வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
🍃🙏🙌👍💥 *உடலிற்கும், மனதிற்கும்...! நெருங்கிய தொடர்பு, உண்டு ! மனதை, வைராக்கியம், ஆக்கு ! குடலை, சுத்தம் செய் ! பசித்தால், மட்டுமே உணவை எடுத்துக்கொள்...! பசி, உடன் இரு ! உணவு, அரைப்பங்கு ! கால், பங்கு நீர் ! கால் பங்கு வெற்றிடம் ! என்ற கணக்கில், வாழத் துவங்கு ! நோயை, வெல்லலாம் ! மரணத்தில், இருந்து ! வள்ளல், வழியில் !!!*🔥🤘💥🙏
வாதம் வைத்தியம் pinned «https://www.vikatan.com/health/healthy/five-siddha-medicine-remedy-for-corona-virus»
மூலிகை_கண்ணப்பரின்_மூலிகை_தொகுப்பு.pdf
45.1 MB
மூலிகை_கண்ணப்பரின்_மூலிகை_தொகுப்பு
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
Photo from Raajan @ Singapore/Karur
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
*🔥 சிம்ம கிரியா 🔥*
🧘🏻‍♂️ _*வைரஸிலிருந்து காக்கும் 2 நிமிட பயிற்சி*_🧘🏻‍♀️

🔥 _*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நுரையீரலை பலப்படுத்துகிறது*_

உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள்.

மேலும் இச்சூழ்நலையில் தங்களை அர்ப்பணித்து நம்மை காக்க சேவை செய்து கொண்டுருக்கும் _*மருத்துவர்கள், செவிலியர்கள், காவலர்கள், சுகாதார துறையினர், அனைத்து அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் இந்த பயிற்சியை வாட்ஸ்அப் மூலம் பகிருங்கள்.*_

*🧘🏻‍♀️சிம்ம கிரியா வீடியோ👇🏼*
https://bit.ly/SimhaKriya

_மேலும் சவாலான இந்நேரத்தில் சத்குரு வழங்கும் கூடுதல் பயிற்சிகளை பற்றி அறிய_
https://bit.ly/SadhanaSupportTam

*🔥விழித்துக்கொள்... விடியல் வந்துவிட்டது...*
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
கொரோணாவுக்கான
மூலிகை கியாழம் :

30-40nos மிளகு PEPPER
இடித்த தூள் = 1 spoon,
நிலவேம்பு சூரண பொடி =1 spoon,
தாகச சூரண பொடி 1Spoon, சீரகம் =1spoon,
(*கிடைக்குமானால்..1spoon
கபசுர சூரணம், or சுவாச குடோரி
சூரணம் சேர்க்கலாம்)
+
2-3 spoon பனைவெல்ல பொடி/நாட்டு சர்க்கரை.

Prepare, drink method :
4-6ltr நீரை 1-2ltr ஆக சுருங்கும் வகையில் மிதமாக காய்ச்சி, ஆற விட்டு, வடிகட்டி குடித்து வரவும்.

*நீர் சுருக்குதல் ,
நீரை சத்துமிக்க தாக்குதல் = கியாழம்
எனும் பாரம்பரிய முறையாகும்.

🙏🌷🙏
|| சேகரமும்,பகிர்வும்..
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
அருமையான
சித்தர் ஞானப்பாடல்கள்
வரிசையில்
இதுவும் அரிதான ஒன்று!

சித்தர். ஶ்ரீபட்டினத்தாரின் பூரணமாலை பாடல்கள் 29 நிமிடம்!

பூரணமே..
பூரணமே

என்று
ஆதி இறையிடம்

மனித வாழ்வில்
தேவையற்றவைகளின்
பின்னால் அலைந்து..
தேவையான உயிர் இறையோடு ஒன்றி-
மேம்படுதலுக்கான
வாய்ப்புகளை..
தவறவிடுதலை குறித்து
தனது புலம்பல்களை..
ஆற்றாமைகளை..

102 கன்னிகளில்
தெரிவிக்கும் 🙏
ஶ்ரீ பட்டினத்து சித்தரின்
இறை-ஞானம் அலாதியானது!!
அற்புதமான
தமிழ் வளமும்
சொல் வளமும் நிறைந்தது.!👍
🤔🙏🤔
அடிக்கடி கேட்டால்
தான்
இதன் அருமை உணரமுடியும் 👌

📝
பாடலின் எழுத்து வடிவத்திற்கு :
https://sivamejeyam.blogspot.com/2017/08/?m=0

🎼📻📀
பாடலின் MP3 இசைஒலி வடிவத்திற்கு :
https://t.me/truthsofsivayoga/1840

🙏🌷🙏
|| சேகரமும்,பகிர்வும்..
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga
ஓமம்(Trachyspermum copticum)

மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு செடியாகும். விற்பனைக்காகப் பயிரிடப்படுகிறது. சுமார் ஒரு மீட்டர் உயரமாக வளர்கிறது. சிறகு போன்ற பிளவுபட்ட மெலிந்த இலைகள் நீண்ட காம்புகளில் தண்டிலிருந்து பக்கவாட்டில் நீள வளர்ந்திருக்கும். இதன் காய்கள் நறுமணமுள்ளவை. முற்றிப் பழமாகிப் பின் உலர்ந்தகாய்களே மருத்துவத்தில் பயன்படுகின்றன. இந்தியா முழுவதும் பயிரிடப்படுகின்ற ஒரு செடி வகை ஆகும். இதை வாயில் போட்டால் சற்று காரமாக சுறுசுறுவென்று இருக்கும். நல்ல மணமாக இருக்கும். இதன் விதையே மருத்துவப் பயன் கொண்டது. ஓமத்தில் மூன்று வகைகள் உள்ளன. ஓமம், குரோசாணி ஓமம், அசம்தா ஓமம் ஆகும். ஓமம் சித்த ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் இடம்பெறுகிறது. ஓமத்தில், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, கரோட்டின், தையாமின், ரிபோபுளேவின் மற்றும் நியாசின் போன்றவை அடங்கியுள்ளன.

சீதசுரங் காசஞ் செரியாமந் தப்பொருமல் பேதியிரைச் சல்கடுப்பு பேராமம்-ஓதிருமல் பல்லொடுபல் மூலம் பகமிவைநோ யென்செயுமோ? சொல்லொடுபோம் ஓமமெனச் சொல் -அகத்தியர் குணபாடம்

சீதளத்தால் உண்டாகும் சுரம், இருமல், செரிமானம் சரியாக இல்லாதது, வயிற்று பொருமல் பேதி, குடலிரைச்சல், பல் சம்மந்தமான நோய்கள், இரைப்பு நோய் (ஆஸ்துமா) ஆசனவாய் நோய்கள் இவைகளை ஓமம் போக்கும். இன்று கூட நம் கிராமங்களில் சிறு குழந்தைகளுக்கு வயிறு வலித்து அழும்போது ஓமத் திரவம் கொடுப்பார்கள். இந்த ஓமத் திரவம் ஓமத்தை காய்ச்சி எடுக்கப்படுவது. இது குழந்தைகளுக்கு ஏற்படும் செரியாமையைப் போக்கும் தன்மை கொண்டது. உடல் பலம் பெற சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் தேறமாட்டார்கள். இன்னும் சிலர் பார்க்க பலசாலி போல் தோற்றமளிப்பார்கள். ஆனால் மாடிப்படி ஏறி இறங்கினாலோ அல்லது சிறிய பொருளை தூக்கினாலோ உடனே சோர்ந்து போவார்கள். இவர்கள் ஓமத்தை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனை வெல்லம் சேர்த்து காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம்பெறும். வயிறுப் பொருமல் நீங்க சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் 100 கிராம் ஓமத்தை 1 லிட்டர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அது பாதியாக வந்தவுடன் எடுத்து அருந்தினால் மேற்கண்ட அனைத்தும் தீரும். ஓமம், மிளகு வகைக்கு 35 கிராம் எடுத்து நன்கு இடித்து பொடியாக்கி அதனுடன் 35 கிராம் பனைவெல்லம் சேர்த்து அரைத்து காலை, மாலை என இருவேளையும் 5 கிராம் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் பொருமல், கழிச்சல், வயிற்றுக் கடுப்பு நீங்கும். புகைச்சல் இருமல் நீங்க சிலருக்கு தொண்டையில் புகைச்சல் ஏற்பட்டு இருமல் வரும். இவர்கள் ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு, சித்தரத்தை, அக்கிரகாரம், திப்பிலி வேர் இவைகளின் பொடியை சம அளவு எடுத்து அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை கொடுத்து வந்தால் தொண்டை புகைச்சல் மற்றும் இருமல் நீங்கும் . மந்தம் பொதுவாக மந்தமானது சிறு குழந்தை களுக்குத்தான் ஏற்படும். மந்தம் இருந்தால் உடல் சோர்வுற்று, அஜீரணக் கோளாறு உண்டாகும். இத்தகைய மந்தத்தைப் போக்க ஓமம், சுக்கு, சித்திரமூல வேர்ப்பட்டை, இம்மூன்றும் சமபங்கு எடுத்து ஒன்றாக சேர்த்து பொடித்து அதனுடன் கடுக்காய் பொடி சேர்த்து அதில் சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுத்தால் மந்தம் நீங்கும். பசியைத் தூண்ட நல்ல தூக்கமும், நல்ல பசியும் தான் ஆரோக்கிய மனிதனுக்கு அடையாளம். இந்த பசியும், தூக்கமும் பறந்துபோனால் நோய்களின் கூடாரமாக உடல் மாறி, அதனால் மனமும் பாதிக்கப்படும். பசியைத் தூண்டி உண்ட உணவு எளிதில் சீரணமாகவும், வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகள் தீரவும், ஓமத்தை கஷாயமாக்கி அருந்திவருவது நல்லது. சுவாசகாசம், இருமல் நீங்க காற்றும், நீரும் சுகாதாரமாகவும், சுத்தமாகவும் இருந்தால்தான் மனித இனம் உயிர்வாழ முடியும். தற்போதைய காலகட்டத்தில் காற்றும், நீரும் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகிவிட்டது. இந்த அசுத்தமடைந்த காற்று, நீரால் சுவாசகாசம், இருமல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இவற்றை சீர்படுத்த ஓமம் சிறந்த மருந்தாகும்.
ஓமம் - 252 கிராம்
ஆடாதோடைச் சாறு - 136 கிராம் இஞ்சி ரசம் - 136 கிராம்
பழரசம் - 136 கிராம்
புதினாசாறு - 136 கிராம்
இந்துப்பு - 34 கிராம்
சேர்த்து ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி, தினமும் காலை, மாலை இருவேளையும் வேளைக்கு 650 மி.லி. கிராம் அளவு கொடுத்து வந்தால் இருமல், சுவாசகாசம், அஜீரணம் போன்றவை குணமாகும். மேலும் குடலிரைச்சல், இரைப்பு, பல்நோய் இவற்றிற்கும் ஓமம் சிறந்த மருந்தாகும். ஓமத்திராவகம் என்ற மாபெரும் மருந்து ஆதிகாலம் தொட்டு இன்றுவரை இருந்து வருகிறது. குழந்தைகளின் சர்வரோக நிவாரணியே ஓமத் திராவகம்தான். ஓமத்திராவகம் வீட்டில் இருந்தால் சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை வயிறு உபாதையின்றி வாழலாம். ஓமத்தை பொடித்து உச்சந்தலையில் வைத்து தேய்த்தால் ஜலதோஷம் குறையும். ஓமப்பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கும
Photo from Raajan @ Singapore/Karur