வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Audio
Audio from Raajan @ Singapore/Karur
வாதம் வைத்தியம்
Photo
1884 வருடத்தில் அச்சிடப்பட்ட
மகாகுரு. திருமூலர் பெருமானின்
*வைத்திய காவியம் ஆயிரம்* எனும் அபூர்வமான அரிதான சித்தர் சுவடி பாடல் நூல்

உடம்பை பேணும் கலையில்
வைத்தியம் என்பதில்
அதீத ஞானம் பெற்றிட
இப்புத்தகம் உதவும்.

Ebook
தரவிரக்கம் செய்ய :
https://t.me/vahaaramaiyam/993

🙏🌷🙏
|| சேகரமும்,பகிர்வும்..
★கருவூரான்★
www.t.me/vahaaramaiyam
வாதம் வைத்தியம் pinned «1884 வருடத்தில் அச்சிடப்பட்ட மகாகுரு. திருமூலர் பெருமானின் *வைத்திய காவியம் ஆயிரம்* எனும் அபூர்வமான அரிதான சித்தர் சுவடி பாடல் நூல் உடம்பை பேணும் கலையில் வைத்தியம் என்பதில் அதீத ஞானம் பெற்றிட இப்புத்தகம் உதவும். Ebook தரவிரக்கம் செய்ய : https://t.me/…»
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
அகத்தியர் பஞ்சகாவிய சுவடி !!
https://t.me/truthsofsivayoga/3449
👆பூரணம் ஆயிரம்-
குரலொலி நூல் அறிமுகம் 👆

https://t.me/truthsofsivayoga/3456
1 to 5 பாடல்வரை ..☝️
பூரணகாவியம் ஆயிரம்

https://t.me/truthsofsivayoga/3467
6 to 10 பாடல்வரை ..
பூரணகாவியம் ஆயிரம்
எனும் சுவடியின் ஒரு பகுதி
(அகத்தியர் பஞ்சகாவிய தொகுப்பு) !!👆 பாடல் குரலொலி வடிவத்தில்.

🙏🌷🙏
|| சேகரமும்,பகிர்வும்..
★கருவூரான்★
www.t.me/truthsofsivayoga
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
🌼【சாியை, கிாியை, யோகம், ஞானம்.】

● இறைவனையடைய, ஆன்மா முக்தி அடைய, மோட்சம் பெற்றிட,
பரபிரம்மமாகிட..

சாியை, கிாியை, யோகம், ஞானம் என நான்கு வழிகள் சிவயோகத்தில் உண்டு.

🌹இறைவன் சாியையிலே உள்ளவா்களுக்கு சிலையில் நின்றாா்.

🌹இறைவன் கிாியையிலே உள்ளவா்களுக்கு
யந்திர-மந்திர
வடிவமாக நின்றாா்.

🌹இறைவன்
யோக நிலையில் உள்ளவா்களுக்கு உள்ளொளி- கனலாக
நின்றாா்.

🌹இறைவன்
ஞான நிலையில் உள்ளவா்களுக்கு அன்பே தாமாய்/சிவமாய் எப்போதும் விளங்கித் தோன்றியும் அருள் புாிகின்றாா்.


சாியையாவது.. எஜமானனிடம் வேலைக்காரன்/அடிமை நடந்து கொள்வதற்கு ஒப்பாகும்.
இதுதான்~
தாச மார்க்கம்!


கிாியையாவது தந்தையிடம் மகன் அழகாகப் பேசி,
கிட்ட நின்று, தந்தையைத் தொட்டு அவா் மனதை மகிழ்வித்து, அவனுக்கு வேண்டியதைப் பெற்றுக் கொள்வதை ஒப்பாகும்.
இதுதான்
~ சற்புத்திர மார்க்கம்!


யோகமாவது
ஒரு நண்பனோடு
ஒரு நண்பன் உாிமையுடன் உறவு பாராட்டிப் பழகுவதை ஒப்பாகும்.
இதுதான்~ சக மார்க்கம்!


ஞானமாவது
கணவனும் மனைவியுமாகிய இரண்டு பேரும் உடல் வேறானாலும் உயிா் ஒன்றாக நின்று,

இரண்டும் ஒன்றும் இல்லாமல்,
ஒருவரது இன்பம் மற்றவருடையதாக ஒன்று சோ்ந்து
உாிமை-உயிா்த்துணை கொண்டுள்ளதற்கு ஒப்பாகும்.
இதுதான்~
சன் மார்க்கம்.!
(சுத்த சமசர சன்மார்க்கம்)

இவ்வழி மார்க்கத்தில்..

இறையடைய

பாலபருவம்,
பிரம்மச்சரியம்,
கிருகஸ்தம்,
வானப்பிரஸ்தம்,
சந்நியாசம்,
நிர்வாணம்
(துறவி,
யோகி,
ஞானி)
என
பயணிப்பதே..
"சனாதன தர்மம்"
எனும் பாரத
வாழ்க்கை
நெறியாகிறது.

இதைதான் தாயுமான சுவாமிகளும்..

"விரும்புஞ்சாியை
முதல் மெய்ஞ்ஞான நான்கும்
அரும்பும், மலா்,
காய், கனிபோல் அன்றோ பரா பரமே!" எனப் பாடியுள்ளாா்.

நமது ஆலயங்கள் ஒரு யோகியின் சரீரத்தின் கண் அமைந்துள்ள தத்துவங்களை விளக்குகின்றன.

யோகியின் பாதம் முதல் சரீரம் வரையுள்ள பாகங்களையும்,

அவனது சிரசே இறைவன் விளங்கும் தன்மையையும்..
மெய்-விஞ்ஞானமாக புராதண கோயில்கள் எனும் ஆலயங்கள்
நன்றாக
எடுத்து காட்டுகின்றன.

ஆகவே,
சாியை,
கிாியை கடைபிடிப்பவா்களை யோகிகளாக்க..

ஆலயங்கள்/
கோவில்கள் பயன்படுகின்றது எனலாம்.

தற்காலத்தில் பலா் கோவில்கள் பக்கமே வருவதில்லை, போவதில்லை.

அதனாலேயே
இறைபெரியோர்கள்
பார்த்து பார்த்து
உருவாக்கிய
ஆலய பொக்கிஷங்கள்
இன்று
அதை காக்கும்.. கயவர்களாலேயே
களவாடப்படும்
கொடுமைகள்
நடந்தேறி வருகிறது.
அதனாலோ..
என்னவோ!
பூதேவி பொங்கும்
நாள் (பூகம்பமும்) நெருங்குகிறது.

இது
இப்படியிருக்க
எப்படி "ஞானம்"வரும்?

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று"
என ஔவையார் சொன்னதை
எப்போது நம்மவர்கள் அறிந்து உணர்வது
எக்காலம்?
🙏🦚🙏
சேகரமும்,பகிர்வும்:
~கருவூரான் @Raajan,
(Singapore/Karur)
My Channel Link:
t.me/truthsofsivayoga
Photo from Raajan @ Singapore/Karur
மனம் என்பது ஒருபோதும் அமைதியாக இருக்க முடியாது

ஒரு மனிதர் அமைதியாக இருக்கிறார் என்றால்

அதன் பின்னால் அவர் மனமற்று இருக்கிறார் என்றுதான் பொருள்

மனம் இருக்கும் வரையில் ஒரு
மனிதன் அமைதியாக இருக்க முடியாது

அப்படி மனம் இல்லாமல்
இருக்கும் போது

நீங்கள் உங்கள் உடலை
உணர முடியாது

ஏனெனில்

மனம் என்பதன் வழியாகத்தான் நீங்கள் உடல் என்பதை உணர்கிறீர்கள்

மனம் என்பது இல்லாத போது

நீங்கள் என்பது இந்த உடல்தான் என்று உங்களால் உணர முடியாது

இந்த உடல் உங்களது தன்னுணர்வில் இருந்து மறைந்து போய் விடும்

அங்கே உடலும் இருக்காது மனமும் இருக்காது

சுத்த இருப்பு நிலை மட்டுமே எஞ்சி நிற்கும்

அத்தகைய சுத்த இருப்பு நிலைதான் உண்மையான அமைதி

இந்த அமைதியை அடைவது
எப்படி..???

நீங்கள் வெளியே எதைச் செய்தாலும்

அது பயனற்றதாகத்தான் இருக்கும்

செய்தலுக்கும் அமைதிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

மனம் என்பது இல்லாதபோது

ஆத்மாவானது அமைதியாக
இருக்கும்போது

இந்த உடல் அதை நிழல் போல்
பின் தொடருகிறது

அப்போது உடல் ஒரு குறிப்பிட்ட
ஆசனத்தை ஓய்வு நிலையை எடுக்கிறது

ஆனால் இதை நீங்கள் அப்படியே மாற்றிச் செய்ய முடியாது

நீங்கள் முதலில் ஒரு ஆசனத்தில் அமர்ந்து

அதன் பிறகு அமைதியை பின் தொடர வைக்க முடியாது

புத்தருக்கு முதலில் அக நிகழ்வு
நடந்தது

அதன் பிறகு அந்த அமரும் நிலை பின் தொடர்ந்தது

எனவே வெளியில் இருந்து நீங்கள் ஆரம்பிக்கும் போது

ஒரு பொய்யான நிலையை
உருவாக்குகிறீர்கள்

உண்மை நிலை எப்போதும் மையத்தில் தான் ஆரம்பிக்கும்

அதன் பின்னர் தான் அதன் அலைகள் மேற்பரப்பிற்கு வந்து சேரும்

உங்களுக்குள் உள்ள மையம்
அமைதியில் இருக்கிறது

ஆகவே முதலில் அங்கிருந்து
ஆரம்பியுங்கள்

ஓஷோ
விழிப்புணர்வு
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (🌙RAA JA N🌞 (Singapore/Karur))
நாளை சித்ரா பௌர்ணமி க்கு..
இந்த
https://youtu.be/u_uEogrroXc
முழு நிலவொளி தியானம் 👆👌👍🌙🌝
செய்து பாருங்கள் !!
*எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும் கருப்பட்டி..!*

பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. விட்டமின்-பி, மற்றும் அமினோ அமிலங்கள் நிறைந்துள்ள கருப்பட்டி நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது.

பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத் தால் கருப்பை ஆரோக்கியமாக இருக்கும். நார்ச்சத்தும் இதில் அதிகம்.



குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.



கருப்பட்டியில் இருக்கும் பொட்டாசியம், நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானது. மேலும் இது நரம்புகளின் மென்மையான செயல்பாட்டிற்கு உதவி புரியும்.



கருப்பட்டி மற்றும் பனங்கல்கண்டில் எண்ணற்ற விட்டமின்களும், மினரல் சத்துக்களும் உள்ளன. கருப் பட்டி இயற்கையாகவே உடலை குளிர்ச்சியடையச் செய்யும். அதில் உள்ள 'கிளைசீமி இன்டெக்ஸ்' உடலில் கலக்கும் சர்க்கரை அளவை, வெள்ளை சர்க்கரையை விட பாதிக்கும் கீழாக குறைக்கிறது.



சர்க்கரைக்குப் பதிலாக கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது.



குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி கருப்பட்டி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள் வலுப்பெற்று எலும்புகள் தேய்மானம் போன்றவை ஏற்படாமல் காக்கும்.



கருப்பட்டி கால்சியம் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் கொண்டதாக இருக்கிறது.இனிப்பு உணவுகளில் நாம் பெரும்பாலும் வெள்ளை சர்க்கரையை சேர்த்து பயன்படுத்தும் இந்த வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டியை இனிப்பு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு கால்சியம் அதிகம் கிடைத்து நமது உடலில் பற்களும், எலும்புகளும் வலுப்பெறும்.
Photo from Raajan @ Singapore/Karur