Mediaகனவு இல்லம் கட்டி தருவதாக கோரி உயர்தர மக்களை குறிவைத்து பணம் மோசடி செய்த லோக்கா நிறுவன சந்தோஷ் சர்மா வை கைது செய்து தாங்கள் இழந்த பணத்தைப் பெற்று தருமாறு காவல் ஆணையர் அலுவலகத்தை நாடி உள்ளனர்.சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் சந்திப்ராய் ரத்தோரிடம் புகார் கொடுக்க நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காவல் ஆணையர் அலுவலகம் முன்பு பதாகையுடன் நின்று கோஷம் எழுப்பினர். இதைத் தொடர்ந்து காவல் ஆணையர் அலுவலகத்தில் இருந்தால் 50-க்கும் மேற்பட்ட காவல் துறை அதிகாரிகள் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு பின்னர் நான்கு நபர்களை அழைத்து காவல் ஆணையரிடம் அழைத்துச் செல்வதாக கூறினர். இதனை ஏற்க மறுத்த பணத்தை இழந்த பொதுமக்கள் அனைவரும் உள்ளே சென்று காவல் ஆணையரை சந்திக்க வேண்டும் என காவல்துறை அதிகாரிகளிடம் பேசி வருகின்றன.2019லிருந்தே…மோசடி!கடந்த கொரோனா காலத்தில் 2019 ஆம் ஆண்டு கனவு இல்லம் வாங்க வேண்டும் என்ற ஆசையில் மாதவரம் ரவுண்டானா அருகே லோகா எம் என்ற பெயரில் அடுக்குமாடி வீடுகளை வாங்கியுள்ளனர். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு கொரோனா பெருந்துறை உலகளவில் இருந்ததால் கட்டுமான பணிகளை பாதையை நிறுத்தி வைத்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு பணத்தை கொடுத்தவர்கள் கேட்டபொழுது மூன்று மாதத்தில் பணிகளை தொடங்கி விடுவோம் என ஒவ்வொரு முறையும் இதே கூறி வந்து இருந்த அவர் ஒரு கட்டத்தில் பணத்தை முதலீடு செய்தவர்கள் நேரில் சென்று பார்த்த பொழுது ஒரு சுவர் கூட எழுப்பாத நிலை இருந்தது என பணத்தை முதலீடு செய்தவர்கள் கூறினார். மேலும் கட்டிடத்தை கட்டித் தருவதாக கூறிய 200க்கும் மேற்பட்டவர் அவர்களிடம் இருந்து இதுவரை விற்பனை தொகையிலிருந்து சுமார் 98 சதவீதம் பணம் வசூல் செய்து உள்ளதாகவும் உயர்தர மக்களிடமிருந்து லோகா டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனர் சந்தோஷ் சர்மா மற்றும் அவரது வலதுகரமாக செயல்பட்டு வீடு வாங்க வருபவர்களிடம் ஆசை வார்த்தை கூறி மோசடி வழி நடத்திய அந்நிறுவனத்தில் பல ஊழியர்கள் ஈடுபட்டதாக பணத்தை இழந்தவர்கள் மனக்குமரலுடன் புகார் தெரிவிக்கின்றனர்.இந்த நிலையில் இந்நிறுவனத்தில் பலரும் பணத்தை முதலீடு செய்து அரசு பணியில் ஓய்வு பெற்றவர்கள் முதியவர்கள் உள்ளனர் குறிப்பாக மூத்த குடிமகன்கள் சுமார் ஐந்து நபர்கள் மேற்பட்டோர் ஒரு கோடிக்கும் மேலாக வீடு வாங்குவதற்கு சந்தோஷ் சர்மாவிடம் பணத்தை இழந்து தற்போது அதில் நாலு பேர் மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்து விட்டதாகவும் இன்னும் சிலர் மட்டும் தான் இருக்கிறார்கள் கூடிய விரைவில் அவர்களும் உயிரிழந்து விடுவார்கள் என வேதனையுடன் பணத்தை இழந்தவர்கள் தவித்து வருகின்றனர்.மோசடி புகார்..! மேலும் கனவு இல்லம் வாங்குவதற்காக ஏற்கனவே வசித்து வந்த வீட்டை விட்டு அதில் வந்த பணத்தை நோக்கா நிறுவனத்திடம் முதலீடு செய்து 2019 ஆம் ஆண்டு தாங்கள் 98 சதவீதம் பணத்தை முழுமையாக செலுத்தி விட்டோம் ஆனால் தற்போது அந்த நிறுவனத்தில் கட்டுமான பணிகள் நடைபெறாமல் இருப்பதையும் கண்டறிந்து சந்தோஷமாவிடம் கேட்ட பொழுது எந்த ஒரு பதில் அளிக்காமல் முதலீட்டு செய்தவர்கள்க்கு போக்கு காட்டி வருவதாக பணத்தை இழந்த பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர் . இது தொடர்பாக ஏற்கனவே கொரட்டூர் காவல் நிலையம் DCP அதிகாரியிடம் புகார் கொடுக்கப்பட்டும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காத சூழலில் தான் இறுதி கட்டமாக தற்போது சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சந்திப்ராய் ரத்தோரியை சந்தித்து புகார் கொடுக்க இறந்தவர்களை அங்கு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர் பின்னர் அவர்களை சமாதானப்படுத்தி நான்கு நபர்களை மட்டும் அழைத்து காவல் ஆணையரை சந்திக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.குறிப்பாக இந்த குடியிருப்பு திட்டத்தில் சந்தோஷ் சர்மாவிடம் இணைந்து தேமுதிக துணை செயலாளர் சுதீஷ்குமார்யை நம்பி முதலீடு செய்து உள்ளோம் எனவும் இந்த மோசடி கும்பலில் அவரும் இதில் முக்கிய பங்கு உண்டு என பணத்தை இழந்தவர்கள் தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளது என அவர்கள் கூறினர்.மேலும் தங்களிடம் பெறப்பட்ட தொகையை மற்றொரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளதாகவும் வீடு வாங்கியவர்கள் பெயரில் பதிவு செய்ததை வைத்து எல்ஐசி ஹவுசிங் பைனான்ஸ் மூலம் பணம் பெறப்பட்டு ஏமாற்றி உள்ளார் என்றும் தற்போது அவர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல இருப்பதாக தகவல் அறிந்தும் நாங்கள் இன்று வேப்பேரியில் உள்ள காவல் ஆணையரை சந்தித்து மீண்டும் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளிக்க வந்துள்ளோம் லோகா நிறுவனர் சந்தோஷ் சர்மாவிடம் விசாரணை நடத்தி தங்களுடன் பணத்தை வாங்கி தருமாறு என குறிப்பிட்டனர்.
via News J : https://ift.tt/MfOoREF
via News J : https://ift.tt/MfOoREF
Mediaபரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியை:சீனாவில் ஜியாஸுவாவில் உள்ள மெங்மெங் ப்ரீ ஸ்கூல் எஜுகேஷன் என்ற கிண்டர்கார்டன் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வாங் யுன். இவருக்கும், சக ஆசிரியர் ஒருவருக்கும் இடையே கடும் சண்டை மற்றும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவற்றை மனதில் வைத்துக்கொண்டு சில பல காரியங்களை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த ஆசிரியரை பழிவாங்கும் எண்ணத்தோடு பயங்கர சதி செயலைச் செய்து வந்துள்ளார். அந்த செயலை நிறைவேற்றும் விதமாக கிண்டர்கார்டன் பள்ளி மாணவர்கள் வழக்கமாக சாப்பிடும் உணவில் விஷம் கலந்துள்ளார்.இந்த உணவினை சாப்பிட்ட பள்ளி குழந்தைகள் பாதிப்பிற்கு உள்ளாகினர். இன்னம் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் ஆனால் அவர் அந்த உணவில் சோடியம் நைட்ரேட் என்ற ரசாயனத்தை தூவியிருக்கிறார். உணவை சாப்பிட்ட இருபத்து ஐந்து குழந்தைகளுக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இந்த சிகிச்சையில் இருபத்து நான்கு குழந்தைகள் சிகிச்சை முடிந்து எந்த ஒரு உபாதைகளும் இல்லாமல் வீட்டிற்கு திரும்பினர். ஆனால் ஒரு குழந்தை மட்டும் பத்து மாதங்கள் ஆனப் பிறகும் மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசியில் சிகிச்சை பலனின்றி அக்குழந்தை உயிரிழந்தது.மரண தண்டனை விதித்த சீன அரசு:இந்த சம்பவம் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்தது. அந்த மாணவர் உயிரிழப்பானது சீன மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் நடந்ததை தொடர்ந்து பெண் ஆசிரியர் வாங் யுன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுதொடர்பான விசாரணை ஜியாஸுவாவில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இவர் தனது கணவரையும் காஃபியில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. அதனைக் கேட்ட காவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து வாங் யுன் இதற்கு மரண தண்டனை விதித்தது அந்நாட்டு அரசு.இதுதொடர்பாக வாங் யுன் தரப்பில் மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை. இதனை தொடர்ந்து தண்டனைக்கு உரிய நாள் மற்றும் நேரத்தை அந்நாட்டு அரசு முடிவு செய்தது. அறிவித்த தேதியில் நேற்று முன்தினம் வாங் யுன்னிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்நாட்டு அரசு அறிவித்தது. பொதுவாகவே சீன நாட்டில் மரணதண்டனை என்பது துப்பாக்கியால் சுட்டும் அல்லது விஷ ஊசிப் போட்டும் நிறைவேற்றப்பட்டு வந்தது. ஆனால் தற்போது அந்தமுறை மாறி உள்ளதாக அறிவித்தது. துப்பாக்கி சுடுதலுக்கு பதிலாக விஷ ஊசி போடும் நடைமுறை தான் தொடர்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன சீன அரசு. மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்ட வாங் யுன்னிற்கு விஷ ஊசி போட்டு மரண தண்டனை நிறைவேற்றப் பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
via News J : https://ift.tt/TU52pFW
via News J : https://ift.tt/TU52pFW
👏1
Mediaசென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள உயர்கல்வி அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சிஆர்பிஎஃப் காவலர்களின் உதவியுடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை மட்டுமின்றி பொன்முடிக்குச் சொந்தமான பிற இடங்களிலும் இந்த சோதனை நடைபெறுவதாக தெரிகிறது. கடந்த ஜூன் மாதம் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதையடுத்து செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.மாட்டிக்கொண்ட பொன்முடி!இந்நிலையில் அமைச்சர் பொன்முடிக்கு தொடர்புடைய 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதம சிகாமனி வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் பொன்முடி வீட்டில் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையானது திமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.2006 முதல் 2011 வரை கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது அரசுக்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக 2012 ஆம் ஆண்டு அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கின் அடிப்படையில் தற்போது அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.தமிழக உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடியின் மகன் கெளதமசிகா மணியின் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் ஏற்கெனவே அமலாக்கத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டிருக்கும் நிலையில் தற்போது அமலாக்கத்துறையினர் மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர்.அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை!சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடியின் இல்லத்துக்கு காலை 7 மணிக்கு மத்திய துணை ராணுவப்படை உதவியுடன் அமலாக்கத் துறையினர் விசாரணைக்காக வந்தனர். இதனை தொடர்ந்து அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத் துறையினர் விசாரணையை நடத்தி வருகின்றனர். 2006 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரை கனிமவளத் துறை அமைச்சராக இருந்தபோது விழுப்புரம் மாவட்டத்தில் அவரது உறவினர்களுக்கு முறைகேடாக பல்வேறு குவாரிகளுக்கு அனுமதி அளித்து, அளவுக்கு அதிகமான செம்மண் அள்ளப்பட்டு விற்பனை நடந்துள்ளது. இதன் மூலம் 5 ஆண்டுகளில் 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லாரிகள் மூலம் முறைகேடாக செம்மண் அள்ளி விற்பனை செய்ததில் 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு தற்போதைய கள்ளக்குறிச்சி தொகுதி எம்பி கௌதம சிகாமணி, திமுக நிர்வாகிகள் சதானந்தன் ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், கோபிநாத், உள்ளிட்ட ஏழு பேர் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அதனை தொடர்ந்து பொன்முடி தனது மகன் கௌதம சிகாமணியோடு தலைமறைவானார். பிறகு இருவரும் நீதிமன்றத்தில் ஜாமின் கோரினர். ஜாமீன் கிடைக்காததால் பொன்முடி கைது செய்யப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட மூன்று பேர் விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதனை அடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 28 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி, அதன்மூலம் பெறப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணத்தின் மூலம் என்னென்ன சொத்துக்கள் வாங்கப்பட்டன, எங்க முலீடு செய்யப்பட்டன என்பது குறித்து, சட்டவிரோத பண பரிமாற்றம் வழக்கு பதிவு செய்து, தற்போது அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
via News J : https://ift.tt/LZoFp4T
via News J : https://ift.tt/LZoFp4T
👍1
Mediaதிருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவீட்டில் அழிந்துவரும் 14 – ஆம் நூற்றாண்டு சிற்பங்கள், கல்வெட்டுகள் கிடைத்துள்ளன.கண்ணமங்கலம் அடுத்த படவீடு கிராமத்தில் சம்புவராயர் ஆய்வுமைய அறக்கட்டளையின் செயலாளர் முனைவர் அ. அமுல்ராஜ் வரலாற்று சிற்பங்கள் குறித்த கள ஆய்வில் 16.7. 2023 அன்று ஈடுபட்டார். அப்போது படவீடு கிராமத்தில் அரசமரத்தின் அருகே அமைந்துள்ள மாரியம்மன் திருக்கோயிலில் பல்வேறு சிலைகள் மற்றும் கல்வெட்டுகள் இருப்பதை கண்டறிந்தார்.இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்:படைவீடு 13 ஆம் நூற்றாண்டு தொடங்கி சம்புவராய மன்னர்களின் படைநகரமாக; தலைநகரமாக புகழ்பெற்று விளங்கிய நகரமாகும். இங்கே நிலப்பகுதியில் இரண்டு கோட்டைகளும் ( அகக்கோட்டை ( பெரிய கோட்டை), புறக்கோட்டை ( சின்னகோட்டை) ஜவ்வாதுமலைமீது ( இராஜகம்பீரன் மலை) ஒரு மலைக் கோட்டையையும் அவர்கள் அமைத்துள்ளனர். அத்துடன் அவர்களின் அரசு இங்கே சிறப்புற்று இருந்த காலங்களில் படவீடு கோட்டை நகரைச் சுற்றிலும் பல்வேறு கோயில்களை எழுப்பியிருந்தனர்.அக்கோயில்கள் யாவும் போரிலும் காலப்போக்கிலும் அழிந்தன. சில கோயில்கள் நல்ல நிலையிலும் வழிபாட்டில் உள்ளன.Mediaபடவீடு மாரியம்மன் கோயிலில் உள்ள இச்சிற்பங்கள் மிகவும் முக்கியமானவை ஆகும். கைகூப்பிய நிலையில் உள்ள ஒரு சிற்பம் அரசன் அல்லது படைத்தலைவன் ஒருவனின் உருவமாகும். அடுத்து கரண்ட மகுடத்துடன் கழுத்துவரை துண்டு பட்டு காணப்படும் சிற்பம் தெய்வத் திருமேனியின் உருவமாகும். அதே போன்று கையில் சூலம் தாங்கிய பெண் சிற்பம், நரசிம்மர் சிற்பம் ஆகியவை ஒரே இடத்தில் காணப்படுகின்றன.Media Media Mediaஇவற்றிற்கு அருகே கோயில் வாயிற்படியில் சில கல்வெட்டுகளும் அரச மரத்தடிக்கு அருகே ஒரு கல்வெட்டும் உள்ளன. இவை யாவும் 14 – ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சம்புவராய மன்னர்கள் கால சிற்பங்கள் ஆகும். இங்குள்ள கல்வெட்டுகளை தொல்லியல் துறையினர் படியெடுத்து படித்தால் பல வரலாற்று செய்திகள் அறியவரும்.மேலும் இவ்வாறு அழிந்துவரும் சிற்பங்கள் மற்றும் அரிய கல்வெட்டுகளை பாதுகாக்க படவீட்டில் மாவட்ட நிர்வாகம், வரலாற்று அருங்காட்சியகம் ஒன்றை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
via News J : https://ift.tt/74cKJZw
via News J : https://ift.tt/74cKJZw
Mediaஅழகியலின் புதுமைகள்!பொதுவாகவே மனிதர்களுக்கு நம்முடைய மேனியினை பராமரித்துக் கொள்வது என்பது மிகவும் பிடித்தமான ஒரு காரியம். குறிப்பாக சொல்லப்போனால் தன்னை அழகு படுத்துக்கொள்வதில் பெண்கள் தான் ஸ்பெஷலிஸ்ட் என்றே சொல்லலாம். ஆனாலும் ஆண்கள் மற்றும் பெண்கள் எல்லோருமே தனது சருமம் இளமையாகவே தோற்றம் அளிக்க வேண்டும் என்று விரும்புவர். அதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் தயங்கமாட்டார்கள். பலவகை ரசாயணப் பொருட்களை பயன்படுத்தி அவர்களது தற்போதைய வயதில் இருந்து தன்னை சிறிய வயதாக காட்டிக்கொள்ள பல முயற்சிகளை செய்வார்கள்.மற்றும் அழகுசாதன பொருட்களை பயம்படுத்தி தன்னை இளமையாகவும், அழகாகவும் பாவித்துக்கொள்வார்கள். இந்நிலையில் மருத்துவ துறையில் எண்ணற்ற சிகிச்சை முறைகள் வந்துள்ளது. தோல், முடி மற்றும் அழகியல் சார்ந்த மருத்துவ முறைகள் வந்துள்ளன. மேலும் மரபணு சிகிச்சை மூலம் வயதை குறைக்க முடியும் என்பதை முந்தைய ஆய்வில் நிரூபித்தார் ஹார்வர்ட் விஞ்ஞானி டேவிட் ஷின்கிளயர். தற்போது அதனையும் தாண்டி வேதிக் கலவை மூலமும் வயதைக் குறைக்க முடியும் என்பதை நிரூபித்து உள்ளதாக தெரிவித்தார்.25 Simple Tips To Get Younger Looking Skinபுதிய வேதிப்பொருள்!!கேம்பிரிட்ஜ்: மனிதர்களுக்கு வயதாவதை தடுக்கும் வேதிக் கலவையை கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து இந்த வேதிப்பொருள் குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கதில் அதன் தன்மையை பற்றிக் கூறியுள்ளார். டேவிட் ஷின்கிளயர் கூறியதாவது; “மரபணு சிகிச்சை மூலம் வயதைக் குறைக்க முடியும் என்பதை எங்களது முந்தைய ஆய்வில் நிரூபித்தோம். அந்த வெற்றியை தொடந்து பல ஆண்டுகளாக வேதிப் பொருட்களை வைத்து வயதை குறைக்க முடியுமா என்ற சோதனையில் ஈடுபட்டோம். அதன்படி பல நாட்களுக்கு பிறகு பலன் கிடத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இது தொடர்பாக எங்கள் குழு தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. அந்த ஆராய்ச்சியின் விளைவாக வயதைக் குறைக்கும் மூலக் கூறுகளைக் கண்டுபிடித்துள்ளோம் என்றும் இது சாதாரண மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குறைந்தவிலையில் மனித செல்களுக்கு புத்துணர்வூட்டுவதற்கான ஒரு முன்நகர்வு இது” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த ஆய்வானது பல கட்ட சோதனைகளுக்கு பிறகே மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்தார். மேலும் முதற்கட்டமாக இந்த வேதிக்கலவை எலி மற்றும் குரங்குகளுக்கு செலுத்தி பரிசோதிக்கப்பட்டுள்ளது என்றும், பரிசோதனையின் முடிவில், மூளைத் திசுக்கள், கிட்னி, பார்வை ஆகியவற்றில் மேம்பாடு ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளட்தாக டேவிட் ஷின்கிளயர் தெரிவித்தார்.
via News J : https://ift.tt/7ZT5pAQ
via News J : https://ift.tt/7ZT5pAQ
Mediaகிராமத்தில் ஒரு சொலவடை உண்டு. ஊரை அடித்து உலையில் போட்டவர் என்று சொல்வார்கள். அப்படி மக்கள் பணத்தை ஊழலில் சம்பாதிப்பவர்களின் பட்டியலை எடுத்தால் அதில் முன்வரிசையில் வந்து நிற்பார்கள் திமுக அமைச்சர்கள்.aதிலும் சர்ச்சைக்கு நிகரான ஒரு பெயர் என்றால் அது நிச்சயம் பொன்முடி தான். எதற்கெடுத்தாலும் சர்ச்சை, பேச்சில் நாகரீகமற்ற தன்மை, பொதுமக்களை ஒரு பொருட்டாகக் கூட கருதாமல் கேவலமாக நடத்துவது என்று பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கிறார்.மக்களின் ஆதரவோடு அரியணை ஏறுகின்ற அரசன், மக்களுக்கு என்ன வேண்டும், அவர்களின் தேவை என்ன என்று அறிந்து செயல்பட வேண்டும். அதனை சொல்லிக்காட்டி வாக்கு வாங்குவது கூட பரவாயில்லை. ஆனால் அதனை கேவலமான தொணியில் பேசுவதுதான் அபத்தமான ஒன்று. மகளிருக்காக இலவசப் பேருந்து திட்டத்தைத் தொடங்கிவிட்டு “ஓசி பஸ்” என்று அதனை ஏளனமாக பேசிவது திமுகவினருக்கு கைவந்த கலை. இப்படி செய்தவர் வேறு யாரும் இல்லை அமைச்சர் பொன்முடிதான். பின்னர் தன் சொந்தக் கட்சி உறுப்பினரிடமே நீ ”எஸ்.சி” தானம்மா என்று கேட்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து மக்களிடம் மாட்டியிருக்கிறார்.தற்போது இவர் மாட்டியிருப்பது அமலாக்கத்துறையிடம். 2006 முதல் 2011 வரை ஆட்சியில் கனிம வளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி செம்மண் ஊழலில் ஈடுபட்டு அரசுக்கு 28 கோடி வரையில் இழப்பீடு ஏற்படுத்தியிருக்கிறார். இதனையொட்டி கடந்த 2012 ஆம் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சிகாலத்தில் வாய்தா மேல் வாய்தா வாங்கி தப்பி வந்தார் அமைச்சர் பொன்முடி. தற்போது அமலாக்கத்துறை அந்த வழக்கை தூசி தட்டி எடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பொன்முடிக்கு சம்பந்தமான 9 இடங்களில் ரெய்டு நடைபெற்று வருகிறது. முக்கியமாக அவரது மகன் கவுதம சிகாமணி வீட்டிலும் கலைஞர் டிவி கார்த்திக் வீட்டிலும் சரமாரியாக சோதனை செய்து வருகின்றனர் அமலாக்கத்துறையினர். கிட்டத்தட்ட எட்டு மணி நேரங்கள் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த ரெய்டு நடந்து முடிவதற்குள் ஒரு பெரிய தலை சிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. கழக உடன்பிறப்புகளுக்கு இப்போதே வேர்த்துக்கொட்ட தொடங்கிவிட்டது. அடுத்தது நாமாக இருப்போமா என்று ஒவ்வொரு அமைச்சர்களும் பயம் கொள்ளத் தொடங்கிவிட்டனர்.
via News J : https://ift.tt/p29sEZa
via News J : https://ift.tt/p29sEZa
Mediaசெந்தில் பாலாஜியின் மீது ரெய்டு வந்ததிலிருந்து தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அமலாக்கத்துறை அனைத்து இடங்களிலும் புகழ் வெளிச்சம் பெற்றுவிட்டது. முக்கியமாக திமுகவினர் அமலாக்கத்துறை என்றால் எப்படி இருக்கும்? அதன் வேலை என்ன? என்று நன்றாக தெரிந்திருப்பார்கள். பொதுமக்களிடமும் சில கேள்விகள் எழாமல் இல்லை. அமலாக்கத்துறை, ரெய்டு சென்று முடக்கிய சொத்துக்களை என்ன செய்யும் யாருக்கு கொடுக்கும்? வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.கடந்த எட்டு ஆண்டுகளில் அமலாக்கத்துறையின் செயல்பாடு!Enforcement Directorate, its Functions and Controversiesகடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை காலக்கட்டத்தில் அமலாக்கத்துறையினரால் 112 வழக்குகளும் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதனைத் தொடர்ந்து அடுத்த எட்டாண்டுகளில், அதாவது 2014 முதல் 2022 வரை 3010 வழக்குகளும் விசாரணைகளும் நடத்தப்பட்டுள்ளன. இது முந்தைய ஆண்டைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் இருபத்துயேழு மடங்கு அதிகம் என்று சில புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2022 மார்ச் 31ம் தேதி வரை அமலாக்கத்துறையினரால் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களும் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இதில் வங்கி மோசடி மற்றும் போன்சி வழங்குதல் தொடர்பாக மட்டும் ஐம்பத்தி ஏழாயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கம் செய்யப்பட்டிருக்கிறது.முடக்கிய பணத்தை என்ன செய்யும்?அமலாக்கத்துறையினரால் முடக்கம் செய்யப்பட்ட சொத்துக்களை விற்றதன் மூலம் பொதுத்துறை வங்கிகளுக்கு 23,000 கோடி ரூபாய் திருப்பி அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இப்படி முடக்கப்படும் சொத்துக்கள் அமலாக்கத்துறையினரால் ஆறு மாதங்கள் மட்டுமே கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். மேலும் எந்தக் குற்றத்திற்காக சொத்துக்கள் முடக்கப்பட்டன என்பதை ஆறு மாதங்களுக்குள் அமலாக்கத்துறை நிரூபிக்க வேண்டும். அப்படி முடியாத பட்சத்தில் அமலாக்கத்துறையிடம் இருந்து சொத்துக்கள் விடுவிக்கப்படும். சம்பந்தப்பட்ட நபர் தேசிய தீர்ப்பாயத்தில் மனு அனுப்பி விடுவிக்கப்பட்ட சொத்துக்களை திரும்ப பெற்றுவிடலாம். அதே நேரம் நீதிமன்றத்தில் குற்றமானது நிரூபிக்கப்பட்டால், முடக்கப்பட்ட சொத்துக்களை அமலாக்கத்துறை மத்திய அரசிடம் ஒப்படைத்துவிடும்.
via News J : https://ift.tt/Z9eaBlD
via News J : https://ift.tt/Z9eaBlD
Media இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச மகளிர் அணி இந்திய அணியை 40 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது.வங்கதேச அணி வெற்றி:டாக்கா: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச மகளிர் அணி இந்திய அணியுடன் போட்டியிட்டது. இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி நேற்று வங்கதேசத்தின் டாக்கா நகரிலுள்ள ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ்க் வென்ற வங்கதேச அணி சற்று நேரத்திலேயே வங்கதேச அணி வங்கதேச அணி 43 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை தொடர்ந்து இந்த அணியின் கேப்டன் ஆன நிகர் சுல்தானா களமிறங்கினார். இவர் அதிகபட்சமாக 39 ரன்களை அவரது அணிக்கு சேர்த்தார். இவரைத் தொடர்ந்து முர்ஷிதா கதுன் 13, பர்கானா ஹோக் 27, ரிது மோனி 8, ரபேயா கான் 10, நஹிதா அக்தர் 2, பாஹிமா கதுன் 12, சுல்தானா கதுன் 16 ரன்கள் சேர்த்தனர். இதனை தொடந்து களமிறங்கிய இந்திய அணி அமன்ஜோத் கவுர் அவரது ஆட்டத்தில் 31 ரன்களை கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் இவரைத் தொடர்ந்து அடுத்தடுத்து களமிறங்கிய தேவிகா வைத்யா 2 விக்கெட்களையும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.பின்னர் வங்க தேச அணி பேட்டிங் செய்த போது 16-வது ஓவரில் எதிர்பாராத விதமாக மழை வந்ததால் போட்டியானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் மழை நின்றதும் மீண்டும் போட்டி தொடர ஆரம்பித்தது. மேலும் போட்டியானது 44 ஓவர்களாக குறைகப்பட்டது. இதையடுத்து இந்திய அணி வீராங்கனைகள் விளையாடத் தொடங்கினர். வங்கதேச அணியின் அபார பந்து வீச்சால் இந்திய அணியின் விக்கெட்கள் விரைவாக விழுந்தன. அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா மட்டும் 20 ரன்கள் எடுத்தார். பிரியா பூனியா 10, ஸ்மிருதி மந்தனா 11, யாஸ்திகா பாட்டியா 15, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10, அமன்ஜோத் கவுர் 15, தேவிகா வைத்யா 10, பூஜா வஸ்த்ராகர் 7, பாரெட்டி அனுஷா 2 ரன்கள் கொடுத்தனர். இந்நிலையில் 35.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு இந்தியா அணி ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச அணி 40 ரன்கள் வித்தியாசதில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிப் பெற்றது.
via News J : https://ift.tt/ymYlMHC
via News J : https://ift.tt/ymYlMHC
Mediaகிடிக்கெட், கால்பந்து அளவிற்கு உலகின் பிரபலமான விளையாட்டாக திகழ்வது டென்னிஸ் விளையாட்டு. இந்த டென்னிஸ் போட்டித் தொடர்களில் மிகவும் புகழ்பெற்றதாக கருதப்படுவது விம்பிள்டன் ஓபன் தொடர் ஆகும். இந்த தொடரில் தொடர்ச்சியாக 4 முறை விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றி ஜோகோவிச்சை 20 வயதே ஆன ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் அபாரமாக விளையாடி பட்டத்தை கைப்பற்றினார்.அமெரிக்கா ஒபன்:விம்பிள்டன் : ஜோகோவிச்சை வீழ்த்தி பட்டம் பெற்றார் கார்லஸ் அல்காரஸ்! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Webகடந்த 2018ம் ஆண்டு முதல் அல்காரசின் திறமையை மேலும் மேலும் வளரச்செய்தார். இவர் முதலில் 2018ம் ஆண்டு முதல் சீனியர் வீரர்களுக்கான சர்வதேச போட்டிகளில் களமிறங்கத் தொடங்கினார். தன்னுடைய அசாதாரணமான ஆட்டத்தால் 2021ம் ஆண்டுகுள் டென்னிஸ் தரவரிசையில் 100வது இடத்திற்கு முன்னேறி சென்றார்.அதன்பின்பு குரோஷியா ஓபன், ஏடிபி பைனல்ஸ், ரியோ ஓபன் ஆகியவற்றில் பங்கேற்று அசத்தினார். மியாமி ஓபன், பார்சிலோனா ஓபன் ஆகிய தொடர்களை கைப்பற்றி அவரது திறமைகளை வெளிக்காட்டினார். தொடர்ந்து ஜெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருந்த அல்காரஸ் கடந்தாண்டு நடந்த புகழ்பெற்ற அமெரிக்க ஓபன் தொடரை கைப்பற்றினார். இதன் பிறகு இவரது அபாரமாண ஆட்டத்தை ஒட்டுமொத்த டென்னிஸ் உலகமே திரும்பி பார்த்தது . அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரை மிக இளவயதில் கைப்பற்றிய 2வது வீரர் என்ற அரிய சாதனையை அல்காரஸ் படைத்தார்.வெற்றிக்கனியை பறித்தார் அல்காரஸ்!Wimbledon Champion Carlos Alcaraz Know His Biography And New Star From Spain | Carlos Alcaraz: டென்னிசின் புதிய நட்சத்திரம்.. ஸ்பெயினின் அடுத்த ரஃபேல் நடால்? யார் இந்த அல்காரஸ்..?விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகின்றது. இதனை தொடர்ந்து தொடக்கதிலோயே அல்காரசின் இருசர்வீஸ்களை ஜோகோவிச் அவரது எளிமையான ஆட்டத்தினால் முதல் செட்டைக் கைப்பற்றினார். இதனை அடுத்து இருவருக்கும் இடையில் டைபிரேக்கரில் ஆட்டம் தொடர்ந்தது. ஆனால் மூன்றாவது செட்டில் அல்கர் வசம் வந்தது. இருப்பினும் நம்பிக்கையை விடாமல் விளையாடிய ஜோகோவிச் நான்காவது செட்டில் பதிலடிக் கொடுத்தார்.போட்டி அடுத்தடுத்து தளத்திற்கு நகர்ந்தது. கடைசி செட்டில் ஜோகோவிச் கடும் நெறுக்கடி ஏற்பட்டது. கடும் சவால்களையும் தாண்டி அல்கார்ஸ் வெற்றி மகுடத்தை சூடினார். சுமார் 4-கு மணி நேரம் மற்றும் 42 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியானது அல்காரஸ் ஆட்டத்தில் 1-6, 7-6, 8-6, 6-1, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் ஜோகோவிச்சை தோற்கடித்தார். இதன் மூலமாக முதன் முறையாக விம்பிள்டன் கோப்பையை தனதாக்கினார். ”நம்பர் ஒன்” இடத்தையும் தன்வசமாகினார். தனது 20-வது வயதிலேயே அல்காரஸ் இரண்டாவது முறையாக வென்ற கிராண்ட்ஸ்லாம் இதுவே ஆகும்.
via News J : https://ift.tt/zLY8qhd
via News J : https://ift.tt/zLY8qhd
Mediaபச்சை குத்துதலின் வரலாறு:பச்சைக் குத்துதல் அதாவது டாட்டூ (tattoo) என்று அழைக்கப்படும் முறையானது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு நமது தாத்தா பாட்டி காலங்களில் நாம் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு. அவர்களின் கைகளிலும், கால்களிலும் பச்சை நிறத்தில் கோலங்கள் மற்றும் அவர்களுடைய பெயர்களும் வரையப்பட்டு இருக்கும். அதன் பின்னர் நமது அம்மா காலங்களில் கைகளில் கோலம் போடும் முறையானது இல்லாமல் போயிருக்கும். ஆனால் இன்றைய காலக்கட்டங்களில் டாட்டூ சென்டர்கள் இல்லாத தெருக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஒவ்வொரு வீதிகளிலும் நிறைந்து வழிகின்றன. இப்பொது நவீன நாகரிகம், மற்றும் அழகிற்காக போடப்படும் இந்த டாட்டூகளின் வயது சுமார் 5000 ஆண்டுகளுக்கு பழமையானது என்று கூறப்படுகின்றன.Chinese couple pressures mum with dementia to get hand tattooed with phone numbers, gets flak for being cruel, China News - AsiaOneஇந்த பச்சைக் குத்தப்படும் முறையனாது புதிய கற்காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த முறையானது ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளின் கற்காலங்களில் இருந்து வருவதாக கூறப்படுகின்றது. நாம் இன்று அழகிற்காக போடப்படும் டாட்டூகள் அன்றைய எகிப்திய காலங்களில் வலி நிவாரணியாக பயன்படுத்தினார்கள் என்பது எத்தனைப் பேருக்குத் தெரியும்?. அதாவது அன்றைய எகிப்திய காலக்கட்டத்தில் பிரசவத்தின் போது பெண்களுக்கு அவர்களின் வயிறு, தொடைப்பகுதிகள், மற்றும் மார்பு பகுதிகளில் இத்தகைய டாட்டூக்கள் போடப்பட்டதாக கூறுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். உலகில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளின் மூலம் சடலமாக மீட்கப்பட்டவர்களின் கை, கால் மற்றும் உடல்களின் இதரப் பகுதிகளில் டாட்டூகள் பதிந்து இருப்பதாக கூறுகின்றனர். இதனைத் தொடர்ந்து கி.பி. 1700-ஆம் ஆண்டுகளில் நடைப்பெற்ற போர்களில் மக்கள் இடம்பெயர்ந்ததால் இந்த டாட்டூ கலாச்சாரம் என்பது பரவி இருக்கு என்று சொல்லப்படுகின்றன. இந்த டாட்டூக்கள் நிறைய வகையில் பயனுள்ளதாக தற்போது உள்ள கால சூழ்நிலையில் மாறிவருகின்றன. ஏனென்றால் சீன நாட்டில், தொலைந்துபோகும் முதியவர்களை கண்டுபிடிக்க இந்த டாட்டூ முறையானது பயன்படுத்தப்படுகின்றது.உதவும் டாட்டூ முறை:சீன நாட்டின் அழகு நிலையம் ஒன்றில் அல்சீமர் எனும் மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ள முதியவர்கள் அடிக்கடி தொலைந்து போகின்றனர். இப்படி தொலைந்து போனவர்களை எளிதில் கண்டறிய உதவியாக அவர்களின் கைகளில் முகவரி, தொலைபேசி எண் மற்றும் பெயர்கள் உள்ளிட்ட விவரங்களை இலவசமாக பச்சை குத்தித் தரப்படுகிறது. இந்த செயலானது அனைவரின்மத்தியிலும் பெரும் கவனத்தை பெற்று உள்ளது. தற்போது சீன நாட்டிலேயே இந்த செய்திதான் ட்ரெண்டிங் நம்பர் ஒன். மனதில் ஏற்படும் வலிகளைவிட, பச்சைக் குத்தும் வலி ஒன்றும் பெரிதாக இருக்காது என்று சீன நாட்டு நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.
via News J : https://ift.tt/QFYdqhu
via News J : https://ift.tt/QFYdqhu
Mediaவீக்கெண்ட் முடிந்து, திங்கள் காலை பரபரப்புடன் இயங்கிய அனைவரையும் ஒரு நிமிடம் நிறுத்தி திரும்பி பார்க்கச் செய்திருக்கிறது அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு என்னும் அதிரடி செய்தி.((திரைப்படத்தில் வரும் சீன் போல பழைய பேஷண்டை தூக்கிவிட்டு புதிய பேஷண்ட் பொன்முடியை தூக்கி அட்மிட் பண்ணு என்று மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு கண்டெண்ட் ஆகியிருக்கிறார் அமைச்சர் பொன்முடி.,….))தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடு உட்பட 9 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தபோது செம்மண் குவாரிகளில் விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தியதாக கூறி, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி மற்றும் உறவினரான ஜெயச்சந்திரன் ஆகியோர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் 2012ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், ஏற்கனவே அந்நிய செலாவணி மோசடி வழக்கில் பொன்முடி மகன் கௌதம சிகாமணிக்கு சொந்தமான சொத்துக்கள் முடக்கப்பட்டது தொடர்பாகவும் தற்போது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தியுள்ளது.இந்த விவகாரத்தில் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குநர் கார்த்திக் என்பவருக்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லி, அவருடைய வீடு மற்றும் அவருடைய தனி அலுவலகத்திலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.பொன்முடி வீட்டில் லட்சக்கணக்கான ரொக்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதால், அமலாக்கத்துறை வைத்துள்ள செக்கால், பொன்முடியும் அவரது மகனும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்றே சொல்லப்படுகிறது….அமலாக்கத்துறையால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில், அடுத்ததாக அமைச்சர் பொன்முடி கைதாவாரா?அமலாக்கத்துறையால் அமைச்சர் பொன்முடி வீட்டில் லட்சக்கணக்கில் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், தொடர் ரெய்டுகளால் ஸ்டாலின் தனது தூக்கத்தை தொலைத்து தவிப்பதாக தெரிவிக்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
via News J : https://ift.tt/9qaMfHj
via News J : https://ift.tt/9qaMfHj
Mediaஉலகில் உயிர்கள் ஜனித்திருப்பதற்கு அன்பு என்ற ஒற்றைச் சொல்லேக் காரணம். அந்த அன்பு எனும் ஒற்றைச் சொல்லை தாயைத் தவிர யாரால் நமக்கு தர முடியும். அப்படிப்பட்ட தாயையும் சேயையும் காக்கும் பல நல்லத் திட்டங்களை அதிமுக ஆட்சிகாலத்தில் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள் தமிழக மக்களுக்கு அளித்திருந்தார். அதனை அடுத்து வந்த முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும், கழகப் பொதுச்செயலாளருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அம்மா வழியில் தாய்-சேய்களுக்கான திட்டங்களையும், கர்ப்பிணிப் பெண்களுக்கான திட்டங்களையும் சீரும் சிறப்புமாக கொண்டு சென்றார்.திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மகப்பேறு உதவித் திட்டம்..!திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து சமூகநீதி, பெண்ணியம் என்று பேச மட்டுமே செய்கிறார்களே தவிர, எந்தவொரு களச் செயல்பாடும் இல்லை. அதாவது இந்த ஆட்சியில் கர்ப்பிணியருக்கான மகப்பேறு நிதியுதவி இரண்டு ஆண்டுகளாக கிடைக்காததால் அத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்று சந்தேகம் தற்சமயம் எழுந்துள்ளது.தமிழக அரசு சார்பில் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் பெயரில் மகப்பேறு உதவித் திட்டமானது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கர்ப்பமுற்ற பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். ஆனால், இந்த நிதி இரண்டு ஆண்டுகளாக கிடைப்பதில்லை என, கர்ப்பிணியர் குற்றம் சாட்டி வருகின்றனர். முன்பு இரண்டு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஒரு பெட்டகம் மட்டுமே வழங்கப்படுகிறது. அதில் உள்ள சில பொருட்களும் காலவதியான நிலையில் உள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.How Tamil Nadu CM MK Stalin has has hit the ground running in terms of action- The New Indian Expressபிரசவித்தப் பெண் கூறியதாவது!முத்துலட்சுமி அம்மையார் நிதியுதவித் திட்டத்தில், முதல் தவணையை மத்திய அரசு வழங்குகிறது. அது தாமதமாவதால், மாநில அரசின் நிதியுதவியும் தாமதமாவதாக கூறுகின்றனர். எனக்கு குழந்தை பிறந்து ஓராண்டு ஆகிறது. பரிசோதனை முதல் பிரசவம் வரை அரசு மருத்துவமனைகளில் தான் பார்த்தோம். அதேபோல், குழந்தைக்கான தடுப்பூசியும் அரசு மருத்துவமனையில் தான் போடப்படுகிறது. என்னுடன் பிரசவித்த யாருக்குமே, நிதியுதவி வழங்கப்படவில்லை. செவியலர்களைக் கேட்டால், “நிதியுதவி அளிப்பதில் இரண்டு ஆண்டுகளாக சிக்கல் உள்ளது” என கூறுகின்றனர். எனவே, கர்ப்பிணியருக்கான நிதியுதவி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதா என்ற சந்தேகம் எழுந்து உள்ளது. இவ்வாறு அப்பெண் கூறினார்.இதுகுறித்து, மக்கள் நலவாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இணையதளத்தில் சில தகவல்கள் மாறுபட்டால், நிதியுதவி கிடைக்காமல் இருக்கலாம். அதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். இதனை முன்கூட்டியே அறிந்து செயல்பட வேண்டியது அரசின் கடமை. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து அரசு எந்திரமானது பழுதடைந்துவிட்டது. ஒவ்வொரு விசயத்திலும் அலட்சியம் காட்டும் விடியா அரசை மக்கள் அரியாசனத்தில் இருந்து இறக்கும் காலம் வெகு சீக்கிரத்தில் உள்ளது என்பது அரசியல் விமர்சகர்களின் கூற்று.
via News J : https://ift.tt/S0UJNGZ
via News J : https://ift.tt/S0UJNGZ
Media”நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு.. சூழும் புகைமண்டலமும்” என்ற வசனத்தை ஒவ்வொருமுறையும் திரைப்படம் தொடங்கும் முன் திரையரங்குகளில் திரையிடுவார்கள். அது புகைப்பழக்கம், மதுப்பழக்கம் உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான விளம்பரப் படமாகும். அப்படி நம் தேசம் முழுமைக்கும் போதைப் பொருட்களானது மலிண்டு காணப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களில் போதைப் பொருட்களானது கைப்பற்றப்பட்டு 1.44 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் நேற்றைக்கு தலைநகர் டெல்லியில் அழிக்கப்பட்டது.புது டெல்லியில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் தேசிய பாதுகாப்பு மாநாடு நேற்று நடந்தது. இந்த மாநாட்டில் நாடுமுழுவதும் இருந்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களானது போதைப் பொருள் பணியகம் மற்றும் மாநில அரசுகளின் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மூலம், கிட்டத்தட்ட 1.44 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன.இது குறித்து மத்திய அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, அசாம், சண்டிகர், கோவா, குஜராத், ஜம்மு-காஷ்மீர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, திரிபுரா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், போதைப் பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தால் கைப்பற்றப்பட்ட 1,44 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டன். இவற்றின் மதிப்பு சுமார் இரண்டாயிரத்து நானூற்று பதினாறு கோடி ரூபாயாகும். நடப்பு ஆண்டில் மட்டும், 10 லட்சம் கிலோ போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 12000 கோடி ரூபாயாகும். ”போதைப் பொருட்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
via News J : https://ift.tt/gRa8xBs
via News J : https://ift.tt/gRa8xBs
Mediaஅமலாக்கத்துறை ரெய்டினால் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலக்கத்தில் உள்ளார். அவர் மட்டுமா கலக்கத்தில் உள்ளார் என்றால், மொத்த திமுகவினருமே கலக்கத்தில் உள்ளனர். மேலும் நேற்று இரவு விசாரிக்க அழைத்துச் செல்லப்பட்ட பொன்முடி மீண்டும் வீட்டிற்கு அனுப்பப்பட்டார். அதனைத் தொடர்ந்து இன்று மாலை நான்கு மணிக்கு மீண்டும் ஆஜராகும்படி அமலாக்கத்துறையினர் பொன்முடிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அச்சத்தில் வழக்கறிஞர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார் பொன்முடி.அமலாக்கத் துறையை நம்ப முடியாது நீதிமன்றத்தை நாட தயாராக இருங்கள் என வழக்கறிஞர்களிடம் தன் அச்சத்தையும் பொன்முடி வெளிப்படுத்தியிருப்பதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது.அமலாக்கத்துறை வழக்கில் சிக்கி சிறை சென்றுள்ள செந்தில் பாலாஜியின் மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்Mediaகோவையே பொன்முடி தற்போது நாடியுள்ளார். உயிர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்தார்.. அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் தன் மகன் கௌதம சிகாமணிக்கு சட்டத்திற்கு புறம்பாக செம்மண் அல்ல அனுமதி வழங்கியது தொடர்பாக வழக்கில் அமலாக்கத்துறையினர் நேற்று காலை முதல் 13 மணி நேரம் பொன்முடியில் சைதாப்பேட்டை வீட்டில் சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களையும் நகை மதிப்பீட்டாளர்களை வரவழைத்து வீட்டில் உள்ள தங்கம் வெள்ளி வைரம் உள்ளிட்டவைகளை மதிப்பீடு செய்துள்ளனர்; பிறகு நேற்று இரவு அம்பலக்குதுறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஏழு மணி நேரம் பொன்முடியிடம் விசாரணை நடத்தினார்கள்.பல கேள்விகளுக்கு பொன்முடி முறையாக பதில் அளிக்காமல் இரவு நேரம் தான் தூங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதன் காரணமாக இன்று மாலை 4 மணிக்கு அமலாக்கத்துறை அதிகாரியில் முன்னிலையில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் வழங்கி அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த வழக்கறிஞரும் என்ஆர் இளங்கோ, பொன்முடி வீட்டிற்கு நேரில் வந்து இன்று மாலை அமலாக்கத்துறை எழுப்பும் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்று இரண்டு மணி நேரம் பயிற்சி கொடுத்தார். மேலும், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி ஆஜராக கூறுவதால் கைது நடவடிக்கையில் ஈடுபடாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன் ஜாமின் வாங்கலாமா அல்லது கைது செய்த பிறகு நீதிமன்றத்தை நாடலாமா எதற்கும் தயாராக இருங்கள் என பொன்முடி என் ஆர் இளங்கோவிடம் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. அமலாக்கத்துறை கைது நடவடிக்கையில் இறங்கி விடுமோ என்ற அச்சத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளார் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
via News J : https://ift.tt/x0Yv2aM
via News J : https://ift.tt/x0Yv2aM
Mediaதமிழகம் முழுவதும் பழுதடைந்துள்ள 2 லட்சம் மின் மீட்டர்களை மாற்றி புதிய மீட்டர்களை பொருத்துமாறு பொறியாளர்களுக்கு மின்வாரியம் தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏன் இப்படி திடீரென்று இந்த காரியத்தில் மின்வாரியம் இறங்கியுள்ளது எனும் கேள்வி நம்முள் எழாமல் இல்லை.தமிழகம் முழுவதும் வீடுகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு மின்வாரியம் மின்விநியோகம் செய்து வருகிறது. இவ்வாறு விநியோகிக்கப்படும் மின்சாரம், மீட்டர் மூலம் கணக்கெடுக்கப்பட்டு, அதற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், பல மீட்டர்கள் பழுதடைந்து இருப்பதால் சரியான மின்பயன்பாட்டைக் கணக்கெடுக்க முடியவில்லை. இதனால், மின்வாரியத்துக்கு வருவாய் ஏற்படுகிறது என்று சொல்லப்படுகிறது.இதன் மூலமாகத்தான் மின்சார வாரியத்திற்கு பண இழப்பீடு ஏற்படுகிறதா என்ன? கடந்த இரண்டு ஆண்டுகளில் மின்சாரத்துறையினர் டிரான்ஸ்பார்மர் வாங்குவதில் 400 கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளதாக சமீபத்தில் ஒரு குற்றச்சாட்டு எழுந்திருந்தது. திடீரென இந்த மின் மீட்டர்களை மாற்ற மின்வாரியம் உத்தரவு இட்டிருப்பது இதனை மறைப்பதற்காகத்தானா? என்றும் நமக்கு சந்தேகம் வலுக்கிறது.முக்கியப் பிரமுகர்கள் வருகையின்போது தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும்: தமிழ்நாடு மின்சார வாரியம் சுற்றறிக்கை | TNEB sends circular to ensure ...கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் டிஸ்ட்ரிபியூசன் ட்ரான்ஸ்பார்மர்கள் ஒப்பந்தத்தில் கிட்டத்தட்ட அனைத்து ஒப்பந்ததாரர்களுமே கூட்டுசதி செய்து அனைவரும் ஒரே விலையை சொல்லியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தை பார்க்க முடிகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கான 250 kva காப்பர் சுருளியை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அனைத்து ஒப்பந்ததாரர்களும் ஒரே விலையான ரூ 7,51,660 குறிப்பிட்டு, அரசு அதை ரூபாய் 7.29 லட்சத்திற்கு குறைத்து வாங்கியுள்ளது. ஆனால் அதே மாதத்தில் காப்பர் சுருளியுடன் ராஜஸ்தான் கூடுதல் கெப்பாசிட்டியான 315 kva டிரான்ஸ்பார்மரை வெறும் 5.48 லட்சத்திற்கு தான் வாங்கியுள்ளது.அதேபோல 500 kva காப்பர் சுருளியுடன் தமிழக மின்வாரியம் நவம்பர் 2021 அனைத்து ஒப்பந்ததாரர்களும் 13.7 லட்சம் குறிப்பிட்டு 12.5 லட்சத்திற்கு டிரான்ஸ்பார்மர் வாங்கி உள்ளார்கள். ராஜஸ்தான் அரசாங்கம் 500 kva காப்பர் சுருளி டிராண்ஸ்பார்மருக்கு அதே ஸ்பெசிஃபிகேசனில் ஆகஸ்ட் 2021ல் டெண்டர் திறக்கப்பட்டு 7.87 லட்சத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு மின்சார வாரியம் அக்டோபர் 2021 இல் டெண்டர் போடும் பொழுது ரூபாய் 7.89 லட்சம் டெண்டர் தொகையாக நிர்ணயித்துள்ளார்கள். இதன் மூலமே மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ஊழல் முறைகேடு தெளிவாக உள்ளது.
via News J : https://ift.tt/vnsN6PO
via News J : https://ift.tt/vnsN6PO
Media2006 -2011 ஆம் ஆண்டு கனிம வளத்துறை அமைச்சர் ஆக இருந்த தற்போதைய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதால் தமிழக அரசிற்கு 28 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நேற்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் பொன்முடி வீடு மற்றும் விழுப்புரம் விக்கிரவாண்டில் உள்ள அவரது மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய ஒன்பது இடங்களில் 13 மணி நேரமாக சோதனை செய்தனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியது மேலும் 70 லட்ச ரூபாய் ரொக்கப்பணம் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் சிக்கின இதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள நகைகளை மதிப்பீடு செய்வதற்காக நகை மதிப்பீட்டாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். இதற்கு இடையில் சோதனை நடந்து கொண்டு இருந்தபோதே அமைச்சர் பொன்முடியை அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணைக்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விடிய விடிய விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை காலை விசாரணை முடிவடைந்து அமைச்சர் பொன் மொழியை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மீண்டும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு ஆஜராக வேண்டும் என தெரிவித்த நிலையில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி ஆகியோர் சைதாப்பேட்டை வீட்டிலிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்று தற்போது ஆஜர் ஆகியுள்ளனர்.
via News J : https://ift.tt/Qx5w3OK
via News J : https://ift.tt/Qx5w3OK
Mediaஇந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ராஇந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா. கடந்த ஆண்டு அவருக்கு ஏற்பட்ட முதுகு பகுதியின் காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து அப்போது விலகினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணிக்கு உலக கோப்பை, ஆசிய கோப்பை என முக்கியமான தொடர்களில் பும்ரா இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதுபோன்றே மக்கள் அனைவரும் பும்ரா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இணைவார் என்று எதிர்பார்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது. ஏனென்றால் அவரது முதுகு பகுதியில் ஏற்பட்ட காயமே காரணம் என்றனர். இதனை அடுத்து அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலாவது இடம் பெறுவாரா? என்று எதிர்பார்த்த வேளையில் அப்போதும் அவர் அணிக்கு விளையாடவில்லை.பும்ரா எப்போதுதான்? கம்பேக் கொடுப்பார் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்தது. இதுமட்டுமல்லாமல் சமீபகாலமாக இந்திய அணியில் காயத்தால் பாதிக்கப்பட்டவர்களின் லிஸ்ட் என்பது அதிகரித்து உள்ளது. அந்த வகையில் ரிஷப் பண்ட், கே.எல் ராகுல், போன்ற முக்கிய வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். இதனை தொடர்ந்து ஏமாற்றம் மட்டுமே கிடைத்த இந்திய அணியின் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக பும்ரா இந்திய அணிக்கு திரும்ப இருக்கிறார் என்ற செய்தி வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.நான் ரெடிதான் வரவா' - பயிற்சியில் ஈடுபடும் படத்தைப் பகிர்ந்த பும்ரா | Bumrah shared training pictures symbolically saying Na ready than varava - hindutamil.inரசிகர்களுக்கு கிடைத்த நற்செய்தி!!சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 2016- ஆம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். மேலும் அவர் ’அறுபது’ சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். மேலும், அவருக்கு ஏற்பட்டு இருந்த முதுகுவலி பிரச்சனைகள் குணமாகிய சூழலில் அயர்லாந்து அணிக்கெதிராக இந்திய அணி விளையாடும் டி20 சர்வதேச போட்டிகளில் பும்ராவை களமிறக்க அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்பட்டது. அந்த செய்தி குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், பும்ரா களத்தில் இறங்கி பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாக்கிராம் பக்கதில் வெளியிட்டுள்ளார். இந்த செய்தியை கேட்ட ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். ‘கம்மிங் ஹோம்’ என்ற பாடலை பின்னணியில் ஒலிக்க செய்து அவர் விளையாடும் மற்றும் பந்து வீசும் படங்களை சமுக வலைத்தளங்களில் வெளியிட்டார். இந்த செய்தியை நெட்டிசன்கள் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
via News J : https://ift.tt/CpITu5Q
via News J : https://ift.tt/CpITu5Q
Mediaஉத்தரபிரதேச மாநிலம் பரேலியைச் சேர்ந்தவர் தஸ்லிம். இவர் யூடியூப் சேனலில் பங்குச் சந்தை, பங்கு வர்த்தகம், விற்பனை தொடர்பான பல வீடியோக்களை வெளியிட்டு வந்துள்ளார். இவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கான சந்தாதாரர்கள் உள்ளனர். இந்நிலையில் யூடியூப் சேனல் மூலம் அவருக்கு 1.2 கோடி அளவுக்கு வருமானம் வந்துள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் அண்மையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அவரது வீட்டிலிருந்து ரூ.24 லட்சம் ரொக்கத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சட்டவிரோதமாக இந்தப் பணத்தை அவர் ஈட்டியுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள் குற்றம்சாடியுள்ளனர்.UP YouTuber Earns Rs 1 Crore Through Videos, Income Tax Raid At Homeஇதுகுறித்து தஸ்மின் சகோதரர் பெரோஸ் கூறும்போது, “எனது சகோதரர் நடத்தும் யூடியூப் சேனல் மூலம் ரூ 1.2 கோடி வருவாய் வந்தது. இதற்காக நாங்கள் ரூ.4 லட்சத்தை வரியாக செலுத்திவிட்டோம். நாங்கள் வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை. நாங்கள் யூடியூப் சேனல் ஒன்றினை நடத்தி அதன் மூலம் வருவாயினை ஈட்டி வருகிறோம். இதுதான் உண்மை. சதித்திட்டம் தீட்டி வருமான வரிச் சோதனையை நடத்தியுள்ளனர்” என்றார். தஸ்லிமின் தாயார் கூறும்போது, “என் மகன் தஸ்லிம் மீது பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது. அவர் மீது தவறுதலாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
via News J : https://ift.tt/idDFoRe
via News J : https://ift.tt/idDFoRe
Mediaபா.ஜ.க தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டமானது நடைபெறுவதையொட்டி டெல்லி அசோகா ஹோட்டலில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து மலர்கொத்துக் கொடுத்து வருகிறார்கள். முக்கியமாக அதிமுகவின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பிரதமர் மோடி அவர்களை சந்தித்து பூங்கொத்துக் கொடுத்தார்.தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடியுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜநாத் சிங் உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் பலர் வருகை புரிந்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்திலிருந்துஅ.தி.மு.க (எடப்பாடி பழனிசாமி),புதிய தமிழகம் (டாக்டர் கிருஷ்ணசாமி),தமிழ் மாநில காங்கிரஸ் (ஜி.கே.வாசன்),புதிய நீதி கட்சி (ஏ.சி.சண்முகம்),தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் (ஜாண் பாண்டியன் )இந்திய ஜனநாயக கட்சி (பாரிவேந்தர்)இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் (தேவநாதன் யாதவ்)ஆகிய முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
via News J : https://ift.tt/NAheLSd
via News J : https://ift.tt/NAheLSd
mk stalinகட்டுமான தொழிலாளர்கள் கோரிக்கை அடங்கிய மனுவிற்கு தமிழக முதல்வர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை கட்டுமான தொழிலாளர்கள் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று தற்போது எழுந்துள்ளது.சென்னை தி நகரில் உள்ள கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகம் முன்பு தமிழ் நாடு கட்டுமான தொழிலாளர்கள் அவர்களது மாத ஓய்வூதியம், திருமண உதவித்தொகை, விபத்துக்கான காப்பீட்டு தொகை முதலியவற்றினை உயர்த்தி கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி ஐம்பதிற்கும் மேற்பட்ட நபர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.கட்டுமான தொழிலாளர்களின் மாத ஓய்வு ஊதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட எனவும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்கியதோடு ஓய்வூதியத்தை பிரதி மாதம் பத்தாம் தேதிக்குள் வழங்கிட வேண்டும், விபத்து மரணம் மற்றும் இயற்கை மரணம் நிகழும் நிகழ்வுகளில் வாரியத்தால் வழங்கப்படும் உதவி தொகை 30 நாட்களுக்குள் தொழிலாளியை இழந்த குடும்பத்திற்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் தீபாவளி பண்டிகை கால போனஸ் தொகை ரூபாய் 5 ஆயிரத்தை ஒரு மாத காலத்திற்கு முன்பே வழங்கிட வேண்டும் எனவும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுமானத் தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.35, 36 கட்டுமான வாரிய கூட்டத்தில் எடுத்த முடிவினை அரசாணையாக வெளியிட வேண்டும். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டமான தற்போது நடைபெற்று வருகிறது. கட்டுமான துறையில் பல்லாயிரம் கோடி ரூபாய் பணமானது இருந்து வருகிறது இது அரசின் உடைய பணம் இல்லை, இது கட்டுமானர்களது பணம். அந்த பணத்தினை கொடுப்பதற்கு கூட அரசு முயற்சி செய்ய வில்லை.
எங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வருகின்ற செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். எங்களுடைய போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரைக்கு மனு அனுப்பிவிருக்கிறோம் மற்றும் தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பி இருக்கிறோம் இருப்பினும் இதுவரை எந்தவித பதிலையும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
via News J : https://ift.tt/LzaIbwB
எங்களுடைய கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் வருகின்ற செப்டம்பர் மாதம் 13ஆம் தேதி கோட்டையை நோக்கி பேரணி நடத்த உள்ளோம். எங்களுடைய போராட்ட கோரிக்கைகள் தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியரைக்கு மனு அனுப்பிவிருக்கிறோம் மற்றும் தமிழக முதல்வருக்கும் மனு அனுப்பி இருக்கிறோம் இருப்பினும் இதுவரை எந்தவித பதிலையும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
via News J : https://ift.tt/LzaIbwB