News J
597 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஅன்று சாதாரண கல்லூரி விரிவுரையாளர்… இன்று ஊர் முழுக்க இருக்கும் பல்வேறு கல்லூரிகளுக்கு சொந்தக்காரர்.. அதுவும் ஏக்கர் கணக்கில் வளைத்துப்போட்டு கோடிக்கணக்கில் கொட்டிக்குவித்திருக்கிறார் ஒருவர்… அந்த ஒருவர் வேறு யாரும் இல்லை… சாட்ஷாட் நம் அமைச்சர் பொன்முடிதான் சுமார் ஆயிரம் ஏக்கர்கள் நிலம்… இந்தோனேஷியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் 100 கோடி ரூபாய் தொழில் முதலீடு என்று ஏதோ பரம்பபரை தொழில் அதிபர்போல கோடான கோடிகளில் புரண்டு கொண்டிருக்கிறது அமைச்சர் பொன்முடியின் குடும்பம் என்ற செய்திகளைக் கேட்டவுடன் மக்களுக்குத்தான் ஹார்ட் அட்டாக்கே வந்திருக்கும்..அமைச்சர் பொன்முடி இல்லத்தை வளைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரையும், அவர் மகன் கௌதம சிகாமணியையும் விசாரணை செய்ததுடன் அவர்கள் வீட்டில் இருந்த பீரோ, லாக்கர், இரும்பு பெட்டிகளில் உள்ள ஆவணங்களை சோதனையிடுவதற்காக சாவி கேட்டால், சாவி கொடுக்க மறுத்திருக்கிறார் பொன்முடி, பின்னர் வேறு வழியின்றி, போலி சாவி தயாரிப்பவரை வரவழைத்து, லாக்கர், இரும்புப்பெட்டிகளை திறந்திருக்கின்றனர் அமலாக்கத்துறையினர்.. அமைச்சர் வீட்டில் இருந்த அந்த இரும்புப்பெட்டியில் அப்படி என்னதான் இருக்கிறது? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் மனதை அரிக்கும் கேள்வி…பொன்முடி வீட்டில் இருந்து இதுவரையில், 60 லட்சம் ரொக்கமும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள லண்டன் யூரோக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் வெளிநாடுகளில் இன்வெஸ்ட் செய்த விவகாரங்கள் எல்லாம் வெளியே கசிந்ததால், பொன்முடி குடும்பத்தினரின் வங்கிக்கணக்கில் இருந்த 48 கோடி ரூபாய் வைப்புத் தொகையை முடக்கிவைத்துள்ளது அமலாக்கத்துறை… அது மட்டுமில்லாமல், அவரது வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு வெளிநாட்டு சொகுசு கார்களையும் அமலாக்கத்துறையினர் எடுத்துச் சென்றுள்ளனர்….ஒருபக்கம் செந்தில் பாலாஜி வாய் திறந்தால் எங்கே ஆட்சி பறிபோய் விடுமோ என்று கதிகலங்கிப்போய் இருக்கும் முதல்வர் ஸ்டாலின், இன்னொரு பக்கம் அமைச்சர் பொன்முடியின் வீட்டில் உள்ள இரும்புப்பெட்டியை உடைத்தால் அதில் இருக்கும் ஆவணங்களால் இன்னும் என்னென்ன பிரச்சனைகள் வருமோ என்றெண்ணி அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருப்பதாக விஷயத்தை கசியவிடுகின்றனர் அறிவாலய உடன்பிறப்புகள்..அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, அவருடைய உறவினர் என்று ஒட்டுமொத்த பொன்முடி குடும்பமும் இவ்வளவு சொத்துகளை குவித்தது எப்படி? செம்மண் அள்ளியதில் தொடங்கி, இந்தோனேசியாவில் குவாரிகள் வாங்கியது, அரபு நாடுகளில் முதலீடுகள் செய்ததற்கு கோடான கோடி ரூபாய்கள் எல்லாம் வந்தது எப்படி?விடியா திமுக அரசுக்கே பயம்காட்டிய, அமைச்சர் வீட்டில் உள்ள அந்த இரும்புப் பெட்டியில் இருப்பது என்ன? அந்த பெட்டியைத் திறந்தாலோ, செந்தில்பாலாஜி வாய் திறந்தாலே திமுக ஆட்சிக்கு ஆபத்தா? என்ற கேள்விகளுக்கு காலம் பதில் சொல்லும்.

via News J : https://ift.tt/I5RQpU0
Mediaதமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக ஆட்சியில் டாஸ்மாக் ஊழல் என்பது வாடிக்கையான ஒன்றுதான். அதிலும் திமுக டாஸ்மாக் துறையின் பொறுப்பை செந்தில்பாலாஜியிடம் தந்ததிலிருந்து கோடிக்கணக்கில் லாபம் ஈட்டப்பட்டது. அதுவும் நேர்வழியில் இல்லை. மறைமுக வழியில் தான். அதற்கு கரூர் கேங் என்ற கும்பல் இராப்பகலாக வேலைப் பார்த்து மறைமுக பணத்தை திமுக குடும்பத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு செந்தில்பாலாஜி கொடுத்த அசைண்மெண்ட்.“செ.பா இல்லாமலும் இயங்கும் கரூர் கேங்”அதிலும் குறிப்பாக ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் விற்கக்கூடிய மதுபானத்திற்கு கூடுதல் தொகையாக பத்து ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. அதற்கு டாஸ்மாக் ஊழியர்களும் ஒருவகை காரணம். இன்றைக்கு இவ்வளவுத் தொகை என்று நிர்ணயிக்கப்பட்டு வசூல் வேட்டையில் கரூர் கம்பெனி இறங்கிவிடுகிறது. அமைச்சரின் ஆட்கள் என்று பயந்து இதற்கு டாஸ்மாக் ஊழியர்களும் பயப்பட வேண்டியுள்ளது. இப்படி ஒரு புறம் நடந்தேற தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மற்றும் எலைட் டாஸ்மாக் கடைகளில் பத்து ரூபாய் கூடுதலாக வாங்கினால் துறைரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை செய்தி வெளியிட்டுள்ளது. இதில் ஈடுபடும் பணியாளர்கள் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்லப்பட்டு இருக்கிறது.TASMAC bars to be opened on the September 18 - TASMAC- Bars- liquor shops- liquor price- price hike- Tamilnadu- Coronavirus- Tasmac outlets- COVID19- Lockdown- Shutdown | Thandoratimes.com |ஆனால் இன்றைக்கும் தமிழகத்தைப் பொறுத்தவரை இந்த அவல நிலையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மதுப்பிரியர்கள் இன்னும் குற்றம்சாட்டியே வருகின்றனர். நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை ரீதியான செய்தி வெளியிட்டால் மட்டும் போதுமா? அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே? இதனை தற்போதைய அமைச்சர் முத்துச்சாமி விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு சரிசெய்ய வேண்டும் என்று மதுப்பிரியர்களே கோரிக்கை வைத்த வண்ணம் இருக்கிறார்கள்.கண் துடைப்பு நாடகம் ஏன்?டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ₹10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை என்று கூறுவது கண்துடைப்பு நாடகம்போல் உள்ளது என்றும் அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் செந்தில்பாலாஜி அமைச்சராக இருக்கும்போதே எடுக்க வேண்டியதுதானே. இப்போது வந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொல்வது, “நாதஸ் திருந்திட்டான், அதையும் அவனே சொன்னான்” என்பது போல வேடிக்கையாக உள்ளது என்று நெட்டிசன்கள் தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் கலாய்த்து வருகிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை நிறைய வருமானத்தினை ஈட்டித் தரக்கூடிய ஒரு துறையாக இருப்பது டாஸ்மாக் தான். அதில் வரக்கூடிய பணத்தினை வேறு துறைகளில் செலவு செய்து நாட்டையும் நாட்டு மக்களையும் முன்னேற்றுவதை விட்டு விட்டு ஒரு குடும்பம் மட்டுமே முன்னேறுவதற்கு ஒரு துறை காரணமாக இருத்தல் கூடாது என்று அரசியல் நோக்கர்கள் காட்டமாக கூறியுள்ளார்கள்.  குழந்தையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டினால் எப்படி? பத்து ரூபாய் கூடுதல் விற்பனைக்கு எப்போது விடிவுகாலம் பிறக்கும் என்று மதுப்பிரியர்கள் சங்கடப்பட்டு வருகிறார்கள். 

via News J : https://ift.tt/I4F8sZM
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/jayakumar-1.jpg">Media</a><strong>முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி!</strong>நம்முடைய கழகப் பொதுச்செயலாளர் அறிவுரைக்கு இணங்க, புதிய உறுப்பினர்களை சேர்த்தல், உறுப்பினர் அட்டைகள் புதுப்பித்தல் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று அதற்கு கடைசிநாள் என்பதால், அதற்கான வேலைகள் போய்க்கொண்டு இருக்கிறது. அதிமுகவில் தற்போது ஒரு கோடியே 70 லட்சம் உறுப்பினர்கள் சேர்த்துள்ளதாக கழகப் பொதுச் செயலாளர் தெரிவித்திருக்கிறார். அதிலும் வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்டத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் உறுப்பினராக சேர்ந்துள்ளனர். இந்த ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட உறுப்பினர்களை சேர்த்ததற்காக, அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் பலர் களப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.<strong>விடியா அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..</strong>விலைவாசியை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டமானது நாளை தொடர இருக்கிறது. ஊழல் தான் முக்கிய குறிக்கோள் என்று செயல்படும் திமுக அரசை கண்டித்து நாளை காலை ஒன்பது முப்பது மணியளவில் ராஜரத்திரனம் ஸ்டேடியம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. சென்னை ஒருங்கிணைந்த மாவட்ட கழகம் சார்பில் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்திற்கு அனைத்து தொண்டர்களும், பொதுமக்களும் திரண்டு வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும்,  மதுரையில் நடைபெறும் அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு கலந்து கொள்ள அனைவரும் தயாராக உள்ளனர்.<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/03/Jayakumar_AIADMK_Facebook_21022022_1200.jpg">Media</a>வியாபாரிகளுக்கு அச்சுறுத்தல், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் போன்றவை திமுக ஆட்சியில் சர்வசாதாரணமாக நடைபெறுகிறது. சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் தற்போதைய ஆட்சியில் அப்படி எதுவும் நடைபெறுவதில்லை. அதிமுக ஆட்சிகாலத்தில் புரட்சித் தலைவி அவர்கள் சட்டமன்றத்தில், பெரிய பதவியில் இருந்தவர்களாக இருந்தாலும் தவறு செய்திருந்தால் அவர்களின் பதவி பறிக்கப்படும் என்று கூறி, அதனை செயல்படுத்தியும் காட்டினார். ஆனால் திமுக ஆட்சியில் அப்படி எந்த வித நடவடிக்கையும் எடுக்க மறுக்கிறார்கள். ஆளுங்கட்சியினருக்கு முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு விட்டு விடுகிறார்கள். ஆனால் எதிர்க்கட்சியினருக்கு  முதல் தகவல் அறிக்கையானது பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இதனால் தொடர்ந்து திமுகவினர் பல்வேறு அராஜக வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கெல்லாம் சரியான ஜட்ஜ்மென்ட் யார் தருவார்கள் என்றால், அது வாக்காளராகிய மக்கள் தான்.<strong>என்.டி.ஏ கூட்டத்தில் பொதுச்செயலாளர்..!</strong><a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/07/edappadi-2.jpg">Media</a>நேற்று நடைபெற்ற என்.டி.ஏ கூட்டத்தொடரில் நமது பொதுச்செயலாளர் அவர்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் வழங்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். எதிர்க்கட்சிகளின் கூட்டணி 26 நாங்கள் 38. அதன் அடிப்படையில் நாங்கள் தான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதிலும் குறிப்பாக தமிழகத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி தலைமையில் அமோக வெற்றிபெறும்.அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல், ஈடி வந்துவிட்டதா, ஐடி ரெய்டு வந்துவிட்டதா என்று பயப்படுகிறார்கள். இரண்டரை லட்சம் யூனிட் செம்மணை சுரண்டி ஊழல் செய்து இருக்கிறார் பொன்முடி. அவரது மகன் கவுதம சிகாமணி நூறு கோடி ரூபாய்க்கு நிலக்கரியை இந்தோனேசியாவிற்கு விநியோகித்திருக்கிறார். யாரு யாருக்கு பணம் கொடுத்து இருக்கிறார்கள் என்பது வெளிவரும். முதலில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி, இப்போ பொன்முடிக்கு, அடுத்து அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி ஆரம்பிச்சுடும். பொன்முடிக்கு இரவெல்லாம் தூக்கம் இருக்காது. எப்போ கைதாவோம் என்கிற மரண பயத்தை அவருக்கு ஈடி கொடுத்துள்ளது. தூக்கம் இல்லாத கேபினட் தான் தற்போது தமிழகத்தினை ஆண்டு வருகிறது.<strong>அடுத்தடுத்து அமைச்சர்கள் லிஸ்ட்-ல இருக்காங்க!</strong>செந்தில்பாலாஜி ஒரு சிறைக் கைதி, அவரை நீக்குவதுதான் சரி. ஆனால் அமைச்சர் என்கிற ஷீல்டை இன்னும் செந்தில்பாலாஜிக்கு வைத்திருப்பது ஏன்? இதனால் தண்டச் செலவுதான் ஏற்படுகிறது. பணத்தினை ஏன் வீணடிக்கிறீர்கள் என்றுதானே கேட்கிறோம். ஜெயிலில் அமர்ந்திருப்பருக்கு எதற்கு மந்திரிப் பதவி. நானும் கைதானவன் தான். பாயிலும் தரையிலும் தான் படுத்திருந்தேன். குடிக்க தண்ணீர் கூட குடிக்கவில்லை. ஆனால் செந்தில் பாலாஜிக்கு சொகுசி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு பிரியாணி, சிக்கன் பிரியாணி, கறிக்கொழம்பு என்று ஜெயிலர்களே செய்து…
Mediaவிடியா திமுக ஆட்சியில் தமிழக மக்களை அதிர வைக்கும் வகையில் கடந்த 10 நாட்களில் 23 கொலைகள் அமைதி பூங்காவாக இருந்த தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது.சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளக் கூடிய ஆட்சியாக அதிமுக ஆட்சி இருந்து வந்தது. ஆனால் இந்த விடியா திமுக, ஆட்சிக்கு வந்த 2 1/2 ஆண்டுகளில் தமிழகம் கொலை நகரமாக மாறியுள்ளது.பத்து நாட்களில் கொலை செய்யப்பட்டவர்கள்…!கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் கால்நடைகளுக்கு தீவண புல் கொண்டு வந்த விவசாயியான சிவராமை வழிமறித்து மர்ம கும்பல் கொடூரமாக வெட்டி கொலை செய்தது, திருச்சியில் குப்புசாமி என்பவர் தன்னுடைய மனைவி கண் முன்னே 6 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். திருச்சியில் பெயிண்டர் வேலை செய்து வந்த தீபக்கை கறிவிருந்திற்கு அழைத்து செல்லப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை பட்டா கத்தியுடன் வழிமறித்த மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையம் அருகே பட்டப்பகலில் ரவுடியான அப்பு என்கிற சதாம் உசேனை மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார்.Mediaசென்னை பாடிகுப்பத்தில் மந்திரவாதியாக இருந்து வந்த சிக்கந்தர் கஞ்சா வியாபாரியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியரும், பெண் காவலரின் தந்தையுமான செந்தில்வேல் என்பவர் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதேபோல் மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக கவுன்சிலரான சந்திரபாண்டியனை மர்மகும்பல் ஒன்று வழிமறித்து வெட்டிப்படுகொலை செய்தது. தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கூலி தொழிலாளி செல்வ திரவியத்தை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசியல் பிரமுகரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது என அரசியல் வாதிகள், பொதுமக்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்களை குறி வைத்து தாக்கும் கொலையாளிகளை தண்டிக்க முடியாமல் காவல்துறையும், வேடிக்கை பார்க்கும் திமுக அரசாலும் மக்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள்.திமுக ஆட்சிக்கு வந்து 2 1/2 ஆண்டுகளில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கை அச்சத்திலும், பதட்டத்திலும், குறிப்பாக பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுக எனும் திராவிட மாடலின் சித்தாந்தமா? எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/Cs7Wzg8
Mediaதமிழ்நாட்டில் தக்காளி விலைதான் அதிகம்-னு பார்த்தால், ஒவ்வொரு அத்தியாவசியப் பொருட்களுடைய விலையையும் அதிகப்படுத்தி வருகிறார்கள். தற்போது நமது மதுப்பிரியர்களின் அத்தியாவசியத் தேவையான மதுபான பாட்டில்கள் விலையையும் உயர்த்தி இருக்கிறது அரசு. ஒருவேளை பத்து ரூபாய் வசூலிப்பதை கண்டுபிடித்து விட்டதால் நூதனமாக இதனை வேறு வழியில் செயல்படுத்தலாம் என்று எண்ணி வெளிநாட்டு மதுபான பாட்டில்களின் விலையை உயர்த்தி இருக்கிறதோ என்று சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.வெளிநாட்டு மதுபானம் விலை ஏற்றம்!தற்போது தமிழகத்தில் வெளிநாட்டு மதுபான பாட்டில்கள் விலை இன்றிலிருந்து உயர்த்தப்பட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 10 ரூபாய், 20 ரூபாய், 60 ரூபாய், 120 ரூபாய், 240 ரூபாய், 320 ரூபாய் என பல்வேறு நிலைகளில் விலை உயர்த்தப்பட்டுள்ளது. 330ml -280ரூபாயில் இருந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. 750ml அளவு  உள்ள மதுபானம் 2000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 2240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது. 750ml வெளிநாட்டு மதுபான வோட்கா 2010 ரூபாய்க்கு விற்பனை செய்தது. ஆனால் தற்போது 2250 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது.  சூப் வோட்கா 700ml 1690 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. ஆனால் தற்போது 1930 ரூபாய்க்கு விற்பனை ஆக உள்ளது. இதுபோல வெளிநாட்டு மதுபானங்கள் ஒவ்வொன்று விலையேற்றப்பட்டு இருக்கின்றன. இப்படி ஒரு பக்கம் இருக்க தமிழக அரசிற்கு உயர்நீதிமன்றமானது ஒரு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளது.Popular Types of Alcoholic Beverages India Imported in Q2 2017டாஸ்மாக் நிறுவனத்திற்கு நீதிமன்றத்தின் கேள்வி..!அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தின் மதுபானங்கள் எந்தெந்த நிறுவனங்களிடமிருந்து, எவ்வளவு விலைக்கு வாங்கப்படுகின்றன என்ற விவரங்களை வழங்குவதில் எப்படி விலக்கு கோர முடியுமென தமிழக அரசுக்கு கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.  வழக்கறிஞர் லோகநாதன் என்பவர் தொடர்ந்த வழக்கில், இந்த விவரங்களை தகவல் உரிமைச் சட்டப்பிரிவின்படி வழங்க வேண்டுமென தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் மேல்முறையீடு வழக்கில் தலைமை நீதிபதி அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது.Mediaஅதாவது டாஸ்மாக்கின் வாதமானது, மூன்றாவது தரப்பின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்பதால் ஆர்.டி.ஐ-யில் தகவல்களை வழங்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது.  இதற்கு நீதிமன்றமானது, எதன் அடிப்படையில் விலக்கு பெற்றது என்பதை இரண்டு வாரங்களில் தெரிவிக்க டாஸ்மாக் நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு தலைமையிலான நீதிமன்ற அமர்வானது, தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மட்டுமே மதுபான விற்பனையில் ஈடுபடுகிறது என்றும்  மதுபானம் கொள்முதலுக்கு எந்த டெண்டரும் கோரப்படுவதில்லை என்றும் உற்பத்தி நிறுவனங்களில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன என்றும் இந்த சூழலில் எப்படி வர்த்தகம் பாதிக்கப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பி உள்ளனர்.

via News J : https://ift.tt/uPDO7RX
Mediaஇரயில் பயணிகளிடம் போலியான டிக்கெட் வழங்கி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். எங்கே மற்றும் யார் என்று பார்க்கலாம் வாருங்கள்!கடந்த சில தினங்களாக சென்னை சென்ட்ரல்,பெரம்பூர், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நிற்கும் பயணிகளிடம் போலியாக நோட்பேடில் சீல் வைத்து டிக்கெட் என கூறி ஒரு நபர் ஏமாற்றி வருவதாக, வந்த தகவலின் பேரில் இருப்புப்பாதை போலீசார் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் உள்ள அனைத்து முன்பதிவு மையங்களிலும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.ஒரு வருடமாக ஏமாற்றி வந்த நபர்..!இந்த நிலையில் நேற்று சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலைய முதல் தளத்தில் உள்ள முன்பதிவு டிக்கெட் கவுண்டரில் போலியாக நோட் பேடு, ரப்பர் ஸ்டாம்பு மற்றும் ஸ்டாம் பேடு ஆகியவையுடன் நின்றிருந்த நபரை சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்ததில் கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த ஜீதேந்திர ஷா(38) என தெரியவந்தது. சென்னை சென்ட்ரலில் , பெரம்பூர், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க நிற்கும் பயணிகளிடம் தன்னிடம் உள்ள நோட் பேடில் சீல் வைத்து இதை எடுத்துச் செல்லுங்கள், எந்த TTE யும் எதுவும் சொல்லமாட்டார்கள் என்றும் TTE உங்களுக்கு சீட்டு ஓதுக்கி கொடுத்துவிடுவார் என்றும் கூறி கடந்த 1 வருடமாக ஏமாற்றி வந்துள்ளார்.சென்னை சென்ட்ரல் புறநகர் இரயில் நிலைய முன்பதிவு மையத்தில் வைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்ட சென்ட்ரல் இருப்புப்பாதை போலீசார் 420, 468 மற்றும் 471 ஆகிய மூன்று பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

via News J : https://ift.tt/ABGgPyW
Mediaவிடியா திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால், திறமையான காவல் அதிகாரிகள் தற்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.டெல்லியில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முன்னாள் கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, பொன்முடி வழக்கில் அமலாக்கத்துறை காலதாமதமாக வந்துள்ளது என தெரிவித்தார்.நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்தே மகளிர் உரிமைத்தொகை அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டினார்.விடியா திமுக ஆட்சி கலைந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே செந்தில்பாலாஜியை மருத்துவமனை வரை சென்று ஸ்டாலின் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக சாடினார்.விடியா திமுக அரசின் நிர்வாக திறமையின்மையால், திறமையான காவல் அதிகாரிகள் தற்கொலை செய்யும் சூழல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம் சாட்டினார் .விடியா ஆட்சியில் ஜவுளித்தொழில் நசுங்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, ஜவுளி உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை விடியா திமுக அரசு விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

via News J : https://ift.tt/NmOvGg0
Mediaஆசியா தெரியும், ஐரோப்பா தெரியும், அது என்ன ஓசியானியா? எதாவது புது கண்டமா இருக்குமோ? அவதார் திரைப்படத்துல வர்ற மாதிரி இப்படி ஒரு உலகம் தனியா இயங்கி கிட்டு இருக்குனு நம்மள்ள பல பேருக்குத் தெரியாது. இந்த ஓசியானியா-னா என்ன? அது எங்க இருக்கு? தெரிஞ்சுக்கிடலாம் வாங்க!நம்ம எல்லாருக்கும் பசுபிக் பெருங்கடல்னா என்னனு தெரியும். உலகத்திலேயே பெரிய கடல்னு இததான் சொல்வாங்க. அப்படிப்பட்ட கடலைச் சுற்றி இருக்குற நிலங்களையும் குட்டிக் குட்டித் தீவுகளையும் சேத்துதான் ஓசியானியா-னு பேர் வச்சுருக்காங்க. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜூல் டூமோண்ட் டேர்வில் அப்டிங்கிற பயணிதான் ஓசியானியா-ங்கிற பெயர் முதல் முதல்ல வைக்கிறாரு. இதொட பரப்பளவு கிட்டத்தட்ட, என்பத்தஞ்சு லட்சத்து இருபத்தஞ்சாயிரத்து தொள்ளாயிரத்து என்பத்தொன்பது சதுர கிலோ மீட்டர். அதாவது 2021 கணக்கெடுப்பின்படி, மக்கள்தொகை மட்டுமே நாலு கோடியே நாப்பத்து நாலு லட்சத்து தொன்னுற்றோராயிரத்து எழுநூற்று இருபத்து நாலு.ஓசியானியா-ல இருக்குற தீவுகள மூன்று பகுதியாகளாக பிரிக்கலாம்…How many countries are there in Oceania? | Mars Translationமெலனீசியா, மைக்ரோனீசியா, பொலினீசியாஇந்த மூன்றுபோக ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து போன்ற நாடுகள் உள்ளடக்கிய ஆஸ்திரலேசியா மற்றும் மலேத் தீவுக்கூட்டங்கள் போன்றவை இதில் அடங்கும்.ஆஸ்திரலேசியா-னு எடுத்துக்கிட்டோம் அப்டினா… ஆஸ்திரேலியா, கிறிஸ்துமஸ் தீவுகள், கொக்கோசு தீவுகள், பவளக்கடல் தீவுகள், நியூசிலாந்து, நேர்போக் தீவு இப்டி ஒரு செட் ஆஃப் தீவுகள் இதுல அடங்கிருக்கு…முதல்ல ஒரு மூனு சொன்னோம் இல்லையா.. அத எடுத்துக்கிட்டோம் அப்டினா..முதல்ல மெலனீசியா..இதுல பிஜி, நியூ கடலோனியா, பப்புவா நியூ கினியா, சாலமன் தீவுகள், ரிபப்ளிக் ஆஃப் வனுவாட்டு, இது மாதிரியன தீவுகள் அடங்கும்.இரண்டாவதா மைக்ரோனீசியா…இதுல குவாம், கிரிபாஸ், மார்ஷல் தீவுகள், நவுரு, வடக்கு மரியானா தீவுகள், பலாவ், வேக் தீவு இப்படி சில தீவுகளும் அடங்கும்..கடைசியும் மூனாவதுமான பொலினீசியா…இதுல சமோவா, அமெரிக்க சமோவா, குக் தீவுகள், ஈஸ்டர் தீவுகள், ஃப்ரெஞ்ச் பொலினீசியா, ஹவாய், நியூ வே, பிட்கன் தீவுகள்,  டொக்கெலாவ், தொங்கா, துவாலு, வாலிஸ் அண்ட் புட்டுனா தீவுகள்னு ஒரு பெரிய நிலப் பரப்பே அடங்கிருக்கு… 

via News J : https://ift.tt/AbXZQ5k
Mediaஉலகிலேயே மிகவும் பரிசுத்தமானதும் ஆரோக்கியமானதும் தாய்ப்பால்தான். அதனால் தான் குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பால் கொடுக்கச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். சில தாய்மார்கள் ஒரு சில காரணங்களால் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் வாய்ப்பை இழக்கின்றனர். ஆனால் பெண் ஒருவர் தனது குழந்தைக்கு
மட்டுமல்லாமல், தாய்ப்பால் கிடைக்காமல் தவிக்கும் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு ஆயிரக்கணக்கான லிட்டர் தாய்ப்பாலை தானமாக கொடுத்து கின்னஸ் சாதனையில் இடம்பிடித்திருக்கிறார்.அமெரிக்காவின் ஓரிகான் பகுதியை சேர்ந்தவர் எலிசபெத் ஆண்டர்சன் சியாரா. இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஹைப்பர்லாக்டேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இவருக்கு, யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு பால் சுரப்பு இருந்திருக்கிறது. அதாவது நாளொன்றுக்கு சுமார் ஆறரை லிட்டர் தாய்ப்பால் இவரது உடலில் உற்பத்தியாகி இருக்கிறது. இது சராசரி தாய்க்கு சுரக்கும் தாய்ப்பால் சுரப்பை விட கிட்டத்தட்ட 8 முதல் 10 மடங்கு அதிகமாகும்.1600 லிட்டர் தாய்ப்பால் தானம்: பலரின் இயலாமையை உடைத்தெறிந்து உதவிய சாதனை பெண்இதனால் தனக்கு சுரக்கும் தாய்ப்பால் வீணாகிப் போவதை விரும்பாத எலிசபெத், தாய்ப் பால் கிடைக்காத குழந்தைகளுக்கு பசியாற்ற முடிவு செய்தார். அவர் நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு தாய்ப்பாலை தானமாக கொடுத்தார். இவரின் இந்த செயல் குறைமாதத்தில் பிறந்த பல குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றவும் உதவியாக இருந்திருக்கிறது. இதனால் தாய்ப்பால் தெய்வம் என்றும் எலிசபெத்தை அழைக்கிறார்கள்.கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந் தேதி முதல் 2018-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஆயிரத்து 599 லிட்டர் தாய்ப்பாலை, ஒரு பால் வங்கிக்கு நன்கொடையாக அளித்ததன் மூலம், எலிசபெத் ஆண்டர்சன் சியாரா கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.தனக்கு ஏற்பட்ட ஒரு குறையை பற்றி கவலைப்படாமல், அதை மற்றவர்களுக்கு பயனுள்ளதாக மாற்றி நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு உயிர் கொடுத்த பெண்ணுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்..– உமேஷ் அங்கமுத்து, செய்தியாளர்.

via News J : https://ift.tt/fmJeu9E
Media2024ஆம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே, அனைத்துக் கட்சிகளும் கூட்டணி வியூகத்தை வகுக்க தொடங்கிவிட்டன. எதிர்க்கட்சிகள் சார்பில் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற அதே நேரம், தலைநகர் டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்ட கூட்டணியில் அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கலந்து கொண்டனர். இந்தக்கூட்டத்தை பார்த்த ஒட்டுமொத்த மக்களின் கண்களும் எடப்பாடி கே பழனிசாமி மீதே இருந்தது.. காரணம், கூட்டத்தில் பங்கேற்க வந்த பிரதமர் நரேந்திர மோடியை, டெல்லி அசோகா ஓட்டல் வாயிலில் பூச்செண்டு கொடுத்து வரவேற்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அருகிலேயே இடம் தரப்பட்டது. அது மட்டுமின்றி, மக்களவை தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய 3 பிராந்தியங்கள் பிரிக்கப்பட்டு, தென்னிந்திய பிரதிநிதியாகவும் எடப்பாடி கே.பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார்.இப்படி தென்னிந்திய பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்டது, கூட்டத்தில் அருகே அமர வைத்தது, 30 நிமிடங்கள் தமிழக அரசியல் சூழல் குறித்து பேசிக் கொண்டிருந்தது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமிக்கு பிரதமர் மோடி அளிக்கும் முக்கியத்துவம் தற்போது தமிழக அரசியல் அரங்கில் பேசு பொருளாகி உள்ளது.எதிர்க்கட்சிகளைத் திரட்டுகிறோம் என்று பிரதமர் கனவோடு மாநிலம் மாநிலமாக ஸ்டாலின் அலைந்து கொண்டிருக்க, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவம், ஸ்டாலினின் கனவுக் கோட்டைக்கு குண்டு வைத்துள்ளது. மேலும் சில இளவு காத்த கிளிகளான நம்பிக்கைத் துரோகிகளின் கனவுகளையும் தவிடுபொடியாக்கி உள்ளது. இன்னும் தெளிவாக, தேசிய அளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மாநில அளவில் அதிமுக தலைமையிலான கூட்டணி என்பதையும் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார்…அதே நேரம் பெங்களூருவில் நடைபெற்ற I.N.D.I.A கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்ட ஸ்டாலினுக்கு கிடைக்காத அங்கீகாரத்தையும் தமிழக மக்கள் உற்றுநோக்கி வருகின்றனர். ஆக தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக உருவாகி இருப்பதையே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றனவா?ஆக தேசிய ஜனநாயகக் கூட்டணியான NDA மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான I.N.D.I.A இடையே நாடாளுமன்ற யுத்தம் தொடங்கிய நிலையில், தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியாக அதிமுக உருவாகி இருப்பதையே தற்போதைய அரசியல் நிகழ்வுகள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

via News J : https://ift.tt/RrWpi9S
Mediaதமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வைக் கண்டித்து அதிமுகவினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பட்டத்தில் முன்னாள் அமைச்சர் பொன்னையன் மாவட்ட கழக செயலாளர்கள் பாலகங்கா, ஆதிராஜாராம், வெங்கடேஷ் பாபு, விருகை ரவி, ஆர் எஸ் ராஜேஷ், எம் கே அசோக், கேபி கந்தன், கழக அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று உள்ளனர்.மேலும் திமுக அரசை கண்டிக்கும் விதமாக அதிமுகவினர் காய்கறி மாலை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது விலைவாசி உயர்வுக்கான போராட்டம் மட்டுமல்ல, தமிழகத்தில் கடந்த பத்து நாட்களில் இருபத்து மூன்று கொலைகள் நடந்தேறியிருக்கின்றன.  இதனால் சட்ட ஒழுங்கு மிகவும் சீர்கெட்டு இருக்கிறது. அதனை கண்டிக்கும் விதமாகவும் இந்த கண்டன ஆர்ப்பாட்டமானது காலை ஒன்பதரை மணிக்கு தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

via News J : https://ift.tt/780lJgG
Mediaவிலைவாசி உயர்வையும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள சட்ட ஒழுங்கைப் பிரச்சினையை கண்டித்தும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதிமுகவினர் விடியா திமுக அரசை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையொட்டி விழுப்புரத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி சிவி சண்முகம் அவர்கள் பேசியது பின்வருமாறு உள்ளது.எம்பி சி.வி.சண்முகம் கண்டனம்!இன்றைக்கு நடைபெறுகின்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தின் நோக்கமானது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாங்கள் விடியலைத் தருவோம், வேலை வாய்ப்பை ஏற்படுத்துவோம், விலைவாசியை குறைப்போம் என்று சொல்லி திமுக ஆட்சியைப் பிடித்தார்கள். சொத்து வரியை உயர்த்த மாட்டோம், மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம், எந்த வரியையும் உயர்த்தமாட்டோம் என்று சொன்ன முக ஸ்டாலின் தெளிவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்று சொல்லமாட்டோம். அவரை சில சக்திகள் இயக்கிக்கொண்டு இருக்கின்றன.  பொம்மை முதலமைச்சர் முக ஸ்டாலினை வைத்து இயக்கிக்கொண்டிருக்கிற சக்திகள் இந்த மாடலை திராவிட மாடல் அல்ல, திருடர்களுடைய மாடல் அரசாக வைத்துள்ளது. மூன்று ஆண்டுகள் ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. அவர்களின் வேசம் படிப்படியாக மக்களுக்கு தெரிந்து கொண்டிருக்கிறது. இந்த கேடுகெட்ட, செயல்படாத திமுக ஆட்சியில், தவறுகளை மூடி மறைத்தாலும் களைந்து கொண்டிருக்கிற காட்சி உள்ளது. இந்த ஆட்சியை புழல் சிறைக்கும், திகார் சிறைக்கும் அனுப்புவதற்கான காலம் தொடங்கிவிட்டது. செந்தில் பாலாஜி, பொன்முடி, கவுதம சிகாமணி, அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கி பிறகு முக ஸ்டாலினின் கழுத்தைப் பிடிக்கும். திமுகவிற்கான முடிவுரையின் தொடக்கு உரையானது எழுதப்பட தொடங்கிவிட்டது.   

via News J : https://ift.tt/rPuBtMT
Mediaஇந்தியாவிடம் 105 பழங்கால கலைப் பொருட்களை அமெரிக்கா தற்போது ஒப்படைத்துள்ளது.இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சாமி சிலைகள் உள்ளிட்ட பழங்கால கலைப் பொருட்களை மீட்டு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசானது முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில்தான் தற்போது அமெரிக்காவானது 105 பழங்கால கலைப் பொருட்களை இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது. இந்தப் பொருட்கள் எல்லாம் நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் ஜித்சிங் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.இது தொடர்பாக ஜித்சிங் கூறியதாவது,இந்திய மக்களை பொறுத்த வரை பழங்கால பொருட்கள் வெறும் கலை பகுதிகள் மட்டுமல்லாமல் அவர்களின் வாழ்க்கை பாரம்பரியம் மற்றும் பண்பாட்டின் ஒரு பகுதியாகும். கலைப் பொருட்களை திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த மான்ஹாட்டன் மாவட்ட நிர்வாகம், சிலை தடுப்புப் பிரிவு, உள்நட்டு பாதுகாப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். பழங்காலப் பொருட்கள் விரைவில் இந்தியாவுக்கு அனுப்பிவைக்கப்படும். இதில் கிழக்கு இந்தியாவில் இருந்து 47 கலைப் பொருட்கள், தென்னிந்தியாவில் இருந்து 27 பழங்கால பொருட்கள், மத்திய இந்தியாவில் இருந்து 22 கலைப் பொருட்கள், வட இந்தியாவில் இருந்து 6 பொருட்கள், மேற்கு இந்தியாவில் இருந்து 3 கலைப் பொருட்கள் அடங்கும் என்று ஜித்சிங் கூறினார்.மீட்கப்பட்ட பழங்கால பொருட்கள் கி.பி. 2 முதல் 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலங்கட்டங்களை சேர்ந்தவை ஆகும். மேலும் கிபி 18 மற்றும் 19 ஆம் நூற்றாண்டிற்கு இடைப்பட்ட காலகட்டங்களை சேர்ந்தவையும் உள்ளன. டெரகோட்டா, கல், உலோகம், மரத்தால் செய்யப்பட்டவை. சுமார் 50 கலைப் பொருட்கள் இந்து, ஜெயின், முஸ்லீம் மதத்துடன் தொடர் புடவை என்றும், மீதம் உள்ளவை கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையிலானது எனவும் தெரிவிக்கப்பட்டது.

via News J : https://ift.tt/gsMR9BN
Mediaமகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி:பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து போட்டி இன்று தொடங்குகிறது. 32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டியானது இன்று நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில்  தொடங்குகின்றது. மேலும் இந்த போட்டியின் தொடக்க ஆட்டத்தில் நியூஸிலாந்து – நார்வே அணிகள்  களமிறங்குகின்றனர்.  பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடரை ஒன்பதாவது முறையாக ஆஸ்திரேலியா மற்றும் நியூஸ்லாந்து இணைந்து நடத்துக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த கால்பந்து போட்டியானது இன்று தொடங்கி ஆகஸ்ட் 20-ம் தேதி வரை நடைப்பெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 32 அணிகள் களந்துகொள்ள உள்ளனர். மேலும் இந்த அணிகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்று உள்ளன.  இந்த அணியில் பிரிக்கப்படு உள்ள அணியானது லீக் சுற்றில் அதே பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணிகளுடம் மோதுகின்றன.பிஃபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து: இறுதிப்போட்டியில் நுழைந்தது ஜப்பான்- 'சேம் சைடு' கோலால் தோற்றது இங்கிலாந்து | பிஃபா மகளிர் உலகக் ...32-வது பிஃபா மகளிர் கால்பந்து:இந்த லீக் சுற்றில் முதல் இரு இடங்களில் வெற்றி பெறும் அணிகள்  அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுகளுக்கு தகுதிபெறுவார்கள். இந்த வகையில் இந்த நாக் அவுட் சுற்றானது ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 8-ம்தேதி வரை நடைப்பெற உள்ளன.  மேலும் இந்த சுற்றின் முடிவில்  எட்டு அணிகள் கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெறுவார்கள்.  மேலும் இந்த கால் இறுதி சுற்று ஆட்டங்கள் ஆகஸ்ட் 11 மற்றும் 12-ம் தேதிகளிலும் அரை இறுதி ஆட்டங்கள் 15 மற்றும் 16-ம் தேதிகளிலும் நடைபெற உள்ளன. இந்தப் போட்டியின் இறுதி சுற்றானது ஆகஸ்ட் 20-ம் தேதி சிட்னி ஒலிம்பிக் மைதானத்தில் நடைப்பெற உள்ளது. குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறு மைதானங்களில் உலகக் கோப்பை கால்பந்து தொடரானது நடைபெற உள்ளது. மகளிர் கால்பந்து போட்டியின் தொடக்க நாளான இன்று முதல் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள நியூஸிலாந்து – நார்வே அணிகள் களமிறங்குகின்றன. இதில் நார்வே அணி உலக கோப்பை கால்பந்து போட்டியில்  ஐந்து முறை வெற்றிபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

via News J : https://ift.tt/YkrE38C
Mediaஇன்றைய நவீன காலகட்டத்தில், அதிக லாபம் ஈட்டும் நோக்கில் எல்லாப் பொருட்களிலும் செயற்கை முறையில் ராசயணம் செறிவூட்டப்படுவது கவலைக்குறிய விஷயமாகும்.குறிப்பாக செயற்கை இனிப்புகளானது குளிர் பானங்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றில் சேர்க்கப்படுவதுடன், தற்போது டூத் பேஸ்ட்டில் கூட பயன்படுத்தப்படுகிறது. இந்த வகை இனிப்புகள் சர்க்கரையுடன் ஒப்பிடும்போது குறைவான கலோரிகளை கொண்டது என்று சொல்லப்படுகிறது.செயற்கை இனிப்புகள் பாதுகாப்பானதா? இல்லையா? என்று ஆய்வு செய்த போது, அதில் பயன்படுத்தப்படும் அஸ்பார்டேம்((ASPARTAME)) இனிப்பானது உடலில் 92 வகையான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும் என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக செயற்கை இனிப்பு அஸ்பார்டேம், புற்றுநோயை உண்டாக்கும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.என்னென்ன நோய்கள் வரும்?…WHO Says Aspartame Possibly Carcinogenic To Humans, But Safe Within Limits | Health News, Times Nowசெயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதால் நீரிழிவு மற்றும் இதய நோய் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கைக்கும் மருத்துவர்கள், உடல் எடை அதிகரித்து, ரத்த அழுத்தம், தலைவலி, கொழுப்பு தொடர்பான பிரச்சினைகளையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கின்றனர்.சர்க்கரை இல்லை என்று நினைத்து ஐஸ்கிரீம் அல்லது பிற இனிப்பு உணவுப் பொருட்களை சாப்பிடுவோர், கலோரிகளைத் தான் உட்கொள்கிறார்கள் என்பதை தெரியாமல் இருப்பது அறியாமையின் உச்சமாகும்.அதேபோல் உடல் எடை அதிகரிக்காது என்று நினைத்து விரும்பி சாப்பிடும் செயற்கை இனிப்புகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.அஸ்பார்டேம், சுக்ரோலோஸ் போன்றவற்றை நீண்ட காலமாக எடுத்துக் கொண்டால் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பு ஏற்படுவதுடன், மலட்டுத் தன்மையும் ஏற்படலாம் என எச்சரிக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

via News J : https://ift.tt/koOb7Ii
Mediaவெப்பதில் தவிக்கும் ஐரோப்பா!பருவநிலை மாற்றம்  போன்ற காரணத்தினால் பனிப்புயல், வெள்ளம், சூறாவளிபுயல், மேகவெடிப்பு, கடுமையான வெயில் போன்ற காரணங்கள் இயல்புக்கு மீறிய அசாதாரணமான வானிலை நிலவுகின்றது. இந்த மாற்றத்தினால் பல நாடுகள் பாதிக்கப்பட்டு உள்ளன. அதில் குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் கடந்த சில நாட்களாக வெப்ப அலைவீச்சு அதிகரித்து வருகின்றது. இதனால் அந்நாட்டில் உள்ள மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த வெப்ப அலைவீச்சால் கடந்த ஆண்டு ஐரோப்பாவில் 61,000-க்கும் அதிகமானோர் இறந்தனர். ஏற்கனவே அங்கு அசாதாரணமான வெப்பநிலை நிலவி வரும் நேரத்தில் இனிவரும் காலங்களில் 104 டிகிரியில் இருந்து 113 டிகிரி வரை  அதிகரிக்கலாம் என்று எதிர்பார்கப்படுகின்றது. Record-breaking heat wave melts Europe; See Pics | Deccan Heraldசிகப்பு எச்சரிக்கை!இதில் இத்தாலியின் முக்கிய நகரங்களான ரோம் மற்றும் சிசிலி உள்ளிட்ட 23 நகரங்களுக்கு வெப்ப அலைவீச்சின் காரணமாக ’சிகப்பு எச்சரிக்கை’ விடப்பட்டு உள்ளது.  இந்த எச்சரிக்கையானது பகல் 11 மணி அளவில் தொடங்கி மாலை ஆறு மணி வரை மக்கள் வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சில நாடுகளில் அதீத மழைப்பொழிவும் சில நாடுகளில் வறட்சியும் காணப்படுகின்றன. அதில் ஐரோப்பா மற்றும் சீனாவின் வடமேற்கு மாகாணங்களில் அளவுக்கு அதிகமாக வெப்பநிலை நிலவிவருகின்றன.  மேலும், இந்த வெப்ப அலைவீச்சால் அந்நாட்டு மக்கள் அம்மை, சிறுநீர் கடுப்பு, வறட்சி போன்ற பலவகை நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பொதுமக்கள் அனைவரும் அபாயகரமான சூழ்நிலையை எதிர்கொள்ள உள்ளனர்.  இந்த நிலை குறித்து ஐநா எச்சரித்து உள்ளது. அதாவது, இதுபோன்ற காலசூழ்நிலையை நாம் எதிர்கொள்ளவேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் வெப்பமானது மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், இது ஒரு அவசரநிலை என்றும் பதிவிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெப்ப அலைவீச்சில் உலகம் முழுவதும் சுமார் 62 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

via News J : https://ift.tt/oJS8UnD
Mediaதிமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தமிழகமே ஒரு அமளி பூங்காவாக திகழ்வதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே விடியா ஆட்சியில் உயர்ந்து வரும் விலைவாசி உயர்வை கண்டித்து அதிமுக மாவட்ட கழக செயலாளர் பாலகங்கா முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவிற்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் சென்னை மாநகரம் கொலை மாநகரமாக மாறி உள்ளதுடன், தமிழகமே அமளி பூங்காவாக திகழ்கிறது என குற்றம் சாட்டினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர்கள் விருகை ரவி, வேளச்சேரி அசோக் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பேசிய அவர், தொடர்ந்து ஊழல் செய்வது, எதிர்க்கட்சிகளை பழிவாங்குவது, ஊடகங்களை பழிவாங்குவது என சமூக விரோத செயல்களை மட்டும் தான் திமுகவினர் செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும், 2 ஆண்டுகளில் தமிழகத்தில் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டினார். ஸ்டாலின் ஒரு பொம்மை முதலமைச்சராக மட்டுமே இருந்து வருகிறார் எனவும், ஆசியாவில் மிகப்பெரிய பணக்கார குடும்பமாக உருவாக வேண்டும் என்பதற்காகவே கோடி கோடியாய் கொள்ளை அடித்து, ஏழை எளிய மக்களை பரிதவிக்க விட்டுவிட்டதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக சாடியுள்ளார்.

via News J : https://ift.tt/gMQn57z
Mediaவிலைவாசி உயர்வைக் கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். அதனையொட்டி கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பின்வருமாறு பேசியுள்ளார்.முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி…முடியும் தருவாயில் உள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விடியா திமுக அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக அதிமுகவின் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டியுள்ளார்.கோவையில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கர்நாடகா வரை சென்ற முதல்வர் மேகதாது குறித்து எதுவும் பேசவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் விடியா முதல்வர் விவசாயிகளுக்கு துரோகம் செய்கிறார் என்றும் காட்டமாக தெரிவித்தார்.அதிமுக யாருக்கும் அடிமை அல்ல என்று குறிப்பிட்டு பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் அடிமையாக இருப்பதாக விமர்சித்தார்.தொடர்ந்து பேசிய அவர், கழிவு பஞ்சு ஆலைகளின் வேலைநிறுத்தத்தால் ஏராளமான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குற்றம்சாட்டினார்.தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கொண்டு வந்த திட்டங்களையே ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வைக்கிறார் என விமர்சித்தார்.மேலும் முடியும் தருவாயில் உள்ள அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை விடியா அரசு இழுத்தடிப்பு செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளதாகவும், கோவை மாவட்டத்திற்கு எந்த ஒரு நலத்திட்டங்களும் வரவில்லை என குற்றம்சாட்டினார். மேலும் கோவை டிஐஜி தற்கொலை தொடர்பாக வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தினார்.

via News J : https://ift.tt/OWPrMg8
Mediaவிடியா திமுக ஆட்சியில் தமிழக மக்களை அதிர வைக்கும் வகையில் கடந்த 10 நாட்களில் 23 கொலைகள் அரங்கேறியுள்ளது அமைதி பூங்காவாக இருந்த தமிழகத்தை கொலை நகரமாக்கி பதைபதைக்க வைத்துள்ளது.கடந்த 10ஆண்டு கால அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கை கட்டுக்கோப்பாக இருந்த நிலையில், விடியா திமுக ஆட்சிக்கு வந்த 26 மாதங்களில் தமிழகம் வன்முறைக் களமாகி, கொலை நகரமாக மாறியுள்ளது.18 persons held in LB Nagar murder case - Telangana Todayகிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில், காரில் கால்நடைகளுக்கு தீவனப்புல் கொண்டு வந்த விவசாயி சிவராமை, மர்மகும்பல் வழிமறித்து கொடூரமாக வெட்டி கொலை செய்தது. திருச்சியில் மனைவியின் கண்முன்னே குப்புசாமி என்பவர் 6 பேர் கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதே திருச்சியில் பெயிண்டர் வேலை செய்து வந்த தீபக், கறி விருந்து என்று கூறி அழைத்து செல்லப்பட்டு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். சென்னை மயிலாப்பூரில் பிரபல ரவுடி டொக்கன் ராஜாவை வீட்டுக்கு முன்பே வெட்டி சாய்க்கப்பட்டார். சென்னை வில்லிவாக்கம் காவல்நிலையம் அருகே பட்டப்பகலில் ரவுடி கல்லறை அப்பு என்கிற சதாம் உசேன் வெட்டிக் கொலை. திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி என்ற பெண் மர்ம நபர்களால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். சென்னை பாடிகுப்பத்தில் மாந்திரீகம் செய்து வந்த சிக்கந்தர், கஞ்சா வியாபாரியால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மதுரையில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி ஊழியரும், பெண் காவலரின் தந்தையுமான செந்தில்வேல் என்பவர் வீடு புகுந்து வெட்டி கொலை செய்யப்பட்டார். இதேபோல் மதுரை பாலமேடு அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக கவுன்சிலரான சந்திரபாண்டியனும் மர்மகும்பலால் வழிமறித்து வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே கூலி தொழிலாளி செல்வதிரவியத்தை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது, செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசியல் பிரமுகரை 7 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளது. இப்படி, அரசியல்பிரமுகர்கள், வெகுஜனங்கள், தொழிலதிபர்கள், அரசு ஊழியர்கள், கூலி தொழிலாளர்கள் என பலரும் கொலையாகி உள்ளனர். இந்த கொலைச் சம்பவங்களில், ஈடுபட்டுள்ள கொலையாளிகளை தண்டிக்க முடியாத காவல்துறையாலும், வேடிக்கை பார்க்கும் திமுக அரசாலும் மக்கள் அச்சமடைந்து இருக்கிறார்கள்.Mediaதிமுக ஆட்சிக்கு வந்து 26 மாதங்களில் கொலை சம்பவங்களின் எண்ணிக்கை மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளன. மக்களின் வாழ்க்கையோ அச்சமும், பதற்றமும் நிறைந்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்கள் தனியாக சென்று வர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது தான் திமுகவின் திராவிட மாடல் சித்தாந்தமா? விடியல் தருவதாகக் கூறிக் கொண்டு இருளில் தள்ளும் திமுக ஆட்சியில் இருந்து எப்போது விடியல் கிடைக்கும் என எதிர்பார்ப்பில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர்.

via News J : https://ift.tt/hJvXFPI
Mediaதமிழகத்தில் மக்களாட்சிக்கு பதிலாக குடும்ப ஆட்சி தான் நடைபெறுகிறது என முன்னாள் அமைச்சர் தங்கமணி விமர்சித்துள்ளார்.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகத்தில் தற்போது குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது என விமர்சித்தார். மேலும் மக்களிடம் கொள்ளையடிப்பதையே குறிக்கோளாக கொண்டுள்ள விடியா அரசு, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்திய பின்னரே மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது எனக் கூறினார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, விடியா அரசு தற்போது உதவித்தொகை வழங்க டோக்கன் வழங்கி வருவதாக விமர்சித்தார்.பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், சட்டமன்றத்தில் எதிர்கட்சித்தலைவர் குரல் கொடுத்து, பல போராட்டங்களை நடத்திய பின்னரே மகளிர் உதவித்தொகை வழங்கப்படுகிறது எனக் கூறினார். மேலும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே, விடியா அரசு தற்போது உதவித்தொகை வழங்க டோக்கன் வழங்கி வருவதாக விமர்சித்தார்.விடியா திமுகவினர் மின்சாரத்துறையில் ஊழல் செய்வதாலேயே மின்கட்டணத்தை உயர்த்துகின்றனர் என குற்றம்சாட்டினார். மேலும் விற்பனை குறைவாக நடைபெற்ற இடத்தில் இருந்த மதுபான கடைகளே மூடப்பட்டுள்ளது என முன்னாள் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

via News J : https://ift.tt/wrg9H8o