News J
594 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaதமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமலேயே வருகிற 7 தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளது, விடியா ஆட்சியில் கல்வித்துறையின் அவலத்தை தோலுரித்து தொங்க விட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து வருகிற ஏழாம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக பள்ளிக்கல்வி துறையும், தமிழக அரசும் பல்வேறு விளம்பரங்களையும், வெற்று அறிவிப்புகளையும் வெளியிட்டு வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் உள்ள 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்க இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.பள்ளிக்கு வராத மாணவர்களைக் கண்டறிந்து உடனடியாக சேர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவுதமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல் இருப்பதே தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதற்கு காரணம் என்கின்றனர் ஆசிரியர் சங்கங்கள். குறிப்பாக ஆண்டுதோறும் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், பணி மாறுதல் பெறும் தலைமை ஆசிரியர்களின் நிலவரத்திற்கு ஏற்ப அந்தப் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக பள்ளிக்கல்வித்துறை காலம் தாமதித்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 700 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி எத்தனை முறை பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும், விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கூட நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள். மேலும், தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு வர விரும்பும் ஆசிரியர்களிடம், 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் பெறுவதற்காகவே இதுபோன்று காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக ஆசிரியர் பணி மாறுதலுக்கு லஞ்சப் பணம் வசூல் செய்வதற்கென்றே அமைச்சரின் நெருங்கிய நண்பர் ஒருவர் நியமிக்கப்பட்டு, கோட்டூர் புரத்தில் அலுவலகம் அமைத்து பணி மாறுதலுக்கு லஞ்ச பணம் வசூல் செய்து பணி மாறுதல் அளித்து வருவதாகவும், லஞ்சம் பெறவேண்டும் என்ற காரணத்தாலேயே தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்து கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் அந்த பணிகள் காலியாக உள்ள நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

via News J : https://ift.tt/yv1lTut
Mediaகரூரில் 7-வது நாளாக தொடரும் சோதனை – அரசு ஒப்பந்ததாரர் பண்ணை வீட்டில் தொடங்கியது.மாயனூர் அடுத்த எழுதியாம்பட்டி பகுதியில் அமைந்துள்ள அரசு ஒப்பந்ததாரர் எம்.சி.சங்கர் ஆனந்துக்கு சொந்தமான “சங்கர் ஃபார்ம்ஸ்” பண்ணை வீட்டில் வருமான வரி சோதனை தொடங்கியது. இரண்டு வாகனங்களில் வந்த ஆறு அதிகாரிகள் துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் உள்ளே சென்றுள்ளனர்.

via News J : https://ift.tt/oqpaQN8
Mediaகடந்த ஆண்டே தமிழ்நாடு அரசு அறிவித்தும்கூட 90 சதவிகித பொறியியல் கல்லூரிகள் பின்பற்றவில்லை கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த அரசாணையை. இந்தாண்டாவது பின்பற்றுமா? தனியார் கல்லூரிகள் என்ன செவ்வாய் கிரகத்தில் உள்ளதா. உயர் கல்வித் துறை கட்டுப்பாட்டில் இல்லையா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இதற்கு என்ன பதிலை சொல்ல போகிறார்.Mediaசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கக்கூடிய பல்கலைக்கழக இணைப்புக் கல்லூரிகள், தன்னாட்சி மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் உட்பட அண்ணா பல்கலைக்கழகத்தில் இளங்கலை பொறியியல் மாணவர்களுக்கான முதல் பருவத்தில் இடம் பெறக்கூடிய தமிழர் மரபு மற்றும் இரண்டாம் பருவத்தில் இடம் பெறக்கூடிய தமிழரும் தொழில்நுட்பமும் ஆகிய பாடங்களை பல்கலைக்கழக பாடத்திட்டத்தின்படி நடத்த வேண்டும் என 2022 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.ஆனால் இதனை பல்வேறு கல்லூரிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அதற்கு தேவையான எம் ஏ, எம்ஃபில், பிஹெச்டி, நெட் மற்றும் செட் ஆகிய கல்வித் தகுதி உடையவர்களை நியமனம் செய்ய வேண்டும் என்றும் இது குறித்து 12/06/ 2023 தேதிக்குள் தெரிவிக்குமாறு அண்ணா பல்கலைக்கழகத்தினுடைய தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து அனைத்து கல்லூரிகளுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதையாவது பின்பற்றுவார்களா? பின்பற்றுகிறார்களா என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியும் தமிழை வளர்ப்பதாக கூப்பாடு போடும் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசும் கண்காணிக்குமா என்பது கேள்விக்குறியே.

via News J : https://ift.tt/qBbH5wk
Mediaஆட்சிப் பொறுப்பேற்றவுடன் மேகதாதுவில் அணை கட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக மாநில துணை முதலமைச்சர் டி.கே சிவக்குமாருக்கும், இந்த பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வரும் விடியா திமுக அரசுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.இது குறித்து எதிர்க்கட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்று அறிவித்துள்ளது என்றும் அதற்கு, தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டிய விடியா திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சர், கொஞ்சல், கெஞ்சல் மற்றும் தாஜா செய்து கண்துடைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் காங்கிரசும், திமுகவும் இணைந்து இலங்கையில் பல லட்சம் தமிழர்கள் மடிவதற்கு காரணமாக இருந்ததுபோல், இங்குள்ள காவேரி படுகை விவசாயிகளையும், காவேரி நீரை குடிநீர் ஆதாரமாகக் கொண்ட மக்களையும் இந்த விடியா திமுக அரசு வஞ்சிக்கப் பார்க்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி தலைவர், ஏற்கெனவே இந்த ஆட்சியாளர்கள் கையாலாகாதவர்கள் என்பதை உணர்ந்து கொண்ட அண்டை மாநிலங்கள், தமிழகத்தை பாலைவனமாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளன எனவும், இந்த விடியா திமுக ஆட்சியாளர்களின் உறுதுணையோடு நமது கனிம வளங்கள் கேரளாவிற்கு கடத்திச் செல்லப்படுகிறது என்றும் நாள்தோறும் செய்திகள் வெளிவருகின்றன என அவர் சுட்டிகாட்டியுள்ளார்.இந்த நிலையில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த ஒரே வாரத்தில் அனைத்து தடைகளையும் தகர்த்து மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று பொங்குவதன் ரகசியம் என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, தமிழக ஆட்சியாளர்களுக்கு கர்நாடகாவில் பல்வேறு தொழில்கள் உள்ளதால், அவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்ற எண்ணத்தோடு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று அறிவிப்பினை வெளியிட்டுள்ளதோ என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருந்தாலும், அது காவேரி பிரச்சினை என்றாலும், மேகதாது பிரச்சினை என்றாலும் அதிமுக கடுமையாக எதிர்த்தது எனவும், புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் அரசியல் நடவடிக்கையாலும், தொடர் சட்டப் போராட்டத்தினாலும் 2007 ஆம் ஆண்டு காவேரி நடுவர் மன்றம் இறுதி ஆணை வெளியிட்டது எனவும் குறிப்பிட்டுள்ள அவர், தொடர்ந்து 2013 ஆம் ஆண்டு மத்திய அரசிதழில் காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணை வெளியிடப்பட்டது என தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, தனது தலைமையிலான அரசு கொடுத்த அழுத்தத்தின் காரணமாக 2018 ஆம் ஆண்டு பில்லிகுண்டுலுவில் 177.25 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தையும் அவர் சுட்டிக்காடியுள்ளார். அதனைத் தொடர்ந்து, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவேரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்பட்டது எனவும், கர்நாடகாவின் முந்தைய அரசு, மேகதாதுவில் அணை கட்ட முயற்சி எடுத்தபோது, தனது தலைமையிலான அரசு, சட்ட ரீதியாகவும், மத்திய அரசோடும் பேச்சுவார்த்தை நடத்தியும் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தியது என அவர் கூறியுள்ளார். தான் முதலமைச்சராக இருந்தபோதும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதும், பிரதமரை நேரில் சந்திக்கும்போதெல்லாம் கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சிகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்ததோடு, அவ்வாறு அணை கட்டினால் தமிழ் நாட்டில் டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகிவிடும் என்பதையும் எடுத்துக் கூறியதாகவும் எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார். பன்மாநில நதிநீர் தாவாச் சட்டம் ஆயிரத்து 956-ன்படி, நதிநீரை தடுப்பதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ எந்த மாநிலத்திற்கும் உரிமை கிடையாது என்று தெள்ளத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ள அவர், காவேரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையில், எந்த ஒரு திட்டத்தினையும் செயல்படுத்தும் முன்னரே, கீழ்ப் பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். மேகதாது விவகாரத்தில் இந்த நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசை நம்பி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்துள்ளா எதிர்க்கட்சி தலைவர், மேகதாதுவின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக மாநில காங்கிரஸ் அரசின் முயற்சியை கடுமையாகக் கண்டிப்பதோடு, தமிழகம் வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க, அதிமுக அனைத்துப் போராட்டங்களையும் முன்னெடுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

via News J : https://ift.tt/UYc7lRk
Mediaஅரசு போக்குவரத்து துறையை தனியார்மயமாக்க துடிக்கும் விடியா திமுக அரசு, போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் நாடகமாடுவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.தமிழ்நாட்டில் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் அரசு பேருந்துகளை நம்பியே பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்படி அரசு பேருந்துகளை நம்பியிருப்பவர்கள் தலையிலும், அரசு போக்குவரத்துகழக ஓட்டுநர்கள் தலையிலும், தனியாருக்கு ஆதரவான நிலைப்பாட்டால், ஓங்கி குட்டி இருக்கிறது ஆளும் திமுக அரசு.திமுக அரசு ஆட்சிக்கு வந்தது முதல் அரசுத்துறைகளில் தனியார் மயத்தை புகுத்தி வருகிறது. அதன் முதற்படியாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் நியமனத்திலும் தனியாரைப் புகுத்த அதற்காக டெண்டர் விட முயன்று வருகிறது. ஒப்பந்த அடிப்படையில் முதற்கட்டமாக 400 ஓட்டுநர்களை நியமிக்கு இலக்கு வைத்து அதற்கான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.திமுக அரசின் இந்த முன்னெடுப்புகளுக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் தான் மூன்று நாட்களுக்கு முன்பு மாலையில் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுகவின் தொழிற்சங்கமான தொ.மு.சவும் ஆளும் அரசின் தனியார்மய நடவடிக்கைக்கு எதிர்ப்பு காட்டியது.
சென்னையில் மாநகரப் பேருந்துகளை திடீரென இயக்காமல் நிறுத்தியதோடு, பணிமனைக்கே கொண்டு சென்றதால், பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்ப முடியாமல் மிகவும் அல்லாடினர். ஓட்டுநர்கள் உள்பட இதர போக்குவரத்து துறை தொழிலாளர்களையும் அரசு கண்டுகொள்ளவில்லை என்றும் போராட்டத்தின் போது எதிர்ப்பு குரல்கள் கிளம்பியது.இப்படி திமுகவின் தொழிற்சங்கமே போராட்டத்தில் ஈடுபட்டதால் கலவரமடைந்த தலைமை, பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி அவர்களை சமாதானம் செய்ய மேற்கொண்ட முயற்சியால் ஓட்டுநர்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.இதன் பின்னர், அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினருடன், திமுக அரசுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையும் தோல்வியிலேயே முடிந்ததால், வரும் 9ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லாத, திமுகவின் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்களில் ஒன்றான சி.ஐ.டி.யு அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்…போக்குரவத்துக்கழக தொழிலாளர்களின் போராட்டத்தால் திமுக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. ஆட்சிக்கு வந்தது முதல் இதுவரை ஒரு பேருந்தை கூட அரசு வாங்காமல், 11 முறை டெண்டர்கள் அறிவிக்கப்பட்டும் நீட்டிக்கப்பட்டு வருவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளன. போக்குவரத்தில் தனியார் மயம், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான பணிக்கொடைகள் நிலுவை, பணியாளர்களுக்கு கிடைக்கவேண்டிய சலுகைகள் கிடைக்காமை என்று போக்குவரத்து துறை ஊழியர்களின் குறைகளையும் திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.அரசு போக்குவரத்து துறை ஊழியர்களின் குறைகளை களைய முயற்சி செய்யாமல் தனியார் மயத்தை புகுத்தவே திட்டமிட்டு கொண்டிருப்பதால் போக்குவரத்து ஊழியர்கள் விவகாரத்தில் திமுக அரசு நாடகம் ஆடிக் கொண்டிருப்பது உண்மைதான் என்கிறார்கள் கள நிகழ்வுகளை கூர்ந்து நோக்குபவர்கள்.

via News J : https://ift.tt/kdD1Azw
Mediaபிளஸ் டூ பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் ஏராளமான குளறுபடி ஏற்பட்டுள்ள நிலையில் ஏதேனும் முறைகேடு நடந்ததா என விசாரிக்க அரசு தேர்வுகள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.  மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களைக் காட்டிலும் கூடுதலாக அவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கியது அம்பலமாகியுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடப்பட்டுள்ளது.விடைத்தாள் நகலில் மதிப்பெண்கள் வழங்கிய விவரத்தை பதிவு செய்ததை காட்டிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேர்வு முடிவுக்கான மதிப்பின் பட்டியலில் கூடுதலாக மதிப்பெண்கள் வழங்கியது தெரியவந்துள்ளது. மெலும் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும் கூடுதலாக 5 மதிப்பெண்கள் முதல் 7 மதிப்பெண்கள் வரை அதிகமாக வழங்கியது தெரியவந்துள்ளது.எதனால் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகமாக வழங்கப்பட்டது என்பதை அரசு தேர்வுகள் துறை தெளிவுபடுத்தவேண்டும் என்றும் மாணவர்களுக்கு அதிகமாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதால் கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் படிப்பு கலந்தாய்வில் அது தாக்கத்தை ஏற்படுத்தி மாணவர்களுக்கான வாய்ப்புகளை தட்டிப் பறிக்கும் எனவும் கருத்துகள் கூறி வருகின்றனர்.பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரித்துக் காட்ட இது போன்ற மதிப்பெண்கள் வாரி வழங்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/m7QEkAI
Mediaதென்மேற்கு பருவமழை உருவாக சாதகமான சூழல் நிலவுவதால் ஜீன் 5 ஆம் தேதி வரை கேரளாவில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கேரளாவில் தென்மேற்கு பருவமழை உருவாவதற்கு சாதகமான சூழல் வலுபெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவமழை தென் அரபிக்கடல், மாலத்தீவு, குமரி கடல் பகுதிகள் மற்றும் தெற்கு வங்க கடல், கிழக்கு மத்திய வங்கக் கடல், வடகிழக்கு வங்க கடலின் சில பகுதிகளில் மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உள்ளதால் ஜீன் 5 ஆம் தேதி வரை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அரபிக்கடலில் வளிமண்டல சுழற்சி காரணமாக ஜீன் 7 ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

via News J : https://ift.tt/76FHCcl
Mediaமேகதாதுவில் அணை கட்ட கர்நாடக காங்கிரஸ் அரசு தீவிரம் காட்டி வருகிறது. காவிரியின் குறுக்கே கட்டப்படும் அந்த அணையால், தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்படும் அபாயம் நிலவிவதால், விவசாயிகள் இப்போதே தங்களின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கி உள்ளனர்.கடந்த அதிமுக ஆட்சியின் போது, கர்நாடகாவில் தொடங்கப்பட்ட இந்த திட்டத்துக்கு அதிமுக தரப்பில் கடுமையாக எதிர்ப்பு கிளம்பியதால், அணை கட்டும் முயற்சிகள் தடுக்கப்பட்டது. ஆனால் தற்போது கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ், அணை கட்டுமானத்தை தீவிரப்படுத்தி உள்ளது.தங்களது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் பேச்சு வார்த்தை நடத்தி தமிழக விவசாயிகளையும், டெல்டா மாவட்டங்களையும் விடியா அரசு பாதுகாக்குமா?நானும் டெல்டா மாவட்டத்துக்காரன் என்று வீண் பெருமை பேசிய ஸ்டாலின், மேகதாது அணையை தடுப்பதில் தீவிரம் காட்டுவரா? அல்லது நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியில் இருந்து காங்கிரஸை கழட்டிவிட்டு பாடம் கற்பிப்பாரா என்று பொதுமக்கள் பேசிவருகிறார்கள்.

via News J : https://ift.tt/zfspN2H
Media2011 ஆம் அண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும், 2011 ஆம் ஆண்டுக்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியில் தொடரலாம் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கவும் தகுதித் தேர்வு கட்டாயமல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் பணியில் சேர தகுதித் தேர்வு எனப்படும் டெட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். இந்த தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. முதல் தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், இரண்டாம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம்.

via News J : https://ift.tt/RLQxwCt
Mediaதமிழக வரலாற்றிலேயே முதன் முறையாக 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லாமலேயே வருகிற 7 தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளதாக ஆசிரியர் சங்கத்தினர் வேதனை தெரிவித்துள்ளது, விடியா ஆட்சியில் கல்வித்துறையின் அவலத்தை தோலுரித்து தொங்க விட்டுள்ளது.கோடை விடுமுறை முடிந்து வருகிற ஏழாம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக பள்ளிக்கல்வி துறையும், தமிழக அரசும் பல்வேறு விளம்பரங்களையும், வெற்று அறிவிப்புகளையும் வெளியிட்டு வரக்கூடிய நிலையில், தமிழகத்தில் உள்ள 700 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 435 அரசு உயர்நிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர்கள் இல்லாமல் பள்ளிகள் இயங்க இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளன. போதுமான ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் திறன் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் இருக்கக்கூடிய அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளில் உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தாமல் இருப்பதே தலைமை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதற்கு காரணம் என்கின்றனர் ஆசிரியர் சங்கங்கள். குறிப்பாக ஆண்டுதோறும் பணி ஓய்வு பெறும் தலைமை ஆசிரியர்கள், பணி மாறுதல் பெறும் தலைமை ஆசிரியர்களின் நிலவரத்திற்கு ஏற்ப அந்தப் பணியிடங்களை நிரப்பாமல் தமிழக பள்ளிக்கல்வித்துறை காலம் தாமதித்து
வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.தமிழகத்தில் காலியாக உள்ள 700 அரசு மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரி எத்தனை முறை பள்ளி கல்வி துறை உயர் அதிகாரிகளிடம் மனு அளித்தும், போராட்டங்கள் நடத்தியும், விரைவில் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் கூட நிரப்பப்படாமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டுகின்றனர் அரசு பள்ளி ஆசிரியர்கள்.மேலும், தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு வர விரும்பும் ஆசிரியர்களிடம், 20 லட்சம் ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரையில் லஞ்சம் பெறுவதற்காகவே இதுபோன்று காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பதாக ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. குறிப்பாக ஆசிரியர் பணி மாறுதலுக்கு லஞ்சப் பணம் வசூல் செய்வதற்கென்றே அமைச்சரின் நெருங்கிய நண்பர் ஒருவர் நியமிக்கப்பட்டு, கோட்டூர் புரத்தில் அலுவலகம் அமைத்து பணி மாறுதலுக்கு லஞ்ச பணம் வசூல் செய்து பணி
மாறுதல் அளித்து வருவதாகவும், லஞ்சம் பெறவேண்டும் என்ற காரணத்தாலேயே தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் இருப்பதாக பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தமிழ்நாடு அரசு மருத்துவமனை மருத்து கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியர், இணை பேராசிரியர் பணியிடங்களுக்கு கலந்தாய்வு நடத்தப்படாமல் அந்த பணிகள் காலியாக உள்ள நிலையில்,
தற்போது தமிழ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல் நிலைப் பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்படாமல் உள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.– கோபாலகிருஷ்ணன், செய்தியாளர்.

via News J : https://ift.tt/hX57TRu
😢1
Mediaமூதாட்டிகளை குறிவைத்து தொடர் செயின்பறிப்பில் ஈடுபட்டு வந்த இந்த நபர், போலீசாரிடம் வசமாக சிக்கியிருக்கிறார்.கும்பகோணம் சபரி நகர் வழியாக, கலாவதி என்னும் 75வயது மூதாட்டி கடந்த 26ஆம் தேதி காலை நடந்து சென்று கொண்டிருந்த போது மின்னல் வேகத்தில் இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர், மூதாட்டி அணிந்திருந்த 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றார். இந்த செயின்பறிப்பு சம்பவம் அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது.மர்ம நபர் செயினை இழுத்ததால் கீழே விழுந்து எழுந்த மூதாட்டி, பின்னர் உறவினர்களோடு சென்று கும்பகோணம் கிழக்கு காவல்நிலையில் வழிப்பறி குறித்து புகார் அளித்தார்.Chennai: CCTV captures shocking chain snatching incident - India Todayஇதையடுத்து போலீசார், சம்பவம் நடந்த இடத்தை சுற்றியும் இருந்த அனைத்து சிசிடிவிக்களையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்ம நபர் தனது இருசக்கரவாகனத்தில், கும்பகோணம் பாலக்கரை, பெரும்பாண்டி, அசூர், ஆகிய இடங்களை தாண்டி செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர். இதனையடுத்து, அந்தப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டவர்கள், பெரும்பாண்டி KVN நகரில் குடியிருந்த மர்மநபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த வெற்றிவேல் என்பது தெரியவந்தது.விசாரணையில், சங்கிலி பறிப்பில் ஈடுபட்டது இவர் என உறுதியானது.
பின்னர் கடந்த 26 ஆம் தேதி சபரி நகரில் கலாவதி என்ற மூதாட்டியிடம் இருந்து
பறிக்கப்பட்ட தாலி சங்கிலி மீட்கப்பட்டது .முதியோர்களை குறிவைத்து இருசக்கரவாகனத்தில் சென்று வழிப்பறியில் ஈடுபடும் வெற்றிவேல் மீது பண்ருட்டி காவல் நிலையத்தில் மூன்று வழிப்பறி வழக்குகள், இரண்டு திருட்டு வழக்குகள், மயிலாடுதுறை காவல் நிலையத்தில் ஏழு திருட்டு வழக்குகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது.இதனை தொடர்ந்து வெற்றிவேலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.– செய்தியாளர் நாடிமுத்து மற்றும் ஆசாத்.

via News J : https://ift.tt/S9cUPMm
Mediaதமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கைவரிசை காட்டிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட திருடர் குல திலகங்கள் சிக்கியது குறித்து பார்ப்போம்.இந்தப் பூனையும் பால்குடிக்குமா என்று கேள்வி கேட்க வைக்கும் முகபாவத்துடன் காட்சி அளிக்கும் இவர்கள்தான் ராமநாதபுரம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றியவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதி, புளிக்காரத் தெருவில் உள்ள கோயில் பூசாரி வீட்டில் கடந்த 14ஆம் தேதி ம்ர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். அதே போன்று, 25ஆம்தேதி பஜார் காவல் நிலைய சரகம் ராணிசத்திர தெருவில் உள்ள இரண்டு வீடுகளிலும், கீழக்கரையில் ஒரு வீட்டிலும் தங்க நகைகள் வெள்ளி பொருட்கள் மற்றும் பணம் திருட்டு போனது. இந்த புகார்களின் பேரில் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தனிப்படை அமைத்து தேடி அந்தனர். இந்த நிலையில் பூசாரி வீட்டில் நிகழ்ந்த திருட்டு தொடர்பாக, தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்த கேணிக்கரை போலீசார், ஏர்வாடி பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் தங்கியிருந்த குடவாசலை சேர்ந்த முருகானந்தம் மற்றும் சென்னை திருமுல்லைவாயிலை சேர்ந்த ஹரிபிரசாத் ஆகியோரைப் பிடித்து விசாரித்த அவர்கள் பூசாரி வீட்டிலும் அதைத் தொடர்ந்து மற்ற இடங்களிலும் கொள்ளையை அரங்கேற்றியது தெரியவந்தது.அதே போல, கடந்த ஏப்ரல் மாதம் கோயம்புத்தூர், ராமநாதபுரம் சிங்கா நல்லூர் மற்றும் மதுரைப் பகுதிகளிலும் அவர்கள் நகைகள் மற்றும் பணத்தை திருடியிருப்பதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், மதுரை, பள்ளிக்கரனை, தாம்பரம், திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 100 க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி மற்றும் மோசடி வழக்குகள் இருவர் மீதும் நிலுவையில் இருந்து வருவதும் தெரியவந்துள்ளது.இதனைத் தொடர்ந்து அவர்களைக் கைது செய்த போலீசார், அவர்கள் கேணிக்கரை, பஜார் கீழக்கரை, மதுரை பகுதிகளில் திருடிய 24 சவரன் தங்க நகை, 1கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் 30ஆயிரம் ரூபாய் ரொக்கம், திருடுவதற்கு பயன்படுத்தப்பட்ட இரும்பு ராடுகள், நகை அளவீடு செய்யும் டிஜிட்டல் எடை மிஷின் ஆகியவற்றை அவர்கள் தங்கியிருந்த ஏர்வாடி மஹாலிலும், முருகானந்தம் குடும்பத்துடன் குடியிருந்த தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் உள்ள வீட்டிலும் கைப்பற்றினர்.– செய்தியாளர் பா.லிங்கேஸ்வரன் மற்றும் ஆசாத். 

via News J : https://ift.tt/SlEiDFx
Mediaஇந்தியாவையே உலுக்கிய ஒடிசா ரயில்விபத்து சம்பவத்தில், பிரதமர் மோடி, முதலமைச்சர்கள் மம்தா பானர்ஜி, நவீன் பட்நாயக் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தான் செல்லாமல், உதயநிதியை அனுப்பி வைத்துள்ளது ஏன் என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.இந்தியாவையே ஒட்டுமொத்தமாக அதிரச் செய்துள்ளது ஒடிசாவில் நிகழ்ந்துள்ள கோர விபத்து. தடம் புரண்ட பெங்களூரு – ஹவுரா அதிவிரைவு ரயில் மீது மோதிய ஷாலிமார் – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பெட்டிகள், அந்த வழியாகச் சென்ற சரக்கு ரெயில் மீதும் மோத, அந்த இடமே ரணகளமாயிருக்கிறது.விபத்து குறித்த தகவல்கள் கிடைத்ததும் ரயில்வே , போலீஸ், தீயணைப்பு உள்ளிட்ட பல்துறை அதிகாரிகளும், அக்கம்பக்க பொதுமக்களும் அங்கு குவிந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். 60க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்களின் தொடர்ச்சியான சைரன் ஒலி அந்தப் பகுதியின் பதற்றத்தை அதிகரித்து கொண்டிருக்கின்றன.ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் உடனடியாக அதிகாரிகளுடன் அந்த இடத்துக்கு விரைந்ததோடு, பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருக்கிறார். ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவரைத் தொடர்ந்து பிரதமர் மோடி ஆகியோரும் நேரடியாக விபத்து பகுதிக்கு சென்று காயம் அடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறி உங்களோடு நாங்கள் இருக்கிறோம் என்னும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளனர்.இந்த ரயில் விபத்தில் சிக்கிய ஷாலிமார் – கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிக அளவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பயணித்து வந்து, பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை சந்திக்கவோ, ஆறுதல் கூறவோ முதலமைச்சர் ஸ்டாலின் ஒடிசாவுக்குச் செல்லவில்லை… தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர், ஜப்பானுக்கெல்லாம் சென்றுவந்தவர் இந்தியாவுக்குள் இருக்கும் ஒடிசாவுக்கு செல்லாமல், தனது வாரிசான உதயநிதியை அனுப்பி வைத்துள்ளார். பாதிக்கப்பட்டு இருக்கும் தமிழகத்தை சேர்ந்தோர் மேல் அக்கறையுள்ளவர் முதல்வர் என்றால், அவர்தான் கிளம்பி சென்றிருக்க வேண்டும், அல்லது, பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சரையாவது அனுப்பியிருக்க வேண்டும். இரண்டுமே இல்லாமல், அங்கு வாரிசு அமைச்சரை அனுப்பியிருப்பது, ரோம் தீப்பற்றி எரிந்த போது நீரோமன்னன் பிடில் வாசித்தது போல, தமிழகத்தை சேர்ந்தோர் துயரில் இருக்கும்போது வாரிசு அமைச்சருக்கு விளம்பரத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகத்தானா?தொழில் முதலீடு என்ற பெயரால் சிங்கப்பூர், ஜப்பான் போகத் தெரிந்தவருக்கு ஒரிசாவுக்கு செல்ல மனமில்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பும் சமூக ஆர்வலர்கள், தமிகத்தைச் சேர்ந்தவர்களின் துயரில் பங்கெடுப்பதை விட கருணாநிதி 100 கொண்டாட்டத்தில் பங்கெடுப்பதுதான் ஸ்டாலினுக்கு முக்கியாகியிருக்கிறதா? என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் வாரிசு அமைச்சரை ஒடிசாவுக்கு அனுப்பி இருப்பதும் வெற்று விளம்பரத்துக்குத்தான் என்று காட்டம் காட்டுகின்றனர்.

via News J : https://ift.tt/Gzt9MnQ
Mediaகர்நாடகாவுல தேர்தல் நடந்தப்ப, காங்கிரஸ் சார்பா, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய், வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் 3,000, 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்பட 5 முக்கிய வாக்குறுதி கொடுக்கப்பட்டுச்சு.இந்த வாக்குறுதிகளால, காங்கிரஸ் 135 தொகுதிகள பிடிச்சி ஜெயிச்சு ஆட்சிக்கு வந்துச்சு.சமீபத்துல, நடந்த அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னாடி தேர்தல்ல அறிவிச்ச 5 முக்கிய அறிவிப்புகள செயல்படுத்த உள்ளதா முதலமைச்சர் சித்தராமையாவும் துணை முதலமைச்சர் சிவக்குமாரும் கூட்டா அறிவிச்சிருக்காங்க.அவங்க அறிவிப்பு படி, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம். ஜூலை 1-ஆம் தேதியில இருந்து கர்நாடகாவுல மாதந்தோறும் வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரமும், ஆகஸ்ட் 15 லேருந்து குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2,ஆயிரம் ரூபாய் வழங்கப் போறாங்க. இந்த ஆண்டு தேர்ச்சி பெற்ற பட்டதாரிகளுக்கு மாதம் 3ஆயிரம் வீதம் 2 வருஷம் வழங்கப்படுது. அதே மாதிரி வேலையில்லாத டிப்ளமோதாரர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு அல்லது வேலை கிடைக்கும் வரை மாசம் 1500 ரூபாய் வழங்கப்போறாங்க!இப்படி சொன்னபடி, காங்கிரஸ் தனது தேர்தல் வாக்குறுதிகள நிறைவேத்தியிருக்கிற நிலையில, அதன் கூட்டணி கட்சியான, தமிழகத்தின் ஆளும் கட்சி திமுகவும் தன்னோட தேர்தல் வாக்குறுதிய செய்யுமான்னு கேள்வி எழுந்துருக்கு.மகளிருக்கு மாசம் 1000 ரூபாய் தாரோம்னு சொன்னது, 2 வருஷமாகியும் இன்னும் கைக்கு வந்த பாடில்ல. மாசத்துக்கு ஒருதடவ மின் அளவீடு செய்யப்படும்னு சொன்னதும் காத்துல எழுதுன கதையாத்தான் இருக்கு. பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, சிலிண்டர் மானியம், நகைக்கடன் தள்ளுபடின்னு தேர்தலப்ப சொன்ன வாக்குறுதிகள் அப்படியே கிடக்கு…அட நேத்து ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் கட்சியே கர்நாடகவுல தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்திட்டாங்க ! ஆனா நம்ம “ பொம்மை “முதல்வர் ஸ்டாலினால இதையெல்லாம் செய்யவே முடியல!கூட்டணியில இருக்கிற காங்கிரசால கர்நாடகத்துல செய்ய முடியுறத, நான் தான் பெரியண்ணன்னு சொல்ற திமுகவால தமிழகத்துல ஏன் செய்ய முடியல? கர்நாடகாவுல செஞ்சத தமிழகத்துலயும் செய்வோம்னு காங்கிரஸும் சொல்ல ஆரம்பிச்சி கூட்டணிய விட்டு வெளியேறி புதுசா ஒரு கூட்டணிய அமைச்சிட்டுன்னா, திமுகவோட நிலை என்னாகும்? இதுக்குப் பிறகும் தேர்தல் வாக்குறுதிய நிறைவேத்தாம திமுக போக்கு காட்டுனா, 2024 நாடாளுமன்ற தேர்தல்ல மக்களும் திமுகவுக்கு பைபை சொல்லிடுவாங்க. 

via News J : https://ift.tt/bdOrmBV
Mediaசூரிய குடும்பத்திற்கு உள்ளே பூமியைத் தவிர மற்றொரு கோளின் நிலவில் நீர் இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உறுதி செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.விண்வெளி ஆராய்ச்சியின் புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் எடுக்கப்பட்ட பிரபஞ்சத்தின் பல்வேறு வியப்பூட்டும் புகைப்படங்களை நாசா வெளியிட்டு வருகிறது. பூமியின் தோற்றம் குறித்து பூமியைப் போல் மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற மற்ற கோள்களைக் கண்டறியும் ஆய்வும் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சூரிய குடும்பத்தில் உள்ள சனிக் கோளில் அதன் நிலவுகளில் ஒன்றான என்செலடஸில் ((ENCELADUS)) 9,600 கிலோ மீட்டர் நீளத்திற்கு நீரூற்று இருப்பதை ஜேம்ஸ் வெப் தொலை நோக்கி கண்டறிந்துள்ளது. 2005ஆம் ஆண்டே சனிக்கோளின் நிலவுகளில் நீர் இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறி வந்த நிலையில் ஜேம்ஸ் வெப் இதனை உறுதி செய்துள்ளது. இந்த நீரூற்றின் அளவை வைத்து பார்க்கும்போது ஜப்பானிலிருந்து இங்கிலாந்துக்கு செல்லும் தூரத்தை இந்த நீர் ஊற்று கொண்டிருக்கிறது. மேலும் இதில் காணப்படும் கடல் பகுதிகளில் நீர் உப்புத் தன்மையை கொண்டிருப்பதால் உயிர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகளும் உருவாகலாம் என்று தெரிவித்துள்ளன.Saturn's Wet Moon Enceladus May Be Rapidly Flinging Microbes Into Space, Say Scientistsபூமியின் வெப்பத்தின் காரணமாக வரும் அகச்சிவப்புக் கதிர்கள் தொலைநோக்கிக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதற்காக, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஜேம்ஸ் வெப் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி விண்வெளியில் பதிவு செய்த முதல் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.என்செலடஸின் மேற்பரப்பில் வெப்பநிலை மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும் என்றும் அதே நேரத்தில் அதன் மையப்பகுதியில், இந்த தண்ணீரை சூடாக்கும் அளவுக்கு வெப்பம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். சனிக் கோளுக்கு 124 நிலவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.– பாலாஜி, செய்தியாளர்

via News J : https://ift.tt/wQs48yL
Mediaஒடிசா கோர ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உலகத் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தைவான் அதிபர் சாய்-இங் வென், இந்தியாவில் ரயில் விபத்தில் பாதிப்படைந்த அனைவருக்காக வேண்டுவதாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.ஐரோப்பியா கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல், இந்தியாவிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும், பாதிப்படைந்தவர்கள் விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, கனடர்கள் இந்நேரத்தில் இந்தியாவுடன் இருப்பதாகவும், தங்கள் நெருக்கமானவர்களை இழந்தவர்களுக்கு இரங்கல்கள் எனவும் தெரிவித்துள்ளார்.ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என தெரிவித்துள்ளார்.இந்தியாவிற்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, ஜப்பான் அரசு சார்பாக ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்கள் இதயப்பூர்வமான இரங்கலை தெரிவித்து கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம் என தெரிவித்துள்ளார்.நேபாள நாட்டின் பிரதமர் புஷ்பகமல் தஹல் பிரசண்டா, ரயில் விபத்தில் ஏராளமானோர் உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது எனவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்திய ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ், ரயில் தடம் புரண்டதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் எனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி, ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் எனவும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரயில் விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.ரஷ்ய அதிபர் புடின், ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/XHaz54x
Mediaதமிழக மருந்து கட்டுப்பாட்டு துறையில இயக்குநனர நியமிக்காததால, புதுசா மருந்தகம் வைக்கிறதுக்கும், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள தயாரிக்கவும், மருத்துவ உபகரணங்கள ஏற்றுமதி செய்யவும் அனுமதி கிடைக்காம 700க்கும் மேலாண விண்ணப்பங்கள் தேங்கிக் கிடக்குதாம்.வழக்கமாக மருந்தாளுநர் படிப்ப முடிச்சு, ஐந்தாண்டு அனுபவம் உள்ள அதிகாரியத்தான் மருந்து கட்டுப்பாட்டு துறை இயக்குநரா நியமிப்பாங்க… ஏற்கனவே இந்த பதவியில இருந்த விஜயலட்சுமிங்கிறவங்க ஓய்வு பெற்ற பிறகு உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் லால்வீனாவ, கூடுதல் பொறுப்பா இதையும் பாக்கச் சொல்லியிருக்காங்க. ஆனா, ஐ.ஏ.எஸ். அதிகாரிங்கிறதால அவரால நேரடியா அனுமதி எதையும் கொடுக்க முடியாதாம்.Director Of Drugs Control in Teynampet West,Chennai - Best Government Organisations in Chennai - Justdialஇதப்பத்தியெல்லாம் சிந்திக்காம தமிழக அரசும், மருத்துவத்துறையும் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்துல தான் கவனம் செலுத்திக்கிட்டு இருக்காங்களாம். இப்ப என்னடான்னா, மருந்து கட்டுப்பாட்டுதுறை இயக்குநருக்கு கீழ, உரிமம் வழங்மய தனியா குழு அமைக்கப்படும்னும், இந்த குழுவினர் எந்த சமரசத்துக்கும் இடமளிக்காமல் விண்ணப்பித்தவர்களுக்கு உரிமம் வழங்குவாங்கன்னும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவிச்சிருக்காரு…விடியா திமுக அரசு அமைச்ச குழுக்களோட நிலையே இதுவரைக்கும் என்னனு தெரியல… இப்ப என்னடான்னா புதுசா ஒரு குழு அமைக்கப் போறாங்களாம்… அதுவும் இல்லாம, அந்த குழு எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காதுன்னு வேற சொல்லியிருக்கிறதுதான் சந்தேகத்த கிளப்பியிருக்கு… அப்ப இவ்வளவு நாளா அனுமதி வழங்குறதுலயும் கமிஷன் கலெக் ஷன் இருந்துச்சா… அதிகார மையங்களுக்கு இந்த கலெக் ஷன சரியா வாங்கித்தர்ற ஆள் கிடைக்காமத்தான் இயக்குநர் பதவிய நியமிக்காமலேயே இருக்காங்களான்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

via News J : https://ift.tt/1Mml4bg
Mediaஇரயில் விபத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபர்களது விவரங்கள் ஒடிசாவில் இதுவரை சேகரிக்கப்பட்டதில் தமிழ்நாட்டை சேர்ந்த எவரும் இந்த இரயில் விபத்தில் உயிரிழக்கவில்லை என்பது தெரியவருகிறது. மேலும், விபத்தில் காயமுற்று சிகிச்சை பெற்றுவரும் நபர்களது விபரங்களை இதுவரை பரிசீலனை செய்ததில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் யாரும் காயமுற்று சிகிச்சை பெறவில்லை என்ற விவரமும் தெரியவந்துள்ளது.இதுவரை சேகரிக்கப்பட்ட விபரத்தின் அடிப்படையில் தொடர்புகொள்ள இயலாத நிலையில் உள்ள கீழ்கண்ட 8 நபர்களது உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர், இவர்கள் குறித்த தகவல் அறிந்திருப்பின் மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு எண்களில் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மாநில அவசரகால செயல்பாட்டு மைய உதவி எண்கள் கட்டணமில்லாதொலைபேசி – 1070செல்பேசி – 9445869843

via News J : https://ift.tt/JC95sWg
Mediaமின்வெட்டு என்பது திமுகவின் பரிசாக தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது. இன்று காலை முதல் தற்போது வரை சென்னையில் மூன்று இடங்களில் தொடர் மின்வெட்டானது ஏற்பட்டு உள்ளது. திமுக தன் தேர்தல் வாக்குறுதியில் மின்வெட்டு வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறதா என்று தெரியவில்லை. கொடுத்த வாக்குறுதிகளைத் தவிர, மின்வெட்டு போன்ற பரிசுகள்தான் கிடைக்கிறது என்று மக்கள் புலம்பி வருகின்றனர்.  சென்னை நெசப்பாக்கம், சூளைமேடு, தட்டான்குளம் ஆகிய பகுதிகளில் நான்கு மணி நேரத்திற்கும் மேலான மின்வெட்டால் மக்கள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். இதனால் மின்சார வாரியத்தையும், தமிழகத்தை ஆளும் விடியா திமுக அரசையும் எதிர்த்து கோஷங்கள் எழுப்பினர்.மின்வெட்டிற்கு இந்த ஆட்சியில் ஏதேனும் தீர்வு கிடைக்குமா? என்று மக்கள் தங்களின் கோரிக்கையையும், வலியுறுத்தல்களையும் அறிவுறுத்தி வருகிறார்கள். கண்டுகொள்ளுமா இந்த அரசு? கண்டுகொள்ளுவாரா செந்தில்பாலாஜி? கடந்த அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழ்நாடு, திமுக ஆட்சியில் மின் குறை மாநிலமாக ஆகியிருப்பது இந்த அரசின் மிகப்பெரிய அலட்சிப் போக்கு என்று அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.சென்னை நெசப்பாக்கம். இரவு 4 மணி நேர மின் தடை. pic.twitter.com/wVWPnoPO0H— Savukku Shankar (@Veera284) June 4, 2023

via News J : https://ift.tt/cuVEXKa
Mediaஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது நாளை மறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாவதன் பொருட்டு இந்திய வீரர்கள் வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியானது நியூஸிலாந்து அணியிடம் படுதோல்வி அடைந்தது.தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் வெற்றிபெறுமா? என்கிற கேள்வி அனைவரின் மனதிலும் எழுகிறது. இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒரு விசயம் என்னவென்றால், ரோகித் சர்மா தான் விளையாடிய இறுதிப்போட்டிகளில் தோல்வி அடைந்ததே இல்லை. டி20, ஒருநாள், ஐபிஎல் என்று தான் சந்தித்த அனைத்து இறுதிப்போட்டிகளிலும் ரோகித் சர்மா கோப்பையை வென்றுள்ளார்.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஐசிசி | ICC officially launches World Test Championshipஎதிர் நின்று ஆடும் ஆஸ்திரேலியா அணியினைப் பொறுத்தவரை, டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவிற்கு இணையாக இருக்கிறது. கிரிக்கெட்டினை தன் தேசிய விளையாட்டாக கொண்ட ஆஸ்திரேலிய அணி இந்த இறுதிப்போட்டியில் முடிந்தமட்டிற்கு இந்திய அணியை வெல்லவே பார்க்கும். ஐந்து ஒருநாள் உலகக்கோப்பைகள், ஒரு டி20 உலகக்கோப்பைகள் என்று கிரிக்கெட்டில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தையே கட்டி எழுப்பி வைத்துள்ளனர்.ஆஸ்திரேலிய அணி விவரம் : டேவிட் வார்னர், மார்கஸ் ஹாரிஸ், லபுசேஞ்ச், ஸ்டீவன் ஸ்மித், மேட் ரென்ஷா, டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, கேமரூன் க்ரீன், மிட்செல் மார்ஸ், பேட் கம்மின்ஸ்(கேப்டன்), அலெக்ஸ் ஹேரி, ஜோஸ் இங்க்லிஸ், ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட், டோட் மர்பி.இந்திய அணி விவரம் : சுப்மன் கில், ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, புஜாரா, ஜடேஜா, சிராஜ், சூர்யகுமார், யெஸ்ஹஸ்வி ஜெஸ்வால், அக்சர் படேல், அஸ்வின், இஷான் கிஷன், ஸ்ரீகர் பரத், உதன்கட், முகேஷ் குமார், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், ருதுராஜ் கெய்க்வாட்.

via News J : https://ift.tt/H5Gu42N