News J
594 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaபால்வளத்துறை அமைச்சரின் அதிரடி நீக்கத்தைபோன்று ஆவின் ஊழல் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.ஆவினுக்கான பால் கொள்முதலை, பாலுற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை அதிகாரிகளும், மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களின் பொது மேலாளர்களும் கடந்த காலங்களில் கண்காணிக்க தவறியதன் காரணமாக பால் உற்பத்தியாளர்கள் தனியாரை நோக்கி சென்றதின் விளைவால் ஆவினுக்கான பால் வரத்து கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததுள்ளதா பால் முகவர்கள் சங்கத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.அப்போதிருந்த பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசரும், அதிகாரிகள் தரும் புள்ளி விபரங்களை மட்டுமே நம்பினாரே தவிர உண்மையான கள நிலவரங்களை கவனிக்க தவறியதால் பால் மற்றும் பால் சார்ந்த உபபொருட்களின் உற்பத்தி, விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டு ஆவின் தொடர்ந்து விமர்சனத்திற்கு உள்ளாக நேரிட்டதாக பால் முகவர்கள் புகார் கூறுகின்றனர். கடந்த 2 ஆண்டில் ஊதாரித்தனமான நிர்வாகம், ஊழல் அதிகாரிகள் என ஆவின் நிறுவனம் மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துக் கொண்டிருக்கிறது என்றிருந்த நிலையில் அமைச்சரவையில் இருந்து நாசர் நீக்கப்பட்டார்.பால் கெட்டுப்போகவில்லை இயந்திர பழுதே காரணம்: ஆவின் அதிகாரிகள் விளக்கம் | The milk did not go bad because of the mechanical fault - hindutamil.inஇன்றைய நிலவரப்படி, ஆவினின் தினசரி பால் கொள்முதல் மற்றும் பால், பால் சார்ந்த உபபொருட்களின் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் கண்டிப்பாக ஆவினிற்கு இழப்பை ஏற்படுத்தாது என்பது உண்மை தான் என்றாலும், ஆவின் நிர்வாகத்தில் உள்ள சில ஊழல் அதிகாரிகளால் மொத்த வருவாயில் பெரும்பகுதி தேவையற்ற திட்டங்களால் சுரண்டப்பட்டு, லாபத்தில் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருவதாக பால் முகவர்கள் சங்கத்தினர் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே திருவள்ளூர்-காஞ்சிபுரம் ஒன்றிய பொதுமேலாளரான ரமேஷ்குமார் மீதும், பால் கூட்டுறவுகளின் தணிக்கை இயக்ககம் கடுங்குறைகள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ள அவரைப் போன்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குறித்த பட்டியலை எடுத்து அவர்களை உடனடியாக பணி நீக்கமோ, பணியிடை நீக்கம் செய்தோ அல்லது பொருளாதார தொடர்பில்லாத பிரிவை கொடுத்தோ அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து, அவர்கள் ஏற்படுத்திய பொருளாதார இழப்பை கூட்டுறவு சங்க விதிகளின்படி வசூலிக்கவும் உத்தரவிட வேண்டும் பால் முகவர்கள் சங்கத்தினர் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

via News J : https://ift.tt/rMbamiN
Mediaதுருக்கியின் அதிபராக டயாப் எர்டோகன் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். இந்த நிகழ்வானது துருக்கியின் பாராளுமன்றம் அமைந்துள்ள அங்காராவில் நடைபெற்றது.பதவியேற்கும் போது, நான்,ஒரு அதிபராக, துருக்கி நாட்டின் மரியாதையையும், கண்ணியத்தையும், வரலாற்றையும் , சுந்திர இருப்பினையும் காப்பேன் என்று உறுதிமொழியளித்தார். அவரது உறுதிமொழியானது நாட்டு மக்கள் காணும் வண்ணம் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. எர்டாகன் பதவிப்பிரமாணம் செய்யும் முன் இடைக்கால சபாநாயகரிடமிருந்து அதிபருக்கான ஆணையைப் பெற்றுக் கொண்டார்.எர்டோகனைப் பொறுத்தவரை துருக்கியின் மிக நீண்டகால அதிபராக செயல்பட்டு வருகிறார். கடந்த மே மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாம் தேர்தலில் 52.2% வாக்குப் பெற்று வெற்றி பெற்றார். அவரது இந்த பதவிப் பிரமாண நிகழ்ச்சியில் 78 நாடுகளைச் சேர்ந்த முக்கியமான நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் என்று பலர் பங்கேற்றனர். முக்கியமாக நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோலன்பெர்க் கலந்துகொண்டார். தன்னுடைய அமைச்சரவையை வருகின்ற சனிக்கிழமை அன்று எர்டோகன் அமைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துருக்கி வழிவழியாக திட்டமிட்டு செயல்படுத்தும் பொருளாதார கொள்கை மாற்றி அமைக்கப்படும் என்று அரசியல் நோக்கர்கள் கூறிவருகிறார்கள்.

via News J : https://ift.tt/pdTSUE6
Mediaஒடிசாவில் மூன்று ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்துக்கு தவறான சிக்னல் அளிக்கப்பட்டதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 275 பேர் இறந்துள்ளனர் என்கிற அதிகாரப் பூர்வத் தகவலை ஒடிஷா மாநில அரசே வழங்கியுள்ளது. மேலும் ஆயிரக்கணக்கானோர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.  தற்போது வரை மறுசீரமைப்பு பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட முக்கால்வாசி பணி நிறைவடைந்துவிட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மின்னணு இண்டர்லாக்கிங்கில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த விபத்து நடந்த்திருக்கிறது என்றும் தண்டவாளத்தை சீரமைக்க முயன்று கொண்டிருக்கிறோம் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பே இந்த தண்டவாளப் பகுதியில் குறைபாடுகள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பெங்களூர்-டெல்லி சம்பர்க் கிராந்தி விரைவு இரயில், மைசூரில் உள்ள ஹோசதுர்கா சாலை ரயில் நிலையத்தில், சிக்னல் கோளாறு காரணமாக சரக்கு ரயிலுடன் மோதி விபத்தில் சிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சிக்னல் குறைபாட்டினை குறித்து எச்சரித்து இந்திய ரயில்வே தலைமையகத்துக்கு, தென்மேற்கு ரயில்வேயின் தலைமைச் செயல் மேலாளர் கடிதம் எழுதியிருப்பது தெரியவருகிறது.அவரது கடிதத்தில், ஹோசதுர்கா ரயில் நிலையத்தில் ஏற்படவிருந்த விபத்து சம்பவம் சிக்னல் அமைப்பில் கடுமையான குறைபாடுகள் இருப்பதை குறிக்கிறது. எனவே எலக்ட்ரானிக் சிக்னல் பராமரிப்பாளர், எலெக்ட்ரானிக் இண்டர்லாக் முறையைத் தவிர்த்துவிட்டிருக்கிறார். ஆகவே, பராமரிப்பு வேலையை முடுக்கிவிடுமால் விட்டால் பெரும் விபத்துக்கு வழிவகுக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்தக் கடிதத்தினை இரயில்வேத் துறை முறையாக படித்திருந்தால், இந்தக் குறைபாடினை கலைந்திருக்கலாம். மேலும் இவ்வளவு பெரிய கோரவிபத்தினை தடுத்து இருந்திருக்க முடியும்.

via News J : https://ift.tt/yDNnbe4
Mediaபிடிஆர் பேசிய ஆடியோ வெளியான நிலையில் திமுக கதிகலங்கி இருக்கும் நிலையில், அமைச்சர் பிடி ஆர் ஓரங்கட்டப்பட்டு இருப்பதும், அமைச்சர் பதவியில் இருந்து விலகி அமெரிக்காவுக்கே செல்ல பிடிஆர் திட்டமிடுகிறாரா பிடிஆர் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.தமிழகத்தை ஆளும் திமுக அரசும், திமுக தலைமையும் தற்போது கதிகலங்கி இருக்கிறது. எதற்காக திமுகவினர் அனைவரும் பதறிப்போய் இருக்கிறார்கள்?… காரணம் கரூர் கம்பெனியை பதம் பார்த்து இருக்கும் ஐ.டி ரெய்டுதான் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்…ஆனால், அதுவும் இல்லை….அதற்கும் மேலே என்று சொல்கின்றனர் உடன்பிறப்புகள்…பிடிஆரின் 30ஆயிரம் கோடி ஊழல் தொடர்பான ஆடியோ வெளியான நாள் முதல், ஒட்டுமொத்த திராவிட மாடலும் கழன்று தொங்கிக் கொண்டு இருக்கிறது….பிடிஆர் ஆடியோ வெளியானதன் தொடர்ச்சியாக, ஜி-ஸ்கொயர் ஐ.டி ரெய்டு, செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடந்த ஐடி ரெய்டு என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் பரபரத்துக்கிடக்கிறது.நிதியமைச்சரா இருந்த பிடிஆரை கீழே இறக்கி தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக்கி ஒதுக்கி வைத்துவிட்டார் ஸ்டாலின்…இது ஒருபுறமிருக்க அமைச்சர் செந்தில்பாலாஜி ரெய்டால் ஸ்டாலின் கலங்கிப்போய் இருக்க, இதுதான் சரியான நேரம் என்று களத்தில் குதித்திருக்கின்றனர் சீனியர் அமைச்சர்கள்.. செந்தில்பாலாஜியின் டாஸ்மாக் துறையையும், மின்சாரத்துறையையும் கைப்பற்ற காய்நகர்த்தி வருகிறார்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ. பெரியசாமி உள்ளிட்ட சீனியர்கள்… அதோடு நின்றுவிடவில்லை, எப்படியும் செந்தில்பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் பயப்படுவார் என்பதை தெரிந்து, செந்தில் பாலாஜிக்கு கதர் துறையோ, தமிழ்வளர்ச்சித்துறையோ ஒதுக்கி அவரை டம்மி ஆக்கிவிடவேண்டும் என்று துடியாய் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்..அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும் மிகப்பெரிய கம்பெனிகளில் பணியாற்றிய பிடிஆரோ, ஓட்டுமொத்த திமுகவுமே தன் மீது அதிருப்தியில் இருப்பதால் அட போங்கப்பா, நான் அமெரிக்காவிலேயே செட்டில் ஆகிவிடறேன் என்று எண்ணிக்கொண்டிருப்பதாக ரகசியங்களை கசியவிட்டுள்ளனர் உபிக்கள்..ஒட்டுமொத்த சீனியர்களின் கொந்தளிப்பை பெற்றுக்கொண்ட செந்தில்பாலாஜி மற்றும் திமுக தலைமையின் கோபத்திற்கு ஆளான பிடிஆர் ஆகியோரை ஓரம்கட்ட நினைக்கிறாரா ஸ்டாலின்? சீனியர்களின் உட்கட்சி அரசியலை எப்படி சமாளிக்கப்போகிறார் செந்தில்பாலாஜி? ஒருவேளை பிடிஆர் அமெரிக்காவிற்கே சென்றுவிட்டால், அவர் இடத்தை நிரப்பப்போகும் அந்த புது அமைச்சர் யார்? திமுகவில் நடக்கும் இந்த சதிராட்டங்கள் ஸ்டாலினை மேலும் தூங்கவிடாமல் செய்கிறதா? என பல்வேறு கேள்விகள் மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/7Ae2mSj
Mediaசென்னையில் தொடர் மின்வெட்டினை ஒட்டி பொதுமக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜாஃபர்கான்பேட்டை ராகவன் காலனியில் இரவு சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதிக்குட்ட மின்சாரவாரிய அலுவலகத்தில் புகார் அளித்தும் மின்துறை ஊழியர்கள் உரிய பதில் அளிக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி மின்வாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விருகம்பாக்கம் தொகுதிக்குட்பட்ட நெசப்பாக்கம், எம்.ஜி.ஆர். நகர், அசோக் நகர், ஜாஃபர்கான்பேட்டை, ராகவன் காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவு நேரம் மட்டுமில்லாமல் பகல் நேரங்களிலும் கடந்த 4 நாட்களாக தொடர் மின்வெட்டு ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகன்றனர். 

via News J : https://ift.tt/VpucH48
Mediaஇந்தியாவின் புனித நதி என்று அழைக்கப்படும் கங்கை நதியானது, 2525 கிமீ நீளம் கொண்டது. இமயமலையின் கங்கோத்திரி பகுதியில் உருவாகி இந்தியாவிலும் வங்கதேசத்திலும் ஓடி கடலில் கலக்கிறது. கங்கையின் ஒரு பகுதி பீஹார் மாநிலம் பாகல்பூர் வழியாக செல்கிறது. குறிப்பாக, பாகல்பூர் மாவட்டத்தின் சுல்தான்கஞ்ச் மற்றும் ஹாகரியா மாவட்டத்தின் அகுவானி ஆகிய ஊர்களின் இடையே கங்கை நதியின் வழித்தடம் உள்ளது. இந்த இரண்டு ஊர்களையும் இணைக்கும் பொருட்டு பிஹார் அரசானது பாலம் ஒன்றினை ரூபாய் 1716 கோடி ரூபாயில் கட்டிக்கொண்டிருந்தது.இந்த பாலத்திற்கான அடிக்கல்லை பிஹார் முதலமைச்சர் நிதிஸ்குமார் 2014 ஆம் ஆண்டு நாட்டினார். கடந்த ஆண்டு இந்த பாலத்தின் ஒரு பகுதியானது பலத்த் சூறைக்காற்றினால் சேதமடைந்திருந்தது. எனவே அதனை மறுசீரமைத்து புணரமைக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டிருந்தது. மறுசீரமைக்கும் பணி நடக்கையிலேயே இந்த பாலமானது இடிந்து கங்கையிலேயே வீழ்ந்தது. இதனையொட்டி இந்தப் பாலமானது எப்படி நிலைகுலைந்து போயிருக்கும்? இதன் கட்டட அமைப்பு ஏன் தரமற்றதாக இருக்கிறது என்று ஆராய பிஹார் மாநில முதல்வர் நிதிஸ்குமார் ஆய்வுக் குழு ஒன்றினை அமைத்துள்ளார். இந்தப் பாலம் இடிந்து விழுந்த காட்சியானது சமூக வலைதளங்களில் அதிகமாக பரவி வருகிறது.A bridge being built over the #GangaRiver in #Bhagalpur district of Bihar, at a cost of ₹1,716 crore, collapsed on Sunday. The four-lane bridge, collapsed for the second time.#BhagalpurBridgecollapse #BiharBridgeCollapse #engineer #bridgecollapse #Corruption #bribe #BiharGovt pic.twitter.com/G672ne8qwF— shakti singh Rajput (@shaktish9045) June 5, 2023

via News J : https://ift.tt/Tlo6rgR
Mediaதமிழகத்தில் பள்ளிகளானது ஜூன் 7 ஆம் தேதி திறக்கும் எந்றூ சொல்லப்பட்டிருந்த நிலையில் தற்போது ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வெயிலின் தாக்கமானது அதிக அளவிற்கு உள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழ்நாட்டின் வெப்பநிலையில் மாற்றம் ஏற்பட்டதாக தெரியவில்லை. இந்த நிலையில் பள்ளிகள் விரைவில் திறக்கப்படுவதாக ஒரு அறிவிப்பு முன்னர் வந்தது. அதாவது ஜூன் 1 ஆம் தேதி திறக்கும் என்று பள்ளிக்கல்வித்துறையானது அறிவிப்பினை வெளியிட்டிருந்தது. பின்னர், ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று தேதியினை மாற்றி அமைத்தது. தற்போது ஜூன் 12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கும் என்று அதிகாரப் பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் 12ஆம் தேதியும், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ளப் பள்ளிகள் 14 ஆம் தேதியும் திறக்கப்ப்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.

via News J : https://ift.tt/ZJluLjG
Mediaஇந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் கலைக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கான தரவரிசையினை NIRF பட்டியலாக தற்போது வெளியிட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களின் தரவரிசையில் மெட்ராஸ் ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. பொறியியல் கல்வி நிறுவனங்களின் வரிசையில் 8 வது ஆண்டாக முதலிடம் பிடித்து வருகிறது. அனைத்துவித கல்வி செயல்பாடுகளில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதலிடத்தில் மெட்ராஸ் ஐஐடி உள்ளது. இதற்காக, மெட்ராஸ் ஐஐடி இயக்குனர் காமகோடி டெல்லியில் நடைபெறும் விழாவில் இன்று விருதினை பெறுகிறார்.மேலும், இந்தியாவில் தலைச் சிறந்த கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சென்னை மாநில கல்லூரி 3 ம் இடம் பிடித்துள்ளது. சென்னை லயோலா கல்லூரி 7 ம் இடம் பிடித்துள்ளது. மத்திய மனிவளத்துறை 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கல்லூரிகளின் உள்கட்டமைப்பு, மாணவர்கள் தேர்ச்சி விகிதம், பெறும் மதிப்பெண்கள், மாணவர்களின் ஆராய்ச்சி திறன், ஆசிரியர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை ஆராய்ந்து இந்த தரவரிசை பட்டியலை வெளியிடுகிறது.

via News J : https://ift.tt/YhM3bIo
Mediaதமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறையானது இயக்குநர் இல்லாமல் இரண்டு ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. தற்போது இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிக்கல்வித்துறைக்கு இயக்குனர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விடியா திமுக அரசு பள்ளிக்கல்வித்துறையைப் பொறுத்தவரை மிகவும் மோசமான செயல்பாட்டினையே நிகழ்த்திவருகிறது.பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ்த்தாளில் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வு எழுதவரவில்லை. பத்தாம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வுக்கு இருபத்தி நான்காயிரம் மாணவ மாணவிகள் எழுத வரவில்லை. மாணவர்களுக்கான மடிக்கணினி வழங்கவில்லை. மிதிவண்டிகள் வழங்கவில்லை. எல்கேஜி வகுப்புகளை ரத்து செய்துள்ளது. மேலும் கல்வி வளர்ச்சியில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழ்நாடு மிகுந்த பின்னடைவினை சந்தித்துள்ளது என்று கல்வியலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர். மேலும் இடைநிலை ஆசிரியர்கள், டெட் தேர்வு எழுதி இதுவரை நியமனம் செய்யாதவர்கள் என்று தொடர்ந்து திமுக அரசை கண்டித்து உண்ணாவிரத போரட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். திமுக அரசானது பொறுப்பேற்ற உடன் முதல் மாதத்திலேயே பள்ளிக்கல்வி துறையின் முழு அதிகாரங்களையும் இயக்குநரிடம் இருந்து பறித்து ஆணையர் பதவி ஒன்றினை  நியமித்து, முழு அதிகாரத்தையும் ஆணையருக்கு வழங்கியது. கிட்டத்தட்ட 150 ஆண்டுகளாக இயக்குனர் பதவியில் இருந்த அதிகாரம் ஆணையர் பதவிக்கு மாறியது அரசு அதிகாரிகளிடம் மிகுந்த அதிர்ச்சியினையும் பள்ளிக்கல்வித்துறை சம்பந்தப்பட்டவர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தையும் தந்தது. மேலும் இந்த அறிவிப்பு பல்வேறு அரசியல் கட்சிகள் இடையேயும், ஆசிரியர் சங்கங்களிடையையும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பள்ளிக்கல்வித்துறையில் இயக்குனர் பதவி அறிவிக்கப்பட்டு இருக்கிறது.தற்போது பள்ளிக் கல்வித்துறையின் இயக்குனராக தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் அறிவொளி நியமிக்கப்பட்டிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு இறுதியாக பள்ளிக் கல்வித் துறையின் இயக்குனராக இருந்த முனைவர் கண்ணப்பன் தொடக்க கல்வியின் இயக்குனராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 

via News J : https://ift.tt/WqcMHXD
👍1
Media“திராவிட மாடல் என்பது சமூகநீதி மட்டுமின்றி, சுற்றுச்சூழல் நீதியையும் உள்ளடக்கியது” இது சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு காலநிலை (2022) உச்சி மாநாட்டின்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையில் குறிப்பிட்ட வாக்கியமாகும். இப்படிப்பட்ட வார்த்தையைப் பேசிவிட்டு அதற்கு எதிராகவே இந்த திமுக அரசு செயல்படுவது நகை முரணாகும். குறிப்பாக மீனவ மக்களுக்கும் கடலில் வாழும் உயிரினங்களுக்கும் தீங்கு விளைவிக்கும் பொருட்டு திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பேனா சிலை வைக்க உள்ளார்கள். இது எவ்வளவு பெரிய சுற்றுச்சூழல் சீர்கேட்டினை நிகழ்த்தும் என்று தெரியாமல் அரசு இயந்திரம் செயல்படுகிறது என சூழலியல் அறிஞர்கள் தங்களுடைய வாதத்தினை தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.இதனைத் தவிர திமுக தனது தேர்தல் அறிக்கையில் பக்கிங்ஹாம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அசுத்தம் நிறைந்த கால்வாய்களை சரிசெய்து சென்னையை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றுவோம் என்று குறிப்பிடப்பிட்டிருந்தது. அதனை செம்மைப்படுத்துவதற்கான எவ்வித முகாந்திரத்தினையும் திமுக முன்னெடுக்கவில்லை என்பதே நிதர்சனம். மேலும் பக்கிங்ஹாம் கால்வாயினை ஒட்டி குடியிருக்கக்கூடிய பொதுமக்களை அப்புறப்படுத்தும் பணியில் மட்டும் ஆயத்தமாக ஈடுபட்டு வருகிறது.Vikatan Plus - 07 May 2023 - தி.மு.க அரசின் நில ஒருங்கிணைப்பு சட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு! | Land Consolidation bill 2023 - Vikatanபரந்தூர் விமான நிலையத்தை எடுத்துக்கொண்டால், பரந்தூர் விமானநிலையத் திட்டத்துக்குச் சுமார் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.  இத்தனை ஏக்கர் நிலத்தினைச் சுற்றி 13 ஏரிகள், வரத்து வாய்க்கால்கள், ஆறுகள் உள்ளன. பல்வேறு துறைகளுக்குச் சொந்தமான நிலங்களும், மக்களுக்கு, விவசாயிகளுக்குச் சொந்தமான நிலங்களும் உள்ளன. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள நில ஒருங்கிணைப்பு சட்டத்தின்(2023) மூலம் இந்நிலங்களைக் கையகப்படுத்தினால் ஏற்கெனவே உள்ள சட்டரீதியான தடைகளை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும்.திமுகவின் புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டம் சொல்வது என்ன? கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழக சட்டசபையின் இறுதிக் கூட்டமானது நடைபெற்றது. அக்கூட்டத்தில் கொண்டுவரப்பட்ட மசோதாக்களில் ஒன்றுதான் நில ஒருங்கிணைப்புச் சட்டம் (2023) ஆகும். இந்தச் சட்டம், நிலம் கையகப்படுத்துதல் சட்டம் ஆகும். இந்தியாவைப் பொறுத்தவரை ஏற்கனவே நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ஒன்றுதான். பிறகு தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 1978 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர், திமுக ஆட்சியில் தொழில்துறை நோக்கங்களுக்காக 1997ஆம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் பல நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் என்று பலர் நிலத்தினை இழந்தனர்.தற்போது கொண்டுவரப்பட்டுள்ள புதிய நில ஒருங்கிணைப்புச் சட்டத்தின் படி, 250 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பு தேவைப்படும் திட்டங்களுக்கு இச்சட்டம் பொருந்தும். மேலும் நீர்நிலைகளை பாதுகாப்பது இச்சட்டத்தின் நோக்கமாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கால்வாய்கள், வரப்புகள், சிற்றோடைகள் போன்றவற்றினை பாதுகாப்பதற்கான வழிமுறைகள் இச்சட்டத்தில் சொல்லப்படவில்லை. நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும், நீர்நிலைகள் பாதுகாக்கப்படுகின்றன என்று வைத்துக்கொண்டாலும் தொழிற்சாலை வளாகம், வணிக வளாகம், பல்கலைக்கழகங்களுக்குள் உள்ள அரசுக்குச் சொந்தமான நீர்நிலைகளை மக்கள் பயன்படுத்த முடியுமா? பொதுச்சொத்தாகவும் மக்களின் பயன்பாட்டிலும் இருந்துவந்த நீர்நிலைகள் தனியாருக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகளாக மாறிவிடும். விவசாயிகளுக்கு நீர்நிலைகள் மீதுள்ள உரிமைகள் பறிபோகும்; விவசாயம் பாதிக்கப்படும்.திமுக அரசு, விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும், அச்சூழலில் வாழும் உயிரினங்களுக்கும் பேராபத்தினை நிகழ்த்த உள்ளது என்பதே உண்மை. 

via News J : https://ift.tt/vIcqjCi
Mediaசென்னையில் பல்வேறு பகுதிகளில் பெய்யும் மழையால் நகரவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.கடந்த ஒரு மாத காலமாக அக்னி நட்சத்திர கத்திரி வெயிலின் தாக்கத்தால் சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். கடந்த நான்காம் தேதி அக்னி நட்சத்திரம் முடிவடைந்த நிலையிலும் ஒரு வார காலமாக வெயிலின் தாக்கம் குறையாத வண்ணமே இருந்தன. இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் கத்திரி வெயிலால் அவதியுற்று வந்த நகரவாசிகள் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் சென்னை பட்டினம்பாக்கம், எம் ஆர் சி நகர், அடையார், சைதாப்பேட்டை, கிண்டி, அசோக் நகர், வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

via News J : https://ift.tt/A1bznCQ
👍1
Mediaஒரு மாநிலத்தின் முதல்வரையே இப்படி புலம்பவைத்து, மக்கள் மத்தியில் கம்ளைண்ட் செய்யும் அளவுக்கு நடந்துகொள்கிறார்கள் நம் அமைச்சர்கள்.. திமுக ஆட்சிக்கு வந்த நாள் முதல் அமைச்சர்கள் முதல் கடைக்கோடி திமுக நிர்வாகி வரை நாளொரு மேனியும் பொழுதொருவண்ணமுமாய் ஏதாவது ஒரு பஞ்சாயத்தை கூட்டி விடுகிறார்கள்.இந்த லிஸ்ட்டில் பர்ஸ்ட் ரேங்க் எடுத்திருப்பது “ஓசிபஸ்” புகழ், சர்ச்சை நாயகன் பொன்முடிதான்.. மேடையிலேயே சாதி சொல்லி பேசியது முதல் எனக்கு ஓட்டுப்போட்டு கிழிச்சீங்களா என்று மக்களை ஏசியது வரை ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியாகவே இருந்துவரும் இவர், சுடச்சுட இன்னொரு சர்ச்சையையும் கிளப்பிவிட்டிருக்கிறார்…சமீபத்தில் ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் ஐம்பெரும் விழாவில் கலந்துகொண்ட பொன்முடி, தன் பொன்னான வாயால் உதிர்த்த முத்துக்கள் என்ன தெரியுமா? “ஒரு காலத்தில் மாணவர்களை வாத்தியார்கள் பிரம்பெடுத்து அடித்துவந்தநிலையில் தற்போது, வாத்தியார்களை பிரம்பு எடுத்து அடிக்கிற அளவுக்கு மாணவர்கள் மாறிப்போயிருக்கிறார்கள்…. இதையெல்லாம் பொறுத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டும்” என்று பேசி, ஒட்டுமொத்த ஆசிரியர்களின் கடுங்கோபத்திற்கு ஆளாகியிருக்கிறார்…ஒரு பேராசிரியராக இருந்து அரசியல்வாதியான பொன்முடியே ஆசிரியர்களை அட்ஜட்ஸ்ட் செய்துகொள்ளச்சொல்வது என்னமாதிரியான மனநிலை? இப்படிப்பட்ட ஒருவரை உயர்கல்வித்துறை அமைச்சராகப் பெற்றது தமிழ்நாட்டின் சாபக்கேடு, வெட்கக்கேடு என்று கழுவிக்கழுவி ஊற்றிவருகின்றனர் ஆசிரியர் சங்கத்தினர்…சில நாட்களுக்கு முன்னர்தான், ஆளுநர் நடத்தும் துணைவேந்தர்களுக்கான கூட்டத்தில் யாரும் பங்கேற்காமல் இருப்பது நல்லது என்றுபேசி சர்ச்சையில் சிக்கினார்.. ஏற்கனவே ஆசிரியர்கள் முதல் அரசு அலுவலர்கள் வரை எல்லாருமே விடியா அரசின்மீது கடுங்கொந்தளிப்பில் இருக்கும் சமயத்தில் மீண்டும் மீண்டும் தன்னிலை மறந்து அவர் பேசும் பொன்முடியில் வாயால்தான் திமுகவே அழியப்போகிறது… அட என்னடா இது ஸ்டாலினுக்கு வந்த கொடுமை என்று தலையில் அடித்துக்கொள்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்…ஊழலை உடைத்துப்பேசிய பிடிஆரை துறைமாற்றிய ஸ்டாலின், கல்லெடுத்து எறிந்த அவடி நாசரை அமைச்சரவையில் இருந்து தூக்கிவீசிய ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு தொடர்ந்து அவப்பெயரை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொன்முடி மீது மட்டும் எந்த நடவடிக்கையுமே எடுக்காமல் இருக்க என்ன காரணம்?அமைச்சர் பொன்முடியின் வாய்க்கு பூட்டு போடுவது யார்? மீண்டும்மீண்டும் தன் தூக்கத்தைக் கெடுக்கும் பொன்முடியைப்பார்த்து பயப்படுகிறாரா ஸ்டாலின்? இல்லை அவரின் இந்த சர்ச்சைகள் எல்லாம் ஸ்டாலினின் காதுகளுக்கே செல்வதில்லையா?நிலைமை இப்படியே இருந்தால், எழப்போகும் ஒட்டுமொத்த மக்கள் எதிர்ப்பை ஸ்டாலின் எப்படி சமாளிக்கப்போகிறார்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.

via News J : https://ift.tt/40mBwMV
Mediaமின்வாரிய ஊழியர்கள் நேரடியா வீட்டுக்கு போய், மின்சாரத்துக்கான ரீடிங்க கணக்கு எடுக்காம, ஆளில்லாமலேயே மின்பயன்பாட்டை கணக்கெடுக்கிற மாதிரியான ஸ்மார்ட் மீட்டர்கள் இப்போ புழக்கத்துல இருக்குது. தமிழக மின்வாரியத்துலயும் சோதனை அடிப்படையில, சென்னை தி.நகர்ல 130 கோடி ரூபாய் செலவுல 1லட்சத்து 42ஆயிரம் மின் இணைப்புகள்ல ஸ்மார்ட் மீட்டர் பொறுத்தியிருக்காங்க. தனியார வச்சி செஞ்ச இந்தப் பணியில பல்வேறு குழப்படிகள் இருந்ததால திருப்தியில்லனு சொல்லப்படுது. இந்த நிலையில மறுபடியும் தனியார் நிறுவனங்கள்கிட்ட ஸ்மார்ட் மீட்டர் திட்டத்துக்காக ஒப்பந்தப்புள்ளி வாங்கி, நிறுவனங்கள தேர்வு செய்யும் பணி நடந்து வர்றதா சொல்லப்படுது.மத்திய மின்சார அமைச்சகத்தின் கீழ செயல்படுற எனர்ஜி எபிஷியன்ஸி சர்வீசஸ் லிமிடெட்டும் இந்த மாதிரி ஸ்மார்ட் மீட்டர்கள விற்பனை செய்யுறாங்க. இவங்கக்கிட்ட குறைஞ்ச விலையில ஸ்மார்ட் மீட்டர் கிடைக்கிறதோட , தமிழக மின்வாரியம் எந்த முதலீடும் செய்ய வேண்டாம்… அதே நேரம் பணத்தையும் தவணை முறையிலேயே கொடுக்கலாம்… இப்படி வாய்ப்புகள் இருக்கும்போது ஏன் தனியார் நிறுவனங்கள்கிட்ட ஸ்மார்ட் மீட்டருக்காக ஒப்பந்தப்புள்ளி கேக்கணும்… ஏற்கனவே ஒப்பந்தம் மூலமா வாங்குன மின்மாற்றிகள்ல நூற்றுக்கணக்கானவை பழுதாகி கிடக்குறது திமுகவோட கோல்மால அம்பலமாக்கிட்டு இருக்கு… இப்ப ஸ்மார்ட் மீட்டர்லயும் தனியார் ஒப்பந்தங்கிறது திமுக அதிகார மையங்களோட கல்லாவ நிரப்புறதுக்காகத்தானேன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

via News J : https://ift.tt/ABwymRX
Mediaதமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனையும், அதனால் ஏற்பட்டிருக்கும் உயிரிழப்புகளும் மாநிலத்தினைப் பொறுத்தவரை மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கள்ளச்சாராய விற்பனைக்கு துணைபோகும் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.MediaMedia Media Media

via News J : https://ift.tt/CBlyG8D
Mediaமருத்துவ அறிவியல் படிப்புகளில் எதிர்காலத்தில் அதிக அளவிலான வேலை வாய்ப்புகள் காத்திருப்பதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி தெரிவித்துள்ளார்.தேசிய கல்வியியல் தரவரிசை கட்டமைப்பு நடத்திய ஆய்வில் இந்தியாவில் தலைசிறந்த கல்வி நிறுவனமாக எட்டாவது ஆண்டாக சென்னை ஐஐடி தேர்வு செய்யப்பட்டு நேற்று விருதுகள் வாங்கியதையொட்டி, இன்று சென்னை ஐஐடி வளாகத்தில் இயக்குனர் காமகோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், சென்னை ஐஐடியில் வேலை வாய்ப்பு தரும் படிப்புகளில் மாணவர்களுக்கு கற்றல் திறனை அதிகரித்து அவற்றுக்கான பாதையில் சென்னை ஐஐடி தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவித்தார். அந்த வகையில் இந்த ஆண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ள மருத்துவ அறிவியல் படிப்புக்கு அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்திருப்பதாகவும், எதிர்காலத்தில் மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு வேலை வாய்ப்புகள் அதிக அளவில் இருப்பதாக கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் தரமான கல்வி அனைவருக்கும் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தில் கிராமப்புறங்களிலும் ஐஐடி நடத்தப்படும் படிப்புகள் குறித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருவதாக கூறினார். குறிப்பாக பி.எஸ். டேட்டா சயின்ஸ், பி.எஸ். எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற இரு பிரிவுகள் தற்போது கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இவற்றிலும் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்வதற்கு விண்ணப்பித்து வருவதாகவும் கூறினார். மேலும் மன அழுத்தத்தை எப்படி எதிர்கொள்வது என்ற வெல்னஸ் நிகழ்ச்சியும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் கூறினார். மாணவர் தற்கொலை தடுப்பது குறித்தும், மாணவர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும் விசாரிக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி ஐபிஎஸ் அவர்களது அறிக்கை இதுவரையில் எங்களிடம் சமர்ப்பிக்கவில்லை என்றும் காமகோட்டி கூறினார்.சென்னை ஐஐடி யில் நிலவும் சாதியபாகுபாடுகள் குறித்து இதுவரை எந்த புகாரும் எனக்கு வரவில்லை என்றும், யாரேனும் பாதிக்கப்பட்டால் நேரடியாக என்னிடமே புகார் அளிக்கலாம் என்றார் அவர். மேலும் உலகிலேயே முதல்முறையாக தான்சானியா நாட்டில் சென்னை ஐஐடி கிளை தொடங்க இருப்பதாகவும், இயக்குனர் காமகோட்டி கூறினார்.

via News J : https://ift.tt/HPOsui1
Mediaஅதிமுகவின் தொடர் அழுத்தங்கள் மற்றும் போராட்டத்தின் காரணமாக தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் ஒரே வாரத்தில் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று தேர்தலில் வாக்குறுதி அளித்து ஆட்சியைப் பிடித்த திமுகவால் சொன்னபடி செய்யமுடியவில்லை. பள்ளிக்கூடங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் அருகே இருந்த வெறும் 96 டாஸ்மாக் கடைகளை மட்டுமே மூடியிருக்கிறது விடியா அரசு… இதுவும் மனசு வந்து மூடவில்லை, பல கட்டப் போராட்டங்களாலும், நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அஞ்சியும்தான் நடந்திருக்கிறது.தற்போது தமிழகம் முழுவதும் 5ஆயிரத்து 329 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் டாஸ்மாக் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன. இதே போல் 3ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளில் பார்களும் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிக விலைக்கு விற்பதாக மதுப்பிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வு….மதுபானங்களின் விலை அதிகரிப்பு காரணமாக, தங்களின் மதுதாகத்தை தீர்த்துக் கொள்ள குறைந்த விலையில் கிடைக்கும் கள்ளச்சாராயத்தை அருந்திய 22க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உயிர்ப்பலியானது தமிழகத்தையே பரபரப்புக்கு உள்ளாக்கியது. உயிரைக்குடித்த விஷச் சாராய விற்பனையில் திமுகவினரே ஈடுபட்டதும் அம்பலமானதுதிமுக ஆட்சியின் அவலத்தால் நிகழ்ந்த விஷச்சாராய மரணங்கள் தொடர்பாகவும், டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்பது குறித்தும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்ததோடு, தேர்தல் வாக்குறுதிப்படி டாஸ்மாக் கடைகளை அடைக்க வேண்டும் என்று போராட்டங்களிலும் ஈடுபட்டனர். டாஸ்மாக் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தில்லாலங்கடித்தனங்கள், திமுகவினரின் டாஸ்மாக் கலெக் ஷன் உள்ளிட்டவையும் அதிமுக நடத்திய போராட்டம் காரணமாக மக்கள் மன்றத்தில் அம்பலப்பட்டது.இதன் காரணமாகவே வருமானவரித்துறையும் டாஸ்மாக் அமைச்சரின் சகோதரர் வீடு, உள்ளிட்ட கரூர் கம்பெனியின் வீடு மற்றும் அலுவலகங்களில் ரெய்டு அடிக்க கதிகலங்கிப் போனது திமுக தலைமை.இத்தனை பேர் உயிரிழப்புக்குப்பிறகு, அதிமுக போராடிய பிறகு இப்போதுதான், தமிழகத்தில் 500 டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்படும் என்று விடியா அரசு அறிவித்துள்ளது.சட்டப்பேரவையில் ஏற்கனவே இது தொடர்பாக அறிவிக்கப்பட்டாலும், அதனை செயல்படுத்தாமலேயே இருந்தனர் ஸ்டாலினும், செந்தில் பாலாஜியும்.. அதிமுக சார்பில் எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் கட்சியினர் கொடுத்துவந்த தொடர் அழுத்தங்களாலேயே இன்னும் ஒரே வாரத்தில் 500 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/MWo0lGB
Mediaமத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் இந்தியாவில் உள்ள டாப் கல்லூரிகளின் பட்டியல் வெளியாகியிருக்கு… இதுல ஒட்டுமொத்த உயர்கல்வி நிறுவனங்களிலும் சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 5வது முறையாக முதலிடத்தை தக்க வைத்துள்ளது.டாப் டென் பல்கலைக்கழகங்களில் கோவையில் உள்ள அமிர்த விஷ்வா வித்யா பீடம் 7 வது இடத்தையும், வேலூர் வி.ஐ.டி 8வது இடத்தையும் பிடித்துள்ளன. சென்னை பிரசிடென்ஸி கல்லூரி டாப்டென் கல்லூரியில் 3வது இடத்தையும், 4வது இடத்தை கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரியும், சென்னை லயலோ கல்லூரி 7வது இடத்தையும் பிடித்துள்ளது. ஆராய்ச்சி நிறுவனங்களில் சென்னை ஐ.ஐ.டி. 2வது இடத்தில் உள்ளது. வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.உயர்கல்விகளில் மாணவர்கள் சேர்க்கை விகிதம், தேர்ச்சி விகிதம் இவற்றைக் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் உயர்கல்வி சேர்க்கை சதவிகிதம் எனப்படும் Gross enrollment ratioல் இந்திய மாநிலங்களையும், ஏன், உலகநாடுகள் பலவற்றையுமே பின்னுக்குத் தள்ளி முதலிடம் வகிக்கிறது தமிழகம்…தேசிய அளவில் கொண்டு வரப்பட்டுள்ள புதிய கல்விக்கொள்கையில், உயர்கல்வி சேர்க்கை எனப்படும் Gross enrollment ratioவை 2035ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதமாக உயர்த்துவது என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த இலக்கை அதிமுக ஆட்சியில் எடப்பாடி கே.பழனிச்சாமி முதலமைச்சராக இருந்தபோதே அதாவது, கடந்த 2019லேயே தமிழகம் பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்தான் பள்ளிப்படிப்பை முடித்தவர்களில் மொத்தம் 49 சதவீதம் பேர் கல்லூரியில் சேர்கிறார்கள். விலையில்லா மிதிவண்டி, விலையில்லா மடிக்கணிணி என்று பள்ளிக்குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட கல்வி மற்றும் மாணவர்கள் நலன்சார்ந்த நடவடிக்கைகளே இந்த சாதனைகளுக்கு முழுமுதற் காரணம்.இதுமட்டுமல்ல, அதிமுக ஆட்சியில்தான் கலை அறிவியல் கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள், 11 மருத்துவக்கல்லூரிகள், வேளாண் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் என்று உருவாக்கப்பட்டதோடு,வறுமையில் உள்ள மாணவர்களும் குறைந்த கட்டணத்தில் கல்வி கற்க வழி வகுக்கப்பட்டது. 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தபோது உயர்கல்வி பெறும் மாணவர்களின் சதவீதம் வெறும் 32 ஆகத்தான் இருந்தது. பின்னர் அதிமுக ஆட்சியில் கல்வித்துறைக்கு அதிக முக்கியத்தும் அளித்ததோடு அதிக நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டதன் காரணமாக நாட்டிலேயே அதிக மாணவர்கள் உயர்கல்வி பெறும் மாநிலமாக வளர்ந்திருக்கிறது நம் தமிழகம். மத்திய அரசு 2035ஆம் ஆண்டு நிர்ணயித்த இலக்கினை, 2019லேயே அதிமுக ஆட்சியிலேயே அடைந்துள்ளது.அதிமுக ஆட்சியின் முன்னெடுப்புகளாலேயே இன்று இந்தியாவில் மட்டும் அல்ல, உலக அளவிலும் வளர்ந்த நாடுகளின் Gross enrollment ratioவை தமிழகம் விஞ்சியிருக்கிறது. சீனாவின் ஜிஇஆர் சதவிகிதம் 43%. மலேசியாவின் ஜிஇஆர் சதவிகிதம் 45%. பஹ்ரைனின் ஜிஇஆர் சதவிகிதம் 47%. இப்படி வளர்ந்த நாடுகளை விட தமிழகம் 49 சதவிகிதம் பெற்றும் முன்னணியில் உள்ளது.இந்த பெருமையும் புகழும் அதிமுக ஆட்சியின் செயல்பாடுகளாலேயே சாத்தியமாகி இருக்கிறது. ஆனாலும், வழக்கம் போல திமுக இதற்கும் தன்னுடைய ஸ்டிக்கரை ஒட்டியிருக்கிறது… என்னத்த சொல்ல… 

via News J : https://ift.tt/Au3koEy
Mediaஒடிசா ரயில் விபத்து குறித்து விசாரிக்க 4 லோக்கோ பைலட்டுகள் உட்பட 55 ரயில்வே ஊழியர்களுக்கு தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.ஒடிசா மாநிலம் பாலாசூரில் கடந்த இரண்டாம் தேதி இரவு ஏழு முப்பது மணி அளவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. இதில் ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி வந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதியது. இதனை அடுத்து கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் அதிவிரைவு ரயில் பெட்டியின் மீது பெங்களூரில் இருந்து ஹௌரா நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியது. இதில் இதுவரை 278-க்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். மேலும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். ரயில் விபத்து குறித்து தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ எம் சௌத்ரி விசாரணையை தொடங்கியுள்ளார். இதில் ஒடிசாவில் இருந்து சென்னை நோக்கி சென்ற கோரமண்டல் அதிவிரைவு ரயிலை இயக்கிய லோகோ பைலட் ஜி என் மோகன் டி, உதவி லோகோ பைலட் ஹசாரி பெஹேரா மற்றும், பெங்களூரு ஹவுரா விரைவு ரயில் இயக்கிய லோகோ பைலட் சித்தரஞ்சன், உதவி பைலட் சுதிர் குமார் உள்ளிட்ட 55 பணியாளர்களுக்கு தென்கிழக்கு பிராந்திய ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ரயில் விபத்து குறித்து நேற்று விசாரணை தொடங்கியுள்ள நிலையில், தற்போது மேலும் பல ரயில்வே ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை நடத்தி வருகிறது. ரயில் விபத்துக்கு சிக்னல் தவறாக அளித்ததே காரணம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இதற்கான காரணம் என்னவென்று அறிய 55 ரயில்வே ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி தென்கிழக்கு பிராந்தி ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

via News J : https://ift.tt/zIilPTD
Mediaதமிழ்நாட்டினைப் பொறுத்தவரை சுற்றுச்சூழலுக்கு உகந்த மாவட்டங்கள் என்று ஒரு சில் மாவட்டங்களை குறிப்பிடலாம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த மாவட்டம் நீலகிரி ஆகும். இந்த நீலகிரி மாவட்டத்தில் புகழ்பெற்ற ஊட்டி போட் ஹவுஸ் என்கிற ஊட்டி படகு இல்ல ஏரி ஒன்று திறம்பட விளங்கி வருகிறது. படகு சவாரியில் ஈடுபட்டு மகிழ்வதற்காக சுற்றுலா பயணிகள் இங்கு வருவதுண்டு. இது ஒரு செயற்கை ஏரியாகும். இது பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் 1824 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. மேலும் அண்மையில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பின்படி நீர்வாழ்ப்பறவைகள் அதிகளவு இந்த ஏரியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.TTDC - Tamil Nadu Tourism Development Corporationசாகச சுற்றுலா எனும் பெயரில் படகு இல்ல ஏரிக்கரையில் சில வளர்ச்சிப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. தனியார் முதலீட்டில் தமிழகத்தின் சுற்றுலாத்துறை இணைந்து மேற்கொண்டுவரும் இந்த வளர்ச்சிப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வு செய்த அவர், கரைகளில் உள்ள புற்கள் மற்றும் புதர்களை அழிக்க மூன்று மாதங்களுக்கு ஒரு முறை களைக்கொல்லி ரசாயனங்களைப் பயன்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.Mediaஇந்த வளர்ச்சிப் பணியானது ஊட்டி ஏரியின் இயற்கை எழிலை சிதைக்கும் வகையில் உள்ளது என்றும், ஏற்கனவே மலை காய்கறிகள் விவசாயத்தில் பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதால் சில தாவரங்கள் அழியும் நிலையில் உள்ளன. மேலும் அரிய வகை பூச்சியினங்களும் அழியும் தருவாயில் உள்ளன. அமைச்சர் சொன்னது போல 3 மாதங்களுக்கு ஒருமுறை களைக்கொல்லி ரசாயனத்தைப் பயன்படுத்தினால் நீர்ப்பறவைகள், நீர்வாழ் உயிரினங்கள் முக்கியமாக மண் வளம் அதிகம் பாதிக்கப்படும் என்று இயற்கை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/IaqUxW7
Mediaஇன்றைய நவீன யுக இரண்டாயிரம் குழவிகளுக்கு (2k kids) ஸ்பைடர்மேன், சூப்பர் மேன், பேட் மேன் என்று சொல்வதற்கு பல சூப்பர் ஹீரோக்கள் உள்ளனர். ஆனால் தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு ஒரே ஒரு சூப்பர் ஹீரோதான். அவர்தான் சக்திமான். தொலைக்காட்சியில் தொடராக வெளிவந்த சக்திமான் நிகழ்ச்சியானது தற்போது திரைப்படமாக உருவெடுக்கப் போகிறது என்கிற செய்தி வெளியாகியுள்ளது.இந்த சக்திமான் தொடர் ரூ.200 கோடி முதல் ரூ.300கோடி வரையிலான பட்ஜெட்டில் திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது என அந்தத் தொடரில் சக்திமானாக நடித்த நடிகர் முகேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முகேஷ் கண்ணா அளித்த பேட்டி ஒன்றில்,
“சக்திமான் தொடர் படமாக உருவாக உள்ளதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.
ரூ.200-300 கோடி பட்ஜெட்டில் சர்வதேச தரத்தில் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளது. இத்திரைப்படத்தில் நான் சக்திமான் கதாபாத்திரத்தில் நடிக்கவில்லை. மேலும் படக்குழுவினர் எந்த ஒப்பீடும் வேண்டாம் என்றதால் சிறப்புத் தோற்றத்திலும் நான் நடிக்கவில்லை. படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும். அதில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்து தெரிவிக்கப்படும். மேலும், படத்தின் இயக்குநர் உள்ளிட்ட தொழில்நுடப குழுவின் பெயர்களும் விரைவில் வெளியாகும். படம் வேறொரு தரத்தில் இருக்கும்” என்றார்.

via News J : https://ift.tt/mR9twPK