Mediaவிலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத செயல்கள் உள்ளிட்டவற்றில் விடியா திமுக அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் விமர்சித்துள்ளார்.மதுரை கே.கே. நகர் பூங்கா அருகே வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெற உள்ள எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார். பின்னர் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஓட்டி பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் பி.சரவணன், எஸ்.எஸ்.சரவணன், கே. தமிழரசன், மாணிக்கம், மாநில அம்மா பேரவை நிர்வாகிகள் இளங்கோவன், வெற்றிவேல் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சீர்கேடு, மக்கள் விரோத செயல்கள் மற்றும் பொய் சொல்வதில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு கின்னஸ் சாதனை படைத்துள்ளது என விமர்சித்தார்.மேலும் ஆட்சிக்கு வந்தால் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் என பொய்யான தேர்தல் வாக்குறுதி அளித்த விடியா அரசு, ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளாகும் நிலையிலும், இதுவரை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் ஒரு கோடியே 10 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/X41Typn
via News J : https://ift.tt/X41Typn
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களீன் அறிக்கைபட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று வாயில் வடை சுடும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!“கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள்” என்று சொல்வார்கள். இந்த விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவிழ்த்துக் கொட்டும் புளுகு மூட்டைகளின் ஆயுள் 8 நிமிடம் கூட இருப்பதில்லை. பொய்யும், புரட்டும் சொல்லி நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அளித்து, பின்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்த விடியா திமுக அரசின் 27 மாத ஆட்சிக் காலத்தின் மக்கள் சொல்லொண்ணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள்.ஒட்டுக்காக “நாங்கள் சிறுபான்மையினரின் பாதுகாவலர்கள், சமூக நீதியைக் காப்பதே எங்கள் உயிர் மூச்சு, ஆதிதிராவிட மக்களின் சம்பந்தி நாங்கள்” என்றெல்லாம் வாய் ஜாலம் காட்டும் பம்மாஹ்து பேர்வழி ஆட்சியாளர்களின் வெகுஜன விரோத செயல்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, தமிழகத்தை நிலைகுலையச் செய்துள்ளது. இந்த மக்கள் விரோத ஆட்சியில் தலை முதல் கால்வரை சுயநல நோய் புரையோடிப் போய் சமுதாயத்தை சீரழித்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.தென்காசி மாவட்டம், கடையம் ஒன்றியம், வெங்காடம்பட்டி ஊராட்சியில் லெட்சுமியூர், ஆறுமுகப்பட்டி ஆதிதிராடிவர் காலனியில் வசிக்கும் சுமார் 40 வீடுகளுக்கு குடிநீர் வசதி இல்லை என்றும், குடிநீர் குழாய் இணைப்பு வழங்கக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் திருமதி கே. ஜனதா அவர்களிடம், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் முறையிட்டுள்ளனர்.ஆதிதிராவிட மக்களின் கோர்கையினை ஏற்று, கழக ஒன்றியக் கவுன்சிலர் திருமதி ஜனதா உடனடியாக ஆதிதிராவிடர் காலனியில் பைப் லைன் அமைத்து வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க தனது உறுப்பினர் நிதியில் இருந்து 5.10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, பைப் லைன் அமைக்கும் பணிகள் பல மாதங்களுக்கு முன்பே முடிவைடைந்த நிலையில், ஆதிதிராவிடர் காலனிக்கு திமுக-வைச் சேர்ந்த கடையம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரும், வெங்கடாம்பட்டி ஊராட்சி மன்றத் தலைவரும் திட்டமிட்டு, ஆறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனி வீடுகளுக்கு பல்வேறு சாதனங்களைக் கூறி குழாய்களில் குடிநீர் திறந்துவிடவில்லை.மேலும், வெங்கடாம்பட்டி ஊராட்சியில், குடிநீர் திறந்துவிடாததற்கு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அவலமும் நடந்தேறியுள்ளது. இந்த நிகழ்வு குறித்து அறிந்தவுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள், கடையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, உடனடியாக லெட்சுமியூர், அறுமுகப்பட்டி ஆதிதிராவிடர் காலனிக்கு தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.பட்டியலின மக்களின் பாதுகாவலர் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக ஆட்சியில், பட்டியலின மக்கள் சொல்லொண்ணாத் துயரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் வசதியைக் கூட கொடுப்பதில் இந்த விடியா திமுக அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. ஏற்கனவே, புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் தமிழகமே தலைகுனியும் வகையில் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வில், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என்று நாடகமாடி வரும் நிலையில், தற்போது, ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் காலனிக்கே குடிநீர் வழங்காமல் தடுக்கும் திமுக-வினரின் முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்த அவலங்களைப் பற்றி திமுக-வின் கூட்டணியில் அங்கம் வகிக்கும், பட்டியலின மக்களின் பாதுகாவலர்கள் என்று கூறிக்கொள்பவர்களும், அனைவரும் சமம் என்று பேசும் பொதுவுடமைவாதிகளும் வாய்மூடி மவுனமாக இருப்பது விந்தையாக உள்ளது.தமிழ் நாட்டில் பட்டியலின மக்களுக்கு இதுபோன்ற கொடுமைகள் தொடர்ந்தால், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்காது என்று விடியா திமுக அரசை எச்சரிக்கிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
via News J : https://ift.tt/fxBp2vI
via News J : https://ift.tt/fxBp2vI
Mediaசென்னை வண்ணாரப்பேட்டையில் துரித உணவகத்தில் சாப்பிட்டு விட்டு, மது போதையில் கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய மர்ம நபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துரித உணவக கடை ஊழியர்கள் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியதற்கான காரணம் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம்.சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், ஆத்திரமடைந்த போதை ஆசாமிகள் ராடை எடுத்து கடை ஊழியர்களுக்கு லாடம் கட்டிய காட்சி தான் இது.சென்னை வண்ணாரப்பேட்டை ஜே.பி கோயில் தெருவில், கடந்த 22 வருடமாக துரித உணவகம் ஒன்றை ராஜேந்திரன் என்பவர் நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது கடைக்கு சாப்பிட வந்த இருவர், சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் வெளியே சென்று உள்ளனர்.அப்போது வெளியே சென்ற நபர்களை பார்த்து, கடையில் வேலை செய்த ஊழியர் காசு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து மது போதையில் இருந்த இருவரும், என்னிடமே காசு கேட்கிறாயா என தகராறு செய்துவிட்டு சென்றுள்ளனர். இதனால் கடையில் ஏற்பட்ட பரபரப்பு அடங்காத சிறிது நேரத்திலேயே, வெளியே சென்ற இருவரும், மீண்டும் ஆறு நபர்களுடன் திரும்பி வந்து கடையில் தகராறில் ஈடுபட்டனர்.அப்போது கடையில் வேலை செய்த கார்த்திக், வேல்முருகன் உள்ளிட்டோரை போதை ஆசாமிகள், தாங்கள் கொண்டு வந்த இரும்பு ராடால் சரமாரியாக தாக்கி, மண்டை, வாய் ஆகியவற்றை உடைத்து உள்ளனர். அப்போது கடையினுள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் சிலர் அலறியடித்துக் கொண்டு கடையின் கிட்சனுக்குள் புகுந்து தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.ஆத்திரம் தணியாத போதை ஆசாமிகள் கடையில் உள்ள சாமான்கள், டைனிங் டேபிள் ஆகியவைகளை உடைத்து விட்டு, ஒன்றுமே நடக்காதது போல கேஷுவலாக வெளியே சென்றனர். இதனையடுத்து தாக்குதலில் படுகாயமடைந்த ஊழியர்களான வேல்முருகன், கார்த்திக் ஆகியோர் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.இது தொடர்பாக தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,
சிசிடிவி காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், போதை ஆசாமிகள் ஹோட்டலை சூரையாடிய சம்பவம் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/HDarMX1
சிசிடிவி காட்சிகளை கொண்டு தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகளை தேடி வருகின்றனர்.சாப்பிட்டதற்கு பணம் கேட்டதால், போதை ஆசாமிகள் ஹோட்டலை சூரையாடிய சம்பவம் வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/HDarMX1
Mediaஉச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவு மனு தாக்கல் செய்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது. அதனை நீதிபதி அல்லி அமர்வானது விசாரித்து தீர்ப்பு வழங்கியது. அதன்படி செந்தில்பாலாஜியை இன்றிலிருந்து ஆகஸ்ட் 12 வரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே எட்டாம் தேதியுடன் மேலும் புழல் சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையிடம் ஆஜர்ப்படுத்தவும் அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம். ஏற்கனவே செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்க பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் அவரது உடல்நிலையும் கருத்தில் கொள்ளப்படும் என்று அமலாக்கத்துறையானது கூறியுள்ளது.
via News J : https://ift.tt/vg1PrR7
via News J : https://ift.tt/vg1PrR7
Mediaவிடியா ஆட்சியில் ஊழல் ஊறி, புரையோடி போனதன் விளைவாக அரசு மருத்துவமனைகளில் மரண ஓலம் நின்றபாடில்லை. அலட்சியத்தால் ஏற்பட்ட உயிர் பலி மீது நடவடிக்கை எடுத்தால், எங்கே ஆட்சியை குறை கூறி விடுவார்களோ எனும் எண்ணத்தில், தவறிழைத்தவர்களின் பாதுகாப்பு கேடயமாய் செயல்பட்டு வருகிறது விடியா அரசு.என்ன நடந்தது?இவ்வாறு ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள முயலும் தொடை நடுங்கி விடியா அரசால், எந்த தவறும் செய்யாத ஒன்றரை வயது குழந்தையின் உயிர் இன்று அநியாயமாக பறிபோயுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தஸ்தகீர் – அஜிஸா தம்பதியின், ஒன்றரை வயது குழந்தைக்கு தலையில் ரத்தக் கசிவு, இதயத்தில் கோளாறு உள்ளிட்ட பிரச்னைகள் இருந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட உடல்நிலை கோளாறு காரணமாக, கடந்த ஜூன் 25-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது.அன்றிரவே குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், குழந்தையின் வலது கையில் ட்ரிப்ஸ் போடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஜூன் 27-ம் தேதி குழந்தையின் கையில் வீக்கம் ஏற்பட்டு, விரல்கள் வீங்கத் தொடங்கின. மருத்துவர்கள் பரிசோதித்ததில், குழந்தையின் கை அழுகிவிட்டதாகவும், கையை அகற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, ஜூலை 1-ம் தேதி குழந்தை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தையின் வலது கை அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.மருத்துவத்துறையின் அவலம்..!குழந்தையின் நிலைக்கு மருத்துவமனையின் அலட்சியமும், தவறான சிகிச்சையும்தான் காரணம் என பெற்றோர் கண்ணீர் மல்கக் குற்றம்சாட்டினர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதையடுத்து, விடியா அரசு பெயருக்கென மூவர் அடங்கிய விசாரணை குழுவை அமைத்தது. இறுதியில் தவறான சிகிச்சை காரணமல்ல எனவும், வேண்டுமானால் குழந்தையின் பெற்றோர்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து கொள்ளட்டும் எனவும் கிண்டல் செய்யும் பாணியில் பதிலளித்தார் விடியா அமைச்சர் மா.சுப்பிரமணியன். இந்நிலையிலேயே உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் ஒன்றரை வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.அலட்சிய அரசு..!இதே போன்று தான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை வியாசர்பாடியில் ஏழ்மை குடும்பத்தைச் சேர்ந்த 17 வயதேயான கால்பந்து வீராங்கனை பிரியாவுக்கு, மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் வலது கால் அகற்றப்பட்டது. பின்னர் தொடர் சிகிச்சையில் இருந்து வந்த வீராங்கனை பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து கால்பந்தில் சாதிக்க வேண்டும் என எண்ணிய வீராங்கனையின் உயிரிழப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவியத் தொடங்கின. இதனால் பயந்து போன விடியா அரசு, பெயருக்கு 2 மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து விட்டு, நிவாரணம் வழங்கி நீலிக்கண்ணீர் வடித்தது.இந்நிலையில் மாரத்தான் போட்டிகளில் பங்கேற்று விளம்பரம் தேடுவதில் காட்டும் முனைப்பை, சிறிதளவேனும் அமைச்சர் மா.சு துறையில் காட்டியிருந்தால் பெருமளவிலான உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். அலட்சியத்தால் உயிரை காவு வாங்கும் விடியா அரசின் ரத்த தாகம் எப்போது தணியும் எனவும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
via News J : https://ift.tt/NLnvSUm
via News J : https://ift.tt/NLnvSUm
Mediaதிமுக ஆட்சியை எந்தக்கொம்பனாலும் ஆட்டவோ அசைக்கவோ முடியாது என்று கெத்தாக பேசிக்கொண்டிருந்த ஸ்டாலினின் ஆசையில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது உச்சநீதிமன்றத்தின் உத்தரவு…கபில் சிபல், முகுல் ரோஹத்கி என்று நாட்டிலேயே உச்சபட்ச கட்டணம் வாங்கும் சுமார் 18 முன்னணி வழக்கறிஞர்களை செந்தில்பாலாஜிக்கு ஆதரவாக களத்தில் இறக்கிவிட்டது திமுக.. ஆனால் எத்தனை தீயசக்திகள் ப்ளான் செய்தாலும் நீதிசாகுமா? நீதியை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த, ஏமாந்துபோன மக்களுக்கு ஆறுதல் தரும் அளவிற்கு உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்த உத்தரவைக் கேள்விப்பட்டதும் கதிகலங்கிப்போயிருக்கிறது திமுக…இதில் சிறப்பே என்னவென்றால், செந்தில்பாலாஜி ஒரு ஊழல்வாதி, அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று சொன்ன கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவுநாளான இன்று அவருடைய ஆசை நிறைவேறியிருக்கிறது என்று அறிவாலயத்து உடன்பிறப்புகளே உள்ளூர உச்சுக்கொட்டுகிறார்கள்…ஆனால், தங்கள் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை, செந்தில்பாலாஜி மீது கைவைத்தால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம் என்றெல்லாம் வீடியோவில் வீர வசனம் பேசிய ஸ்டாலின் இப்போது என்ன செய்துகொண்டிருப்பார்? என்பது ஒருபுறம் என்றால், 5 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரித்தால் என்னென்ன ரகசியங்கள் எல்லாம் வெளிவரப்போகுதோ ? என்று திமுகவினரின் அடிவயிற்றில் புளியைக் கரைத்துக்கொண்டிருக்கிறது இந்த இந்த தீர்ப்பு…பிடிஆரின் 30ஆயிரம்கோடி ஊழல் ஆடியோ விவகாரம், அதற்கு பிறகு அவருக்கு நடந்த துறை மாற்ற நடவடிக்கை, செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் தலைமறைவு போன்ற இந்த தொடர்நிகழ்வுகளை கூட்டிக்கழித்துப் பார்த்தால், திமுகவினரின் இந்த பயம், ஸ்டாலின் குடும்பத்தினரின் பயம் என்று எல்லோரும் பயப்படுவதற்கான காரணத்தை புரிந்துகொள்ளலாம்…மக்களின் வரிப்பணத்தை வீணடித்து, இலாகா இல்லாத மந்திரியாக, புழல் சிறையில் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கும் பைனாப்பிள் கேசரி பிரியர் அமைச்சர் செந்தில்பாலாஜியை இனி எப்படி விசாரிக்கப்போகிறது அமலாக்கத்துறை? புழல் சிறையிலேயே வைத்து விசாரிக்குமா? அல்லது ஏற்கனவே ஊழல் புகாரில் சிக்கிய ஆம்ஆத்மி அமைச்சர்களை விசாரிக்கும், திகார் சிறைக்கு அழைத்துச்சென்று விசாரிக்குமா? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியே.
via News J : https://ift.tt/zPfGVDg
via News J : https://ift.tt/zPfGVDg
👍1
Mediaநேற்று இரவு புழல் சிறையிலிருந்து விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார் செந்தில் பாலாஜி.செந்தில் பாலாஜியை கைது செய்தது சரிதான் அவரை ஐந்து நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அனுமதி அளித்து அதிரடி தீர்ப்பு வழங்கியிருந்தது.அதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜியிடம் பத்துக்கு மேற்பட்ட அமலாக்கத் துறையினர் தீவிர விசாரணையினை நேற்று மேற்கொண்டிருந்தனர். தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.செந்தில் பாலாஜி வழக்கு கடந்து வந்தபாதை!அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில், அவரை விடுவிக்கக் கோரி அவருடைய மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு மாறுபட்ட தீர்ப்பை அளித்தனர். இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த, 3-வது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன், நீதிபதி டி.பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார். அவர் தனது தீர்ப்பில், செந்தில் பாலாஜியும் சட்டத்துக்கு உட்பட்டவர்தான் என்பதால் அவரை அமலாக்கத் துறை கைது செய்தது செல்லும் என்றும், அவர் பரிபூரணமாகக் குணமடைந்த பிறகு அவரை காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்றும் தீர்ப்பளித்தார்.இந்தத் தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபலும் அமலாக்கத் துறை தரப்பில் துஷார் மேத்தாவும் ஆஜராகி தங்கள் வாதத்தை முன்வைத்தனர். செந்தில் பாலாஜியை தனிப்பட்ட முறையில் காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கை தேதி குறிப்பிடாமல் தீர்ப்புக்காக கடந்த ஆக.2ம் தேதி உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்திருந்தது.இந்நிலையில், இந்த வழக்கில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பிறப்பித்த தீர்ப்பில், “செந்தில் பாலாஜி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தனர். அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டப்படி சரியான நடவடிக்கை. அதேபோல குற்றவியல் நடைமுறை சட்டம் 167 உட்பிரிவு (2)ன்- கீழ் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும்போது அந்த நபரை காவலில் வைக்கலாம் என கூறுகிறது. அது நீதிமன்ற காவலாகவும் இருக்கலாம் என்ற புரிதலின் அடிப்படையில் செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல எனவும், மேலும் அமலாக்கத் துறையினர் ஒருவரை கைது செய்யும் போது 15 நாட்களுக்கு மேல் காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பான விவகாரத்தில் ஏற்கெனவே உச்ச நீதிமன்றம் வழங்கிய அனுப்பம் ஜே குல்கர்னி என்ற வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டி உள்ளது. எனவே அந்த குறிப்பிட்ட விவகாரத்தை மட்டும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர். அமலாக்கத் துறையினர் அடுத்த ஐந்து தினங்களுக்கு அதாவது ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.தொடரும் விசாரணை!அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜராகியிருந்த மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் என சுட்டிக்காட்டினார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “செந்தில் பாலாஜியின் உடல் நலத்தை நாங்கள் பார்த்துக் கொள்வோம்” என்று தெரிவித்தார். இதனையடுத்து நிலுவையில் இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி 10க்கும் மேற்பட்ட அமலாக்க துறையினர் சென்னை போலீஸ் சிறைச்சாலையில் இருந்து செந்தில் பாலாஜியை அழைத்து வந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்தில் இருக்கக்கூடிய அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து தற்பொழுது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனைத் தொடர்ந்து இன்றைக்கு இரண்டாவது நாளாக செந்தில்பாலாஜியினை அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேல்விசாரணைக்காக அமலாக்க துறையினர் காலை செந்தில் பாலாஜி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
via News J : https://ift.tt/9r2eivo
via News J : https://ift.tt/9r2eivo
Media170 கிராம் கொண்ட தயிர் பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், அவற்றை 70 கிராம் குறைத்துவிட்டு 100 கிராம் கொண்ட தயிர் பாக்கெட் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தஞ்சாவூர் ஆவின் ஒன்றியத்தில் இன்று எவ்வித முன்னறிவிப்புமின்றி தயிர் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். மேலும் பாதம் பால் பவுடர், வெண்ணை விலையை கடந்த வாரம் உயர்த்திய நிலையில் இன்று ஆவின் தயிர் விலையை உயர்த்தியுள்ளது ஆவின் நிர்வாகம். ஆவின் பால் பொருட்களின் விலைய படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில் இன்று தயிர் விலையை நூதன முறையில் ஆவின் நிர்வாகம் மறைமுகமாக உயர்த்தியுள்ளது.ஆவின் தயிர் விலை லிட்டருக்கு ரூ.10 உயர்ந்தது மட்டுமல்லாமல் ரூ.30 க்கு விற்பனை செய்யப்பட்ட அரை லிட்டர் தயிர் ரூ.35 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஆவின் பால் புவடர், வெண்ணெய் ஆகியவை கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று தயிர் விலையும் உயர்ந்துள்ளது.இந்த விடியா ஆட்சியில் தக்காளி, வெங்காயம் என்று தொடர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலையானது அதிகரித்து வண்ணம் இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ஆவின் நிறுவனமும் அதன் தயாரிப்புப் பொருட்களின் விலையை கிடுகிடுவென உயர்த்தியுள்ளது.
via News J : https://ift.tt/gjqzEWt
via News J : https://ift.tt/gjqzEWt
Mediaநம் மக்களில் உயர்தரப்பினர் சொகுசாகப் பயணிக்க மகிழுந்தினையே அதிகம் நாடுவார்கள். தங்களுக்கு பிடித்த கார் வகைகளை விரும்பி வாங்குவதிலும் அவர்கள் முனைப்புக் காட்டுவார்கள். அப்படி கார் வாங்குபவர்கள் அதிகரித்து வருவதால் இந்த ஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை உயரும்..!Types of Cars in India - Explained Different Types of Carsஆகஸ்ட் மாதம் வாகனங்களின் விற்பனை 59 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன முகவர்கள் சங்கம் கூட்டமைப்பானது நடத்திய ஆய்வில் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் வாகனங்களின் விற்பனையானது பத்து சதவீதம் அதிகரித்துள்ளது. அதே இது இந்த மாதத்தில் 12.28 இலட்சம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. மேலும் கடந்த ஆண்டு 2022-ல் ஜூலையில் 11.35 லட்சமாக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு விற்பனை 8.15 சதவீதமாக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல, 94,000 மூன்று சக்கர வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இது 2022-ல் 54,000 ஆக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் 74 சதவீதம் விற்பனை அதிகரித்து உள்ளது.கடந்த ஆண்டுகளில்…!ஜுலை மாதத்தில் பயணியர் வாகனம், 2.84 லட்சம் விற்பனையாகியுள்ளது. இது 2022ல் 2.73 லட்சமாக இருந்துள்ளது. அதாவது கடந்தாண்டினை ஒப்பிடும்போது இது 4 சதவீதம் வளர்ச்சியினை அடைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக, 17.70 லட்சம் வாகனங்கள் ஜூலையில் விற்பனையாகியுள்ளன, இது 2022 ஜூலையில் 16.16 லட்சம் ஆக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் விற்பனை வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆகவேதான் வாகன சங்க கூட்டமைப்பினர் நடத்திய ஆய்வில் இந்த ஆகஸ்ட் மாதத்தில் 59.84 சதவீதமாக வாகன விற்பனை வளர்ச்சி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, உயர் வர்க்கம் என்று அழைக்கப்படும் முதலாளிகள், பணம்படைத்தவர்களிடம் இருந்த கார் வாங்கும் ஆசையானது, படிப்படியாக மத்திய பிரிவினருக்கும் பரவிவிட்டது. நடந்து போவதை இந்த சமுதாயம் குறைவாக பார்க்கும்படியான நிலையை உருவாக்கிவிட்டது. சாதாராண கடைக்குக் கூட காரில்தான் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி கார் மோகம் கொண்டு இந்த தலைமுறையினர் இருக்கும் வரை காரின் உற்பத்தி அதிகரித்துக்கொண்டுதான் இருக்கும்.
via News J : https://ift.tt/1QbXl5W
via News J : https://ift.tt/1QbXl5W
Mediaசென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்களின் கேள்விக்கு தொடர்ச்சியாக பதிலளித்தார்.செந்தில் பாலாஜி இடம் நடைபெற்று வரும் விசாரணை குறித்த கேள்விக்கு :-இனிமேல் தான் ஆட்டம் ஆரம்பிக்கப் போகிறது, உப்பு தின்னவன் தண்ணீர் குடித்து
தான் ஆக வேண்டும் தப்பு செய்தவன் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்,
இந்நிலையில் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது, இந்த விசாரணையில் பல
திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும், ஸ்டாலினை பொறுத்த வரையில் தூங்க விடாமல் செய்வதாக சொன்னார், அமலாக்கத் துறை விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் இனி அவர்களுக்கு தூக்கமே இருக்காது.ஒரு அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி உள்ளார், இது தெரிய வந்தவுடன் ஜெயலலிதா அவர்கள் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு :-அதிமுக வின் சாதனைகள், திமுக ஆட்சியில் அவள நிலை, அதிகரிக்கும் வெடி குண்டு
கலாச்சாரம், கொலை கொள்ளை என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அவல நிலைக் குறித்து தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதுபதவி பணம் அதிகாரம் மட்டுமே திமுக வின் கொள்கைதற்போது தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரில் 10 சதவீதம் கூட இன்னும்
கிடைக்கப்பெறவில்லை இதற்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு கண்டனத்தைக் கூட
அறிவிக்கவில்லை, இதை கேட்க துணிச்சல் உண்டா? 38 அதிமுக எம்பிகள் காவேரி தண்ணீருக்காக போராடினார்கள் தற்போது திமுகவினர்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், பதவிக்காக நாங்கள் இல்லை உரிமைக்காக மட்டுமே நாங்கள் உள்ளோம் என தெரிவித்தார்.
via News J : https://ift.tt/CGx6EKQ
தான் ஆக வேண்டும் தப்பு செய்தவன் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்,
இந்நிலையில் நீதிமன்றம் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது, இந்த விசாரணையில் பல
திடுக்கிடும் உண்மைகள் வெளிவரும், ஸ்டாலினை பொறுத்த வரையில் தூங்க விடாமல் செய்வதாக சொன்னார், அமலாக்கத் துறை விசாரணை தொடங்கப்பட்ட நிலையில் இனி அவர்களுக்கு தூக்கமே இருக்காது.ஒரு அமைச்சராக இருந்து செந்தில் பாலாஜி வேலை வாங்கி தருவதாக கூறி அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தி உள்ளார், இது தெரிய வந்தவுடன் ஜெயலலிதா அவர்கள் அவரை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.தீர்மானங்கள் குறித்த கேள்விக்கு :-அதிமுக வின் சாதனைகள், திமுக ஆட்சியில் அவள நிலை, அதிகரிக்கும் வெடி குண்டு
கலாச்சாரம், கொலை கொள்ளை என தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் அவல நிலைக் குறித்து தீர்மானத்தில் கொண்டுவரப்பட்டுள்ளதுபதவி பணம் அதிகாரம் மட்டுமே திமுக வின் கொள்கைதற்போது தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீரில் 10 சதவீதம் கூட இன்னும்
கிடைக்கப்பெறவில்லை இதற்காக முதல்வர் ஸ்டாலின் ஒரு கண்டனத்தைக் கூட
அறிவிக்கவில்லை, இதை கேட்க துணிச்சல் உண்டா? 38 அதிமுக எம்பிகள் காவேரி தண்ணீருக்காக போராடினார்கள் தற்போது திமுகவினர்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், பதவிக்காக நாங்கள் இல்லை உரிமைக்காக மட்டுமே நாங்கள் உள்ளோம் என தெரிவித்தார்.
via News J : https://ift.tt/CGx6EKQ
Mediaசென்னைஆயிரம் விளக்கு தொகுதியில் 118வது வார்டில் உள்ள தெரு ஒன்றில் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக கழிவுநீர் தேங்கியிருப்பதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…மழை ஒன்றும் வானத்தை கிழித்துக் கொண்டு பெய்யவில்லை…. ஆனால் சென்னை ஆயிரம் விளக்குதொகுதி 118வது வார்டுக்கு உட்பட்ட பொன்னுசாமி தெருவில் தண்ணீர் சூழ்ந்து கிடக்கிறது. இது மழைநீர் அல்ல….. கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பால் தேங்கிக் கழிவுநீர். வெளியேற முடியாத கழிவுநீரில் கால் நனைத்துதான் வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள் அப்பகுதி பொதுமக்களும் பள்ளிக்கு மற்றும் வேலைக்கு செல்வோரும்.மழை நீர், கழிவு நீரில் மிதக்கும் பூந்தமல்லி, மாங்காடு; முறையான கட்டமைப்பு இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு | Dinamalarகோபாலபுரம் பகுதியில் கழிவுநீர் குழாய் அடைக்கப்பட்டிருப்பதால் இந்தப் பகுதியில் கழிவுநீர் தேங்கியிருப்பதாகவும், இங்குள்ள உணவகத்துக்கு வரும் சிறுவர்கள், பெரியவர்கள் கழிவுநீர் வழியாகவே வரவேண்டி இருப்பதால், நோய் தாக்கும் அபாயம் நிலவிக் கொண்டிருப்பதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.கழிவு நீர் தேங்கிக் கிடப்பது குறித்து திமுக கவுன்சிலர் மல்லிகா, திமுக நிர்வாகியான அவரது கணவர் யுவராஜ் ஆகியோரிடம் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.ஏற்கனவே கொசுத்தொல்லை அதிகரித்துள்ள இந்தப் பகுதியில் தற்போது கழிவுநீர் தேங்கிக் கிடப்பதால் கொசுத்தொல்லை கூடுதலாகி பல்வேறு நோய்கள் வரக்கூடிய அபாயம் இருப்பதாகவும் அச்சம் தெரிவிக்கின்றனர்.கடந்த நான்கு நாட்களாக ஏற்பட்டுள்ள இந்த கழிவுநீர் பிரச்சினையால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். உடனடியாக இப்பகுதியில் உள்ள கழிவுநீர் அடைப்பை சரி செய்ய வேண்டும் என அவர்கள் விடுத்துள்ள கோரிக்கை மாநகராட்சியின் செவிகளுக்கு எட்டுமா?
via News J : https://ift.tt/sbBlkIw
via News J : https://ift.tt/sbBlkIw
Mediaதஞ்சாவூர் அருகே பேருந்து நிறுத்தத்துக்கு சென்ற பயணியிடம் இருசக்கரவாகனத்தில் வந்து நகை பறித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தங்கச் சங்கிலி என்று நினைத்து வெள்ளிச் சங்கிலியை வழிப்பறி செய்தவர்கள் சிக்கியது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.இருசக்கரவாகனத்தில் வந்து பேருந்து பயணியிடம் வழிப்பறியில் ஈடுபட்டு போலீசில் சிக்கி இருக்கிறார்கள் இந்த செயின் கொள்ளையர்கள்.தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் செங்கிப்பட்டி சாலையில் உள்ள தட்டான் குளம் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த நபர் அணிந்திருந்த தங்கச் செயினை, அவ்வழியாக இருசக்கரவாகனத்தில் வந்த மூவர் அடங்கிய கும்பல் அறுத்துச் சென்றுள்ளனர். உடனடியாக அந்த நபர் கூச்சலிட அக்கம்பக்கத்தினர் சுற்றி வளைத்ததில் இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் மாட்டிக் கொண்டுள்ளனர். அவர்களைப் பிடித்து தர்ம அடி கொடுத்த அங்கிருந்தவர்கள், பூதலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.டவுண்ஷிப் பகுதியைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான முருகேசன், ராமலிங்கம் ஆகியோர், பூதலூர் அருகில் உள்ள முனியாண்டவர் கோயிலில் சாமி கும்பிட்டு விட்டு சொந்த ஊருக்குச் சொல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்தபோதுதான், முருகேசன் அணிந்திருந்த செயினை வழிப்பறி செய்துள்ளனர். இந்த செயின் தங்கம் அல்ல என்றும், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளிச் செயின் என்றும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.மேலும், செயின் பறிப்பில் ஈடுபட்டு பொதுமக்களிடம் சிக்கியவர்கள், திருவையாறு அடுத்த அம்மன்பேட்டை பகுதியைச் சேர்ந்த வீரமணி மற்றும் சாமிநாதன் என்பதையும் விசாரணையில் கண்டறிந்தனர். தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், திருவையாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் செயின் பறிப்பில் ஈடுபட்டு இருசக்கரவாகனத்துடன் தப்பி ஓடிய சந்தோஷ்குமார் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விடியா ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்பகலில் இருசக்கரவாகனத்தில் வந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட சம்பவமும் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
via News J : https://ift.tt/okFy9IC
விடியா ஆட்சியில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பட்டப்பகலில் இருசக்கரவாகனத்தில் வந்து செயின்பறிப்பில் ஈடுபட்ட சம்பவமும் ஆட்சியின் அவலத்தை அம்பலப்படுத்தி உள்ளது.
via News J : https://ift.tt/okFy9IC
Mediaகுடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும், பயணிகள் ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என திமுகவினர் வற்புறுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலவச வீடு திட்டம் மூலம் கட்டப்பட்ட வீடுகளுக்கு பணம் கேட்டு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபடும் செயல் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட யானைக்கவுனி ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் பழுதடைந்து காணப்பட்டதால், கடந்த 2019ல் அதிமுக ஆட்சியின் போது, புதிதாக 288 வீடுகள் கட்டவதற்காக 46 கோடியே 14 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்றது. மேலும் பயணாளிகள் எந்த வித பணமும் இந்த இலவச வீடுகளுக்கு கட்ட வேண்டாம் என கூறியதன் காரணமாக அப்பகுதிகள் வசித்து வந்த 260 குடும்பங்கள் அங்கிருந்து காலி செய்தனர்.தற்போது விடியா ஆட்சியில் இந்த பணிகள் முடிந்த நிலையிலும், இதுவரை பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கப்படவில்லை என பயனாளிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால், யானைக்கவுனி கல்யாணபுரம் பகுதியில் வசித்து வந்த மக்கள், தற்போது சவுகார்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.குறிப்பாக அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக, குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்படும் வீடுகளுக்கு, ஏழை எளிய மக்களிடம் பணம் பெறக்கூடாது என கூறி வந்த நிலையில், தற்போது ஆட்சிக்கு வந்ததும் வீடு பெற விரும்பும் ஒவ்வொரு பயனாளியும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் செலுத்தினால் மட்டுமே வீடு ஒதுக்கப்படும் எனக்கூறி வருவது பொதுமக்களிடேயே அதிர்ப்த்தியை ஏற்படுத்திருக்கிறது.இது நாள் வரை பயனாளிகளுக்கு வீடுகளை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், இதனால் வாடகை கொடுக்க முடியாமல் தவித்து வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.இதேபோல் பல்வேறு இடங்களில் பழுதடைந்த குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிக்கப்பட்டு, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள் என்ற பெயரில் கட்டப்படும் வீடுகளின் பணிகள் முடிவடைந்தும், ஏழை எளிய பயனாளிகளுக்கு வழங்காமல், பணம் கேட்டு திமுக நிர்வாகிகள் அராஜகத்தில் ஈடுபட்டுவருவதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
via News J : https://ift.tt/Rbq15Ly
via News J : https://ift.tt/Rbq15Ly
Mediaதேனியில் 2 கால்களும் முறிந்த பள்ளிச் சிறுமி நீண்ட நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் புறக்கணித்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் அய்யனார்-கற்பகவள்ளி தம்பதியினர். இவர்களது மூத்த மகள் ரூபிகா ஆசாரிபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இதனிடையே, ரூபிகா பள்ளி முடிந்து தனது வீட்டிற்கு திரும்பியபோது தெருவில் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டிருந்த திட்ட மதிப்பீடுக்கான விளம்பர சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் ரூபிகாவின் இரண்டு கால்களும் முறிந்த நிலையில் கால்களில் பிளேட் வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் மாணவி ரூபிகா மாவட்ட ஆட்சியரை சந்தித்து நிதி உதவி செய்து தரக்கோரி மனு அளிக்க வந்தார். ஆனால் ரூபிகா பல மணி நேரம் காத்திருந்தும் மாவட்ட ஆட்சியர் அவரை புறக்கணித்தார்.
via News J : https://ift.tt/0957MF4
via News J : https://ift.tt/0957MF4
Mediaகட்சத்தீவு விவகாரத்தை எடுத்தாலே, தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓட்டம் பிடிக்கும் திமுகவை தமிழக சட்டமன்றத்தில் பங்கமாய் கலாய்த்திருப்பார் புரட்சித்தலைவி ஜெயலலிதா.தமிழக மக்கள் அறிந்த பழைய கதைஆச்சே இது, இப்போது எதற்கு அது என்று நீங்கள் கேட்பது புரிகிறது. காரணம் இருக்கிறது. இந்த கட்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் நாடகம் ஆடியிருக்கிறது திமுக…இலங்கையிடம் இருந்து கட்சத்தீவை மீட்பதில் மத்திய அரசு தோல்வி அடைந்துவிட்டதாக, எண்ணற்ற குற்றச்சாட்டுகளை திமுக எம்.பி டி.ஆர் பாலு அடுக்கினார்.. தற்போதைய மத்திய அரசு என்னசெய்தது என்பதெல்லாம் இருக்கட்டும்.. கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தபோது, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியுடன் கைகோர்த்துகொண்டு வாய்மூடி மௌனித்து இருந்துவிட்டு, இன்று வந்து இப்படி நாடகம் போடுவது நியாயமா?ஆட்சிக்குவந்ததில் இருந்து, மத்திய அரசு அதைச் செய்யவில்லை, இதைச்செய்யவில்லை என்று நாடாளுமன்றத்தில் டி.ஆர்.பாலு குமுறுகிறார்… நியாயமம் தான். கேள்வி கேட்கத்தான் எம்பியாக மக்கள் அவர்களை டெல்லிக்கு அனுப்பிவைத்துள்ளனர். ஆனால், தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் என்னென்ன வாக்குறுதிகளைக் கொடுத்திருந்தது திமுக? அதில் எதை நிறைவேற்றியிருக்கிறது இந்த விடியா அரசு? நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்திற்கே விடியல் தருவோம்!…. ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் ரத்து தான்!….தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுப்போம்! என்று கதை அளந்து விட்டு ஆட்சிக்கு வந்தவுடன், தங்கள் கூட்டணிக்கட்சியான காங்கிரஸ் ஆட்சி செய்யும், கர்நாடகத்திற்கு சென்று காவிரி நீரை பேசி வாங்கித்தருவதற்கு கூட வக்கில்லாமல், இருக்கிறது இந்த திராணியற்ற அரசு..இப்படி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற திராணியில்லாத திமுக, நாடாளுமன்றத்தில் மத்திய அரசை கவிழ்க்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்திருக்கிறது.. அடடே, உங்க நாடகத்தை கண்டு ஊரே வியக்குதுங்க… ஆளுங்கட்சியாக மாநிலத்தில் ஒன்றும் நாங்கள் கிழிக்க மாட்டோம், ஆனால் மத்திய அரசைக்கண்டு நீங்க ஏன் அதைச்செய்யல, நீங்க ஏன் இதைச்செய்யல என்று கேள்வி மட்டும் கேட்டு, வரலாற்றையே திரிப்போம்…. இதுதானா உங்க திராவிட மாடல் ஆட்சி?இப்படி, திமுக, அடுத்தவர்களை கைகாட்டியே, தான் தப்பிக்கப்பார்ப்பது ஏன்? தங்கள் ஆட்சியின் அவலத்தை தீர்க்கத்தெரியாத முதல்வர் ஸ்டாலின், தங்கள் கட்சி எம்பிக்களை வைத்து மத்திய அரசை சாடுவது ஏன்? கச்சத்தீவு முதல் நீட் தேர்வு வரை தமிழக மக்களை ஏமாற்றி, துரோகம் செய்து, இப்போது நாடாளுமன்றத்தில் தனது வரலாற்றுப் பிழைகளை திமுக மாற்றத் துடிக்கும் திமுகவிற்கு தக்க பாடம் புகட்ட நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.
via News J : https://ift.tt/USVO0ZL
via News J : https://ift.tt/USVO0ZL
Mediaபோக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பெற்ற பல லட்சம் ரூபாய் பணத்தை முதலீடு செய்துள்ளது பற்றியும், உதவியாளர் வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட 60 சொத்து ஆவணங்கள் குறித்தும் செந்தில் பாலாஜியிடம் அமலாகத் துறையினர் கிடுக்குப்பிடி விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.மூன்றாவது நாளாக தொடரும் விசாரணை!சட்ட விரோத பணம் பரிமாற்ற தடை சட்டத்தில் அமலாக்க துறையால் கடந்த 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனைத் தொடர்ந்து கீழமை நீதிமன்றம் நடுவர் அல்லி, 12 ம் தேதி வரை போலீஸ் காவல் கொடுத்ததை எடுத்து, நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் செந்தில் பாலாஜியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். நேற்று காலை 10 மணி முதல் 12 மணி வரையிலும், பிற்பகல் 3 மணியிலிருந்து நான்கு மணி வரையிலும், இரவு 7 மணியிலிருந்து 11 மணி வரையிலும் செந்தில் பாலாஜியிடம் 50க்கும் அதிகமான கேள்விகளை முன் வைத்து விசாரணை நடத்தினர். இவற்றில் எந்த கேள்விகளுக்கும் செந்தில் பாலாஜி பதிலளிக்காததால், 11 மணியுடன் விசாரணையை முடித்த அமலாக துறையினர், இன்று காலை 10 மணிக்கு மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலை வாங்கி தருவதாக பல லட்சம் ரூபாய் பணம் பெற்று மோசடி செய்தது குறித்து, உரிய ஆதாரங்களுடன் செந்தில் பாலாஜியை கைது செய்து உள்ள அமலாக்க துறையினர், விசாரணையில் கேட்கப்படும் கேள்விக்கு முறையாக பதில் அளிக்காமல் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12ஆம் தேதி வரை மட்டுமே போலீஸ் காவல் கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில், இன்றும் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரின் கேள்விகளுக்கும், விசாரணைக்கும் ஒத்துழைக்காமல் இருந்தால், அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து அமலாக்கத்துறை நடவடிக்கைகளை எடுக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
via News J : https://ift.tt/4aABYLf
via News J : https://ift.tt/4aABYLf
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/ai.jpg">Media</a><strong>செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பண மோசடி செய்ய முடியமா?</strong>உலகையே ஆளப் போகிறது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் என்று நம்மில் பலர் பேசி வந்தாலும், அதனால் சில விபரீதங்களும் ஏற்படுவதை நாம் கருத்தில்கொண்டுதான் ஆக வேண்டும். ஒரு பொருளோ அல்லது செயலியோ சந்தைக்குள் வந்துவிட்டால் மக்களை கவர்ந்திழுக்கக் கூடிய விளம்பரங்களையும், விளம்பரத்தூதராக நட்சத்திரங்களையும் நடிக்கவைத்து மூளைச் சலவை செய்வதும் உண்டு. அது பெரும் நிறுவனங்களுக்கே வாய்த்த ஒன்று. பின்னாளில் மக்கள் அந்த மோகவலைக்குள் விழிந்து தங்களை மீட்டெடுக்க சிரமப்படுவர். அப்படி இப்போது அனைவரும் சிக்கியிருப்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திடம்தான்.இன்றைய நவீனச் சூழலில் நாம் அனைத்துவித புதிய தொழில்நுட்பங்களுக்கும் நம்மை ஒப்புக்கொடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளோம். ஒரு செயலை எளிதாக செய்து முடிப்பதனை நாம் விரும்பும் ஆளாக இருக்கிறோம். அதனை ஒரு இயந்திரமோ அல்லது செயலியோ எளிதாக முடித்துக்கொடுத்தால் அதனை அதிகம் பயன்படுத்துகிறோம். அப்படி நம் தினசரி வாழ்வுக்குள் ஏகப்பட்ட இயந்திரங்களும், நவீன கேஜட்களும் புழங்குகின்றன. அந்த வரிசையில் சமீபத்தில் வந்து ஒட்டிக்கொண்டதுதான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம். எந்தவொரு புதிய கண்டுபிடிப்பும் நமக்கு முதலில் வாகாக பயன்பட்டாலும், பின்னாட்களில்தான் அதன் முழு சுயரூபமும், பின்விளைவுகளும் தெரியவரும்.<a href="https://news.umanitoba.ca/wp-content/uploads/2022/11/UM-Today-Rise-of-the-machine-age-II-review-opt-1.jpg">UM Today | Extended Education | Pondering the future of AI and Machine Learning</a><strong>செயற்கைத் தொழில்நுட்பத்தால் ஏற்பட்ட சம்பவங்கள்..!</strong>அமெரிக்காவில் ராபர்ட் வில்லியம்ஸ் என்ற கறுப்பினத்தவருக்கு இந்த செயற்கை தொழில்நுட்பம் மூலம் ஒரு பிரச்சினை ஏற்பட்டு உள்ளது. அதாவது, அவர் கடை ஒன்றில் மேனேஜராக பணியாற்றி வந்தார். அந்தக் கடையில் திருடி போய் இருக்கிறது. இதனை காவல்துறையினர் விசாரித்தனர். அவர்கள் சிசிடிவி-யினை பரிசோதிக்கும்போது, செயற்கை தொழில்நுட்பம் மூலம் ஆய்வு செய்தனர். அதில் திருடும் உருவம் ராபர்ட் உருவம் போல் இருந்துள்ளது. இதனால் சந்தேகத்தின் பேரில் அவரை கைது செய்தனர். ஆனால் திருடு நடைபெற்ற சமயம் அவர் வீட்டில் இருந்துள்ளார். இதனைப் பின்னர் அறிந்த காவல்துறை, தங்களின் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட குளறுபடிதான் காரணம் என்று மன்னிப்புக் கேட்டு, ராபர்ட்டினை விடுதல செய்தனர்.கேராளாவில் கோழிக்கோட்டில் ராதாகிருஷ்ணன் என்ற நபர் வசித்து வருகிறார். அவருடைய வாட்சப் எண்ணிற்கு வீடியோ கால் ஒன்று வந்துள்ளது. அதில் அவருடன் பணியாற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நண்பரின் உருவம் தெரிந்துள்ளது. அதில் அவர் மருத்தவமனையில் இருக்கும் உறவினர் ஒருவருக்கு உதவ வேண்டும் என்று கூறி நாற்பதாயிரம் ரூபாய் கேட்டுள்ளார். உடனே கூகுள் பே மூலம் நாற்பதாயிரம் ரூபாயினை ராதாகிருஷ்ணனும் அனுப்பியுள்ளார். உடனே மேலும் ஒரு முப்பதாயிரம் ரூபாய் வேண்டும் என்று கேட்டுள்ளார். இதனால் ராதாகிருஷ்ணனுக்கு சந்தேகம் எழ, அங்குள்ள சைபர் கிரைம் காவல்துறையினரிடத்தில் புகார் அளித்துள்ளார். இதனால் விசாரணை மேற்கொண்ட சைபர் கிரைம் காவல்துறையினர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மோசடி செய்துள்ளனர் என்பதை கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே இதே போல சீனாவில் நண்பரின் உருவத்துடன் கூடிய வீடியோ கால் மூலம் 4.3 மில்லியன் யுவான் பணம் மோசடி நடைபெற்றது.<strong>மக்களே உஷாராக இருங்கள்…!</strong><a href="https://media.licdn.com/dms/image/C4E12AQETYiL8X_saBA/article-cover_image-shrink_720_1280/0/1629959752831?e=2147483647&v=beta&t=UTy1IzoBjdQLj4rzC2At3vsyNCKtguyWoI6LBUSVrBc">What Is The Next Level Of AI Technology?</a>மேற்சொன்ன மோசடிகள் தமிழகத்திலும் தற்போது நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளதால், இது போன்ற மோசடிகளில் யாரிஉம் ஏமாந்து விட வேண்டம் என்று தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் கூடுதல் டி.ஜி.பி சஞ்சய் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது,ஆன்லைனில் நீங்கள் உங்களின் தனிப்பட்ட தகவல்களை பகிந்து கொள்வதின் அளவைக் கட்டுப்படுத்துங்கள். மேலும் உங்களின் தகவலுக்கான் அணுகலைக் கட்டுபடுத்த சமூக ஊடகத் தளங்களில் உள்ள தனியுரிமை அமைப்புகளைச் சரி செய்யவும் என்று கூறினார். மேலும் நீங்கள் இது போன்ற வீடியோ கால் மோசடிக்கும் உடனடியாக, “சைபர் க்ரைம்” கட்டணமில்லாத உதவி எண் 1930-ஐப் பயன்படுத்தி புகார் தெரிவிக்கலாம். மேலும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் டிஜிபி அவர்கள் தெரிவித்துள்ளார். மக்களே! இனிமேல்…
Mediaதிருப்பூர் மாநகராட்சியில் மக்களின் ஆதரவு பெற்ற அம்மா உணவகத்துக்கான பொருட்கள் வழங்குவதை காழ்ப்புணர்ச்சியின் காரணமாக பாதியாக குறைத்திருக்கிறது விடியா திமுக அரசு. இதனால் ஏழை, எளிய மக்கள் பசியாற முடியாமல் பரிதவித்து வருவது குறித்து விவரிக்கிறது, இந்த செய்தித் தொகுப்பு…(அதிமுக) முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால், ஏழை, எளிய மக்கள் பயனடையும் வகையில், மலிவு விலையில் உணவு வழங்கும் அம்மா உணவகம் திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற இத்திட்டத்தை ஆந்திரா, ராஜஸ்தான் போன்ற பல்வேறு மாநிலங்களும் முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு செயல்படுத்தி வருகின்றன.ஆட்சி மாற்றத்தால் அழிந்துவரும் அம்மா உணவகம்!ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் அம்மா உணவக திட்டத்திற்கு மூடு விழா காண முனைப்பு காட்டியது விடியா அரசு. இதற்கு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் எதிர்ப்பை பதிவு செய்ததை தொடர்ந்து, திட்டத்தை முற்றிலும் மூடாமல், இருட்டடிப்பு செய்யும் வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது விடியா அரசு. அதன்படி திருப்பூர் மாநகராட்சியில் செயல்பட்டு வரும் 10 அம்மா உணவகங்களை, படிப்படியாக அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது விடியா அரசு. திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இயங்கி வந்த அம்மா உணவகம், விரிவாக்கப் பணியை காரணம் காட்டி அகற்றப்பட்டுள்ளதால், ஒரு வேளைக்கு 50 முதல் 150 ரூபாய் வரை செலவழித்து பசியாற வேண்டிய நிலைக்கு ஏழை, எளிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.திட்டமிட்டு முடக்கப்படும் அம்மா உணவகம்..!இதேபோல பிற அம்மா உணவகங்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு இடுபொருட்களையும் பாதிக்கும் மேல் மாநகராட்சி நிர்வாகம் குறைத்துவிட்டது. முன்னர் இரண்டாயிரத்து 400 கிலோ அரிசி வழங்கப்பட்ட நிலையில், தற்போது 600 கிலோ அரிசி மட்டுமே வழங்கப்படுவதால், அம்மா உணவகத் திட்டம் திட்டமிட்டு முடக்கப்படுகிறது. இதனால், பெரும்பாலானோர் பசியாற்ற முடியாமல் திரும்பிச் செல்கின்றனர்.மேலும், காய்கறிகள், வெங்காயம், தக்காளி எல்லாம் விண்ணைத் தொடும் அளவுக்கு விலை உயர்ந்துவிட்ட நிலையில், அவற்றை வாங்குவதற்காக வழங்கப்படும் தொகையும் போதவில்லை என அம்மா உணவக ஊழியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.சில இடங்களில் அம்மா உணவகம் இருப்பதையே மறைத்து, மக்கள் பயனடைவதை தடுக்கும் வகையில், விடியா திமுக அரசு செயல்பட்டு வருகிறது. உதாரணத்துக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணியின் காரணமாக, அம்மா உணவகமே மறைக்கப்பட்டு விட்டது. இருப்பினும் அரசு மருத்துவமனைக்கு வரக்கூடிய ஏழை, எளியவர்கள், இப்போதும் கூட மணிக்கணக்கில் காத்திருந்து அம்மா உணவகத்தில், உணவு வாங்கி செல்கின்றனர்.தேவையற்ற வீண் விளம்பரங்களுக்கெல்லாம் சாலையில் பேனர் வைத்து உயிர் பலி வாங்கும் விடியா அரசு, மக்கள் பயனடையும் அம்மா உணவகத்தை அனைவரும் காணும்படி பாதுகாப்பான வகையில் பேனர் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கோரிக்கை எழுந்துள்ளது.எனவே, விடியா அரசு மக்கள் வரவேற்புடைய அம்மா உணவக திட்டத்துக்கு மூடு விழா காண நினைக்கும் கனவை மூட்டை கட்டி வைத்துவிட்டு, கூடுதலாக உணவு பொருட்களை வழங்க முன்வர வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
via News J : https://ift.tt/0qWQUyk
via News J : https://ift.tt/0qWQUyk
Mediaதமிழர்களின் நாகரீக கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று கீழடி ஆகும். கீழடி தமிழரின் தாய்மடி என்று குறிப்பிடுவதும் உண்டு. தற்போது கீழடி அகழாய்வில் எட்டு கிராம் எடைகொண்ட படிக எடைக்கல் கிடைத்துள்ளது. இது சங்ககாலத்தில் பயன்படுத்தி இருக்கலாம் என்று தொல்லியல் துறையினர் தகவல் கூறுகின்றனர்.எட்டு கிராம் படிக எடைக்கல்..!கடந்த அதிமுக ஆட்சியில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளத் தொடங்கினார்கள். மேலும் மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் எட்டுக் கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டது. பல்லாயிரக் கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. மேலும் இவற்றை மக்களின் பார்வைக்காக கீழடி அருங்காட்சியகத்தில் வைத்துள்ளனர். எட்டு கட்டங்களாக நடைபெற்ற ஆய்வு தற்போது ஒன்பதாம் கட்டத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக, கொந்தகை மற்றும் அகரம் உள்ளிட்ட இடங்களில் 9-ஆம் கட்ட ஆய்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இங்கும் மொத்தம் ஒன்பது குழிகள் தோண்டப்பட்டன. இதில் ஒன்பதாவது குழியைத் தோண்டிகொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட ஆறு அடி ஆழத்தில் படிகத்தால் செய்த எடைக்கல்லானது வெளி தெரிந்தது.படிக கல்லின் வடிவம்..!இந்த எடைக்கல்லானது சற்று கோள வடிவில் மேற்பகுதி மற்றும் அடிப்பகுதி தட்டையாகவும், ஒளிப்புகும் தன்மையுடனும் காணப்படுகிறது. 2 செண்டி மீட்டர் விட்டம், 1.5 செண்டி மீட்டர் உயரம் மற்றும் சரியாக 8 கிராம் எடையுடனும் உள்ளது. இந்த எடைக்கல்லானது தங்கம் போன்ற விலை உயர்ந்த ஆபரணப் பொருட்களை எடைபோடுவதற்கு பயன்படுத்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 8 கிராம் எடையில் இந்த படிக கல் இருப்பதால் அவ்வாறு கருதத்தோன்றுகிறது என்று தொல்லியலாளர்களும் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுடு மண்ணால் செய்த வட்டச்சில்லுகள், ஆணி, கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் போன்றவையையும் அதே அகழாய்வு குழியில் கிடைத்துள்ளதாக மாநில தொல்லியல் துறை இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
via News J : https://ift.tt/H0SlnCm
via News J : https://ift.tt/H0SlnCm
Mediaகழிவு நீரில் இருந்து மதுபானம்… இது சாத்தியமா?கழிவுநீரைக் கண்டால் நம்மில் பெரும்பாலானோர் முகம் சுளித்து, மூக்கை மூடிக்கொள்வோம். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனமொன்று, கழிவு நீரிலிருந்தே புதிய முறையில் பீர் தயாரிப்பினை மேற்கொண்டுள்ளது.அதாவது, எபிக் க்ளீன்டெக் ((Epic Cleantec))) எனும் நிறுவனம் 40 மாடி கட்டடத்திலிருந்து சேகரிக்கப்படும் கழிவு நீரிலிருந்து ஆன்சைட் கிரே வாட்டர் என்கிற நுட்பத்தை பயன்படுத்தி பீர் தயாரித்துள்ளது.ஆன்சைட் கிரே வாட்டர் என்கிற சிஸ்டமானது துணி துவைக்க, குளிக்கப் பயன்படுத்தும் நீர் மற்றும் மொட்டை மாடியில் வீணாகும் மழை நீர் ஆகியவற்றை சேகரித்து, வடிகட்டி, அதிலுள்ள கிருமிகள் அனைத்தையும் நீக்கிவிடுகிறது. பின்னர் அந்த நீரை கொண்டுதான் பீர் தயாரிக்கப்படுகிறது.Someone made beer from recycled shower and laundry water. Will you drink it?குடிநீரை விட இது பாதுகாப்பானதா?வீடுகளிலும், பல இடங்களிலும் பயன்படுத்தப்படும் தண்ணீரைக்கொண்டு சுத்திகரிப்பு செய்து, அதன் பின்னர் அந்த நீர், நவீன முறையில் வடிகட்டப்பட்டு, நுண்ணிய துகள்கள், கிருமிகள் அகற்றப்படுகின்றன.அடுத்த கட்டமாக, ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் என்று குறிப்பிடப்படும் சவ்வூடு முறையின் மூலம், அந்நீரில் இருக்கும் பாக்டீரியாக்களும், வைரஸ்களும் அகற்றப்படுகின்றன. இதன் மூலம் மிகத் தூய்மையான தண்ணீர் கிடைக்கிறது. அதன்படி 7,570 லிட்டர் கழிவு நீரை பயன்படுத்தி, 7 ஆயிரம் பீர் கேன்கள் தயாரிக்கப்படுகின்றன. இந்த சிஸ்டம் மூலமாக ஒரு நாளைக்கு 28 ஆயிரம் லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்ய முடியும். அதுவே ஒரு வருடத்திற்கு 94 லட்சத்து 63 ஆயிரத்து 529 லிட்டர் தண்ணீரை மறுசுழற்சி செய்யலாம். இந்த பீர், குடிநீரைக் காட்டிலும் அதிக பாதுகாப்பானது என ஆய்வாளர்களும் தெரிவித்துள்ளனர். ஒருவேளை எதிர்காலத்தில் அதிகப்படியான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உண்டானால், மறுசுழற்சி செய்யும் திட்டம் நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் விதமாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
via News J : https://ift.tt/OpDEzLe
via News J : https://ift.tt/OpDEzLe