News J
600 subscribers
988 photos
1 video
27.5K links
News J official

Our official Youtube Channel : www.youtube.com/newsj

Our official Facebook Page:
https://www.facebook.com/newsjtamil

Our Website
www.newsj.tv
Download Telegram
Mediaஅமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று ஐந்தாவது நாளாக அமலாக்க துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலை 10 மணிக்கு தொடங்கிய விசாரணையில் அவரது மனைவியை பெயரில் வாங்கி குவிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. செந்தில் பாலாஜி வாய் பேச மறுப்பதால் அவருடைய மனைவிக்கு சம்மன் அனுப்ப இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.ஐந்தாவது நாளாக தொடரும் விசாரணை..!Mediaஉச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரித்து வரும் நிலையில், ஐந்தாவது நாளாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத் துறையைச் சேர்ந்த 7அதிகாரிகள், செந்தில் பாலாஜியிடம் சுழற்சி முறையில் விசாரணை நடத்திவருகின்றனர். திங்கள்கிழமை இரவு முதல் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை நடத்தி வரும் விசாரணையில், பல்வேறு கேள்விகளை முன்வைத்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, கரூரில் 9 இடங்களில் நடந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்து தனது எந்த விவரங்களும் தெரியாது என்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில், இன்றும் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் வீதம், 3 அதிகாரிகள் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விசாரணையின்போது, சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான கேள்விகள் செந்தில் பாலாஜியிடம் கேட்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், செந்தில் பாலாஜியின் மனைவியின் வங்கிக் கணக்கிலும் ரூ.2 கோடி சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக வருமான வரித்துறை அதிகாரிகள், ஏற்கெனவே அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்திருந்தனர். இந்த விவகாரம் குறித்தும் அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.மனைவியையும் விசாரிக்க முடிவு..!அதேபோல், அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நடத்தும் விசாரணை முழுவதும் வீடியோப் பதிவு செய்யப்பட்டு வருகிறது. மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளின் கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி அளிக்கும் பதில்கள் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. செந்தில் பாலாஜி மனைவி மேகலாவிற்கு சொந்தமான நான்கு வங்கி கணக்குகளில் சட்ட விரோதமாக இரண்டு கோடி ரூபாய் டெபாசிட் செய்திருப்பது பற்றி அடுக்கடுக்காண கேள்விகளை செந்தில் பாலாஜியிடம் கேட்டு வருகின்றனர். தொடர்ந்து செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா வங்கி கணக்கை ஆய்வு செய்து வருகின்றனர் தேவைப்பட்டால் அவருக்கும் சம்மன் அளித்து அவரையும் நேரில் அழைத்து விசாரணை செய்வதற்கு அமலாக்கத் துறையினர் முடிவு செய்துள்ளனர்.

via News J : https://ift.tt/ZF8wzXM
Mediaஏதேனும் சில சமூகப் பிரச்சனைகளைப் பார்த்து ஆதங்கப்பட்டு தாங்களாகவே அந்த பிரச்சனையை விசாரணைக்கு எடுத்துக்கொள்வார்கள் சில நீதிபதிகள்… ஆனால், தமிழக அரசியல் வரலாற்றிலேயே முதன் முறையாக ஒரு அமைச்சரின் மீதான வழக்கை தூசிதட்டி எடுத்திருக்கிறார் நீதிபதி என்றால், அந்த வழக்கின் வீரியத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்… அப்படி யார் சிக்கியிருப்பது என்று நீங்கள் நினைப்பது புரிகிறது.ஆம், ஓசிபஸ் புகழ் பொன்முடிதான் அந்த வில்லங்க வித்வான்.. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்திற்கே விபூதி அடிக்கப் பார்த்திருக்கிறார் அமைச்சர் பொன்முடி … அதைக் கண்டுபிடித்து அதில் உள்ள பல வீரியமான விஷயங்களை உலகத்திற்கே அம்பலப்படுத்தியிருக்கிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்1996-2001ஆம் ஆண்டுகளில் திமுக ஆட்சியின்போது, வருமானத்துக்கு அதிகமாக சொத்துச் சேர்த்ததாக பொன்முடி மீதும், அவரின் மனைவி விசாலாட்சி மீதும் நடந்துவந்த வழக்கில் , போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்தார் வேலூர் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி… தீர்ப்பு வழங்கிய 2 நாட்களில் நீதிபதி ஓய்வு பெற்றதன் பின்னணியில் ஏதேனும் சதிவலைப்பின்னல்கள் இருக்கின்றனவா? பொன்முடிக்கு கொடுக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறையில் இருந்து மேல் முறையீடு செய்யப்படாதது ஏன் ?
இத்தனை ஆண்டுகளாக பொன்முடி வழக்கை விசாரித்து வந்த விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிபதியிடம் இருந்து இந்த வழக்கை அவசர அவசரமாக ஏன் வேலூருக்கு மாற்ற வேண்டும்? இரு நீதிபதிகள் அடங்கிய நிர்வாகக் குழு, நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்கை ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றுவதற்கும், அதுவும் குறிப்பு மூலமாக மாற்றம் தொடர்பாக அறிவிப்பதற்குமான அதிகாரம் எங்கிருந்து வந்தது? என்ற விஷயங்களை கண்டுபிடித்து வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததோடு, பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் வரும் செப்டம்பர் 7ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் நீதிபதி…ஆக, திட்டமிட்டு, சட்டத்தை வளைக்க முயற்சித்தாரா பொன்முடி? அமலாக்கத்துறை ரெய்டால் கதிகலங்கி இருக்கும் பொன்முடி சொத்து குவிப்பு வழக்கிலும் வசமாய் சிக்கிவிட்டாரா? சொத்துக்குவிப்பு வழக்கில் சிக்கி அமைச்சர் பொன்முடி சிறைக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறதா? தனக்கிருக்கும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தி நீதிமன்றத்தையே வளைக்கப்பார்த்தாரா பொன்முடி? அப்படி அவர் செய்திருந்தால் அது எவ்வளவு பெரிய குற்றம்? அமைச்சரவையையே ஆட்டிப்பார்க்கப்போகும் பொன்முடியின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை இப்போதும் கூட ஸ்டாலின் கண்டிக்கவில்லை என்றால் ஆபத்து, பொன்முடிக்கு மட்டுமல்ல ஸ்டாலினுக்கும்தான் என்பதில் சந்தேகமில்லை..  

via News J : https://ift.tt/xw3Ta54
தேங்காய்களின் மீது அரைமணி நேரம் அமர்ந்து பத்மாசனம் செய்து உலக சாதனை படைத்துள்ளார் ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி ஒருவர். இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.தேங்காயின் மீது அரைமணி நேரம் அமர்ந்து பத்மாசனம் செய்து ORANGE WORLD RECORDS எனும் உலக சாதனைப் பதிவு அமைப்பின் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் இந்த மாணவி. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன். இவரது மகள் ரித்திஷா. பதினோறு வயதான இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.சிறுவயது முதலே யோகாவில் ஆர்வம் கொண்ட ரித்திஷா இதற்காக தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு வந்துள்ளார். யோகாசனத்தில் குழுவாக பல சாதனைகளை செய்துள்ள ரித்திஷா, தனி ஆளாக சாதனை செய்ய வேண்டும் என்ற நோக்கில் கடந்த சில ஆண்டுகளாக கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.இந்நிலையில் 3 தேங்காய்களின் மீது அமர்ந்து அரை மணி நேரம் பத்மாசனம் செய்து அசத்தினார். மாணவியின் உலக சாதனை முயற்சியின்போது பள்ளியில் உள்ள சக மாணவிகள் அவரை உற்சாகப்படுத்தினர்.ரித்திஷாவின் இந்த சாதனையை ORANGE WORLD RECORDS அமைப்பு அங்கீகரித்துள்ளது. அடுத்ததாக ஆணி பலகையின் மீது அமர்ந்து சாதனை புரிய உள்ளதாக ரித்திஷா தெரிவித்தார்.

via News J : https://ift.tt/i59k8Gy
Mediaதமிழகத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயங்கி வரும் நிலையில், தற்போது 100 அரசு பேருந்துகளை மஞ்சள் நிறத்திற்கு மாற்றி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளார் ஸ்டாலின். கருணாநிதியின் அடையாளத்தை நிறுவ போக்குவரத்துக் கழகம் சீரழிக்கப்படுவது குறித்து, இச்செய்தி தொகுப்பில் காண்போம்.தமிழக போக்குவரத்துத் துறையில் விழுப்புரம், கும்பகோணம், கோவை என மொத்தம் 8 விரைவு போக்குவரத்து கழக மண்டலங்கள் இயங்கி வருகின்றன. இதில் தமிழகம் மட்டுமின்றி கேரளம், புதுச்சேரி, கர்நாடகம் என பிற மாநிலங்களுக்கும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.தொலைதூரம் செல்லும் பேருந்துகளில் போதிய வசதிகள் இல்லை என கூறி, பொதுமக்கள் அரசு பேருந்துகளை தவிர்த்து, தனியார் பேருந்துகளை நாடி வருகின்றனர். இதனால் பெரும் வருவாய் இழப்பு ஏற்பட்டு அரசு போக்குவரத்து கழகம் நிதிப் பற்றாக்குறையில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இருப்பினும் பேருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை அதிகரிக்கும் வகையில், தனியார் பேருந்துகளுக்கு இணையாக தரத்தை உயர்த்த விடியா திமுக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இந்நிலையில், கருணாநிதி அணிந்திருந்த மஞ்சள் நிற துண்டை குறிக்கும் வகையில், அரசு பேருந்துகளை மஞ்சள் நிறமாக மாற்றி, அதன் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார் ஸ்டாலின். இந்த வெற்று விளம்பரத்துக்காக தமிழகம் முழுவதும் இருந்து 100 அரசுப் பேருந்துகள் சென்னை தீவுத்திடலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி, கல்லூரி பேருந்துகள் மஞ்சள் நிறத்தில் இயங்கி வருவதால், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே குழப்பம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தரமான உதிரி பாகங்கள் கொள்முதல் செய்யாததாலும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும், போதிய அளவு அரசு பேருந்துகள் இயக்கப்படாததால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.தரமான புதிய பேருந்துகளை கொள்முதல் செய்வதிலும், விடியா அரசு எந்த ஒரு அக்கறையையும் காட்டாமல் போக்குவரத்து துறையை முடக்கும் வகையில் மெத்தனம் காட்டி வருகிறது.இதற்கிடையே கருணாநிதி நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில், அரசு மருத்துவமனைகள், நூலகங்களுக்கு தன் தந்தையின் பெயரை வைத்த வரிசையில், தற்போது பேருந்துகளுக்கு மஞ்சள் பெயின்ட் அடித்து மக்களின் அதிருப்தியை சம்பாதித்துள்ளார் ஸ்டாலின்.இதனிடையே தினந்தோறும் விழா நடத்துவதிலும், விழாக்களில் கலந்து கொள்வதிலும் மட்டும் கவனம் செலுத்தி வரும் போட்டோஷுட் முதல்வர், தற்போது அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் அடித்திருக்கும் செயலால், ஜோதிடம் பார்த்துதான் ஆட்சி நடத்துகிறாரோ என எண்ணத் தோன்றுவதாக, முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மேலும் சூட்டிங் அரசர், ரிமோட் நாயகர், விழா நாயகர் என பல்வேறு பட்டங்களை ஸ்டாலினுக்கு வழங்கலாம் எனவும் அவர் விமர்சித்தார்.தன் தந்தைக்கு நூற்றாண்டு விழா கொண்டாடுகிறோம் என்ற பெயரில், அரசு பேருந்துகளுக்கு மஞ்சள் நிறம் தீட்டியுள்ள ஸ்டாலின், விரைவில் அரசு போக்குவரத்துக் கழகத்துக்கே, தனது தந்தையின் பெயரை சூட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

via News J : https://ift.tt/zgeXkrQ
Mediaஆட்சிக்கு வந்ததுல இருந்து தன்னோட அப்பா பேர எல்லாத்துலயும் ரெஜிஸ்டர் பண்ணனும்னு கங்கனம் கட்டிட்டு திரியுராரு ஸ்டாலின். அதோட விளைவா தான் கருணாநிதி நினைவு நூலகம், நினைவு மருத்துவமனைனு தமிழகமே ஒரே நினைவு மயமா இருக்கு. ஆஹா… தலைவரு ஹெவியா பெர்ஃபார்ம் பண்ணிட்டு இருக்காரு, நாம எப்படி சும்மா இருக்க. நாமளும் கருணாநிதி நினைவா எதாச்சும் பண்ணனுமேனு, பூந்தமல்லில அவரோடு மார்பளவு சிலையைத் திறக்க திமுக நிர்வாகிகள் ஏற்பாடு பண்ணியிருக்காங்களாம்.சிலை, பீடம் எல்லாம் ரெடி… வாரிசு அமைச்சர் வந்து தொறந்து வச்சாருனா சிறப்பா இருக்கும்னு முடிவு பண்ணியிருக்காங்க போல. இதுக்காக பங்க்சன கிராண்டா பண்ணி தலைமைட்ட பேர் வாங்கனும்னு நெனைச்சு, திருவள்ளூர் மாவட்டத்துல இருக்க எல்லா தொழில் நிறுவன உரிமையாளர்கள், சிறு குறு தொழில் பண்றவங்கனு ஒருத்தர விடாம தீவிரமா வசூல் வேட்டைல இருக்காங்க நம்ம உபி-க்கள்.கருணாநிதி இருந்தப்போ ஊழல், லஞ்சம்னு அவரோட குடும்பத்தையும், கட்சிக் காரங்களையும் வாழ வச்சுட்டு இருந்தாரு… மறைஞ்சதுக்கு அப்பறம் கூட நம்மள நிம்மதியா விடாம அவர் பேர சொல்லி மிரட்டி வசூல் பண்ணிட்டு இருக்காங்கனு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க…

via News J : https://ift.tt/Yg3RypD
Mediaகஞ்சாவை கட்டுப்படுத்துவதாகச் சொல்லி, போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு நிகழ்வை கொண்டாடிய விடியா அரசு, டன்கணக்கில் கஞ்சா போதை பொருட்களை எரித்துள்ளதன் மூலம், கஞ்சாவை தங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை விழா நடத்தி அம்பலப்படுத்தி இருக்கிறது.ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயத்துக்கு அடஷன் ஆவுற மாதிரி இந்த விடியா ஆட்சியும் விழா கொண்டாடுறதுல அடிக் ஷன் ஆயிடுச்சோ என்னவோ… ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழாங்குற ரேஞ்சுல வெத்து விளம்பரம் தேடிக்கிட்டு இருக்காங்க… வெள்ளிக்கிழம கூட “போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடுன்”னு ஆரம்பிச்சி ஒரு வருஷம்னு ஒரு விழா கொண்டாடியிருக்காங்க… கடந்த ஒரு வருஷமா பிடிபட்ட கஞ்சாவெல்லாம் அழிக்கிறதுக்குத்தான் இந்த விழா… இதக் கூடா காணொளி காட்சியில முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்க போலீஸ் அதிகாரிங்க எல்லாம் உறுதிமொழி எடுத்துருக்காங்க.ஒரு திட்டத்த தொடங்கி வைக்கிறதுக்குத் தான் இப்படி காணொளியில வருவாங்கன்னு பார்த்தா, இந்த திராவிட மாடலு ஆட்சியில அழிக்கிறதுக்கும் இப்படி எல்லாம் செய்றது ரொம்ப ஓவர்தாங்க…தஞ்சாவூர் மாவட்டம் அயோத்திப் பட்டியிலயும், திருச்சி, தஞ்சை , அரியலூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில், 267 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட மொத்தம் 4 ஆயிரத்து192 கிலோ கஞ்சாவ, திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி கார்த்திகேயன் முன்னிலையில அழிச்சிருக்காங்க. கடந்த வருஷம் ஆயிரம் கிலோ அளவுலதான் கஞ்சாவ அழிச்சதாவும் இந்த வருசம் 4,192 கிலோ அழிச்சிருகிறதாவும் ஐ.ஜி. கார்த்திகேயன் பெருமையா சொல்லியிருக்காரு…அதே மாதிரி நெல்லை மாவட்டம் திசையன்விளை பக்கத்துல உள்ள பரப்பாடி பொத்தையடியிலயும் கஞ்சாவ மொத்தமா எரிச்சிருக்காங்க. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம்னு 7 மாவட்டங்கள்ல, மொத்தம் 967 வழக்குகள்ல பிடிபட்ட 8 ஆயிரத்து 431 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள எரியூட்டி அழிச்சிருக்காங்க.இந்த விடியா ஆட்சியில கஞ்சாவ அழிக்கிறதாச் சொல்லி ஆபரேஷன் டூ பாயிண்ட் ஓ, த்ரி பாயிண்ட் ஓன்னு வெர்ஷன கூட்டுறாங்களே தவிர, கஞ்சாவ முழுசா கட்டுப்படுத்த முடியலங்கிறது போன வருஷத்த விட இந்த வருஷம் அதிக அளவுல கஞ்சாவ எரிச்சதுல இருந்தே வெளங்கிடுச்சு… இதுக்கு ஒரு விழாவ வச்சி விடியா அரசு தன்னோட நிர்வாகத்திறன் லட்சணத்த தாங்களாவே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கு..


via News J : https://ift.tt/lOjnA7k
Mediaஒட்டுமொத்த மாநிலத்தையும் தனது குடும்பத்தைப் போல நேசித்தவர் புரட்சித் தலைவர். குடும்பத்தின் நலன் பெண்களைச் சார்ந்தே இருக்கிறது என்பதை உணர்ந்ததால் தான் தனது ஆட்சியில் பெண்களுக்கான திட்டங்களைப் பார்த்து பார்த்து வகுத்தார்.எம்.ஜி.ஆரின் பெண்கள் திட்டம்..!எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்தில் மக்களின் அன்றாட வாழ்க்கை பிரச்னை இல்லாமல் இருக்கும்படி கவனித்துக்கொண்டார். பெண்களும், பிள்ளைகளும் பாதுகாப்பாக உணர்ந்தனர். பசிக்கொடுமையால் சிறுவர், சிறுமிகள் தவறான பாதையில் போகும் சூழ்நிலை ஏற்படாதபடி பார்த்துக்கொண்டார். பெண்களுக்கும் வேலை கிடைத்தது. சத்துணவு திட்டத்திற்காக அவர் ஒரே நாளில் பத்தாயிரம் பெண்களுக்கு வேலை அளித்தார். இது இந்தியாவில் இதுவரை நடந்திராத சாதனை.மின்சாரம் அளிக்கும் பாதுகாப்பு உணர்வு ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் புரியும். அதனால்தான், எம்.ஜி.ஆரின் வீட்டுக்கொரு விளக்குத் திட்டத்தால் வீடு மட்டுமே ஒளிரவில்லை, குறிப்பாக பெண்களின் வாழ்வும் ஒளிர்ந்தது.MGR, Rajinikanth to Kamal Haasan: Matinee idols and Tamil Nadu politics - Hindustan Timesவிதவைப் பெண்களுக்கான திட்டம்…!விதவை பெண்கள் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்த காரணத்தால், விதவைகளை மறுமணம் செய்வோருக்கு 5 ஆயிரத்து 300 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதனால் ஆயிரக்கணக்கான விதவைகள் பலனடைந்தனர்.இப்போது, ராணுவத்தில் பணியாற்றி இறந்து போனவர்களின் மனைவிமார் தன் கணவரின் ஓய்வூதிய பலன்களைப் பெற்ற போதிலும் மறுமணம் செய்துகொள்ளலாம் என்ற சட்டம் வந்துவிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர் தன் ஆட்சிக்காலத்திலேயே இந்தச் சலுகையை விதவை பெண்களுக்கு வழங்கிவிட்டார். பெண்கள் மட்டுமின்றி குழந்தைகள் நலனிலும் அவர் அக்கறை கொண்டிருந்ததால்தான், பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவு திட்டத்தை விரிவு படுத்தி சத்துணவுத் திட்டமாக அறிவித்தார்.அதே போன்று பள்ளிக் கல்வி மட்டும் போதாது, பெண்கள் மேற்படிப்புகள் படித்து குடும்பத்தை மேம்படுத்த வேண்டும் என்று விரும்பினார் எம்.ஜி.ஆர். அதன் விளைவாக உருவானது தான் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்.உதவித்தொகைத் திட்டங்கள்..!ஆதரவற்ற பெண்களுக்கு, தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கி ஒரு முறை மட்டும் உதவக் கூடாது என முடிவு செய்த எம்ஜிஆர், அவர்களுக்கு தையல் இயந்திரங்களை வழங்கி அவர்கள் வாழ நம்பிக்கை அளித்தார். துப்புரவுப் பணியில் ஈடுபடுவோர், மனித சேவையில் ஈடுபடுவோர் மற்றும் பணிபுரியும் மகளிருக்கென தங்கும் விடுதிகளை அமைக்கும் திட்டத்தை அமல்படுத்தினார். தாய் சேய் நல இல்லங்கள் என அவர் ஆட்சியில் பெண்களுக்கென கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பெண்களை மேலும் பெருமைப்படுத்தும் வகையில் மதுரையில் தமிழன்னைக்கு சிலை வைத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். 

via News J : https://ift.tt/N1VZx6t
Media    கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கைமாணவ சமுதாயத்தினரிடையே ஜாதிய சிந்தனையைத் தூண்டி, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தோடு விளையடும் திமுக-வினருக்கும், தூண்டிவிடும் சமூக விரோதிகளுக்கும் கடும் கண்டனம்!திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் +2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், அதுகுறித்து அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளதாகவும், தனது சகோதரன் சின்னத்துரையை காப்பற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல் இறைவனைப் பிரார்த்திக்கிறேன். இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன்.எப்போதெல்லாம் மக்கள் விரோத திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் ஜாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பது, ஆளும் திமுக ஆட்சியில் தொடர்கதையாக உள்ளது.4.8.2023 அன்று கல்பாக்கம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில், பொது மேடையில் பெண் ஆசிரியையிடம் ஆளும் திமுக நிர்வாகி அநாகரீகமாகவும், தரக்குறைவாகவும் நடந்துகொண்ட சம்பவம் குறித்து தமிழகமே வெட்கித் தலை குனிந்தது. இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். இதுபோன்ற சம்பவங்கள் மூலம் மாணவர்கள் நல் ஒழுக்கத்தையும், நீதி போதனைகளையும் பெறுவதை திமுக நிர்வாகிகள் தடுக்கின்றனர்.பள்ளி மைதானத்தில் காலை பிரார்த்தனை (Prayer) நடைபெறும்போதே, ஆசிரியரை திமுக நிர்வாகிகள் தாக்குவது; கள்ளக்குறிச்சி பள்ளி சம்பவம் என்று விடியா ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.இன்றைக்கு, தமிழகமெங்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் சீரழிவை சந்திப்பது தினசரி நிகழ்வாக உள்ளது. இளைய சமுதாயத்தினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்களீன் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க பலமுறை இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அம்மா அவர்களின் ஆட்சியிலும், தொடர்ந்து எனது தலைமையிலான அம்மாவின் ஆட்சியிலும், ஜாதி இன மோதல்கள் இன்றி, மக்கள் சகோதர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். சட்டத்தின் ஆட்சி நிலை நிறுத்தப்பட்டது. சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். ஜாதி, இன மோதல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழக மக்கள் அமைதியாக தங்களது பணிகளை செய்து வந்தனர்.ஆனால்;, இந்த விடியா அரசு பொறுப்பேற்ற 27 மாத காலத்தில், நாள்தோறும் ஏதேனும் ஒரு குற்றச் சம்பவம் நடைபெறுவதும்; பிறகு, விடியா திமுக அரசு நடவடிக்கை எடுப்பதும், அறிக்கை விடுவதுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. வரும் முன் காப்போம் என்ற எண்ணமே இல்லை. முன்னெச்செரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்று கேட்கும் இந்த விடியா அரசு இனியாவது, மாணவர்களின் மத்தியில் நன்னெறி, நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் ஜாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

via News J : https://ift.tt/gHa04J7
Mediaஉங்கள் கண்கள் அடிக்கடி வறண்டு போகிறதா…?இன்றைய காலத்தில் கம்ப்யூட்டர் முன் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதிலும் தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்வதால் கண்கள் களைப்படைந்து, வறட்சி ஏற்பட்டு, எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.அப்போது கண்களில் மருந்துகளை விட்டுக் கொண்டால், அரிப்பு, எரிச்சல் போன்றவை இருப்பதோடு, அவை கண்களில் வறட்சியை அதிகரித்துவிடும் என மருத்துவர்கள் கூறுகின்றனகண்களை வறட்சியில் இருந்து எப்படி காப்பது:
மருத்துவர்கள் கூறும் வழிமுறைகள்….ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் ((Omega fatty acid)) அதிகம் நிறைந்துள்ள உணவுகளை சாப்பிட்டால், கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலைத் தடுக்கலாம் என்று சொல்கின்றனர் மருத்துவர்கள்ஃபேட்டி ஆசிட்கள் கண்களில் ஏற்படும் வறட்சியை தடுக்க உதவுகிறது. கடல் உணவுகளான மீன்களில் சாலமன் மற்றும் ஆளி விதைகளை அதிகம் சாப்பிட வேண்டும். இதனால் கண்களில் வறட்சி தடுக்கப்படுவதோடு, வயிற்றில் ஏற்படும் உப்புசமும் சரியாகும்.கம்ப்யூட்டர் மற்றும் டிவியை அதிக நேரம் பார்த்தால், கண்கள் சோர்வடைந்துவிடுவதோடு, அதிலிருந்து வரும் கதிர்கள் கண்களில் வறட்சி மற்றும் அரிப்பை ஏற்படுத்தும். எரிச்சலை தடுக்க குளிர்ந்த நீரால் கண்களை கழுவுவது நல்லது.கண்களில் ஏதேனும் சோர்வு, எரிச்சல், வறட்சி போன்றவை ஏற்பட்டால், கண்களை ரிலாக்ஸ் செய்வதற்கு வெள்ளரிக்காய் அல்லது உருளைக்கிழங்கை கண்களில் வைப்பது, புத்துணர்ச்சி தரும்.நீண்ட நேரம் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்திருந்தால், கண்களுக்கு சிறிதுநேரம் ஓய்வு கொடுக்க வேண்டும். இடைவேளையின் போது கண்களுக்கு உடற்பயிற்சியை செய்வதால், கண்களில் வறட்சி ஏற்படுவதை தடுக்கலாம்.கண்களில் பிரச்சனை வராமல் இருக்க அடிக்கடி தண்ணீர் குடித்துக் கொண்டே இருப்பது, கண்களில் ஏற்படும் வறட்சியைத் தடுக்கும்.கண் வறட்சி ஏற்பட்டால் என்ன விபரீதம் ஏற்படும்?….கண்களில் சுரக்கும் நீர் கார்னியாவை பாதுகாத்து, இமைகளின் உராய்வை தடுக்கிறது. போதிய நீர் இல்லாததால் உண்டாவது தான் கண்களின் வறட்சி.வறண்ட கண்கள் ஏற்பட்டால் கண்களில் நசைமன் ஏற்பட்டு நீர் வழிந்துகொண்டே இருக்கும். கார்னியாவில் பாதிப்புகள் உண்டாகும்.புத்தகம் படிக்கும் போது அல்லது டிவி பார்க்கும் போது, நீங்கள் கண்களை இமைக்க மறந்தால், திரவம் கண்களில் சுரப்பது நின்று போகும். இதனால் கண்களில் வறட்சி ஏற்படும். கண்களில் கண்ணாடி அணிந்திருந்தாலோ, அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்தாலோ, மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போதும் ஏற்படும் அலர்ஜியாலும் கண்களில் வறட்சி ஏற்படும். மெனோபாஸ் சமயங்களில் உண்டாகும் ஹார்மோன்களில் மாற்றங்களாலும் கண்களில் வறட்சிக்கும் தொடர்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

via News J : https://ift.tt/p6G1gQN
Mediaமதுரையில் வரும் ஆகஸ்ட் 20ம் தேதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் வீர வரலாற்று பொன்விழா எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அதிதீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், திமுகவிற்கு கிலியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த மாநாடு என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன…அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி கே பழனிசாமி பொறுப்பேற்ற பிறகு, நடைபெறும் முதல் பிரம்மாண்ட மாநாடு என்பதாலும், விடியா திமுக அரசின் மீது ஒட்டுமொத்த தமிழ்நாடு அரசும் கடும் கொந்தளிப்பில் இருப்பதாலும் சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் மட்டுமல்லாது, பொதுமக்களும் பெருந்திரளாக இந்த மாநாட்டில் கலந்துகொள்ள இப்போதிலிருந்தே ஆயத்தமாகி வருகின்றனர்.இதையெல்லாம் அரசல் புரசலாக அறிந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின், தங்கள் கட்சியினரிடம் புலம்பித்தள்ளியிருப்பதாகவும், அதிமுகவிற்கு எப்படி இந்தளவிற்கு மக்கள் ஆதரவு என்று கேள்வி மேல் கேள்வி கேட்டிருப்பதாகவும் திமுகவின் முக்கியப்பிரமுகர்களே வெளியில் பேசிக்கொள்கின்றனர்…சில மாவட்டங்களில் திமுகவின் நிர்வாகிகளுக்குள்ளேயே ஒற்றுமை இல்லை, பொது மேடைகளில் நிர்வாகிகள் ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொள்வதும், நிர்வாகிகள் கூட்டங்களில் கலந்துகொள்ளும் அமைச்சர்களையே கைநீட்டி கேள்வி கேட்டு அசிங்கப்படுத்துவதும் என்று ஸ்டாலினின் தூக்கத்தை ஒவ்வொரு நாளும் கெடுத்துக்கொண்டிருக்கின்றனர் திமுக உடன்பிறப்புகள்..2006-11 மைனாரிட்டி திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் மாநாடுபோல் நடந்த அதிமுகவின் பொதுக்கூட்டங்கள் எப்படி உதவியதோ, அதேபோல இந்த மதுரை மாநாடு விடியா அரசுக்கு ஒரு முடிவுரை எழுதும் என்று பொதுமக்களே பேசிக்கொண்டிருக்கின்றனர்..சொந்தக் கட்சியில் இருக்கும் பூசல்களை சமாளிக்க முடியாமலும், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடுமோ என்கிற பயத்திலும் இருக்கிறதா விடியா திமுக அரசு? பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையில் வீருகொண்டு அதிமுக பயணித்துக்கொண்டிருப்பதோடு, எதிர்க்கட்சியாகவும் ஆளும் திமுகவின் தவறுகளை உடனுக்குடன் சுட்டிக்காட்டி வருவதாலும் எடப்பாடி கே பழனிசாமியைப் பார்த்து பயப்டுகிறாரா ஸ்டாலின்?சமீபத்தில் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்களை சேர்த்த அதிமுகவின் வளர்ச்சியால் ஆடிப்போயிருக்கிறாரா ஸ்டாலின்? ஆக மொத்தத்தில் அண்ணா திமுகவின் வீர வரலாறு எழுச்சி மாநாடு இந்த திராணியற்ற ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்ற எண்ணத்தோடு இப்போதே தங்கள் மதுரைப் பயணத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர் தமிழ்நாட்டு மக்கள்.

via News J : https://ift.tt/NEXhBcg
Mediaசெங்கல்பட்டு கொளவாய் ஏரியை புனரமைக்கும் பணியை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கிடப்பில் போட்டுள்ள விடியா திமுக அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.கொளவாய் ஏரி புனரமைப்புத் திட்டம்..!செங்கல்பட்டு நகர் பகுதியில் 2 ஆயிரத்து 210 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது கொளவாய் ஏரி. இந்த ஏரியை புனரமைத்து சென்னைக்கு குடிநீர் அனுப்பவும், படகு குழாம், பூங்கா, கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் உள்ளிட்டவை அமைத்து சுற்றுலாத் தளமாக மாற்றும் வகையிலும் கடந்த அதிமுக ஆட்சியில் திட்டம் வகுக்கப்பட்டது. இதற்காக 90 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது.இதனால் கொளவாய் ஏரி புதுப்பொலிவு பெற்று ஒரு சுற்றுலாத்தளமாக உருவெடுக்கும் என பொதுமக்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் விடியா திமுக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. வாட்ச் டவர் என்று சொல்லக்கூடிய கண்காணிப்பு கோபுரம் மட்டும் தற்போது அரைகுறையாக கட்டப்பட்டுள்ளது.அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ் | chengalpattu kolavai lake 60 crore restoration work cm palanisamy inaugurates ...கண்டுகொள்ளாத விடியா திமுக..!செங்கல்பட்டு மாவட்டத்தை வளர்ச்சி பாதையை நோக்கி அழைத்துச் செல்லும் வகையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி தொடங்கிவைத்த கொளவாய் ஏரி புனரமைப்பு திட்டத்தை விடியா திமுக அரசு கண்டு கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மக்கள் நல திட்டங்களை ஒவ்வொன்றாக முடக்கி வரும் விடியா திமுக அரசு, தற்போது கொளவாய் ஏரியையும் கை கழுவிவிட்டதால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு, அரசியல் காழ்ப்புணர்ச்சியை கைவிட்டு கொளவாய் ஏரி புனரமைப்பு பணியை உடனடியாக தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

via News J : https://ift.tt/3xqaTAp
Mediaகடந்த 1989ஆம் ஆண்டு சட்டசபையில் புரட்சித் தலைவி ஜெயலலிதாவிற்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை மறைத்து, மீண்டும் எம்பி சீட்டுக்காக முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், உண்ட வீட்டுக்கு ரெண்டகம் செய்யும் செயலில் காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ளார். விடியா திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து மாணவர்கள் மத்தியில் சாதிய மோதல் தலைதூக்கி உள்ளதாக குற்றச்சாட்டிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் மீண்டும் பரவி வருவதாக தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் நிகழும் நீட் தற்கொலைகளுக்கு முழுக்க முழுக்க விடியா திமுகவே காரணம் என்றும், ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் விலக்கு என்ற வாக்குறுதி என்னவானது? என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், குடும்ப நலனுக்காக மட்டுமே குரல் கொடுக்கும் திமுக, தமிழக நலனுக்காகவோ உரிமைக்காகவோ எந்த குரலும் கொடுக்கவில்லை என விமர்சித்துள்ளார். ஆனால், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி பிரதமர் உள்ளிட்டோரை சந்தித்தது அதிமுக தான் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.திமுக ஆட்சிக்கு வரும் போதெல்லாம் சாதிய மோதல்கள், கத்தி, கஞ்சா, கூஜா
வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து விடுவதாக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார்
குற்றம் சாட்டியுள்ளார்அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாங்குநேரி
மாணவர்களுக்கு நேர்ந்துள்ள சம்பவம் மிகவும் வேதனைக்குரிய ஒன்று என்ற அவர்,
தென் மாவட்டங்களில் இது போல் நடைபெறும் சாதியை தாக்குதல்கள் அதிமுக ஆட்சியில் ஒருபோதும் நடந்ததில்லை என கூறினார். அதிமுக ஆட்சியில் சிறு தாக்குதல்கள் நடந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக கூறிய முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார், திமுக ஆட்சியில் சாதிய மோதல்கள் நடைபெற்றால் உரிய நடவடிக்கைகள் எடுக்காததால்தான் தொடர் நிகழ்வுகள் இதுபோல் நடப்பதாக குற்றம்சாட்டினார். குறிப்பாக திமுக ஆட்சியில் தான் தென் மாவட்டங்களில் அதிக அளவில் சாதிய தாக்குதல்களும், மோதல்களும் நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர், திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கத்தி, கஞ்சா, கூஜா வெடிகுண்டு கலாச்சாரம்
அதிகரித்துவிடுவதாக ஜெயக்குமார் குற்றம் சாட்டினார்.நீட் என்ற தடுப்பு சுவர் இன்னும் சில நாட்களில் இடிந்து விழும் என்ற தமிழக
முதலமைச்சரின் அறிக்கை குறித்து பதிலளித்த டி. ஜெயக்குமார், நாடாளுமன்றத்
தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இது போன்ற ஒரு அறிவிப்பை தமிழக முதலமைச்சர்வெளியிட்டு இருப்பதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில்இருந்து கொண்டு நீட் தேர்வை கொண்டு வரும் வரை அமைதியாக இருந்துவிட்டு, தற்போது அவற்றை எதிர்ப்பது போல் நாடகமாடுகிறார்கள் திமுகவினர் எனவும் குற்றம் சாட்டினார். 69% இட ஒதுக்கீடு கொண்டுவர முதலமைச்சர் ஜெயலலிதா முயற்சித்த பொழுது, மண்டல் ஆணையம் 50 விழுக்காடுக்கு மட்டுமே அனுமதி கொடுத்ததாகவும், ஆனால் சட்ட ரீதியாக போராடி 69% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியது தான் அதிமுகவின் சாதனை என்றும், சமூக நீதிக்கு சொந்தக்காரர்கள் அதிமுகவினர் தான் என்றும் ஜெயக்குமார் கூறினார்.முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற அநீதியை, உண்மைக்கு புறம்பாக திருநாவுக்கரசு பேசியிருக்கிறார் என்றும்,
தேர்தல் ஆதாயத்திற்காக இப்படி உண்மைகளை மறைத்து அவர் பேசியிருப்பதாகவும், இது மிகவும் கண்டனத்திற்குரியது என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார். திருநாவுக்கரசு
அரசியலில் இந்த அளவுக்கு உயர்ந்ததற்கு அதிமுகவுக்கு என்றென்றும் கடமைப்பட்டு
இருக்க வேண்டியவர் என்றும் ஜெயக்குமார் கூறினார். 1989 ஆம் ஆண்டு மார்ச் 26
ஆம் தேதி திருநாவுக்கரசு அளித்த பேட்டி, செய்தித்தாள்களில் வெளிவந்ததை
மேற்கோள் காட்டி அப்பொழுது என்ன நேர்ந்தது என்பதை விளக்கமாக எடுத்துரைத்தார்.

via News J : https://ift.tt/3bhq9z5
Mediaமதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை முன்னிட்டு தொடர் ஜோதி ஓட்டத்தினை கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி சென்னையில் தொடங்கி வைத்தார்.
சென்னை ராயப்பேடையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலத்திற்கு வந்த கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மற்றும் புரட்சித்தலைவவி ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதனை தொடர்ந்து மதுரையில் வரும் 20ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டை முன்னிட்டு, சென்னையில் இருந்து மதுரை வரையிலான ஜோதி ஓட்டத்தை கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த தொடர் ஜோதி ஓட்டம் மதுரை வரை பயணித்து இருபதாம் தேதி மாநாட்டு திடலை அடைய உள்ளது.

via News J : https://ift.tt/lzVOmXY
Mediaநாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமூகநீதியையும், பெண்கள் நலனையும் பேணிக் காப்போம் என்று வாய்ச் சவடால் விட்ட திமுக, மக்கள் மனங்களை ஏமாற்றி அரியணைக் கட்டிலில் ஏறியது. பொதுமக்களும் திமுகவின் பொய் வாக்குறுதிகளை நம்பி அவர்களிடம் நாட்டையே ஒப்படைத்தனர். விளைவு, தான் பிடித்த முயலுக்கு மூன்றூ கால் என்று கொக்கரிக்கத் தொடங்கியது இந்த விடியா அரசு.திமுக ஆட்சியில் பெண்களுக்கு அநீதி…!இது பெண்களுக்கான அரசு என்று கூறும் இந்த விடியா கும்பல், தன் சொந்தக் கட்சிப் பெண்களின் நலனையே கண்டுகொள்ளாமல் இருக்கிறது. அதன் சமீபத்திய உதாரணம் விழா ஒன்றில் மேயர் பிரியாராஜனை கையைப் பிடித்து இழுத்த விவகாரம். கையைப் பிடித்து இழுத்தது வேற்றாள் இல்லை திமுக நிர்வாகிதான். அதே நிகழ்ச்சியில்தான் ஸ்டாலினும் இருக்கிறார். அவர் அதை கண்டுகொள்ளாமல் ஃபோட்டோவிற்கு போஸ் கொடுப்பதில் மும்முரம் காட்டிக்கொண்டிருக்கிறார். ஒருவேளை நாங்கள் விடியல் அரசு அல்ல விளம்பர அரசுதான் என்பதை நிரூபிக்கிறாரா முதல்வர் ஸ்டாலின்.இதைவிட இன்னொரு கொடுமை என்னவென்றால், திமுக மகளிர் அணி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பஞ்சாயத்து தலைவி “திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று பேசி பகீர் கிளப்பினார். இதேபோல வாரிசு எம்.பி கனிமொழியின் கூட்டத்தில் திமுகவினரால் பெண் காவலர்கள் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகினர். இப்படி தன் கட்சிக்குள்ளேயே பல கறைகளைக் கொண்ட திமுக, தமிழகத்தில் பெண்கள் நலனை எப்படி உறுதி செய்யும் என்பது கேள்வி.அதிமுக ஆட்சியில் பெண்களுக்கான நீதி..!இந்த விடியா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்று பத்து மாதங்களில் 4023 போக்சோ வழக்குகள் பதிவாகியிருக்கிறது. ஓராண்டில் 442 பாலியல் பலாத்கார வழக்குகளும், 1077 மானபங்க வழக்குகளும் பதிவாகியிருக்கிறது. மக்கள் ஓராண்டிலேயே திமுகவின் லட்சணத்தைத் தெரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டார்கள். குற்றங்கள் நடந்தபிறகு தடுப்பதற்கு அரசு எதற்கு?, அந்தக் குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்னரே தடுக்கப்பதுதான் அரசின் இலக்கு! அந்த இலக்கினை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சரியாகவும், முறையாகவும் செய்தது. பெண்கள் மீது அக்கறை எடுத்து அகிலம் போற்ற வைத்தது அதிமுக அரசு. பெண்களை நோக்கி ஓசி பஸ் தானே என்று கூறுபவர்கள் மத்தியில், தாலிக்குத் தங்கம், தாய்-சேய் நலத்திட்டம் என்று பெண்களுக்கான நற்திட்டங்களை செயல்படுத்தியது அதிமுக. தன் சொந்தக் கட்சி நிர்வாகியை “எம்மா நீ எஸ்.சி தானம்மா” என்று சாதியப் போக்கில் பேசுபவர்கள் மத்தியில், சாதிக்க சாதி தடையாக இருக்கக் கூடாது என்று 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை வழங்கிய அரசு அதிமுக.  பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம், தொட்டில் குழந்தைத் திட்டம், சானிட்டரி நாப்கின் வழங்கும் திட்டம், பெண்களுக்கான உடல் எடை பரிசோதனத் திட்டம், மகளிர் சுய உதவிக்குழுத்திட்டம், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனியறைத் திட்டம், அம்மா குழந்தைகள் நலப் பரிசு பெட்டகம், அம்மா மகப்பேறு சஞ்சீவித் திட்டம் என்ற அதிமுக அரசு பெண்களுக்காக கொண்டு வந்தத் திட்டங்கள் எக்கச்சக்கம். ஆனால் பெண்களுக்கான திட்டங்களில் எதையும் சாதிக்க முடியா, இந்த விடியா அரசு தங்களை பெண்களுக்கான அரசு என்று சொல்வது கேலிக்கூத்து. முதலில் தன் வீட்டில் உள்ள குப்பைகளை சரிசெய்துவிட்டு நாட்டில் உள்ள குப்பைகளை சரி செய்யுங்கள். இல்லையென்றால் குப்பையோடு குப்பையாக மக்களால் அப்புறப்படுத்தப்படுவீர்கள்.இந்த திருட்டுக் கும்பலை ஆட்சிக் கட்டிலிலிருந்து வீட்டிற்கு அனுப்புவதற்கான அச்சாணி மதுரையில் போடப்பட்டுவிட்டது. ஆம் ரத்தத்தின் ரத்தங்களே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் ஆகஸ்ட் பத்தில் கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் நடைபெற இருக்கிறது. அதுவே திமுக எனும் தீய சக்தியை விரட்டி அடிப்பதற்கான முழு சாட்சி. வரும் காலத்தில் அமையப் போகுது அதிமுகவின் மக்களாட்சி.

via News J : https://ift.tt/iEpu0WZ
<a href="https://mediaj.sgp1.digitaloceanspaces.com/2023/08/eps-arikkai-4.jpg">Media</a><strong>கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதல்வர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை</strong>நீட் தேர்வு தோல்வியால் தந்தையும் மகனும் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுக்கு நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!சென்னை குரோம்பேட்டையைச் செர்ந்த திரு. செல்வசேகர் என்பவருடைய மகன் ஜெகதீஸ்வரன் (19), நீட் தேர்வு தோல்வியால், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். தனது மகன் இறந்த துக்கம் தாளாமல் அவரது தந்தை திரு. செல்வசேகரும் இன்று தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இருவரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, மரணமடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலினும், அவரது அருமைப் புதல்வரும் தேர்தல் சமயத்தில், எப்படியாவது தமிழகத்தில் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில், நிறைவேற்ற முடியாத பல வாக்குறுதிகளை அளித்து, தமிழக மக்களின் காதுகளில் பூ சுற்றி, பின்புற வாசல் வழியாக ஆட்சியைப்[ பிடித்தனர். அதில் ஒன்றுதான் “நீட் ரத்து” என்ற போலி வாக்குறுதி.முதன் முதலில் நீட் தேர்வு பயத்தல் அன்று அரியலூர் மாணவி அனிதா தனது இன்னுயிரை இழந்த நிகழ்வில், ஆட்சி அதிகாரம் என்ற சுய லாபத்திற்காக அரசியல் நடத்திய திமுக, தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையின்போது, ஆட்சிக்கு வந்ததும் ஒரே கையழுத்தில் நீட்டை ஒழிப்போம்; நீட்டை ரத்து செய்யும் வழிமுறைகள், அதன் சூட்சமம் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்று திமுக-வின் இளைஞர் அணித் தலைவர் முதல் கடைக்கோடி பேச்சாளர்கள் வரை தேர்த்ல் மேடைகளில் அம்மா அரசிற்கு எதிராக வெற்று முழக்கமிட்டு, மாணவர்களையும், மக்களையும் திசை திருப்பி வெற்றியும் பெற்றுவிட்டனர்.அம்மாவின் ஆட்சியிலும், தொடர்ந்து அம்மாவின் அரசு நடத்திய நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான சட்டப் போராட்டங்களின் போதும், அதை கேலி செய்து, வக்கனை பேசியது திமுக. ஆனால், ஆட்சிக்கு வந்தவுடன் அம்மாவின் அரசு நீட் நுழைவுத் தேர்வை எதிர்த்து தீர்மானம் இயற்றியது போல், இவர்களும் தீர்மானம் ஒன்றினை நிறைவேற்றினர். நீதியரசர் திரு ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் ஒரு கமிஷன் அமைத்தனர். மீண்டும் ஆளுநர் கையொப்பம் பெற்று ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி இருப்பதாக தம்பட்டம் செய்வதைத் தவிர, நீட்-க்கு எதிராக இவர்கள் ஒன்றையும் செய்யவில்லை.தமிழகத்தில் கூட்டணியுடன் கூடிய 38 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, இதுவரை ஒருமுறைகூட நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற மக்களவையை ஒத்துவைக்கும் அளவுக்கு மத்திய அரசுக்கு அழுத்தம் தரவில்லை.நீட் தேர்வு என்ற ஒன்றை வைத்து பலரின் உயிரோடு விளையாடி வரும் இந்த நிர்வாகத் திறமையற்ற ஆட்சியாளர்கள், இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலிவாங்கப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.டாக்டர் படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. குறைந்தபட்சம் 40-க்கும் மேற்பட்ட மருத்துவம் சார்ந்த பல இணையான படிப்புகள் உள்ளன. எனவே, நீட் நுழைவுத் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டோம் என்ற மன உளைச்சலில் தங்களது இன்னுயிரை போக்கிக்கொள்ளும் முடிவை எடுக்க வேண்டாம் என்று, எனதருமை மாணவச் செல்வங்களையும், பெற்றோர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.அரசுப் பள்ளிகளில் படிப்பவர்கள் பெரும்பாலும் கிராமப்புற மாணாக்கர்கள் மற்றும் ஏழை மாணாக்கர்கள் ஆவார்கள். எனவே, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்கள் மருத்துவர்களாக வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில், மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததுடன், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் ஏற்படுத்தித் தந்தேன். அதற்கு தேவையான நிதியும் ஒதுக்கப்பட்டது.விடியா திமுக அரசு பொறுப்பேற்றவுடன், சிறப்பு பயிற்சி வகுப்புகளுக்கு மூடுவிழா செய்யப்பட்டதை அறிந்தவுடன், நிர்வாகத் திறமையற்ற முதலமைச்சர் திரு. ஸ்டாலினை, உடனடியாக மீண்டும் அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு நுழைவுத் தேர்வு சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று பேட்டிகள் மற்றும் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி இருந்தேன். ஆனால், மருத்துவத்தோடு சம்பந்தப்பட்ட இணை படிப்புகள் பற்றிய விவரங்களோடு மாணாக்கர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் தன்னம்பிக்கை பயிற்சியை அளிக்கவும், நீட் நுழைவுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சியை அளிக்கவும் இந்த விடியா திமுக அரசு தவறிவிட்டது.நீட் தேர்வு…
Media    கழகப் பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கைதமிழக மருத்துவத் துறையைத் தொடர்ந்து சீரழித்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் வசிக்கும் திரு. தனிஷ் – திருமதி ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிசோதனை செய்யாமல், வெறி நாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஒரு கட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், வெறிநாய் கடிக்கான எந்த ஒரு தடயமும் இல்லை எனவும், மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதன் காரணமாக, குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் திருமதி ஷைனி ஊடகங்களில் தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன.சமீப காலமாக அரசு மருத்துவமனைக்கு, சாதாரண நோய்களுக்கு மருத்துவச் சிகிச்சைக்குச் செல்லும் சாமானியர்களின் கால் போகிறது; கை போகிறது; உயிரும் போகிறது என்ற அவலம் இந்த விடியா திமுக ஆட்சியில் சர்வ சாதாரணமாக நிகழ்கிறது. சளிக்குச் சென்றாலும் நாய் கடி ஊசி. உண்மையிலேயே நாய் கடிக்கும் சிகிச்சைக் கேட்டுச் சென்றால், நாய்கடி ஊசி இல்லை என்ற நிலை. தசைப் பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். சிறு குழந்தையின் தவறான் சிகிச்சையால் கை அகற்றப்பட்டு,தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவ மனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத் துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த விடியா திமுக அரசின் சுகாதாரத்துறை மந்திரி மக்கள் நலன் காக்கும்ன் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது.தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத் துறை மந்திரி, சுகாதாரத் துறை மந்திரி மா. சுப்பிரமணியன் விளையாட்டு பயிற்சியாளராக வலம் வருவதால், துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளீல் நோயாளிகளுக்கு போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும். இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது விடியா திமுக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, சுகாதாரத்துறை மந்திரி, அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.இவ்வாறு கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

via News J : https://ift.tt/ablNioD
Media2 தடவை நீட் தேர்வு எழுதியும் என்னால டாக்டராக முடியல.. நான் இந்த உலகத்த
விட்டே போறேன்.எத்தனையோ கனவுகளுடன் காத்திருந்த ஒரு டாக்டரை இந்த தமிழ்நாடு இழந்திருக்கிறது.. இல்லை இல்லை, இந்த அரசு கொன்றிருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும்… ஜெகதீஸ்வரனோடு இந்த சோகம் முடிந்துவிடவில்லை.. தன் குழந்தை இறந்த துக்கத்தை தாளாமல், கணத்த இதயத்துடன் இருந்த அவர் தந்தையும் தன் மகனின் ஆசையை நிறைவேற்ற முடியாத குற்ற உணர்ச்சியோடு அவரும் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்….தற்கொலை எதற்கும் தீர்வல்ல என்று நாம் வேண்டுமானால் க்ளாஸ் எடுக்கலாம்.. ஆனால், தலைவலியும் வயிற்றுவலியும் அவரவர்களுக்கு வந்தால்தானே தெரியும் என்ற சொலவடை போல, ஏக்கமும் துக்கமும் அவரவர்களின் வலிதானே…. அந்த வலியைக் கொடுத்த திமுக அரசின் மீதான தன் ஆதங்கத்தை தன் தற்கொலைக்கு முன்னால் வீடியோவாக வெளியிட்டிருக்கிறார் இறந்துபோன அந்த தந்தை…செல்லும் இடமெல்லாம், ஏறும் மேடைகளிளெல்லாம் ஆட்சிக்கு வந்தால் ரகசியம் வைத்திருக்கிறோம், ரசம் வைத்திருக்கிறோம் என்று வாயில் வடை சுட்ட அவியல் மன்னர்கள் உதயநிதி, கனிமொழி உள்ளிட்ட ஸ்டாலின் அண்டு கோ வினரை கிழித்து தொங்கவிடுகிறார்கள் தமிழ்நாட்டு மாணவர்கள்…எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி கே பழனிசாமி தொடர்ந்து அழுத்தம் கொடுத்தும் திராணியில்லாத இந்த விடியா அரசு என்னசெய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறது…தங்கை அனிதாவுக்காக அரியலூர் சென்று போராடிய உதயநிதி, ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வு உயிரிழப்புகள் எதையுமே கண்டுகொள்ளவில்லை… ஆனால், அதிமுக என்ன செய்தது என்று வாய்கூசாமல் கேட்கிறார் வாரிசு அமைச்சர்.. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? தமிழ்நாட்டில் என்ன நடந்தது? என்ன நடக்கிறது என்று ஏதாவது தெரியுமா இந்த விடியா அரசின் அங்கத்தினருக்கு?மாதம் ஒரு நீட் இறப்பை அசால்ட்டாக கடந்துசெல்லும் இந்த விடியா அரசு, நாங்கள் ஆளுநரின் டீ பார்ட்டியை புறக்கணிக்கிறோம் என்று சால்ஜாப்பு காட்டிக்கொண்டிருக்கிறது… சீப்பை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்றா போகும்? டீ பார்ட்டியை புறக்கணித்தால் நீட் ரத்தாகிவிடுமா? இதுதானா உங்க டக்கு என்று திமுகவை கழுவிக்கழுவி ஊற்றிக்கொண்டிருக்கிறார்கள் திமுகவின் நாடகத்தை புரிந்து கொண்டவர்கள்…ஆக, உதயநிதி தன் பாக்கெட்டில் வைத்திருப்பதாகச் சொன்ன நீட் ரத்து ரகசியம் என்ன? இத்தனை பேரை பலிவாங்கிய பிறகும்கூட அந்த ரகசியத்தை வெளியிடாததன் பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன? உண்மையாலுமே திமுக ரகசியம் வைத்திருக்கிறதா அல்லது அது வெறும் காலிப்பெருங்காய டப்பாவா என்று எத்தனையோ முறை கழுவிக் கழுவி ஊற்றினாலும் கொஞ்சம் கூட காதில் வாங்கிக்கொள்ளாத திமுகவின் சாயம் ஒவ்வொரு நாளும் வெளுத்துக்கொண்டிருக்கிறது.

via News J : https://ift.tt/FjOMfke
Mediaவிடியா திமுக ஆட்சிக்கு வந்த நாள்ல இருந்தே மக்கள் உணர்வுகள வச்சு டிராமா போடுறதே வேலையா போச்சு. ஆட்சிக்கு வந்ததும் ஆடு, தாடி கதை எல்லாம் பேசி, நாங்க ஆளுநர மதிக்க மாட்டோம், அவர் கூட அன்னம் தண்ணி பொழங்க மாட்டோம்னு எல்லாம் வசனம் பேசிட்டு, சுதந்திர தின டீ பார்ட்டி, குடியரசு தின டீ பார்ட்டினு எல்லாத்துக்கும் போய் போஸ் எல்லாம் குடுத்துட்டு வந்தாரு ஸ்டாலின்.இப்போ நீட் தேர்வு தோல்வியால மாணவன் ஜெகதீஸ்வரனும், அவங்க அப்பா செல்வசேகரும் அடுத்தடுத்த நாள்ல தற்கொலை பண்ணி உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்துல ஆழ்த்தியிருக்கு. தேர்தல்ல நீட்ட ஒழிக்கிறதா வெற்று வாக்குறுதி அளிச்ச திமுக மேல மக்களோட கோபம் திரும்பியிருக்கு… அத மடை மாத்துறதுக்காக, நாங்க நீட் ஒழிப்பு தீர்மானம் நிறைவேற்றிட்டோம்… ஆளுநர்தான் ஒண்ணுமே செய்யல… அதனால கவர்னர் கொடுக்குற டீ பார்ட்டிக்கு நாங்க போகமாட்டோம்னு சீன் போட்டுருக்காரு.
எங்களால சொன்ன மாதிரி நீட்ட ஒழிக்க முடியல.. அதனால இந்த உயிரிழப்புகளுக்கு பொறுப்பேத்து ஆட்சிய ராஜினாமா செய்யுறோம்னு சொல்றத விட்டுட்டு, டீ குடிக்கப் போகமாட்டோம்… வடை திங்கப் போகமாட்டோம்னு சொல்றதெல்லாம், இழவு வீட்டுலயும் அரசியல் பண்றவங்கதானே திமுகவுகாரங்கன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.

via News J : https://ift.tt/82zWDXH
👎1
Mediaஇந்திய சுதந்திரத்தின் 77ஆம் ஆண்டு விழாவினை கொண்டாடும் இந்நாளில் பெற்ற சுதந்திரத்தை நாம் எப்படி பேணிக் காக்கிறோம் என்பது குறித்து அலசுகிறது இந்த செய்தித் தொகுப்பு..இன்று 77வது சுதந்திர தினக் கொண்டாட்டம்… பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள் என அத்தனை இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்படும்… சட்டைப் பைகளில் மூவர்ணக் கொடியினை குத்திக் கொள்வது, முகத்தில் வரைந்து கொள்வது, வாகனங்களில் கட்டிக் கொள்வது என தேசப்பற்று வீதியெங்கும் பெருகி ஓடும். செல்போன்களில் தேசப்பற்றுப் பாடல்கள், காட்சிகள், வாழ்த்துகள் பகிரப்படும்.ஆனால் பிரிட்டிஷாரிடம் இருந்து எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் உயிர் தியாகம் பெற்று நமக்களித்த இந்த சுதந்திரத்தை நாம் எப்படிப் பயன்படுத்துகிறோம்… நமக்குள்ள சுதந்திரத்தை வைத்து நாம் எத்தனை பேரை அடிமைகளாக்கி வைத்திருக்கிறோம் என்று சுதந்திர தினத்தில் நாம் ஒரு நிமிடம் கூட சிந்திக்கவில்லை என்பதே உண்மை…அன்னியர் ஆட்சியின்போது, எங்கள் நாடு என்னும் ஒற்றை உணர்வோடு அனைவரும் சாதி, மத, இன துவேஷங்கள் இன்றி ஒன்றுபட்டு போராடினோம். அனைத்து மக்களுக்கான சுதந்திரத்துக்காக ஒவ்வொரு இனத்தினரும், மதத்தினரும் நாங்கள்தான் உயிர்கொடுத்தோம் என்று பெருமை கொள்வதற்காக போராட்ட வேள்விக்கு குருதியை கொடையாக்கி பரங்கியர் துப்பாக்கிக்கு குண்டுகளை நெஞ்சில் தாங்கினோம்…இவையெல்லாம் 1947 ஆகஸ்ட் 15ல் சுதந்திரம் பெற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இன்று இந்தியாவுக்குள்ளேயே ஒவ்வொரு மாநிலங்களும் தனித்தனி என்பது போல நடந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு மாநிலங்களுக்குள் இருக்கும் மக்களுமே சாதி, மத, இன துவேஷங்களைப் ஆராதிக்கும் மனப்பான்மையோடு இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது.மணிப்பூரில் நடைபெறும் கலவரங்களுக்கும், வடமாநிலங்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு எதிராக நடத்தப்படும் அட்டூழியங்களும், தமிழகத்தில் நடந்தேறிக் கொண்டிருக்கும் சாதித் துவேஷ சம்பவங்களும் இதனையே பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன. இதெல்லாம் நமக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரத்தின் விளைவோ என்று கூட எண்ணத் தோன்றுகிறது.சுதந்திர இந்தியாவை கூறுபோட அன்னிய சக்திகள் நேரம் பார்த்துக் கொண்டிருக்கையில் சுதந்திரத்துக்குப் பின்னர் இன்று நமக்கிடையே இருக்கும் பிரிவினைகளும், அதன் காரணமாக ஆண்டான், அடிமை என்னும் மனப்போக்குடன் நடப்பதும், அன்னிய சக்திகளின் வேலையை எளிதாக்கி உள்ளது.பொருளாதாரத்தை காரணம் காட்டி ஏழை, பணக்காரன் எனும் பாகுபாடு பார்ப்பதை விட, சாதியைக் காரணமாக்கி பார்க்கப்படும் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்னும் வர்க்கப் பாகுபாடும், அது தொடர்பான உயிர்க் கொலைகளும் நாம் பெற்ற சுதந்திரத்தையே கேலிக்குரியதாக்கி உள்ளது என்பதே உண்மை. இன்றைய சுதந்திர தினத்திலாவது இத்தகைய இழிவுகளை களைவோம் என்று உறுதி ஏற்போம்… சுதந்திரத்துக்காக உயிர்நீத்தவர்களின் தியாகங்களுக்கு உரிய மரியாதையை அளிப்போம்.

via News J : https://ift.tt/lOLHF8Q
Media2022 அக்டோபர் 17ம் தேதி தனது 50வது வருட பொன்விழாவை நிறைவுசெய்திருக்கிறது ஒன்றரை கோடி தொண்டர்களைக்கொண்ட ஒரே மக்கள் பேரியக்கமான அதிமுக.
50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் சுமார் 35 ஆண்டுகள் ஆட்சி அரியணையில் இருந்த அதிமுக கொண்டுவந்த அத்தனை திட்டங்களும் சகாப்தம் படைத்திருக்கிறது. தமிழக அரசியல் வரலாற்றில் எந்த கட்சியும் செய்யமுடியாத சாதனைகளை அதிமுக செய்திருக்கிறது.50 ஆண்டுகால அரசியலில் அதிமுக..!தமிழகத்தின் 50 ஆண்டுகால அரசியல் வரலாற்றில் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியை பிடித்த ஒரே கட்சி அதிமுக. 1977ல் முதலமைச்சரான புரட்சித்தலைவர் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்து சாதித்தார். 2011 தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்த புரட்சித்தலைவி 2016 தேர்தலிலும் வெற்றிபெற்று அந்த சாதனையை படைத்தார். அதிமுகவின் இத்தகைய வளர்ச்சியை சாத்தியப்படுத்தியவர்கள் அதன் ஒன்றரைகோடிக்கும் அதிகமான தொண்டர்களே. அதன் காரணமாகவே 2014 நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தனித்து களம் கண்டார் புரட்சித்தலைவி. 37 தொகுதிகளில் வாகை சூடி, இந்தியாவின் 3வது பெரிய கட்சியாக உருவாக்கி வேறெந்த மாநில கட்சிகளும் படைக்கமுடியாத சாதனையை படைத்து இந்திய அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓர் சகாப்தம் படைத்தது அதிமுக.தேர்தல் பிரசாரத்துக்கே செல்லாமல் ஆட்சியைப் பிடித்தக்கட்சியும் அதிமுகதான். 1984ல் அந்த புதிய சகாப்தத்தை நிகழ்த்திக் காட்டியவர் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர். தமிழகம் இன்று கல்வியில் அடைந்திருக்கும் மகத்தான வளர்ச்சிக்கு வித்திட்டதும் புரட்சித்தலைவர் தான். அவர் கொண்டுவந்த சத்துணவு திட்டம்தான்.
அதுமட்டுமின்றி அதிமுக ஆட்சியில்தான் மாணவர்களுக்கான இலவச மிதிவண்டி தொடங்கி… விலையில்லா மடிக்கணினி வரை வழங்கப்பட்டிருக்கிறது. அத்தோடு மருத்துவப் படிப்பில் சேர அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தையும் அதிமுக நிறைவேற்றியிருக்கிறது. இப்படி.. ஆதிதொட்டு இன்றுவரை கல்வியில் தமிழகம் அடைந்திருக்கும் அத்தனை வளர்ச்சியையும் சாத்தியப்படுத்தி தமிழகத்தை தலைசிறந்த கல்வி மாநிலமாக மாற்றிய அதிமுக தமிழக கல்வி வரலாற்றில் ஓர் சகாப்தமாக உயர்ந்து நிற்கிறது.அதிமுக பெண்கள் நலத் திட்டங்கள்..!அதிமுக கொண்டுவந்த எண்ணற்ற மக்கள் நலதிட்டங்கள் தமிழகத்திற்கு மட்டுமின்றி இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக இருந்திருக்கிறது. ஏழைமக்களின் பசிபோக்கும் அம்மா உணவக திட்டம் அமெரிக்காவரை அதிமுகவின் புகழை கொண்டுசேர்த்துள்ளது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்புக்கெனவும் பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி இருக்கிறது. தொட்டில் குழந்தை திட்டம், தாலிக்கு தங்கத்துடன் உதவித் தொகை, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், பெண்கள் உள்ளாட்சிகளில் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு 50 சதவீத இடம் ஒதுக்கி சட்டமாக்கியது பெண்களின் நலனில் அதிமுக மாபெரும் சகாப்தமாக திகழ்கிறது என்பதை எடுத்துச் சொல்கிறது. தமிழக மக்களின் நாடித்துடிப்பாய் செயல்பட்டு நலத்திட்டங்களை தீட்டிய கலங்கரை விளக்கம்…அதிமுக ஓர் சகாப்தம்.

via News J : https://ift.tt/nz1yuMf
👍1