வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
ஆன்மீக அன்பர்களுக்கு இன்று ஒரு சிறிய தகவல்.

*புத்தர் பெருமான் தரும் அற்புதமான சிந்தனை*
#கர்மவினை என்றால் என்ன?
கர்மவினை ஓர் சங்கிலித் தொடர்.

புத்தர் ஞானமடைந்த பின், அவர்
உறவினர் தேவதத்தன் அவருக்கு விஷமிட முயற்சி செய்தான்.
அவரைக் கொல்லப் பல முறைகளைக் கையாண்டான்.

ஆனால், எல்லா முயற்சிகளிலும் தோல்வி அடைந்தான்.

ஒருமுறை, ஒரு மதம் பிடித்த யானையை புத்தரைக் கொல்ல ஏவி விட்டான்.

ஆனால், அது
புத்தர் அருகே வந்ததும் அமைதியாகி,
கண்களை மூடிக் கொண்டது.

சிலர் ஆச்சரியத்துடன் புத்தரைக் கேட்டார்கள்,
''தேவதத்தன் சிறு வயதிலிருந்தே உங்களுக்குப் பல வகையிலும் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறான்.

ஆனால், நீங்கள்
அவனை ஒன்றும் செய்வதில்லை ஏன்?
அவன் ஏன் இம்மாதிரி செய்கிறான்?'

'புத்தர் சொன்னார்,
''என்னுடைய கடந்த காலச் செயல்களால் தான் இவை எல்லாம் நடக்கின்றன.

கடந்த காலத்தில் நான் ஏதாவது வகையில் அவனைத் தொந்தரவு படுத்தியிருப்பேன்.
அந்த சங்கிலித் தொடரின் பிரதிபலிப்பாக அவன் இப்படி செய்து கொண்டிருக்கிறான்.

இது அவனுடைய செயல் அல்ல.
அதேபோல் கடந்த காலத்தில் இந்த யானைக்கு நான் ஏதேனும் உதவி செய்திருப்பேன்.
அப்படியில்லை என்றால்
அது எப்படி இவ்வாறு சாந்தமாக என் அருகில் நிற்கும்?

இப்போது நான் தேவதத்தன் செயல்களுக்கு சாட்சியாக இருக்க வேண்டும்.
அப்படி இல்லாமல் நான் பதிலுக்கு ஏதேனும் செய்தால்
மீண்டும் ஒரு சங்கிலி உருவாகி விடும்.

என் கடந்த காலச் செயல்களுக்கு இப்போது தேவதத்தன் செய்யும் செயல்களோடு தேவதத்தனுடைய விசயங்கள் முடிந்து போகட்டும்.

நான் இனி ஒரு புதிய
சங்கிலியை,
வினையை,
கர்மத்தை
எதிர்காலத்தில் உருவாக்கப் போவதில்லை.'' என்றார்.

ஆகவே,
அன்பர்களே!
காரணம் இல்லாமல்
காரியம் இல்லை.
நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம்.

// புத்தம் சரணம் கச்சாமி!
தம்மம் சரணம் கச்சாமி!
சங்கம் சரணம் கச்சாமி! //

From...
புத்தத்துறவி முனியாண்டி சுவாமி.
+60102920248
அழிந்து போகும் நிலையிலிருந்த பண்டைத் தமிழ் இலக்கியங்கள் பலவற்றைத் தேடி அச்சிட்டுப் பதிப்பித்தவரும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழுக்குத் தொண்டாற்றியவர்களுள் குறிப்பிடத்தக்கவரும் தமது அச்சுப்பதிப்பிக்கும் பணியினால் தமிழ் இலக்கியத்தின் தொன்மையையும், செழுமையையும் அறியச்செய்தவரும் 90 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அச்சுப்பதித்தது மட்டுமின்றி 3000 க்கும் அதிகமான ஏட்டுச்சுவடிகளையும் கையெழுத்தேடுகளையும் சேகரித்திருந்த #தமிழ்த்தாத்தா என அழைக்கப்படும் உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் நினைவுநாளில் வணங்குகிறேன். உ.வே.சா அவர்களின் சேவைகளை போற்றுவோம்.
Partagé de mes Notes:
*Detox Drink* : வாரத்தில் இரண்டு நாள் மட்டும் இந்த ஜூஸ் போதும்! 70 வயதிலும் 20 போல் சுறுசுறுப்பில் துள்ளலாம்!

வாரத்தில் இரண்டு முறை மட்டும் இந்த ஜூஸை பருகிப்பாருங்கள். உங்கள் உடலில் நடக்கும் மாற்றங்களைக் கண்டு நீங்கள் அதிர்ந்து போவீர்கள். உங்கள் உடலுக்கு இது எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது.

இதை செய்வது எளிது. உடலுக்கு அத்தனை நன்மைகளைக் கொடுக்கக்கூடியது. 70 வயதிலும் 20 வயது போல் உங்கள் உடல் மாறும். ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். உடலில் நீர்ச்சத்துக்கள் குறையும்போதுதான் நோய்கள் உண்டாகும்

சருமம் பொலிவிழக்கும். இளமையிலே முதுமை தோற்றம் ஏற்படும். கடுமையான முடி உதிர்வு பிரச்னைகள் உருவாகும். மலச்சிக்கல் பிரச்னை அதிகமாகும். ரத்தம் சுத்தமாக குறையும்.

ரத்தத்தை சுத்தம் செய்யும். நமது உடலில் புதிய ரத்தம் ஊறத்துவங்கும். ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்கும். 

ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்கும். கல்லீரல், மண்ணீரலில் உள்ள கழிவை வெளியேற்றும். உடலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும். மலச்சிக்கல் பிரச்னைகளையும் சரிசெய்யும்.

இதிற்கு பயன்படுத்தப்படும் பொருட்களில், அதிகளவில் வைட்டமின் ஏ, சி, பி, மெக்னீசியம், பொட்டாசியம் உள்ளிட்ட எண்ணற்ற வைட்டமின்களும், மினரல்களும் உள்ளது. 

இதில் பயன்படுத்தக்கூடிய நெல்லிக்காய் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதுடன் தலைமுடி தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் சரிசெய்யும். இளநரை பிரச்னையை சரிசெய்யும். முதுநரையை தள்ளிப்போடும். இதில் உள்ள வெள்ளரி நமது உடலில் உள்ள நீர்ச்சத்தை அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்

நெல்லிக்காய் – 2

வெள்ளரி – அரை

இஞ்சி – அரை இன்ச் (அல்சர் உள்ளவர்கள் இஞ்சியை தவிர்த்துவிடலாம்)

மல்லித்தழை – சிறிதளவு

கறிவேப்பிலை – சிறிதளவு

புதினா – சிறிதளவு

எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன் (அல்சர் உள்ளவர்கள் குறைந்த அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்)

இதை தொடர்ந்து எடுத்து வரும்போது, கல்லீரலில் உள்ள கழிவுகளை நன்றாக வெளியேற்றும். மண்ணீரலை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும். நாம் அன்றாட உணவில் இதில் சேர்த்துள்ள 3 இலைகளையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

செய்முறை

எலுமிச்சை சாறு தவிர மற்ற பொருட்களை மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்து வடித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதில் எலுமிச்சை சாறு கலந்துவிடவேண்டும். இதை அப்படியேவும் பருகலாம் அல்லது இதில் மிளகுத்தூள், இந்துப்பு சேர்த்தும் பருகலாம்.

இந்த சாறில் மிளகை சேர்த்து சாப்பிடும்போது இதன் மருத்துவ பலன்கள் பன்மடங்கு அதிகரிக்கும். மிளகு உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இளநரையும் மறையும். எனவே வாரத்தில் ஒரு நாள் உணவில் மிளகை இதுபோல் பொடி செய்து சேர்த்துக்கொள்ள வேண்டும்.

காலையில் வெறும் வயிற்றில் இதை பருகவேண்டும். வாரத்தில் இரண்டு முறை குடித்தால் போதும். சருமம் பளபளப்பாகும். ரத்தம் சுத்திகரிப்பாகும். உடல் சுறுசுறுப்பாகும். கல்லீரல்லில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். நீர்ச்சத்து கிடைக்கும். உடல் எடை குறைக்க விரும்புபவர்களுக்கு நல்ல பலன் தரும். உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து வெளியேற்றும்.
#**Mhd*நாட்டு மருத்துவ குறிப்பு (Remède naturelle)
Media is too big
VIEW IN TELEGRAM
Aranpani
சிதைந்த
சிவாலயங்கள் திருப்பணி மீட்புகுழு

Applink :
https://play.google.com/store/apps/details?id=org.aranpani.aranpani

உங்களது ஒவ்வொரு
₹100 ரூபாயும்
💯திருப்பணிக்கே
அர்பணிக்கப்படுகிறது.
🙏🌞🙏
தாராளமாக
கொடையளியுங்கள்.
🙏🙏🌷🙏🙏
இன்று அமாவாசை

முன்னோர்களின் ஆசியை பெற அமாவாசை வழிபாடு.

இந்த நாளில் விரதமிருந்து முன்னோர்களையும், சூரிய பகவானையும் வணங்கினால் நற்பலன்களை பெற்றிடலாம்.

திதி, தர்ப்பணம் போன்றவற்றை தர இயலாதவர்கள் அமாவாசை நாளில் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைப்பதால் முன்னோர்களுக்கு திதி அளித்த பலன் உண்டாகும்.

முன்னோர்களுக்கு எள்ளும், தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் செய்யுங்கள்.

வீட்டில் உள்ள முன்னோர்களின் படங்களுக்கு, பூக்களால் அலங்கரித்து, தீப தூப ஆராதனைகள் செய்யுங்கள். சந்தனம், குங்குமம் இடுங்கள்.

முன்னோர்களை நினைத்து, தினமும் காகத்திற்கு உணவிடுவது நம் குலத்தையும், வம்சத்தையும் வாழ செய்யும்.

அமாவாசை அன்று வீட்டு வாசலில் கோலம் போடுதல், பூஜை செய்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அமாவாசை நாளில், முன்னோர்களை நினைத்து செய்கிற காரியங்கள் அனைத்துமே, அவர்களை போய் சேரும் என்று நம்பப்படுகிறது. ஆகவே, அமாவாசையன்று, முன்னோர்களை நினைத்து அன்னதானம் செய்து ஆசியை பெறுங்கள்.

குலதெய்வ வழிபாடு அவசியம் :

இந்த நாளில் குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபட்டு வர நன்மைகள் நடைபெறும். எதிர்மறை எண்ணங்களை போக்கி மனதில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும்.

காகத்திற்கு உணவிடுங்கள் :

காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், பிதுர் எனப்படும் முன்னோர் வழிபாட்டிலும் காகத்திற்கு முக்கியத்துவம் உண்டு. காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்வதுண்டு. காகத்திற்கு சாதம் வைத்தால் எமலோகத்தில் வாழும் நம் முன்னோர் அமைதி பெற்று நமக்கு ஆசியளிப்பார் என்பது நம்பிக்கை.

தான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக... என்று பிற காக்கைகளையும் கரைந்து அழைத்த பின்னரே, காகம் உணவு உண்ணும். அப்படிப்பட்ட உயர்ந்த ஜீவனான காகத்திற்கு உணவிடுவதன் மூலம் பிதுர்களின் ஆசியைப் பெற முடியும்.

முன்னோர்களுக்கு நாம் செய்யும் திதி பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் வழங்குபவர் சூரியன். அந்த தேவதைகளே மறைந்த நம் முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன. அதனாலேயே சூரியனைப் பிதுர்காரகன் என்கிறோம். அமாவாசை நாட்களில் தீர்த்தங்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு அர்க்கியம் செய்வது (இரு கைகளாலும் நீர் விடுவது) மிகுந்த நன்மை தரும்.

சமுத்திரத்தில் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்று கொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளைப் பூரணமாக பெறமுடியும்.

பலன்கள் :

பித்ரு சாபம் மற்றும் குலதெய்வ சாபங்களால் உங்களுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும்.

திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடைபெறுவதில் நீடித்த தடை, தாமதங்கள் நீங்கும்.

உணவிற்கு கஷ்டப்படும் நிலை என்றென்றும் ஏற்படாமல் தடுக்கும். செல்வ நிலை உயரும்.
*ஓம் சிவாயநம*

☘️☘️☘️☘️☘️☘️☘️
*சித்தர்கள் திருவடி போற்றி போற்றி*

*பிரண்டை தைலம்*
🍂🌿🍂🌿🍂🌿🍂

*அன்பு உறவுகளே நமது பண்டைய தமிழர்கள் பயன்படுத்தி பயனடைந்த‌ மிகவும் சிறப்பு வாய்ந்த மூலிகை பிரண்டை தைலம் ஆகும்*

*பிரண்டைக்கு தமிழில் வஜ்ஜிரவல்லி என்று மற்றொரு பெயரும் வழங்கி வருகிறது உடலை வஜ்ஜிரம் பொல் வைக்க வல்லது என்பதால் இந்த பெயர் விளங்குகிறது*

*பிரண்டை எண்ணை பயன்பாடுகள்*
☸️☸️☸️☸️☸️☸️☸️☸️

*எலும்புகளின் காவலன் பிரண்டை இந்த தைலம் எலும்புகளுக்கு வலு சேர்க்கும் உடைந்த எலும்பை கூட ஓட்டவைக்கும்*

*40 வயதுக்கு மேல் வரும் ஆஸ்டியோ பொரோசிஸ் எலும்பை மென்மை அடைய செய்யும் பிரச்சினைக்கு தீர்வு தருகிறது*

*மூட்டுகளில் வலி இடுப்பு வலிகள் ஜவ்வு விலகல் கழுத்து வலி முதுகு வலி போன்றவைக்கு சிறந்த நிவாரணி ஆகும்*

*ஆயூர் வேதம் சித்த மருத்துவம் போன்றவற்றில் மருத்துவத்தில் பெரிதளவு பயன் படுத்தப்படுகிறது*

*அன்பு உறவுகளே இந்த பிரண்டை தைலத்தை இயற்கையையும் பிரபஞ்ச பேராற்றலை வணங்கி நமது உடலில் எந்த பாகத்தில் தடவ வேண்டுமோ தடவி கல் உப்பு தண்ணீரில் கலந்து ஒத்தடம் கொடுக்க நம் துயர் தீருவது உறுதி*
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*அனைவரின் இல்லத்திலும் இருக்கவேண்டிய இயற்கை அன்னை தந்த மிகவும் சிறந்த வலி நிவாரணி இந்த பிரண்டை தைலம்*
🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

*அன்பு உறவுகள் பிரண்டை தைலத்தை பயன் படுத்தி பயனடைய வேண்டுகிறோம்*

*இயற்கையை நம்புங்கள் அன்பர்களை அவை நமக்காக இறைவனால் படைக்கப்பட்டவை நம்மை கைவிடாது நாம் அதனுடன் பேசினால் மூலிகைகள் நமது துயர் துடைக்கும் அதுவே இறைவனின் சித்தமும்*

*இறைவன் திருவடி போற்றி போற்றி*

*சித்தர்கள் திருவடி போற்றி போற்றி*

*இயற்கையை போற்றுவோம்*

*வாழ்க வளமுடன்*

*அன்புடன்*
*சிவ சண்முக சுவாமிகள் ஆதி சிவன் பவுண்டேஷன் இறைபணி அமைப்பு காஞ்சிபுரம்*

*8838638192*
*வாட்ஸ்அப் மற்றும் கூகுள் பே எண்*
🌿☘️🌿☘️🌿☘️🌿☘️

☘️ஓட்டுனராக பணியாற்றும் உறவுகளுக்கு முதுகில் தடவி கொள்வது மிகவும் சிறப்பு முதுகெலும்பை வலிமையாக்கும்
🍂🌿🍂🌿🍂🌿🍂
*உணவுக்காடு வளர்ப்பு*
&
*மாபெரும் முக்கனி திருவிழா*

*ஈஷா காவேரி கூக்குரல்*

*இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (IIHR)*
பெங்களூரு

*தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NRCB)*
திருச்சி

*தேசிய உணவு தொழில்நுட்ப தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவனம்* (NIFTEM )
தஞ்சாவூர்

இணைந்து நடத்தும்..
மாபெரும் திருவிழா

இடம்: புதுக்கோட்டை
நாள்: 23 ஜூன் 2024 ஞாயிறு

முன்பதிவு அவசியம்,

📝 முன்பதிவு செய்ய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து படிவத்தை பூர்த்தி செய்யவும்.
👇
https://bit.ly/FoodForestandMukkaniFestOrg

அல்லது அழைக்கவும்
☎️ 94425 90081
☎️ 94425 90079

பயிற்சி கட்டணம் ₹200
வாதம் வைத்தியம்
Photo
பணம் இருந்தால்...

நகை வாங்கலாம்,
இடம் வாங்கலாம்,
ஆடம்பர பொருள் வாங்கலாம்.

ஆனால்,

ஆரோக்கியமாக,
ஆனந்தமாக வாழ
*இயற்கை வளத்தை* வாங்க முடியாது.

நல்ல மனமிருந்தால்...

நம் சந்ததியர்க்கு,
இந்த உலகத்திற்கு நாம் விட்டு செல்லும் சரியான சொத்து...

இயற்கையான நீர், பிராணன் நிறைந்த காற்று,
இயற்கையான உணவு,
இயல்பான வெப்பம்,
தூய்மையான மனம்.

இவற்றை உருவாக்குவது
இயற்கை வளங்கள் மட்டுமே!

ஆகவே,
குறைந்த பட்சம்...

*ஆளுக்கொரு மரம் வளர்ப்போம்*👍

ஆரோக்கியமாக,
ஆனந்தமாக வாழ அடிப்படை தேவையான...

*இயற்கை வளத்தை காப்போம்* 🙏

(கோடை முடிந்ததும் மறந்து விட்டால்...

அடுத்தடுத்த வருடங்கள், இதை விட பெரிதாக அவஸ்தை படுவோம் 🙄)
*💫🔳வீட்டில் கற்றாழை வளர்க்கலாமா?*

கற்றாழை ஒரு மருத்துவ தாவரமாகும். இது பல வகையான பிரச்சனைகளுக்கு மருந்தாக செயல்படுகிறது. கற்றாழை செடிக்கு அதிக பராமரிப்பு தேவை இல்லை. நோய் தாக்கும் அபாயம் இல்லை. செடியை வீட்டுக்குள்ளும், வெளியிலும் வளர்ப்பதால் பல நன்மைகள் உள்ளன. கற்றாழையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இது தோல் பராமரிப்பு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. இது இயற்கை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கற்றாழை காற்றை சுத்திகரிக்கும் பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே இதனை வீட்டில் வளர்த்தால் மாசுக்களை உறிஞ்சி சுத்தமான சூழலை உருவாக்குகிறது. மேலும் காற்றின் தரம் மேம்படுவதால், சுவாச நோய்களின் ஆபத்து குறைகிறது.கற்றாழை ஜெல் பல நோய்களுக்கு மருந்தாகவும், சிகிச்சையாகவும் பயன்படுகிறது. கற்றாழை இலைகளை வெட்டி, தோல் நீக்கி அதில் உள்ள ஜெல்லை உண்ணலாம். இதை ஜூஸ் செய்து குடிக்கலாம். இந்த ஜெல்லை சருமத்தில் தடவலாம்.ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கற்றாழை சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கற்றாழை ஜெல் முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு வகையான சரும பிரச்சனைகளை நீக்குகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை குறையும். இதில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் ஈ ஆகியவை சருமம் மற்றும் கூந்தலின் ஆரோக்கியத்திற்கு நல்லது.கற்றாழை செடி மன அழுத்தத்தை போக்குகிறது. மன அழுத்தத்திலிருந்து விரைவாக மீள உதவுகிறது. மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. கற்றாழை செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலை பரப்புகின்றன. ஆன்மிக ரீதியாகவும் மனதை தூய்மைப்படுத்தும் சக்தி இதற்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஏனெனில் அவை பாசிட்டிவ் ஆற்றலுடன் அமைதியை ஊக்குவிக்கின்றன. அதனால் எதிர்மறையான விஷயங்களில் மனம் செல்லாது.