வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
மிளகு தைலம்
கண் ஒளி பெருக்க தலையில் நீர் கோர்த்து கொண்டு வரும் தலைவலி தலைபாரம் சைனஸ் குணமாக உதவும் வெளிப்புற மாகப் பயன்படுத்த உதவும் அற்புதமான தைலம் இது

மிளகு தைலம் செய்முறை
செக்கு நல்லெண்ணை ...... இருநூற்று .ஐம்பது மில்லி
எடுத்து சிறு தீயில் நன்கு சூடேற்றி கொதி வந்தவுடன்

மிளகு ........ ஐம்பது கிராம்
( ஒன்று இரண்டாக இடித்து எடுக்க வேண்டும் தூள் ஆக தேவை இல்லை )
எடுத்து போட்டு நன்கு கிளறி காய்ச்சி தைலமாகக் காய்ச்ச வேண்டும்

கருமை கலந்த மஞ்சள் நிறத்துடன் தைலப் பதம் வந்தவுடன் இறக்கி ஆற வைத்து கண்ணாடி பாட்டிலில் சேமிக்கவும்

இந்த தைலத்தை காலையில் தலையில் தேய்த்து இருபது நிமிடங்களில் கழித்து குளித்து வர நீர்கோவை தலை பாரம் சைனஸ் ஒற்றைத் தலைவலி தலையில் நீர் கோர்த்து கொள்ளுதல் போன்ற பிரச்சினைகள் தீரும்

இந்த தைலத்தின் சிறப்பே கண் ஒளி பெருக்கி கண் மங்கலைத் தடுக்கும் ஆற்றல்தான்
ஒரு சிலருக்கு வயோதிகம் காரணமாக கண்பார்வை மங்கலாக ஆரம்பிக்கும்
ஒரு சிலருக்கு அதிகமாக கம்ப்யூட்டர் தொலைக்காட்சி பார்ப்பதால் கண்பார்வை ஒளி குன்ற ஆரம்பிக்கும்
வாதம் பக்க வாதம் சம்பந்தமான பிரச்சினை உள்ளவர்களுக்கும் ஒரு கண் நன்றாக தெரியும் ஒரு கண் பார்வை குன்றி இருக்கும்
இந்த பிரச்சினைகள் தீர இந்த தைலம் அற்புதமான குணம் தரும்

இந்த தைலத்தை இன்னொரு முறையிலும் செய்யலாம்
இருநூற்று ஐம்பது மில்லி செக்கு நல்லெண்ணையில் ஐம்பது கிராம் மிளகு தட்டிப் போட்டு வாய் அகன்ற பாத்திரத்தில் எடுத்து பகலில் சூரிய ஒளியில் வைக்க வேண்டும்
இரவில் வீட்டுக்குள் எடுத்து வைத்து விடலாம்
இவ்வாறு தொடர்ந்து இருபத்தி ஒரு நாட்கள் சூரிய ஒளியில் வைத்து சூரிய புடம் இட மிளகு தைலம் கிடைக்கும்
இந்த மாதிரி தயாரித்த மிளகு தைலத்தையும் மருந்தாகப் பயன் படுத்தலாம் .

காணொளிகள் :
https://youtu.be/EWOw6hM3sRo

https://youtu.be/V3kJbEyn2yA

English :
https://youtu.be/-I8brgtVYOQ
https://youtu.be/87Kr99K8n10
*வளமுடன் வாழ்க நலமுடன்🌺*
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo
https://youtu.be/kPB1JFJXAxs

தியானம்
/தவம்
பற்றிய
தெளிவான
அறிமுக காணொளி
👌🏻🌞👍
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo from Raajan @ Singapore/Karur
# Black Rice Benefits

கருப்புக்கவுனி
எனும்
கருங்குறுவை
அரிசியின் நன்மைகள் .

நமது நாட்டின் மன்னர்கள் ஆட்சியில் அரசர்கள் மற்றும் அரசிகள் சாப்பிடும் அரிசி என்று பெயர் பெற்ற கருப்பு அரிசி எனப்படும் கவுனி அரிசி பயன்பற்றி நமக்கு தெரியுமா? ஆனால் சீனா வில் உள்ள அனைத்து மக்களுக்கும் இந்த அரிசியின் மகத்துவம் பற்றி தெரிந்ததனால் உலகிலேயே சீனாவில்தான் அதிக அளவில் இந்த அரிசியை பயிரிட்டு வருகின்றனர்.

பண்டைய காலத்தில் சீனாவில் இந்த அரிசியை அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும் என்று சட்டமே இருந்ததாம். வாரத்தில் 2 முறை இந்த கவுணி அரிசியை சமைத்து சாப்பிட்டாலே போதும். இதனால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் அபரிவிதம்.

கவுனி அரிசியின் பயன்கள் புதிதாக திருமணம் ஆன ஆண்கள் இந்த கவுனி அரிசியை சாப்பிட்டால் நல்ல உடல் பலம் பெறலாம். இந்த அரிசியில் வடித்த சோற்று கஞ்சியை குடித்து வந்தால் குதிகால் வலி நீங்கும். இந்த கவுனி அரிசி -யில் உள்ள ஆன்தோசயானின் என்ற நிறமி நமது இதயம், மூளை, மற்றும் இரத்த குழாய் செயல்பாடுகளை புத்துணர்ச்சியாய் வைக்க உதவுகிறது. மேலும் கவுனி அரிசி -யில் வைட்டமின் இ உள்ளதால் தோல் மற்றும் பார்வை சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். கவுனி அரிசியில் ஆன்டிஆக்சிடன்ட் அதிகளவில் உள்ளது.

இதனால் சர்க்கரை நோய், புற்று நோய், இதய நோய்கள், உடல் எடை அதிகரிப்பு, கெட்ட கொழுப்பு போன்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போகும். அதிக நார்ச்சத்து உள்ளதால் செரிமான பிரச்சினை மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களும் குணமாகும்.

மேலும் இரும்புச்சத்தும் இருப்பதால் நரம்புகளுக்கும் வலுவை கொடுக்கிறது. இந்த கவுனி அரிசி -யில் செய்த இனிப்பு பொங்கல் அவ்வளவு சுவையாக இருக்கும். செட்டிநாடு சமையல் விருந்துகளில் முதலிடத்தில் இந்த கவுனி அரிசி பொங்கல் இருக்கும்.

குறிப்பு: இந்த அரிசி வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். எனவே இதை சமைப்பதற்கு முன்னால் குறைந்தது 2 மணி நேரமாவது ஊற வைத்து கொள்ளுங்கள். இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தது என்று நீங்கள் நினைத்தால் உங்கள் நட்புகளுக்கும் உறவுகளுக்கும் பயன்பட இந்த பதிவை கீழே உள்ள சமூக வலை தளங்களில் ஷேர் செய்யுங்கள்.