ளுமா? சற்று விரிவாக பார்க்கலாம்!மாதிரிப் பள்ளிகள்..!அதாவது தமிழகப் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 38 மாவட்டங்களில் “மாதிரிப் பள்ளிகள்” செயல்படுகிறது. அதில் 2000 மாணவ, மாணவியர்கள் படித்துவருகின்றனர். இந்த 2000 மாணவ மாணவியர்களும் யார் என்றால், பதினொன்று, பன்னிரெண்டாம் வகுப்புகளில் ஸ்கூல் டாப்பர் எடுத்தவர்கள். இன்னும் விளங்கச் சொல்வதென்றால் நன்றாகப் படிக்கக் கூடிய மாணவர்களை மட்டும் இந்த மாதிரிப் பள்ளிகளில் சேர்க்கப்படுகின்றனர். அவர்களை இன்னும் மெருகேற்றி அவர்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்குகின்றது இந்த மாதிரிப் பள்ளிகள். தற்போது இதுதான் இங்கு சிக்கல். கொஞ்சம் சுமாராகவும், மெதுவாகவும் கற்கும் திறன் உள்ள மாணவர்களின் நிலை என்னாவது?ஏற்றத் தாழ்வு காட்டும் அரசு..!மாதிரி பள்ளிகளில் 10-ம் வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு: தமிழக பள்ளி கல்வித்துறை திடீர் அறிவிப்புஇந்த அரசு ஏற்றத்தாழ்வு பார்க்காத அரசு என்று கூறினால் மட்டும் போதாது. களத்தில் அதை செயல்படுத்தியும் காட்ட வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வெறும் 2000 பேர் மட்டும்தான் மாணவர்களா என்ன? ஒவ்வொரு மாணவ மாணவியர்களின் கல்வியும் இங்கு முக்கியம். அதற்காகத்தான் அன்றைக்கு கர்மவீரர் காமராசர் மூடியிருந்த 6000 பள்ளிகளைத் திறந்தார். மாணவர்களிடம் ஏற்றத் தாழ்வு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் பள்ளிகளில் ஒரே மாதிரியான சீருடைகள், ஒரே மாதிரியான கல்வி போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்களின் அறிவுச் செயல்பாட்டினைக் கொண்டு, அவரவர்களுக்கு ஏற்றவகையில் பாடங்கள் நடத்துவது என்பது தவறில்லை. கற்றல் திறனில் அனைவருக்குமே வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இந்த “மாதிரிப் பள்ளிகளின்” விசயத்தில் திமுக அரசும் அதன் பள்ளிக்கல்வித் துறையும் அவ்வாறு நடந்துகொள்வதாக தெரியவில்லை. நன்றாகப் படிப்பவர்களை கூடுதல் பொறுப்புடன் கவனிக்கும் தன்மை நிலவுகிறது. ஆனால், சரியாக படிக்க முடியாதவர்களைத் தான் நாம் கூடுதல் பொறுப்போடு கவனித்து கற்றல் ஆற்றலை பெருக்க வேண்டும்.அரசின் இந்த செயல்பாட்டால், மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் மிகுந்த அதிர்ச்சிக்கும் நெருக்கடிக்கும் உள்ளாகியுள்ளனர். எங்களது பிள்ளைகள் மட்டும் என்ன குறைந்தவர்களா என்று பெற்றோர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 3.5 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்களின் வாழ்க்கையில் இந்த விடியா திமுக அரசு விளையாடி வருகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
via News J : https://ift.tt/bJ458oP
via News J : https://ift.tt/bJ458oP
Mediaகேரளாவில் தக்காளி காய்ச்சல் என்ற வைரஸ் குழந்தைகளை தாக்கி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அது எதனால் ஏற்படுகிறது? என்பதை குறித்து விளக்குகிறது இந்த செய்தி குறிப்பு…தக்காளி வைரஸ்..!கொரோனா வைரஸ் குறித்த அச்சம் மக்களிடம் நீங்காத நிலையில், கேரளாவில் தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. உலக மக்களை 2 ஆண்டுகளாக ஆட்டிபடைத்தது கொரோனா வைரஸ். டெல்டா, ஒமிக்ரான் வகை உருமாறிய கொரோனா தொற்று விஸ்வரூபம் எடுத்து நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் கேரளாவில் புது வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.தக்காளி காய்ச்சல் எனப்படும் வைரஸால் இதுவரை 85 குழந்தைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தக்காளிக்கும் இந்த வைரஸிற்கும் என்ன சம்பந்தம்..!Now 'Tomato flu' virus reaches India, infecting children in Keralaதக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் என்ன தொடர்பு? தக்காளியினால் இந்த வைரஸ் காய்ச்சல் ஏற்படுகிறதா? அது தான் இல்லை.காய்ச்சலில் வரக்கூடிய கொப்புளங்கள் சிவப்பாக இருப்பதால் இது தக்காளி காய்ச்சல் என்று சொல்லப்படுகிறது. மற்றபடி தக்காளிக்கும் இந்த காய்ச்சலுக்கும் எந்த தொடர்பும் இல்லைஇந்த தக்காளி காய்ச்சலானது மிதமாக பரவக்கூடிய நோய் என்றும் சளி, கொப்பளங்களிலிருந்து வரும் நீர், தொற்று பாதிக்கப்பட்டவர்களின் மலம் ஆகியவற்றின் மூலம் பரவலாம் என்றும், தொற்று பாதிக்கப்பட்ட முதல் வாரத்தில் நோய் அதிகமாக பரவக்கூடிய ஆபத்து உள்ளது என்றும், மருத்துவ நிபணர்கள் கூறுகின்றனர்.தற்போது கேரளாவில் தக்காளி காய்ச்சல் மிக வேகமாக பரவி வரும் நிலையில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தக்காளி வைரஸ் அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சல், தொண்டை எரிச்சல், நாக்கில் புண், தலைவலி, பாதங்களில் கொப்பளங்கள், பசியின்மை போன்றவை இதற்கு அறிகுறியாக கருதப்படுகிறது.தடுக்கும் வழி என்ன? தக்காளி காய்ச்சலை எப்படி தடுக்கலாம் இதற்கு தனிப்பட்ட சிகிச்சை இருக்கிறதா என்றால் எதுவும் இல்லை என்பது தான், அதற்கு பதில். காய்ச்சல், வலி, வாய்ப்புண் போன்ற நோய்களுக்கான சிகிச்சையே இதற்கு வழங்கப்படும் என்றும், இது கொரோனா போன்றோ, நிப்பா வைரஸ் போன்றோ அச்சப்பட தேவையில்லை என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.ஆகவே மற்ற நோய் பரவலியிருந்து தப்பிப்பதற்கு எவை முக்கியமான வழிமுறைகளாக கருதப்பட்டதோ, அதே யுக்தியான கை கழுவுதல்,சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து கொள்ளுதல் போன்றவையே தக்காளி வைரஸ் காய்ச்சயிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வதற்கான முக்கிய வழிமுறைகள் ஆகும்.
via News J : https://ift.tt/VqhTK7e
via News J : https://ift.tt/VqhTK7e
Mediaஅதிமுகவில் தொண்டராக நுழைந்து, புரட்சித் தலைவர், புரட்சித் தலைவியின் தடங்களைப் பின்பற்றி, அவர்களின் ஆசியோடும், கோடிக்கணக்கான தொண்டர்களின் ஆதரவோடும் கழகத்தின் பொதுச் செயலாளராகி இருக்கும் ஏழைப் பங்காளன், விவசாயிகளின் தோழன், எல்லோருக்கும் எளியவர் எடப்பாடி கே.பழனிசாமியின் வாழ்க்கைப் பயணம் குறித்து பார்ப்போம்…1954 ம் ஆண்டு அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் உள்ள சிலுவம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார். தனது 18வயது நிரம்பியபோது, எம்ஜிஆரின் மீது இருந்த பற்றால், 1974 ம் ஆண்டு அஇஅதிமுகவில் தொண்டராக இணைந்து கட்சியின் விசுவாசியாக தீவிரமாகப் பணியாற்றியதால் அதே ஆண்டே சிலுவம்பாளையம் கிளைக்கழகச் செயலாளர் பதவி எடப்பாடி பழனிசாமியைத் தேடி வந்தது.பின்னர் 1989ம் ஆண்டு நடந்த சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதா அணியில் இருந்து சேவல் சின்னத்தில் போட்டியிட்டு முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1991 ம் ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் அதே எடப்பாடி தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 1996 சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப்பிறகு, 1998 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று டெல்லிக்கு எம்பியாகச் சென்றார்.2011ம் ஆண்டு மீண்டும் எடப்பாடி தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்தார் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா. அந்த தேர்தலிலும் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த ஆட்சிக்காலத்தில்தான், முதன்முறையாக நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சராக பதவி வழங்கினார் ஜெயலலிதா. அதேபோல, 2016ம் ஆண்டும் 4வது முறையாக எடப்பாடி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அந்த தேர்தலிலும் வெற்றியைக் கைப்பற்றி, மீண்டும் நெடுஞ்சாலைகள், சிறுதுறைமுகங்கள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரானார். மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவால் என்றுமே மாற்றப்படாத அமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்பது கூடுதல் தகவல்.பின்னர், 2017ம் ஆண்டு பிப்ரவரி 16-ம் தேதி தமிழக முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் தேர்வு செய்யப்பட்டார். 2021ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் அதிகாரப்பூர்வ முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலைச் சந்தித்தார்.2021ம் ஆண்டு தேர்தலில் 65 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெறவைத்து, தமிழகத்தின் பலம்மிக்க எதிர்க்கட்சித்தலைவர் ஆன எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து அதிமுகவின் நம்பிக்கை நட்சத்திரமாக தன்னை நிலைநிறுத்திக்கொண்டார். அம்மா வழிவில் ஆட்சி நடத்திய எடப்பாடியாரின் அந்த ஆளுமையைக் கண்ட தொண்டர்கள், தற்போது புரட்சித்தலைவியைப் போலவே, அதிமுகவையும் ராணுவக்கட்டுப்பாட்டோடு நடத்த எடப்பாடி பழனிசாமியே ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும் என்று அவர் பக்கம் தங்கள் ஏகோபித்த ஆதரவுகளைக் கொட்டினர்.2022ம் ஆண்டு நடந்த பொதுக்குழுவில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி அதிமுகவின் தற்காலிகப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார்.2023 -ல் ஒன்றறை கோடி தொண்டர்களின் ஒட்டுமொத்த ஆதரவோடு அதிமுகவின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வானார்….கிளைக்கழக செயலாளர், மாவட்ட செயலாளர், கொள்கை பரப்பு செயலாளர், அமைப்புச் செயலாளர், தலைமை நிலைய செயலாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று படிப்படியாக உழைப்பால் உயர்ந்து தற்போது கழகத்தின் பொதுச்செயலாளராக உயர்ந்திருக்கிறார் எடப்பாடி கே பழனிசாமி.
via News J : https://ift.tt/O0k7rox
via News J : https://ift.tt/O0k7rox
Mediaதொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், குழந்தைகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..நூறாண்டுகளுக்கும் மேலாக செயல்படும் சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.இந்நிலையில் விடியா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எழும்பூர் மருத்துவமனை, அதன் சிறப்பை இழந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜிசா என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தையை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார்.அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவரது கை அகற்றப்பட்டது. இதையடுத்து குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கும் அந்த குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்தது.அடுத்ததாக, எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது 10 வயது மகளின் கால் அகற்றப்பட்டுள்ளதாக தலைமைக் காவலர் ஒருபுறம் போராட்டம் நடத்தி வருகிறார்.இதுமட்டுமல்லாமல் எழும்பூர் மருத்துவமனையில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை, மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களைத் தரக்குறைவாக பேசுகின்றனர் என்று ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.விடியா ஆட்சி அமைத்த நாள் முதல் எழும்பூர் மருத்துவமனை நிர்வாகத்தில் இத்தனை குளறுபடிகள் நடப்பதாகவும், சுகாதாரத்துறை அமைச்சரோ இதுகுறித்து கண்டுகொள்ளாமல் மாரத்தான் ஓடுவதிலேயே பிஸியாக இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
via News J : https://ift.tt/sJ83bj2
via News J : https://ift.tt/sJ83bj2
Mediaபெண் தானே எதுவும் செய்துவிடலாம், கட்சியை உடைத்துவிடலாம், அடக்கி ஒடுக்கிவிடலாம் என்று தப்புக் கணக்குப் போட்டார்கள் அன்றைய திமுக கும்பல். காட்சி மாறியது, ஆட்சி மாறியது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அரியணை ஏறியது. ஆம் ரத்தத்தின் ரத்தங்களே! மார்ச் 24, 1989 ஆம் ஆண்டிலே, புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் சட்டசபையில் திமுக குண்டர்களால் மானபங்கம் செய்யப்பட்டார். அது தமிழக அரசியலில் இருள் சூழ்ந்த நாள். எந்த இடத்தில் தன்னை அவமானப்படுத்தினார்களோ, அந்த இடத்திற்கு முதலமைச்சரானப் பிறகுதான் வருவேன் என்று சூளூரைத்தார் மக்கள் தலைவி. திமுகவினர் விடும் “தொட்டுப்பார் சீண்டிப்பார்” போலான வெற்றுச் சூளூரை அல்ல! இது புரட்சித் தலைவியின் வெற்றிச் சூளூரை. 1991 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் புரட்சித் தலைவி அவர்கள் மாபெரும் வெற்றிப் பெற்று, தான் சொன்னதை செய்தும் காட்டினார். இந்த வெற்றி திமுக எனும் தீய சக்திக்கு விழுந்த சம்மட்டி அடி. முன்பு புரட்சித் தலைவி விழுந்தார் தனியாக, பின் எழுந்தார் தமிழகமாக!edappadi k palanisamiபுரட்சித் தலைவர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களால் கட்டி எழுப்பப்பட்ட மாபெரும் இயக்கமான அதிமுகவினை எழுச்சிமிகு பாதையில் கொண்டு சென்ற நெஞ்சுரம் மிக்க தலைவியாக இத்தமிழ் நிலத்தில் வலம் வந்தார் புரட்சித் தலைவி ஜெயலலிதா. அதிமுகதான் உண்மையான மக்கள் இயக்கம், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இயக்கம், மக்களுக்காக தன்னை அர்ப்பணித்த தலைவியைக் கொண்ட இயக்கம், இந்த இயக்கம் இருக்கின்ற வரை, நான் இருக்கின்ற வரை, இந்த இயக்கம் மென்மேலும் மென்மேலும் தமிழர்கள் வாழ்வு வலம் பெற செயல்படும், எனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிடர் கழகம் மக்களுக்காகவே இயங்கும் என்று சட்டமன்றத்தில் கர்ஜித்தார்.அவரது மறைவுக்குப் பின், தாயை இழந்த தனையனாக கழகத்தினர் மனமுடைந்து மீளாத் துயரில் ஆழ்ந்து போயிருந்தனர். தாயின் பெருமையையும், புகழையும் பறைசாற்ற தொண்டர்கள் படைசூழ வீறு கொண்டு மக்கள் நலன் காக்க, தாய்க்குத் தலைமகனாய் தோன்றினார் நமது கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள். எளியோருக்கு எளியவராய், விவசாயிகளின் தோழராய், எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் சிம்மசொப்பனமாய் திகழ்ந்து கட்சியை நேர்வழியான ஓர்வழியில் புரட்சித் தலைவர் மற்றும் புரட்சித் தலைவி ஆகியோரின் பேராதரவோடு வழிநடத்திக் கொண்டிருக்கிறார். தமிழகத்தில் அராஜக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொம்மை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அவரது அடிபொடிகளை அகற்றி, மக்கள் நலமே நாட்டிற்கு பலம் என்பதை நிரூபித்து இந்த விடியா கும்பலை வீட்டிற்கு அனுப்பும் நாள் நெருங்கிவிட்டது. அதற்கு அச்சாணியாக, கழகத்தின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு அமையப் போகிறது என்று சொன்னால் அது மிகையாகாது. அதிமுக மதுரை மாநாடு நடக்கப் போகிறது என்று அறிந்தவுடன் திமுக உடன் பிறப்புகள் சலம்புவதற்கு பதிலாக புலம்புவதிலேயே கருத்தாக உள்ளனர். இது வெறும் முன்னோட்டம்தான் மக்களே! இன்னும் பார்க்க வேண்டியது ஏகப்பட்டது இருக்கிறது! பட்டாசப் போட்டு பட்டாளம் கூட்டு அதிரப் போகுது மதுரை!
via News J : https://ift.tt/yusClqz
via News J : https://ift.tt/yusClqz