News J
595 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Media ஜுன் 13, இரவு 9.45 மணி – அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டிற்கு சென்றார்.நள்ளிரவு 12.30 மணி – ஒரு அமலாக்கத்துறை அதிகாரி மற்றும் மத்திய பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகள் காரில் சென்றனர்.நள்ளிரவு 1.18மணி – சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள செந்தில்பாலாஜி வீட்டில் 17 மணி நேரமாக நடைபெற்ற சோதனை நிறைவடைந்தது.நள்ளிரவு 1.22 மணி – வழக்கறிஞர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் செந்தில்பாலாஜி வீட்டிற்கு வருகை தந்த நிலையில், பரபரப்பான சூழல் காணப்பட்டது.நள்ளிரவு 1.36 மணி – அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து ஸ்டாலின் அவரது வீட்டில் மூத்த அமைச்சர்களுடன் சுமார் 4 மணிநேரம் ஆலோசனை மேற்கொண்டார்.நள்ளிரவு 1.54 மணி – அமலாக்கத்துறை வானங்கள் செந்தில்பாலாஜி வீட்டில் இருந்து புறப்பட்டது.நள்ளிரவு 2 மணி – ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்போடு செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை வாகனத்தில் புறப்பட்டார்.நள்ளிரவு 2.04 மணி – மெரினா கடற்கரை சாலை வழியாக செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்றனர்.நள்ளிரவு 2.06 மணி – திடீரென நெஞ்சுவலி எனக்கூறி காருக்குள் அலறிய அமைச்சர் செந்தில்பாலாஜி.நள்ளிரவு 2.09 மணி – செந்தில் பாலாஜியை உடல் பரிசோதனைக்காக ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.நள்ளிரவு 2.11 மணி – நெஞ்சுவலிக்குதுனு காருக்குள் உருண்டு புரண்டு அலறி, அழுது, துடித்து நாடகமாடிய செந்தில்பாலாஜி.நள்ளிரவு 2.14 மணி – மயக்கமடைந்த நிலையில் இருந்த செந்தில் பாலாஜியை ஸ்டெச்சரில் அழைத்து சென்று ஐசியூ-வில் அனுமதித்தனர்.அதிகாலை 3.01 மணி – விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி செந்தில்பாலாஜியை காண ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.அதிகாலை 3.07 மணி – திமுக நிர்வாகிகளையும் மருத்துவமனையில் அனுமதிக்கக்கோரி மத்திய பாதுகாப்பு படை போலீசாருடன் அமைச்சர் உதயநிதி வாக்குவாதம்.காலை 7 மணிக்கு மேல் திமுக அமைச்சர்கள் மற்றும் தொண்டர்கள் அதிகளவில் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வரத் தொடங்கினர்.மருத்துவமனைக்கு திமுகவினர் படையெடுப்பை அடுத்து போலீசார் குவிப்பு.ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பதற்றமான சூழல் நிலவுவதால், நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/0zZXcWC
Mediaஅமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை தமிழக முதல்வர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை அரசியல் சாயம் பூசாமல் சட்ட நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும். அதனை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டுமே தவிர நாடகம் போட கூடாது.எய்ம்ஸ் மருத்துவர்களை கொண்டு செந்தில் பாலாஜியின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும். சட்டப்படி முறையாக விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.சென்னை பட்டினபாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்படும்போது நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அது குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்ற பழமொழிக்கேற்றவாறு நேற்று இரவு செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார்.கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சியில் கோடிக்கணக்கான ரூபாய்களை சம்பாதித்துள்ளார். தமிழக முழுவதும் சட்டவிரோதம் மதுபான கூடங்களை 24 மணி நேரமும் நடத்தி பணம் சம்பாதித்துள்ளார். ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக 10 ரூபாய் வைத்து கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார். அவருக்கு பேரே 10 ரூபாய் பாலாஜி என மாறிவிட்டது.அண்ணா நகர் மோகன் வீட்டில் சோதனை நடைபெற்ற போது முதல்வர் ஏன் அமைதியாக இருந்தார் அப்போது ஏன் எதுவும் சொல்லவில்லை ஆனால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது என்றவுடன் மட்டும் ஏன் நள்ளிரவில் ஆலோசனை செய்கிறார். முதல்வரின் குடும்பம் பற்றிய அனைத்து தகவல்களும் செந்தில் பாலாஜிக்கு தெரியும் அதனால் தான் அவரை பாதுகாக்க துடிக்கிறார்.நேற்று காலை நலமாக நடைபயிற்சி மேற்கொண்டவர் நள்ளிரவில் நெஞ்சுவலி என்று கூறுகிறார்.நெஞ்சு வலியின் போது காவல்துறையினரை காலால் எட்டி உதைக்கிறார். நெஞ்சுவலியால் துடிப்பவர் எப்படி காவல்துறையினரை காலால் எட்டி உதைக்க முடியும் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.நேற்று காலை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே சோதனைக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக கூறினார் ஆனால் இரவு கைது செய்யும் நேரத்தில் நெஞ்சு வலி என கூறியது ஏன்?அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் நபரை முதலமைச்சர் எப்படி சந்திக்க முடியும்?அரசியல் பழிவாங்கும் நிகழ்வாக செந்தில் பாலாஜி கைதை பார்க்க கூடாது செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதற்கு அரசியல் சாயம் பூசக்கூடாது சட்டம் தன் கடமையை செய்து கொண்டிருக்கிறது சட்டப்படி தான் எதிர் கொள்ள வேண்டும். சட்டப்படி எதிர்கொள்ள திறன் இல்லாமல் நாடகம் போடக்கூடாது.எய்ம்ஸ் மருத்துவர்களைக் கொண்டு செந்தில் பாலாஜியின் உடலை பரிசோதனை செய்ய வேண்டும் சட்டப்படி கடமையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் உள்ள மருத்துவர்கள் அரசிற்கு சாதகமாக செயல்பட்டால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவர்கள் விருப்பு வெறுப்பின்றி நேர்மையாக பணியாற்ற வேண்டும்.2015 ஆம் ஆண்டு தனிப்பட்ட முறையில் ஊழல் புகாரில் சிக்கினார். அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அம்மா செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்தார்.உடனடியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் இல்லையேல் ஆளுநர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.


via News J : https://ift.tt/YD8fGb1
Mediaஅமலாக்கத்துறை ரெய்டில் செந்தில்பாலாஜி வசமாக சிக்கியிருக்கும் நிலையில், திமுக அரசு கவிழப்போகிறதா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…2001 – ஜூன் மாதம் … அய்யோ அய்யோ கொல பண்றாங்களே…கொல பண்றாங்களே…. என தன்னை கைது செய்ய வந்த காவல்துறையினரைப் பார்த்து கதறினார் கருணாநிதி.2023 – ஜூன் … அமலாக்கத்துறையினர் கைது செய்த நிலையில், ஐயோ நெஞ்சு வலிக்குதே என்று ஆஸ்கர் அவார்டுக்கு பரிந்துரை செய்யும் அளவுக்கு அழுகுனி நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி…..ஊழல் குற்றச்சாட்டு, சொத்து குவிப்பு, டாஸ்மாக் மூலம் கல்லா கட்டியது, சொகுசு பங்களா கட்டி வருவது, உயர் ரக வெளிநாட்டு கார்களை வாங்கி வைத்திருப்பது என மல்ட்டி மில்லியனர் ரேஞ்சுக்கு உயர்ந்திருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ரவுண்டு கட்டினர்….அவர்களிடம் இருந்து கிடைத்த ஆவணங்களின் அடிப்படையிலும், போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக செய்த மோசடி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடனும் தமிழகத்தில் சென்னை, கரூர் உள்ளிட்ட இடங்களில் செந்தில்பாலாஜிக்கு சொந்தமான வீடுகளில் ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், ஊழல் செய்தது தொடர்பாக ஜூன் 13ஆம் தேதி நள்ளிரவு கைது செய்தனர்….அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றபோது, வாகனத்தில் ஏற்றிய அதிகாரிகளை தன் கால்களால் எட்டி உதைத்தும், தனது ஆடைகளை சரி செய்து கொண்டும் இருந்த செந்தில் பாலாஜியின் காணொலியும் சமூகவலைதளங்களில் வைரலாகி இருக்கிறது…..ஆனால் திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாகக் கூறி அவர் அரங்கேற்றிய நாடகத்தால், அவரை ஓமந்தூரார் மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்க… திமுக கம்பெனி அதனை வைத்து நடத்திவரும் காட்சிகள் சினிமாவை மிஞ்சும் வகையில் இருப்பதைப் பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவுமே சிரித்துக் கொண்டிருக்கிறது.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நள்ளிரவு நேரம் தொடங்கி, திமுக அமைச்சர்கள் முதல் அமைச்சர், வாரிசு அமைச்சர், முதல்வரின் மருமகன் என்று ஓமாந்தூரார் மருத்துவமனையே மினி அறிவாலயமாகி உள்ளது.முதலமைச்சர் முதல் திமுக அமைச்சர்கள் அனைவருமே செந்தில் பாலாஜியை பார்த்த நிலையில், கணவரை காணவில்லை என்பது போல ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருக்கிறார் அவரது மனைவி மேகலா….விடியா திமுக அரசின் அங்கமாக உள்ள ஒரு அமைச்சருக்காக முதலமைச்சர் முதல் அமைச்சர் பெருமக்கள் வரை மருத்துவமனைக்கு வருவதும், அவரைக் காக்கத்துடிப்பதும் உண்மையிலேயே அவர் மீதான பாசம் இல்லை… எங்கே செந்தில்பாலாஜி வாயைத் திறந்தால் தானும் தனது குடும்பத்தாரும் சிக்கிக் கொள்வோம் என்னும் ஸ்டாலினின் பதைபதைப்புதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். செந்தில்பாலாஜியால் திமுகவின் ஆட்சியும் கவிழும் என்பதும் அந்த பதைபதைப்புக்குள் அடங்கியிருக்கிறது.– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்

via News J : https://ift.tt/WEiKTNg
Mediaநீதிமன்ற காவலை விடுவிடுக்கக் கோரிய செந்தில்பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.ரிமாண்டை ரத்து செய்ய வேண்டும், ஜாமீன் வழங்க வேண்டும் ,வேறு தனியார் மருத்துவமனைக்கு மேற் சிகிச்சைக்காக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் 3 தனி தனி மனுக்கள் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டது.செந்தில் பாலாஜி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நேற்றைய தினமே நீதிபதி உத்தரவிட்ட நிலையில் செந்தில் பாலாஜியை ரிமாண்ட் செய்வதை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.மேலும், அமலாக்கத்துறையின் சார்பில் காவலில் விசாரணை கோரிய மனு இன்னும் சற்று நேரத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்த வழக்கு விசாரணை முடிந்த பின்னரே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்படுமா மற்றும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்படுவாரா என்பது குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படும்.ஆனால் தற்போது உயர்நீதிமன்ற முதன்மை அமர்வானது செந்தில்பாலாஜியின் மனுவினைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

via News J : https://ift.tt/LMACzbd
Mediaநீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறை கைதிகளுக்கான பதிவேடு எண் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கான சிறைக்கைதிக்கான பதிவேடு எண் 001440 என்கிற எண் வழங்கப்பட்டுள்ளது. சிறைக் கைதிகளுக்கு உள்ள விதிமுறைகள் செந்தில் பாலாஜிக்கும் பொருந்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. மேலும் செந்தில்பாலாஜியை குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் பார்க்க அனுமதி இல்லை. அப்படி பார்க்கவேண்டும் என நேர்ந்தால் நீதிபதியின் ஒப்புதல் பெற்ற பிறகே பார்ப்பதற்கு அனுமதி வழங்கப்படும். ஆனால் காலையிலேயே அமைச்சர் சேகர்பாபு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்த்து வந்துள்ளார். அனுமதி பெற்றுதான் அமைச்சர் சேகர்பாபு செந்தில் பாலாஜியை பார்த்தாரா என்பது கேள்விக்குறியே!


via News J : https://ift.tt/Z19V7b5
Mediaவிடியா திமுக ஆட்சியில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரிகளில் கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு கேமராக்கள் சரியாக செயல்படாதது போன்ற கட்டமைப்பு வசதிகளில் நிகழ்ந்த குறைகளை சுட்டிக்காட்டி, இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்தது. இதனால் இந்த மூன்று மருத்துவக்கல்லூரிகளிலும் உள்ள 500 எம்.பி.பி.எஸ். இடங்கள் ரத்தானதால் தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவு பாழானது. இதையடுத்து மக்கள் நல்வாழ்வுத்துறையின் அலட்சியம் குறித்து மாணவர்களின் பெற்றோர்களும், கல்வியாளர்களும், எதிர்க்கட்சித்தலைவரும் கண்டனம் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து தேசிய மருத்துவ ஆணைய அதிகாரிகளை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் சந்தித்தனர். அப்போது தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டிய குறைகளை நிவர்த்தி செய்தது தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்ததால் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகள் மேலும் ஐந்து ஆண்டுகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கலூரியின் அங்கீகாரம் ரத்து தொடர்வதாகக் கூறப்படுகிறது.மருத்துவக்கல்லூரிகளின் விவகாரத்தில் தமிழக அரசு கோட்டை விட்ட விவகாரம் அம்பலமான நிலையில், தற்போது அதே திருச்சியில் உள்ள ஈ.வெ.ரா. அரசு கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்து ரத்தாகி உள்ளதாக வெளியான தகவலால் தமிழக உயர்கல்வித்துறை மீது அதிருப்தி கிளம்பியிருக்கிறது.திருச்சி காஜாமலையில் கடந்த 1965ல் தொடங்கப்பட்ட ஈ.வெ.ரா அரசு கலைக்கல்லூரி 1999ல் தன்னாட்சி அந்தஸ்து பெற்றது. இங்கு இளங்கலை, முதுகலை படிப்புகளில் 15 துறைகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தை பல்கலைக்கழக மானியக் குழுவான யூ.ஜி.சியில் புதுப்பிக்க வேண்டும். ஆனால், ஈ.வெ.ரா அரசு மருத்துவக்கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரத்தை புதுப்பிப்பது தொடர்பாக கடந்த 2021ல் மாநில உயர்கல்வித்துறை வாயிலாக விண்ணப்பித்த நிலையில், இதுவரை தன்னாட்சி அங்கீகாரம் புதுப்பிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதான் தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது. விண்ணப்பம் செய்த ஆண்டுக்கு பின்னால் இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்களின் பட்டங்களும் செல்லுபடியாகாது என்னும் தகவலால் மாணவர்கள் அதிர்ந்து கிடக்கிறார்கள். தற்போது கல்வி பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தையும் அது கேள்விக்குறியாக்கி உள்ளது. கல்லூரியின் தன்னாட்சி அந்தஸ்தை புதுப்பிப்பது தொடர்பாக, கல்லூரி தேர்வுத்துறை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாகவும் அதிருப்தி கிளம்பியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கே, அங்கீகார விண்ணப்பம் கிடப்பில் உள்ள விஷயம் தெரியுமா தெரியாதா என்பதே கேள்விக்குறி என்கிறார்கள் ஈ.வெ.ரா கல்லூரி பேராசிரியர்கள் சிலர்.மக்கள் நல்வாழ்வுத்துறையின் அலட்சிய செயல்பாட்டால் திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் மருத்துவக்கல்லூரி அங்கீகாரம் ரத்து தொடர்வது… பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் 247 விளையாட்டு மாணாக்கர்கள் தேசிய அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்க இயலாமல் போனது… என்று விடியா ஆட்சியில் அமைச்சர்களின் செயலற்ற தன்மை சந்தி சிரிக்கும் நிலையில், தற்போது உயர்கல்வித்துறையின் ஏனோ தானோ செயல்பட்டால் திருச்சி ஈ.வெ.ரா கல்லூரியின் தன்னாட்சி அங்கீகாரமும் ரத்தாகும் அபாயம் ஏற்பட்டு மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.முதலமைச்சர் பின்னாலும், வாரிசு அமைச்சர் பின்னாலும் சுற்றுவதை நிறுத்திவிட்டு துறைசார்ந்த நடவடிக்கைகளில் அமைச்சர்கள் அக்கறை காட்டினால் மட்டுமே, தமிழகம் உண்மையான விடியல் பெறும்.

via News J : https://ift.tt/CVdnNDb
Mediaஅமைச்சர் செந்தில்பாலாஜி கைதானத் தொடர்ந்து அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் முத்துச்சாமிக்கும் அமைச்சர் தங்கம் தென்னரசிற்கும் செந்தில்பாலாஜியின் துறைகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஸ்டாலின் பொறுபேற்றதிலிருந்து திமுகவின் அமைச்சரவை நான்கு முறை மாறியுள்ளது. இது தமிழக அரசியல் வரலாற்றிலேயே நடக்காத ஒன்று.நேற்று அமலாக்கத்துறையினர் தவறான முறையில் சொத்து சேர்த்ததற்காக செந்தில்பாலாஜியைக் கைது செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து நெஞ்சுவலி நாடகம், மருத்துவமனையில் அமைச்சரவைக் கூட்டம் என ஒரு பெரிய திரைப்படத்திற்கான ஒத்திகைகளே நடந்துகொண்டிருந்தது. பிறகு நீதிமன்றக் காவலில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார் செந்தில்பாலாஜி. மேலும் நீதிமன்றக் காவலில் இருந்து தன்னை விடுவிக்கும்படி அவர் அளித்த மனுவானது தள்ளுபடி செய்யப்பட்டதினையொட்டி தற்போது அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

via News J : https://ift.tt/8Mhao0Q
Mediaநடிப்பிற்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற தகுதியுடைய அமைச்சர் செந்தில்பாலாஜி வாக்குமூலம் அளித்தால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில், அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை விடிய விடிய பார்த்து வருவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவறு செய்ததால்தான் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதிவியிலிருந்து புரட்சித்தலைவி அம்மா நீக்கியதாக கூறினார். ஆனால், அதிமுக ஆட்சி மீது கலங்கம் சுமத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன், முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி வருவதாகவும், அவர் அமைச்சராக இருப்பதற்கே தகுதியற்றவர் எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.ஊழல் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜியை இரவு முழுவதும் அமைச்சர்கள் முதல் முதலமைச்சர் வரை பார்த்து வருவதாகவும், அவர் வாக்குமூலம் அளித்தால் மாட்டி கொள்வோம் என்ற பயத்தில் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.அமைச்சர் செந்தில் பாலாஜியை காப்பாற்ற திமுக பாடுபட்டு வருவதாக குற்றச்சாட்டிய அவர், செந்தில் பாலாஜி கைது சம்பவம் தமிழக மக்களுக்கு தலைகுனிவு என கூறினார். எனவே, அமைச்சர் கைது செய்யப்பட்ட சம்பவத்துக்கு பொறுப்பேற்று பொம்மை முதல்வர் ஸ்டாலின், தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி மீது வேண்டுமென்றே களங்கம் சுமத்த வேண்டும் என்பதற்காக முழுக்க முழுக்க பொய்யான குற்றச்சாட்டுகளை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறி வருவதாக குற்றச்சாட்டினார். இந்தியாவிலே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக ஆட்சி என்றும், விஞ்ஞானம் ரீதியில் பல்வேறு ஊழல்களை செய்த விடியா திமுகவினர், ஊழல் பற்றி பேச எந்த அருகதையும் கிடையாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

via News J : https://ift.tt/W68bDlm
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/05/stalin-1.jpg">Media</a>கொள்ளை அடிப்பதையே கொள்கையா வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கொள்ளையடிக்க காலம் பார்த்துக் கொண்டிருக்கும் செந்தில் பாலாஜி யார்? எப்படிப்பட்டவர்? அவர் பின்னணி என்ன? இதோ பார்க்கலாம்…கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டி எனும் கிராமத்தில் பிறந்த வி.செந்தில்குமார் என்பவர் பின்னாளில் ஜோசியர்களின் யோசனையால், தன் பெயரை செந்தில்பாலாஜி என மாற்றிக்கொண்டார். அன்று பெயர் மாற்றத்தில் தொடங்கியது இன்று கட்சி மாற்றம் வரை தொடர்கிறது…கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய செந்தில்பாலாஜி 1995ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். ஆனால், அங்கு உரிய அங்கீகாரம் கிடைக்காததையடுத்து 2000ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த செந்தில் பாலாஜி 2011ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றதையடுத்து போக்குவரத்துத் துறை அமைச்சர் பதவி கொடுத்து அழகு பார்த்தார் ஜெயலலிதா. இதையடுத்து அத்துறையில் எழுந்த பல்வேறு புகார்களால் 2015ஆம் ஆண்டில் மாவட்டச் செயலாளர் மற்றும் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டன.புரட்சித்தலைவி ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் டிடிவி அணியில் இணைந்தார். இதனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட செந்தில்பாலாஜி, தனது கரூர் கம்பெனி ஆதரவாளர்களுடன் 2018ஆம் ஆண்டு மீண்டும் திமுகவிற்கே காவடி தூக்கத் துணிந்து அங்க இணைந்தார். கட்சிக்கு கட்சித் தாவிப் பழகிய செந்தில்பாலாஜி தற்போது தஞ்சமடைந்துள்ள இடம் திமுக. எந்தக் கட்சியில் இருந்தாலும் அதன் அதிகார மையத்துக்கு விரைவில் மிக நெருக்கமாகிவிடுபவர் செந்தில்பாலாஜி. அந்த தந்திர வேலை என்னவென்பது யாருக்கும் தெரியாது … அது ஓர் பெரும் புதிர்..திமுகவில் மூத்த அமைச்சர்கள் பலர் இருந்த நிலையில், செல்வம் கொழிக்கும் மின்வாரியத் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறையை செந்தில் பாலாஜியிடம் ஒப்படைத்தார் ஸ்டாலின். இது திமுகவினரிடையே அதிருப்திகளை கிளப்பியது. இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு அடுத்தடுத்த அசைமெண்டுகள் வழங்கப்பட்டன.2021ம் ஆண்டு உள்ளாட்சித்தேர்தலில் கோவையின் பொறுப்பாளர் செந்தில் பாலாஜி… அங்கு அவர் கையில் எடுத்தது கொலுசு ஃபார்மூலா… 100 வார்டுகள் உள்ள கோவையில் வார்டு ஒன்றுக்கு ஒன்றரைக் கோடி வரை செலவழித்தது திமுக. இதில் பெண் வாக்காளர்களைக் கவர வெள்ளிக் கொலுசு, பட்டுப்புடவை, குத்துவிளக்கு, வெள்ளிக் குடம் என களம் கண்டார். 300 கிலோ வெள்ளிக் கொலுசு வரை வாரி வழங்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், வழங்கப்பட்ட வெள்ளிக் கொலுசுகள் தரமில்லாமல் இருந்ததாக புகார் எழுந்தது தனிக் காமெடி.அதே நேரத்தில் ஆண் வாக்காளர்களுக்கு அன்லிமிடெட் சரக்கு வழங்கி தான் வகிக்கும் துறைக்கு பெருமை சேர்த்தவர். நேரடியாக பணம் கொடுத்தால் மாட்டிக்கொள்வோம் என அஞ்சி வாக்காளர்களுக்கு OR கோட் அடங்கிய சீட்டுகள் வழங்கப்பட்டு ஜிபே, பேடிஎம் மூலம் பணப்பரிமாற்றம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக வடவள்ளியில் அதிக வாக்குகளைக் கொண்ட ஒரு குடும்பத்துக்கு பேரம் படியாமல் வீட்டில் ஒரு வாக்குக்கு ரூ.35 ஆயிரம் வரை வழங்கப்பட்டது. இந்த ஜனநாயக படுகொலையைக் கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி. மாபெரும் வெற்றி என திமுக மார்தட்டிக்கொண்டதன் பின்னணியில் இத்தனை கீழ்த்தரமான வேலைகளை இருந்ததை என்னவென நொந்துகொள்ள.இப்படி தில்லுமுல்லு வேலை செய்து கோவையில் வெற்றியடைந்து ஸ்டாலினின் நம்பிக்கையைப் பெற்றதால் ஈரோடு இடைத் தேர்தலில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. தமிழகத்தில் ஓட்டுக்கு பணம் வழங்கும் ஃபார்மூலாக்களுக்கு வித்திட்டது திருமங்கலம் ஃபார்மூலா. ஜனநாயக படுகொலையாக கருத்தப்படும் ஓட்டுக்கு பணம் எனும் திமுகவின் ஃபார்முலாக்களை தூக்கி சாப்பிடும் வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின்போது “பட்டி ஃபார்மூலாவை” கையாண்டார் செந்தில் பாலாஜி. கரூர் கம்பெனி கும்பலைக் களம் இறக்கி வீடுகளில் எத்தனை ஓட்டுகள் தேறும் என்பதை வீட்டு வாசலில் எழுதி வைத்து மின்வாரியத் துறை அமைச்சர் என்பதை நிரூபிக்கும் வகையில் நைட்டோடு நைட்டாக வீடுகளுக்கு கரண்ட் கட் செய்து மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வாக்காளர்களுக்கு பணம் வழங்கினார். வாக்குப்பதிவுக்கு முந்தைய தினம் வாக்காளர்களை மண்டபங்கள், வீடுகளில் அடைத்து வைத்து பணம் கொடுத்து வாக்களிக்க அழைத்துச் சென்ற பட்டி ஃபார்மூலா கூத்தும் அரங்கேறியது.கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பது, டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 வரை கூடுதலாக வாங்குவது என அடுத்தடுத்த சர்ச்சைகளில் சிக்கிய செந்தில் பாலாஜிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை களைகட்டுகிறது… ஆம், ஊழல், ஊழல்,ஊழல்… ஊழலைத் தவிர வேறு எதுவும் அறியாத சரக்கு அமைச்சருக்கு வேறென்ன…
Mediaநான்காவது முறையாக விடியா அரசின் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ரெய்டு மற்றும் கைதால் தனது இலாகாக்களை பறிகொடுத்த டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி அடுத்து என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.வருமான வரித்துறை ரெய்டு…. அதையடுத்து அமலாக்கத்துறை ரெய்டு…..ரெய்டுக்குப் பின் இரவோடு இரவாக கைது….கைது செய்யப்பட்டதால் நெஞ்சு வலி என்று மருத்துவமனையில் அனுமதி…..இப்படி ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் ஆக சென்று கொண்டிருக்கிறது செந்தில்பாலாஜியின் விவகாரம்….இதில் அடுத்த ட்விஸ்ட்டாக செந்தில்பாலாஜியின் பதவியை பறித்திருக்கிறது திமுக தலைமை… அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டவர் பதவியை விட்டு விலக வேண்டும் அல்லது கட்சியே நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் ஸ்டாலின் எதுவும் செய்யாமல் இருப்பதன் பின்னணி என்ன? என்று தமிழக அரசியல் களத்தில் எழுந்த சர்ச்சைப் புயல் காரணமாக செந்தில்பாலாஜியின் பதவி என்னும் பல் பிடுங்கப்பட்டுள்ளது.செந்தில் பாலாஜியிடம் இருந்த மின்சாரத்துறை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் முத்துசாமிக்கும் பிரித்து கொடுக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது…..இலாகாக்கள் பிடுங்கப்பட்ட நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக இருக்கிறார் செந்தில்பாலாஜி…திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அமைச்சரவை மூன்று முறை மாற்றம் செய்யப்பட்ட நிலையில், செந்தில்பாலாஜி விவகாரத்தால் தற்போது நான்காவது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, சாதி ரீதியாக பேசிய விவகாரத்தில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ராஜ கண்ணப்பனை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றி, அந்த துறையை நிர்வகித்து வந்த எஸ்.எஸ்.சிவசங்கருக்கு போக்குவரத்துத் துறையை ஒதுக்கியது திமுக அரசு….அதன்பின்னர் தனது வாரிசுக்கு தனது வாரிசுக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறையை ஒதுக்கி அமைச்சாராக்கி இரண்டாவது மாற்றத்தை செய்தார்.
ஆடியோ புகழ் பிடிஆரின் துறையை மாற்றியது, ஆவடி நாசரிடமிருந்து பால்வளத்துறையை பிடுங்கி மனோ தங்கராஜுக்கு கொடுத்தது, தனது நண்பரான டி.ஆர்.பாலுவின் மகன் டி.ஆர்.பி. ராஜாவை தொழில் துறை அமைச்சராக்கியது என்று மூன்றாவது முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்தார் ஸ்டாலின்.
வாரிசு அமைச்சரை துணை முதலமைச்சராக்குவார் என்று எதிர்பார்ப்புகள் எகிறிக் கொண்டிருந்த நிலையில்தான், வாண்டடாக ஊழல் புகாரில் சிக்கிய செந்தில் பாலாஜியின் இலாகாக்களை வேறு இருவருக்கு கொடுத்து 4வது முறையாக
அமைச்சரவையில் மாற்றம் நிகழ்ந்துள்ளது.திமுக ஆட்சிக்கு வந்த 2 வருடங்களில் அமைச்சரவையில் 4வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அமைச்சரவை மாற்றம் இத்தோடு முடியுமா? அல்லது இனிமேலும் தொடருமா? செந்தில்பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக்கி இருப்பதன் மூலம் அவரை காப்பாற்றத் துடிக்கிறாரா ஸ்டாலின்? தற்போது இலாக்கா பறிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையில் இருக்கும் செந்தில் பாலாஜி அடுத்த கட்டமாக என்ன செய்ய போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அவர் வழக்கம் போல கட்சித் தாவல் பணியை செய்யவும் வாய்ப்பிருப்பதாக ஆரூடம் சொல்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/DcWzRHl
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/06/karuna.jpg">Media</a>தமிழகத்தில் பிரிக்கவே முடியாதது எது என்று யாரைக் கேட்டாலும் வரும் முதல் பதிலே, திமுகவும் – ஊழலும் என்பதுதான்… தமிழகத்தில் 1969 முதல் 1976 வரையிலான கருணாநிதி ஆட்சிக்காலம் தொடங்கி, இன்றைய ஸ்டாலினின் ஆட்சி வரை நூற்றுக்கணக்கான ஊழல்களை செய்து சாதனை படைத்துக்கொண்டிருக்கிறது.. சர்க்கரை ஆலை, பூச்சி மருந்து ஊழல், வீராணம் ஏரி ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களில் சில வற்றை பார்க்கலாம்..வீராணம் ஊழல் – தி.மு.க-வின் வரலாற்றில் இன்றளவும் பேசப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுகளில் முக்கியமானது இது. 1970-களில் சென்னை மாநகரத்தின் குடிநீர்த்தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வருவதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்டத்துக்காக பல்வேறு நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டது. ஆனால், இந்தத் துறையில் முன்னனுபவமே இல்லாத, கருணாநிதி, முரசொலி மாறனுக்கு நெருங்கிய நண்பரான சத்யநாராயணனின் நிறுவனத்துக்கு டெண்டரை உறுதி செய்யவே, இந்த டெண்டரில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1970-களில் இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு 16 கோடி ரூபாய்….அதேபோல 1970 ம்ஆண்டு இந்தியாவையே அதிரவைத்தது பூச்சி மருந்து ஊழல் – மத்தியில் ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி தலைமையிலான அரசு, இந்தியா முழுவதும் உள்ள விவசாய நிலங்களைப் பூச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்காக நாடு முழுவதும், தனியார் நிறுவனங்களின் வாயிலாகப் பூச்சி மருத்து அடிக்கும் திட்டத்தை அமல்படுத்தியது. அப்போது தி.மு.க-வின் முக்கிய நிர்வாகியும் கருணாநிதிக்கு மிக நெருக்கமானவரும், தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்-ன் தாத்தாவுமான அன்பில் தர்மலிங்கத்தின் வாயிலாக ஏக்கருக்கு இத்தனை சதவிகிதம் என கமிஷன் பேசப்பட்டு இறுதியில் கமிஷன் வழங்கிய நிறுவனத்துக்கே திட்டம் உறுதி செய்யப்பட்டது என்பதே குற்றச்சாட்டு. சர்க்காரியா சமர்ப்பித்த அறிக்கையில், “ஊழல் நடந்திருக்கிறது , ஆனால் அவை விஞ்ஞானபூர்வமாக நடந்திருப்பதால் அவற்றை நிரூபிக்கச் சாட்சிகளும் சந்தர்ப்பங்களும் கிடைக்கவில்லை ” எனப் பதிவு செய்தார். இதுவே பிற்காலத்தில் தி.மு.க-வுக்கு விஞ்ஞானபூர்வமாக ஊழல் செய்யும் கட்சி என்ற நிலையான பெயரை வாங்கித்தந்ததுஅடுத்தது இந்தியாவையே உலுக்கிய 2ஜி ஊழல் – இந்த 2 ஜி ஊழல் புகாரில் மத்திய அரசுக்கு இழப்பு என்று குற்றம்சாட்டப்பட்ட தொகை மட்டுமே ஒன்றே முக்கால் லட்சம் கோடி ரூபாய். 2010 மே 6-ம் தேதி ஆ.ராசா மற்றும் நீரா ராடியா இடையேயான உரையாடல் அடங்கிய ஆடியோ வெளியான நாள், இந்திய ஜனநாயகம் கேலிக்கும் கேள்விக்கும் உள்ளான தருணம். பின்னாட்களில் அந்த உரையாடலில் ஈடுபட்ட இருவருமே 2 ஜி அலைக்கற்றை ஊழல் வழக்குப் புகாரிலும் சிக்கினர். கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டது இன்று வரை திமுகவின் மிகப்பெரும் வரலாற்று சாதனை..அலைக்காற்றை ஒதுக்கீட்டில், முறைகேடு செய்து, 1 லட்சத்து 76,000 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டது என்ற சி.ஏ.ஜி-யின் அறிக்கையையால் உலகமே அதிர்ந்தது …
2001 ஜூலை 29-ம் தேதி சென்னையின் மேம்பாலங்களைக் கட்டியதில் ஊழல் நடந்திருப்பதாகப் புகார் அளித்தார் சென்னை மாநகரத்தின் ஆணையராக இருந்த பி.வி. ஆச்சாரியாலு. அதனையடுத்து, 2001 ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி அதிகாலை முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டார்.தமிழகத்தில் 1996 இருந்து 2001 வரை தி.மு.க ஆட்சி நடைபெற்ற காலகட்டத்தில், சென்னை மாநகர மேயராக இருந்தவர் ஸ்டாலின். அப்போது சென்னையில் 9 புதிய பாலங்கள் கட்டுவதற்கு முறைகேடான முறையில் தமிழக அரசு நிதி ஒதுக்கியதாகவும், இதன் மூலம் அரசுக்கு 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, கோ.சி.மணி, முன்னாள் தலைமைச்செயலாளர் நம்பியார் மற்றும் முன்னாள் மேயர் ஸ்டாலின் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.இவைபோக, கோபாலபுரம் இல்லம் விரிவாக்கம், மேகலா பிக்சர்ஸ் ஊழல், அஞ்சுகம் பிக்சர்ஸ் ஊழல், டிராக்டர் ஊழல், திருவாரூர் வீட்டு ஊழல், ராஜா அண்ணாமலைபுரம் வீடு ஊழல், சமயநல்லூர் மின்திட்ட ஊழல், குளோப் திரையரங்கு வாடகை சட்டத்திருத்த ஊழல், சர்க்கரை ஆலை ஊழல் என ஊழல் சாம்ராஜ்யத்தின் ஒட்டுமொத்த உருவமுமே திமுகதான் என்பதற்கு இவையெல்லாம் வரலாற்றுச் சான்றுகள்…இவற்றோடு, தற்போது ஸ்டாலின் தலைமியிலான ஆட்சியும் இதற்கெல்லாம் சளைத்ததில்லை என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.சில நாட்களுக்கு முன்னர் 30 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக ஆடியோ வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தினார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்..இந்த லிஸ்ட்டில், தற்போது செந்தில்பாலாஜியின் டாஸ்மாக் ஊழல், பாட்டிலுக்கு…
Mediaநேற்றைய தினம் செந்தில்பாலாஜி அவர்களை கைது செய்ததைத் தொடர்ந்து ஸ்டாலின் பல கருத்துக்கள் தெரிவித்திருந்தார். அதிமுக பற்றியும் என்னைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தார்.செந்தில்பாலாஜியின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது உச்சநீதிமன்றம் ஒப்புதல் பெற்று நடைபெற்று வந்தது. அவர் வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும், இரண்டு மாத காலங்களில் இந்த விசாரனையை முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு அந்த வழக்கை இரண்டு மாதங்களில் முடிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே சிறப்புக்குழு ஒன்று அமைத்து வழக்கு விசாரிக்கப்படும் என்று தீர்ப்பு சொல்லியிருந்தது. அதன் அடிப்படையில் தான் செந்தில்பாலாஜியின் வீடுகள், தலைமைச் செயலக அறையில் சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜியும் விசாரணைக்குள்ளானார். காலையில் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த செந்தில்பாலாஜி, “நான் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறேன் என்று தெரிவித்தார்”. ஆனால் அதிகாரிகள் செந்தில்பாலாஜி சரியாக ஒத்துழைப்புத் தரவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.ஏற்கனவே இந்த வழக்குக் குறித்து சம்மன் அனுப்பியும் அதற்கு செந்தில்பாலாஜி, உரிய முறையில் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராகவில்லை. இருப்பினும் அமலாக்கத்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை நடத்துமுடிக்க வேண்டுமென்று விசாரித்து சோதனை செய்து அவரை கைது செய்து இருக்கிறார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன், ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில்பாலாஜிக்கு பரிந்து பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் பதற்றத்துடன் பேசிவந்த காட்சியை நான் பார்த்தான். இந்த பதற்றத்திற்கு என்ன காரணம்? அதிமுக ஆட்சிக்கு பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி வந்தது. எதற்காக இந்த ஆட்சியை உங்களுக்கு கொடுத்தார்கள். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வீர்கள் என்றுதானே. ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. ஒன்றுமே செய்யவில்லை. ஏனென்றால் ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியாது. அவர் பொம்மை முதலமைச்சர். எல்லாவகையிலும் பணம். அது மட்டும்தான் குறிக்கோள். அதனால்தான் அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆடியோ மூலமாக 30 ஆயிரம் கோடி உதயநிதியும் சபரீசனும் ஊழல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த செய்திகள் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.அப்படி இருக்கும்போது செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டவுடன், அமலாக்கத்துறையினரிடம் உண்மையை சொல்லிவிடுவார் என பயந்து ஓடிப் போய் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் பார்க்கின்றனர். தான் திமுக குடும்பத்திற்கு கொடுத்த பணத்தை அமலாக்கத்துறையினரிடம் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் முதல்வரும் அமைச்சர்களும் பார்த்து உள்ளார்கள். சமீபத்தில் அவர் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றபோது ஸ்டாலின் சென்று பார்க்கவில்லை. மேலும் 2ஜி வழக்கில் ராசாவும், கனிமொழியும் கைதாகி திஹாரில் இருந்தபோது கனிமொழியைக் கூட சென்று ஸ்டாலின் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்பாலாஜியை சென்று பார்த்து இருக்கிறார். இவ்வளவு பதற்றம் எதற்காக? வழியிலே பயம் இருக்கிறது, மடியிலே கணம் இருக்கிறது.தமிழகத்திலேயே டாஸ்மாக்குகள் சுமார் 6000 கடைகள் இருக்கிறது. 5600 கடைகளுக்கு பார்கள் இருக்கிறது. அதில் 3000 பார்களுக்கு முறையான டெண்டர் இல்லை. சேலத்தில் மட்டும் 27, வேலூரில் 72 பார்கள் சீல் வைக்கப்பட்டது. இதெல்லாம் காவல்துறைக்கு முன்பே தெரியாதா? காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது. திராவிட ஆட்சி, திராவிட மாடல் தான் தமிழகத்தில் சிறந்த ஆட்சி என்று மார்தட்டும் ஸ்டாலின் மக்களுக்கான எந்த நலத்திட்டங்களையும் சட்டங்களையும் இயற்றவில்லை. மேலும் என்னை நேற்றைய காணொளியில் விமர்சித்திருந்தார் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர்மீது குற்றம் செலுத்த வேண்டுமென்றால், அக்குற்றத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு பேசவேண்டும். யாரோ எழுதியதை வைத்து பேசுகிறார் ஸ்டாலின். என்மீது குற்றம் சுமத்திய ஆர்.எஸ்.பாரதியே வழக்கை திரும்ப பெற்றார். ஆனால் நான் இந்த வழக்கை நடத்துகிறேன் என்றுதான் சொன்னேன். எனக்கு வழியில் பயம் இல்லை, மடியில் கணம் இல்லை.

via News J : https://ift.tt/3TlJyQ0
Mediaமுறையான ரீதியில் சொத்துகுவிப்பு செய்திருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்துள்ளனர். தற்போது அவருக்கு உடல் நிலை மோசமாக உள்ளக் காரணத்தால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டே நீதிமன்றக் காவலில் உள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது துறைகளான மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையானது அமைச்சர் முத்துசாமிக்கும், மின்சாரத்துறை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று திமுக தரப்பு கூறியது. அதற்கான பரிந்துரையை ஆளுநருக்கு திமுக சார்பாக அனுப்பியிருந்த நிலையில் இலாகா இல்லாத அமைச்சராகக் கூட செந்தில்பாலாஜி தொடரக்கூடாது என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். குற்றவியல் வழக்கு பதிவான நபர் ஒருவர் சட்டபடி அமைச்சராகத் தொடரக்கூடாது என்று இந்த நடவடிக்கையை ஆளுநர் எடுத்துள்ளார். இதனால் திமுகவினர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

via News J : https://ift.tt/09PSefd
Media“கனிமொழி & ஆ.ராசா கைதானபோதுகூட பதறாத ஸ்டாலின், செந்தில்பாலாஜி கைதால் தங்கள் ஆட்சிக்கு சிக்கல் வந்துவிடுமோ என்று பயப்படுவது குறித்து அலசுகிறது நியூஸ் ஜெ தலையங்கம்.வழக்கமாக உங்களில் ஒருவன் கேள்விகளுக்கு வீடியோ வடிவில் பதில் அளிக்கும் ஸ்டாலின், இந்த முறை செந்தில்பாலாஜி கைது விவகாரத்தால் பதற்றமான நிலையில் வீடியோ பேசி வெளியிட்டிருக்கிறார். நான் அடிச்சா தாங்கமாட்ட… நாலுமாசம் தூங்கமாட்ட என்னும் திரைப்பட பாடல் ரேஞ்சுக்கு, தனது பதற்றத்தை மறைப்பதற்காக வாய்சொல்லில் வீரம் காட்டியிருக்கிறார். செந்தில்பாலாஜி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வாயை திறந்தால் அவ்வளவு தான் என சேலஞ்ச் செய்திருக்கிறார். தன்னை சீண்டிப் பார்க்க வேண்டாம். மீறினால் விளைவுகள் வேறு மாதிரி இருக்கும் என்று மிரட்டி கடுமையான சொல்லாடல்களை பயன்படுத்தி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல், திமுகவை அசைத்துப் பார்க்க முடியாது என்றும் ஸ்டாலின் கூறியிருக்கிறார். ஆனால், திமுக இப்போது தள்ளாட்டத்தில் தான் இருக்கிறது என்பதை அவரது முகக்குறிப்புகளே உணர்த்தியது.தனது அமைச்சரவை சகா செந்தில்பாலாஜி அமலாக்கத்துறை நடவடிக்கையால் கைதாகி, நெஞ்சுவலி ஏற்பட்டதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், இப்படி அவசர அவசரமாக வீடியோவில் பேசி வெளியிட வேண்டிய அவசியம் என்ன என்பதுதான், அரசியல் நோக்கர்களின் கேள்வியாக உள்ளது.அலைக்கற்றை வழக்கில் தங்கை கனிமொழியும், ஆ.ராசாவும் கைதானபோது இவ்வளவு பதற்றங்கள் ஸ்டாலினிடம் காணப்படவில்லை என்று உறுதியாகத் தெரிவிக்கிறார்கள் சீனியர் செய்தியாளர்கள். நிழல் போல கூடவே சுற்றிவந்த தி.நகர் ஜெ.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதும் ஸ்டாலின் இவ்வளவு ஆவேசம் காட்டவில்லை என்பதும் அவர்களின் தகவல்.ஆனால் செந்தில்பாலாஜிக்காக ஆவேசப் படக்காரணம் எங்கே அவர் தன்னையும், தனது குடும்பத்தையும் வம்பு வழக்கில் இழுத்துவிட்டு விடக்கூடாதே என்கிற அச்சம்தான். இதனை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியும் தெரிவித்துள்ளார்.
அமலாக்கத்துறையிடம் பல்வேறு முக்கிய தகவல்களை செந்தில்பாலாஜி சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் ஸ்டாலின் உள்ளதாகவும், பதவிக்காக எதைவேண்டுமானலும் செய்யும் ஸ்டாலினின் குடும்பம் ஒரு பச்சோந்தி எனவும் எதிர்க்கட்சி தலைவர் கடுமையாக விமர்சித்து இருக்கிறார். விடியா அரசை தமிழ்நாடே காரித் துப்புகிறது என விளாசியிருக்கிறார் அவர்.கனிமொழியும் ஆ.ராசாவும் கைதானபோதுகூட பதறாத ஸ்டாலின் செந்தில்பாலாஜி கைதுக்கு பதறுவதற்கு காரணம் எங்கே திமுக ஆட்சி பறிபோய்விடக்கூடாதே என்பதால்தான். அதே நேரம் எதிர்க்கட்சி தலைவர் கூறியிருப்பது போல செந்தில்பாலாஜி விவகாரத்தில் விடியா அரசை தமிழக மக்களே காரி துப்புவதும் உண்மைதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்.

via News J : https://ift.tt/SjQhZTp
Mediaஅமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கட்டம் கட்டப்பட்ட நிலையில், திமுக ஆட்சிக்கே அச்சுறுத்தலாக இருக்கப்போகும் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்து இரண்டே ஆண்டுகளில் இதுவரை தமிழ்நாடு அரசியல் வரலாறு காணாத அளவுக்கு ANTI-INCUMBENCY என்று சொல்லக்கூடிய அரசுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டனர் மக்கள்.. டாஸ்மாக் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் கைது இந்தப்பெருமைக்கு கிரீடம் வைத்தார் போல ஆகியிருக்கிறது.செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டதில் இருந்து திமுக வட்டாரமே கதிகலங்கி இருப்பதன் பின்னணியில் 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் ஆடியோ உள்ளிட்ட பல திடுக்கிடும் உண்மைகள் இருப்பதாக தகவல்கள் உலவும் நிலையில், அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார் என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கிறது.அமைச்சர் பிடிஆர் பேசிய 30ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக, வாரிசு அமைச்சர் உதயநிதி, முதல்வரின் மருமகன் சபரீசன் ஆகியோரை அடுத்தகட்டமாக, கட்டம் கட்ட அமலாக்கத்துறை முன்னெடுப்புகளை எடுக்க உள்ளதாக அமலாக்கத்துறையில் இருந்து தகவல்கள் கசிகின்றன.நிதியமைச்சராக இருந்தபோது இந்த விசயங்கள் தெரிந்திருந்தும், எல்லாம் அறிந்திருந்தும் அதைப்பற்றி வாய் திறக்காமல் இருந்ததால் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனையே கட்டம் கட்டப்போவதாகவும் ஹேஷ்யங்கள் உலாவருகின்றன.கைது செய்யப்பட்டவுடன் நள்ளிரவிலும் கூட, பதறியடித்ததுக்கொண்டு , செந்தில் பாலாஜியை காண வாரிசு அமைச்சர் முதல், சபரீசன், ஸ்டாலின், வரை எல்லோரும் ஓடோடிச் சென்று சந்தித்தது இந்த சந்தேகத்திற்கு வலுசேர்க்கிறதே.இது ஒருபுறம் என்றால், அமைச்சர் சிவசங்கர் போக்குவரத்துதுறையில் ஓட்டுநர், நடத்துநர் நியமனங்களுக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் கல்லா கட்டி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் அவரை தொக்காக தூக்கவும் திட்டங்கள் இருக்கிறதாம்..அப்படியே உள்ளாட்சித்துறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக கே.என்.நேரு மீதும், பொதுப்பணித்துறையில் தரமற்ற சாலைகளை போட்டதாக அமைச்சர் ஏ.வ.வேலு மீதும் எழுந்திருக்கும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆவணங்களை திரட்டுவதாகவும் சோர்ஸ்ஸஸ் சொல்கின்றன…இருங்க இருங்க இன்னும் லிஸ்ட் இருக்கு… சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மீது அரசு மருத்துவமனைகளுக்கு மருந்துகளை வாங்குவதில் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாகவும், மருத்துவர்கள் & செவிலியர்கள் நியமனத்தில் செய்துள்ள முறைகேடுகள் தொடர்பாகவும் விசாரிக்க மிக கனமான அழுத்தமான ஆவணங்கள் சிக்கியிருப்பதால், அவரும் சிக்கப்போகிறார் என்று கணித்துச் சொல்கின்றனர் பலரும்…இப்படி தனது அரசின் அமைச்சர்கள் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்து வருவதை கண்டுகொள்ளாமல், சிபிஐ விசாரிக்க வரவேண்டும் என்றால் முதலில் தமிழக அரசிடம் அனுமதி பெற வேண்டும் சட்டம் போட்டிருக்கிறார்.. அட திடீர்ன்னு இது எதுக்கு? என்ற கேள்வி எழலாம்… ஏற்கனவே மெட்ரோ ஊழல் தொடர்பாக முதல்வர் மேலேயே குற்றச்சாட்டு இருக்கிறதே என்று தோன்றினால் அதற்கு கம்பெனி பொறுப்பாகாது..இப்படி விடியா அரசின் மீது புகார் மேல் புகார்கள் குவிந்தால், ரெய்டு நடந்தால், இனி எந்த அமைச்சருக்கு எந்த இலாக்காவை ஒதுக்குவார் ஸ்டாலின்? ஒவ்வொருவராக தட்டித்தூக்கும் திமுக அமைச்சரவையில் அமலாக்கத்துறையின் அடுத்த டார்கெட் யார்? என்பது தான் அனைவரிடமும் எழுந்துள்ள மில்லியன் டாலர் கேள்வி.

via News J : https://ift.tt/gzrLTyB
Mediaசென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், அண்ணா சாலை, மந்தவெளி, எம்ஆர்சி நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் இடி மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், சென்னை ரோகிணி திரையரங்கம் அருகே உள்ள சிக்னல், பச்சையப்பன் கல்லூரியின் பின் நுழைவாயில் சாலை, அண்ணாசாலை சந்திப்பு, மயிலாப்பூர் சிவசாமி சாலையில் மழைநீர் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். மயிலாப்பூர், திருவள்ளுவர் சிலை அருகே வாகனத்தின் மீது முறிந்து விழுந்த மரம் அகற்றப்பட்டு வருகிறது.நேற்று இரவிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் அதனையொட்டிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வந்தது. அதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகள் இன்று ஒருநாள் மட்டும் விடுமுறை என்று அந்ததந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்திருந்தனர். தற்போது சென்னையில் மேற்குறிப்பிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போலவும், குளம்போலவும் தேங்கி நிற்பதால் அலுவலங்களுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்,

via News J : https://ift.tt/TQbFN1A
Mediaசென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னை வானிலை மைய அலுவலகத்தில், தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளரிடம் தெரிவித்துள்ளார்.அப்போது பேசியவர்,தென்மேற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் புதுவை காரைக்கால் மற்றும் ஒரு சில இடங்களில் கன மழை மற்றும் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 16 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெய்து உள்ளது. தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதியில் அனேக இடங்களிலும், அடுத்து வரும் இரு தினங்களுக்கு 20, 21 தினங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான முதல் மிதமான மழை இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.கனமழை பொறுத்தவரையில் அடுத்து 24 மணி நேரத்திற்குள் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, டெல்டா மாவட்டங்கள் திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிடங்களில் கன மழை பெய்யக்கூடும்.மீனவர்களுக்கான எச்சரிக்கை பொருத்தவரை தமிழக கடற்கரை பகுதிகள் குமரி கடல் தென்மேற்கு வங்க கடல் மற்றும் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகள் ஆகிய பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசப்படும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதியில் அடுத்து வரும் எனது தினங்களுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்து வரும் 24 மணி நேரங்களில் மழை தொடரும், ஒரு சில பகுதிகளில் கனமழையாக இருக்கக்கூடும்.மீனம்பாக்கத்தில் கடந்த 73 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. முன்னதாக 1996 ஆம் ஆண்டு 282.2 மில்லி மீட்டர் பதிவாகி இருக்கிறது. தற்போது 158.2 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது. கிட்டத்தட்ட 16 சென்டிமீட்டர் வித்தியாசம் உள்ளது. நுங்கம்பாக்கத்தை பொறுத்தவரையில் கடந்த 73 வருடங்களில் மூன்றாவது அதிகபட்ச மழை பதிவாகியுள்ளது. 1996 ஆண்டில் 347.9, மில்லி மீட்டர், 1991இல் 191.9 மில்லி மீட்டர் தற்போது 84.7 மலை பதிவாகியுள்ளது. இந்த மாதத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை என்பது கடந்த ஒன்று முதல் இன்று வரை தமிழகம் புதுவை காரைக்கால் பகுதிகளில் இயல்பு மழையளவு 34.4 மில்லி மீட்டர். பதிவான மழை அளவு 30.5 மில்லி மீட்டர் இது 11% இயல்பை விட குறைவு என தெரிவித்தார். கனமழை மாவட்டத்திற்கான வாய்ப்பு, சென்னை காஞ்சிபுரம், திருவள்ளூர் கடலூர் ராணிப்பேட்டை டெல்டா மாவட்டங்கள் கனமழைக்க வாய்ப்பு. ஐந்து தினங்களாகவே மழை இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறோம், மேலும் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று தெரிவித்திருக்கிறோம், சென்னைக்கு தொடர்ந்து மழைப்பொழிவு இருக்கும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது, வளிமண்டல மேலடுக்கு சூழற்ச்சி காரணமாக மழைப்பொழிவு வேறுபடும் என தெரிவித்தார்.

via News J : https://ift.tt/S7ADUKB
Mediaசென்னையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏழு ரயில்கள் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. முக்கியமாக,  சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படக்கூடிய ரயில் திருவள்ளூர் மார்க்கத்தில் இருந்து புறப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.சென்னையில் இடைவிடாது பெய்து வரும் கனமழையின் காரணமாக வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் இடையே பாலம் எண் 14-இல் மழைநீர் சூழ்ந்துள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வியாசர்பாடி, ஜீவா நகர், பேசின் பிரிட்ஜ் ,வால் டாக்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பல்வேறு இடங்களில் சூழ்ந்துள்ளது அதனைத் தொடர்ந்து தண்டவாள பகுதிகளிலும் முழங்கால் அளவிற்கு மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொடர்ந்து ரயில்கள் இயக்க முடியவில்லை என தென்னக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.இந்த நிலையில் சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி எக்ஸ்பிரஸ் திருவள்ளூரில் இருந்து இயக்கப்படுவதாகவும், அதேபோன்று கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ஆவடியில் இருந்து புறப்படும் என தென்னகர் ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் ஏழு விரைவு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மாற்று தளத்திலிருந்து இயக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். தொடர்ந்து இடைவிடாது மழை நீடித்தால் அனைத்து ரயில்களும் மாற்று சேவை மார்க்கமாக இயக்கப்படும் என தென்னைக்க ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து வியாசர்பாடி பேசன் பிரிட்ஜ் இடையே தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்துவதற்கு ரயில்வே ஊழியர்கள் தீவிரமாக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

via News J : https://ift.tt/deKN0Jx
Mediaவிடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் சென்னை கத்திப்பாரா பாலத்தின் கீழ் உள்ள சுரங்க பாதையில் தேங்கிய மழை நீரில் சொகுசு கார் ஒன்று சிக்கியது.சென்னையில் விடிய விடிய பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் சுரங்கப்பாதைகளில் தேங்கியுள்ளது. கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் ஒவ்வொரு பருவ மழையின் போதும் சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் சென்னை ஜிஎஸ்டி சாலையிலிருந்து கத்திப்பாரா மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி செல்லும் சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியுள்ளது. இது குறித்து எச்சரிக்கை தடுப்புகள் எதுவும் இல்லாததால், அவ்வழியாக சென்ற சொகுசு கார் ஒன்று தண்ணீரில் சிக்கியது. இதில் பயணித்த பயணிகள் உட்பட அனைவரும் செய்வதறியாது தவித்தனர். மேலும் சுரங்க பாதையில் சிக்கிய வாகனத்தை வெளியே எடுக்க முடியாமல் வாகன ஓட்டியும் தவித்தார். சுரங்கப்பாதையில் தேங்கும் தண்ணீரை வெளியேற்றும் வகையில் பொருத்தப்பட்ட மின் மோட்டார் முறையாக இயங்காததால், ஒவ்வொரு பருவ மழையின் போதும் இதுபோன்று சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்குவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

via News J : https://ift.tt/fFRl1ib
Mediaசெந்தில் பாலாஜிக்கு ஒட்டுமொத்த திராவிட முன்னேற்ற கழகமும், திமுக குடும்பமும் அடிமையாக இருக்கிறது என விமர்சித்துள்ள முன்னாள் அமைச்சரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார், அரசியல் ஜல்லிக்கட்டு புறவாசல் வழியே வந்தவர் உதயநிதி ஸ்டாலின் என சாடி உள்ளார்.

via News J : https://ift.tt/KHbwTJX