வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
வாதம் வைத்தியம்
Photo
என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி!

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

பிரகதீஸ்வரர்

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

https://t.me/vahaaramaiyam/1740

🙏நன்றிகள்🙏
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
இளமையிலேயே இறைவனைத் தேடு!

முதுமையில் தேட முயற்சித்தால்,
அது "ஆன்மீகம்"
அல்ல மரணபயம்.

கற்றுணை பூட்டியோர் கடலினில் பாய்ச்சினும்; நற்றுணையாவது நமச்சிவாயமே!

திருச்சிற்றம்பலம்!
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
+919003267354
👆🏻தகவல் அறிய
முருகன் ஐயா
*கர்மா என்றால் செயல் அல்லது வினை எனப் பொருள்படும்.*
.
* *நல்வினை மற்றும் தீவினை என்ற இரண்டும் கர்மா என கூறப்படும்*

ஒவ்வொரு செயலுக்கும் எதிர்வினை உண்டு;

ஓர் ஆன்மாவின் கர்மாவே அதை மீண்டுமீண்டும் இந்த பூலோகத்தில் பிறவியெடுக்க வழிச் செய்கின்றது.

பிறவிச் சுழலில் இருந்து விடுபடுதல் வேண்டும் என்கிறது வேதங்களின் சாரமான *பகவத் கீதை*.

இதனால் பிறவிச் சுழல் பற்றிய புரிதல் அவசியமாகிறது.

கர்மாவின் வகைகளைப் பற்றி அறிவோம்.

*சஞ்சித கர்மா*: பல கோடிப் பிறவிகளில் ஒரு ஆன்மா சேர்த்து

வந்துள்ள நல்வினை - தீவினை ஆகிய கர்மங்கள். சுருங்க கூறினால், ஓர் ஆன்மா பல பிறவிகளில் சேர்த்து வைத்துள்ள மொத்த வினைகள்.

*பிராரப்த கர்மா:* இது சஞ்சித கர்மாவின் ஒரு சிறு பகுதியாகும். பிறப்பெடுக்கும் ஒவ்வொரு ஆன்மாவும் தற்போதைய பிறவியில் அனுபவித்துத் தீர்க்கவேண்டிய கர்மாவே பிராரப்த கர்மாவாகும்.

*ஆகாமிய கர்மா:* ஓர் ஆன்மா தற்போதைய பிறவியில் புதியதாக சேர்க்கும் நல்வினை - தீவினை தொகுப்புகள். ஒவ்வொரு பிறவியின் முடிவிலும் ஆகாமிய கர்மங்கள் ஆன்மாவின் சஞ்சித வினைக் குவியலுடன் இணையும். பிறப்பெடுக்கும் ஆன்மாக்கள் செயலின்றி இருத்தல் இயலாது. செயல் புரியும் பொழுது அதன் வெளிப்பாடு நல்வினை - தீவினைகளாக உருவெடுத்துப் பின் ஆகாமிய வினையில் சேர்க்கப்படுகிறது.

நல்வினைகள் - தீவினைகள் ஆகிய இரண்டுமே பிறவியில் ஆழ்த்தவல்லது. முக்தி நிலையான பிறவாமைக்கு இவ்விரு வினைகளும் தடைக் கற்கள். வினைகளின் பயனை அனுபவிக்க பிறப்பெடுத்தே தீர வேண்டும். அது நல்வினைக்கு கிடைக்கும் பலனாகவும் இருக்கலாம், தீவினைக்கு கிடைக்கும் தண்டனையாகவும் இருக்கலாம்.

ஒவ்வொரு ஆன்மாவும் ஏற்று வரும் பிராரப்த கர்மாவை (அதாவது இப்பிறவியில் தீர்த்து முடிக்க வேண்டிய கர்மாக்கள்) பிறவிக் காலத்திற்குள் முழுவதும் தொலைத்து விடுகிறது. எனினும் ஆகாமிய வினைகளும் (அதாவது இப்பிறவியில் ஆன்மாக்களின் நல்வினைகள்-தீவினைகள்) பெரும் அளவு சேர்ந்து முடிவில் சஞ்சித வினையாக மாறுவதால் சஞ்சித வினைக் குவியல் என்றும் தீர்வதில்லை.

வினைகள் முழுவதுமாக அனுபவித்துத் தீர்க்கப்படும் வரை ஆன்மாக்களுக்கு பிறவி தொடர்ந்து வரும். பிறவிக்குக் காரணம் கர்மா. பிறவியால் கர்மங்கள். பிறவிச் சுழல் என்று பகவத் கீதை இதையே குறிக்கிறது.

எண்ணற்ற பிறவிகளுக்குப் பின்னரே ஒரு ஆன்மாவுக்கு மானிடப் பிறவி வாய்க்கிறது என்றும் சாத்திரம் அறிவிக்கிறது. இக்காரணம் பற்றியே 'அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது' என்றாள் தமிழ் மூதாட்டி *ஔவையார்.*

அர்த்தமற்றதாக விளங்கும் இக்கொடிய பிறப்பு - இறப்பு சக்கரத்தில் இருந்து விடுபடும் வழிமுறைகளை தெளிவாக எடுத்து உரைப்பது *பகவத் கீதை.*

(திருவாசகத்தில் சிவ-புராணம் என்ற பகுதியில் *மாணிக்க வாசகர்* அருளிச் செய்துள்ள முக்கியப் பாடல்) "புல்லாகி பூடாகி, புழுவாய், மரமாகி, பல் மிருகமாகி, பறவையாய், பாம்பாகி, கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய், வல் அசுரராகி முனிவராய், தேவராய் செல்லாநின்ற இத்தாவர சங்கமத்துள் எல்லாப்பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்

திருப்புகழ்: "எழுகடல் மணலை அளவிடின் அதிகம் எனது இடர் பிறவி அவதாரம்." கணக்கற்ற பிறவிகளை ஒரு ஆத்மா எடுக்கிறது என்ற கருத்தை *அருணகிரிநாதர்* இப்பாடலில் வலியுறுத்துகிறார்.

*இப்படி என்றுமே தீராத சஞ்சித கர்மாவை எப்படி அழிப்பது?*

மீண்டும் மீண்டும் பிறப்பதில் இருந்து மீண்டு,

இனி
எதனிலும்
பிறவாநிலையை அடைவதற்கு..

சிவயோகத்தின்
இரு கூறான
வாசியும்
மௌனத்தையும்

கைக்கொண்டு
அனுபூதி யடையவதே
உன்னத வழியாகும்.
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur