News J
598 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaசாமானியர்களுக்கான அரசு இது….திராவிட மாடல் அரசு இது….ஓட்டு போட்டவங்களுக்கும், ஓட்டு போடாதவங்களுக்கும் சேர்த்து தான் நாங்க நல்ல ஆட்சியை தருகிறோம்….தமிழகத்தை அனைத்து துறைகளிலும் நம்பர் ஒன் மாநிலமாக மாற்றி காட்டுவோம் என்றெல்லாம் ஏக வசனம் பேசிவிட்டு ஆட்சிக்கு வந்த முதல்வர் ஸ்டாலினின் இரண்டரை ஆண்டுகால அவல ஆட்சியின் சாட்சியாக அமைந்திருக்கிறது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பதில்.தேசிய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் பதிலளித்து இருக்கிறார். தமிழகம் இதுவரை மொத்தமாக பெற்ற கடன் தொகை 7 லட்சத்து 53 ஆயிரத்து 860 கோடி ரூபாய் என்றும், அதில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 3 லட்சம் கோடி ரூபாய் வரை கடன் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து இருக்கிறார்.மக்கள் நலத்திட்டங்கள் என்கிற பெயரில் கடன்களை பெற்றிருக்கும் திமுக அரசு, உண்மையில் மக்கள் நலத்திட்டங்களுக்காகத் தான் அவற்றை பயன்படுத்தியிருக்கிறதா என்ற சந்தேகம் பொதுமக்களிடையே எழுந்திருக்கிறது.ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அப்படி என்ன திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறது இந்த விடியா அரசு?….. அதுவும் மக்கள் நலத்திட்டங்கள்?பால் கட்டண உயர்வு, மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, சொத்து வரி உயர்வு, என தொட்டதையெல்லாம் உயர்த்தி சாமானிய மக்களை வஞ்சித்த ஆளும் விடியா திமுக அரசு இதுவரை வாங்கிய கடனில் என்ன உபயோகமாக செய்தது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.திமுக ஆட்சிக்கு வந்தது முதல், முதல்வர் மகனும், மருமகனும் 30 ஆயிரம் கோடி சொத்து சேர்த்ததாக மாஜி நிதியமைச்சர் பிடிஆர் தெரிவித்த நிலையில், அமலாக்கத்துறையின் கவனம் திமுக தலைவர் குடும்பத்தின் மீதும், அமைச்சர்கள் மீதும் திரும்பிய பின், முதலாவதாக செந்தில் பாலாஜியும், இரண்டாவதாக அமைச்சர் பொன்முடியும் அவரது மகனும் சிக்க இந்த 3 லட்சம் கோடி எல்லாம் எங்கே போயிருக்கும் என்கிற சந்தேகம் எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கிறது….நாங்கள் ஆட்சிக்கு வந்தால், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் காட்டுவோம், தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம், தமிழகத்தை சொர்க்க பூமி போல மாற்றுவோம் என்று ரியல்எஸ்டேட் விளம்பரங்கள் போல வாக்குறுதிகளை சகட்டுமேனிக்கு அள்ளிவிட்ட திமுகவின் வாக்குறுதிகள் தற்போது காற்றில் பறந்து கொண்டிருக்கிறது…..கடன் வாங்குவதில் தமிழகத்தை நம்பர் 1 மாநிலமாக ஸ்டாலின் மாற்றி இருப்பதன் பின்னணி என்ன? தமிழ்நாட்டு மக்களை கடன்காரர்களாக்குவது தான் ஸ்டாலின் ஆட்சியின் சாதனையா? இன்னும் மீதமுள்ள இரண்டரை ஆண்டுகளில் எத்தனை லட்சம் கோடிகளை அரசு கடனாக வாங்கப்போகிறது என்பதே மக்கள் மத்தியில் கேள்வியாக எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/LKpOyPs
Mediaவிமானங்களில் உயிரி எரிபொருட்கள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக விமான நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் அரசு சலுகைகளை வழங்குகிறது.தற்போதைய உலக சூழலை பொறுத்தவரை பூமியானது வெப்பமயமாவது என்பது மிகவும் சிக்கலான ஒன்றுதான். இதனால் பூமியின் பல்லுயிர்ப்புத் தன்மையானது பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. படுமை இல்ல வாயுக்களின் உமிழ்வை ஏறக்குறைய பூஜ்ஜிய நிலைக்கு குறைப்பதற்கான வேலையை நாம் விரைந்து பார்க்க வேண்டிய நிலையில் உள்ளோம். கார்பன் உமிழ்வால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளை உணர்ந்து உலக நாடுகள் இன்று புதுப்பிக்கத்தாக எரிசக்தி ஆற்றல் வளங்களை முன்வந்து உற்பத்தி செய்ய ஆயத்தமாகி வருகின்றனர். மேலும் அவற்றின் உற்பத்தியினை அதிகரிக்கும் பொருட்டு தேவையான நடவடிக்கைகளையும் செய்து வருகின்றனர்.Aviation Industry: Singapore Airlines commences flights with blended Sustainable Aviation Fuel as part of pilot programme in Singapore, ET TravelWorldஇந்த நிலையில் சிங்கப்பூர் விமான போக்குரத்து ஆணையமானது கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தும் வகையில் உயிரி எரிபொருள் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் வையில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, உயிரி எரிபொருளை அதிகளவில் பயன்படுத்தும் விமான் சேவை நிறுவனங்களுக்கு சிங்கப்பூர் விமானப் போக்குவரத்து ஆணையம் ஊக்குவிப்பு சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.அரசு, விமான நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்டவை 2050-க்குள் கார்பன் உமிழ்வை பூஜ்யம் நிலைக்கு குறைப்பதற்கு உறுதியேற்று இருக்கின்றன. அது சாத்தியப்பட வேண்டும் எனில், நிலையான உயிரி பொருள் விநியோகம் சுமார் 1600 மடங்கு அதிகரிக்க்ப்பட வேண்டும் என்பதையும் மதிப்பீடுகள் சுட்டிக் காட்டுகின்றன.அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இதற்கான முன்னேற்றம் வலுவான நிலையில் இருந்தாலும், தென்கிழக்கு ஆசியா அடுத்த வரும் தசாப்தங்களில் விமானப் பயணத்துக்கான முக்கிய மையமாகத் திகழும். இந்த பிராந்தியத்தில் தலைமைப் பொறுப்பை ஏற்று செயல்படுவதற்கு சிங்கப்பூர் சிறந்த நிலையில் உள்ளது என்று கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக உலக அளவில் ஜீரோ கார்பன் உமிழ்வை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில் சிங்கப்பூரின் இத்தகைய நடவடிக்கை உலக நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்று சுற்றுச்சூழலியளார்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/z5Mt8vD
Mediaவிடியா திமுக ஆட்சியில் அமைச்சர்கள் ஆய்வு மேற்கொள்ளும் நிகழ்ச்சிகளை அரசு அதிகாரிகள் புறக்கணிப்பது வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. அந்தப் பட்டியலில் தற்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழியும் இணைந்துள்ளார்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவியர் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியில் உணவு, அடிப்படை வசதிகளில் குறைபாடு இருப்பதாக மாணவிகள் குற்றம்சாட்டியிருந்தனர். இந்த நிலையில் தமிழக ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி, திண்டிவனம் அரசு கலைக் கல்லூரி மாணவியர் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார்.அந்த ஆய்வின் போது திமுக அமைச்சரை சூழ்ந்துகொண்ட மாணவிகள் விடுதியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டினர். இதனால் அமைச்சர் கயல்விழி பதில் சொல்ல முடியாமல் திணறினார்.இது ஒருபுறம் இருக்க, அமைச்சர் ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், சார் ஆட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தும் ஆய்வு நிகழ்ச்சிக்கு வராமல் அதிகாரிகள் புறக்கணித்துள்ளனர்.அமைச்சர் கயல்விழி ஆய்வு செய்தபோது பெயரளவிற்கு நின்றிருந்த அமைச்சர் செஞ்சி மஸ்தானும், ஆய்வு முடிவதற்கு முன்பாகவே பாதியிலேயே கழன்று கொண்டார். இதனால் உடன் பிறப்புகள் செய்வதறியாது தங்களுக்குள்ளேயே புலம்பிக்கொண்டனர்.திராவிட மாடல் ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சருக்கே இந்த நிலை என்றால் அடித்தட்டு மக்களை அதிகாரிகள் எப்படி கண்டுகொள்வார்கள்? என பல்வேறு தரப்பினும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ((மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு திமுக அரசு எப்போதும் துணை நிற்கும் என பெருமை பேசும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை போகிறார்? என்பதே கேள்வியாக உள்ளது.

via News J : https://ift.tt/gmoanqD
Mediaசந்திரயான் – 3 விண்கலம் தனது இறுதி சுற்றுவட்டப் பாதையை வெற்றிகரமாக அடைந்திருப்பதாகவும், ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்க இருப்பதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான் -3 விண்கலம் எல்விஎம் 3 ராக்கெட் மூலம் கடந்த 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணி அளவில் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்ட 16வது நிமிடத்தில் சந்திரயான் – 3 விண்கலம் புவியின் முதல் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது.சந்திரயான் 3.. ஜூலை 14ல் விண்ணில் பாய்கிறது.. இஸ்ரோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Chandrayaan-3 will launch on July 14, announces Isro - Tamil Oneindiaபின்னர் சந்திரயான் -3 விண்கலம் படிப்படியாக அடுத்தடுத்து சுற்றுவட்டப் பாதைகளில் நிலை நிறுத்தப்பட்டது. இந்தநிலையில், சந்திரயான் 3 விண்கலம் செவ்வாய்க்கிழமை மதியம் 2.40 மணியளவில் தனது இறுதி சுற்று வட்டப் பாதையான ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு வெற்றிகரமாக உயர்ந்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சந்திரயான் – 3 விண்கலம் சுமார் 40 நாட்கள் பயணித்து நிலவுக்கு சென்றடைய உள்ளது. குறைவான எரிபொருளை பயன்படுத்தி பூமி மற்றும் நிலவின் ஈர்ப்பு விசையை கொண்டு செயல்படும் சந்திராயன் -3 விண்கலம், சுமார் 1 லட்சத்து 27 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் பூமியின் ஐந்தாவது சுற்றுவட்ட பாதையில் சுற்றி வருகிறது.இந்த விண்கலம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி நிலவை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் என்றும், ஆகஸ்ட் 5 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்ட பாதையை சென்றடைந்து ஆகஸ்ட் 20 ஆம் தேதி வரை தனது பயணத்தை தொடரும் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி சந்திரயான் – 3 விண்கலம் நிலவின் மேற்பரப்பிற்கு சென்றடையும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. உலகமே உற்று நோக்கி வரும் இந்தியாவின் கனவு திட்டமான சந்திரயான் – 3 ஐந்தாவது சுற்றுப்பாதைக்கு உயர்ந்திருப்பதால் விஞ்ஞானிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

via News J : https://ift.tt/3v2cwP1
Mediaசென்னையில் ஜெல்மட் அணியாத வாகன ஓட்டிகளிடம் உறுதிமொழிப் பத்திரம் வாங்கும் புதிய விழிப்புணர்வு பிரச்சாரமானது தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய திட்டத்தை சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் நேற்று தொடங்கி வைத்தார்.சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு!சென்னை காவல் ஆணையராக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் | Sandeep Roy Rathore has been appointed as the chennai Commissioner - hindutamil.inசென்னையில் போக்குவரத்து விதிமீறல்கள் மூலம் கடந்த ஏழு மாதங்களில் கிட்டத்தட்ட 60 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூல் ஆகியுள்ளது. ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாய் அபராதத்தொகையும், மது போதையில் வாகனம் ஓட்டினால் பத்தாயிரம் ரூபாய் அபராதத்தொகையும் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அபராதத் தொகையினை வசூலிப்பதைக் காட்டிலும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணர்வே முதலில் அவசியம். எனவே விழிப்புணர்வு பிரச்சாரத்தினை அதிகரிக்கும்படி போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் விழிப்புணர்வு பிரச்சாரம் தீவிரமாக தொடங்கப்பட்டு வருகிறது. வருகிற 31-ஆம் தேதி வரையில் மெரினா உழைப்பாளர் சிலை சந்திப்பு, மயிலாப்பூர் லஸ் சந்திப்பு, செண்டிரல் லைட் பாயிண்ட் சந்திப்பு, அண்ணா நகர் ரவுண்டானா சந்திப்பு ஆகிய இடங்களில் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. சாலை பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி நன்கு பயிற்சி பெற்ற 120 பள்ளி மாணவ- மாணவிகள் இந்த பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.உறுதிமொழிப் பத்திரம்..!இந்த புதிய விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கவிழா நேற்று சென்னை வேப்பரியில் நடைபெற்றது. இதில் சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் கலந்துகொண்டார். அப்போது அந்த வழியாக ஹெல்மெட் இல்லாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட்டது. மேலும் அவர்களிடம் “இனிமேல் ஹெல்மெட் அணிவேன்” என்று உறுதிமொழி பத்திரம் வாங்கப்பட்டது. பின்னால் ஹெல்மெட் அணியாமல் வந்த பெண்கள் உள்ளிட்டோருக்கும் இலவச ஹெல்மெட் வழங்கப்பட்டது.தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த ஆண்டில் அதிக சாலை விபத்துகள் ஏற்பட்ட மாநிலங்களில் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட பதினாறாயிரத்திற்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் நடந்துள்ளது. இதற்கு விடியா திமுக அரசும், போக்குவரத்து துறை மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையும் எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

via News J : https://ift.tt/4uRULW9
Mediaதொடர் மழை எதிரொலியாக சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து கிலோவுக்கு 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.கடந்த ஒரு மாதமாக வரத்து குறைவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தக்காளி விலை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் மொத்த விற்பனையில் தக்காளி விலை மீண்டும் அதிகரித்து கிலோவுக்கு 110 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிலோ கத்தரிக்காய் 50 ரூபாய்க்கும், கேரட் 70 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 140 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 30 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 60 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 35 ரூபாய்க்கும் மற்றும் சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

via News J : https://ift.tt/LZ9kgxv
Mediaதிமுக தலைமைப் பற்றியும் அமைச்சர்கள் பற்றியும் கோவை மாவட்ட திமுக செயலர் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி கட்சி வட்டாரத்தில் ஒரு கிலியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்ட திமுக செயலாளரான கார்த்திக், கடந்த ஐந்தாண்டில் கோவை மாவட்டத்திலிருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே எம்.எல்.ஏ ஆவார்.கடுப்பான திமுக செயலர்..!இந்த தேர்தலிலும் அவருக்கு வாய்ப்பு தரப்பட்டிருந்தது. ஆனால் அவர் படுதோல்வி அடைந்தார். முக்கியமாக கோயமுத்தூரை எடுத்துக்கொண்டால் திமுக தான் போட்டியிட்ட பத்துத் தொகுதியிலும் படுதோல்வி அடைந்தது. கோயமுத்தூர் என்பது அதிமுகவின் எஃகு கோட்டை. அப்படி அதிமுகவுடன் மோதி படுதோல்வியை திமுக கடந்த தேர்தலில் சந்தித்தது. இதனால் மாவட்ட் நிர்வாகிகள் பலர் மாற்றப்பட்டனர். ஆனால் தோற்றாலும் மாற்றப்படதா ஒரே ஆள் கார்த்திக் தான். இவரது மனைவியையும் அரசியலில் இறக்கியிருந்தார் கார்த்திக். அவரது மனைவி இளஞ்செல்வி கோவை மாவட்டம் கிழக்கு மண்டலத் தலைவராக உள்ளார். அவருக்குத் தான் இந்த முறை கோவை மாவட்டம் மேயர் பதவி என்று பேசப்பட்டு வந்த நிலையில் கல்பனா ஆனந்த குமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.அதனால் வன்கடுப்பில் இருந்த கார்த்திக் அவ்வப்போது கட்சித் தலைமையையும் மாவட்ட பொறுப்பு அமைச்சரையும் திட்டி மற்றும் விமர்சனம் செய்து வந்துகொண்டிருந்தார். அது பெரும்பாலும் வெளியில் வராமல் இருந்தது. தற்போது அவர் மற்றொருவருடன் தொலைபெசியில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத் தீயாகப் பரவி வருகிறது.கிழித்தெடுத்த திமுக மாவட்ட செயலர்..!Karthik Mohan (@Karthikmohandmk) / Twitterஒரு வீட்டுக்கு பத்து வாசல் இருக்கக்கூடாது. அரசியலில் முதல்வர் ஸ்டாலின் தான் முடிவிடுப்பவராக இருக்க வேண்டும். அதிமுகவைப் பொறுத்தவரையும் அங்கு ஒருவர்தான் முடிவெடுப்பார். எந்த முடிவாக இருந்தாலும் ஜெயலலிதாதான் முடிவெடுப்பார். தவறு செய்திருந்தால் அதிரடியாக நூறுபேரை கட்சியிலிருந்து நீக்குவார். அந்த அறிவிப்பும் அவர் பெயரில்தான் வரும். ஆனால் இங்கு அப்படி இல்லை. அண்ணாநகர் கார்த்திக் இருக்காரே.. அவருடைய வீட்டில் காலையில் இருநூறு பேர் கீழ நிப்பானுக.. மேல மீட்டிங்ல இருக்கார்னு சொல்வாங்க.. பாத்தா எக்சர்சைஸ் பண்ணிட்டுருப்பாரு. எந்திக்கிறதே எட்டரை மணிக்குதான்..எக்சர்சைஸ் பத்தரை மணி வரை பண்ணுவாரு.. பிசினஸ் பண்ற ஆளுங்க மட்டும் மேல போய் எக்சர்சைஆச் பண்ணப் பண்ண டெண்டர் விஷயமாகப் பேசுவார். அதற்கு பின் குளிச்சு கிளம்பி 11:30 மணிக்கு தான் கீழயே வருவாரு.. அவர் ஒரு பவர் சென்டர்.Karthik Mohan (@Karthikmohandmk) / Twitterஅண்ணா நகர் கார்த்திக்கை கழுவி ஊத்திவிட்டு மகேஷ் பொய்யாமொழிக்கு பேச்சு திரும்பியது. மகேஷ் பொய்யாமொழி திருச்சியில எங்க தங்கியிருக்காருனு கட்சிக்காரனுக்கே தெரியாது. நேருவ கூட பாத்துரலாம் மகேஷ பாக்குறது கஷ்டம். இதெல்லாம் சரி செய்யணும். பொதுமக்கள் இதை கூர்ந்து கவனிக்கின்றனர். கோவையில் திமுக செல்வாக்கோட இருக்கணும்-னா கோவையை ஆண் மேயரிடம் கொடுத்திருக்க வேண்டும். அப்ப தான் கட்சி நிக்கும். கட்சியை அப்பதான் டெவலப் பண்ண முடியும். அதுக்கேத்த மாதிரி லிமிட்டேசன் பண்ணிருக்கணும். கீழ இருக்குற, 100 கவுன்சிலரை வச்சு டெவலப் பண்ண முடியாது.கோவைல திமுக நிக்கனும்னா..!ஆட்சிக்கு வந்த உடனே முதல்வர் இதை ஒப்புக்கொண்டார். மாவட்ட செயலர்களெல்லாம் லிஸ்ட் கொடுங்க என்று கேட்டார். நேரு தான் அதை மாற்றினார். நேரு எப்போதும் நுனிப்புல்தான் மேய்வார். எல்லா தோட்டத்துலயும் மேய்ஞ்சிட்டே ஓடிட்டி இருப்பாரு. அவர், “ப்ராப்பரா” பண்ணலை. அப்பிடிப் பண்ணிருந்தா நாலு மாசத்துடல், “டீலிமிட்டேஷன் முடிஞ்சிருக்கும்.  மேயரா என் மனைவி வரணும்னு இல்லை. யார் வேளும்னாலும் வரலாம்.. ஆனா கோயம்புத்தூர் மாதிரி ஒரு ஊர்ல பெண் மேயரை வச்சு கட்சியில என்ன சாதிச்சிர முடியும்னு கேக்குறேன். பத்து எம்.எல்.ஏ-விற்கு பதில் கொடுக்கணும். ஒரு பெண் மேயரால 10 எம்.எல்.ஏவுக்கு எப்படி  பதில் கொடுக்க முடியும்.. அவர்களை எப்படி பேஸ் பண்ண முடியும்?என்ன தான் நாங்க பக்கத்துல இருந்தாலும், பேச முடியாது. பேசினால், “இவர் மேயரா அவர் மேயரா”ன்னு கிழிப்பாங்க. பணம் மட்டுமே குறிக்கோளாக இருக்கக் கூடாது.. அப்பிடி இருந்தா கட்சியை வளர்க்கெவே முடியாது. இவ்வாறு ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.

via News J : https://ift.tt/wnkpfCv
👍1
Mediaமாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் அரசு பேருந்துகளா இல்லை தனியார்
பேருந்துகளா என்ற சந்தேகம் அளிக்கும் வகையில் விடியா திமுக அரசின்
போக்குவரத்து துறை செயல்பட்டு வருகிறது சென்னை முழுவதும் மாநகர போக்குவரத்துகழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள்விளம்பரம் செய்துள்ளன ஒரு புறம் நகை கடன் கொடுக்கும் நிறுவனம் மாநகரப்பேருந்துகள் முழுவதும் விளம்பரம் செய்துள்ளன இது மாநகரப் பேருந்தா அல்லதுவிளம்பரப் பேருந்தா மக்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.அரசு பேருந்துகளில் புகைப்படக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களும்
மதுப்பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு வாசகங்களும் செய்யப்படுவது வழக்கம்
ஆனால் மாநகரப் போக்குவரத்து கழகப் பேருந்துகளில் மது குடிப்பதை அதிகரிக்கும்
வகையில் தற்போது விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளன.எஸ்என்ஜே என்ற மதுபான நிறுவனத்தின் விளம்பரங்கள் மாநகரப் போக்குவரத்துக் கழகபேருந்துகளில் ஒட்டப்பட்டுள்ளன தனியார் நிறுவனங்களே செய்யாத விளம்பரத்தை அரசு மாநகரப் போக்குவரத்து கழகங்களில் செய்யப்பட்டுள்ளது சென்னையில் உள்ளமூவாயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளில் பிரபல மதுபான நிறுவனமான எஸ் எம் ஜி நிறுவனத்தின் பீர் மற்றும் பிராந்தி விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மாணவ சமுதாயம் இளைஞர் சமுதாயம் மதுபோதையால் சிக்கி சீரழிந்து வரும் நிலையில் மதுபானத்தை குடிக்க வேண்டும் என்றஎண்ணத்தை ஊக்குவிக்கும் வகையில் விடியா திமுக அரசின் போக்குவரத்து துறைமாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இளைஞர் சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் விளம்பரம் செய்துள்ளது.மாணவர்கள் இளைஞர்களுக்கு நல்லொழுக்கத்தை சொல்லும் வகையில் எவ்வளவு வாசகங்கள்இருந்தாலும் அவர்களின் கண்களை உறுத்தும் வகையில் இந்த மதுபான விளம்பரங்கள் இருந்து வருவது எதிர்காலத்தில் மாணவ சமுதாயத்தை மது போதையில் தள்ளாட வைக்கும்வகையில் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.ஏற்கனவே மாநகரப் போக்குவரத்து கழகங்களில் தனியார் ஓட்டுநர்கள் தனியார்
பேருந்துகளை இயக்க முடிவெடுத்து நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் போக்குவரத்து
துறை விளம்பரங்கள் என்ற பெயரில் நாட்டை சீரழிக்கும் வகையில் மதுபான
நிறுவனங்களின் விளம்பரங்களை போட்டு காசுக்காக என்ன விளம்பரங்களை
வேண்டுமானாலும் போடலாம் என்ற செயல்பட்டு வருவது தான் விடியா திமுக அரசின்
திராவிட மாடல் ஆட்சியா என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

via News J : https://ift.tt/rs0l7f1
Mediaசெந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 8 வரை நீடித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில்பாலாஜி புழல் மத்திய சிறையில் இருந்தப்படி காணொலி காட்சி மூலம் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி அல்லி முன்பு இன்று ஆஜரானார். அப்போது ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை மூன்றாவது முறையாக
நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

via News J : https://ift.tt/tnqMHZX
Mediaதமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்தது குறித்து விவாதிக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் நோட்டீஸ் வழங்கியுள்ளார். அந்த நோட்டீஸில், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரரின் இல்லத்தில் சோதனைக்காக சென்ற பெண் வருமான வரித்துறை அதிகாரி உள்பட பலர் தாக்கப்பட்டு, பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர் என குறிப்பிட்டுள்ள அதிமுக எம்பி சி.வி.சண்முகம், மத்திய அரசு ஊழியர்கள் மீதான சமீபத்திய தாக்குதல், அச்சமின்றி வேலை செய்ய முடியாது என அவர்களை நினைக்க வைத்துள்ளதாகவும், தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலுமாக சீர்குலைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து மாநிலங்களவையில் விவாதிக்க வேண்டும் என அதிமுக எம்பி சி.வி.சண்முகம் நோட்டீஸ் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.

via News J : https://ift.tt/xFHWnTi
Mediaவாரிசு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதில் இருந்து விளையாட்டுத் துறையில் தேசிய அளவில் நடைபெற்ற போட்டியில், தமிழக மாணவர்கள் பங்கேற்கவில்லை என சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார்.மதுரை, ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறும் வீர வரலாற்றின் மாநில அளவிலான மாநாட்டிற்கு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடைபெற உள்ள கருணாநிதி நூற்றாண்டு விழாவில் விளம்பரம்தான் உள்ளது என்றும், விலாசம் இல்லை என்றும் விமர்சித்தார்.

via News J : https://ift.tt/CnKO5wU
Mediaதமிழகத்தில் மீனவர்கள், படுகர், வால்மீகி இனத்தவர்களுக்கும் பழங்குடியினர் அந்தஸ்து வழங்க மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என அதிமுக எம்பி தம்பிதுரை மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டசபையிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

via News J : https://ift.tt/Jtah8T9
Media “30 லட்சம் ரூபாய செலவு பண்ணி என் மனைவிய கவுன்சிலரா ஆக்கியிருக்கேன்… எனக்கு இதுவரைக்கும் நகராட்சி வேலைகூட யாரும் தர்றதில்ல… கட்சி சார்பான நோட்டீஸ்ல கூட என் பேரு இல்ல” என்று புலம்பித்தள்ளியிருக்கிறார் திண்டிவனத்து திமுககாரர் ஒருவர்.அதுவும் அத்தனை கட்சிக்காரர்களும் கூடியிருக்கும் செயல் வீரர்கள் கூட்டத்திலேயே அமைச்சர் மஸ்தான் முன்னிலையிலேயே இந்தளவுக்கு புலம்பியிருக்கிறார் என்றால் மனதிற்குள் எத்தனை புலம்பல்கள் இருக்கும் ? வடக்கே இப்படி என்றால் மேற்கே திமுகவின் மாவட்ட செயலாளர் ஒருவர் இன்னும் ஒரு படி மேலே போய், ஸ்டாலின் முதல், அமைச்சர்கள், அவர்களின் பினாமிகள் என்று ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சியால் பயனடைபவர்கள் என்று வகைதொகையில்லாமல் எல்லாரையும் வறுத்தெடுத்திருக்கிறார்.கோவை மாவட்டத்தின் முன்னாள் துணைமேயரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நா.கார்த்திக் தன் இனிமையான குரலில் இப்படி திமுகவை கழுவிக்கழுவி ஊத்தியிருப்பது தான் இன்று கோயமுத்தூர் முழுக்க ஹாட் டாக்கே..மேற்கே இந்தப் பஞ்சாயத்து என்றால் தெற்கே, தென்காசியிலோ, அட துயரத்த இப்படி எல்லாமா நடக்கும்? என்று கேட்கும் அளவுக்கு சம்பவம் செய்திருக்கிறார்கள் திமுகவின் மகளிரணியினர்… , மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை எதிர்த்து, நடந்த ஆர்ப்பாட்டத்தில், மொதல்ல திமுகவின் தென்காசி மாவட்ட கழகத்தில் பெண்களுக்கு நடக்கற கொடுமைகளுக்கு ஏதாவது செஞ்சுப்புட்டு அடுத்தாப்புல அங்க மணிப்பூர பாருங்கன்னு, போராட்ட மேடையிலேயே வெடித்து தள்ளியிருக்கிறார் திமுகவின் மகளிரணி நிர்வாகி…இப்படி, நாலாத் திசைகளிலும், திமுகவினராலேயே கழுவிக்கழுவி ஊற்றப்பட்டும், தூற்றப்பட்டும் நாறிப்போய் கிடக்கிறது இந்த விடியா ஆட்சி… ஆட்சிக்கு வந்ததும் அதைச்செய்வோம் இதைச்செய்வோம் என்றெல்லாம் சொல்லிவிட்டு, மக்களைத்தான் ஏமாற்றினார்கள் என்று பார்த்தால், இப்படி 10 ஆண்டுகாலமாக கட்சிக்காக உழைத்த உடன்பிறப்புகளையே கறிவேப்பிலையாக நடத்துவதை எண்ணி அணுதினமும் புழுங்கிக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு ஆறுதல் சொல்வதா? இல்லை, ஹப்பாடா இனி அடுத்தமுறை ஆட்சி என்பதை திமுக கிஞ்சித்தும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு இப்போதே கட்சியினர் மத்தியல் செல்வாக்கை இழந்துவிட்டதை எண்ணி நிம்மதி பெருமூச்சு விடுவதா என்று தெரியவில்லை…ஆக, மக்கள் நம்பிக்கையை இழந்த திமுக, தற்போது தன் சொந்த கட்சிக்காரர்களிடமும் நம்பிக்கையை இழந்துவிட்டதா? சொந்தக் கட்சியினரைக்கூட கட்டிக்காத்து வைத்துக்கொள்ளத் தெரியாமல், தேசிய அரசியலில் கூட்டணி கட்ட ஸ்டாலின் முயல்வது ஏன்? ஆக மொத்தம் கடைகோடியில் இருக்கும், பூத், வார்டு, ஒன்றிய நிர்வாகி முதல் மாவட்ட செயலாளர் வரை சொந்தக்கட்சியினரின் நம்பிக்கையைக்கூட இழந்துவருகிறார் ஸ்டாலின் என்ற உண்மையை அவரிடம் யார் தான், எப்போதுதான் எடுத்துச்சொல்லி விளங்கவைக்கப்போகிறார்கள் என்பதுதான் விடையே இல்லாத கேள்வி.

via News J : https://ift.tt/cuj3E7p
👍1
Mediaமனிதர்களை பொறுத்தவரை உடல் ரீதியாக வலுவாக இருந்தால் மட்டும் போதாது. மன ரீதியாகவும் திடமானவராக இருக்க வேண்டும். ஆனால் தற்போது உள்ள இவ்வுலகம், இயந்திரமயமாகவும் வேகமாகவும் கால சுழற்சிக்கு ஏற்ப செயல்படுகிறது. இந்திய அளவில் பத்தில் ஒரு நபருக்கு மன அழுத்தம், மனச் சோர்வு, பதற்ற, விரக்தி மற்றூம் மன ரீதியிலான பாதிப்பு உள்ளது என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரான நீதிபதி அருண்குமார்  மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.மன நலம் பாதிப்பு தொடர்பான தேசிய கருத்தரங்கு, புது டெல்லியில் நேற்றைக்கு நடந்தது. இதில் தான் நீதிபதி அருண்குமார் மிஸ்ரா இது குறித்து பேசியுள்ளார்.நாடு முழுவதும் உள்ள 47 மன நல மருத்துவமனைகளில் கடந்தாண்டு ஜூலை முதல், இந்தாண்டு ஜனவரி வரை ஆய்வு செய்யப்பட்டது. இந்த மருத்துவமனைகளில் நேரடி ஆய்வுகள் நடத்தப்பட்டு, அது தொடர்பான அறிக்கை நேற்றைக்கு வெளியிடப்பட்டது. இந்த ஆய்வின்படி இந்தியா முழுவதும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மன நோயாளிகள் முழுமையாக குணமடைந்தும், மருத்துவமனைகளிலேயே இருக்கின்றனர். இவர்கள் குணம் அடைந்தபின் ஒருநாள் கூட மருத்துவமனைகளில் குடுதலாக தங்கக் கூடாது. இருந்தும் இவர்கள் மருத்துவமனையில் சுற்றி திரிகின்றனர். மேலும் மருத்துவமனைகளில் சரியான வசதி இல்லை, சுகாதாரம் பேணப்படுவதில்லை, டாக்டர்கள் மற்றும் ஆலோசகர்கள் இருப்பதில்லை போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.Justice Arun Kumar Mishra retires from Supreme Court todayமன நோயில் இருந்து மீண்டவர்களை மீண்டும் குடும்பத்தாருடன் சேர்ப்பதற்கான முயற்சியும் நடக்கவில்லை. இதில் மநில அரசுகள், மாவட்ட ஆட்சியர்கள் ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2017ல் அறிமுகம் செய்யப்பட்ட மனநல மருத்துவ சட்டத்தின்கீழ், மாநில மருத்துவ சேவை ஆணையங்கள் உள்ளிட்டவை, பெரும்பாலான மாநிலங்களில் அமைக்கப்படவில்லை.தற்போதைய காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் பலவித சவால்களை சந்திக்கிறோம். இது ஒரு இயந்திர யுகம். சக மனிதர்களிடம் முகம் கொடுத்து பேசுவதற்கு கூட தயங்குகிறோம். சுயம் என்கிற பெயரில் நாம் ஒவ்வொருவரும் சுயநலமிக்க மனிதர்களாக மாறிப் போய் இருக்கிறோம். மேலும் புறச்சூழலும் மக்களின் மனநிலையைப் பாதிக்கிறது. மன அழுத்தம், பற்றம், மனச்சோர்வு, விரக்தி போன்ற மன பாதிப்புகள் வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது. 10-ல் ஒருவருக்கு ஏதாவது ஒருவகையில் மன ரீதியிலான பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், 13000 மாணவர்கள் தற்கொலை செய்கின்றனர். அனைத்துத் துறையிலும் வேலை செய்பவர்களுக்கு இந்த மன அழுத்தமானது தொற்றியுள்ளது. இந்தப் பிரச்சினையை எதிர்கொள்ள, அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம்.

via News J : https://ift.tt/NPHr7d3
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/arikkai.jpg">Media</a> <strong>    கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலைமைச்சர் திரு. எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் அறிக்கை</strong> முழு இழப்பீடு வழங்காத நிலையில், விவசாய நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்.சி. நிறுவனத்தின் முயற்சிக்கு துணை நிற்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! என்.எல்.சி நிறுவனம் தனது 2-ம் சுரங்க விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரது வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல், உறுதி செய்யப்பட வேண்டும் என்ற நிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உறுதியாக இருக்கிறது.அனைத்திந்திய அண்ண திராவிட முன்னேற்றக் கழகம், 2021 ஆம் ஆண்டு மே மாதம் ஆட்சியில் இருந்தவரை விவசாயிகளின் நியாயமான கோரிக்கையினை என்.எல்.சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, மக்கள் விரோத விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு விவசாயிகளையும் அப்பகுதி மக்களையும் இந்த அரசு கைவிட்டு விட்டு, என்.எல்.சி-யின் நில எடுப்புக்கு காவலர்களின் உதவியுடன் துணை நிற்கிறது.<strong>விவசாயிகளுடைய கோரிக்கை என்னவென்றால்,</strong>* மறுசீரமைப்பு மற்றும் மறுகுடியமர்வு சட்டப்படி போதிய சம அளவு இழப்பீடு வழங்குதல்.* வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத் தொகை வழங்குதல்.* என்.எல்.சி நிறுவன நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் காலகாலமாக வேலை செய்து வரும் விவசாயத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து என்.எல்.சி. நிறுவனம் விரைவில் முடிவினை அறிவிக்கக் கோருதல்.* ஏற்கனவே என்.எல்.சி நிறுவனத்திற்கு நிலம், வீடுகளைக் கொடுத்து இடம் பெயர்ந்து சென்றவர்களுக்கு, என்.எல்.சி நிறுவனம் இதுவரை எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றித் தரவில்லை. அந்த வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும்.* 1989-க்கு பிறகு நிலம் கொடுத்தவர்களுடைய குடும்பங்களைச் சேர்ந்த ஒருவருக்குக் கூட நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கவில்லை. எனவே, அப்போது முதல் இன்று வரை நிலம் கொடுத்தவர்களின் குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு நிரந்தர வேலை வழங்கவேண்டும்.* நில எடுப்புப் பகுதியில் உள்ள மக்களுக்கு சி.எஸ்.ஆர் நிதி என்று சொல்லப்படுகிற சமூக பொறுப்புணர்வு நிதியிலிருந்து, எவ்வித வளர்ச்சித் திட்டங்களையோ, நல உதவித் திட்டங்களையோ செய்து தரவில்லை. எனவே, சி.எஸ்.ஆர் நிதி முழுமையாகவோ அல்லது பெரும் பகுதியோ கடலூர் மாவட்டத்திற்கு செலவிடப்பட வேண்டும் என்பது உட்பட பல நியாயமான கோரிக்கைகளை இப்பகுதி மக்கள் என்.எல்.சி நிறுவனத்திடம் வைத்துள்ளனர்.ஆனால், இது குறித்து எந்தவிதமான நியாயமான பதிலும் அளிக்கப்படாத நிலையில் என்.எல்.சி நிறுவனம் நில எடுப்புப் பகுதியில் உள்ள விவசாயிகளுடைய நம்பிக்கையை இழந்திருக்கிறது. என்.எல்.சி நிறுவனத்தின் மீது கடுமையான கோபத்தில் விவசாயிகள் இருக்கிறார்கள். இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள விடியா திமுக அமைச்சர்கள் இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, விவசாயிகளை, திமுக விவசாயிகள் மற்றும் திமுக அல்லாத விவசாயிகள் என்று இரண்டாகப் பிரித்து திமுக அல்லாத விவசாயிகளை பழி வாங்குவதற்கு தங்களது அதிகாரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்று செய்திகள் தெரிய வருகிறது.கடந்த மே மாதம் 2-ம் தேதி அன்று, அப்போதைய தலைமைச் செயலாளர் தலைமையில், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் என்.எல்.சி நிர்வாகத்தினர் கூட்டம் சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், புவனகிரி தொகுதியின் கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. ஆ. அருண்மொழிதேவன் அவர்களும் கலந்துகொண்டு என்.எல்.சி நிர்வாகம் அப்பகுதி மக்களின் கருத்தை கேட்டுத்தான் நில எடுப்பு செய்யப்பட வேண்டும் என்று உறுதிபட எடுத்துரைத்தார். சட்டமன்ற உறுப்பினரின் கடுமையான எதிர்ப்பை ஏற்றுக்கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர், விரைவில் இதைபோல் மற்றொரு பேச்சுவார்த்தை சென்னையில் நடைபெறும் என்றும், அதுவரை எந்தவிதமான நில எடுப்புப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் என்.எல்.சி நிர்வாகத்தைப் பணித்தார். ஆனால், தலைமைச் செயலாளர் மாறியவுடன் என்.எல்.சி நிர்வாகம் தன்னிச்சையாக இன்று நில எடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது. இதற்கு இந்த விடியாஅ திமுக அரசு துணை நின்றுள்ளது.ஏற்கனவே கடந்த 10.03.2023 அன்று என்.எல்.சி நிர்வாகம் நில எடுப்புப் பணிகளில் ஈடுபட்டபோது, கழக சட்டமன்ற உறுப்பினர் திரு. அருண்மொழித்தேவன் உட்பட நூற்றுக்கணக்கான கழகத் தொண்டர்கள் என்.எல்.சியின் நில எடுப்பு நடவடிக்கையினை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்து காவல்துறையின்ரால் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், நிலங்களுக்கான இழப்பீட்டுத்…
Mediaவிழுப்புரத்தில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை விண்ணப்ப சரிபார்ப்பு முகாமில் பங்கேற்ற பொதுமக்களிடம் அமைச்சர் பொன்முடி, உனக்கு தகுதி இருக்கிறதா?, நீ எந்த கட்சி? என ஒருமையில் கேள்வி கேட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் உரிமை தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் சரிபார்க்கும் மற்றும் பதிவேற்ற முகாமில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துக்கொண்டார். அப்போது முகாமிற்கு வந்த பொது மக்களிடம் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கு உனக்கு தகுதி இருக்கிறதா? என அமைச்சர் பொன்முடி ஒருமையில் கேள்வி எழு ப்பினார்.அங்கிருந்த மூதாட்டி ஒருவரிடம் நீ எந்த கட்சி என பொன்முடி கேட்டபோது நான் எப்போதும் அதிமுகதான் என கூறினார். இதனால் முகம் சுருங்கிய அமைச்சர் பொன்முடி அதிகாரிகளை முறைத்துவிட்டு அங்கிருந்து சென்றார்.

via News J : https://ift.tt/I6MKE0X
Mediaஇந்தியா – மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரின் முதல் ஆட்டம் இன்று பார்படாளி தொடங்குகிறது. ஏற்கனவே டெஸ்ட் போட்டியில் இந்திய அணியிடம் படுதோல்வி அடைந்த மேற்கிந்திய தீவுகள் அணி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பழிதீர்க்க துடியாய் இருக்கிறது. இருப்பினும் டெஸ்ட் போன்று ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி தங்களின் பலத்தைக் காட்டுவதற்கு முனைப்புக் காட்டக்கூடும். இந்தப் போட்டிகள் வருகின்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்விற்கு வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.இந்த வகையில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷான், சஞ்சு சாம்சன், யுஸ்வேந்திர சஹால், உம்ரான் மாலிக், முகமது சிராஜ் போன்றவர்களுக்கு இந்த ஒருநாள் போட்டிகள் நல் வாய்ப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் சில குறைகள் இருப்பதும் கவனிக்கத்தக்க ஒன்றுதான். குறிப்பாக் சூர்யகுமாரால் டி20யில் ஜொலித்த அளவிற்கு ஒருநாள் போட்டியில் ஜொலிக்க முடிவதில்லை. ஆஸ்திரேலியா போட்டியில் தொடர்ந்து டக் ஒவுட் ஆகி மோசமான பார்மில் உள்ளார். இதனால் அணியில் நான்காவது இடத்திற்கு போட்டி வலுத்துள்ளது. அதேபோல ரிஷாப் பண்ட் இல்லாததால், விக்கெட் கீப்பர் இடத்திற்கு சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷனுக்கு இடையே போட்டிகள் வலுபெற வாய்ப்பிருக்கிறது. சஞ்சு சாம்சனைப் பொறுத்தவரை அவருக்கு அணியில் நிலையான இடம் என்று ஒன்று இருந்ததில்லை. திடீரென்று சுனாமி காட்டு காட்டுவார். பிறகு அமைதியாக ரன்கள் ஏதும் அடிக்காமல் பெவிலியன் திரும்புவார். 11 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய சஞ்சு சாம்சன் வெறும் 66 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.Suryakumar is 32, I'm 22': Pakistan batter's '360' claim, namedrops De Villiers | Cricket - Hindustan Timesஷுப்மன் கில் ஓபனிங் பேட்ஸ்மேனாக தனக்கான இடத்தை வலுவாகப் பிடித்துவிட்டார். இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைப்பது என்பது சந்தேகம் தான். ஹர்திக் பாண்டியா நீண்ட நாட்களுக்குப் பிறகு தேசிய அணிக்கு திரும்பியுள்ளார். இந்தியாவின் அதிவேகமான இம்ரான் மாலிக்கிற்குதான் இந்த வாய்ப்பு சரியாக கிட்டியுள்ளது. மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும். சாதரணமாக 150 கி.மீ வேகத்தில் பந்துவீசக் கூடியவர் மாலிக். ஆனால் அவர் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பார் என்பதுதான் குற்றச்சாட்டு. கடந்த ஆஸ்திரேலிய சீரிஸில் குல்தீப் யாதவிற்கு முக்கியத்துவம் கொடுத்ததுபோல, இந்த சீரிஸில் சஹாலுக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேகப்பந்து வீச்சில் முகமது சிராஜ்தான் தற்போதைய சீனியர். பின்னர் உதன்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாக்குர் ஆகியோரும் லைனில் வரிசைக் கட்டி உள்ளனர்.இரு அணிகள் விவரம்மேற்கு இந்திய தீவுகள் ஷாய்ஹோப், ரோவ்மன் பவல், அலிக் அத்தனாஸ், யானிக் கரியா, கீசி கார்டி, டொமினிக் டிரேக்ஸ், ஷிம்ரன் ஹெட்மயர், அல்சாரி ஜோசப், பிரண்டன் கிங், கைல் மேயர்ஸ், குடகேஷ் மோட்டி, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட், கெவின் சின்க்ளேர், ஓஷேன் தாமஸ்.இந்தியாரோகித் சர்மா, விராட் கோலி, ஷுப்மன் கில், ருதுராஜ், சூர்யகுமார், சஞ்சு சாம்சன், இஷான் கிஷான், ஹர்திக் பாண்டியா, ஷர்துல் தாக்குர், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், சஹால், குல்தீப் யாதவ், ஜெயதேவ் உனத்கட், மொகமது சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

via News J : https://ift.tt/KA0tsaV
Mediaமுன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் எட்டாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது தேசிய நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள பேக்கரும்பு கிராமத்தில், முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் தேசிய நினைவிடம் உள்ளது. அவரது எட்டாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுவதையொட்டி, நினைவிடம், மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் குடும்பத்தினர், நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். மேலும், கலாமின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.

via News J : https://ift.tt/jzyHvL0
Mediaகரூர்ல உள்ள கரூர் மாநகராட்சி பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகள்ல மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடந்துருக்கு. இந்த நிகழ்ச்சியில 100-க்கும் மேற்பட்ட 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் கலந்து இருக்காங்க. முக்கியமா அமைச்சர் செந்தில்பாலாஜியும் கலந்துருக்காரு…… என்னது செந்தில்பாலாஜியா?….. அவர் ஜெயில்லல இருக்காருன்னு பதறுதா?…. ஆமா அவர் ஜெயில்லதான இருக்காரு…. அதுவும் இலாகா இல்லாத அமைச்சரா…. ஆனா இந்த சைக்கிள எல்லாம் வழங்குபவர் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜினு பேனர்லாம் கட்டியிருக்காங்க அந்த நிகழ்ச்சியில…. திமுக தலைமையே குற்றவாளியான செந்தில்பாலாஜிய இந்தத் தாங்கு தாங்குறதாலதான்…. இலாகாவே இல்லாதபோதும் இப்படியெல்லாம் பேனர வச்சி திமுககாரங்க கொண்டாடுறாங்க போல… போற போக்க பார்த்தா திமுகன்னா ஸ்டாலின் இல்ல… அது செந்தில்பாலாஜின்னு சொன்னாலும் சொல்லிடுவாங்களோ என்னவோன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/QZjLOCv
Mediaசென்னை மற்றும் நெல்லைக்கு இடையே வந்தே பாரத் ரயில் சேவையானது அடுத்த மாதம் இறுதியில் இயக்கப்பட இருக்கிறதாக ரயில்வேத்துறை அறிவித்துள்ளது.இந்தியாவில் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. குளிர்சாதன வசதி, அதிவிரைவு பயணம் உள்ளிட்ட பல அம்சங்கள் பொருந்திய இந்த ரயிலுக்கு பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயிலானது இயக்கப்படுவதற்கான ஆயத்தப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக சென்னையில் இருந்து சென்னை முதல் கோவை மற்றும் சென்னை முதல் மைசூரு இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சென்னை முதல் நெல்லை இஅடையே வந்தே பாரத் ரயிலை இயக்குவதற்கு ரயில்வேத் துறை திட்டமிட்டிருந்தது. அதன் அடிப்படையில் அடுத்த மாதம் இறுதியில் சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க முடிவு செய்துள்ளதாக ரயில்வேத் துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.அப்படி போடு! தென் மாவட்ட பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்.. நெல்லைக்கு வருகிறது வந்தே பாரத் ரயில்! | Chennai to Nellai route may get vande Bharat train, says Railways sources - Tamil ...சென்னை – நெல்லை இடையேயிலான வந்தே பாரத் ரயில் அக்டோபர் அல்லது நவம்பரில் தான் இயக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் முன்கூட்டியே தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது என்பதால் வந்தே பாரத் ரயிலில் முதற்கட்டமாக 8 பெட்டிகள் இணைக்கப்பட உள்ளது. வழக்கமாக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை வந்தடைவதற்உகு 10 மணி நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரத்தில் வந்தடையும். இதனால் பொதுமக்களுக்கு இரண்டு மணி நேரங்கள் மிச்சமாகிறது. இதேபோல படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை படுக்கை வசதிகளுடைய பெட்டிகள் அமல்படுத்தப்பட மாட்டாது. எனவே, சென்னை நெல்லை வழித்தடத்தில் 8 பெட்டிகளிலும் இருக்கைகள் உட்கார்ந்து செல்லும் வகையிலேயே அமைக்கப்பட உள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய 4 ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

via News J : https://ift.tt/9LcG8zu