Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஆத்ம ✨வணக்கம்
*சன்மார்க்க சாகாக்கல்வி சாலை*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!!
"சத்விசாரம் என்னும் பிரம்ம வித்தை பயிற்சி"
நிகழ்வு தகவல்
இது ஒரு இணையதள வகுப்புடன் (Whatsapp & youtube) மேலும் நேரடி பயிற்சியுடன் இணைந்த ஒரு அரிய நிகழ்வு.
(+ 12 நாட்கள் இலவச மௌன சத்விசார
நேரடி பயிற்சி)
பயிற்சி விவரம்:
3 மாதம் வரை பங்கேற்கும் ஆர்வம் வேண்டும்
( இது ஒரு அனைவருக்குமான இலவசப் பயிற்சி ஆகும்)
📝முன்பதிவு அவசியம் செய்ய வேண்டும் ✔️👍🏻
முன்பதிவிற்கான
கடைசி நாள் : 20-06-2024
பயிற்சியில்
உள்ளடங்கும் விசயங்கள்..
1) சுத்த சன்மார்கத்தைப்
பற்றிய சத்சங்கம்.
2) சன்மார்க்கத்தைப் பின்பற்றும்போது நம் வாழ்க்கையில் ஏற்படுகின்ற இன்ப துன்பங்களை (சிவம்) இறை அருளால் சமநிலையோடு நோக்குகின்ற மனோபலத்தைப் பெற்று இன்புற்று வாழ வழி வகுக்கும்.
3)
ஜீவகாருண்ய ஒழுக்கத்தைப் பின்பற்றுவதனால் இறைவனுடைய அருளைப் பெற்று நான் ஏழை என்கின்ற நோய், உடல் நோய், மற்றும் மன நோய் இதில் இருந்து எவ்வாறு விடுதலைப் பெறலாம் என்ற தெளிவு கிடைக்கும்.
4)
தன்னை அறிந்தவன் தன் தலைவனாகிய தனிப்பெரும் தலைவர் அருட்
பெருஞ்ஜோதி ஆண்டவரையும் அறியலாம்.
5)
பொறுமை, சகிப்பு, அமைதி இவையே பேரானந்த சிவபோக ஜீவ முக்திக்கான வழி.
6)
தன்னில் விஷமாய் சேர்ந்திருக்கின்ற கப நீரை (வாத, பித்த, கபம்) வெளியேற்றும் முறையாகிய "பிரம்மரி பிராணயாமம்"
(18 சப்த வாசி கதிகள்) பயிற்சி.
7)
வாசியை தன்னைத் தானே உணர வைக்கக்கூடிய "புஜகி கரண பிராணயாம" பயிற்சி.
8)
குண்டலினியை உணரக்கூடிய "ஊர்த்துவ கதி" பயிற்சி.
9)
தியானம் = நிஷ்டையில் நெடுநேரம் அமரக்கூடிய "நெடுந்
தவப்பயிற்சி".
10)
சாதி சமய மத வேறுபாடுகளைக் களைத்து சன்மார்க்க ஒழுக்கநெறியில் நடந்து ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கின்ற வாழ்வியலை கற்று ஒன்றென்று இரு, நன்றென்று இரு, மரணம் இல்லா பெறுவாழ்வு பெற்று இன்புற்று வாழ்க.
நிகழ்ச்சி வழங்குபவர்&
வழி நடத்துபவர்
& ஸ்தாபகர் :
யோகி-ருத்ரானந்த சம்புவராயர் ஐயா.
ஆசிரம முகவரி :
பிரம்ம வித்தை சித்த ஆசிரமம் & அறக்கட்டளை.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஜவ்வாது மலை, கோவிலூர் கிராமம்.
Whatsapp No:
+91 9940480449
Cell No:
+91 6381897979
Youtube Channel: https://youtube.com/@yogi-rudranandartv1992
✨அருட்
பெருஞ்ஜோதி அருட்
பெருஞ்ஜோதி! தனிப்
பெருங்கருணை அருட்
பெருஞ்ஜோதி !!🙏

YouTube
YOGI-RUDRANANDAR TV
Share your videos with friends, family, and the world
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (R•J•N _SG)
திருமூலர் வழி சீடர்.. ஸ்ரீ போக நாதரின் "ஞான வாசகம்"
"ஒரு பானையின் பயன்பாடு அதனின் வெறுமை எனும் தன்மையில் உள்ளது"
"The Usefulness of the Pot lies in its Emptiness"
~Lao Tzu.
🙏✨🙏
~சேகரமும், பகிர்வும் :
பிரம்மஸ்ரீ. கரூவூரான்.
www.t.me/truthsofsivayoga/

*தைராய்டு பாட்டி வைத்தியம்..!*
ஆம்பிளைங்கள விட பொண்ணுகளுக்கு தைராய்டு பிரச்சன அதிகமா வரக் காரணம், அவங்களுக்கு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கிறது தான்.
நாளமில்லா சுரப்பிகள் அதிகமாகும் போது, உடம்புல தேவையில்லாத இடங்கள்ல நிணநீர் அதிகமாக சேர்ந்து உடல் பருமனாகுது.
இதுனால மாதவிடாய் தாமதமாகுறதுக்கும் கூட இது ஒரு முக்கிய காரணம்.
இதையெல்லாம் நம்ம பாட்டி வைத்தியத்துல சரிபண்ணிடலாம்..
பயப்படத் தேவையே இல்ல...
துளசி,
கண்டங்கத்திரி,
தூதுவளை,
ஆடாதோடை
இதுல 1 கைப்பிடி எடுத்து அதோட,
அதிமதுரம்,
கருஞ்சீரகம்,
ஜடமாஞ்சி,
வில்வவேர் தலா 5 கிராம்,
சின்ன வெங்காயம்-4,
இதையெல்லாம் எடுத்து ஒண்ணா சேத்து கஷாயம் செஞ்சு சாப்பிட்டா..
எல்லாம் சரியாப்போகும்..
*ஆரோக்ய வாழ்வுக்கு பாரம்பரிய மருத்துவ முறை அவசியம் என்பதை அனைவருக்கும் பகிர்வோம்.*

*மூங்கில் அரிசி.. மூக்கை துளைக்கும் வாசனை! கருவுறுதலை மேம்படுத்துமே! சத்தான மூங்கில் அரிசியின் பயன்*
_மூங்கில் அரிசியை போன்ற சிறந்த சத்துக்கள் நிறைந்த அரிசியை காண முடியாது.. பழங்குடி மக்களின் மிக மிக முக்கிய உணவாக கருதப்படும் இந்த மூங்கில் அரிசி தரும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?_
_மூங்கில் மரத்திலிருந்து பெறப்படுகிறது மூங்கில் அரிசி.. பச்சை கலரில் இருந்தாலும் கமகமவென வாசனை நிறைந்ததாக இருக்கும்.. வாசனையாக இருக்கும். அதேநேரத்தில் இனிப்பாகவும் இனிக்கும். அதாவது கோதுமையின் ருசி போலவே இருக்கும். இந்த பச்சை கலர் விதையைதான், உலர்த்தி அரிசியாக பயன்படுத்துகிறார்கள்... எப்போதுமே இந்த அரிசிக்கு மவுசு சற்று அதிகமாகவே உள்ளது._
_கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் போன்ற சத்துக்கள் நிறைந்தது மூங்கில் அரிசி.. ஆனால் சிறிதும் கொழுப்பு இருக்காது.. ஒரு கப் மூங்கில் அரிசியில் 160 கலோரிகள் உள்ளதால், உடல் எடை குறைப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியை தாராளமாக பயன்படுத்தலாம். உடலின் சர்க்கரை அளவை இந்த உணவு கட்டுக்குள் வைக்கிறது.._
மூங்கில் அரிசி: உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களும், சுவாச பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களும் இந்த அரிசியை பயன்படுத்தலாம்.. மூங்கில் அரிசியில் வைட்டமின் B6 நிரம்பியிருப்பதால், எலும்புகள், பற்களுக்கு உறுதி தருகிறது.. இந்த அரிசியை சாப்பிட்டு வருபவர்களுக்கு பற்களில் சிதைவு, பற்களில் துவாரம் போன்ற பிரச்சனைகள் வராது.
கருவுறுதலை மேம்படுத்துவதற்கும், பெண்களின் கருப்பைக்கு வலு தருவதற்கும் இந்த மூங்கில் அரிசி பெரிதும் உதவுகிறது.. மாதவிலக்கு கோளாறுகளையும், கர்ப்பிணிகளுக்கு பிரசவ காலத்தில் ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை களையக்கூடியது இந்த அரிசி.. அத்துடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க செய்கிறது. ஆண்களுக்கு தாது விருத்தியடைய செய்யவும் இந்த அரிசி பயன்படுகிறது.
அதிக சத்துக்கள்: குரங்கு, யானை, காட்டு விலங்குகளுக்கு, மூங்கில் அரிசி என்றால் அதிக விருப்பமாம்.. அதேபோல, மன்னர் காலத்தில், படைவீரர்கள் அதிக சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த அரிசியைதான் பயன்படுத்துவார்களாம்.
சர்க்கரை நோயாளிகள் இந்த அரிசியில் காய்கறி சூப் போல செய்து சாப்பிட்டால், உடலுக்கு நன்மைகள் கூடும். மூங்கில் அரிசியை சுத்தம் செய்து, அரை மணி நேரம் ஊற வைத்து, வழக்கமாக சோறு வடிப்பது போலவே, இதையும் வடித்து எடுத்து கொள்ள வேண்டும். வடித்த கஞ்சியை தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
கஞ்சி: ஒரு வாணலில், வெண்ணெய், பொடியாக நறுக்கிய பூண்டு, கேரட், பீன்ஸ், பட்டாணி, வெங்காயம், உப்பு தூள், மிளகுதூள் சேர்த்து வதக்கிவிட வேண்டும். பிறகு வடித்த கஞ்சியுடன், சிறிது தண்ணீரையும் சேர்த்து கொதிக்கவிட வேண்டும்.
காய்கறி பாதி வெந்ததுமே, வடித்து வைத்த மூங்கில் அரிசியை இதில் கொட்டி, சிறிது நேரம் கொதித்ததும், கொத்தமல்லி தூவி இறக்கிவிடலாம்.. இது சர்க்கரை நோயாளிகளுக்கு பெஸ்ட் கஞ்சியாகும். எனவே மருத்துவரின் ஆலோசனையுடன் இந்த அரிசியை எடுத்து கொள்வது நல்லது.✍🏼🌹

சிறுதானிய_பாரம்பரிய_டிபன்_வகைகள்_Copy_240222_101150_11.pdf
966.7 KB
சிறுதானிய_
பாரம்பரிய_
டிபன்_100 வகைகள்
மின்னூலாக
பாரம்பரிய_
டிபன்_100 வகைகள்
மின்னூலாக
வாதம் ☯ வைத்தியம்
Photo
இது ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது.
ஆம், இந்த பாலில் எக்கசக்க நன்மைகள் நிறைந்துள்ளது.
ரொம்ப சத்தானது.
ஒருமுறை செய்து இந்த பாலை கொடுங்கள், உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதலில் பெரியவர்கள் வரை என அனைவரும் விரும்பி குடிப்பார்கள்.
இந்த பால் குடிப்பதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும்.
சரி வாங்க,
இப்போது இந்த கட்டுரையில், உளுந்தம் பால் செய்வது எப்படி மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
உளுந்தம் பால் செய்ய தேவையான பொருட்கள்:
உளுத்தம் பருப்பு - 1 (பெரிய கிளாஸ்)
தண்ணீர் - 5 கிளாஸ்
ஏலக்காய் தூள் - 1/2 ஸ்பூன்
சுக்குத் தூள் - 1/4 ஸ்பூன்
தேங்காய் - 1 1/2 (துருவியது)
கருப்பட்டி பாகு - சுவைக்கேற்ப
*செய்முறை:*
உளுந்தம் பால் செய்ய முதலில், எடுத்து வைத்த உளுத்தம் பருப்பை தண்ணீரில் நன்கு கழுவி சுமார் 3 மணிநேரம் ஊற வையுங்கள்.
உளுந்து நன்கு ஊறியதும், அதை மீண்டும் ஒருமுறை கழுவி, பின் அதை குக்கரில் போட்டு கொள்ளுங்கள்.
பிறகு இதனுடன் ஏற்கனவே, தண்ணீரை சேர்த்து குக்கரை மூடி, 3 விசில் வையுங்கள்.
குக்கரில் இருந்து விசில் போனதும் குக்கர் மூடியை திறந்து, ஓரளவுக்கு அதை ஆற வையுங்கள்.
இதனை அடுத்து, அதில் இருக்கும் அதிகப்படியான தண்ணீரை தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
பிறகு, உளுத்தம் பருப்பை மிக்ஸி ஜாரில் போட்டு, தனியாக எடுத்து வைத்த தண்ணீரை இதில் உங்களுக்கு தேவையான அளவு சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளுங்கள்.
இப்போது அரைத்த உளுத்தம் பருப்பை ஒரு அகலமான பாத்திரத்தில் மாற்றி, பின் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து கொதிக்க வையுங்கள்.
இதனுடன் நீங்கள் ஏற்கனவே, எடுத்து வைத்துள்ள உளுந்த தண்ணீரையும் சேர்த்து கை விடாமல் தொடர்ந்து கிளறி கொண்டே இருங்கள்.
சிறிது நேரம் கழித்து, மாவு நுரை விட்டு நன்கு கொதிக்க ஆரம்பிக்கும்.
மேலும், மாவு கெட்டியாக இருப்பதை உணர்ந்தால், கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, தொடர்ந்து கிளறி கொண்டே இருங்கள். அடிபிடிக்காத படி பார்த்துக் கொள்ளுங்கள்.
இப்படியாக சுமார், அரை மணிநேரம் அதை நன்கு கொதிக்க வையுங்கள்.
சிறிது நேரம் கழித்து அதிலிருந்து, நுரை அடங்கி, நீர் போன்று காணப்படும்.
இந்த சமயத்தில், இதில் எடுத்து வைத்த ஏலக்காய் தூள், சுக்கு தூள் இரண்டையும் சேர்த்து ஒருமுறை கிளறிவிடுங்கள்.
பிறகு, தயாரித்து வைத்த கருப்பட்டி பாகுவை உங்கள் சுவைக்கேற்ப இதில் சேர்த்து நன்கு கிளறி விடுங்கள்.
சிறிது நேரம் கழித்து, துருவிய தேங்காயையும் இதனுடன் சேர்த்து ஒருமுறை கிளறி விட்டு
இறக்கினால், சத்தான உளுந்தம் பால் ரெடி!!!
*உளுந்தம் பால் நன்மைகள்:*
இந்த பாலை தொடர்ந்து குடித்து வந்தால், எலும்பு தொடர்பான பிரச்சினைகள் நீங்கும்.
அதுமட்டுமின்றி, இன்றைய காலத்து பெண்கள் பலர் கர்ப்ப பை தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.
இந்த பிரச்சினையை தடுக்கும் ஒரு அற்புதமான மருந்து எதுவென்றால்,
*அது இந்த உளுத்தம் பால் தான்.*
🙏🏻

🌴🌴🌴
*தான பலன்கள்...*
👉 அன்ன தானம் - கடன் தொல்லைகள் நீங்கும்
👉 அரிசி தானம் - முன்ஜென்ம பாவங்கள் விலகும்
👉 ஆடைகள் தானம் - சுகபோக வாழ்வு அமையும்
👉 பால் தானம் - துன்பங்கள் விலகும்
👉 நெய் தானம் - பிணிகள் நீங்கும்
👉 தேங்காய் தானம் - எடுத்த காரியங்களில் வெற்றிகள் கிட்டும்
👉 தீப தானம் - முன்னோர்களின் ஆசிகள் கிட்டும்
👉 தேன் தானம் - புத்திர பாக்கியம் கிட்டும்
👉 பூமி தானம் - பிறவா நிலை உண்டாகும்
👉 பழங்கள் தானம் - மன அமைதி உண்டாகும்
👉 வஸ்திர தானம் - ஆயுள் விருத்தி உண்டாகும்
👉 கம்பளி தானம் - வெண்குஸ்ட நோய்களின் அறிகுறிகள் தென்பட்டால் அதிலிருந்து மீண்டு விடலாம்
👉 கோ தானம் - பித்ரு கடன் நீங்கும்
👉 தயிர் தானம் - இந்திரிய விருத்தி உண்டாகும்
👉 நெல்லிக்கனி தானம் - அறிவு மேம்படும்
👉 தங்கம் தானம் - தோஷம் நிவர்த்தியாகும்
👉 வெள்ளி தானம் - கவலைகள் நீங்கும்
👉 கோதுமை தானம் - ரிஷிக்கடன் அகலும்
👉 எண்ணெய் தானம் - ஆரோக்கியம் உண்டாகும்
👉 காலணி தானம் - பெரியோர்களை அவமதித்த பாவம் போக்கும்
👉 மாங்கல்ய சரடு தானம் - தீர்க்க மாங்கல்ய பலன் உண்டாகும்
👉 குடை தானம் - எண்ணிய எதிர்காலம் உண்டாகும்
👉 பாய் தானம் - அமைதியான மரணம் உண்டாகும்
👉 காய்கறிகள் தானம் - குழந்தை ஆரோக்கியம் மேம்படும்
👉 பூ தானம் - விரும்பிய இல்வாழ்க்கை அமையும்
👉 பொன் மாங்கல்ய தானம் - திருமண தடைகள் நீங்கும்
👉 மஞ்சள் தானம் - சுபிட்சம் உண்டாகும்
👉 எள் தானம் - சாந்தி உண்டாகும்
👉 வெல்ல தானம் - வம்ச விருத்தி உண்டாகும்
👉 தண்ணீர் தானம் - மன மகிழ்ச்சி உண்டாகும்
👉 சந்தன தானம் - கீர்த்தி உண்டாகும்
👉 புத்தகம் தானம் - கல்வி ஞானம் உண்டாகும்
💰 நம் சக்திக்கு இயன்ற அளவு தான தர்மங்களை செய்து நாமும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைப்போம்.
💰 உடல் நலிவுற்றோர்கள் மற்றும் இயலாத சூழலில் வாழ்பவர்க்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்து‚ நாம் அவர்களின் இன்பங்களின் மூலம் எங்கும் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளான இறைவனை காண்போம்.
💫🌈🌹🙏

*சூரிய நமஸ்காரம்..!*
வரும் ஜூன் 21 சர்வதேச யோகா தினம்...!
யோகாசனத்தின் ஒரு பகுதியாக அமைவது சூரிய நமஸ்காரம் ஆகும். இதனால் உடல் உள ஆரோக்கியம், சுறுசுறுப்பு மற்றும் யோகநிலையை அடைவதற்குரிய ஏணிப்படிகளில் இதுவுமொன்று.
இதன் விளக்கம்..
சூரிய நமஸ்காரம் :-
(சூரியனுக்குவணக்கம் செலுத்தல்) இது யோகாசனத்தையும் பிராணாயாமம் எனப்படும் மூச்சையும் ஒன்றிணைக்கிறது.
அதாவது உடலை நன்கு வளையக் கூடிய தன்மையடையச் செய்து அதை (சூரியநமஸ்காரத்தை) தொடர்ந்து செய்யப்போகும் ஆசனங்களுக்கும் (ஹடயோகம்) பிராணாயாமப் பயிற்சிகளுக்கும் (சுவாசப்பயிற்சி) தியானத்திற்கும் நம்மைத் தயார்ப்படுத்துகிறது.
இது பொதுவாக சூரிய உதயத்தின்போதே செய்யப்படல் வேண்டும். இதன் மூலம் அதிகநன்மைகளை பெற முடியும். என்றாலும் சூரிய அஸ்தமனத்தின் போதும் இதைச் செய்வதுடன் வயிறு பெறுமையாக இருக்கும் போதும் செய்யலாம்.
குறிப்பு :-
சாப்பிட்டவுடனும், தேநீர் போன்ற பானங்களை அருந்தியவுடனும் இதை செய்வது தவிர்க்கப்படல் வேண்டும்.
செய்முறை :-
சூரிய நமஸ்காரத்தில் பொதுவாக 12 படிமுறைகள் காணப்படுகின்றன.
அவற்றை எவ்வாறு செய்வது மற்றும் அவற்றிற்குரிய பெயர்கள், விளக்கங்கள் என்பவற்றைப் பார்ப்போம்.
படி 1 :- பிறையாசனம்.
கால்களைச் சேர்த்து நேராக நின்று இரு கைகளையும் கூப்பி நெஞ்சுடன் சேர்த்து வைக்கவும். பின் கைகளைத் தலைக்குமேல் உயர்த்தி காதுடன் அணைத்தபடி உடம்பை பின் வளைக்கவும்.
இப்படிச் செய்யும்போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.
படி 2 :- பாதகஸ்தாசனம்...
உடம்பை முன்னுக்கு வளைத்து (கைகளை காதுடன் அணைத்த படி) நெற்றியால் முழங்கைத் தொடவும், கைகள்தரையைத் தொட்டபடி இருக்க வேண்டும்.
இப்படிச் செய்யும்போது மூச்சை வெளி விட்டபடி செய்ய வேண்டும்.
படி 3 :- ஏகபாதாசனம் (வலக்கால் பின்புறம்)
இந்நிலையில் வலக்கால் பின்புறமும் இடக்காலை படத்தினுள்ளவாறு மடித்து முன்புறமும் வைத்து இடது முழங்கால் இடகையில் அக்குருன் கீழ் வைத்திருக்க வேண்டும். இப்படிச் செய்யும்போது மூச்சை உள்ளிளுத்த வண்ணம் செய்யவும் முதுகை வளைத்து தலையை உயர்த்த வேண்டும்.
படி 4 :- அர்த்த கம்சாசனம்..
படத்தில் உள்ளவாறு இருகால்களையும் நீட்டி கால் நுனி விரல்களாலும் உள்ளங்கைகளாலும் தரையைத் தொட்டவாறு நிற்கவும்.
உடம்மை வைக்காமல் நேராக வைத்து தரையிலிருந்து 30 பாகை வரை உடலை சரிவாக வைத்தல் வேண்டும்.
இப்பயிற்சியைச் செய்யும்போது மூச்சை முழுவதுமாக வெளியேற்றவும்.
படி 5 :- (சசாங்காசனம்)..
படத்திலுள்ளவாறு முழங்காலுக்குக் கீழ்ப்பகுதி தரையில் பதித்தவாறு குதிக்கால்கள் புட்டத்தில் முட்டியவாறு கைகளை நீட்டிக் காதுகளுடன் முட்டியவாறு கைகளை நீட்டிக் காதுகளுடன் அணைத்த வண்ணம் நெற்றியால் நிலத்தைத் தொடல் வேண்டும்.
இப்பயிற்சியைச் செய்யும்போது மூச்சை உள்ளிளுக்கவும்.
பின்னர் இந்ந நிலையில் நின்று கொண்டு சுவாசித்தல் வேண்டும்.
படி 6 :- (சாஷ்டாங்காசனம்)
கைகால்களை அசைக்காமல் அப்படியே மார்பை மன் தள்ளிக் கொண்டு இடுப்பை உயர்த்திய வண்ணம் (நிலத்தில் முட்டலாகாது) நாடியால் நிலத்தை தொடல் வேண்டும். மூச்சை வெளியே
விட்டபடி செய்யவும்.
படி 7 :- (புயங்காசனம்)
மூச்சை உள்ளிலுத் தலையை உயர்த்தி முதுகை வளைத்து குழவாக வைத்துத் தலையை உயர்த்தி மேலே பார்க்கவும்.
கைகால்கள் நகரக்கூடாது.
படி 8 :- (அர்தத சிரசாசனம்)
மூச்சை வெளி விட்ட வண்ணம் படத்திலுள்ளவாறு உள்ளங்கைகளும் பாதங்களும் முழவதும் நிலத்தில் முட்டியவாறு. தலையை இரகைகளுக்கிடையில் இருக்கக் கூடியவாறு கீழே தொங்க விடவும்.
இந்நிலையில் உடம்பு நன்றாக வளைக்க வேண்டும்.
படி 9 :- (சசாங்காசனம்)
5வது நிலையில் செய்தது போல செய்யவும்.
படி 10 :- (ஏக பாதாசனம்)
இடக்காலை பின்புறமாக வைத்து 3வது நிலையில்ச் செய்தது போல செய்யவும் அதாவது காலை மாற்றிச் செய்யவும் இதைச் செய்யும்போது மூச்சை உள் இழுக்க வேண்டும்.
படி 11 :- (பாதகஸ்தாசனம்)
மூச்சை வெளி விட்டது வண்ணம் 2வது நிலையில் செய்தது போல செய்யவும்.
படி 12 :- மூச்சை உள் இழுத்து நிமிர்ந்து இருகைகளையும் கூப்பி நெஞ்சின் மீது வைத்து சுவாசிக்கவும்.
சூரிய நமஸ்காரம் செய்வதனால் ஏற்படும் பொதுப்பலன்கள்..
1. சுவாசம், இரத்த ஓட்டம் என்பன சீராக நடைபெறுகிறது.
2. உடலை சுறுசுறுப்பாகவும், நரம்பு மண்டலங்களை விழிப்படைய வைத்து வலிமையையும் ஆரோக்கியத்தையும் தருகின்றது.
3. வயிற்றுப் பகுதியில் காணப்படும் ஊழைச்சதைகள் மற்றும் கொழுப்புகள் கரைக்கப்படுகின்றன. உடற் பருமனைக்
குறைக்கச் செய்கின்றது.
4. இப்பயிற்சி மூலம் பெறும் பலன்கள் கூட யோகம் செய்வதனால் ஏற்படும் பலன்களுக்குச் சமனானதாகும்.
5. இப்பயிற்சியை 1 நிமிடத்திற்கு 4 தடவைகள் செய்யப்படல் வேண்டும்.
குறிப்பு :-
சூரிய நமஸ்க்காரத்தின் ஒவ்வொரு நிலையும் சரியான சுவாசத்தோடு முறைப்படி செய்தல் வேண்டும்.
ஓம் சூர்ய தேவாய நமக..!

*தீமைகளை நீக்கி நல்வாழ்வு அருளும் தெய்வீக தலமரங்கள்*🌹
தினகரன்
1. தாவரம் எனப் பெயர் ஏன்?
மனித உயிர்களுக்கு ஆதாரமாக விளங்குவது காற்று, அந்தக் காற்றை முறையாக சுத்தமாக்கி, மனிதர்களுக்கு சத்துக்கள் நிறைந்த பரிசுத்தமான காற்றாக மாற்றித் தருவதுடன், மழை, மண்வளம் போன்றவற்றிற்கும் ஆதாரமாக விளங்குவது மரங்கள் மட்டுமே, மனித உயிர் மேம்பட்டு வாழ அவை வரம் தருவதால் அதற்கு “தா வரம்” எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு சில மரங்கள் மனித இனத்திற்கு மிகவும் பாதுகாப்பாக இருந்து மனித இனத்தை விருத்தி அடையச் செய்வதால் அதற்கு விருட்சம் எனவும் முன்னோர்கள் அழைத்தனர்.
2. தல மரம் ஏன்?
மரங்கள் (வீடுகட்டுதல்) போன்ற மனித நாகரிகத்திற்கு அதிகமாக தேவைப்பட்டதால், அவைகள் அழிக்கப்பட்ட காலத்தில் அவை அழியாமல் காப்பாற்ற கோயில்களிலும், பூஜையிலும், தாவரங்களையும், விருட்சங்களையும் நமது முன்னோர்கள் புகுத்திவைத்துள்ளனர். எனவே மரங்களை வணங்குவது பகவானை வணங்குவது போலத்தான். அப்படி நினைத்து வணங்க வேண்டும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு மரம் ஒரு செடி உண்டு. அந்தந்த நட்சத்திர நேயர்கள் அந்தந்த மரத்தையும் செடியையும் வளர்ப்பதிலும் வணங்குவதிலும் தங்களுடைய தோஷங்களை நீக்கிக்கொள்ளலாம்.
3. வனம் தரும் வரம்
தரிசனங்களிலேயே மிக உயர்வானது விருட்ச தரிசனம். காலையில் எழுந்தவுடன் மரங்களைப் பாருங்கள். பறவை சப்தங்களைக் கேளுங்கள். மனம் புத்தெழுச்சி கொள்ளும். நாம் சில மனிதர்களைப் பார்த்து, ‘‘ஏன் மரம் போல் நிற்கிறாய்?’’ என்று கேட்கிறோம். அது தவறு. மரத்தை விட மனிதன் அதிகம் பயன் தருபவன் அல்லன். நாம் ஆக்சிஜனைச் சுவாசிக்கிறோம். கார்பன்டை ஆக்சைடு வெளியே விடுகிறோம். ஆனால் மரங்கள் நம் கழிவுகளான கரியமில வாயுவைத்தான் எடுத்துக்கொண்டு நாம் உயிர் வாழ்வதற்குரிய ஆக்சிஜனைத் தருகின்றன.அதனால்தான் கம்பன் மரங்களைக் குறிப்பிடும் போது ‘‘தருவனம்’’ என்றான். காடுகள் இல்லாவிட்டால் வீடுகள் எங்கே? மழை எங்கே? மண் எங்கே? உயிர் எங்கே? பயிர் எங்கே?
4. மரத்தினால் இவ்வளவு பயனா?
பகிர்வு.ஸ்ரீராமஜெயம்
ஒரு மரத்தின் மதிப்பு விலை மதிக்க முடியாதது. ஆனால், அதன் உண்மையான மதிப்பை உணர்ந்துகொள்ளப் பொருளாதார ரீதியில் அதை மதிப்பிட வேண்டியிருக்கிறது. இதை டெல்லி கிரீன்ஸ் அமைப்பு செய் திருக்கிறது. ஒரு வளர்ந்த ஆள் ஒரு நிமிடத்துக்கு 7-8 லிட்டர் காற்றைச் சுவாசிக்கிறார். அதாவது, ஒரு நாளைக்கு 11,000 லிட்டர் காற்றை சுவாசிக்கிறார். இதில் 20 சதவீதம் ஆக்சிஜன். அப்படியென்றால், ஒரு மனிதர் ஒரு நாளைக்கு 550 லிட்டர் ஆக்சிஜனை கிரகித்துக் கொள்கிறார். 2.75 லிட்டர் ஆக்சிஜன் சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.6,500. இதைக் கொண்டு கணக் கிட்டால் ஒரு மனிதன் ஒரு நாளைக்குச் சுவாசிக்கும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ.13 லட்சம். 2 வளர்ந்த மரங்கள், ஒரு நபருக்குத் தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்கின்றன. அந்த வகையில் ஒரு வளர்ந்த மரம் உற்பத்தி செய்யும் ஆக்சிஜனின் அளவு ஆண்டுக்கு ரூ.23 கோடி.
5. மனிதனைவிட மரங்கள் மேலானது
பயனில்லாத மரமோ செடியோ உலகத்தில் இருக்கிறதா? ஏதோ ஒரு வகையில் அது நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் தரும். மனிதன் மரங்களை வளர்க்கவில்லை. ஆனால் மரங்கள் தான் மனிதனை வளர்க்கின்றன. பாதுகாக்கின்றன. உயிர் மூச்சு தருகின்றன. கவியரசு கண்ணதாசன் திருவிளையாடல் படத்தில் ஒரு பாடல் எழுதினார்.
“பார்த்தால் பசுமரம் படுத்துவிட்டால்
நெடுமரம்
சேர்த்தால் விறகுக்கு ஆகுமா, ஞானத்தங்கமே
தீயிலிட்டால் கரியும் மிஞ்சுமா?’’
மரத்தின் கரி அடுப்புக்காகும். மனிதன் சடலமாக எரிந்தால்கூட எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே விருட்சம் மனிதனைவிட உயர்வானது.
6. பச்சை காட்டுதல்
குழந்தை பிறந்தவுடன் பச்சை காட்டுதல் என்றொரு பழக்கம் உண்டு. அது கண் பார்வையின் தெளிவை அதிகரிக்கும். பசுமையான மரங்களைப் பார்க்கும்போது மனம் தெளிவடையும். ஒவ்வொரு காலத்திற்கும் மரங்களின் மாற்றங்களைக் குறித்துத்தான் பருவகாலங்கள் நடக்கின்றன. இது இலையுதிர் காலம், இது வசந்த காலம் என்று சொன்னார்கள். அதை ஒட்டியே பல்வேறு ஆலயங்களில் உற்சவங்களும் நடத்தினார்கள். உதாரணமாக வசந்த காலத்தில் வசந்த உற்சவங்கள் என்று பல ஆல யங்களில் நடைபெறுவதைக் காணலாம். ஒரே ஒரு மரத்தையோ, செடியையோ நம்கைகளால் நாம் நட்டு பராமரித்தால், அது நம்முடைய குடும் பத்தைக் காக்கும். நம்முடைய ஜாதக தோஷங்களைப் போக்கும்.

7. 5000 ஆண்டு பழமையான புளிய மரம்
வழிபடக் கூடிய சில மரங்கள் புனிதமாகப் பார்க்கப்படுவதற்கான காரணம், மிகப் பெரிய துறவிகளுடனான அவைகளின் தொடர்பே. ஆலமரத்தின் கிளைகளில் மார்கண்டேயன் மறைந்து கொண்டதால் இந்த மரம் புனிதமாகக் கருதப்படுகிறது. புத்தரின் பிறப்பு மற்றும் இறப்புடன் சாலா மரம் தொடர்பை கொண்டுள்ளதால் புத்த மதத்தினரால் அது புனிதமான மரமாக கருதப்படுகிறது. திருநெல்வேலி ஆழ்வார் திருநகரியில் பெருமாளைவிட நம்மாழ்வாருக்கு விசேஷம் அதிகம். அவர் யோகத்தில் அமர்ந்த புளியமரம் 5000 ஆண்டுகளாக இன்னும் இருக்கிறது.
அந்த புளிய மரத்தைத் தரிசிக்காமல் வரவே கூடாது. அந்த புளியமரம்தான் ஆழ்வாரின் அருளைப் பெற்றுத் தருகிறது. அந்த ஆழ்வாரின் அருள்தான் பெருமாளின் பூரணமான அனுக்கிரகத்தைப் பெற்றுத் தருகிறது. புளிய மரத்தில் செய்யும் விரதத்தை திந்தீரணி கௌரி விரதம் என்று சொல்வார்கள். திந்தீரணி என்றால் புளியைக் குறிக்கும். இந்த விரதத்தால் சனி தோஷம் போகும். கோயில் என்று அழைக்கப்படும் சிதம்பரம் நடராஜப் பெருமாள் ஆலய தலமரமாக விளங்குவது தில்லை மரமாகும். தில்லை மரங்கள் நிறைந்ததாலேயே தில்லைவனம் என்ற பெயர் பெற்ற ஊர் இது.
8. பகவான் வனங்களின் தலைவன்
விஷ்ணுசஹஸ்ரநாமத்தில் பகவான் திருநாமங்கள் அடுக்கடுக்காக வருகிறது. அதில் ஒன்று “அமரப் பிரபுவே நம:’’ என்பது. அதாவது அவன் அமரர்களுக்குத் தலைவன். ஒருவர் சமஸ்கிருதம் தெரியாமல் பகவானுடைய நாமங்களைச் சொல்வதற்கு விரும்பினார். கோயில் வாசலில் அமர்ந்து அவரால் முடிந்த அளவு படித்தார். அவர் பதம் பிரிக்க முடியாமல் மரப் பிரபுவே என்று வாசித்தார்.
சமஸ்கிருத பண்டிதர் ஒருவர் இதைக் கேட்டு, ‘‘ஏன் மொழி அறிவு இல்லாமல் படிக்கிறாய்? பகவான் என்ன மரமா? அவன் மரப்பிரபுவா? அவன் அமரப் பிரபு அல்லவா?’’ என்று அவரைக் கடுமையாக கண்டித்தார். ‘‘ஐயோ அறிவின் குறைபாட்டால் இப்படிச் சொல்லும்படி ஆகிவிட்டதே! பகவானிடம் அபச்சாரப்பட்டு விட்டேனே’’ என்று துடித்தார். அன்று இரவு பகவான் பண்டிதர் கனவில் போய் பண்டிதரிடம் சொன்னார். ‘‘அவன் அன்பினால் சொல்லுகின்றான். மரப்பிரபுவே என்று என்னைச் சொன்னதிலே என்ன குறை? நான் வனமாக இல்லையா? அஸ்வ நாரணன் என்று சொல்வதில்லையா? என்று கேட்டார்.
9. தலவிருட்ச சிறப்பு
ஒவ்வொரு திருக்கோயிலும் தலச் சிறப்பு, தீர்த்தச் சிறப்பு மூர்த்திச் சிறப்பு என்று இருப்பதைப் போலவே தலவிருட்சச் சிறப்பும் உள்ளது. பகவான் இந்த ஆத்மாக்கள் இளைப்பாறுவதற்கு நிழல் தரும் மரமாக இருக்கின்றான் என்று கீதையிலே வருகின்றது ‘‘தன்னொப்பார் இல்லப்பன் தந்தனன் தனதாள் நிழலே’’ – என்பது திருவாய்மொழி. ராமலிங்க அடிகளார் இறைவனைக் குறித்து பாடுகின்ற பொழுது குளிர் தரும் நிழலே என்று பாடுகின்றார்.
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும் வகை கிடைத்த
குளிர் தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே’’
என்கிற வள்ளலார் பாட்டிலேயே பகவானையே மரங்களாக உருவகித்தார். அதனால்தான் ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சங்கள் சிறப்பாக இருக்கின்றன.
10. மரத்தடியில்தான் தட்சிணாமூர்த்தி
புத்தன் போதிமரத்தடியில்தான் ஞானம் பெற்றார். ஆலமரத்தின் நிழலில்தான் சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக
நால்வர்க்கு உபதேசித்தார்.
“ஓரானீழல் ஒண்கழல் இரண்டும் முப்
பொழுதேத்திய
நால்வர்க் கொளிநெறி காட்டினை”
– என்று திருஞானசம்பந்தர்
திருவாக்காலும்,
“ஆலமர் நீழலற நால்வர்க் கன்றுரைத்த
ஆலமர் கண்டத்தரன்”
ஆலநிழற்கீ ழறநெறியை நால்வர்க்கு
மேலையுகத் துரைத்தான் மெய்த்
தவத்தோன்’’
– என்ற நாலாயிரப்பிரபந்தம் இயற்பா திருவந்தாதி அடிகளாலும் இனிது விளங்கும். பகவானை “வாசுதேவ தருச்சாயா” என்கிறது வேதம்.
வாசு தேவனின் நிழலில் உயிர்கள் களைப்பு நீங்கி மகிழ்ச்சி அடைகிறது என்கிறது சாஸ்திரம்.
11. நட்சத்திர மரங்கள்
மரங்கள் நம் உலகியல் வாழ்க்கையோடும், உயிரியல் (ஆன்மிகம்) வாழ்க்கையோடும் பின்னிக் கிடக்கின்றன. ஒவ்வொரு ராசிக்கும் நட்சத்திரத்திற்கும் மரங்கள் உண்டு. சில ஆலயங்களில் நட்சத்திர மரங்களைக் காணலாம். ஒரு குழந்தை பிறந்தால் ஒரு மரம் நட வேண்டும். சந்ததி விருத்தி போலவே விருட்சவிருத்தியும் நடைபெற வேண்டும். இனி நட்சத்திர மரங்கள்
குறித்துக் காண்போம்.
அஸ்வினி – ஈட்டிமரம்,
பரணி – நெல்லிமரம்,
கார்த்திகை – அத்திமரம்,
ரோகிணி – நாவல்மரம்,
மிருகசீரிடம் – கருங்காலிமரம்,
திருவாதிரை – செங்கருங்காலிமரம்,
புனர்பூசம் – மூங்கில்மரம்,
பூசம் – அரசமரம்,
12. ஜெகம் ஆளும் மகமும், ஆலமரமும்
ஆயில்யம் – புன்னைமரம்,
மகம் – ஆலமரம்,
பூரம் – பலாமரம்,
உத்திரம் – அலரிமரம்,
அஸ்தம் – அத்திமரம்,
சித்திரை – வில்வமரம்,
சுவாதி – மருதமரம்,
விசாகம் – விலாமரம்,
அனுஷம் – மகிழமரம்,
கேட்டை – பராய்மரம்,
மூலம் – மராமரம்,
பூராடம் – வஞ்சிமரம்,
உத்திராடம் – பலாமரம்,
திருவோணம் – எருக்கமரம்,
அவிட்டம் – வன்னிமரம்,
சதயம் – கடம்புமரம்,
பூரட்டாதி – தேமமரம்,
உத்திரட்டாதி – வேம்புமரம்,
ரேவதி – இலுப்பை மரம்.