Mediaதமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவ கல்லூரி உட்பட 3 மருத்துவக் கல்லூரிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதற்கு காரணமாக, உரிய பயோமெட்ரிக் வருகை பதிவு இல்லாததுதான் என்று 3 மருத்துவக் கல்லூரிகளிலன் அங்கீகாரத்தை திரும்ப பெற இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் முடிவு செய்துள்ளது. இதனால் தலா 500 மருத்துவக் கல்வி இடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.பயோமெட்ரிக் வருகைப்பதிவு உட்பட பல்வேறு குறைபாடுகள் காரணமாக தமிழகத்தில் அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உட்பட 71 மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அனுமதியுடன் இயங்கி வருகிறது. இதில் 38 அரசு கல்லூரிகளில் 5225 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன , இதில் தற்போது மூன்று மருத்துவக் கல்லூரிகள் அதன் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தலா 500 எம்பிபிஎஸ் இடங்களை கொண்ட அரசு ஸ்டான்லி மருத்துவமனை சென்னை , திருச்சி அரசு கேஏபி விஸ்வநாதன் மருத்துவ கல்லூரி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி என மூன்று கல்லூரிகளுக்கு தற்போது இளங்கலை மருத்துவக் கல்வி வாரியம் அங்கீகாரத்தை திரும்பப் பெற முடிவு செய்து சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.சென்னையில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, திருச்சியில் உள்ள கே.ஏ.பி. விஸ்வநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆகிய மூன்று தமிழகக் கல்லூரிகளுக்கும், புதுச்சேரியில் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கும் (IGMC & RI) அபராதம் விதிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவக் கல்லூரிகள் அங்கீகாரத்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் இளங்கலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முடிவுக்கு எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தில் மேல்முறையீடு செய்து நடப்பாண்டு மருத்துவ கல்வி இடங்களை தக்க வைக்க தமிழக சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத் துறை சார்பில் தகவல் வெளியிட்டுள்ளது.
via News J : https://ift.tt/zSvPXta
via News J : https://ift.tt/zSvPXta
Mediaதமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சரும் வாரிசு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி ஆவார். இவரது சொத்துக்கள் அனைத்தையும் அமலாக்கத்துறை தற்போது முடக்கியுள்ளது. கிருத்திகா உதயநிதியின் அசையா சொத்துக்கள் 36.3 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் வங்கி கணக்கில் உள்ள 34.7 லட்சம் ரூபாய் முடக்கம்.கல்லல் குழுமம் உள்ளிட்டவைகளில் அமலாக்கத்துறை சோதனை ஈடுபட்டதைத் தொடர்ந்து தற்போது சொத்துக்களை முடக்கம் செய்துள்ளது. இதனை அமலாக்கத்துறை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.ED has provisionally attached various immovable properties across Tamil Nadu, on 25/5/2023 valued at Rs. 36.3 Crore and further attached Rs. 34.7 lakh available in the bank account of M/s Udayanidhi Stalin Foundation in the case of Kallal Group and others.— ED (@dir_ed) May 27, 2023
via News J : https://ift.tt/Bzmfb0k
via News J : https://ift.tt/Bzmfb0k
👍1
Mediaவிடியா அரசின் அலட்சியத்தால் 3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகி உள்ளது குறித்தும், அதனால் இளங்கலை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளது தொடர்பாகவும் அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுதி, முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களின் மருத்துவக் கனவினை, 3 அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகக் காரணமானதன் மூலம், தவிடு பொடியாக்கி உள்ளது நிர்வாகத் திறனற்ற திமுக அரசு.
மருத்துவக் கல்லூரிகளை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால் இன்று 500 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோயிருக்கிறது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட 71 மருத்துவக்கல்லூரிகள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் பறித்துள்ளது.கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது உள்பட இம்மூன்று மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைகளை தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியும், மருத்துவக் கல்வி இயக்ககம் அதை சரிசெய்யவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த 3 மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. இந்த அங்கீகாரம் ரத்து நடவடிக்கையால் மூன்று கல்லூரிகளிலும் உள்ள 500 எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களும் பறிபோய் மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளது.ஆட்சியில் வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று கூறிய திமுகவால் இன்று வரை அதனை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துரையின் அலட்சியத்தால் 3 மருத்துவக்கல்லூரிகளே பறிபோயிருக்கிறது. அந்த கல்லூரிகளில் மருத்துவர் படிக்கும் எண்ணத்துடன் நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் கனவுகளையும் நொறுக்கி போட்டுள்ளது.மாரத்தான் போட்டியில் பங்கேற்க வெளிநாடு செல்லும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரால் தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் கட்டமைப்புகளை சரி செய்யமுடியாத அலட்சியம், அதன் அங்கீகாரத்தை ரத்தாக்கி உள்ளது.3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்பதும், மருத்துவ கனவோடு இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை மீண்டும் திமுக அரசு சிதைத்திருப்பதும் தெளிவாகி உள்ளது. இதற்கு பிறகும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பாமல், மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு திமுக அரசு முயற்சிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
via News J : https://ift.tt/H9Zom7U
மருத்துவக் கல்லூரிகளை முறையாகக் கண்காணிக்கத் தவறியதால் இன்று 500 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் பறிபோயிருக்கிறது. தமிழகத்தில் 38 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்பட 71 மருத்துவக்கல்லூரிகள் மருத்துவக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில், தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக்கல்லூரி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக்கல்லூரி, தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி ஆகியவற்றின் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் பறித்துள்ளது.கைரேகை வழியான வருகைப் பதிவேட்டு கருவியில் விடுப்பு எடுத்த ஆசிரியர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படாதது, கண்காணிப்பு காமிராக்கள் சரியாக செயல்படாதது உள்பட இம்மூன்று மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளில் உள்ள குறைகளை தேசிய மருத்துவ ஆணையம் சுட்டிக்காட்டியும், மருத்துவக் கல்வி இயக்ககம் அதை சரிசெய்யவில்லை. இதனைத் தொடர்ந்து அந்த 3 மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையத்தின் இளநிலை மருத்துவக் கல்வி வாரியம் ரத்து செய்திருக்கிறது. இந்த அங்கீகாரம் ரத்து நடவடிக்கையால் மூன்று கல்லூரிகளிலும் உள்ள 500 எம்.பி.பி.எஸ். மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களும் பறிபோய் மாணவர்களின் மருத்துவக் கனவு சிதைந்துள்ளது.ஆட்சியில் வந்ததும் நீட் தேர்வை ரத்துசெய்வோம் என்று கூறிய திமுகவால் இன்று வரை அதனை நிறைவேற்ற முடியவில்லை. ஆனால் மக்கள் நல்வாழ்வுத்துரையின் அலட்சியத்தால் 3 மருத்துவக்கல்லூரிகளே பறிபோயிருக்கிறது. அந்த கல்லூரிகளில் மருத்துவர் படிக்கும் எண்ணத்துடன் நீட் தேர்வு எழுதியுள்ள மாணவர்களின் கனவுகளையும் நொறுக்கி போட்டுள்ளது.மாரத்தான் போட்டியில் பங்கேற்க வெளிநாடு செல்லும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரால் தனது துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக்கல்லூரிகளின் கட்டமைப்புகளை சரி செய்யமுடியாத அலட்சியம், அதன் அங்கீகாரத்தை ரத்தாக்கி உள்ளது.3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்துக்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என்பதும், மருத்துவ கனவோடு இருக்கும் தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை மீண்டும் திமுக அரசு சிதைத்திருப்பதும் தெளிவாகி உள்ளது. இதற்கு பிறகும் குற்றச்சாட்டுகளை திசை திருப்பாமல், மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரத்தை மீண்டும் பெறுவதற்கு திமுக அரசு முயற்சிக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் வலியுறுத்தலாக உள்ளது.
via News J : https://ift.tt/H9Zom7U
Mediaஅமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பரான கோகுல்ராஜ் என்பவரது வீட்டில் 3 நாளாக வருமானவரித் துறையினர் விடிய விடிய நடத்தி வந்த சோதனை நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.தமிழகத்தின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சராக இருக்கக்கூடிய செந்தில் பாலாஜி, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்ப்பதாகவும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலித்து அதன் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாயை சுருட்டி இருப்பதாகவும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மதுபான கூட்டங்களை உரிய அனுமதி இல்லாமல் இயக்கி அதன் மூலம் விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களின் தொகையை சுருட்டியது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, சென்னை, கரூர், கோவை உட்பட 40 இடங்களில் கடந்த 26 ம் தேதி முதல் வருமானவரித் துறையினர் சோதனையை தொடங்கினர். நேற்று மூன்றாவது நாளாக வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்றது. சென்னை அபிராமபுரம் மூன்றாவது தெருவில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி நெருங்கிய நண்பரான கோகுல்ராஜ் என்பவரது வீட்டில் மூன்று நாளாக விடிய விடிய வருமானவரி துறையினர் சோதனை மேற்கொண்டு நடத்தினர். கோகுல்ராஜ் சென்னை மண்டலத்துக்குட்பட்ட 900க்கும் அதிகமான மதுபான கூட்டங்களில் வசூல் ஆகும் வசூல் தொகையை ஒருங்கிணைத்து கரூர் நிறுவனங்களுக்கு கொண்டு செல்லும் பணியினை செய்து வருவதாகவும், இவரிடம் பல கோடி ரூபாய்க்கான பணப்பரிவர்த்தனை மற்றும் ஆவணங்கள் கொண்டு சென்றிருப்பதாக வருமானவரி துறையினர் தெரிகிறது.
via News J : https://ift.tt/1VtoTbN
via News J : https://ift.tt/1VtoTbN
Media அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம், விழுப்புரத்தில் அதிமுக எம்பி சிவி சண்முகம் அவர்களின் கண்டன உரை :இரண்டாண்டு காலத்திலே திமுக அரசு என்ன சாதித்து இருக்கிறது. புதிய வேளைவாய்ப்புக்களை உருவாக்கியிருக்கிறதா? படித்து வேலைதேடும் இளைஞர்களுக்கு என்ன செய்திருக்கிறது. மக்கள் வாழ்வாதாரத்திற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது. விவசாயிகளுக்கு என்ன செய்துள்ளது? விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய ஏதுவாக என்ன செய்திருக்கிறது. செஞ்சியில் விற்பதற்கு விவசாயிகள் நீண்ட நேரம் வெயிலில் நிற்க வேண்டியிருக்கிறது. அமைச்சராக பதவியேற்றிருக்கும் மஸ்தானுக்கு விவசாயிகள் மீது அக்கறையில்லை. அவர் செய்யும் வேலை சாராயம் விற்பது தான். இதனை நாங்கள் கூறவில்லை. ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் காட்சிப்படுத்துகின்றன. சாராய ஜமீன் மருகூர் ராஜாவுக்கு மஸ்தான் கேக் ஊட்டுகிறார். கேட்டால் யாரென்று தெரியாது என்கிறார்.திமுகவில் சேர்வதற்கு முன்பு மூன்று முறை குண்டாசில் கைது செய்யப்பட்டவர். கவுன்சிலராக அவர் மனைவி உள்ளார். அவர் மீதும் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் திமுகவின் மேற்பார்வையில் விழுப்புரம் மாநகரில் விற்கப்படுகிறது. தமிழ்நாட்டின் காவல்துறை சிறந்த காவல்துறை. ஆனால் அதனை ஸ்டாலின் கையாலாகத்துறையாக ஆக்கிவிட்டார். பொம்மை முதலமைச்சராக ஸ்டாலின் உள்ளார். சைலேந்திர பாபுக்கு என்ன வேலை? கொலை, கொள்ளை, கற்பழிப்பு, உளவுத்துறை கொண்டு பல நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் காலையில் எழுந்தால் சைக்கிள் ஓட்டுகிறார். முக ஸ்டாலின் வீட்டிலே எடுபுடி வேலை செய்துகொண்டிருக்கிறார். காவல்துறை முக ஸ்டாலின் குடும்பத்திற்கு ஏவல் வேலை செய்கிறது. இந்த காவல்துறை முதலிலேயே எல்லாவற்றையும் கவனித்திருந்தால் மரக்காணத்தில் கள்ளச்சாராயம் அருந்தி சாவுகள் நடந்தேறாமல் இருந்திருக்கும். டிஜிபி விளக்கம் கொடுத்துள்ளார் கள்ளச்சாராயம் அல்ல விஷச் சாராயம் என்று சொல்கிறார். அரளிவிதையை அரைத்து குடித்தால் என்ன, பால்டாயிலைக் குடித்தால் என்ன, விஷம் விஷம் தானே!ஸ்டாலினுக்கு ஒன்றும் தெரியாது, அவர் பொம்மை. சாராய ஆலைகளின் லாபம் கரூர் கேங் மற்றும் ஸ்டாலின் குடும்பத்திற்கும்தான் செல்கிறது. ஒரு ஆண்டுக்கு மட்டும் அதாவது கலாலுக்கு வரக்கூடிய வரி 10,000 கோடி ரூபாய் ஸ்டாலின் குடும்பத்திற்கும் செந்தில்பாலாஜிக்கும் செல்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் 220 பார் உள்ளது. ஒரு பாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சியர் சொல்கிறார். அப்போது என்கிருந்து குடிக்கிறார்கள் மதுப்பிரியர்கள். அந்த மதுபானங்கள் எந்த கணக்கில் எழுதப்பட்டது. ஆக இந்த அரசு, போலி மதுபானங்கள், கலால் வரி செலுத்தாமல் வந்த காரணத்தால் சத்தீஸ்கரில் அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதேபோல தமிழகத்தில் இரண்டு ஆண்டுகள் திமுக ஆட்சியில் ஏலம் விடாமல் முறைகேடாக நடத்தப்பட்ட வருவாய் இழப்பு உள்ளது. பத்துரூபாய் மந்திரி என்றால் செந்தில் பாலாஜிதான். அந்த பத்து ரூபாயில் இரண்டு ரூபாய் செந்தில் பாலாஜிக்கும், மீதம் எட்டு ரூபாய் திமுக குடும்பத்திற்கும் செல்கிறது. இது விசாரிக்கப்பட வேண்டும்.
via News J : https://ift.tt/QqXLcVA
via News J : https://ift.tt/QqXLcVA
Mediaஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி போட்டால் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து ஜிஎஸ்எல்வி எஃப் 12 விண்ணில் பாய்ந்தது.இன்று விண்ணில் பாய்ந்தது எப் 12 ராக்கெட். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில், சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையம் உள்ளது. அங்குள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின், ‘ஜி.எஸ்.எல்.வி. எப் 12’ ராக்கெட் மற்றும், ‘என்.வி.எஸ்., – 01’ செயற்கைக் கோளை சுமந்தபடி இன்று காலை, 10:42 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.இதற்கான ‘கவுன்ட் டவுன்’ நேற்று காலை, 7:21 மணிக்கு துவங்கியது. செயற்கைக்கோளின் எடை, 2,232 கிலோ. இது, கடல், வான்வழி, தரை வழி போக்குவரத்தின் வழிகாட்டி சேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும். ஜி.எஸ்.எல்.வி., – 12 ராக்கெட்டானது, ஜி.எஸ்.எல்.வி., வகையில் இஸ்ரோ அனுப்பும், 15வது ராக்கெட். பூமியில் இருந்து இந்த ராக் கெட், செயற்கைகோள், எரிபொருள் உட்பட மொத்தம், 420 டன் எடையை சுமந்து செல்ல உள்ளது.
via News J : https://ift.tt/TOYdn8l
via News J : https://ift.tt/TOYdn8l
Mediaஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம், அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி அவர்கள் எழுச்சியுரைஎதுவுமே செய்யாத ஆட்சியின் திமுக ஆட்சி. எதுவும் தெரியாத முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்தியாவிலேயே முதன்மையான முதலமைச்சர் என்று சொல்கிறார்கள். எதில் முதன்மை என்று தெரியவில்லை. 30000 கோடி கொள்ளையடிப்பதில் தான் முதன்மை இவர்கள். இந்த கூட்டம்தான் திமுகவிற்கு சாவுமணி. முன்னாள் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உண்மையைத் தான் பேசுவார். அதனால்தான் துறையை மாற்றிவிட்டார்கள்.ஒரு லோடு மண் சொந்த இடத்தில் எடுத்தால் ஸ்டாலினின் ஆட்கள் வந்துவிடுவார்கள். நம்முடைய கனிம வளத்தை கேரளாவிற்கு கடத்துகிறார்கள் திமுகவினர். திமுகவிற்கு உழைத்தவர்கள் ரோட்டில் தான் இருக்கிறார்கள். திமுகக்காரர்கள் திமுகவை விட்டு ஒதுங்கி அண்ணா திமுகவில் வந்து சேர்கிறார்கள். அவர்களுக்கே தெரிகிறது எது சரியான கட்சி என்று. முதலமைச்சராக இருக்கும்போது எடப்பாடியார் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்து பல மாணவர்களின் மருத்துவக் கனவை நினைவாக்கினார். ஆனால் இப்போது 500 இடங்களுக்கான மருத்துவ சீட்டை காப்பாற்ற முடியவில்லை. சிசிடிவி கேமாரா, பயோமெட்ரிக் இல்லை என்று மூன்று அரசு மருத்துவக்கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்தாகியுள்ளது. மருத்துவ சீட்டை காப்பாற்ற வக்கில்லாத அரசு நீட்டை ஒழிக்கப்போகிறதா?ஆர்.எஸ்.புரம் சப் இன்ஸ்பெக்டரை திமுகக்காரன் அறைகிறான். பொதுக்கூட்டத்தில் காவல்துறையை சேர்ந்த பெண் போலிஸ்காரர்களை மானபங்கம் படுத்துகிறான் திமுகக்காரன். கள்ளச்சாராய சாவுகள் பெருகிவிட்டது. நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருக்கிறார் முதலமைச்சர். எந்த நலத்திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சொத்துவரி, பால்விலை, மின்சாரம் ஆகியவற்றின் வரிகளை அதிகப்படுத்தி விட்டது திமுக அரசு. வெளிநாடுகளுக்கு சென்றது முதலீடுகளை ஈர்க்கவா? அல்ல 30 ஆயிரம் கோடியை முதலீடு செய்யவா என்று எடப்பாடியார் கேட்டுள்ளார். வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடியார் வெற்றி பெற்று மீண்டும் முதல்வர் ஆவார். இந்த ஆட்சியை நாம் வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.முதியவர் பென்சன் அனைவருக்கும் கொடுத்தோம். ஆனால் அதனை ரத்து செய்தது திமுக. வயதானவர்களின் சாபம் சும்மா விடுமா? எட்டு மணி நேரம் வேலையை 12 மணி நேரமாக மாற்றினார். மீண்டும் அதை திருப்பி வாங்கிவிட்டு, ரத்து செய்ததை பெருமையாக பேசுகிறார். அடுத்து வரும் பாராளுமன்றத் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பதும் வெல்வோம்.
via News J : https://ift.tt/XcBDmzr
via News J : https://ift.tt/XcBDmzr
Mediaஅதிமுக கண்டன ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எழுச்சியுரை! திமுக ஆட்சி முடிவுக்கு வரப்போகிறது. தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகிறோம். அதிமுக ஆட்சி இருக்கும் வரை எந்த தீய சக்தியும் தமிழகத்தில் நுழையவில்லை. கட்டப்பஞ்சாயத்து, கள்ளச்சாராயம் போன்றவை அம்மாவின் ஆட்சிகாலத்தில் வழக்கொழிந்து போனது. ஆனால் திமுக ஆட்சியில் இது பெருக்கெடுத்துள்ளது. அத்திக்கடவு- அவினாசி திட்டம் போன்ற திட்டத்தை அதிமுக கொண்டுவந்தது. ஆனால் திமுக அதனை தடுத்துவிட்டது.2026 ஆம் தேர்தலில் அதிமுக பெரிய வெற்றிப் பெற்று திமுகவை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்றும். கள்ளச்சாராய சாவுகள், பாலியல் அத்துமீறல்கள், கொள்ளை, கொலை என்று சட்ட ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது.
via News J : https://ift.tt/j4B1E2P
via News J : https://ift.tt/j4B1E2P
Mediaதிருப்பூர்ல அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை திறந்துவைத்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, திருப்பூர், நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்கள்ல, மத்திய அரசின் ஒப்புதலோடு செவிலியர் பயிற்சி கல்லூரிகள் அமைக்கப்படும் என்று கூறியிருந்தார். ஒவ்வொரு கல்லூரிகளுக்கும் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று சொல்லியிருந்தார். ஏற்கனவே, தேர்தல் வாக்குறுதியில மாவட்டம் தோறும் மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முக ஸ்டாலின் சொன்னார். 2 வருட ஆட்சியில் எத்தனை மருத்துவக்கல்லூரிகள் புதியதாக தொடங்கினார்கள் என்று பார்த்தால் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டவைகள்தான் பெரும்பாலும் தொடங்கி வைத்து ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.இப்போது மாவட்டம் தோறும் செவிலியக்கல்லூரி அமைப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள். ஏற்கனவே சென்னை ஸ்டான்லி, திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம், தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரிகள் ஆகியவற்றீன் அங்கீகாரத்தை தேசிய மருத்துவ ஆணையம் ரத்து செய்துள்ளது. அதனை மீட்பதற்கான எந்தவித நடவடிக்கையும் எடுத்தது போல தெரியவில்லை. இப்படி இருக்கிற விஷயங்களை காப்பாற்ற தெரியாமல் புதியதாக செய்கிறோம் என்று கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதையாகத்தான் திமுக செய்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.
via News J : https://ift.tt/HYFbsto
via News J : https://ift.tt/HYFbsto
Mediaதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக,29.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.30.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.31.05.2023 முதல் 02.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.5 districts in Tamil Nadu to get rains today | Latest News India - Hindustan Timesஅதிகபட்ச வெப்பநிலை:29.05.2023 மற்றும் 30.05.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.குறிப்பு: அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):சிவகங்கை, எலந்தகுட்டை மேடு (ஈரோடு) தலா 4, குப்பணம்பட்டி (மதுரை), ஹரூர் (தருமபுரி), பேரையூர் (மதுரை), சின்னார் அணை (கிருஷ்ணகிரி), கரியகோவில் அணை (சேலம்), திருக்கோவிலூர் (கள்ளக்குறிச்சி), கிருஷ்ணகிரி, முதுகுளத்தூர் (ராமநாதபுரம்) தலா 3, KRP அணை (கிருஷ்ணகிரி), தளி (கிருஷ்ணகிரி), சூளகிரி (கிருஷ்ணகிரி), ராயக்கோட்டை (கிருஷ்ணகிரி), கயத்தாறு (தூத்துக்குடி), ஈரோடு (ஈரோடு), கிருஷ்ணாபுரம் (பெரம்பலூர்) தலா 2, உதகமண்டலம் (நீலகிரி), சின்னக்கல்லாறு (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்), பேனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), அறந்தாங்கி (புதுக்கோட்டை), வீரகனூர் (சேலம்), தென்பரநாடு (திருச்சி), ஆத்தூர் (சேலம்), ஆவுடையார்கோயில் (புதுக்கோட்டை), நாலுமுக்கு (திருநெல்வேலி), சின்கோனா (கோயம்புத்தூர்), கல்லட்டி (நீலகிரி), ராமநாதபுரம், வால்பாறை PAP (கோயம்புத்தூர்), கங்கவல்லி (சேலம்), கயத்தாறு ARG (தூத்துக்குடி), தண்டராம்பேட்டை (திருவண்ணாமலை), மாரண்டஹள்ளி (தருமபுரி), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்) தலா 1.மீனவர்களுக்கான எச்சரிக்கை:30.05.2023 மற்றும் 31.05.2023: இலட்சதீவு பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் மற்றும் தென் தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.01.06.2023 மற்றும் 02.06.2023: மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணவும்.
via News J : https://ift.tt/rUi3TZ2
via News J : https://ift.tt/rUi3TZ2
Mediaதிருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே மதுப்பிரியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்க மறுத்த டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். செங்கம் அடுத்த புதுப்பட்டு செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த நிலையில் இங்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை கொடுத்து மதுபானம் வாங்க முயன்றுள்ளார். அப்போது டாஸ்மாக் ஊழியர் அதனை வாங்க மறுக்கவே, மதுப்பிரியர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மதுப்பிரியரை சமாதானப்படுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
via News J : https://ift.tt/X1jTCFU
via News J : https://ift.tt/X1jTCFU
Mediaவசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவதுபோல ப்ளூடூத் மாட்டி தேர்வு எழுதிய நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ளது. ப்ளூடூத், பட்டன் கேமரா சகிதம் தேர்வெழுத சென்ற வசூல் ராஜா குறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் எந்திரன் திரைப்படங்களில் பலரையும் சிரித்து ரசிக்க வைத்த இந்த காட்சிகள் நிஜத்திலும் அரங்கேறியுள்ளது. டிஎன்பிஎஸ்சி சார்பில் பொறியியல் துணை சேவை பணியிடங்களுக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை உள்ள தேர்வு மையத்தில் ஆயிரக்கணக்கானோர் தேர்வெழுதினர்.தேர்வு தொடங்கிய சிறிது நேரத்தில் தேர்வு அறையில் இருந்த இளைஞர் ஒருவர் தனக்கு தானே பேசிக் கொண்டிருந்தார். அவரது நடவடிக்கைகளில் சந்தேகமடைந்த தேர்வுக் கண்காணிப்பாளர் அவரை மீண்டும் சோதனையிட்டுள்ளார். அப்போது அந்த இளைஞரிடம் பட்டன் கேமரா, ப்ளூடூத், டிரான்ஸ்மிட்டர் என நவீன சாதனங்கள் அனைத்தும் இருப்பது கண்டு கண்காணிப்பாளர் அதிர்ந்தார்.இதுகுறித்து புதுக்கோட்டை நகர போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் தில்லமுல்லு இளைஞரைக் கைது செய்து அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர், புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் ஊகான்வயல் பகுதியைச் சேர்ந்த தர்மர் என்பது தெரியவந்தது. ஈரோட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் தர்மர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகியுள்ளார்.தேர்வில் தன்னால் தேர்ச்சி பெற முடியாது என்பதை உணர்ந்த தர்மர் தில்லாலங்கடி வேலை செய்து பாஸ் பண்ண முடிவு செய்தார். இதுதொடர்பாக கல்லூரி நண்பரான பரணிதரனிடம் சேர்ந்து ஆலோசித்துள்ளார். பின்னர் இருவரும் எந்திரன், வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் சீட்டிங் செய்ய முடிவு எடுத்து இந்த தில்லமுல்லு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.இவர்களின் பிளான் படி தர்மர் தனது சட்டைப் பையில் பட்டன் கேமரா, டிரான்ஸ்மிட்டர் வைத்துக் கொண்டும், காதில் ப்ளூடூத் மாட்டி தேர்வறைக்குள் செல்வதும், பின்னர் பட்டன் கேமரா மூலம் வினாத்தாளை காண்பித்து அதை வெளியே இருந்து பரணிதரன் பார்த்து அதற்குரிய பதிலை கூறுவதும், அதை ப்ளூடூத் இயர்பட்ஸ் மூலம் தேர்வறைக்குள் இருக்கும் தர்மர் கேட்டு எழுதுவது என பக்காவான ஸ்கெட்ச் போடப்பட்டது.இதேபோல, தேர்வு மைய சோதனைகள் அனைத்தையும் கடந்து அறைக்குள் சென்ற தர்மர், சிக்னல் சரியில்லாத காரணத்தால் கொஞ்சம் சத்தமாக பேசியபோது சிக்கிக் கொண்டார். தற்போது தர்மரை கைது செய்துள்ள போலீஸார், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளி பரணிதரனை தேடி வருகின்றனர்.மாநில அளவில் முக்கியமான டிஎன்பிஎஸ்சி தேர்வில் இளைஞர் ஒருவர் அத்தனை சோதனைகளையும் கடந்து தில்லமுல்லில் ஈடுபட்ட சம்பவத்தின் மூலம் தேர்வின்போது மேற்கொள்ளப்படும் சோதனைகளின் லட்சணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.– செய்தியாளர் ராஜேஷ் மற்றும் சித்தார்த்.
via News J : https://ift.tt/a2ozm1j
via News J : https://ift.tt/a2ozm1j
Mediaஅக்னி நட்சத்திரம் முடிந்தபோதிலும் தொடர்ந்து கொளுத்தும் கோடை வெயிலால் அவதிக்குள்ளாவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.தமிழகம் முழுவதும் தற்போது கோடை கத்திரி வெயில் சுட்டெரித்து வருகிறது. குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வருகிறது. கடந்த மே 4-ந் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கினாலும், வெப்பத்தின் தாக்கம் பெருமளவில் தெரியாமலேயே இருந்தது. இதனால் மக்கள் சற்று பெருமூச்சு விட்ட நிலையில், கடந்த சில நாட்களாக கத்தரி வெயிலின் கோரத்தாண்டவம் ஆடியது. அதுவும் கடந்த வாரம் மூன்று நாட்கள் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் வெயில் சதம் அடித்தன.வெயிலின் தாக்கம் அதிகளவில் இருப்பதால் முதியோர், குழந்தைகள் அதிகளவில் வெளியே செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதுவும் குறிப்பாக பகல் 12 மணி முதல் 3 மணி வரையில் வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டிருந்தது.Maximum temperature set to rise by 2 to 3 degree Celsius in Tamil Nadu in coming daysவெயிலின் தாக்கத்தை தணிக்க சாலையோர இளநீர், கம்பங்கூழ், மோர், தர்பூசணி உள்ளிட்ட கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகளவில் இருப்பதைக் காண முடிகிறது. வெயிலின் தாக்கம் தாங்காமல் குழந்தைகளுக்கு வேர்க்குரு, அலர்ஜி உள்ளிட்டவை ஏற்பட்டு மிகவும் சிரமப்படுவதாக குடும்பத் தலைவிகளும், ஏசி பயன்பாடு அதிகளவில் இருப்பதால் மின்கட்டணமும் மாத பட்ஜெட்டில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதாக குடும்பத் தலைவர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.அக்னி நட்சத்திரம் நிறைவு பெற்ற நாளில் தமிழகத்தின் 13 மாவட்டங்களில் வெயில் சதத்தை கடந்துள்ளது. அக்னி நட்சத்திரம் முடிந்திருந்தாலும் பொதுமக்கள் வெளியே செல்லும் போது குடை, தொப்பி அணிந்து செல்லவும், அதிகளவில் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து உள்ள பொருள்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
via News J : https://ift.tt/8u79jal
via News J : https://ift.tt/8u79jal
Mediaகடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே “150 வகை பலா, 150 விதமான சுவை” என்ற தலைப்பில் மாபெரும் பலா திருவிழா நடைபெற்றது. பத்திரக்கோட்டையில் நடைபெற்ற இந்த திருவிழாவில் தமிழ்நாடு மட்டுமன்றி புதுச்சேரி உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது பண்ருட்டி பலா, ஆயிரம் காய்ச்சி பலா, செந்தூரம் பலா, மிருது பலா உட்பட 150 வகையான பலாப்பழங்கள் காட்சிப்படுத்தப்பட்ட நிலையில் ஏராளமானோர் தங்கள் குடும்பத்துடன் பார்வையிட்டு கண்டுகளித்தனர். மேலும் ஏராளமான பெண்கள், பலாப்பழத்தில் சிப்ஸ், ஜூஸ் உள்ளிட்ட உணவு பொருட்களை சமைத்து அசத்தினர்.
via News J : https://ift.tt/ymKPk4n
via News J : https://ift.tt/ymKPk4n
Mediaதேனமர் பொழில் கொளாலை விளைசெந்நெல் – துன்னி
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே.என்ற தேவாரப் பாடல் ஒலிக்க புதிய செங்கோல் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பொருத்தப்பட்டுள்ளது.நேற்று காலை 7:30 மணிக்கு பிரதமர் மோடி காந்திசிலையை வணங்கினார். பின் தமிழக ஆதினங்கள் தமிழ் திருமுறைகளை ஓதினார்கள். தமிழ் ஆதினங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிறகு செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் எடுத்துச் சென்றார். அப்போது அரோகரா என்று முருக வழிபாடு பாடப்பட்டது. மேலும் சைவ திருமுறைகள் 2ஆம் திருமுறையில் உள்ள மந்திரமாவது நீறு பாடலும், 7ஆம் திருமுறையில் உள்ள அடியார்க்கு அடியார் பாடலும், கோளறு பதிகத்திலுள்ள வேயுறு தோளி பங்கன் பாடலும் பாடப்பட்டது.
via News J : https://ift.tt/OMDwiWj
வளர் செம்பொன் னெங்கு (ம்) திகழ
நான்முக னாதியாய பிரமாபுரத்து
மறை ஞான ஞான முனிவன்தானறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆனசெல் மாலையோதும் அடியார்கள் வானில்
அரசாள் வராணை நமதே.என்ற தேவாரப் பாடல் ஒலிக்க புதிய செங்கோல் நாடாளுமன்றத்தில் நேற்றுப் பொருத்தப்பட்டுள்ளது.நேற்று காலை 7:30 மணிக்கு பிரதமர் மோடி காந்திசிலையை வணங்கினார். பின் தமிழக ஆதினங்கள் தமிழ் திருமுறைகளை ஓதினார்கள். தமிழ் ஆதினங்களிடம் ஆசீர்வாதம் வாங்கிய பிறகு செங்கோலை புதிய நாடாளுமன்றத்திற்குள் எடுத்துச் சென்றார். அப்போது அரோகரா என்று முருக வழிபாடு பாடப்பட்டது. மேலும் சைவ திருமுறைகள் 2ஆம் திருமுறையில் உள்ள மந்திரமாவது நீறு பாடலும், 7ஆம் திருமுறையில் உள்ள அடியார்க்கு அடியார் பாடலும், கோளறு பதிகத்திலுள்ள வேயுறு தோளி பங்கன் பாடலும் பாடப்பட்டது.
via News J : https://ift.tt/OMDwiWj
Mediaவிடியா திமுக அரசு மக்களை பற்றி கவலைப்படாமல், கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளதாக முன்னாள் அமைச்சர் தங்மமணி விமர்சித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் பூங்கா சாலையில் விடியா திமுக அரசை கண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டில் டாஸ்மாக் தொடர்பாக விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது என்றும் அதன் கூட்டணி கட்சிகளே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும், திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினார். மேலும் இந்த அரசு மக்களை பற்றி கவலைப்படாமல், கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக வைத்துள்ளது என காட்டமாக தெரிவித்தார்.
via News J : https://ift.tt/m09r7OZ
via News J : https://ift.tt/m09r7OZ
Mediaதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதால் விடியா முதல்வர் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் சார்பில் வாடிப்பட்டி மந்தை திடலில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய எதிர்க்கட்சி துணைத்தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயக்குமார், தமிழகத்தில் 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது எனவும் இதனால், மருத்துவ மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது எனவும் குற்றம்சாட்டினார். மேலும் மக்கள் மீது அக்கறை இன்றி விடியா முதல்வர் சுற்றுலா சென்றுள்ளார் என விமர்சித்தார். தொடந்து பேசிய அவர், கள்ளச்சாராய உயிரிழப்புகளுக்கு தார்மீக பொறுப்பேற்று விடியா அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
via News J : https://ift.tt/pm2xBqG
via News J : https://ift.tt/pm2xBqG
Mediaபாச்சுவும் அற்புத விளக்கும் திரைப்படமானது மலையாளத்தில் வெளிவந்த ஒரு ஃபீல் குட் திரைப்படமாகும். ஃபகத் ஃபாசில் மற்றும் அஞ்சனா போன்றவர்கள் நடித்து மலையாள சினிமா உலகில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.சாதாரண பார்மசி கடை வைத்திருக்கும் இளைஞனாக பகத் பாசில் தோன்றுகிறார். நீண்ட நாள் திருமணம் ஆகாத அவருக்கு வரன் தேடிக்கொண்டு இருக்கிறார்கள் வீட்டார்கள். எங்கு பெண் தேடி சென்றாலும் அது அவருக்கு பாதகமாகவே முடிகிறது. அவரது ஃபார்மசி இருக்கும் இடத்தின் முதலாளி ஒரு வேலையை செய்து முடிக்குமாறு ஃபகத் பாசிலிடம் கூறுகிறார். அதற்கு சம்மதித்து அந்த வேலையில் ஈடுபடுகிறார். முதலாளியின் அம்மா கேரளாவில் உள்ளார், அவரை மும்பைக்கு ரயில் வழியாக கூட்டிவர வேண்டும். இதுதான் ஃபாசிலுக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். இதனை திறம்பட முடித்தாரா இல்லையா என்பதே மீதிக்கதை.மலையாள சினிமாக்கள் என்றாலே ஒரு எதார்த்த உலகிற்கு நம்மை இட்டு செல்லும். அதனைத் திரைப்படம் நிரூபித்துள்ளது. டாஸ்க்கை நிறைவேற்ற சென்ற இடத்தில் முதலாளியின் அம்மா ஒரு டாஸ்க் தருகிறார். அது ஒரு ஏழை மாணவியின் படிப்பு சம்பந்தப்பட்ட டாஸ்க்காக மாறுகிறது. அவள் படிப்புப்பு என்ன ஆனது? தன்னுடைய ஃபார்மசியை சொந்தமாக்கினாரா என்று இரண்டாம் பாதி கதை நீள்கிறது. இந்தத் திரைப்படத்தின் வெற்றியென்பது, சீரியஸாக கொண்டு செல்லாமல் நகைச்சுவையாக இத்திரைப்படத்தை கொண்டு சென்ற நேர்த்திதான். ஜஸ்டின் பிரபாகரனின் இசை துள்ளல். ஷரன் வேலாயுதனின் ஒளிப்பதிவு குளிர்ச்சி. இயக்கமும் எடிட்டிங்கும் அகிலன் சத்யன் செய்திருப்பதால், அதாவது இயக்குநரே எடிட்டிங்கில் இறங்கியிருப்பதால் கூடுதல் பலம்.
via News J : https://ift.tt/wzhl1ER
via News J : https://ift.tt/wzhl1ER
Mediaமாநகரப் போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவன ஓட்டுனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. மாநகர போக்குவரத்து கழகத்தில் தனியார் நிறுவனம் சார்பில் ஓட்டுநர்கள் நடத்துனர்களை நியமிப்பதை கண்டித்து திமுக தொழிற்சங்கமான தொ.மு.ச வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாளை சென்னை முழுவதும் உள்ள மாநகர போக்குவரத்து கழக பணிமனைகளில் பணிபுரிவதற்காக தனியார் நிறுவனம் சார்பில் 500 ஓட்டுநர்களை தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட உள்ள நிலையில் எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் தற்போது வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கேகே நகர் பணிமனை அண்ணா நகர் பாரிமனை உள்ளிட்ட பல்வேறு பணிமனைகளில் வரக்கூடிய பேருந்துகளை மீண்டும் இயக்காமல் திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை நிறுத்தி வருகிறது பேருந்து நிலையங்களில் அந்தந்த பணி மனைகளில் பேருந்துகளை நிறுத்திவிட்டு இயக்காமல் உள்ளனர் இதனால் அந்தந்த பேருந்து நிலையங்களில் மக்கள் பேருந்துகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.– ராம்குமார், செய்தியாளர்
via News J : https://ift.tt/u50qOPx
via News J : https://ift.tt/u50qOPx
Mediaஅமைச்சர்.மனோ தங்கராஜ் பிரதமரின் புகைப்படத்தை முகநூலில் பதிவு செய்து தரகுறைவாக விமர்சனம் செய்துள்ளதாக சுட்டிக்காட்டி இதற்கு நடவடிக்கை எடுக்க கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையினருக்கு ஆன்லையின் மூலம் புகார்-மேலும் அமைச்சர் முகநூலில் பதிவு செய்த அந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் ஈஷா மையத்தில் நாகருக்கு பால் ஊற்றிய புகைப்படங்கள் மற்றும் அவரது பழைய குறிப்புகளை பதிவு செய்து கமண்டில் தெரிவித்திருந்தது வைரலாகிய நிலையில் தற்போது அமைச்சரின் முகநூலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/bqhLZzU
via News J : https://ift.tt/bqhLZzU