வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*༺🌷༻மகரயாழ்༺🌷༻*

*🥥🍸ஏழு நாட்கள் தொடர்ந்து "தேங்காய் தண்ணீர்" குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா!*

*🌿🌼🌸நலமான வாழ்வே..*
*🌿🌼🌸வளமான வாழ்வு..*

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.
*༺🌷༻*
இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

1. நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
*༺🌷༻*
2. தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, #மகரயாழ் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்
*༺🌷༻*
3. சிறுநீரக பிரச்சனைகள் சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்று வதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
*༺🌷༻*
4. செரிமான பிரச்சனை செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
*༺🌷༻*
5. எடையைக் குறைக்கும் தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
*༺🌷༻*
6. உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
*༺🌷༻*
7. தலைவலி இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.
*༺🌷༻*
8. நீர்ச்சத்து அதிகமாகும் தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
*༺🌷༻*
9. கர்ப்பிணிகளுக்கு நல்லது கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

*༺🌷༻༺🌷༻༺🌷༻*
ஓம் அகத்தீசாய நம...

பக்தி-யோகம்-
முக்தி-ஞானம்.
**************************
அறிவு அறிவுக்கு அடிமையாவதே *பத்தி*
அறிவை அறிவால் அறியப் பழகுதல் *யோகம்* அறிவை அறிவால் அறிந்த நிலையே *முக்தி* அறிவை யறிந்தோர் அன்பின் அறமே *ஞானம்.*

அன்பேசிவம்🙏🙏🙏
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur
வைராக்கியம்
ஸ்ரீ ரமண மகரிஷி...

ஒரு நாள் இருபது வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவன் ஆசிரமத்திற்கு வந்தான்.

பகவானை வணங்கிவிட்டு ஓர் முக்கியமான சந்தேகத்தைக் கேட்டான்.

'பகவானே! வீட்டிலே இருந்தே சாதனை செய்யலாமா?

இல்லே வீட்டை விட்டுட்டு போயி தனியிடத்திலேயோ,ஆசிரமங்களிலே சேர்ந்தோ தான் சாதனை செய்யணுமா?

"வீட்டிலே இருந்தே செய்யலாமே!

வேறெங்கும் போகணும்ன்னு இல்லை.

இருந்த இடத்திலே இருந்தே செய்யலாம்'என்றார் பகவான்.

'அப்படின்னா நீங்க மட்டும் ஏன் மதுரையிலே இருந்து திருவண்ணாமலைக்கு வந்தீங்க?' என்றான் இளைஞன்.

பகவான் நிமிர்ந்து உட்கார்ந்தார், "ஓஹோ அதுவா ஒங் சந்தேகம்!

ஏதுடா சுவாமி எனக்குத் தான் சொல்றதே தவிர, தான் மாத்ரம் இங்கே வந்திருக்கேன்னு உனக்குத் தோணறது.

ஆனா உன்னைப்போல நான் போய் யார்கிட்டேயும் இங்கே இருக்கட்டுமா,அங்கே போகட்டுமான்னு கேக்கலையே!

எனக்கு தோணித்து, நான் வந்தேன்.

உனக்கும் தோணித்துன்னா நீயும் போயேன்!

யார் வேண்டாம்ன்னா?

ஏன் பிறத்தியாரைப் போய்க் கேட்டுக்கொண்டிருக்கே?" என்றார் பகவான்.

அவன் பதிலொன்றும் கூறாமல் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்து விட்டு எழுந்து போனான்.

அவன் சென்ற பிறகு பகவான் அருகில் இருந்தவர்களிடம், "தனக்குத் தானே நம்பிக்கை இல்லை.

வீட்டை விட்டு வெளியேறினா தன்னாலே ஸ்திரமா முடியுமோ முடியாதோன்னு சந்தேகம்.

மனசுல உறுதி இல்லை.

உறுதி இருந்தா பிறத்தியார்கிட்டே சொல்லக் கூட மாட்டான்.

முடிவைப் பத்தி கவலைப்படாம துணிஞ்சு செய்வான்.

இதுதான் வைராக்கிய லக்ஷணம்.

இந்தத் துணிவும், உறுதியும் அருளில்லாமல் வராது.

அருள் இறைவன் மேலே அளவிட முடியாத பிரியத்தாலேயே வரும்" என்று கூறினார்.
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
இன்று குரு பௌர்ணமி நாள்.
உயிரினும்
மேலான உயர் ஒளி ஞான சித்தர்கள் & யோகியர்கள் & மகான்கள் + குருமார்களனைவரையும் போற்றுவோம்.
நன்றி செய்வோம்.
Audio
Audio from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Audio from Raajan @ Singapore/Karur
சிவயோகி. மிஸ்டிக் செல்வம் ஐயாவினது "அஞ்சனம் பிரயோகம்" பற்றிய அருமையான
குரலொலி பதிவு
தொகுப்பு இது!👍👌
சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga
இன்று குரு பௌர்ணமி நாள். உயிரினும் மேலான உயர் ஒளி ஞான சித்தர்கள் & யோகியர்கள் & மகான்கள் + குருமார்களனைவரையும் போற்றுவோம். நன்றி செய்வோம்.
இன்று குரு பௌர்ணமி நாள்.
உயிரினும்
மேலான உயர் ஒளி ஞான சித்தர்கள் & யோகியர்கள் & மகான்கள் + குருமார்களனைவரையும்
சித்தர் வித்தைகளை
உண்மையாக.. கற்றுதரும் ஆசான்களையும்
💐 போற்றுவோம்.
நன்றி 🙏செய்வோம்.
Photo from Raajan @ Singapore/Karur
Photo from Raajan @ Singapore/Karur