வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
*ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு....*
________________________________
*ரிஷிகள் ஏழு...*

அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
________________________________
*கன்னியர்கள் ஏழு...*

பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி,
வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
________________________________
*சஞ்சீவிகள் ஏழு...*

அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
மார்க்கண்டேயர்,
வியாசர்,
பரசுராமர்,
அசுவத்தாமர்.
________________________________
*முக்கிய தலங்கள் ஏழு....*

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
________________________________
*நதிகள் ஏழு...*

கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
________________________________
*வானவில் நிறங்கள் ஏழு...*

ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு.
________________________________
*நாட்கள் ஏழு...*

திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
________________________________
*கிரகங்கள் ஏழு...*

சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.
________________________________
*மலைகள் ஏழு...*

இமயம்/கயிலை,
மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
________________________________
*கடல்கள் ஏழு..*

உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
________________________________
*மழையின் வகைகள் ஏழு...*

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
________________________________
*பெண்களின் பருவங்கள் ஏழு...*

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
________________________________
*ஆண்களின் பருவங்கள் ஏழு......*

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
________________________________
*ஜென்மங்கள் ஏழு...*

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
________________________________
*தலைமுறைகள் ஏழு....*

நாம் -
முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
________________________________
*கடை வள்ளல்கள் ஏழு...*

பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
________________________________
*சக்கரங்கள் ஏழு...*

மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம்,
மணிபூரகம்,
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
________________________________
*கொடிய பாவங்கள் ஏழு....*

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
________________________________
*கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...*

ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
________________________________
*திருமணத்தின் போது அக்னியை சுற்றும் அடிகள் ஏழு ...*

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.
சனாதன தர்மத்துடன்...
🙏🙏
*மரபுக் கட்டிடக்கலை*
(பாரம்பரிய கட்டிடக்கலை)
உண்மையாக ஒரு வீடு என்றால் அதில் உயிர் இருக்க வேண்டும்...
நீர், வெப்பம், காற்று ஆகிய மூன்றையும் ஓர் உயிரினம் எப்படித் தனதாக்கிறது?
இம்மூன்றில் எதை அதிகமாக வைத்துகொள்கிறது? என்பதைப் பொறுத்து அதன் வடிவம் மாறும். எல்லாவற்றுக்கும் அடிப்படை ஐம்பூதக்கொள்கை. இந்த ஐம்பூதக்கொள்கை இல்லாமல் அல்லது அதைப் பற்றிச் சொல்லாமல் பூமியில் எதைப் பற்றியும் பேச முடியாது. எத்தனைக் கோடி பொருட்கள் இருந்தாலும், அவையாவும் ஐந்துக்குள் அடக்கம். மரபுக் கட்டிடக் கலையின் கொள்கை ஐம்பூதங்களைப் பற்றிய புரிதலின் விளைவுதான்.

*விலை- 100ரூ*

*நூலைப் பற்றி*
ஐம்பூதக் கொள்கையின் அடிப்படையில் கட்டுமானத்துக்கான கூறுகள் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகின்றன, அதன் பண்புகள் என்ன?, சூழலை சிதைக்காத, பெரும் பொருளாதாரத்தைச் சாராத கட்டுமானத்தை உருவாக்க அறிந்துகொள்ள வேண்டியவை என்ன என்பதைப் பற்றிய புரிதலைத் தரும் புத்தகம்..

*தொடர்புகொள்ள- 9445903067*
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Video from 🌏Raajan@Singapore🌞
நலம் காக்கும் சித்த மருத்துவம் :
*நீராடல்* (இயற்கை ஆரோக்கிய குளியல் முறை) :-

அன்றாடச் செயல்களாலும் உடற்பயிற்சியாலும் உடல் வெப்பத்தினாலும் தோன்றும் வியர்வையும் அழுக்கும் உடல் முழுவதும் உள்ள முடியின் வேர்ப்பகுதியில் தங்கும். இவற்றை முழுமையாக நீக்குவதற்காக தினமும் நீராடல் அவசியம். அன்றாடம் உச்சி முதல் உள்ளங்கால் வரை நீர் முழுவதும் நனைந்து ஊறி மாசுகள் முற்றிலும் நீங்குமாறு நீராடல் வேண்டும். மாசுக்கள் முழுமையாக நீங்காவிட்டால் முடியின் வேர்ப்பகுதி அடைபட்டு உடற்கழிவுகள் வெளியேறாது. இவை இரத்தத்தில் மீண்டும் கலந்து பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.





சித்தர்களின் வழியை பின்பற்றிய தமிழர்கள் அன்றாடம் சூரிய உதயத்திற்கு முன்பாகவே குளிக்கும் பழக்கத்தைப் பின்பற்றினர். இதனை கீழ்கண்ட சித்தர் பாடலால் நாம் உணரலாம்.
💦
“காலைக் குளித்தல் கடும்பசி நோயும் போம்

மாலைக் குளிக்க இவை மத்திமமே – சோலையுடை

வாசநீர் சுத்த சலம் வன்னி நீராடுங்கால்

தேசமுடற் பேத முன்னிச் செப்பு”
💦
காலையிலும் மதியமும் கடும் வேலையில் ஈடுபடுவோர் மாலையிலும் குளித்தல் வேண்டும். அக் காலத்தில் ஆறு, ஏரி அல்லது நீர் போக்கு வரத்து உள்ள நீர் நிலைகளில் மக்கள் குளித்து வந்தனர்.

இது இப்போது கிராமப்புறங்களில் ஆற்றோரம் வாழும் நகரப்புறங்களில் மட்டுமே சாத்தியப்படும். மூழ்கிக் குளிப்பதால் மட்டுமே உடலில் உள்ள வளி, அழல், ஐயம் என்கிற உயிராற்றல்கள் இயல்பு நிலையினை அடையும் என சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.
💧
அருவியில் குளிப்பதாலும் இதே நன்மைகள் கிடைக்கும்.
இதனை “ காந்தி பலம் பசியுங் கட்டழகு முண்டாகும் “ என சித்தர் பாடல் கூறுகின்றது. அதிகாலையில் மேற்கூறியவாறு குளிப்பதால் உடல் அழகு கூடும்.
வலிமை கூடும். பசியுண்டாகும்.
💦
அவ்விதம் குளிக்கும் போது உடலின் ஒன்பது வாயில்களிலும் நீர் நிறைந்து அவற்றைக் குளிர்விக்க வேண்டும். கண்களில் 2 – 3 துளிகள் விட்டுத் தூய்மைப்படுத்த வேண்டும். தலையைச் சாய்த்து காதில் நீரினை விடல் வேண்டும். பின்பு தலையை நிமிர்த்தி நீரினை வெளியேற்ற வேண்டும். வெளியேறும் நீர் சூடாக வெளியேறும். மீண்டும் மீண்டும் இவ்விதம் செய்வதால் வெளியேறும் நீர் சூடு இல்லாமல் வெளியேறும். அப்போது உடலின் வெப்பம் இயல்பு நிலையை அடைந்து விட்டதாகக் கருத வேண்டும். இது போன்று ஒவ்வொரு துவாரமாகத் தூய்மைப் படுத்த வேண்டும். இது தான் சித்தர்கள் கூறும் விதி. நான் கூறுவது என்னவெனில் இது போன்று தினமும் செய்ய இயலவில்லை எனில் வாரத்திற்கு இரண்டு முறையாவது இதுபோல் செய்வதால் உடல் இயக்கம் சீராகி உடல் வலிமையடையும்.
💧
உடலின் மேற்பரப்பிலும் மறைவிடங்களிலும் பல நன்மை விளைவிக்கும் நுண்ணுயிர்கள் ( Bacterias ) உள்ளன. இவை உடலிற்கு வெளிப்புறமிருந்து உடலைத்தாக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து உடலைப் பாதுகாக்கும். அந்த நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு எதிராக சோப்புகள் செயல்படுவதால் மறைவிடங்களில் கட்டிகள், படை, அரிப்பு (Fungal and Protozoal infections of skin ) போன்றவை ஏற்படும். குறிப்பாகப் பெண்களுக்கு வெள்ளை படுதல் ( White discharge ) ஏற்படுவதற்கு இந்த நுண்ணயிர் எதிர் சோப்புகளே ( Anti Bacterial Soaps ) பெரும்பாலும் காரணமாகின்றன.
💧
சோப்புகளுக்குப் பதிலாக நாம் எதனைப் பயன்படுத்துவது ?




உடலைத் தூய்மைப்படுத்து வதற்கு ஏராளமான மூலிகைப் பொடிகளை சித்தர்கள் கூறியுள்ளார்கள்.





பாசிப்பயிறு, கடலை மாவு போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட மூலிகைப் பொடிகளை நாம் பயன்படுத்தத் தொடங்க வேண்டும். நலுங்கு மாவு, பஞ்ச கல்பக் குளியல் பொடி போன்றவை இப்போது சித்த மருந்துக் கடைகளில் கிடைக்கும். இவற்றை நாம் குளியலுக்காகப் பயன்படுத்தலாம்.
💦
*பஞ்ச கல்ப சூரணப் பொடி*

கஸ்தூரி மஞ்சள், மிளகு, வேப்பம் வித்து, கடுக்காய்த் தோல், நெல்லிப் பருப்பு இவற்றை சம அளவு கலந்து பசுவின் பால் விட்டு அரைத்து சிறிது சூடு செய்து இளம் சூட்டுடன் உச்சியிலும் உடலிலும் பூசி சிறிது ஊறவிட்டு குளித்து வந்தால் எந்த நோயும் உடலை நெருங்காது என சித்தர்கள் கூறுகின்றனர். மன அமைதி ஏற்பட்டுத் தெளிவான அறிவும் உண்டாகும். இதனை வாரம் ஒருமுறையாவது பயன்படுத்தி நாம் பலனடைய வேண்டும்.
அனேக நற்பலன்களை உடலுக்கு அளிக்கும். குறிப்பாக யோகப்பயிற்சியின் போது உடலில் ஏற்படும் வெப்ப மாறுபாட்டினை ஒழுங்குபடுத்தும்.
💦
தினமும் பயன்படுத்தும் மூலிகைக் குளியல் பொடி :-

பாசிப்பயிறு மாவினை அடிப்படைப் பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் எராளமான குளியல் பொடிகள் உள்ளன. அவற்றில் கலக்கப்படும் முக்கிய மூலிகைகள் கிச்சிலிக் கிழங்கு, கார்போகரிசி, அகில்கட்டை, சந்தனம், தேவதாரு, கிளியூரல் பட்டை, நீரடிமுத்து, வெட்டிவேர், கத்தூரி மஞ்சள், கோரைக்கிழங்கு, பளிங்குச் சாம்பிராணி, துளசி, திருநீற்றுப்பச்சிலை போன்றவைகளாகும். இவற்றை முழுவதும் அரைத்தும் பாசிப்பயிறுடன் கலந்து பயன்படுத்தலாம் அல்லது ஏதேனும் சிலவற்றை மட்டும் கலக்கலாம். தனி
வாதம் வைத்தியம்
Video from 🌏Raajan@Singapore🌞
பயிறு மட்டுமே உடலில் தேய்த்துக் குளிக்கப் பயன்படுத்தலாம். மூலிகைகள் கலந்து குளிப்பதால் உடலில் தோல் பிரச்சனைகள் ஏற்படாது. உடலிற்கும் உள்ளத்திற்கும் வலிமையை ஏற்படுத்தும்.
💧
தினமும் மூலிகைப் பொடியால் (அதாவது
இடித்து சலிப்பது சூரணம்) குளிப்பதால் ஏற்படும் சில பல நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
💧💦💧
1. தோல் மற்றும் தசையில் உள்ள இறுக்கத்தைத் தளர்த்துகின்றது. இதனால் அவற்றின் சுருங்கி விரியும் தன்மையும் வளையும் தன்மையும் மேம்படுகின்றது.
💧
2. இரத்த ஓட்டத்தினை சீர்படுத்துவதால் அதி இரத்த அழுத்தம் ( High Blood Pressure ) குறைந்து இயல்பு நிலையை அடைந்து இதய இயக்கம் சீராகின்றது.
💧
3. குளிர்ந்த நீரில் தினமும் குளிப்பதால் இரத்த ஓட்டத்துடன் நிணநீர் ஓட்டமும் ( Lymph System ) சீராவதால் நோய் எதிர்ப்பாற்றல் மேம்படும்.
💧
4. மன அழுத்தம், மனப்பதட்டம், விரக்தி மனப்பான்மை நீங்குகிறது.
💧
5. ஆண்களுக்கும், பெண்களுக்கும் இனப் பெருக்க உறுப்பு மண்டலத்தைச் சீர் செய்கிறது. குளிர்நீர்க் குளியலால் விந்தணுக்கள் எண்ணிக்கை உயர்வதும் பெண்களுக்குப் பூப்பு சுழற்சி சீராவதும் ஆய்வுகளின் மூலம் உறுதி படுத்தப் பட்டுள்ளது. இருவருக்கும் குழந்தைப் பேறு ஏற்படுத்தும் வாய்ப்பினை அதிகப்படுத்தும்.
💧
6. குளிர்நீரில் தொடர்ச்சியாகக் குளிப்பதால் இரைப்பு இருமல் ( Bronchial Asthma ), பீனிசம் ( Sinusitis ) போன்ற மூச்சுப்பாதை நோய்கள் சரியாகின்றன. நுரையீரல் இயக்கம் சிறப்பாக சீர்படுத்தப் படுகின்றது.
💧
7. குளிர்நீரில் மூழ்கியோ உடல்முழுவதும் குளிரும்படியாகவோ குளிப்பதால் சர்க்கரை நோயர்களில் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது.
💧
8. உடலின் நச்சுக்கள் முழுமையாக நீக்கப் படுகின்றது.
💧
9. இரவு இயல்பான, அமைதியான, ஆழ்ந்த உறக்கம் ஏற்படுகின்றது.
💧
10. உடல் அழகு மேம்படுகின்றது.
💧
11. பசி ஆர்வம் அதிகமாகின்றது. குளிர் நீர் குளியல் வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் சீராக நடக்க உதவுகின்றது.
💧
12. தோல், முடி நலம் பேணப்படுகின்றது.
💧
13. மூளை நரம்பு மண்டலம் பலப்படுகின்றது. ஞாபக ஆற்றலும் புத்திக் கூர்மையும் ஏற்படுகின்றது. மாணவர்களின் கற்கும் திறன் மேம்படும். இளைஞர்களின் செயலாற்றல் உயர்கிறது.
💦
நாள் முழுவதும் நாம் சிறப்பாகச் செயல்பட சித்தர்கள் கூறியபடியான குளியல் வழிவகை செய்கின்றது.
💧🙏💧
வேதியியல் குளியலிலிருந்து விடுபட்டு மூலிகைக் குளியலுக்கு மாறுவோம்.

🙏🙏
நன்றிகள்
சேகரமும், பகிர்வும்:-
★கருவூரான்★
வாதம்-வைத்தியம் குழு:-
www.t.me/vahaaramaiyam
👁 U-tube#: Karuvooraan
https://youtu.be/hdW9uVCMFUc

☝️
அவதார் படத்தில் வருவது போல..
*கூடுவிட்டு கூடு பாய்தல்*
(பரகாய பிரவேசம்)
சாத்தியமா என
விளக்குகிறார்.👌
ஆவிகள் உலக ஆராய்ச்சியாளர்
விக்ரவாண்டி. ரவிச்சந்திரன் ஐயா
அவர்கள் 👇

https://youtu.be/hdW9uVCMFUc
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo from 🌏Raajan@Singapore🌞
*இன்றைய (30/12/2019) மூலிகை செய்தி*

*வெற்றிலை*

1. மூலிகையின் பெயர் -: வெற்றிலை.

2. தாவரப் பெயர் -: PIPER BETEL.

3. தாவரக்குடும்பம் -: PIPER ACEAE.

4. வேறு பெயர் -: தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் என்பன.

5. வகைகள்-கம்மாறு வெற்றிலை, கற்பூரவெற்றிலை மற்றும் சாதாரண வெற்றிலை என்பன.

6. பயன்தரும் பாகங்கள் -: கொடியின் இலை மற்றும் வேர்.

7. வளரியல்பு -: இது இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும், வளர்கிறது. இது ஒரு கொடி வகையைச் சேர்ந்தது. இதன் இலைகள் இதயவடிவில் பெரிதாக இருப்பதோடு நுனி கூர்மையாகவும் இருக்கும். வடிகால் வசதி இருக்கவேண்டும். அகத்தி மரங்களை இடையில் வளர்த்தி அதில் கொடிகள் வளர வளர கட்டிக்கொண்டே செல்வார்கள் மூங்கில் களிகளையும் பயன்படுத்துவார்கள். இதை ஆற்றுப் படுகைகளில் வியாபார ரீதியாக அதுகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றலையாகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் , காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: பொதுவான குணம். சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும். நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடம் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறு நீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

குழந்தைகளுக்கு வரும் சுரம், சன்னிக்கு, வெற்றிலைச் சாற்றில் , கஸ்தூரி, கோரோசனை, சஞ்சீவி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை மத்தித்து தேனுடன் கொடுக்க குணமாகும். சளி, இருமல், மாந்தம், இழுப்பும் குணமாகும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலர்ச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

கம்மாறு வெற்றிலைச் சாறு 15 மி.லி. அளவு வெந்நீரில் கலந்து கோடுக்க வயிற்று உப்புசம், மந்தம், சன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம் வயிற்று வலி குணமாகும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுக சூரணத்துடன் வெற்றிலைச் சாறு தேன் கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும். 5 கிராம் சூரணம்+10 மி.லி. வெற்றிலைச்சாறு தேன் 10 கிராம் கலந்து காலை, மாலை நோயிக்குத் தக்க வாறு 48-96 நாள் சாப்பிட வேண்டும்.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்பால் அதிகமாகச்சுரக்கும்.

வெற்றிலைச் சாறு நான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும்.

விடாது மூக்கில் ஒழுகும் சளிக்கும் வெற்றிலைச்சாற்றை மூக்கில் விட குணமாகும்.

ஒரிசாவில் சில பகுதிகளில் பெண்கள் குழந்தைகள் பிறக்காமல் தடுக்க 10 கிராம் வெற்றிலை வேரையும், மிளகையும் சம அளவு வைத்து அரைத்து 20-40 நாட்கள் சாப்பிட்டு வருகிறார்கள்.

வெற்றிலையின் வேரை சிறுதளவு எடுத்து வாயிலுட்டு மென்று வர குரல் வளம் உண்டாகும். எனவே இசைக்கலைஞர்கள் இதனை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

நுரையீரல் சம்பந்தமான நோய்களிக்கு வெற்றிலைச்சாறும், இஞ்சிச் சாறும் சம அளவு கலந்து அருந்திவர நன்மை ஏற்மடும்.

சிறுவர்களுக்கு அஜீரணத்தைப் போக்கி பசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுத்து வரலாம்.
*ஆன்மீகத்தில் பயன்படுத்தப்படும் தருப்பை புல்லின் சிறப்புகள் என்ன தெரியுமா...?*


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*

தருப்பையை "திருப்புல்" என்றும் கூறுவார்கள். திருப்புல் என்னும் சொல்லும் ," தூப்புல்" என்னும் சொல்லும் நாணல் இனத்தைச் சேர்ந்த ஒருவகைப் புல்லைக் குறிக்கும் சொல்லாகும்.
"தூப்புல்" என்பதற்கு "தூய புல்" என்று பொருளாகும். இத்தகைய சிறந்த புல்லிற்கு இயல்பாக ஏற்பட்ட ஏற்றத்தை விட ஸ்ரீ இராமன் திருமேனி பட்டதால் மேலும் அதிக சிறப்பு வளர்ந்தது .


நம் முன்னோர்கள், மங்கலம், அமங்கலம் ஆகிய இரு வகைப்பட்ட வைதீகச் சடங்குகளிலும் தருப்பை என்ற புல்லைச் சிறப்பாகப் பயன்படுத்துகின்றனர். தருப்பை மூன்று தோஷங்களைச் சமப்படுத்தும். அக்னி போன்றது; உஷ்ண வீரியம் உடையது, அதிவேகமுடையது , நீரை சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது.

உலோகங்களின் அழுக்கைப் போக்கக் கூடியது. தேவர்களுக்கும், பித்ருக்களுக்கும் உகந்ததாயும் அமைந்தது. புண்ய பூமியில் மட்டுமே முளைக்கக்கூடியது. "அக்னி கர்பம்" என்னும் வட நூல் ஒன்றில் தர்பையின் பெயர் குறிப்பிடப்படுகிறது.

கோயில் கும்பாபிஷேகங்களில் அதிகமாகப் பயன்படுத்தப் படும் தர்பை, வைதீகச் சடங்குகள் செய்யும் பொழுது "பவித்ரம்" என்ற பெயரில் தருப்பையை வலது கை மோதிர விரலில், மோதிரம் போல அணிவார்கள். அந்த விரலில் கப நாடி ஓடுவதால், தர்பையை அணியும் போது, கப நாடி சுத்தி பெரும்.

இப்புல்லில் காரமும் புளிப்பும் இருப்பதினால் தான் செப்பு முதலிய உலோகத்தினால் ஆன விக்கிரகங்களை இந்த தருப்பைப் புல்லின் சாம்பலால் தேய்க்க வேண்டும் எனக் கூறுகின்றனர். அதனால் அவ்விக்கிரகங்கள் பல நாள் கெடாமல் இருக்குமாம். அவ்விக்கிரகங்களின் மந்திர ஆற்றலும் குறையாதாம்.


இந்தப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் பல நாட்கள் வாடாது. நீர் நிலையில் தோய்ந்தே இருந்தாலும் அழுகாது . இதனை "அம்ருத வீரியம்" என்றும் சொல்வார்கள். இந்தப் புல் உலர்ந்து போனாலும் இதன் வீரியம் குறையாது. சூரிய கிரகணத்தின் போது இதன் வீரியம் அதிகமாகும். இப்புல் பட்ட நீரைத் தெளித்த இடத்தில் தொற்று நோய்கள் தொற்றுவதில்லை.

நீர்க்கரையில் உள்ள தருப்பைப் புல்லில் பட்டு, வீசும் காற்றினால் உடலின் நலன் பெருகும். மேலும் சூரிய கிரகணத்தின் போது தர்ப்பைக் கொண்டு உணவுப் பண்டங்களை மூடும் போது, சூரியனிடம் இருந்து கிளம்பும் வேண்டாத கிரகண ஒளிகள் அந்த உணவுப் பண்டங்களை பாதிக்காது என்றும் சொல்லப்படுகிறது.


*பகிர்வு*

*┈┉┅━❀•ℙᏉᎫℙ•❀━┅┉┈​​​​​​​​​​*
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo from 🌏Raajan@Singapore🌞
உடல் பலன் பெற/உடல் சோர்வு நீங்க/நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க/உடல் எடை அதிகரிக்க/நரம்பு பலன் பெற சத்துமாவு செய்முறை விளக்கம்_1

1 வயது முதல் தினசரி எடுத்து கொள்ளும் 100% இயற்கை கைக்குத்தல் சத்து மாவு

தேவையான மூல பொருட்கள்:

கேழ்வரகு – 50கி
கம்பு – 50கி
சோளம் – 50கி
கோதுமை – 50கி
புழுங்கல் அரிசி – 50கி
பார்லி – 50கி
ஜவ்வரிசி – 50கி
பச்சை பயறு – 50கி
சோயா பீன்ஸ் – 50கி
கருப்பு சுண்டல் – 50கி
மக்காச்சோளம் – 50கி
வறுத்த வேர்க்கடலை – 100கி
பொட்டுக்கடலை – 50கி
முந்திரி – 50கி
பாதாம் – 50கி
ஏலக்காய் – 50
வெள்ளை கொண்டைக்கடலை – 50கி
நாட்டு சக்கரை - 500கி

செய்முறை:

மேலே குறிப்பிட்டுள்ள மூல பொருட்களை வாங்கி காயவைத்து நன்கு சுத்தம் செய்து அரைத்து வைத்து கொள்ளவும்
காற்று புகாத இடத்தில் வைத்து கொள்ளுங்கள்

சாப்பிடும் முறை:

200ml பாலில் 1 ஸ்பூன் பவுடரை கலந்து குடிக்கவும்,குந்தைகளுக்கு பால் கலந்து ஊட்டலாம் கர்ப்பிணிகள்,குழந்தைகள்,உடல் மெலிந்தோருக்கு மிக்க நல்லது

பலன்கள்:

ரத்த ஓட்டம் சீராகும்
ரத்த அணுக்கள் அதிகரிக்கும்
நரம்புகள் பலம் பெறும்
உடல் எடை அதிகரிக்கும் சதை கூடும்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்
மாதவிடாய்,வயிற்று வலி போன்றவை சரியாகும்
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உகந்தது
தோல் சுருக்கம் மறையும்
உடல் சோர்வு முற்றிலும் நீங்கும்.
ரசவாத கலையின்
ஒரு பாகமான..
*ரசமணி வித்தை*
பயிலரங்கம் #1 ன்..

திருச்சியில்..
2020 Feb28,29 ல்
நடைபெறவிருக்கும்
நிகழ்வின்..

அறிமுகமும், நோக்கமும், முக்கியத்துவமும்
பற்றிய குரலொலி பகிர்வு 👇🏼 இங்கே..!

https://t.me/vahaaramaiyam/605

https://t.me/vahaaramaiyam/606
🙏🌏🙏
~நன்றிகள்!
நிகழ்ச்சி அமைப்பாளர் www.sankalpha.wordpress.com
பிரம்மஶ்ரீ. கருவூரான்.
👁️💧👁️
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
https://youtu.be/dmoaRlk9-NY

மனித
வாழ்வின்..
நிலை
யாமையையும்..
& மாறாத..
மாற்றம் ஒன்றே
அனைத்தையும்
ஆள்வதை

நாம்
வாழும்
வாழ்க்கையின்
ஒட்டுமொத்த
தத்துவமாக..

ஞானநிலை
ஒன்றே
பெரிதாக
எண்ணிய

ஶ்ரீ
பட்டினத்தார்
சித்தர்
பெருமானின்
ஞான வாக்கியங்களை
சிறிதேனும்
கேளுங்கள்!
🙏🙏
https://youtu.be/dmoaRlk9-NY
நீ பிறப்பதற்க்கு முன்பே உனது பிறப்பிற்க்கான நோக்கம் உன்னாலே தீர்மானிக்கப்பட்டது. இதனை அறிவதின் மூலமே நீ உன்மெய்யை காணமுடியும்.

நீ இங்கு பெறுவதும் இழப்பதும் மாயையின் விளையாட்டாகும். அவை தரும் அனுபவங்களை நீ ஏற்பதன் மூலமே. நீ இங்கு வந்ததற்கான உன் மெய்யும் விளங்கும்.

கடவுளை தேடிய அனைத்து ஞானிகளும் இறுதியில் தன் மெய்யையே இறைவனாக கண்டு கொண்டார்கள். நீயும் இறுதியாய் உன்மெய்யையே இறைவனாக கண்டு கொள்ள போகிறாய்.