Mediaகடந்த அதிமுக ஆட்சியில் மிக சிறப்பாக செயல்பட்ட அனைத்து அரசு துறைகளும், விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செயலிழந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாக சாடியுள்ளார்.கோவையில் உள்ள இதய தெய்வம் மாளிகையில், மதுரையில் நடைபெறும் அதிமுக எழுச்சி மாநாடு குறித்த ஆலோசனை கூட்டம், முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலைய செயலாளருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநகர மாவட்ட செயலாளரும் வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான அம்மன் கே.அர்ஜுனன், கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளரும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினருமான பி.ஆர்.ஜி. அருண்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்துகொண்டனர்.அப்போது, அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா மாநாடு விழிப்புணர்வு வாகனத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய அவர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அதிமுகவை எந்த கொம்பனாலும் அழிக்க முடியாது என தெரிவித்தார். மதுரை மாநாடு முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கோட்டைக்கு செல்வது உறுதி என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உறுதிபட தெரிவித்தார். மேலும், கோவையில் செம்மொழி மாநாடு, திமுகவின் குடும்ப மாநாடாக நடைபெற்றதாகவும் அவர் விமர்சித்தார். விடியா ஆட்சியில் எல்லா இடங்களிலும் ஊழல், லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், இடைத்தேர்தலில் திமுக முறைகேடு செய்து வெற்றி பெற்றதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் மக்களுக்காக கொண்டுவரப்பட்டதாகவும், ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக திமுக எதுவுமே செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார். கடந்த அதிமுக ஆட்சியில் மிக சிறப்பாக செயல்பட்ட அனைத்து அரசு துறைகளும், விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு செயலிழந்து விட்டதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாக சாடினார்.
via News J : https://ift.tt/DZqAghi
via News J : https://ift.tt/DZqAghi
Mediaமதுரை எழுச்சி மாநாடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், ராஜன் செல்லப்பா போன்றவர்கள் சந்தித்து பேசினர். பின் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் பின்வருமாறு பேசியுள்ளார்.இந்த மாநாட்டைப் பற்றி எங்கு பார்த்தாலும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.மதுரை மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் தொடர்பாக பதினோறு மாவட்டத்திற்கு சென்றோம். அனைத்து இடங்களிலும் மாபெரும் கூட்டம், மேலும் பல தொண்டர்கள் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆகஸ்ட் 20-ஆம் தேதி நடைபெறும் மதுரை மாநாட்டிற்கு வருகிற கழகத் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு காவல்துறையிடம் அனுமதியும் ஒப்புதலும் பெறுங்கள் என்று கழகப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் எங்களிடம் கூறினார். அதன்பொருட்டு இன்றைக்கு நாங்கள் பாதுகாப்புக் குறித்து காவல் கண்காணிப்பாளரை சந்தித்து உரையாடினோம். அதிகாரி அவர்களுக்கே மாநாடு பற்றிய சிறப்பு தெரிந்துள்ளது. அதனால் கண்டிப்பாக கூடுதல் பாதுகாப்பு அளிப்போம் என்று சொல்லியிருக்கிறார். அதேபோல போக்குவரத்து நெரிசல் இல்லாதவாறு போக்குவரத்து காவல்துறையினரும் பணியில் ஈடுபட உள்ளதாகவும், எத்தனை காவல்துறை அதிகாரிகளை பணியில் ஈடுபட வைக்கலாம், வாகனங்களை மாற்று பாதையில் செல்ல பணிப்பது குறித்தும் பேசியுள்ளோம்.அதேபோல் கழக எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் அவர்கள் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் வருகிற வாகனங்களை வெகுதொலைவிலேயே நிறுத்த சொல்லிவிட்டு நடந்துவரும்படி செய்தால் அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள். எனவே சற்று அருகாமையில் அவர்கள் வாகனத்தினை நிறுத்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் உரிய ஏற்பாடுகள் செய்து கொடுக்கின்றோம் என்று சொல்லியிருக்கிறார் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/R02qAZI
via News J : https://ift.tt/R02qAZI
Mediaசுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச்சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை, ஈரோடு மாவட்டத்தில் உள்ள காங்கேயம் அருகில் மேலப்பாளையம் என்னும் சிற்றூரில் 1756 ஆம் ஆண்டு பிறந்தார். தீர்த்தகிரி என்னும் இயற்பெயர் கொண்டவர். இளம் வயதிலேயே போர்க்களையில் மிகவும்
சிறந்தவராக விளங்கினார். ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பெனி படையினரின் ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு போர்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரி கரையிலும் 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும் 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களோடு நடைபெற்ற போரில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறார். போரில் தீரன் சின்னமலையை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரை கைது செய்து சங்ககிரி கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஆடி பதினெட்டாம் நாளில் தூக்கிலிட்டனர்.இந்நிலையில் இன்று அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது அதனை ஒட்டி தற்பொழுது அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தீரன் சின்னமலையின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவை தலைவர் தமிழ்மகன் உசேன், மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
via News J : https://ift.tt/YJcsRv9
சிறந்தவராக விளங்கினார். ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பெனி படையினரின் ஆதிக்கத்தை எதிர்த்து பல்வேறு போர்களிலும் ஈடுபட்டிருக்கிறார்.1801 ஆம் ஆண்டு ஈரோடு காவிரி கரையிலும் 1802 ஆம் ஆண்டு ஓடாநிலையிலும் 1804 ஆம் ஆண்டு அரச்சலூரிலும் ஆங்கிலேயர்களோடு நடைபெற்ற போரில் பெரும் வெற்றி பெற்று இருக்கிறார். போரில் தீரன் சின்னமலையை வெல்ல முடியாத ஆங்கிலேயர்கள் சூழ்ச்சி மூலம் அவரை கைது செய்து சங்ககிரி கோட்டையில் 1805 ஆம் ஆண்டு ஆடி பதினெட்டாம் நாளில் தூக்கிலிட்டனர்.இந்நிலையில் இன்று அவரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது அதனை ஒட்டி தற்பொழுது அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி சென்னை கிண்டியில் உள்ள தீரன் சின்னமலையின் திருவுருவச் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருக்கும் அவரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து தீரன் சின்னமலையின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அவை தலைவர் தமிழ்மகன் உசேன், மற்றும் மாவட்ட கழகச் செயலாளர்கள் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.
via News J : https://ift.tt/YJcsRv9
Mediaஇந்தியாவில் செயல்படும் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக பல்கலைக்கழ மானிய குழு அறிவித்துள்ளது.இது குறித்து பல்கலைக்கழக மானிய குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா முழுவதும் 20 போலி பல்கலைக்கழகங்கள் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் மாநில வாரியாக செயல்படும் போலி பல்கலைக்கழகங்களில் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதன்படி , டெல்லியில் அதிகபட்சமாக 8 போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேச மாநிலத்தில் நான்கு போலி பல்கலைக்கழகங்கள் செயல்படுகிறது.
மேற்குவங்கம், ஆந்திர பிரதேசத்தில் தலா 2 போலி பல்கலைக்கழகங்களும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் தல ஒரு போலி பல்கலைக்கழகங்களும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எந்த போலிப் பல்கலைக்கழகங்களும் செயல்படவில்லை என்றும், புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் என்கிற பெயரில் ஒரு போலி பல்கலை கழகம் செயல்படுவதாக யுஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
via News J : https://ift.tt/EWXczA1
மேற்குவங்கம், ஆந்திர பிரதேசத்தில் தலா 2 போலி பல்கலைக்கழகங்களும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, ஆகிய மாநிலங்களில் தல ஒரு போலி பல்கலைக்கழகங்களும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை எந்த போலிப் பல்கலைக்கழகங்களும் செயல்படவில்லை என்றும், புதுச்சேரியில் ஸ்ரீ போதி அகாடமி ஆப் ஹையர் எஜுகேஷன் என்கிற பெயரில் ஒரு போலி பல்கலை கழகம் செயல்படுவதாக யுஜிசி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
via News J : https://ift.tt/EWXczA1
Mediaநாள்பட்ட நாளாக இந்த தக்காளி நம் மக்களை படாத பாடு படுத்தி எடுக்கிறது., இதற்கு ஒரு தீர்வு இல்லையா என்று அனைத்து தரப்பினரும் வாய்விட்டு கேட்டும் விட்டார்கள். தங்கம் கூட வாங்கிரலாம் போல ஜி இந்த தக்காளிய வாங்க முடில என்று புலம்பித் தள்ளுகிறார்கள். பத்தாதற்கு நமக்கெல்லாம் தாக்காளி சாதம் ஒரு கேடா என்று நினைக்கும் அளவுக்கு தக்காளியின் விலை ஏறிப்போய் இருக்கிறது. இப்படி ஒரு புறம் இருக்க ஒரு டீ வாங்கினான் ஒரு கிலோ தக்காளி இலவசம் என்று போலீஸ் பாதுகாப்புடன் விற்றுக்கொண்டிருக்கிறார் ஒரு நபர். யார் அவர்? எங்கே இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது? வாங்க பார்க்கலாம்.கொளத்தூரில்..!ஒரு டீ வாங்கினால் ஒரு கிலோ தக்காளி இலவசம்! கடையில் குவிந்த மக்கள்சென்னை கொளத்தூரில் புதிதாகத் திறந்துள்ள டீக் கடையில்தான் இந்த சலுகையானது கொடுக்கப்பட்டுள்ளது. மழைக்குக் கூட டீக் கடைப் பக்கம் ஒதுங்காதவர்கள் தற்போது தக்காளிக்காக ஒதுங்கியிருக்கிறார்கள். போட்டிப்போட்டு டீக் குடித்து இலவசமாக ஒரு கிலோ தக்காளியை வாங்கி கூலாக செல்கிறார்கள். கொளத்தூர் கணபதி ராவ் நகரில் வசிக்கும் டேவிட் என்பவருக்கு தான் இந்த புதிய நூதன சிந்தனை உதித்திருக்கிறது. அவர் நேற்றைக்கு நவீன வசதிகளுடன் கூடிய டீக்கடையை திறந்தார். முதலீடு போட்டவர்களுக்கு பெரிதாக சாதித்துக்காட்டும் எண்ணமும், கடையைப் பிரபலப்படுத்தும் எண்ணமும் இருப்பது இயற்கையே. அப்படி அவர் பிரபலப்படுத்த நினைத்து இந்த நூதன வேலையைப் பார்த்துள்ளார். கடையை நேற்று திறந்தவுடன், நேற்று இன்று நாளை ஆகிய மூன்று நாட்களுக்கு மாலை நான்கு மணி முதல் ஆறு மணி வரை பன்னிரெண்டு ரூபாய் கொடுத்து டீ வாங்கும் முதல் நூறு வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஒரு கிலோ தக்காளி வழங்கப்படும் என்று அறிவிப்பினை வெளியிட்டார்.விரைந்திடும் பொதுமக்கள்..!கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்வதில் நம்மவர்களுக்கு நிகர் யாருமில்லை. இந்த செய்தி காட்டுத் தீயாய்ப் பரவி கொளத்தூர் பகுதியில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் சென்றடைந்தது. இதனையடுத்து நேற்று மாலை மூன்று மணிக்கே டீ வாங்குவதற்கு மக்கள் கூட்டமாக வந்தனர். அவர்களுக்கு 100 டோக்கன்கள் வழங்கப்பட்டு டீயானது விற்கப்பட்டது. அதன் பிறகு வரிசையில் நிற்கவைத்து அவர்களுக்கு ஒரு கிலோ தக்காளியும் வழங்கப்பட்டது. இதனால் கடைக்கு மவுஸ் கூடிப்போய் அதிகமாக மக்கள் வந்துகொண்டே இருந்தனர். இதனால் முன்னெச்செரிக்கை நடவடிக்கையின் பொருட்டு அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. டீயைக் குடித்துவிட்டு கட்டப்பையில் தக்காளியினை அள்ளிச் சென்ற மக்களை பார்ப்பதற்கு அவ்வளவு மகிழ்ச்சி. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளைப் பயன்படுத்தி சிலர் தங்களை இது மாதிரி வளர்த்து வருகின்றனர். ஆனால் இது காலத்தின் தேவையாக தற்போது இருக்கிறது. இதனை ஆரோக்கியமாக செய்தால் அனைவருக்கும் நன்மையே. என்ன மக்களே கட்டப்பையை எடுக்கும் சத்தம் கேட்குது!
via News J : https://ift.tt/H7bN36o
via News J : https://ift.tt/H7bN36o
Mediaதிமுகவுல ஜாங்கிரி எம்.எல்.ஏ யாருன்னு கேட்டா, பூந்தமல்லி எம்.எல்.ஏ கிருஷ்ணசாமின்னுதான் சொல்வாங்க. ஏன்னா, போன மாஷம் காட்டுப்பாக்கம் ஊராட்சியில நடந்த சாலை சீரமைப்பு பணிக்கான பூமி பூஜைவிழாவுல பங்கேற்ற எம்.எல்.ஏ கிருஷ்ணசாமி, ஜாங்கிரி கொடுத்தாரு. ஆண் நிர்வாகிகளுக்கு எல்லாம் ஜாங்கிரியா கையில கொடுத்தவரு, பெண் நிர்வாகி ஒருத்தருக்கு அவங்க மறுத்தபோதும் வலுக்கட்டாயமா வாயிலேயே ஊட்டிவிட்டாரு….அதனால அவர ஜாங்கிரி எம்.எல்.ஏன்னு சொல்லுறாங்க உபிஸே… இப்போ பூந்தமல்லி நகராட்சி 12 வது வார்டுல பூமி பூஜையில கலந்துக்கிட்டவரு எல்லோருக்கும் லட்டு கொடுத்திருக்காரு. அப்போ பெண்களுக்கும் லட்டுகொடுத்திருக்காரு… செய்தியாளர்கள் எல்லாம் அத படம் பிடிச்சிட்டு இருந்தத பார்த்தவரு, ஒரு லட்ட எடுத்து லேசா பிச்சி தன்னோட வாயில போட்டுக்கிட்டு, யாருக்கும் ஊட்டிவிடுவீங்களோன்னு பார்த்தீங்களான்னு கேட்டுருக்காரு.அன்னைக்கு ஜாங்கிரி கொடுத்தத படம்பிடிச்சி போட்டு உங்க லட்சணம் இதுதான்னு மக்கள்கிட்ட மீடியாக்கள் காட்டுனதாலதான, இன்னைக்கு அடக்க ஒடுக்கமா லட்ட கையில கொடுத்திருக்கீங்கன்னு நாங்க சொல்லல…. ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/hsF3Dqp
via News J : https://ift.tt/hsF3Dqp
Mediaகடலில் பேனா சிலை அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதாக தவறான தகவலை திமுக தெரிவித்துள்ளது எனவும் பேருந்தில் விசிலடித்து கொண்டிருந்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக இருப்பதால் உச்சநீதிமன்ற தீர்ப்பை முன்னுக்கு பின் முரணாக ஊடகங்களில் பேசிவருதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் …தீரன் சின்னமலை நினைவு நாளை ஒட்டி அதிமுக சார்பில் சென்னை கிண்டியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசுகையில் …உச்ச நீதிமன்ற தீர்ப்பயே தவறாக சித்தரித்து இருக்கின்றனர் இது குறித்து நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் எது வந்தாலும் அதை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.தினசரி தங்கம் விலையில் மாற்றம் இருப்பதை போல தக்காளி விலையில் மாற்றம் இருந்து வருகிறது. விலைவாசி, சட்டம் ஒழுங்கு ஆகியவை திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால் மக்களை பாதித்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு தெரிவித்தார்.தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக அங்கம் வகித்து வருகிறது. இந்தக் கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறினார்.அதேபோன்று டிடிவி தினகரன் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டணிக்கு வந்தால் அதிமுக இருக்குமா? என்கின்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெயக்குமார், அந்த சூழல் வருகின்றபோது அது குறித்து அதிமுக முடிவு எடுக்கும் என்று கூறினார்.ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் அண்மையில் நடத்திய போராட்டங்களில் அதிமுக கொடி மற்றும் இரட்டை இலை சின்னம் பயன்படுத்தப்பட்டதுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுக்க உள்ளோம் என்றார்.ஒ பி ரவீந்திரநாத் விவகாரம் தொடர்பாக பேசிய அவர்…ஓ பி ரவீந்திரநாத் மீது பெண் ஒருவர் அளித்துள்ள புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் காவல்துறையினர் அந்த புகார் மீது தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.ஓபிஎஸ்-இன் மகன் என்பதால் பாரபட்சம் காட்டாமல் காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
via News J : https://ift.tt/0TnyHh5
via News J : https://ift.tt/0TnyHh5
Mediaவிடியா திமுக அரசு பெரும்பாலான மகளிருக்கு உரிமைத் தொகை கிடைக்காதவாறு பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளதாக பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். ஆட்சியை பிடிப்பதற்காக வாயிலேயே வடை சுட்ட திமுக, மக்களின் காதுகளில் பூ சுற்றியது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின்போது, அனைத்து மகளிருக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என விடியா திமுக அரசு வாக்குறுதியளித்தது. இதனை நம்பி அப்பாவி மக்கள் வாக்களித்ததைத் தொடர்ந்து, ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த விடியா அரசின் சாயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளுக்கத் தொடங்கியுள்ளது.ஆட்சியமைத்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாகியும், முக்கிய தேர்தல் வாக்குறுதியான மாதந்தோறும் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் ஏழை மக்களை ஏமாற்றி வந்தது விடியா அரசு. இதுதொடர்பாக தமிழகம் முழுவதும் கண்டன குரல்கள் பலமாக ஒலிக்கத் தொடங்கியதைத் தொடர்ந்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு மகளிர் உரிமைத் தொகைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.இருப்பினும் இத்திட்டத்தின் மூலம் ஏழை மக்கள் பயனடைந்து விடக் கூடாது என்பதில் கண்ணும், கருத்துமாய் இருந்த விடியா அரசு, திட்டத்தின் கீழ் பயனடைய பல்வேறு நிபந்தனைகளையும் வெளியிட்டு ஏழை, எளியோரை இன்னலுக்கு உள்ளாக்கியுள்ளது.அதன்படி மாதம் இரண்டரை லட்சத்திற்கும் மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடைக்காது. அதேபோல் இரண்டரை லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டி, வருமானவரிக் கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணிபுரிவோர் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள் விண்ணப்பிக்க முடியாது. சொந்த பயன்பாட்டிற்காக கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற வாகனங்களை வைத்திருப்போருக்கு உரிமைத் தொகை கிடைக்காது. ஏற்கனவே முதியோர், விதவை ஓய்வூதியம் போன்றவற்றை பெறுவோரும் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க முடியாது.இவ்வாறு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து, எந்த ஒரு மக்களும் பயனடைந்து விடக் கூடாது என்பதில் வெற்றியடைந்து விட்டது திமுக. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துவிட்டு ஒன்றரை கோடி குடும்பங்கள் பயனடைவர் என கூறும் திமுகவின் செயல், மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடும் கதையாக உள்ளது என மக்கள் நொந்து கொண்டுள்ளனர்.மேலும் இந்த வெற்றுத் திட்டத்தை அறிவித்ததன் காரணமாக ஸ்டாலினின் குடும்ப வாரிசுகளே ஆட்சியதிகாரத்தில் அமர்ந்து பயனடைந்ததாக குற்றம் சாட்டியுள்ள பொதுமக்கள், இனிவரும் காலங்களில் திமுக ஒருபோதும் ஆட்சியமைப்பது குறித்து யோசிக்க முடியாது எனவும் தெரிவித்து வருகின்றனர்.
via News J : https://ift.tt/ALsUEN2
via News J : https://ift.tt/ALsUEN2
Mediaசென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் அமெரிக்க துணை தூதராக கிறிஸ்டோபர் டபுள்யூ ஹோட்ஜஸ் பொறுப்பேற்றுள்ளார். இதுவரை கடந்த மூன்று ஆண்டுகளாக இருந்தவர் ஜூடித் ரேவின். இவர் போன வாரத்தில் துணைத் தூதர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று புதிய துணை தூதராக, கிறிஸ்டோபர் டபுள்யூ ஹோட்ஜஸ் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்னரே ஆப்கானிஸ்தான் மறுகுடியமர்வுக்கான ஒருங்கிணைப்பு அலுவலக அலோசகர், கிழக்கு நாடுகளின் விவ்காரங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் ஊடக உறவு துணை செயலராக பணியாற்றியுள்ளார்.மேலும், ஜெருசலேம் தூதரக துணை தலைமை அதிகாரியாகவும், பல்வேறு நாடுகளின் ஐரோப்பிய விவகாரங்களுக்கான அலுவலகங்களில், துணை இயக்குநரகாவும் பதவி வகித்தவர் ஆவார். இந்த பொறுப்பு குறித்து பத்திரிகையாளர்களிடம் கிறிஸ்டோபர் கூறியதாவது பின்வருமாறு உள்ளது.அமெரிக்க துணை தூதரகம் தமிழ்நாடு மற்றுமின்றி கர்நாடகா, கேரளா, புதுச்சேரி, அந்தமான் நிகோபார், லட்சத் தீவுகளின் துணை தூதரகமாகவும் செயல்படும். இதனால் தென் மாநிலங்களுக்கான நல்லுறவை வலுப்படுத்த, இந்த பொறுப்பை வாய்ப்பாக கருதுகிறேன். வரும் காலத்தில் வணிகம், கல்வி, விண்வெளி துறைகளில், இரு நாடுகளுக்குமான உறவு வலுப்பட பாலமாக இருக்கும் வாய்ப்பு, இதனால் கிடைத்துள்ளது என்று கிறிஸ்டோபர் குறிப்பிட்டுள்ளார்.
via News J : https://ift.tt/2UvTqx4
via News J : https://ift.tt/2UvTqx4
Mediaதமிழகத்தில் இரண்டு மாதமாக ஆங்காங்கே மழை பெய்து இருந்தாலும், இந்த ஆண்டு வழக்கத்து மாறாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் துவக்கத்தில் வெயில் சதம் அடித்துள்ளது. வெயில் சதம் அடிப்பதை தொடர்ச்சியாக நம்மால் பார்க்கவும் முடிகிறது. இதைக் குறித்து வானிலை ஆய்வு மையம், வெப்பநிலை அதிகரிப்பதன் காரணமாக ஈரப்பதம் உயர்வு காரணமாக ‘ஹீட் ஸ்ட்ரெஸ்’ எனப்படும் வெப்ப அழுத்தம் ஏற்படும் என, வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.தற்போது வட மாநிலங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தில் வீசும் மேற்கு திசை காற்று, வெப்பத்தை உயர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த சமயத்தில் தான் கடல் காற்றின் ஆதிக்கம் அதிகரிக்க வேண்டும் அல்லது வளிமண்டல சுழற்சி காரணமாக மழை பொழிவு ஏற்பட்டால் வெப்பத்தின் தாக்கம் கட்டுப்படுத்தப்படும். ஆனால் இது எதுவும் நடக்காத நிலையில், வெப்பம் தொடர்ந்து அதிகரிக்க்கிறது மற்றும் இது வெப்ப அழுத்த பாதிப்புக்கு வழி வகுத்து கொடுக்கிறது. இந்த சூழலானது படிப்படியாக மாறிவிடும் என்று சொல்லப்படுகிறது. வெளியில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் தான் இதனால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். உடல்நிலை பலவீனமாக உள்ளவர்கள் விரைவில் பாதிப்பினை சந்திக்கிறார்கள்.முக்கியமாக சென்னை மற்றும் புதுச்சேரியில் நேற்றைக்கு எந்த இடத்திலும் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட நிலைதான் உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவிக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை அதிகபட்சமான வெப்பநிலை நேற்றைக்கு மதுரை விமான நிலையப் பகுதியில் தான் இருந்துள்ளது. கிட்டத்தட்ட 41 டிகிரி செல்சியஸ் ஆகும். அதாவது 106 டிகிரி பாரன்ஹீட் ஆகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிமூன்று இடங்களில் வெயில் சதம் அடித்துள்ளது. சென்னை மீனம்பாக்கம், ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி, திருத்தணி, பரங்கிப்பேட்டை, புதுச்செரி, கடலூர், நாகை, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி ஆகியவற்றில் 40 டிகிரி செல்சியஸ் வெப்பமானது பதிவானது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஓரிரு இடங்களில் அதிகபட்சம் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருந்தது. இது இயல்பு நிலையில் இருந்து 3 டிகிரி செல்சியஸ் அதிகமாகும். மன்னார் வளைகுடா, தென் மாவட்டக் கடலோரப் பகுதிகள், குமரிக்கடல்,மத்திய வங்கக் கடல், இலங்கை கடலோரம், தென்மேற்கு, தென் கிழக்கு வங்க கடல் பகுதிகளில், சூறாவளிக் காற்று வீசுகிறது. எனவே அந்தப் பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
via News J : https://ift.tt/puKMEf5
via News J : https://ift.tt/puKMEf5
Mediaவிவசாய நிலங்களை அழித்து என்எல்சி நிர்வாகம் விரிவாக்க பணிகளை தொடர்ந்து செய்து வருவதை கண்டித்து, சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகே, ஒரு வாரத்தை கடந்து என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்காக வாய்க்கால் வெட்டும் பணி நடைபெற்று வருகிறது.வளையமாதேவி கிராமத்தில் என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணியில், பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி எட்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. சரியான இழப்பீட்டுக்கான கோரிக்கை, வேலை வாய்ப்பு உள்ளிட்டவற்றுக்காக விவசாயிகள், கிராம மக்கள் போராடி வருகின்றனர். இருப்பினும் எந்தவிதமான உத்தரவாதமும், நம்பிக்கை தரும்படியான செயல்பாடுகளும் இல்லாததால், அப்பகுதி மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். நிலத்தை கையகப்படுத்துவதில் இவ்வளவு ஆர்வம் காட்டும் என்.எல்.சி நிர்வாகம், இழப்பீடு, வேலைவாய்ப்பு ஆகியவை குறித்து வாய் திறக்காமல் இருப்பது ஏன்?, என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
via News J : https://ift.tt/3XbQwlU
via News J : https://ift.tt/3XbQwlU
Mediaவாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பெண்களுக்கு இதயக் குறியீடு பொருந்திய எமோஜிக்களை அனுப்பினால் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்று குவைத் அரசு அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.நாம் பயன்படுத்தும் தகவல் தொடர்பு செயலிகளில் தலையாயது வாட்ஸ் அப் ஆகும். இதனை தமிழில் கட்செவி அல்லது புலனம் என்றும் அழைப்பார்கள். ஒரு செய்தியை மற்றவருக்கு விரைந்து சொல்ல வேண்டும் என்றால் வாட்ஸ் அப்பினை தான் பயன்படுத்துகிறோம். அப்படிப்பட்ட வாட்ஸ் அப்-பில் பல குறியீடுகள் உண்டு. இதனை எமோஜிக்கள் என்றும் சொல்லலாம். நம் மனநிலைக்கு ஏற்ப நண்பர்களுக்கும், மனம் கவர்ந்தவர்களுக்கும் எமோஜிக்களை அனுப்பவது அனைவரின் வாடிக்கை. அந்த எமோஜியில் இதயக் குறியீடு ஒன்றும் உண்டு. தற்போது இந்த இதயக்குறியீடு தான் பூதாகரமாக எழுந்துள்ளது. இந்த பூதாகரமான விஷயம் குவைத் நாட்டில் தான் நடந்தேறியுள்ளது.Sending red heart emojis on WhatsApp 'can land user in jail' in Saudi Arabia | Saudi – Gulf Newsபெண்களுக்கு வாட்ஸ் அப்பில் இதய எமோஜிக்கள் அனுப்பினால் அதனை பாலியல் குற்றமாக கருத்தில் கொண்டு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்றும், இரண்டாயிரம் முதல் ஒரு லட்சம் சவுதி ரியால்ஸ் அபராதம் விதிக்கப்படும் என்றும் சவுதி அரசு கூறியுள்ளது. ஒரு புறாவுக்கு போரா என்பது மாதிரி ஒரு எமோஜிக்கு இவ்வளவு கட்டுப்பாடுகள் தேவைதானா கோபி.. என்று கலாய்க்கிறார்கள் நெட்டிசன்கள்!
via News J : https://ift.tt/k3DrFHq
via News J : https://ift.tt/k3DrFHq
Mediaஒரு எதிர்க்கட்சித்தலைவரை பேச விடமாட்டேன் என்பதெல்லாம் ஜனநாயகமா? அராஜகத்தின் உச்சமல்லவா? எதிர்க்கட்சித்தலைவருக்கு பேச வாய்ப்பு வழங்குங்கள்…. மக்கள் எதிர்க்கட்சிகளின் குரலை கேட்க வாய்ப்பு தராமல் ஓர் ஆளும் கட்சி அராஜகம் செய்யலாமா? என்று பொங்கித் தீர்த்திருக்கிறது தமிழகத்தின் ஆளுங்கட்சியான திமுக…. அட ஒரு ஆளுங்கட்சி இப்படி பேசுகிறதா? என்று பதறாதீர்கள்.. நாடாளுமன்றத்தில் தான் இப்படி எதிர்க்கட்சித்தலைவருக்கு வக்காலத்து வாங்கி, வாய் வீங்கிப் போகும் அளவுக்கு பேசிக்கொண்டிருக்கிறது திமுக…. எதிர்க்கட்சிகளை பேசவிடாமல் முடக்கினால் என்ன வலி என்று இப்போதுதான் புரிகிறதா இந்த விடியா அரசுக்கு?தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் மாநில எதிர்க்கட்சித்தலைவரான எடப்பாடி கே பழனிசாமி பேசும்போது, மைக் கை ஆஃப் செய்வது, நா வறண்டுபோகும் அளவிற்கு 2 மணி நேரம் புள்ளிவிபரங்களோடு திமுகவின் தில்லுமுல்லுகளை அவர் புட்டுப் புட்டு வைத்தால் அந்த லைவ் – ஐ அலேக்காக கட் செய்வது… எதிர்கட்சி உறுப்பினர்கள் பேசும்போது, அவர்களை பேசவிடாமல் சபாநாயகரே மாங்கு மாங்கென்று பேசுவது… என்று ஒட்டுமொத்த ஜனநாயகத்தின் குரல்வளையையும் நசுக்கிப் பிழிந்துகொண்டிருக்கும் இந்த திமுக, நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தைப் பற்றி க்ளாஸ் எடுத்துக்கொண்டிருக்கிறது.. திமுகவின் இந்த கூத்தைக் கேட்பவர்களுக்கு சிரிப்புத்தான் வரும்..தான் பேசுவதை மட்டுமே மக்கள் கேட்க வேண்டும், போடும் உத்தரவுகளை மக்கள் பின்பற்ற வேண்டும், ஊடகங்கள் கேள்வி கேட்கக்கூடாது, எதிர்க்கட்சிகள் ஊருக்குள்ளேயே இருக்கக்கூடாது, ஒட்டுமொத்தமாக, கப்சுப் என்று இருக்க வேண்டும் எல்லாரும் … என, எதேச்சதிகார போக்குடன் தமிழகத்தில் செயல்பட்டு வரும் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுகவின் எம்பிக்கள் இன்று டெல்லியில் “ஐயோ ஐயோ ஜனநாயகத்தை காணவில்லை” என்று கிணத்தை காணோம் கதையாக ட்ராமா போட்டுக்கொண்டுள்ளது.மக்களின் வரிப்பணம் வீணாய் போனாலும் பரவாயில்லை, தமிழகத்தில் நீட், என்எல்சி, விலைவாசி உயர்வு உள்ளிட்ட எந்த பிரச்சனைகள் தீர்க்கப்படாவிட்டாலும் பரவாயில்லை, நாம் அரசியல் செய்ய வேண்டும் என்பதுதான் திமுகவின் ஃபார்முலா போல… ஏற்கனவே, அரசியல் செய்யாமல் அவியலா செய்வோம்? என்றெல்லாம் பேசிய திமுக இன்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்களை வைத்து அவை நடவடிக்கைகளை முடக்கி எந்த மசோதாக்களையும் தாக்கல் செய்யவிடாமல் தடுத்து அராஜகம் செய்துகொண்டிருக்கிறது.தமிழக பிரச்சனைகளை மக்களுக்கும் அரசுக்கும் வெளிச்சம் போட்டு காட்டும் வகையில் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பேசுவதை இருட்டடிப்பு செய்த திமுக, இன்று நாடாளுமன்றத்தில் எம்.பிக்களை களம் இறக்கியிருப்பதன் பின்னணி என்ன ? பெரும்பாலான மசோதாக்கள் விவாதங்கள் ஏதும் இன்றி அப்படியே நிறைவேற்றப்பட்டிருக்கும் வேளையில், மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசுக்கு மறைமுகமாக உதவி வருகிறதா திமுக?தமிழக சட்டமன்றத்தில் ஜனநாயகத்தின் குரல்வளையை நசுக்கும் திமுக, நாடாளுமன்றத்தில் மட்டும் எதிர்க்கட்சித் தலைவருக்காக பரிந்து பேசுவதைப் பார்த்து இரட்டைவேட திமுகவை கழுவிக் கழுவி ஊற்றுகிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
via News J : https://ift.tt/nchlrBU
via News J : https://ift.tt/nchlrBU
Mediaவிடியா திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவரை 14 அம்மா உணவகங்களை மூடி ஏழைகளின் வயிற்றில் அடித்துள்ளது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.பசி நெருப்பு பீடிக்காமல் இருக்க ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, அம்மா உணவகங்களைத் தொடங்கினார். சென்னையில் தொடங்கப்பட்ட 407 அம்மா உணவகங்கள் ஏழை மக்களின் பசியாற்றும் அட்சயப்பாத்திரமாக செயல்பட்டு வந்தது. உலகநாடுகளே இந்த திட்டத்தை வியந்து பாராட்ட, இந்திய மாநிலங்கள் பலவும் தமிழகம் வந்து இந்த திட்டம் குறித்து அறிந்து சென்று தங்கள் மாநிலங்களில் செயல்படுத்தின.ஆனால் விடியா ஆட்சி வந்ததில் இருந்தே அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு ஏழை மக்களை எல்லாம் மனதில் கொள்ளாமல், அம்மா உணவகத்தை முடக்கும் நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறது. இதன் முதல் கல்லாக முகப்பேரில் செயல்பட்டு வந்த அம்மா உணவகத்தை திமுகவினர் அடித்து சூறையாடினர். மழைநீர் வடிகால்வாய் அகலப்படுத்த இடையூறாக இருப்பதாகக் கூறி கே. கே. நகர் பி.வி.ரமணா சாலையில் இயங்கிய அம்மா உணவகம் அகற்றப்பட்டது. இதேபோல கே.கே.நகர், இஎஸ்ஐ மருத்துவமனை எதிரே இருந்த அம்மா உணவகம், கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் கிங் மருத்துவமனை நுழைவாயில் அருகே செயல்பட்ட அம்மா உணவகம், தியாகராயா சாலையில் இயங்கி வந்த அம்மா உணவகம் என கடந்த 2 ஆண்டுகளில் மட்டும்14 அம்மா உணவகங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.மீதமுள்ள 393 அம்மா உணவகங்களையும் பெயரளவில் மட்டுமே அரசு நடத்தி வருவதாக அங்கு பணியாற்றும் ஊழியர்களே வேதனை தெரிவிக்கின்றனர். பொருட்களை தேவையான அளவு கொடுப்பதில்லை, தரமற்ற பொருட்கள் தரப்படுவது, உணவு பொருளை குறைவாக தயாரித்து உணவகத்தை சீக்கிரம் மூடுவது என்று இடையூறுகள் தொடர்கின்றன. அதே போல, மூன்று வேளையும் பல்வேறு உணவுகள் பரிமாறப்பட்ட நிலையில், தற்போது காலையில் இட்லி சாம்பார், மதியம் சாம்பார் சாதம் மட்டும் பரிமாறப்படுவது, இரவில் தரமற்ற சப்பாத்தி தருவது என அம்மா உணவகம் குறித்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை இந்த அரசு திட்டமிட்டு ஏற்படுத்தி வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் தரமான உணவு வழங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தொடங்கப்பட்ட இந்த அம்மா உணவகங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அம்மா என்ற பெயர் இருக்கிற ஒரே காரணத்தினால் முழு திட்டத்தையும் முடக்கும் நோக்கத்தோடு திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. அதே நேரம் ஏழைகளின் பசி நெருப்பு விடியா அரசை சுட்டெரிக்கும் என்றும் எச்சரிக்கிறார்கள்.
via News J : https://ift.tt/diUWV8K
via News J : https://ift.tt/diUWV8K
Mediaஅதிமுக பொதுச்செயலாளர் முன்னிலையில் அன்வர் ராஜா தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே பி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், வேலுமணி தங்கமணி செங்கோட்டையன் ஜெயக்குமார் விஜயபாஸ்கர் உள்ளதோர் உடன் இருந்தனர்.கட்சியில் இணைந்த பின் அன்வர் ராஜா பேசியதுஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் என்ற திருக்குறளுக்கிணங்க ஒத்துவாழும் மிகப் பெரிய குழுவில் மீண்டும் இணைந்துள்ளது மகிழ்சியளிப்பதாக அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்டு இருந்தவரும், அதிமுக முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான அன்வர் ராஜா, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை சந்தித்து தன்னை மீண்டும் அதிமுகவில் இணைந்து கொண்டார். ராயப்பேட்டைவில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யை சந்தித்து பூங்கொத்து கொடுத்து தன்னை மீண்டும் கழகத்தில் இணைத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த அவர், மிகப்பெரும் எழுச்சியுடன் செயல்பட்டு வரும் அதிமுகவில், மீண்டும் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். அதிமுகவில் மீண்டும் இணைந்ததற்கான காரணத்தை திருக்குறளோடு ஒப்பிட்டு பேசிய அன்வர் ராஜா ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றையான் செத்தாருள் வைக்கப்படும் என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி, ஒற்றை முழுவுடன் இணைந்து வாழ்பவன் தான் மனிதன், தனித்து வாழ்பவன் இறந்தவனுக்கு சமம் என்றும் அன்பு ராஜா கூறியுள்ளார்.எதிர்வரும் நாட்களில் அதிமுகவில் மிகுந்த மகிழ்ச்சியுடனும், எழுச்சியுடனும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பணியாற்ற இருப்பதாகவும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நாட்களிலும் அதிமுக விக்காகவே பணியாற்றியதாகவும் அன்வர் ராஜா கூறினார்
via News J : https://ift.tt/7EXCrRv
via News J : https://ift.tt/7EXCrRv
Mediaஆவின் நிர்வாகத்துல ஊழல் அதிகாரிகள் காப்பாத்தப்படுறதாவும், வெண்ணெய் கொள்முதல்ல முறைகேடுகள் தொடருறதாவும் பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துருக்கு.
தமிழக பால்வளத்துறை அமைச்சரா இருந்த ஆவடி நாசர தூக்கிட்டு, மனோ தங்கராஜ அங்க கொண்டு வந்ததுமே, ஆவின் பிச்சிக்கிட்டு போயிடும்னு 200 ரூபா உபிஸ் எல்லாம் இணையத்துல கூவிக்கிட்டு இருந்தாங்க….பால் முகவர்களும் கூட இந்த இரண்டு ஆண்டுல சீரழிஞ்சி போன பால் வளத்துறையிலயும், ஆவின்லயும் மாற்றங்கள் நிகழும், முறைகேடுகள் தடுக்கப்படும், ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவாங்க…. ஆவின் நிறுவனம் வளர்ச்சியடையும்னு நெனைச்சாங்க… ஆனா, எல்லாம ஓட்டை விழுந்த ஆவின் பால் பாக்கெட் மாதிரியே புஷ்ஷுன்னு ஆகிப் போச்சு.இந்த ஆட்சி தொடங்குனதுமே ஆவின்ல இருந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடர கையிருப்பே இல்லாம குறைஞ்ச விலைக்கு வித்ததோட, ஆவினுக்கான பால் கொள்முதலையும் அதிகரிக்காம மகராஷ்டிரா மாநிலத்துல இருந்து தரம் குறைந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடர அதிக விலை கொடுத்து வாங்கியிருக்காங்க. அதுல நடந்த முறைகேடுகள் தொடர்பாவும், ஊழல் செஞ்ச 16 அதிகாரிகளோட பட்டியலயும், பால்முகவர்கள் அமைச்சர நேர்ல போய் பார்த்து கொடுத்திருக்காங்க.ஆனா ரெண்டு மாசமாகியும் அது கிணத்துல போட்ட கல்லாவே இருந்துருக்கு. இதுக்கு இடையில ஊழல் பட்டியல்ல இருந்த அதிகாரிங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம, ராஜமரியாதையோட பணியிட மாற்றம் செஞ்சிருக்காங்களாம்.இப்ப என்னடான்னா, மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து இப்போதைய மார்க்கெட் விலைய விட அதிகம் கொடுத்து, வெண்ணெய் மற்றும் பால் பவுடர்னு 10ஆயிரம் டன் கொள்முதல் செஞ்சி அதுமூலமா அதிகாரிங்க தங்களோட கஜானாவ நிரப்புறதுல மும்முரமா இருக்காங்களாம்.இதெல்லாம் அமைச்சரா இருக்கிற மனோ தங்கராஜுக்கு தெரியாதா? அல்லது வாங்குறத வாங்கிகிட்டு கண்டும் காணாமா இருக்காரான்னு பால் முகவர்களும், தொழிலாளர் நலச் சங்கத்துக்காரங்களும் கேள்வி எழுப்பிருக்காங்க.ஓரே ஒரு விஷயம்… ஆவின்ல பால் மட்டும்தான் வெள்ளையா இருக்கு… அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் எல்லார் மேலயும் ஊழல் கறை படிஞ்சித்தான் போயிருக்கு.
via News J : https://ift.tt/seG3Shi
தமிழக பால்வளத்துறை அமைச்சரா இருந்த ஆவடி நாசர தூக்கிட்டு, மனோ தங்கராஜ அங்க கொண்டு வந்ததுமே, ஆவின் பிச்சிக்கிட்டு போயிடும்னு 200 ரூபா உபிஸ் எல்லாம் இணையத்துல கூவிக்கிட்டு இருந்தாங்க….பால் முகவர்களும் கூட இந்த இரண்டு ஆண்டுல சீரழிஞ்சி போன பால் வளத்துறையிலயும், ஆவின்லயும் மாற்றங்கள் நிகழும், முறைகேடுகள் தடுக்கப்படும், ஊழல் அதிகாரிகள் தண்டிக்கப்படுவாங்க…. ஆவின் நிறுவனம் வளர்ச்சியடையும்னு நெனைச்சாங்க… ஆனா, எல்லாம ஓட்டை விழுந்த ஆவின் பால் பாக்கெட் மாதிரியே புஷ்ஷுன்னு ஆகிப் போச்சு.இந்த ஆட்சி தொடங்குனதுமே ஆவின்ல இருந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடர கையிருப்பே இல்லாம குறைஞ்ச விலைக்கு வித்ததோட, ஆவினுக்கான பால் கொள்முதலையும் அதிகரிக்காம மகராஷ்டிரா மாநிலத்துல இருந்து தரம் குறைந்த வெண்ணெய் மற்றும் பால் பவுடர அதிக விலை கொடுத்து வாங்கியிருக்காங்க. அதுல நடந்த முறைகேடுகள் தொடர்பாவும், ஊழல் செஞ்ச 16 அதிகாரிகளோட பட்டியலயும், பால்முகவர்கள் அமைச்சர நேர்ல போய் பார்த்து கொடுத்திருக்காங்க.ஆனா ரெண்டு மாசமாகியும் அது கிணத்துல போட்ட கல்லாவே இருந்துருக்கு. இதுக்கு இடையில ஊழல் பட்டியல்ல இருந்த அதிகாரிங்க மேல எந்த நடவடிக்கையும் எடுக்காம, ராஜமரியாதையோட பணியிட மாற்றம் செஞ்சிருக்காங்களாம்.இப்ப என்னடான்னா, மகாராஷ்டிரா மாநிலத்துல இருந்து இப்போதைய மார்க்கெட் விலைய விட அதிகம் கொடுத்து, வெண்ணெய் மற்றும் பால் பவுடர்னு 10ஆயிரம் டன் கொள்முதல் செஞ்சி அதுமூலமா அதிகாரிங்க தங்களோட கஜானாவ நிரப்புறதுல மும்முரமா இருக்காங்களாம்.இதெல்லாம் அமைச்சரா இருக்கிற மனோ தங்கராஜுக்கு தெரியாதா? அல்லது வாங்குறத வாங்கிகிட்டு கண்டும் காணாமா இருக்காரான்னு பால் முகவர்களும், தொழிலாளர் நலச் சங்கத்துக்காரங்களும் கேள்வி எழுப்பிருக்காங்க.ஓரே ஒரு விஷயம்… ஆவின்ல பால் மட்டும்தான் வெள்ளையா இருக்கு… அமைச்சர் தொடங்கி அதிகாரிகள் வரைக்கும் எல்லார் மேலயும் ஊழல் கறை படிஞ்சித்தான் போயிருக்கு.
via News J : https://ift.tt/seG3Shi
Mediaஇலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கிற்கு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.அமலாக்க துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்க கோரி அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன், கொளத்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன் கோ வாரண்டோ வழக்கு தொடர்ந்திருந்தார்.இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற உத்தரவையும், அவரை பதவி நீக் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததையும் எதிர்த்து வழக்கறிஞர் எம்.எல்.ரவி தாக்கல் செய்த வழக்கு தொடர்ந்திருந்தார்அனைத்து வழக்குகளிலும் வாதங்கள் நிறைவடைந்த்தை தொடர்ந்து எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது.
via News J : https://ift.tt/pzkKflr
via News J : https://ift.tt/pzkKflr
Mediaஅரசு மருத்துவமனையில் மருத்துவர்களும், போதிய வசதிகளும் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும் நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே சர்ச்சையில் சிக்கிய இந்த மருத்துவமனை மீது அடுக்கடுக்கான புகார்கள் முன்வைக்க காரணம் என்ன என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.மருத்துவர்கள், செவிலியர்கள், படுக்கை வசதிகள் என எதுவுமே இல்லாமல் கடமைக்கு மருத்துவமனை என்ற பெயரில் செயல்படுகிறது இந்தக் கட்டிடம்.செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த சுகாதார நிலையத்தில் சூனாம்பேடு மற்றும் அதனை சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராம புறங்களில் இருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர்.ஆனால் இந்த சுகாதார நிலையத்தில் நோயாளிகளின் அடிப்படை தேவைகளான குடிநீர், நோயாளிகள் காத்திருப்பு அறை, கழிப்பறை, எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் உள்ளிட்ட எந்தவொரு வசதிகளும் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பிரவசத்திற்காக வரும் கர்பிணி பெண்களை, போதிய மருத்துவர்கள் இல்லையென்று கூறி அனுப்பிவிடுகின்றனர். இதனால் அவசர காலத்தில் தனியார் மருத்துவமனையை நோக்கிச் செல்லும் நிலைக்கு ஏழை மக்கள் தள்ளப்படுகின்றனர்.கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த மருத்துவமனைக்கு பிரசவ வலியுடன் வந்த பெண் ஒருவருக்கு மூன்று செவிலியர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர். அப்போது குழந்தையின் கால் முதலில் வெளியே வந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ந்த செவிலியர்கள் மருத்துவருக்கு வீடியோ கால் மூலம் அழைத்து நிலைமையை உணர்த்தியுள்ளனர். வீடியோ காலில் பிரசவ வலியில் இருந்த பெண்ணின் நிலையைக் கண்ட மருத்துவர், தான் சொல்வதை செய்யுமாறு செவிலியர்களிடம் கூறியுள்ளார்.ஆனால், எவ்வளவு முயன்றும் குழந்தையின் தலை வெளியே வரவில்லை. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவரை மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டது. சுமார் 8 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வழக்கு கூட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.இத்தனை புகார்களுக்கு பின்னரும் சூனாம்பேடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவரோ, செவிலியர்களோ முறையாக பணிக்கு வருவதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் முறையான சிகிச்சை வசதிகள் இல்லாமல் கஷ்டப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
via News J : https://ift.tt/r6xCi3D
via News J : https://ift.tt/r6xCi3D
Mediaஇங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் மொயின் அலி 2021 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகுவதாகக் கூறி தன்னுடைய ஓய்வினை அறிவித்திருந்தார். ஆனால் பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்சும் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த அறிவிப்பை திரும்பப் பெற்று, ஆஷஸ் வரை ஆடுவேன் என்று சொல்லியிருந்தார். தற்போது ஆஷஸ் தொடர் நிறைவு பெற்றதை அடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விலகினார். முக்கியமாக இந்த ஆஷஸ் தொடரில் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வெல்வதற்கு முக்கியத் தூணாக மொயின் அலி இருந்துள்ளார். அப்போட்டியில் முக்கியமாக மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி ஆட்டத்தை இங்கிலாந்து பக்கம் திருப்பிவிட்டார்.இதனைத் தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட்கள் விளையாட இருக்கிறது. எனவே தொடர்ந்து டெஸ்டில் விளையாடும் படியும் முடிவை மேற்கொண்டு பரிசீலிக்கும்படியும் மொயின் அலியிடம் பயிற்சியாளர் மெக்கல்லமும், கேப்டன் பென் ஸ்டோக்ஸும் கூறியுள்ளனர். அதற்கு மொயின் அலி. இந்திய சென்று டெஸ்ட் விளையாடுவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியது பின்வருமாறு உள்ளது.If Stokesy messages me again, I'm going to delete it' - Moeen Ali bows out of Tests on a high | ESPNcricinfoஎனது முடிவு ஸ்டோக்ஸுக்கும் மெக்கலமிற்கும் நன்றாக தெரியும். அற்புதமான இந்த ஆஷஸ் தொடரில் வெற்றியுடன் எனது கடைசி டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்துவிட்டேன். எனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் ஏற்றம், இறக்கங்கள் நிறைந்தது. நான் அதை மாற்ற முடியாது. ஆஷஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ஏற்க மறுத்து இருந்தால் நிச்சயம் வருத்தப்பட்டு இருப்பேன். இனி வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளேன். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவேன் என்று கூறியுள்ளார்.
via News J : https://ift.tt/bGv5KFz
via News J : https://ift.tt/bGv5KFz
Mediaபன்னீர்-டிடிவி ஆதரவாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்கள் சேராததால், தள்ளாத வயதான பாட்டிகளை காசு கொடுத்து அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.ஆர்ப்பாட்டத்துக்கு ஆள் கிடைக்காமல் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த பாட்டிகளைக் கூட்டி வந்து கூட்டம் சேர்த்துள்ளனர் பன்னீர்-டிடிவி ஆதரவாளர்கள்.நீதிமன்ற தீர்ப்புகளையும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவையும் மீறி அதிமுக பெயரையும், கொடியையும் பயன்படுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர் பன்னீர்செல்வம்-டிடிவி ஆதரவாளர்கள்.சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஆள்கள் கிடைக்காமல், இரு தரப்பினரும் தனித்தனியாக பாட்டிகள் பலரை வாகனங்களில் அழைத்து வந்திருந்தனர். வந்திருந்த மூதாட்டிகள் ஆர்ப்பாட்டத்தில் கோஷம் இடக் கூட தெம்பில்லாமல் சாலையில் கிடைத்த இடங்களில் அமர்ந்து ஓய்வெடுத்து வந்தனர்.அழைத்து வரப்பட்டவர்களுக்கு அவ்வப்போது தேநீர், உணவு என வழங்கி டயர்டாகாமல் பார்த்துக் கொண்டனர் பன்னீர், டிடிவி ஆதரவாளர்கள்.ஒரு கண்டன கோஷத்துக்கு கூட வாயை திறக்காமல் அமைதியாக சாலையில் அமர்ந்து மௌனம் காத்தனர் ஆயாக்கள். ஆர்ப்பாட்டம் முடிந்து நன்றியுரை தெரிவிப்பதற்குள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கூட்டத்துக்கு வந்த மூதாட்டிகளுக்கு சிலருக்கு கைகளில் 250 ரூபாயும், மொய்க்கவரில் வைத்தும் பணம் வழங்கப்பட்டது.
via News J : https://ift.tt/O4K5WtX
via News J : https://ift.tt/O4K5WtX