News J
600 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக அறிவிப்பு! அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மாளிகையில், வருகின்ற 4.9.2023 திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, தலமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரையில் 20.8.2023 அன்று நடைபெற்ற கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை சிறப்புடன் நடத்துவதற்காக அமைக்கப்பட்டிருந்த பல்வேறூ மாநாட்டுக் குழுவினர் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.இந்த ஆலோசனைக் கூட்டத்தில், மேற்கண்ட பொறுப்புகளில் இருக்கும் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம். இந்த அறிப்பானது கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிட்டப்படுகிறது.


via News J : https://ift.tt/18ohAOv
Mediaசென்னையில் காலை உணவுத் திட்ட திடீர் ஆய்வு என்ற பெயரில் புகழ் வெளிச்சத்துக்கு ஸ்கெட்ச் போட்ட விடியா அமைச்சர் சேகர் பாபுவின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேயர் ப்ரியா, செய்தியாளர்களிடத்தில் சிக்கி அமைச்சரின் திட்டத்தை சல்லி சல்லியாய் உடைத்தது எப்படி என்பது குறித்து பார்ப்போம்…தெருவெங்கும் பேனர், கட்சிக் கொடி, சிகப்புக் கம்பள வரவேற்பு என விடியா திமுக அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா உள்ளிட்டோர் திடீர் ஆய்வில் ஈடுபட்ட லட்சணத்தின் காட்சிகளே இவை…தமிழக அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் காலை சிற்றுண்டி உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி அன்றைய தினம் இத்திட்டத்தை மண்ணடியில் உள்ள உருது நடுநிலைப் பள்ளியில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார். இருப்பினும் திட்டத்தை அமைச்சர் தொடங்கி வைத்தது குறித்த தகவல்கள் பெரும்பாலான ஊடகங்களில் வெளியாகவில்லை.இதனால் அப்செட் ஆன அமைச்சர் தரப்பு, திட்டம் தொடங்கப்பட்ட மூன்றாவது நாளான ஆகஸ்ட் 28-ம் தேதி புகழ் வெளிச்சம் தேடி திடீர் ஆய்வின் பெயரில் கோதாவில் குதித்தது. அதன்படி மீண்டும் அதே உருது நடுநிலைப் பள்ளிக்கு அமைச்சர் சேகர்பாபு வருகை புரிந்தார். திடீர் ஆய்வு என கூறப்பட்ட நிலையில், அமைச்சரை வரவேற்கும் விதமாக தெருவெங்கிலும் கட்சிக் கொடிகளும், பள்ளி நுழைவாயிலில் இருந்து சிவப்பு கம்பள வரவேற்பும் என தடபுடலான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.இதனையொட்டி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி பிரத்யேக ஏற்பாடுகளுடன் கொண்டு வரப்பட்டது. அதன்படி காலை சிற்றுண்டி உணவுத் திட்ட பட்டியலில் இடம்பெறாத இனிப்புகளுடன் சேர்த்து மாணவர்களுக்கு காலை உணவு
பரிமாறப்பட்டது. அப்போது ஆய்வின் பெயரில் வருகை தந்த அமைச்சர் சேகர் பாபு, மேயர் ப்ரியா ஆகியோர் உணவை ருசித்து பார்த்து தரத்தை பரிசோதிக்காமல், குழந்தைகளுக்கு அருகில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலேயே மும்முரமாக இருந்தனர்.பின்னர் குழந்தைகளுடன் அமைச்சரும், மேயரும் பேசிக் கொண்டிருப்பது போன்ற சில வீடியோ காட்சிகளை பதிவு செய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டனர். அதன் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, ஆய்வு செய்ய வருவதற்கு எதற்காக கட்சிக் கொடி, சிவப்பு கம்பள வரவேற்பு எனும் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் மேயர் ப்ரியா திணறினார்.இதற்கு முண்டியடித்துக் கொண்டு பதிலளித்த அமைச்சர் சேகர் பாபு, சென்னை மாநகர
பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள திட்டத்திற்கு ஓர் இடத்தில் உணவு சமைத்து பிற இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும், அதனால் ஓரிடத்தில் ஆய்வு செய்வது
போதுமானதாக இருக்கும் எனவும் மேயர் பிரியாவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு சம்பந்தமே இல்லாமல் சப்பைக் கட்டு கட்டினார்.நிகழ்ச்சி முடிந்து விடியா அமைச்சரும், மாநகர மேயரும் சென்ற பின்னர், காலை
சிற்றுண்டி உணவின் சுவை பிடிக்காமல் சிறுவர்கள் உணவுகளை குப்பைத்தொட்டியில்
வீசிச் சென்றனர். தரமற்ற வகையில் வழங்கப்பட்டதன் காரணமாக, மாணவர்களுக்காக தயார் செய்யாப்பட்டிருந்த பெரும்பாலான உணவு வீணானதுஇந்த நிலையில் புகழ் வெளிச்சத்துக்காக முன்கூட்டியே அனைத்து ஏற்பாடுகளையும் தடபுடலாக செய்து விட்டு, திடீர் ஆய்வு என்ற பெயரில் விடியா அமைச்சரும், மேயரும் அரசு பணத்தை வீணடித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மத்திய அரசின் கல்வி கொள்கைத் திட்டத்தை எதிர்ப்பதாக கூறிவிட்டு, அதில் உள்ள காலை உணவு திட்டத்தை மட்டும் தானே சுயமாக சிந்தித்து அறிவித்தது போல் விடியா அரசு நாடகமாடி வருவதாகவும் விமர்சித்துள்ளனர்.


via News J : https://ift.tt/tTVNQE8
Mediaசென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு மாத்திரைகளை மாற்றி வழங்கிய மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அலட்சியத்தால் சிறுமியின் உயிருக்கு உலை வைக்க முயன்ற சம்பவம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.அலட்சியத்தால், காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வந்த சிறுமிக்கு மாத்திரைகளை மாற்றிக் கொடுத்த மருத்துவமனை நிர்வாகத்தின் காட்சிகளே இவை…சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த முகமது புல்லாக், தனது 6 வயது பெண் குழந்தையை காய்ச்சல் காரணமாக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஓபி சீட்டு வாங்கிக் கொண்டு மருத்துவரைப் பார்த்துள்ளார். பின்னர் மருத்துவர் துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்ததை, காண்பித்து மருந்தாளுனரிடத்தில் மாத்திரைகளை பெற்றுள்ளார்.அதனை மீண்டும் மருத்துவரிடம் சென்று காண்பித்தபோது, தான் இந்த மாத்திரைகளை எழுதிக் கொடுக்கவில்லை என மருத்துவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த முகமது, தனது குடும்பத்துடன் சென்று மருந்துகளை ஏன் மாற்றி வழங்கினீர்கள் என மருந்தாளுனரிடத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதற்கு மருந்தாளுனர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததோடு, தவறை மறைக்க முயன்றுள்ளனர்.இதனை அறிந்த அரசு மருத்துவமனை டீன் பழனிவேல், நேரடியாக சம்பவ இடத்துக்கு வந்து முகமது புல்லாக் குடும்பத்தினரிடம் நடவடிக்கை எடுப்பதாக கூறி மன்னிப்புக் கோரினார். மேலும் மருந்துகளை தவறாக வழங்கிய ஊழியர்கள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாகவும் சப்பைக் கட்டு கட்டினார்.இந்நிலையில் பல்வேறு தனியார் கல்லூரிகளில் இருந்து வரும் மாணவர்கள் பயிற்சிக்காக மருத்துவமனையின் பல்வேறு பிரிவுகளில் நியமிக்கப்பட்டிருப்பதும், மாத்திரைகளை தவறாக வழங்கியது பயிற்சி மாணவர்களே என்பதும் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்த வீடியோ காட்சிகள் வைரலானதையடுத்து, மருத்துவமனை டீன் பழனிவேலை தொடர்பு கொண்டு நமது செய்தியாளர் கேள்வி எழுப்பிய போது, இச்சம்பவம் தவறுதலாக நிகழ்ந்து விட்டதாகக் கூறி மன்னிப்பு கோரினார்.இதற்கிடையே வியாழக்கிழமையும் மீண்டும் மாத்திரைகள் நோயாளிகளுக்கு மாற்றி வழங்கப்பட்டதன் காரணமாக, மருந்துகள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டது.கல்லூரி மாணவர்களை நியமித்து பயிற்சியளிக்கும் பெயரில், உயிருடன் மருத்துவமனை நிர்வாகம் விளையாடக் கூடாது என பொதுமக்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த விவகாரத்தால் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதை முற்றிலும் நிறுத்திவிடாமல், பயிற்சி காலத்தின் போது மேற்பார்வையாளர்கள் உடனிருப்பதை உறுதி செய்து அசம்பாவிதங்களை தவிர்க்கவும் வலியுறுத்தியுள்ளனர்.

via News J : https://ift.tt/YPjRwvc
Mediaவிண்வெளித்துறையில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து சாதித்து வருவது நம் மண்ணுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்து வருகிறது. அந்த வகையில் சூரிய ஆய்வுக்கான ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக செயல்பட்டு வரும் தென்காசியை சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர்ஷாஜி குறித்து இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்..உலகளவில் 4ஆவது நாடாக சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நாளை காலை
ஆதித்யா எல் -1 என்ற செயற்கைக்கோளை விண்ணிற்கு அனுப்புகிறது. அதற்கான கவுண்ட் டவுன் தற்போது தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆதித்யா எல் -1 செயற்கைக்கோளின் திட்ட இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த பெண் விஞ்ஞானி நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த சேக் மீரான், சைத்தூன் பீவி தம்பதியரின் 2-வது மகளான நிகர்சுல்தான் என்ற நிகர்ஷாஜி தான், தற்போது ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர், செங்கோட்டை எஸ்.ஆர்.எம். அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்பில் 1008 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் மாணவியாக திகழ்ந்துள்ளார்.இதனை தொடர்ந்து, நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் தனது பொறியியல் படிப்பை முடித்த நிகர்ஷாஜி, 1987ஆம் ஆண்டு இஸ்ரோவில் பணியில் சேர்ந்துள்ளார். பணியில் சேர்ந்து 36 ஆண்டுகள் ஆகியுள்ள சூழலில், ஆதித்யா எல்-1 திட்டத்திற்கு இஸ்ரோ நிர்வாகத்தால் திட்ட இயக்குனராக அறிவிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.இது தொடர்பாக, நிகர்ஷாஜியின் அண்ணனும், பேராசிரியருமான ஷேக்சலீம் கூறும்போது, தனது தங்கை ஆதித்யா எல்-1 திட்ட இயக்குனராக பணியாற்றி வருவது தனக்கும், தனது குடும்பத்திற்கும் மிகவும் பெருமையான தருணம் என்று மிகுந்த மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.கிராம பின்புலங்களை கொண்டு கல்வி பயின்று, தற்போது உலகமே வியக்கும் வகையில் சூரியனை ஆய்வு செய்வதற்கான செயற்கைக்கோளுக்கு திட்ட இயக்குநராக பணியாற்றி வருவது, தனது பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளதாக நிகர்ஷாஜி பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியரான தமிழ்வாணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.நிகர்ஷாஜியின் கணவர் ஷாஜகான் துபாயில் பொறியாளராக பணியாற்றி வரும் நிலையில், இவர்களது மகன் முகமது தாரிக் நெதர்லாந்து நாட்டில் விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் தஸ்நீம், மங்களூருவில் மருத்துவம் பயின்று வருகிறார்.ஆதித்யா எல்-1 மூலம் சூரியனின் வெளிப்பகுதியில் நிலவும் வெப்ப மாறுபாடுகளை கண்டறிவதுடன், சூரிய புயல்களின் தாக்கங்களையும் கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. இத்தகைய விண்கலத்தை தயாரிப்பதில் முதன்மை பணியில் இருக்கும் நிகர்சாஜியின் பணி கண்டு தமிழகமே பெருமை கொண்டுள்ளது.

via News J : https://ift.tt/lERUbgu
Mediaபசி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொது. பிணியால் இறந்தவர்களைவிட, பசியாலும் பட்டினியாலும் இறந்தவர்களே உலகில் அதிகம். போர், காலநிலை மாற்றம் போன்ற காரணங்களால் மக்களுக்கு போதுமான அளவு உணவு கிடைக்காமல், பரிதாபமாக உயிரிழந்த வரலாறு எல்லாம் நம் உலகில் நிகழ்ந்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து சரியான உணவு வகைகள் கிடைக்காமல், ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மனிதர்கள் இறந்துபோகும் நிலை ஏற்பட்டது. இது பிஞ்சு குழந்தைகளையும் தாக்கும் நிலை உருவானது. ஊட்டச்சத்து குறைபாட்டால், குழந்தைகளுக்கு குவாஷியோர்கர், மராஸ்மஸ் போன்ற ஊட்டச்சத்து குறைப்பாட்டு நோய்கள் ஏற்படுகின்றன. இதனை உலக நாடுகள் அனைத்தும் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்தாலும், இன்னும் சில ஆப்பிரிக்க நாடுகளில் இந்த நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மூன்றாம் நிலை நாடுகளில் இது ஒரு தலையாயப் பிரச்சினையாக உள்ளது. இந்த நிலை இந்தியாவிலும் நீடிக்கிறது என்பதுதான் வேதனை. இதனை சரிபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய ஊட்டச்சத்து வாரமானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.National Nutrition Week 2022: Theme, Date, History and why it is celebrated from September 1 to September 7?தேசிய ஊட்டச்சத்து வாரம்!ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரமாக இந்தியாவில் கடைபிடித்து வருகிறார்கள். ஊட்டச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வதன் பொருட்டும், சத்தான உணவுப் பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் பொருட்டும் இந்த தேசிய ஊட்டச்சத்து வாரமானது ஆண்டு தோறும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் கணக்கெடுக்கப்பட்ட பசி குறியீட்டு எண்ணிக்கையில் மொத்தம் 121 நாடுகளில் இந்தியா 107 வது இடத்தில் உள்ளது. ஊட்டச்சத்து குறைபாடுதான் இறப்பிற்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை சரிபடுத்தவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் 1982 ஆம் ஆண்டு முதல் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியத்தால் தேசிய ஊட்டச்சத்து வாரம் தொடங்கப்பட்டது. இந்த 2023 ஆம் ஆண்டிற்கான தேசிய ஊட்டச்சத்து வாரத்திற்கான தீம் என்பது, “ஆரோக்கியமான உணவு முறை அனைவருக்கும் மலிவு” என்பதாகும். 

via News J : https://ift.tt/jw0HKB6
Mediaஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆராய சிறப்பு குழு ஒன்றை குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நியமித்து இருக்கிறது மத்திய அரசு …..இந்த அறிவிப்பு வெளியானதில் இருந்து உச்சகட்ட பீதியில் இருக்கின்றனர் ஸ்டாலினும் திமுக உடன் பிறப்புகளும் என்பது தான் அறிவாலயத்தின் இன்றைய ஹாட் டாப்பிக்கே…..ஸ்டாலினும், உபிக்களும் ஏன் பீதியில் இருக்க வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம்…. 2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலோடு சேர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் சட்டமன்ற தேர்தல் நடத்தலாம் என்ற நோக்கத்தில் தான் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை தற்போது கையில் எடுத்துள்ளது…..திமுகவினர் பீதியடைய இதுதான் காரணம் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்….தமிழ்நாட்டு மக்களுக்கு விடியலை தரப்போகிறோம் என்று ரியல் எஸ்டேட் கம்பெனி விளம்பரம் போல ஏக வசனங்கள் பேசியும் ப்ரொமோஷன் வீடியோ எல்லாம் போட்டு மக்களை திசை திருப்பி ஆட்சிக்கு வந்த ஸ்டாலினுக்கு, தான் போட்ட நாடகங்களுக்கு முடிவுரை எழுதப்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்படாதா என்ன?இந்த இரண்டரை ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு விடியல் தந்தாரா ஸ்டாலின் என்ற கேள்வியைக் கேட்டால், கொந்தளித்து கரித்துக்கொட்டுவார்கள் தமிழ்நாட்டு மக்கள்… கொலை, கொள்ளை, கஞ்சா என தமிழ்நாட்டை கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கியதுதான் ஸ்டாலின் செய்த சாதனையே…ஸ்டாலினின் கொடூர ஆட்சியைப் பற்றி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கூட பல முறை பேசியிருக்கிறார்…வரும் செப்டம்பர் 18ம் தேதி முதல் செப்டம்பர் 28ம் தேதி வரை நடைபெறவுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் சட்ட மசோதா தாக்கல் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதையொட்டியே அந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒரு குழுவை மத்திய அரசு அமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.ஏற்கனவே அமைச்சர்கள் மீதான ரெய்டுகள், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு இன்று வரை ஜாமீன் கிடைக்காமல் சிறையில் இருப்பது, 3 அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மறுவிசாரணை என்று விழிபிதுங்கி நிற்கும் விடியா அரசின் பொம்மை முதல்வரான ஸ்டாலினுக்கு, தற்போது இந்த ஒரே நாடு, ஒரே தேர்தல் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆட்சியே கலைந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் என்று ஏற்கனவே தனது பயத்தை ஸ்டாலின் வெளிக்காட்டியிருந்த நிலையில், அது எல்லாம் உண்மையாகிவிடுமோ என்கிற அச்சம் திமுகவினருக்கு இன்னும் அதிகரித்திருக்கிறது.ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டால், வரும் 2024ம் ஆண்டு தமிழ்நாட்டில் விடியா திமுகவின் ஆட்சி கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சேர்ந்து சட்டமன்றத்திற்கும் தேர்தல் வருமா? தமிழ்நாட்டில் ஆட்சி கலையும் என்பதை கணித்து தான் தேசிய அரசியலிலாவது கால் பதித்துவிட முடியுமா என்கிற ஆர்வத்தில் எதிர்க்கட்சிகள் கூட்டணியில் ஸ்டாலின் பங்கேற்றிருக்கிறாரா?
அப்படி ஒருவேளை தேர்தல் நடந்தால், புரட்சித்தமிழர் எடப்பாடி கே பழனிசாமியை முதலமைச்சர் ஆக்கியே தீருவோம் என்று உறுதியுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள் என்பதுதான் நிதர்சனம்.

via News J : https://ift.tt/9w1IuAx
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்புகப்பலோட்டிய தமிழன் திரு. வ.உ. சிதம்பரனார் அவர்களின் 152 – ஆவது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவச் சிலைக்கு, கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துதல்!
5.9.2023 செவ்வாய் கிழமைஇந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்களில் முக்கியமான ஒருவராகத் திகழ்ந்தவரும் வழக்கறிஞர், எழுத்தாளர், பேச்சாளர், தொழிற்சங்கத் தலைவர் என பன்முகத் தன்மை பெற்றவருமான, கப்பலோட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களின் 152-ஆவது பிறந்தநாளான 5.9.2023 – செவ்வாய் கிழமை காலை 10.30 மணியளவில், தூத்துக்குடி வடக்கு மாவட்டம், ஓட்டப்பிடராத்தில் உள்ள திரு. வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுடைய நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்,      திரு. என். தளவாய்சுந்தரம், எம்.எல்.ஏ., அவர்கள்கழக அமைப்புச் செயலாளர்முன்னாள் அமைச்சர்.      திருமதி பா. வளர்மதி அவர்கள்கழக மகளிர் அணிச் செயலாளர்கழக செய்தித் தொடர்பாளர்முன்னாள் அமைச்சர்     திரு. கடம்பூர் சி. ராஜூ எம்.எல்.ஏ., அவர்கள்கழக அமைப்புச் செயலாளர்தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர்முன்னாள் அமைச்சர்     திரு. ப. மோகன் அவர்கள்கழக அமைப்புச் செயலாளர்முன்னாள் அமைச்சர்      திரு. எஸ்.பி. சண்முகநாதன் அவர்கள்தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர்முன்னாள் அமைச்சர்     திரு. சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள்கழக அமைப்புச் செயலாளர்முன்னாள் அமைச்சர்     திரு. என். சின்னத்துரை அவர்கள்கழக அமைப்புச் செயலாளர்கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைச் செயலாளர்     திரு. எஸ். சரவணபெருமாள் அவர்கள்கழக கொள்கைப் பரப்பு துணைச் செயலாளர்உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.கழக அமைப்புச் செயலாளரும், தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான திரு. கடம்பூர் சி. ராஜூ எம்.எல்.ஏ தூத்துக்குடி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும். முன்னாள் அமைச்சருமான திரு. எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோர் இணைந்து இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மிகச் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.வ.உ. சிதம்பரம் பிள்ளை அவர்களுக்கு மரியாதை செலுத்தும் இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு ஆகிய மாவட்டங்களில், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளும். கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும், பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


via News J : https://ift.tt/dlaqGUY
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/salem.jpg">Media</a><strong>கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு</strong>சேலம் புறநகர் மாவட்டம், ஆத்தூர் மற்றூம் நரசிங்கபுரம் நகராட்சிகளில் அடிப்படை பணிகளை செய்யாமலும்; கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை கிடப்பிலும் போட்டு வைத்துள்ள விடியா திமுக அரசைக் கண்டித்து, சேலம் புறநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் க்ண்டன ஆர்ப்பாட்டம்!
7.9.2023 – வியாழக் கிழமை சேலம் மாவட்டத்தில், சேலம் மாநகராட்சிக்கு அடுத்த படியாக மக்கள் தொகையிலும் பரப்பளவிலும் ஆத்தூர் நகராட்சி பெரிய நகராட்சியாகும். அதனையொட்டி அமைந்துள்ளது நரசிங்கபுரம் நகராட்சி. இவ்விரு நகராட்சிகளிலும் நிலவி வந்த குடிநீர் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக எனது தலைமையிலான அம்மாவின் அரசு, சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அம்மாபேட்டை நீரேற்று நிலையம் முதல் மேட்டுப்பட்டி நீரேற்று நிலையம் வரை உள்ள பழுதடைந்த குழாய்களை அப்புறப்படுத்திவிட்டு புதிய குழாய்களை அமைத்து, ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்களுக்கு தடையில்லா குடிநீர் வழங்கப்பட்டது.நகரின் அனைத்து சாலைகளும் புதுப்பிக்கப்பட்டு, தெரு விளக்குகள் முறையாக பராமரிக்கப்பட்டன. தேவையான தூய்மைப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகள் சுத்தமாக காட்சியளித்தன; சுகாதார வசதிகள் மேம்படுத்தப்பட்டன; நகரின் அனைத்து அடிப்படைத் தேவைகளும் பூர்த்தி செய்யப்பட்டன.குறிப்பாக, வசிஷ்ட நதியை சுத்திகரிக்கும் பொருட்டு, சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளின் எல்லையில், ஆற்றில் கலக்கும் சாக்கடை கழிவுநீர் பகுதிகளை ஒருங்கிணைத்து, கழிவுநீர் கால்வாய் மூலம் சாக்கடை கழிவுநீரை ஆத்தூர் நகரின் எல்லைக்குக் கொண்டு சென்று மறுசுழற்சி செய்து, சுத்திகரிக்கப்பட்ட நீரைக் கொண்டு வண்ணாந்துறை அமைத்து, சலவைத் தொழிலாளர்காளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிடும் வகையில், மிக அற்புதமான திட்டத்தைத் தயார் செய்து அதனை செயல்படுத்த அம்மாவின் நல்லாசியோடு செயல்பட்ட அரசால் நிதி ஒதுக்கப்பட்டது.ஆத்தூர் நகரில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், ஆத்தூர் நகரின் தெற்குப் பகுதியில் ராசிபுரம் செல்லும் சாலையையும், பெரம்பலூர் சலையையும் இணைக்கும் வகையில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பில் உள்வட்டச் சாலை அமைத்திட 110 விதியின் கீழ் சட்டமன்றத்தில் அறிவிப்பு வெளியிட்டு, பூர்வாங்க பணிகளைத் தொடங்கிட எனது தலைமையிலான கழக அரசால் ஆணையிடப்பட்டது.இந்நிலையில், விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், படிப்படியாக நிலைமை மாறி எந்தவிதமான அடிப்படை வசதிகளையும் செய்யாததால், மக்கள் குடிநீர் இன்றியும், மோசமான சாலைகளும், தெருவிளக்குகள் எரியாமலும், போதுமான தூய்மைப் பணியாளர்கள் இல்லாமல் தேங்கும் குப்பைகளாலும், ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளைச் சேர்ந்த மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.<strong>ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் நகராட்சிகளில் :</strong>* சுமார் 13 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் வழங்கப்படுகிறது. அதுவும்      முழுமையாக வழங்கப்படுவதில்லை. இதுவே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் 3 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டது.* குறைவான தூய்மைப் பணியாளர்களால், தூய்மைப் பணிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. நகரம் முழுவதும் குப்பை மேடாகக் காட்சியளிக்கிறது.* ஆத்தூர் நகரில் மிக முக்கிய பிரதான சாலைகளான, காந்தி நகர் 60 அடி சாலை மற்றும் ரயிலடி சாலை ஆகிய இரண்டு சாலைகளிலும் குடிநீர் குழாய் அமைப்பதாகக் கூறி, சாலைகளை வெட்டி நாசப்படுத்தி, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மண் சாலைகளாக, மேடு பள்ளங்களாக உள்ளதால், அங்குள்ள வியாபாரிகள், பள்ளி செல்லும் மாணவ, மாணவியர்கள், அலுவலகம் செல்வோர், பொதுமக்கள் என்று அனைத்துத் தரப்பினரும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். தரமற்ற, பழுதான சாலைகளால் விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.* நரசிங்கபுரம் நகராட்சிக்கு தனியாக கட்டடம் கட்டுவதற்கு அம்மா ஆட்சியில் இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்ற 28 மாதங்களுக்குப் பிறகும் இன்னும் நிதி ஒதுக்கி, நகராட்சிக்கு தனியாக அலுவலகக் கட்டடம் கட்டப்படவில்லை.* தெரு விளக்குகள் எப்போதும் எரிவதில்லை. புகார் செய்தாலும் நடவடிக்கை இல்லை.* தற்போது, ஆத்தூர் நகராட்சிக்கு பொறுப்பு ஆணையராக, விழுப்புரம் நகராட்சி ஆணையரை விடியா திமுக அரசு நியமித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் பல நகராட்சிகல் இருந்தும், 2 மாவட்டங்கள் கடந்து தொலைவில் உள்ள விழுப்புரம் நகராட்சி ஆணையரை நியமித்துள்ளது. மிகவும் வேடிக்கையான ஒன்றாகும்.…
Media”இளைஞர் பாசறை கேள்வி பட்டிருப்போம் அது என்ன இன்பநிதி பாசறை” . அட இன்பநிதிய தெரியாமல் இந்தியாவில யாராவது இருப்பாங்களா. இன்பநிதி-னு சொல்றதவிட “இந்தியன் மெஸ்ஸி”னு சொன்னாதான் எல்லாருக்கும் பளீச்-னு பிடிபடும்.இப்போ ஏன் திடீர்னு இன்பநிதிய பத்தி பேசுறோம் அப்டினா, புதுக்கோட்டை மாவட்டத்துல இருக்குற திமுக-காரங்க “இன்பநிதி பாசறை”னு ஒன்ன ஆரம்பிச்சு ஃபயர் விட்டுக்கிட்டு இருக்காங்க. என்னாடா இது மன்னர் காலத்துலதான், அப்பாவுக்கு அப்புறம் பையன், பையனுக்கு அப்புறம் பேரன் அப்படி தொடர்ந்து வாரிசா பதவிக்கு வருவாங்க. இப்போ என்னடானா மக்களாட்சி நடக்குற இந்த காலத்துலயும் வாரிசு அரசியல் செஞ்சிட்டு இருக்கு இந்த விடியா திமுக.Imageபேரறிஞர் அண்ணாவால் மக்கள் நலனுக்காக உருவாக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகம், கருணாநிதியால் தன் மக்களுக்கான கழகமாக மாற்றப்பட்டது. அன்று கருணாநிதி போட்ட வாரிசு விதை தற்போது திமுகவில் விருட்சமாகி வேர்விட்டுள்ளது. கருணாநிதியின் மகன் ஸ்டாலின் அரியணை ஏறிவிட்டார், ஸ்டாலினைத் தொடர்ந்து அவரது மகன் உதயநிதி, உதயநிதியைத் தொடர்ந்து அவரது மகன் இன்பநிதி என வாரிசுகளை வளர்த்தெடுக்கும் கட்சியாக திமுக உருவாகிவிட்டது. தொண்டர்களை ஏமாற்றி கட்சிப் பதவிகளை தங்கள் குடும்பத்தைத் தவிர வேறு யார் கைக்கும் சென்றுவிடக் கூடாது என்பதில் தீவிர கொள்கையை கடைபிடிக்கிறது திமுக. அதிமுகவைப் போன்று தொண்டர்களால் உருவான கழகமாக இருந்திருந்தால், தொண்டர்களின் கடின உழைப்பும், அதன் மூலம் அவர்கள் தன்னை வளர்த்தெடுப்பதும் தெரிந்திருக்கும். முதலாளிகளாலும், பண்ணையார்களினாலும் உருவாக்கப்பட்டிருப்பதால்தான் திமுக மக்களுக்கு கடமை ஆற்றும் பணியிலிருந்து விலகி பணம் பணம் என்று பொருளைத் தேடி ஓடுவதும், அதற்காக ஊழல் செய்வதிலும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் விடிவு காலம் நிச்சயம் உண்டு. அப்போது நாட்டில் இரட்டை இலை பறக்கும். கழகத்தின் பொதுச்செயலாளர் மக்கள் சேவை ஆற்றி, பாமரர்களின் துயர் போக்குவர்.  

via News J : https://ift.tt/Z2gaM3f
Mediaஉதகையில் சட்ட விதிகளை மீறி தனியார் பங்களிப்புடன் சாகச பொழுதுபோக்கு மையத்தை கட்டி வருகிறது விடியா அரசு. இயற்கையை சீரழித்து பொழுதுபோக்கு மையம் அமைப்பது அவசியமா என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…இந்தியாவின் முக்கிய உயிர் சூழல் மண்டலமாக நீலகிரி உயிர் சூழல் மண்டலம் உள்ளது. 67 சதவீத வனப் பகுதி கொண்ட இந்த மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுவதற்கு வனம், வேளாண்மை மற்றும் சுரங்கம் ஆகிய மூன்று துறைகளுக்கு மனு அளித்து தடை இல்லா சான்றிதழ் பெற வேண்டும். இத்துறைகளின் பரிந்துரையின் பிறகு தான் மாவட்ட குழு ஒப்புதல் அளிக்கும். அதே போல வணிக ரீதியான கட்டிடங்களை கட்ட கடும் கட்டுப்பாடுகள் உள்ளன. இந்நிலையில் விடியா திமுக அரசு, சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில், உதகையின் அடையாளமாக திகழும் பிரசித்தி பெற்ற படகு இல்லத்தில் சுற்றுலாத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் சாகச பொழுது போக்கு சுற்றுலா அறிமுகம் செய்வதற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி உள்ளது.Ooty Lake - Wikipediaஇதற்காக உதகை படகு இல்லத்தை சுற்றிலும் ஆங்கிலேயர் காலத்தில் நடவு செய்யப்பட்ட பைன் மரங்கள் மற்றும் அறிய வகை மரங்கள் என நூற்றுக்கணக்கான மரங்கள் அத்துமீறி வெட்டபட்டுள்ளன. இதற்காக சுற்றுச்சூழல் துறை, மலைப் பகுதி பாதுகாப்பு ஆணையம் உள்ளிட்ட துறைகளில் முறையாக எந்த ஒரு அனுமதியும் பெறவில்லை. இயற்கை வளங்களை அழித்து இரவு, பகலாக ராட்சத எந்திரங்களை கொண்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதற்கு விடியா திமுக அரசின் சுற்றுலா துறை அமைச்சர் க. ராமச்சந்திரன் உடந்தையாக இருப்பதாகவும், அவருடன் சுற்றுலா துறை உயர் அதிகாரிகளும் இணைந்து பெருந்தொகையை பெற்று கொண்டு தனியார் நிறுவனம் கட்டுமான பணிகளை செய்ய அனுமதித்து இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் முக்கிய அங்கமான நீலகிரியில் ஒரு மரத்தை வெட்டுவதற்கு கூட கடும் கட்டுபாடு உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்று சூழல் நிர்வாகம் அனுமதி எப்படி வழங்கப்பட்டது? என இயற்கை ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உதகை படகு இல்லத்தை சுற்றி 150 மீட்டர் தூரத்திற்கு எந்த வித கட்டுமான பணிகளை செய்ய கூடாது என்ற விதி இருக்கும் நிலையில், படகு இல்லத்திற்கு மிக அருகிலேயே நடைபெற்று வரும் விதி மீறிய கட்டுமான பணியால் இயற்கை வளங்கள் வீணாவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.எனவே சுற்றுச்சூழல் நலனைக் கருத்தில் கொண்டு இந்த சாகச பொழுதுபோக்கு மையத்துக்கான கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

via News J : https://ift.tt/6JPMmAf
Media ஆவின்ல முறைகேடு செஞ்சவங்கள தண்டிக்காம அவங்க கேட்ட பணியிடங்களுக்கு மாறுதல் வழங்குறதாவும், அவங்களுக்கு பதவி உயர்வே வழங்க ஆவின் நிர்வாகம் துடிக்கிறதாவும் குற்றச்சாட்டு கிளம்பியிருக்குது…
ஆவினோட தென்சென்னை விற்பனை பிரிவு பொதுமேலாளரா இருந்த ரமேஷ்குமார், தென்சென்னை உதவி பொது மேளாளர் சிவக்குமார், நிர்வாக இயக்குநர் காமராஜ் மேலே ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தும், துறைரீதியா அவங்க மேல நடவடிக்கை எடுக்கலையாம்… ரமேஷ்குமார விழுப்புரம் பொதுமேலாளராத்தான் ராஜமரியாதையா மாத்தியிருக்காங்க… அங்கேயும் ஊழல்ல ஈடுபட்டவர இப்போ, காஞ்சிபுரம் – திருவள்ளூர் மாவட்ட ஒன்றிய பொதுமேலாளரா போட, இங்கேயும் கைவண்ணம் காட்டிட்டு வர்றதா புகார் சொல்றாங்க.
அதே மாதிரி உதவி பொதுமேலாளர் சிவக்குமார திருச்சிக்கு மாத்தியும், தன்னோட செல்வாக்கப் பயன்படுத்தி பழையபடியும் அதே பணியிடத்துக்கு வந்துட்டாராம்.. அதுமட்டுமில்லாம, நிர்வாக உத்தரவ மீறி ஆவின் நெய் மொத்த விநியோகஸ்தர் ஒருத்தருக்கு 7 கோடி ரூபாய்க்கு ஆவின் நெய்ய கொடுத்துருக்காராம்.. இந்த மாதிரி ஆவின்ல பல தில்லாலங்கடி வேலைகள் நடந்துக்கிட்டு இருக்கிறதா பால் முகவர்கள் சங்கமும் குற்றச்சாட்ட எழுப்பி இருக்காங்க.. இப்படி எத்தனையோ புகார்களும் குற்றச்சாட்டுகளும் சொல்லப்பட்டாலும் இந்த மாதிரி அதிகாரிங்ககிட்டேயிருந்து ஆவின் அமைச்சருக்கும், திமுக அதிகார மையங்களுக்கும் போகவேண்டியது போறதாலதான் எந்த மாற்றமும் இல்லாம இருக்குதோன்னு நாங்க சொல்லல.. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

via News J : https://ift.tt/Ej9Ibn7
Mediaஉள்ளாட்சித் தேர்தல்களில் பணத்தை வாரி செலவிட்டு, வெற்றி பெற்ற திமுக, இப்போது செலவிட்ட பணத்தை வசூலிக்கும் பணியை ஜரூராக செய்துவருகிறது. இதில், பல்வேறு ஒப்பந்தங்களுக்கு மேயர்கள் கமிஷன் வாங்குவதால், கமிஷன் கிடைக்காத கவுன்சிலர்கள் மேயர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றனர். பல மாநகராட்சிகளில் இந்த நிலையே இருக்க, தற்போது நெல்லை திமுகவில் இந்த விவகாரம், பெரும் உட்கட்சி மோதலாக வெடித்துள்ளது.நெல்லை திமுக மேயரை மாற்ற வேண்டும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என 40க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் போர்க்கொடி தூக்க, ஒரே கலேபரம் ஆகியிருக்கிறது திருநெல்வேயில்…உடனே, நெல்லை மேயர் சரவணனிடம், மன்னிப்பு கடிதம் மற்றும் ராஜினாமா கடிதத்தை திமுக தலைமை கேட்டு பெற்றதாக தகவல் வெளியான நிலையில், இல்லவே இல்லை என்று மறுத்தார் நெல்லை மேயர் சரவணன்.இந்த மறுப்பு வந்து 24 மணிநேரம் கூட ஆகவில்லை அதற்குள் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் பஞ்சாயத்தை நடத்தியிருக்கிறது திமுக. மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ, 3 மண்டல சேர்மன்கள் என பலரோடு நடந்த இந்த பஞ்சாயத்தில், ஏக கூத்துக்கள் நடந்திருக்கிறது. மேயரை மண்டல சேர்மன்கள் குறைசொல்ல, கவுன்சிலர்களை மேயர் குறை சொல்ல என்று ஒரு பள்ளிக்கூட போரே நடந்திருக்கிறது… எப்போது வேண்டுமானாலும், நெல்லை மேயர் பதவி காலியாகலாம் என்றும் கூறுகிறார்கள் விஷயம் அறிந்தவர்கள்..இதுஒரு புறம் என்றால், கடலூர் மாநகராட்சியில் கவுன்சிலர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஒரே ஓட்டமாக மாநகராட்சி அலுவலகத்தை விட்டே வெளியேறினார் மேயர்…இதுமட்டுமா? திருச்சியில் தன்னை சாதி பார்த்து இருக்கை ஒதுக்கியதாக மேயர் மீது, கூட்டணியில் உள்ள விசிக கவுன்சிலரே புகார் வாசிக்கிறார்….
மதுரையில் பிடிஆரின் ஆதரவாளர் என்பதால் பெண் மேயர் இந்திராணியை எல்லா இடங்களிலும் புறக்கணிக்கிறார்கள் திமுகவின் மாவட்ட செயலாளர்கள் முதல் கவுன்சிலர்கள்வரை..உட்கட்சி பூசல் ஒருபுறம் என்றால், சென்னை துணை மேயரான மகேஷ் மீது 6 பிரிவுகளில் முறையாக வழக்கு பாய்ந்திருப்பதால், எந்நேரமும் அவர் கைதாகலாம் என்றும் கூறப்படுகிறது…ஆக மொத்தத்தில் மாநகராட்சிகளில் இப்பவோ அப்பவோ என்ற இழுத்துக்கொண்டிருக்கிறது திமுகவின் உட்கட்சி விவகாரங்கள்.. நிலைமை இப்படியே போனால், எப்போது தேர்தல் வந்தாலும், உட்கட்சி பிரச்சானையாலேயே தோல்வியை தழுவும் திமுக என்று கணிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்…மாநகராட்சி மேயர்-கவுன்சிலர்கள் மத்தியில் நிலவும் இத்தகைய மோதல் போக்கால் மீண்டும் தூக்கம் தொலைத்து விட்டாரா ஸ்டாலின்? உட்கட்சிக்குள்ளேயே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க முடியாத ஸ்டாலின் தமிழ்நாட்டு பிரச்சனைகளை எப்படி தீர்க்கப்போகிறார்? ஆக மொத்ததில், உள்ளே இருக்கும் தன் சொந்தக் கட்சிகாரர்களாலேயே அழிந்து போகப்போகிறது திமுக என்பதுதான் தெளிவாகிறது.

via News J : https://ift.tt/nxPLg7e
Mediaமிளிரும் பள்ளித் திட்டம்:தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளை சுகாதாரமான முறையில் வைத்திருப்பதற்கான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசின் மூலம் “எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி” என்கிற திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி பள்ளி வளாகத்தை பசுமையாக வைத்திருப்பது, மாணவர்களிடையே சுய சுகாதாரத்தை பேணிசெய்வது, சுற்றுச்சூழல் மற்றும் கழிவு மேலாண்மை கூறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பள்ளி வளாகத்தில் தோட்டம் அமைப்பது, மறுசுழற்சி பணிகளை மேற்கொள்வது, நெகிழி இல்லாத வளாகத்தை ஏற்படுத்துவது போன்ற முக்கிய அம்சங்களைக் கொண்ட அரசுப் பள்ளியை தமிழக அரசு மிளிரும் பள்ளியாக அறிவிக்கும்.மிளிரும் திட்டத்தின் படிநிலைகள் :இதற்காக பல்வேறு குழுக்களை தமிழக அரசு அமைத்து பணிகளை மேற்கொண்டது. மாவட்ட அளவிலான குழுக்களை மாவட்ட ஆட்சியர் தலைமையிலும், வட்டங்கள் அளவிலான குழுக்களை கோட்டாட்சியர்களின் தலைமையிலும் அமைக்கப்பட்டன. இந்தக் குழுக்கள் உள்ளாட்சி துறையுடன் சேர்ந்து பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க பணியாற்றும். இதனை தவிர்த்து, பள்ளிகள் அளவிலும் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாக, ஐந்து மாணவர்கள் கொண்ட உபக்குழுக்கள் உருவாக்கப்படும். இந்த உபக் குழுக்கள், பள்ளிகளில் சுத்தமான குடிநீர் இருப்பதையும், வகுப்பறைகள் தூய்மையாக இருப்பதையும் உறுதிசெய்யும். மேலும் வாரமொருமுறை நடக்கும் பிரார்த்தனை வகுப்புகளில் மாணவர்கள் சுகாதாரம் குறித்த உறுதிமொழியை எடுக்கவும் செய்கிறார்கள்.இன்புளூயன்சா காய்ச்சல்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆஸ்பத்திரியில் அனுமதி | minister anbil mahesh poyyamozhi admitted to hospital“மிளிரும் திட்டத்தில் மிளிராத திமுக”தற்போது இந்த திட்டம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. அதற்கு காரணம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுப் பள்ளியை மிளிரும் பள்ளி என இந்த விடியா அரசினர் அறிவித்துள்ளனர். ஆனால், அந்தப் பள்ளி சுகாதாரமற்ற பள்ளி என்று தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது மிளிரும் பள்ளி திட்டத்தை இன்று விழுப்புரம் கீழ்ப்பெரும்பாக்கம் அரசுப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் பழனி தொடங்கி வைத்தார். ஆனால் அந்த திட்டத்திற்கான எந்தத் தகுதியும் இப்பள்ளிக்கு இல்லை என்பது பல தரப்பினரிடையே அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. பள்ளி வளாகத்தில் கிடக்கும் மாட்டுச்சாணத்தைக் கூட அப்புறப்படுத்தாமல், அதன் மீதௌ சுண்ணாம்பு பவுடரை தூவி உள்ளனர் நகராட்சி ஊழியர்கள். மேலும் பள்ளி முழுவதும் குப்பைகள் எடுக்கப்படாமலும், தேங்கிய மழை நீர் மற்றும் கழிவு நீரை கூட அகற்றப்படாது நிலையில்தான் பள்ளிக்கூடமே உள்ளது. இப்படி சுகாதாரமற்ற நிலையில் உள்ள அப்பளிக்கு ”மிளிரும் பள்ளி” என பெயர் சூட்டியிருப்பது பள்ளிக் கல்வித்துறையின் நிர்வாகத் திறனற்றத் தன்மையைக் காட்டுகிறது என்று கல்வியாளர்கள் குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

via News J : https://ift.tt/aphwCEg
Mediaஇஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி மரணம்!இந்தியா தற்போது விண்வெளித்துறையில் தொடர்ந்து சாதித்து வருகிறது. அதற்கு சமீபத்திய உதாரணங்களாக, சந்திரயான் – 3 விண்கலம் வெற்றி மற்றும் ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றி என்று அடுக்கிக்கொண்டே போகலாம். அப்படி நம் இந்திய விண்வெளித்துறையே வெற்றி களிப்பில் இருந்துகொண்டு இருக்க, தற்போது ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் பல ராக்கெட்கள் ஏவுவதற்கு கவுண்டவுன் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் தற்போது மரணம் அடைந்துள்ளார்.கவுண்டவுன் கொடுத்த வளர்மதி..!Valarmathi: ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த தமிழக இஸ்ரோ விஞ்ஞானி காலமானார்! - Dinasuvaduசந்திரயான் 2 விண்கலம் விண்ணில் ஏவிய நிகழ்வு முதல் பல பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவிய  நிகழ்வு வரை கடந்த ஆறு வருடமாக மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக வளர்மதி பணியாற்றியிருக்கிறார். 2012-ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்ட RISAT-1 திட்ட இயக்குநராகவும் செயல்பட்டு  இருக்கிறார். தனது கம்பீரமான குரலுக்காக பலராலும் பாராட்டப்பட்டவர். சமீபத்தில் சந்திரயான் 3 விண்கலம் ஏவப்பட்டு, நிலவின் தென்பகுதியில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக இறங்கி வரலாற்று சாதனைப் படைத்தது. அதற்கும் கவுண்டவுன் கொடுத்தவர், வளர்மதி அவர்கள்தான்.மாரடைப்பால் மரணம்!விஞ்ஞானி வளர்மதி அவர்கள், தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அரியலூர் நிர்மலா மேல்நிலைப்பள்ளியில் தமிழ்வழிக் கல்வி பயின்றவர். கல்லூரிப் படிப்பினை அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் பயினறார். பிறகு கோயமுத்தூரில் அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னியியல் பொறியியல் படிப்பையும், சென்னை அண்ணா பல்கலைக்கழத்தில் மின்னனுவியல் மற்றும் தொடர்பியலில் எம்.இ படிப்பினையும் கற்றுத் தேர்ந்தார் 1984 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்தார். 2012 ஆம் ஆண்டு ரேடார் இமேஜ் சாட்டிலைட் – 1ன் திட்ட இயக்குநராக பணியாற்றினார். 2015 ஆம் ஆண்டு டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல்காலம் விருதும், 2017-ல் இந்து தமிழின் தமிழ் திரு விருதும் பெற்றுள்ளார். உடல்நலக் குறைவால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வளர்மதி அவர்கள், தற்சமயம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது இழப்பு இந்திய விண்வெளித்துறைக்கும், தமிழகத்திற்கும் மிகப்பெரிய இழப்பாகும்.

via News J : https://ift.tt/yI0s2Dc
Mediaகாஞ்சிபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் சொதப்பியதால் ஏமாந்துபோன பன்னீர் விரக்தியில் பாதியிலேயே கூட்டத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார். பன்னீரின் பந்தா கூட்டத்தில் நாற்காலிகள் காத்து வாங்கிய கதை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…தொண்டர்கள் தன் பக்கம் இருப்பதாக நினைத்து பவுசு காட்ட நினைத்த பன்னீரின் பொதுக்கூட்டத்தில் ஆள் அரவம் இன்றி நாற்காலிகள் காத்து வாங்கிய காட்சிகள் தான் இவை.திமுகவுடன் கூட்டு சேர்ந்து சொந்த கட்சிக்கே துரோகம் இழைத்து விட்டு, கூச்சமே இல்லாமல் தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என சவால்விட்ட பன்னீரின் முதல் பொதுக்கூட்டம் காஞ்சிபுரம் அடுத்த களியனூர் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்திற்கான மேடை அமைக்கும் பணிகள் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்தன.இந்தநிலையில், தொண்டர்கள் வெள்ளத்தில் மூழ்கப்போவதாக கற்பனையில் மிதந்து கொண்டு பொதுக்கூட்டத்திற்கு சென்ற பன்னீருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பன்னீர் நடத்திய பொதுக்கூட்டத்தில் வெறும் 500 பேர் கூட கலந்துகொள்ளவில்லை. இதனால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து போடப்பட்டிருந்த 20 ஆயிரம் நாற்காலிகள் காத்து வாங்கின.கூட்டத்தில் பங்கேற்றவர்களோ, பன்னீர் எப்போ பேசி முடிக்கிறது, நாம எப்போ காசு வாங்கிட்டு கிளம்புறது என புலம்பியவாறே காத்திருந்தனர். இது ஒருபுறம் இருக்க பொதுக்கூட்டம் நடைபெற்ற இடம் மழையின் காரணமாக சேறும் சகதியுமாக அலங்கோலமாக காட்சி அளித்தது. இதைகூட முறையாக ஏற்பாடு செய்யாத பன்னீருக்கு பொதுக்கூட்டம் ஒரு கேடா என அங்கிருந்த பெண்கள் முகம் சுளித்தனர்.பெருந்திரளாக கூட்டம் கூடும் என நினைத்த இலவு காத்த கிளி பன்னீருக்கு, அவரது ஆதரவாளர்கள் சிலர், கூட்டம் வெற்றி பெற்றது போலவே சால்வை அணிவித்ததுதான் நகைச்சுவையின் உச்சம். ஒரு கட்டத்தில் பொதுக்கூட்டம் சொதப்பியதை கண்டு விரக்தியடைந்த பன்னீர், ஆதாரவாளர்களை கடிந்துகொண்டு அங்கிருந்து பாதியிலேயே புறப்பட்டுச் சென்றார்.பந்தா காட்ட நினைத்து பன்னீர் ஏமாந்த கதை தான் இன்று பட்டி தொட்டியெங்கும் பேசப்பட்டு வருகிறது. சொந்த கட்சிக்கு துரோகம் இழைத்தால் இதுதான் கதி என்பது பன்னீருக்கு இப்போது புரிந்திருக்கும்.


via News J : https://ift.tt/4Vt2YhF
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/vikram-lander.jpg">Media</a>சர்வதேச நாடுகள் அனைவரும் இந்தியாவை பிரமிப்பாக பார்த்து வருகிறார்கள். அதற்கு விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தனது முக்கிய சாதனையான சந்திரயான் – 3 ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தை நிலைநிறுத்தி புதிய சாதனைப் படைத்தது இஸ்ரோ அமைப்பு. சந்திரயான் – 3 திட்டத்தில் பிரக்யான் ரோவரானது நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை முடித்தபின்னர் தற்போது ஓய்வு நிலைக்கு சென்றுவிட்டது.<strong>தவளை போல் குதித்த விக்ரம் லேண்டர்</strong><a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/09/vikram.png">Media</a>இதில் ஒரு புதிய சாதனை என்னவென்றால், சந்திரயான் -3 நிர்ணயித்த இலக்குகளை தாண்டியும் விக்ரன் லேண்டர் சில சாதனைகளை செய்துள்ளது. தற்போது விக்ரம் லேண்டரை தாவிக்குத்திக்க செய்யும் பரிசோதனையும் வெற்றிகரமாக செய்யப்பட்டது. கட்டளைக் கிடைத்ததும், நாற்பது செ.மீ உயரே எழுந்து, பின்னர் 30 முதல் 40 செ.மீ தொலைவில் பாதுகாப்பாக தரையிரங்கியது. இதன் முக்கியத்துவம் குறித்து, இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டது என்னவென்றால், விக்ரம் லேண்டரை மேலெழச் செய்தது மூலம் எதிர்காலத்தில் ஆய்வு செய்துவிட்டு பூமிக்கு திரும்புவதற்கும், மனிதர்களை நிலவிற்கு அனுப்புவது தொடர்பாகவும் ஒரு உத்வேகத்தை தருகிறது. இதில் உள்ள அனைத்து சாதனங்களும் நன்றாக உள்ளன. எந்த பழுதும் இல்லை, சிறப்பாக செயல்படுகின்றன. இந்த வெற்றிகரமான பரிசோதனைக்குப் பிறகு அதிலுள்ள chaSTE, ILSA கருவிகள் மீண்டும் உள்ளிழுக்கப்பட்டு பாதுகாப்பாக இருக்கின்றன என்று இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது.<strong>விக்ரம் லேண்டர் தாவி குதித்தது எப்படி?</strong><a href="https://pbs.twimg.com/media/F5K0jq1bgAEGq0S?format=jpg&name=large">Image</a><a href="https://pbs.twimg.com/media/F5K0jq7a8AAc86G?format=jpg&name=large">Image</a>பூமியில் நாம் பந்து ஒன்றினை எப்படி வான் நோக்கி தூக்கி வீசினால். அது ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை சென்று மீண்டும் நிலத்தை நோக்கி திரும்பி வருமோ, அதையே தான் இந்த பரிசோதனையிலும் இஸ்ரோ செய்துள்ளது. பூமியைப் பொறுத்தவரை, பந்தானது ஈர்ப்பு விசை காரணமாக கீழ்நோக்கி விழும். அதேபோல, விக்ரம் லேண்டரும் தவளைபோல தாவிக்குதித்திருக்கிறது. மொத்தம் இந்த செயல்முறை மூன்று செயல்முறைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.     முதலாவது செயல்முறையானது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் மூலம் தானியாங்கி முறையில் நடைபெற்றது. இஸ்ரோவில் இருந்து கட்டளை வந்தவுடன், விக்ரம் லேண்டரில் உள்ள செயற்கை நுண்ணறிவு இந்த செயல்பாட்டை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது. விக்ரம் லேண்டரில் தரையிரக்கப் பயன்படுத்தப்பட்ட அதே இன்ஜின்களைக் கொண்டுதான், இந்த நிகழ்வினையும் இஸ்ரோ நிகழ்த்தியுள்ளது. லேண்டரில் நான்கு கால்களிலும் பொருத்தப்பட்டுள்ள இன்ஜின்களை இயக்கி 40 செ.மீ தொலைவில் குதிக்க செய்து, பின்னர் நிலவின் ஈர்ப்பு விசையின் மூலம் பரவளையப் பாதையில் பயணித்து தரையிரங்கியது. இதில் இரண்டாவது முக்கியமான விசயம் என்னவென்றால், லேண்டரை நகர்த்த குறிப்பிட்ட கோணத்தில் அதனை மேலெழும்பச் செய்ய வேண்டும். மீண்டும் லேண்டர் தரையிரங்கும்போது லேண்டரின் கால்கள் சரியாக காலூன்ற வேண்டும். இவை அனைத்தையும் விக்ரம் லேண்டர் சரியாக செய்தது. மூன்றாவதாக, பூமியிலிருந்து பல லட்சம் கிலோமீட்டர் பயணித்து நிலவை அடைந்து, ஒரே இடத்தில் மட்டும் இல்லாமல், லேண்டரை நகர்த்தி வேறொரு இடத்திற்கு கொண்டு சென்றதன் மூலம், வருகின்ற காலகட்டங்களில், பல்வேறு லேண்டர்களை நிலவிற்கு அனுப்புவதன் மூலம், நம்பகத் தன்மையான ஆய்வுக்கு இது வழிவகுக்கிறது.<strong>உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவர் மீண்டும் இயங்குமா?</strong>உறக்க நிலைக்கு சென்றுள்ள பிரக்யான் ரொவர் மீண்டும் இயங்குமா? என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான் என்று விஞ்ஞானிகள் பதிலளித்துள்ளனர். விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரின் ஆயுட்காலம் வெறும் 14 நாட்கள்தான். அவைகளுக்கு கொடுக்கப்பட்ட வேலையை வெற்றிகரமாக அவை முடித்துவிட்டது. செப்டம்பர் 22 ஆம் தேதி நிலவில் விக்ரம் லேண்டரும் உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவரும் இருக்கும் இடத்தில் சூரிய ஒளிப்பட்டதும் இயங்குமா என்றால், இயங்குவதற்கு வாய்ப்புகள் குறைவே. ஆனால் இரண்டு மூன்று நாட்கள் இயங்க வாய்ப்பிருக்கிறது. அந்த வாய்ப்பினையும் இஸ்ரோ சரியான முறையில் பயன்படுத்தும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி இரண்டு நாட்கள் ரோவரும், லேண்டரும் இருந்திருந்தால் அதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படும். மேலும் இந்தியாவிற்கான நிலவின் தூதராக இவை அங்கேயே இருக்கும் என்று நம்பப்படுகிறது.Chandrayaan-3 Mission:
<a href="ht…
Mediaதிருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டின் முன், மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக 4 பேர் படுகொலை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வேதனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணறு பகுதியில் வீட்டின் முன் மது அருந்தியவர்களை தட்டி கேட்டதற்காக மோகன்ராஜ் என்பவரையும், அவரது தாயார், சகோதரர் மற்றும் சித்தி என நான்கு பேரை குடும்பத்துடன், போதை கும்பல் கொடூரமாக வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என்று வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். இந்த விடியா அரசு பதவியேற்றதிலிருந்து நாள்தோறும் நம் மாநிலம் கொலை, கொள்ளை என கொலை மாநிலமாகவும் ,சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த தமிழகமாகவும் , போதை பொருட்களின் தலைநகரமாகவும் திகழ்ந்து கொண்டிருக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். இதனை சரிசெய்ய வேண்டிய இடத்தில் உள்ள முதலமைச்சரோ வெற்று விளம்பரத்தில் மட்டும் தனது முழு கவனத்தையும் செலுத்தி கொண்டிருப்பது வெட்கக்கேடானது என்று எதிர்க்கட்சி தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார். காவல் துறையை கையில் வைத்துக்கொண்டு மக்களைக் காப்பாற்ற துப்பு இல்லாமல், நிர்வாக திறனற்ற பொம்மை முதலமைச்சருக்கு, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனத்தை கூறியுள்ளார்.
இனியாவது காவல் துறையை தனது ஏவல் துறையாக மட்டும் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்கி, சட்ட ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டும் என்று விடியா திமுக அரசை எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், இந்த கொடூர குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த விடியா அரசை வலியுறுத்துவதோடு, உயிரிழந்த மோகன்ராஜ் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலையும் , வருத்தங்களையும் தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/EhKUxIy
Mediaஅதிமுகவின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்ட தென்சென்னை மாவட்ட கழக நிர்வாகிகள் இருவரை கழகத்தின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கழகத்தின் கொள்கை – குறிக்கோள்களுக்கும், கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும் தென்சென்னை வடக்கு கிழக்கு மாவட்டத்தை சேர்ந்த ஆயிரம் விளக்கு வடக்கு பகுதிக்கழக மாவட்ட பிரதிநிதி ஜான்கென்னடி இன்று முதல் கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று அறிவித்துள்ளார். இதேபோல் ஆயிரம் விளக்கு வடக்கு பகுதியை சேர்ந்த 111வது கிழக்கு வட்டக் கழக செயலாளர் சுதாகர் பிரசாத்தும் இன்று முதல் கழகத்தின் உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுகிறார் என்று பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

via News J : https://ift.tt/mjeXfJU
Mediaசுதந்திர போராட்டத் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-வது நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்படும் என கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தில் பணியாற்றியவரும், “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவருமான, தியாகி இம்மானுவேல் சேகரனார், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வசிக்கும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடியவர் என்றும், ஓர் அரசியல் சக்தியாக, அவர்கள் அணி திரள்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் என்றும், பெருமிதத்துடன் கூறியுள்ளார். தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66-ஆவது நினைவு நாள் வருகிற 11 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் காலை 10 மணியளவில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக சார்பில் அஞ்சலி செலுத்தப்பட உள்ளதாக பொதுச்செயலாளர் தனது அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.அந்த நிகழ்ச்சியில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், கழக மகளிர் அணி இணைச் செயலாளர் கீர்த்திகா முனியசாமி, கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் ராஜலெட்சுமி, ராமநாதபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண்டன் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்று அறிவித்துள்ளார்.இதே போல் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிறைகுளத்தான், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சதன் பிரபாகர், முத்தையா உள்ளிட்டோரும் கலந்து கொண்டு தியாகி இம்மானுவேல் சேகரனாருக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என கழக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.இம்மானுவேல் சேகரனாருக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றும் கழக நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக பங்கேற்க வேண்டுமென கழக பொதுக்செயலாளர் தனது அறிக்கை வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.

via News J : https://ift.tt/RnwcOq5
Media காலை சிற்றுண்டி திட்டத்த தமிழ்நாடு முழுமைக்கும் விரிவுபடுத்துனதா சொல்லி தமிழ்நாட்டுல வெளியாகுற அத்தன பேப்பர்லயும் கொட்ட எழுத்துல விளம்பரம் கொடுத்துச்சு இந்த விடியா திமுக அரசு… அதுமட்டுமில்லாம டெல்லி, மும்பையில வெளியாகுற நவபாரத் டைம்ஸ்ங்கிற இந்தி பத்திரிகைக்கும் அந்த விளம்பரத்த இந்தியில முதப்பக்கத்துல கொடுத்துருக்காங்க… அதாவது ஸ்டேட் விட்டு ஸ்டேட் தாண்டி அந்த விளம்பரத்த கொடுத்துருக்காங்க… கடைத்தேங்காய எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைச்ச கதையா, இப்படி மக்களோட வரிப்பணத்துல இஷ்டத்துக்கு விளம்பரம் கொடுத்து தங்களோட விளம்பர வெறிய தீர்த்துக்கிட்டு இருக்கு திமுக… எதுக்காக மும்பை வரைக்கும் விளம்பரம் போச்சுன்னா… இப்ப INDIA கூட்டணி சார்பா மும்பையிலதான் மூனாவது மீட்டிங் போட்டிருக்காங்க. அதுல ஸ்டாலினும் கலந்துக்கிட்டு இருக்காரு… ஏற்கனவே பீகார், பெங்களூரு கூட்டங்கள்ல போயி பெருசா விளம்பரம் தேட முடியல… அதனால மும்பை கூட்டத்துல கலந்துக்கிற ஸ்டாலின அங்க உள்ளவங்க அடையாளம் தெரிஞ்சிக்கிடணும்னு… யானைவரும் பின்னே மணி ஓசை வரும் முன்னேங்கிறமாதிரி… முதல்லயே ஸ்டாலின் விளம்பரம் செஞ்சிக்கிட்டாரு போலன்னு நாங்க சொல்லலங்க… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/UMOC0eu