News J
594 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஆவினில் குழந்தை தொழிலாளர்கள் பணியமர்த்தப்பட்ட விவகாரத்தை மூடி மறைக்க ஆவின் நிர்வாகம் செட்டில்மெண்ட் பேசியிருப்பது அம்பலமாகி உள்ள நிலையில், விடியா ஆட்சியில் பால்வளத்துறை என்றாலே பஞ்சாயத்துதானா என்பது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்…ஒரே பதிவெண் கொண்ட இரண்டு வாகனங்கள் மூலம் பல லட்சம் லிட்டர் பால் திருடப்பட்ட புகார் பூதாகரமாகி இருக்கும் நிலையில், குழந்தை தொழிலாளர் சர்ச்சையிலும் சிக்கியிருக்கிறது ஆவின் நிர்வாகம்.குழந்தை தொழிலாளர்களை எந்த வேலைகளிலும் பணியமர்த்தக்கூடாது என்று சட்டம் சொல்லும் நிலையில், அதனை மீறி அரசு நிறுவனமான ஆவின் நிர்வாகம் 50க்கும் மேற்பட்ட சிறார்களை ஒப்பந்ததாரர்கள் மூலம் பணியமர்த்தி இருக்கிறது.சென்னை அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் ஐஸ்கிரீம், பால் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கும் பணியில்தான் இந்த சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தினசரி 300 ரூபாய் ஊதியத்துக்கு வேலைக்கு வந்து சென்ற சிறுவர்களுக்கு சம்பளத்தை முழுவதுமாக தராமல் ஒப்பந்ததாரர்கள் ஏமாற்றியதாகக் கூறி ஆவின் நிறுவனத்திற்கு முன் போராட்டத்தில் சிறுவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். அப்போதுதான், ஆவின் நிறுவனத்தில் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு வைத்திருப்பது அம்பலமானது. ஆனால், ஆவின் அமைச்சர் மனோ தங்கராஜோ, சிறுவர்களா? அப்படி யாரும் வேலைக்கு வைக்கப்படவில்லை என்று ஊடகங்களிடம் மழுப்பல் காட்டி வருகிறார்.கோடைக்காலத்தில் ஐஸ் விற்பனை அதிகரிக்கும் என்பதால் ஒப்பந்ததாரர்கள் வழியாக சிறுவர்களை பணியில் எடுத்ததும், ஒப்பந்ததாரர்கள் குறைந்த அளவிலானாவர்களை வேலையில் வைத்துக் கொண்டு அதிகம் பேரை வைத்திருப்பதாகக் கூறி அரசிடம் பணம் பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சருக்கு தெரியாமல் இது நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்பவர்கள், தற்போது இந்த விவகாரத்தை மூடி மறைக்க சிறுவர்களின் பெற்றோர்களிடம் செட்டில்மெண்ட் பேசப்பட்டதாகவும் சொல்கிறார்கள்.ஏற்கனவே ஆவினில் பல்வேறு சர்ச்சைகள் நிலவியதால்தான் துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு மனோ தங்கராஜ் ஆவின் அமைச்சரானார். ஆனாலும் பால்வளத்துறையில் பஞ்சாயத்துகள் தொடர்ந்து வருவதைப் பார்த்தால், விடியா அரசு ஆவினுக்கு பால் ஊற்றாமல் விடாதோ என்னும் சந்தேகம் கிளம்பியிருப்பதாக வேதனை தெரிவிக்கிறார்கள் ஆவின் நிறுவன ஊழியர்கள்.– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்

via News J : https://ift.tt/2kFOhom
Mediaஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி உலகெங்கிலும் உலக குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இது பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்குழந்தைத் தொழிலாளர்களுக்கு சிறப்பான, இலவசக் கல்வியை அளிப்பது மற்றும் அவர்களை குழந்தை தொழிலாளர்களாக யாரும் பயன்படுத்தாமல் பாதுகாப்பதும் குழந்தைத் தொழிலாளர்கள் எதிர்ப்பு தினத்தின் இலக்காக உள்ளது.ஆய்வுகளின்படி, தற்போது 5 லிருந்து 15 வயதுக்கு உட்பட்ட 15.2 கோடி குழந்தைகள் குழந்தை தொழிலாளர்களாக உள்ளதாக சில கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இவர்களில் பலர் உடல்நலம் நலிந்து ஆபத்தான நிலையில் உள்ளது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.நாம் சாலையில் பயணிக்கும் போது, சிக்னலில் வண்டியை நிறுத்தும் போது சின்ன சின்ன குழந்தைகள், ஏதேதோ பொருட்களை விற்றபடி சாலையை கடந்து, நம் வாகனங்களின் அருகில் ஓடி வருவதைப் நம்மால் இன்றும் பார்க்க முடிகிறது. மேலும், சிறுவர்களை கட்டடங்கள் கட்டும் இடங்களிலும், ஹோட்டல்களில் மேஜை துடைப்பதையும் நாம் கவனிக்கிறோம். அத்தகைய குழந்தைகளின் உரிமையை காப்பாற்றும் விதமாக குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.சில பெற்றோரும் குழந்தைகள் பணிபுரிந்தால் தமக்கு பொருளாதார உதவியாக இருக்கும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் தாற்காலிக நலனுக்காக குழந்தைகளின் எதிர்காலத்தை பாழ் செய்கிறார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.இந்தியாவில் அரசியலமைப்பின் தொழிற்சாலை சட்டம், குழந்தை தொழிலாளர் சட்டம், சிறார் நீதிச் சட்டம் போன்ற குழந்தை தொழிலாளர்களை மீட்க பல சட்டங்கள் உள்ளன. 2025ம் ஆண்டுக்குள் குழந்தை தொழிலாளர்களே இல்லாமல் செய்ய வேண்டும் என்பதை இலக்காக கொண்டு பல நாடுகள் முயற்சித்தும் வருகின்றன.– ராஜா சத்யநாராயணன்

via News J : https://ift.tt/8w54xT1
Mediaகோடை விடுமுறை முடிந்து இன்று முதல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் தொடங்கின. உயர் வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்றுள்ள ஒவ்வொரு மாணவர்களும் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வருகின்றனர்.2022 – 2023 கல்வி ஆண்டில் பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் கடந்த ஏப்ரல் 29 ஆம் தேதியுடன் நிறைவடைந்து கோடை விடுமுறையானது மே மாதம் முழுவதும் விடப்பட்டது. அதன் பின்னர் முதல் கட்டமாக ஜூன் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான வெப்பம் காரணமாக பள்ளிகள் திறக்கும் தேதி ஜூன் ஏழாம் தேதியாக நீட்டிக்கப்பட்டது.அதன் பின்னரும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பநிலை தொடர்ந்து பதிவாகி வந்ததன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி மீண்டும் பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையை நீட்டித்து பள்ளிகள் திறக்கும் தேதியை ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஜூன் 14ஆம் தேதியும் 6 முதல் 12 ஆம் வகுப்பிற்கு ஜூன் 12ஆம் தேதியும் திறக்கப்படும் என அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை.அதன்படி கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் செயல்பட தொடங்குகிறது.

via News J : https://ift.tt/eZqXQbA
Mediaஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஃப்எஸ் உட்பட 24 இந்திய குடிமை பணிகளுக்கு கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியானது.மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்திய குடிமைப் பணிகளான ஐ ஏ எஸ், ஐ பி எஸ், ஐ எஃப் எஸ், உள்ளிட்ட பணிகளுக்கான முதல் நிலை தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை எழுதுவதற்காக சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்தனர். தமிழகத்தில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 14 ஆயிரத்து 624 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றிருப்பதாக மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களுக்கு, அடுத்ததாக நடைபெற உள்ள முதன்மை தேர்வுக்கான அழைப்பு கடிதம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அனுப்பப்படும். இந்த தேர்வு வருகிற ஜூலை மாதம் நடைபெறலாம் என யூ பி எஸ் சி தெரிவித்துள்ளது. முதன்மை தேர்வில் வெற்றி பெறும் தேர்வர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அதில் வெற்றி பெறுபவர்கள் இந்தியாவின் உயர் பதவிகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

via News J : https://ift.tt/cFwv5X3
Mediaசென்னை மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான மரப் பாதை சேதமடைந்து, நாய்கள் சவாரி செய்யும் பாதையாக மாறியுள்ளது. கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து அனாமத்தாக விடப்பட்ட நடைபாதையின் நிலைமை குறித்து பார்க்கலாம்.விடியா ஆட்சியில் பயங்கர விளம்பரங்களுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த மரப்பாலம் தற்போது பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளது.சென்னை மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடல் அலையை ரசிக்கும் வகையில் ரூபாய் 1 புள்ளி 14 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது மரப்பலகையால் ஆன பாலம். கடந்த நவம்பரில் திறக்கப்பட்ட இந்த பாலம், டிசம்பரில் கரையைக் கடந்த மாண்டஸ் புயலின்போது சேதமடைந்தது. அப்போதே இது விமர்சனத்துக்குள்ளானது.இந்நிலையில் மீண்டும் சீரமைக்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட இந்த மரப்பாதையை பொதுமக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் மரக்கட்டைகள் அனைத்தும் சேதமடைந்து, மாற்றத்திறனாளிகளின் சக்கர நாற்காலி செல்வதற்கு சிரமமான வகையில் மாறி உள்ளது.மாற்றுத் திறனாளிகள் பயணிக்கும் மரப்பாதையில் சிலர் தங்களது வளர்ப்பு நாய்களை வாக்கிங் அழைத்துச் செல்வதும், மரப்பாதையின் கம்பிகள் மீது அமர்ந்து சேதப்படுத்தியும் உள்ளனர். மேலும், இதைப் பயன்படுத்த வெறும் இரண்டு சக்கர நாற்காலிகளே வைக்கப்பட்டுள்ளதால் விடுமுறை தினங்களில் கடற்கரையை காண வரும் பல மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதனால் மரப்பாதை அமைக்கப்பட்டதற்கான பயனை இழந்து காட்சியளிக்கிறது.மேலும் இரவு நேரத்தில் குடித்துவிட்டு மரப்பாதை தடுப்பு பலகைகளை, மது போதை ஆசாமிகள் உடைக்கின்றனர் என்ற குற்றச்சாட்டை இங்குள்ள துப்புரவுப் பணியாளர்கள் முன்வைக்கின்றனர். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்தாலும் அதன் அடிப்படையில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.மக்கள் வரிப்பணத்தில் கட்டி முடிக்கப்பட்ட மரப்பாதையை, இப்படி பராமரிப்பின்றி விடுவதால் யாருக்கு என்ன லாபம் என மாற்றுத்திறனாளிகள் கேள்வி எழுப்புகின்றனர்…– செய்தியாளர் மு.முருகேசன், ஒளிப்பதிவாளர் பிரேம் மற்றும் சித்தார்த். 

via News J : https://ift.tt/XqhHP5C
Mediaமாநிலப் பிரிவினையின் போது கேரளாவிடம் செல்ல இருந்த கன்னியாகுமரி மாவட்டத்தினை தன் போராட்டத்தின் மூலம் தமிழகத்திற்கே மீட்டெடுத்தவர் மார்ஷல் நேசமணி. அவரது பிறந்தநாளான இன்று அவரின் நினைவைப் போற்றி கழகத்தின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.கொடிய சாதிய தீண்டாமையை எதிர்த்து, மாநில உரிமையை போராடி மீட்டெடுத்து, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க அரும்பாடுபட்ட தென் எல்லை காவலர் என்று போற்றப்படும் “குமரித்தந்தை” ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழையும், தியாகத்தையும் போற்றி வணங்குகிறேன்.கொடிய சாதிய தீண்டாமையை எதிர்த்து, மாநில உரிமையை போராடி மீட்டெடுத்து, குமரி மாவட்டத்தை தாய் தமிழகத்துடன் இணைக்க அரும்பாடுபட்ட தென் எல்லை காவலர் என்று போற்றப்படும் “குமரித்தந்தை” ஐயா மார்சல் நேசமணி அவர்களின் பிறந்தநாளில் அவரின் புகழையும், தியாகத்தையும் போற்றி… pic.twitter.com/LHvwNzJ15E— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) June 12, 2023

via News J : https://ift.tt/SNT94U1
Mediaஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியானது முடிவடைந்ததையொட்டி, அதில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதானால் இந்தியாவைச் சேர்ந்த சீனியர் வீரர்கள் தற்போதைய இந்திய அணியின் கள செயல்பாடுகளைக் குறித்து விமர்சனம் செய்து வருகிறார்கள். முக்கியமாக இந்தியாவின் முன்னாள் அதிரடி வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணி வீரர்களின் செயல்பாடுகள் குறித்து தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.ரோகித், ரஹானே, கோலி, புஜாரா போன்ற வீரர்கள் எத்தனை ஆண்டுகளாக விளையாடி வருகிறார்கள்? அத்தனை அனுபவத்திற்கு பிறகும், டி20 தொடரில் விளையாடிவிட்டு வருவதால், டி20க்கு ஏற்ற ஷாட்களை விளையாடி அவுட் ஆனார்கள் என்று சாக்கு போக்கு சொன்னால், எந்த காலத்திலும் நீங்கள் கோப்பையை வெல்ல முடியாது. என்னத் தவறு நடந்தது என்பதை ஆராய்ந்து கண்டிப்பான முடிவுகளை இந்திய அணி நிர்வாகம் எடுக்க வேண்டும். அதை செய்யத் தவறினால், ஆசியக் கோப்பை தவிர்த்து, வேறு எந்த கோப்பையையும் கடைசிவரை இந்திய அணியால் வெல்ல முடியாது என்று சுனில் கவாஸ்கர் தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியானது விளையாடப் போகிறது. மே.இந்திய தீவுகள் அணி ஒன்றும் சிறப்பான அணி இல்லை. அவர்களுடன் மோதி 2-0 என்று வென்றாலும் அதனால் எந்த பயனும் இல்லை. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒருவேளை மீண்டும் ஆஸித்திரேலியா அணியை எதிர்கொள்ளும் நிலை வந்தால் இந்திய அணி செய்த தவறையே மீண்டும் செய்யும்.

via News J : https://ift.tt/wvLoaVi
Mediaகோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 12 ஆயிரம் தலைமை ஆசிரியர் பணியிடங்களும், 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்…கோடை விடுமுறை முடிவடைந்து 2023-24ஆம் கல்வி ஆண்டுக்காக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை விநியோகிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை தயாராக இருப்பதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், புத்தகங்களை விநியோகிக்கவும், மாணவர்களுக்கு கற்பிக்கவும் போதிய அளவில் ஆசிரியர்கள் இல்லை என ஆசிரியர்கள் சங்கங்கள் குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகின்றன.தமிழகத்தில் 700 அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களும், 435 அரசு உயர்நிலை பள்ளிகளுக்கு தலைமை ஆசிரியர்களும், சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமான தொடக்கப் பள்ளிகளுக்கான தலைமை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைத்து வைக்கப்பட்டு வருகின்றன.இதேபோல் தமிழகம் முழுவதும் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்களும் காலியாக இருப்பதாக தமிழக ஆசிரியர் கூட்டணி புகார் தெரிவிக்கின்றன.தமிழகத்தில் 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். அதேபோல போதிய பணி அனுபவத்தோடு பலர் தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கு காத்திருக்கின்றனர். ஆனால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்பாமல் பள்ளிகளைத் திறப்பதால் மாணவர்களின் கல்வி பெரியளவில் பாதிக்கப்படும் என ஆசிரியர் சங்கங்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.தனது நண்பரான வாரிசு அமைச்சரின் புதுப்பட புரமோஷனில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவ்வப்போது தனது துறையில் நிலவும் சிக்கல்களில் கவனம் செலுத்தினால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்கும்…– செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் சித்தார்த்…

via News J : https://ift.tt/ulWDXTg
Mediaஅண்ணாமலை அதிமுக-வை பற்றி பேசுவது இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். சென்னை பட்டினபாக்கத்தில் அவருடைய இல்லத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,பாஜக தலைவர் அண்ணாமலை நாவடக்கம் இல்லாமல், கூட்டணி தர்மமும் இல்லாமல் செயல்பட்டு வருகிறார். மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களை தவறாக பேசியது நாங்கள் கண்டிக்கிறோம். அண்ணாமலைக்கு ஒரு வரலாறும் தெரியாது,ஒரு பாரம்பரியம் தெரியாது. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஒரே நோக்கத்தோடு செயல்பட்டு வருகிறார்.பாஜகவும், அதிமுகவும் கூட்டணியாகவும், ஒற்றுமையாக இருந்தும், அண்ணாமலை பொறுப்பு ஏற்ற நாளிலிருந்து தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டு தான் வருகிறார். பாஜக மற்றும் அதிமுக ஒன்று சேர்ந்து கூட்டணி தொடரக்கூடாது என்ற எண்ணம் தான் அவருக்கு உண்டு. தற்போது அவர் செய்யும் செயல்பாடுகள் அதை நோக்கி தான் செல்கிறது. இப்பொழுது நாடாளுமன்ற தேர்தல் வைத்தாலும் கூட நாங்கள் 30 தொகுதிகளை கைப்பற்ற முடியும்.ஊழல் குறித்து அண்ணாமலை பேசலாம். ஆனால் அதை பேச தவறுகிறார் ஏன் என்று அவருக்கே தெரியும். மாநில தலைவருக்கு சிறிதளவும் தகுதி இல்லாதவர் அண்ணாமலை. அதிமுக உடன் கூட்டணி இருக்கும்போது தான் பாஜக-விற்கு ஒரு அடையாளம் இருக்கும். இதுபோன்று தொடர்ந்து அண்ணாமலை எங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பேசி வந்தால் கூட்டணி குறித்து மறு ஆலோசனை நடைபெறும்.அண்ணாமலை ஒரு நடைமுறை தெரியாதவர். அவர் வாயை அடக்கிக் கொண்டு கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் அதுதான் எல்லோருக்கும் நல்லது இல்லை என்றால் எங்களுக்கு இழப்பு கிடையாது. அதிமுக-விற்கு ஒரு எல்லை உண்டு அது வரை நட்பு ரீதியாக செயல்படுவோம். தமிழக அரசாங்க சட்டமன்றத்தில் நான்கு வருடங்களுக்குப் பின் நான்கு சீட்டுகள் பாஜக சார்பில் நிற்பதற்கு காரணம் அதிமுக தான்.கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு – எதை வேண்டுமானாலும் எடுத்தேன் கவுத்தேன் எதையும் செய்யக்கூடாது.நாங்கள் நட்புரீதியாக தான் கூட்டணி வைத்து இருக்கிறோம். ஆனால் அவர்கள் அது போன்று செயல்படவில்லை. அண்ணாமலை அதிமுகவில் கூட்டணி இருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டு வருகிறார். ஆனால் தலைமையில் உள்ளவர்கள் கூட்டணியில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.அண்ணாமலை அதிமுக-வை பற்றி பேசுவது இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நாங்கள் எதை வேண்டுமானாலும் செய்வோம். அதிமுக ஒரு பெரிய ஆலமரம். பாஜக ஒரு சின்ன செடி. அடுத்தக்கட்ட நடவடிக்கையை தொடர மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் ஜே.பி.நட்டா தான் முடிவு செய்ய வேண்டும். பாரத ஜனதா கட்சி, அதிமுக காட்சியுடன் கூட்டணியில் இருந்தால்தான் பலம் என அவர் கூறினார்.

via News J : https://ift.tt/YV6TFqx
Mediaசேலத்தில் அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்து ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி இருப்பது குறித்தும், இந்த நிகழ்வுகள் எல்லாம் காமா பயில்வானை நினைவுபடுத்துவதாக எதிர்க்கட்சித்தலைவர் பேசியிருப்பது குறித்தும் அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்….கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அடிக்கல்நாட்டிய டபுள் டக்கர் பஸ் ஸ்டாண்டை இப்போது, ரிப்பன் வெட்டி திறந்து வைத்திருக்கிறார் விடியா திமுக அரசின் முதல்வர் ஸ்டாலின்… வழக்கம்போல, அதிமுக அரசின் திட்டத்திற்கு பெரிய்யய ஸ்டிக்கரா ஒட்டியிருக்கிறார்.மக்கள் பணி செய்யவே நேரம் போதவில்லை , மக்கள் விரோதிகளைப் பற்றி பேச நேரமே இல்லை என்று தனது திருவாய் மலர்ந்திருக்கிறார் முதல்வர். திமுக ஆட்சியில் நடக்கும் மக்கள் விரோத பிரச்சனைகள் குறித்தும், அமைச்சர்கள் செய்யும் உள்ளடி வேலைகள் குறித்தும், ஊழல்கள் குறித்த குற்றச்சாட்டுகளுக்கு எல்லாம் பதிலளிக்க முடியாமல், அதற்கு திராணியில்லாமல், கேட்ட கேள்விக்கு தெறித்து ஓடிவதைப் பார்க்கும்போது, புல்தடுக்கி பயில்வான் தான் நினைவுக்கு வருவதாக கடுமையாகவே சாடி இருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிசாமி..நேற்று சேலத்தில் திறக்கப்பட்ட மாநகரப் பேருந்து நிலையம் சில மணி நேரத்திலேயே இருளில் மூழ்கியது… இதுதான் உங்க விடியாலாங்க என்று தலையில் அடித்தபடியே சென்றார்கள் சேலத்து மக்கள்… ஊரில் திருவிழா மார்பில் சந்தனம் என்று கொஞ்சம் கூட கூச்சநாச்சம் இன்றி அதிமுகவின் திட்டங்களை திறந்துவைத்துவிட்டு வாயில் வடை சுட்டுக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்…திரும்பிய இடமெல்லாம்,திமுகவின் தில்லுமுல்லுகள்…. காணும் இடமெல்லாம் மக்களுக்கு கஷ்டங்கள்… நாள் ஆக ஆக வெளுக்கும் திமுகவின் சாயம் …. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் ஒவ்வொரு துறையிலும் பஞ்சாயத்துக்கள் என்று தூக்கம் தொலைத்த ஸ்டாலினின் ஆட்சியில் மக்களும் நிம்மதியை தொலைத்து நிற்கின்றனர்…ஆக, அதிமுக தொடங்கிவைத்த திட்டங்களை நிறுத்தி வைத்துவிட்டு, முடிவடைந்த திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்துக்கொண்டிருக்கும் ஸ்டாலினைத்தான் புல்தடுக்கி பயின்வான் என்று குறிப்பிடுகிறாரா எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி? என்பதை மக்களே தீர்மானித்துக்கொள்ளட்டும்.

via News J : https://ift.tt/1Jgb48u
Mediaசென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்க துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலையில்  மின்சார துறை மற்றும் மதுவிலக்கு, ஆய்த்தீர்வு துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியின் வீட்டில் காலை முதல் மூன்று வாகனங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். டாஸ்மார்க் மூலம் பல நூறு கோடி ரூபாய்யை அமைச்சர் செந்தில் பாலாஜி சுருட்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது முன்வைக்கப்பட்டன. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே பழனிச்சாமி சென்னை கிண்டியில் மாபெரும் பேரணியாக சென்று தமிழக ஆளுநரிடம் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் தமிழக முழுவதும் முறைகேடாக பல ஆயிரம் மதுபானக்கூடங்கள் இயங்குவதாகவும், இதன் மூலம் 24 மணி நேரமும் மதுபானம் விற்பனை செய்யப்பட்டு, அதன் மூலம் வரும் வருமானத்தை அப்படே எடுத்து கொள்வதாகவும், அரசுக்கு கலால் வரியாக செலுத்தாமல் அப்படியே செந்தில் பாலாஜி மற்றும் அவர் சார்ந்த நிறுவனங்களுக்கு சென்று விடுவதாக குற்றம் சாட்டியிருந்தார்.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சென்னை, கோவை, கரூர் உள்ளிட்ட 40-க்கும் அதிகமான இடங்களில் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான உறவினர்கள், நெருக்கமான காண்ட்ராக்டர்கள் இல்லங்களில், அலுவலகங்களில் எட்டு நாட்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்களும், பெட்டி பெட்டியாக hard disk, பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களும் வருமானவரித்துறையினர் கைப்பற்றி சென்றனர். இது குறித்து விசாரணை நடத்தியதை தொடர்ந்து தற்போது அமலாக்க துறையினர் செந்தில் பாலாஜியினுடைய இல்லத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர். சென்னை டிஜிஎஸ் தினகரன் சாலை இல்லத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இதே போல் அவரது தம்பி அசோக் வீட்டிலும் அமலாக்க துறையினர் சோதனையை நடத்தி வருகின்றனர்.


via News J : https://ift.tt/d8fLTuq
Mediaஅதிமுக  மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு வருகை புரிந்த அதிமுக எம்பி சிவி சண்முகம் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி பின்வருமாறு உள்ளது.ஆளுமைமிக்க புரட்சித் தலைவி அம்மா அவர்களை விமர்சிக்க அண்ணாமலைக்கு அருகதை இல்லை. மாண்புமிகு அம்மாவைத் தேடி வந்து சந்தித்தவர்கள் மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகியோர்கள் ஆவார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்காக ஒரு கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டிருக்கிறார் என்றால் அது பாஜகவின் தலைவர்தான். அப்போதெல்லாம் எங்கோ ஓர் மூலையில் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு மாமூல் வாங்கிக்கொண்டிருந்திருப்பார் அண்ணாமலை.இன்று வீரமாக பேசும் அண்ணாமலை, அன்றைய பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் நட்டாவும், மோடியும் அதிமுகதான் தமிழகத்தில் மிகப்பெரிய இயக்கம். அதன் தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று சொன்னபோது அப்போதே அதனை எதிர்த்து இருக்க வேண்டிதானே. அதனை விடுத்து திமுகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார்.

via News J : https://ift.tt/fSNc3vB
Mediaபுரட்சித் தலைவி அம்மா அவர்களைப் பற்றி கடுமையான விமர்சனத்தை முன்வைத்த அண்ணாமலைக்கு கழகத்தின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்றைக்கே சரியான பதிலடி கொடுத்திருந்தார். தமிழக பாஜகவினர் பொம்மைகள். அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். ஆனால் தமிழக பாஜக கட்டுப்பாடற்ற இயக்கம். அண்ணாமலை வெறும் பொம்மைதான். அதனை ராஜாவாகவும் வைக்கலாம், பொம்மையாகவும் வைக்கலாம். அகில இந்திய அளவில்தான் அது சரியாக செயல்படுகிறது. ஆண்டவனே பழித்தாலும் அம்மாவை விமர்சித்தவர்களை நாங்கள் சும்மா விடமாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் தன்னுடைய கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

via News J : https://ift.tt/Tmnzpct
Mediaதிமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே வானத்துக்கும் பூமிக்கும் குதித்துக்கொண்டிருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி… தமிழகத்தையே சூறையாடிக்கொண்டிருக்கும் கரூர் கும்பலின் கேங் லீடர் செந்தில்பாலாஜி அட்ராசிட்டிகளை விளக்குகிறது இந்த தொகுப்பு…சில நாட்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள், தமிழக ஆளுநரை சந்தித்து புகார் மனு அளித்தனர். இதில் திமுக ஆட்சியில் நடைபெறும் பல்வேறு ஊழல்கள், பார் டெண்டர் முறைகேடுகள், கள்ளச்சாராய உயிரிழப்புகள், சட்ட ஒழுங்கு சீர்கெடுகள் மற்றும் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குதல் உள்ளிட்டவை குறித்தும் ஆளுநரிடம் புகார் மனு அளித்தனர். இது தொடர்பாக ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூர், சென்னை, கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.கரூரில் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வரும் வருமான வரித்துறை அதிகாரிகளை, திமுகவினர் தடுத்து அவர்களை பணிசெய்ய விடாமலும், அதிகாரிகளின் வாகனங்களை சேதப்படுத்தியும் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து செந்தில்பாலாஜியின் தம்பி அசோக் வீட்டிற்கு சோதனை மேற்கொள்வதற்காக சென்ற வருமானவரித்துறை பெண் அதிகாரியை, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா தலைமையிலான, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் மற்றும் திமுக குண்டர்கள் சிறைபிடித்து பணி செய்யவிடாமல் தடுத்து நிறுத்தியதால் பதற்றமான சூழல் ஏற்பட்டது.திமுகவினரின் அராஜகத்தால் கரூரில் 7 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்த முடியாததாலும், திமுக குண்டர்களின் அச்சுறுத்தலாலும் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனர்.திமுகவினரின் அளவுக்கு மீறிய வெறியாட்டங்கள், அத்துமீறல்களை காவல்துறையினர் கைகட்டி வேடிக்கை பார்த்து வருவதாக மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர். மத்திய அரசின் அமைப்பான வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளும்போது, தகுந்த பாதுகாப்பு தரவேண்டியது மாநில காவல்துறையின் கடமை. ஆனால் (( செந்தில் பாலாஜியின் வீட்டில் ))ரெய்டு நடக்கும்போது, பெயருக்குக்கூட ஒரு போலீசாரை கூட பார்க்க முடியவில்லை… மதுக்கடைகளில், பார்களில் என்று மூலை முடுக்கெல்லாம் அட்ராசிட்டி செய்து மக்களை அச்சுறுத்தி வந்த செந்தில்பாலாஜியின் அட்ராசிட்டிகள் இன்னும் இன்னும் ஏராளம் என்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது இன்று வரிமான வரித்துறையினரை மிரட்டிய அவரது ஆதரவாளர்களின் அட்ராசிட்டிகள்…

via News J : https://ift.tt/vkats4f
Mediaஅமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று செந்தில் பாலாஜிக்கு ஆதரவளிக்கும் திமுக, ஏற்கனவே அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி ஆகியோரே செந்தில் பாலாஜி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஊழலின் ஊற்றுக்கண் என்று விமர்சனம் செய்துள்ளனர்.. அந்த விமர்சனங்களை சற்றே திரும்பிப்பார்க்கலாம்…2016 ஆம் ஆண்டு செந்தில்பாலாஜி செய்த ஊழல் குறித்து கருணாநிதி தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநர், நடத்துனர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை வாங்கித் தருவதாக பலரிடம் வசூலித்த 4 கோடியே 25 லட்சத்தை அமைச்சரிடம் உதவியாளர் மூலமாகக் கொடுத்ததாகவும் ஆனால் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திரும்பித் தரவில்லை என்றும் கூறித்தான் வழக்கு என்று செந்தில் பாலாஜியின் ஊழலை அம்பலப்படுத்தினார்.அதேபோல தேர்தல் பிரச்சாரத்தின்போது செந்தில் பாலாஜியின் சொந்த ஊரானா கரூரிலேயே ஸ்டாலின், செந்தில் பாலாஜியின் ஊழல் குறித்து பட்டியலிட்டதும் அவரை மிரட்டியதும் குறிப்பிடத்தக்கது.இப்படியெல்லாம் செந்தில் பாலாஜி பற்றி வாய் கிழிய பேசிய ஸ்டாலின், திமுகவில் செந்தில்பாலாஜி ஐக்கியமாகிய பிறகு அப்படியே தலைகீழாக மாறிவிட்டார். பார் டெண்டர், கலால் வரி, போலி மதுபானம், கரூர் வசூல், பார் உரிமையாளர் மிரட்டல், 24 மணி நேர மது விற்பனையில் வந்த பல ஆயிரம் கோடி வருவாயை அப்படியே கரூர் கம்பெனிக்கும், திமுக தலைமைக்கு மாற்றி விட்டதும்தான் செந்தில் பாலாஜியின் சாதனையாக உள்ளது. தமிழகத்தில் விற்பனை செய்யப்படும் மதுவில் சுமார் 50 சதவீதம் மது ஆயத்தீர்வை வரி செலுத்தப்படாமல் விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனே குற்றம் சாட்டியிருந்தார். மதுக்கடைகளில் நடைபெறும் முறைகேடுகள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பிருந்தது குறிப்பிடத்தக்கது. செந்தில் பாலாஜியின் அனைத்து ஊழல்களுக்கும் ஸ்டாலின் துணை போவதோடு, ஊழலின் ஊற்றுக்கண் செந்தில் பாலாஜி என திமுகவினரே ஒப்புக்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது..

via News J : https://ift.tt/0uiG9Bf
Mediaதமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் கோடான கோடி தொண்டர்களின் இதய தெய்வமாக மறைந்தும் மறையாமல் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற புரட்சித் தலைவி அம்மா அவர்கள் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அதிமுக தொண்டர்கள் கொந்தளிப்பு !சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலைக்கு மற்றும் குஷ்விற்கு எதிராக போராட்டம் !அஇஅதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது !தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட செயலாளர்களும் பங்கேற்று ஆலோசனை ஈடுபட்டனர் இதற்கு கழக அமைத்தலைவர் தமிழ் மகன் உசேன் மாநில நிர்வாகிகள், கழக துணை பொதுச் செயலாளர்கள் , மாநில செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் இதனிடையே முன்னாள் முதல்வரும் புரட்சித் தலைவியுமான அம்மா அவர்கள் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டனங்களை எழுப்பினர் .இதனை தொடர்ந்து தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகை முன்பு திரண்ட கழக தொண்டர்கள் புரட்சித்தலைவி அம்மாவிற்கு எதிராக பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும் அவர்கள் உடனடியாக இந்த கருத்தை திரும்ப பெற வேண்டும் அதேபோன்று குஷ்புவும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர் முழுக்க போராட்டத்தில் ஈடுபட்டனர் . அப்போது பேசிய அவர்கள் அதிமுக தயவால்தான் நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற முடிந்தது. நீங்கள் எங்களைப் பார்த்து குறை சொல்வதா? எங்களைப் பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் கிடையாது. அதிமுகவின் வரலாறு அவர்களுக்கு தெரியாது தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக தலைமையில் தான் கூட்டணி. எங்கள் பொதுச்செயலாளர் தான் முடிவு செய்வார். எனவே முந்திரிக்கொட்டை போன்று அண்ணாமலை முந்திக்கொண்டு ஏதும் பேசக்கூடாது அம்மாவை பற்றி அவதூறாக பேசியதற்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்கிறோம் என தெரிவித்தனர்.

via News J : https://ift.tt/GHPfIrd
Mediaஅனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் கூட்டமானது, சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் நடைபெற்றது. காலை 11:30 மணியளவில் நடைபெற்ற கூட்டத்தில், மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, திட்டமிட்டு உள்நோக்கத்துடன் பேசியுள்ளார் என்று கண்டனத் தீர்மானத்தினை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வாசித்துக் காட்டினார். கண்டனத் தீர்மானம் பின்வருமாறு உள்ளது.ImageImageImage

via News J : https://ift.tt/AqOPKo4
Mediaசென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சரின் சென்னை அரசு இல்லம் மற்றும் கரூரிலுள்ள இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.இந்த நிலையில், மத்திய துணை ராணுவ படையினர் அமைச்சரின் சென்னை அரசு இல்லத்தில் பாதுகாப்புப் பணிக்காக குவிக்கப்பட்டிருக்கின்றனர். மேலும், தலைமைச் செயலகத்திலுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அறையிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்கள், அவரின் சகோதரர் உட்பட உறவினர்களின் வீடுகளில் கடந்த மாதம் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருந்த நிலையில், இன்று சென்னையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டிருக்கின்றனர்.இதற்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனை மேற்கொண்ட வருமான வரித்துறையினர் கைப்பற்றிய ஆவணங்கள் தொடர்பாக, தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாகக் கூறப்படுகிறது. சென்னை மட்டுமல்லாமல், கரூரில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.ஏற்கெனவே கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களால் அதிகாரிகளின் கார் கண்ணாடி உடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. பின்னர் அது தொடர்பாக வழக்கு பதிவுசெய்யப்பட்டு போலீஸ் தரப்பில் ஒரு பக்கம் விசாரணை நடந்துவரும் வேளையில், செந்தில் பாலாஜி வீட்டிலும், அவரின் சகோதரர் வீட்டிலும் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுவருகின்றனர். எதற்காக இந்தச் சோதனை என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் இன்னும் தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. சோதனை முடிவில் இது பற்றிய அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையில் மத்திய துணை ராணுவ படையினர் பாதுகாப்பிற்காக வந்தனர் ஆனால் தலைமைச் செயலகத்தில் உள்ள காவல்துறையினர் அவர்களை சோதனை நடைபெறும் செந்தில் பாலாஜியின் அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை அதனால் தலைமைச் செயலக வளாகத்தில் துணை ராணுவ படையினர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

via News J : https://ift.tt/YnbWmTB
Mediaஅமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை மற்றும் கரூர் வீடுகளில் நேற்று நடைபெற்ற அமலாக்கத்துறையின் சோதனையில் முக்கியமான சில ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று 13-06-2023 அன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் சென்னை வீடு மற்றும் கரூர் ராமேஸ்வரபட்டியில் உள்ள அவரது தம்பி அசோக்கின் வீடு ஆகிய இடங்களில் அமலாக்கத்துறையினரால் சோதனை நடைபெற்றது. மேலும் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் அலுவலகத்திலும் இந்த சோதனையானது நடைபெற்றது. சோதனையைத் தொடர்ந்து கிடைக்கப்பட்ட ஆவணங்கள், ஹார்டு டிஸ்க்குகள், பென் டிரைவ்கள் போன்றவற்றை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

via News J : https://ift.tt/kgfObIy
Mediaசென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கைதினைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறையினர் கைது செய்ய முற்பட்டபோது, அழுது அலறி துடிப்பதுபோல் நாடகம் ஆடியுள்ளார். முக்கியமாக அமலாக்கத்துறை அதிகாரிகளை காலால் உதைத்து அராஜத்தில் ஈடுபட்டுள்ளார்.அமலாக்கத்துறை ரெய்டு முடிந்து கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லும் நிலையில், அருகில் இருப்பவர்களை அவர் காலால் எட்டி உதைக்கும் காட்சிகளும், அவர் தனது ஆடையை சரி செய்து கொள்வதும் தெளிவாக தெரிகிறது. இது நெஞ்சு வலி நாடகம் தானே என நெட்டிசன்கள் அமைச்சரை கலாய்த்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/2jsTBtg