News J
595 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaசெந்தில்பாலாஜி தொடர்பான அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு, உடல்நலம் குன்றிய நிலையில் மருத்துவமனையில் நீதிமன்றக் காவலில் உள்ளார். கைதினைத் தொடர்ந்து அவரது இலாகாக்கள் மாற்றப்பட்டது. தங்கம் தென்னரசு மின்சாரத்துறையையும், முத்துச்சாமி மதுவிலக்குத் துறையையும் பெற்றுக்கொண்டு, செந்தில்பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்ற அரசாணையை திமுக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.தற்போது இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என்ற அரசாணையை ரத்து செய்யக்கோரி தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவரும், வழக்கறிஞருமான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்துள்ளார்.அம்மனுவில் நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. அமைச்சர்கள் நியமிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு உட்பட்டது. மேலும் செந்தில் பாலாஜியை இலாகா இல்லா அமைச்சராக நீடிக்க அனுமதிப்பது ஆளுநரின் தனிப்பட்ட அதிகாரத்துக்கு விரோதமானது என்று கூறப்பட்டிருந்தது.  இந்த வழக்கானது சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

via News J : https://ift.tt/knYRadI
Media4 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் ஒருநாள் மழைக்கே தாங்கவில்லை சென்னை. இந்த நேரத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றிருக்கும் சென்னை மேயர் ப்ரியா மீது கடுங்கோபத்தில் இருக்கின்றனர் சென்னை மக்கள்… எப்போதும் மக்களை சோதிக்கும் இந்த சென்னை வெள்ளத்திற்கு எப்போதுதான் கிடைக்கும் விடியல்? என்று அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.யப்பப்பா… எறியற வெயில் எப்படா முடியும்? வெக்கை தாங்கல… உக்காரக்கூட முடியல… மழைய பாக்க மாட்டோமா என்று வானம் பார்த்த பூமியாக கிடந்த சென்னையை வருண பகவான் குளிர்வித்த பிறகு, ஐயையோ… மழையே வேணாம் பா என்று புலம்ப ஆரம்பித்து விட்டனர் சென்னைவாசிகள்..நம்மைக் குளிர்விக்க வந்த மழையை நினைத்து சந்தோஷப்படுவதா? இல்லை குளம் போல தேங்கி நிற்கும் தண்ணீருக்குள் விழுந்துவிடாமல் பத்திரமாய் இருப்பது எப்படி என்று கவலைப்படுவதா? என்னடா இது சென்னைகாரங்களுக்கு வந்த சோதனை …கொட்டித்தீர்க்கும் மழைநீர், வடிந்துவிடாமல், கட்டிப்பிடித்து உறவாடிக்கொண்டிருக்கிறது சென்னை சாலைகள்.. இப்படி ஒரு மழைக் கவிதையா என்று சமூகவலைதளங்களில் பூரிப்படைந்தாலும், வீட்டை விட்டு வெளியே வந்தால் சாலைகளில் தோன்றியிருக்கும் திடீர் நீச்சல்குளங்கள், நம்மை நீக்கமற ஆட்கொண்டுவிடுமோ என்ற அச்சம் ஒவ்வொரு சென்னைவாசிக்கும் உள்ளூர இருக்கிறதுதான்…வழக்கமாக டிசம்பரில்தானே இந்த திடீர் ஸ்விம்மிங் பூல்கள் தோன்றும்,… இது என்ன ஒரு நாள் மழைக்கே அதுவும் ஜூன் மாதத்திலேயே இப்படி இம்சிக்கிறது இந்த மழை என்று மழையை கடிந்து கொள்ள வேண்டாம்.. சென்னையின் இந்த நிலைக்கு காரணம் சாட்ஷாத் இந்த விடியா அரசுதான்..சென்னை மாநகராட்சியில் 4ஆயிரத்து70 கோடி ரூபாய் மதிப்பில், ஆயிரத்து 33 கிலோ மீட்டர் நீளத்துக்கு புதிதாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கடந்த ஆண்டே தொடங்கப்பட்டது. இதில்,80 சதவீத பணிகள் முடிந்துவிட்டன என்று ஏற்கனவே கூறியிருந்தால் சென்னை மேயர் பிரியா… மீதமுள்ள பணிகளும் வெகுவிரைவில் முடிக்கப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.. ஆனால்,. ஒரு நாள் மழைக்கே தாங்காமல் டார் டாராகிக் கிடக்கிறது சென்னை … இருக்கிற சுரங்கப்பாதைகளில் முக்கால்வாசிக்கும் மேலாக தண்ணீரில் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன… ஆனால், கொஞ்சம் கூட நாக்கூசாசமல், அப்டிலாம் எங்கையும் தண்ணி தேங்கவே இல்லையே என்று கூறுகிறார் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர் ராமச்சந்திரன்.. அப்போ இதுலாம் என்னங்கையா???சரி சென்னையில் எங்கேயும் தண்ணீர் தேங்கவில்லை என்றால், பிறகு எதற்கு 2000 பேரை வேலைக்கு அனுப்பிருக்கிறோம், எல்லா வேலையும் முடித்துவிட்டோம் என்று கதை அளந்து விட்டிருக்கிறார்?இதுஒரு புறம் என்றால், சென்னை மேயர், துணை மேயர், மாநகராட்சி ஆணையர் எல்லோம் வெளிநாடு சுற்றுலா சென்றிருக்கின்றனர் என்ற செய்திதான் சென்னை மக்களை மேலும் எரிச்சலடைய வைத்திருக்கிறதே.ஆக, 4ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்து மழைநீர் வடிகால்வாய் பணிகளை மேற்கொண்டும் ஒரு நாள் மழைக்கே ஏன் தாங்கவில்லை சென்னை? இன்னமும் மழைநீர் வடிகால்வாய் பணிகளை ஏன் முடிக்கவில்லை இந்த விடியா அரசு? வெளிநாடு சுற்றுலாவிற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை சென்னைக்கு கொடுப்பாரா மேயர்? சென்னை வெள்ளத்திற்கு எப்போது கிடைக்கும் விடியல்? என்பன போன்று கேள்விகளுக்கு விடையே கொடுக்கக்கூடாது என்பதுதான் இந்த விடியா அரசின் ஒரே கொள்கை.

via News J : https://ift.tt/n02ypkZ
Mediaகைதி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய சம்மனுக்கு இன்றும் ஆஜராகவில்லை.கடந்த மே மாதம் வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய 40 இடங்களில் சோதனை நடத்தினர் . இதன் தொடர்ச்சியாக சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக ஆஜராகுமாறு இரண்டு முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் செந்தில் பாலாஜி குறித்து விசாரிப்பதற்காக அவரது தம்பி அசோக்குமாருக்கு அமலாக்க துறையும் சம்மன் அனுப்பி இருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் கைதி செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று (20ம் தேதி) ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனுக்கு அசோக்குமார் இன்றும் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறை
ஆகிய இரண்டு விசாரணை அமைப்புகளும் அனுப்பிய சம்மன் தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளிப்பதற்கு அசோக்குமார் தரப்பில் சிறிது கால அவகாசம் கேட்க உள்ளனர்.

via News J : https://ift.tt/GIk2BFO
Mediaதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு இந்திய விமான நிலைய ஆணையம் சிறப்பு அனுமதி அளித்துள்ளது.இந்தியாவில் மிக முக்கிய விருந்தினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதலமைச்சர்கள் ஆகியோருக்கு Z பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுவது என்பது தொன்றுதொட்டு விமான நிலைய ஆணையமானது செய்து வருகிறது. இதில் Z ப்ளஸ் பாதுகாப்பு இருப்பவர்கள் இந்திய விமானத்துறை ஆணையத்திடம் சிறப்பு அனுமதியை பெற்று, விமானங்களை பயன்படுத்தும் பொழுது நேரடியாக விமானம் அருகே வந்து விமானத்தில் ஏறி பயணம் செய்யும் வகையில் சிறப்பு அனுமதியை பெறலாம். அந்த வகையில் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களுக்கு ஏற்கனவே இசட் பிளஸ் பாதுகாப்பு உள்ள நிலையில், தற்போது விமான போக்குவரத்தை பயன்படுத்தும் பொழுது நேரடியாக விமானம் அருகே வரை காரில் சென்று அங்கிருந்து விமானத்தில் பயணிக்கவும், அதேபோன்று விமானத்தில் பயணித்த பிறகு விமான நிற்கும் இடம் வரை காரில் சென்று சிறப்பு நுழைவாயில் வழியாக வெளியேறும் வகையில் சிறப்பு அனுமதியை இந்திய விமான நிலைய ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

via News J : https://ift.tt/CpDFLf3
Mediaஅமைச்சர் பொன்முடி திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறும்போதெல்லாம் நாவடக்கத்தைப் பேணாமல் வம்படியாக பேசி பொதுமக்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொள்வார். அதுமட்டுமல்லாமல் கூடுதலாக ஊழலிலும் ஈடுபடுவார். அப்படிப்பட்ட ஒரு ஊழல்தான் தற்போது அம்பலப்பட்டுப் போய் இருக்கிறது. திமுகவின் ஆட்சிகாலத்தில் அதாவது, 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி ஆகியோர் மீது அளவுக்கு மீறி மண் எடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அன்றைக்கு வழக்குத் தொடரப்பட்டது. தற்போது அந்த வழக்கினை தடை செய்யக்கோரி  உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை தடை செய்யமுடியாது என்று தற்போது உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.அளவுக்கு மீறி செம்மண் எடுத்ததாக சொல்லப்பட்ட இந்த வழக்கில் அன்றைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செம்மண் அள்ளுவதற்கான டெண்டரினை பொன்முடிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். பின்னர், பொன்முடிக்கு நெருக்கமான ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. விதிகளை மீறி மணலை எடுக்கப்பட்டதாகவும், அளவுக்குமீறி மணலை அள்ளுவதாகவும் இவர்கள்மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டது. இவர்களால் 28.37 கோடி ரூபாய் அரசுக்கு வரி இழப்பீடானது ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றப்பிரிவு போலிசார் அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.குவாரி உரிமம் வழங்க உடந்தையாக இருந்ததாக, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.தற்போது இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும், இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரியும் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்து, விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.இதனைத் தொடர்ந்து திமுக உடன்பிறப்புகள் ஆட்டம் கண்டு போயியுள்ளனர். ஏற்கனவே செந்தில்பாலாஜியால் திமுகவின் அடிநாதமே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் திமுகவின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி இப்படி வசமாக வந்து சிக்கியிருப்பது திடீர் திருப்பத்தை திமுகவிலும் தமிழக அரசியலிலும் ஏற்படுத்துமா? என்று கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்னெடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இன்னொரு அமைச்சரின் விக்கெட்டும் க்ளோசா என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.

via News J : https://ift.tt/oCw0bGl
Mediaகடந்த வருடம் ஜூலை 24 ஆம் தேதி இருபது லட்சம் மாணவர்கள் தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியத்தின் குரூப் 4 தேர்வினை எழுதினார்கள். பிறகு எட்டு மாதங்களாக அவர்களுக்கான தேர்வு மதிப்பெண்ணை வெளியிடாமல் தட்டிக் கழித்துவந்த ஆணையம் மார்ச் இறுதியில் தேர்வு முடிவுகளை வெளியிட்டது. அதன் பிறகு கலந்தாய்வுக்காக தற்போது பல்வேறு மாணவர்கள் காத்திருந்து வருகின்றனர். இந்நிலையில் பல லட்ச மாணவர்கள் தங்கள் உழைப்பை இந்த தேர்வுக்கென ஒதுக்கி முழு முயற்சியையும் கொடுத்து தேர்வு எழுதியிருப்பதால், அவர்களுக்கான காலிப் பணியிடங்கள் அதிகமாக இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தொடர் கோரிக்கையாக வைக்கப்பட்டிருந்தது.இதனை அடுத்து அதிமுக கழகப் பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்திற்கும் விடியா திமுக அரசிற்கும் தொடர் வலியுறுத்தல்களாய், பல லட்ச மாணவர்களின் கோரிக்கையை நிறைவேற்றி வைக்குமாறு கூறியிருந்தார். டிஎன்பிஎஸ்சி மாணவர்களுக்கு ஆதரவு குரலாக அனைத்து இடங்களிலும் ஓங்கி ஒலித்தவர்களில் முதன்மையானவராக இருந்தார். தற்போது அதனையொட்டி டிஎன்பிஎஸ்சி ஒரு முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.குரூப் 4 தேர்வுக்கான காலிப் பணியிடங்கள் 10,117ல் இருந்து, 10,748 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதுவுமே தேர்வர்களுக்கு திருப்தி அளிக்காத நிலையில்தான் உள்ளது. இரண்டு ஆண்டுகளாக எந்தத் தேர்வுமே நடைபெறாமல் இருந்தநிலையில் இன்னும் சில காலிப் பணியிடங்களை அதிகரித்து இருக்கலாம் என்பது தேர்வர்களின் கோரிக்கையாக உள்ளது.

via News J : https://ift.tt/n57N6Ai
Media60ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், போக்குவரத்து பணியாளர்களும் போராடும் நிலையில் அவர்களையும் கண்டு கொள்ளாத விடியா ஆட்சி மீது, போராட்டக்காரர்கள் அதிருப்தியில் இருந்துவருவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களால்தான் திமுக ஆட்சி வருகிறது என்றெல்லாம் நைஸாகப் பேசி அவர்களைத் தங்களின் ஓட்டு வங்கியாக மட்டுமே வைத்திருந்த திமுகவுக்கு எதிராக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.மின்வாரியத்தில் சுமார் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.ஏற்கனவே இருக்கும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க முடியாத நிலையில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினால் அது இன்னும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்னும் அச்சத்தால், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை மிரட்டியுள்ள அரசு. பணியாளர் வருகைப் பதிவேட்டை காலை 10.45மணிக்கே அனுப்ப வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என முந்தைய நாளே எச்சரித்தது. ஆனாலும் அரசுக்கு எதிராக மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக மின்வாரிய ஊழியர்கள் மட்டுமல்ல, கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலரும் போக்குவரத்து துறையில் தனியார் மயத்தை கொண்டுவருவதை எதிர்த்து போராடியுள்ளனர். அதே போன்று போக்குவரத்து துறை காலிப் பணியிடங்களை நிரப்பவும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதே போன்று ஆசிரியர்கள் தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிபோராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் மற்றும் பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர், பகுதி நேர ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பணி நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.இந்தப் போராட்டங்களின் காரணமாக ஸ்டாலினின் அரசு விழிபிதுங்கி நிற்கிறது….
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்துறையை தங்கம் தென்னரசுக்கு கொடுத்த நிலையில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளுமா? தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் விடியா திமுக அரசு மீது அனைத்து தரப்பினருமே கடுப்பில் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்

via News J : https://ift.tt/nAp2TMw
Mediaதமிழகத்தில் நேற்று மூடப்பட்ட மதுக்கடைகள் பட்டியலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்த கடைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வழிப்பாட்டுத்தளங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மூடப்படவில்லை என தேசிய குற்ற மற்றும் ஊழல் தடுப்பு மையம் குற்றம்சாட்டியுள்ளது.தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5 ஆயிரத்து 329 கடைகளை நிர்வகித்து வருகிறது. அரசு விதிகளின்படி மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வழிப்பாட்டு தலம் அல்லது கல்வி நிலையங்களில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்குள்ளும், பிற பகுதிகளில் 100 மீட்டர் தூரத்திற்குள்ளும் மது கடைகள் அமைக்க கூடாது. மேலும், குடியிருப்புகளுக்கு அருகில் மக்களின் கடும் எதிர்ப்புகளுக்கிடையே மதுபானக்  கடைகள் செயல்படுகின்றன. மேலும், கோயில்கள், தேவாலயங்கள் அருகிலும் மதுக்கடைகள் செயல்பட்டு வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் மதுக் கடைகள் குறைப்பு என்ற பெயரில், நேற்று 500 மதுக் கடைகளை மூடுவதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதில் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த மதுக்கடைகள் மூடப்படவில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்து உள்ளது. மாறாக வருமானம் குறைவாக உள்ள மது கடைகள், அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு முறையாக கமிஷன் தராத கடைகள் கண்டறியப்பட்டு மூடப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.Minister V Senthil Balaji Sadi 45 Tasmac Shops Closed In Tamil Nadu | கடந்த ஒரு வருடத்தில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது -அமைச்சர் செந்தில் பாலாஜி | Tamil Nadu News in Tamilஇது குறித்து தேசிய குற்ற மற்றும் ஊழல் தடுப்பு மைய அமைப்பின் இயக்குனர் சீனிவாசன் கூறுகையில், சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தில் சர்ச், பள்ளிகள் உள்ள இடத்தில் 8943 என்ற எண்ணில் செயல்படும் மது கடையை மூடுமாறு பலமுறை டாஸ்மார்க் மாவட்ட மேலாளரிடம் மக்கள் சார்பில் புகார் மனு அளித்ததாகவும், ஆனால் அந்த அந்த கடையின் மூலம் நல்ல வருவாய் வருவதால் அந்த கடை மூடாமல் இருப்பதாக தெரிவித்தார். இதேபோல் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் அருகில் உள்ள மது கடை மூடப்படாமல் உள்ளன.மேலும் மதுக்கடைகளை மூடக்கோரி மக்கள் சாலைகளில் இறங்கி போராடிய இடங்களில் உள்ள பல மது கடைகள் மூடப்படவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மது கடைகளின் எண்ணிக்கையை குறைக்கிறோம் என்ற பெயரில் விற்பனை குறைவாக உள்ள கடைகளையும், செந்தில் பாலாஜிக்கு தினமும் கமிஷன் முறையாக தராத கடைகளை மட்டும் கண்டறிந்து மூடியிருப்கதாகவும் தேசிய குற்ற மற்றும் ஊழல் தடுப்பு மைய்யம் குற்றம்சாட்டியுள்ளது.

via News J : https://ift.tt/Z0C8QJ3
Mediaதமிழகத்தில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் பா. செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திகுறிப்பில், தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்குகளில் கிழக்கு-மேற்கு திசை காற்றும் சந்த்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றைக்கு ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 24,25,26 ஆம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது, முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அவர் தெரிவித்தார்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காட்சியளிக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் பலத்த மழை பெய்ய வாய்ப்பிருக்கும் என்றும், மேலும் வெப்பநிலை 80 டிகிரி முதல் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வரை இருக்கும் என்றும் கூடுதல் தகவலையும் அளித்துள்ளார்.

via News J : https://ift.tt/iukOL6b
Mediaதிருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் க,மோகன் காந்தி தலைமையில், ஆங்கிலத் துறை பேராசிரியர் மதன்குமார், காணிநிலம் முனிசாமி, செங்கத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் மாணிக்கம் ஆகியோர், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே கள ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின் பொருட்டு, சில முக்கிய சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பல்லவர் கால நடுகல் ஒன்றையும், தாய் தெய்வச்சிலை ஒன்றையும் கண்டெடுத்துள்ளார்கள். இது சார்ந்து, முனைவர் க.மோகன் காந்தி கூறும்போது, “திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மலையில் லஷ்மி நரசிம்மர் கோயில் உள்ளது. அந்த மலையின் அடிவாரத்தில் போளூர் பெரிய ஏரியின் கிழக்கு கரையில் “பொங்கல் பிரியன்” என்ற பெயரில் பல குடும்பங்களின் குலதெய்வமாக பல்லவர் கால நடுகல் ஒன்று வணங்கப்படுவதை நாங்கள் ஆய்வு மூலம் கண்டறிந்தோம் என்றும், இந்த நடுகள் 3 அடி உயரமும் 2 அடி அகலமும் கொண்ட அழகான பலகை கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கல்லின் இடது கையில் வில்லும், வலது கையில் அம்பை எய்தபடி குதிரையில் அமர்ந்த கோலத்தில் நடுகல் வீரன் உள்ளார். வீரனின் வலது பக்க பின் தோள் பகுதியில் அம்புக்கூடு ஒன்றும் உள்ளது.வீரனின் தோற்றமும் குதிரையின் தோற்றமும் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. சேனம், கடிவாளத்துடன் குதிரையின் தோற்றம் உள்ளது. குதிரையின் முன்னங்கால்களுக்கு முன்பு சிறிய நாய் உருவம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நடுகல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். போரில் பகைவர்களை வீழ்த்தி இறந்த போர்வீரருக்கு அவரின் நினைவைப் போற்றும் வகையில் நடுகல் எழுப்பப்படும். இது அன்றைய மரபு. இங்கு காணப்படும் நடுகல் வீரனும் போர்க்களத்தில் பகைவர்களிடம் இருந்து தனது நாட்டை பாதுகாத்து உயிர்விட்டவர் என கருதப்படுகிறது. அந்த வீரனின் வளர்ப்பு நாயும் போரில் பங்கு கொண்டு எதிரிகளை வீழ்த்தியிருக்கிறது என்பது இந்த நடுகல் மூலம் புலப்படுகிறது. நடுகற்களில் நாய்கள் இடம் பெறுவது அரிதிலும் அரிது.Mediaஇந்த நடுகல்லுக்கு அருகே பல்லவர் காலத்தைச் சேர்ந்த தாய் தெய்வச் சிற்பம் ஒன்றும் காணப்படுகிறது. இது 3.5 அடி உயரமும், 2 அடி அகலமும் உள்ள பலகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. வலது காலை தொங்கவிட்டும், இடது காலை மடித்த கோலத்திலும் உள்ளது. இந்த 2 சிற்பங்களும் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். சுமார் 1200 ஆண்டுகள் பழமையுடையவை. இந்தச் சிலையினை போளூர் மக்கள் குலதெய்வமாக வணங்கி வருகின்றனர்.

via News J : https://ift.tt/7TkF95j
Mediaதிருச்சியப் பொறுத்தவரைக்கும் திமுகவுக்கு தலைவலிதான். ஏன்னா அங்க கே.என்.நேரு, அன்பில்மகேஷ்னு ரெண்டு அமைச்சர்கள் இருக்கிறதோட, நாடாளுமன்ற உறுப்பினர் சிவாவும் இருக்கிறதால, அங்க மூணாப் பிரிஞ்சி முட்டல் மோதல்தான்… ஆனா வெளியிலபார்த்தா முஸ்தபா முஸ்தபான்னு தோள்ல கைய போட்டுட்டு போட்டோவுக்கும், வீடியோவுக்கும் விளம்பரம் கொடுத்துட்டு இருப்பாங்க… இப்பக்கூட சமீபத்துல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துல வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்துச்சு. அதுல அமைச்சர் அன்பில் மகேஷ், எம்.எல்.ஏக்கள் அப்துல் சமது, இனிக்கோ இருதயராஜ் கலந்துகிட்டாங்க… ஆனா அமைச்சர் நேரு அந்த கூட்டத்தில கலந்துக்கலையாம்… அதனால அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களான பழனியாண்டி, தியாகரான், ஸ்டாலின்குமார், சவுந்திர பாண்டியன் மற்றும் மேயர் அன்பழகனோ பங்கேற்கலையாம்… அதுமட்டுமில்லாம நேரு தலைமையில தனியாக ஆய்வுக்கூட்டம் போடணும்னு அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆட்சியர்கிட்ட வலியுறுத்தி இருக்காங்களாம்… அமைச்சர்களோட ஈகோவால அரசு அதிகாரிகளும் யார் சொல்லறத கேக்குறது? இப்படி இருந்தா பணிகள எப்படிப் பார்க்கிறதுன்னு அல்லாடிக்கிட்டு இருக்காங்களாம்… அமைச்சர்கள் மீதான ஊழல்புகார்களால ஏற்கனவே கட்சித் தலைமை கடுகளவு கூட தூங்காம இருக்கு… இப்ப அமைச்சர்களுக்குள்ள நடக்குற ஈகோ யுத்தம் தலைமைய தலைவலியிலேயே வச்சிருக்கும் போல-ன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க!

via News J : https://ift.tt/zdrUYo0
Mediaஉலக அளவில் இன்றைக்கு ஒலிம்பிக் தினமானது சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி கழக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒலிம்பிக் தின வாழ்த்தினை அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தெரிவித்தார். அவரது டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் முதுமொழிக்கேற்ப அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து,சமூகத்தின் முழுமையான வளர்ச்சி விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமையை ஊக்குவப்பதில் தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படும், சிறப்பு வாய்ந்த இந்த உலக ஒலிம்பிக் தினத்தில்
தமிழகத்தில் திறமையான விளையாட்டு வீரர்களை மென்மேலும் உருவாக்கி பதக்கங்களை வென்று, சர்வதேச அளவில் இந்திய திருநாட்டின் பெருமையை பறைசாற்றி தலைநிமிர செய்வோம்.யாதும் ஊரே, யாவரும் கேளிர் எனும் முதுமொழிக்கேற்ப அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைத்து,சமூகத்தின் முழுமையான வளர்ச்சி விளையாட்டு வீரர்களின் திறமையை வெளிக்கொணர்ந்து அவர்களின் திறமையை ஊக்குவப்பதில் தான் உள்ளது என்பதை உணர்ந்து செயல்படும், சிறப்பு வாய்ந்த இந்த உலக ஒலிம்பிக் தினத்தில்… pic.twitter.com/FYp959aNwK— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 23, 2023

via News J : https://ift.tt/RjeHXwh
Mediaஆண்டு 2013. ஓவல் மைதானத்தின் அந்த இறுதிப் போட்டியில் ஜெயிக்கப்போவது இந்தியாவா? இங்கிலாந்தா? என்கிற பதற்றம் சூழ்ந்திருந்த இரசிகர்களின் கண்ணில் தாண்டவமாடியது. அதற்கு முக்கிய காரணம், ஐம்பது ஓவர் போட்டியாக இருந்த இறுதிப்போட்டியை மழையின் காரணமாக இருபது ஓவர் போட்டியாக மாற்றியமைத்ததே ஆகும்.இந்தியாவைப் பொறுத்தவரை இதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் உலகக்கோப்பையினை வென்று மகுடம் சூடியிருந்தது. சாதனை அணியாக திகழ்ந்த இந்தியா இந்தப் போட்டியில் வெல்வதற்கான வாய்ப்பு குறைவு என்றுதான் கணிக்கப்பட்டிருந்தது. அதற்கு இங்கிலாந்து ஆடுகளங்கள் ஒரு காரணம். இங்கிலாந்து ஆடுகங்கள் இந்திய அணியினருக்கு ஏற்ற வகையில் இல்லை என்கிற வாதமும் அன்றைக்கு வலுக்கத் தொடங்கியிருந்தது. சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளைப் பொறுத்தவரை உலகக்கோப்பை போட்டி முடிந்து இரண்டு ஆண்டு காலம் கழித்து நடைபெறும். அதுவும் இங்கிலாந்தில் மட்டும்தான் நடைபெறும். புள்ளிப்பட்டியலில் முதல் எட்டு இடங்களைப் பிடித்த அணியினருக்கு மட்டுமே இந்த போட்டியில் பங்குபெற வாய்ப்பு கிட்டும்.அப்படிப்பட்ட வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி, இரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்தார் அன்றைய கேப்டன் தோனி. ஒரு பந்திற்கு ஆறு ரன்கள் அடிக்க வேண்டும் என்கிற சூழலில், அஸ்வின் அந்த பந்தை லாவகமாக வீசி அணியினை வெற்றி பாதைக்கு இட்டுச் சென்றார். இந்தக் கோப்பையுடன் இந்திய அணிக்கு கேப்டன் தோனி மூன்று கோப்பைகளைப் பெற்று தந்த வீரராக மாறினார்.

via News J : https://ift.tt/keoXWGs
Mediaதமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தான் ஒய்வு பெற உள்ள தருணத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கை ஒன்று தற்போதைய சூழலில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.சிகிச்சையில் இருக்கும் நோயாளி மரணம் அடைந்தால் அதுதொடர்பாக மருத்துவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்யும் வழக்கமான நடைமுறைக்கு தடை விதித்து டிஜிபி அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அவரது அறிக்கையின் படி, இனிமேல் சிகிச்சையில் இருக்கும் நோயாளியின் மரணம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டால், குற்றச் செயல்கள் உறுதி செய்யப்பட்டாலும், மற்ற வழக்குகளைப் போல் கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது அலட்சியமாக நடந்து கொண்டதாக ஒரு மருத்துவரின் மீது குற்றம் சாட்டப்பட்டாலும், வழக்கு பதிவு செய்வதற்கு முன்பாக மாநகர காவல் ஆணையரோ அல்லது மாவட்ட காவல் கண்காணிப்பாளரோ ஆய்வு செய்ய வேண்டும் என்றெல்லாம் டிஜிபியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மருத்துவர் மீது கைது நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என டிஜிபி கூறியிருப்பதுதான் பல்வேறு சர்ச்சைகளையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழப்புகள் நிகழ்வதாக பல்வேறு புகார்கள் வரும் சூழலில் இந்த அறிக்கை அவர்களை இன்னும் அலட்சியம் காட்டத்தானே செய்யும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.அதே போல தமிழக அரசியல் களத்தில் ஆளும்கட்சி தொடர்பாக நிலவும் இக்கட்டான சூழலில், அதுவும் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு, அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறப்படும் நிலையில் இந்த அறிக்கை வெளியாவதன் அவசியம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.கிண்டியில் புதிதாக அரசு மருத்துவமனையை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில்தான், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு மாற்றினார்கள். அப்படியானால் அரசு மருத்துவமனைகளில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவதில்லையா? அல்லது அதற்குரிய மருத்துவர்கள் இல்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ள சூழலில், டிஜிபியின் அறிக்கை வெளியாகி இருப்பதும் பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.ஏற்கனவே மாநில அரசின் அனுமதி பெறாமல் தமிழகத்தில் சிபிஐ விசாரிக்கக் கூடாது என்று அரசாணை வெளியிட்ட நிலையில், அதன் அடுத்த நகர்வாகவே டிஜிபியின் அறிக்கையும் வெளியிடப்பட்டிருப்பதாகவும் எந்தெந்த இடங்களில் சிக்கல் வருமோ அதையெல்லாம் திமுக அரசு தங்களுக்கு ஆதரவாக தயார் படுத்துகிறார்கள் என்றும் அரசியல் நோக்கர்கள் சந்தேகத்தை கிளப்புகின்றனர்.மொத்தத்தில் தமிழகத்தில் ஏதோ ஒரு விஷமத்தனத்தை மறைக்க புதிது புதிதாக அறிக்கைகள் முளைத்துக் கொண்டிருக்கின்றனவோ என்ற ஆழமான சந்தேகம்தான் ஒட்டுமொத்த தமிழக மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/BZsS4LU
Mediaடைட்டானிக் கப்பலை பார்வையிட ஐந்து தொழிலதிபர்கள் சென்று மாயமான செய்தியில் தற்போது அவர்கள் இறந்துவிட்டனர் என்று அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது கிடைத்துள்ளன. பிரிட்டன் தொழிலதிபர் ஹமீஸ் ஹார்டின், ஸ்டோக்டோன் ரஷ், பாகிஸ்தானைச் சேர்ந்த ஷஷாதா தாவூத் மற்றும் அவரது மகன் சுலைமான், பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பவுல் ஹென்றி நெர்ஜியோலட் ஆகிய ஐந்து தொழிலதிபர்கள் டைட்டானிக் கப்பலை பார்வையிட கடலின் ஆழம் சென்றிருந்தனர். கடலின் அடியே சென்றவர்கள் மூன்று நாட்கள் ஆகியும் திரும்பி வராததால் மிகுந்த பரபரப்பு தொற்றிக் கொண்டது. அதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து இன்றைக்கு அந்த ஐந்து தொழிலதிபர்களும் கடலில் மூழ்கி இறந்துவிட்டார்கள் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.அவர்கள் சென்ற நீர்மூழ்கிக் கப்பலானது கடலின் அடி ஆழ வெப்பநிலையைத் தாக்குபிடிக்க முடியாமல் வெடித்து சிதறியிருக்கிறது. இந்த வெடிப்பானது முப்பது மில்லி நொடிகளில் ஏற்பட்டுள்ளது என்று கணிக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் என்று சொன்னாலே அனைவரின் ஞாபகத்திற்கும் வருவது திரைப்படம் தான். ஜேம்ஸ் கேமரூன் இயக்கிய அத்திரைப்படத்தில் உண்மைத் தன்மையுடன் சேர்த்து ஒரு காதல் கதையையும் இணைத்து படமாக வடித்திருப்பார். படம் வந்த புதிதில் சக்கைபோடு போட்டது. உலக அளவில் டைட்டானிக் என்றால் திரைப்படமும், பனிப்பாறையும், ஜாக், ரோஸ் என்கிற கதாப்பாத்திரங்களும்தான் அனைவரின் கண்ணின் முன்பும் தோன்றும். இப்படி உலக அளவில் பிரபலமான இந்த கப்பலை மூழ்கியே இடத்திலே சென்று காண நேர்ந்தது மிகப்பெரிய துயர சம்பவத்திற்கு இட்டு சென்றுவிட்டது. தற்போது சமூக வலைதளவாசிகள் இறந்த ஐந்து தொழிலதிபர்களுக்கும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/MOm1kcd
Mediaஇந்த ஆண்டுக்கான சாகித்ய பால புரஸ்கார் விருது சிறார் எழுத்தாளர் உதயசங்கர் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.எழுத்தாளர் உதயசங்கர் கோவில்பட்டியைப் பூர்வீகமாகக் கொண்டவர். இலக்கிய உலகில் கோவில்பட்டியைப் பற்றி ஒரு பேச்சு உண்டு. ”கோவில்பட்டியின் வெளியிருந்து கல் ஒன்றை வீசினால், அது நிச்சயம் எழுத்தாளர் ஒருவரது தலையில்தான் படும்.” அதற்கு ஏற்றார்போல் கோவில்பட்டியில் எழுத்தாளர்கள் அதிகம். எழுத்தாளர் உதயசங்கருக்கு 2023ம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது – ஆதனின் பொம்மை என்ற இளையோர் நாவலுக்கு வழங்கப்பட்டுள்ளது. வானம் பதிப்பகத்திற்கு கிடைக்கும் இரண்டாவது பால புரஸ்கார் விருது இதுவாகும். முதல் விருது 2020ம் ஆண்டு நண்பர் யெஸ். பாலபாரதி எழுதிய மரப்பாச்சி சொன்ன ரகசியம் புத்தகத்திற்காக வழங்கப்பட்டது.உதயசங்கர் 1978 முதல் எழுதி வருகிறார். இது வரை 8 சிறுகதைத் தொகுப்புகள், 7 கட்டுரைத் தொகுப்புகள், மலையாளத்திலிருந்து 7, ஆங்கிலத்திலிருந்து 3 மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 5, ஒரு குறு நாவல் தொகுப்பு ஆகியன வெளிவந்துள்ளன.சிறார் இலக்கியத்தில் 1991 முதல் எழுதிவருகிறார். இதுவரை கதை மற்றும் நாவல் உட்பட 51 புத்தகங்கள், ஒரு சிறார் பாடல் புத்தகம், 67 சிறார் மொழிபெயர்ப்பு நூல்கள் வெளிவந்துள்ளன.

via News J : https://ift.tt/XUoZR84
Mediaஉள்ளூரில் ஓணான் பிடிக்கத் தெரியாதவன், வெளியூர் சென்று உடும்புப் பிடித்தானாம் என்ற சொலவடை பெரும்பாலான கிராமங்களில் புழக்கத்தில் உள்ள ஒன்று. அப்படி உள்ளூரில் ஒன்றும் செய்ய முடியாமல் வெளியூர் சென்று தன் பலத்தினை காட்ட கிளம்பியிருக்கிறார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். வந்தவரை வரவேற்கும் விதமாக டிவிட்டரில் கோ பேக் ஸ்டாலின் என்கிற ஹேஷ்டேக் டிரெண்ட் ஆகிய வண்ணம் உள்ளது.நம்மால் குண்டிச்சட்டிக்குள்ளேயே குதிரை ஓட்டுவது கஷ்டமாயிற்றே என்பதை ஸ்டாலின் உணர்ந்தாரா இல்லையா என்று தெரியவில்லை. அதைவிட்டு, வடக்கு சென்று தன்னை பெரிய அரசியல்வாதியாக காட்டிக்கொண்டு ஆலோசனைகள் வழங்க புறப்பட்டிருக்கிறார். இங்கு ஸ்டாலினுக்கே ஆலோசனை கொடுப்பதற்கு பதினோறு பேரு கொண்ட குழு இருப்பதாக அரசல் புரசலாக சொல்லப்படுகிறது. மேலும் முதல்வருக்கு காகிதத்தில் எழுதியிருப்பதை படிக்கும்போதே ஏகபோக நாக் குளறல் ஏற்படும். இப்போது அங்கு போய் என்ன பேசப்போகிறோரா?இந்தக் கூட்டத்தை முதலில் கூட்ட வேண்டும் என்று எண்ணிய சந்திர சேகரராவே, இதில் கலந்து கொள்ளவில்லை என்பது நகைமுரண். அதனைத் தொடர்ந்து இந்த எதிர்க்கட்சிக்குள் ஆளுக்கொரு முரண் உள்ளது. முக்கியமாக திரிணாமூல் காங்கிரஸிற்கும் இந்திய தேசிய காங்கிரஸிற்கும் முதலில் இருந்தே ஆகாது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அனைத்துக் கட்சிகளும் சேர்வது என்பது முயற்கொம்பே. இந்த லட்சணத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டதா என்று தெரியவில்லை. மேடைகளில் பீஹார் மக்களை தரைக்குறைவாக ஸ்டாலின் பேசியும், அவரது கட்சியினர் பேசியும் வந்துள்ள நிலையில் இன்றைக்கு தன் அரசியல் ஆதயத்திற்காக பிழைப்பு வாத அரசியல் செய்ய பீஹாரை நோக்கியே சென்று இருக்கிறார் இந்த டெல்டா நாயகன் என்று அரசியல் விமர்சகர்கள் பேசிவருகிறார்கள். 

via News J : https://ift.tt/RD0GTK5
Mediaவிடியா ஆட்சியில் போக்குவரத்து காவல்துறை என்பது விதி மீறல் என்னும் பெயரில் மிரட்டி பணம் பறிக்கும் துறையாக மாறி வருவதாகப் புகார் தெரிவிக்கிறார்கள் வாகன ஓட்டிகள். அதுகுறித்து பார்ப்போம்.வரிகளை உயர்த்துவது, விலைவாசி அதிகரிப்பு என்று வெகுஜன மக்களின் பாக்கெட்டுகளில் கைவைத்து வருகிறது விடியா அரசு. அதே போன்று விடிய அரசின் போக்குவரத்து காவல்துறையோ தன் பங்குக்கும் வாகன ஓட்டிகளிடம் இருந்து அபராதம் என்னும் பெயரில் வசூல் வேட்டையை தீவிரப் படுத்தி இருக்கிறது. போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகையை பலமடங்கு அதிகரித்த நிலையில், போக்குவரத்து நெருக்கடியான இடங்களில் வாகனப் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதை விட, வாகன ஓட்டிகளிடம் விதிமுறை மீறலுக்கு அபராதம் விதிப்பதிலே குறியாக இருக்கின்றனர். பொதுமக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிப்பதையும் போக்குவரத்து சிக்னலை மீறியதால் 500 ரூபாய், பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாததால் ஆயிரம் ரூபாய் என்று அபராததத்தை தீட்டி அரசு கஜானாவிற்கு எடுத்துச் செல்வதிலேயே தீவிரம் காட்டுகின்றனர்.பள்ளி, கல்லூரிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் போதும் பின்னால் இருப்பவர் ஹெல்மெட் போடவில்லை என்று கூறி அபாராதம் போடுவதில் ஆர்வம் காட்டுவாதாகவும் வாகன ஓட்டிகளை எதையும் பேசவிடாமல் அதிகாரப் போக்கோடு செயல்படுவதாகவும் போக்குவரத்து போலீசார் மீது குற்றச்சாட்டு கூறப்படுகிறது.தற்போது போக்குவரத்து சிக்னல்களில் கேமராக்கள் அமைத்து அதன்மூலமாகவும் விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் பல இடங்களில் விதிமுறைகள் மீறாமலேயே அபராதம் விதிக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வருவதாகவும், விதிமீறலுக்கு அபராதம் கட்டிய நிலையில் தொடர்ந்து அபராதம் கட்டச் சொல்லி குறுஞ்செய்தி வருவதாகவும் வாகன ஓட்டிகள் மத்தியில் புகார் கூறப்படுகிறது.இதனிடையே ஒவ்வொரு போக்குவரத்து உதவி ஆய்வாளரும் தினமும் 100 வழக்குகள் கட்டாயம் போட வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டதால்தான் இப்படி எல்லாம் வசூல் வேட்டை ஆடிவருவதாகவும் போலீசார் தரப்பிலேயே முணுமுணுக்கப்படுகிறது.சேவை துறையாக இருந்தவற்றை எல்லாம் வருவாய் ஈட்டும் துறையாக மாற்றியுள்ள விடியா அரசு, போக்குவரத்து காவலையும் அதே பட்டியலில் சேர்த்து கல்லாகட்டுகிறதா என்று கேள்வி எழுப்புகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

via News J : https://ift.tt/G9b3Z1j
Mediaபீகார் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக #gobackstalin ட்விட்டரில் டிரெண்ட் ஆனது குறித்தும், தமிழகத்தையே ஆட்சி செய்ய தெரியாத ஸ்டாலின் தேசிய அரசியல் கனவு காண்கிறாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.உள்ளூர் மக்களெல்லாம் ஒப்பாரி வைத்துக்கொண்டிருக்க, அதற்கே ஒன்றும் செய்ய முடியாமல், தன் பலத்தைக் காட்ட வெளியூருக்கு கிளம்பினார் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலின். பீகார் மண்ணில் கால்வைக்க வந்தவரை வரவேற்கும் விதமாக டிவிட்டரில் “கோ பேக் ஸ்டாலின்” என்கிற ஹேஷ்டேக்கை டிரெண்ட் ஆக்கி இருக்கின்றனர் பீகார் நெட்டிசன்கள்.இது ஒருபுறம் இருக்க, நான் தேசிய அரசியலுக்கு போய்ட்டேன், நான் தேசிய அரசியலுக்கு போய்ட்டேன்… என்று வடிவேலு கணக்காக சொல்லிக்கொண்டிருந்த ஸ்டாலின் இன்று பத்தோடு பதினோன்றாக எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் கலந்திருக்கிறார்… குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதே குதிரைக்கொம்பாக இருக்கும் சூழலில், பீகாரில் தன் பாச்சா பலிக்குமா என்று யோசித்துபார்க்க வேண்டாமா?தமிழகத்தில் ஆட்சி நடத்த, இங்கு ஸ்டாலினுக்கே ஆலோசனை கொடுப்பதற்கு 38 குழுக்கள் இருக்க, தேசிய கட்சிகளுக்கு அவர் என்ன ஆலோசனைகளை வழங்கியிருப்பார்? சரி இருக்கட்டும், நம் முதல்வருக்கு காகிதத்தில் எழுதிக் கொடுத்திருப்பதை படிக்கும்போதே ஏகபோகமாக ரோல் ஆகும் நிலையில் இப்போது அங்கு போய் என்ன பேசியிருப்பார் என்ற கேள்வி எழுவது நியாயம் தானே?இந்தக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று எண்ணிய சந்திர சேகரராவே, இதில் கலந்து கொள்ளவில்லை. எதிர்க்கட்சிகளுக்குள் ஆளுக்கொரு முரண் உள்ளது. முக்கியமாக மேற்குவங்கத்தில் மோதிக்கொள்ளும் திரிணாமூல் காங்கிரஸ் – இந்திய தேசிய காங்கிரஸ், டெல்லியில் முட்டிக்கொள்ளும் ஆம்ஆத்மி- காங்கிரஸ், கேரளாவில் கண்மூடித்தனமாக மோதிக்கொள்ளும் கம்யூனிஸ்ட்-காங்கிரஸ் என்று மாநிலங்களில் ஆயிரத்தெட்டு பஞ்சாயத்துகளோடு இருக்கும் கட்சிகள் எப்படி ஒன்றுசேரப்போகின்றன? இவற்றை ஸ்டாலின் எப்படி ஒன்றிணைக்கப்போகிறார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி…நிலைமை இப்படி இருக்க, ஸ்டாலினுக்கு பிரதமர் ஆசை வந்துவிட்டதோ அல்லது, தமிழகத்தில் இனி தன் அரசியல் எடுபடாது என்பதால், தேசிய அரசியலுக்குபோய் பிஸிஆகிவிடலாம் என்று கனவில் இருக்கிறாரா ஸ்டாலின் என்ற சந்தேகங்களும் வலுக்கின்றன…மேடைகளில் பீஹார் மக்களை பானி பூரி, வடக்கன்ஸ் என்று தரைக்குறைவாகப் பேசும் தன் கட்சிக்காரர்களை கண்டிக்கத்தெரியாத ஸ்டாலின் இன்று அரசியல் ஆதாயத்திற்காக அதே பீஹாரை நோக்கிச்சென்றிருப்பதுதான் நகைமுரனே.ஆக, தமிழகத்திலேயே பலிக்காத ஸ்டாலினின் அரசியல் பாச்சாக்கள், தேசிய அரசியலில் பலிக்குமா? தானும் பிரதமர் என்று பகல் கனவு காணும் ஸ்டாலின் தன் உயரத்தை எப்போது உணர்வார்? எதிர்க்கட்சிகளின் இந்த கூட்டத்தின் மூலம் நிகழுமா மாற்றங்கள்?தமிழகத்தையே சரியாக ஆளத் தெரியாத முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் என்ன செய்யப்போகிறார்? என்ற கேள்விக்கு அவருக்கே பதில் தெரியாது என்பதுதான் இங்க ஹைலைட்டே.

via News J : https://ift.tt/nBSWa36
Mediaமாவட்ட திட்டக் குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது, வரும் நாடாளுமன்ற தேர்தலின் வெற்றிக்கான ஆரம்பம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில், ஊரக பகுதிக்கான மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த செந்தில், கனகா, சுகிர்தா, செல்லப்பன், இன்ப தமிழரசி, தவமணி, ருத்ராதேவி உள்பட 8 பேர் வெற்றி பெற்றனர். இதேபோல், அதிமுகவை சேர்ந்த ஊராட்சிக்குழு தலைவர் சாரதாவும் வெற்றி பெற்றார். அதிமுகவை எதிர்த்து போட்டியிட்ட திமுகவினர் படுதோல்வியடைந்தனர். இதையடுத்து, மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருக்கு, முன்னாள் அமைச்சர் தங்கமணி, பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி,
திட்டக்குழு உறுப்பினர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறுவதற்கான ஆரம்பம் என தெரிவித்தார். கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில், மதுக்கடைகளை குறைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பலமுறை வலியுறுத்திய நிலையில், தற்போது 500 டாஸ்மாக் கடைகளை விடியா திமுக அரசு மூடியுள்ளதாகவும், இதற்கு கழக பொதுச்செயலாளர்தான் காரணம் என முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறினார். ஆனால், விற்பனை குறைவாக இருந்த டாஸ்மாக் கடைகளை மட்டும்தான் விடியா அரசு மூடியுள்ளதாக அவர் குற்றச்சாட்டினார்.

via News J : https://ift.tt/wtN4yG2