Media கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கைகல்வியாளர்களை கலந்தோசிக்காமல், உயர்கல்வித் துறையில் பொது பாடத் திட்டத்தை இந்த ஆண்டு முதல் புகுத்த நினைக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்டு, இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களால் போற்றி வளர்க்கப்பட்டு, என் போன்ற கோடிக்கணக்கான தொண்டர்களால் நிலை நிறுத்தப்பட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31 ஆண்டு கால ஆட்ச்யில், கல்வித் துறையில் தமிழகம் தலைநிமிர்ந்து நின்றது. குறிப்பாக, 2011-ல் திமுக ஆட்சியில் உயர்கல்வியில் 25 சதவீதமாக இருந்த மாணவர் சேர்க்கை, அதனைத் தொடர்ந்து 10 ஆண்டு கழக ஆட்சியில் 51 சதவீதமாக வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே உயர்கல்வித் துறையில் மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாகவும், முதன்மை மாநிலமாகவும் திகழ்ந்தது.கடந்த இரண்டு ஆண்டு காலம், விடியா தி.மு.க ஆட்சியாளர்கள் நடத்தும் அலங்கோல அரசில், உயர்கல்வித் துறை சீரழிந்துவிட்டதாக கல்வியாளர்கள் கண்ணீர் வடிக்கின்றனர்.துறையின் அமைச்சர் திரு. பொன்முடி, தான் ஒரு கல்வியாளராக இருந்ததை மறந்து, தமிழ்நாட்டின் இளைஞர்களுடைய எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய உயர்கல்வித் துறையின் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படாமல் இருப்பதால், தமிழகத்தில் உயர்கல்வித் துறை அதள பாதாளத்திற்குச் சென்றுள்ளது.நடப்பு கல்வி ஆண்டு முதல், தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று விடியா அரசு உத்தரவிட்டுள்ளது. விடியா திமுக அரசின் இந்த முடிவுக்கு பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவசர கதியில் உருவாக்கப்பட்டு, அவசர கதியில் திணிக்கப்படும் பொது பாடத் திட்டத்தால் தமிழகத்தில் உயர்கல்வியின் தரம் கேள்விக்குறியாகும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.பொதுப் பாடத் திட்டத்தால் தமிழக உயர் கல்வியின் தரம் குறையும் என்றும், பல்கலைக் கழக மானியக் குழு (UGC) சார்பில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு 45 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்ப்ட்டு வரும் தன்னாட்சி அந்தஸ்த்தை இழக்க நேரிடும் என்றும் கல்வியாளர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். தமிழக உயர்கல்வித்துறை, கபட வேட திராவிட மாடல் ஆட்சியாளர்களிடம் சிக்கி, குரங்கு கையில் சிக்கிய பூமாலை போல் மாறி, சின்னாபின்னமாகி உள்ளது வேதனைக்குரியது.எனவே, கல்வித் துறையில் ஏதேனும் மாறுதல்களை கொண்டு வரும் முன்பு, கட்சி கண்ணோட்டம் இல்லாத உண்மையான கல்வியாளர்களை அழைத்து எதிர்கால தமிழக இளைஞர்களின் நலனை மனதில் நிறுத்தி உயர்கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
via News J : https://ift.tt/DEc7Pxk
via News J : https://ift.tt/DEc7Pxk
Mediaவிடியா திமுக ஆட்சியிலதான், தமிழகம் தொழில் நுட்ப வளர்ச்சியில தலைசிறந்து விளங்குறதா சொல்லிக்கிட்டு இருக்காங்க…. ஆனா அரசு விழாவுல கல்வெட்டுகள் திறப்பு நிகழ்ச்சியில இந்த தொழில்நுட்பம் சிக்கி சின்னாபின்னமாயிருக்கு…தஞ்சாவூருல ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கட்டிமுடிக்கப்பட்ட பணிகளோ திறப்பு விழா நடந்துச்சு. இதுல கலந்துகிட்ட ஸ்டாலின், அங்க வைக்கப்பட்டிருந்த கல்வெட்டுகள திறந்து வச்சாரு… மேடையில இருந்துகிட்டு கல்வெட்டுகள நோக்கி ரிமோட் பட்டன ஸ்டாலின் அழுத்துனதும் அங்க திரைச்சீலை விலகிச்சு… எல்லாரும் கைதட்டுனாங்க…ஆனா என்ன விஷயம்னா, அந்த திரைச்சீலை ஸ்டாலின் பட்டன அழுத்துனதால தொறக்கல, அந்த கல்வெட்டுகள் பக்கத்துலயே நின்னுக்கிட்டுருந்த ஒருத்தரு திரைச்சீலைகள கையால இழுத்து திறந்து வச்சிருக்காரு…இப்படி பட்டன் அமுக்க ஒருத்தரு, திரைசீலய பிடிச்சி இழுத்துவிட ஒருத்தருன்னு… விடியா ஆட்சியில கல்வெட்டு திறப்புவிழாவுக்கான தொழில்நுட்பம் சிரிப்பா சிரிச்சிருக்கு…ஒரு திரைச்சீலையையே ஒழுங்கா திறந்து வைக்க முடியல… இதுதானா விடியா அரசோட தொழில்நுட்ப டக்குன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/MZrJ6b3
via News J : https://ift.tt/MZrJ6b3
Mediaஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரில் 5 வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியானது நேற்று முன் தினம் தொடங்கியது. அதிரடியாக முதலில் ப்[ஏட் செயத இங்கிலாந்து அணி 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பின்னர் தன்னுடைய முதல் இன்னிங்சை ஆஸ்திரேலியா தொடக்க நாளில் ஒரு விக்கெட்டுக்கு 61 ரன்கள் எடுத்திருந்தது. உஸ்மான் கவாஜா 26 ரன்களுடன் மார்னஸ் லபுஷன் 2 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 2 வது நாளான நேற்றைக்கு ஆஸ்திரேலிய அணி ஆடுகளத்தை கனித்து தடுப்பாட்டத்தினை அதிகமாக ஆடியது. லபுஷேன் 82 பந்துகளில் 9 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் நிலைத்து நின்ற ஆட எதிர்முனை பேட்ஸ்மேன்கள் வரிசையாக பெவிலியம் நோக்கி நடையைக் கட்டினர். முதலில் உஸ்மான் கவாஜா 47 ரன்களில் வெளியேறினார். பின்னர் டிராவிஸ் ஹெட் 4 ரன்னிலும், மிட்செல் மார்ஷ் 16 ரன்னிலும், அலெக்ஸ் ஹேரி 10 ரன்னிலும், ஸ்டார்க் 7 ரன்னிலும் நடையைக் கட்டினார்கள்.நிலைத்து நின்று ஆடிய ஸ்டீவன் ஸ்மித் மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவர் ஆறு பவுண்டரிகளுடன் 71 ரன்கள் அடித்திருந்த நிலையில் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஒன்பதாவது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் கம்மின்ஸ் மற்றும் மர்பி ஜோடி அடிப்பொலியாக விளையாடியது. அவர்கள் இருவரும் ருத்ர தாண்டவம் ஆடினார்கள். மர்பி மூன்று சிக்சர்களை மார்க் உட்டின் ஓவரில் அடித்து பறக்க விட்டார். 34 ரன்னில் இருக்கும்போது மர்பி ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஓரளவு அதிரடி காட்டிய கேப்டன் கம்மின்ஸ் 36 ரன்னில் வெளியேறினார். முதல் இன்னிங்ஸ் முடிவில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் எடுத்திருந்தது. இது இங்கிலாந்து அணியை விட 12 ரன்கள் அதிகமாகும்.
via News J : https://ift.tt/lpS3x4t
via News J : https://ift.tt/lpS3x4t
Mediaவாரிசுகள் இல்லாத ஆண் இறக்கும்பட்சத்தில் யாருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது குறித்து அரசாணையில் திருத்தம்செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரை சேர்ந்த சங்கரனின் மகன் சந்தானம் கடந்த ஆண்டு பிப்ரவரியிலும், அவரது மனைவி அதற்கு ஒரு மாதம் முன்பும் இறந்துவிட்டனர். அவர்களுக்கு வாரிசு இல்லாத நிலையில், தங்கள் பெயரில் வாரிசு சான்றிதழ் தரக்கோரி அவரது சகோதரர் ராஜேந்திரனும், இரண்டு சகோதரிகளும் பெரம்பூர் வட்ட ஆட்சியரிடம் கடந்த மே மாத இறுதியில் விண்ணப்பித்துள்ளனர். தங்களது விண்ணப்பம் பரிசீலிக்கப்படவில்லை எனவும் உரிய வாரிசு சான்றிதழை வழங்கக் கோரி அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.கடந்த ஆண்டு வருவாய் துறை பிறப்பித்த அரசாணையில், மணமான ஆண் மரணிக்கும்பட்சத்தில் வாரிசு சான்றிதழ் எவ்வாறு வழங்க வேண்டுமெனு மட்டுமே விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.அரசு பிறப்பித்த அரசாணையில் மணமாகாத ஆண் இறக்கும்பட்சத்தில் வாரிசு சான்று வழங்குவது குறித்த நடைமுறை வகுக்கப்பட்டுள்ளது. மணமாகி மனைவி மற்றும் வாரிசுகள் இல்லாத ஆணின் வாரிசு சான்றிதழ் வழங்குவது குறித்து தெளிவுபடுத்தாததால், அந்த அரசாணையில் குறைபாடு உள்ளது என்று மனுதாரர் தரப்பு வாதிட்டது.இந்து வாரிசுரிமை சட்டத்திற்கு பொருந்தும்வகையில் அந்த அரசாணையில் இல்லை என்பதால், அந்த அரசாணையை திருத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இறுதியாக நீதிபதி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தார்.
via News J : https://ift.tt/HCXnA12
via News J : https://ift.tt/HCXnA12
Mediaமுன்னரெல்லாம் மன்னராட்சியில் தந்தைக்குப் பிறகு தமையன் ஆட்சிப் பொறுப்பேற்பது என்பது வழக்காறு. இந்தியா சுதந்திரமடைந்து மன்னராட்சி ஒழிக்கப்பட்டப் பிறகும் அந்த வழக்காறு தொடர்வது தமிழ்நாட்டில் மட்டும்தான். அதிலும் குறிப்பாக விடியா திமுகவின் வாரிசு அரசியல் உலகறிந்த உண்மை. பேரறிஞர் அண்ணா எனும் மாபெரும் ஆளுமை மக்களுக்காக உருவாக்கிய கட்சியை தன் மக்களுக்காக தாரை வார்த்தார் திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி. அதனை பின்பற்றியே தமிழ்நாட்டின் முதலமைச்சராக அரியணை ஏறியிருக்கும் ஸ்டாலினும் தன்னுடைய வாரிசுக்கே கட்சித் தலைமைப் பதவியைக் கொடுக்க இருக்கிறார். ஸ்டாலின், உதயநிதிக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் செல்லும் என்று கேட்டால் 2கே கிட்ஸ்களே “இந்தியன் மெஸ்ஸி இன்பா ப்ரோ” என்று இன்பநிதியின் பெயரை உரக்கக் கத்துவார்கள்.மகனை விட இளமையாக இருக்கும் உதயநிதி.. பரட்டைத் தலையுடன் இன்பநிதியின் வைரலாகும் புகைப்படம் - Cinemapettaiஇதற்கு அச்சாணி போட்டது போல, ஹாக்கி ஆசிய கோப்பைக்காக அரங்கமானது புதிதாக செப்பனிடப்பட்டு திறக்கப்பட்ட விழாவில் இன்பநிதியும் கலந்துகொண்டுள்ளார். ஒரு அரசு விழாவில் முத லமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் இருப்பது காலம் காலமாக இருப்பதுதான். தமிழ்நாடு அரசுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் எப்படி அரசு விழாவில் கலந்துகொள்ள முடியும்? ஒருவேளை உதயநிதிக்கு பிறகு இன்பநிதிதான் கட்சியை எடுத்து நடத்த வேண்டும் என்பதால், இப்போது இருந்தே கோச்சிங் கொடுக்கிறார் ஸ்டாலின் தாத்தா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள். ஏற்கனவே அமைச்சர் துரைமுருகன் ஒரு பேட்டியில், நான் கருணாநிதியுடன் இருந்தேன், ஸ்டாலினுடன் இருக்கிறேன், உதயநிதியுடன் இருப்பேன், ஏன் இன்பநிதியுடனுமே இருப்பேன் என்று கூறியிருந்தார். ஆக மொத்தம் மூத்த அமைச்சர்களையே “இங்க வாரிசு அரசியல்தான் பிரதானம், அதுக்குத் தேவ நிதானம்”-னு சொல்ல வச்சிருக்கிறார் விடியா முதல்வர் ஸ்டாலின்.
via News J : https://ift.tt/Sihsc7R
via News J : https://ift.tt/Sihsc7R
Mediaகோயில் குளத்தைச் சுற்றி நிறுத்தப்படும் வாகனங்களை அகற்றுவதில் மாநகராட்சி அதிகாரிகளும், போலீஸாரும் அலட்சியம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.கோயில் குளத்தைச் சுற்றியுள்ள இடத்தை இப்படி ஆக்கிரமிப்பு செய்த வகையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.பிரசித்தி பெற்ற சென்னை வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் இப்பகுதி அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் கோயில் குளத்தைச் சுற்றி கார்களை நிறுத்துகின்றனர்.மேலும், இருசக்கர வாகனம் மற்றும் கார் மெக்கானிக் கடை வைத்துள்ளவர்கள், தங்களிடம் பழுது பார்க்க வரும் வாகனங்களையும், குளத்தைச் சுற்றி நிறுத்துகின்றனர். இதனால் கோயில் வரும் பக்தர்கள், தங்களது வாகனங்களை நிறுத்த இடமின்றி சிரமப்படுகின்றனர்.கோயில் வளாகம் என்று கூட பார்க்காமல் குப்பைக் கொட்டும் தொட்டிகளையும் அதன் அருகேயே வைத்து அசுத்தம் செய்ய வழிவகுக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள். இதுகுறித்து இப்பகுதி மக்களும், பக்தர்களும் பலமுறை புகார் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் திருவிழாக்களின் போது பக்தர்கள் அதிக அளவில் வரும் போது, கடுமையான நெரிசல் ஏற்பட்டு, பக்தர்கள் அவதிப்படுகின்றனர். ஆனாலும், இந்த வாகனங்களை அகற்ற, போக்குவரத்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நவடிக்கை எடுப்பதில்லை.கொரோனா லாக்டவுன் காலத்தில் கோயில் பின்புறம் கோபுரம் கதவு மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் தற்போது வரை இந்த பின் வாசல் கதவை திறக்காமல் வைத்துள்ளனர். இதனால் இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் கோயில் என்று கூட பார்க்காமல் பின் வாசலில் அமர்ந்து மது அருந்துவதும், புகை பிடிப்பதுமாய் இருக்கின்றனர். இதனால் இரவு அப்பகுதியை கடக்கும் பெண்கள் அச்சத்துடனே நடமாட வேண்டிய நிலை உள்ளது.கோயிலைச் சுற்றியுள்ள இத்தனை ஆக்கிரமிப்புகளையும் விரைவில் அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/e76Pl4i
via News J : https://ift.tt/e76Pl4i
Mediaபள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பாமல் மாணவர்களுக்கு எப்படி போதுமான கல்விபயிற்சியை அளிக்க முடியும் என்று கல்வியாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.2023 – 24 ஆம் கல்வியாண்டு தொடங்கியுள்ள இந்த சூழலில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் சுமார் 13 ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாகவும், உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசு கல்லூரிகளில் 7ஆயிரத்துக்கும் அதிகமான காலி பணியிடங்கள் இருப்பதாகவும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் குற்றம் சாட்டியுள்ளது.கல்லூரிகளை பொறுத்தவரை இன்றைய நிலவரப்படி காலியாக இருக்கும் 7 ஆயிரம் பணியிடங்களை கௌரவ விரிவுரையாளர்களைக் கொண்டு ஈடுகட்டி வருகிறது. அதே நேரத்தில், இந்த கௌரவ விரிவுரையாளர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு நிர்ணயித்துள்ள ஊதியத்தை தமிழக உயர்கல்வி துறை வழங்கவில்லை என்பதும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் குற்றச்சாட்டு.எடுத்ததற்கெல்லாம் பக்கத்து மாநிலங்களை உதாரணமாக்கி அதைவிட நல்லது செய்வதாகக் கூறும் விடியா அரசு, இந்த சம்பள விகிதத்திலும் அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு தர வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. குறைந்த அளவில் ஊதியத்தை வழங்கிவிட்டு கல்வியை இந்த அரசு எப்படி மேம்படுத்த முடியும் என்பதும், அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தினரின் கேள்வியாக உள்ளது.மேலும், பெற்றோர் – ஆசிரியர் கழகங்கள் மூலம் கெளரவ விரிவுரையாளர்களை செய்யாமல், அந்த நியமனங்களை ஒழுங்கு படுத்த வேண்டும் என்பதும், சுயநிதி கல்லூரிகளில் போதிய ஊதியமின்றி பேராசிரியர்கள் வாடும் நிலையில் அவர்களுக்கும் ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும், என்பதும் அரசு கல்லூரி ஆசிரியர் மன்றத்தின் கோரிக்கையாக உள்ளது.தெய்வத்துக்கு முந்தைய ஸ்தானமான ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்யாமல், விடியா அரசு காலம் கடத்துவது என்பது எதிர்கால மாணவர்களின் கல்வியை கேள்விக்குள்ளாக்கும்.
via News J : https://ift.tt/lDKFBMH
via News J : https://ift.tt/lDKFBMH
Mediaஇரு மனங்களை இணைப்பது திருமணம் என்றால் அப்படி இணைந்த மனங்களை பிரிப்பது விவாகரத்து.. விவாகரத்து செய்ய தயாரான நபர்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஏராளமான சலுகைகளை வாரிவழங்குகிறது சில வெளிநாட்டு நிறுவனங்கள்… அந்த சலுகைகள் என்ன?..பார்க்கலாம்.பொதுவாக இந்திய கலாச்சாரத்தின் படி ஒருமுறை நிகழ்த்தப்பட்ட திருமணம் ஏழு ஜென்மத்திற்கு நீடிக்கும் என நம்பப்படுகிறது. ஆனால் இன்றைய நவீன காலத்தில் திருமணம் என்ற ஒரு பந்தத்தை ஏதோ ஒப்பந்தத்தை ரத்து செய்வது போல விவாகரத்து என்ற பெயரில் முறித்துக்கொள்கிறார்கள். அரசும் இதற்கு இடம் கொடுக்கிறது. சட்டமும் இதற்கு அனுமதி அளிக்கிறது.ஏதேதோ காரணத்தால் விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மனரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். விவாகரத்து நடைமுறைகளை மேற்கொள்வோர் பலர் மன ரீதியிலான அழுத்தங்கள், சிக்கல்களை எதிர்கொள்ளவும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஒரு முடிவை எடுத்துள்ளன.அதன்படி, விவாகரத்து நடைமுறைகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு, தேவையான ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குவது, சட்ட நடைமுறைகளுக்கு ஏற்றவாறு அலுவலக நேரத்தை மாற்றிக் கொள்வது என பல சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளன.மேலும், சில நிறுவனங்கள் மனநல ஆலோசனை வழங்குவதற்கான பணிகளையும் மேற்கொண்டுள்ளன. அதன்பின் தங்களது பிள்ளைகளை எப்படிக் கையாள வேண்டும் என்பதற்கான அறிவுறுத்தல்களையும் வழங்கு கின்றன.தற்போதைக்கு அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் இந்த நடைமுறையை செயல்படுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் விவாகரத்துக்கான விடுப்பை வழங்கத் தொடங்கியுள்ளன.நிறுவனங்களின் இந்த முடிவு விவாகரத்தால் மன அழுத்தத்தில் சிக்கி தவிக்கும் ஊழியர்களுக்கு ஓரளவு அதிலிருந்து விடுபட ஏதுவாக இருக்கும் என நம்பப்படுகிறது.
via News J : https://ift.tt/roCsE96
via News J : https://ift.tt/roCsE96
Mediaஉணவு தட்டுப்பாடு இருக்கும் வேலையில் விளையும் நிலங்களை கையகப்படுத்தும்
திட்டத்தை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி
ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ராயபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கும்
நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தல ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஜெயக்குமார், தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் போன்ற அத்யாவசிய உணவு பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்திருக்கும் வேளையில், அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் இருக்கும் பொழுது, அதற்கென தனி கவனம் செலுத்தி, மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். நியாய விலை கடைகள் மூலம் கொடுக்கப்படும் தக்காளி அனைவருக்கும் கிடைக்பதில்லை என்றார்.மாமன்னன் படம் குறித்து கருத்து தெரிவிக்கும் சென்னை மாநகராட்சி மேயர், விலை
உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை ஏற்றத்தை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு
மானிய விலையில் தக்காளி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல்,
தக்காளி எங்களது துறை அல்ல என பதில் சொல்வது வேடிக்கையான ஒன்றாக உள்ளது என கூறினார். உணவு தட்டுப்பாடு இருக்கின்ற இந்த வேளையில், விளையும் நிலங்களை
கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தின் முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும்,
முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறினார். நெய்வேலியில் நேற்று நடந்த
கலவரத்தை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், காவல்துறை
சமயோசிதமாக செயல்படாததும் கலவரத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக 39 நாடாளுமன்ற
உறுப்பினரை வைத்திருக்கும் திமுக நாடாளுமன்றத்தில் இதுவரை குரல் கொடுக்காதது
ஏன் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.நாட்டு மக்களின் நலனை கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த புரட்சித் தலைவர்,எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா குறித்து அமித்ஷா பேசியதாகவும், திமுகதலைவர்களை குறிப்பிட்டு பேசும் அளவுக்கு எந்த மக்கள் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார். திமுக தலைவர்களை குறிப்பிட்டு பேச வேண்டும் என்றால் ஊழல், குடியைப் பற்றி மட்டுமே பேச முடியும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் கைதி எண் பெற்ற ஒருவர், அமைச்சரவையில் நீடிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார், சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பணியை எப்படி ஒருவரால் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.மீனவர்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க அதிமுக தொடர்ந்து குரல்
கொடுத்து வருவதாகவும், மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக அவர்களுக்காக
இதுவரை குரல் கொடுக்காதது ஏன் என்றும் டி ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் உயர்கல்விக்கு செல்லும்
மாணவர்களுடைய எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக சுட்டி காட்டினார்.
குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 51 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்விக்கு
சென்ற நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் 25 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே
உயர் கல்விக்கு சென்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஊடகத்தினருக்கும்,
ஊடகங்களுக்கும் மிரட்டல் வரும்போதெல்லாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க
வேண்டுமே தவிர ஆளும் அரசை கண்டு அச்சப்படக்கூடாது என்றும் டி ஜெயக்குமார்
கூறினார்.
via News J : https://ift.tt/ucf8OV0
திட்டத்தை என்.எல்.சி. நிர்வாகம் கைவிட வேண்டும் என முன்னாள் அமைச்சர் டி
ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.சென்னை ராயபுரத்தில் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கும்
நிகழ்ச்சியை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்களுக்கு, ஒவ்வொருவருக்கும் தல ஒரு கிலோ தக்காளியை இலவசமாக வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டி ஜெயக்குமார், தமிழகத்தில் தக்காளி, இஞ்சி, சின்ன வெங்காயம் போன்ற அத்யாவசிய உணவு பொருட்கள் கடும் விலை உயர்வை சந்தித்திருக்கும் வேளையில், அவற்றை கட்டுப்படுத்த தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினார். அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் இருக்கும் பொழுது, அதற்கென தனி கவனம் செலுத்தி, மானிய விலையில் அத்தியாவசிய பொருட்களை கொடுக்க நடவடிக்கை எடுக்க திமுக அரசு தவறிவிட்டதாக குற்றம் சாட்டினார். நியாய விலை கடைகள் மூலம் கொடுக்கப்படும் தக்காளி அனைவருக்கும் கிடைக்பதில்லை என்றார்.மாமன்னன் படம் குறித்து கருத்து தெரிவிக்கும் சென்னை மாநகராட்சி மேயர், விலை
உச்சத்தில் இருக்கும் தக்காளி விலை ஏற்றத்தை சமாளிக்க ஏழை எளிய மக்களுக்கு
மானிய விலையில் தக்காளி கொடுக்கப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளிக்காமல்,
தக்காளி எங்களது துறை அல்ல என பதில் சொல்வது வேடிக்கையான ஒன்றாக உள்ளது என கூறினார். உணவு தட்டுப்பாடு இருக்கின்ற இந்த வேளையில், விளையும் நிலங்களை
கையகப்படுத்தும் என்எல்சி நிர்வாகத்தின் முடிவை பரிசீலிக்க வேண்டும் என்றும்,
முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் கூறினார். நெய்வேலியில் நேற்று நடந்த
கலவரத்தை ஆளும் திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாகவும், காவல்துறை
சமயோசிதமாக செயல்படாததும் கலவரத்துக்கு காரணம் என குற்றம் சாட்டினார்.
நெய்வேலியில் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிராக 39 நாடாளுமன்ற
உறுப்பினரை வைத்திருக்கும் திமுக நாடாளுமன்றத்தில் இதுவரை குரல் கொடுக்காதது
ஏன் என்றும் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.நாட்டு மக்களின் நலனை கருதி பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த புரட்சித் தலைவர்,எம்ஜிஆர் புரட்சித்தலைவி ஜெயலலிதா குறித்து அமித்ஷா பேசியதாகவும், திமுகதலைவர்களை குறிப்பிட்டு பேசும் அளவுக்கு எந்த மக்கள் திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார். திமுக தலைவர்களை குறிப்பிட்டு பேச வேண்டும் என்றால் ஊழல், குடியைப் பற்றி மட்டுமே பேச முடியும் என்றும் ஜெயக்குமார் கூறினார்.சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கில் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் கைதி எண் பெற்ற ஒருவர், அமைச்சரவையில் நீடிப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்று விமர்சித்த முன்னாள் அமைச்சர்
ஜெயக்குமார், சிறையில் இருந்து கொண்டு அமைச்சர் பணியை எப்படி ஒருவரால் செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.மீனவர்களை பழங்குடி இனத்தவர் பட்டியலில் சேர்க்க அதிமுக தொடர்ந்து குரல்
கொடுத்து வருவதாகவும், மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த திமுக அவர்களுக்காக
இதுவரை குரல் கொடுக்காதது ஏன் என்றும் டி ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் உயர்கல்விக்கு செல்லும்
மாணவர்களுடைய எண்ணிக்கை கணிசமாக குறைந்திருப்பதாக சுட்டி காட்டினார்.
குறிப்பாக கடந்த அதிமுக ஆட்சியில் 51 விழுக்காடு மாணவர்கள் உயர்கல்விக்கு
சென்ற நிலையில், தற்போதைய திமுக ஆட்சியில் 25 சதவிகிதம் மாணவர்கள் மட்டுமே
உயர் கல்விக்கு சென்று உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதியில் 40 தொகுதிகளிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் ஜெயக்குமார் கூறினார். தமிழகத்தில் ஊடகத்தினருக்கும்,
ஊடகங்களுக்கும் மிரட்டல் வரும்போதெல்லாம் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க
வேண்டுமே தவிர ஆளும் அரசை கண்டு அச்சப்படக்கூடாது என்றும் டி ஜெயக்குமார்
கூறினார்.
via News J : https://ift.tt/ucf8OV0
👍1
Mediaதாத்தா திறந்து வைக்க, தந்தை கூட நிற்க, பேரன் கைதட்டுகிறார்… அட, இதுஒன்றும் குடும்ப விழாவோ,பிறந்தநாள் கேக் கட்டிங்கோ அல்ல… அரசு விழா, அதுதாங்க, தாத்தா ஸ்டாலின் ஹாக்கி மைதானத்ததை திறந்து வைக்க, தந்தை உதயநிதி இது கூட நிற்க பேரன் இன்பநிதி கைதட்டிக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கிறார்… ஒரே இன்பமாய் இருக்குதய்யா… திமுகவின் இந்த வாரிசு அரசியல் கூத்தைப் பார்க்கும்போது என்று திமுகவின் சீனியர்களே கடும் காண்டாகி இருக்கும்வேளையில், திமுக என்றாலே குடும்பக்கட்சி வாரிசுக் கட்சி என்று எல்லோரும் விமர்சனம் வைப்பதைக் கேட்டுக் கேட்டு புளித்துப்போய் விட்டது என்று வாய்கூசாமல் பேசுகிறார் முதல்வர் ஸ்டாலின்திமுகவில் தலைவராக வருவதற்கு என்னென்ன தகுதிகள் தேவை?….ஏதேனும் ஒரு டிகிரி படிப்பு வேண்டுமா?…முனைவர் பட்டம் பெற்று இருக்க வேண்டுமா?…. எழுத்தாளராக இருக்க வேண்டுமா? அட அது எல்லாம் எதுக்கு?… கருணாநிதியின் குடும்பம் ஒரு தகுதிபோதாதா ?பேரறிஞர் அண்ணா எனும் மாபெரும் ஆளுமை மக்களுக்காக உருவாக்கிய கட்சியை தன் மக்களுக்காக தாரை வார்த்த கருணாநிதியைப் பின்பற்றியே தமிழ்நாட்டின் முதலமைச்சராயிருக்கும் ஸ்டாலின், அடுத்ததாக, தன் வாரிசுக்கே கட்சித் தலைமைப் பதவியையும் பட்டயம் செய்துவைத்துவிட்டார்.. தாத்தாவுக்கு தந்தைக்கும் தான் என்ன சளைத்தவனா? என்று தன் மகனை இன்ட்ரோ கொடுத்திருக்கிறார் உதயநிதி… அட அட அட.. இதுவல்லவோ திராவிட மாடல்…ஸ்டாலின், உதயநிதிக்குப் பிறகு கட்சித் தலைமை யாரிடம் செல்லும் என்று கேட்டால் திமுகவின் சீனியர்களே, யோயோ மோடிற்குப்போய், “இந்தியன் மெஸ்ஸி இன்பா கூடவும் நாங்க தான் ப்ரோ இருப்போம்” என்று இன்பநிதிக்கும் அடிமை சாசனம் எழுதிக்கொடுக்க தயாராகி வருகிறார்கள் என்கிறது அறிவாலய வட்டாரம்..ஏன் திடீரென்று இந்த பேச்சு என்று கேட்கிறீர்களா? ஒரு அரசு விழாவில் முதலமைச்சர் மற்றும் இதர அமைச்சர்கள் இருப்பது காலம் காலமாக நடப்பதுதான். ஆனால், தமிழ்நாடு அரசுக்கு சம்பந்தமே இல்லாத ஒரு ஆள் எப்படி அரசு விழாவில் கலந்துகொள்ள முடியும்? தமிழ்நாடு ஹாக்கி மைதானத்திற்கும் இன்பநிதிக்கும் என்ன சம்மந்தம்? அட, அவர் தமிழ்நாட்டின் மெஸ்ஸிங்க என்றுகூட நீங்கள் வாதாடலாம்… அப்படியே இருந்தாலும், ஹாக்கி மைதானத்திற்கும் இன்பநிதிக்கும் என்னதாங்க சம்மந்தம்?இருக்கு சம்பந்தம் இருக்கு… மகனுக்கு பட்டாபிஷேம் நடந்தாகிவிட்டது, அடுத்து அன்புப் பேரனுக்கு நடக்கவேண்டாமா? என்ற ஸ்டாலினின் கனவுதான் அது.. தன் மகனைப்போலவே, பேரனுக்கும், இப்போதில் இருந்தே கோச்சிங் கொடுக்கிறார் ஸ்டாலின் தாத்தா என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.நான் கருணாநிதியுடன் இருந்தேன், ஸ்டாலினுடன் இருக்கிறேன், உதயநிதியுடன் இருப்பேன், ஏன் இன்பநிதியுடனுமே இருப்பேன் என்று ஏற்கனவே உருகியிருந்தார் சீனியர் அமைச்சர் துரைமுருகன்…. ஆக மொத்தம் மூத்த அமைச்சர்களையே “இங்க வாரிசு அரசியல்தான் பிரதானம், அதுக்குத் தேவ நிதானம்”-னு சொல்ல வச்சிருக்கிறார் விடியா முதல்வர் ஸ்டாலின்.அரசு விழாவில் அமைச்சர் மகனுக்கு என்ன வேலை? திமுகவின் 4ம் தலைமுறை இன்பநிதி தான் என இப்போதே அடித்தளம் அமைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்து இருக்கிறதா? திமுகவிற்கு தலைமையேற்க தயாராகிவிட்டார் 4ம் தலைமுறைத் தலைவர் இன்பநிதிதான் என்று உபிஸ்க்கு உரக்கச்சொல்லியிருக்கிறார்கள் ஸ்டாலின் குடும்பத்தினர்.
via News J : https://ift.tt/xuIPRe9
via News J : https://ift.tt/xuIPRe9
Media”ஏழு கழுத வயசாயிருச்சு, இன்னும் வேலைக்கு போகாம இருக்கியே டா” என்று நம் பெற்றோர்கள் நம்மளை நோக்கி வசவுகளை தொடுத்திருப்பர். அந்த தரிசனம் நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும். நமக்கே இப்படி இருக்க 11 வயது சிறுமி ஒரு பொம்மை நிறுவனத்திற்கே சி.இ.ஓ-வாக இருந்துள்ளார். இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் அந்தப் பதவியை தற்போது துறந்துள்ளார். யார் அந்த சிறுமி?ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிக்சி குர்திஸ் தான் அந்த சிறுமி. 11 வயதான இச்சிறுமி கொரோனா பெருந்தொற்று இந்த உலகை அச்ச மூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் 2021 ஆம் ஆண்டு தனது தாய் ராக்சி ஜாசென்கோவுடன் இணைந்து பிக்சி பிட்ஜெட்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். இதன் தலைமைச் செயல் அதிகாரியாக பிக்சி தற்போது வரை இருந்து வந்தார். குழந்தைகளுக்கான பொம்மைகளை உற்பத்தி செய்யும் இந்நிறுவனத்தின் மாதாந்திர வருமானம் சுமார் ஒரு கோடி ஆகும். இந்த நிலையில் தன்னுடைய படிப்பிற்காக இந்த சி.இ.ஓ பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். மேலும் பிக்சியை படிப்பில் கவனத்தை செலுத்துமாறு அவருடைய தாய் அறிவுரையும் கூறியுள்ளார்.Sve vesti dana na temu : Piksi Kurtis | Espresoபிக்சி தன்னுடைய 12 வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளார். இந்த விழாவில்தான் தன்னுடைய ஓய்வு குறித்து அறிவிக்க உள்ளார். பிறகு படிப்பில் முழுகவனத்தை செலுத்த அவர் திட்டமிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் பிக்சியை 1.3 லட்சம் பேர் ஃபாலோ செய்கின்றனர். இவர் அடிக்கடி தனது சொகுசு வாழ்க்கை குறித்து ரீல்ஸ் வீடியோக்களை பகிர்வார். இதனடையே தனது பிறந்தநாளுக்கு வருகை தரும் விருந்தினர்களுக்கு வழங்க உள்ள பரிசு தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த பரிசு பையில் 4000 ரூபாய் மதிப்புள்ள ஆஸ்திரேலிய அழகுசாதன பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த பரிசு பைகளை ஆஸ்திரேலியாவின் அழகுசாதன நிறுவனமான மெக்கோபியூட்டி வழங்கி இருக்கிறது. இந்த வீடியோவை பலரும் லைக் செய்தும் ஷேர் செய்தும் வருகின்றனர்.12 வயது சிறுமிக்குள் இவ்வளவு திறமையா என்று யாரும் கேட்டுவிடாதீர்கள். சாதிப்பதற்கு வயது ஏது? சாதிப்பதற்கு ஆர்வமும் உழைப்பும் மட்டுமே போதுமானது. அதனை பிக்சி எனும் இச்சிறுமி நமக்கு சொல்லாமல் சொல்கிறார்.
via News J : https://ift.tt/L5hrH0Z
via News J : https://ift.tt/L5hrH0Z
Mediaதமிழகத்தில் புதிதாக திறக்கப்படும் நூலகம், பேருந்து நிலையம், மருத்துவமனை என அனைத்திற்கும் தனது தந்தை கருணாநிதி பெயரை சூட்டி வருகிறார் ஸ்டாலின். இதில் உச்சபட்சமாக மகளிருக்கான உரிமைத் தொகை திட்டத்துக்கு கூட கருணாநிதியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.இது போதாது என பள்ளி, கல்லூரிகளிலும் கருணாநிதியின் புராணம் பாடுவதற்கு வசதியாக அவர் எழுதிய நூல்களை பாடதிட்டங்களில் சேர்க்க உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு தின அரசு நிகழ்ச்சியின்போது கூட பள்ளி மாணவர்களுக்கு வைத்த கட்டுரைப் போட்டிகளின் தலைப்பு கருணாநிதியின் புகழ்பாடும் வகையிலேயே அமைந்தது. இதற்கு அப்போதே ஆசிரியர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.மாநிலத்துக்கு தமிழ்நாடு என பெயர் வைக்க, உண்ணாவிரதம் இருந்து உயிரைவிட்டவர் சங்கரலிங்கனார் என்ற தமிழ் ஆர்வலர். இவரது பெயரையும் மறைத்து, தமிழ்நாடு என பெயர் சூட்டிய அறிஞர் அண்ணாவின் பெயரையும் மறைத்து கருணாநிதியின் புகழ் பாட வேண்டிய தேவை என்ன? போதாக்குறைக்கு பேனா சின்னம் வேறு…இந்தித் திணிப்பு… இந்தித் திணிப்பு என எதற்கெடுத்தாலும் பொங்கும் ஸ்டாலின் அவர்களே, தங்களின் தந்தைப் பெயரை பள்ளி மாணவர்கள் முதற்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களுக்கு பெயர் சூட்டி வருகிறீர்களே இது திணிப்பு இல்லையா?போகிற போக்கைப் பார்த்தால் பள்ளிகளில், அரசு அலுவலகங்களில் எல்லாம் காலையில் கருணாநிதி புராணம் பாடிய பின்னர்தான் வேலையைத் தொடங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
via News J : https://ift.tt/Ik5sylD
via News J : https://ift.tt/Ik5sylD
Mediaஸ்டூவர்ட் பிராட் என்று சொன்னவுடன் 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் நம் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங், பிராட் ஓவரில் ஆறு பாலுக்கு ஆறு சிக்சர்களை பறக்கவிட்டதுதான் நினைவுக்கு வரும். யானைக்கும் அடி சறுக்கும் என்கிற பழமொழியின் உண்மைத் தன்மை பிராட்-க்கு பொருந்தும் என்றாலும், அன்றைய நாயகன் யுவராஜ் தான். சரி இப்போது எதற்காக பிராட் பேச்சினை நாம் எடுத்துள்ளோம் என்றால், இங்கிலாந்து அணிக்காக அயராது பந்துவீசி முக்கியத் தருணங்களில் பல விக்கெட்டுகளை கைப்பற்றி அணியை முன்னோக்கி கொண்டு சென்றவர்களில் பிராட்-டும் ஒருவர். அவர் தற்போது தன்னுடைய ஓய்வினை அறிவித்துள்ளார்.இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் ஆஷஸ் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளை வென்றுவிட்டது. இங்கிலாந்து ஒரு போட்டியை வென்றுவிட்டது. மற்றொருப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. தற்போது ஐந்தாவது மற்றும் இறுதி ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிதான் ஸ்டூவர்ட் பிராட்-டின் இறுதிப் போட்டியாம். இதனை ஸ்டூவர்ட் பிராடே முன்வந்து அறிவித்துள்ளார். அவருடன் இருக்கும் சக ஜாம்பவான் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயது ஆகியும் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.England great Stuart Broad to retire after Ashes finale | Cricket News - Times of Indiaஓய்வுகுறித்து பத்திரிகையாளர்களிடமும் செய்தியாளர்களிடமும் பிராட் கூறியது பின்வருமாறு உள்ளது. ஓவலில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்காம்ஷைர் கவுண்டி மற்றும் இங்கிலாந்து அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு நிறைய போட்டிகளில் விளையாடியது மிகப்பெரிய கவுரவம். நான் பங்கெடுத்துள்ள சிறப்பு வாய்ந்த இந்த ஆஷஸ் தொடரை எப்போதும் உயரிய நிலையில் முடிக்கவே விரும்புகிறேன். நான் விளையாடிய போட்டிகளில் மிகவும் உற்சாகமான, ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஒரு தொடர் இது தான். ஓய்வு பெறுவது குறித்ஹ்டு சில வாரங்களாக யோசித்து வந்தேன். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் போட்டியே என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டில் எப்போதும் உச்சப்பட்ச போட்டி. ஆஷஸ் கிரிக்கெட்டுடன் எனக்குள் இனம்புரியாத மோகம் உண்டு. எனவே எனது கடைசி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆஷஸ் கிரிக்கெட்டில் அமைய வேண்டும் என்று விரும்பினேன். வெள்ளிக்கிழமை இரவு ஓய்வு முடிவை எடுத்தேன். கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று தோன்றியது. கேப்டன் பென் ஸ்டோக்சிடமும், மறுநாள் காலையில் சக வீரர்களிடமும் எனது முடிவை தெரிவித்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்னை பெருமைப்பட வைக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒவ்வொரு தருணைத்தையும் அனுபவித்து பவுலிங் செய்தேன்.இவ்வாறு பிராட் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுருந்தார்.இலங்கைக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் பிராட். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 167 டெஸ்டுகளில் ஆடி 602 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த சாதனையாளர் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். ஒரு இன்னிங்சில் ஐந்து முதல் அதற்கு மேல் விக்கெட் 20 முறை எடுத்துள்ளார். அத்துடன் ஒரு சதம், 13 அரை சதம் உள்பட 3,662 ரன்கள் சேர்த்துள்ளார்.
via News J : https://ift.tt/SbGhsR3
via News J : https://ift.tt/SbGhsR3
Mediaபன்னீர், டிடிவியின் ஆர்ப்பாட்டம் என்பது அச்சாணியே இல்லாத வண்டி போன்றது எனவும், அது மூன்றடி கூட ஓடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார். சென்னை எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பொழுதுபோகாத காரணத்தால் பன்னீரும், டிடிவியும் போராட்டம் அறிவித்துள்ளனர் என கருத்து தெரிவித்துள்ளார். மேலும், ஓபிஎஸ், டிடிவி கூட்டணி அச்சாணி இல்லாத வண்டியாகும், ஆகவே அது நீண்ட நாட்கள் ஓடாது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார். ஆதிதிராவிடர் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் கை வைப்பது எந்த விதத்தில் நியாயம்…? என்றும், மகளிர் உரிமைத்தொகை வழங்க போக்குவரத்து விதிமீறல் மூலம் டார்கெட் வைத்து அபராதம் வசூலிக்க காவல்நிலையங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டி உள்ளார். நிர்வாக திறனற்ற விடியா திமுக ஆட்சியில் தங்கத்திற்கு நிகராக தக்காளி விலை சென்று விட்டதாகவும், மக்கள் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் ஸ்டாலின், போட்டோஷூட் மட்டுமே நடத்திக்கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
via News J : https://ift.tt/ruqvfzO
via News J : https://ift.tt/ruqvfzO
Mediaமலேசியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட அரிய வகை பாம்புகள் மற்றும் பல்லிகள் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று முன் தினம் இரவு மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிந்தோ விமானம் திருச்சி வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சென்னையை சேர்ந்த முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அவரது உடமைகளில் ஏதோ உருவங்கள் நகர்வது போன்று தெரிந்தது. உடனே அவரை தனியே அழைத்துச் சென்று அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் 47 அரிய வகை பாம்புகள் மற்றும் 2 பல்லி வகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் அவை மலேசியாவில் இருந்து திருச்சி கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து முகமது மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் திருச்சி மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தௌ பாம்புகள் மற்றும் பல்லிகளை சோதனை செய்து வருகின்றனர். அந்த பாம்புகள் மற்றும் பல்லிகளை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிகிறது இதற்கான பணிக்ளை அதிகாரிகள் மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.
via News J : https://ift.tt/2MYtKfn
via News J : https://ift.tt/2MYtKfn
Mediaஅதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாய்மார்கள் பாலூட்டும் அறைகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் விடியா திமுக அரசு மூடியுள்ளது. பாலூட்டும் அறைகள் சமூக விரோதிகள் பயன்படுத்தும் கூடாரமாக மாறி வரும் அவலம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.தமிழகத்தில் விடியா திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை தொடர்ந்து முடக்கி வருகிறது. அம்மா உணவம், அம்மா மினி கிளினிக் உள்ளிட்ட மக்கள்நலத் திட்டங்களின் வரிசையில் தற்போது தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் முடக்கப்பட்டுள்ளதால் பெண்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தமிழகத்தின் பல இடங்களில் பாலூட்டும் அறை மூடப்பட்டதால், அவைகள் சமூக விரோதிகள் பயன்படுத்தும் கூடாரமாக மாறியிருப்பது வேதனையின் உச்சம்.தாய்மார்கள் பொதுஇடங்களில் எவ்வித தயக்கமும் இன்றி தங்களுடைய குழந்தைகளுக்கு பால் கொடுப்பதற்கு வசதியாக, கடந்த 2015 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவால், அனைத்து பேருந்து நிலையங்களிலும் பாலூட்டுகள் அறைகள் திறக்கப்பட்டன. ஆனால் விடியா திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பாலூட்டும் அறைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.அதன் ஒருபகுதியாக கோவை மாவட்டம் வால்பாறை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டியே கிடப்பதால், பெண்கள் அவதியடைந்து வருகின்றனர்.இதேபோல் திருப்பூர் தாராபுரம் மத்திய பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறை, கடந்த 2 ஆண்டுகளாக குடிமகன்களின் மது அருந்தும் பாராக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும், சுகாதாரமற்ற முறையில் காணப்படுவதால், பாலூட்டும் அறைக்கு தாய்மார்கள் செல்லமுடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையத்தில் கடந்த பல மாதங்களாக தாய்மார்கள் பாலூட்டும் அறை பூட்டப்பட்டு உள்ளதால், கை குழந்தைகளுடன் வரும் பெண்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.செங்கல்பட்டு பேருந்து நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பாலூட்டும் அறையில், சமூக விரோதிகள் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். கடந்த சில மாதங்களாக பாலூட்டும் அறை பூட்டியே இருப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பச்சிளம் குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.விடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் சென்னை பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வந்த பாலூட்டும் அறை மூடிக்கிடக்கிறது. இதுபோன்று தமிழக முழுவதும் தாய்மார்கள் பாலூட்டும் அறைகள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருவதால், தாய்மார்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இத்திட்டமும் விடியா திமுக ஆட்சியாளர்களால் கைவிடப்படுமோ என்ற எண்ணம் தாய்மார்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே தாய்மார்கள் பாலூட்டும் அறைகளை பராமரித்து, புத்துயிர் கொடுக்க வேண்டும் என்பதே பெண்களின் கோரிக்கையாக உள்ளது.
via News J : https://ift.tt/ojn5Sz3
via News J : https://ift.tt/ojn5Sz3
👏1
Mediaபள்ளிக்கல்வித்துறை சார்பா தற்காலிக ஆசிரியர்கள நியமிக்கிறதுல தில்லுமுல்லு நடக்கிறதா பரவலான குற்றச்சாட்டு கூறப்படுது. இந்த விடியா அரசு நாங்க ஆட்சிக்கு வந்ததும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள நிரப்புறதா சொல்லுச்சு. அத நம்பி அரசு ஆசிரியர் கனவோடு பலரும் காத்திருக்க, அந்த கனவுல மண்ண போட்டு, குறைச்சலான சம்பளத்துல தற்காலிக ஆசிரியர்கள நியமிச்சிட்டு வாராங்க. அதுவும், தலைமை ஆசிரியர் மேற்பார்வையிலயும், பெற்றோர் ஆசிரியர் கழகம் வாயிலாகவும் தற்காலிக ஆசிரியர்கள நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்துனதா சொல்லப்படுற நிலையில, தனியார் தன்னார்வ நிறுவனங்கள் மூலமா இந்த தற்காலிக ஆசிரியர் நியமனம் நடக்குதாம். இதுல அந்த தனியார் நிறுவனங்கள் பல லட்சம் ரூபாயை கமிஷனா வாங்கிட்டு வேலை போட்டு கொடுத்ததா குற்றச்சாட்டு கூறப்படுற நிலையில, அப்படி வேலைக்கு வந்தவங்களுக்கு கடந்த 4 மாசமா சம்பளம் வரலன்னும் குற்றம்சாட்டியிருக்காங்க…பள்ளிக்கல்வித்துறையில நடக்குற இந்த கமிஷன் விஷயங்கள் எல்லாம் துறை அமைச்சரோட கவனத்துக்கு தெரியலையா? இல்ல, வாங்குறத வாங்கிக்கிட்டு கண்டுக்கிடமா இருக்காரான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
via News J : https://ift.tt/Mmvthui
via News J : https://ift.tt/Mmvthui
Mediaதனியார் திருமண மண்டபங்களில் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்தால் மட்டுமே திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்த முடிகிறது அதை தவிர்க்கும் வகையில் தான் ஏழை எளிய நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் சமூக நலக்கூடங்கள் செயல்பட்டு வருகிறது எளிய முறையில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய பொதுமக்கள் சமூக நலக்கூடங்களை நாடி வருகின்றனர் மிக மிக குறைந்த கட்டணத்தில் சமூக நலக்கூடங்கள் செயல்பட்டு வந்தாலும் சென்னை முழுவதும் தற்போது சமூக நலக்கூடங்கள் திமுகவின் கூடாரமாக மாறிவிட்டது சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் உள்ள சமூக நலக்கூடங்கள் அந்தந்த திமுக பொறுப்பாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது சமூக நலக்கூடம் மாநகராட்சி சார்பில் குறைந்த கட்டணம் வசூலித்தாலும் அந்த சமூக நலக்கூடங்களில் டெக்கரேஷன் சமையல் உள்ளிட்ட அனைத்து காண்ட்ராக்ட்களும் திமுகவினர் கட்டுப்பாட்டில் தான் இருந்து வருகிறது பொதுமக்கள் சமூக நலக்கூடங்களை நாடும்போது தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகரான கட்டணங்களை திமுகவினர் வசூலித்து வருகின்றனர்.Top Community Halls in Moolakadai-Madhavaram - Best Community Centres Chennai - Justdialகுறிப்பாக சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி முதலமைச்சர் ஸ்டாலினின் சொந்த தொகுதியாகும் கடந்த 12 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஸ்டாலின் அந்த தொகுதிக்கு எந்த நலனும் செய்யவில்லை குறிப்பாக திரு வி க நகர் பேருந்து நிலையம் எதிரில் மாநகராட்சி சமூக நலக்கூடம் கட்டப்பட்டு ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இந்த சமூக நலக் கூடத்திற்கு ஒரு நாள் வாடகையாக 27140 ரூபாய் சென்னை மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்படுகிறது அதே போல் அரை நாள் வாடகைக்கு 13570 ரூபாய் வசூலிக்கப்படுகிறது ஆனால் நிகழ்ச்சிக்கு தேவையான டெக்கரேஷன் சமையல் சேர் டேபிள் என அனைத்திற்கும் விலைப்பட்டியல் போட்டு வசூலிக்கப்படுகிறது குறிப்பாக கொளத்தூர் பகுதி செயலாளராக இருக்கும் ஐ சி எப் முரளி தலைமையில் தான் இந்த சமூக நலக்கூடம் செயல்பட்டு வருகிறது இவர் தலைமையில் தான் திமுகவினர் இந்த சமூக நலத்தை ஆக்கிரமித்துள்ளனர்.திருமணத்திற்கான மலர் டெக்கரேஷனுக்கு 60 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது இதைப்போல நிகழ்ச்சிக்கான சமையல் பாத்திரங்கள் சமையலுக்கான கான்ட்ராக்ட் என அனைத்துமே திமுக நிர்வாகிகள் மட்டுமே கொடுக்கின்றன வரக்கூடிய நிகழ்ச்சி நடத்தக்கூடியவர்களுக்கு இந்த சமூக நலக் கூடத்தில் நாங்கள் சொல்லும் டெக்கரேஷன் சமையல் கான்ட்ராக்ட் கொடுத்தால் மட்டுமே மண்டபம் புக் செய்ய முடியும் இல்லை என்றால் உங்களுக்கு இந்த சமூக நலக்கூடம் நிகழ்ச்சி நடத்துவதற்கு கொடுக்க முடியாது என கறாராக கூறிவிடுகிறார்கள் என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.ஸ்டாலின் தொகுதியிலேயே இது போன்ற நிலை என்றால் மற்ற பகுதியில் எந்த நிலை என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர் மாநகராட்சி சமூக நலக்கூடத்திற்கு நிகழ்ச்சிக்காக செல்பவர்கள் இவர்கள் கூறும் பட்டியலை பார்த்து தலைக்கறிக்க ஓடக்கூடிய நிலைதான் இருந்து வருகிறது தனியார் திருமண மண்டபங்களுக்கு நிகராகவும் அதற்கு அதிகமாகவும் கட்டணம் வசூலிக்கப்படுவதால் ஏழை எளிய மக்கள் அங்கு செல்ல அச்சப்படுகின்றனர் இதுபோல முதல்வர் ஸ்டாலின் தொகுதியில் இது போன்ற அநியாயங்கள் நடைபெற்று வருவது தான் ஏழை எளிய மக்கள் சமூக நலக்கூடங்களில் நிகழ்ச்சி நடத்த முடியாத நிலையில் இருந்து வருகின்றனர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் முதல்வர் ஸ்டாலின் தன் தொகுதியை பற்றிய தெரியாமல் பேசாமல் அடைந்தையாக இருந்து வருவது தான் திராவிட மாடல் ஆட்சியாக இருக்கிறது.
via News J : https://ift.tt/vXrKfsO
via News J : https://ift.tt/vXrKfsO
Mediaமுதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதி தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்கள் பார்வைக்கு விஐபி தொகுதியாக காணப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் தொகுதி என்றாலே அனைத்து வசதிகளுக்கும் பொதுமக்களுக்கு எளிதில் கிடைத்துவிடும் என்பது அனைவராலும் நம்பப்படுகிறது. ஆனால் அங்கு இருக்கும் நிலை தலைகீழாக தான் இருக்கிறது தொகுதி முழுவதும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கிறோம் என்ற பெயரில் தொகுதியை பள்ளத்தாக்காத மாற்றி இருக்கிறார்கள். எங்கு சென்றாலும் மழை நீர் வடிகால் கால்வாய் பள்ளங்கள் வெட்டப்பட்டு அறையும் குறையுமாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது.எங்கு சென்றாலும் துண்டும் குடிமான சாலைகள் என கடைக்கோடி கிராமத்தில் இருக்கும் நிலையை விட மோசமான நிலையில் குளத்தூர் தொகுதி இருந்து வருகிறது.மக்களுக்கு தேவை சுத்தமான காற்று சுகாதாரமான குடிநீர் ஆனால் கொளத்தூர் தொகுதியில் முற்றிலும் இயற்கைக்கு மாறாக பொதுமக்கள் நலனில் அக்கறை கொள்ளாத வகையில் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, குளத்தூர் தொகுதிக்குட்பட்ட ஜி கே எம் காலனியில் 40க்கும் மேற்பட்ட தெருக்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள் வசதி படைத்தவர்கள் முதல் அன்றாட கூலித்தொழிலாளர்கள் வரை ஜிகே முக்கால் அணியில் வாழ்ந்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள 26 வது தெரு முதல் பல்வேறு தெருக்களில் சுகாதாரமான குடிநீர் கிடைப்பதில்லை குறிப்பாக சென்னை குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும் குடிநீர் கழிவுநீர் கலந்து வருகிறது.குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்கி தமிழகத்தை வளமாக்கிய கலைஞர் : மகுடம் சூடிய திமுக-14கடந்த பல மாதங்களாக இப்பகுதியில் உள்ள குடிநீர் குழாய்களில் கழிவு நீர் கலந்து வருவதால் முகர்ந்து பார்க்கவே முடியாத நிலை ஏற்படுகிறது. குடிநீர் குழாய் கழிவு நீர் குழாயா என்ற சந்தேகம் ஏற்படும் வகையில் குழாய்களில் வரும் குடிநீர் கருப்பு நிறத்தில் வருகிறது. பலமுறை புகார் கொடுத்தும் முதலமைச்சர் தொகுதி என்று கூட அக்கறையில்லாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகிறார்கள். முதலமைச்சர் தொகுதியிலேயே சுத்தமான குடிநீர் வரவில்லை என்றால் தமிழகத்தில் மற்ற தொகுதிகளில் மக்களின் நிலை என்ன என்பது இதன் மூலம் புலப்படுகிறது.குடிக்க மட்டுமில்லாமல் சமைப்பதற்கும் கேன் தண்ணீர் வாங்கி உபயோகப்படுத்துவதால் ஒரு மாதத்திற்கு 2000 ரூபாய் வரை தண்ணீருக்கு மட்டும் செலவழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதே போல தான் ஜி கே எம் காலனி முழுவதும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது. தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய ஸ்டாலினும் அதிகாரிகளும் கண்டும் காணாதது போல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.குடிநீரில் கழிவு நீர் கலந்து வருவது மட்டுமில்லாமல் தொகுதியில் பல்வேறு பிரச்சனைகள் இருந்து வருவதாகவும் தினமும் சாலைகளில் நடந்து செல்லவே அச்சப்படக்கூடிய வகையில் குண்டும் குழியுமாக இருக்கக்கூடிய சாலைகள் ஒருபுறம் என கொளத்தூர் பகுதி மக்களே சிக்கி சின்னாபின்னம் ஆகி வருகிறார்கள். இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் மாதத்திற்கு இரண்டு முறை முதல் மூன்று முறை வரை நடத்திட்டோம் என்ற பெயரில் ஃபோட்டோ நடத்தி வருவது தான் முதலமைச்சர் ஸ்டாலினின் தொகுதி மக்களுக்கு செய்யும் நலத்திட்டங்கள் என்ற பெயரில் ஏமாற்றி வருவதை வாடிக்கையாகக் கொண்டது தான் திராவிட மாடல் ஆட்சியாக பார்க்கப்படுகிறது.
via News J : https://ift.tt/SbvsgxK
via News J : https://ift.tt/SbvsgxK
Mediaஎன்.எல்.சி.க்காக கையகப்படுத்திய நிலத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பிரமாண மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் என்.எல்.சி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது.தமிழக அரசு, என்.எல்.சி. பிரமாண மனு அடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் அறுவடை முடியும் வரை விவசாயிகளுக்கு எந்த தொந்தரவும் கொடுக்க கூடாது எனக் கோரிய வழக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 15ம் தேதிக்குள் பயிரை அறுவடை செய்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் நிலத்தை பயன்பாட்டுக்கு எடுக்காவிட்டால் மின்சார உற்பத்தி பாதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு சார்பில் கூறப்பட்டது.1.5 கிலோ மீட்டர் தூரத்தில் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க தயார் என்று என்.எல்.சி. நிறுவனமும் தங்கள் தரப்பு பதிலைக் கூறியுள்ளது.நிலத்தை கையகப்படுத்திய பின் சாகுபடி செய்ய அனுமதித்தது ஏன் என்றும் நிலத்துக்கு வேலி அமைக்காதது ஏன் எனவும் என்.எல்.சி.க்கு நீதிபதி கேள்வியெழுப்பினார்.அறுவடைக்குப் பின் நிலத்தை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரரும் உத்தரவாதம் வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் கூறியது. கால்வாய் தோண்டாவிட்டால் சுரங்கத்துக்குள் வெள்ளம் புகுந்து விடும் என்று என்.எல்.சி. தரப்பு கூறியது.அனைத்து பணிகளையும் நிறுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பு கூறியது. அதனைத் தொடர்ந்து வழக்கு நாளை மறுநாள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/pEWjenV
via News J : https://ift.tt/pEWjenV
👏1