News J
594 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaசென்னை வியாசர்பாடியில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவன் கோயிலின் தெப்பக்குளம் மற்றும் அன்னதானக் கூடம் ஆகியவை விடியா திமுக ஆட்சியில் அறநிலையத்துறையின் அலட்சியத்தால் பராமரிப்பின்றிக் கிடப்பதாக பக்தர்கள் புகார் குரல் எழுப்பி வருகின்றனர்.சிவன் கோயில் சொத்தை அபகரித்தால் குலநாசம் ஏற்படும் என்று இந்த ஒரு பக்தர் மட்டுமல்ல, சென்னை வியாசர்பாடி பகுதியில் உள்ள அருள்மிகு மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வர திருக்கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுமே சாபம் இடுகின்றனர்.1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தத் திருக்கோயில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மாதம்தோறும் லட்சக்கணக்கில் கோயிலுக்கு காணிக்கைகள் வந்தபோது, திருக்கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம், அன்னதானக் கூடத்தின் பராமரிப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது.இந்த திருக்கோயிலின் குளம் முறையான பராமரிப்பு இல்லாததால் தண்ணீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுவதோடு, மீன்களும் செத்து மிதக்கின்றன. குளத்தை சுற்றிலும் முட்புதர்களாக அடர்ந்து காணப்படுகிறது. முறையான சுற்றுச்சுவர் இல்லாததால் சமூக விரோதிகள் மதுபாட்டில் உள்பட பல்வேறு கழிவுப் பொருட்களையும் இந்தப் பகுதியில் வீசிச் செல்கின்றனர்.தெப்பக்குளத்தை சுற்றிலும் மதில் சுவர் அமைப்பதற்காக 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட பணிகள் இன்னும் ஆமை வேகத்தில் நடந்து வருவதாக பக்தர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். இதேபோல் அன்னதானக் கூடமும் முறையாக பராமரிப்பின்றி இருப்பதோடு, கழிவு நீரும் சூழ்ந்து காணப்படுகிறது. அதுமட்டுமின்றி அன்னதான அனுமதி சீட்டை முறையாக வழங்காமல் விரட்டியடிப்பதாகவும், வழங்கக்கூடிய உணவும் தரமற்ற முறையில் இருப்பதாகவும் பக்தர்கள் புகார் கூறுகின்றனர்.கோயில் குளத்தில் ஈமச்சடங்கு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கும் அறநிலையத்துறை நிர்வாகம், அதற்குரிய வசதிகள் எதையும் செய்து தரவில்லை என்றும் புகார் வாசிக்கப்படுகிறது.அமைச்சராகவும் கோயில் அமைந்துள்ள பகுதியின் திமுக மாவட்ட செயலாளராகவும் இருக்கும் சேகர்பாபு, பழமை வாய்ந்த இந்த கோயில் தொடர்பான பக்தர்களின் குறைகளை காது கொடுத்துக்கூட கேட்பதில்லை என்கிறார்கள். சுற்றுப்பயணம் செல்வதாக கோயில் கோயிலாகச் சென்று சாமி கும்பிடும் அமைச்சர், உள்ளூரில் உள்ள கோயிலின் தெப்பக்குளம் அன்னதான கூடத்தை சீரமைக்க வேண்டும் என்பதே பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது. 

via News J : https://ift.tt/j59U0Ni
Mediaஇன்று சர்வதேச உணவுப் பாதுகாப்புத் தினமாகும். இந்தத் தினத்தினையொட்டி மத்திய அரசாங்கம் உணவுத் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்பட்டியலின்படி, தமிழ்நாடு மூன்றாவது இடத்தில் உள்ளது.Immerse Yourself in the Street Food of Tamil Nadu Street: 8 Mouth-Watering Local Delicacies to Try + 4 Delicious Recipes to Prepare at Home (2019)இந்த உணவுத் தரவரிசைப் பட்டியலானது உணவின் தரம், அளவு, சுவை போன்றவற்றின் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்தப் பட்டியலில் கேராள மாநிலம் முதல் இடத்திலும், பஞ்சாப் இரண்டாவது இடத்திலும் உள்ளது. தமிழ்நாட்டிற்குள் எடுத்துக்கொண்டால் கோயமுத்தூர் மாவட்டம் முதல் இடம் பிடித்துள்ளது. மேலும் சென்னை, மதுரை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் எழுபத்தைந்து சதவீதத்திற்கு மேலான மதிப்பெண்களை பெற்று உள்ளது குறிப்பிடத்தக்கது.

via News J : https://ift.tt/P9X8vIg
Mediaபள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு பங்கேற்கவில்லை என்கிற செய்திதான் தற்போது தமிழக அரசிற்கு எதிராக முன்வைக்கப்படும் கேள்வியாக இருக்கிறது. பள்ளிகளுக்கான தேசிய விளையாட்டுப் போட்டிகள் லக்னோவில் நடைபெறுவதையொட்டி மே 11 ஆம் தேதியே தேசிய விளையாட்டு கூட்டமைப்பிடமிருந்து தமிழக அரசுக்கு கடிதம் வந்துள்ளது. ஆனால் எங்களுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று சி.பி.ஐ என்று அழைக்கப்படும் பள்ளிக் கல்வித்துறையின் முதன்மை ஆய்வாளர் கூறியிருந்தார். ஆனால் மே 11 ஆம் தேதியே கடிதம் அனுப்பப்பட்டும், போட்டியாளர்களின் முழுவிவரம் மே 29 ஆம் தேதிக்குள் தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பின் வலைப்பக்கதில் பதிவெற்ற வேண்டும் என்று சொல்லப்பட்டு இருந்திருக்கிறது.உண்மையில் கடிதம் வந்தது பற்றியும், அது சம்பந்தப்பட்ட செய்தியினைப் பற்றியும் விழிப்புணர்வு இல்லாமல், ஏனோதானோ என்று அரசு அதிகாரிகள் செயல்பட்டுள்ளார்கள். முக்கியமாக பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்தவர்கள். மேலும் இந்த பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யாமொழி இது குறித்தான எந்த நடவடிக்கையினையும் மேற்கொண்டதாக தெரியவில்லை. தேசிய விளையாட்டு போட்டிகளில்  32 பிரிவுகளின் கீழ் 19 வயத்திற்கு உட்பட்டவர்களுக்கான போட்டிகளில்தான் தற்போது தமிழ்நாடு பங்கேற்கவில்லை. இந்தப் போட்டிக்காக தமிழத்தைச் சேர்ந்த 247 மாணவர்கள், தங்களின் திறமையை வெளிப்படுத்தும் பொருட்டு பயிற்சியில் ஈடுபட்டும் வெற்றிக் கனவோடும் காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தற்போது அவர்களின் கனவுக்கோட்டையானது கானல் நீராக மாறிவிட்டது.மத்திய அமைப்புக்கும், மாநில அமைப்புக்கும் சில தகவல் பரிமாற்றக் கோளாறுகள் உள்ளன என்று அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறது. ஆனால் மத்திய அரசின் திட்டம் என்பதாலேயே 247 மாணவர்களின் லட்சியக் கனவிற்கு முட்டுக்கட்டை இடுகிறதா மாநில அரசு என்றும் சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

via News J : https://ift.tt/t3EdPAN
Mediaதொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் மின்கட்டணத்தை உயர்த்தி, சிறு குறு தொழில்கள் முடங்கும் அபாயத்தை விடியா அரசு உருவாக்கி இருப்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.இந்த கோடையில் வெந்து தணிந்து கொண்டிருக்கும் ஒட்டு மொத்த தமிழக மக்களுக்கும் அறிவிக்கப்படாத மின்வெட்டை பரிசாக கொடுத்து வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது விடியா திமுக அரசு.இப்போது வணிக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு மின் கட்டணத்தை உயர்த்துவதாக ஆளும் திமுக அரசு அறிவித்து அடுத்த பேரிடியை இறக்கி இருக்கிறது.தமிழகத்தில் ஜூலை 1ஆம் தேதி முதல் மீண்டும் மின்கட்டணம் உயர்கிறது என்று அச்சுறுத்தப்பட்ட நிலையில், அது நம்மை நோக்கி வந்தே விட்டது என்னும் ரீதியில் அறிக்கையை வெளியிட்டுள்ளது ஆளும் திமுக அரசு. வணிக மற்றும் தொழில் சார்ந்த கட்டடங்களுக்கு மின்சார கட்டணம் உயர்த்தி அவர்களின் வயிற்றில் அடித்திருக்கிறது தமிழக அரசு.சட்டமன்ற தேர்தலின் போது மின்கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது, மாதந்தோறும் மின்பயனீட்டு அளவு கணக்கீடு செய்யப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்தது திமுக. ஆனால் ஆட்சிக்கு வந்ததும், மின்கட்டணத்தை உயர்த்தி மக்களீன் வாழ்வாதாரத்தை அசைத்துப் பார்த்தது. கொரோனாவால் கலங்கியிருந்த மக்களை இந்த கட்டண உயர்வு கலக்கத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில்தான் 9 மாதங்களில் தற்போது மீண்டும் மின்கட்டணத்தை அதிகரித்துள்ளது திமுக அரசு. அதிமுக ஆட்சியில் மின்மிகை மாநிலமாக இருந்த தமிழகம், திமுக ஆட்சியில் மின்சாரத்துறையின் கபளீகர செயல்களால் மின்சாரத்துக்காக அண்டை மாநிலங்களில் கையேந்தும் நிலையில்தான் உள்ளது.தொடர்ச்சியான மின்வெட்டு, மின்னழுத்த குறைபாடு காரணமாக தொழில் வணிக நிறுவனங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த மின்கட்டணத்தால், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களால் இந்தக் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது. கொரோனா பாதிப்புக்குப் பின் மெல்ல மெல்ல எழுந்துவரும் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மின்கட்டண உயர்வால் மீண்டும் பாதிக்கப்படும். மின்கட்டண உயர்வுக்காக தங்களின் உற்பத்தி பொருட்களின் விலையை அந்நிறுவனங்கள் அதிகரித்தால் அது நுகர்வோர்களை பாதிக்கும் அபாயமும் உள்ளது.தமிழகத்தை தொழிலில் முன்னேற்றுவதாகக் கூறிக் கொண்டு மின்கட்டணத்தை உயர்த்தி சிறு, குறு தொழில் நிறுவனங்களை முடக்கும் வேலையையே திமுக செய்துள்ளதாகவும், மீண்டும் மீண்டும் மக்களின் அதிருப்தியையே விடியா அரசு சம்பாதிப்பதாகவும் தொழில் முனைவோர் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.

via News J : https://ift.tt/EW8NPy3
Mediaசென்னை பேசின் பிரிட்ஜ் ரயில் தண்டவாளத்தில் ஜன் சதாப்தி விரைவு ரயில்தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.Jan Shatabdi Express - Wikipediaநேற்று இரவு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ஜன் சதாப்தி விரைவு ரயில் பயணிகளை இறக்கி விட்டு அங்கிருந்து பேசின் பிரிட்ஜ் ரயில்வே பணிமனைக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து சென்றது அப்போது அந்த ரயில் தடம் புரண்டது இதனால் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தடம் புரண்ட ரயிலை சரி செய்யும் பணி மூன்று மணி நேரமாக நடைபெற்று அதன் பிறகு ரயில் பேஷன் பிரிட்ஜ் பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. திடீரென ரயில் தடம் புரண்டதால் அந்த வழியாக செல்லக்கூடிய ரயில்களை மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டது தடம் புரண்ட ரயிலை மூன்று மணி நேரம் ரயில்வே ஊழியர்கள் பழுதை நீக்கி அதிகாலை 3 மணி்க்கு சரி செய்து ரயில்வே ஊழியர்கள் மீண்டும் பணிமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/aeUmj0l
Mediaதமிழ்நாட்டை ஆண்டுகொண்டு இருக்கும் விடியா திமுக அரசும் அதன் தலைவருமான விடியா முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்டா மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணத்தினை மேற்கொண்டுள்ளார். இந்த சுற்றுப்பயணத்தினை ஆய்வு நோக்குக்காக மேற்கொள்கிறார் என்று சொல்லப்படுகிறது. முக்கியமாக காவிரி டெல்டா பாசன கால்வாய், நீர்நிலைகளில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் என்று விவரம் தெரிந்தவர்கள் சொல்கிறார்கள். பிறகு 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நீரை திறந்துவிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
இதுவெல்லாம் ஒருபுறம் இருக்க, மறைமுகமாக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் வேலையை சலிக்காமல் பார்த்து வருகிறது இந்த விடியா திமுக அரசு. நல்லது செய்வதுபோல ஒரு முலாம் பூசுதலை செய்து பின்னணியில் விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் பணியில் செவ்வனே தங்கள் பணியினை மேற்கொள்கின்றனர். மேட்டூர் அணையைத் திறந்து என்ன புண்ணியம், மேகதாது அணைக் கட்டுவதை தடுக்க முதல்வருக்கு நெஞ்சுரம் உண்டா என்று பொதுமக்களும் விவசாயிகளும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தற்போது மேட்டூர் அணையைத் திறந்துவிட்டு மக்கள் மத்தியில் நற்பெயரை பெறும் நோக்கில் என்ன செயல் வேண்டுமானாலும் செய்யாலாம். ஆனால் பின்னாளில் ஏற்படப்போகும் மிகப்பெரிய பாதிப்புக்கு திமுக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதேனும் எடுத்துள்ளதா என்பது அரசியல் விமர்சகர்களின் கேள்வியாக உள்ளது.தன்னை டெல்டாக்காரன் என்று வழிமொழிந்து பெருமைப்படும் திரு.ஸ்டாலின் அவர்கள், தேர்தலில் கர்நாடக காங்கிரஸுக்கு ஆதரவு அளித்தார். அப்படியென்றால் அவர்களின் தேர்தல் அறிக்கைக்கும் ஆதரவு அளித்திருப்பார்தானே. தேர்தல் அறிக்கையில் மேகதாது அணைக் கட்டுவது குறித்தான திட்டத்திற்கு ஏன் முன் கூட்டியே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, கர்நாடக காங்கிரஸை சேர்ந்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருடன் கொஞ்சிக் குலாவி புகைப்படம் எடுத்து விளம்பர அரசாக உருவெடுத்திருப்பது எந்த மாதிரியான மனநிலை என்று புரியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். திருந்துமா திமுக? என்பதே அனைவரின் வாதமாக இருக்கிறது.

via News J : https://ift.tt/nbo1wAL
Mediaஅதிமுக கழகப் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டமானது வருகின்ற 13/06/2023 அன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்.ஜி.ஆர் மாளிகையில் நடைபெற இருக்கிறது. அதனையொட்டி கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு தலைமைக் கழகம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

via News J : https://ift.tt/eS4Pqa5
Mediaதமிழ்நாடு சுகாதாரத்துறையில் 800 ஓட்டுநர்கள் பணியிடங்கள் காலியான நிலையில் உள்ளது. அதனை நிரப்புவதற்கு உயர்நீதிமன்றம் தற்காலிக தடை விதித்துள்ளது. அதாவது, தமிழக சுகாதாரத்துறையில் தற்காலிக அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களாக நியமிக்கப்பட்ட சரவணன், நெப்போலியன் உள்ளிட்ட 65 நபர்கள் தங்கள் பணியினை நிரந்தரம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தையொட்டி இந்த இடைக்காலத் தடையினை நீதிமன்றம் விதித்துள்ளது.கொரோனா பேரிடர் காலத்தில் துணிச்சலாக செயல்பட்டு பணியாற்றிய தங்களை பணி நிர்ந்தரம் செய்யவில்லை என்றும் மத்திய அரசாங்கம் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யும்போது சுகாதாரத்துறையினருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதையும் முன்வைத்து அவர்களின் கோரிக்கையானது இருந்தது.Photoபணி நிரந்தரம் செய்யக்கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பங்களை எள்ளளவும் விடியா திமுக அரசு மதிக்காமல் கிடப்பில் போட்டு இருக்கிறது. தற்காலிக பணியாளர்களை தவிர்த்து புதிதாக 800 பணியாளர்களை கொண்டு பணியிடங்களை நிரப்புவது ஏற்புடையது அல்ல என்றும் வழக்குத் தொடுத்தவர்கள் கூறிவருகிறார்கள். இவர்களின் வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் பணியிடங்களை நிரப்புவதற்கு இடைக்கால தடையினை விதித்துள்ளது. 

via News J : https://ift.tt/F1RrSYA
Mediaதிமுக அரசானது சிறுகுறு தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியுள்ளது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கண்டன அறிக்கையினை வெளியிட்டுள்ளார். Media Media Media

via News J : https://ift.tt/tpPhq1w
Mediaவாரிசு அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி ஏற்ற பிறகு துறையின் செயல்பாடுகள் பின்னடைவை நோக்கியே செல்வதாக கூறப்படுகிறது. அதே போல உதயநிதி ரசிகர் மன்ற தலைவரான அமைச்சர் அன்பில் மகேஷும் தனது பள்ளிக்கல்வித் துறையில் அக்கறை காட்டாமல் உதயநிதி படத்தை புரமோஷன் செய்வதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.இப்படி தங்களது துறைகளின் மீது இருவரும் அக்கறை காட்டாதது, விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வந்த தமிழக பள்ளி மாணவர்களை இந்த முறை தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கெடுக்க முடியாமல் செய்துள்ளது.கொரோனா காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறாத 19 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய அளவில் நடைபெறும் பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், இந்த ஆண்டு ஜூன் 5ல் தொடங்கி, 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தப் போட்டிகளில்தான் 247 தமிழகப் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ள இயலவில்லை.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் மாவட்ட விளையாட்டு மற்றும் மேம்பாட்டு அலுவலராக இருக்கும் நாகரத்தினம் என்பவரிடமிருந்து
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் முதன்மை உடற்கல்வி ஆய்வாளருக்கு விளையாட்டு போட்டிகள் தொடர்பாக கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கும், உயர் அதிகாரிகளுக்கும் அந்தக் கடிதம் குறித்த தகவல் அனுப்பப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அதிகாரிகளும் அந்த கடிதம் உரியமுறையில் பள்ளிக்கல்வித்துறையில் தெரிவிக்கப்பட்டதா என்பதை கண்டறியத் தவறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இப்படி அரசுத்துறைகளுக்குள் நிகழ்ந்த ஈகோ யுத்தம் மற்றும் தகவல் பரிமாற்ற அசட்டையின் காரணமாக தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதற்காக காத்திருந்த 247 மாணவர்களின் விளையாட்டு எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி உள்ளனர்.இந்த விளையாட்டுகளில் பங்கெடுப்பது மற்றும் வெற்றி பெறுவதன் வழியாக மாணவர்களுக்கு மதிப்பெண்கள் அதிகரிக்கும். இந்த மதிப்பெண்களும், சான்றிதழ்களும் அவர்கள் விளையாட்டு கோட்டாவில் கல்லூரியில் சேருவதற்கும், அரசு வேலைகளில் சேர்வதற்கும் வாய்ப்பாக இருக்கும். ஆனால் விளையாட்டுத்துறை மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அலட்சியத்தால் இரண்டுதுறை அமைச்சர்களும் அதனை கண்டு கொள்ளாததால் விளையாட்டு வீரர்கள் தேசிய அளவிலான போட்டியில் பங்கெடுக்காமல் போயுள்ளனர்.கடந்த அதிமுக ஆட்சியில் 2018 – 19ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டியில்
தமிழக பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்து அகில இந்திய அளவில் ஏழாவது இடத்தை பெற்றனர். ஆனால் விடியா ஆட்சியில் தமிழக விளையாட்டு மாணவர்களின் எதிர்கால ஆசையில் உலை வைத்துள்ளனர் இரண்டு அமைச்சர்களும்.நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் ராம்குமார் மற்றும் செஸா

via News J : https://ift.tt/cvBwQtF
Mediaஅரசியல் காழ்ப்புணர்ச்சினா என்னன்னே தெரியாது என்று பம்மாத்து காட்டும் விடியா திமுக அரசு, அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே கோவையில் மேம்பாலப் பணியினை ஆமை வேகத்தில் நடத்துவதால், அதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அல்லல்படுவது குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் கோவை மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக, காந்திபுரம், கவுண்டம்பாளையம், சக்திசாலை, திருச்சி சுங்கம் சாலை, மற்றும் காந்திபுரம் நூறு அடி சாலை, ராமகிருஷ்ணா சாலை உட்பட பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. மேலும் கோவை அவினாசி சாலை, உக்கடம் – ஆத்துப்பாலம் மேம்பால பணிகள் தொடர்ந்து நடந்து வந்தது.உக்கடம் – ஆத்துப்பாலம் இடையே 2 கிலோ மீட்டர் தூரம் மேம்பாலம் கட்டும் பணி கடந்த 2018ல் தொடங்கப்பட்டு முதல் கட்டமாக, உக்கடம் முதல் கரும்புக் கடை இடையே உள்ள மேம்பால பணிகளுக்கு 216 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பாலத்துக்காக 55 தூண்கள் அமைக்கப்பட்டு அதில் ஓடுதளம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் விடியா திமுக ஆட்சியில் இந்த பாலம் கட்டுமானப் பணி என்பது ஆமை வேகத்திலேயே நடைபெற்று வருவதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகளும் இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.அதே போல பாலம் கட்டுமானப் பணிக்காக நிலத்தை கையகப்படுத்திய விடியா அரசு அதற்கான இழப்பீட்டை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதால் வாழ்வாதாரம் இழந்து தவிப்பதாக வேதனை தெரிவித்துக்கின்றனர் குடியிருப்போர்..நிலம் கையகப்படுத்துவதில் அரசு மெத்தனம் காட்டுவதாலும், நில உரிமையாளர்களுக்கு பணத்தை வழங்க காலதாமதம் செய்வதாலும் கடந்த ஆண்டே நிறைவுபெற வேண்டிய மேம்பாலப்பணிகள் இன்று வரை முடிவடையாமல் இழுத்தடிக்கப்படுவது கோவை மாவட்டத்தை திமுக அரசு தொடர்ந்து புறக்கணித்து வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

via News J : https://ift.tt/lJZb3ve
Mediaகருணாநிதி பிறந்தநாளுக்காக 5 லட்சம் மரக்கன்று நடப்போறதா திமுக கம்பெனி ஒரு பக்கம் டிராமா போட்டுட்டு இருக்கப்போ, அவங்களோட கவுன்சிலர் ஒருத்தரு கட்டிங் வாங்கிட்டு நல்லா வளர்ந்த மரத்த, நடு ராத்திரில வெட்டிட்டு போயிருக்காரு… வாங்க இதைப் பத்தி பாக்கலாம்.ஏற்கனவே வெயில் கொளுத்திட்டு இருக்க நேரத்துல, இப்படி நல்லா வளர்ந்த மரத்த வெட்டி சாய்க்க யாருக்கும் மனசு வராது. ஆனா, திமுககாரங்களுக்கு வரும் போல.சென்னை நுங்கம்பாக்கம் 113வது வார்டுல உள்ள ராமா தெருவில் குடியிருக்கும் ஒருத்தர் கட்டுன புது வீட்டுக்கு முன்னாடி நல்லா வளர்ந்த பூவரச மரம் ஒண்ணு இருந்துச்சு. வீட்ட கட்டுன மனுஷன் தன்னோட வீட்டு அழகையும், வீட்டு வாசலையும் மரம் மறைக்குதுனு பொலம்பியிருக்காரு.இதைக் கேட்டு பொங்கி எழுந்த 113ஆவது வார்டு திமுக கவுன்சிலர் பிரேமாவும், அவரது கணவர் திமுக நிர்வாகியுமான சுரேஷ், நாங்க இருக்கும்போது நீங்க ஏன் வருத்தப்படுறீங்க… நீங்க எங்களை கவனிங்க, நாங்க மரத்த கவனிச்சிக்குறோம்னு நைசா பேசி கட்டிங் வாங்கிட்டு நைட்டோட நைட்டா மரத்தை வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டாங்க..மறுநாள் காலைல இதைப் பாத்த தெருவாசிங்க எல்லாம்… அவங்க நட்டுவச்சு, கூண்டு அமைச்சு பராமரிச்ச மரம் இப்படி சரிஞ்சு கெடக்குறது பாத்து கண்ணீர் வடிக்காத குறையா பொலம்பிட்டு இருக்காங்க. சரி சம்பவம் பண்ணது யாருனு கண்டுபிடிக்க அங்க இருக்க சிசிடிவி கேமராவ செக் பண்ணுவோம்னு போன பொதுமக்களுக்கு காத்திருந்துச்சு ட்விஸ்ட். சம்பவம் பண்ணும்போது கேமரால சிக்கிறக் கூடாதுனு உஷாரான கவுன்சிலர் அன்ட் கோ அங்க போலீஸ்காரங்களால வைக்கப்பட்ட சிசிடிவிய வேறு பக்கமா திருப்பிவிட்டு தடயமே இல்லாம மரத்த வெட்டி சாய்ச்சுட்டு போய்ட்டாங்க.கவுன்சிலர் பங்கு இல்லாம இது நடந்திருக்காது. எல்லாத்துலயும் காசு பாக்குற கவுன்சிலரம்மா இதுலயும் காசு பாத்திருச்சுனு பொதுமக்கள் அடிச்சு சொல்றாங்க. ஒரு பக்கம் கருணாநிதி பிறந்தநாளுக்கு 5 லட்சம் மரக்கன்று நடப்போறோம்னு திமுக டிராமா பண்ணிட்டு இருக்கப்போ, அவங்களோட கவுன்சிலர் ஒருத்தரே நல்லா வளர்ந்த மரத்த போற போக்குல அசால்ட்டா தட்டிட்டு போய்ட்டாருனு ஊர்மக்கள் தலைல அடிச்சுட்டு இருக்காங்க.

via News J : https://ift.tt/gYrsVAb
Mediaஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியானது லண்டன் மாநகரத்திலுள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்து வலுவான ஸ்கோரை எட்டியது. டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித்தின் அதிரடி சதத்தினை விளாசினார்கள். அதற்கு பிறகு களத்தில் இறங்கிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி விளையாடவில்லை. ரோகித் 15, சுப்மன் 13, புஜாரா 14, கோலி 14, ஸ்ரீகர் பரத் 5 என்று அடிக்க ஜடேஜா 48 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார். தற்போது மூன்றாம் நாளான இன்று ரஹானேவும், தாக்கூரும் சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, தற்போது வரையிலான ஆட்டத்தில் இந்திய அணியானது 260 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்துள்ளது.அதிகபட்சமாக ரஹானே 89 ரன்களும், ஷர்துல் 36 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். இவர்கள் இருவரும் இருக்கும்வரை முடிந்த அளவுக்கு இந்திய அணியானது பாலோ ஆனை தடுக்கும் வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இது ஒருபுறம் இருக்க, இந்திய அணியில் அஸ்வின் இடம் பெறாதது மிகப்பெரிய பின்னடைவாக அனைத்து தரப்பினராலும் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தன்னுடைய விமர்சனத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  அதாவது, “புற்கள் அதிகம் உள்ள ஆடுகளத்தில் ஆஃப் ஸ்பின் எடுபடாது என்று யார் சொன்னது, ஜடேஜாவினை நாதன் லியான் அவுட் ஆக்கும் போது பந்து ஆஃப் சைடு திரும்பி நன்றாக பவுன்ஸ் ஆனது. ஆனால் நமது அணி அஸ்வினை எடுக்காதது மிகவும் பின்னடைவானது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/dF5zJIS
Mediaநாகலாந்தில் மாநில அரசு விதித்த தடை ஒன்றினை ரத்து செய்து உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, அம்மாநில மக்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் குத்தாட்டம் போட வைத்துள்ளது. அது என்ன தீர்ப்பு என்பது குறித்து பார்ப்போம்..கவுகாத்தி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்று நாகலாந்து மக்களை ஆனந்தக் கடலில் திக்குமுக்காட வைத்திருக்கிறது. அப்படி என்ன தீர்ப்பு என்று தானே கேட்கிறீர்கள்… அது நாய் இறைச்சியை உண்ணலாம் என்பதுதான்.என்னது, நாய் இறைச்சியா என்று உங்களுக்கு வேண்டுமானால் அது அசூயையாகத் தோன்றலாம் …. ஆனால், அது எங்களின் பாரம்பரிய உணவு… அதை எப்படி தடை செய்யலாம் என்று பொங்கி எழுந்த நாகர் பழங்குடியின மக்களின் போராட்டம் தற்போது வெற்றி அடைந்துள்ளது.மசாஜ் என்றால் தாய்லாந்து நினைவுக்கு வருவது போல, நாய்க்கறி என்றால் நாகலாந்துதான் நினைவுக்கு வரும். நாய்க்கறிக்காகவே பிரத்யேக மார்க்கெட் அங்கு செயல்பட்டு வருகிறது.இந்த நிலையில்தான் ஜல்லிக்கட்டுக்கு எப்படி தமிழகத்தில் பீட்டா அமைப்பு தடைகோரியதோ அதே போன்று விலங்கின ஆர்வலர்கள் அங்கு நாய் இறைச்சிக்கு தடை கோர அந்தப் பிரச்சனை பூதாகரமான நிலையில், கடந்த 2020 ஜூலையில் நாய்க்கறிக்கு தடை விதித்தது மாநில அரசு.இதனால் கொதித்தெழுந்த நாகலாந்து மக்கள், நாய்க்கறி எங்கள் உரிமை என்று வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட, அவர்களுக்கு ஆதரவாக நாய்க்கறி விற்பனையாளர்களும் சேர்ந்து கொள்ள, மாநில அரசின் தடையை எதிர்த்து கவுகாத்தி நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தனர்.இந்த வழக்கின் இறுதி விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வெளியாகியுள்ளது. நாகலாந்து மக்கள் தங்கள் பாரம்பரியமான நாய்க்கறி சாப்பிட தடை எதுவும் கிடையாது. மாநில அரசு விதித்த தடை செல்லாது என்று கவுகாத்தி கோர்ட்டு உத்தரவிட உற்சாகக் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள் நாய்க்கறி பிரியர்கள்.என்னது நாய் லெக் பீஸ் பிரியாணி வேணுமாவா? ஆளை விடுங்க சாமி!– ஆசாத்  

via News J : https://ift.tt/pYil6bm
Mediaஅரசியல் ஈகோ காரணமாக, பல்கலைக்கழகங்களின் பட்டமளிப்பு விழா ஆளுநரால்தான் கிடப்பில் உள்ளதாக அமைச்சர் பொன்முடி கூறியிருப்பதோடு, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை விடியா அரசு பாழக்குவது குறித்து அலசி ஆராய்கிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…தமிழக ஆளுநராக 2021 செப்டம்பரில் ஆர்.என்.ரவி பதவியேற்றது முதலே திமுக, கவர்னருடனான முட்டல் மோதல் போக்கை தொடங்கி உள்ளது. வழக்கமாக மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருக்கும்போது கவர்னரை ஆரத்தழுவி வரவேற்கும் திமுக, அதுவே தான் ஆளும்கட்சியாகவும் மத்தியில் வேறு கட்சியாகவும் இருக்கும்போது ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை என்னும் கொள்கையை கைக் கொள்ளும்.இப்போதும் அதே மனநிலையில் இருக்கும் திமுகவின் மக்கள் விரோத செயல்களுக்கும் தன்னிச்சைப் போக்குக்கும் கடிவாளம் போட்டு வருகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. இதுதான் திமுகவை கடுப்பின் உச்சத்திற்கு கொண்டு போயுள்ளது. அதனால்தான் சட்டப்பேரவையில் ஆளுநரை வரவழைத்து அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுவது, பா.ஜ.க ஆளாத மாநிலங்களில் உள்ள கவர்னர்களுக்கு எதிராக அந்தந்த மாநில அரசை உசுப்பேத்துவது போன்ற வேலைகளைச் செய்துள்ளது. மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை மாநில அரசே நியமிக்கும் என்று கொடிபிடிப்பதும் கவர்னரின் அதிகாரத்தை பறிக்கும் செயலாகவே உள்ளது.
அதன் தொடர்ச்சியாக இப்போது கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழாவிலும் ஆளுநருடன் மோதல் போக்கையே கடைப்பிடிக்கிறது.அதிலும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, எப்போது சட்டப்பேரவையில் ஆளுநரைப் பார்த்து கைகளை நீட்டி அவமரியாதை செய்யும்படி உடல்மொழி காட்டினோரோ அப்போதிலிருந்து ஆளுநருக்கு எதிராகவே அத்தனை வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற துணைவேந்தவர்கள் மாநாட்டில் பொன்முடி பங்கேற்காததும் இதனால்தான்.கொரோனா காலத்துக்குப் பின்னர் பெருவாரியான பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா நடைபெறாததால், தேர்வுகளில் தேர்ச்சி அடைந்த சுமார் 9லட்சத்து 29ஆயிரம் மாணவர்கள் பட்டத்துக்காக காத்துக் கிடக்கின்றனர். வெளிநாட்டில் சென்று மேற்கல்வியைத் தொடர டிகிரி சான்றிதழ் அவசியம் என்பதால் அது இதுவரை கிடைக்காமல் அவர்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர்.
ஆளுநர்தான் பட்டமளிப்பு விழாவுக்கு தேதி தராமல் இழுத்தடிப்பதாக பொன்முடி குற்றச்சாட்டு சொல்ல, ஆளுநர் தரப்பிலோ பட்டமளிப்பு விழாவுக்கு தேதி தரப்பட்டுள்ள விவரத்தை வெளியிட்டுள்ளனர்.பட்டமளிப்பு விழா தொடர்பாக அமைச்சர் பொன்முடி ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிப்பது அம்பலமாகி உள்ள நிலையில், விடியா ஆட்சியின் அரசியல் ஈகோவால் மாணாக்கர்களின் எதிர்காலம் பாழாவதாக ஆதங்கம் தெரிவிக்கின்றனர் கல்வியாளர்கள்.– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்.

via News J : https://ift.tt/qsTHKOM
Mediaகோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்ப்டுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு  நான்கு மணிநேரமானது பற்றாக்குறை ஏற்படும் நிலையானது உள்ளது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பாட வகுப்புகள் நடத்துவதற்காக சனிக்கிழமைகளிலும் பாட வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை  எடுக்க உள்ளது. மாணவர்களுக்கு பாடச் சுமைகள் இல்லாதவாறும், ஆசிரியர்களுக்கு பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வரும் மாணவர்களுக்கு சனிக்கிழமை வகுப்புகள் எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது.இதெல்லாம் ஒரு புறம் இருக்க தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பள்ளிகள் தலைமையாசிரியர்கள் இல்லாமல் இயங்க உள்ளது. அதற்கான நடவடிக்கையினை இந்த விடியா திமுக அரசு ஏன் எடுக்காமல் தட்டி கழிக்கிறது என்று ஆசிரியர்கள் சிலர் குற்றம் சாட்டுகின்றனர். தமிழக பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு 40,000 கோடி ஒதுக்கத் தெரிந்த அரசுக்கு, தலைமையாசிரியர்களையும் 12,000 ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் நிரப்புவதற்கு ஏன் எந்த நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை.மேலும் தேசிய அளவிலான பள்ளிகள் விளையாட்டிற்கு தேசிய விளையாட்டு கூட்டமைப்பு கடிதங்கள் அனுப்பியும் பயிற்சியில் ஈடுபட்டு வந்த 247 மாணவர்களின் கனவினை சிதைத்து இருக்கிறது பள்ளிக்கல்வித்துறை. திறனற்ற அரசாக செயல்படும் திமுகவினால் மாணவர்களின் கல்வித்தரம்., விளையாட்டுத் திறன் போன்ற பல திறமைகள் பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

via News J : https://ift.tt/Twp1fDQ
Mediaமதுரவாயல் பகுதியில் தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் விடியா திமுக ஆட்சியில் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை வாகன ஓட்டிகளை மெய் சிலிர்க்க வைத்துள்ளது. அப்படி என்ன புல்லரிக்கும் நடவடிக்கை? பார்ப்போம்.போலீஸ் பாதுகாப்போட, திருநங்கை ஒருவர் இப்படி சாலையோரமா பூசணிக்காய சுத்தி, திருஷ்டி கழிக்கிறது எங்க தெரியுமா, சென்னை மதுரவாயல் சாலையிலதான்…சென்னையில மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகள்ல அடிக்கடி சாலை விபத்துகள் ஏற்பட்டு, உயிரிழப்புகள் தொடர்கிறது. வியாழக்கிழமை கூட அடுத்தடுத்து நிகழ்ந்த ரெண்டு விபத்துகள்ல, 2 பேர் உயிரிழந்திருக்காங்க… போலீஸ் தரப்புல இருந்து, போக்குவரத்து நெரிசலயும் விபத்துகளைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கிறதா சொல்லப்பட்டாலும், தினந்தோறும் இந்த சாலைகள் எல்லாம் யாருடைய ரத்தத்தையாவது டேஸ்ட் பண்ணாம விடுறதில்ல…இப்படி ரத்தப்பழிவாங்குதே இந்த சாலைகள் எல்லாம்… ஒருவேளை இது ஏதாவது பேய் சேட்டையா இருக்குமோன்னு போலீஸ்காரங்களுக்கு ஒரு சந்தேகம் வந்திருக்கு… எதுக்கும் ஒரு கழிப்பு கழிச்சிடுவோமேன்னு, எங்கெல்லாம் அடிக்கடி விபத்து நடக்குதோ அந்தப் பகுதியில போய் திருஷ்டி பூசணிக்காய் உடைச்சிருக்காங்க… இதுக்காக காருலேயே ஒரு திருநங்கைய கூட கூட்டிட்டு போய், இந்த திருஷ்டி கழிப்ப செஞ்சிருக்காங்க…சாலையோரமோ போலீஸ் பாதுகாப்போட திருநங்கை ஒருத்தரு திருஷ்டி பூசணிக்காய் சுத்துறத அந்தப்பக்கமா போன வாகன ஓட்டிகள் எல்லாம் பார்த்து மெர்சலாயிட்டாங்க…அதே நேரத்துல ரோட்டோரமா திருஷ்டி பூசணிக்காய உடைச்சி விபத்து ஏற்பட வழிவகுக்குறவங்க மேல நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸே இப்படி பண்ணலாமான்னும் சிலபேரு ஹெல்மெட்டுல அடிச்சிகிட்டு போயிருக்காங்க…எப்படியோப்பா… வெள்ளிக்கிழமை அதுவுமா பூசணிய உடைச்சிட்டோம்… விபத்து நடக்காம இருந்தா சரிதான்னு போலீஸ்காரங்க பேசிக்கிட்டே அடுத்த பாயிண்டுக்கு திருநங்கைய காருல ஏத்திட்டு போயிட்டாங்க.

via News J : https://ift.tt/nNk0ZXc
Mediaஇறந்த பிறகு கண் தானம் செய்வதை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 10ஆம் தேதி உலக கண் தான தினம் கடைபிடிக்கப்படுகிறது.நாம் இறந்த பின்னும் கண்தானம் செய்வதனால் மற்றொருவர் மூலம் நம் கண்களால் இந்த உலகை பார்க்க முடியும். இறந்த பிறகு மண்ணோடு மண்ணாக மக்கி போகும் நம் உடல் உறுப்புகளை, மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பதன் மூலம், நாம் இறந்தும் பலருக்கு வாழ்வளிக்க முடிகிறது.2,050-ம் ஆண்டு சர்வதேச அளவில் கண் பார்வையற்றோரின் எண்ணிக்கை 11 கோடியே 50 லட்சம் ஆக அதிகரிக்கும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.இங்கிலாந்தில் உள்ள ஏஞ்சிலியா ருக்சின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் சர்வதேச அளவில் கண் பார்வையற்றோர் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அதில் சர்வதேச அளவில் 3 கோடியே 60 லட்சத்துக்கும் மேற்பட்ட கண் பார்வையற்றோர் உள்ளனர் என தெரியவந்தது. நம் இந்தியாவில் மட்டும் ஒன்றரை கோடிக்கும் அதிகமானவர்கள் உள்ளனர். நாம் அனைவரும் கண்தானம் செய்ய முன்வந்தால், இந்தியாவில் பார்வையற்றவர்களை பார்வை உடையவர்களாக மாற்ற முடியும்.நவீன காலத்தில் கணினி மற்றும் கைபேசியோடுதான் வாழ்க்கையை நடத்துகின்றனர் இன்றைய இளைஞர்கள். இது கண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தி சிறு வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்பட காரணமாக அமைகிறது.எனவே, கணினி மற்றும் மொபைல் ஃபோன்களைப் பயன்படுத்துவோர், அடிக்கடி கண்களை மூடியும், சிமிட்டவும் செய்ய வேண்டும். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையும் கண்களை பரிசோதனை செய்து கொள்வது சிறந்தது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.வேகமான விஞ்ஞான வளர்ச்சியில் விதவிதமாய்க் கண்டுபிடிப்புகள் பெருகியும்கூட கண்டுபிடிக்கப்படாத செயற்கை வரிசையில் முக்கிய இடம் வகிப்பது ரத்தமும், கண்களும்.இறந்த பின்னர் மண்ணோடு மண்ணாக செல்லும் கண்களை தானம் செய்தால் அவை பிறரின் வாழ்வில் ஒளியேற்ற உதவும் என்பதே மருத்துவர்கள், தன்னார்வலர்களின் விழிப்புணர்வு வாசகமாகும்.அனைவரும் கண்தானம் செய்வோம்! பிறர் கண் மூலமாக மீண்டும் உயிர்வாழ்வோம்!!– ராஜா சத்யநாராயணன்.

via News J : https://ift.tt/Au4qjdH
Mediaமத்திய அரசு வெளியிட்டுள்ள 2022ஆம் ஆண்டிற்கான டிஜிட்டல் பரிவர்த்தனை தரவரிசைப் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 89.5 மில்லியன பணப் பரிவர்த்தனைகள் டிஜிட்டல் மூலம் நடைபெற்று இருக்கிறது. இதனை வேறு எந்த உலகநாடுகளும் நிகழ்த்திக்காட்டவில்லை. இந்த தரவரிசைப் பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்தபடியாக, பிரசேலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது. சீனா மூன்றாம் இடமும், நான்காம் இடத்தில் தாய்லாந்தும், ஐந்தாவது இடத்தில் தென்கொரியாவும் உள்ளது.

via News J : https://ift.tt/aX26Oy9
Mediaதங்கத்தின் விலை நாள்தோறும் ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்ட 9ஆயிரத்து 436 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தங்கக்கடத்தல் குறித்து புள்ளிவிவரத் தொகுப்பினை காண்போம்…இந்தியாவில் தங்கம் இறக்குமதி செய்வதில் அன்னிய செலாவணி பெருமளவில் ஈட்டப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் இறக்குமதி செய்ய மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. அதே நேரத்தில், தங்கத்தின் சந்தை மதிப்பு காரணமாக, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக வரி ஏய்ப்பு செய்து தங்கத்தை கடத்தி வருவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.மியான்மர் மற்றும் வங்கதேசம் வழியாக அதிக அளவிலும், மேற்கு ஆசிய நாடுகளில் இருந்து 20 சதவீதம் அளவுக்கும் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு 2020-ஆம் ஆண்டில் கடத்தி வரப்பட்ட 375 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, 676 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதே போல 2021ஆம் ஆண்டு 322 புள்ளி 11 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு 521 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டு 888 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 519 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.2023 -ஆண்டில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 152 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 101 புள்ளி13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் கடந்த 3 வருடங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் குறித்தும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா முழுவதும் 2020 ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 567 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2 ஆயிரத்து154 புள்ளி 58 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.2021ஆம் ஆண்டில், 2 ஆயிரத்து 383 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டு 2 ஆயிரத்து 445 வழக்குகள் பதிவாகி உள்ளது.அதுவே 2022 ஆம் ஆண்டில், 3 ஆயிரத்து 982 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3 ஆயிரத்து 502 புள்ளி 16 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மட்டும் 875 வழக்குகளில், 917 புள்ளி 37 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது ((GFX 02 OUT))வருவாய் புலனாய்வுத்துறையின் அறிக்கையின் படி கடந்த 2020 ஜனவரி முதல் 2023 பிப்ரவரி வரை தமிழகத்தில் 2 ஆயிரத்து 237 தங்கக் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஆயிரத்து 317 கிலோ தங்க பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்திய அளவில் 9 ஆயிரத்து 869 வழக்குகளில் 9 ஆயிரத்து 436 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வெளிநாடுகளில் இருந்து தங்கம் அதிக அளவில் தமிழகத்திற்கு கடத்தி வருவது வருவாய் புலனாய்வு துறை அறிக்கைகளின் மூலம் அம்பலமாகியுள்ளது.– ராம்குமார் மற்றும் ஆசாத். 

via News J : https://ift.tt/CIuzFEv