Mediaசமூக நீதி, சாம்பார், ரசம் என்று மேடைக்கு மேடை முழங்கிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவின் உடன் பிறப்புகள்.. ஆனால், நிஜத்தில் பட்டியலின மக்களுக்கு போய்சேரவேண்டிய காசை கட்டம் கட்டி கல்லாவில் சேர்த்துக்கொண்டிக்கிறார்கள் விஞ்ஞான ஊழல் அறிந்த திமுக.பட்டியலின மக்களின் நலனுக்காக ஒவ்வொரு ஆண்டும் மத்திய தொகுப்பில் இருந்து குறிப்பிட்ட தொகை மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும். அந்தக்காசை வைத்துக்கொண்டு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் ஒரு மாநில அரசு செயல்படுத்தும்.. ஆனால், இந்த விடியா அரசு என்ன செய்திருக்கிறது தெரியுமா? அவர்களுக்கு போய்ச்சேரவேண்டிய காசை எடுத்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டு பெண்களுக்கு உரிமைத் தொகை வழங்குகிறது.. ஆம், கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்த கதையாக, பட்டியலின மக்களுக்கு பட்டை நாமம் போட்டிருக்கிறார் ஸ்டாலின்.இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்ததும், தமிழ்நாடு அரசு பதிலளிக்க, தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் சார்பில் தற்போது விளக்கம் கேட்டு தமிழக அரசு தலைமைச் செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸில், மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்காக ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதி முறைகேடாகப் பயன்படுத்தப்படுவதாக புகார் வந்துள்ளதாகவும், இதை தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் விசாரிப்பதாகவும் கூறியுள்ளதோடு, புகார் குறித்து 15 நாட்களுக்குள் திமுக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்த 2018-19ம் ஆண்டு 95.3 சதவீதம் , 2019-20 ம் ஆண்டு 96 சதவீதமும், 2021 ம் ஆண்டு 93.23 சதவீத நிதியை பட்டியலின மக்களின் வளர்ச்சிக்காக செலவிட்டு அவர்களின் வாழ்வாதாரம் காத்தது அதிமுக அரசாங்கம்.. ஆனால் இந்த விடியா அரசு பதவியேற்றதும், 2022 – 23ம் நிதியாண்டில் வெறும் 35 சதவீத பணத்தை மட்டுமே உபாயோகப்படுத்தியிருக்கிறது. இந்த லட்சணத்தில்தான் தங்களை சமூகநீதிக் காவலர்கள் என்று வேறு பெருமை பீத்திக்கொள்கின்றனர்…
தூய்மை மற்றும் துப்புறவு பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானவர்களுக்கு கையுறைகள் கூட இன்னும் கொடுப்பதில்லை இந்த விடியா அரசு… ஆனால் ஈரேழு உலகத்திற்கும் கேட்பதுபோல சமூக நீதிக்காக சீன் போடுவார்கள் இந்த ஸ்டாலின் அரசு…சொன்னதையும் செய்தோம், சொல்லாததையும் செய்தோம் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயன்படுத்தினால், பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா?பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா “சமூக நீதி” பேசும் முதல்வர் ஸ்டாலின்? என்ற கேள்வியை முன்வைக்கும் பட்டியலின மக்களுக்கு என்ன விடைதருவோம்? என்பதுதான் இன்றைய நாளில் தமிழக மக்களின் ஒரே சந்தேகம்.i
via News J : https://ift.tt/DuJRrFY
தூய்மை மற்றும் துப்புறவு பணிகளில் ஈடுபடும் பெரும்பாலானவர்களுக்கு கையுறைகள் கூட இன்னும் கொடுப்பதில்லை இந்த விடியா அரசு… ஆனால் ஈரேழு உலகத்திற்கும் கேட்பதுபோல சமூக நீதிக்காக சீன் போடுவார்கள் இந்த ஸ்டாலின் அரசு…சொன்னதையும் செய்தோம், சொல்லாததையும் செய்தோம் என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், ஆதிதிராவிடர் சிறப்பு உட்கூறு நிதியை மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு பயன்படுத்தினால், பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்கள் பாதிக்கப்படமாட்டார்களா?பட்டியல் மற்றும் பழங்குடி இன மக்களுக்கு துரோகம் இழைக்கிறாரா “சமூக நீதி” பேசும் முதல்வர் ஸ்டாலின்? என்ற கேள்வியை முன்வைக்கும் பட்டியலின மக்களுக்கு என்ன விடைதருவோம்? என்பதுதான் இன்றைய நாளில் தமிழக மக்களின் ஒரே சந்தேகம்.i
via News J : https://ift.tt/DuJRrFY
Mediaவெளிநாட்டுக்கு சென்று வேலை பார்ப்பதற்கு பலருக்கும் ஆர்வம் இருக்கும். அப்படி வெளிநாடு செல்வோருக்கு எந்த நாட்டில் அதிக சம்பளம் கிடைக்கும் என்று உங்களுக்கு தெரியுமா?… சொல்கிறது இந்த செய்தி தொகுப்பு.வெளிநாடு சென்று சம்பாதித்து செட்டில் ஆக வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கிறது. அப்படி வெளிநாடு செல்வோருக்கு சில நாடுகளில் சரியான வேலையும், போதிய சம்பளமும் கிடைப்பதில்லை. நிலைமை இப்படி இருக்கையில் உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நாடாக சவுதி அரேபியா இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி சமீபத்தியத்தில் நடத்திய ஆய்வில் இந்த தகவல் தெரிவித்துள்ளது. அதாவது சவுதி அரேபியாவில் நடுத்தர அளவில் மேலாளர்களாக பணியாற்றுபவர்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 83,763 பவுண்டுகள் சம்பளமாக வழங்கப்படுகிறது. அதாவது இந்திய மதிப்பில் இது ரூ.88.64 லட்சம் வழங்கப்படுகிறது. உலகிலேயே இந்தபணிக்கு வழங்கப்படும் அதிகபட்ச சம்பளம் இதுவாகும்.முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சராசரி சம்பளம் மூன்று சதவீதம் குறைந்திருந்தாலும் உலகளவில் இதுவே அதிகபட்ச சம்பளமாக இருக்கிறது. அதிக சம்பளம் வழங்கப்படுவதால் சவுதி அரேபியா வெளிநாட்டு பணியாளர்களுக்கு உகந்த நாடாக விளங்குகிறது.அதே போல பிரிட்டனில் வரிகள் காரணமாக பணியாளர்களுக்கு அதிக செலவுகள் ஏற்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் பணியாளர்களுக்கு ஏற்படும் செலவுகள் மிக குறைவு எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பணியாளர்களுக்கு அதிக செலவை ஏற்படுத்தும் நகரங்களில் சிங்கப்பூர் 16 ஆவது இடத்தை பிடித்திருக்கிறது.தரவுகளின் அடிப்படையில் வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் ஹாங்காங் மூன்று இடங்கள் முன்னேறி 5-வது இடத்தையும், ஜப்பான், இந்தியா, சீனா ஆகியவை உலகளாவிய தரவரிசையில் முறையே இரண்டு, மூன்று மற்றும் நான்காவது இடங்களை பிடித்துள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/0jQ6EiV
via News J : https://ift.tt/0jQ6EiV
Mediaஇந்தியாவில் உள்ள வணிக நிறுவனங்களில் ஐந்து ஆண்டுகளில் 96,000 நிறுவனங்கள் வணிகத்தை வெளியேறி உள்ளன என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. இது மிகவும் அதிர்ச்சியூட்டக் கூடிய செய்தியாக உள்ளது. ஏப்ரல் 1, 2018-லிருந்து மார்ச் 31 2023 வரையான ஐந்து ஆண்டுகளில் 96,261 நிறுவனங்கள் வணிகத்தைவிட்டு வெளியேறிவிட்டன என்ற செய்தி அரசாங்க தரவுகள் மூலம் நமக்கு கிடைக்கிறது. இத்தகைய முடிவை இந்த நிறுவனங்கள் தாமாக முன் வந்து எடுத்துள்ளன என்று அதே தரவுகள் குறிப்பிடுகின்றன.அதாவது கடந்த ஐந்தாண்டுகளில் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாணையம், மொத்தம் 510 நிறுவனங்களுக்கு, நிறுவனங்களை திவால் ஆகாமல் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ், இறுதி தீர்ப்பாணை வழங்கியுள்ளது. தற்போதைய சூழலில் 11,037 நிறுவனங்கள் வணிகத்தை விட்டு வெளியேறுவது நிலுவையில் இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், ஒரு நிறுவனம் வணிகத்தை விட்டு தானாக வெளியேறுவதற்கான காலம் ஆறு முதல் எட்டு மாதங்கள் வரை அல்லது பன்னிரெண்டு முதல் பதினெட்டு மாதங்கள் வரை ஆகி உள்ளது. சிரமத்தில் உள்ள நிறுவனங்கள் வணிகத்திலிருந்து விரைவாக வெளியேற அரசு, “ஸ்பேஸ்” எனும் சிறப்பு மையத்தை கடந்த மே மாதம் துவங்கியிருந்தது. இந்த மையம் துவங்கப்பட்ட பின், ஒரு நிறுவனம் தானாக முன்வந்து தானாக வணிகத்திலிருந்து வெளியேறும் காலம் நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டது. இந்த வணிக நிறுவனங்கள் வணிகத்தை விட்டு வெளியேறுவதற்கு கொரோனா பெருந்தொற்றுக் காலமும் ஒரு கூறாக சொல்லப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/9Ejn03I
via News J : https://ift.tt/9Ejn03I
Mediaஉலகம் ஒரு டெக்னாலஜியால் மூழ்கி இருக்கும் காலம் இது. இந்த காலத்தில் ஒவ்வொரு டெக்னாலஜி நிறுவனமும் போட்டிப் போட்டுக்கொண்டு தங்களுடைய புதிய புதிய கண்டுபிடிப்புகளை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களை தங்களின் வாடிக்கையாளர்களாக மாற்றுவதே அவர்களின் முக்கிய நோக்கு. அதற்காக இப்பெரு நிறுவனங்கள் வணிகப் போட்டியில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய சூழல் இது. அதற்கு ஏற்றார் போல் தற்போது ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோபுக் என்கிற புதிய கண்டுபிடிப்பை உருவாக்கியுள்ளது. அதனைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.JioBook laptop listed on Indian Govt website at Rs. 19500! Check specs | Laptops-pc Newsரிலையன்ஸ் ரீட் டெய்ல் நிறுவனம் ‘ஜியோ புக்’ எனும் லேப்டாப் போன்ற சிறிய வகை சாதனைத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது, இந்தியாவின் முதல் கற்கும் சாதனமாக இருக்கும் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் கல்வி, ஆன்லைன் வணிகம் உள்ளிட்ட எண்ணற்ற செயல்களில் ஈடுபட, அனைத்து வயதினருக்கும் ஏற்ப, ஜியோபுக் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஜியோ புக், ஆக்ஸ்ட் 5 முதல் விற்பனைக்கு வர உள்ளது. இதன் விற்பனை விலை 16,399 ஆகும். இதன் சிறப்பம்சங்கள் 4ஜி எல்.டி.இ மற்றும் டூயல் பேண்டு வைபை, 75க்கும் அதிகமான கீபோர்ட் ஷார்ட் கட்ஸ், ஒயர்லெஸ் பிரிண்டிங் வசதி, 4 ஜி.பி, எக்ஸ் 64 ஜிபி, ஜியோ ஓ.எஸ், அல்ட்ரா ஸ்லிம், 990 கிராம் எடை, 11.6 அங்குல எச்.டி டிஸ்ப்ளே, இன்பினிட்டி கீபோர்டு போன்ற அம்சங்கள் இந்த ஜியோபுக்கில் உள்ளது.
via News J : https://ift.tt/GYLaKWQ
via News J : https://ift.tt/GYLaKWQ
Mediaசென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகளில் 101 பெண் கவுன்சிலர்கள் உள்ளனர். இதில் பெரும்பாலான பெண் கவுன்சிலர்கள் செயல்படுவதே இல்லை என்கிற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது. அந்த பெண் கவுன்சிலர்களின் கணவர், தந்தை, சகோதரர், மகன் என யராவது ஒருவர் நிழல் கவுன்சிலர்களாக இருந்து வருகின்றனர். இப்படி பெண் கவுன்சிலர்களை பணிவிட செய்யவிடாமல் அக்குடும்ப ஆண்களே பணி செய்து வருவது என்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.சமூக நீதி, பெண்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம் என்று கூறிவரும் திமுக சென்னை மாநகராட்சி வரலாற்றில் முதல் முறையாக ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் பிரியாவை மேயராக அறிவித்தது. இந்த விளம்பர அரசின் விளம்பர நடவடிக்கைதான் இது என்று போகப் போக அனைவருக்கும் தெரிந்துவிட்டது, அவ்வளவு பொய், அத்தனை புரட்டு. மேயர் பிரியா கலந்துகொள்ளும் நிகழ்வில் அவர் பேச வேண்டியதை எதாவது ஒரு அமைச்சர் பேசிவிடுவார். அப்படியில்லை என்றால், பின்னால் நின்று அமைச்சர் சொல்ல சொல்ல, அந்த அம்மாவும் சொல்லிக்கொடுப்பதை அப்படியே ஒப்பிப்பார்.Women need to overcome challenges boldly: Mayor Priya Rajan - Times of Indiaமேயர் பிரியா அரசியலுக்கு புதியவர், அதனால் தான் சில அமைச்சர்கள் வழிகாட்டியாக செயல்பட்டார்கள் என்று திமுகவினர் அன்றைக்கு முட்டுக்கொடுத்தனர். அப்படி அரசியல் அனுபவம் இல்லாதவருக்கு ஏனைய்யா இந்த மேயர் பதவியைத் தூக்கிக் கொடுத்தீர்கள் என்று கேட்டால் திமுக வட்டாரம் கப்சிப் தான். தற்போது எந்த மாதிரியான குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றால், சென்னை மாநகராட்சி நிர்வாகத்தில் திமுக அமைச்சர்களே நேரடியாக தலையிடுவதாக அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளார்கள்.சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் முக்கியத் திட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகத் திரும்பியுள்ளது. தற்போது கொண்டுவரப்பட்ட நகராட்சிக்கான விதியில் சென்னை மாநகராட்சி மேயருக்கே தனித்துவ அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நகராட்சி நிர்வாகத்தின் கீழ் சென்னை மாநகராட்சியும் வந்துவிட்டது. இருந்தாலும், தொடர்ந்து மாநகராட்சியின் வளர்ச்சிப் பணிகள் மேயரின் நேரடி கட்டுப்பாட்டில் தான் நடக்க வேண்டும். ஆனால், இங்கு சென்னையில் என்ன வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகின்றன என்பதை கண்காணிப்பதிலிருந்து, யார் யாருக்கு ஒப்பந்தங்களை ஒதுக்க வேண்டும் என்பது வரை மூத்த அமைச்சர்கள் தான் முடிவெடுக்கிறார்களாம். இதனால் மேயர் பிரியாவுக்கான தனித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. சமூக நீதி பேசும் திமுகவினர், மேயர் பிரியா பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் செயல்பட விடாமல் தடுக்கிறார்களா? என்பது திமுகவில் உள்முகத்திற்கே தெரிந்த இரகசியம். அதேபோல மாநகராட்சி அதிகாரிகளை அமைச்சர்கள் ஒருமையில் பேசியும் திட்டியும் வருகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் இதுபோலான உள்ளடி விவகாரங்களை முதல்வர் நேரடியாக நின்று கவனிக்காமல், அவர் போக்கிலேயே இருக்கிறார். பிரபலங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதிலும், அரசு விழாவை குடும்ப விழாவாக மாற்றுவதிலும் கண்ணில் எண்ணெய் ஊற்றி கவனித்து வரும் விடியா முதல்வருக்கு, சமூக நீதியின் அடிநாதம் எப்படி புரியும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
via News J : https://ift.tt/GTr3mhB
via News J : https://ift.tt/GTr3mhB
Mediaகுழந்தைச் செல்வங்கள் என்பவர்கள் வளர்ந்து இந்த பெரிய உலகத்தை தரிசிப்பதற்கு உத்வேகமும், உடல் வளர்ச்சியும், மனப் பயிற்சியும், பாதுகாப்பான சிறந்த உணவுமுறையும் தேவைப்படுகிறது. அந்த உணவு முறையை பெற்றோர்கள் சரியாக சிறு வயதிலிருந்தே கொடுத்துவர வேண்டிய கடமையிலும் உள்ளார்கள். பிறந்த குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவு தாய்ப்பால்தான். இது இயற்கையின் கொடையாக தாய்மார்களுக்கு கிடைத்துள்ளது.உலக சுகாதார நிறுவனமானது குழந்தைகளுக்கு சிறந்த ஊட்டச்சத்து மூலமாக தாய்ப்பால் கொடுப்பதை தீவிரமாக ஊக்குவிக்கிறது. உலக சுகாதார அமைப்பு “தாய்ப்பாலை பாதுகாக்கவும், ஊக்குவிக்கவும் மற்றும் ஆதரிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் உலக தாய்ப்பால் வாரம் கொண்டாடும் பொருட்டு ஆகஸ்ட் முதல்வாரத்தை தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழாம் தேதி வரை இந்த வாரம் கொண்டாடப்படுகிறது.WHO மற்றும் UNICEF குழந்தைகள் பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன மற்றும் வாழ்க்கையின் முதல் 6 மாதங்களுக்கு பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் – அதாவது தண்ணீர் உட்பட வேறு உணவுகள் அல்லது திரவங்கள் வழங்கப்படுவதில்லை. குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் உயிர்வாழ்வை உறுதி செய்வதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று தாய்ப்பாலானது மற்றும் குழந்தைகளுக்கு ஏற்றது. இது பாதுகாப்பானது, சுத்தமானது மற்றும் பல பொதுவான குழந்தை பருவ நோய்களிலிருந்து பாதுகாக்க உதவும் ஆன்டிபாடிகளைக் கொண்டுள்ளது.உலக தாய்ப்பால் வாரம் - breastfeeding week | பெமினா தமிழ்தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள்:குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை எல்லா வகையிலும் இதுவே முழுமையான உணவாகும். இதில் கொழுப்புகள் நிறைந்துள்ளன, குறிப்பாக அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் மற்றும் புரதத்தின் தரம் குழந்தைக்கு சரியானது. இது லிபேஸ், மற்ற பால் ஆதாரங்களில் மோசமாக இருக்கும் ஒரு நொதியில் நிறைந்துள்ளது என்பது தனித்துவமானது.இது தேவையை பூர்த்தி செய்ய போதுமான நீர் உள்ளடக்கத்தை கொண்டுள்ளது மற்றும் குழந்தை பிரத்தியேகமாக தாய்ப்பால் கொடுக்கும் வரை தண்ணீர் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.இதில் ஆன்டிபாடிகள் ஏராளமாக உள்ளது, இது குழந்தைக்கு எந்த தொற்றுநோய்களுக்கும் எதிராக போராட உதவுகிறது.தாய்ப்பாலில் உள்ள லாக்டல்புமின் என்ற புரதம் எளிதில் ஜீரணமாகும்.தாய்ப்பாலில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் குழந்தைக்கு இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.நுண்ணறிவு சோதனைகளில் சிறப்பாக செயல்படும் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகள் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு மற்றும் பிற்காலத்தில் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று WHO தெரிவித்துள்ளது.தாய் மற்றும் குழந்தையின் உணர்ச்சிப் பிணைப்பின் மூலம் தாய்ப்பாலின் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது. இது குழந்தைக்கு பாதுகாப்பு உணர்வைத் தருகிறது.இது கர்ப்ப காலத்தில் தேங்கியுள்ள கூடுதல் கொழுப்பை எரிக்க உதவுகிறது, மேலும் பிற்காலத்தில் தாய்மார்களுக்கு கருப்பை புற்றுநோய் மற்றும் மார்ப்க புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது .கர்ப்ப காலத்தில் அவள் பெற்றிருந்த எடையைக் குறைக்க தாய்ப்பால் உதவுகிறது மற்றும் அவளுடைய உருவத்தை மீண்டும் பெற உதவுகிறது.எனவே, குழந்தையின் வாழ்க்கையின் முதல் மாதங்களுக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் ஊட்டச்சத்துக்களையும் வழங்குவதற்கு தாய்ப்பால் சிறந்த வழியாகும் , மேலும் இது முதல் ஆண்டின் இரண்டாம் பாதியில் குழந்தையின் ஊட்டச்சத்துத் தேவைகளில் பாதி அல்லது அதற்கு மேற்பட்டவற்றைத் தொடர்ந்து வழங்குகிறது. வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டில் மூன்றில் ஒரு பங்கு.
via News J : https://ift.tt/aykbimF
via News J : https://ift.tt/aykbimF
Media”நான் எப்ப வருவேன் எப்படி வருவேனு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேர்த்துல கரெக்டா வருவேன்” என்ற சினிமா வசனம் போன்றதுதான் நம் இந்திய பவுலர் ஜஸ்பிரித் பும்ராவின் கதை. நிறைய நாட்கள் காயம் காரணமாக ஓய்விலே இருந்து தற்போது மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.தற்போது இந்தியா மற்றும் அயர்லாந்து இடையே மூன்று டி20 போட்டிகள் நடக்கவிருக்கிறது. அதில் இந்திய அணிக்கு பும்ரா கேப்டனாக தலைமை தாங்குகிறார். முதுகுவலி பிரச்சினை காரணமாக நியூசிலாந்தில் சிகிச்சைப் பெற்று வந்த பும்ரா, உடற்தகுதிச் சோதனையில் தேறி வந்துவிட்டார். கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு அணிக்குத் திரும்பியுள்ளார். அதேபோல் ப்ரசித் கிருஷ்ணாவும் அணிக்குத் திரும்பியுள்ளார். கடந்த ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்துடன் காயம் காரணமாக அணியிலிருந்து விலகியிருந்தார். தற்போது இவரும் திரும்பியிருப்பது அணிக்கு கூடுதல் மகிழ்ச்சி. பும்ரா கேப்டன் ஆனது போல, ருதுராஜ் கெய்க்வாட் துணைக் கேப்டனாக விளையாட உள்ளார். ஆகஸ்ட் 18, 20, 23 ஆகிய தேதிகளில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன.அணியின் விபரம் பின்வருமாறு உள்ளது…ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்), ருதுராஜ் (து.கேப்டன்), ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, ஷிவம் துபே, வாசிங்டன் சுந்தர், ஷபாஷ் அகமது, ரவி பிஷ்னோய், ப்ரசித் கிருஷ்ணா, அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான்.
via News J : https://ift.tt/Z7ArI69
via News J : https://ift.tt/Z7ArI69
Mediaமகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில்
17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுருத்துவதுடன் ,விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில்
17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,அதில் இருவர் தமிழ்நாட்டை…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 1, 2023
via News J : https://ift.tt/OuJMx1c
17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,அதில் இருவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்ற செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், விபத்தில் இறந்த தமிழ்நாட்டை சேர்ந்த இருவரின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க தமிழக அரசை வலியுருத்துவதுடன் ,விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோர் விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பவும் இறைவனை பிரார்த்திக்கிறேன்.மகாராஷ்டிரா மாநிலத்தில் தானேவின் சம்ருதி எக்ஸ்பிரஸ் சாலையில் பாலம் கட்டும் பணியின் போது ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் நடந்த விபத்தில்
17பேர் உயிரிழந்துள்ளனர், அவர்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்களையும் , வருத்தங்களையும் தெரிவித்து கொள்கிறேன்,அதில் இருவர் தமிழ்நாட்டை…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) August 1, 2023
via News J : https://ift.tt/OuJMx1c
Mediaஆழ்துளைக் கிணற்றில் விழுந்து மரணிக்கும் குழந்தைகளின் அவல நிலை நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே போகிறது. இதனை நாம் சாதாரணமாக கடந்து போய்விட முடியாது. பிஹாரில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் ஒன்பது மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டிருக்கிறான். இதற்கெல்லாம் மூடப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருக்கும் ஆழ்துளை கிணறுகள்தான் காரணம். இதில் தமிழ்நாடு மட்டும் விதிவிலக்கா என்ன? தமிழ்நாட்டில் இருக்கும் கைவிடப்பட்ட திறந்தவெளிக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள், கைவிடப்பட்ட குவாரிக் குழிகள் ஆகியவற்றைக் கண்டறிந்து, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தற்போதைய தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளார்.2019 ஆம் ஆண்டு திருச்சி மாவட்டம் மணப்பாறையின் அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2 வயது சுஜித்தை, 83 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு சடலமாக மீட்டனர். இது தமிழக மக்களிடையே பெருத்த சோகத்தையும் அதிர்ச்சியையும் அன்றைக்கு ஏற்படுத்தியது. இந்த ஆழ்துளைக் கிணறுகள் அச்சுறுத்தலாக கால்நடைகளுக்கு உள்ளன. ஒரு புள்ளிவிவரத்தின் படி இந்தியாவில் சுமார் 2 கோடியே 70 லட்சம் கிணறுகள்- ஆழ்துளை கிணறுகளாக உள்ளன. இதனை மத்திய நிலத்தடி நீர் வரியமானது தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு 2010 ஆம் ஆண்டில் இந்திய உச்ச நீதிமன்றமானது ஆழ்துளை கிணறு விபத்துகளைத் தடுப்பதற்கான பாதுகாப்பு வழிக்காட்டிகளை வகுத்து அளித்திருக்கிறது.எச்சரிக்கை! ஆழ்துளை கிணறு அமைக்கும் உரிமையாளர்களுக்கு...1077ல் புகார் தெரிவிக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் | Dinamalarஅதன்படி, ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறுதல், தோண்டும்போதே சுற்றிலும் வேலி கட்டுதல், ஆழ்துளைக் கிணறு தோண்டும் நிறுவனஹ்தின் பெயர், நில உரிமையாளரின் பெயர், தோண்டும் கால அவகாசம் ஆகியவை குறித்த தகவல் பலகையை நிறுவுதல், தோண்டிய கிணற்றில் தண்ணீர் இல்லாமல் போனாலே தண்ணீர் வற்றிக் கைவிடப்பட்டாலோ உடனடியாக அதை மண்ணிட்டு மூடி, சிமெண்ட் மூலம் வாய்ப்பகுதியை அடைத்தல் அல்லது குழாயின் மேற்பகுதியை மூடிபோட்டு அடைத்தல், கிணற்றை மூடிவிட்டு தகவலை உள்ளாட்சி நிர்வாகத்துக்குத் தெரியப்படுத்துதல் ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும்.தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவின்படி, தமிழ்நாட்டில் ஆழ்துளை கிணறுகளின் பாதுகாப்பு குறித்து மேற்கொள்ள வேண்டிய பணிகளின்போது உச்ச நீதிமன்றத்தின் அனைத்து வழிகாட்டுதல்களையும் கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இந்தப் பணிகள் மேற்கொள்வதற்கு மாவட்டத்துக்கென ஒதுக்கப்பட்டுள்ள பசுமை நிதி, மாவட்டக் கனிம நிதி ஆகிய நிதி ஆதாரங்களைப் பயன்படுத்திக்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குரிய செயல்திட்டத்தை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்குள் அரசுக்கு அறிக்கையாகச் சமர்பிக்க வேண்டும். அதனடிப்படையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
via News J : https://ift.tt/H9WFyTU
via News J : https://ift.tt/H9WFyTU
Mediaவாழ்க்கையில் கம்யூட்டரையே பார்க்காத, அப்படி பார்க்கவேண்டுமானால் டவுனுக்கு போகவேண்டும் என்ற நிலையில் இருந்த குக்கிராமங்களின் மாணவ மாணவிகளின் மடியில் மடிக்கணிணியை தவழ விட்டவர் புரட்சித்தலைவி ஜெயலலிதா… ஒரு தாய்க்குத்தானே தெரியும் தன் குழந்தைகளுக்கு என்ன வேண்டும் என்று , என்ற எண்ணத்தோடு ஒவ்வொரு திட்டங்களையும் பார்த்துப் பார்த்து செயல்படுத்திய புரட்சித்தலைவி கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்திற்காக மாணவர்களின் நலனைக்கூட கருத்தில் கொள்ளாமல் லேப்டாப் திட்டத்தை கிடப்பில் போட்டிருக்கிறது இந்த விடியா அரசு..இது எல்லோருக்குமான அரசு…..வாக்களித்தவர்களுக்கு மட்டுமில்லாமல் வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து நாங்கள் ஆட்சி நடத்துகிறோம் என்று நீட்டி முழக்கும் முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் 2021ல், கொரோனாவை காரணம் காட்டி திட்டத்தை நிறுத்தி வைத்தது, பிறகு 2022ல், அப்போது-இப்போது என்று மொக்கை காரணங்களை காட்டி இழுத்தடித்தது.. இதோ லேப்டாப் வந்துவிடும் அதோ வந்துவிடும் என்று ஆசைஆசையாய் காத்துக்கொண்டிருந்த மாணவர்களின் கனவில் மண் அள்ளிப்போட்டிருக்கிறது இந்த விடியா அரசு..தன் சொந்த பேரன் வெளிநாட்டில் விளையாடப்போனால் விமான நிலையத்திற்கே சென்று வழியனுப்பும் அளவுக்கு அக்கறை மிகுந்த தாத்தாவாக இருக்கும் ஸ்டாலின், தமிழகத்தில் இருக்கும் கோடான கோடி குழந்தைகளின் கனவை சிதைப்பது ஏன்?நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி காசு வரும்போது லேப்டாப் கொடுப்போம் என்ற பேசியிருக்கிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி… பொய்யா மொழியாரே இப்படி பொய் பேசுவது நியாயமா? என்று குமுறுகிறார்கள் பள்ளிக்குழந்தைகள்…மணிப்பூருக்கு உதவ நாங்க கோடிக்கணக்கில் பணம் பொருட்களை அனுப்புகிறோம் அதற்கு அனுமதி கொடுங்க என்று இங்கிருந்து கடிதம் எழுதும் இந்த விடியா அரசு, அந்தக்காசிலாவது நம்மூரு பிள்ளைகளுக்கு லேப்டாப் கொடுக்கலாம் என்று ஏன் எண்ணவில்லை? கொஞ்சமாவது நம் பிள்ளைகள் மீது அக்கறை இருக்கவேண்டுமல்லவா?தாலிக்குத் தங்கத்தை நிறுத்தி விளிம்புநிலைப் பெண்களுக்கு தங்கம் கனவாகவாக மாற்றிய இந்த விடியா அரசு, அம்மா உணவகத்தை வஞ்சம் வைத்து அழிக்க நினைக்கும் இந்த வஞ்சக அரசு, அம்மா மினி கிளினிக், அம்மா மருந்தகங்களை இழுத்து மூடிய இருமாப்பு கொண்ட அரசு இன்று பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய லேப்டாப்பையும் தடுத்து நிறுத்தி மாணவர்களின் கோபத்திற்கும் ஆளாகிஇருக்கிறது…ஒவ்வொரு ஆண்டும் லட்சங்கோடிகளை கடனாக வாங்கிவிட்டு, எதற்கெடுத்தாலும் காசில்லை, காசில்லை என்று பஞ்சப்பாட்டு பாடும் இந்த அரசு, வாங்கிய கடனை யார் வீட்டில் வைத்திருக்கிறது? கிராமப்புற மாணவர்களின் கனவுத்திட்டமான லேப்டாப்பை வழங்காமல் இழுத்தடிக்கும் ஸ்டாலினுக்கு பாடம் புகட்டப்போகிறார்களா வருங்கால வாக்காளர்கள்? அதிமுக கொண்டுவந்த திட்டங்களை நிறுத்தி வைக்கத்தான் ஆட்சிக்கு வந்ததா விடியா திமுக அரசு பொங்கும் மக்களின் வயித்தெறிச்சலையும் பாவத்தையும் எங்கே கொண்டுபோய் கரைக்கப்போகிறது இந்த அரசு?
via News J : https://ift.tt/gnV2Ziv
via News J : https://ift.tt/gnV2Ziv
Mediaபொதுமக்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் அலுவலகத்துக்கு அனுப்பும் மனுக்களைப் பிரித்துக் கூட பார்க்காமல் குப்பைகளில் போடுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…பொதுமக்கள் தங்கள் குறைகளைக் குறிப்பிட்டு அனுப்பும் மனுக்களைப் பிரித்துக் கூட பார்க்காமல் முதல்வர் அலுவலக அதிகாரிகள் அவற்றைக் குப்பையில் போடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது…விடியா திமுக அரசு பொறுப்பேற்ற நாளில் இருந்து நலத்திட்டங்கள் எதுவும் மக்களுக்கு சென்றடைவதில்லை. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மக்கள் சார்ந்த நலத்திட்டங்கள் தற்போது ஒவ்வொன்றாக முடக்கப்பட்டு வருகிறது. கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வராக இருக்கும்போது, முதல்வர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மனுக்கள் அவ்வப்போது ஆய்வு செய்து மக்கள் பிரச்சனைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வந்தது.ஸ்டாலினுக்கு முதல்வர் செயலாளர்கள் என, முருகானந்தம், உமாநாத், எம்.எஸ்.சண்முகம், அனுஜார்ஜ் என நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள், முதல்வர் அலுவலகத்துக்கு வரும் மக்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை பிரித்துக் கூட பார்ப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.சென்னையில் உள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் மனு அளித்தால் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் கோரிக்கை வைக்கும் மனுக்கள் அனைத்தும் கண்டுகொள்ளாமல் குப்பைத் தொட்டிக்குச் செல்கின்றன.ஆனால், இவை எதையுமே கண்டுகொள்ளாத ஸ்டாலின், தனது அலுவல் வேலைகள் முழுவதையும் செயலாளர்கள் வசம் ஒப்படைத்துவிட்டு ஹாயாக உள்ளார்.
via News J : https://ift.tt/WZpcY9F
via News J : https://ift.tt/WZpcY9F
Mediaஇந்தாண்டு ஜூலை மாதம் புள்ளிவிவரத்தின் படி, ஜி.எஸ்.டியின் வசூல் 11 சதவீதம் உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், 1.65 லட்சம் கோடி ரூபாய் எனும் அளவை எட்டியாதகவும் தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்தாண்டு ஜூலை ஜி.எஸ்.டி வசூல் விவரங்களை ஒப்பிடுகையில் இந்தாண்டு ஜூலை அதிகம்தான் என்று சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட உள்நாட்டு பரிவர்த்தனைகள் நடப்பாண்டு ஜூலையில் பதினைந்து சதவீதம் உயர்ந்து இருக்கிறது.ஜி.எஸ்.டி வசூல் 1.60 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் உயர்ந்து இருப்பது, இது ஐந்தாவது முறையாகும். அதிக நுகர்வோர் செலவுகள் மற்றும் வரி ஏய்ப்புக்கு எதிரான நடவடிக்கைகள் ஆகிய காரணங்களால், ஜி.எஸ்.டி வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது.மத்திய ஜி.எஸ்.டி இந்த ஜூலையில் 29,773 கோடியாகும். மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி 37,623 கோடியாகும். ஒருங்கிணைந்த ஜி,எஸ்.டி 85,930 கோடியாகும். கூடுதல் வரி 11,779 கோடியாகும். மொத்தமாக இந்த ஜூலை 1,65,105 கோடியாகும்.
via News J : https://ift.tt/OAxBvRq
via News J : https://ift.tt/OAxBvRq
Mediaபுவி வட்டப்பாதையில் இருந்து விலகி நிலவை நோக்கு சந்திரயான் – 3 செயற்கைக்கோளானது வெற்றிக்கரமாக தன் பயணத்தைத் துவக்கியுள்ளது. கிட்டத்தட்ட பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலவை ஆய்வு செய்யும் தன் மூன்றாவது முயற்சியில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ ஈடுபட்டது. நிலவில் தரையிரங்கி ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 திட்டம் துவங்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் – 3 செயற்கைக்கோள் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.இந்த செயற்கைக்கோள், புவி வட்டப்பாதையில் சுற்றி வந்தது. இதன் அடுத்த கட்டமாக், நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு செலுத்தும் முயற்சி நேற்றைய தினம் அதிகாலையிலே துவங்கிவிட்டது. இதன்படி, புவி வட்டப்பாதையில் இருந்து செயற்கைக்கோள் தற்போது விலகி, நிலவை நோக்கி தன் பயணத்தை துவக்கி உள்ளது. வரும் ஐந்தாம் தேதி இது, நிலவின் சுற்று வட்டப்பாதையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சிக்கலான இடம் என்னவென்றால் தரையிரங்குவதுதான். சரியாக 23ஆம் தேதி நிலவில் சந்திரயான் – 3 தரையிரங்கும் என்று நம்பப்படுகிறது.
via News J : https://ift.tt/phxtILo
via News J : https://ift.tt/phxtILo
Mediaசென்னை மாநகராட்சி மேயராக வலம் வருபவர் பிரியா. எங்கு சென்றாலும் அமைச்சர்கள் பாதுகாப்பிலேயே ஆய்வு, பேட்டி என சுற்றி வந்தார். இதைப் பலர் கேள்வி எழுப்பியபோது, பிரியா அரசியலுக்கு புதியவர் என்பதால் அமைச்சர்கள் வழிகாட்டி வருகின்றனர் என இணைய உபி-க்கள் முட்டுக் கொடுத்தனர். ஆனால், மேயராக பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னுமா மேயர் பதவி குறித்து பிரியா தெரிந்துகொள்ளவில்லை? என மக்கள் கேள்வி எழுப்பியதும் அப்ஸ்காண்ட் ஆகினர் உபி-க்கள்.சேகர் பாபு, கே.என்.நேரு என அமைச்சர்களின் பொம்மை போல் செயல்பட்டு வருகிறார் மேயர் பிரியா என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. மேயர் பதிலளிக்க வேண்டிய பிரஸ்மீட்டுகள் பலவற்றில் கூட சேகர் பாபுவும், கே.என்.நேருவும் பதிலளித்ததை பலர் கண்டுள்ளனர்.இதுமட்டுமல்லாமல் அமைச்சர்கள் சிலர் மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாகவே அதிகாரம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் சிலர் புலம்புகின்றனர். அவ்வாறு தலையிடும் அமைச்சர்கள், அதிகாரிகளை ஒருமையிலும் பேசி வருகின்றனர். இதுகுறித்து தெரிந்தும் ஸ்டாலின் மெளனம் காத்து வருகிறாராம்.சென்னையில் வளர்ச்சிப் பணிகளைக் கண்காணிப்பது முதல், எந்தெந்த ஒப்பந்ததாரருக்கு பணிகள் ஒதுக்குவது என்பது வரை தொடர்ந்து அமைச்சர்களின் தலையீடு உள்ளதாம். இதனால் மேயர் என்ற தனித்துவத்தை இழந்து பொம்மை போல வலம் வருகிறார் பிரியா.இதுகுறித்து அரசல் புரசலாக பலர் பேசி வருவதைக் கண்டும் காணாமல் எத்தனை காலம் வாய்மூடி இருக்கப் போகிறார் ஸ்டாலின்? ஸ்டாலின் இதில் நேரடியாகத் தலையிட்டு மாநகராட்சி விவகாரங்களில் இஷ்டத்துக்கு ஆடும் அமைச்சர்களின் போக்குக்கு கடிவாளம் போட்டு, மேயரை அவரது அதிகாரத்துக்கு உட்பட்டு செயல்பட அனுமதிக்க முன்வருவாரா?
via News J : https://ift.tt/G6Ml9iL
via News J : https://ift.tt/G6Ml9iL
Mediaஇந்திய அரசியல் வரலாற்றில் தனது கட்சியில் நடக்கும் சமூகநீதிக்கெதிரான நடவடிக்கையினை நெற்றிப் பொட்டில் அடித்தார் போல, தான் நடித்த மாமன்னன் படத்தின் மூலம் அம்பலப்படுத்தி இருந்தார் வாரிசு அமைச்சர் உதயநிதி. கட்சியின் பெயரில் மட்டுமே சமூக நீதி இருப்பதாக சினிமாவில் காட்சிப் படுத்தியிருப்பதைப் போலவே திமுகவிலும் வெறும் வாய்ச் சொல்லாகவே சமூக நீதி வெளிப்பட்டு கொண்டிருப்பது பல்வேறு சந்தர்ப்பங்களிலும் பட்டவர்த்தனமாகி உள்ளது.அமைச்சர் ராஜகண்ணப்பன் சாதி துவேஷம் காட்டியது, ஆர்.எஸ்.பாரதி பிராமணர்கள் குறித்து சர்ச்சையாகப் பேசியது, இந்துக்கள் என்றால் இவர்கள்தான் என்று ஆ.ராசா கொச்சைப்படுத்தியது, அமைச்சர் பொன்முடி, பொதுக்கூட்டத்தில் வைத்தே ஊராட்சிமன்ற தலைவியை நீங்க எஸ்.சி தானே என சாதியை அடையாளப்படுத்தி சுட்டிக்காட்டியது என்று திமுக முக்கிய தலைவர்களே சாதி ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். சமீபத்தில், சேலம் பெரியார் பல்கலைக் கழக முதுகலை வரலாற்று பாடப்பிரிவுக்கான தேர்வில், தமிழகத்தில் மிகவும் தாழ்த்தப்பட்ட சாதி என்னவென்று கேட்கப்பட்ட கேள்வியும் இதன் ஒரு பகுதிதான்.மாமன்னன் திரைப்படக் காட்சியில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரை தனக்கு சமமான இருக்கையில் அமரவிடாமல் சாதி துவேஷம் பிடித்தவர் தடுப்பது போலவும், அதே பட்டியல் இனத்தைச் சேர்ந்த வேறு நபர் தனக்கு ஆதரவானவராக மாறியபோதும், அவருக்கு தனக்கு சமமான அளவில் இருக்கை தராமல் பிளாஸ்டிக் நாற்காலி தருவது போன்ற காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.தற்போது ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பட்டியலினத்தை சேர்ந்த தி.மு.க. எம்எல்ஏவை மாமன்னன் பட பாணியில் பிளாஸ்டிக் சேரில் அமர வைத்து அக்கட்சியினரே அவமரியாதை செய்துள்ளது திமுகவின் சமூகநீதி குறித்து கேள்வி எழுப்பி உள்ளது. சாயல்குடி அருகே பெருநாழியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் விடியா அரசின் அமைச்சர் ராஜகண்ணப்பன், மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், முன்னாள் முதுகுளத்தூர் எம்.எல்.ஏ முருகவேல், முன்னாள் திமுக மாவட்ட செயலாளர் சுப.திவாகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அவர்கள் அனைவரும் சோபாவில் அமர்ந்திருக்க, பட்டியலினத்தை சேர்ந்த பரமக்குடி தனி தொகுதி எம்.எல்.ஏ முருகேசன் மட்டும் தனியாக ஓரு பிளாஸ்டிக் சேர் போட்டு அமர வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இதுதான் திமுகவின் சமூக நீதியா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது. சினிமா மூலமாக ஊருக்கு மட்டும் உபதேசம் செய்பவர்கள் தங்கள் சொந்தக் கட்சியிலும் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/jxKbwfk
via News J : https://ift.tt/jxKbwfk
Mediaஅரசு மருத்துவமனைகள் என்பது அலட்சியத்தின் உச்சமாக மாறி வருகிறது இந்த விடியா ஆட்சியில். தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதெல்லாம் நாள்தோறும் நாம் கடந்து வருகிற செய்திகளாக உள்ளது.சமீபகாலமாக், பிறந்த பச்சிளம் குழந்தை, பிரசவித்த இளம் தாய்மார்கள், கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்பு என காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துமனையில் சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் உயிரிழந்து வருவதும் அரசு மருத்துவமனைகளின் லட்சணத்தை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.காஞ்சிபுரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாய் மருத்துவர்களின் கவனக்குறைவால் உயிரிழந்துள்ளார். மனைவி உயிரிழந்ததற்கான காரணத்தை இதுவரை அவரது கணவரிடம் முறையாகத் தெரிவிக்காமல் மழுப்பி வருகிறது மருத்துவமனை நிர்வாகம்.காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு நாளொன்றுக்கு 20க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், இங்கு போதிய மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லாத காரணத்தால் அனுமதிக்கப்படும் பெண்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில்லை. அண்மையில் கூட காஞ்சிபுரம் மருத்துவமனையில் கழிவறைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு அங்கேயே பிரசவமாகி பச்சிளம் குழந்தை கழிவறை குழியில் விழுந்து உயிரிழந்த கொடூர சம்பவம் ஏற்பட்டது.கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு அரசு பள்ளி மாணவன் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் சிகிச்சை அளிக்க பரிந்துரைத்தனர். ஆனால், மருத்துவமனையில் ஆக்சிஜன் மாஸ்க் இல்லாத காரணத்தால் பக்கத்தில் உள்ள டீக்கடையில் இருந்து பிளாஸ்டிக் டீ கப் ஒன்றை வாங்கி வந்து அதில் ஆக்சிஜன் சிலிண்டரில் இருந்து பைப்பை சொருகி, அதன்மூலம் சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கி சிகிச்சை அளித்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் இப்போது வைரலாகப் பரவி வருகிறது.
((ப்ரீத்))ஆனால், தனது துறையில் நிகழும் அவலங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் மாரத்தான் போட்டிகளில் ஓடுவதை மட்டுமே குறியாக வைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். விழிப்புணர்வு என்னும் பெயரில் மாரத்தானில் ஓடும் நேரத்தை துறையை கவனிப்பதற்கு செலவழித்திருந்தால் இன்று பல உயிர்கள் பலியாகி இருக்காதல்லவா? சரி, அவர் பங்கேற்கும் மாரத்தான் போட்டிகளாவது முறையாக நடத்தப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. மதுரையில் நிகழ்ந்த போட்டியில் பங்கேற்ற இளைஞர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இத்தனை அலட்சியமாக அடுத்தவர் உயிரைக் கையாளும் நபரிடம் சிக்கி சுகாதாரத்துறை மரணப்படுக்கைக்கு சென்று கொண்டிருக்கிறது.செவிலியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை நிர்வாகம் தத்தளித்து வருகிறது. ஆனால், அமைச்சர் மட்டுமல்லாமல், பொம்மை முதலமைச்சரும் கூட இதையெல்லாம் கவனிக்காமல், தந்தை பெயரை இன்னும் எங்கெல்லாம் சூட்டலாம் என்பதிலேயே குறியாக உள்ளார்.
via News J : https://ift.tt/mLhaqAu
((ப்ரீத்))ஆனால், தனது துறையில் நிகழும் அவலங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் மாரத்தான் போட்டிகளில் ஓடுவதை மட்டுமே குறியாக வைத்துள்ளார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். விழிப்புணர்வு என்னும் பெயரில் மாரத்தானில் ஓடும் நேரத்தை துறையை கவனிப்பதற்கு செலவழித்திருந்தால் இன்று பல உயிர்கள் பலியாகி இருக்காதல்லவா? சரி, அவர் பங்கேற்கும் மாரத்தான் போட்டிகளாவது முறையாக நடத்தப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. மதுரையில் நிகழ்ந்த போட்டியில் பங்கேற்ற இளைஞர் நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இத்தனை அலட்சியமாக அடுத்தவர் உயிரைக் கையாளும் நபரிடம் சிக்கி சுகாதாரத்துறை மரணப்படுக்கைக்கு சென்று கொண்டிருக்கிறது.செவிலியர்கள், மருத்துவர்கள் பற்றாக்குறையால் சுகாதாரத்துறை நிர்வாகம் தத்தளித்து வருகிறது. ஆனால், அமைச்சர் மட்டுமல்லாமல், பொம்மை முதலமைச்சரும் கூட இதையெல்லாம் கவனிக்காமல், தந்தை பெயரை இன்னும் எங்கெல்லாம் சூட்டலாம் என்பதிலேயே குறியாக உள்ளார்.
via News J : https://ift.tt/mLhaqAu
Mediaதமிழகத்தில் தற்போது கிட்டத்தட்ட 14 அணைகள் வறண்ட நிலையில் கவலைக்கிடமாக உள்ளது. தமிழ்நாடு நீர்வளத்துறையின் மேற்பார்வையின் கீழ் 90 அணைகள் இருக்கின்றன. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு 224 டி.எம்.சி ஆகும். தற்போது 85.7 டி.எம்.சி நீர் இருப்பு மட்டுமே உள்ளது. மொத்த கொள்ளளவில் இது 38.2 சதவீதம்தான். இதற்கு தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததுதான் முழுமுதல் காரணம் என்று சொல்லப்படுகிறது. ஜூனில் துவங்கிய பருவமழையால் பல அணைகளுக்கு நீர்வர்த்து கிடைத்து, அவற்றின் கொள்ளளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 24 அணைகள் நீர்வரத்து இன்றி கவலைக்கிடமாக உள்ளது.தற்போதைக்கு தமிழகத்தில் வறண்ட அணைகள்திருநெல்வேலியில் மணிமுத்தாறு, தென்காசியில் கருப்பாநதி, வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, வண்டல் ஓடை, கன்னியாகுமரியில் பெருஞ்சாணி, மாம்பழத்துறையாறு, திண்டுக்கல்லில் சிறுமலையாறு ஓடை, விருதுநகரில் பிளவக்கல் கோவிலாறு, சாஸ்தா கோவில், ஆனைக்குட்டம், கோல்வர்பட்டி, இருக்கன்குடி இவையெல்லாம் வறண்ட அணைகள் ஆகும்.,தற்போது வறட்சியின் பிடியில் சில அணைகள் சிக்கியுள்ளன. அவற்றைக் காண்போம். கோவையில் உள்ள அப்பர் நிரார், ஈரோடு மாவட்டத்தில் உள்ள நொய்யல் ஒரத்துப்பாளையம், திருப்பூரில் உள்ள் உப்பாற், வட்டமலைக்கரை ஓடை, அரியலூர் சித்தாமல்லி, திருச்சி உப்பாறு, கள்ளக்குறிச்சி கோமுகி, மணிமுக்தா நதி, விழுப்புரத்தில் உள்ள வீடூர், தர்மபுரி வறட்டாறு, வேலூரில் உள்ள ராஜதோப்புகனார் மற்றும் இதனைத் தொடர்ந்து சென்னைக்கு குடிநீர் வழங்கும் சோழவரம் எரியும் வேகமாக வறண்டு வருகிறது.வாய் திறக்குமா திமுக?இதற்கெல்லாம் மாநில அரசின் நீர்வளத்துறை உகந்த நடவடிக்கையினை முன்கூட்டிய எடுத்து இருந்துருக்க வேண்டும். ஆனால் இந்த விடியா திமுக அரசு முன்னெச்செரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்காமல் தட்டிக்கழித்தபடியே இருந்திருக்கிறது. மேட்டூர் அணையை திறந்து வைத்து மக்கள் மத்தியில் விளம்பரம் செய்து கொண்ட ஸ்டாலின் அரசு இதற்கு எப்படி தீர்வு காணப்போகிறது என்பது கேள்விக்குறியே. முக்கியமாக தமிழகத்தில் நீர்வளத்துறை அமைச்சர் என்று ஒருவர் இருக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் அவர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் என்ன செய்துகொண்டு இருக்கிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வாய் திறந்து பதில் சொல்வாரா துரை முருகன் என்றும் கூறி வருகிறார்கள். அவர் தேவையில்லாத விசயங்களுக்கு மட்டும்தான் வாய் திறப்பார். இதுபோன்ற மக்கள் காரியங்களுக்கு அவர் என்றைக்கு வாய்திறந்திருக்கிறார் என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.
via News J : https://ift.tt/FnqEM3f
via News J : https://ift.tt/FnqEM3f
Mediaமழைநீர் வடிகால் பணிக்காக பல இடங்களில் ஐம்பது முதல் நூறாண்டுகள் பழமையான மரங்களை வெட்டி சாய்த்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருடர்களைப் போல நள்ளிரவில் வந்து மரங்களை வெட்டி அகற்றியுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.விடியா ஆட்சியில் வளர்ச்சிப் பணிகளுக்காக எனக் கூறி பல நூறு ஆண்டுகள் வாய்ந்த மரத்தை இப்படி அநியாயமாக வெட்டி சாய்த்துள்ளனர்.சென்னையில் மயிலாப்பூர் தொகுதியில் அபிராமிபுரம் செயிண்ட் மேரி சாலையில், சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தைச் சுற்றி 50 முதல் நூறாண்டுகள் பழமையான மரங்கள் இருக்கின்றன. கொளுத்தி வரும் வெயிலில் மக்களுக்கு நிழற்குடைகள் போல இருந்த இந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன.பள்ளி வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கு இடையூறாக இருக்கும் மரங்களை பொதுமக்கள், பகுதி வாசிகள், இயற்கை ஆர்வலர்கள் ஒப்புதலின்றி வெட்டி வீசி வருகின்றனர் ஒப்பந்ததாரர்கள்.பணிகளை ஒப்பந்தம் எடுத்துள்ள ஒப்பந்ததாரர்கள், இப்பணிகளுக்காக வடமாநிலத்தவரை நியமித்துள்ளதால், அவர்களிடம் இப்பகுதிவாசிகள் சொல்வது எதுவும் எடுபடுவதில்லை. அதிலும் பொதுமக்கள் கேள்வி எழுப்புவதால், இரவு 10 மணி முதல் விடியற்காலை 3 மணி வரை திருடர்களைப் போல வந்து மரங்களை வெட்டி சாய்த்து செல்கின்றனர்.மேலும், அபிராமிபுரத்தின் அடையாளமாக கருதப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான மரத்தையும் துண்டு துண்டாக வெட்டி அகற்றியுள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்த பகுதிவாசிகள், பழமையான மரங்களை வேரோடு வெட்டி சாய்க்காமல் வெளிநாடுகளில் செய்வதுபோல வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடலாம் என ஆலோசனை தெரிவித்துள்ளனர். ஆனால், இவற்றை சட்டை செய்யாத அதிகாரிகள், ஒப்பந்ததாரர்களின் நடவடிக்கைகள் எதையும் கண்டுகொள்ளாமல் உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும், மழைநீர் வடிகால் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை அவ்வப்போது மூடாமல், பணிகளையும் மந்த நிலையில் செய்து வருவதால் இப்பகுதிகளில் அடிக்கடி மின் இணைப்பு, தொலைபேசி இணைப்பு உள்ளிட்டவை துண்டிக்கப்படுகிறது எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.வெட்டப்பட்ட மரங்களை கவனத்தில் கொண்டு இந்த பகுதியில் 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடுவதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/DoJkXbI
via News J : https://ift.tt/DoJkXbI
Mediaஅராஜகம் செய்கின்ற கணவனுக்கு வாக்கப்பட்ட மனைவியைப் போல தற்போது திமுகவிடம் தமிழ்நாடு மக்கள் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி போயிருக்கிறார்கள். சிறப்புத்திட்டங்கள் பலவற்றை நாங்கள் கொண்டுவருகிறோம் என்று சொல்லி வாக்குறுதி அளித்துவிட்டு, அதனை நிறைவேற்றாமல் அலைக்கழித்துவிட்டு தன்னை புரமோட் செய்வதிலும் விளம்பரம் தேடிக் கொள்வதிலும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். மத்திய அரசிடம் நலத்திட்டங்களுக்காக பல லட்சம் கோடிகளை கடனாகப் பெற்று வரும் திமுக அரசு, இந்தியாவிலேயே அதிகமாக கடன் வாங்கும் மாநிலங்களில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றி இருக்கிறது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனே கூறியுள்ளதுதான் இங்கு கவனிக்க வேண்டிய ஒன்று.மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதியில்லை என்று திமுக சொல்லி வருகிறது. மேலும் அதிமுக காலத்தில் செயல்படுத்தப்பட்ட முக்கியத் திட்டங்களை கிடப்பில் போட்டிவிட்டு, வாக்குறுதி அளித்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் ஓ.பி அடித்து கொண்டிருக்கிறது திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் அமைச்சர்களும். தற்போது பேனா சிலை அமைக்கும் பணி தொண்ணூறு சதவீதம் நிறைவடைந்துவிட்டது என்று அமைச்சர் எ.வ. வேலு சொல்கிறார். மக்களுக்கு எந்த திட்டங்களும் வகுக்காமல் தங்களவர்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும் விளம்பரப்படுத்துவதிலுமே கவனத்தை செலுத்துகிறது இந்த விளம்பர கவர்மண்ட். தேசிய தீர்ப்பாயம் சில நிபந்தனைகளோடு மெரினா கடற்கரையில் பேனா சிலை வைத்துக்கொள்ளலாம் என்று சொல்லியிருக்கிறது. இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் மீனவ மக்கள் மற்றும் பொதுமக்கள் பலரிடம் இருந்தும் எதிர்ப்பு வந்தும் திமுகவிற்கு சாதகமாகவே பசுமைத் தீர்ப்பாயம் இசைவு அளித்திருந்தது. இது ஒருபுறம் இருக்க அமைச்சர் எ.வ.வேலுவின் இந்த ஸ்டேட்மண்ட், ஸ்டேட்டுக்காக வேலை செய்வதைவிட திமுக குடும்பத்திற்கு வேலைசெய்வதுதான் சால சிறப்பு என்பதுபோல் இருக்கிறது. அய்யா எ.வ.வேலு அவர்களே உங்கள் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளில் எத்தனை சதவீதம் முடிந்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? நிச்சயம் தெரிய வாய்ப்பிருக்காது. பதவிக்காக பல்லக்கு சுமக்கவும், வாரிசு அமைச்சருக்கு பட்டாபிஷேகம் நடத்தவும்தான் உங்கள் அனைவருக்கும் நேரமிருக்கும். அதனை விடுத்து மக்களுக்காக என்றைக்கு நீங்கள் சிந்தித்து இருக்கிறீர்கள் என்று யோசித்து பார்த்தால் ஒன்றுமே இருக்காது. பணமும் ஊழலும் பெருகிப் போயிருக்கு திமுகவிற்கு மக்கள் மேல் என்றைக்கு அக்கறை இருந்திருக்கிறது. மடிக்கணினி வழங்கும் திட்டத்தை நிறுத்தியது, தாய்மார்கள் பாலூட்டும் அறையை மதுப்பிரியர்களின் கூடாரமாக மாற்றியது, அம்மா மினி கிளினிக்கை மூடியது, தாலிக்கு தங்கம் திட்டத்தை நிறுத்தி வைத்தது என்று இன்னும் அதிமுக காலத்தில் கொண்டுவரப்பட்ட எண்ணற்ற மக்கள் நலன் திட்டங்களை நிறுத்தியதில் தான் திமுகவிற்கு பெருத்த பெருமை உள்ளது.
via News J : https://ift.tt/t4GRFAQ
via News J : https://ift.tt/t4GRFAQ
Mediaபெண்களுக்கு தாலிக்குத் தங்கம் திட்டத்துக்குப் பணமில்லை… அம்மா மகளிர் இருசக்கரவாகனத் திட்டத்துக்குப் பணமில்லை… இப்படியெல்லாம் பெண்களுக்கு செய்ய வேண்டிய நலத்திட்டங்களுக்கு எல்லாம் பணமில்லை…. பணமில்லை என்று கையை அகல விரித்ததுதான் இந்த விடியா திமுக அரசு….
அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்காமல் ஏமாற்றி…. தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கான மகளிரின் குமுறலுக்கு ஆளாகி உள்ளது. அதிலும், இந்த திட்டத்துக்கும் பணமில்லாமல் எஸ்.சி. எஸ்.டியினருக்கான நிதியில் இருந்து 1500 கோடிக்கும் மேல் நிதியை எடுத்துள்ளது விடியா அரசு. இன்னொரு பக்கம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லாததால் அந்த திட்டத்தையும் கைவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.அதே போல, நிதிப்பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கப்படாததால் அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அவர்கள்.இப்படி மக்கள் நலனுக்கான எந்த திட்டத்துக்கும் இந்த அரசிடம் நிதியில்லை…. அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் போட நிதியில்லை… ஆனால் இந்தியாவிலேயே, மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம்.இந்த கடன் தொகையெல்லாம் என்ன ஆனது என்பது ஆளும் திமுகவுக்கும், அதன் அதிகார மையங்களுக்கே வெளிச்சம்.நிதியில்லாத இந்த ராஜ்ஜியத்தில் எழுதாத பேனாவுக்கு சிலை வைப்பதற்கு மட்டும் 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடலில் அமைக்கப்படும் இந்த சிலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியான நிலையில், மத்திய அரசும் விதிமுறைகளோடு அனுமதி அளித்துள்ள நிலையில், இதோ பேனா சிலையின் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவி ட்டதாக அறிவித்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.மக்களுக்கும், மாணவர்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத திமுக அரசுக்கு, பேனா சிலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி கிடைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.மக்களைப்பற்றி துளியும் கவலைப்படாமல், 81 கோடி ரூபாய்க்கு தன் தந்தையின் புகழ்பாடுவதில்தான் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறாரா?
மத்திய அரசிடம் கடன் பெறுவதெல்லாம் இத்தகைய வீண் விளம்பரங்களுக்காகத்தானா? நாட்டு மக்களின் தலையில் கடன் சுமையை அதிகரித்துவிட்டு தனது குடும்பப் பெருமையை பேச வீண் விளம்பரம் செய்வதுதான் ஸ்டாலினின் திட்டம் என்கிறார்கள் விடியா அரசின் செயல்பாடுகளை கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/vAG4lJH
அதுமட்டுமில்லாமல் தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை கொடுக்காமல் ஏமாற்றி…. தற்போது தகுதி வாய்ந்தவர்களுக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதாகக் கூறி கோடிக்கணக்கான மகளிரின் குமுறலுக்கு ஆளாகி உள்ளது. அதிலும், இந்த திட்டத்துக்கும் பணமில்லாமல் எஸ்.சி. எஸ்.டியினருக்கான நிதியில் இருந்து 1500 கோடிக்கும் மேல் நிதியை எடுத்துள்ளது விடியா அரசு. இன்னொரு பக்கம் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்க நிதி இல்லாததால் அந்த திட்டத்தையும் கைவிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.அதே போல, நிதிப்பற்றாக்குறையால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கான ஊதியங்கள் வழங்கப்படாததால் அரசின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் அவர்கள்.இப்படி மக்கள் நலனுக்கான எந்த திட்டத்துக்கும் இந்த அரசிடம் நிதியில்லை…. அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு சம்பளம் போட நிதியில்லை… ஆனால் இந்தியாவிலேயே, மத்திய அரசிடம் இருந்து அதிக அளவில் கடன் வாங்கிய மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது தமிழகம்.இந்த கடன் தொகையெல்லாம் என்ன ஆனது என்பது ஆளும் திமுகவுக்கும், அதன் அதிகார மையங்களுக்கே வெளிச்சம்.நிதியில்லாத இந்த ராஜ்ஜியத்தில் எழுதாத பேனாவுக்கு சிலை வைப்பதற்கு மட்டும் 81 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. மெரினா கடலில் அமைக்கப்படும் இந்த சிலைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடியான நிலையில், மத்திய அரசும் விதிமுறைகளோடு அனுமதி அளித்துள்ள நிலையில், இதோ பேனா சிலையின் பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுவி ட்டதாக அறிவித்திருக்கிறார் அமைச்சர் எ.வ.வேலு.மக்களுக்கும், மாணவர்களுக்கு நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியாத திமுக அரசுக்கு, பேனா சிலைக்கு மட்டும் எங்கிருந்து நிதி கிடைத்திருக்கிறது என்று கேள்வி எழுப்புகிறார்கள் பொதுமக்கள்.மக்களைப்பற்றி துளியும் கவலைப்படாமல், 81 கோடி ரூபாய்க்கு தன் தந்தையின் புகழ்பாடுவதில்தான் ஸ்டாலின் கவனம் செலுத்தி வருகிறாரா?
மத்திய அரசிடம் கடன் பெறுவதெல்லாம் இத்தகைய வீண் விளம்பரங்களுக்காகத்தானா? நாட்டு மக்களின் தலையில் கடன் சுமையை அதிகரித்துவிட்டு தனது குடும்பப் பெருமையை பேச வீண் விளம்பரம் செய்வதுதான் ஸ்டாலினின் திட்டம் என்கிறார்கள் விடியா அரசின் செயல்பாடுகளை கவனித்து வரும் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/vAG4lJH