News J
599 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaமுன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி :இதுவரையில் தமிழ்நாடும் , இந்திய திருநாடும் காணாத வகையில் இந்த மாநாடு மகத்தான மாநாடாக  அமையப்போகிறது. ஏற்கனவே கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்கள் தலைமையில் மாநாட்டிற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறிப்பாக மதுரை சுற்றியுள்ள தலைமை கழக நிர்வாகிகள் அனைவரிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அந்த வகையில் 11 மாவட்டங்களில் கிளை கழகம் முதல் தலைமை கழகம் வரை ஒவ்வொரு தொண்டரும் இந்த மாநாட்டிற்கு வர வேண்டும் என இன்றைய தினம் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  ஆர்வத்தோடு தமிழ்நாடு முழுவதும் கழகத் தொண்டர்கள் மத்தியில் பொதுமக்களும் வரவேண்டும் என்பதன் அடிப்படையில் இன்றைய தினம் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்த கருத்தின் படி மொத்தம் 15 லட்சம் பேர் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதாக தெரிவித்திருக்கிறார்கள்.அவர்களுக்கு உணவு வசதி சுகாதார வசதிகள் குடிநீர் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை
வசதிகள் எல்லாம் செய்து தரவேண்டும் என்ற வகையிலும் இந்த கூட்டம் இன்றைக்கு
நடைபெற்றது. வாகனங்கள் மட்டுமே 40 ஆயிரம் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களுக்கான இடம் ஒதுக்கீடு செய்வது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளது.ராகுல் காந்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு தொடர்பாக,நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சிக்க முடியாது எனவே ராகுல் காந்திக்கு
விதிக்கப்பட்ட தண்டனை என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆகும். இது குறித்து மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும்.அதிமுக பாஜக இடையிடயே அடிக்கடி ஏற்படும் விமர்சனங்கள் குறித்த கேள்விக்கு,அதிமுகவை தொட்டால் கெட்டார் என்று அவருக்கு தெரியும். ஏற்கனவே கூறியது போல
இது போன்ற  விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அண்ணாமலையின் பொறுப்பு. செல்லூர் ராஜூவாக இருந்தாலும் அடிமட்ட
தொண்டனாக இருந்தாலும் யாராயிருந்தாலும் விமர்சனம் செய்வதை நாங்கள்
ஏற்றுக்கொள்ள மாட்டோம். அவர்களை விமர்சனம் செய்தால் எதிர் விமர்சனங்களை
சந்திக்கக்கூடிய சூழல் கண்டிப்பாக ஏற்படும். அந்த நிலைமைக்கு அண்ணாமலை
ஏற்படுத்த மாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது. நம்பிக்கையை காப்பாற்றினால்
அண்ணாமலைக்கு நல்லது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

via News J : https://ift.tt/g1jhRQS
Mediaஅடிக்கடி மாறும் டூடுள்!கூகுள் நிறுவனமானது முக்கியமான நிகழ்வுகளை நினைவுக்கூறும் வகையிலும், சர்வதேச நிகழ்வுகளையும், குறிப்பிடத்தக்கவர்களின் பிறந்தநாள்களையும் நினைவுக்கூறும் விதமாக தனது டூடுளை மாற்றும். நம்மில் பலர் கூகுளின் டூடுளைப் பார்த்து தான் சில முக்கியமான நிகழ்வுகளையே தெரிந்துக்கொள்வோம். அந்த வகையில் கூகுள் நிறுவனம் இன்று கேட்-ஐ கண்ணாடியாக தனது டூடுளை மாற்றியுள்ளது.  இதற்கான காரணத்தை நாம் சற்று வரலாற்று பார்வையில் பார்க்க வேண்டும்.  அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா ஷினாசி, இவருடைய 116-வது பிறந்தநாளான இன்று  அவரை போற்றும் விதமாக சிறப்பு டூடுளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.   யார் இந்த அல்டினா ஷினா? கூகுளின் டூடுளுக்கு என்ன காரணம்? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதிலை காண்போம். யார் இந்த அல்டினா..!  அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா 1907 ஆம் ஆண்டு நியூயார்க்கின் மன்ஹாட்டனில் பிறந்தார். அல்டினா பல்வேறு திறமைகளை கொண்டவர். அவர் சிற்பி, ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், மற்றும் வடிவமைப்பாளர் என பன்முகத் திறமையை கொண்டவர்.  இதனை தவிர ஏராளமான ஆவணப்படங்களையும் இயக்கி உள்ளார்.  மேலும் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். இவர் ஓவியங்களை தாண்டியும் பல கண்டுபிடிப்புகளையும்  நிகழ்த்தி உள்ளார். அதில் ஒன்று  தான்  கேட்-ஐ கண்ணாடி. பாரிஸில் ஓவியக் கலை பயின்ற அல்டினா, அமெரிக்காவுக்குத் திரும்பிய பிறகு நியூயார்க்கில் உள்ள பல்வேறு ஸ்டோர்களில் ஜன்னல் அலங்காரம் செய்பவராக  பணியாற்றினார். அப்போது பெண்களின் கண்ணாடியானது வட்ட வடிவில் மட்டுமே   ஃபிரேம்கள் இருப்பதை  பார்த்த  அல்டினா இதற்கு மாற்றாக கேட்-ஐ கண்ணாடியை  (cat eye) உருவாக்கினார். இது ஹார்லிகுயின் (Harlequin) ஃபிரேம்கள் என்றும் அழைக்கப்படுகிறது.  இந்த கேட்-ஐ கண்ணாடிகளை பல்வேறு தொழில் நிறுவனங்கள் நிராகரித்தன.  மனம் தளராத அல்டினாவிற்கு அங்கு உள்ள சிறிய கடை வியாபாரி ஒருவர் அவரது கண்ணாடிகளை வாங்கி விநியோகம் செய்தார். டூடுளாக மாறிய கேட்-ஐ கண்ணாடி…!அந்த  கண்ணாடியானது சில நாட்களிலேயே நியூயார்க் நகரம் முழுவதும் பிரபலமடைந்தது. இந்த  ஃபிரேம்கள் 1930களின் பிற்பகுதியிலும் 1940களிலும் அமெரிக்காவின்  ட்ரெண்டாக மாறியது. அக்காலத்தில் தொடங்கி இன்று வரை இந்த ட்ரெண்டின் மவுசு குறையாமல் தான் உள்ளது என்று சொல்ல வேண்டும்.  அல்டினா தனது கண்டுபிடிப்பிற்காக 1939ஆம் ஆண்டு லார்ட் மற்றும் டெய்லர் அமெரிக்கன் டிசைன் விருது பெற்றார். இந்த வெற்றியை தொடர்ந்து ‘தி ரோட் ஐ ஹேவ் டிராவல்ட்’ என்ற புத்தகத்தையும் அல்டினா எழுதியுள்ளார். மேலும் அவர் திரைப்படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தனது ஆசியரான ஜார்ஜ் க்ரோஸைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தை தயாரித்தார். அந்தப் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ஆவணப்படமானது வெனிஸ் திரைப்பட விழாவில் முதல் இடத்தை பிடித்தது. அமெரிக்காவில் வாழ்ந்து வந்த  அல்டினா ஷினா 1999-ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவரது பெருமைகளை நினைவுக்கூறும் விதமாக 2014-ஆம் ஆண்டு ஆவணப்படம் ஒன்று வெளியானது.  இவற்றைத் தொடர்ந்து கூகுள் நிறுவனம் அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 4-ஆம் தேதி சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டு பெருமை சேர்த்தது. 

via News J : https://ift.tt/H1Z3kXr
Mediaஅமைச்சரவையில் வாரிசுகளை உள்ளே சேர்ப்பதும், சர்ச்சைக்குரியவர்களை வெளியே தள்ளுவதும்…ஊழல் உண்மையை உடைத்துப்பேசியவர்களின் துறையை மாற்றிக்கொடுத்து அடக்கிவைப்பதும், ஊழல் குற்றச்சாட்டில் வாய் திறக்காதவரை இலாகா இல்லாத அமைச்சராக அமர வைத்து அழகு பார்ப்பதும்என்று 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே உள்ளே வெளியே, உள்ளே வெளியே என்று மங்காத்தா கணக்காக அமைச்சரவையை நடத்திக்கொண்டிருக்கிறார், இல்லை இல்லை நடத்தத்தெரியாமல் திக்கு முக்காடிக்கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…தற்போது மீண்டும் ஒரு இடியாப்பச்சிக்கலில் சிக்கியிருக்கும் ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்று பூதக்கண்ணாடி கொண்டு காத்திருக்கின்றனர் திமுகவின் உடன் பிறப்புகள்… சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் கள்ளச்சாராய மரணச் செய்தியால் தமிழகமே அதிர்ந்துபோய் அமர்ந்திருக்க, அப்படி கள்ளச்சாராயம் காய்ச்சிய சிலருக்கே நிவாரணம் கொடுத்து வரலாறு படைத்தது திமுக… இந்தச்செய்தியின் வாடை அடங்குவதற்குள், கள்ளச்சாராயம் காய்ச்சிய திமுக நிர்வாகி மரூர் ராஜாவுக்கு கேக் ஊட்டி ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தார் அமைச்சர் ஒருவர்….அடேங்கப்பா, ஆனாலும் உங்களுக்கெல்லாம் ரொம்ப தைரியந்தான் ப்பு என்று கவுண்டமணி கணக்காக எல்லாரும் பேசிக்கொண்டிருக்க, இந்த செய்தி எதுவும் நடக்காததுபோல ஆழ்நிலை தியானத்தில் இருந்தார் முதல்வர் ஸ்டாலின்..அட, அதோடு விட்டார்களா? தம்பி, மகன், மருமகன், சொந்தக்காரர்கள், நண்பர்கள் என வந்தவர் போனவருக்கெல்லாம் ஆட்சியிலும் கட்சியிலும் பதவிகளை அள்ளிக் அள்ளிக்கொடுத்து வள்ளல் என்ற பெயர் வாங்கலாம் என்று நினைத்துக்கொண்டிருந்த அமைச்சர் மஸ்தான் மீதிருந்த ஆத்திரத்தை அடக்கமுடியாத விழுப்புரத்து விசுவாசிகள் கூட்டமாகத் திரண்டு சென்று முதல்வர் ஸ்டாலினிடம் புகார் பத்திரம் வாசித்திருக்கிறார்கள்…கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட திண்டிவனத்தில் நடந்த திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது கோபம் கொண்ட கட்சி நிர்வாகிகள், அவரை எதிர்த்து சண்டையிட்ட விவகாரமும் முதல்வர் காதுகளுக்கு எட்டியிருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பொன்முடி மீது அமலாக்கத்துறை ரெய்டு ஒருபுறம் நடந்த நிலையில், அந்த சர்ச்சை அடங்குவதற்குள் அமைச்சர் மஸ்தான் மீது உடன்பிறப்புகள் கொதிப்பில் இருப்பதால் செய்வதறியாது விழிபிதுங்கி நிற்கிறார் முதல்வர் ஸ்டாலின்….ஏற்கனவே அமைச்சரவையில் இருந்த சிறுபான்மையினரான நாசரை வெளியேற்றிவிட்டு இசுலாமியர்களின் கோபத்திற்கு ஆளான ஸ்டாலின், தற்போது மஸ்தானை நீக்கப்போகிறாரா? அல்லது, அவரை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு கட்சியினர் மற்றும் பொதுமக்களின் கடுங்கோபத்திற்கு ஆளாவாரா? அல்லது அமைச்சர் மஸ்தானை நீக்கினால் சரியப்போகும், சிறுபான்மையினர் வாக்கு வங்கியை தக்க வைக்க ஆவடி நாசருக்கு மீண்டும் அமைச்சர் பதவியை கொடுத்து சரிகட்டிவிட நினைக்கிறாரா ஸ்டாலின்?அப்படியான முடிவை எடுத்தால் மீண்டும் நாசருக்கு என்ன துறை கொடுக்கப்போகிறார்? அங்கு மீண்டும் அவர் கல்லெரி வைபவங்களை நடத்தினால் தூக்கம் தொலைத்துவிட்டு நிற்போமே என்று நினைக்கிறாரா ஸ்டாலின்? ஆக, திமுக அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரப்போகிறதா? என்பதுதான் தற்போது தமிழக அரசியல் களத்தில் எழுந்திருக்கும் மாபெரும் கேள்வியே

via News J : https://ift.tt/0xuPG8r
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/eps-arikkai.jpg">Media</a><strong>கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை</strong>காவிரி நீர் விவகாரம் – இல்லாத ஊருக்கு வழி தேடும் விடியா அரசின் முதலமைச்சருடைய போக்குக்கு கடும் கண்டனம்!‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்’என்று நம் நானிலத்தின் பெருமையை உயர்த்திப் பாடினார் புரட்சித் தலைவர். ஆனால், ஆளும்போதெல்லாம் மக்களை எல்லா விதத்திலும் கையேந்த வைப்பதையே தொழிலாகக் கொண்டு செயல்பட்டு வரும் திமுக-வும், அதன் விடியா அரசும், நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திடம் காவிரி நீருக்காக கையேந்த வைக்கக்கூடிய அவல நிலையை ஏற்படுத்தியது வெட்கக் கேடானதாகும்.காவிரியில் தமிழகத்திற்கு உரிய பங்கினை பெறுவதற்காக, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும், புரட்சித் தலைவி அம்மா அவர்களும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் அரசும் மேற்கொண்ட தொடர் சட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 40 ஆண்டுகளுக்குப் பிறகு உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று இறுதித் தீர்ப்பினை அளித்தது. அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையம் மற்றூம் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவினை மத்திய அரசு 1.6.2018 அன்று அமைத்தது. இதன்படி மாதாந்திர அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் கர்நாடகா, தமிழகத்திற்கு 177.25 டி.எம்.சி நீரை வழங்க வேண்டும்.பல்வேறு சட்டப் போரட்டங்களை நடத்தி, காவிரியில் உள்ள நமது உரிமையை மீட்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டுகால அரசு. காவிரி நதிநீர் தொடர்பாக கர்நாடகாவிற்கும், தமிழகத்திற்கும் இருந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தமிழகத்தை வஞ்சித்தது திமுக அரசு. 1974-ல் காவிரி ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டிருந்தால், நமக்கு 500 டி.எம்.சி-க்கும் குறையாமல் தண்ணீர் வந்திருக்கும். திமுக-வினர் நடத்திய மக்கள் விரோத ஆட்சியால், நாம் 1974 வரை பெற்று வந்த பங்கில் பாதிக்கு மேல் இழந்துள்ளோம்.காவிரிப் பிரச்சினையில், சட்டப் போராட்டத்தில் நாம் வென்றது மட்டுமல்ல, ஆண்டுதோறும் நமக்கு உண்டான பங்கினை இதுநாள் வரையிலும் பெற்று வந்தோம். ஆனால், இந்த விடியா திமுக அரசினுடைய கூட்டாளிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சியை பிடித்தது முதல் மீண்டும் காவிரி நீரி விஷயத்தில் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது.கர்நாடகத்தில் உள்ள தங்கள் குடும்பத் தொழில் பாதிக்கப்பட்டுவிடுமோ என்ற பயத்தில் காவிரி நீரில் தமிழகத்திற்கு உரிய பங்கை அந்த அரசோது வாதாடி, போராடி வாங்காமல், மத்திய நீர்வளத்துறை அமைச்சருக்கும், பிரதமருக்கும் கடிதம் எழுதுவதாக இந்த பொம்மை முதலமைச்சர் நாடகமாடி வருவது கண்டிக்கத்தக்கது.கடந்த வாரம் டெல்லிக்குச் சென்ற தமிழக நீர்வளத்துறை அமைச்சர், இந்த விடியா திமுக அரசின் முதல்வர் எழுதியதாகக் கூறி, மத்திய ஜல் சக்தித் துறை அமைச்சரிடம் ஒரு கடிதத்தை கொடுத்துள்ளார். ‘தமிழகத்திற்குரிய நீரை காவிரியில் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் மூல  உத்தரவிடப்படும்’ என்று மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக விடியா அரசின் நீர்வளத் துறை அமைச்சர் டெல்லியில் பேட்டி அளித்தார்.இந்த நிலையில் இன்று, பிரதமருக்கு இதே பிரச்சனை குறித்து முதலமைச்சர் திரு.ஸ்டாலின் ஒரு கடிதம் எழுதி இருப்பதாக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.தன்னாட்சி அதிகாரம் கொண்ட உச்ச நீதிமன்றத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் உடனடியாக கூட்டப்பட்டு, தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலையும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளையும் நிறைவேற்ற வேண்டியது கர்நாடக அரசின் கடமை. அந்தக் கடமையில் இருந்து அரசியல் காரணங்களுக்காக நழுவும் அம்மாநில காங்கிரஸ் அரசை தட்டிக் கேட்க வேண்டியதும், கண்டிக்க வேண்டியதும், வற்புறுத்தி நம்முடைய பங்கு நீரைப் பெற வேண்டியதும் காங்கிரஸ் கூட்டாளியான விடியா திமுக ஆட்சியின் முதலமைச்சர் திரு. ஸ்டாலினின் உரிமையும், பொறுப்புமாகும்.ஜூன் 12-ல் வழக்கப்பட் மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டோம் என்று வீண் ஜம்பம் காட்டிய இந்த முதலமைச்சர், அந்தத் தண்ணீர் டெல்டா குறுவை சாகுபடிக்கு போதுமானதா? கடைமடை வரை முழுமையாக, போதுமான அளவில் தண்ணீர் சென்று சேர்ந்ததா? குறுவை சாகுபடி முறையாக நடந்ததா? நிர்ணயிக்கப்பட்ட அளவு சாகுபடிக்கு செய்யப்பட்டதா? என்பது பற்றியெல்லாம் தெரிந்துகொள்ளாமல், நானும் ஒரு டெல்டாகாரன் என்று வீண் ஜம்பம் அடித்துக்கொண்டே காலத்தைஇ ஓட்டி, டெல்டா விவசாயிகளை வஞ்சிக்க்கும் வேலையை கனக் கச்சிதமாக இந்த முதலமைச்சர் செய்து வருகிறார்.எனது தலைமையிலான அம்மா அரசின் சார்பில் மக்கள் நலனுக்காக மத்திய அரசுக்குக் கடிதம் எழுதும்போதெல்லாம்…
Mediaவிடியா ஆட்சியில், சென்னை அடுத்த செம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே 24 மணி நேரமும் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் மது பிரியர்களின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்து நிலையத்திற்கு பொதுமக்கள் வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. விடியா ஆட்சியில், குடிகாரர்களின் நிலையமாக பேருந்து நிலையம் மாறியது எப்படி என்பதை பார்க்கலாம்.24 மணி நேரமும் இயங்கி வரும் இந்த டாஸ்மாக் பாரில் இருந்து காலை ஆறு மணிக்கே மதுபானங்களை வாங்கிச்செல்லும் காட்சி தான் இவை.தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தின் பேருந்து நிலையம் அருகே உள்ள டாஸ்மாக்கடையில் இருந்து எடுக்கப்பட்டதுதான் இந்த வீடியோ காட்சி.
பரபரப்பான சாலையில் உள்ள இந்த பேருந்து நிலையம் இயங்கும் இந்த டாஸ்மாக் கடை மற்றும் பாரால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பயணிகள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மாலை நேரங்களில் மதுபானம் வாங்க வரும் மதுபிரியர்கள், சாலையிலேயே இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு போக்குவரத்து இடையூறு ஏற்படுத்துகின்றனர்.அதுமட்டுமின்றி மதுப்பிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் காத்திருக்கும் பொதுமக்களுக்கு தொல்லை கொடுக்கின்றனர். பணியை முடித்துவிட்டு பேருந்தில் வீடு செல்ல பேருந்து நிறுத்தத்தை நாடி சென்றால், அங்கு குடிகாரர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும், போதையில் சொல்லமுடியாத வார்த்தைகளால் வசைப்பாடுவதாகவும் பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பேருந்து நிலையத்தில் படுத்துக்கொண்டு அசுத்தம் செய்யும் மது பிரியர்கள் குறித்து புகார் அளித்தாலும் காவல்துறையினர் கண்டுகொள்வதில்லை என கவலை தெரிவிக்கிறார்கள் அங்குள்ள கடை உரிமையாளர்.தன்னிலை அறியாத குடிகாரர்கள் ஒருவரை ஒருவர் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சனை செய்யும் வார்த்தைகள் கேட்க முடியாத அளவிற்கு இருக்கும் என கூறும் பெண்கள், இந்த டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வேண்டும் என விடியா அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பேருந்து நிலையமா அல்லது குடிகாரர்கள் நிலையமா என்பது தெரியாத வகையில், குடிகாரர்களின் ஆக்கிரமிப்பில் பேருந்து நிலையம் மாறிவருவது, விடியா திமுக அரசின் மற்றும் ஒரு சாதனை.


via News J : https://ift.tt/Cx3vsjl
Mediaநிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டு இருக்கிற ‘சந்திரயான் – 3’ விண்கலம், இன்று நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட உள்ளதாக, இந்திய விண்வெளி ஆராய்சிசி நிறுவனமான இஸ்ரோ  தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக, மூன்றாவது முயற்சியாக, கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி, சந்திரயான் – 3 விண்கலத்தை, ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து, இஸ்ரோ ஏவியது.புவி வட்டப்பாதை பயணத்தை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் – 3 விண்கலம், கடந்த 1 ஆம் தேதி நிலவை நோக்கிய பயணத்தை துவங்கியது. இந்நிலையில் இஸ்ரோ நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை பின்வருமாறு காண்போம்.நிலவுக்கான பயணத்தில், மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை, சந்திரயான் – 3 விண்கலம் கடந்துள்ளது. திட்டத்தின் மற்றொரு முக்கிய நிகழ்வாக், நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இன்று இரவு 7 மணியளவில், சந்திரயான் – 3 விண்கலம் செலுத்தப்பட்ட உள்ளது. நிலவுக்கு அருகில் விண்கலம் சுற்றி வரும் போது, இந்த முயற்சி மேற்கொள்ளப்படும். இதையடுத்து, வரும் 23ஆம் தேதி நிலவில் மென்மையாக தரையிரங்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும் என்று சொல்லப்படுகிறது.Chandrayaan-3 Mission:
The spacecraft has covered about two-thirds of the distance to the moon.Lunar Orbit Injection (LOI) set for Aug 5, 2023, around 19:00 Hrs. IST. pic.twitter.com/MhIOE65w3V— ISRO (@isro) August 4, 2023

via News J : https://ift.tt/eZpFuG4
Mediaஇது ஆடி மாதம். ஊரெங்கும் திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். அதுபோல கிரிக்கெட் ரசிகர்களுக்கு திருவிழா காலம் எது என்றால் அது ஐபிஎல் தான். ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகரும், இது என் டீம்., இது உன் டீம் என்று பிரித்துப் பார்த்து ரசிகமனப்பான்மையில் சில்லறையை சிதறவிடுவார்கள். சி.எஸ்.கே. மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்கள் இடையே ஒரு கேங் வாரே நடக்கும் அளவிற்கு ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறும். அனல் பறக்க பறக்க இந்தப் போட்டியில் குறுக்க இந்த கவுசிக் வந்தா என்பதுபோல இருக்கும் ஒரு அணிதான் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் என்று அழைக்கப்படும் ஆர்.சி.பி அணி.விராட் கோலி என்ற ஒற்றைப் பெயருக்கு பின்னால் கோடிக்கணக்கான ரசிகர்கள் அணிதிரண்டு உள்ளார்கள். பதினாறு வருடங்கள் ஆகிவிட்டது ஐ.பி.எல் தொடங்கி, ஆனால் இன்று வரை ஆர்.சி.பி அணி ஒருமுறை கூட கோப்பை வெல்லவில்லை என்பது பெருந்துயராக ரசிகர்களின் மனதில் உள்ளது. அது ஓர் ஆறாவடுதான். இருப்பினும் ஆர்.சி.பி அணிக்கு பின்னால் ஒரு பட்டாளே இருக்கிறது. தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு என்று அவர்கள் படாரென துயரத்தை தூர விரட்டி வீறு நடை போடுவதில் வல்லவர்கள்.IPL 2023 Royal Challengers Bangalore (RCB) Players List, Team Matches, and full Squadஒரு காலத்துல எப்படி இருந்த பங்காளி என்பது போல கெயில், கோலி, டிவில்லியர்ஸ், ஸ்டார்க் என்று ஆர்.சி.பி அணியே கோலோச்சிக் கொண்டிருந்தது. ஒவ்வொருவரும் அணியிலிருந்து விலக கோலி எனும் ஒற்றை ஆளுமை இப்போது வரைக்கும் அணியை கூட்டிக்கொண்டு வந்துள்ளார். தற்போது அணியில் கோலி, டூ ப்ளஸிஸ், மேக்ஸ்வெல். டிகே என்று ஒரு புஜபல பராக்கிரமசாலிகளே இருந்தும் அவர்களால் ஏதோ சிறு சிறு காரணங்களால் கோப்பையை வெல்ல முடியாமல் போகிறது. இதற்கான காரணத்தைதான் ஒவ்வோர் ஆண்டும் கண்டுபிடிக்க முனைகிறார்கள். தற்போது ஆர்.சி.பி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வந்த சஞ்சய் பங்கர், அவரது பதவிகாலம் முடிந்து பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவரைத் தொடர்ந்து  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக அனுபவம் வாய்ந்த ஆண்டி ஃபிளவர் நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்சிபி அணியின் தலைமைப் பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சஞ்சய் பங்காரின் பதவிக்காலம் வருகிற செப்டம்பரில் முடிவடைய உள்ள நிலையில் அணி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. ஆர்சிபி அணியுடன் இணைவதை நினைத்து பெருமை கொள்வதாகவும், 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியை புதிய உச்சத்துக்கு எடுத்துச் செல்ல ஆவலோடு காத்திருப்பதாகவும் ஆண்டி ஃபிளவர் தெரிவித்துள்ளார். ஜிம்பாப்வே அணியின் முன்னாள் வீரரான ஆண்டி ஃபிளவர் ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் உள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

via News J : https://ift.tt/QOgwI2J
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி. கே.பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு கழக நிர்வாகிகள் மற்றும் கழக உடன்பிறப்புகளின் வேண்டுகோளை ஏற்று, பூர்த்தி செய்யப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு விண்ணப்பப் படிவங்களை திரும்பப்  பெறுவதற்கான இறுதி நாள் : 17.08.2023அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள தங்களுடைய பதிவைப் புதுப்பித்துக்கொள்வதற்கும், புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பப் படிவங்கள் தலைமைக் கழகத்தில், 5.4.2023 முதல் விநியோகிக்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 4.5.2023 முதல் பெறப்பட்டு வருகின்றன.அனைத்திந்திய அன்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்த்திட வேண்டும் என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வந்த நிலையில், தற்போது வரை 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் உறுப்பினர்களாக சேருவதற்கு விண்ணப்பித்துள்ளனர்.“கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” வருகின்ற 20.8.2023 அன்று மதுரையில் நடைபெற உள்ள நிலையில், இந்த மாநாட்டில், கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டும் என்பதற்காக, மாவட்டக் கழகங்களின் சார்பில் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றதால், கழகத்தில் உறுப்பினர்களாக சேருவதற்கும், உறுப்பினர் பதிவை புதுப்பிப்பதற்குமான காலக் கெடுவை நீட்டித்துத் தருமாறு, 4.8.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, மாநாட்டுக்குக் குழு உறுப்பினர்களும். மாவட்டக் கழகச் செயலாளர்களும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, 17.8.2023 மாலை 5 மணி வரி நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதியான வாய்ப்பாகும்.புதிய உறுப்பினர் உரிமைச் சீட்டுகளைப் பெற்றுள்ள கழக உடன்பிறப்புகள் மட்டுமே, கழகப் பொறுப்புகளில் நியமனம் செய்யப்பட்டு பணியாற்றுவதற்கும், கழக அமைப்புத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கும், வாக்களிப்பதற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம் என்று கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

via News J : https://ift.tt/68DfOkn
Mediaநவீன யுகத்திற்குள் நாம் தற்போது இயங்கிக்கொண்டிருக்கிறோம். கையில் காசு இல்லாதவர்களைக் கூட பார்த்துவிடலாம் போல, செல்போன் இல்லாதவர்களை பார்க்க முடிவதில்லை. நாம் அனைவரும் ஸ்மார்ட் ஃபோன்களின் அடிமைகளாக மாறிக் கொண்டு இருக்கிறோம். அத்தியாவசிய அடிப்படைத் தேவையாக இந்த ஸ்மார்ட் ஃபோன்கள் நமக்கு தேவையாக இருக்கிறது என்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் அது நம்மை செரித்து விழுங்காமல் பார்த்துக் கொள்வதே சாலச் சிறப்பு. அதிலும் முக்கியமாக குழந்தைகளிடம் இந்த ஸ்மார்ட் ஃபோன்களை பெற்றோர்கள் விளையாட கொடுத்து பழக்குகிறார்கள். இதன் பின்விளைவுகள் அதி பயங்கரமாக இருக்கும் என்பதை அறியாமல் இச்செயலை அவர்கள் செய்கிறார்கள். குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்காமல் செல்போன்களில் கார்டூன்கள் காண வைப்பது போன்ற செயலில் ஈடுபடுகிறார்கள். இதனால் சிறு வயதிலேயே குழந்தைகள் ஸ்மார் ஃபோனிற்கு அடிமையாகிறார்கள். இதன் காரணமாக சீனா ஒரு முக்கிய முடிவொன்றை எடுத்துள்ளது. இனிமேல் சீனாவில் குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் செல்போன்கள் உபயோக்கிக்கக் கூடாதாம்.Children In China Can Only Use Smartphone For 2 Hours A Day: Beijing To Limit Internet Addiction - Oneindia Newsசீனா அறிமுகப்படுத்தும் “மைனர் மோட்”சீனாவின் சைபர் பேஸானது ‘மைனர் மோட்’ என்கிற புதிய செல்போன் அமைப்பை சீனா அரசின் ஒப்புதலுடன் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்தினால், இந்த மைனர் மோட் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதாவது  மூன்று வயது, மூன்று முதல் எட்டு வயது, எட்டு முதல் பன்னிரெண்டு வயது, பன்னிரெண்டு முதல் பதினாறு வயது, பதினாறு முதல் பதினெட்டு வயது என்று  குழந்தைகளின் வயது வரம்பினை பிரித்துக்கொண்டு அதற்கு ஏற்றார் போல ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்தும் நேரத்தை அளவிடுகிறார்கள். இதில் எட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒரு நாளில் 40 நிமிடங்கள் மட்டும் தான் ஸ்மார்ட் ஃபோன்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி.  அதேபோல, எட்டு வயது முதல் பதினாறு வயது முதல் உள்ள குழந்தைகள் ஒரு மணி நேரம் செல்போன்கள் பயன்படுத்த அனுமதி. அதிலும் குறிப்பாக மூன்றுவயது மற்றும் அதற்கும் கீழ் உள்ளவர்களுக்கு, இணையத்தில் குழந்தைப் பாட்டுகள், கல்வி, பெற்றோர்-குழந்தை உறவுநிலை குறித்த நிகழ்ச்சிகள் ஆகியவை பார்க்க மட்டுமே அனுமதி. முன்னர் சொன்னதுபோலவே, 16-18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரங்கள் மட்டுமே ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்த அனுமதி. அதிலும் இரவு பத்து மணி முதல் காலை ஆறு மணி வரை அவர்கள் செல்போன்கள் பயன்படுத்துவதற்கு அனுமதி கிடையாது.China proposes time limits on children's smartphone use | E&T Magazineஏன் இந்த முடிவு? ஏன் சீனா இந்த முடிவை தீடிரென்று எடுத்துள்ளது என்றால், ஸ்மார்ட் போன்களை அதிகம் பயன்படுத்தும் தலைமுறையாக இந்தத் தலைமுறை ஆக்கப்பட்டுவிட்டது. அதனால் தூக்கமின்மை, கல்வியில் கவனமின்மை போன்ற குளறுபடிகள் குழந்தைகளுக்கு பாலிய வயதிலேயே அதிகம் ஏற்பட்டு விடுகிறது. எனவே இவற்றினை கலையும் பொருட்டு இந்நடவடிக்கையில் சீன அரசு ஈடுபட்டுள்ளது. இணையத்தில் விளையாடக் கூடிய விளையாட்டிற்கும் இனி புதிய சட்ட நடைமுறைகளை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த நேரக்கட்டுப்பாடு ஆன்லைன் கேம் விளையாடும் பதினெட்டு வயதுக்குட்பட்டவர்களுக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. முக்கியமாக ஆன்லைன் கேம் விளையாடும் குழந்தைகள் தங்களின் சொந்த ஐ.டி பெயர்களைப் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.என்ன பெற்றோர்களே, இந்த முறை மட்டும் இந்தியாவில் கொண்டுவரப்பட்டால் எப்படி இருக்கும் என்றுதானே யோசிக்கிறீர்கள்.

via News J : https://ift.tt/ptL6ncm
Mediaசெந்தில் பாலாஜியின் விவகாரம் புட்டுப் புட்டாய் வெளிவந்த பிறகுதான் தமிழ்நாட்டிற்கு அமலாக்கத்துறையென்றால் என்ன என்று தெரியவந்தது. அந்த அளவிற்கு புகழ்பெற்ற வழக்காக மாறியிருக்கிறது செந்தில்பாலாஜியின் பண மோசடி வழக்கு. இந்த பணமோசடி விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் செந்தில் பாலாஜி குறித்து பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது.03/08/2023 அன்று பண மோசடியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் திரு செந்தில் பாலாஜியுடன் தொடர்புடைய ஒன்பது இடங்களில் ED தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டது. சோதனையில், ரூ. 22 லட்சம் மற்றும் கணக்கில் வராத மதிப்பு ரூ. 60 காணிகளுக்கான விளக்கமறியாத சொத்து ஆவணங்களுடன் 16.6 இலட்சம் பணம் கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

via News J : https://ift.tt/Ss2LGqc
Mediaதிண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே விதிமுறையை மீறி மதுபானம் விற்பனை செய்த, தனியார் மதுபான பாருக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.நத்தத்தில், கோவில்பட்டி – மதுரை சாலையில் தனியார் மதுபானக்கடை, பாருடன் செயல்பட்டு வந்தது. இங்கு சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற மாவட்ட அதிகாரிகள் உரிம நிபந்தனைகளை மீறி விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதனையடுத்து உரிமத்தை ரத்து செய்து, மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கலால் துறை உதவி ஆணையாளர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் நத்தம் வருவாய்த் துறையினர் முன்னிலையில் பாருக்கு சீல் வைத்தனர்.

via News J : https://ift.tt/6LyzVbD
Mediaஎனக்குப் பின்னாலும் இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் அதிமுக நிலைத்து நிற்கும் என்று புரட்சித் தலைவி ஜெயலலிதா சொன்னது இன்று நிரூபணமாகி இருக்கிறது….ஆம்….அஇஅதிமுகவில் இணைய வேண்டும் என்று 2 கோடிக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருப்பதாக தகவல்கள் சமீப காலங்களாக வந்து கொண்டிருந்த நிலையில், அதனை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தனது அறிக்கையின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார்….. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் தேதி முதல் புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகம் தொடங்கப்பட்ட நிலையில், தற்போது வரை 2 கோடியே 44 ஆயிரத்து 400 பேர் கழக உறுப்பினர்களாக இணைத்து கொள்ள விண்ணப்பித்துள்ளனர்….பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் அவர்களால் 1972 ஆம் ஆண்டு மக்களுக்காக தொடங்கப்பட்ட மக்கள் இயக்கம்தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். தன்னை அரசியல் பாதைக்கு இழுத்து வந்து, இதயக்கனி என்று அன்போடு அழைத்து அரசியல் அங்கீகாரம் அளித்த பேரறிஞர் அண்ணா அவர்களின் பெயரையே கட்சிக்குச் சூட்டி அழகு பார்த்தவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்.புரட்சித்தலைவருக்கு பிறகு, கழகத்தின் தொண்டர்படையை ஒன்றைக்கோடியாக உயர்த்தினார் அவருடைய அடியொற்றி வந்த புரட்சித்தலைவி… ஆட்சியையும் கட்சியையும் ராணுவக்கட்டுப்போடு நடத்திய மாபெரும் தலைவியான அம்மாவிற்கு பிறகு கழகத்தை காக்க வந்த தாயின் தலைமகன் தான் எடப்பாடி கே பழனிசாமி …முழுக்க முழுக்க தொண்டர்கள் சூழ, உருவான தமிழகத்தின் ஒரே கட்சி அதிமுக மட்டுமே என்று அடித்து கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள். அதிமுகவின் அடிப்படைத் தொண்டராக இருப்பவர் கூட முதலமைச்சராகலாம் என்பதற்கு வாழும் உதாரணமாக இருப்பவர் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரும் கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி.வாரிசு அரசியலை எதிர்த்து, ஊழலை எதிர்த்து மக்களின் மனநிலையை புரிந்து கொண்ட ஓர் தலைமையைக் கொண்டிருப்பதனாலேயே அதிமுக ஒரு மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்தது. புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி அவரைத் தொடர்ந்து எடப்பாடி கே பழனிசாமி என்ற மாபெரும் ஆளுமைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் அதிமுக எனும் பேரியக்கத்தை இந்திய அளவில் உயர்த்தி தற்போதும் இராணுவக்கட்டுப்பாட்டோடு தொண்டர்களை வழிநடத்துவதாலேயே எந்தக்கொம்பாதி கொம்பனாலும் அசைக்கக்கூட முடியாத மக்கள் இயக்கம் அதிமுக உயிர்போடு இருக்கிறது…புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி ஆகியோரைப்போலவே, வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுக க்ளீன் ஸ்வீப் செய்யப் போகிறதா?கழக நிர்வாகிகளையும் தொண்டர்களையும் பொதுமக்களையும் மதித்து, அன்பு செலுத்தும் இரும்பு தேசத்தின் கரும்பு மனிதரான பொதுச் செயலாளரின் தலைமைப் பண்பால் ஈர்க்கப்பட்டு கழகத்தில் இளைஞர்கள் இணைகின்றனரா? ஒன்றரை கோடியாக இருந்த தொண்டர் படை 2 கோடியை கடந்தது எப்படி? அதிமுகவை ராணுவக்கட்டுக்கோப்போடு எடப்பாடி கே.பழனிசாமி எழுச்சிபெறச் செய்தது எப்படி? என்ற கேள்விக்கான பதிலை வரலாறு சொல்லும்.

via News J : https://ift.tt/WRE3lF2
Mediaமதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக அமைச்சர் மூர்த்தி, பேசிக் கொண்டிருக்கும்போது, தொண்டர்கள் பிரியாணி சாப்பிட ஓடிய சம்பவம் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் திமுக பூத் ஏஜெண்ட் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விடியா திமுக அரசின் அமைச்சர் மூர்த்தி பேசிக் கொண்டிருக்கும்போது, பிரியாணி ரெடியானது என தெரிந்தவுடன், அமைச்சரின் பேச்சை புறந்தள்ளிய உடன்பிறப்புகள், பிரியாணியை ஒரு கைப்பிடிக்க அடித்து, பிடித்துக் கொண்டு ஓடி இடம் பிடித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.


via News J : https://ift.tt/eMC1Xxy
Mediaபண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் அதிரடியாக கைது செய்யப்பட்டிருந்த செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீடு செய்து வந்த நிலையில், அவரது மேல் முறையீட்டு மனுவிற்கு இன்றைக்கு உச்சநீதிமன்றம் தடாலடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.  அவரது மேல்முறையீட்டு மனுவினைத் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.  செந்தில் பாலாஜி தொடர்ந்து மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தால் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வருகின்றது. அதாவது அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம். இதன் மூலம் மீண்டும் மீண்டும் செந்தில் பாலாஜியால் மேல்முறையீடு செய்து வந்ததற்கு கிடுக்குப்பிடி போட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

via News J : https://ift.tt/T3JMyK8
Mediaஇந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதானது இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அதற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலான “நாட்டு நாட்டு” பாடல் விருது வாங்கியிருந்ததே முதன்மைக் காரணம் என்று சிலர் சொன்னாலும், எலிபெண்ட் விஷ்பெரர்ஸ் ஆவணப்படத்திற்கு விருது கிடைத்ததுதான் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். முக்கியமாக யானைப் பராமரிப்பாளர்கள் பொம்மன் – பெள்ளி ஆகிய இருவர்களுக்கும் மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருந்தது. இது தமிழ்நாட்டிற்கான பெருமையாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எலிபெண்ட் விஷ்பெரர் ஆவணப் பட இயக்குநரின் மீது புகார் ஒன்றினை தெரிவித்துள்ளனர் பொம்மன் – பெள்ளி தம்பதிகள். என்ன குற்றச்சாட்டு என்பதை பின்வருமாறு காண்போம்.நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த இரு யானை குட்டிகளையும், அவற்றை பராமரித்து வந்த பழங்குடி பாகன் தம்பதி இடையிலான பாச உறவினை மையமாக வைத்து, இயக்குநர் கார்த்திகி எடுத்த, ‘த எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்துக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிட்டியது. இந்த ஆவணப்படத்தின் மூலம் யானைக் குட்டிகள் ரகு, பொமிமி மற்றும் பாகன் தம்பதி பொம்மன் – பெள்ளி ஆகியோரின் புகழ் உச்சத்தை தொட்டது. அப்படி உச்சத்தைத் தொட்டவர்களை படத்தின் இயக்குநர் எள்ளளவு கூட மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நேற்றைக்கு முன் தினம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள்  முதுமலைக்கு நேரில் வந்து தம்பதிகளைப் பாரட்டினார். இந்த நிலையில்தான், ”படத்தின் இயக்குநர் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை” என்று பகிரங்க புகார் ஒன்றினை பாகன் தம்பதி சாட்டினார்கள்.Kartiki Gonsalves shares cute pic of The Elephant Whisperers' Bomman and Bellie holding Oscar trophy. 'My heart,' say netizens - India Todayஇயக்குநர் கார்த்திகி பாகன் தம்பதிக்கு வீடு கட்டித் தருவதாகவும், பண உதவி செய்து தருவதாகவும் கூறியிருந்திருக்கிறாராம். ஆனால் இதுவரை எந்த உதவியையும் இயக்குநர் இதுநாள் வரை செய்யவில்லை. இந்தக் கருத்தினை தம்பதிகள் இருவருமே கூறினர். மேலும் இயக்குநர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.காட்டின் பல்லுயிர்த் தன்மை நிலைத்து இருப்பதற்கு காரணம் யானைகள்தான். அப்படிப்பட்ட யானைகளின் வாழ்நிலை சூழலை படம் பிடிப்பது, யானைப் பாகன்களை வைத்து தங்களுக்கான காரணிகளை எடுத்துக்கொண்டு அவர்களை சக்கையாக விட்டெறியும் அதிகாரவர்க்கங்கள் எளிய மக்களின் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/D9HiLtZ
Mediaவிடியா அரசு பதவி ஏற்ற முதல் தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருள்களின் கடத்தல் அதிகரித்து வருகிறது. கடத்தல் கும்பலைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறுவதாகவும் புகார்கள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.ஏழை, எளிய மக்களுக்கு வழங்குவதற்கு என விநியோகிக்கப்படும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் பலவும் அரசு அதிகாரிகள் துணையுடன் கடத்தப்பட்டு வருகிறது.விடியா அரசு பதவியேற்ற நாள் முதல் ரேஷன் பொருள்களின் கடத்தல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்திலிருந்து எல்லை வழியாக கர்நாடகா, கேரளா, ஆந்திரா மாநிலத்திற்கு ரேஷன் பொருட்கள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த காவல்துறையினர் திணறி வருகின்றனர்.தமிழகத்தில் நுகர்வோர்களுக்கு வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மலிவு விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகாவில் நல்ல விலை கொடுத்து வாங்கப்படுகிறது. இதை வைத்து லாபம் சம்பாதிக்க நினைக்கும் அரசு அதிகாரிகள் சிலர் ரேஷன் கடை ஊழியர்களை கூட்டு சேர்த்து பொருள்களை ஏழை மக்களுக்கு வழங்காமல் கடத்துகின்றனர்.ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசியை அந்தந்த பகுதியில் உள்ள ஒருசில நபர்கள் விலை கொடுத்து வாங்கி அதனை சரியான முறையில் பளபளவென தீட்டி ரயில், லாரிகள் மூலம் கடத்தி வருகின்றனர். கடத்தல் தொடர்பாக புகார் தெரிவிக்க இலவச தொலைபேசி எண் வழங்கப்பட்டிருந்தாலும், அதற்கு வரும் புகார்கள் குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.பெயரளவுக்கு சில கடத்தல் கும்பல் கைது செய்யப்பட்டிருந்தாலும், அவர்களும் விரைவில் விடுவிக்கப்படுகின்றனர். இதனால் ரேஷன் பொருள்கள் கடத்தல் என்பது தொடர்கதையாகி வருகிறது.கடந்த அதிமுக பொற்கால ஆட்சியில் ரேஷன் பொருள்கள் கடத்தல் கும்பல் இரும்புக்கரம் கொண்டு தடுக்கப்பட்டனர். ஆனால் இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் கடத்தல்கள் அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்புத்துறை, காவல்துறையினர் பெயரளவிற்கு மட்டுமே நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

via News J : https://ift.tt/nKFqIzd
Mediaதிருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவர். ஆனால் இங்கு தொண்ணூறுகளின் குழந்தைகள் தங்களுக்கு திருமணமே நடக்காதா என்று ஏங்கிப் போய் உள்ளனர். ஆனால் பாகிஸ்தான் மணமகள் ஒருவருகூகு ஜோத்பூரில் ஆன்லைன் திருமணம் நடந்துள்ளது. தற்போது இந்த செய்திதான் இந்தியாவையே கலக்கி வருகிறது.இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே கசப்புகள் இருப்பது அனைவரும் அறிந்ததே. பாகிஸ்தானைச் சேர்ந்த மணப்பெண்ணான அமீனா இந்தியாவுக்கு வருவதற்கு விசா கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இந்த ஆன்லைன் திருமணத்தை இரு வீட்டார்களும் கூடிப்பேசி முடித்துவைத்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரைச் சேர்ந்தவர் அர்பாஸ் கான். ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். இவரின் உறவினர்களில் பலர் பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்டு அங்கு வசித்து வருகின்றனர்.Cross-Border Love: Pakistan woman virtually marries Jodhpur man after failing to get Indian visaஇவர்கள் கராச்சியைச் சேர்ந்த அமினா என்ற பெண்ணை அர்பாச் கானுக்கு மணமுடிக்க திட்டமிட்டிருந்தனர். இரு குடும்பத்தாருக்கும் இதில் சம்மதம் என்றானபின், அர்பாஸ் கானிற்கும் அமினாவிற்கும் ஜோத்பூரில் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. மணப்பெண் அமினாவிற்கு இந்தியா வருவதற்கான விசா பெறுவதில் சிக்கல் ஏற்பட்டதால், ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக சமீபத்தில் அர்பாஸ் கானின் குடும்பத்தினர், சுற்றத்தார், நண்பர்கள் அனைவரும் ஜோத்பூரில் கூடினர். அதேபொல அமீனாவின் குடும்பத்தினர் கராச்சியில் பங்கேற்றனர். ஜோத்பூர் ஹாஜி, இசுலாமிய முறைப்படி இந்த திருமணத்தை நடத்தி வைத்தார். விரைவில் தன் இணையர் அமினா விசா கிடைத்து ஜோத்பூர் வருவார் என்று அர்பாஸ் கான் வழிமீது விழி வைத்துக் காத்துக்கொண்டிருக்கிறார்.

via News J : https://ift.tt/8zXNZVQ
Mediaசிவகாசியில் பேஸ்புக் மூலம் பழகிய நபரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்து தலைமறைவான பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பெண்ணின் ஆசை வார்த்தைக்கு மயங்கி பல லட்சத்தை பறிகொடுத்த நபரின் பரிதாப நிலை குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.பேஸ்புக் மூலம் பழகிய நபரிடம் 12 லட்சத்தை அபேஸ் செய்து தலைமறைவாகியுள்ளார் இந்த தில்லாலங்கடி பெண்…ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தாலுக்காவை சேர்ந்தவர் 41 வயதான ரமேஷ். இவர் அங்குள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் காண்டிராக்டராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரமேஷ் தனது பேஸ்புக் மூலம் சிவகாசி, ஆலங்குளத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி பேச்சியம்மாளிடம் அறிமுகம் ஆகி கடந்த 1 வாரமாக தோழமையுடன் பழகி வந்துள்ளார்.அப்போது பேச்சியம்மாள் தான் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாகவும், 380 கிராம் தங்க நகைகள் வங்கி மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதாகவும், அவற்றை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி நகைகளின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனைக் கண்டு மயங்கிய ரமேஷ், அந்த பழைய நகைகளை வாங்க முடிவு செய்து, ஈரோட்டில் இருந்து தனது நண்பர்கள் 2 பேருடன் சிவகாசி வந்துள்ளார்.இதனையடுத்து சிவகாசிக்கு சென்ற ரமேசை சந்தித்த பேச்சியமாள், விருதுநகர் ரோட்டிலுள்ள ஒரு வங்கிக்கு அழைத்துச் சென்று, இந்த வங்கியில் தான் பழைய நகைகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பின்னர் அவற்றை மீட்பதற்காக ரமேஷிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார். இதனையடுத்து ரமேஷின் நண்பர்கள் 2 பேரையும் வங்கியின் முன்பு நிற்க சொல்லிவிட்டு, பேச்சியம்மாள் தனது இருசக்கர வாகனத்தில் ரமேசை மட்டும் அழைத்துக் கொண்டு சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு வங்கிக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாக்கி பணம் 1 லட்சத்து 58 ஆயிரத்தையும் ரமேஷிடத்தில் கேட்டு வாங்கியுள்ளார். இவற்றைக் கண்ட ரமேஷ், 3 வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைகளை மீட்டு நமக்கு தரப்போகிறார் என எண்ணிய நிலையில் தான் அதிர்ச்சி சம்பவம் காத்துக் கொண்டிருந்தது.அப்போது திடீரென தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு தில்லால்லங்கடியான பேச்சியம்மமாள் சிட்டாக பறந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரமேஷ், தான் ஏமாற்றப்பட்டதை தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப் பதிந்த போலீசார், தலைமறைவான ஆலங்குளத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரின் மனைவி பேச்சியம்மாள் மீது மோசடி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.ஈரோடு நபரிடம் 12 லட்சத்து 58 ஆயிரத்தை இளம்பெண் மோசடி செய்துவிட்டு பறந்து சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

via News J : https://ift.tt/ndj5aWv
Mediaகன்னியாகுமரி அருகே சொகுசு காரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடத்திச் சென்ற இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். காரை விற்பனை செய்வதற்காக ஆன்லைனில் விளம்பரம் செய்தவர் ஏமாந்தது எப்படி? கடத்தலில் ஈடுபட்டவர் சிக்கியது எப்படி? என்பது குறித்து காண்போம்.நடிகர் வடிவேலுவின் காமெடி பாணியில், சொகுசு காரை ஓட்டி பார்ப்பதாக கூறி கடத்திச் சென்றதற்காக கைது செய்யப்பட்டிருக்கிறார் இந்த இளைஞர்.கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே உள்ள மேட்டுகுடியிருப்பு பகுதியில், விருதுநகரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவர் தங்கி இருந்து துணி வியாபாரம் செய்து
வருகிறார். இவர் தனது சொகுசு காரை விற்பனை செய்வதற்காக செல்போனில் ஆன்லைன் மூலமாக விளம்பரம் செய்துள்ளார்.பின்னர் ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து தொடர்பு கொள்வதாக கூறிய நபர் ஒருவர், காரை வாங்கிக் கொள்வதாக கூறி அஞ்சுகிராமம் நான்கு வழி சாலை அருகே காரை கொண்டு வருமாறு பிரசாந்திடம் கூறியுள்ளார். இதனை நம்பிய பிரசாந்த், தனது காரை அந்நபர் குறிப்பிட்ட இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.அப்போது மற்றொரு காருடன் காத்திருந்த அந்நபர், சொகுசு காரை ஓட்டிப் பார்த்த பின்னர், விலை உள்ளிட்ட விவரங்களை பேசிக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளார். இதனை நம்பி சாவியை கொடுக்கவே, சொகுசு காரை ஓட்டி சென்ற அந்நபர் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.இதனால் அதிர்ச்சி அடைந்த பிரசாந்த், அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அந்நபர் விட்டுச் சென்ற மற்றொரு காரை சோதனை செய்தனர். அப்போது சம்பவ இடத்தில் மதிப்பு குறைந்த காரை விட்டுவிட்டு, சொகுசு காரை திட்டமிட்டு திருடிச் சென்றது உறுதியானது. விசாரணையில் சொகுசு காரை திருடி சென்றது குருந்தன்கோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது.இதனையடுத்து சிவக்குமாரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து கடத்தப்பட்ட சொகுசு காரை மீட்டதுடன், அவர் சம்பவ இடத்தில் விட்டுச்சென்ற மதிப்பு குறைந்த காரையும் பறிமுதல் செய்தனர். ஆன்லைன் விளம்பரத்தைப் பார்த்து காரைத் திருடிச் சென்ற இளைஞரின் செயல் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

via News J : https://ift.tt/U84oJIw
Mediaசந்திரயான் – 3 விண்கலமானது நிலவின் சுற்றுவட்டப் பாதைக்குள் அனுப்பட்ட நேரத்தில் காணொளி ஒன்றினை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பியுள்ளது. அந்த காணொளியினை இஸ்ரோ அமைப்பானது நேற்று வெளியிட்டிருந்தது.கடந்த மாதம் ஜூலை 14 ஆம் தேதி நிலவின் தெற்கு பகுதியினை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் – 3 என்ற விண்கலத்தை விண்ணில் ஏவியிருந்தது இஸ்ரோ. வெற்றிக்கரமாக 23 நாட்கள் பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று முன் தினம் இரவு 7 மணிக்கு நிலவுக்கான சுற்றுப்பாதைக்குள் நினைத்ததுபடியே நுழைந்தது. அவ்வாறு நிலவின் சுற்று வட்ட பாதைக்குள் ‘சந்திரயான் – 3’ விண்கலம் அனுப்பப்பட்ட நேரத்தில் அந்த விண்கலத்தில் பொருத்தப்பட்டு இருந்த உயர் தொழில்நுட்ப கேமாரா தான் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்து இருக்கிறது. இந்தக் காணொளிக் காட்சிகளை இஸ்ரோ தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது. இந்த காணொளி கிட்டத்தட்ட 45 வினாடிகள் ஓடக்கூடியது. நிலவின் மேற்பரப்பு பகுதிகளும், விண்கலத்தின் சில பகுதிகளும் தெளிவாக தென்படுகின்றன. அதிலும் நிலவின் மேற்பரப்பானது மிக அழகாக காட்சியளிப்பை காண முடிகிறது.சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் செல்லும் ‘சந்திரயான் – 3’ விண்கலமானது அதிகபட்சம் என்ற கணக்கில் பதினெட்டாயிரம் கிலோ மீட்டராகவும், குறைந்தபட்சம் 100 கிலோ மீட்டர் அளவிலும் சுற்றி வர உள்ளது. வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திரயான் – 3 விண்கலம் மென்மையான முறையில் தரையிரங்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. நிலவில் தரையிரங்கிய பிறகு, நிலவின் மேற்பரப்பு தொடர்பான தரவுகளை சந்திரயான் – 3 வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

via News J : https://ift.tt/c6MaJCq