வாதம் வைத்தியம்
2.72K subscribers
1.45K photos
203 videos
105 files
540 links
சித்தர்கள் கூறும் ..
'வாதம்' &
'வைத்தியம்' கலைகளின்
உண்மைகளையும்,
அரிய சிலபல தகவல்களையும் இத்தளத்தில் பகிரப்படுகிறது.

நன்றி
~'வ' கார மையம்
www.t.me/vahaaramaiyam
Download Telegram
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
Photo from Karuvooraan @ கருவூரான்
Forwarded from சிவயோகம்~உண்மைகள் www.t.me/truthsofsivayoga (கருவூரான் ~RAA JA N)
கபம் or
கோழை
முற்றிலும்
அகற்ற வல்ல
அனுபவத்தின்
செயலை விளக்கும்
https://t.me/truthsofsivayoga/1408
குரல்பதிவு 👆

வாசி எனும் உள்சுவாச கதியை
தீவிரமாய் சாதகம்
செய்வோருக்கு..
மட்டுமே இம்முறை👆ஏற்றது.

கபம் அகற்றவும்,
வாசி கனல் உடல் ஏற்புடையதாக மாற்றவும்..

மேலே படத்தில்
கண்ட
1. SKM-
கரிசாலை கற்ப சூரணம்
2. SKM/ ANNAI ARVINTH-
திரிகடுக சூரணம்
3.SKM-பஞ்ச தீபாக்கிணி சூரணம்

அனுபாணம் வகை:-
கற்றாழை துண்டுகளோடு
அல்லது
சுத்த தேனோடு..

3 சூரணங்களையும் மொத்தமாக ஒரு
பெருநெல்லியளவு

காலை உணவுக்கு முன் 40 நிமிடம் முன்பாக உட்கொள்ளுதல் நன்று.

நன்றி🙏
~கருவூரான்.
www.t.me/vahaaramaiyam
Photo from 🌏Raajan@Singapore🌞
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo
'வ' கார வித்தை
என்று சித்தர்களால் அழைக்கப்படும்..

'ரசவாத கலை' யின்
ஒரு அங்கமான..

"ரசமணி வித்தை" யில்
பயிலரங்கம் - #1 (அடிப்படை)

சித்தர்கள் ரகசிய
கலையை /பொக்கிசத்தை
விதியுள்ளோர் பெறும்
வகையில்..
உண்மையாக.வும்..!
எவ்வகையிலும்
ஏமாறாதும்..!
வெளிப்படையாக
வும்
கற்கும் அரிதான நிகழ்ச்சி..இது!

*தமிழர் சித்தர் கலைகளை வளர்க்கும் ஒரு முயற்சி இஃது.

**வாசி கனல்..
(சித்த வித்தை)
மீறும் தேகத்தை திடம்படபேணவும்
இவ்வித்தை உதவ வல்லது.

*2020 Feb 28,29 & Mar1* (2.5 நாள்) திருச்சி நகருக்கு அருகில்
நிகழவிருக்கிறது.

(*2 இரவு தங்கும் வசதியுடன், 3வேலை
உணவு+தேனீருடன்,
1Bead =18mm
வாலை ரசமணியும் சேர்த்து..நிதியம்
₹9,000/-) வங்கி கணக்கில் செலுத்திடல் வேண்டும்.
🌏

🌟 நிதி கொடுக்க இயலாத..
தன்னலமற்ற சித்த வைத்தியர்களுக்கு
Free Entry வாய்ப்பும் உண்டு.

நிகழ்ச்சி விபரங்கள்..
விரிவாக தனியே தொடர்புறுவோருக்கு..
மட்டும்
பின்னர்
தெரிவிக்கப்படும்.
👍
ஆர்வமுள்ளவர்கள்
Google FORM ல்
முன்பதிவிட..📝
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdtQc1j51vJEy9RrzLsrOzibb2FBTMOYGdgq36NliPU9BlcNw/viewform

அல்லது
SCAN QR CODE
https://qrgo.page.link/SrvX9
💼🖌️💼

Coming..
2020 February 28,29 & March 1 = 2.5 Days
🙏@ Trichy City Near.

===-----===
For Communication & Booking :
(Only 30 Selectable Participants Allowed)

For Feb 28,29
& Mari @ 2020 -
2.5day
(2 Night Residencial)
Program of RASAVAADHA KALAI - WORKSHOP #1 (BASIC)
ரசவாத கலை -
பயிலரங்கம் #1 (அடிப்படை)

WORKSHOP #1 Content :
RASAMANI VIDDHAI
பயிலரங்கம் #1 ன் உள்ளடக்கம் :
|| ரசமணி வித்தை ||
மூலிகை & மூலகங்களின்
கூட்டு, பிரிப்பு, சேர்ப்பின்..
அடிப்படையும்,
விளக்கங்களும் &
ரசமணி உருவாக்க முறையும்,
கைபாக-செய்பாக செயல்முறை
நுட்பங்களும்,
ஐயம் தெளிதலும்.

1. Program Presenter :
ரசயோகி.
*உருத்திரன்* ஐயா,
திருத்தணி.

2. Program Organiser :
பிரம்மஶ்ரீ. *கருவூரான்* Singapore.
+6582985287
+919500206697

3. Program Co-Ordinators
காளாங்கி-சங்கர்,
+919865484131
முருகேசன் & பாலு, கனேஷ்,Trichy.

4. For Infos /Communications :
*மயில்சாமி* Coimbatore.
+919865192223

More info on :
Telegram Channel:-
www.t.me/vahaaramaiyam
&
Website:- www.sankalpha.wordpress.com

🙏நன்றிகள்🙏
~கருவூரான்.
~Karuvooraan
🌎🌎
www.t.me/truthsofsivayoga
👁 U-tube#: Karuvooraan
Photo from 🌏Raajan@Singapore🌞
வாதம் வைத்தியம்
Photo
*கடுக்காய் பொடி: சர்வ ரோக நிவராணி:*
*******************************************

நோயற்ற வாழ்வு வாழவும், உடலினை உறுதி
செய்யவும் இயற்கை நமக்கு பல்வேறு
வளங்களை வழங்கியுள்ளது. நமது உடலை
வலிமையுறச் செய்வதில் கடுக்காய் முக்கிய
பங்கு வகிக்கிறது. கடுக்காய் மரம் 4000
ஆயிரம் ஆண்டுகள் பழமையானது
புராணங்களிலும் இம்மரத்தைப் பற்றி
குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாயகம் இந்தியா தான்.

தேவலோகத்தில் இந்திரன் அமிர்தத்தை
அருந்தும் போது ஒரு துளி அமிர்தம்
சிந்தியது. அத்துளி பூமியில் விழுந்து
கடுக்காய் மரமாக உருவெடுத்தது என
புராணங்கள் தெரிவிக்கின்றன.

*கடுக்காய் பொடியின் பயன்கள்:*
***********************************

1. இரத்தத்தை சுத்திகரிக்கிறது.
2. பிராண வாயு அதிகரிக்கிறது.
3. வாய் மற்றும்குடல் புண்களை ஆற்றும்
4. இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு 300 மடங்கு
அதிகமாகிறது. ( 300% ஆக்சிஜன் = 2 மணி
நேரம் பிராணயாமம்)
5. மலசிக்கலை நீங்குகிறது.
6. இது ஒட்டு மொத்த வயிற்றயுமே சுத்தம்
செய்கிறது.
7. இளமையாக வைத்திருக்கும்.
8. வாழ்நாளை அதிகரிக்கிறது.
9. வாய் துர்நாற்றம் அகலும்.
10. எதிர்மறையான எண்ண பதிவுகளை
அகற்றும்.

*எடுத்துக் கொள்ளும் முறை:*
*******************************

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன் 1
ஸ்பூன் கடுக்காய் பொடியுடன் ஒரு டம்ளர்
தண்ணீர் சேர்த்து குடித்து வர வேண்டும்.

" காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே."

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்) சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம் என்பதே இந்தப் பாடலின் கருத்தாகும். எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில் சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள்.

எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில்
கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷ
மாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது.

நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி
வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம்
அறிவோம்.

மனிதன் பஞ்சபூதங்கள் எனப்படும் நிலம், நீர்,நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின்
தன்மையால் ஆனவன். மனிதன் குழந்தையாய்ப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருட்களில் நீரைச் சேர்த்து, நெருப்பிட்டு சுவையாய் அருந்தி, இதமாய் வருடிச் செல்லும் காற்றை சுவாசிக்கிறான். சந்தோஷமான வாழ்க்கையில் அவன் தன்னை மறந்த நிலையில் ஆகாயத்தில் ஆனந்தமாய்ப் பறக்கிறான்.

பஞ்சபூதங்கள் ஒரு மனிதனை அரவ ணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான். இல்லையெனில் வீழ்கிறான். ஒருவனு டைய உயிர் நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப் பதும் நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. உயிரானது காற்றில் கலந்து ஆகாயத்தில் ஒடுங்கி விடுகிறது.

உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில்
நமக்கு இருப்பிடம். இதை எல்லாரும் உணர
வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்த தாக வேண்டுமானாலும்
இருக்க லாம். ஆனால் உடல்நலம் ஒத்துழைக்க வில்லையென்றால் பாதிக்கிணறு தாண்டிய கதையாகிவிடும்.
உடலைப்பற்றி பின்வரும் சித்தர் பாடலைக்
கவனியுங்கள்.

"கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக்கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன்மேலே தோலைமூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே.'

உடல் என்பது, எலும்புகளைத் தூண்போல
நாட்டி வைத்து, அவற்றின் இருப்பிடம்
மாறி விடாமல் இருக்க நுண்ணிய
துவாரங்களால் இணைத்து, நரம்புகளால்
இழுத்துக் கட்டி, அவற்றுக்கு இடையில்
தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி,
தோலால் மூடி, உள்ளே வாயு எனப்படும்
பிராணனை அடக்கி உடல் என்ற உருவம்
உண்டாக்கப்பட்டிருக்கிறதாம்.

இன்றைய நவீன மருத்துவம் மனித
உடம்பை அதன் செயலின் பொருட்டு பல்வேறு மண்டலங்களாகப் பிரித்து வகைப்படுத்தியுள் ளது. நவீன மருத்துவம் தேகத்தின் அடிப்படை யாகக் கருதும் எலும்பு மண்டலம், நரம்பு மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், தசை மண்டலம், மூச்சு மண்டலம் ஆகிய ஐந்து மண்டலங்களும் சேர்ந்ததுதான் நம்முடைய தேகம் என்பதை, பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் தம் மதிநுட்பத்தால் மேற் கண்ட பாடல் மூலம் நமக்குத் தெரியப்படுத்தி உள்ளார்கள்.

எனவே, விஞ்ஞானம் விண்ணை முட்டி அதற்கு மேலும் வளரலாம். ஆனால் விஞ்ஞானம் ஒருக்காலும் சித்தர்களின்
ஞானத்திற்கு ஈடாகாது. ஏன்?

எப்படி என்று எப்போதும் கேள்விகளையே எழுப்பிக் கொண்டிருந்தால் கடைசியில் குழப்பம்தான் மிஞ்சும். சில நேரங்களில் சித்தர்களின் கருத்துகளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். நாம் உயர அதுவே வழியாகும்.

நமது உடலில் நோய் தோன்றக் காரணம்
என்னவெனில், உஷ்ணம், காற்று, நீர்
ஆகியவை தன்னளவில் இருந்து மிகுதல்
அல்லது குறைதல்தான்.

இதனாலேயே நோய் தோன்றுகிறது. உஷ்ணத்தால் (நெருப்பு) பித்த நோய்களும், காற்றினால் (வாயு) வாத நோய்களும், நீரால் கப நோய்களும் உண்டாகின்றன.
வாதம் வைத்தியம்
Photo
்கரண்டி சாப்பிட்டு வர, பிற மருந்துகளுக்கும் துணையாகும். சர்க்கரைநோயைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

புண்களைக் கழுவ இந்தத் திரிபலா
சூரணத்தைப் பயன்படுத்தலாம். குறிப்பாக
ஆறாத புண்களான சர்க்கரை நோய்ப் புண்,
வெரிகோஸ் நாள புண், படுக்கைப்புண்
ஆகியவற்றைக் கழுவி சுத்தம் செய்ய,
கடுக்காய் கலந்த இந்த திரிபலாசூரணம் நல்ல மருந்தாக இருக்கும். பல் ஈறுகளில் ரத்தம் கசிந்தாலோ, வாய்துர்நாற்றம் இருந்தாலோ, பல் சொத்தை இருந்தாலோ, திரிபலா பொடியை பற்பொடியாகப் பயன்படுத்த வேண்டும்.

எமன் அருகில் வராமல் இருக்க, காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய் அருந்தச் சொன்னார்கள் சித்தர்கள். எமன் வருவாரோ மாட்டாரோ, கொஞ்ச நோய்க் கூட்டம் நிச்சயம் வராது என்கிறது இதனை ஆய்ந்த மருத்துவஉலகம். எனவே, இனி உங்கள் இரவு மெனுவில் கடுக்காய் இருப்பது நோயில்லா வாழ்வுக்கு சித்தர்கள் தரும் சிறப்பு டிப்ஸ்.

நாமும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தி
வந்தால், இந்த உடல் பெற்ற உபாயம் அறிவோம். நல்லன செய்து நலம் பல பெறுவோம். கடுக் காயைக் கருத்தில் வையுங்கள். திருமூலர் ஆசி உங்களுக்கு எப்பொழுதும் உண்டு.
****

🙏நன்றிகள்🙏
சேகரமும்&பகிர்வும்:-
★கருவூரான்★
👁 U-tube#: Karuvooraan
&
www.t.me/truthsofsivayoga
வாதம் வைத்தியம்
Photo
னே மனிதன். தனக்கு வரும்
பிணியை மதிநுட்பம், மன திடம் போன்றவற்
றால் போக்கிக் கொள்வதே சாமர்த்தியம்.

நமது தேகத்தை நீட்டித்து, ஆயுளை விருத்தி செய்ய சித்தர்களைச் சரணடைவதே உத்தமம். வானத்தை முட்டும் கட்டிடங்களும் குளிரூட்டப் பட்ட மருத்துவமனைகளும் நுனிநாக்கு ஆங்கிலமும் ஒருபோதும் நோயை முழுமையாய் விரட்டிவிடாது. நமக்குநாமே மருத்துவனாகி, நமது உடம்பை நாமே பகுத்துப் பார்க்கும் மதிநுட்பத்தை நாம் பெற வேண்டும்.

மானுட உடலைப் பீடிக்கும் நோய்கள் மொத்தம் 4448 ஆகும். அதில் மிகவும் கடுமை யான நோய்கள் 448 என திருமூலர் குறிப்பிடுகிறார்.

கடுமையான நோய்கள் தேகத்தைத் தாக்கினால், விரைவில் நலம் பெற
சிவபெருமானை வேண்டுங்கள் என்று
திருமூலர் கூறுகிறார்.

உடலை அழியாத் தன்மைக்குக் கொண்டு செல்ல, திருமூலர் அறுபதுக்கும் மேற்பட்ட காயகற்ப முறைகளைக் குறிப்பிட்டுள்ளார். உடல் நலம் பெற எவர் முனைந்தாலும், முதலில் உடலில் உள்ள அழுக்குகளை அகற்றிக் கொள்ள வேண்டும்.

ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய
மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று திருமூலர் குறிப்பிடுகிறார். கடுக்காய்க்கு அமுதம் என்றொரு பெயரும் உண்டு. தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய அமிர்தத்திற்கு ஒப்பானது கடுக்காயாகும்.

"பெற்ற தாயைவிட கடுக்காயை ஒருபடி
மேலாய் கருது' என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.

பெற்ற தாயானவள் தன் பிள்ளைமேல் உள்ள பாச மிகுதியால், கண்ட உணவுகளையும் வகை வகையாய் செய்து கொடுத்து அவன் வயிற்றைக் கெடுத்துவிடுவாள். ஆனால் கடுக்காயோ வயிற்றில் உள்ள கழிவுகளை யெல்லாம் வெளித்தள்ளி, அவனுடைய பிறவிப் பயனை நீட்டித்து வருகிறது.

கடுக்காயின் சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும்
குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்.

துவர்ப்புக்கும் வாயுவுக்கும் ஆகாது. ஆனால்
வாழைப்பூவை கடலைப்பருப்பு சேர்த்துத்தான் பொரியல் செய்து சாப்பிடுகிறோம்.

கடலைப்பருப்பு வாயுப் பதார்த்தம். பின்
எப்படி ரத்த விருத்தியைப் பெறுவது?
அன்றாடம் நமது உணவில் கடுக்காயைச்
சேர்த்து வந்தால், நமது உடம்புக்குத்
தேவையான துவர்ப்பைத் தேவையான
அளவில் பெற்று வரலாம்.

கடுக்காயை மருந்தாக்குவது எப்படி?
கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக்
கடைகளிலும் கிடைக்கும். தரமான
கடுக்காயை வாங்கி வந்து உடைத்து,
உள்ளே இருக்கும் பருப்பை எடுத்துவிட்டு,
நன்கு தூளாக அரைத்து வைத்துக்
கொள்ளவும்.

இதில் தினசரி ஒரு ஸ்பூன் அளவு இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, நோயில்லா நீடித்த வாழ்க்கை யைப் பெறலாம்.

*கடுக்காய் குணப்படுத்தும் நோய்கள்*
*****************************************

கண் பார்வைக் கோளாறுகள், காது கேளாமை, சுவையின்மை, பித்த நோய்கள், வாய்ப்புண், நாக்குப்புண், மூக்குப்புண், தொண்டைப்புண், இரைப்பைப்புண், குடற்புண், ஆசனப்புண், அக்கி, தேமல், படை, தோல் நோய்கள், உடல் உஷ்ணம், வெள்ளைப்படுதல், மூத்திரக்
குழாய்களில் உண்டாகும் புண், மூத்திர
எரிச்சல், கல்லடைப்பு, சதையடைப்பு,
நீரடைப்பு, பாத எரிச்சல், மூல எரிச்சல்,
உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், ரத்தபேதி,
பௌத்திரக் கட்டி, சர்க்கரை நோய், இதய நோய், மூட்டு வலி, உடல் பலவீனம், உடல் பருமன், ரத்தக் கோளாறுகள், ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள் போன்ற அனைத்துக்கும் இறைவன் அருளிய அருமருந்தே கடுக்காய்.

கடுக்காயை உணவாய் தினசரி சாப்பிட்டு வாருங்கள். உங்களை எந்த நோயும் அணுகாது. பின் வரும் சித்தர்
பாடலைக் கவனியுங்கள்.
"காலை இஞ்சி கடும்பகல் சுக்கு
மாலை கடுக்காய் மண்டலம் உண்டால்
விருத்தனும் பாலனாமே.'

காலை வெறும் வயிற்றில் இஞ்சி- நண்பகலில் சுக்கு- இரவில் கடுக்காய் என
தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள்)
சாப்பிட்டுவர, கிழவனும் குமரனாகலாம்
என்பதே இந்தப் பாடலின் கருத்தாம்.
எனவே தொடர்ந்து கடுக்காயை இரவில்
சாப்பிட்டு வரப் பழகிக் கொள்ளுங்கள். இதனால் முன் சொன்ன அனைத்து நோய்களும் உங்களை அண்டாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

*தென்னாட்டவருக்கு திரிபலா...*
**********************************

திரிபலா என்பது கடுக்காய், நெல்லிக்காய்,
தான்றிக்காய் ஆகிய மூன்றும் சம அளவு
கலந்த மருந்தாகும். இதனை எவர் வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்.

குறிப்பாக ஆங்கில மருந்துகள் நிறைய
உட்கொள்பவர்கள், இம்மருந்தினை காலை-
இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர,
ஆங்கில மருந்துகளால் உண்டாகும் பக்க
விளைவுகளைக் குறைத்துக் கொள்ளலாம். மேலும் சர்க்கரை நோய்க்கு இணை மருந்தாய் பயன்படுத்தலாம்.

*உடல் வலிமை பெற...*
***********************

நூறு கிராம் கடுக்காய், சிலாசத்து பற்பம் 50
கிராம்- இரண்டையும் ஒன்றாகக்
கலந்து கொள்ளவும். இதில் இரண்டு கிராம்
அளவு காலை-
வாதம் வைத்தியம்
Photo
ரவு சாப்பிட்டு வந்தால்
இளைத்த உடல் தேறும்; நரம்புகள்
முறுக்கேறும்.

*பல் நோய்கள் தீர...*
**********************

கடுக்காய், கொட்டைப்பாக்கு, படிகாரம் ஆகிய மூன்றையும் வகைக்கு நூறு கிராம்
எடுத்து ஒன்றாகத் தூள் செய்து கொள்ளவும்.
இதில் பல் துலக்கி வர அனைத்து பல்
வியாதிகளும் தீரும்.

*மூல எரிச்சல் தீர...*
*********************

கடுக்காய்த் தூளை நீரிலிட்டு கொதிக்க
வைத்து ஆற வைத்து, அந்த நீரால் ஆசன
வாயைக் கழுவி வர மூல எரிச்சல், புண்
ஆகியன ஆறும். எனவே, கடுக்காய் உங்கள் வீடுகளில்.கண்டிப்பாய் இருக்க வேண்டிய பொக்கிஷமாகும். கடுக்காய் திருமூலரின் ஆசி பெற்றது.

தாயைக் காட்டிலும் சிறந்தது இந்த உலகில்
உண்டா? இருக்கிறது என்கிறார்கள் சித்தர்கள். கடுக்காய்தான் அது. அம்மாவோ ஆறு சுவைகள் ஊட்டி, பிணியற்ற உடலை மட்டுமே தேற்றுவாள். அறுசுவையும் கொண்ட கடுக்காய், நோய் ஓட்டி உடல் தேற்றும். அப்படியானால் நோயைப் போக்கும் கடுக்காய்தானே தாயினும் சிறந்தது என்கிறார் அகத்திய சித்தர்.

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை
கடுக்காய். எண்ண முடியாத மருத்துவ
குணங்கள் கொண்டது. இதைத் தேடி ஏழு
கடல், ஏழு மலை தாண்டி எல்லாம் செல்ல
வேண்டியதே இல்லை. எல்லா நாட்டு
மருந்துக்கடைகளிலும் குறைந்த விலைக்கு
கிடைக்கும் மூலிகைச்சரக்கு இது. ஒவ்வொரு வீட்டிலும் உப்பு சர்க்கரை மாதிரி வாங்கி வைத்திருக்க வேண்டிய பொருளும்கூட.

*கடுக்காய் வகைகள்*
***********************

பிஞ்சு கடுக்காய்,
கருங்கடுக்காய்,
செங்கடுக்காய்,
வரிக்கடுக்காய்,
பால்கடுக்காய்
என, பல வகைகள் உண்டு.

கிடைக்கும் இடத்தைப் பொறுத்து பெயர் மாறுபடும். இவை தவிர,
காபூல் கடுக்காய்,
சூரத் கடுக்காய்
எனும் வகைகளும் இங்கே கிடைக்கின்றன.

பிஞ்சு கடுக்காய், மலச்சிக்கலுக்கு
நிவாரணம் தரும்.
கருங்கடுக்காய், மலத்தை இளக்குவதுடன்
உடலுக்கு அழகும் மெருகும் தரும்.
செங்கடுக்காய், காச நோயைப் போக்கி
மெலிந்த உடலைத் தேற்றி அழகாக்கும்.
வரிக்கடுக்காய், விந்தணுக்களை உயர்த்தி
பலவித நோய்களையும் போக்கும்.
பால் கடுக்காய், வயிற்று மந்தத்தைப்
போக்கும் என கடுக்காய் வகைகளின் பயனை அன்றே சித்தர்கள் சொல்லியுள்ளனர்.

கடுக்காயை
விஜயன்,
அரோகினி,
பிருதிவி,
அமிர்தமரிதகி,
த்ருவிருத்தி
என அதன் புறத்தோற்றத்தையும் மருத்துவக்
குணத்தையும் கொண்டு் வகைப்படுத்திஉள்ளது சித்த ஆயுர்வேத மருந்துவங்கள்.
உச்சி முதல் பாதம் வரை பல நோய்களுக்கு
கடுக்காய்ப்பொடி மருந்து.
மருந்தாக்குவதற்கு முன்பு கடுக்காயின்
கொட்டையை நீக்க வேண்டியது முக்கியம்.

“கடுக்காய்க்கு அக நஞ்சு;
சுக்குக்கு புற நஞ்சு”
என்கிறது சித்தர் பாடல். அதாவது சுக்கைப்
பயன்படுத்துவதற்கு முன்பு, அதன்
புறத்தோலை நீக்க வேண்டியது முக்கியம்.
அதேபோல் கடுக்காய்க்கு அதன் கொட்டையை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.

*பசியின்மையைப் போக்கும் கடுக்காய்*
******************************************

பசிக்கிறது, சாப்பிட முடியவில்லை என
உணவின் மீது வெறுப்பு வரும் அரோசக
நோய்க்கு, கடுக்காய் துவையல் சிறந்த
மருந்து. கடுக்காயை கஷாயமாக்கி
அருந்தினால், மலச்சிக்கல் பிரச்னை தீர்ந்து
மலம் இளகும். சர்க்கரை நோய் இல்லாமலேயே அதிகமாக சிறுநீர் கழிக்கும் நோய்க்கும், இந்த துவையல் சிறந்த மருந்து.

ஒரு கடுக்காயின் தோலை பொடி செய்து
தினமும் மாலை சாப்பிட, இளநரை மாறும்.
மூக்கிலிருந்து ரத்தம் கசியும் நோய்க்கு
கடுக்காய்த்தூளை நசியமிட்டுச்
சரியாக்கியுள்ளனர் சித்த மருத்துவர்கள்.

துவர்ப்புச் சுவைமிக்க கடுக்காய்,
மலமிளக்கும். அதே சமயம் ரத்தமாக கழிச்சல் ஆகும் சீதபேதிக்கும் மருந்தாகும் என்பது இன்றளவும் புரிந்துகொள்ள முடியாத மருத்துவ விந்தை. ஒரே பொருள் மலத்தை இளக்கவும், பேதியை நிறுத்தவும்
பயன்படுவது தான் மூலிகையின் மகத்துவம்.
அதில் உள்ள பல்வேறு நுண்ணிய மருத்துவக் குணமுள்ள பொருட்கள் தேவைக்கேற்றபடி பயனாவது, இயற்கையின் நுணுக்கமான கட்டமைப்பு.

*சர்க்கரையைக் குறைக்கும் கடுக்காய்*
*****************************************

கடுக்காயை உப்புடன் சாப்பிட்டால், கப
நோய்களும், சர்க்கரையுடன் சாப்பிட்டால் பித்த நோயும், நெய்யுடன் சாப்பிட்டால் வாத
நோயும், வெல்லத்துடன் சாப்பிட்டால்
அத்தனை நோய்களும் அகலும்.
கல்லீரல் நோய் உள்ளவர்கள், அதற்கென வேறு எந்த மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் கடுக்காய் பொடியை நிலக்கடலை அளவு எடுத்து தண்ணீரில் கலந்து சாப்பிடுவது, கல்லீரலைத் தேற்றி காமாலை வராது காத்திடும்.

*திரிபலா பெருமைகள்*
*************************

திரிபலா எனும் சித்த மருத்துவ மருந்தில்
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் என்னும் மும்மூர்த்திகளும் சேர்க்கப்படுகின்றன. இதில்
கடுக்காய் பிரதானமானது. திரிபலா கூட்டணி.இன்று, சர்க்கரை நோய்க்கும் மூலம், பவுத்திரம், குடல் அழற்சி நோய்களுக்கெல்லாம் பயனாவதை நவீன மருத்துவ அறிவியல் உறுதிப்படுத்தி இருக்கிறது. நோயாளிகள் இந்தக் கூட்டணி மருந்தை தினம் காலை மாலை உணவுக்கு முன்னதாக அரை