வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
*சிவவாக்கிய* 🙏 *சிந்தனைகள்*

மின்_எழுந்து_மின் பறந்து மின் ஒடுங்கும் வாறு போல்,
என்னுள் நின்ற என்னுள் ஈசன் என்னுள்ளே அடங்குமே,

கண்ணுள் நின்ற கண்ணில் நேர்மை கண் அறிவிலாமையால்,
என்னுள் நின்ற என்னை யானும் யான் அறிந்தது இல்லையே!

~ சித்தர்_சிவவாக்கியரின்_
சிவவாக்கியம்-126 🙏🌙

https://t.me/truthsofsivayoga/6991

பாடல்_விளக்கம்:-❤️🔥🌙🙏
மின்னல்_வானில்_தோன்றி மின்னலாக ஒளிவீசி மின்னளுக்குல்லேயே ஒடுங்கிவிடுகிறது. அதுபோல என் உடலில் நின்று என் உயிருள் உள்ள #ஈசன்_நானாக எனக்குள்ளேயே ஒடுங்கி அடங்கியுள்ளான்.

கண்ணிலே_நின்று கண்ணிலே நேர்படும் பிம்ம்பத்தைக் கண்கள் அறியாத தன்மையினால் கண்ணைப் பற்றிய அறிவு இல்லாமையால் என்னுள் நின்ற ஆன்மாவையும் அதனுள் நின்றிலங்கும் ஆண்டவனையும் நான் எனும் ஆணவத்தால் யான் அறிய முடியாமல் ஆனதே.

ஓம் சிவவாக்கியர் சித்தர் திருவடிகள் போற்றி!! 🔥🌙🙏👑