வாதம் வைத்தியம்
2.71K subscribers
1.45K photos
201 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Audio
Audio from Raajan @ Singapore/Karur
Audio
Audio from Raajan @ Singapore/Karur
🙏🌞👁
சித்தவித்தை /
வாசியோகம் சார்ந்த
கேள்வியும் ⁉️ பதிலும் : 🗣️
#30 A,B,C
🗣https://t.me/truthsofsivayoga/5787

#30 A:-
குண்டலினி யோகத்தை
வாசி யோகம் உள்ளடக்கிய
மேலான ஒன்றா!?
அப்படியாயின் சகஸ்ரார
தலத்தின் முக்கியம் என்ன!?

#30 B:-
குண்டலினி யோக
புருவ மையமும்..,
சித்தவித்தையின்..
புருவமத்தி (நிஷ்டை) யும்
சகஸ்ராரத்தின் ஒளிநிலை /
அமுத நிலை அனுபவம் தானா !?
அல்லது
சிவயோகத்தின்
புருவமத்தி/சகஸ்ரார நிலை
வேறொன்றா !?

#30 C:-
யோகம் ஞானம் என்ற
சுயமான பாதையே..
வேண்டாம்
என்றிருப்பதும்!
&
பூஜை-வழிபாடு,
ஆலயம்-பஜனை/ஓதுதல்
என மனம் விரும்பும் ஒன்றை செய்வதே போதும் என்றிருப்பதும்!
சரி தானா!?

● Questioners :
Mixed Persons (Malaysia & India)
👆
இதற்கான 🗣️
சிறு பதிலளிப்பு
பிரம்மஶ்ரீ.
◆கருவூரானின்◆
குரலொலியாக.
👇 இங்கே.
👁️🌞👁️
முன் #29 A,B,C
கேள்விகளும் - பதில்களும்..👇🗣️
https://t.me/truthsofsivayoga/5722
🗣
#28 A,B,C,D
https://t.me/truthsofsivayoga/5602
👁
My Youtube Link:
https://youtu.be/68tqON8IEG8
🌽🐚📣என்றும் இளமையோடு வாழ திருமூலர் கூறும் எளிய வழி! 🎈🐚🔔

நமது உடலில் நோய் தோன்றக் காரணம் என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர் ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல் அல்லது குறைவதால் தான். இதனாலேயே நோய் தோன்றுகிறது.

உஷ்ணத்தால் பித்த நோய்களும், காற்றினால் வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய திருமூலர் சித்தர் எளிய வழியை கூறுகிறார்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

பிரகதீஸ்வரர்

கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு.

தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி மேலானது என்று கருதுகின்றனர் சித்தர்கள்.

கடுக்காய் வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும்.

நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும்.

எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும்.

நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு.

துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும்.

ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

பின் எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?

அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச் சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத் தேவையான துவர்ப்பைத் தேவையான அளவில் பெற்று வரலாம்.

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

கடுக்காயை வாங்கி உள்ளே இருக்கும் பருப்பை எடுத்து விட்டு, நன்கு தூளாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கையைப் பெறலாம்.

கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்:

கண் பார்வைக் கோளாறுகள்,
காது கேளாமை,
சுவையின்மை,
பித்த நோய்கள்,
வாய்ப்புண்,
நாக்குப்புண்,
மூக்குப்புண்,
தொண்டைப்புண்,
இரைப்பைப்புண்,
குடற்புண்,
ஆசனப்புண்,
அக்கி, தேமல், படை,
தோல் நோய்கள்,
உடல் உஷ்ணம்,
வெள்ளைப்படுதல்,
மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்,
மூத்திர எரிச்சல், கல்லடைப்பு,
சதையடைப்பு, நீரடைப்பு,
பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி, பௌத்திரக் கட்டி,
சர்க்கரை நோய், இதய நோய்,
மூட்டு வலி, உடல் பலவீனம்,
உடல் பருமன், ரத்தக் கோளாறுகள்,
ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

இதை பற்றி சித்தர் கூறும் பாடல்...

"காலை இஞ்சி
கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய்
மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.-"

காலை வெறும் வயிற்றில் இஞ்சி-

நண்பகலில் சுக்கு-

இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.

எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வர நோய்கள் நீங்கி இளமையோடு வாழலாம்.

கடுக்காய் வீடுகளில் கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும்.

"ஆரோக்ய வாழ்வுக்கு நாட்டு வைத்தியம் அவசியம்"

*"ஆரோக்ய* *பாரதத்தை* *உருவாக்குவோம்"* ✍🏼🌹
https://b.sharechat.com/NiRt85iZFeb?referrer=whatsappShare

ஷேர்சாட் - 100% தமிழ் ஆப் டவுன்லோடு செய்யுங்கள். 👇👇👇
👉 https://b.sharechat.com/qb3rvzIfBT
யோகியர்க்கான..
ஒரு மூலிகை தேநீர்

அனுபவமுறை பற்றிய
குரலொவி விளக்கம் :
https://t.me/truthsofsivayoga/5836

==^==Option 1:
தினம் இருமுறை:
1. சுக்கு (+10 சூரணங்கள்)

2. பனைவெல்லம்/நாட்டு சர்க்கரை/பனங்கற்கண்டு
3. சுத்தமான தேன்/ஏலக்காய்

4. பீங்கான் டீகப்

==^==Option 2:
வாரம் ஒரு முறை:
5. பருத்தி பால்/தேநீர்

==^==Option 3:
வாரம் இரு முறை:
6. திரிகடுக சூரண தேநீர்

நன்றிகள்🙏◆கருவூரான்◆
www.t.me/truthsofsivayoga
Photo from Raajan @ Singapore/Karur
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
Photo
*இனிப்பிறப்பது இல்லையே..!*

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை இல்லை இல்லை இல்லையே!

சித்தர் சிவவாக்கியார் இதில் மறுபிறவி இல்லை என்றதானே பாடுகிறார் ?

அந்த உயிர் மீண்டும் அதே உடம்பில் புகாது. செத்தவன் பிழைக்க மாட்டான் என்றுதான் சொன்னார்.

வீணே அழுது, புலம்பாதே. நீ பிழைக்க ஆக வேண்டிய காரியங்களைப் பார் அவ்வளவுதான். மீண்டும் பிறக்க மாட்டான் என்று சொல்லவில்லை. 'பிறக்கமாட்டான்' என்று பின்னாளில் மாற்றப்பட்டு விட்டது.

இந்த உடம்பு,
அனுபவ அறிவு, ஆற்றல் , இளமை -மனத்திடம் ஆரோக்கியம்

இருக்கும் பொழுதே வீடுபேற்றைத் தேடிக் கொள்.

இல்லையெனில் ''#திரும்பவும்_முதல்லயிருந்தா'' என்று வடிவேலு கதையாகி விடும். இதைத்தான் சித்தர்களும், சிவவாக்கியரும் வலியுறுத்துகிறார்கள்.

அதே சிவவாக்கியர்தான் சொல்லுகிறார் ....

'' நல்ல வாசலைத் *திறந்து ஞானவாசல்* ஊடுபோய்
*எல்லைவாசல் கண்டவர் இனிப்பிறப்பது இல்லை* யே''

சொல்லுகிறாரா இல்லையா ? அப்படியானால்

*நல்லவாசலைத் திறந்து, ஞான வாசல் ஊடு போய் எல்லை வாசலைக் காணாதவர்கள் மீண்டும் பிறப்பார்கள்*

என்பதுதானே *மெய்பொருள்* !!? மேலும் அவர் சொல்கிறார் ......

''இல்லைஅல்ல ஒன்றுமல்ல இரண்டும் *ஒன்றி நின்றதை*
எல்லை *கண்* டு கொண்டபேர் *இனிப்பிறப்பது இல்லையே* ''

''ஆகலும் அழிதலும் அதன் *கண்* ணேயம் ஆனபின்
*சாகலும் பிறத்தலும் இல்லை இல்லை இல்லையே* ''

'' *மனத்தகத்து அழுக்கறாத* மவுனஞான யோகிகள்;
வனத்தகத்து இருக்கினும் *மனத்தகத்து அழுக்கறார்* ;

மனத்தகத்து அழுக்கறுத்த
*மவுன ஞான யோகிகள்* பிணத்தடத்து இருக்கினும்
*பிறப்பறுத்து இருப்பரே* ''

''அருக்கனோடு சோமனும் அதுக்கும் அப்புறத்திலே
நெருக்கிஏறு தாரகை நெருங்கிநின்ற நேர்மையை
உருக்கி *ஓர் எழுத்துமே- ஒப்பிலாத வெளியிலே*
இருக்கவல்ல பேரலோ *இனிப்பிறப்பது இல்லையே* .''

''எய்துநின்னை *அன்பினால் இறைஞ்சி ஏத்த* வல்லீரேல்
எய்தும் உண்மைதன்னிலே *இறப்பிறப்பு அகற்றிடும்* ''

இதுவும் தொடர்ந்து அவர் கூறியதுதான். இன்னும் பல உதாரணங்கள் உள்ளன.

எனவே *வார்த்தைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்காமல்* உட்கருத்து என்ன ? நோக்கம் என்ன ?

என்பதை உணரத் தலைப்பட வேண்டும். ஐயன் வள்ளுவர் உலகப் பொது மறையாம் திருக்குறளில் மிகத் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்.

'' *உறங்குவது போலும் மரணம், உறங்கி விழிப்பது போலும் ஜனனம்* .'' என்று.

ஓம் நமச்சிவாய..!
*இறவாது பிறவாதிருக்கும்..*
"நவகோடி சித்த-ரிஷி- முனி-கணங்களின் *திருவடிகளே சரணம்* "

*"ஆன்ம ஞானத்தை அடைய சித்தர்களின் யோக அறிவியலும் ஞானதெளிவும் அவசியம் வழிகாட்டும் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி சித்தமார்க்கத்தின்அருமையை உணரசெய்குவோம்"*
Photo from Raajan @ Singapore/Karur
உடலுக்கு
உறுதியையும்
வன்மையையும்
உடல் உபாதைகளையும்
நீக்கி
ஆரோக்கியத்தை
நிலைப்படுத்தவல்ல..

*பஞ்ச கல்ப சூரண குளியல் முறை*

சூரண பொடியை
செய்து கொண்டு,

குளியல்
எடுக்கும் முறை பற்றிய *காணொளிகள்* 👇👇👇
பகுதி 1=
https://youtu.be/58nEy4kOPRw

பகுதி 2=
https://youtu.be/LFbcBZlYaHA

பகுதி 3=
https://youtu.be/KVldCwphKIA
*கேள்வி* : அமாவாசை நாட்களில் கண் தெரிய உதவும் மற்றும் தாெலை தூரத்தில் இருப்பவற்றை அறிய உதவும் மூலிகைகள் குறித்து :*🙏

*அகத்திய மாமுனிவரின் வாக்கு :*

*நீ கூறிய அனைத்து மூலிகைகளிலும் சதுரகிரி, காெல்லிகிரி மற்றும் பர்வதமலையிலும் இருக்கிறதப்பா.* ஆனால் அது யாருக்கு கிட்ட வேண்டுமாே, அவனுக்கு தான் அது கிட்டும். *இந்த மூலிகை கிடைக்க வேண்டிய வினைப்பயன் இருக்கின்ற மனிதனுக்கு உண்மையில் இந்த மூலிகை குறித்த ஆர்வம் இராது.*

🙏 *-சுபம்-* 🙏
Photo from Raajan @ Singapore/Karur
#கண்டங்கத்திரி.

கண்டங்கத்திரியில் இத்தனை மருத்துவ நன்மைகளா ?...

கண்டங்கத்திரி என்பது ஒரு செடி வகை. ஈரவகை தரைகளில் நன்கு வளரும் குணமுடையவை.கண்டங்கத்திரியின் மேற்பகுதி முழுவதும் முட்கள் இருக்கும்.

இந்த செடி வகையில் நீல நிற மலர்கள் பூத்திருக்கும் இந்த செடியின் இலைகள், தண்டு, மலர், கனி, விதை ஆகிய முழுத்தாவரமும் மருத்துவ குணம் கொண்டவை.

ஆஸ்துமாவை ஓட விரட்டும் கண்டங்கத்திரி வேர் :

கண்டங்கத்திரி செடியின் வேர் ஆஸ்துமாவை கட்டுப் படுத்திடும் சக்தி கொண்டது.
கண்டங்கத்திரி விதைகளை எரித்து அதில் வரும் புகையை சுவாசிக்க ஆஸ்துமாவிலிருந்து விடுதலை பெறலாம்.

இருமலை போக்கிடும் கண்டங்கத்திரி சாறு :

கண்டங்கத்திரி பழங்களிலிருந்து பிழிந்தெடுக்கும் சாறு குழந்தைகளின் இருமலை போக்கிட வல்லது.

கண்டங்கத்திரி முழுத்தாவரமும் கோழையகற்றும்; சிறுநீர் பெருக்கும்; குடல்வாயு அகற்றும். கண்டங்கத்திரி வேர், சிறுநீரகக் கற்களைக் கரைக்கும். கண்டங்கத்திரி பழங்கள், தொண்டை வறட்சி, மூச்சுக்குழல் அழற்சி, தலைவலி, காய்ச்சல் ஆகியவற்றைக் குணமாக்கும்.

பழங்குடி மக்கள் கண்டங்கத்திரி பழச்சாற்றை காதுவலியைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்துகின்றனர். கண்டங்கத்திரி பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் கோழையகற்றும் பண்பிற்காக சேர்க்கப்படுகின்றது. தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….

கண்டங்கத்திரி செடி முழுவதும் கூர்மையான முட்கள் கொண்டது. முட்கள், மஞ்சளாக, பளபளப்பாக, 15 செ.மீ. நீளத்தில் காணப்படும். கண்டங்கத்திரி இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை.

கண்டங்கத்திரி பூக்கள் நீலநிறமானவை, 2 செ.மீ. நீளத்தில் சிறு கொத்துகளில் காணப்படும். கண்டங்கத்திரி செடியில் சிறு கத்தரிக்காய் வடிவமான காய்களும், மஞ்சள் நிறமான பழங்களும் உள்ளன.

கண்டங்கத்திரி தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும், தரிசு நிலங்கள், திறந்தவெளி புதர்க்காடுகள் மற்றும் சாலையோரங்களில் இயல்பாக வளர்கின்றது. கண்டங்கத்திரி இலை, பூ, காய், விதை, பட்டை, வேர் போன்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மருத்துவப் பயன் கொண்டவை. தொடர்ச்சியை கீழே வாசியுங்கள்….

கண்டங்கத்திரி முழுத்தாவரத்தையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். இதனை, முள் நீக்கி காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர், தூள் செய்து கொள்ள வேண்டும். ½ தேக்கரண்டி தூளுடன் ½ தேக்கரண்டி தேன் சேர்த்துக் குழைத்து, உள்ளுக்குள்; சாப்பிட ஆஸ்துமா, சுவாச நோய்கள், சளி ஆகிய நோய்கள் குணமாகும்.

கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல்கூச்சம் தீரும்.

கண்டங்கத்திரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவப் பண்பு கொண்டுள்ளதாக உயர்நிலை ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

கண்டங்கத்திரி உண்ணும் வீட்டில் கேன்சர் அருகிலேயே அண்டாது.
வாதம் வைத்தியம் pinned «#கண்டங்கத்திரி. கண்டங்கத்திரியில் இத்தனை மருத்துவ நன்மைகளா ?... கண்டங்கத்திரி என்பது ஒரு செடி வகை. ஈரவகை தரைகளில் நன்கு வளரும் குணமுடையவை.கண்டங்கத்திரியின் மேற்பகுதி முழுவதும் முட்கள் இருக்கும். இந்த செடி வகையில் நீல நிற மலர்கள் பூத்திருக்கும் இந்த செடியின்…»
https://youtu.be/HRI8Wi3qe6s
எமது குருபிரான்
சித்தர்
ஶ்ரீ கருவூரார்
வழிபட்ட
போகர் திருமேனியும்
கல் மகாமேருவும்
பற்றிய
திரு ஈங்கொய்மலை
ஸ்தல ஆசிரமம் பற்றிய
காணொளி இது👆