Mediaஉலகில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிக வெப்பம் பதிவான மாதமாக இந்த ஜூலை மாதம் இருக்கும் என காலநிலை விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். 2024ஆம் ஆண்டு வெப்பம் இதைவிட உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.கடந்த ஒரு நூற்றாண்டில் உலகின் மிக அதிக வெப்பமான மாதமாக இந்த ஜூலை மாதம் இருக்கும் என்று காலநிலை விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகின் பெரும்பாலான பகுதிகளில் எல் நினோ தாக்கத்தால் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக ஜூலை மாதம் தான் அதிக வெப்பம் தகிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், 2024ஆம் ஆண்டு வெப்பநிலை இதைவிட உச்சங்களை எட்டும் என்றும் கூறப்படுகிறது.Expect more deadly heat from climate change, study saysசுட்டெரித்த ஜூலை..!நிலத்தில் மட்டுமின்றி கடலிலும் இதுவரை காணாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வு நிபுணர் ஸ்ரீகாந்த் கூறினார்.உலகின் சராசரி வெப்பநிலையை 16 டிகிசி செல்சியஸ் என்ற அளவுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஜூலை 4 ஆம் தேதி 17.18 டிகிரி செல்சியஸ் ஆக பதிவானது. அடுத்து
ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது கூட இதனால் தான். இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளிலும் வெப்ப அலைகள் உக்கிரமாக வீசின. இதன் காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.2024…ல் அதிகரிக்குமா?கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு ஜூலையில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2024ஆம் ஆண்டு வரை தொடரும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.குறைவான மின் பயன்பாடு, பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துதல், அதிகளவில் மரங்களை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், அதுவும் உடனடியாக நிகழாது சில பல ஆண்டுகள் ஆகலாம். எனவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி தற்போது இருந்தே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
via News J : https://ift.tt/UAgNKnL
ஜூலை 6 ஆம் தேதி 17.23 டிகிரி செல்சியஸ் ஆக வெப்பநிலை பதிவானது. இப்படி ஜூலை மாதத்தில் உலகின் வெப்பநிலை புதிய உச்சங்களை எட்டியது.இந்த ஆண்டு கோடைக்காலம் தொடங்கியது முதலே வெயில் கடுமையாக வாட்டி வதைத்தது. கடுமையான வெப்பத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டன. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டது கூட இதனால் தான். இந்த ஆண்டு அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் சீனா உள்ளிட்ட உலக நாடுகளிலும் வெப்ப அலைகள் உக்கிரமாக வீசின. இதன் காரணமாக அதிகளவில் உயிரிழப்புகளும் ஏற்பட்டது.2024…ல் அதிகரிக்குமா?கடந்த 2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உலகின் சராசரி வெப்பநிலை 16.92 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவாகியிருந்தது. அதுதான் உலகின் மிக அதிகபட்ச வெப்பநிலையாக பதிவு செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் நடப்பாண்டு ஜூலையில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது 2024ஆம் ஆண்டு வரை தொடரும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.குறைவான மின் பயன்பாடு, பொதுப் போக்குவரத்து வாகனங்களைப் பயன்படுத்துதல், அதிகளவில் மரங்களை வளர்த்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் வெப்பநிலையைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும். ஆனால், அதுவும் உடனடியாக நிகழாது சில பல ஆண்டுகள் ஆகலாம். எனவே எதிர்கால சந்ததியினரின் நலன் கருதி தற்போது இருந்தே பொறுப்புடன் செயல்பட வேண்டும் என விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
via News J : https://ift.tt/UAgNKnL
Mediaஇந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணீகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 438 ரன்கள் குவித்திருந்தது. முக்கியாமாக இது விராட் கோலியின் 500 வது சர்வதேசப் போட்டியாகும். அதனை சிறப்பிக்கும் விதமாக கோலி சதம் அடித்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.தன்னுடைய முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியாந்து முதலில் நிதானமாகவும் பின்னர் தடுமாறவும் செய்தது. ஏதுவான பந்துகளை கூட அடிக்காமல் தட்டுப்பாட்டத்திலேயே தீவிரம் காட்டினர் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள். இதனால் அவர்களின் ஸ்கோர் மந்தமாகவே நகர்ந்தது. அதிகடட்சமாக கேப்டன் பிராத்வெயிட் 75 ரன்கள் எடுத்தார். 3-வது நாள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் 108 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. இடையே மழை ஒரு மணி நேரம் பெய்ததால் ஆட்டம் பாதிப்புக்குள்ளானது. பின்னர் நேற்று நான்காம் நாள் ஆட்டத்தை துவங்கிய டெஸ்ட் இண்டீசை இந்திய வேகப்பந்து வீச்சாளர்முகமது சிராஜ் மற்றும் முகேஷ் குமார் இருவரும் பயமுறுத்தினர். ஸ்ட்ம்பை குறி வைத்து தாக்குவதில் சிராஜ் கில்லாடி. அவரின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்கள் திணறினர்.Mohammed Siraj gives India a chance of clean sweep, but West Indies live to fight another day | The Indian Expressவெறும் 7.4 ஓவர்களுக்கு ஐந்து விக்கெட்டுகளையும் வெஸ்ட் இண்டீஸ் அணி தாரை வார்த்தது. 255 ரன்களுக்கு மொத்த அணியும் சுருண்டது. இந்தியா சார்பாக சிராஜ் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அவரது சிறந்த பந்துவீச்சு இதுவாகும். அடுத்து 183 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மாவும் ஜெஸ்வாலும் அதிரடியாக ஆடத் தொடங்கினர். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் அரைசதம் விளாசினார். இது இவரது அதிவேக அரைசதமாகும். 57 ரன்னில் இருக்கும் போது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். ஜெஸ்வால் 38 ரன்னில் இருக்கும் போது ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இந்திய அணி இரண்டு விக்கெட்கள் இழந்து 118 ரன்கள் எடுத்து மொத்தம் 301 ரன்கள் முன்னிலையில் இருக்கிறது. மீண்டும் மழை பெய்து ஆட்டத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தியது.
via News J : https://ift.tt/yTG3Uag
via News J : https://ift.tt/yTG3Uag
Mediaடிவிட்டர் சமூக வலைதளத்தின் அடையாளமாக உள்ள பறவை (குருவி) லோகோவையும், அதன் பெயரையும் மாற்ற உள்ளதாக, அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அதனையொட்டி தற்போது டிவிட்டரின் லோகோவானது மாறியுள்ளது. குருவி லோகோ எக்ஸ் லோகோவா மாறியுள்ளது.உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவரும், தொழிலதிபருமான எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை கடந்த ஆண்டு பல கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தார். இதையெடுத்து செலவினங்களை குறைப்பதற்காக அந்நிறுவனத்தின் ஊழியர்களை பணி நீக்கம் செய்தார். மேலும், ப்ளூ டிக் எனப்படும் உறுதிப்படுத்தப்பட்ட கணக்கை பெறுவதற்கு பயனார்களிடம் கட்டணத்தை விதித்தார்.Soon we shall bid adieu to Twitter brand': Elon Musk is killing Twitter bird as 'X' to become new logo - BusinessTodayஇதற்கிடையே டிவிட்டர் நிறுவனத்திற்கு போட்டியாக மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜூகர்பெர்க், த்ரெட்ஸ் என்ற சமூக வலைதளத்தை அறிமுகப்படுத்தினார். இந்நிலையில் டிவிட்டர் சமூக வலைதளத்தின் பெயரையும் லோகோவையும் மாற்ற உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்திருந்தார். அவர் நேற்று வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,டிவிட்டர் சமூக வலைதளம் மீண்டும் சீரமைக்கப்படும். அதன் பெயருக்கும் படிப்படியாக அனைத்து பறவைகளுக்கும் விடைகொடுப்போம். நல்ல லோகோ உருவாகி விட்டால், விரைவில் அது, உலகம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துவிடும் என்று அவர் அப்பதிவில் குறிப்பிட்டிருந்தார். தற்போது எலான் மஸ்க் குறிப்பிட்டிருந்த படியே, டிவிட்டரின் பெயரை எக்ஸ் என்று மாற்றி விட்டார். அதன் லோகோவும் குருவிக்கு பதிலாக எக்ஸ் வடிவத்திற்கு மாற்றப்பட்டுவிட்டது.
via News J : https://ift.tt/ZzodSBY
via News J : https://ift.tt/ZzodSBY
Mediaஒகேனக்கலில் பொதுமக்களுக்கு விற்பதற்கு என வைக்கப்பட்டிருந்த 195 கிலோ கெட்டுப் போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணத்திற்கு ஆசைப்பட்டு உயிருடன் விளையாடும் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒகேனக்கலில் சுற்றுலா பயணிகளுக்கு விற்பதற்கு என வைக்கப்பட்டிருந்த அழுகிய மீன்களைத் தான் அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.தமிழகத்தின் புகழ்பெற்ற சுற்றுதளங்களில் ஒன்றாக ஒகேனக்கல் உள்ளது. கர்நாடகத்தில் உருவாகும் காவேரி தமிழகத்தில் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலில் நதியாக நுழைகிறது. தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும், விடுமுறை நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் காவிரி ஆற்றில் குளித்து அருவிகளை பார்த்து மகிழ்ந்தும், பரிசல் சவாரி செய்தும் பின்பு அம்மியில் அரைத்து சமைக்கப்படும் சுவையான மீன் குழம்பை ருசித்து சாப்பிட்டு செல்கின்றனர்.இந்த நிலையில், ஒகேனக்கல் சுற்றுலா தளத்திலுள்ள மீன் கூடங்களில் அழுகிய நிலையில் உள்ள பழைய மீன்களை விற்பனை செய்து வருவதாக புகார்கள் எழுந்தன. அதனை உணவு பாதுகாப்பு துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.ஒகேனக்கல் மீன் விற்பனை நிலையத்தில் உள்ள சுமார் 30 கடைகளில் ஆய்வு செய்து அங்கு அழுகிய மீன்கள் விற்கப்பட்டதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து மீன்கள் மீது பார்மிலின் கெமிக்கல் பூசப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய ஆய்வு செய்தனர். அதில் பார்மிலின் கலக்கவில்லை என்பது உறுதியானது.இதையடுத்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 195 கிலோ அழுகிய மீன்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து, குழி தோண்டி புதைத்தனர். மேலும், அழுகிய மீன்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வியாபாரிகளை எச்சரித்து நோட்டீஸ் வழங்கிச் சென்றனர்.ஒகேனக்கல் வரும் பொதுமக்கள் ரசித்து உண்ணும் மீன் உணவில், இது போன்ற சில கடை உரிமையாளர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு அழுகிய மீன் விற்பனை செய்யும் சம்பவம் சுற்றுலா பயணிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், விற்பனையாளர்களுக்கு எச்சரிக்கை அளித்தது மட்டுமல்லாமல் அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/0EdyNp5
via News J : https://ift.tt/0EdyNp5
Mediaமேட்டூர் அணை நீர்மட்டம் கடந்த 42 நாட்களில் வெயில் மற்றும் பிற காலநிலைகள் காரணமாக 34 அடி குறைத்து விட்டதால் குட்டைபோல் காட்சியளிக்கிறது. இதனால் காவிரி நீரினை நம்பியிருக்கும் விவசாயிகள் மிகுந்த கவலையில் உள்ளனர். பாசனத்திற்கு சரியாக தண்ணீர் கிடைக்காமல் பெருத்த சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.குட்டையாக மாறிப்போன மேட்டூர் அணை..!ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதன்மூலம் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையிலும் காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் குறிப்பிட்ட தேதியான ஜூன் மாதம் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசந்த்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. அப்போது அணை நீர்மட்டம் 103 அடியாக இருந்துள்ளது. ஆனல் இந்த தீடீர் மாற்றத்திற்கு என்னதான் காரணம்?அன்றைக்கு பத்தாயிரம் கன அடி தண்ணீர் வீதம் திறந்துவிடப்பட்டது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 200 கன அடி குறைந்துள்ள நிலையில் அணையில் இருந்து கூடுதல் நீர் திறந்துவிட்டதால் நீர்மட்டம் வேகமாக குறைந்து கொண்டு வருகிறது. இதற்கு இந்த விடியா திமுக அரசு பொறுப்பேற்று விரைவில் நடவடிக்கை எடுக்குமா? கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்துக்கு முன்னதாகவே தொடங்கி அதி தீவிரமடைந்தது. ஆனால் இந்தாண்டு அப்படியில்லை. எனவே இதுவும் ஒரு சூழலியல் காரணமாகப் பார்க்கப்படுகிறது.தென்மேற்கு பருவமழைதான் காரணமா?Mettur at dead storage worries PWDதென்மேற்குப் பருவமழை இப்போதுதான் ஓரளவு பெய்யத் தொடங்கியிருக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் இருந்து கூடுதல் நீரை திறந்துவிடும்படி டெல்டா விவசாயிகள் கோரிக்கை விடுத்தும் வருகின்றனர். அதனை இந்த விடியா திமுக அரசு கண்டுகொள்வதுபோலத் தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகளும் மக்களும் வலியுறுத்தியதற்கு இணங்க, நாளை கர்நாடகாவிலிருந்து, குறிப்பாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ் சாஜர் அணையிலிருந்த்பு வினாடிக்கு 4987 அடி தண்ணீரானது காவிரியில் திறக்கப்பட்டு உள்ளது.புதன் கிழமை மேட்டூர் அடையும் காவிரி!நாளை இந்த நீரானது கர்நாடகா தமிழக எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவுக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அடையும். மேட்டூருக்கு வரும் புதன்கிழமை வந்தடையும் என்று சொல்லப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி விநாடிக்கு பத்தாயிரம் கன அடி நீரானது திறந்துவிடப்பட்டு வருகிறது. ஆனால் கர்நாடாகாவில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரானது மேட்டூர் அணைக்கு வந்தடைந்தால் விநாடிக்கு 5000 கன அடி வீதம் தண்ணீர் வரும். அதாவது தண்ணீர் திறப்பை விட அணைக்குத் தேவையான நீர்மட்டம் அதிக அளவு இருப்பதால், மேட்டூர் நீர்மட்டமானது தொடர்ந்து குறைந்துகொண்டே இருக்கும் நிலை ஏற்படும்.
via News J : https://ift.tt/ApstaNg
via News J : https://ift.tt/ApstaNg
Mediaஅமலாக்கத்துறையால் நான்கு முறை சம்மன் அனுப்பப்பட்டும் நேரில் ஆஜராகாமல் இருந்து வந்த செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார், இதயம் சார்ந்த நோய் காரணமாக மேலும் 4 வாரம் கால அவகாசம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு தற்போது புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜியின் தம்பியான அசோக்குமாரிடம் விசாரணை நடத்த இதுவரை மூன்று முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இதே போல வருமான வரித்துறையும் சம்மன் அனுப்பியும் அசோக்குமார் இதுவரை ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அமலாக்கத்துறை கடந்த வாரம் நான்காவது முறையாக சம்மன் அனுப்பிய நிலையில், இதயம் சார்ந்த பிரச்சனைகளில் அசோக்குமார் பாதிக்கப்பட்டதால் நேரில் ஆஜராவதற்கு மேலும் 4 வாரம் அவகாசம் கேட்டுள்ளதாக அசோக் குமாரின் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இந்த முறை ஆஜராகி விளக்கம் அளிக்காத பட்சத்தில், விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள அமலாக்கத்துறை தீவிரம்காட்டி வருகிறது.
via News J : https://ift.tt/8FrYSPM
via News J : https://ift.tt/8FrYSPM
Mediaதிருவாரூர் அருகே தண்ணீரின்றி கருகிய குறுவை பயிர்களை உழுது அழித்த விவசாயிகள், அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பி.ஆர். பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.திருத்துறைப்பூண்டி அருகே மணலி பரப்பாகரம் கிராமத்தில், சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் நேரடி விதைத்தெளிப்பு மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்தனர். ஆனால், ஆற்றில் குறைந்த அளவு தண்ணீர் சென்றதால் குளம், குட்டைகளில் இதுவரை தண்ணீர் நிரம்பாததால், சாகுபடி செய்த குறுவை பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வேதனை அடைந்த விவசாயி, சாகுபடி செய்திருந்த பயிர்களை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். கடன் வாங்கி குறுவை சாகுபடி செய்தும் தண்ணீரின்றி பயிர்களை காப்பாற்ற முடியவில்லை எனவும், தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்த விவசாயிகள், விடியா அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
via News J : https://ift.tt/5oBjxJE
via News J : https://ift.tt/5oBjxJE
Mediaஉலகை எடுத்துக்கொண்டால் தினந்தோறும் ஒரு சாதனை மனிதர்கள் உதித்துக்கொண்டேதான் இருப்பார்கள். நம் அனைவருக்கும் சாதனை மீது ஒரு அதீத ஆர்வம் சிறுவயதில் இருந்தே இருக்கிறது. அதிலும் கின்னஸ் போன்ற அரிய சாதனைகள் மீது அனைவருக்கும் தீராதக் காதல் ஒன்று உள்ளது. அப்படி கின்னஸ் சாதனை மீது தீராதக் காதல் கொண்டவர்தான் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த டிக்டாக் பிரபலமான டெம்பு எபெரே.அழுகுறதுல என்னயா கின்னஸ் சாதனை..!வடிவேலு ஒரு திரைப்படத்தில் ”என்ன பெருசா அழுகுற என்ன விட்ட ஒரு நாள் பூராம் அழுவேன், அவ்ளோ அழுகையும் தேக்கி வச்சிருக்கேன்” என்று சொல்வார். அது மாதிரி தேக்கி வச்சு இருந்த ஒட்டுமொத்த அழுகையும் கொட்டி தீர்த்திருக்கிறார் நம்ம டெம்பு எபெரே. அப்படி அவர் எத்தனை நாளைக்கு அழுதார் தெரியுமா மக்களே. தொடர்ந்து ஏழு நாட்கள் அழுது இருக்கிறார். இதனால் அவருடைய கண்பார்வையே சிறிது நேரம் பாதிப்புக்கு உள்ளானது.
via News J : https://ift.tt/8VnW9m5
via News J : https://ift.tt/8VnW9m5
Mediaநாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு உரிமைத்தொகை கொடுப்போம், அதுவும் தந்தைவீட்டு சீதனம்போல மாதாமாதம் வாங்கி தமிழகத்து பெண்கள் தங்கள் உரிமைகளை நிலை நாட்டலாம் , எல்லா பெண்களின் அக்கௌண்டிற்கும் நேரடியாக ஆயிரம் ரூபாய் வந்துவிடும் என்றெல்லாம் சொல்லிவிட்டு, 2 ஆண்டுகள் கழித்து, தகுதிவாய்ந்தவர்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை என்று சொல்லி இல்லத்தரசிகளின் தலையில் இடியை இறக்கி ட்விஸ்ட் வைத்தது விடியா அரசு…அது என்னப்பா இல்லதத்தரசிக்கு தகுதி என்று மனதிற்குள்ளேயே கேள்வி கேட்டு புழுங்கத் தொடங்கினர் தமிழ்நாட்டுப் பெண்கள்… அதாவது ஒரு குடும்பத்தின் ஆண்டு வருமானம் மொத்தமாகவே 2.5 லட்சத்திற்கும் குறைவாக தான் இருக்க வேண்டுமாம். அதாவது ஒரு நாளைக்கான அந்த குடும்பத்தின் வருமானம் ரூ.694-ஐ தாண்டிவிடக்கூடாதாம்.அதேபோல ஆண்டுக்கு வீட்டு உபயோகத்திற்கு 3,600 யூனிட் மின்சாரத்தை விட குறைவாக தான் ஒரு குடும்பம் பயன்படுத்த வேண்டுமாம். அதாவது ஒரு மாதத்திற்கு 300 யூனிட்டிற்கும் குறைவாக தான் பயன்படுத்த வேண்டுமாம். இதையெல்லாம் தாண்டி, அவர்கள் அரசிடம் முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம் போன்றவைகளை பெற்றிருக்கவே கூடாதாம். இப்படி இஷ்டத்திற்கு நிபந்தனைகளை விதித்துவிட்டு, கடைசியில் திமுக அட்டை இருந்தால் தான் உதவித்தொகை என்று அறிவிக்காமல் விட்டுள்ளார்களே என்று மக்களே எண்ணும் அளவுக்கு தான், விடியா திமுக அரசின் இந்த நிபந்தனைகள் எல்லாம் இருந்தன.இந்த திட்டத்திற்கான பயணாளிகள் தொடர்பான கணக்கெடுப்புகளே இன்னும் நிறைவடையாத நிலையில், விண்ணப்ப விநியோக முகாமை இன்று திறந்து வைத்திருக்கிறார் எதற்கும் உதவாத இந்த விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்.இதற்கெல்லாம் நடுவே, இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க பெண்கள் தங்கள் வீட்டின் மின் அட்டையை கொண்டுவர வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அணையர் ஒரு அறிவிப்பு வெளியிட, அது எல்லாம் தேவையே இல்லை என்று அமைச்சர் தரப்பில் மற்றொரு அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒரு திட்டத்தை செயல்படுத்தவே இத்தனை குழப்பங்கள் இருப்பதை இந்த விடியா திமுக ஆட்சியில் மட்டும் தான் பார்க்க முடியும்.ஏற்கனவே, உங்க வீட்டு நகையயெல்லாம் கொண்டுபோய் கூட்டுறவு வங்கியில அடகுவைங்க நாங்க தள்ளுபடி பண்ணிடுவோம் என்று நாடகம் போட்டு ஏமாற்றிய அரசின் மீது கடுங்கோபத்தில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு இந்த நிகழ்வுகள் எல்லாம் எறிகிற தீயில் எண்ணை ஊற்றியதுபோல் தான்..அதிமுக ஆட்சிக் காலத்தில் எவ்வித குழப்பமும் இன்றி எல்லா திட்டங்களையும் மக்கள் உடனுக்குடன் பெற்று வந்த நிலையில், தற்போது மட்டும் எல்லாவிதத்திலும் மக்களை விடியா அரசு குழப்புவது ஏன்?அறிவிப்புக்கு ஒரு விழா, அப்ளிகேஷனுக்கு ஒரு விழா, அதுக்கொரு விழா, இதுக்கொரு விழா என்று விடியா அரசு, விழா அரசாக மாறியிருப்பது ஏன்?நகைக்கடன் விவகாரத்தில் ஏமாற்றப்பட்ட மக்களே இன்னும் தங்கள் மனக்காயம் ஆறாமல் தவிக்கும் நிலையில் உரிமைத்தொகையிலும் பெண்கள் ஏமாற்றப்பட்டதால், கடுங்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறது ஸ்டாலின் தலையிலான அரசு என்பதுதான் நிதர்சனம்.
via News J : https://ift.tt/6a94DxH
via News J : https://ift.tt/6a94DxH
Mediaமணிப்பூர் விவகாரத்தைக் கண்டித்து திமுக மகளிர் அணியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, திமுகவில் பெண்களுக்கு வழங்கப்படும் மரியாதை என்ன என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பு திமுக மகளிர் அணி சார்பாக மணிப்பூர் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளரும், சங்கரன்கோவில் எம்எல்ஏ ராஜா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் பங்கேற்றனர்.ஆர்ப்பாட்டத்தின் போது தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் கண்டன உரையாற்றினார். அப்போது, மேடையில் இருந்த மகளிர் அணி நிர்வாகி தமிழ்ச்செல்வி, “தென்காசி மாவட்ட திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்த லட்சணத்தில் நீங்கள் மணிப்பூர் சம்பவத்தைக் குறித்து பேச வேண்டாம்” எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.வெட்ட வெளியில் கட்சி மானம் பறிபோவதைக் கண்ட நிர்வாகிகள் உடனடியாக அவரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கி அவரை மேடையை விட்டு அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். விடாத தமிழ்ச்செல்வி தொடர்ந்து கட்சி நிர்வாகிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தமிழ்ச்செல்வியிடம் இருந்து நைசாக மைக்கைப் பிடுங்கிய நிர்வாகிகள் கூட்ட மேடையில் இருந்து அவரை அப்படியே ஓரங்கட்டி பின்னுக்குத் தள்ளினர்.சமத்துவம் பேசும் திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என நிர்வாகி ஒருவரே முன்வந்து பொதுவெளியில் பேசியிருப்பது திராவிடமாடலின் சமத்துவத்தை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.தென்காசி மாவட்டத்தில் ஏற்கனவே தெற்கு, வடக்கு என பிரிந்து கட்சி நிர்வாகிகள் சண்டையிட்டு வரும் நிலையில், ஆர்ப்பாட்ட மேடையிலேயே பெண் நிர்வாகி ஒருவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுப் பிரச்சனையை பேச வந்த இடத்தில் கட்சி மானம் கப்பலேறிய சம்பவத்தால் திமுக நிர்வாகிகள் செய்வதறியாது புழுவைப் போல நெளிந்து கொண்டிருந்ததைப் பார்த்து பொதுமக்கள் கேலி செய்தனர்.
via News J : https://ift.tt/zFcGUD5
via News J : https://ift.tt/zFcGUD5
Media இந்தியா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்கள் குவித்தது. விராட் கோலி 121, ரோகித் சர்மா 80, ஜெய்ஸ்வால் 57, ரவிச்சந்திரன் அஸ்வின் 56 என்று கணிசமான ரன்கள் அடித்து அணிக்கு வலு சேர்த்தனர்.தொடர்ந்து விளையாடிய மேற்கு இந்திய தீவுகள் அணி நான்காவது நாள் ஆட்ட முவிடில் 255 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கிரெய்க் பிராத்வெயில் 75 ரன்களும், அலிக் அத்தனாஸ் 37 ரன்களும் சேர்த்தனர். அந்த அணி தனது கடைசி 6 விக்கெட்டுகளை 47 ரன்களுக்கு தாரை வார்த்தது குறிப்பிடதக்கது. இந்திய அணி சார்பாக முகமது சிராஜ் 5 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள். 183 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய அணி, விரைவாக ரன்கள் சேர்க்கும் முனைப்பில் அதிரடி காட்டி விளையாடத் துவங்கினார்கள். ரொக்கித சர்மா 35 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். மூன்று சிக்சர்களும், 4 பவுண்டரிகளும் நாலாப் பக்கமும் பறக்கவிட்டார். மறுபுறம் ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடினாலும் அவரும் அடித்து ஆடி ஆட்டத்தை ஆரம்பித்தார். இந்த ஜோடி 74 பந்துகளில் 100 ரன்களை கடந்தது. இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் 100 ரன்களை எட்டிய அணி என்ற சாதனையை இந்தியா தனதாக்கியது.Mediaஇதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டில் நடைபெற்ற்ற ஆசிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இந்திய அணி 13.2 ஓவர்களில் 100 ரன்களை எட்டியிருந்ததே சாதனையாக கருதப்பட்டது. தற்போது இந்த சாதனையானது இருபத்திரண்டு இரண்டு வருடங்கள் கழித்து முறியடிக்கப்பட்டுள்ளது. அதேபோல ஆஸ்திரேலியாவின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது போர்ட் ஆஃப் ஸ்பெயினை பொறுத்தமட்டில் இந்திய அணி 24 ஓவர்களில் 181 ரன்கள் குவித்தது. இதனை 7.54 ரன் ரேட்டிங்கில் இந்திய அணி குவித்தது. இது ஓர் இன்னிங்சில் 20- ஓவர்களில் ஓர் அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் அகும். இதற்கு முன்னர் 2017 ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி 32 ஓவர்களில் 7.53 ரன் ரேட்டில் 2 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் குவித்திருந்ததே சாதனையாக கருதப்பட்டது. இச்சாதனையைத் தான் இந்திய அணி தற்போது முறியடித்துள்ளது. அதேபோல விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷான் அதிவேக அரைசதத்தினையும் அடித்திருந்தார். அவர் 33 பந்துகளில் அரை சதம் அடித்தார். கீப்பர்களில் விரைவாக அரை சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை இஷான் பெற்றுள்ளார். இதற்கு முன்பு ரிஷப் பந்த் 28 பந்துகளில் அரைசதம் அடித்ததே முதலிடத்தில் உள்ளது.
via News J : https://ift.tt/XRFJGcs
via News J : https://ift.tt/XRFJGcs
Mediaசாலைப் பகுதிகளை சோலைப் பகுதிகள் போல பராமரிப்பது ஒரு அரசின் கடமை. அதனை கடந்த ஆட்சி காலத்தில் அதிமுக திறம்பட செய்தது. ஆனால் இந்த விடியா திமுக அரசோ, எதனையும் கண்டுகொள்ளாமல் தனக்கென்ன என்று செயல்படுகிறது. சாலை விபத்துகள் ஒரு குடும்பத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த சமுதாயத்தினையும் பாதிக்கிறது. சாலை விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகள் பல குடும்பங்களை மீளாத் துயரில் ஆழ்த்தியிருக்கிறது.சாலை விபத்துகள்..!தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் மாநில நெடுஞ்சாலையில் பதிவாகின்ற விபத்துகளை கணக்கெடுத்ததன் வாயிலாக ஒரு அதிர்ச்சிகர தகவல் நமக்கு கிடைத்துள்ளது. அதாவது ஆண்டுதோறும் சாலை விபத்துகளானது அதிகரித்த வண்ணம் உள்ளது, குறைந்தபாடில்லை. அதிலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு நிகழ்ந்த 17 ஆயிரம் கோர விபத்துகளி;ல் 12 ஆயிரத்து முப்பதுரண்டு பேர் இறந்துள்ளனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நான்காயிரத்து 893 பேரும், மாநில நெடுஞ்சாலைத்துறை கீழ் உள்ள நெடுஞ்சாலையில் 952 பேரும், மாநில நெடுஞ்சாலையில் 6 ஆயிரத்து 187 பேரும் இறந்துள்ளனர்.Three die in Tamil Nadu road accident | Coimbatore News - Times of Indiaவிழிப்புணர்வின் தேவை..!தமிழகத்தைப் பொறுத்தவரை ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 18-ம் தேதி முதல் பிப்ரவரி 17-ம் தேதி வரை சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பு குறித்தும், விபத்துகள் நடைபெறா வண்ணம் தடுப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இது கடைபிடிக்கப்படுகிறது. ஆனால் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு மாதம் கடைபிடித்துக் கொண்டிருக்கும்போதே பல விபத்துகள் சாலையில் நடந்தேறுகின்றன. இந்தியாவில் சாலை நெடுஞ்சாலை விபத்துகள் நடக்கும் ஐந்து மாநிலங்களில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா ஆகியவை சாலை விபத்துகள் நடந்தேறும் முக்கிய மாநிலங்களாக சொல்லப்படுகிறது.தமிழகமே முதலிடம்..!Religion can't be a tool to divide people, ignore those seeking cheap publicity: Tamil Nadu CM MK Stalin | The Indian Expressகடந்த ஆண்டு மட்டும் மாநில வாரியாக எடுத்துக்கொண்டோமானால்,தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 16,869 ஆகும். இதில் இறப்புகள் 5,263 ஆகும். உத்தரபிரதேசத்தில் 14,540 விபத்துகளும், 8,506 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஆந்திர பிரதேசத்தில் 8,241 விபத்துகளும் 3,602 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 8,048 விபத்துகளும் 975 இறப்புகளு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிரத்தில் 7,501 விபத்துகளும் 4,080 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தை கட்டுப்கோப்பாக ஆட்சி செய்து கொண்டிருக்கிறோம் என்று மார்தட்டும் ஸ்டாலின் மற்றும் திமுகவினர் இந்த சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த எந்த மாதிரியான நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று கேட்டால் பதில் இல்லை என்பதுதான் பதில். மாறாக, கடந்த ஏழு மாதங்களில் மட்டும் சாலை விதி மீறல்கள் மூலம் 60 கோடி வருவாய் ஈட்டியிருக்கும் போக்குவரத்துத் துறை இந்த சாலை விபத்துகளை தடுக்க என்ன மாதிரியான விழிப்புணர்வு எடுத்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
via News J : https://ift.tt/cZ3OI0V
via News J : https://ift.tt/cZ3OI0V
Media“ஆவின் பன்னீர், பாதாம் பவுடர் விலை உயர்வு”தமிழக அரசின் பொதுத்துறை கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் கடந்த 2022ல் மூன்று முறை பால் பொருட்களின் விற்பனை விலையை உயர்த்தியது. குறிப்பாக கடந்தாண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி ஆவின் பாதம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்ட நிலையில் நடப்பாண்டில் அதன் விற்பனை விலை மீண்டும் ஒரு கிலோவுக்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு அதன் விலை உயர்வானது இன்று (25.07.2023) முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியளிக்கிறது.திமுக ஆட்சி பொறுப்பேற்ற இந்த இரண்டரை ஆண்டுகளில் பால் உற்பத்தியாளர்களுக்கான கொள்முதல் விலை லிட்டருக்கு வெறும் 3.00ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்ட நிலையில் பால் பொருட்களின் விற்பனை விலை மட்டும் வரலாறு காணாத வகையில் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே செல்வது மக்கள் விரோத செயலாகும். எனவே மக்கள் நலன் கருதி தற்போது உயர்த்தப்பட்டுள்ள ஆவின் பாதாம் பவுடர் மற்றும் பன்னீர் விற்பனை விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, பால் கொள்முதல் விலையை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை ஆவின் நிர்வாகமும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் எனவும், பால் கொள்முதல் உயர்வுக்கேற்ற வகையில் பால் மற்றும் பால் பொருட்களின் விற்பனை விலையை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வலியுறுத்துகிறது.
via News J : https://ift.tt/icpBdkV
via News J : https://ift.tt/icpBdkV
👍1
Mediaதமிழகத்தில் எப்போதெல்லாம் காவிரி விவகாரம் வருகிறதோ அப்போதெல்லாம் பதற்றத்தின் உச்சிக்கே சென்றுவிடுகிறது திமுக… ஏன் இந்தப் பதற்றம்? காவிரி விவகாரத்தில் உண்மைப் போராளி யார்? வரலாற்றின் பக்கங்களை புரட்டலாம் வாருங்கள்..மேகதாது அணை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் ஒருபுறமும், கர்நாடக காங்கிரஸ் கட்சிக்கு பயந்து இன்னொரு புறமும், திரிசங்கு சொர்க்கத்தில் தவித்துக்கொண்டிருக்கிறது விடியா திமுக அரசு… மேகதாது விவகாரம் வந்தாலே திமுக பதறுவதும் கதறுவதும் ஏன்? ரத்தக்கொதிப்படைவது எதனால்? இந்தக் கேள்விகளுக்கு வரலாறு விடைசொல்லும்…காவிரியில் தமிழகத்திற்கு இருக்கும் உரிமைகளை மீட்க புரட்சித்தலைவர் காலம் தொட்டே அதாவது 1986ம் ஆண்டிலிருந்தே அதிமுக உறுதியோடு போராடிக் கொண்டிருக்கிறது என்பதை இந்த தமிழகம் நன்கு அறியும். இதைத்தான் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி எல்லா மேடைகளிலும் புள்ளிவிபரங்களோடு புட்டு புட்டு வைக்கிறார். இதன் காரணமாகத்தான் எங்கே தங்கள் குட்டு வெளியாகிவிடுமோ என்ற எண்ணத்தில் பதறுகிறது திமுக…இந்த பதற்றத்திற்கு முக்கியக் காரணமே காவிரி நடுவர் மன்றத்தை அமைத்ததில் இருந்து நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை 2013ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவின் சீறிய முயற்சியால் மத்திய அரதசிதழில் அச்சிடச் செய்ததுவரை அதிமுக முன்னெடுத்த போராட்டங்கள் வெளிவந்தால் எங்கே தங்கள் சாயம் வெளுத்துவிடுமோ என்று திமுக திணறுவது நியாயம்தானே…மேகதாதுவில் அணை கட்ட தற்போதைய கர்நாடக அரசு அதிதீவிர முயற்சிகளை மேற்கொள்ளுகையில், அதனை எதிர்க்க திராணியில்லாமல் மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து கடிதம்கொடுக்கிறது இந்த முதுகெலும்பில்லாத திமுக அரசு… 2009 ம் ஆண்டு முதல் 2019 ம் ஆண்டு வரை பத்தாண்டு காலமாக மத்திய அரசில் அங்கம் வகித்த, திமுக காவிரிப் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர துரும்பைக் கூட கிள்ளிப்போடாதது ஏன்? காங்கிரஸ், பாஜக என்று மத்திய அரசில் அங்கம் வகித்தபோது, தன் தமையனுக்கு மத்திய அரசு பதவி வேண்டி தூது அனுப்பிய திமுக, காவிரிக்கு கதவைக்கூட தட்டாதது ஏன்? கர்நாடக காங்கிரஸ் கட்சியின் பதவியேற்பு விழாவிற்கு பவுசாகச் செல்லும் முதல்வர், காவிரி நீர் கேட்டு செல்லாதது ஏன்? என்ற கேள்விகளை சரமாரியாகக் தொடுத்தால் திமுக வெலவெலத்துப்போவது நியாயம்தானே….காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை காப்பாற்றிக் கொடுத்ததற்காகத்தானே காவிரி டெல்டா விவசாய சங்கங்கள் ஒன்றிணைந்து – பொன்னியின் செல்வி என்ற பட்டத்தை மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவிற்கு அளித்தார்கள்… இந்த கதையெல்லாம் தூசி தட்டி தமிழக மக்களுக்கு ஞாபகம் வந்துவிட்டால் என்ன செய்வது என்று திமுக பதறுவதுநியாயம் தானே…..கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதத்தில் சட்டமன்றத்தில் திமுக அரசு கொண்டுவந்த தனிநபர் தீர்மானத்திற்கு ஆதரவு அளித்தது அதிமுக… திமுக கொண்டு வந்த தீர்மானம் என்றாலும் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல், காவிரி விவகாரத்தில் என்றென்றும் மக்கள் பக்கம் தான் அதிமுக என்பதற்கு சான்றாக தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்து இந்த காவிரிப் பிரச்சனையில் உண்மையான போராளி தாங்கள் தான் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்துக்காட்டியது அதிமுகதான்…காலங்கடந்து கதவைத்தட்டினாலும் பரவாயில்லை… காவிரிக்காக ஒன்றிணைந்து போராட நாங்கள் தயார் .. எங்களோடு வாருங்கள் என்று ஆளுங்கட்சியையே கைபிடித்துக் கூட்டிச்செல்கிறது அதிமுக… ஏனெனில் அதிமுக மக்களுக்கான இயக்கம்… மக்களுக்கான தலைமையைக் கொண்ட ஓர் இயக்கம்..– மனோஜ்குமார் கோபாலன், இணையாசிரியர்
via News J : https://ift.tt/kmV9TRf
via News J : https://ift.tt/kmV9TRf
Mediaஉலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான “ஏர் பஸ் பெலுகா” எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை விமான நிலையம் வந்தது. இதில் ஒரே நேரத்தில் 47 டன் எடை சரக்குகளை ஏற்ற முடியுமாம்.குஜராத்தில் இருந்து தாய்லாந்து சென்று கொண்டிருந்த ஏர்பஸ் பெலுகா விமானமானது எரிபொருள் நிரப்புவதற்காக சென்னை விமானநிலையம் இறங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானம் என்று அழைக்கப்படும் பெலுகா ‘திமிங்கலம்’ வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏர்பஸ் நிறுவனமானது நெதர்லாந்தை தலைமையிடமாக வைத்து செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை அலுவலகம் ஃபிரான்ஸ் நாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.Airbus BelugaXL - Wikipediaஇந்தநிலையில்தான் ஏர்பஸ் நிறுவனமானது பெரிய ரக பொருட்களையும், பல்வேறு வடிவிலான சரக்குகளையும் விமானத்தில் ஏற்றிச் செல்ல வசதியாக ஒரு விமானத்தை தயாரிக்க நினைத்தது. அதன்படி திமிங்கலம் வடிவில் சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் என்கிற பெலுகா (ஏ300-608எஸ்டி) என்ற புதிய சரக்கு விமானத்தை 1995 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது. இந்த சரக்கு விமானமானது ஒரே நேரத்தில் 47,000 கிலோ (47 டன் ) எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது. இந்த ரக பெரிய சரக்கு விமானம், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9:30 மணி அளவில் சென்னை பழைய விமான நிலையம் வந்தது.இதே விமானம் கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தெதி குஜராத்தில் இருந்து தாய்லாந்து சென்று கொண்டிருக்கும்போது சென்னை விமான நிலையத்தில் இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு சென்றது. தற்போது ஓராண்டு கழித்து மீண்டும் அந்த நிகழ்வு தற்போது அரங்கேறியுள்ளது. இதனை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிர்ந்து வருகின்றனர்.
via News J : https://ift.tt/HQqA7rL
via News J : https://ift.tt/HQqA7rL
Mediaஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இ சேவை மையங்களை மூட விடியா திமுக அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விடியா அரசின் செயலுக்கு எதிர்ப்பும், கண்டங்களும் எழுந்துள்ளன.விடியா திமுக அரசு பொறுப்பேற்றது முதல் அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட மக்கள் நல திட்டங்களுக்கு மூடுவிழா நடத்துவதிலேயே குறிக்கோளாக இருந்து வருகிறது. அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா உப்பு, அம்மா மருந்தகம், அம்மா சிமெண்ட், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை, விடியா திமுக அரசு முடக்கியுள்ளது.அந்த வரிசையில் தற்போது ஏழை எளிய அடித்தட்டு மக்கள் பயன் பெற்று வந்த இ சேவை மையங்களையும் மூட, விடியா திமுக அரசு சதி செய்து வருவதாக கூறப்படுகிறது.தமிழகம் முழுவதும் இயங்கிக் கொண்டிருக்கும் இசேவை மையங்களை மூட விடியா அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ஏழை எளிய மக்கள் வட்டாட்சியர் அலுவலகம் சென்று வருமானச் சான்றிதழ், சாதி சான்றிதழ் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்களை வாங்க பல நாட்கள் காத்துக்கிடக்கும் நிலை இருந்தது. இதனை மாற்றி மக்கள் பயன்பெறும் வகையில், இ சேவை மையம் என்ற ஒரு உன்னத திட்டத்தை புரட்சித்தலைவி ஜெயலலிதா, கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். அதன் மூலம், வருமானச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை எளிதில் பெற்று லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.அத்துடன் கலப்பு திருமண நிதி உதவித் திட்டம், விதவைகள் நிதி உதவித் திட்டம், விதவை மறுமண நிதி உதவித் திட்டம், ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதி உதவித் திட்டம் போன்ற சமூகநலத் துறை திட்டங்கள் சார்ந்த சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள இ சேவை மையங்களில், சொத்துவரி செலுத்துதல், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் இ சேவை மையங்களை மூட, விடியா அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக வாய் மொழி உத்தவை பிறப்பித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.விடியா அரசின் செயலுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இ சேவை மையங்களை மூடுவதை உடனே கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை குறிவைத்து மூடுவிழா நடத்தி வரும் விடியா அரசு, மக்களை பாதிக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்பது தான் புரியாத புதிராக உள்ளது.
via News J : https://ift.tt/jONWtD4
via News J : https://ift.tt/jONWtD4
Mediaசட்ட விரோதப் பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டது அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். செந்தில்பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜிக்கு முதலில் இருந்தே ஆதரவாக தீர்ப்பு வழங்கிய நீதிபதி நிஷா பானு தான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.இந்த வழக்கானது முதலில் இரு நீதிபதிகள் அமர்வில் தாக்கல் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டது. அதில் நீதிபதிகள் நிஷா பானு மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கியிருந்தனர். அதில் இரண்டு நீதிபதிகளும் இருவேறு தீர்ப்புகள் வழங்கியதால், மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி.கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.Mediaஇந்த வழக்கின் மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் பிறப்பித்த தீர்ப்பில், செந்தில் பாலாஜியை, காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறையினருக்கு அதிகாரம் உள்ளது. இந்த இடத்தில், நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதோடு, அதில் உடன்படுகிறேன். செந்தில் பாலாஜியின் கைது சட்டப்படியானது என்று தீர்ப்பு வழங்கினார். கிட்டத்தட்ட இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்று அனைத்து தரப்பினரிடையும் பரவலாக பேசப்பட்டது.செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை எப்போதில் இருந்து காவலில் எடுத்து விசாரிக்கலாம் என்பது குறித்து முடிவெடுக்க, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வான நீதிபதி நிஷாபானு, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் பரிந்துரைத்திருந்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று, இரு நீதிபதிகள் அமர்வுக்கு தலைமை நீதபதி ஒப்புதல் அளித்திருந்தார்.இதைத் தொடர்ந்து இந்த வழக்கு, நீதிபதிகள் நிஷாபானு, பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி நிஷாபானு, “இந்த வழக்கைப் பொறுத்தவரை, சொல்வதற்கு ஏதுமில்லை. இந்த வழக்கில் ஏற்கெனவே நான் பிறப்பித்த தீர்ப்பில் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.அப்போது குறுக்கிட்ட மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நீதிமன்ற காவலை முடிவு செய்வதற்காகத்தான் மூன்றாவது நீதிபதி, இந்த வழக்கை மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்குப் பட்டியலிட பரிந்துரைத்துள்ளார்” என்று தெரிவித்தார்.அப்போது செந்தில் பாலாஜி மனைவியின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, “இந்த விவகாரம் தொடர்பாக இரு தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது” என்று தெரிவித்தார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் அனைத்து அம்சங்கள் குறித்தும் உச்ச நீதிமன்றமே முடிவெடுக்கும். எனவே, இந்த வழக்கை இங்கு நிலுவையில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்று கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.
via News J : https://ift.tt/6rzyHE1
via News J : https://ift.tt/6rzyHE1
👍1
Mediaதமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் நடக்கக்கூடிய எந்தவிதமான அநீதிகளையும் எதிர்த்து ஓங்கி குரல் கொடுக்கக்கூடிய இயக்கம் அதிமுக என முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி மதுரை வலையங்குளம் பகுதியில், மிக பிரமாண்டமாக அதிமுக மாநாடு நடைபெற உள்ளது. இந்நிலையில், மாநாடு முன்னேற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். அப்போது, காண்போரை வியக்கும் வகையில், மாநாட்டின் நுழைவு வாயில் போன்ற பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தப்பட்டது. இதைதொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், உலகிற்கு அதிமுகவின் வலிமையை பறைசாற்றம் வகையிலும், வரக்கூடிய தேர்தல்களில் ஆளும் கட்சியாகும் அளவிற்கு மதுரை மாநாடு அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றார். மேலும், மணிப்பூர் விவகாரத்திலும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி ஓங்கி குரல் கொடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/yADGRWj
via News J : https://ift.tt/yADGRWj
Mediaசென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் இல்லதரசிகள் அதிர்ச்சியடைந்தனர்.கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று மொத்த விற்பனையில் கிலோவுக்கு 85 ரூபாய்க்கு விற்பனையானயான தக்காளி இன்று மீண்டும் 15 ரூபாய் உயர்ந்து 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 650 டன் தக்காளி வரத்து இருந்த நிலையில் இன்று 550 டன் தக்காளி மட்டுமே இறக்குமதியாகி உள்ளது. மேலும் ஒரு கிலோ கத்தரிக்காய் 45 ரூபாய்க்கும், கேரட் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 35 ரூபாய்க்கும், பீன்ஸ் 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 40 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் 70 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் 22 ரூபாய்க்கும், முருங்கைக்காய் 40 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் 20 ரூபாய்க்கும் மற்றும் சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
via News J : https://ift.tt/Ghwl5DP
via News J : https://ift.tt/Ghwl5DP
Mediaமுன்னள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அளித்த பேட்டியை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அதிமுகவின் ஐடி பிரிவை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து, அதிமுகவினர் வேதாரண்யம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நாகை மாவட்டம் வேதாரண்யம் நகராட்சியில் 22 தற்காலிக தூய்மை பணியாளர்களை நகராட்சி நிர்வாகம் நீக்கியதை கண்டித்து, கடந்த மூன்றாம் தேதி 8 நகராட்சி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஆதரித்து நகராட்சி வாயிலில் முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினருமான ஓஎஸ் மணியன் பேட்டியளித்தார். இந்த பேட்டியை அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த கவிதரன் என்பவர், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தார். இதுகுறித்து திமுகவினர் காவல்நிலையத்தில் பொய் புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனை வைத்து வேதாரண்யம் காவல் துறையினர் அதிமுக ஐடி பிரிவை சேர்ந்த கவிதரனை கைது செய்துள்ளனர். இதனை கண்டிக்கும் வகையில் அதிமுகவினர் வேதாரண்யம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
via News J : https://ift.tt/b512I4s
via News J : https://ift.tt/b512I4s