News J
594 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaமாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஓட்டுநர்கள் நடத்துனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கமான தொமுச வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாளை சென்னை முழுவதும் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் 500 ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கேகே நகர் பணிமனை அண்ணா நகர் பாரிமனை உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் வரக்கூடிய பேருந்துகளை மீண்டும் இயக்காமல் திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை நிறுத்தி வருகிறது பேருந்து நிலையங்களில் அந்தந்த பணி மனைகளில் பேருந்துகளை நிறுத்திவிட்டு இயக்காமல் உள்ளனர் இதனால் அந்தந்த பேருந்து நிலையங்களில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.இதனால் சென்னைவாசிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். வேலைக்கு செல்பவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் போன்றவர்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். விடியா திமுக ஆட்சியைக் கண்டித்து மக்கள் அனைவரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.

via News J : https://ift.tt/VHYb5EK
Mediaதமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற விடியா திமுக அரசுக்கு எதிரான அதிமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு தன்னுடைய நன்றியை அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.Media Media

via News J : https://ift.tt/5QmkojT
Mediaவிடியா திமுக அரசை கண்டித்து தமிழகம் முழுக்க அதிமுக ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கும் நிலையில், முதல்வர் ஸ்டாலினை பதவி விலகச்சொல்லி பொதுமக்கள் கோஷமிட்டு இருப்பதால் விடியா அரசுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.முதல்வர் ஸ்டாலினே பதவி விலகு..முதல்வர் ஸ்டாலினே பதவி விலகு. இன்று . தமிழ்நாடு முழுக்க இந்த முழக்கம் தான்… அதிமுகவின் நிர்வாகிகள் தலைமையில் ஒட்டுமொத்த மாநிலமுமே இன்று திமுகவிற்கு எதிரான தங்கள் மனநிலையை வெளிப்படுத்தியிருக்கின்றனர். கடந்த வாரம் சென்னையில், ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாகச் சென்று புகார் வாசித்த அதிமுக இன்று மாநிலம் முழுக்க தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறது.கள்ளச்சாராய, விஷ சாராய மரணங்கள், பாலியல் வன்கொடுமைகள், ஊழல் முறைகேடுகள், சட்ட ஒழுங்கு சீர்கேடு ஆகியவைகளை கண்டித்து அதிமுக முன்னெடுத்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டதால் திக்குமுக்காடி இருக்கிறது திமுக… ஒட்டுமொத்த மாநிலமுமே திமுக அரசுக்கு எதிரான மனநிலைக்கு வந்துவிட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது இந்த ஆர்ப்பாட்டம்.ஆட்சிக்கு வந்த இரண்டே ஆண்டுகளில் இவ்வளவு எதிர்ப்புகளை சந்திக்கும் ஒரே கட்சி என்ற சாதனையைப் படைத்திருக்கிறது விடியா அரசு… ஒருபுறம், அப்பாவி மக்களின் உயிர் காவு கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்க, நாடக முதல்வர் ஸ்டாலினோ, சிங்கப்பூர் , ஜப்பான் என்று வெக்கேஷன் சென்றிருக்கிறார்… ஆளும் அரசின் அமைச்சர் வீட்டிலேயே பல நாட்களாக வருமான வரித்துறை ரெய்டு நடந்துகொண்டிருக்கிறது.. இன்னும் சில நாட்களில், ஆட்சிக்கே பங்கம் வரலாம் என்றெல்லாம் ஆரூடம் சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில், நீரோ மன்னன் ஃபிடில் வாசிப்பதுபோல ஜாலியாக இருக்கும் முதல்வரை பதவிவிலகச்சொல்லாமல், ஆஹா ஓஹோ என்றா புகழ்வார்கள் மக்கள்?ஊழல் குற்றச்சாட்டுகளிலும், சர்ச்சைகளிலும் சிக்கிய அமைச்சர்களை பாதுகாக்க கட்சிக்காரர்களை வைத்து, ப்ரஸ் மீட் கொடுப்பது.. அமைச்சர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அமைச்சர்களின் துறைகளை மாற்றி நாடகமாடுவது என்று, இதுவரை உறுப்படியாக எதையும் செய்யாமல், அப்படி என்னதான் செய்துகொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்?மக்களுக்காக நல்லாட்சி செய்வதாக சொல்லிக் கொள்ளும் ஸ்டாலினின் தலைமையிலான திமுக, இதுவரை செய்ததெல்லாம் மக்களுக்கு விரோதமானது தான் என்பது அதிமுக முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு பொதுமக்கள் தந்துள்ள ஆதரவே சாட்சியா? தமிழகம் முழுவதும் அதிமுக நடத்திய மாபெரும் போராட்டத்தாலும் , போராட்டத்தில் திரளான பொதுமக்களும் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலினை பதவி விலகச்சொல்லி கோஷமிட்டதும் திமுக அரசுக்கு கடுமையான அழுத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

via News J : https://ift.tt/1XrM5PJ
👍2
Mediaதுருக்கியைப் பொறுத்தவரை சமீப மாதங்களில் அதிகளவு உலக மக்களால் உச்சரிக்கப்பட்ட நாடாகும். அதற்கு காரணம் அங்கு நடந்தேறிய நிலநடுக்க துயரச் சம்பவம். கடந்த பிப்ரவரியில் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டு 50ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் மடிந்தனர். சரியான மீட்புப் பணிகளில் அதிபர் எர்டோகன் ஈடுபடவில்லை என்று அந்நாட்டு மக்கள் அவர் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.துருக்கியில் அதிபர் எர்டோகன் ஏற்கனவே 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செலுத்தி வருகிறார். 2003 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை பிரதமராக செயல்பட்ட அவர், அதற்கு பிறகு பிரதமர் பதவியைக் கலைத்துவிட்டு அதிபராக மாறினார். துருக்கியின் உச்சபட்ச பதவி அதிபர்தான். அப்போது அவர் சர்வாதிகார ஆட்சி நடத்துவதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன.இந்தத் தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் எர்டோகனுக்கு எதிராக அணி திரண்டனர். எதிர்க்கட்சிகளின் கூட்டணி பலம் வாய்ந்ததாக மாறியது. அவர்களின் சார்பாக துருக்கிய காந்தி என அழைக்கப்படும் கிளிக்டரோக்லுவை அதிபர் தேர்தலுக்கு நிறுத்தினர். மே மாதம் 15 ஆம் தேதி தேர்தலானது நடைபெற்றது. துருக்கியைப் பொறுத்தவரை வெற்றி பெறுவதற்கு 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் தேவை. கிளிக்டரோக்லு 44.79 சதவீத வாக்குகளும், எர்டோகன் 49.50 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். யாரும் பெரும்பான்மை பெறாததால் இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி இரண்டாவது சுற்று தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இந்தில் கடும் போட்டி ஏற்பட்டது. இறுதியில் எர்டோகன் 52 சதவீதம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். எதிர்க்கட்சிகளைவிட சுமார் 20 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். எர்டோகனின் 21 ஆண்டுகால ஆட்சிக்கும் முடிவு கட்ட முடியாமல் எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். வெற்றிபெற்ற எர்டோகன், ”தன்னை நம்பி மக்கள் இன்னும் 5 ஆண்டுகள் வாய்ப்பு அளித்துள்ளார்கள். மக்கள் என்மீது வைத்துள்ல்ள நம்பிக்கைக்கு  ஏற்ப செயல்படுவேன் என்று தெரிவித்தார்.  

via News J : https://ift.tt/Pp8gJ9V
Mediaபோக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்தும் நடவடிக்கையை நிறுத்தவில்லை என்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என அறிவித்திருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்துடன் தொழிலாளர் நல ஆணையம் நாளை பேச்சு வார்த்தை நடத்துகிறதுதமிழக அரசு போக்குவரத்து துறையில் தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 500 ஒப்பந்த பணியாளர்களும், கும்பகோணம் கோட்டத்தில் 100 பணியாளர்களும், மாநகரப் போக்குவரத்து கழகத்தில் 520 பணியாளர்களும் ஒப்பந்த அடிப்படையில் தமிழக போக்குவரத்து துறை பணியாளர்களை பணிக்கு அமர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கையை உடனே கைவிட கோரி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழிய சம்மேளனத்தினர், மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோரிடம், கடந்த மே மாதம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்திருந்தனர். குறிப்பாக போக்குவரத்து துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துவது என்று சட்டம் இல்லாத நிலையில், விதிகளை மீறி தமிழக போக்குவரத்து துறை ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை நியமிப்பதாக கூறி தான் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்திருந்தது. வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்து இருந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனமான சிஐடியு நிர்வாகிகளை நாளை தொழிலாளர் நலத்துறை ஆணையர் பேச்சுவார்த்தைக்கு அழைத்து உள்ளார். இதில் தொழிலாளர் நலத்துறை ஆணையம், சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

via News J : https://ift.tt/R9QVbLT
👍1
Mediaவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பிரபல பின்னணிப் பாடகி சின்மயி வலியுறுத்தியுள்ளார்.கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டை பின்னணிப் பாடகி சின்மயி தொடர்ந்து கூறி வருகிறார். பல பெண்கள் வைரமுத்தால் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தொடர்ந்து கூறி வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்பி ஆகியயோர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பாலியல் குற்றச்சாட்டுக்கள் எழும்போது, ஒவ்வொரு முறையும் நீங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறீர்கள். இந்தியா முழுவதும் இதுபோல் பெண்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் பக்கம் நிற்கிறீர்கள். இதுபோல், அரசியல் கட்சித் தலைவர்கள் பேசும்போது மாற்றம் வரும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. ஆனாலும், பாலியல் சுரண்டல்கள், தொல்லைகள் குறைந்தபாடில்லை. போக்சோ உள்ளிட்ட சட்டங்கள் இருந்தும் அனைத்து துறையிலும் பாலியல் குற்றச்சாட்டு எழத்தான் செய்கிறது. குறிப்பாக திரைத்துறையில் இன்று பாலியல் குற்றங்கள் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது.Mediaஉங்கள் நண்பர் மற்றும் ஆதரவாளர் கவிஞர் வைரமுத்துவின் மீது 17க்கும் மேற்பட்ட பெண்கள் புகாரளித்தும், உங்கள் அருகாமையில் அவர் மகிழ்ச்சியுடன்தான் இருக்கிறார். இதனால் அவர் குறித்து மேலும் பெண்கள் பேச முடியாதவாறு செய்கிறார். தமிழகத்தில் வேறு அரசியல்வாதிகளே இல்லை என்பதுபோல் அவரை தொடர்ந்து உங்கள் கட்சி முன்னிலைப்படுத்துகிறது. கிட்டத்தட்ட தமிழ் திரைத்துறையில் 5 ஆண்டுகள் வேலை செய்ய தடையுடன், நகரின் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அதற்காக போராடிக்கொண்டிருக்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

via News J : https://ift.tt/SefpzLr
Mediaஅடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி அறிவித்துள்ளார்.மதிமுக எப்போது வேண்டுமானாலும் உடையும் என்று அரசியல் நோக்கர்களால் ஆரூடங்கள் சொல்லப்பட்ட நேரங்களில் உடனடியாக ஒரு நடைபயணத்தை தொடங்குவதும் வைகோவின் இயல்பு… ஆனால் என்று தன்னை கொலைப்பழி சுமத்திய திமுகவுடனேயே கூட்டணி வைத்தாரோ… அன்றே வாரிசு அரசியலுக்கு வைகோவும் அடிமையாகி விட்டார். அதன் எதிரொலியாக, தனது மகன் துரைவையாபுரியை மதிமுகவின் தலைமைக் கழகச் செயலாளராக கொண்டு வந்தார். எந்த வாரிசு அரசியலுக்கு எதிராக கொந்தளித்தாரோ… அதே வாரிசு அரசியல் மதிமுகவில் தலைகாட்டத் தொடங்கியதும் கொஞ்ச நஞ்ச எதிர்ப்பார்ப்புடன் காலம் தள்ளிக் கொண்டிருந்த சீனியர்கள் இப்போது எதிர்ப்புக் குரல் காட்டத் தொடங்கியிருக்கின்றனர். வைகோவுக்காக உயிர் நீத்த அந்த 5பேரின் ஆன்மாக்கள் கூட இதனை ஏற்றுக் கொள்ளாது.அரசியலில் இருந்து விலகுகிறேன்'- திருப்பூர் துரைசாமி திடீர் அறிவிப்புவைகோ கோஷ்டி என்று சீனியர்களும், துரைவையாபுரி கோஷ்டி என்று இளைஞர்களும் உள்ளுக்குள் மோதிக் கொண்டு கட்சியை சுக்குநூறாகி வருகிறார்கள் என்னும் வாதங்களும் மதிமுகவினருக்குள் நிலவிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான், மதிமுக கூடாரத்தை கலைத்துவிடலாம் என்று மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி கடிதம் எழுதியிருக்கிறார். வைகோவின் சமீப கால நடவடிக்கைகளால், கட்சிக்கும், அவருக்கும், மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டுள்ளதாகவும், சர்ந்தர்ப்பவாத சுயநல அரசியலுக்கு, வைகோவும் அப்பாற்பட்டவர் இல்லை என்பதை கட்சியினர் அறிந்துள்ளதாகவும் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக, வைகோவின் உணர்ச்சிமிக்க பேச்சை நம்பி, வாழ்க்கையை இழந்த கட்சியினர், மேலும் மேலும் ஏமாற்றம் அடையாமல் இருக்க, கட்சியை, தாய்க் கட்சியான தி.மு.க.,வில் இணைத்து விடுவது சமகால அரசியலுக்கு சாலச்சிறந்தது என்றும் அந்தக் கடிதத்தில் கூறியிருந்தார். தற்போது தன்னுடைய அடிப்படை உறுப்பினர் பதவியையும் தூக்கி எறிந்துவிட்டு கட்சியைவிட்டு விலகியுள்ளார்.

via News J : https://ift.tt/eVPxyv0
Mediaகரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அலுவலகத்தில் இன்று வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கடந்த திங்களன்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து புகார் மனு கொடுத்ததன் எதிரொலியாக செந்தில்பாலாஜி சம்மந்தப்பட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை சோதனையானது ஐந்து நாட்களாக நடைபெற்று வருகிறது.அதன்படி இன்று அமைச்சர் செந்தில்பாலாஜியின் கரூர் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

via News J : https://ift.tt/izjmyas
Mediaகடந்த மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி இரவு உதவிப் பேராசிரியர் நியமனத்திற்கான அறிவிப்பு என்று ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.‌ அதில் பல குளறுபடிகள் இருந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணைய தளத்திலும் அறிவிப்பு இல்லை‌.மறுநாள் உயர் கல்வித் துறைச் செயலர் திரு.கார்த்திகேயன் அவர்கள் இது பொய்யான செய்தி என்றும் இன்னும் இரண்டு வாரத்தில் உண்மையான அறிவிப்பு வெளியாகும் என்றும் அறிவித்தார். இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் பல ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது.Mediaகடந்த 2012ஆம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டு 2015ஆம் ஆண்டு பணிநியமனம் செய்தார்கள். பிறகு 2019 ஆம் ஆண்டு மற்றுமொரு அறிவிப்பு வெளிவந்தது. இதை இந்த அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
எப்போதுதான் விடியும் என்று உதவிப் பேராசிரியர்கள் தங்களின் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

via News J : https://ift.tt/qidMBAv
Media16 ஆவது ஜ.பி.எல் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை த்ரில் வெற்றிப்பெற்றது.அகமதாபாத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் இறுதிப் போட்டியில் குஜராத், சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. சென்னை அணியினர் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். மேலும் தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியபோது, மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் டிஎல்எஸ் விதி படி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டு 171 ரன்கள் எடுத்தால் வெற்றி என சென்னை அணிக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் நள்ளிரவு 12.10க்கு போட்டி தொடங்கியது.இதையடுத்து அணியின் தொடக்க ஆட்டகாரர்களான ருத்துராஜ் – கான்வே ஜோடி சிறப்பான ஆட்டத்தை தொடங்கினர். இதனையடுத்து களமிறங்கிய ரகானே,துபே மற்றும் ஜடேஜா ஆகியோர் சிறப்பான ஆடி அணியை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றனர். இறுதியில் குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய சென்னை அணி, 5ஆவது முறையாக கோப்பயை கைப்பற்றியது. 

via News J : https://ift.tt/hFtv3rp
Mediaலண்டன் மாநகரில் தமிழக அமைச்சர்கள் திறந்து வைத்த பென்னிகுயிக் திருவுருவ சிலைக்கு செலுத்த வேண்டிய பணத்தை லண்டனில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவில்லை. இதனால் அவரது சிலை கருப்பு துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக வழக்கறிஞருமான இன்பதுரை குற்றம்சாட்டி உள்ளார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லை ஆட்சியரிடம் மனு அளித்த பின் இதனை அவர் தெரிவித்தார்.

via News J : https://ift.tt/wYV9TJW
Mediaசென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் சூர்யா நேற்று இரவு ஒரு மணி அளவில் கல்லீரல் பிரச்சனை காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி என்ற நோயாளியை மருத்துவ பரிசோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததாகவும் அப்பொழுது பாலாஜி தன் கையில் சொருகி வைக்கப்பட்டிருந்த குல்கோஸ் ஊசியினை அகற்றக்கோரி பயிற்சி மருத்துவரான சூர்யாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அங்கு அருகே வைக்கப்பட்டிருந்த மருத்துவ உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் கத்திரிக்கோலை கொண்டு சூர்யாவின் கழுத்தில் குத்தியுள்ளார் இதில் படுகாயம் அடைந்த மருத்துவர் சூர்யா,  ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.இந்நிலையில் பயிற்சி மருத்துவரின் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயிற்சி மருத்துவர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் மாணவர்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பு வருகிற காலங்களில் உறுதிப்படுத்தப்படும் எனவும் தற்பொழுது நடைபெற்ற சம்பவம் தொடர்பாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருந்த பாலாஜி கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறி மாணவர்களிடம் சமரசம் பேசியதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கலைந்து சென்றனர்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் ,பயிற்சி மருத்துவர்களின் கோரிக்கை விரைந்து நிறைவேற்றப்படும் எனவும் , இது தொடர்பாக சுகாதாரத் துறை அமைச்சரிடம் தெரிவித்திருப்பதாகவும் மேலும் மருத்துவமனை மருத்துவரின் பாதுகாப்பிற்காக கூடுதல் காவலர்கள் பணி அமர்த்தப்படுவார்கள் என அவர் தெரிவித்தார். வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் தடுக்கும் வகையில் அடுத்த கட்ட நடவடிக்கை ஆனது எடுக்கப்படும் என அவர் கூறினார்.ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் மூன்று மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தினால் அப்பகுதியில் சற்று பரபரப்பானது ஏற்பட்டது.

via News J : https://ift.tt/52S3bKp
Mediaமகாராஷ்டிரா மாநிலத்தின் ஸ்வச் முக் அபியான் திட்டத்தின் கீழ் புன்னகை தூதராக ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.மும்பையைப் பிறப்பிடமாக கொண்ட சச்சின் டெண்டுல்கர், தன் கிரிக்கெட் வாழ்நாளில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தவர். சிலகாலம் பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். தற்போது மகாரஷ்டிரா மாநிலத்தின் ஸ்வச் முக் அபியான் திட்டத்தின் கீழ் புன்னகை தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டிருப்பது கூடுதல் சிறப்பான தருணம் என்று இரசிர்கர்கள் தங்களின் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/p3bDr02
Media”கொடுக்கிற தெய்வம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்” என சொல்வார்கள். ஆனால் 100 கோடி கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாமல் தவித்து வருகிறார் கூலித்தொழிலாளி ஒருவர். என்ன நடந்தது? வாருங்கள் பார்க்கலாம்.வதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் கூலித்தொழிலாளி ஒருவர் ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆகி தனது கிராமத்தினரையே ஆச்சரியப்படுத்தியுள்ளார். ஒரே இரவில் பலகோடிகளுக்கு அதிபதி ஆனாலும் அந்த கோடிகளினால் மிகுந்த மன வேதனைக்கும் உள்ளாகி இருக்கிறார் கூலித்தொழிலாளி.மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் உள்ள பாசுதேப்பூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முகமது நசிருல்லா மண்டல். கூலித்தொழிலாளியான இவரது வங்கி கணக்கில் வெறும் ரூ.17 மட்டுமே இருந்த நிலையில், ஒருநாள் திடீரென அவரது வீட்டிற்கு வந்த சைபர் செல் துறையினர் அவரது வங்கி கணக்கில் ரூ.100 கோடி இருப்பதாகவும், அது எப்படி கிடைத்தது என அவர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறி வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர். அடேங்கப்பா 100 கோடியா? அதுக்கு எவ்ளொ சைபர் என்று கூட தெரியாதே என்று திக்குமுக்காடிப்போய் உள்ளார்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்று நினைத்து வருந்திக்கொண்டிருந்தாலும், தான் சம்பாதிக்காத பணம் தன் கைக்கு வராது என்ற உண்மையை புரிந்து கொள்ள சில காலம் பிடிக்கும்தானே!– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.

via News J : https://ift.tt/ofSwREV
Mediaகாற்று வேகம் தாங்காமல் மேற்குரையை பிரித்துக் கொண்ட அரசு மாநகர பேருந்துவின் புகைப்படம்தான் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் திசை தெரியாமல் திகைத்து நின்றனர்.மேலும் அரசு மாநகரப் பேருந்துகளில் மாநகரப் பேருந்தில் கூரைப்பிய்த்துக் கொண்டதால் சூறைக்காற்றில் நடுரோட்டில் பயணிகள் நின்று அவதிக்குள்ளாகினர். இதனால் சிறிது நேரத்திற்கு அப்பகுதியில் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.  திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மாதவரம் மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் தற்பொழுது சூறைக்காற்று வீசி வருவதால் தாழ்வான சில பகுதிகளில் வீட்டின் மேற்கூரை காற்றில் பிரிந்து சென்றது.

via News J : https://ift.tt/jVF2OuZ
Mediaசோறு என்ன பாடுபடுத்தும் தெரியுமா? கொலை கூடச் செய்ய வைக்கும்? நம்ப முடியவில்லையா… புதுச்சேரியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவத்தைப் பாருங்கள்.சோத்துக்காக நடந்த தகராறில் மதுபோதையில் தம்பியால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார் இவர். புதுச்சேரி உப்பளம் நேதாஜி நகர், முதல் குறுக்கு தெருவை சேர்ந்த 43 வயது ஜான்பியர் தான் தம்பி பிரான்ஸிசால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். ஜான்பியர் திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் வீட்டின் பின்புறம் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார். பிரான்சிஸ் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.கடந்த 23ஆம் தேதி மது அருந்தியபடி வீட்டில் இருந்த பிரான்சிஸுக்கும், அண்ணன் ஜான்பியருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பிரான்சிஸ் அண்ணனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். பலத்த காயம் அடைந்த ஜான்பியரை, பெற்றோர் புதுவை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். தகவலின் பேரில் ஒதியஞ்சாலை போலீசார், பிரான்சிஸ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் ஜான்பியர் இறந்த நிலையில், வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி, உப்பளம் துறைமுகம் பகுதியில் தலைமறைவாக இருந்தவரை பிடித்து விசாரித்தனர்.தனியார் ஜவுளி கடையில் வேலை செய்து வரும் ஜான்பியர், தனது சம்பளப் பணத்தை தனது குடும்பத்துக்கு வைத்துக் கொள்வதோடு பெற்றோருக்கு செலவுக்கு தருவதில்லையாம். அதே நேரம், பெற்றோர் வீட்டில் வந்து தினமும் உணவு எடுத்துச் செல்வதால், ஆத்திரம் அடைந்த தம்பி பிரான்சிஸ் அண்ணன் ஜான்பியரைக் கண்டித்துள்ளார். சம்பவத்தன்றும் சோறு எடுக்க வந்த ஜான்பியரை, மதுபோதையில் இருந்த பிரான்சிஸ் கண்டித்தது தகராறாகவே கத்தியால் குத்தியதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து, பிரான்சிஸை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.– புதுச்சேரி செய்தியாளர் சேரமனோகரன் மற்றும் ஆசாத். 

via News J : https://ift.tt/mckLgnA
madurai couple suicideதற்கொலை செய்து கொண்டவரின் உடல் மீது அமர்ந்து அகோரிகள் நடத்திய இறுதிச் சடங்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. சூலூரில் அரங்கேறியுள்ள அந்த விநோத சடங்கு குறித்து பார்ப்போம்.உடுக்கைகள் முழங்க, சடலத்தின் மீது அமர்ந்து அகோரி ஒருவர் பூஜை செய்த காட்சிதான் நீங்கள் பார்த்தது. சடலமாகக் கிடப்பது திருச்சியை சேர்ந்தவரும், தற்போது கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள குரும்பப்பாளையத்தில் வசித்து வந்தவருமான 32வயது மணிகண்டன் ஆவார். கோவையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்த மணிகண்டன், கோவை ராமநாதபுரத்தில் இருக்கும்பொழுது 8 வருடங்களுக்கு முன்பாக சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆண்குழந்தை உள்ளது. இந்த நிலையில் மணிகண்டனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் வேலை செய்யும் தூய்மைப் பணியாளர் டயானாவுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சரண்யா, புளியகுளம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் மணிகண்டனை அழைத்து அறிவுரை சொன்னபோதும், அவர் மனைவியை விட்டு விட்டு கடந்த ஒரு மாதமாக டயனாவுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் மே 27ஆம் தேதி டயானாவுக்கும் மணிகண்டனுக்கும் பிரச்சனை ஏற்படவே, மணிகண்டன் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.உடல் பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடலை எரியூட்டுவதற்காக சூலூர் மின்மயானத்துக்கு எடுத்து வந்துள்ளனர். அப்போது உயிரிழந்த மணிகண்டனின் சிறுவயது நண்பரான திருச்சியை சேர்ந்த அகோரி மணிகண்டன், தனது சிஷ்யர்களுடன் அங்கு வந்து உடலுக்கு பூஜைகள் செய்துவிட்டு, சடலத்தின் மீது அமர்ந்து தியானம் செய்தார்.காசியில் நடைபெறுவது போல சூலூரிலும் அகோரி செய்த விநோத பூஜைகள் அங்கிருந்தவர்களிடையே அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மணிகண்டனின் உடல் எரியூட்டப்பட்டது.– சூலூர் செய்தியாளர் நேச பிரபு மற்றும் ஆசாத்.

via News J : https://ift.tt/1ETkSfc
Mediaபொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் டிவிட்டர் பதிவு!ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான் அரித்தது என்று ஒரு காலத்தில் கணக்கு காட்டியவர்கள், 7000 டன் நெல்லுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?மக்கள் வரிப்பணத்தில் உல்லாசப் பயணம் சென்றிருக்கும் இந்த சர்க்கஸ் அரசின் முதல்வர் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு நெல் மூட்டைகள் மாயமாவதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், மாயமான 7000 டன் நெல் மூட்டைகளை மீட்க உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.ஒவ்வொரு நாளும் ஏமாற்றத்தை மட்டுமே தமிழக மக்களுக்கு பரிசளித்து வரும் இந்த விடியா திமுக ஆட்சியில், தற்போது
தர்மபுரியில் அரசு குடோனில் வைத்திருந்த 7,000 டன் நெல் மாயமாகி உள்ளதாக செய்திதாள்களில் வருவது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.சர்க்கரையை எறும்பு தின்றது, சாக்கை கரையான்…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 30, 2023

via News J : https://ift.tt/U6rvzkS
Mediaஜப்பான், சிங்கப்பூர் பயணம் முடிந்து வெறுங்கையோடு தமிழ்நாடு திரும்பும் முதல்வர் ஸ்டாலின், எதிர்கொள்ள இருக்கும் சவால்கள் என்னென்ன என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.கடந்த அதிமுக ஆட்சியில், முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் எதிரொலியாகவே ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பராமரிப்பு பூங்காவை 1000 ஏக்கர் பரப்பளவில் தொடங்க அடிக்கல் நாட்டி 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.அதே போன்று அதிமுக ஆட்சியில் 2015 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில்உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. திமுக ஆட்சியின்போது தமிழகத்தில் இருந்து பெட்டி கட்டிய பல்வேறு நிறுவனங்கள் உள்பட புதிய தொழில் நிறுவனங்களும், அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் தங்களின் தொழிற்சாலைகளைத் தொடங்கி லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தின.இவற்றையெல்லாம் பார்த்து மகிழ்ந்த தமிழக மக்கள் தான், திமுக ஆட்சியில் கடந்த ஆண்டு ஸ்டாலின் மேற்கொண்ட துபாய் சுற்றுப்பயணத்தை பார்த்து அதிருப்தி அடைந்தனர்.துபாய் பயணத்தினால் தமிழகத்துக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்பதே இன்னும் கண்ணுக்குத் தெரியாத நிலையில்தான், தொழில் முதலீட்டை ஈர்க்கிறேன் என்று கூறிவிட்டு சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு மீண்டும் ஒரு இன்ப சுற்றுலா சென்றிருக்கிறார் ஸ்டாலின்.அவரைப் பார்த்தேன், இவரைப் பார்த்தேன் என்று புகைப்பட விளம்பரங்களை மட்டுமே காட்டிக் கொண்டிருக்கும் ஸ்டாலின், எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுகளை ஈர்த்திருக்கிறார் என்ற கேள்விக்கு பதில் இல்லை. சிங்கப்பூரிலும், ஜப்பானிலும் ஸ்டாலின் சந்தித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர்களை, சென்னை கோட்டைக்கு வாருங்கள் என்று கூறினாலே, வந்துவிடுவார்கள். அப்படியிருக்க அங்கு சென்று சந்தித்ததன் பின்னணியில் தமிழக மக்களின் நலன் இல்லை… குடும்பத்தின் நலனும், பிடிஆர் கூறிய முப்பதாயிரம் கோடியுமே பிரதானம் என்கின்றனர் உள்விவகாரம் அறிந்தவர்கள்.இதோ 9 நாள் இன்பச் சுற்றுப்பயணம் முடிந்து தமிழகம் திரும்புகிறார் ஸ்டாலின்… ஆனால் அவர் தமிழகத்துக்காக என்ன செய்திருக்கிறார் என்ற கேள்வியே மக்கள் மன்றத்தில் எழுந்துள்ளது. அவர் என்னென்ன ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார் என்பது குறித்தும் கூட தெளிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை.இப்படி அரசுமுறை பயணமாக வெளிநாடு சென்று முதலீடுகளை ஈர்க்காமல், வெறுங்கையுடன் திரும்புகிறார் ஸ்டாலின்.
ஐ.டி ரெய்டால் திமுக அமைச்சரவையே கதிகலங்கி உள்ள நிலையில் நாடு திரும்பும் ஸ்டாலினுக்கு பெரும் தலைவலியையே அமைச்சர்களே கொடுக்கப் போகிறார்கள் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.


via News J : https://ift.tt/YIUgrVp
Mediaகண்ணியத்திற்கு உரிய காயிதே மில்லத் அவர்களின் 128 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக கழகத்தின் சார்பில் அவரது நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தும் விதமாக கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.காயிதே மில்லத் அவர்களின் பிறந்தநாளான ஜுன் மாதம் ஐந்தாம் தேதியில் அவரது நினைவிடம் அமைந்துள்ள திருவல்லிக்கேணி வாலஜா மசூதியில் அவருக்கான மரியாதை செய்யப்படும் என்று கழகப் பொதுச்செயலாளர் அவர்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.Media

via News J : https://ift.tt/H48Yri7