Mediaதிமுகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் கவலையில் உள்ளதாகவும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உறுதிபட தெரிவித்துள்ளார்.மீன்பிடிக்கும் உரிமை மீனவர்கள் சங்கத்திற்கே என்ற நிரந்தர தீர்ப்பை பெறுவதற்கு உறுதுணையாக இருந்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனுக்கு ஈரோடு மாவட்டம் அந்தியூரில் முன்னாள் அமைச்சருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதியில் அதிமுக மாபெறும் வெற்றி பெறும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/xwlIT4A
via News J : https://ift.tt/xwlIT4A
Mediaசமூகநீதி..சமூகநீதி என்று சொல்லி சொல்லியே ஆட்சிக் கட்டிலில் அரிதாரம் பூசிக்கொண்டு ஏறிய திமுக, காலம் போகப் போக தன் அலங்காரத்தைக் கலைத்துவிட்டு தன் சுயரூபத்தை ஒவ்வொரு செயல்பாட்டிலும் காட்டிக்கொண்டிருக்கிறது. அதற்கு நம்மால் ஏகப்பட்ட உதாரணங்களை எடுத்துக் கூற முடியும். ஆனால் இப்போது ஒரு குறுக்கு வழியை திமுக கையில் எடுத்தியிருக்கிறது. அதுதான் தொகுதியைக் கைமாற்றுவது.யாரால் ஆட்சியைப் பிடித்தார்களோ, யாரால் வளர்ந்தார்களோ அவர்களையே கழட்டி விடும் உக்தியை கையாளயிருக்கிறது திமுக தலைமை. அதாவது வருகின்ற 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்ற தொகுதிகளை மீண்டும் அந்தக் கட்சிக்கு ஒதுக்கக்கூடாது என்பதில் திமுக உறுதியாக இருக்கிறதாம். குறிப்பாக, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எட்டு பேர் உள்ளனர். அவர்களில் பலரும் தொடர்ந்து ஒரே தொகுதியில் போட்டியிடுவது திமுக சீனியர்களுக்கு கொஞ்சம் அதிருப்தியாக இருக்கிறதாம். அதனால் அக்கட்சிக்கான தொகுதிகளை இம்முறை மாற்றித் தர வலுவான திட்டம் ஒன்றினை திமுகவின் முக்கியஸ்தர்கள் தீட்டிவிட்டனர். அதுவும் வாரிசு அமைச்சரான விளையாட்டுப் பிள்ளை அமைச்சர் உதயநிதிக்கு எவர் விசுவாசமாக இருக்கிறாரோ அவருக்கே அந்த தொகுதிகள் என்று கட்டன்ரைட்டாக தலைமை சொல்லிவிட்டதாம். போகிற போக்கைப் பார்த்தால் அன்பில் மகேஷைத் தொடர்ந்து, பதவிக்கு ஆசைப்படும் பலரும் ரசிகர் மன்றத்தை எடுத்து நடத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் பேசி வருகின்றன.செந்தில் பாலாஜி, ஜோதிமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை: உயர் நீதிமன்றம் உத்தரவு | Highcourt order on Jothimani, Senthil Balaji case - hindutamil.inஅப்படியே கரூர் பக்கமாக சென்றால், சமீபத்தில் அமலாக்கத்துறையால் அஸ்திவாரத்தையே இழந்த செந்தில்பாலாஜிக்கும், காங்கிரஸ் எம்பி ஜோதிமணிக்கும் இடையே ஒன்றரை ஆண்டுகளாக கடும் மோதல் போக்கு இருக்கிறதாம். செந்தில்பாலாஜியின் விசுவாசிக்கு கரூர் எம்பி சீட் கொடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட நிர்வாகிகள் திமுக மேலிடத்திற்கு சைஸாக காய் நகர்த்தி வருகிறார்கள் என்று தகவல் கசிந்துள்ளது. கரூர் திமுகவினரின் அட்ராசிட்டிகளை தாங்காமல் நான் ஈரோடுக்கோ திருச்சிக்கோ போய்விடுகிறேன் என்று ஜோதிமணி கொக்கரித்து வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் கதைக்கின்றனர்.கரூர் தான் இப்படி என்று பார்த்தால் மறுபுறம் திருவள்ளூர் எம்பி ஜெயக்குமாருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. காரணம் போன ட்ரிப்பில் சிதம்பரத்தில் நின்ற விசிக தலைவர் திருமாவளவன், இம்முறை திருவள்ளூர் வேண்டும் என்று அடம்பிடித்துள்ளாராம். அதற்கு காரணம் போன தடவை ஜெயிப்பதற்கு இறுதிவரை போராட வேண்டிய சூழல் திருமாவளவனுக்கு ஏற்பட்டது. அதில் திமுகவின் உள்குத்தும் இருக்கிறது என்று அரசல் புரசலாக அன்றைக்கே சொல்லிவந்தார்கள். எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கிறது என்பது பாம்பிற்கும் புற்றிற்கும் தெரிந்த ரகசியம் மட்டுமே.ஈரோடு எம்பி கணேச மூர்த்திக்கு மீண்டும் மதிமுகவில் சீட் ஒதுக்க வாய்ப்பில்லை. மேலும் ஈரோடு திமுகவின் வசம் செல்ல இருக்கிறதாம். ஏற்கனவே சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்குத் தொகுதியில் காங்கிரஸிற்கு செலவு செய்தது போதும் என்று உடன் பிறப்புகள் எண்ணியிருக்கலாம்.The Weekend Leader - MDMK all set to anoint Durai Vaiko as successor to Vaikoவிருதுநகரைப் பொறுத்தவரை மாணிக்கத்தாகூர் வெர்சஸ் துரை வைகோ என்று சொல்லப்படுகிறது. கூட்டணியையே சிதைக்க நினைக்கும் திமுக ஒருபக்கம் என்றால், விருதுநகரில் காங்கிரஸும் மதிமுகவும் ஸ்பேரிங்க் போட்டுக்கொண்டு சண்டை செய்து கொண்டிருக்கிறார்கள். ஸ்டாலின் துரை வைகோவிற்கு “ம்” கொட்டிவிட்டால், மாணிக்கத்தாகூர் சிவகங்கை பக்கம் சென்று கார்த்திக் சிதம்பரத்துடன் உள்கட்சி சண்டையை துவங்க வேண்டியதுதான். சிவகங்கையில் சண்டை வலுத்தால், இருக்கவே இருக்கிறது தேனி. அந்தப் பக்கமாக மாணிக்கத்தாகூரை தள்ளிவிட வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.திருச்சியை எடுத்துக்கொண்டால், திருநாவுக்கரசருக்கு கே.என்.நேரு பெரிய தடையாக இருக்கலாம். நேரு தன் வாரிசுக்கு சீட்டுக் கேட்டு முதன்மை வாரிசுக்கு ஜால்ரா அடிக்க ஆரம்பித்துவிட்டார். இனி திருச்சி திருநாவுக்கரசருக்கு இல்லை என்பது உறுதியாகிவிட்டது. இப்படி கூட்டணிக்குள் சண்டை வளர்த்து, எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் என்கிற காமெடி போல திமுக ஆகிவிட்டது. இந்த நிலையை உற்று நோக்கும் அரசியல் விமர்சகர்கள் உச்சுக்கொட்டி அந்தோ பரிதாபம் என்கின்றனர்.
via News J : https://ift.tt/QKpzBU6
via News J : https://ift.tt/QKpzBU6
👍1
Mediaதிமுக பொருத்துக என்று கேள்வி கேட்டால் சிறு குழந்தைகூட ஊழல் என்று சரியாக பொருத்தும். அந்த அளவிற்கு ஊழலில் முங்கி முத்தெடுக்கும் திறமை திமுகவிற்கே உரித்தான ஒன்று. சரி இப்போது என்ன புதிய ஊழல் என்று பார்த்தால், போக்குவரத்துத் துறையில் டயர் வாங்கி மறுசுழற்சி செய்வதில் ஊழல் அம்பலப்பட்டு இருக்கிறது. ஏழை பாமரப் பயணிகள், தங்கள் உயிரை பணயம் வைத்து பயணம் மேற்கொள்ளும் மாதிரி இந்த விடியா ஊழல் அரசு செய்துவிட்டதே என்று தொழிலாளர் சங்கங்களைச் சேர்ந்தவர்களே நொம்பலப்பட்டு இருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனைத் தொடர்ந்து ஊழலில் ஊன்றி ஆழம் பார்த்து வரும் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை முதல்வர் ஸ்டாலின் கண்டுகொள்ளமால் இருப்பதன் பின்னணி என்ன? ஒருவேளை அடிக்கும் கமிஷன்களை சரியாக குடும்பத்திற்கு தந்துதவும் அமைச்சர்கள் பட்டியலில் சிவசங்கர் இருப்பதால் விட்டு வைத்திருக்கிறாரோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை.TN Minister transferred out of transport portfolio after complaint over his casteist remark | The News Minute2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்தின் இரண்டு டயர்கள் வெடித்துச் சிதறியதில் ஒரு மேய்ப்பரும் 100 ஆடுகளும் இறந்தன. போக்குவரத்துக் கழகங்களில் நடத்தப்படும் விசாரணையில், மோசமான டயர்களே விபத்துக்களுக்கு முக்கியக் காரணம் என்று அன்றே எச்சரித்தும், இன்று வரை டயர்களை மாற்றாமல் தொடர்ந்து பழைய டயர்களையும் பழுதடைந்த டயர்களையுமே பயன்படுத்துகிறது விடியா திமுகவின் போக்குவரத்துத் துறை. அதே போல விலங்குகள் மனிதர்கள் திடீரென குறுக்கே செல்லும் போது, வாகன ஓட்டிகள் திடீரென வாகனத்தை நிறுத்த முடியாமல் தவிப்பதால் விபத்துகள் எளிதில் ஏற்படுகிறது.ஆனால் இதற்கெல்லாம் விதையை அன்றே இட்டவர், இன்றைக்கு உயர்கல்வித் துறை அமைச்சராக இருக்கும் பொன்முடி. ஆம், 1996ல் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த பொன்முடி தன் அதிகாரத்தைக் காட்டி மிரட்டி உருட்டி ஒரு தனியார் ரப்பர் கம்பெனியை கோயமுத்தூரில் தொடங்கினார். இந்த நிறுவனத்தின் ஏகபோக வளர்ச்சி சந்தேகத்தைக் கிளப்ப, நீண்ட காலமாக முடக்கத்தில் இருந்தது. கடந்த பத்து ஆண்டு ஆட்சியில் அடங்கி இருந்த இந்த நிறுவனம், திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க துவங்கியது. போக்குவரத்துத் துறையில் எந்த டெண்டரையும் அந்த நிறுவனத்துக்கே சரண்டர் செய்தது திமுக. விளைவு தரமில்லாத டயர்களை திரும்ப திரும்ப உற்பத்தி செய்து போக்குவரத்துத் துறைக்கு அளித்தது. இதுவெல்லாம் ஸ்டாலினுக்கு முன்கூட்டியே தெரிந்தாலும், தன் குடும்பத்திற்கு முறையா கமிஷன் வருகிறது. நன்றாக கல்லாக் கட்ட முடிகிறது என்று அமைதி காத்துக்கொண்டார். இப்போது வரை அமைதி காத்துக்கொண்டு மட்டுமே இருக்கிறார்.சென்னை மாநகர பேருந்து ஓட்டுநர்களுக்கு திடீர் அறிவுறுத்தல்! | nakkheeranதிமுக குடும்பத்திடம் பெயர் கெட்டுவிட்டதால் ராஜ கண்ணப்பனை தூக்கிவிட்டு சிவசங்கருக்கு வாய்ப்பளித்தார் ஸ்டாலின். சிவனேனு இருந்த சிவசங்கருக்கு அடித்தது ஜாக்பாட். ராஜகண்ணப்பன் வழியில் தானும் பேராசைக் கொண்டு டயர் ஊழலை சத்தமில்லாமல் இப்போது வரை செய்து கொண்டிருக்கிறார். ஒன்றே ஒன்றுதான்.. எளியாரை வலியார் அடித்தால், வலியாரை தெய்வம் அடிக்கும். அப்படி ஊழலைத் திளைத்து இருக்கும் முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கும், இன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் முடிவு காலம் வருமா? அந்த முடிவே தமிழகத்தை திமுகவிடம் இருந்து விடுவிக்குமா?
via News J : https://ift.tt/5cuRxBN
via News J : https://ift.tt/5cuRxBN
Mediaதமிழகக் காவல்துறையைவிட சிறந்த காவல்துறை எங்குமில்லை என்று நாம் மார்தட்டும் இதே காலக்கட்டத்தில்தான், லாக்கப் மரணங்கள் மலிவாகி போய்விட்டது. அதிலும் இந்த விடியா திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து முதல் ஓராண்டிலேயே எட்டு லாக்கப் மரணங்கள் நடந்தேறி அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்றைக்கு தேர்தல் பிரச்சாரத்தின் போது, ”காவல்துறை என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். காவலர்கள் தவறு செய்தால் முறையான நடவடிக்கை எடுப்பேன்” என்று ஸ்டாலின் உரக்க கூச்சலிட்டார். ஆனால் அக்கூச்சல் வெற்றுக் கூச்சல்தான் என்று அப்போது புரியவில்லை..இப்போது புரிகிறது.தஞ்சாவூர் சத்யவாணன், ராமநாதபுரம் மணிகண்டன், சேலம் பிரபாகரன், சென்னை விக்னேஷ், திருவண்ணாமலை தங்கமணி, கொடுங்கையூர் ராஜசேகர், கன்னியாகுமரி அஜித், இப்போது தென்காசி கந்தாசாமி என்று லாக்கப்பில் மரணமானவர்கள் என ஒரு பட்டியலே வெளியிடலாம். தற்போது மரணம் எய்தியிருக்கும் கந்தசாமி மதுபானம் விற்கிறார் என்று கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை லாக்கப்பில் அடைத்துவைத்து சித்ரவைதை செய்துள்ளனர் காவல்துறையினர். கைது செய்து இரண்டு நாள் கழித்து மரணமடைந்த கந்தசாமியின் உடற்கூறாய்வில் சித்ரவதை செய்யப்பட்டிருப்பது புலப்பட்டுவிட்டது. எங்கே நாம் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்றெண்ணி கந்தசாமியின் மரணத்தை மறைத்திருக்கிறது காவல்துறை. எப்படியோ இந்த செய்தி கசிய வந்ததில் திமுக ஆட்சியின் சட்ட ஒழுங்குதான் மக்களிடையே பல் இளிக்கிறது.காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட காவல்துறையானது “obey the order” என்கிற கீழ்படிதலின் விதிக்கு கீழ் தங்கள் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து வருவது காலம்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு சம்பிரதாய சடங்காகிவிட்டது. அதிலும் முக்கியமாக காவல்துறையின் விழிகள் விளிம்புநிலை மக்களை நோக்கியே தங்கள் அதிகார வெறியாட்டத்தை கட்டவிழ்க்கிறது. கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாமர ஏழைகள் என்று யார் அதிகார அளவில் பலம் குன்றி இருக்கிறார்களோ அவர்களையே குறிவைக்கின்றன காவல்துறையின் பூட்ஸ்கள்.ஜெய்பீம் திரைப்படம் பார்த்து மிகவும் கலக்கம் அடைந்தேன். எனக்கு உறக்கமே வரவில்லை என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின் தினந்தோறும் யாரோ ஒருவர் லாக்கப்பில் மரணம் அடைவது குறித்து கவலை கொண்டிருக்கிறாரா? திரைப்படத்திற்காக தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், நிஜ சம்பவங்களுக்காக என்றைக்கு குரல் கொடுக்கப் போகிறார்? தன் கையில் காவல்துறையை வைத்துக்கொண்டு ஏவல்துறையாக மட்டுமே அதனை பயன்படுத்தும் ஸ்டாலின் தவறு இழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா?
via News J : https://ift.tt/2YdLhzm
via News J : https://ift.tt/2YdLhzm
Mediaதென்காசி அருகே காவல்துறையால் கைது செய்யப்பட்டவர் காவல்நிலையத்திலேயே மரணமடைந்தது குறித்தும், நெஞ்சை உலுக்கும் லாக்-அப் மரணங்களை ஸ்டாலின் தடுப்பாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…மக்களுக்கு பிரச்சனை என்றால் நடவடிக்கை வேண்டி செல்வது காவல் நிலையங்கள்… ஆனால் காவல் நிலையமே பிரச்சனை என்றால் எங்கு செல்வது? ஆம், கொலை கொள்ளைகளுக்கு நடவடிக்கை எடுங்கள் என்று செல்லும் இடத்திலேயே கொலை நடந்தால் அதற்கு யார் பொறுப்பு? இதெல்லாம் நம் பக்கத்து மாநிலத்திலயோ, அல்லது அண்டை நாட்டிலேயோ நடக்கவில்லை… நம் ஊரில்தான்… ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என்ற சிறப்பு பெற்ற தமிழக காவல்துறையில்தான், லாக்கப் மரணங்கள் எளிதாக நடக்கின்றன..தற்போது, நெல்லை பாளையங்கோட்டையில் மதுபானம் விற்றதாக கைது செய்யப்பட்டு, லாக்கப்பில் அடைத்துவைத்து தென்காசியைச் சேர்ந்த கந்தசாமி என்பவரை சித்ரவைதை செய்துள்ளனர் காவல்துறையினர். கைது செய்து இரண்டு நாள் கழித்து மரணமடைந்த கந்தசாமியின் உடற்கூறாய்வில் அவர் சித்ரவதை செய்யப்பட்டிருப்பது அம்பலம் ஆகியிருக்கிறது. ஆனால், எங்கே நாம் மாட்டிக்கொண்டுவிடுவோமோ என்று எண்ணி கந்தசாமியின் மரணத்தை மறைத்திருக்கிறது காவல்துறைவிடியா திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து சென்னை விக்னேஷ், தஞ்சாவூர் சத்யவாணன், ராமநாதபுரம் மணிகண்டன், சேலம் பிரபாகரன், திருவண்ணாமலை தங்கமணி, கொடுங்கையூர் ராஜசேகர், கன்னியாகுமரி அஜித், இப்போது தென்காசி கந்தாசாமி என்று லாக் மரணபட்டியலே வெளியிடலாம்.தேர்தல் பிரச்சாரத்தின் போது, ”காவல்துறை என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். காவலர்கள் தவறு செய்தால் முறையான நடவடிக்கை எடுப்பேன்” என்று ஸ்டாலின் உரக்க கூச்சலிட்டார். ஆனால் அக்கூச்சல் வெற்றுக் கூச்சல்தான் என்று அப்போது புரியவில்லை..இப்போது புரிகிறது.காலனிய ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட காவல்துறையானது “obey the order” என்கிற கீழ்படிதலின் விதிக்கு கீழ் தங்கள் அதிகாரத்தினை துஷ்பிரயோகம் செய்து வருவது காலம்காலமாக நிகழ்ந்துவரும் ஒரு சம்பிரதாய சடங்காகிவிட்டது. அதிலும் விளிம்புநிலை மக்களை நோக்கியே தங்கள் அதிகார வெறியாட்டத்தை கட்டவிழ்க்கும் காவல்துறையை கேட்கக்கூட ஆளில்லை என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் ஆதங்கமே…கூலித் தொழிலாளிகள், விவசாயிகள், பாமர ஏழைகள் என்று அடித்தட்டு மக்களை குறிவைக்கிறது காவல்துறையின் பூட்ஸ்கள்.”ஜெய்பீம் திரைப்படம் பார்த்து மிகவும் கலக்கம் அடைந்தேன். எனக்கு உறக்கமே வரவில்லை” என்று சொன்ன முதல்வர் ஸ்டாலின், தினந்தோறும் யாரோ ஒருவர் லாக்கப்பில் மரணம் அடைவது குறித்து கவலை கொண்டிருக்கிறாரா?தங்கச்சாமி உண்மையிலேயே தவறு செய்து இருந்தால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை விடுத்து காவலர்களே சட்டத்தைக் கையில் எடுத்தது தவறு என்றும், காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலின் பிரதமர் கனவோடு ஊர்சுற்றிக் கொண்டிருக்கிறார் …திரைப்படத்திற்காக தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், நிஜ சம்பவங்களுக்காக என்றைக்கு குரல் கொடுக்கப் போகிறார்?தன் கையில் காவல்துறையை வைத்துக்கொண்டு ஏவல்துறையாக மட்டுமே அதனை பயன்படுத்தும் ஸ்டாலின் தவறு இழைத்த காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பாரா? என்ற கேள்வியே மக்களிடம் எழுந்துள்ளது.
via News J : https://ift.tt/4zfclNp
via News J : https://ift.tt/4zfclNp
chennai highcourtமனித சமூகத்தின் ஒரு முக்கியக் கூறாக இருந்துவருவது குடும்ப அமைப்பு. குடும்பம் என்று எடுத்துக்கொண்டால் கணவன், மனைவி, மக்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம். இதிலும் மனைவியான குடும்பத்தலைவியின் சேவை என்பது தலையாயக் கடமையாக இருந்துவருகிறது. ஒரு குடும்பத்தின் நிர்வாக கட்டமைப்பானது மனைவியிடமே உள்ளது. அதனைத் தவிர்த்து கணவனுக்கும், பிள்ளைகளுக்கு மனைவி செய்யும் சேவைகளுக்கு சம்பளம் என்று எதுவும் இல்லை. ஆனால் மனைவி வீட்டில் சரியான நிர்வாகத்தினை கைகொண்டிருப்பதால்தான் கணவனால் வீட்டிற்கு வெளியே பொருளீட்ட முடிகிறது.மனித இனம் தோன்றி அது நாகரிக மாற்றம் அடைந்த பிறகு தாய்வழிச் சமூகம்தான் முதலில் உருவானது. பெண்ணைச் சுற்றியே அன்றையக் குடும்ப அமைப்பான கட்டமைக்கப்பட்டது. குடும்பத்தின் முக்கிய முடிவுகளை பெண்ணே எடுத்தார். தனக்கான ஆண் மகனை தேர்வு செய்வதிலும் பெண் முன்னுரிமை கொண்டவராக இருந்தார். பொருளாதாரமும் பெண்களிடமே இருந்துவந்தது. காலச் சுழற்சியில் பல கருதுகோள்களும் அதிகாரங்களும் பெண்ணிடமிருந்து படிப்படியாக மாறி ஆண் வர்க்கத்திற்கு சொந்தமானது. அதிலிருந்து பெண்கள் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். பெண் அடிமைத்தனமானது ஓங்கி வளர ஆரம்பித்தது. பாடசாலைகளுக்கு செல்ல வேண்டிய பெண்கள் அடுப்பங்கரைக்குள் அடங்கி ஒடுங்கிவிட்டனர். இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும், இருபத்தோறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெண்கள் சிறிது சிறிதாக எழுச்சிக் கொள்ள ஆரம்பிவித்துவிட்டனர். தற்போது சொந்தக் காலில் நிற்கும் அளவிற்கு வளர்ந்துவிட்டனர். தங்களுடைய பொருளாதார தேவைகளைத் தாங்களே பூர்த்தி செய்யும் முறையை லாவகமாக கைகொள்ளத் துவங்கிவிட்டனர்.Mediaஇப்படி மாறி வரும் காலக்கட்டத்தில் பெண்கள் இன்னும் ஆங்காங்கே சில இன்னல்களுக்கு ஆளாகியும் வருகிறார்கள். தற்போது அப்படி ஒரு கஷ்டப்படும் பெண்களுக்கு அடித்தது ஆஃபர் என்பது போல சென்னை உயர்நீதிமன்றம் ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது. “ கணவன் சம்பாத்தியத்தில் வாங்கிய சொத்துக்கள் என்றாலும், இல்லத்தரசியாக இருந்து மறைமுக பங்களிப்பை வழங்கிய மனைவிக்கும், சம பங்கு உண்டு” என, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றினைப் பிறப்பித்துள்ளது. இந்த அதிரடி உத்தரவுக்கு காரணம், கடலூரை சேர்ந்த கண்ணையன் என்பவர் அவர் மனைவி மீது அளித்த தனிநபர் மனுதான். கண்ணையன் தன் மனைவி கம்சலாவுடன் நெய்வேலியில் வசித்துவந்தார். 1982 காலக்கட்டத்தில் வெளிநாட்டில் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று சம்பாதித்த பணத்தை மனைவிக்கு அனுப்பியுள்ளார். அவரின் மனைவி வடலூர், சிதம்பரத்தில் சொத்துக்களை வாங்கியிருக்கிறார். கடந்த 1994 ஆம் ஆண்டு இந்தியா திரும்பிய கண்ணையன் தன் சொத்ஹ்டுக்களை விற்க அதிகாரம் அளித்து, “பவர் ஆப் அட்டர்னி” ஓருவரை மனைவி நியமித்து இருப்பதை அறிந்து அதிர்ச்சியாயிருக்கிறார்.பதறி அடித்து சிதம்பரம் முன்சிப் நீதிமன்றத்தில் சொத்துக்களை விற்க தடை கோரி வழக்கு தொடர்ந்தார் கண்ணையன். சொத்துக்கள் அனைத்தும் கண்ணையன் சம்பாதித்தது அவரது மனைவிக்கு சொத்தை விற்க உரிமையில்லை என்று முன்சீப் நீதிமன்றம் உத்தரவு இட்டது. பிறகு அவரது மனைவி மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததையொட்டி, முன்சீப் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. பிறகு கண்ணையன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில் காலாமாகிவிட்டார். அவரது வாரிசுகள் இந்த வழக்கை எடுத்து நடத்தத் துவங்கினார்கள். மனைவி தரப்பில் தாக்கல் செய்த மனுவில் குள்ளஞ்சாவடியில் தந்தை அளித்த 2 ஏக்கருக்கு மேலான நிலத்தில் , 1 ஏக்கரை என் கணவர் விற்றுவிட்டார் என்றும் வெளிநாட்டிற்கு செல்ல என் நிலம் ஒன்றினை விற்று பணம் கொடுத்தேன் என்றும், நகைகளை விற்றும், நிலம் வாயிலாக வந்த வருமானத்திலும் சொத்துக்களை வாங்கினேன் என்றும் கூறப்பட்டுள்ளது.இதனை விசாரித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவு என்னவெனில், சொத்துக்களை வாங்க மனைவியின் பங்களிப்பு நேரடியாக இல்லை என்றாலும், வீட்டை குடும்பத்தை கவனித்துக் கொண்டதன் வாயிலாக மறைமுக பங்களிப்பை வழங்கி உள்ளார். குடும்பத்தை அவர் கவனித்துக் கொண்டதால், கணவரால் வேலை பார்க்க முடிந்தது. குடும்பத்துக்காக பணத்தை சேமித்து சொத்துக்களை வாங்க முடிந்தது. குடும்பத்தை கவனித்துக்கொள்வதில் 24 மணி நேரத்தையும் மனைவி செலவிடுகிறார். இதை குறைத்து மதிப்பிட முடியாது. அதேபோல மனைவி பெயரில் சொத்து வாங்கப்பட்டிருப்பதற்கான உரிமை ஆவணம் இருப்பதால், மனைவியும் சொத்தினை முழுமையாக சொந்தம் கொண்டாட முடியாது. எனவே கணவரின் சொத்தில் மனைவிக்கு சமபங்கு மட்டும் உரிமை உண்டு என்று தீர்ப்பளித்தார்.
via News J : https://ift.tt/hbqDTBN
via News J : https://ift.tt/hbqDTBN
tnebதொடரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வினால் பனைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் பனை தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். விடியா ஆட்சியில் பனை தொழிலாளர்களின் வேதனை குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பனைமரங்களை நம்பி தொழில் செய்து வருவோர் அதிக அளவில் உள்ளனர். பனையில் இருந்து கள் இறக்க அரசு அனுமதி அளிக்காத நிலையில் பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி விற்பனையில் ஈடுபடுகிறார்கள். அதேபோன்று பனை ஓலைகளைக்கொண்டு, பனை மட்டைகளைக் கொண்டும் பெட்டி, கூடை, சுத்தம் செய்யும் பிரஸ் உள்பட பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். விடியா ஆட்சியில் அதிக அளவில் பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதாலும், மின் வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வாலும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்துள்ள அருணாசலபுரம், வீரசிகாமணி பகுதியில் பனை மட்டைகளைக் கொண்டு பிரஸ் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவற்றை தூத்துக்குடிக்கு கொண்டு சென்று கப்பல் மார்க்கமாக ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். தற்போது விடியா ஆட்சியில் தங்களின் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பனை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.பனைமரங்கள் அழிக்கப்படுவதால் பனை மட்டைகளுக்காக பலநூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், விலைவாசி உயர்வால் போக்குவரத்துக்கான பெட்ரோல், டீசல் செலவு கட்டுப்படியாகவில்லை என்றும் கூறுகின்றனர். அதுபோல் மின்வெட்டு காரணமாக தொழிலை சரியாக செய்ய முடியாததால் வாழ்வாதாரம் பாதிப்பதோடு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தையும் கட்ட முடியவில்லை என்பதும் அவர்களின் வேதனையாக உள்ளது.அதிமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை இல்லை என்றும், மின்கட்டன உயர்வு இல்லை என்றும் நற்சான்று தெரிவிப்பவர்கள், விடியா திமுக ஆட்சியினால் தங்களின் வாழ்வாதாரம் நலிந்துபோயிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். பனைமரங்களை பாதுகாக்கவும், மின்கட்டணத்தை குறைக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதேபோன்று பனை ஏறும் தொழிலில் உடல் உழைப்பு அதிகம் உள்ளதால், 50 வயதிற்கு மேற்பட்ட பனைத்தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் விடிவு ஏற்படுத்துமா விடியா ஆட்சி?– கடையநல்லூர் செய்தியாளர் ஐய்யனார் மற்றும் ஆசாத்.
via News J : https://ift.tt/xtiWILo
via News J : https://ift.tt/xtiWILo
Mediaபாண்டி பஜாரில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் தயிர்பூரியில் கரப்பான் பூச்சி கிடந்த சம்பவம் குறித்த புகாரின் பேரில் சோதனை மேற்கொண்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள், உணவகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.சென்னை பாண்டி பஜாரில் உள்ள ஹாட்சிப்ஸ் உணவகத்தில் கொரட்டூரை சேர்ந்த ஜான், சினேகா, திவ்யா ஆகியோர் பேல்பூரி, பாவ்பாஜி, தயிர்பூரி வாங்கி சாப்பிட்டுள்ளனர். அப்போது, திவ்யா சாப்பிட்ட தயிர்பூரியில் கரப்பான் பூச்சி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர், உணவக நிர்வாகத்தினரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.உணவகத்தினரோ பெரிதாக எந்த ரியாக் ஷனும் காட்டாமல், வழக்கம்போல தெரியாமல் நடந்து விட்டது. இதனை பெரிதுபடுத்தாதீர்கள் என்று சமாதானம் செய்துள்ளனர்.இந்த சமாதானப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே, திவ்யாவுக்கு உணவு ஒவ்வாமை ஏற்பட்டு வாந்தி எடுக்கவே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.சம்பவம் தொடர்பாக உணவு பாதுகாப்புத்துறை உதவி எண்ணிற்கு போன் செய்து திவ்யா புகார் அளித்த நிலையில், ஹாட் சிப்ஸ் உணவகத்தின் சமையலறையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.திவ்யா சாப்பிட்ட தயிர்பூரியில் கிடந்தது கரப்பான் பூச்சி இலை எனவும் மின்விளக்கு ஒளியில் வரும் ஈசல்தான் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சோதனையின்போது, சமையலறை பகுதி தூய்மையாகப் பராமரிக்கப்படாமலும், சமையல் பொருட்கள் முறையாக மூடி வைக்கப்படாததையும் கண்டறிந்துள்ளனர். இதனை அடுத்து உணவு பாதுகாப்புத் துறை விதிமுறைகளை சரியாக கடைபிடிக்காததால் குறைபாடுகளைச் சரிசெய்ய உத்தரவிட்டு ஹாட்சிப்ஸ் உணவகத்துக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.– செய்தியாளர் ராம்குமார் மற்றும் ஆசாத்.
via News J : https://ift.tt/Rq3P7fA
via News J : https://ift.tt/Rq3P7fA
Mediaமதுரை மாவட்டம் கருவனூர் அருகே முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்னம்பலம் வீட்டை அடித்து நொறுக்கியும், கார் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைத்தும், திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
via News J : https://ift.tt/8I0jNgf
via News J : https://ift.tt/8I0jNgf
Mediaஇந்திய அணி இறுதியாக கோப்பை வென்று பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது என்று ரசிகர்கள் டிவிட்டரிலும், பேஸ்புக்கிலும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். தோனி இருக்கும்போது வெல்ல முடிந்த கோப்பையை தோனி இல்லாதபோது ஏன் வெல்ல முடியவில்லை என்றும் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதற்கு இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தன்னுடைய கருத்து ஒன்றினை வெளிப்படுத்தியுள்ளார். முக்கியமாக தோனியின் வெற்றி ரகசியம் என்னவென்று அஸ்வின் கூறியுள்ளார்.தோனியின் வெற்றி சீக்ரெட் இதுதான், தனது கேப்டன்சியில் முதலில் முடிவு செய்யும் 11 வீரர்களுடன் தான் இறுதி வரை விளையாடுவார். தன்னுடன் விளையாடும் எந்த வீரர்களின் மனதிலும் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்க விரும்பமாட்டார். அந்த செயல்பாடே வீரர்களுக்கு சிறப்பாக விளையாட வேண்டும் என்ற ஊக்கத்தை கொடுத்து, தோனிக்கு பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது என்று ரவி அஸ்வின் தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
via News J : https://ift.tt/JEy0YQo
via News J : https://ift.tt/JEy0YQo
Mediaஉலக நாடுகளில் பலம் வாய்ந்த நாடாக வலம் வந்து கொண்டிருப்பதில் ரஷ்யாவும் முக்கியமான நாடாகும். தற்போது ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டு வருவதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு உக்ரைன் மீது போற் தொடுத்ததும் ஒரு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஈவ் ஜெனிபிரிகோஸின் என்பவர் அதிபர் புதினின் நெருங்கிய நண்பராவார்.உக்ரைன் போரின்போது, ஈவ் ஜெனிக்கும் ரஷ்ய ராணுவ அமைச்சர் செர்கே ஷோய்கு, தளபதி வாலரி ஜெரசி மோவுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. வாக்னர் ஆயுதக் குழு அதிகாரப்பூர்வமாக ரஷ்ய ராணுவத்தில் இணைய வேண்டும் என்று தலமை தளபதி வாலரி ஜெரசிமோவ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ஈவ் ஜெனி ஏற்கவில்லை. இதனால் வாக்னர் ஆயுதக் குழுவுக்கு தேவையான ஆயுதங்களை வழங்க ரஷ்ய ராணுவம் மறுத்தது. இதற்கு இடையே உக்ரைனில் முகாமிட்டிருக்கும் ரஷ்ய வீரர்களை ஈவ் ஜெனி காட்டிக் கொடுத்துவிட்டார் என்று குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. இதனால் உக்ரைனில் உள்ள பாக்மத் பகுதிஉயில் முகாமிட்டிருந்த வாக்னர் ஆயுதக் குழு வீரர்கள் மீது ரஷ்ய ராணுவம் அண்மையில் வான்வழித் தாக்குதல் நடத்தியது.இதனால் கடும் கோபத்திற்கு உள்ளான வாக்னர் தன் படைகளுடன் சேர்ந்து ரஷ்ய ராணுவ கட்டுப்பாட்டு மையத்தை கைப்பற்றினார். இதனிடையே, தொலைக்காட்சி உரையில் பேசிய அதிபர் புதின், “வாக்னர் ஆயுதக் குழு முதுகில் குத்திவிட்டது. இது அப்பட்டமான துரோகம். நாட்டைக் காக்க போராடிக் கொண்டிருக்கும்போது தனிநபர் விருப்பங்களுக்காக ஆயுதம் ஏந்துவது தேசத் துரோகக் குற்றம். இக்குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கடுமையான தண்டனையை அனுபவிக்க வேண்டும். கிரிமினல் குற்றச்சாட்டுக்கு உள்ளான தலைமையை பின்பற்றாமல் வீரர்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். மேலும், ‘தி வாக்னர்’ குழு ஒரு தீவிரவாதக் குழு என்றும் புதின் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.இதற்கு பதிலடி தரும் வகையில் டெலிகிராமில் ஒரு ஆடியோவை வெளியிட்ட ப்ரிகோஸின், “தாய்நாட்டுக்கு துரோகம் செய்துவிட்டதாகக் கூறுகிறார் அதிபர் புதின். அது ஓர் ஆழமான தவறு. நாங்கள் தாய்நாட்டின் பாதுகாவலர்கள். புதினின் வேண்டுகோளை எனது படை வீரர்கள் கேட்க மாட்டார்கள். ஏனெனில், எங்களுக்கு எங்களின் தேசம் ஊழல், சதி மற்றும் அதிகார துஷ்பிரயோகத்தில் சிக்கியிருப்பதில் விருப்பமில்லை” என்று கூறியுள்ளார்.
via News J : https://ift.tt/9z3aOnv
via News J : https://ift.tt/9z3aOnv
Mediaதமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு தர வரிசைப் பட்டியலானது நாளை வெளியிடப்பட உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்குகின்ற 450க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன.அதனையொட்டி, இந்த அனைத்து இடங்களிலும் 2023-24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு மே மாதம் 5 முதல் ஜூன் மாதம் 4 ஆம் தேதிவ்ரை நடைபெற்று வந்தது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணியானது ஜூன் 20 ஆம் தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை, அதாவது ஜீன் 26 ஆம் தேதி வெளியாக உள்ளது. மாணவர்கள் தரவரிசைப் பட்டியலை www.tneaonline.com என்ற இணைய தளத்தில் அறியலாம் என்றூ சொல்லப்பட்டுள்ளது. தரவரிசை சார்ந்து புகார்கள் ஏதேனும் தெரிவிக்க எண்ணினால் ஜூன் 30 தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2ம் தேதி அடுத்தக்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது.
via News J : https://ift.tt/4alRdnY
via News J : https://ift.tt/4alRdnY
Mediaமனிதர்களாகிய நமக்கு ஒரு நாளில் ஆறு மணியிலிருந்து எட்டு மணி வரை சராசரியாக தூக்கம் என்பது தேவைப்படுகிறது. அப்படி தூங்கினாலும் அடுத்தநாள் அலுவலகத்திலோ, பள்ளியிலோ, கல்லூரியிலோ மதிய உணவு எடுத்துக்கொண்ட பின் தூக்கமானது வருகிறது அல்லது மூளை சோர்வடைகிறது. இதனை சரிபடுத்தவே உலக நாடுகள் ‘பவர் நேப்’ என்ற முறையை கொண்டுவந்துள்ளனர்.’பவர் நேப்’ என்றால் என்ன? Bizarre energy pod that keeps Googlers refreshed’நேப்’ என்ற ஆங்கில சொல்லுக்கு சிறிய அல்லது குட்டி உறக்கம் என்று பொருள். கிட்டத்தட்ட பத்து நிமிடத்தில் இருந்து இருபது நிமிடம் வரை இந்த உறக்கத்தை நாம் எடுத்துக்கொள்ளலாம். இது சில முறை அரை மணி நேரமும், ஏன் ஒன்றரை மணி நேரம் வரை கூட நீளலாம். ஆனால் ஒன்றரை மணி நேரம் வரை நீண்டால் அதனை முழுத் தூக்கமாகவே சிலர் கருதுகின்றனர்.‘பவர் நேப்’பின் நன்மைகள் என்ன?நாம் பவர் நேப் எடுத்துக்கொள்வதன் மூலம் நம் மூளையானது புத்துணர்ச்சிக் கொள்கிறது என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. சோர்வு நீங்குவதுடன், ஞாபகத் திறனும் மேம்படும். மேலும் மதியத்திற்கு பிறகு உற்சாகமாக இயங்க இந்த பவர் நேப் வழிவகுக்கும் என்று சொல்லப்படுகிறது.மதிய சாப்பாட்டிற்கு பிறகு உறக்கம் வர காரணம் : மதிய உணவிற்கு பிறகு நம்மவர்களுக்கு தூக்கத்திற்கான அறிகுறியானது அதிக அளவு ஏற்படுகிறது. அதனை சமாளிக்க நாம் முகத்தைக் கழுவுவதும் தேநீர் அருந்துவதும் போன்ற செயல்களை செய்கிறோம். நம்மால் அப்படியும் கட்டுப்படுத்த முடிவதில்லை. இதனை நாம் ‘ஃபுட் கோமோ’ என்று சொல்கிறார்கள். சாப்பிட்ட பிறகு செரிமானம் ஏற்படுவதற்கான இரத்தமானது வயிற்றை நோக்கி செல்லும். அதில் சில துளிகள் சிறு மூளைக்கு செல்கிறது. இதனால் மூளையானது தூக்கத்தை நாடுகிறது. இதன் விளைவாக நமக்கு மதியம் தூக்க கலக்கம் ஏற்படுகிறது.உலக நிறுவனங்களில் ‘பவர் நேப்’Bizarre energy pod that keeps Googlers refreshedகூகுள் நிறுவனத்தை எடுத்துக்கொண்டால், அவர்களின் பணியாளர்களுக்கு என்று ஒரு பவர் நேப் ஸ்லீப்பிங் சேர் ஒன்றினை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள். அதே போல பேஸ்புக் நிறுவனம் போன்ற உலக நிறுவனங்கள் அனைத்தும் இந்த பவர் நேப் ஸ்லீப்பிங் சேர் முறையினை தங்களது ஊழியர்களுக்காக உருவாக்கிக் கொடுத்துள்ளார்கள். இந்த நாற்காலியின் சந்தை மதிப்பானது 3.6 லட்சம் ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த ஸ்லீப்பிங் சேர் உறங்குபவர்களுக்கு ஒரு லாவகமான தன்மையக் கொடுக்கிறது. உறங்க செல்பவர்களுக்கு ஏற்ற இசையையும், அவர்களுக்கான தூங்கும் நேரத்தையும் வரையறை செய்து வைக்கிறது. தூங்குவதற்கான ஒலி மற்றும் ஒளி இரண்டையும் சரியான விகிதாச்சாரத்தில் கொடுக்கிறது. தற்போது இந்திய சந்தைகளிலும் இந்த பவர் நேப் சேரானது பயன்பாட்டிற்கு வரத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
via News J : https://ift.tt/LNSvUbA
via News J : https://ift.tt/LNSvUbA
❤1
Mediaஅரசு போக்குவரத்துத் துறையில் டயர்கள் வாங்குவதில் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன் மற்றும் சிவசங்கர் ஆகியோர் ஊழல் செய்துள்ளதாக குற்றச்சாட்டுகள் பூதாகரமாகி உள்ளது. அடுத்தடுத்த ஊழல் குற்றச்சாட்டுகளால் ஸ்டாலினின் அமைச்சரவைக்கு ஆப்பு விழுந்துள்ளது குறித்து விளக்குகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.ஊழல் சமுத்திரத்தில் மூழ்கி முத்தெடுப்பதில் திறமை வாய்ந்தவர்கள் திமுகவினர்தான் என்பதை ஸ்டாலினின் அமைச்சரவை சகாக்களை சுற்றிச் சுழன்றடிக்கும் ஊழல் குற்றச்சாட்டுகளே அம்பலமாக்கி வருகின்றன.தற்போது மீண்டும் போக்குவரத்து துறையில் புதிய ஊழல் ஒன்று பூதாகரமாகி உள்ளது. ஏற்கனவே செந்தில்பாலாஜியைப் போலவே போக்குவரத்து துறையில் பணி நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பாக பலகோடிகளை அமைச்சர் சிவசங்கர் வாங்கியிருப்பதாக ஊழல் குற்றச்சாட்டுகள் பரபரப்பாகி வருகிறது.இந்த நிலையில் மேலும் ஒரு புதிய ஊழல் குற்றச்சாட்டு முன்னாள் மற்றும் இந்நாள் போக்குவரத்து துறை அமைச்சர்களான ராஜ கண்ணப்பன் மற்றும் சிவசங்கர் மீது சுமத்தப்பட்டுள்ளது.போக்குவரத்துத் துறையில் மறுசுழற்சி செய்த டயர்கள் வாங்குவதிலும், டயர்கள் மறுசுழற்சிக்கான ரப்பர்கள் வாங்குவதிலும் இந்த முறைகேடு நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. மக்களின் உயிரோடு விளையாடும் இந்த ஊழலின் தொடக்கப்புள்ளி அமைச்சர் ராஜகண்ணப்பன் என்கிறார்கள்.மறுசுழற்சி செய்யப்பட்ட டயர்களை வாங்குவதற்கு ELGI என்னும் ரப்பர் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் டயர்கள் 12 ஆயிரம் கிலோமீட்டர்தான் ஓடுவதாகவும், டயர்கள் அவ்வளவு உறுதியாக இல்லை என்பதால் டயர் வெடித்து விபத்துகள் நிகழ்வதாகவும் ஓட்டுநர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கடந்த 1996 காலகட்டத்தில் அமைச்சர் பொன்முடியால் அறிமுகப்படுத்தப்பட்ட கோவையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் டயர்களின் தன்மை காரணமாக, கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ராஜகண்ணப்பன் தனது இலாகா மாற்றப்படுவதற்குமுன்பாக இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்தார். இதையே அமைச்சர் சிவசங்கரும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், போக்குவரத்து கழக டெப்போக்களில் பேருந்து டயர்களின் மைலேஜை குறிக்கும் ஆவணங்களை எல்லாம், அமைச்சரின் அலுவலகத்துக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று டயர் மறுசுழற்சிக்கான மூலப்பொருட்கள் வாங்குவதிலும் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதாகவும் சிவசங்கர் மீது புகார் வாசிக்கப்படுகிறது. இப்படி தரமற்ற டயர்களைப் பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த போதும், இதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? எதிர்கேள்வி கேட்காமல் தனக்கு வருமானம் கொண்டு வருபவர்களை மட்டும்தான் ஸ்டாலின் அமைச்சராக்கி உள்ளாரா? தொடர்ந்து அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில் விரைவில் திமுக ஆட்சியே ஊழலுக்காக கலைக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/Oo7gyIB
கடந்த 1996 காலகட்டத்தில் அமைச்சர் பொன்முடியால் அறிமுகப்படுத்தப்பட்ட கோவையை சேர்ந்த இந்த நிறுவனத்தின் டயர்களின் தன்மை காரணமாக, கடந்த அதிமுக ஆட்சியில் இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. ஆனால், ராஜகண்ணப்பன் தனது இலாகா மாற்றப்படுவதற்குமுன்பாக இந்த நிறுவனத்துக்கு அனுமதி அளித்தார். இதையே அமைச்சர் சிவசங்கரும் தொடர்ந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் வகையில், போக்குவரத்து கழக டெப்போக்களில் பேருந்து டயர்களின் மைலேஜை குறிக்கும் ஆவணங்களை எல்லாம், அமைச்சரின் அலுவலகத்துக்கு கொண்டுவர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அதே போன்று டயர் மறுசுழற்சிக்கான மூலப்பொருட்கள் வாங்குவதிலும் சந்தை விலையை விட அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவதாகவும் சிவசங்கர் மீது புகார் வாசிக்கப்படுகிறது. இப்படி தரமற்ற டயர்களைப் பயன்படுத்துவதால் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்த போதும், இதுகுறித்தெல்லாம் முதலமைச்சர் கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? எதிர்கேள்வி கேட்காமல் தனக்கு வருமானம் கொண்டு வருபவர்களை மட்டும்தான் ஸ்டாலின் அமைச்சராக்கி உள்ளாரா? தொடர்ந்து அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் பூதாகரமாகி வரும் நிலையில் விரைவில் திமுக ஆட்சியே ஊழலுக்காக கலைக்கப்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/Oo7gyIB
Mediaகாமராஜர் நெடுஞ்சாலையில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இருசக்கர வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து, இருசக்கர வாகனத்தில் வந்த மூவரும் தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் மோதி பலியாகினர். இதில் இறந்தவர்கள் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.நேற்று மாலை 3.30 மணியளவில் மெரினா காமராஜர் சாலையில் அவ்வையார் சிலை எதிரே உள்ள அவ்வை சண்முகம் சாலையிலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் கடற்கரை சாலைக்கு செல்ல முற்பட்டு திடீரென வலது புறமாக எந்த அறிகுறியும் இல்லாமல் வண்டியைத் திருப்பியுள்ளார். காமராஜர் சாலையில் சாந்தோம் நோக்கி சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம், திரும்பி குறுக்கே வந்த அந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில் பின்னால் வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இதில் ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வலதுபுறம் இருசக்கர வாகனத்தை திருப்பி விபத்துக்கு காரணமான நபருக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு கீழ்பாக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அண்ணாசதுக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டதில் காயமடைந்தவர் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தேவ் சர்மா என்பதும், வண்டலூரில் தங்கி படித்து வரும் அவர், நண்பரின் இருசக்கரத்தை வாங்கிக்கொண்டு, மெரினா கடற்கரைக்கு வந்தபோது விபத்தில் சிக்கியுள்ளார்.Mediaஉயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என்பதும் சவுகார்பேட்டை பகுதியை சேர்ந்த பிரவீன், ரத்தன் என்பதும் விடுமுறை தினத்தில் வெளியே பொழுதுபோக்கிற்காக வந்துள்ளார்கள் என்றும் தெரியவந்துள்ளது..இறந்தவர்களின் உடல் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் விபத்து நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது
இருசக்கர வாகனத்தில் வந்த தேவ்சர்மா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எதிர்திசையில் திருப்பியதால், இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் பிரவீன், ரத்தன் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் அவர்கள் மீது இடித்து உயிர் இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.இதனை அடுத்து தேவ்சர்மா மற்றும் கார் ஓட்டுனர் அப்துல்சையது ஆகிய இருவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்துல் சையதை கைது செய்துள்ளனர். தேவ்சர்மா சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
via News J : https://ift.tt/vei0b2J
இருசக்கர வாகனத்தில் வந்த தேவ்சர்மா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை எதிர்திசையில் திருப்பியதால், இருசக்கர வாகனத்தில் வந்த சகோதரர்கள் பிரவீன், ரத்தன் ஆகியோர் சென்ற இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டு எதிரே வந்த கார் அவர்கள் மீது இடித்து உயிர் இழப்பு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.இதனை அடுத்து தேவ்சர்மா மற்றும் கார் ஓட்டுனர் அப்துல்சையது ஆகிய இருவர் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்துல் சையதை கைது செய்துள்ளனர். தேவ்சர்மா சிகிச்சையில் இருப்பதால் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
via News J : https://ift.tt/vei0b2J
Mediaவிளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு பையனாக வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சனம் செய்துள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்து திமுக அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர் என்றும் கூறிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசிய முழு கருத்துக்கள் பின்வருமாறு உள்ளன.சென்னையை அடுத்த புழல் பகுதியில் அதிமுக எம்ஜிஆர் மன்றம் சார்பில் எம்ஜிஆர் இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றரை கோடி மதிப்பில் இலவச கணினி பயிற்சி மையம் மாதவரம் மூர்த்தி ஏற்பாட்டில் திறந்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் மாணவ மாணவிகள் கணினி திறன் பெற்று வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக உதவியாக இருக்கும் என தெரிவித்தார். மேலும், திமுக ஆட்சியை விதி 356 யை பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சியடைவார்கள். டிஸ்மிஸ் ராசி திமுக விற்கு அதிகமாக உள்ளது. துரியோதனன் வீழ்ந்தது சகுனி, துட்சாதணனால் தான். அதுபோல திமுகவில் பல சகுனி, துட்சாதணன்கள் உள்ளனர் அவர்களால் திமுக அழிந்துவிடும் என விமர்சனம் செய்தார்.ஓபிஎஸ் நேற்று மாலை ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, ஜூலை 1ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவித்தது குறித்து பதிலளித்த முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மண் குதிரையை நம்பி ஆற்றில் இரங்கியவர்கள் நிலை என்ன ஆகும்? அதுபோல தான் ஓபிஎஸ் யை நம்பியவர்களின் நிலையும். அதிமுக ரயில் மாதிரி, அதன் என்ஜின் சென்று கொண்டே இருக்கிறது, ஓபிஎஸ் போன்ற தேவையில்லாத பெட்டிகளை கலற்றி விட்டுவிட்டோம். அதனால், நானும் இருக்கேனு காண்பித்துக்கொள்ள ஓபிஎஸ் செயல்படுகிறார் என விமர்சித்தார்.அதனை தொடர்ந்து பேசிய அவர், விளையாட்டு துறை அமைச்சர் விளையாட்டு பையனாக வரலாறு தெரியாமல் பேசி வருகிறார் எனவும், அப்போது உதயநிதி ஸ்டாலினை விளையாட்டுத்துறை அமைச்சர் என கூறுவதற்கு பதில் துணை முதல்வர் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாய்தவறி கூறினார்.திமுக அரசு 500 மதுக்கடைகளை மூடியது. அதில்
தமிழகத்தில் வருமானம் குறைவாக உள்ள கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இல்லாத போது மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோசமிட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை என முதலமைச்சரையும், திமுகவையும் விமர்சனம் செய்தார்.நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து பேசிய அவர்,
யார் வேண்டுமானாலும் அரசியல் வாங்க, எவ்ளோ கஷ்டம், எவ்ளோ நெலிவு சுழிவுகள் இருக்குனு தெரிஞ்சிக்கோங்க என நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து முதல்வன் பட ரகுவரன் பாணீயில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.மேலும், கடல் அரிப்பு உள்ள இடத்தில் பேனா சிலை வைப்பது முறையல்ல எனவும், அதனால், மக்களின் வரிப்பணம் வீணாகும் எனவும், திமுக அறக்கட்டளையில் இருந்து பணம் செலவு செய்து கலைஞர் கோட்டம் அமைத்தது போல, அறக்கட்டளையில் இருந்து பணம் எடுத்து அறிவாலயத்தில் வைக்கட்டும். கடலில் பேனா சிலை வைப்பதற்கு அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சட்டபூர்வமாக அதிமுக சார்பில் எதிர்கொள்வோம் என ஜெயகுமார் உறுதியளித்தார்.செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மைக்காக நேரு விளையாட்டு அரங்கிலா அறுவை சிகிச்சை செய்யமுடியும் என சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், திமுக அமைச்சர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆபரேசன் நடைபெற உள்ள கலக்கத்தில் உள்ளனர் என கூறினார்.
via News J : https://ift.tt/FXGnkIY
தமிழகத்தில் வருமானம் குறைவாக உள்ள கடைகள் மட்டுமே மூடப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இல்லாத போது மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என கோசமிட்டனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் மதுவிலக்கு குறித்து வாய் திறக்கவில்லை என முதலமைச்சரையும், திமுகவையும் விமர்சனம் செய்தார்.நடிகர் விஜய் அரசியல் பேச்சு குறித்து பேசிய அவர்,
யார் வேண்டுமானாலும் அரசியல் வாங்க, எவ்ளோ கஷ்டம், எவ்ளோ நெலிவு சுழிவுகள் இருக்குனு தெரிஞ்சிக்கோங்க என நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்து முதல்வன் பட ரகுவரன் பாணீயில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பதிலளித்தார்.மேலும், கடல் அரிப்பு உள்ள இடத்தில் பேனா சிலை வைப்பது முறையல்ல எனவும், அதனால், மக்களின் வரிப்பணம் வீணாகும் எனவும், திமுக அறக்கட்டளையில் இருந்து பணம் செலவு செய்து கலைஞர் கோட்டம் அமைத்தது போல, அறக்கட்டளையில் இருந்து பணம் எடுத்து அறிவாலயத்தில் வைக்கட்டும். கடலில் பேனா சிலை வைப்பதற்கு அதிமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.சட்டபூர்வமாக அதிமுக சார்பில் எதிர்கொள்வோம் என ஜெயகுமார் உறுதியளித்தார்.செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சையில் வெளிப்படைத்தன்மைக்காக நேரு விளையாட்டு அரங்கிலா அறுவை சிகிச்சை செய்யமுடியும் என சுகாதாரத்துறை அமைச்சரின் கேள்விக்கு பதிலளித்த ஜெயகுமார், திமுக அமைச்சர்கள் மீது விரைவில் அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆபரேசன் நடைபெற உள்ள கலக்கத்தில் உள்ளனர் என கூறினார்.
via News J : https://ift.tt/FXGnkIY
Mediaசென்னை பெருநகர் காவல் ஆணையர் முன்னிலையில், சென்னை காவல்துறையால் கைப்பற்றப்பட்ட 2 கோடி மதிப்பிலான 1215 கிலோ கஞ்சா, மெத்தம்பெட்டமைன் மற்றும் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் நீதிமன்ற ஆணையின் பேரில் எரித்து அழிக்கபட்டன. கடந்த ஒருவருடத்தில் மட்டும் 3 முறை மொத்தம் ரூபாய் 4.5 கோடி மதிப்பிலான 3,135 கிலோ கஞ்சாவானது எரித்து அழிக்கப்பட்டுள்ளது.போதைப் பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட கஞ்சா, ஓபியம், ஹெராயின், கொக்கையின், மெத்தம்பெட்டமைன், கெட்டமைன் போன்ற கைப்பற்றப் பொருட்களின் ஆபத்து கருதியும், அதனை கைகொள்வதற்கான இடவசதி கருதியும், என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உரிய முறையில் அழிக்க சென்னை பெருநகர காவல்துறை உரிய நடவடிக்கையினை அவ்வப்போது எடுத்துவருகிறது.Mediaஅதன்பேரில் என்.டி.பி.எஸ் சட்டத்தின் கீழ் பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தலைமையில் போதைத் தடுப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழுவினரின் மேற்பார்வையின் கீழ் சம்பந்தப்பட்ட புலனாய்வுத் துறை அதிகாரிகள் என்.டி.பி.எஸ் சட்டத்தின் பிரிவு 52அ-விற்கு கீழ் போதைப்பொருட்கள் வழக்குக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்களின் புதிய உறுதிமொழி கோப்பு தாக்கல் செய்து, உரிய மாதிரிகள் மற்றும் புகைப்படங்கள் எடுக்கப்பட்ட பின்னர், நிலுவையில் உள்ள 41 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 996.15 கிலோ போதைப் பொருட்களை அழிக்க திட்டமிட்டது. மேலும் போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றம் மூலம் 84 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 218.825 கிலோ போதைப் பொருட்களை அழிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அதன்படி இன்று, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் முன்னிலையில் 125 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1213 கிலோ 685 கிராம் கஞ்சா, 1.25 கிலோ மெத்தம்பெட்டமைன் மற்றும் 40 கிலோகிராம் ஹெராயின் என மொத்தம் 1215 கிலோ போதைப் பொருட்கள் செங்கல்பட்டு மாவட்டம் தென்மேல்பாக்கம் கிராமத்தில் உள்ள சிஜே மல்டிகிளேவ் இந்தியா பிரைவேட் நிறுவனத்தின் மூலம் எரிக்கப்பட்டது. 1000 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் அழிக்கப்பட்ட இந்த போதைப்பொருட்களின் மதிப்பு சுமார் 2 கோடி ரூபாயாகும்.
via News J : https://ift.tt/AlOzLKB
via News J : https://ift.tt/AlOzLKB
Mediaநடிகர் விஜய் நடித்திருக்கும் லியோ படத்தின் பாடல் இளைஞர்களை போதைப் பழக்கத்திற்கு தள்ளும் வகையில் இருப்பதாகவும் ரவுடிசத்தில் தள்ளும் வகையில் இருப்பதாகவும் ஆர்டிஐ செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணைய அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார்.Leo- Na ready dhan varava lyric |thalapathy vijay | lokesh kanagaraj | aniruth ravichandran - YouTubeசென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சமூக ஆர்வலர் ஆர் டி ஐ செல்வம் என்பவர் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவர இருக்கின்ற லியோ திரைப்படத்தின் “நான் ரெடியா” பாடல் வெளியாகி சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது இந்த நிலையில் இந்தப் பாடலில் போதைப் பொருள் பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் ரவுடிசத்தை உருவாக்கும் வகையிலும் நடிகர் விஜய் நடித்திருப்பதாக சமூக ஆர்வலர் ஆர்டிஐ செல்வம் ஆன்லைன் மூலமாக காவல் நிலையத்திற்கு புகார் மனு அளித்துள்ளார். மேலும் இன்று 10 மணி அளவில் நீதிமன்றம் மூலமாக மனு அளிக்க இருப்பதாகவும் தகவல் தெரிவித்திருக்கிறார் ஆகவே நடிகர் விஜய் மீது போதை பொருள் தடுப்பு சட்ட பிரிவின்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இதனை ஆதரிக்கும் வகையில் பாடலை கைடு செய்த நபர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர் ஆன்லைன் மூலமாக புகார் மனு அளித்துள்ளார். மேலும் கடந்த சில நாட்களாகவே போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சியை காவல்துறை உயர் அதிகாரிகள் சென்னை முழுவதும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் இப்பாடல் தற்போது வைரலாகி போதைப்பொருள் பொருட்களை உபயோகிக்கும் வகையில் இளைஞர் மத்தியில் தூண்டுதலாக அமைந்திருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/ecrmnFl
via News J : https://ift.tt/ecrmnFl
Mediaஅதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள், போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் ஒழிப்பது நம் அனைவரின் கடமை என்று தனது டிவிட்டர் தளத்தில் வலியுறுத்தியுள்ளார். அவரின் டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.பொதுச்செயலாளர் Tweet!நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்; வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும் போதையின் பாதைக்கு செல்லவிடாமல், நல்வழிப்படுத்துவது நம் கடமையென கொள்வோம்.நாட்டில் பெருவாரியான குற்றச் சம்பவங்களுக்கும், நம் சமூக சீர்குலைவுக்கும் காரணமான கொடிய போதைப் பொருள் புழக்கத்தை முற்றிலும் அகற்றி, நம்மையும், நம் குடும்பத்தையும் வளத்துடன் பாதுகாத்து, போதையற்ற தமிழகத்தை உருவாக்கிடுவோம்;
வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும்… pic.twitter.com/SLYzV4AZ7I— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 26, 2023
via News J : https://ift.tt/40QiJRq
வருங்கால தலைமுறையான இளைஞர்களையும், மாணவச் செல்வங்களையும்… pic.twitter.com/SLYzV4AZ7I— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 26, 2023
via News J : https://ift.tt/40QiJRq
Mediaதொழிற்சாலைகளுக்கான மின் கட்டணங்களை உயர்த்தி தொழில் முனைவோரை வேதனையில் ஆழ்த்தி வரும் விடியா ஆட்சி, இதோ அடுத்த இடியை தலையில் இறக்க ஆயத்தமாகி விட்டது. மாலை நேர உச்ச மின் பயன்பாட்டுக்கட்டணம் 20 சதவீதம் உயரப்போகிறது என்பதுதான் அந்த இடி.பொதுவாக மின்சார பயன்பாட்டை இரண்டு விதமாகப் பிரிப்பார்கள். ஒன்று வழக்கமான மின்பயன்பாடு… மற்றது உச்சபட்ச மின் பயன்பாடு… நுகர்வோர்கள் காலையிலும், மாலையிலும் உச்சபட்சமாக மின்சாரத்தை பயன்படுத்துகிறார்கள். அப்போது மின்சாரத் தேவை அதிகமாக இருப்பதால், கையிருப்பு போதாமல் தனியாரிடம் மின்சாரம் வாங்கி நுகர்வோர்களுக்கு அளிக்கப்படுகிறது.இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் அழுத்தத்துக்கு மாநில அரசு துணை போக கூடாது என தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்டு எம்பிளாயீஸ் ஃபெடரேஷன் வேண்டுகோள் விடுத்துள்ளது.தற்போது இரவு நேரங்களில் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு 20 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்க விடியா அரசு முடிவெடுத்திருக்க தகவல்களால் கதிகலங்கிப் போய் இருக்கிறார்கள் மின் நுகர்வோர்கள். அதிலும் குறிப்பாக சிறுகுறு தொழில் முனைவோர்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் மின்சாரம் வணிகமயமாவதோடு, வசதி படைத்தவர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய பொருளாகி விடும். மின்கட்டண உயர்வால், நடுத்தர, சாமானிய மக்கள் மின்சாரம் இருந்தாலும் அதனை பயன்படுத்தினா எங்கே பில் அதிகமாக வந்துவிடுமோ என்று அஞ்சும் நிலைதான் இருக்கிறது.மின்கட்டண உயர்வு குறித்த தகவல்கள் பரவிய நிலையில், இந்த கட்டண உயர்வு வீடுகளுக்கு பொருந்தாது என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆனால் இதனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் மக்கள் இல்லை.எதற்கெடுத்தாலும் மத்திய அரசு அழுத்தம் கொடுக்கிறது. அதனால் நாங்கள் வசூலிக்கிறோம் என்று சப்பைக் கட்டு கட்டும் விடியா அரசு, இதற்கும் அதே காரணத்தையே தூக்கிக்கொண்டு வருகிறது. நாங்கலாம் வேற மாதிரி…. எங்களை யாரும் சீண்ட முடியாது என்று காலரை தூக்கிவிட்டு பேசும் ஸ்டாலின் ஏன் இந்த மின்சாரக் கட்டண உயர்வில் மட்டும் மத்திய அரசை எதிர்க்கவில்லை?
மத்திய அரசுக்கு பயந்தும், மானியத்துக்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதில் அக்கறை காட்டும் விடியா அரசு,இந்த மின்சார கட்டண உயர்விலும்அதே போல்தான் பின்பற்றுகிறது…சமீபத்தில் தான் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது அரசு. அப்படியிருக்க மீண்டும் மின்கட்டண உயர்வா என்று இப்போதே கலங்கிப் போயுள்ளனர் தொழில் முனைவோர்கள்…மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக்கடிக்கும்… ஆனால் விடியா ஆட்சியில் மின்சாரம் என்னும் பெயரைச் சொன்னாலே ஷாக்கடிக்கும் நிலைநிலவுவது, பொதுமக்கள், சிறு குறு தொழில் முனைவோர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/0kBY8uM
மத்திய அரசுக்கு பயந்தும், மானியத்துக்காகவும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதில் அக்கறை காட்டும் விடியா அரசு,இந்த மின்சார கட்டண உயர்விலும்அதே போல்தான் பின்பற்றுகிறது…சமீபத்தில் தான் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது அரசு. அப்படியிருக்க மீண்டும் மின்கட்டண உயர்வா என்று இப்போதே கலங்கிப் போயுள்ளனர் தொழில் முனைவோர்கள்…மின்சாரத்தை தொட்டால்தான் ஷாக்கடிக்கும்… ஆனால் விடியா ஆட்சியில் மின்சாரம் என்னும் பெயரைச் சொன்னாலே ஷாக்கடிக்கும் நிலைநிலவுவது, பொதுமக்கள், சிறு குறு தொழில் முனைவோர்களிடையே மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
via News J : https://ift.tt/0kBY8uM