Mediaஅதிகார மோதல் முற்றிப்போய் திமுக கவுன்சிலரும், வட்டச் செயலாளரும் நடு ரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களது அதிகார மோதலால் தங்கள் பகுதியில் எவ்வித பணிகளும் நடைபெறவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.இப்படி நடுரோட்டில் மோதிக் கொள்வது ஏதோ எதிர்கட்சி நிர்வாகிகள் அல்ல… திமுகவினர் தான். அதிகார மோதல் முற்றிப்போய் பொதுமக்கள் மத்தியில் நடுரோட்டில் சண்டையிடும் நிலைக்கு வந்துள்ளனர்.சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி, 113 வது வார்டில் உள்ள ராமகாமாத்துபுரம் பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் ஓ பிளாக்கில் சில மாடிகளில் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அப்பகுதி 113 வார்டு திமுக வட்டச்செயலாளர் விஷ்ணு, குடிசை மாற்று வாரிய அதிகாரிகளை அழைத்து வந்து அதனை சரிசெய்ய முயன்றார்.அப்போது அங்கு வந்த திமுக 113 வது வார்டு கவுன்சிலர் பிரேமா மற்றும் அவரது கணவர் சுரேஷ் ஆகிய இருவரும் குடிசைமாற்று வாரிய அதிகாரிகளிடம், “நாங்கள் தான் இந்த ஏரியா கவுன்சிலர். எங்களிடம் செல்லாமல் வேலை செய்வாயா” என ஒருமையில் பேசி வேலை செய்ய விடாமல் தடுத்துள்ளனர்.வேலை செய்வதை தடுக்க வேண்டாம் என விஷ்ணு கூறியதால் ஆத்திரமடைந்த கவுன்சிலர் மற்றும் அவரது கணவர், அவரை சாதி பெயரை சொல்லி திட்டியதுடன், தடுக்க வந்த அப்பகுதியில் வசிக்கும் பெண்களையும், ஆபசாமாக பேசி தகராறில் ஈடுபட்டனர்.வாய் தகராறு முற்றி கவுன்சிலர் பிரேமா மற்றும் அவருடைய கணவர் சுரேஷ் ஆகியோர் கோஷ்டிக்கும் வட்டச் செயலாளர் விஷ்ணு கோஷ்டிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலால் இருதரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டு கவுன்சிலரின் கார் உடைக்கப்பட்டது.குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி இடிந்து விழுந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நிவாரணமும் செய்யாமல் அதிகாரப் போட்டியில் திமுகவினர் இடையே மோதல் ஏற்பட்டதை அப்பகுதி மக்கள் திகைப்புடன் பார்த்தனர்.மோதல் சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. மக்கள் பிரச்சனை குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் திமுக வட்டச் செயலாளரும், கவுன்சிலரும் நடு ரோட்டில் மோதிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/VYhz3Xa
via News J : https://ift.tt/VYhz3Xa
👍1
Mediaவிஞ்ஞான ரீதியான ஊழலுக்கு திமுகவே சான்று என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம் சாட்டியுள்ளார்.மதுரையில் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும் மைதானத்தில், மாநாடு குறித்த அதிமுகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு முன்னாள் அமைச்சர்களான செல்லூர் ராஜு, எம்.சி.சம்பத், சி.விஜயபாஸ்கர், வரகூர்.அருணாச்சலம், என்.ஆர்.சிவபதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார், ரத்தினவேல், ரத்ன சபாபதி, சிட்லபாக்கம் ராஜேந்திரன், ஜக்கையன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், வி.பி.பரமசிவம் மற்றும் முன்னாள் எம்.எ.ஏ மணிகண்டன் வளர்மதி, உலக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன், அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் ஆகியோர் தலைமை தாங்கினர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செல்லூர் ராஜூ, விஞ்ஞான ரீதியான ஊழலுக்கு திமுகவே சான்று என குற்றம் சாட்டினார்.அதைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் டாக்டர். சி. விஜயபாஸ்கர், அதிமுக சார்பில் கழக பொதுச்செயலாளர் தலைமையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரையில் நடைபெறும் எழுச்சி மாநாடு வரலாற்று சிறப்புமிக்க, கின்னஸ் சாதனை படைக்கக்கூடிய மாநாடாக அமையும் என தெரிவித்தார்.
via News J : https://ift.tt/Hd2WIs6
via News J : https://ift.tt/Hd2WIs6
Mediaதமிழக அரசு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் அமல்படுத்தப்பட உள்ள ஒரே பொது பாடத்திட்டம் என்ற முடிவு ஒட்டுமொத்த கல்வி திட்டத்தை அழித்துவிடும் என்று கல்வி கூட்டு இயக்கம் எச்சரித்துள்ளது…. விடியா அரசு கொண்டு வரும் பொது பாடத்திட்டத்தை எதிர்பது ஏன்? என்பதை விரிவாக பார்ப்போம்.தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஒரே விதமான பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழக உயர்கல்வித்துறை கடந்த செவ்வாயன்று அறிவித்திருந்தது. உயர்கல்வி மன்றம் உருவாக்கியுள்ள இந்த பொது பாடத்திட்டம் ஒட்டு மொத்த தன்னாட்சி கல்லூரிகளின் உரிமையை பாதிக்கும் செயல் என்று மக்கள் கல்வி கூட்டி இயக்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து, சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் பேசிய மக்கள் கல்வி கூட்டி இயக்கத்தினர், இந்த பொது பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழகத்தில் தன்னாட்சி கல்லூரிகள் இயங்குவதற்கு அர்த்தம் இல்லாமல் மாறிவிடும் என தெரிவித்தனர்.பொதுப் பாடத்திட்டம் என்ற திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாணவ அமைப்புகளுடனோ, பேராசிரியர் குழுக்களிடமோ கருத்து கேட்காமல் அமல்படுத்த முயற்சிக்கும் விடியா அரசு, உயர் கல்வி துறையை பற்றி தெரியாமலேயே உயர்கல்வி துறையை இயக்கி வருகிறது என கல்வி கூட்டியக்கத்தினர் விமர்சித்துள்ளனர்.தமிழ் பாடப்பரிவுகளில், மூத்த எழுத்தாளர்கள் பற்றிய பாடக்குறிப்புகள் இல்லை என்றும், புதுமைப்பித்தன், அழகிரிசாமி, ஜெயகாந்தன் போன்ற தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய பாடங்கள் இல்லாமல், கருணாநிதி போன்ற அரசியல் தலைவர்கள் பற்றிய பாடங்களை வைப்பது ஏன் என்றும் மக்கள் கல்வி கூட்டு இயக்கம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், உயர்கல்வி துறையின் குழப்பமான முடிவு எதிர்காலத்தில் ஒட்டுமொத்த மாணவர் சமூகத்தையே அழித்துவிடும் என்று மக்கள் கல்வி கூட்டு இயக்கம் எச்சரித்துள்ளது.
via News J : https://ift.tt/VZnkOid
via News J : https://ift.tt/VZnkOid
Mediaஅதிமுகவிற்கு என தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது என்றும் அதிமுக எந்த காலத்திலும் யாருக்கும் கொத்தடிமையாக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை என முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.மதுரையில் ஆகஸ்ட் 20-ம் தேதி நடைபெற உள்ள அதிமுகவின் எழுச்சி மாநாட்டிற்கான பணிகளை முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், சி.விஜயபாஸ்கர், செல்லூர் ராஜூ, காமராஜ் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் காமராஜ், அதிமுகவிற்கு என தனி கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளது என்றும் அதிமுக நிமிர்ந்து நிற்கக் கூடிய இயக்கம் என்று பெருமையுடன் கூறினார். மேலும் அதிமுக எந்த காலத்திலும் யாருக்கும் கொத்தடிமையாக இருந்ததும் இல்லை, இருக்கப்போவதும் இல்லை என்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/PEN7xv0
via News J : https://ift.tt/PEN7xv0
Mediaசென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோவுக்கு 40 ரூபாய் உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாகவே காய்கறிகளின் விலையானது ஏற்ற தாழ்வுடன் இருந்து வருகிறது.கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளியின் முதல் ரகம் மற்றும் நவீன் தக்காளி 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 1 கிலோ கத்தரிக்காய் 35 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பீன்ஸ் 90 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், வெங்காயம் 22 ரூபாய்க்கும், முருங்கைகாய் 35 ரூபாய்க்கும், உருளைக்கிளங்கு 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலைவாசியை விடியா திமுக அரசு கட்டுப்படுத்த தவறியதால், காய்கறிகளை வாங்க முடியாமல் இல்லத்தரசிகள் புலம்பி வருகின்றனர்.
via News J : https://ift.tt/xcf6CBF
via News J : https://ift.tt/xcf6CBF
Mediaதமிழக மக்களுக்கு விடியலை தருவதாக சொல்லி ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலின், தற்போது தனக்கு எப்போதுதான் விடியல் கிடைக்குமோ என்று ஏங்கித்தவித்து வருகிறார்… தன் தூக்கத்தை தொலைத்து நிற்கிறார்…. பொழுதுபோய் பொழுதுவந்தால், எந்த அமைச்சர் என்ன பஞ்சாயத்தைக் கூட்டுவாரோ என்று நினைத்து நினைத்தே கவலை ரேகைகள் எல்லாம் எட்டிப்பார்க்கத் தொடங்கி விட்டது இந்த ஆட்சிக்கு…திமுக ஆட்சியில் பாலாறும் தேனாறும் ஓடும் என்றெண்ணிக்கொண்டிருந்த தமிழக மக்களுக்கு கண்ணுக்கெட்டியவரை கானல் நீர்தான்…
ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, செய்ததெல்லாம் பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம், பஸ் டிக்கெட் கட்டணம் என எல்லா கட்டணங்களையும் உயர்த்தி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து கொண்டிருக்கும் மக்களை சுரண்டி சுரண்டி ஓட்டாண்டி ஆக்காத குறையாக வைத்திருக்கிறது இந்த அரசு என்று பொதுமக்களின் புலம்பல்கள் கேட்காத நாளில்லை…இதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், ஜிம், சைக்கிள், சுற்றுப்பயணம் என்று ஜாலியாக ஃபன் பண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் ஒருபுறம் என்றால், கரூர் கம்பெனி, ஈரோட்டு கம்பெனி, அண்ணா நகர் வசூல் கேங் என்று திமுகவின் அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள் இன்னொரு புறம்.. இதுபோதாதென்று அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகள்வேறு என்று எல்லாத்தையும் எழுதினால், முழு நீள மெகா சீரியலே எடுக்கலாம்… அது எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கெல்லாம் பெரிய டஃப் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை..ஓசி பஸ், நீ எஸ்.சி தானேம்மா, எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க, உன் புருஷன் இருக்கானா? இல்லை போயிட்டானா? என்று அமைச்சர் பொன்முடியும், உனக்கும் ஆயிரம் உங்க அம்மாவுக்கும் ஆயிரம், காச வாங்கி புது ஃபோன் வாங்கி யார் கிட்ட வேனா பேசு என்று மூத்த அமைச்சர் துரைமுருகனும் சர்ச்சைகளில் சிக்க,
நீதிமன்றங்களையும், நீதிபதிகளையுமே அவதூறு பேசி மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் மற்றொரு அமைச்சரான எ.வ.வேலு.. டாஸ்மாக் கில் இதுவரை கரூர் கம்பெனி செய்துவந்த வசூல் வேலை, அப்படியே இன்று ஈரோடு கம்பெனிக்கு கைமாற்றி விடப்பட்டிருக்கிறது.. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கட்சிக்காரர்களுக்கு மட்டும்தான் என்றெல்லாம் வரும் செய்திகளால், அடச்சே போயும் போயும் இவங்களுக்கா ஓட்டுப்போட்டோம் என்று ஜனங்களையே எண்ண வைத்திருக்கிறது…இது இப்படி என்றால், ஜெயிலில் களி திங்க வேண்டிய அமைச்சர் ஒருவருக்கு, பைனாப்பிள் கேசரியில் நெய்யை தூக்கலாக விட்டு தினசரி கொடுத்திருக்கிறது அரசு என்று கேள்விப்பட்டு கொதித்துப்போய் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்..கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, கஞ்சா கடத்தல் என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்த்து ஊரே சிரிக்கிறது.. இதுபோன்ற பிரச்சனைகளாலேயேயும், விடியா அரசின் அமைச்சர்கள் தினந்தோறும் செய்யும் அட்ராசிட்டிகளாலுமே திமுக ஆட்சி கலைக்கப்படப்போகிறதா ? இதை ஸ்டாலின் கண்டுகொள்ளாமலே இருப்பது ஏன்? இதனால் தான் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினாரா? அமைச்சர்களின் அட்ராசிட்டிகளால் தனது ஆட்சியையே இழக்கப்போகும் ஸ்டாலின் இனி தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு, தேசிய அரசியலுக்குத்தான் போவார்போல என்று பேசிக்கொள்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
via News J : https://ift.tt/Igmoknw
ஆட்சிக்கு வந்த நாள் முதல் அதை செய்கிறோம், இதை செய்கிறோம் என்று சொல்லிவிட்டு, செய்ததெல்லாம் பால் விலை, சொத்து வரி, மின் கட்டணம், பஸ் டிக்கெட் கட்டணம் என எல்லா கட்டணங்களையும் உயர்த்தி, உழைத்து உழைத்து ஓடாய் தேய்ந்து கொண்டிருக்கும் மக்களை சுரண்டி சுரண்டி ஓட்டாண்டி ஆக்காத குறையாக வைத்திருக்கிறது இந்த அரசு என்று பொதுமக்களின் புலம்பல்கள் கேட்காத நாளில்லை…இதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ளாமல், ஜிம், சைக்கிள், சுற்றுப்பயணம் என்று ஜாலியாக ஃபன் பண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் ஒருபுறம் என்றால், கரூர் கம்பெனி, ஈரோட்டு கம்பெனி, அண்ணா நகர் வசூல் கேங் என்று திமுகவின் அமைச்சர்கள் செய்யும் ஊழல்கள் இன்னொரு புறம்.. இதுபோதாதென்று அமைச்சர்கள் செய்யும் அட்ராசிட்டிகள்வேறு என்று எல்லாத்தையும் எழுதினால், முழு நீள மெகா சீரியலே எடுக்கலாம்… அது எதிர்நீச்சல், பாக்கியலட்சுமி சீரியல்களுக்கெல்லாம் பெரிய டஃப் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை..ஓசி பஸ், நீ எஸ்.சி தானேம்மா, எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சுட்டீங்க, உன் புருஷன் இருக்கானா? இல்லை போயிட்டானா? என்று அமைச்சர் பொன்முடியும், உனக்கும் ஆயிரம் உங்க அம்மாவுக்கும் ஆயிரம், காச வாங்கி புது ஃபோன் வாங்கி யார் கிட்ட வேனா பேசு என்று மூத்த அமைச்சர் துரைமுருகனும் சர்ச்சைகளில் சிக்க,
நீதிமன்றங்களையும், நீதிபதிகளையுமே அவதூறு பேசி மன்னிப்பு கேட்டுக்கொண்டிருக்கிறார் மற்றொரு அமைச்சரான எ.வ.வேலு.. டாஸ்மாக் கில் இதுவரை கரூர் கம்பெனி செய்துவந்த வசூல் வேலை, அப்படியே இன்று ஈரோடு கம்பெனிக்கு கைமாற்றி விடப்பட்டிருக்கிறது.. மகளிருக்கு ஆயிரம் ரூபாய் கட்சிக்காரர்களுக்கு மட்டும்தான் என்றெல்லாம் வரும் செய்திகளால், அடச்சே போயும் போயும் இவங்களுக்கா ஓட்டுப்போட்டோம் என்று ஜனங்களையே எண்ண வைத்திருக்கிறது…இது இப்படி என்றால், ஜெயிலில் களி திங்க வேண்டிய அமைச்சர் ஒருவருக்கு, பைனாப்பிள் கேசரியில் நெய்யை தூக்கலாக விட்டு தினசரி கொடுத்திருக்கிறது அரசு என்று கேள்விப்பட்டு கொதித்துப்போய் இருக்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்..கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, கஞ்சா கடத்தல் என சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது… அமைச்சர்களின் இத்தகைய செயல்பாடுகளைப் பார்த்து ஊரே சிரிக்கிறது.. இதுபோன்ற பிரச்சனைகளாலேயேயும், விடியா அரசின் அமைச்சர்கள் தினந்தோறும் செய்யும் அட்ராசிட்டிகளாலுமே திமுக ஆட்சி கலைக்கப்படப்போகிறதா ? இதை ஸ்டாலின் கண்டுகொள்ளாமலே இருப்பது ஏன்? இதனால் தான் ஆட்சியே கலைந்தாலும் பரவாயில்லை என்று முதல்வர் ஸ்டாலின் பேசினாரா? அமைச்சர்களின் அட்ராசிட்டிகளால் தனது ஆட்சியையே இழக்கப்போகும் ஸ்டாலின் இனி தமிழ்நாட்டை காலி செய்துவிட்டு, தேசிய அரசியலுக்குத்தான் போவார்போல என்று பேசிக்கொள்கிறார்கள் தமிழ்நாட்டு மக்கள்.
via News J : https://ift.tt/Igmoknw
Mediaமணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குரல் கொடுத்தது கூட தெரியாமல், முதல்வர் ஸ்டாலின் உள்ளார் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கடுமையாக சாடியுள்ளார்.மதுரையில் ஆகஸ்டு 20ஆம் தேதி, அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெறும், வலையங்குளம் கருப்பசாமி கோயில் இடத்தை, முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, சி.விஜயபாஸ்கர், மணிகண்டன், எம்எல்ஏ ராஜன்செல்லப்பா ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாடு, விடியா திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டும் மாநாடு என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, மணிப்பூர் விவகாரத்தில் முதல்முதலாக குரல் கொடுத்தவர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தான் எனவும், மணிப்பூர் விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் குரல் கொடுத்தது கூட தெரியாமல், முதல்வர் ஸ்டாலின் உள்ளார் எனவும் சாடினார். அத்துடன் திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் 58 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக வேதனை தெரிவித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கும் ஒரே கட்சி அதிமுக தான் எனவும் பெருமிதம் தெரிவித்தார். மேலும் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காமல் அடிமையாக இருப்பது திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் தான் என விமர்சித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக வேண்டுமென மக்கள் முடிவெடுத்து விட்டதாகவும் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/4mDCb7c
via News J : https://ift.tt/4mDCb7c
Mediaகடலூர் சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத்திற்காக, நெல் வயல்களை அழித்து, சுரங்கத்திலிருந்து வெளியேறும் நீர், பரவனாற்றில் கலக்கும் வகையில் இணைப்பு கால்வாய் வெட்டும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் இருக்கிறது. இதற்காக சேத்தியாதோப்பு, வளையமாதேவி, கற்றாழை, மும்முடி சோழகன் உள்ளிட்ட கிராமங்களின் விவசாய நிலங்கள், என்.எல்.சி நிறுவன விரிவாக்கத்திற்காக கையப்படுத்தப்பட்டன.என்.எல்.சி சுரங்க விரிவாக்கம்: விளைநிலங்களில் இறக்கப்பட்ட இயந்திரங்கள்; மக்கள் எதிர்ப்பால் பரபரப்பு! | Neyveli Lignite Corporation has started cutting canals in ...கடந்த 2006 மற்றும் 2011 திமுக ஆட்சியில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு 3 முதல் 6 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு கொடுக்கப்பட்டது. என்.எல்.சி நிறுவனம் கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விரிவாக்கப்பணிகளை துவங்காததால் விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி செய்து வந்தனர். இதற்கு இடையில்தான் மத்திய அரசானது புதிய குடியமர்வு திட்டத்தில் ஏக்கருக்கு, 25 லட்சம் ரூபாய இழப்பீடு வழங்க வேண்டும் என்று 2021ல் உறுதியளித்தது. அதையடுத்து என்.எல்.சி-க்கு நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் தங்களுக்கும் 25 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பினையும் ஏற்படுத்தி தருமாறும், வாழ்வாதாரத்திற்கு 10 லட்சம் ரூபாய், 10 செண்ட் வீட்டு மனையுடன் கூடிய வீடுகள் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து பல போராட்டங்களையும் விவசாயிகள் நடத்தி வந்தனர்.Appeals filed by Edappadi Palaniswami to be taken up by Madras HC for final hearing on Thursday - The Hinduகையகப்படுத்தப்பட்ட நிலங்களில் விவசாயிகள் சாகுபடி செய்து இருந்தனர். அதில் நெற்கதிர்கள் நன்றாக செழித்து வளர்ந்திருந்தது. இந்த நிலங்களில் என்.எல்.சி நேற்று முந்தினம் கால்வாய் வெட்டும் பணிகளைத் தொடங்கியது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 25க்கும் மேற்பட்ட மண்வெட்டும், ‘பொக்லைன்’ இயந்திரங்களுடன் களமிறங்கியது. அப்போது 500க்கும் மேறப்ட்ட போலிசர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்ட்ங்கள் வலுத்தன. எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் என்.எல்.சி நிர்வாகத்தையும், அதற்கு துணை நிற்கும் விடியா திமுக அரசையும் கண்டிக்கும் வகையில் நேற்றைக்கு அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். மேலும் அதிமுக சார்பாக புவனகிரி எம்.எல்.ஏ அருண்மொழித்தேவன் தொடர்ந்து என்.எல்.சி விவகாரத்தில் விவசாயிகளுக்காக நின்று போராடி வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மாநிலங்களவையில் என்.எல்.சி விவகாரம் குறித்து விவாதம் செய்ய வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
via News J : https://ift.tt/2MENWbD
via News J : https://ift.tt/2MENWbD
Mediaமேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று இரவு ஏழு மணி அளவில் பார்படாஸில் நடைபெற்றது. இந்திய அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தி இந்தப் போட்டியில் வென்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சினை தேர்ந்தடுத்தார்.வெஸ்ட் இண்டீசிற்கு ஒப்பனிங்கே அதிர்ச்சி காத்திருந்தது. பிரண்டன் கிங் மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி மோசமான துவக்கத்தைக் கொடுத்தது. கைல் மேயர்ஸ் இரண்டு ரன்னுக்கு நடையைக் கட்டினார். பின்னர் களமிறங்கிய அதான்ஸ் 22 ரன்கள் அடித்து வெளியேறினார். இவரது விக்கெட்டை முகேஷ் குமார் எடுத்திருந்தார். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் தன்னுடைய முதல் விக்கெட்டை எடுத்தார். பின் பிரண்டன் கிங் 17 ரன்களுக்கு ஷர்துல் தாக்குர் பந்துவீச்சில் வீழ்ந்தார்.India vs West Indies 1st ODI Highlights: Kuldeep, Kishan Shine As India Register Comprehensive Win Over WI | Cricket Newsவிழுந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை எழவிடாமல் மேற்கொண்டு அடிமேல் அடி அடித்தனர் குல்தீப் யாதவும், ஜடேஜாவும். கேப்டன் ஷாய் ஹோப் நன்றாக ஆட்டத்தை துவங்கினார். ஹெட்மயரும் அவருக்கு துணை நின்றார். ஆனால் ஜடேஜா என்கிற சுழல் சுனாமியிடம் சிக்கி ஹெட்மயர் 11 ரன்னில் நடையைக் கட்டினார். 18 வது ஓவரில் ஜடேஜா அடுத்தடுத்து இரண்டு முக்கியமான விக்கெட்டுகளையும் எடுத்துக் கொடுத்தார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தில் பாவெல் 4 ரன்னுக்கும், நான்காவது பந்தில் ஷெப்பர்ட் ரன் எதும் எடுக்காமலும் பெவிலியன் திரும்பினார்கள். அதேபோல குல்தீப் சுழலில் டிரேக்ஸ், காஅரியா, ஷாய் ஹோப் (43 ரன்கள்) என்று நடையைக் கட்டினார்கள். இந்தியா சார்பில் குல்தீப் 4 விக்கெட்டும், ஜடேஜா 3 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தனர். மொத்தத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியானது 114 ரன்னிற்கு ஆல் அவுட் ஆனது.WI vs IND 1st ODI Highlights: Ishan Kishan, Kuldeep Yadav, Ravindra Jadeja guide India to victory - India Todayபின்னர் களம் இறங்கிய இந்திய அணியில் ஷுப்மன் கில்லும், இஷான் கிஷானும் ஆட்டத்தை துவக்கினர். ஆனால் ஷுப்மன் கில் 7 ரன்னில் கிளம்பினார். சூர்யகுமார் 19 ரன்னில் நடையைக் கட்ட, ஹர்திக் பாண்டியா 5 ரன்னில் ரன் அவுட் ஆனார். காரியா பந்தில் சிக்சர் அடித்த இஷான் அரை சதம் அடித்தார். இது இவரது நான்காவது அரைசதம் ஆகும். அடித்த வேகத்தில் 52 ரன்னில் பெவியிலியன் திரும்பினார். பிறகு வந்த ஷர்துல் தாக்குர் 1 ரன்னில் நடையைக் கட்டினார். கடைசியில் ரோகித் சர்மா களமிறங்கி ஒரு பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். இந்திய அணி 118 ரன்கள் அடித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 0-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
via News J : https://ift.tt/sVZXpu7
via News J : https://ift.tt/sVZXpu7
Mediaசட்டவிரோத பணி பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முதல் வகுப்பு கைதி என்பதால் அவருக்கு சிறையில் சகல வசதிகளும் நிறைந்த அறை ஒதுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் மருத்துவர்கள் ஓய்வெடுக்கும் அறையை உடைத்து செந்தில் பாலாஜி தங்குவதற்கு என அறை விசாலாமாக்கப்பட்டுள்ளதாம். அந்த அறையில் ஏசி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் வந்து புதிதாக போடப்பட்டுள்ளது. கட்டில் மெத்தை, டிவி, பீரோ உள்ளிட்ட பொருட்கள் அந்த அறையில் வைக்கப்பட்டுள்ளன.சிறையில் சிறைத் துறை அதிகாரிகள் அவரை அடிக்கடி சந்தித்துப் பேசுவதும், தேவையான காரியங்களை செய்து கொடுப்பதுமாக இருக்கின்றனர் என்ற புகாரும் வெளி வந்துள்ளது. சிறையில் உள்ள செந்தில் பாலாஜிக்கு முதல் வகுப்பு கைதிகளுக்கு வழங்கும் உணவு எனக் கூறிவிட்டு ஏதோ தலை தீபாவளிக்கு வந்த மாப்பிள்ளையை கவனிப்பதுபோல கவனித்து வருகிறது சிறைத்துறை. பிரெட் அல்வா, பைனாப்பிள் கேசரி, போண்டா என செந்தில் பாலாஜியின் விருப்ப உணவுகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. அவர் வெளியே இருந்ததை விட சிறையில் சொகுசாக இருப்பதாக விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர்.கர்நாடகா சிறையில் இருந்த சசிகலாவை அடிக்கடி சிறை அதிகாரி ஒருவர் சந்தித்தது பேசியதும், அவருக்குத் தேவையான பொருட்களை வாங்கிக் கொடுப்பதும் அவரை வெளியே செல்ல அனுமதித்ததும் சிசிடிவி காட்சி மூலமாக காணொளி வெளியாகி பெரும் ஏற்படுத்தியது. இதுபோன்று)) அதே நேரம் புழல் சிறைத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜிக்கு சொகுசு வசதிகளை செய்து கொடுப்பதெல்லாம் சட்ட விதிகளுக்கு எதிரானது என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.இதற்கெல்லாம் துணை போகும் அதிகாரிகள் மீது இன்றைக்கு இல்லை என்றாலும், என்றைக்காவது ஒரு நாள் நடவடிக்கை பாயும். ஆண்டவனையே பார்த்து “நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று வாதாடிய நக்கீரன் வாழ்ந்த இந்த நாட்டில் ஒரு ஊழல் அமைச்சருக்காக சட்டத்தை வளைக்க முற்படுவது அவமானகரமானது என்பதை உணருமா விடியா அரசு?
via News J : https://ift.tt/KWR7zIE
via News J : https://ift.tt/KWR7zIE
Mediaஆமை வேகத்தில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். தோண்டப்பட்டுள்ள குழிகளில் சிறுவர், முதியவர்கள் தவறி விழுந்து விபத்து ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர். மந்தநிலையில் நடைபெறும் பணிகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளின் நிலை இதுதான்… விடியா ஆட்சியில் எந்தப் பணிகளும் வேகமாக முடிவதில்லை என நொந்து கொள்கின்றனர் பொதுமக்கள்…சென்னை மாநகரத்தில் மழை நீர் வடிகால் பணிகள் பல்வேறு இடங்களில் மந்தநிலையில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கோபாலபுரம், ராயப்பேட்டை, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பணிகளை முடிக்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.கோபாலபுரம் அருகே பள்ளிகள் இருக்கக்கூடிய இடத்தில், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தோண்டப்பட்ட கால்வாய் பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளன. இதனால் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் தினமும் உயிரைப் பணயம் வைத்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியபோது மழைக்காலம் துவங்கியுள்ளதால் பணிகளை முடிப்பதில் சிரமம் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மழைக்காலம் வருவதற்கு முன்கூட்டியே பணிகளைத் தொடங்கியிருக்கலாமே என கேள்வி எழுப்பினால் மழுங்க மழுங்க விழிக்கின்றனர் அதிகாரிகள். மூடப்படாத குழிகளில் மழைநீர் தேங்கி, கொசு உற்பத்தி அதிகரித்து, அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் மக்கள் புலம்புகின்றனர்.பொதுமக்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால், பல இடங்களில் அவசர கதியில் பணிகள் நடைபெறுகிறது. உறுதியான முறையில் பணிகளை மேற்கொள்ளாமல் ஏனோ தானோ என பணிகளை முடித்து வருகின்றனர்.கடந்த அதிமுக ஆட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழை வருவதற்கு முன்பாகவே தயார் நிலையில் அனைத்து கால்வாய்களும் சரி செய்யப்பட்டு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஆனால், விடியா ஆட்சியில் எப்பொழுதுமே ஒரு விஷயம் நடந்த
முடிந்த பிறகுதான், அதை பற்றியே யோசிக்க தொடங்குவார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
via News J : https://ift.tt/3Nt0cK2
முடிந்த பிறகுதான், அதை பற்றியே யோசிக்க தொடங்குவார்கள் என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
via News J : https://ift.tt/3Nt0cK2
Mediaவிடியா திமுக சார்பில் நடைபெற்ற வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்தில் இருந்து திமுகவினர் சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்ற காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.இப்படி தப்பியோடுவது ஏதோ திருட்டு கும்பல் அல்ல. திருச்சியில் நடைபெற்ற விடியா திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சிக் கூட்டத்துக்கு வந்த உபிக்கள் தான்.திருச்சியில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தை கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் ஏற்பாடு செய்திருந்தனர். கூட்டத்துக்கு ஆள் சேராததைக் கண்டு பிரியாணி போடுகிறோம் என ஆசை வார்த்தை கூறி உபிக்களை அழைத்து வந்துள்ளனர்.பயிற்சி கூட்டம் எனக் கூட்டி வந்து, திராவிட மாடல் என்றால் என்ன, கலைஞர் சாதனைகள் என்றால் என்ன என ஸ்டாலின் ஆற்றிய உரையைக் கேட்டு அரண்டுபோன முகவர்கள் டயர்டாகி உட்கார்ந்திருந்தனர்.இப்படியே விட்டால் கூட்டத்துக்கு வந்தவர்கள் மயக்கமடைந்து விடுவார்கள் என நினைத்து, மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது தான் தாமதம், ஆளைவிட்டால் போதும் என தப்பித்தோம், பிழைத்தோம் என தெறித்து ஓடியுள்ளனர் உபிக்கள்.கூட்டத்தை விட்டு போகும்போது வந்த வரைக்கும் லாபம் என கூட்டத்திற்கான பந்தலில் கட்டியிருந்த வாழைத்தார், மேடையில் இருந்த அலங்கார பூக்கள் என ஒன்றைக் கூட விட்டு வைக்காமல் கபளீகரம் செய்து கிளம்பியுள்ளனர்.மதிய உணவுக்குப் பிறகு கூட்டம் கலைவதைக் கண்டு கதிகலங்கிய அமைச்சர்கள் வெறும் சேர்களுக்கு எப்படி பயிற்சி கொடுப்பது என குழம்பியபடி மெயின் கேட்டை பூட்டியுள்ளனர்.இருப்பினும் மனம் தளராத உடன்பிறப்புகள், பந்தலைப் பிரித்துக் கொண்டு தப்பித்து, சுவற்றில் ஏணி வைத்து ஏறி உயிரைக் காக்க ஓடியுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.
via News J : https://ift.tt/scrvU0L
via News J : https://ift.tt/scrvU0L
Mediaபார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் கடந்த 10 ஆண்டுகளாக மின்சாதனப் பொருட்களை திறம்பட பழுது நீக்கி வருவது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது. கோவையைச் சேர்ந்த அந்த மாற்றுத்திறனாளி குறித்து பார்ப்போம்.ஒளிமிகுந்த விழிகளுடன் செய்ய வேண்டிய மின்சாதனப் பொருட்கள் பழுதுநீக்கும் தொழிலை, தன் முயற்சியாலும் பயிற்சியாலும், அக ஒளியின் எழுச்சியாலும் செய்து வருகிறார் பார்வைத்திறனற்ற மாற்றுத் திறனாளி இளைஞரான கோவை கவுண்டம்பாளையத்தை சேர்ந்த சுரேஷ்குமார்.2 வயதில் தாக்கிய மூளைக்காய்ச்சலின் பாதிப்பால் 6வயதில் சுரேஷ்குமாரின் பார்வை பறிபோனது. வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் இருந்து, எடுக்கப்பட்ட முயற்சிகளும் சுரேஷ்குமாருக்கு பார்வையை தந்துவிடவில்லை. இதனால் தொண்டாமுத்தூரில் உள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் பயின்று வந்தவர், தந்தை மறைவைத் தொடர்ந்து அங்கு செல்வதும் தடைபட்டது.வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல் மின்சாதனப் பொருட்களை தன்முனைப்பில் பழுது நீக்க முயற்சித்தவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு கோவை சரவணம்பட்டியில் குடும்பத்தோடு குடியேறியிருக்கிறார்கள். தம்பியின் ஆர்வத்தை தட்டிக்கொடுத்த சகோதரி ரேவதி, அந்தப் பகுதியில் உள்ள எலக்ட்ரிக் கடையில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார். கடை உரிமையாளரும், சுரேஷ்குமாருக்கு சிறிது சிறிதாக மின்சாதனப் பொருட்கள் பழுது பார்ப்பதை கற்றுத் தந்துள்ளார்.இப்படியாக 2 கடைகளில் 10 வருடங்களாக இந்த தொழிலைக் கற்றுக் கொண்டவர் தனியாக யாருடைய உதவியும் இல்லாமல் மிக்ஸி, குளிர்சாதன பெட்டி, மின் விசிறி, வாசிங் மெசின், அயன் பாக்ஸ், ரேடியோ உள்ளிட்ட அனைத்து வகையான மின் சாதன
பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்யத் தொடங்கினார்.கடந்த 6 மாதங்களாக, தனது சகோதரியின் ஏற்பாட்டில் கவுண்டம்பாளையத்தில் தனியாகவே மின்சாதன பழுதுநீக்கும் கடையைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், தன்னம்பிக்கை நாயகனாவும் இருந்து வருகிறார்.பயிற்சியின் போதும், தற்போது பணியில் ஈடுபடும்போதும் பலமுறை மின்சாரம் தாக்கியிருப்பதாகவும், ஆனாலும் அச்சமின்றி அதன் மூலம் வயர்களின் கனெக் ஷனை அறிந்து சரி செய்வதாகவும் தெரிவிக்கிறார் சுரேஷ்குமார். மின்சாரத் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடிந்தவரால், குடும்பத்தில் நிலவும் பொருளாதார தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணமுடியவில்லை. கடை, வீடு என வாடகை செலுத்தி வரும் சுரேஷ்குமாரால், பெரியநாயக்கன்பாளையம் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் கட்டமுடியாமல் திணறி வருகிறார். மாவட்ட ஆட்சியரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி புரியுமாறு சுரேஷ்குமார் விடுத்துள்ள கோரிக்கைக்கு விடிவு கிடைக்கட்டும்.
via News J : https://ift.tt/zHWVGND
பொருட்களையும் பழுது பார்க்கும் பணிகளை செய்யத் தொடங்கினார்.கடந்த 6 மாதங்களாக, தனது சகோதரியின் ஏற்பாட்டில் கவுண்டம்பாளையத்தில் தனியாகவே மின்சாதன பழுதுநீக்கும் கடையைத் தொடங்கியிருக்கிறார். அதற்கு நண்பர்களும் உறுதுணையாக இருந்து வருகின்றனர். இதன்மூலம் மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும், தன்னம்பிக்கை நாயகனாவும் இருந்து வருகிறார்.பயிற்சியின் போதும், தற்போது பணியில் ஈடுபடும்போதும் பலமுறை மின்சாரம் தாக்கியிருப்பதாகவும், ஆனாலும் அச்சமின்றி அதன் மூலம் வயர்களின் கனெக் ஷனை அறிந்து சரி செய்வதாகவும் தெரிவிக்கிறார் சுரேஷ்குமார். மின்சாரத் தாக்குதலை தாங்கிக் கொள்ள முடிந்தவரால், குடும்பத்தில் நிலவும் பொருளாதார தட்டுப்பாட்டுக்கு தீர்வு காணமுடியவில்லை. கடை, வீடு என வாடகை செலுத்தி வரும் சுரேஷ்குமாரால், பெரியநாயக்கன்பாளையம் அரசு குடியிருப்பில் வீடு ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான கட்டணம் கட்டமுடியாமல் திணறி வருகிறார். மாவட்ட ஆட்சியரோ அல்லது முதலமைச்சரோ தங்களுக்கு அந்த வீடு கிடைப்பதற்கு உதவி புரியுமாறு சுரேஷ்குமார் விடுத்துள்ள கோரிக்கைக்கு விடிவு கிடைக்கட்டும்.
via News J : https://ift.tt/zHWVGND
👍1
Mediaபொன்னமராவதியில் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தபோது, கூட்டணிக் கட்சியான திமுகவைச் சேர்ந்த மதுப்பிரியர்கள் சாலையில் படுத்தும், கைதட்டியும் உற்சாகமாக ஆதரவு கொடுத்தது, காங்கிரஸை மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்த தூண்டியிருக்கிறது. எங்க ரேஞ்சே வேற என்னும்படி மதுப்பிரியர்கள் அலப்பறை கொடுத்தது குறித்து பார்ப்போம்.மதுப்பிரியர்கள் இருவர் ஏகத்துக்கும் ரகளையில் ஈடுபட்ட இந்த சம்பவம், புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் அரங்கேறி உள்ளது. மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேருந்து நிலையம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்தின்போதுதான் மதுப்பிரியர்களான திமுகவின் உடன்பிறப்புகள் இருவர் இப்படி ஆட்டம் காட்டி உள்ளனர்.சாலையில் இருந்து கண்டன கோஷங்களை உச்சஸ்தானியில் காங்கிரசார் எழுப்பிக் கொண்டிருக்க, அதனை தனக்கான தாலாட்டுப் பாடலாகவே பாவித்து, சாலையையே படுக்கையறையாக மாற்றினார் மதுப்பிரியர் ஒருவர்.இன்னொரு மதுப்பிரியரோ, நானும் இங்கே இருக்கிறேன்… என்னையும் கவனிங்க என்றபடி இஷ்டத்துக்கு கையைத் தட்டியபடி காங்கிரசாரை கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்.ஒருகட்டத்தில் மதுப்பிரியர்களின் அலம்பல் தாங்காமல், சாலையில் படுத்திருந்தவரை, இருவர் தூக்கிச் சென்று மற்றொரு மதுப்பிரியருடன் சேர்த்து வைக்க ஜோடி போட்டு அவர்கள் பண்ணிய அதகளமோ வேறு ரகம்.காங்கிரஸார் கண்டனம் தெரிவித்து நடத்திய போராட்டத்திற்கு மதுப்பிரியர்களான அந்த திமுகவினர் கொடுத்த ஆதரவு அந்தப் பகுதியில் சென்ற வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும், ‘நல்ல கூட்டணிப்பா’ என்று நமுட்டுச் சிரிப்பு சிரிக்க வைத்தது.
via News J : https://ift.tt/LmxVAQt
via News J : https://ift.tt/LmxVAQt
Mediaசாட் ஜிபிடி என்று அனைவராலும் அறியப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தினை ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்துவதற்கான ஆண்ட்ராய்டு பதிப்பினை தற்போது ஓபன் ஏஐ நிறுவனம் வடிவமைத்துள்ளது. அதன்படி இனி ஆண்ட்ராய்டு செல்போன்களிலும் சாட் ஜிபிடி-யினைப் பயன்படுத்தலாம் என்கிற செய்தியை ஓபன் ஏஐ நிறுவனம் செவ்வாய்க் கிழமை இரவு தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது.ஆண்ட்ராய்டுகளில் அறிமுகமாகும் சாட் ஜிபிடி! இந்தியா, வங்கதேசம், அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் சாட் ஜிபிடியின் ஆண்டாராய்டு பதிப்பானது தற்போது கிடைக்கப் பெறுவதாக Open AI நிறுவனம் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்திருந்தது. வரும் வாரங்களில் இந்த பதிப்பு மேலும் பல நாடுகளில் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. முதன் முதலில் ஐஃபோன் பயன்பாட்டாளர்களுக்காக இந்த செயலியானது இரண்டு மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வந்தது. தற்போது இதன் தேவை அறிந்து ஆண்ட்ராய்டு செல்போன்களிலும் இந்த செயலியானது அறிமுகப்படுத்த வேண்டும் என்று பல தரப்பு வாடிக்கையாளர்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இந்த செயலியானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை நிறுவும் விதமாக இந்த செயலியின் ஆண்டாராய்டு பதிப்பு கடந்த ஜூலை 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதனை கூகுள் ப்ளே ஸ்டோரில் பெறுவதற்கான நடைமுறையை கடந்த ஜூலை 25 ஆம் தேதி அறிமுகப்படுத்தியுள்ளது.OpenAI Swings the Doors Wide Open on ChatGPT - IEEE Spectrumஎப்படி தரவிறக்கம் செய்வது? ஆண்ட்ராய்டு வகை செல்போன்களில் கூகுள் ப்ளே ஸ்டோர் சென்று சாட்ஜிபிடி என்று ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும். பின் இலவசமாகவே தரவிறக்கம் செய்து கொள்ளலாம். தரவிறக்கம் செய்த பிறகு வலது புறத்தில் சாட் ஜிபிடி என்றும், கீழே ஓபன் ஏஐ என்றும் இருக்கும். இதன் மூலம் நாம் தரவிறக்கம் செய்தது உண்மையான செயலிதான் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம். பிறகு இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.எல்லா ஆண்ட்ராய்டுகளிலும் செயல்படுமா?The 5 Best Android Phones of 2023 | Reviews by Wirecutter அனைத்து வித ஆண்ட்ராய்டு போன்களிலும் சாட் ஜிபிடி செயலியானது வேலை செய்யுமா? என்றால், இல்லை என்றுதான் சொல்ல முடியும். அதற்கு காரணம் மார்ஷ்மெல்லோ 6.0 வகை ஆண்ட்ராய்டுகளிலும் அதற்கு பிந்தைய ஆண்ட்ராய்டுகளிலும்தான் இந்த சாட் ஜிபிடி செயலியானது செயல்படும். மற்ற எந்த வகை ஆண்ட்ராய்டுகளிலும் இந்த செயலியானது செயல்படாது. மெலும் சாட் ஜிபிடியானது அதன் பயனாளர்களை கண்காணிக்கக் கூடியது. இதனால் பயனாளர்களின் தனிப்பட்ட விஷயங்களும் வெளியே வந்துவிடும் என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பயனர்களின் இருப்பிடத்தையும் முகவரியையும் இதர குறுஞ்செய்திகளையும் சேமித்து வைக்கும் இந்த சாட் ஜிபிடி. ஆனால், ஓபன் ஏஐ பயனர்களின் தகவல்களை ஒருபோதும் பிற நிறுவனங்களிடம் பகிரப்பட மாட்டாது என்று கூறியுள்ளது. அதேபோல தங்களைப் பற்றிய தரவுகளை பயனாளர்கள் நீக்க விரும்பினால் அது போலவே நீக்கிக்கொள்ளலாம் என்று ஓபன் ஏஐ நிறுவனம் கூறியுள்ளது. நவீனங்கள் வளர்ந்து வரும் இத்தகைய காலக்கட்டத்தில் சாட் ஜிபிடி தொழில்நுட்பமானது நம்மவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம் என்று சொல்லலாம். அந்த வகையில் நாம் செய்யக் கூடிய வேலையை இன்னொரு செயலியானது மிகவும் எளிமையாகி கொடுத்துவிட்டால், நமது வேலை மிச்சமல்லவா என்று தோன்றக்கூடும். அந்த ஒரு காரணத்திற்காகத்தான் இந்த சாட் ஜிபிடியை மக்கள் அனைவரும் அதிகம் விரும்புகின்றனர். ஆனால் இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பது வருங்கால தலைமுறைக்கே வெளிச்சம்!
via News J : https://ift.tt/jbqH1GW
via News J : https://ift.tt/jbqH1GW
Mediaசொன்னதைச் செய்வதற்கு வக்கில்லாத முதலமைச்சர், ஓட்டு கேட்டு ஊருக்குள் நுழையக்கூடாது என விவசாய பெண் தொழிலாளர் காட்டமாக தெரிவித்துள்ளார். சின்ன வெங்காயம் அறுவடை செய்த விவசாய தொழிலாளியிடம் திமுக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைத்ததா என கேட்டதற்கு, இங்கு என்ன ஆட்சியா நடக்கிறது என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.;
via News J : https://ift.tt/KpafA3b
via News J : https://ift.tt/KpafA3b
Mediaபண மோசடியில் ஈடுபட்டு சிறை சென்றிருக்கும் செந்தில்பாலாஜியின் நிலை நாம் நன்கு அறிந்த செய்திதான். புழல் சிறைக்கு சென்றிருந்தாலும் எதோ சுவிட்சர்லாந்து டூர் போனது போல சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருக்கிறார். செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபடுவதற்கு முன்பாகவே, ஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது சோதனையில் ஈடுபட வந்த பெண் அதிகாரியை அடித்து கீழே தள்ளினார்கள் கரூர் திமுகவினர். மேலும் ஐடி அதிகாரிகளின் கார் கண்ணாடிகளை உடைத்து சேதம் ஏற்படுத்தினர். அதன்பேரில் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. திமுக குண்டர்கள் மீது இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் அதனை எதிர்த்து கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் போன்றவற்றை தாக்கல் செய்திருந்தனர்.தற்போது இந்த வழக்கு நீண்ட நாட்களாக இழுவையில் இருந்து வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது இந்த ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. அதன்படி, இன்னும் மூன்று நாட்களில் வழக்கில் தொடர்புடையவர்கள் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
via News J : https://ift.tt/ULA5ZaX
via News J : https://ift.tt/ULA5ZaX
👍1
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/stalin.jpg">Media</a>கனவு உலகில் இருக்கும் விடியா திமுக அரசின் பொம்மை முதலமைச்சருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், உலக வரலாற்றில், ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜி கட்சியில் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த கோயபல்ஸ், பொதுக்கூட்டங்களில் வாயைத் திறந்தாலே வண்டிவண்டியாகப் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடக் கூடியவர் என்றும், ஒரே பொய்யை திரும்பத்திரும்பச் சொன்னால் அது உண்மையாகிவிடும் என்ற தத்துவத்தைக் கண்டுபிடித்த அந்த கோயபல்ஸ்-ஐ, நம்மில் யாரும் பார்த்ததில்லை என்றும், அந்த கோயபல்ஸ்-ன் மொத்த உருவமாக, சந்தர்ப்ப வசத்தால் முதலமைச்சரான மு.க. ஸ்டாலினை தமிழக மக்கள் பார்க்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார். திருச்சியில் கடந்த 26ம் தேதி நடைபெற்ற தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில், கொத்தடிமைகளின் தலைவராக விளங்கும் மு.க. ஸ்டாலின், மனம் போன போக்கில் புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார் என்றும், திமுக ஆட்சியின் தவறுகளை எந்தக் கொம்பனாலும் கண்டுபிடிக்க முடியாது என்று மார்தட்டுகிறார் என்றும், திமுக-வினர் தவறுகள் செய்வதில் கொம்பாதி கொம்பர்கள் என்றும், விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதில் சூராதி சூரர்கள் என்றும், இவர்களின் தவறுகளை சாதாரண மக்களும், கொம்பனும், சூரனும் எப்படி கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறி தமிழக மக்கள் சிரிக்கிறார்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் விமர்சித்துள்ளார். எங்களுக்குள் தவறுகள் இருக்கலாம், ஆட்சியில் தவறுகள் இல்லை என்றும், அதிமேதாவிபோல் ஸ்டாலின் ஒப்புதல் வாக்குமூலமும் அளித்திருக்கிறார் என்றும், தவறுகளின் மொத்த உருவமே ஆட்சி செய்யும்போது, அவரது கட்சியினர் சும்மாவா இருப்பார்கள்? தன் கட்சிக்காரர்களை அடக்க; கண்டிக்க வக்கில்லாத ஸ்டாலின், அதே கூட்டத்தில் நம்மீது பாய்ந்து பிராண்டி இருக்கிறார் என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.மத்திய அரசை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி ஏதாவது வாயை திறக்கிறாரா? வழக்குகளை காட்டி மிரட்டி பிரதமர் எடப்பாடியை பணிய வைத்துள்ளார் என்று போகிற போக்கில் சேற்றை வாரிப் பூசும் வேலையை ஸ்டாலின் செய்துள்ளார் என்றும், தி.மு.க. அமைச்சர்கள் உட்பட பலர் சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றத்தில் ஈடுபட்டதாக வழக்குகள் உள்ளதாகவும், இலாக்கா இல்லாத மந்திரியாகவே ஒரு நபர் ஜெயிலில் இருக்கிறார் என்றும், அமலாக்கத்துறை வழக்குகள் மற்றும் ரெய்டுகள் பல திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது உள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார். மேலும், இவர்கள் மாநிலத்தில் ஆளும் கட்சியாகவும், அதே சமயத்தில், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியிலும் பங்கு பெற்றிருந்த போதே, இவர்கள் மீது சிபிஐ வழக்குகள் இருந்ததை திமுக தலைவர் வசதியாக மறந்துவிட்டார் போலும் என்று சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி தலைவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதும், கழக நிர்வாகிகள் மீதும் விடியா திமுக அரசின் ஏவல் துறையால் புனையப்பட்ட, ஜோடிக்கப்பட்ட வழக்குகள்தான் உள்ளனவே தவிர, மத்திய அமலாக்கத் துறை வழக்குகள் ஏதும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். திருவிழா கூட்டத்தில் திருடிக்கொண்டு ஓடுபவன், திருடன் திருடன் என்று கத்திக்கொண்டே ஓடுவான்… அதுபோல் கடந்த 26ம் தேதி திமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மேல் உள்ள, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் பணப் பரிமாற்றம் பற்றி விசாரிக்கும் அமலாக்கத் துறையின் வழக்குகளை மறைக்க, எந்தவித அடிப்படை ஆதாரமுமின்றி அதிமுகவை பற்றி அவதூறாகக் கூறியிருப்பதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.அதிமுக மீது தொடர்ந்து அவதூறு பரப்பி, தரம் தாழ்ந்த அரசியல் செய்யும் விடியா அரசின் முதலமைச்சருக்கு, வரும் காலத்தில் தமிழக மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும், விளம்பரத்தால் உயர்ந்தவன் வாழ்க்கை நிலைக்காது’ என்ற புரட்சித் தலைவர் வாக்கை, தற்போதைய நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நினைவூட்ட விரும்புகிறேன் என்றும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். மேலும், மணிப்பூர் சம்பவம் குறித்து தான் ஏதும் பேசவில்லை என்று நிர்வாகத் திறனற்ற முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காடிட்யுள்ள எதிர்க்கட்சி தலைவர், மணிப்பூர் கலவரம் துவங்கிய உடனேயே, அதனைக் கண்டித்தும், கலவரத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றும், அங்குள்ள தமிழர்களை பாதுகாப்பாகக் காப்பாற்ற வேண்டும் என்றும், அதிமுக சார்பில் கடந்த மே 5ம் தேதி அறிக்கை மூலம் விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய கவனத்தை ஈர்த்திருந்தேன் என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குறிப்பாக, மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவம் குறித்து…
Mediaபயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா??? என்று NLCக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தியினை தெரிவித்துள்ளது.நிலத்தின் மதிப்பை விட 3 மடங்கு அதிக இழப்பீடு கொடுக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன்பாக கையகப்படுத்தப்பட்ட நிலம். தற்போது நிலத்தை சுவாதீனம் எடுக்க உரிமையாளர்கள் எதிர்க்கின்றனர் என்று என்.எல்.சி சார்பாக உயர்நீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது. நிலத்தில் புல்டோசர்களை விட்டு கால்வாய் தோண்டும் பணிகளை பார்க்கும்போது அழுகை வந்ததாக நீதிபதி எம்.தண்டபாணி வேதனை தெரிவித்தார். வாடிய பயிரைப் கண்டபோதெல்லாம் வாடினேன் எனக் கூறிய வள்ளலார் பிறந்த ஊருக்கு அருகிலே பயிர்கள் அழிக்கப்படுவதை காண முடியவில்லை என்று நீதிபதி வேதனை தெரிவித்திருந்தார். நிலத்தை எடுப்பதற்கு ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், பயிர்கள் அழிக்கப்படுவதை ஏற்க முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்தார்.நாம் உயிருடன் இருக்கும் காலத்திலேயே மிகப்பெரிய பஞ்சத்தை சந்திக்க போகிறோம். அரிசிக்கும் காய்கறிக்கும் அடித்துக் கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்கத் தான் போகிறோம். நிலக்கரி பயன்படாது. என்.எல்.சி. கோபித்து கொண்டாலும் பரவாயில்லை, இதுதான் என் கருத்து என்று தன்னுடைய கருத்தினை தெரிவித்தார். பூமியைத் தோண்டி தோண்டி நிலக்கரி, மீத்தேன் என ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டே இருந்தால், அந்த வெற்றிடத்தை எப்படி நிரப்புவது என்பதுதான் இயற்கை ஆர்வலர்களின் பெரும் கவலையாக உள்ளது என்றும் மேற்கு தொடர்ச்சி மலையிலும் கை வைத்தால் தமிழகத்துக்கு கிடைக்கக் கூடிய பருவ மழை சுத்தமாக நின்றுவிடும் என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். ஒரு ஏக்கர் நிலத்தை வைத்தே மகாராஜா போல் வாழ்ந்த ஒரு விவசாயி, பல மடங்கு பணம் கொடுத்தாலும் மற்றவர்களிடம் வேலைபார்க்க மனமில்லாமல், வெளியூர்களுக்கு சென்றுவிடுகிறார் என்றும் அவர் வேதனை பொங்க தெரிவித்தார்.
via News J : https://ift.tt/tYwslk5
via News J : https://ift.tt/tYwslk5
Mediaகடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள என்.எல்.சி நிலக்கரி சுரங்க நிறுவனத்தின் 2வது சுரங்கத்தின் விரிவாக்கப் பணிகளுக்காக கால்வாய் அமைக்கும் பணிகள், விளை நிலங்களுக்கு நடுவே நடைபெறுவதால் விவசாயிகள் மத்தியில் பெரும் கவலையையும், மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள், மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி போதிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும், வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்க வேண்டும், கையகப்படுத்தப்படும் நிலங்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரத்திற்கு என்.எல்.சி நிர்வாகம் உதவ வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பல முறை போராட்டங்களில் ஈடுபட்டனர்.கடந்த காலங்களில், நெய்வேலியில் விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக பல போராட்டங்களை நடத்திய நிலையில், தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி என்.எல்.சி.நிர்வாகத்தை கண்டித்தும் அதற்கு துணை நிற்கும் திமுக அரசையும் கடுமையாக கண்டித்து இருக்கிறார். மேலும், அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் தமிழக சட்டத்துறை அமைச்சருமான சி.வி சண்முகம், மாநிலங்களவையில் என்.எல்.சி நிர்வாகம் விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று நோட்டீஸ் கொடுத்திருக்கிறார்.Mediaஇந்த நிலையில், விடியா திமுக அரசு மீதும் என்.எல்.சி.நிர்வாகத்தின் மீதும் கடும் அதிருப்தியில் இருக்கும் விவசாயிகள் இனி எப்படி இவர்களை நம்பி இருப்பது என்று தலையில் அடித்துக்கொள்கின்றனர்… ஆனால் முதல்வர் ஸ்டாலினோ இதுவரை வாய் திறக்காமல் மௌனித்து கிடப்பதால், விவசாயிகள் என்.எல்.சி நிர்வாகத்தையும் திமுக அரசையும் எதிர்த்து களத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்…விவசாயிகளுக்காக நாங்கள் இதை செய்தோம், அதை செய்தோம் என்று திருச்சியில் நீட்டி முழங்கிய ஸ்டாலின், என்.எல்.சி நிர்வாகத்திற்கு துணையாக காவல்துறையை அனுப்பி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கி இருப்பது ஏன் என்ற கேள்வியே தற்போது அனைவரது மத்தியிலும் எழுந்திருக்கிறது….கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின்போது நாங்கள் நாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைப்போம் என்று பேசிய ஸ்டாலின், இன்றைக்கு என்.எல்.சி விவகாரம் குறித்து அவரது கட்சி எம்.பிக்களை வைத்து ஏன் எந்த நடவடிக்கை எடுக்க முனைப்பு காட்டவில்லை? மணிப்பூர் விவகாரத்திற்காக போராடும் திமுகவின் எம்பிக்கள் நம்ம ஊர் பிரச்சனையைப் பற்றி ஏன் வாய் திறக்க வில்லை?விவசாயிகளின் வயிற்றில் அடித்து நிலங்களை தோண்டும் என்.எல்.சி. நிர்வாகத்தை தடுப்பது யார்?இனியாவது விவசாயிகளின் கூக்குரலுக்கு திமுக அரசு செவி சாய்க்குமா?விவசாயிகளின் வயிற்றில் அடித்து நிலங்களை தோண்டும் என்.எல்.சி. நிர்வாகத்தை தடுப்பது யார்? இனியாவது விவசாயிகளின் கூக்குரலுக்கு திமுக அரசு செவி சாய்க்குமா? விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டிய திமுக எம்.பிக்கள் 39 பேர் வாய் மூடி மௌனித்து இருப்பது ஏன்? என பல்வேறு கேள்விகளை மக்கள் முன்வைக்கின்றனர்.
via News J : https://ift.tt/mGsJi5R
via News J : https://ift.tt/mGsJi5R