News J
594 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaநியூஸ் ஜெ செய்தி எதிரொலியாக சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.விடியா ஆட்சியில் சென்னையில் பெரும்பாலான இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை நடைபெற்று வருகிறது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் தொழிலாளர்கள் நிறைந்த பகுதிகள் என பல்வேறு இடங்களில் இந்த லாட்டரி சீட்டு விற்பனையால் தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் நியூஸ் ஜெ செய்தியின் எதிரொலியால் சென்னை வடபழனி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்தவர்கள் 12 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்த 4 செல்போன்கள், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள், பில் புத்தகம் ,15 ஆயிரத்து 750 ரூபாய் ரொக்கப் பணம் ஆகியவைகளை பறிமுதல் செய்தனர்.

via News J : https://ift.tt/6nI08fo
Mediaஆபாச வீடியோவை காட்டி மிரட்டி பேராசிரியைக்கு காவல்துறை இன்ஸ்பெக்டர் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அவருக்கு மேலும் சில காவல்துறை அதிகாரிகளும் உடந்தையாக இருந்திருக்கின்றனர். இதனால் மன உளைச்சளுக்கு ஆளான பேராசிரியை நீதிகேட்டு அலையாய் அலைந்து கொண்டிருக்கிறார்.பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் காவல்துறை உயரதிகாரிகளையும் உலுக்கி எடுத்துக் கொண்டிருக்கிறது. இன்ஸ்பெக்டரில் தொடங்கிய இந்த விவகாரம் காவல்துறை உயரதிகாரிகள் வரை நீண்டிருக்கிறது.சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கும் டியூஷன் எடுத்து வருகிறார். இந்த நிலையில்தான் திருவண்ணாமலையை சேர்ந்த உறவினரான ஆண்டனி என்பவர் பேராசிரியை வீட்டில் தங்கியிருக்கிறார். அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். இதனை செல்ஃபோனில் வீடியோவாக எடுத்தவர் அதனை பேராசிரியையின் செல்ஃபோனுக்கும் அனுப்பி மிரட்டியிருக்கிறார்.இதனால் அதிர்ந்து போன பேராசிரியை திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார். அந்த ஆபாச வீடியோக்கள் இருந்த செல்ஃபோனை ஆதாரத்துக்காக வாங்கி வைத்துக்கொண்ட காவல் நிலைய ஆய்வாளர் லதா வழக்கு பதிந்து விசாரணை நடத்திய நிலையில், உறவினர் ஆண்டனியும் கைது செய்யப்பட்டார். ஆனால் இத்துடன் பிரச்சனை தீர்ந்தது என நினைத்திருந்த பேராசிரியைக்கு அதன்பிறகுதான் பிரச்சனை பூதாகரமாக வெடித்தது.FIR ல் தவறான தகவல்கள் இருந்ததால் அதனை திருத்தம் செய்வதற்காக, திருச்சி மாநகர காவல் ஆணையர் மற்றும் துணை ஆணையரை சந்தித்து பேராசிரியை மனு அளித்திருக்கிறார். இந்த வழக்கு திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குள் வருவதால் அங்கே மாற்றப்பட்டிருக்கிறது. அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் சுகுமார், வழக்கு தொடர்பாக விசாரித்திருக்கிறார். அதற்காக பேராசிரியையை பாலியல் வன்கொடுமை செய்த ஆபாச வீடியோக்கள் இருந்த செல்ஃபோனை, பெண் காவல் ஆய்வாளர் லதாவிடம் இருந்து காவல் ஆய்வாளர் சுகுமார் வாங்கியிருக்கிறார். இதன்பிறகு பேராசிரியைக்கு தொடர்ந்து ஃபோன் செய்து பேசிய காவல் ஆய்வாளர் சுகுமார், அவருடன் நெருக்கமாகி இருக்கிறார். மேலும் பேராசிரியை குறித்து மற்றொரு காவலர் மூலம் விசாரித்த ஆடியோவும் வெளியாகி இருக்கிறது.பேராசிரியைக்கு உதவுவதாகக் கூறி இரவும் பகலும் அவருடன் செல்ஃபோனில் பேசத் தொடங்கியிருக்கிறார். வாட்ஸ் அப் உரையாடல் என நீண்ட நெருக்கத்தின் விளைவாக ஒரு கட்டத்தில் பேராசிரியைக்கு ஆபாச புகைப்படங்களையும் இன்பெக்டர் சுகுமார் அனுப்பியிருக்கிறார். ஒருகட்டத்தில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவல் ஆய்வாளர் சுகுமார், சம்மதிக்காவிட்டால் செல்ஃபோனில் இருக்கும் ஆபாச வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறார்.இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண், தனக்கு திருச்சி மண்டல வடக்கு துணை ஆணையர் அன்புவை தெரியும் என்றும், அவரிடம் சென்று புகார் அளிக்க உள்ளதாகவும் கூறியிருக்கிறார். இதனால் ஆவேசமான இன்ஸ்பெக்டர் சுகுமார் தான் அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ்களையும் ஆபாச புகைப்படங்களையும் அழிக்குமாறு பேராசிரியையை மிரட்டியிருக்கிறார்.இதையடுத்து துணை ஆணையர் அலுவலகத்தில், இன்ஸ்பெக்டர் சுகுமார் மீது பேராசிரியை புகார் அளிக்க முடிவு செய்திருக்கிறார். அப்போது அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற இன்ஸ்பெக்டர் சுகுமார், காவல் ஆய்வாளர் லதா உள்ளிட்ட மேலும் சில உயரதிகாரிகளுடன் சேர்ந்து செல்ஃபோனை பறிக்க முயன்று மிரட்டல் விடுத்ததோடு, அவரது சேலையை உருவி டார்ச்சர் செய்திருக்கிறார்.இதையடுத்து காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் பாதிக்கப்பட்ட பேராசிரியை காவல் ஆணையர் அலுவலகத்திலும் புகார் அளித்திருக்கிறார். அப்போதும் நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார். இதனை தொடர்ந்து காவல் ஆய்வாளர் சுகுமார் கட்டாய காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டிருக்கிறார். அவருக்கு உடந்தையாக இருந்த மற்ற போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என பாதிக்கப்பட்ட பேராசிரியை குமுறலுடன் கோரிக்கை வைத்திருக்கிறார்.விடியா திமுக ஆட்சியில், பெண் ஒருவர் கொடுத்த பாலியல் புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.– திருச்சி செய்தியாளர் ஸ்டீபன் மற்றும் பா.சரவணகுமரன் 

via News J : https://ift.tt/qmk9QL7
Mediaஇந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவானாக வலம் வந்து கொண்டிருப்பவர் விராட் கோலி. அவருக்கு அடைமொழியாக கிங் என்கிற பட்டம் உண்டு. இரசிகர்கள் அவரை செல்லமாக கிங் கோலி என்றுதான் அழைப்பார்கள். கோலியின் செயல்பாட்டினைத் தொடர்ந்து அடுத்தக்கட்டமாக இந்திய அணிக்கு புத்துணர்ச்சி அளிக்கும் விதமாக இருக்கக் கூடியவர் சுப்மன் கில் ஆவார். சமீப காலங்களில் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சதம் அடித்து தன்னுடைய திறமையை நிலைநாட்டி இருக்கிறார்.விராட் கோலியை கிங் என்று அழைப்பது போல, சுப்மன் கில்லை ப்ரின்ஸ் என்று இரசிகர்கள் செல்லமாக அழைத்து வருகிறார்கள். தற்போது விராட் கோலியும், சுப்மன் கில்லும் லண்டனில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டியில் களம் இறங்க உள்ளனர். போட்டிக்கும் முன்பு விராட் கோலி தன் மனம் திறந்து சுப்மன் கில் வளர்ச்சிக்காக சில கருத்துக்களை பேசியுள்ளார்.“சுப்மன் கில் வளர்ச்சிக்கு நான் உதவ விரும்புகிறேன். அவருடைய திறமை எனக்கு தெரியும். யாருடைய தயவு இன்றி விளையாட வந்ததால், அவரால் நீண்ட நாட்களுக்கு விளையாட முடியும். அவரின் விளையாட்டு இந்திய அணிக்கு வலுசேர்க்கும்” என்று விராட் கோலி தன்னுடைய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/QdIm5hV
Mediaகள்ளச்சாராய விற்பனை செய்தவர்களுக்கு துணைபோகும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் சொல்லியது குறித்தும் , ஸ்டாலின் ஆட்சிக்கு மற்றுமொரு தலைவலியாக செஞ்சி மஸ்தான் உள்ளாரா என்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.ரேஷன் கடைகளில் அரிசி பருப்பு கிடைக்கிறதோ இல்லையோ, ஆவின் பூத்தில் பால் கிடைக்கிறதோ இல்லையோ டாஸ்மாக்கில் 24 மணி நேரமும் தடையின்றி சரக்கு கிடைக்கிறது இந்த விடியா ஆட்சியில்… இதுஒருபக்கம் என்றால், இன்னொரு புறம் கள்ளச்சாராயமும், கஞ்சாவும் ஆறாய் ஓடுகிறது. இந்த மாதம் கள்ளச்சாராய மாதம் என்று சொல்லுமளவுக்கு, கடந்த மே மாதம் முழுக்க விழுப்புரம், எக்கியார் குப்பம் கிராமத்தில் கள்ளச்சாராயம் குடித்து, கொத்து கொத்தாய் மக்கள் மடிந்துபோக மௌனித்து நிற்கிறது விடியா அரசு…ஏன் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அலசி ஆராய்ந்த போதுதான் திமுகவின் தில்லாலங்கடி சாயம் கொஞ்சம் கொஞ்சமாக வெளிக்க ஆரம்பித்தது… கள்ளச்சாராயத்தை காய்ச்சி விற்ற திமுக பெண் கவுன்சிலரின் கணவர் மரூர் ராஜா என்பவரை காவல்துறை கைது செய்யாமல் இருந்ததற்கு காரணம் என்ன தெரியுமா? அவர் திமுக அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு மிக நெருக்கமானவர்… இதைக் கண்டித்து அதிமுக எம்பி சி.வி.சண்முகம் புகார் தெரிவித்த பின்னரே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதெல்லாம் வேறுகதை..25 பேர் மரணத்தை தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனை மற்றும் சட்டவிரோத பார்களை நடத்துதல் சம்பந்தமாக 4 திமுக நிர்வாகிகளை கைது செய்திருக்கிறது இந்த விடியா அரசு.. அதுவும் எதிர்க்கட்சித்தலைவரின் தொடர் வலியுறுத்தல்களால் … இதில் ஸ்பெஷாலிட்டியே என்னவென்றால், கைது செய்யப்பட்ட அனைவருமே அமைச்சர் செஞ்சி மஸ்தானின் ஆதரவாளர்கள் என்பதுதான்.. அதனால்தான் கடந்த 2 ஆண்டுகளாக விடியா அரசின் காவல்துறை இவர்களின் நடவடிக்கைகளை முழுமையாக அறிந்திருந்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டனர்..கள்ளச்சாராயம் காய்ச்சுபவருடன் ஒரு அமைச்சருக்கு என்ன நெருக்கம் வேண்டிக்கிடக்கிறது?கள்ளச் சாராயம் விற்பவர்களோடு கட்டி உறவாடி, கேக் ஊட்டும் ஒருவர் அமைச்சராக நீடிக்க என்ன தகுதியிருக்கிறது? கட்சிக்காரர்கள் என்றால், சட்டவிரோதமாக என்னவேண்டுமானாலும் செய்வார்களா? என்று காரசாரமாக கேள்வி எழுப்பி இருக்கிறார் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி… இதனால் தான் அமைச்சர் செஞ்சி மஸ்தான் உடனடியாக பதவி விலக வேண்டும் … அதை அவர் செய்யவில்லை என்றால் முதலமைச்சர் ஸ்டாலின் அவரை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி சாட்டையை சுழற்றி இருக்கிறார்.அமைச்சர் செஞ்சி மஸ்தானை எதிர்க்கட்சித்தலைவர் ஏன் பதவிவிலகச்சொல்வது ஏன்? கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்காத காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் அவர்களுக்கு துணைபோன அமைச்சர் செஞ்சி மஸ்தான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? தயக்கமா? பயமா? இல்லை உண்மை தெரிந்துவிடும் என்ற நடுக்கமா? திமுக ஆட்சிக்கே அவப்பெயர் ஏற்படுத்திய கள்ளச்சாராய விவகாரத்தில், ஸ்டாலினுக்கு மற்றுமொரு தலைவலியாக மாறி இருக்கிறாரா செஞ்சி மஸ்தான்? என்ற கேள்விக்கான பதிலை ஸ்டாலின்தான் உணர்ந்துகொள்ள வேண்டும்.

via News J : https://ift.tt/qat9MnU
Media நீட் தேர்வு முடிவுகள் வருகிற 15 ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே 7ஆம் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 15 லட்சத்திற்கும் அதிகமான தேர்வர்கள் நீட் தேர்வு எழுதினார்கள். தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வை எழுதியிருந்தனர். 2023 – 24 ஆம் கல்வி ஆண்டுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வரக்கூடிய நிலையில், மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு எப்பொழுது நடைபெறும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்த நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வருகிற 15ஆம் தேதி வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியானதும், இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்த தேதியை மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

via News J : https://ift.tt/tY9oa4V
Mediaகடந்த வெள்ளிக் கிழமை நாட்டையே உலுக்கிய கோரசம்பவமான கோரமண்டல் ரயில் விபத்தானது ஒடிசாவில் நிகழ்ந்தது. இதில் 275 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலத்த காயத்தினை அடைந்துள்ளனர். தற்போது இறந்தவர்களின் உடலானது பாலசோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த நிலையில், உறவினர்களிடம் இறந்தவர்களின் உடலை ஒப்படைக்கும் பணியானது நடைபெற்று வந்தது.இறந்தவர்களில் சிலர் மின்சாரம் தாக்கி இறந்துள்ளனர். சிலருக்கு முகம் சிதைந்துள்ளது. ஒரு சிலருக்கு கை, கால்களை காணவில்லை. இதனால் உறவினர்களுக்கு தங்களின் நெருங்கியவர்களின் உடலை கண்டுபிடிக்க சிரமமாக இருந்து வருகிறது. அதனையொட்டி தற்போது 101 பேர்களின் உடலை அடையாளம் காண முடியாமல் திணறி வரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தாரும், நண்பர்களும் அங்கு திரண்டு வந்து உடல்களைத் தேடி வருகின்றனர். விபத்தில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை புகைப்படங்களாக எடுத்து அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. பல உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு விபத்தில் சிதைந்து போயிருப்பதால் அவற்றை அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே புகைப்படங்களை வைத்து அடையாளம் காண்பதில் உறவினர்கள் திணறி வருகின்றனர்.

via News J : https://ift.tt/AsBcDGu
Mediaஅரசு விரைவுப் பேருந்துகளில் உள்ளது போல 200 கி.மீ தூரம் பயணம் செல்லக்கூடிய பேருந்துகளில் முன்பதிவு செய்யலாம் என்று தமிழக போக்குவரத்துத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இன்று முதல் இந்த பயணிக்கும் வசதி அமலுக்கு வருகிறது. TNSTC.in என்கிற ஆன்லைன் முகவரிக்கு சென்று முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தமிழகப் போக்குவரத்து துறை அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

via News J : https://ift.tt/9MgXSNZ
Mediaஒடிசாவுல நிகழ்ந்த ரயில் விபத்து தொடர்பாக, மத்திய அரசை கண்டிக்கும் வகையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராஜா, வாண்டடாக வாயைக் கொடுத்து சிக்கியிருக்கிறார்.திமுக துணைப்பொதுச் செயலாளரும் எம்.பியுமான ஆ.ராசா, அமைச்சர் பொன்முடிபோல, தேவையற்ற விஷங்களைப் பேசி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வது உண்டு. சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் தாயார் குறித்து அவதூறாகப் பேசியது ஆ.ராசாவுக்கு எதிராக சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, பல்வேறு தரப்பினரும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து அவர் மன்னிப்பு கேட்டு கொண்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த நிகழ்வில் பேசியவர், இந்துக்கள் குறித்து பேசியது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது.ஆ.ராசாவின் துவேஷ பேச்சுக்கு எதிராக பல்வேறு இந்து அமைப்பினரும் ஆவேசம் காட்டினர். இப்படி சர்ச்சைகளில் அமைச்சர் பொன்முடியின் சிஷ்யனாக வலம் வரும் ஆ.ராசா, ஒடிசா ரயில் விபத்து குறித்து, அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது வாண்டடாக வாயைக் கொடுத்து சிக்கியிருக்கிறார்.மத்திய ஆட்சியாளர்கள் விளம்பரம் தேடுவதிலேயே ஆட்சியை ஓட்டுவதாகவும், போதிய கவனம் செலுத்தியிருந்தால் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடந்திருக்காது என்றும் சாடியவர்,விபத்து நடந்ததன் பின்னர், நடவடிக்கை எடுப்பதை விட அது நடக்காமல் இருப்பதற்கு என்னென்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.ராஜா எழுப்பிய கேள்விகள் எல்லாம், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த விஷச்சாராய சாவுகளுக்கு காரணமான அலட்சிய விடியா திமுக ஆட்சியை நோக்கி எழுப்பியது போலவே இருந்தது.ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும், விஷச்சாராயம் குடித்து குற்றமிழைத்து உயிரிழந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அளித்ததாகவும் வாண்டடாக வாயைக் கொடுத்து வம்பில் சிக்கினார்.குற்றமிழைத்தவர்களுக்கு 10 லட்சம், குற்றம் இழைக்காத ரயில் பயணிகளுக்கு 5 லட்சமா என்னும் செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் அவரது வாயில் வார்த்தைகள் தந்தி அடித்தது.ஒடிசா ரயில் விபத்துக்காக நாங்கள் யாரையும் ராஜினாமா செய்ய வற்புறுத்தவில்லை… ஆனால் தமிழகத்தில் பிரச்சனை என்றால், முதலமைச்சரையும், அமைச்சரையும் ராஜினா செய்யச் சொல்கிறார்கள் என்று சொந்தக்கதை சோகக்கதையை புலம்பிய காட்சிகள் இப்போது வைரலாகி வருகிறது.

via News J : https://ift.tt/iAobnvz
Mediaலண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் 3 மணியளவில் நடைபெற இருக்கக்கூடிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியுடன் பலப்பரீட்சை செய்ய உள்ளது.ஒருநாள் போட்டிகள் என்று எடுத்துக்கொண்டல் இந்திய அணிக்கு சமீப உலகக்கோப்பைகளில் சிம்மசொப்பனமாக ஆஸ்திரேலிய அணி இருந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியாவை வெளியேறச் செய்து இருந்தது. 2003 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் பாண்டிங் தலைமையிலான அன்றைய ஆஸ்திரேலிய அணி, கங்குலி தலைமையிலான இந்திய அணியினைப் பதம் பார்த்தது. இருபது வருடங்களுக்கு பிறகு இந்த இரு அணிகளும் சந்திக்கும் இறுதிப்போட்டி இதுதான். ஆஸ்திரேலியாவின் உலகக்கோப்பை கனவைத் தகர்த்து இந்தியா வெல்லுமா? என்று நாடே எதிர்ப்பார்த்துள்ளதுஇத்தகைய எதிர்ப்பார்ப்பினை இந்தியா நிறைவேற்றுமா? கேப்டன் ரோகித் சர்மா தான் பங்கு கொண்ட அனைத்து இறுதிப் போட்டிகளிலும் வெற்றி வாகையினையே சூடியுள்ளார் என்பது இங்கு கூடுதல் தகவல். அவருடைய அதிர்ஷ்டம் இந்த டெஸ்ட் இறுதிப்போட்டியில் பலிக்குமா? என்பது கேள்விக்குறியே. தற்போதைய இந்திய அணியை எடுத்துக்கொண்டால் விராட் கோலி, சுப்மன் கில், சிராஜ் போன்ற வீரர்கள் மட்டுமே நல்ல பார்மில் உள்ளார்கள். மற்ற வீரர்களின் நிலவரம் மிகவும் மோசம் என்று சொல்வதற்கில்லை. ஆனால் முக்கியமான கட்டங்களில் சோபிக்கத் தவறுகிறார்கள். ஆஸ்திரேலியப் பக்கமாக பார்த்தால் அது ஒரு கடப்பாரை அணியாக உள்ளது. பேட்டிங், பவுலிங் என்று அனைத்து தரப்பிலும் வலுவாக உள்ளது. இந்தியாவின் பேட்டிங் நம்பிக்கை என்று பார்த்தால், முன்னர் சொன்னதுபோல விராட் கோலியும், சுப்மன் கில்லும்தான்.ஆஸ்திரேலிய ஸ்பின்னரான நாதன் லியான், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘விராட் கோலியின் விக்கெட்டை எடுப்பவர்கள் உலகின் வெறுக்கத்தக்க மனிதராக கருதப்படுவார்கள்” என்று கூறியுள்ளார். இது என்னவோ உண்மைதான் என்று நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பரிமாறி வருகிறார்கள்.

via News J : https://ift.tt/6r7FGc5
Mediaஎதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் தன்னுடைய டிவிட்டர் பதிவில் குரூப் 4 தேர்வர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் பொருட்டு திமுக அரசிற்கு சில வலியுறுத்தல்களை கூறியுள்ளார். அவரது டிவிட்டர் பதிவு பின்வருமாறு உள்ளது.2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே 2022ம் ஆண்டு தொகுதி -4க்காக நடைபெற்ற TNPSC தேர்விலிருந்தே சுமார் 20 ஆயிரம் தகுதி பெற்ற தேர்வாளர்களையாவது தேர்ந்தெடுத்து அனைவருக்கும் கலந்தாய்வை நடத்தி, அரசு துறைகளில் காலியாக உள்ள 20000 பணியிடங்களையாவது உடனடியாக நிரப்பிட வேண்டுமென வலியுறுத்துகிறேன்.TNPSC தொகுதி -4க்கான பணியிடங்கள் நிரப்பப்படாததால் அரசின் அனைத்து துறைகளின் பணிகளிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது , இதனால் மக்கள் பல்வேறு வகைகளில் அவதிக்கு உள்ளாகிறார்கள் ,
ஆகவே விரைந்து தொகுதி -4க்காண காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என விடியா அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன்.2022ம் ஆண்டு சுமார் 10 ஆயிரம் தொகுதி-4 காலிப்பணியிடங்களுக்காக,
நடைபெற்ற TNPSC தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 2023ல் வெளியானது. ஆனால் இதுவரை கலந்தாய்வு நடைபெறவில்லை.இந்நிலையில்,TNPSC தொகுதி -4க்கான காலிப்பணியிடங்கள் தற்போது 25000மாக உயர்ந்திருப்பதாக செய்திகள் வருகின்றன, எனவே…— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 7, 2023

via News J : https://ift.tt/zlaoT7U
Mediaநாட்டில் அவ்வப்போது ஏற்படும் ரயில் விபத்தை எப்படி தடுப்பது என்பது பற்றி இன்ஜினியர் ஜெயபாரதி கூறியுள்ளார் . சென்னையில் பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் குறிப்பிடகையில் .இந்தியாவில் அடிக்கடி இது போன்ற ரயில் விபத்துகள் ஏற்படுவது என்னை மிகவும் கடுமையாக பாதித்திருக்கிறது. அந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஒடிசாவில் ஏற்பட்ட கோர ரயில் விபத்தின் காரணமாக பலபேர் உயிரிழந்தார்கள், பல பேர் படுகாயமுற்று பலத்த சேதம் அடைந்தனர். இந்த நிலையில் அது போன்று கோர விபத்தை தடுப்பதற்கு நான் புதிய வகை டிவைஸ் எனப்படக்கூடிய கவாசம் என்ற ஒரு அறிய வகை டிவைஸ்சை ஒன்றை கடும் முயற்சி செய்து கண்டுபிடித்து உள்ளேன்.இந்த புதிய வகை கண்டுபிடிப்பு பற்றி பலமுறை மத்திய ரயில்வே துறை அமைச்சர்களிடம் கடிதம் மூலமாகவும் தான் கண்டுபிடித்தது பற்றி விளக்கம் அளித்தும்  அவர்கள் எதற்கும் செவி சாய்க்கவில்லை என தெரிவித்த ஜெயபாரதி, கடந்த 2005 ஆம் ஆண்டு நான் கண்டுபிடித்த புதிய வகை ஒயர் டிவைஸ் பற்றி அரசிடம் விளக்கம் அளித்து காண்பித்தேன். ஆனால் அதற்கு அவர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக பல மாநிலங்களில் இது போன்ற ரயில் விபத்துகள் ஏற்பட்டு கொண்டுதான் இருக்கின்றன. பல உயிர்கள் போய்க்கொண்டு தான் இருக்கின்றன. இது என்னால் பார்த்துக்கொண்டு பொறுத்துக் கொள்ள முடியவில்லை . பல நாள் காத்திருப்புக்கு பின் கடந்த 2016 ஆம் ஆண்டு பேட்டன் அடிப்படையில் என்னிடம் விளக்கம் கேட்ட ரயில்வே அதிகாரிகளிடம் நான் புதிய வகை டிவைஸ் காண்பித்து அதற்கான விளக்கத்தை அளித்தேன் ஆனால் அது அப்படியே கிடப்பில் போடப்பட்டுவிட்டன .தற்பொழுது ஒடிசா போற ரயில் விபத்துக்கு பிறகு புதிய வகை கவாம்சம் என்கிற டிவைஸ் மூலம் ரயில் விபத்தை எப்படி தடுப்பது என்பதை பற்றி ஒரு டிவைஸ் கண்டுபிடித்துள்ளேன் இதை நாட்டுக்கு நான் அர்ப்பணிக்கிறேன் என தெரிவித்த ஜெயபாரதி, நான் கண்டுபிடித்த புதிய வகை ஒயர் டிவைஸ் தண்டவாளங்களில் பொருத்தினால் பெருமளவு விபத்தை தடுக்கலாம். நான் இதைப்பற்றி ஏற்கனவே மத்திய அரசிடம் விரிவாக விளக்கம் அளித்து இருக்கிறேன் இதற்கு ஊழியர்கள் தேவையில்லை ரயில்வே பணியாளர்கள் தேவையில்லை அதே போன்று ஒரு ஒயர் மூலமாக ஆட்டோமேட்டிக் எலக்ட்ரானிக் டிவைஸ் அமைத்து எதிரே வரக்கூடியது ரயிலை முன்கூட்டியே அறியலாம் .பெருமளவு ரயில் விபத்தை தடுப்பதற்கான முழு ஏற்பாடுகளையும் நாங்கள் உருவாக்கி இருக்கிறோம்.சோதனை அடிப்படையில் இதனை பரிசோதனை செய்தால் நிச்சயம் நல்லதொரு மாற்றம் வரும் என நாங்கள் நம்புவதாக தெரிவித்து இருக்கிறார்கள் .இதை சோதனை செய்வதற்காக ரயில்வே, துறையும் மத்திய அரசும் அனுமதி வழங்க வேண்டுமென கோரிக்கை வைப்பதாக தெரிவித்தனர், என்று தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டார்.

via News J : https://ift.tt/PXobQiK
Mediaஇந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமாக இயங்கி வந்து, தற்காலத்தில் பெருத்த பின்னடவை அடைந்திருக்கும் நிறுவனமே பி.எஸ்.என்.எல். பாமர மக்கள் அன்றைய காலக்கட்டத்தில் மலிவு விலையில் சிம் கார்டுகளை பயன்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு அமைப்பே இது ஆகும். டெலிகாம் சேவையில் அடைந்த பின்னடைவின் காரணமாக பொருளாதார ரீதியாக மிகவும் வீழ்ச்சியை சந்தித்த பி.எஸ்.என்.எல், தற்போது மீண்டும் புதிய வேகத்துடன் இயங்குவதற்கு ஆய்த்தமாகியுள்ளது.கடந்த நான்கு ஆண்டுகளாக பி.எஸ்.என்.எல் அடைந்த வீழ்ச்சியை சரிகட்டும் விதமாக மத்திய அரசு 89,047 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளது. ஜியோ போன்ற தனியார் நிறுவனங்கள் வளர்ந்துவிட்ட பிறகு இணையத் துறையில் அடிவாங்கிய பி.எஸ்.என்.எல் 4ஜி மற்றும் 5ஜி சேவையினை வழங்கும் விதமாக செயல்பட ஆயத்தமாகியுள்ளது. மேலும் பி.எஸ்.என்.எல்லில் வேலை செய்த ஊழியர்கள் விருப்ப ஓய்வுப் பெற்று வீடுதிரும்பினார்கள். சிலர் வேலையை இழக்கும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் தற்போது இந்த நிலை மாறும் என்று மத்திய அரசு நம்பிக்கை அளித்துள்ளது.

via News J : https://ift.tt/ZENM3Kv
Mediaஇந்தியாவில் தற்போது தென்மேற்கு பருவக்காற்றின் காலம். இதன் விளைவாக வளிமண்டல சுழற்சியானது ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக அரபிக்கடலில் புதிய புயல் ஒன்று உருவாகியுள்ளது. அஹ்டற்கு பைபோர்ஜாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. பைபோர்ஜாய் என்றால் பேரழிவு என்று பொருள். இந்தப் பெயர் பெங்காலி பெயர் ஆகும். பங்களாதேஷ் நாடுதான் இப்பெயரை சூட்டியுள்ளது. தற்போது இந்தப் புயலானது மேற்கு கடற்கரையில் முன்னேறி கோவா வரை சென்றுள்ளது.  கோவாவிற்கு மேற்கு-தென்மேற்கே சுமார் 860 கிமீ, மும்பைக்கு தென்மேற்கே 970 கிமீ, போர்பந்தருக்கு 1050 கிமீ, கராச்சிக்கு தெற்கு-தென்மேற்கே மற்றும் 1350 கிமீ நிலை கொண்டுள்ளது

via News J : https://ift.tt/vnClYQi
Mediaஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது நடைபற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் அஸ்வின் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. டாஸ் வென்ற இந்திய அணியானது பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பின்னர் தேசிய கீதம் ஒலிக்கப்பட்டபோது, வரிசையாக நின்ற இந்திய வீரர்கள்,  சிறிது நிமிடங்கள் ஒடிசா ரயில் விபத்துக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள். மேலும் இன்றைய போட்டியில் கருப்புப் பட்டை அணிந்து விளையாடி வருகிறார்கள்.தற்போது வரை ஆஸ்திரேலியா அணியானது இருபத்து ஆறு ஓவர்களுக்கு 85 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் இழந்துள்ளது. இந்தியா சார்பாக, சிராஜ், ஷமி, தாக்கூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தியுள்ளனர்.

via News J : https://ift.tt/X2SoR9c
Mediaதமிழகத்தில் இரவு பகல் பாராமல் தொடரும் மின்வெட்டால் மக்கள் பரிதவிக்கும் நிலையில், மின்வெட்டு காரணமாகவே திமுக மீண்டும் ஆட்சியை இழக்கப் போவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.எங்க வீட்லயும் இல்ல, உங்க வீட்லயும் இல்ல, மேல் வீட்லயும் இல்ல, கீழ் வீட்லயும் இல்ல, கருணாநிதி ஆட்சியிலயும் இல்ல, இப்ப ஸ்டாலின் ஆட்சியிலயும் இல்ல… எங்கே தேடுவேன் கரண்ட எங்கே தேடுவேன்னு… என்று மின்சாரம் இல்லாத நிலையை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.ஆமாம்.. எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம், மின்வெட்டால், தமிழகம் வியர்த்து உருகி, இருட்டுல தள்ளப்படும் அவலம்தானே நிலவிக் கொண்டிருக்கிறது.கொளுத்தும் வெயிலுக்கு மின்விசிறியை 12ல் வைத்தாலும் அனலாகவே கொதிக்குது… அப்படி இருக்கும்போது, மின்சாரம் இல்லை என்றால் என்னாகும்? பகலிலேயே இப்படி என்றால், இரவுகளின் கொடுமையை சொல்லி மாளாது. கைக்குழந்தை தொடங்கி தொடங்கி நோயாளிகள், முதியோர்கள் என மின்வெட்டு காரணமாக நொந்து போய் இருக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம் இன்றைக்கு மின்சாரத்துக்காக கையேந்தும் மாநிலமாகும் நிலையைக் கொண்டுவந்ததுதான் திமுகவின் 2ஆண்டு சாதனை என்கிறார்கள் மின்வாரிய ஊழியர்கள்.தமிழகத்தில் கோடையில் மின்சாரத் தேவை நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்வது போல் தெரியவில்லை. ஒருபுறம் அறிவிக்கப்பட்ட மின்வெட்டு என்றால், மற்றொரு புறம் பல மணி நேரங்களாக அறிவிக்கப்படாத மின்வெட்டு அரங்கேறி வருகிறது. தேவையுள்ள இடங்களில் மின்நிலையங்களை ஏற்படுத்தாததும் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.ஒரு காலத்தில் அணில்களால் மின்சாரம் துண்டிக்கப்படுவதாக அமைச்சரே கண்டுபிடித்து கூறிய நிலையில், தற்போது மின் உற்பத்தி நிலையங்களில் தரமற்ற பொருட்களை கொள்முதல் செய்துள்ளதால் மின் உற்பத்தி பாதித்து மின் தடை ஏற்படுவதாகவும், தரமற்ற மின்மாற்றிகளால் மின்வெட்டு தொடர்வதாகவும் புதிய புகார்கள் முன்வைக்கப்படுகிறது. ஆனால் இவை திமுக ஆட்சியில் கொள்முதல் செய்யப்பட்டவை என்பதால் அந்த டெண்டர்களிலும் ஊழல் நடந்துள்ளதா என்னும் கேள்வி எழுந்துள்ளது.அதே போன்று சென்னையில் 50ஆண்டுகளுக்கு முன்னால் போடப்பட்ட புதைவட மின் வயர்களில், மின்சார பயன்பட்டாலும், மின் அழுத்தத்தாலும் வெடித்தல் ஏற்பட்டு மின் தடை ஏற்படுவதாக சொல்லப்பட்டது. இதையடுத்து உயர்தர ஆர்ன்.என்.யூ.யூனிட் கேபிள்கள் மாற்றப்பட்டும் மின் தடை பிரச்சனை தொடர்வது, கேபிள்களின் தரத்தையும் ஆட்சியாளர்களின் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது.ஆள் பற்றாக்குறை, அலட்சிய நிர்வாகம், லஞ்சத்தில் திளைக்கும் போக்கு என்று மின்வாரியத்தையும், துறை அமைச்சரையும் புகார்கள் சுற்றிச் சுழல்கின்றன.கடந்த 2011 தேர்தலில் திமுக ஆட்சியை இழந்ததற்கு மின்வெட்டும் முக்கியக் காரணம் என்று அன்றைய மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறினார். இப்போதும் அதே நிலை திரும்பியுள்ளது. தொடரும் மின்வெட்டால் மக்கள் அல்லல்படும் நிலையில், மீண்டும் திமுக ஆட்சியை இழக்கப் போவது திண்ணம் என்கிறார்கள் பொதுமக்கள்.

via News J : https://ift.tt/UNFGnKE
Mediaரெப்போ வட்டி விகிதத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி கந்ததாஸ் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். வங்கிகளின் குறுகிய காலத்திற்கான ரெப்போ வட்டி விகிதமானது 6.5 சதவீதம் ஆகவே தொடரும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் பணவீக்கத்தில் எந்தவித பாதிப்பும் இல்லை என்பதாலும் கட்டுக்குள் இருப்பதாலும் இந்த நடைமுறை தொடர்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/IlHdNLW
Mediaஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியானது லண்டன் மாநகரின் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று ஆட்டத்தின் முதல் நாள் இந்திய நேரப்படி மதியம் மூன்று மணிக்கு டாஸ் போட்டு ஆரம்பிக்கப்பட்டது. டாஸில் வென்ற ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தார். முக்கியமாக இந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாதது ரசிகர்கள் இடையே பெருத்த கவலையை ஏற்படுத்தியது. அதற்கு ஏற்றால் போலத்தான் இந்தியாவின் பந்துவீச்சு நேற்று இருந்தது என்றும் கூறலாம்.சிராஜ், ஷமி, ஷர்துல் போன்றவர்கள் சிறந்த விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர்களாக இருந்தாலும் அவர்களால் ரன்களை கட்டுப்படுத்த இயலவில்லை எனபதுதான் நிதர்சனம். உஸ்மான் கவஜா-வை 0 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் சிராஜ். லபுசேஞ்சினை 26 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் ஷமி. அதிரடி வீரர் டேவிட் வார்னரை 43 ரன்களுக்கு ஆட்டமிழக்க செய்தார் ஷர்துல். அதற்கு பிறகுதான் நடந்தது களபேரங்கள். டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவரின் ஜோடியும் இந்திய பந்துவீச்சினை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டது. இந்த இடத்தில்தான் அஸ்வின் தேவை என்கிற வாதம் ரசிகர்களிடையே வலுத்தது. அஸ்வின் இடது கை மட்டையாளர்களை எளிதாக கையாளக்கூடியவர். டிராவிஸ் ஹெட் இடது கை மட்டையாளர் என்பதால், அவரை திணறடித்திருக்கக்கூடிய வாய்ப்பு அஸ்வினிடம் இருந்திருக்கும்.Mediaஇந்த இரண்டு இரு ஜாம்பவான் ஜோடிகளும் சேர்ந்து தற்போது வரை 251 ரன்கள் குவித்துள்ளனர். முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர் மூன்று விக்கெட் இழப்பிற்கு 327 ரன்கள் ஆகும். அதிரடியாக விளையாடிய டிராவிஸ் ஹெட் 22 பவுண்டரிகள், ஒரு சிக்சருடன் 156 பந்துகளுக்கு 146 ரன்கள் குவித்து, இன்னும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இவரைத் தொடர்ந்து சதம் அடிக்கும் ரேசில் ஸ்டீவன் ஸ்மித் உள்ளார். 14 பவுண்டரிகளுடன் 227 பந்துகளில் 95 ரன்களுடன் களத்தில் உள்ளார். இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதம் அடிக்க வாய்ப்புகள் அதிகம். சதம் அடிக்கும்பட்சத்தில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெறுவார்.

via News J : https://ift.tt/zx7y5ZG
Mediaதிமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடத்தாதது ஏன்? என்ன செய்து கொண்டிருக்கிறது உயர்கல்வித்துறை.திருச்சியில் செயல்பட்டு வரக்கூடிய பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவையில் செயல்பட்டு வரக்கூடிய பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படுவதற்கு வரக்கூடிய மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களில் இரண்டு ஆண்டுகளாக பல்வேறு நிலைகளில் ஆய்வுகளையும் பட்டங்களையும் முடித்தவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடத்தப்படாமல் உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து தமிழக அரசும் உயர்கல்வி துறையும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்கிற கேள்வி தற்போது பூதாகரமாக எழுந்திருக்கிறது.Official Website of Bharathidasan University, Tiruchirappalli, Tamil Nadu, Indiaதிருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழே இயங்கக்கூடிய 9 மாவட்டங்களில் 130 கல்லூரிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டங்களை வழங்காமல் இழுத்து அடிப்பதால் மாணவர்கள் மேலும் மிகுந்த உளச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த பேரத்திற்கு ஆழ்த்திருப்பது உயர்கல்வித் துறையே காரணம் என குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் 133 உறுப்பு கல்லூரிகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 85 ஆயிரம் மாணவர்கள் பட்டம் பெறாமல் காத்திருக்கின்றனர். அதேபோன்று கோவை வேளாண் கல்லூரியில் சுமார் 3,000 க்கு மேற்பட்ட மாணவர்கள் பட்டம் பெறாமல் காத்துக் கொண்டிருக்கிறார்கள். படிப்பை முடித்துவிட்டு வேலைக்காக காத்துக் கொண்டிருக்கக் கூடிய இளைஞர்கள் லட்சக்கணக்கில் இருக்கும்போது, பட்டம் பெறாமல் பார்த்துக் காத்துக் கொண்டிருக்க கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் இருப்பது வேதனைக்குரியதாக இருக்கிறது.

via News J : https://ift.tt/gThr0eI
Mediaசென்னை மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த ககன்தீப் பேடி தற்பொழுது சுகாதாரத் துறை செயலாளராக இருக்கிறார். மாநகராட்சி ஆணையராக பணிபுரியும் போது சக சுகாதாரத்துறை அதிகாரியான மணீஷ் நாரனவாரே  என்பவரை சாதிய ரீதியாக துன்புறுத்தி இருப்பதாக, மணீஷ் தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி இருக்கிறார். இதுகுறித்து மணீஸ் நாரனவரே கேட்ட பொழுது, தான் ஏற்கனவே புகார் அளித்திருப்பதாகவும் முறையாக அதிகாரிகளுக்கு இது குறித்து தெரிவித்திருப்பதாகவும் மன அழுத்தம் காரணமாக பணி மாறுதல் கேட்டு தற்போது ஈரோடு கூடுதல் ஆட்சியராக பணியாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். தற்போது சுகாதாரத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி நடவடிக்கை விசாரணை நடத்தி எடுக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.


via News J : https://ift.tt/cOJEnmb
Mediaபல பஞ்சாயத்துகளால், ஏற்கனவே ஆவினின் டப்பா டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, தற்போது, வேலூர் மாவட்ட ஆவினில் விஞ்ஞான ஊழல் செய்து அசத்தியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.. விஞ்ஞான ஊழல் செய்வதில் வல்லவர்களான திமுகவின் தில்லாலங்கடியை தோலுரிக்கிறது இந்த தொகுப்பு…எத்தனையோ தமிழ் சினிமாக்களில், ஓரே மாதிரி இருக்கும் இரட்டையர்களால் ஏற்படும் குழப்பங்கள் தான் கதைக்கருவாக இருக்கும்.. அப்படிப்பட்ட படத்தைப்பார்த்து இன்ஸ்பையர் ஆகியிருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ்.. அதன் பலன்தான் ஒரே நம்பர் ப்ளேட் வைத்த 2 டெம்போக்களை வைத்து ஆவினில் விஞ்ஞான ஊழல் செய்திருக்கிறார்.. அடடே .. இதுவல்லவோ திறமை…வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டு வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் பால் பாக்கெட்டுகள் விநியோகத்துக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அப்படி திமிரி வழித்தடத்திலும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகள் சரக்கு வாகனங்களில் எடுத்து செல்லப்படுகிறது. இதில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு சரக்கு வாகனங்கள் மூலம் பால் பாக்கெட்டுகளை திருடிச்சென்றது தற்போது கண்டறியப்பட்டுள்ளது.ஆவின் பணியாளர்கள் இந்த 12 உத்தரவுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.. களத்தில் இறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்.!TN23AC 1352 என்னும் பதிவெண்ணில் இரண்டு சரக்கு வாகனங்கள் ஆவினில் இருந்து முகவர்களுக்கு பால் பாக்கெட்டுகளை எடுத்துச் சென்றுள்ளது. தினமும் 2500 லிட்டர் பால்பாக்கெட் இந்த வாகனத்தில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.பல நாட்களாக அரங்கேறியுள்ள இந்த திருட்டு தற்போது கண்டறியப்பட்டுள்ளதற்கு பிறது இப்போதுதான் இது தொடர்பாக விசாரணையே நடந்து வருகிறது. ஏற்கனவே தில்லாலங்கடி செய்ததால் தான் ஆவின் அமைச்சராக இருந்த ஆவடி நாசரை வெளியேற்றியது திமுக அரசு.. இப்போது இந்த திருட்டு சம்பவமும் அரங்கேறியிருப்பது அதிகாரிகளுக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் அப்பகுதியினர்.ஒரு நாளைக்கு 2500 லிட்டர் பால் என்றால், எத்தனை நாள் இந்த திருட்டு நடந்திருக்கும்? அப்படியானால் எத்தனை கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கும்? துறைக்கு பொறுப்பேற்று இன்னும் 1 மாதம் கூட ஆகவில்லை அதற்குள் இவ்வளவு பஞ்சாயத்து … இந்த விடியா ஆட்சியில் யாரை பால்வளத்துறை அமைச்சராக்கினாலும், ஆவினுக்கு பால் ஊற்றுவதுதான் அவர்களுடைய ஒரே டார்கெட் என்கிறார்கள் விடியா அரசின் திறமையை அறிந்தவர்கள்..

via News J : https://ift.tt/whkMLyx