Mediaசைபர் குற்றவாளிகளிடம் இருக்கும் நவீன தொழில்நுட்பம் தமிழ்நாடு காவல்துறையில் இல்லை முன்னாள் டிஜிபி ரவி கூறியுள்ளார். மேற்கொண்டு,சைபர் கிரைம் குற்றங்களை குறித்து விழிப்புணர்வு பாடங்களை குழந்தைகள் மத்தியில் பாடத்திட்டத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் போலியான சமூக வலைதளங்களை தடை செய்யாவிட்டால் தனிமனித சுதந்திரம் பாதிக்கும் என்றும் அவர் பேசியுள்ளார்.என்ன நடந்தது?..ஓய்வு பெற்ற முன்னாள் டிஜிபியும் தாம்பரம் காவல் ஆணையருமான ரவி தனது பெயரில் போலி முகநூல் அக்கவுண்ட்டில் ராணுவத்தில் பயன்படுத்திய தரமான பர்னிச்சர் பொருட்களை வாங்கி உள்ளதாகவும், அதனை வாங்குமாறு பரிந்துரை செய்தது போல் மெசேஜ் அனுப்பியுள்ளனர்.இதனை அறிந்து அதிர்ச்சி அடைந்த முன்னாள் டிஜிபி ரவி உடனடியாக இது குறித்து சைபர் க்ரைம் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.மேலும், இதுகுறித்து அவரது முகநூலில் பக்கத்தில் இப்படி யாராவது தகவல் அனுப்பினால் அது போலி என்று கருதி உடனே காவல்துறையில் புகார் அளிக்கும்படி பதிவிட்டுள்ளார்.பணி ஓய்வு பெற்ற டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ் கடந்து வந்த பாதைஇது குறித்து முன்னாள் டிஜிபி ரவி பேசியது..முகநூல் பக்கத்தில் போலியானப் பக்கத்தை உருவாக்கி இராணுவ அதிகாரிக்கு என் பெயரை வைத்து பணம் பறிக்க முயன்று உள்ளார்கள்.என்னைப் போன்ற அதிகாரிகளின் பெயரை வைத்து போலியாக முகநூல் கணக்கை வைத்து ஏமாற்றி வருகின்றனர், எனது கணக்கின் மூலமாக அவர்களது நண்பர்களுக்கு தகவல் அனுப்புகிறார்கள். நான் ஒரு ராணுவ அதிகாரி இடம் பர்னிச்சர்ஸ் வாங்கினேன் அது மிக குறைவான விலையில் உள்ளது என்று நான் கூறுவதைப் போல் அவர்களையும் வாங்கச் சொல்லி கூறியுள்ளனர்.இந்த தகவலை எனது நண்பர்கள் என் இடத்தில் கூறியவுடன் நான் குற்றப் பிரிவில் புகார் அளித்தேன். உடனடியாக பேஸ்புக் மெட்டா-விற்கு இமெயில் அனுப்பி புகார் அனுப்பினேன். இதுபோன்ற போலியான கணக்குகளை உருவாக்கிப் பணத்தை பறிப்பது தான் இது போன்ற சைபர் கிரிமினல்களின் நோக்கம்.ஓய்வுப் பெறுகிறார் தாம்பரம் காவல் ஆணையர் ரவி - அவரின் பின்னணி என்ன?ஆகையால், குறிப்பாக என்னைப் போன்று காவல்துறை அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி காவல்துறை அதிகாரிகளின் போலி கணக்கை உருவாக்க முடியாது என்ற மக்களின் நம்பிக்கை இருக்கும் அதை பயன்படுத்தி இவ்வாறு செய்து வருகிறார்கள்,ஆகையால் இதுபோன்று முகநூலோ அல்லது வேறு ஒரு சமூக வலைதளங்களில் எனக்கு பணம் தேவை என்று கூறும் செய்தி வந்தால் அதை யாரும் நம்ப கூடாது,இன்று பொதுமக்கள் இடையே இதுபோன்ற சைபர் குற்றங்கள் பெருகி வருகிறது சைபர் குற்றம் என்பது காவல்துறைக்கு ஒரு பெரிய சவாலாகவே இருக்கிறது, முகநூல் பக்கத்தில் நமது மக்கள் தொகையை விட அதிக கணக்குகள் இருப்பதாக தெரிகிறது ஆகையால் ஒரே நபர் பல கணக்கில் இதை பயன்படுத்தி வருகிறார்கள், இதை கண்காணித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்க விட்டால் வருங்காலங்களில் சமூக வலைதளங்களில் நடைபெறும் குற்றங்களுக்கு தனி மனித சுதந்திரம் என்பதும் பாதிக்கும் அளவுக்கு ஆகிவிடும்,அது மட்டும் அல்லாமல் ஆபாசமான விஷயங்களை அதில் பதிவிட்டு வருகின்றனர், அதையும் கண்காணித்து சரி செய்ய விட்டால் இளைஞர்கள் கெடுவதற்கான வாய்ப்புகள் உண்டு பெண்களை கடத்தலில் ஈடுபட இந்த முகநூல் பக்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள், விபச்சாரம் செய்யும் தொழிலுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.ஆகையால் இவைகளை தடுப்பதற்கு தமிழக அரசு பெரிய அளவிலான ஒரு அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லாவிட்டால் நாம் பொதுமக்கள் பெருமளவுக்கு பாதிப்புகள் உள்ளாக்கப்படுவோம். பெரும்பாலும் இது போன்ற சைபர் கிரைம் குற்றத்தை முகநூல் மற்றும் இணையதளம் மூலமாக ஜார்க்கண்ட் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தொடர்ந்து செய்து வருகிறார்கள் அவர்கள் தங்களை காவல்துறை பிடிக்க முடியாது என்ற ஒரு சவாலோடு குற்றங்களை செய்து தலைமறைவாக இருக்கிறார்கள்,சமூக ஊடகங்களில் அதிகரிக்கும் சைபர் கிரைம் குற்றங்கள்..முகநூல் என்பது இப்பொழுது எல்லாம் அறிவை வளர்த்துக் கொள்ள பயன்படுத்துவதை விட விளம்பரங்கள் மற்றும் தேவையற்ற ஆபாச பதிவுகளை பதிவிடுவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கிறது.சமூக ஊடகங்களை குறைந்த அளவே பயன்படுத்துவது நல்லது, அதை மீறும் பொழுது அதற்கு அடிமையாகி விடுகிறார்கள், ஆகையால் அவர்களை இதிலிருந்து மீட்பதற்கு கடினமாக இருக்கிறது.<a href="https://www.brandsynario.com/wp-content/uploads/fake…
Mediaஇன்று சாதனை படைத்த அத்தனை மனிதர்களுக்கு பின்னாலும் சொல்லப்படாத வலிகளும், ரணங்களும் மறைந்து இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அப்படி மறைத்து வைக்கப்பட்ட வலிகளின் பெயர் தான் அங்கிதா ஸ்ரீவஸ்தவா. இவர் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த தடகள வீராங்கனை ஆவர். இவரை பற்றி அறிந்திராதவர்கள் இல்லை. ஏனென்றால், இவர் செய்த விஷயம் அனைவரின் மத்தியிலும் உணர்ச்சிவசப்படுத்தியது. அம்மானா யாருக்குதான் புடிக்காது நாயுக்கும் புனைக்கும் கூடதான் புடிக்கும் என்பதை போல தடகள வீராங்கனை அங்கிதா அவர்கள் அவரின் அம்மவிற்கு கல்லீரல் தானம் செய்தார். அங்கிதாவின் அம்மா கல்லீரல் அழற்சியால் பதிக்கப்பட்டு இருந்தார். அப்பொது அங்கிதாவின் வயது13.அங்கிதா: கல்லீரல் தானம் செய்த பிறகும் தடகளப் போட்டிகளில் இவர் பதக்கங்களை குவிப்பது எப்படி? - BBC News தமிழ்அந்த நேரத்தில் அவரின் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக மாறியது. இதற்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறினார்கள். அதற்கு அவரது கல்லீரலை தானம் செய்வதாக கூறினார் ஆனால் அப்போது அவருக்கு வயது 13 என்பதால் செய்ய முடியாது என மருத்துவர்கள். கூறினார்கள். பனினெட்டு வயதானால் மட்டுமே தானம் செய்யமுடியும் என்று கூறினார்கள். இதற்கிடையில் கல்லீரல் தானம் செய்ய அங்கிதாவின் குடுப்பதினர் நாடினர். ஆனால் எந்த பயனும் அளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். காலங்கள் ஓடியது அன்று அங்கீதா கூறியப்படியே தனது 18 வயதில் அங்கிதா தனது தாய்க்கு கல்லீரல் தானம் செய்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு அங்கிதா:அங்கிதாவின் உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு பிறகு மோசமானது. நான்கில் மூன்று பங்கு கல்லீரல் அகற்றுப்பட்டிருந்தால், அதிகம் அசைவதற்கே அங்கிதா சிரமப்பட்டு கொண்டிருந்தார். அவர் சிகிச்சைக்கு பிறகு உடல் முழுவதும் பல்வேறு விதமான குழாய்களும், சிறிய மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டிருந்தன. முக்கியமாக ‘மோர்பின்’ என்னும் வலி நிவாரண மருந்தை செலுத்துவதற்கான குழாய் அங்கிதாவின் கையில் பொருத்தப்பட்டிருந்தது. வலிகள் ஏற்படும் போதெல்லாம் செவிலியர் அவருக்கு அந்த மருந்தை செலுத்துவார் என்று கூறினார். இந்த அறுவை சிகிச்சைகு பிறகு இவரது தாயின் உடல் முன்பு போலவே பழைய நிலைக்கு மாறியது. இதனை பார்த்து அங்கிதா மிகவும் சந்தோசப்பட்டார். இந்த மகிழ்ச்சியெல்லாம் சிறிது காலமே கைகொடுத்தது. சிகிச்சைக்கு பிறகு அவரின் தாயின் உடலானது மூன்று மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். பிறகு இறந்துவிட்டதாக அங்கிதா கூறினார். ஏற்கனவே உடலளவில் வலியை அனுபவித்து வந்த எனக்கு அம்மாவின் மரணம் மனதளவில் கடுமையாக பாதித்தது” என்கிறார் அங்கிதா.ஒருபுறம் விளையாட்டு மறுபுறம் அலுவலகப் பணி:அவர் அதிலிருந்து வெளிவர மட்டுமே ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன் பிறகு தனது கனவினை துறத்தி ஓடினார். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக நடத்தப்படும் உலக அளவிலான பிரத்யேக தடகளப் போட்டிகளை பற்றி அறிந்து கொண்டார். அத்துடன் அந்த போட்டியில் இந்திய அணியின் வீரராகவும் தேர்வுசெய்யப்பட்டார். அப்பொது அவர் கூறியது நீங்கள் ஒரு விஷயத்தை ஆர்வமுடன் தொடர்ந்து மேற்கொண்டால், ஒரு நாள் அதில் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். ஒருபுறம் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்த அவர், மறுபுறம் தமது அலுவலக பணிகளையும் கவனிக்க ஆரமித்தார். காலயில் சில மணி நேரம் விளையாட்டு பயிற்சி செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவார். பின்னர் மீண்டும் பணிகள் முடிந்ததும் பயிற்சி செய்வார். இது அவரின் வாழ்கைக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.அங்கிதா: கல்லீரல் தானம் செய்த பிறகும் தடகளப் போட்டிகளில் இவர் பதக்கங்களை குவிப்பது எப்படி? - BBC News தமிழ்அங்கிதாவின் தீராத காதல்:மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டு போட்டிகளில் அங்கிதா பங்கேற்றார். இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றார். அத்துடன் நீளம் தாண்டுதல் மற்றும் எறிபந்து போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தி உள்ளார் அங்கிதா. அவர் இன்று உலகம் அறியும் சர்வதேச வீராங்கனையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும், பேச்சாளராகவும் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். …
Mediaமழை வரும் போது மயில் ஆடும் குளிர் வரும் போது குயில் பாடும் அதுபோலவே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மழை என்றால் யாருக்குதான் புடிக்காது. அதிலும் மழையில் நனைவது என்பது அனைவருக்கும் பெரும் ஆசையாக இருக்கும். மழை வரும் அறிகுறி வந்தாலே நாம் நம் சிறுவயதில் வீட்டிற்கு வெளியே நின்று கொண்டு மேகம் கருக்குது பாட்டிற்கு நடனம் ஆடி இருப்போம். அதுலாம் ஒரு காலம்! ஆஹா.. நினைக்கவே குதுகலமாக இருக்கிறது அல்லவா. அத்துடன் சுட சுட டீ அதனுடன் இளையராஜா பாடல்கள் என்றால் சொல்லவா வேண்டும். இதுவெல்லாம் ஒரு புறம் நியாபகம் வந்தாலும் மறுபுறம் மழை வந்தால் அம்மா நம்மிடம் கத்திக்கூப்பிடுவது மழை வருது வெளிய போகதே, சளி பிடித்து விடும் என்ற குரலும் கண்டிப்பாக கேட்டு இருக்கும்.இந்நிலையில் மழையில் நனைந்தால் நன்மை என்று சொன்னால் எவ்வளவு நல்லா இருக்கும் இல்ல.. கேட்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கே என்று பலரும் நினைப்பார்கள். இதுபோலவே சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும் என்றும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்றும் பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் அதன் உண்மை தன்மையை பற்றி கூறுகின்றனர்.மருத்துவர்கள் கூறுவது:பொதுவாக, மழைக்காலமும் ஃப்ளூ காய்ச்சல் பரவும் காலமும் ஒருசேர வரும். அப்போது மழையில் நனைந்தால் தொற்று ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் மழையில் நனைவது மட்டுமே எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது,” என்கிறனர். அதேபோல், மழைக் காலத்தில் பூஞ்சைகளால் ஏற்படும் ஒவ்வாமைகளும், மைட்ஸ் எனப்படும் ஒருவகை பூச்சியால் ஏற்படும் ஸ்க்ரப் டைஃபஸ் பரவும் வாய்ப்புகளும் உள்ளன என்று கூறுகின்றனர்.As rain hits NCR, max temperature drops to 25.3°C | Latest News Delhi - Hindustan Timesநோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறுமா!பொதுவாக மழையில் நனைவதால் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெருகிறதாக கூறப்படும் கருத்துகளுக்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்கின்றனர் மருத்துவத்துறையினர். “பொதுவாக வெறும் மழைநீரால் பாதிப்பும் இல்லை பயன்களும் இல்லை,”. வெறும் மழைநீரால் மட்டும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முடியாது என்று கூறினார். ஆனால், “மழைக்காலத்தின்போது நாம் எதிர்கொள்ளும் நோய்க்கிருமிகளைச் சமாளிப்பதன் மூலம் நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெற வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேலும் மழை நீரானது காரத்தன்மை உடையது என்றும் அதனால் மழை நீர் சருமத்திற்க்கும், தலை முடுக்கிற்கும் நல்லது என்று தெரிவித்தனர். இயற்கை மருத்துவதில் நீர் சிகிச்சை என்ற முறை உள்ளதாக கூற்கின்றனர். அந்த முறையானது வெறும் நீரை மட்டுமே வைத்து சிகிச்சை அளிக்கப்படும் என்று கூறுகின்றன. பொதுவாக மழை நீர் குளிர்ச்சியாக இருப்பதால் அதில் நனைவது என்பது பொதுவாகவே சுவாசமும், ரத்த ஓட்டமும் சீராக இருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிகின்றனர். ஆனாலும், நீண்ட நேரம் மழையில் நனைவதும், ஈரப்பதத்திலேயே இருப்பதாலும் தொற்றுக்கிருமிகளால் நோய் பரவும் அபாயமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்படி உங்களுக்கு மழையில் நனைய வேண்டும் என்று ஆசை இருந்தால் நனைந்த உடன் வீட்டிற்கு வந்து வெது வெதுப்பான தண்ணீரில் குளித்து விட வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
via News J : https://ift.tt/p72hz45
via News J : https://ift.tt/p72hz45
Mediaஒரு கட்சி ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு நாளும் ஏதாவது புது திட்டங்கள் வருமா? மேம்பாலம் வருமா? மக்கள் வாழ்க்கைத்தரத்தை உயர்த்த ஏதாவது வளர்ச்சி வருமா என்று எதிர்ப்பார்ப்பார்கள் மக்கள்… ஆனால், இந்த விடியா திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, எந்தத்துறையில் ரெய்டு வரப்போகிறது? எந்த அமைச்சர் ஜெயிலுக்குப் போகப்போகிறார்? எத்தனை ஆயிரம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள் ? என்று அறிந்துகொள்ளத்தான் ஆவலாய் இருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்… அந்த வகையில், டாஸ்மாக் அமைச்சர் செந்தில் பாலாஜி ரெய்டுக்கு பிறகு தற்போது வசமாய் சிக்கியிருக்கிறார் அமைச்சர் மூர்த்தி.கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை மற்றும் திருச்சியில் அரசு அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியதில் சுமார் 3ஆயிரம் கோடி , 2 ஆயிரம் கோடி என்று கணக்கில் வராத கோடிக்கணக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது…. இது ஒன்றும் பேங்கில் இருந்து எடுத்தார்கள் என்றெல்லாம் எண்ணிவிடாதீர்கள்… இந்த 3000 கோடி , 2 ஆயிரம் கோடி எல்லாம் தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் இருந்து எடுத்திருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலர்கள்..திருச்சி உறையூர், சென்னை செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள ரெஜிஸ்டர் ஆபீஸ்-ல் இவ்வளவு கோடி ரூபாயை பறிமுதல் செய்திருக்கிறார்கள் என்றால், பெரிய பெரிய நகரங்களில், மாநகராட்சிகளில் எல்லாம் என்ன கணக்கு என்று நீங்களே கூட்டிக்கழித்து பாருங்கள் கணக்கு சரியாக வரும்..தமிழகத்தில் உள்ள பல சார் பதிவாளர் அலுவலகங்களில் பான் கார்டு இணைக்காமலே பத்திரப்பதிவு செய்யப்படுவது, எந்த பத்திரப்பதிவு என்றாலும் அதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் என்று தொடர் முறைகேடுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.. சரி இதற்கும் அமைச்சர் மூர்த்திக்கும் என்னப்பா சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.. இருக்கிறது சம்பந்தம் இருக்கிறது… சில மாதங்களுக்கு முன்னர் மதுரையில் ஊலே மெச்சும் அளவுக்கு பிரம்மாண்ட கறி விருந்தோடு ஒரு கல்யாணம் நடந்தது உங்களுக்கெல்லாம் நினைவிருக்கிறதா? இது என்ன கல்யாணமா இல்லை மாநாடா என்று முதல்வர் ஸ்டாலினே ஆச்சர்யப்படும் படி நடந்த கல்யாணத்திற்கு சுமார் 95 கோடி ரூபாயை செலவழித்தார் ஒரு அமைச்சர் ஆம்… ஷாட்ஷாத் மூர்த்தியே தான்…ஒரு கல்யாணத்தில் கோடிகோடியாய் செலவழிக்க எங்கிருந்து வந்தது இவ்வளவு கோடி? எல்லாம் பத்திரப்பதிவுத்துறையின் கைங்கர்யம் தான் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.. அதுமட்டுமின்றி, செந்தில்பாலாஜி போல, சம்பாதித்த காசில் பங்கை ஸ்டாலின் குடும்பத்திற்கும் கொடுத்ததால்தான் மதுரையில் அவருடன் மோதிய முன்னாள் நிதியமைச்சர் பிடிஆரையே வேறுதுறைக்கு மாற்றியதாகவும் திமுகவின் உள்வட்டாரங்களில் கருத்துக்கள் வட்டமடிக்கின்றன…டாஸ்மாக்கை தொடர்ந்து கட்டம்கட்டப்படுகிறதா பத்திரப்பதிவுத்துறை? பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்களில் கோடி கோடியாய் புரளும் லஞ்சப்பணம் யாருக்கு செல்கிறது?செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து வசமாய் சிக்கப்போகிறாரா அமைச்சர் மூர்த்தி? என்பதுதான் இன்றைய தமிழகத்தின் ஹாட் டாக் கே.
via News J : https://ift.tt/3ZME2gi
via News J : https://ift.tt/3ZME2gi
Mediaகழகப் பொதுச்செயலாளர், சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு.எடப்பாடி கே பழனிசாமி அவர்களின் மடல்கழக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு : 20.08.2023 – மதுரைகழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பு கலந்த வணக்கம்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக “வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு” வருகின்ற 20.08.2023 ஞாயிற்றுக் கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளதையொட்டி, இந்த மடல் வழியாக உங்களை சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.“எனக்கு பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றண்டுகள் வந்தாலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்று சூளுரைத்த நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் சபதத்தை நிறைவேற்றிடும் வகையிலும், கழகத்தின் சார்பில் நடைபெற உள்ள மாநாடு வரலாற்றில் முக்கியத்துவம் பெற வேண்டும் என்ற உன்னத நோக்கத்திலும், கழக மாநாட்டில் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்து, கழகத்தின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள் கம்பீரமாக காட்சி அளிப்பதைக் கண்டும்; ஆங்காங்கே துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருவதைக் கண்டும், உள்ளபடியே நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதற்காக, கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது மனமார்ந்த பாரட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கட்சியையும், ஆட்சியையும் நடத்தி வருபவர்களுக்கு மத்தியில்,“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்,இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்”என்று வாழ்ந்து மறைந்த வரலாற்று நாயகர் ‘பொன்மனச் செம்மல்’ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால், மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா போன்ற, தமிழர் நலனுக்காகத் தங்களையே அர்ப்பணித்த மகத்தான தலைவர்களின் வழியில் சமத்துவ, சமதர்ம சமுதாயம் உருவாகிடப் பாடுபடும் ஒரே இயக்கமும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான்.இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், “எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை; எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை; நான் வாழ்வதே இந்த இயக்கத்திற்காத் தான்; தமிழக மக்களுக்காகத் தான்” என்று வீர முழக்கமிட்டார்கள்.அந்த வகையில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரின் பூரண நல்லாசியோடும்; கழகத்தை பலவீனப்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தில் தரப்படும் பல்வேறு சோதனைகளையும், துரோகங்களையும், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் கோடான கோடி தொண்டர்களாகிய உங்களின் நல்லாதரவோடும் முறியடித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பினை ஏற்று, கழகம் மீண்டும் ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும் என்ற ஒரே லட்சிய இலக்கோடு நான் பணியாற்றி வருகிறேன்.பல்வேறு மாவட்டங்களுக்கு கழகப் பணிகள் நிமித்தமாக நான் செல்லும்போது, கழக நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஆங்காங்கே பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்து உற்சாக வரவேற்பு அளிக்கும் நிகழ்வுகளைப் பார்த்து என் மனம் பூரிப்படைகிறது.இந்நிலையில், மதுரையில் நடைபெற உள்ள கழக மாநாட்டில், கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, மாநகராட்சிப் பகுதி, கிளை, வார்டு, வட்ட அளவில் பணியாற்றி வரும் அனைத்து கழக நிர்வாகிகளும், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், அதேபோல், கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும், குடும்பம் குடும்பமாக வந்து கலந்துகொள்ள வேண்டும் என்று அனைவரையும் வாஞ்சையோடு அழைக்கிறேன்.மாவட்டக் கழகச் செயலாளர்கல் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களுக்கு உட்பட்ட ஒவ்வொரு இடங்களில் இருந்தும், கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஏதுவாக, தேவையான வாகனங்களை முன்கூட்டியே பஹ்டிவு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில், மக்கள் எவ்வித இன்னல்களுக்கும் ஆளாகாத வகையில் தங்கள் வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். ஆனால், தற்போதைய விடியா திமுக ஆட்சியின் திறமை இன்மையால், மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்ஹ்டு வருவதை நாம்…
Mediaகாமராசரின் தனித்துவம்:அன்றைய காலக்கட்டங்களில் ஆட்சி முறை என்றதுமே அனைவருக்கும் நினைவில் வருவது என்னமோ புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். என்ற மூன்றழுத்து மனிதர் தான். அடுத்து யார் என்று கேட்டதுமே கொஞ்சம் கூட யோசிக்காமல் நாம் சொல்லும் பெயர் தான் ஏழை மக்களின் உன்னத குரல் கர்மவீரர் காமராசர். ஏனென்றால் “ஈராயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக சேர, சோழ, பாண்டியர்களின் ஆட்சிக் காலத்தில் நிகழாத அற்புதங்களெல்லாம் காமராஜர் ஆட்சியில் நிகழ்கின்றன” என்று காமராஜர் ஆட்சியை தந்தை பெரியாரே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான காரணம் என்னவென்றால் ஏழை எளிய மக்களின் நலனை மட்டுமே நோக்கமாகா கொண்ட இவரின் ஆட்சி முறைத் தான். இவர் சென்னை மாகாண முதலமைச்சராக 1954இல் தெர்வுசெய்யப்பட்டார். அப்பொது 17 பேர் கொண்ட அமைச்சரவை எண்ணிக்கையை 8 ஆகக் குறைத்து, 17 பேர்கொண்ட அமைச்சரவை எண்ணிக்கையை 8 ஆகக் குறைத்து, கொண்டு திறமை உள்ளவர்களை மட்டுமே பணியமற்தினார். தன்னுடன் போட்டியிட்ட சி.சுப்ரமணியத்தையும் தன்னுடைய அமைச்சர் அவையில் இணைத்துக் கொண்டார். இவர் மேலும் சமூகநீதி அடிப்படையில் பட்டியல் இனத்தைச் சேர்ந்த பி.பரமேஸ்வரனை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக நியமித்தார் இது அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய காமராசர் அமைச்சரவை இருந்தது என்று கூட சொல்லலாம்.TN CM inaugurates memorial for Kamarajar | Deccan Heraldஎண்ணற்றத் திட்டங்கள்:இந்த மாற்றம் காமராசர் அமைச்சரவையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. காமராஜர் ஆட்சியில் எண்ணற்ற நீர்ப்பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் 25 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் நீர்ப்பாசனம் பெற்று விவசாய நிலங்களாக மாறின. இதனை தொடர்ந்து நீண்ட காலமாக நடைமுறையில் இருந்த இடஒதுக்கீட்டுக் கொள்கை குறித்து சென்னை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் இடஒதுக்கீடு ஆணையை ரத்துசெய்திருந்தன. இப்பிரச்சினையின் தீவிரத்தைப் பிரதமர் நேருவிடம் வலியுறுத்தி, அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டுவருவதற்குக் காரணமாக இருந்த காமராஜர் ‘முதல் திருத்தத்தின் மூலவர்’ என்றும் அழைக்கப்பட்டார். ஏழை எளிய மக்களின் குடியிருப்புகள், கிராமப் புற சாலைகள், கல்விகூடங்கள், முதல் முறயாக ஏழைக் குழந்தைகள் பள்ளிகூடங்களில் மதிய உணவு திட்டம் என அவரது ஆட்சிக் காலத்தில் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தினார். அவரது நோக்கமும், அணுகுமுறையும், வளர்ச்சியும் மக்களின் நலனுக்காக மட்டுமே இருந்தது என்றும் சொல்லலாம். இப்படியாக இவரது பெருமைகள் இருக்க மேலும் பெருமை சேர்க்கும் விதமாக தமிழக அரசு காமராசர் பிறந்த நாளான ஜுலை 15-ம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது.Kamarajar History In Tamil | காமராஜரின் வாழ்க்கை வரலாறுஜூலை ’15’ கல்வி வளர்ச்சி நாள்:பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைக் கடிதத்தின் படி காமராசர் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15 ஆம் நாளை கல்வி வளர்ச்சி நாள் என அரசு அறிவித்தது , அந்நாளில் பள்ளிகளில் காமராஜர் திருவுருவப் படத்தினை அலங்கரித்து கொண்டாட ஏற்பாடுகள் செய்ய தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 15.07.2023 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகள் / நடுநிலைப் பள்ளிகள்/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கும் வேலை நாளாக அறிவித்தது. அந்நாளில் காமராசர் அவர்களின் அரும்பணிகள் குறித்து மாணவர்கள் உணர்ந்திடும் வகையில் பேச்சுப்போட்டி , ஓவியப்போட்டி , கட்டுரைப் போட்டி , கவிதைப் போட்டி போன்றவற்றை திட்டமிட்டு பள்ளி ஆசிரியர்களின் மேற்பார்வையில் நடத்திடவும் , பரிசுகள் வழங்கி ஊக்குவித்திடவும் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
via News J : https://ift.tt/UJ7gOrZ
via News J : https://ift.tt/UJ7gOrZ
Mediaஆசிய தடகள சாம்பியன்ஷிப்:இருபத்து ஐந்தாவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்தின் தலைநகரான பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் இரண்டாவது நாளான நேற்று மகளிருக்கான 100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம் நடப்பெற்றது. அதில் நம் இந்தியாவைச் சேர்ந்த ஜோதி யாராஜி களமிறங்கினார். 100 மீட்டர் தடைத்தாண்டும் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை ஜோதி யார்ராஜி தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். பந்தய தூரத்தை அவர், 13.09 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்தார். ஜப்பானின் டெராடா அசுகா (13.13 விநாடிகள்), அயோகி மசுமி (13.26 விநாடிகள்) ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.ஆடவருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் அஜய் குமார் சரோஜ் பந்தய தூரத்தை 3:41.51 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றார். ஆசிய தடகள போட்டியில் அஜய்குமார் சரோஜ் பதக்கம் வெல்வது இது 3-வது முறையாகும். 2017-ம் ஆண்டு தங்கப் பதக்கமும், 2019-ல் வெள்ளிப் பதக்கமும் அவர், வென்றிருந்தார்.ஆடவருக்கான டிரிப்பிள் ஜம்ப்பில் இந்தியாவின் அப்துல்லா அபுபக்கர் 16.93 மீட்டர் நீளம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஹிகாரு இகேஹடா (16.73) வெள்ளிப் பதக்கமும், தென் கொரியாவின் கிம் ஜாங்வூ (16.59) வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
via News J : https://ift.tt/KaSdzmu
via News J : https://ift.tt/KaSdzmu
Mediaசாதனை அஸ்வின்… சோதனை வெஸ்ட் இண்டீசிற்கு..!ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 3-வது இந்தியர் என்ற சாதனையை அஸ்வின் படத்துள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் தொடக்க நாளில் இந்திய சுழல் பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 24.3 ஓவர்களில் 6 மெய்டனுடன் 60 ரனக்ள் மட்டுமெ விட்டுகொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார்.கடந்த மாதம் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிபோட்டியில் வெளியே உட்கார வைக்கபட்ட அஸ்வின் அணியில் மீண்டும் தனது முக்கியத்துவத்தை உணர்த்தி இருக்கிறார். அத்துடன் முக்கியமான சாதனைகளையும் படைத்தார். இந்த விக்கெட்டுகளை சேர்த்து ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் 479 விக்கெட் ஒரு நாள் போட்டியில் 151 விக்கெட், 20 ஓவர் போட்டியில் 72 விக்கெட் அஸ்வின் விக்கெட் எண்ணிக்கை 702 ஆக உயர்ந்த்தது. இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய 16-வது வீரர் இந்திய அளவில் 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். இந்திய த்ரப்பில் ஏற்கனவே முன்ன்னால் சுழற்பந்து வீச்சாளர்கள் அனில் கும்பிளே (953 விக்கெட்) ஹர்பஜன்சிங் (707 விக்கெட்) இந்த இலக்கை கடந்துள்ளனர்.India vs SL 1st Test: Ravichandran Ashwin close to breaking THIS massive record of Kapil Dev | Cricket News | Zee Newsசர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட் வீழ்த்தியோரில் உலக அரங்கில் 3-வது இடங்களில் முறையே இலங்கையின் முத்தையா முரளிதரன் (1,347 விக்கெட்) ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னே (1,001) இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண் டர்சன் (975) உள்ளனர். தனது 93-வது டெஸ்டில் விளையாடும் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இன்னிங்சில் 5 விகெட் வீழ்த்துவது. இது 33-வது முறயாகும். ஒரு இன்னிங்சில் அதிக முறை 5 அல்லது அதற்க்கு மேல் விக்கெட் சாய்த்த சாதனையாளர் பட்டியலில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனை பின்னுக்கு தள்ளி அவர் 6-வது இடத்திற்கு முன்னேறினார்.இந்த சாதனை வரிசையில் முதல் ஐந்து இடங்களில் முரளிதரன், ஷேன் வார்னே, நியூசிலாந்தின் ரிச்சர்ட் ஹாட்லீ, கும்பிளே, இலங்கையின் ஹெராத், ஆகியோர் உள்ளனர். முதல் ஆட்டம் முடிந்ததும் தமிழகத்தைச் சேர்ந்த 36 வயதான அஸ்வின் நிருபர்களிடம் கூறுகையில்; முதல் நாலில் எங்களது செயல்பாடு மிகச்சிறப்பாக இருந்தது. முதல் பகுதியில் உற்சாகமாக பந்து வீசினேன் என்றார். மேலும் அவர் கூறுகையில் உலக சாம்பியன்ஷிப் இறுதி போட்டிகாக ஆடும் லெவலில் நான் தேர்வுசெய்யப்படவில்லை என்றார். ஆனால் இதற்காக வருந்தவும் இல்லை என்று கூறினார். ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு மனிதராகவும் உச்சத்தை தொட்ட யாரும் தோல்வியை சந்திகாமல் இருந்திருக்க மாட்டார்கள் என்றார். தோல்வியை சந்தித்தாலே வெற்றியை நாம் பார்க்க முடியும் என்ற பாடத்தை நா கற்றிக்கொண்டேன் என்றார். தோல்விகளை கண்டு நாம் துவண்டு போகாமல் வெற்றிக்கான பாதையில் நாம் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
via News J : https://ift.tt/2zPLVW3
via News J : https://ift.tt/2zPLVW3
Mediaநிலவை ஆராய்ச்சி செய்வதற்கு இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் மூன்றாவது செயற்கைகோளான சந்திரயான் – 3 இன்று சரியாக பிற்பகல் 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்தியாவின் விண்வெளி மற்றும் ஆராய்ச்சி மையமான இஸ்ரோவானது நேற்று வியாழக்கிழமை செலுவதற்கான 25.30 மணி நேர கவுண்டவுனைத் தொடங்கிவிட்டது. அதனையொட்டி தற்போது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து எல்விஎம்-3 ரக ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது.Mediaகடந்த 2019 ஆம் ஆண்டு அனுப்பப்பட்ட சந்திரயான் – 2 ஆனது தோல்வி அடைந்ததையொட்டி இந்திய விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகினர். விண்கலம் சரியாக ஏவப்பட்டிருந்தாலும், விக்ரம் லேண்டரானது சரியாக தரையிறங்க முடியாமல் நிலவில் வெடித்து சிதறியது. ஆனால் சிறிதும் களக்கம் கொள்ளாமல் இம்முறையும் விக்ரம் லேண்டர் மூலம் லூனார் சர்பேசில் தரையிறக்க முடிவு செய்துள்ளது இஸ்ரோ.அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளே இதுவரை நிலவில் லேண்டரை தரையிறக்கி சாதனை செய்த நாடுகள். அதற்கு பிறகு இந்தியாதான் அந்த சாதனை செய்வதற்கு ஆயத்தமாகியுள்ளது. எனவே இந்தியாவின் இந்த சாதனைக்கு நாட்டு மக்கள் அனைவரும் பிரார்த்தித்து வருகிறார்கள்.
via News J : https://ift.tt/8i1KtpI
via News J : https://ift.tt/8i1KtpI
Media அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தன்னுடைய முதல் விண்வெளிப் பயணத்தினை 1969 ஜூலை 16 ஆம் தேதி தொடங்கியது. நாசாவின் கென்னடி விண்வெளி மையத்த்தில் இருந்து சாட்டர்ன் ஃபைவ் எஸ் ஏ 506 ரக ராக்கெட் மூலம் நிலவில் கால் வைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங், எட்வின் ஆல்ட்ரின், மைக்கெல் காலின்ஸ் ஆகிய மூவரும் நிலவுக்கு பயணித்தனர்.நான்கே நாட்களில் நிலவை அடைந்த நாசா..!ஜூலை 16 ஆம் தேதி துவங்கப்பட்ட இந்த நிலவுப் பயணமானது ஜூலை 20ம் தேதி நிறைவடைந்தது. அதாவது அன்று காலை 8:32 மணிக்கு நிலவின் மேற்பரப்பை அப்பல்லோ 11 அடைந்தது. மொத்த பயண நேரம் 102 மணி 45 நிமிடங்கள் ஆகும். முதற்கட்டமாக மைக்கேல் காலின்ஸ் சந்திரனைச் சுற்றி வரும் கட்டளைத் தொகுதியிலிருந்து பணிகளை மேற்பார்வையிட்டார். நீல் ஆம்ஸ்ட்ராங் மற்றும் எட்வின் ஆகிய இருவரும் சந்திரனில் இருந்து பிரிந்த ‘ஈகிள்’ எனும் லேண்டர் தொகுதியில் இறங்கினர். நிலவில் கால்வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங் என்றால், இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்ட்ரின் ஆவார். அங்கு மண் மற்றும் கற்களை சேகரித்த பின்னர், ஜூலை 21 ஆம் நாள் பூமிக்கு திரும்பும் பயணத்தை விண்வெளி வீரர்கள் தொடங்கினார்கள். ஜூலை 24 ஆம் தேதி விண்வெளி வீரர்களுடன் வடக்கு பசிபிக் பெருங்கடலில் பாதுகாப்பாக அப்பல்லோ 11 தரையிரங்கியது.Image பூமியில் இருந்து நிலவுக்கு சென்று, பின்னர் மீண்டும் பூமிக்கு திரும்பி வருவதற்கு நாசாவுக்கு வெறும் எட்டு நாட்கள் 3 மணி நேரம் மட்டுமே ஆனது. ஆனால் இந்தியா சார்பாக இஸ்ரோ மூலம் அனுப்பப்பட்டுள்ள சந்திரயான் -3 ஆனது ஆளில்லா விண்கலம் மற்றும் லேண்டரை மட்டும் தான் நிலவுக்கு அனுப்ப உள்ளது. ஆனால் இந்த விண்கலம், 40 நாட்கள் பயணத்திற்கு பிறகு சந்திரனை அடைய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நீண்ட நாட்கள் பயணத் திட்டத்திற்கு என்ன காரணம்?ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்களை பயன்படுத்துவதன் பின்னணி! நமது இஸ்ரோவின் சந்திரயான் – 3 இன் இந்த நீண்ட பயணத் திட்டத்திற்கு பின்னால் பல தொழில்நுட்பக் காரணங்கள் உள்ளதாக சொல்லப்படுகிறது. 1969 ஆம் ஆண்டு நாசா ஏவிய அப்பல்லோ 11 ராக்கெட்டின் எரிபொருள் உட்பட 2800 டன் எடை கொண்டது. ஆனால் இஸ்ரோ தற்போது விண்ணில் செலுத்த உள்ள சந்திரயான் -3 விண்கலத்தை சுமந்து சென்ற ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டின் எடையானது எரிபொருளுடன் 640 டன்கள் மட்டுமே.இங்கு நிலவுக்குச் செல்லும் உந்துத் தொகுதியானது 2148 கிலோ எடை கொண்டதாக உள்ளது. மேலும் லேண்டர் மற்றும் ரோவர் தொகுதிகளின் பகுதி 1752 கிலோ எடை கொண்டதாக உள்ளது. அதாவது சந்திரயான் -3 திட்டத்தில் பயன்படுத்தப்படும் விண்கலம் உள்ளிட்ட முக்கிய உபகரணங்களின் மொத்த எடை 4 டன்கள். இஸ்ரோவின் ராக்கெட்களில் 4 டன்கள் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்ட ஒரே ராக்கெட் ஜிஎஸ்எல்வி மார்க் 3 மட்டும் தான்.அதாவது இந்தியாவைப் பொறுத்தவரைச் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு சுமந்து செல்லும் பிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் இந்த அளவுக்கு எடையை சுமந்து செல்லாது. அதற்கு காரணம் செயற்கைக்கோளை புவியின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்துவதுடன் அவற்றின் பணி முடிந்துவிடும். ஆனால் இந்தச் சந்திரயான் திட்டம் முற்றிலும் மாறுபட்டது. இந்தத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் ராக்கெட், விண்கலம் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்களையும், எரிபொருளுடன் சுமந்து பயணிக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக, நிலவுக்கு விண்கலங்களை அனுப்புவது போன்ற முக்கியமான ஆய்வுகளுக்கு ஜிஎஸ்எல்வி வகை ராக்கெட்கள் பயன்படுத்தப்படுகின்றன.எரிபொருளை அதிகம் எடுத்து செல்லும் நாசா : நாசா விண்ணில் ஏவிய ராக்கெட்கள் அனைத்தும் அதிக எடை கொண்டவையாக இருந்துள்ளன. பூமியின் சுற்றுப்பாதையை கடந்தபின், அப்பல்லோ 11 இன் எடை 45.7 டன்கள். இந்த மொத்த எடையில் எரிபொருளின் எடை மட்டும் 80 சதவீதமாக இருந்ததுள்ளது. குறிப்பாக, அப்பல்லோ 11 விண்கலத்தில் இருந்த ஈகிள் லேண்டரானது நிலவில் தரையிறங்கிய பிறகு, விண்வெளி வீரர்கள் அதில் கால்பதித்து ஆய்வு செய்து முடித்து, மீண்டும் பூமிக்கு திரும்ப இவ்வளவு எரிபொருள் அன்றைக்கு தேவைப்பட்டது.இதை கருத்தில் கொண்டே, அப்பல்லோ 11 விண்கலம், சார்ட்டன் ஃபைவ் எஸ்ஏ 506 என்ற சக்திவாய்ந்த ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்வெளி வீரர்களுடன் இவ்வளவு அதிகமான எரிபொருளை எடுத்து செல்ல, மிகப்பெரிய ராக்கெட் பயன்படுத்தப்பட்டதால் தான் அப்பல்லோ 11 விண்கலம் நான்கே நாட்களில் நிலவுக்கு நேரடியாக சென்றடைய முடிந்தது என்று விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.
via News J : https://ift.tt/Eztnbsv
via News J : https://ift.tt/Eztnbsv
Mediaபசியை போக்கும் உன்னதப் பணி!ஒவ்வொரு நாளும் எப்படி போகின்றது என்பது கூடத் தெரியாமல் நாம் அந்த அளவிற்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறோம். அவர் அவர் படித்த துறையிலும், பிடித்த துறையிலும் வேலை பார்கின்றனர். ஆனால் உண்மையை சொல்லப்போனால் லட்சக்கணக்கான மக்கள் அவர்கள் படித்தபடிபிற்கு வேலை கிடைக்காமல், வேறுத்துறைகளில் வேலைப் பார்த்து வருகின்றனர். அதும் இன்றைய இளைஞர்களின் நிலைமை என்பது மிகவும் மோசமானதான் உள்ளது. குறிப்பாக படித்து முடித்து விட்டு வேலைக் கிடைக்காமல் பல இளைஞர்கள் டெலிவிரி பாய் அதாவது உணவு டெலிவிரி செய்யும் வேலைப்பார்த்து வருகின்றன. இவர்களின் நிலை நம்மில் பாதி மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், பலர் இந்த வேலைக்கு கட்டாயத்தின் அடிப்படையிலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் வேலைப்பார்க்க வருகின்றனர். இவர்களின் வாழக்கை முறையானது மிகவும் மோசமாக உள்ளது.Keep It Up': Internet Applauds Man's Chai-Samosa Station For Delivery Agents - News18பணியில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:ஏனென்றால், இவர்கள் ஒரு ஆர்டர் எடுக்கும் இடத்தில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்திக்கின்றனர். ஒருமனிதருக்கு அவர் பார்க்கும் வேலையை வைத்து மதிப்பு அளிக்கப்படுமானல் நாம் எவ்வகையான கால சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அதுபோலவே டெலிவிரி செய்யும் நபர்கள் தரக்குறைவாக நடத்தப் படுவதாக நாம் அன்றாடம் பார்க்கும் சமூக வலைதளங்களிலும், ஏன் செய்திகளிலும் பார்த்து இருப்போம். மழை, வெயில், பனி என இயற்கையை சமாளித்தபடி இரவு பகல் பார்க்காமல் பணி செய்து வருகிறார்கள். மழை நேரங்களில் அவர்கள் பணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெறும். பெரும்பாலும் நகரங்களிலும், வீதிகளின் சாலை ஓரத்திலும் ஆர்டருக்காக மொபைல் போனை பார்த்தபடி கத்திருப்பார்கள். அது அவர்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும் நேரமும் கூட என்று சொல்லலாம். இவ்வாறு இருக்க மற்றவர்களின் பசிப்பிணியை போக்கும் மகத்தான பணியை செய்து வரும் உணவு டெலிவரி நபர்களுக்கு சற்று ஓய்வு எடுக்கும் விதமாக ‘ரிலாக்ஸ் ஸ்டேஷன்’ அமைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.Man creates relax station for delivery agents, wins Internet | Trending - Hindustan Times ரிலாக்ஸ் ஸ்டேஷன்..!!மும்பையை சேர்ந்த சித்தேஷ் லோகரே என்ற பிரபல ஊடகவியளாலர் கடும் மழையிலும் வெயில்களிலும் வேலைப் பார்த்து வரும் டெலிவிரி முகவர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கும் விதமாக சிறிய ரிலாக்ஸ் ஸ்டேஷனை உருவாக்கி உள்ளார். சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால், முகவர்களுக்கு தேநீர், சமோசா மற்றும் தின்பண்டங்கள் மற்றும் ரெயின்கோட்களை வழங்குகிறார் சமுகவலைத்தளங்களின் இன்ஃப்ளூயன்சரான சிதேஷ். இவரின் செயலானது டெலிவிரி முகவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணமாகதான் உள்ளது. சிதேஷ் அவர்களின் ‘ரிலாக்ஸ் ஸ்டேஷன்’ செயலானது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு. அனைத்து மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சிதேஷ் லோகாவின் செயலுக்கு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
via News J : https://ift.tt/DNYxsr0
via News J : https://ift.tt/DNYxsr0
Mediaஅரசு போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது ஏற்பட்ட திடீர் நெஞ்சுவலி காரணமாக கடந்த ஒரு மாத காலமாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை ,அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்தும், காவலில் எடுப்பதற்கு எதிராகவும் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில், நீதிபதிகள் நிஷா பாணு மற்றும் பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, இருவேறு தீர்ப்புகளை அளித்தது. இதனால் இந்த வழக்கில் மூன்றாவது நீதிபதியாக கார்த்திகேயனை நியமித்து தலைமை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.மூன்று நீதிபதிகள் அமர்வில், செந்தில் பாலாஜியின் மனைவி சார்பில் பல லட்சங்கள் செலவு செய்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலை வாதாட வைத்தது திமுக. அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை முன்வைத்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.வி கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளதாக கூறி தீர்ப்பளித்திருக்கிறார். இதன் மூலம் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி ஆகியிருக்கிறது.இந்த தீர்ப்பின் மூலம், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க இருப்பதால் இப்போதே திமுக தலைமை பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறது.எதிர்க்கட்சியாக இருந்தபோது செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்திய அதே ஸ்டாலின், இன்று அதே செந்தில் பாலாஜியை கைதியாக நீதிமன்றம் அறிவித்த பின்னரும், அமைச்சரவையில் அவரை தக்க வைக்க ஆளுநருடன் வார்த்தை மோதலில் ஈடுபடடு வருகிறார். இதற்கு காரணம் எங்கே விசாரணை வளையத்தில் செந்தில் பாலாஜியை வாயை திறந்தால், மொத்தமாக நாம் மாட்டிக்கொள்வோமோ என்கிற அச்சத்தில் ஸ்டாலின் இருப்பதாகவே தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.அமலாக்கத்துறை காவலில் எடுக்கப்பட உள்ள செந்தில்பாலாஜியால் திமுக ஆட்சி கலைக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும், சிகிச்சை முடிந்து அமலாக்கத்துறையின் விசாரணையால் மேலும் சிக்கலில் சிக்கப்போகிறார் செந்தில்பாலாஜி என்பதே
உண்மை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/PYvCnxI
உண்மை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
via News J : https://ift.tt/PYvCnxI
Mediaபெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளான இன்று அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள், மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.Mediaசென்னை பசுமை வழி சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் பெருந்தலைவர் காமராஜரின் 121 வது பிறந்த நாளான இன்று மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அவரது படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
via News J : https://ift.tt/O4a0fsm
via News J : https://ift.tt/O4a0fsm
Mediaதமிழ் சினிமாவுல பிச்சுமணி வடிவேலு, அரசாங்க வேலை கிடச்ச சந்தோஷத்துல துள்ளுற மாதிரிதான், இன்னைக்கு தமிழகத்துல நகர்ப்புற உள்ளட்சி பிரதிநிதிகள் எல்லாம் மகிழ்ச்சியில இருக்காங்க.அப்புறம் சும்மாவா? தமிழகத்துலயே முதல் முறையா அவங்களுக்கெல்லாம் மதிப்பூதியம் கொடுக்கிறதா இந்த விடியா அரசு அறிவிச்சிருக்கே…
மேயர்ல இருந்து பேரூராட்சி கவுன்சிலர்கள் வரைக்கும் மாசா மாசம் மதிப்பூதியம் தர்றோம்னு ஸ்டாலின் அறிவிச்சிருக்காரு…மக்களுக்கான சேவைன்னு சொல்லி 75 வருஷமா மதிப்பூதியம் வழங்காம இருந்த நிலையில, புதுசா இந்த நடைமுறைய அறிவிச்சிருக்குது திமுக அரசு…தமிழகத்த பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கு. மாநகராட்சிகள்ல ஆயிரத்து 374 வார்டு உறுப்பினர்களும், பேருராட்சிகள்ல 7ஆயிரத்து 621 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள்ல 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களும் இருக்காங்க. உள்ளாட்சி தேர்தல்ல மக்களால தேர்வு செய்யப்பட்ட இந்த வார்டு உறுப்பினர்கள்ல இருந்துதான், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் அதே மாதிரி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுறாங்க.இத்தன வருஷ காலமா இவங்க யாருக்கும் மாத சம்பளம்னு ஒண்ணும் கிடையாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல மாசத்துக்கு குறைஞ்ச பட்சம் ஒரு கூட்டமாவது கூட்டப்படும். அப்படி, மாநகராட்சி கூட்டத்துல பங்கேற்கிற மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு அன்னைக்கு மட்டும் 800 ரூபாயும், இதே மாதிரி நகராட்சிகள்ல 600 ரூபாயும் பேரூராட்சிகள்ல 300 ரூபாயும் வழங்கப்பட்டு வந்துச்சு.இந்த நிலையில விடியா திமுக ஆட்சிக்கு வந்தும், உள்ளாட்சிகள்ல மெஜாரிட்டியா இருந்த மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எல்லாம் நாங்க, முழு நேரமும் மக்கள் பணியில் ஈடுபடுறதால, எங்களுக்கு மாசச் சம்பளம் வேணும்னு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கிட்ட கோரிக்கை வச்சிருக்காங்க.கோரிக்க வைச்ச 15 மாசத்துல அத நிறைவேத்தி மாசச் சம்பளத்துக்கான அறிவிப்ப வெளியிட்டிருக்காரு முதல்வரு ஸ்டாலின். மேயர்களுக்கு மாசம் 30 ஆயிரம், துணை மேயர்களுக்கு 15 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி தலைவர்களுக்கு 15 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 5,000, பேரூராட்சி தலைவர்களுக்கு 10 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு 5,000, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் இந்த மாசத்துல இருந்தே வழங்கப்படும்னு சொல்லி இருக்காருஅரசாங்கத்தோட அறிவிப்பு படி, ஒரு மாசத்துக்கு மொத்தம் 21 மேயர்களூக்கு 6 லட்சத்து 30ஆயிரம், 21 துணை மேயர்களுக்கு 3லட்சத்து 15ஆயிரம், 1332 மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, 1கோடியே 33 லட்சம், நகராட்சி தலைவர்கள் 138 பேருக்கு 20லட்சத்து 70ஆயிரம், துணைத் தலைவர்கள் 138 பேருக்கு 13 லட்சத்து 80ஆயிரம், நகராட்சி கவுன்சிலர்கள் 3ஆயிரத்து 567 பேருக்கு 1கோடியே 78 லட்சம், 490 பேரூராட்சி தலைவர்களுக்கு 49 லட்சம், 490 துணைத்தலைவர்களுக்கு 24லட்சத்து 50ஆயிரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் 6ஆயிரத்து 641 பேருக்கு 1கோடியே 66 லட்சம் ரூபாய் சம்பளமா கொடுக்கப் போறாங்க. அதாவது மொத்தமா ஒரு மாசத்துக்கு 5கோடியே94 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய். அப்படின்னா ஒரு வருஷத்துக்கு 71 கோடியே 33 லட்சத்து, 40ஆயிரம் ரூபாய்.மக்களோட தேவைகளுக்காக செலவு செய்ய நிதி இல்ல, மக்கள் திட்டங்கள நிறைவேத்த நிதி இல்லன்னு கைய விரிக்கிற இந்த விடியா அரசு, மக்கள் சேவைக்காகத்தான் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வாரோம்னு சொல்றவங்களுக்கு, கோடிக்கணக்குல செலவு பண்றதுக்கு என்ன அவசியம் வந்துச்சு.மாநகராட்சியில் குப்பை மேலாண்மைக்கு பணமில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்த பணம் இல்லன்னு சமீபத்துல நெல்லை மாநகராட்சியில சொன்னதாக செய்தி வெளியாச்சு… இதையெல்லாம் நிறைவேத்த நிதி தரமாட்டீங்க… ஆனா சம்பளங்கிற பேருல திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள கவனிக்கிறீங்களா?உள்ளாட்சி பிரதிநிதியா இருக்குற யாரும், அன்னாடம் வேலை பார்த்துத்தான் சாப்பாட்டு கதைய ஓட்டனுங்கிற நிலையில இல்ல… திமுகவுல சீட்டு கொடுக்குறதுக்கே பெட்டி பெட்டியா வாங்குனதா வாய்ப்பு கெடைக்காதவங்க புலம்புனதெல்லாம் தெரியாதா?அப்படியே நீங்க சம்பளம் கொடுத்தீங்கன்னா, சம்பள விதிப்படி அவங்க முழு நேரமும் மக்கள் பணியையே பார்க்கணுமே செய்வாங்களா? சொத்து வாங்குறது விக்கிறது எல்லாத்துக்கும் முன் அனுமதி பெறணும்… செய்வாங்களா? மொத்தத்துல மக்களோட வரிப்பணத்தை இப்படியெல்லாம் வீணாக்கிட்டு, தமிழக மக்களோட கைகள்ல திருவோட கொடுக்காம இந்த திராவிட மாடல் அரசு ஓயாது போல…
via News J : https://ift.tt/iTfVMh6
மேயர்ல இருந்து பேரூராட்சி கவுன்சிலர்கள் வரைக்கும் மாசா மாசம் மதிப்பூதியம் தர்றோம்னு ஸ்டாலின் அறிவிச்சிருக்காரு…மக்களுக்கான சேவைன்னு சொல்லி 75 வருஷமா மதிப்பூதியம் வழங்காம இருந்த நிலையில, புதுசா இந்த நடைமுறைய அறிவிச்சிருக்குது திமுக அரசு…தமிழகத்த பொறுத்த வரைக்கும் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் இருக்கு. மாநகராட்சிகள்ல ஆயிரத்து 374 வார்டு உறுப்பினர்களும், பேருராட்சிகள்ல 7ஆயிரத்து 621 மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகள்ல 12 ஆயிரத்து 838 வார்டு உறுப்பினர்களும் இருக்காங்க. உள்ளாட்சி தேர்தல்ல மக்களால தேர்வு செய்யப்பட்ட இந்த வார்டு உறுப்பினர்கள்ல இருந்துதான், மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர் அதே மாதிரி பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் எல்லாம் தேர்ந்தெடுக்கப்படுறாங்க.இத்தன வருஷ காலமா இவங்க யாருக்கும் மாத சம்பளம்னு ஒண்ணும் கிடையாது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள்ல மாசத்துக்கு குறைஞ்ச பட்சம் ஒரு கூட்டமாவது கூட்டப்படும். அப்படி, மாநகராட்சி கூட்டத்துல பங்கேற்கிற மேயர், துணை மேயர், கவுன்சிலர்களுக்கு அன்னைக்கு மட்டும் 800 ரூபாயும், இதே மாதிரி நகராட்சிகள்ல 600 ரூபாயும் பேரூராட்சிகள்ல 300 ரூபாயும் வழங்கப்பட்டு வந்துச்சு.இந்த நிலையில விடியா திமுக ஆட்சிக்கு வந்தும், உள்ளாட்சிகள்ல மெஜாரிட்டியா இருந்த மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள் எல்லாம் நாங்க, முழு நேரமும் மக்கள் பணியில் ஈடுபடுறதால, எங்களுக்கு மாசச் சம்பளம் வேணும்னு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் 13ம் தேதி முதல்வர் ஸ்டாலின் கிட்ட கோரிக்கை வச்சிருக்காங்க.கோரிக்க வைச்ச 15 மாசத்துல அத நிறைவேத்தி மாசச் சம்பளத்துக்கான அறிவிப்ப வெளியிட்டிருக்காரு முதல்வரு ஸ்டாலின். மேயர்களுக்கு மாசம் 30 ஆயிரம், துணை மேயர்களுக்கு 15 ஆயிரம், மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி தலைவர்களுக்கு 15 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு 10 ஆயிரம், நகராட்சி கவுன்சிலர்களுக்கு 5,000, பேரூராட்சி தலைவர்களுக்கு 10 ஆயிரம், துணைத் தலைவர்களுக்கு 5,000, பேரூராட்சி கவுன்சிலர்களுக்கு 2ஆயிரத்து 500 ரூபாய் இந்த மாசத்துல இருந்தே வழங்கப்படும்னு சொல்லி இருக்காருஅரசாங்கத்தோட அறிவிப்பு படி, ஒரு மாசத்துக்கு மொத்தம் 21 மேயர்களூக்கு 6 லட்சத்து 30ஆயிரம், 21 துணை மேயர்களுக்கு 3லட்சத்து 15ஆயிரம், 1332 மாநகராட்சி கவுன்சிலர்களுக்கு, 1கோடியே 33 லட்சம், நகராட்சி தலைவர்கள் 138 பேருக்கு 20லட்சத்து 70ஆயிரம், துணைத் தலைவர்கள் 138 பேருக்கு 13 லட்சத்து 80ஆயிரம், நகராட்சி கவுன்சிலர்கள் 3ஆயிரத்து 567 பேருக்கு 1கோடியே 78 லட்சம், 490 பேரூராட்சி தலைவர்களுக்கு 49 லட்சம், 490 துணைத்தலைவர்களுக்கு 24லட்சத்து 50ஆயிரம், பேரூராட்சி கவுன்சிலர்கள் 6ஆயிரத்து 641 பேருக்கு 1கோடியே 66 லட்சம் ரூபாய் சம்பளமா கொடுக்கப் போறாங்க. அதாவது மொத்தமா ஒரு மாசத்துக்கு 5கோடியே94 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய். அப்படின்னா ஒரு வருஷத்துக்கு 71 கோடியே 33 லட்சத்து, 40ஆயிரம் ரூபாய்.மக்களோட தேவைகளுக்காக செலவு செய்ய நிதி இல்ல, மக்கள் திட்டங்கள நிறைவேத்த நிதி இல்லன்னு கைய விரிக்கிற இந்த விடியா அரசு, மக்கள் சேவைக்காகத்தான் உள்ளாட்சி நிர்வாகத்துக்கு வாரோம்னு சொல்றவங்களுக்கு, கோடிக்கணக்குல செலவு பண்றதுக்கு என்ன அவசியம் வந்துச்சு.மாநகராட்சியில் குப்பை மேலாண்மைக்கு பணமில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்த செயல்படுத்த பணம் இல்லன்னு சமீபத்துல நெல்லை மாநகராட்சியில சொன்னதாக செய்தி வெளியாச்சு… இதையெல்லாம் நிறைவேத்த நிதி தரமாட்டீங்க… ஆனா சம்பளங்கிற பேருல திமுக உள்ளாட்சி பிரதிநிதிகள கவனிக்கிறீங்களா?உள்ளாட்சி பிரதிநிதியா இருக்குற யாரும், அன்னாடம் வேலை பார்த்துத்தான் சாப்பாட்டு கதைய ஓட்டனுங்கிற நிலையில இல்ல… திமுகவுல சீட்டு கொடுக்குறதுக்கே பெட்டி பெட்டியா வாங்குனதா வாய்ப்பு கெடைக்காதவங்க புலம்புனதெல்லாம் தெரியாதா?அப்படியே நீங்க சம்பளம் கொடுத்தீங்கன்னா, சம்பள விதிப்படி அவங்க முழு நேரமும் மக்கள் பணியையே பார்க்கணுமே செய்வாங்களா? சொத்து வாங்குறது விக்கிறது எல்லாத்துக்கும் முன் அனுமதி பெறணும்… செய்வாங்களா? மொத்தத்துல மக்களோட வரிப்பணத்தை இப்படியெல்லாம் வீணாக்கிட்டு, தமிழக மக்களோட கைகள்ல திருவோட கொடுக்காம இந்த திராவிட மாடல் அரசு ஓயாது போல…
via News J : https://ift.tt/iTfVMh6
Mediaகுழந்தைகளை ஏதோ பொருட்களைப் போல லேப்களில் உற்பத்தி செய்யப்படுவதை சில படங்களில் நாம் பார்த்திருப்போம். அது மிக விரைவில் நிஜமாகப் போகுகிறது. இது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கலாம், அதிர்ச்சியாக இருக்கலாம், இவையெல்லாம் சாத்தியமா எண்று கூட கேட்கலாம். ஆம், 2028ஆம் ஆண்டில் ஆய்வகத்தில் குழந்தைகளை உருவாக்கும் முயற்சியில் ஜப்பான் ஆய்வாளர்கள் இறங்கியுள்ளனர்.ஆய்வகத்தில் எப்படி குழந்தையை உருவாக்குகிறார்கள்…ஆண் எலிகளின் தோல் செல்களை ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் ((PLURIPOTENT)) செல்களாக மாற்றும் முறையை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர். ஆய்வகத்தில் மனித செல்களில் இருந்து முட்டை மற்றும் விந்தணுக்களை உற்பத்தி செய்வது குறித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.இதைக்கொண்டு பல்வேறு வகையான செல்கள் அல்லது திசுக்களை உருவாக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். இந்த ஸ்டெம் செல்களை குறிப்பிட்ட கெமிக்கல் மூலம் பெண் உயிரணுக்களை அதாவது முட்டை செல்களை உருவாக்குகிறார்கள்.'Japanese researchers working to develop babies in lab by 2028' - Telangana Today ப்ளூரிபோடென்ட் ஸ்டெம் ((PLURIPOTENT)) செல்கள் வழியாக உருவான கருக்களை ஒரு பெண்ணின் கருப்பையில் செலுத்துவதன் மூலம் இந்த ஆய்வை மனிதர்களிடமும் செய்ய வாய்ப்பு இருக்கிறது.அதாவது, 5, 6 ஆண்டுகளில் மனிதர்களில் முட்டை போன்ற உயிரணு உற்பத்தியைச் செய்ய முடியும் என்றும், இந்த செயற்கை இனப்பெருக்க முறையை க்ளினிக்குகளில் பயன்படுத்த 10-20 ஆண்டுகள் வரை தேவைப்படும் என்றும் கூறுகின்றனர்.அதாவது 10 ஆண்டுகளில் சோதனை முயற்சியில் நம்மால் லேப்களில் மற்ற பொருட்களைப் போல குழந்தைகளையும் உற்பத்தி செய்ய முடியும். இது எந்தளவுக்குச் சாத்தியம், இப்படி உருவாகும் குழந்தைகளுக்கு எதாவது பாதிப்பு இருக்குமா, அவர்களின் ஆயுள் எப்படி இருக்கும் என்பது குறித்து தெரிந்துகொள்ள பல ஆண்டுகள் வரை காத்திருக்கவே வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இன் விட்ரோ கேமடோஜெனிக்ஸ் முறை என்ன?…((IN VITRO COMEDOGENICS))ஆய்வகத்தில் மனித விந்து மற்றும் முட்டைகளை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படும் முறைதான் இன் விட்ரோ கேமடோஜெனிக்ஸ் என அழைக்கப்படுகிறது. இது ஒரு நபரின் இரத்தம் அல்லது தோலில் இருந்து பெறப்படும் செல்களைப் பயன்படுத்த உதவுகிறது.செயற்கையாக உருவாக்கப்பட்ட இனப்பெருக்க செல்கள் பின்னர் பெண்களின் கருப்பையில் பொருத்தக்கூடிய கருக்களை உருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. கருக்களை உருவாக்குவது சவாலாக இருக்கும் நிலையில், இன் விட்ரோ கேமடோஜெனிக்ஸ் முறை எந்த வயதினரும் கருத்தரிக்கவும் உதவுகிறது.
via News J : https://ift.tt/hOc14aL
via News J : https://ift.tt/hOc14aL
Mediaமருத்துவ வளர்ச்சி:இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அதுபோலவே தான் மருத்துவத் துறையும் வளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என்றும் சொல்லாம். நோய்களை குணப்படுத்துவதற்கான அறிவியலும், கலையும் சேர்ந்ததே மருத்துவத் துறையாகும். மனித உயிர்களை காத்துக்கொள்ளவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் மருத்துவத்துறை இன்றியமையாததாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பெருநகரங்களில் உள்ள மருத்துவமனைகளில் மேலைநாடுகளுக்கு இணையாக மருத்துவத் தொழில்நுட்பங்கள் மேம்பட்டு வருகின்றன என்று சொல்லலாம். நோய்க்கணிப்பில் ‘செயற்கை நுண்ணறிவும்’ சிகிச்சையில் ‘ரோபாட்’டும், ‘நானோ தொழில்நுட்ப’மும் புகுந்துள்ளன. இதனால் சிகிச்சைகளின் தரம் முன்னேறிய நாடுகளுக்குச் சமமாக இருக்கிறது. ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது மருத்துவ துறையின் வளர்ச்சியை வைத்தும் கணக்கிடலாம். தமிழ்நாட்டில் அ.தி.மு.க ஆட்சியில் மருத்துவத் துறையானது அபார வளர்ச்சி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இன்று மருத்துவத் துறையின் வளர்ச்சி என்பது ஒவ்வொரு நாடுகளின் முன்னேற்றத்தில் இன்றியமையாததாக உள்ளது.துல்லியமான தொழில்நுட்பம்:வடமாநில தொழிலாளி ஒருவரின் தலையில் பதிந்த ஆணியை நவீன அறுவை சிகிச்சை முறையில் அகற்றியது ரேலா மருத்துவமனை. சென்னை நாவலூரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை நடைப்பெற்றபோது அங்கு இருந்த வடமாநில தொழிலாளி பிரம்மா மீது எதிர்பாராத விதமாக இரண்டு அங்குல ஆணி விழுந்த நிலையில் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர் உடன் பணி புரியும் தொழிலாளர்கள். பிரம்மாவை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அறுவை சிகிச்சை மருத்துவர் எம். அன்புசெல்வம் தலைமையில் வெற்றிகரமாக சிகிச்சை நடந்து முடிந்தது. இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபொழுது மண்டை ஓடு கழுத்து மற்றும் முதுகு பகுதியில் சி.டி. ஸ்கேன் மற்றும் சி.டி ஆஞ்கியோகிராம் பரிசோதனை செய்யபட்டது. இதன் மூலம் ஆணி வழக்கமான ஆணி அல்ல என்றுதெரியவந்தது. ஆணியை அகற்ற ’’பைபர் ஆப்டிக்’’ சூழலை பயன்படுத்தும் அணுகுமுறையோடு மாற்று வழிமுறையில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது என்றார். இது மிகவும் நுட்பமான அதே வேளையில் அதிக சிக்கல்களும் நிறந்த அறுவை சிகிச்சை முறையாகும்.
via News J : https://ift.tt/KCFm652
via News J : https://ift.tt/KCFm652
Mediaதிராவிட முன்னேற்றக் கழகம் என்பது போய் திருடும் முன்னேற்றக் கழகம் என்று மாறி வருகிறது இன்றைய விடியா திமுக. ஒவ்வொரு திட்டத்திலும் ஊழல் மற்றும் எப்படி மக்களின் பணத்தை கொள்ளை அடிக்கலாம் என்ற நோக்கில்தான் திமுகவானது இயங்குகிறது. ஆனால் இறுதிவரை மக்களை முன்னேற்றும் எந்த திட்டத்தினையும் செயல்படுத்த மாட்டோம், வேண்டுமென்றால் மக்களிடம் இருந்து திருடிக்கொள்கிறோம் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்கள் திமுகவினர். மக்களிடம் திருடியது போக தற்போது மணலையும் திருடுவதில் கை தேர்ந்தவர்களாக மாறிவிட்டார்கள். நெய்வேலி என்.எல்.சி மணலைத் திருடிய திமுகக்காரர்..!ஏற்கனவே அம்பாசமுத்திரம் விஏஓ ஒருவர், மணல் அள்ளியதைத் தடுக்க முயன்றதால் திமுகவைச் சேர்ந்தவரால் கொல்லப்பட்டார் என்பது ஊரறிந்த உண்மை. தற்போது நெய்வேலியைச் சேர்ந்த திமுக ஒன்றிய கழக துணைச் செயலாளர் ஒருவர் நெய்வேலி என்எல்சி சுரங்க மணல் மேட்டில் இருந்து, மணலைத் திருடியுள்ளார். இது குறித்தான வீடியோ, புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெட்டப்படும் மண்ணானது, மலைபோல் ஊமங்கலம், ஊத்தங்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனை திமுக ஒன்றிய கழக துணைச்செயலாளர் கணேசன் ஊமங்கலம் கிராமத்தில் உள்ள காவல் நிலையம் எதிரே அமைந்துள்ள மணல்மேட்டில் கிராவலிலிருந்து மண்ணை பிரித்தெடுக்கும் கம்பெனியை நடத்தி வரும் நிலையில், நெய்வேலி என்.எல்.சி மண்ணை லாரியின் மூலம் கடத்தி வந்து மண்ணை பிரித்தெடுத்து என்.எல்.சி மண்ணை லாரியின் மூலம் கடத்தி வந்து, மண்ணை பிரித்தெடுத்து பத்தாயிரம் ரூபாய் முதல் பதினைந்தாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்து வந்துள்ளார். இது குறித்து புகாரானது தற்போது எழுந்துள்ளது. மேலும் என்.எல்.சி மண்ணை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் லாரியில் திருடும் புகைப்படம் மற்றும் திமுக பிரமுகர் நடத்தி வரும் கம்பெனியின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆனால் என்.எல்.சி மண்ணை திருடி விற்பனை செய்யும், திமுக பிரமுகரான கணேசனை என்.எல்.சி நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
via News J : https://ift.tt/5NIqSJC
via News J : https://ift.tt/5NIqSJC
Mediaஅமலாக்கத்துறையினரால் சட்ட விரோத பணப்பறிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியினை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜியின் மனைவி மேகலா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவினை பரத சக்கரவர்த்தி மற்றும் நிஷா பானு ஆகிய இரு நீதிபதிகளின் அமர்வானது விசாரித்தது. இதில் இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பினை வழங்கினார்கள். இதனால் மூன்றாவது நீதிபதியை நியமித்து இவ்வழக்கினை விசாரிக்குமாறு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவுப் பிறப்பித்திருந்தார். இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாக நீதிபதி சி.வி. கார்த்திகேயன் நியமிக்கப்பட்டார்.நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பு…Mediaஇதனையொட்டி இந்த வழக்கானது ஜூலை 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மேகலா தரப்பிலும், அமலாக்கத் துறை தரப்பிலும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து அமலாக்கத்துறை வாதத்துக்கு பதில் அளிக்க வெள்ளிக்கிழமை (ஜூலை 14) வாய்ப்பளித்தார். அதன்படி நேற்று நடைபெற்ற வாதத்தில் நீதிபதி இரு தரப்பினரின் வாதத்தினையும் கேட்டறிந்தார். உணவு இடைவெளிக்கு கூட செல்லாமல் மூன்று மணி நேரங்கள் அமர்ந்து இந்த வழக்கில் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் தீர்ப்பினை வழங்கினார்.இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்Media 1) போக்குவரத்துக் கழகத்தில் அரசு வேலை பெற நகைகளை விற்றும் நிலங்களை விற்றும் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டவர்களின் நிலைமையை கருத்தில் கொள்ள வேண்டும்.2) பணம் யார் மூலமாக யாரிடம் சென்றது. அதை மீட்டு எப்படி பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.3) அமலாக்கத் துறைக்கு காவலில் எடுத்து விசாரிக்க அதிகாரம் உள்ளதா என்பது குறித்து இரண்டு தரப்பும் வாதங்களை முன்வைத்தனர்.4) அமலாக்கத் துறையின் உரிமையை பறிக்க முடியாது.5) அமலாக்கத் துறையை காவல்துறையினராக கருத முடியாவிட்டாலும் அவர்கள் புலன் விசாரணை நடத்துவதை தடுக்க முடியாது.6) அமலாக்கத் துறையினர் காவல்துறையினர் அல்ல என்ற மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதத்துக்கு மாற்று கருத்து இல்லை.7) செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான்; கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது.விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.8) கைது செய்யப்பட்டால் காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.9) தான் குற்றம் செய்யவில்லை என்பதை விசாரணை நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி நிரூபிக்கட்டும்.10) செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி வழங்கிய பரத சக்கரவத்தி உத்தரவுதான் எனது உத்தரவும்.மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்ற காலத்தை முதல் 15 நாள் நீதிமன்ற காவல் காலமாக கருதலாமா? கூடாதா? என்பதை பொருத்தவரை, சட்டப்படி முதல் 15 நாட்களில் காவலில் எடுக்க வேண்டும்.11) செந்தில் பாலாஜியின் உடல் நிலை சாதகமாக இல்லாததால் காவலில் எடுக்கவில்லை என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது12) 8 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டும் ஒரு நாள் கூட காவலில் எடுக்க அமலாக்கத்துறை முயற்சிக்கவில்லை.13) நீதிமன்ற காவல், நீதிமன்ற காவலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட தனித்தனி மனுக்கள் மீது அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.14) கைதுக்கான காரணங்கள் செந்தில் பாலாஜிக்கு தெரியும். காலை முதல் அவர் வீட்டில்தான் அமலாக்கத் துறையினர் இருந்துள்ளனர்.15) காலை முதல் நடத்தப்பட்ட விசாரணை, ஆவணங்கள் சேகரிப்பு, வாக்குமூலம் என அனைத்தும் நடைபெற்றபோது செந்தில் பாலாஜிக்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.16) கைது குறித்து செந்தில் பாலாஜிக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் கூற முடியாது.17) இந்த ஆட்கொண்ர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல.18) இந்த தீர்ப்பை தலைமை நீதிபதியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.19) செந்தில் பாலாஜி தற்போது நீதிம்னற காவலில் தான் உள்ளார். பல முறை சம்மன் அனுப்பியும் அவர் சில முறை ஆஜராகியுள்ளார். சில முறை ஆடிட்டர்க்ள் ஆஜராகியுள்ளனர்.20) அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை செந்தில் பாலாஜி எதிர்த்து வழக்கு தொடரவில்லை.21) கைது தொடர்பாக செந்தில் பாலாஜிக்கும், அவரது சகோதரருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.22) கைது சட்டப்படியானது; நீதிமன்ற காவல் சட்டப்படியானது. ஆட்கொணர்வு மனு ஏற்கத்தக்கதல்ல.23) இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நிதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை ஏற்கிறேன்.24) ரிமாண்ட் செய்த பிறகு ஆட்கொணர்வு மனு…
Mediaமகுடம் சூடிய தஜிந்தர்:24- வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான குண்டு எறிதலில் ஆசிய சாதனையாளரான இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் தூர் களமிறங்கினார். அவருக்கான இரண்டாவது முயற்சியில் 20.23 மீட்டர் தூரம் குண்டு எறிந்தார். அதன் பிறகு அவரின் இடுப்பின் கீழ் பகுதியில் ஏற்பட்ட வலியின் காரணமாக அவரால் அடுத்த சுற்றில் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் அனைவரும் எதிர்பார்த்த படியே அவர் எறிந்த 20.23 மீட்டர் தூரம் குண்டு தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றது. 28 வயதான தஜிந்தர்பால் சிங் ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக பதக்கம் வென்று சாம்பியன் பட்டத்தை தக்கவைத்தார். அதன் பிறகு மூன்றாவது குண்டு எறிதல் வீரர் என்ற பெருமையை தனதாக்கினார்.அவர் கடந்த 2019-ம் ஆண்டு போட்டியிலும் தங்கம் வென்று இருந்தார்.இந்த வகையில் ஏற்கனவே கத்தாரின் பிலால் சாத் முபாரக் மற்றும், குவைத்தின் முகமது காரிப் அல் ஜிங்வி ஆகியோர் தொடர்ச்சியாக தங்கம் வென்று சாதனை படைத்திருக்கின்றனர். தஜிந்தர்பால் சிங்கின் காயத்தின் காரணமாக அடுத்த மாதம் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெறும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவரால் கலந்துகொள்ள முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. புவனேஷ்வரில் கடந்த மாதம் நடந்த மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள போட்டியில் 21.77 மீட்டர் தூரம் குண்டு எறிந்து ஆசிய சாதனை படைத்த தஜிந்தர் பால் சிங் அதன் மூலம் உலக சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.Asian Athletics Championships 2023: Parul Chaudhary wins gold in 3000m steeplechase, Shaili jumps for silver - Sportstarகலக்கும் பாருல் சவுத்ரி மற்றும் ஷைலி சிங்!பெண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஸ்டிபிள்சேஸ் ஓட்டப்பந்தயம் நடைப்பெற்றது. அதில் 28 வயதான இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி கலந்துக்கொண்டார். அவர் 9 நிமிடம் 38.76 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்று சாதனைப் படைத்துள்ளார். இந்நிலையில், சீனாவின் ஷூயாங் சூ வெள்ளிப்பதக்கத்தையும், ஜப்பானின் யோஷிமுரா ரெய்மி வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினர். பெரிய சர்வதேச போட்டியில் பாருல் சவுத்ரி தங்கப்பதக்கத்தை வெல்வது என்பது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து வெள்ளிப்பதக்கத்தை கைபற்றினார் ஷைலி சிங்.Silver medalist Shaili's mother sent her to train despite people advising her otherwise - Sportstarவெள்ளிப் பதக்கம் வென்ற ஷைலி சிங்!பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவை சேர்ந்த 19 வயது இளம் வீராங்கானை ஆன ஷைலி சிங் 6.54 மீட்டர் தூரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். 2021-ம் ஆண்டு உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஷைலி சிங் பெரிய அளவிலான போட்டியில் சீனியர் பிரிவில் கைப்பற்றிய முதல் பதக்கம் இதுவே ஆகும். ஜப்பானின் சுமிரே ஹடா (6.97 மீட்டர்) தங்கப்பதக்கத்தையும், சீனாவின் ஜோங் ஜியாவி (6.46 மீட்டர்) வெண்கலப்பதக்கத்தையும் பெற்றனர். இதுவரை இந்தியா ஐந்து தங்கப்பதக்கமும், மூன்று வெண்கலப்பதக்கமும், ஒரு வெள்ளி பதக்கமும் வென்று பதக்கப்பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
via News J : https://ift.tt/CX3wk7O
via News J : https://ift.tt/CX3wk7O
Mediaஆள் பாதி ஆடை பாதி: மனிதர்களுக்கு அடிப்படைத் தேவைகளான உணவு, உடை, இருப்பிடிடம், இவற்றை எல்லாம் அகற்றிவிட்டால் நமது வாழ்வியல் என்பதே இருக்காது. ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை கேட்டிடாதவர்கள் எவரும் இருக்க முடியது. ஏனென்றால் நம்மை அழகாக பிரதிபலிப்பதில் முக்கிய பங்கு ஆடைக்கு உள்ளது என்றும் சொல்லலாம். மனிதனின் பரிணாம வளர்சியில் முக்கிய குறீயிடு என்பது இந்த ஆடைகள் தான். வரலாற்றின் படி சமூகத்தில் நிலவும் வர்க்கம், சாதி, மதம், நாகரீகம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை உள்ளடக்கியதே ஆடை நாகரீகம் ஆகும்.ஆடைகளின் வரலாறு:முதன் முதலில் மனித இனம் தோன்றியது தென் ஆப்பரிக்காவில் தான். அப்போது அவர்களுக்கு ஆடைகள் பற்றிய யோசனை என்பது எழவில்லை. ஏன் என்றால் அதற்கு முக்கிய காரணம் அங்குள்ள தட்பவெப்ப நிலை. அதன் பின்பு அங்கிருந்து மக்கள் எல்லாரும் ஐரோப்பா, சைபீரியா போன்ற குளிர்பிரதேசங்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். அங்குள்ள கடுமையான பனியை மக்களால் தங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால் இயற்கையின் தாக்கதிலிருந்து மனித உடலை பாதுகாத்துக் கொள்ளவே ஆடைகள் தோன்றின. அப்போது மக்கள் விலங்குகளை வேட்டையாடி அதன் மாமிசத்தை உணவாக உட்கொண்டு வந்தனர்.அதன் பின்னர் அந்த விலங்குகளின் தொலை பயன்படுத்தி கடும் குளிரில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவே பயன்படுத்தினர். இவாறாகவே உலகின் முதல் ஆடை என்பது உருவானது. பின்னர் காலங்கள் மாறின நாகரிகமும் மறியது. மேலும் இந்தியாவில் ஆடை என்பது எப்படி உடுத்த வேண்டும் யாரெல்லம் ஆடை உடுத்த வேண்டும் என்பதில் இருந்து வேற்றுமைகள் தோன்ற ஆரம்பித்தது. சட்ட மேதை அம்பேத்கர் அவர்கள் கோர்ட் அணிந்ததிற்கும் காந்தி சட்டைபோடததிற்கும் நிறைய அரசியல் உள்ளது என்று சொல்லலாம். இந்த வகையில் இந்த ஆடகளின் மீது எண்ணற்ற வரலாறுகள் உள்ளன. எது எப்படியானாலும் எந்த ஆடையாக இருந்தாலும் நம் பணம் கொடுத்துதான் வாங்குகிறோம். ஆனால் இங்கு ஒரு இடத்தில் இலவசமாக ஆடைகளை விற்பனை செய்கின்றனர்.இங்கே ஆடைகளையும் தானம் அளிக்கலாம்... - ஏழை மக்களுக்கு இலவச 'ஷாப்பிங்' @ கோவை | Clothes can also be Donated here... - Free Shopping for Poor People @ Coimbatore - hindutamil.in புதிய ஹெல்பிங் ஹார்ட்ஸ்:கோவை நகரில் ஆடை தேவைப்படும் ஏழை மக்களுக்கு இலவசமாக ‘ஷாப்பிங்’ செய்யும் அனுபவத்தை, பயன்படுத்தப்பட்ட ஆடைகள் விநியோக நிலையம் மூலம் அளித்து வருகின்றனர் ‘ஹெல்பிங் ஹார்ட்ஸ்’ தன்னார்வ அமைப்பினர். இதற்காக நல்ல நிலையில் உள்ள துணிகளை தன்னார்வலர்கள் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள், பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்களில் இருந்து பெற்று வருகின்றனர். பெரும்பாலானோர் அவர்கள் வழங்கும் துணிகளை அவர்களே துவைத்தும், தேய்த்தும். மடித்தும். புது ஆடைகள் போல அவர்களிடம் தருகின்றனர்.மேலும் அந்த ஆடகள் எல்லாம் நல்ல நிலையில் உள்ளதா என்று சரிப்பார்த்து அவற்றில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை சரிசெய்கின்றனர். பின்னர் அந்த ஆடைகளை எல்லாம் நிறைய கிராமங்களை தேர்ந்தெடுத்து அவற்றில் உள்ள சமூகநல கூடங்களிலும். மண்டபவங்களிலும் விநியோக நிலையத்தை அமைக்கின்றனர். அதர்க்கு முன்பாக அந்த கிராமங்களில் உள்ள ஊராட்சி தலைவர்களிடம் தவல் அளித்து பின்னர் மக்களுக்கு தெரியப்படுத்துக்கின்றனர். கடந்த மே, ஜூன் மாதங்களில் 19 கிராமங்களில் இந்த விநியோக நிலையங்கள் அமைக்கப்பட்டன.இதன் மூலம் 9,228 பேருக்கு மொத்தம் 18,955 ஆடைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. அங்கு வரும் மக்கள் தங்களுக்கு தேவையான இரண்டு துணிகளை எடுத்து செல்லலாம் மற்றும் மாற்றியும் கொள்ளலாம் என்றனர். ஹெல்பிங் ஹார்ட்ஸ் அமைப்பிற்கு மாதம் தோரும் ஐயாயிரம் முதல் ஏழாயிரம் வரை துணிகள் கிடைக்கின்றது என கூறுகின்றனர். மேலும் பழைய துணிகளை தானமாக அளிக்க விரும்புவோர் 6374713775 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்”என்றனர்.
via News J : https://ift.tt/APfsbq8
via News J : https://ift.tt/APfsbq8